இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.
இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.
அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
இதற்கு முன்பும் மகன் வீடு வராமல் இருந்திருக்கிறான் தான். ஆனால் அதெல்லாம் வார இறுதி நாட்களில் தான். அதுவும் மேற்படிப்புக்காக ஜெர்மன் சென்று வந்த பிறகு தான்.. அதற்கு முன்பு எல்லாம் அனிவர்த் அம்மா பிள்ளை தான். இருவரும் நண்பர்கள் போல தான் இருப்பர்.
இப்படி வார நாட்களில் வராமல் இருக்கவும் கொஞ்சம் கவலை வந்தது தான். இருந்தாலும் எத்தனை நாளைக்கு பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தார். இரண்டு நாட்கள் என்பது பதினைந்து நாட்களானது. கங்காவிற்கு பெரிதாக கவலை ஆட்கொண்டது.
அனிவர்த்தோ தனது ப்ளாட்டிற்கு வந்து பதினைந்து நாட்களாகியும் தன் அம்மா தன்னை அழைக்கவில்லையே என கோபத்தில் இருந்தான். இவன் வந்த மூன்றாம் நாள் சிதம்பரம் தான் அழைத்து என்ன.. எங்க இருக்கிறாய் என விவரம் கேட்டறிந்தவர் அதன் பின்பு அவரும் தொடர்பு கொள்ளவில்லை. கங்கா தான் வேண்டாம் என கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
வீட்டிற்கு போகாமல் இருந்தால் பயந்த போய் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்கள் என நினைத்திருக்க.. அவர்களின் அமைதி அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆனது. பெண் பார்த்து இருக்கிறார்கள் பாரு.. ஒரு முக லட்சணம் உண்டா.. கலரும் கறுப்பு.. குட்ட வாத்து மாதிரி படிக்காத பட்டிக்காடு போல…
இவங்க அழகு படிப்பு நாகரிகத்துல பாதியாவது இருக்கற மாதிரி பார்க்க கூடாது. சி். கே எண்டர்பிரைசஸ் எம்டிக்கு ஒய்பா இருக்கறதுக்கு ஒரு தகுதி வேணாமா.. இந்த மாதிரி பொண்ணை என்ஆபீஸ் ப்யூன் கூட மேரேஜ் பண்ணிக்க யோசிப்பான். ச்சே எனக்கு போய் இப்படி ஒரு பெண் லைப் பார்ட்னரா என கடுங் கோபம் கொண்டான்.
அவனுக்கு தெரியவில்லை அழகு படிப்பு இதை எல்லாம் விட பெண்ணை பெற்றவர்களுக்கு பையனின் நல்ல ஒழுக்கம் பழக்க வழக்கங்கள் தான் முன் வந்து நிற்கும என்று..
ஆபீஸ் சென்று வந்த பின்னால் ப்ளாட்டில் தனிமை இவனுக்கு ஒரு வித எரிச்சலை தான் கொடுத்தது. இங்கு வந்த பின்பு பப்பிற்கு சென்றவனுக்கு ஏனோ மனதில் இருந்த அழுத்தம் பெண்கள் துணையையும் நாட அனுமதிக்கவில்லை. அதற்கு அடுத்த வாரம் பப்பிற்கு போக கூட ஏனோ பிடிக்கவில்லை. வீட்டிலேயே இருக்க முடியாமல் சற்று காலார நடக்கலாம் என நினைத்தவன்… தனது ப்ளாட்டுல் இருந்து கிளம்பி கால் போன போக்கில் நடக்க.. வழியில் ஒரு பார்க் தென்பட உள்ளே சென்று அங்கு உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ யோசனையில் இருந்தான்.. ஏதோ யோசனை என்ன.. தன் திருமணத்தை நிறுத்தும் யோசனை தான்..
அவன் மேல் ஒரு பந்து வந்து விழுகவும் திடுக்கிட்டு சுற்றுபுறம் உணர்ந்து பந்தை கையில் எடுக்கவும்.. பந்தை வாங்க வந்தாள் ஷாஷிகா. அனிவர்த்தை பார்த்தும்…
“ஹாய் அங்கிள்” என அவனருகே அமர்ந்து கொண்டது.
அனிவர்த்துக்கும் ஷாஷிகாவை பார்த்தும் அவன் மனதில் இருந்த அழுத்தங்கள் எல்லாம் வடிந்து ஒரு புது உற்சாகம் தொற்றிக் கொள்ள…
“ஹேய்.. பேபிடால்..” என்றான்.
ஷாஷிகா அவனை பார்த்து முறைக்க.. அதை பார்க்க அனிவர்த்துக்கு அன்று அவள் சொன்னது நினைவில் வர…
“ஹே…சாரி சாரி ஷாஷிகா..” என தன்னை திருத்திக் கொள்ள..
“அஃது” விரலை நீட்டி எச்சரிப்பது போல மிரட்டினாள் குட்டி பொண்ணு..
அவளும் ஏதோ கேட்க இவனும் பதில் சொல்ல.. நெடுநேரம் குட்டி கைகளை ஆட்டி… கண்ணை உருட்டி….சலசலத்து கொண்டிருக்க.. இவனும் பதிலுக்கு வாயாடி கொண்டு இருந்தான். நடுவே அவளின் தோழர்கள் வந்து அழைத்த போது கூட.. செல்லாமல் நீங்க விளையாடுங்க.. என அனுப்பிவிட்டாள் பெண்.
மாலை மங்கும் நேரத்தில் “ஏய்… ஷாஷி வீட்டுக்கு போகலாம் வா..” என வந்து நின்றான் ஒரு சிறுவன்.
“இரு ரித்தீஷ் வரேன்.. இவன் என் கஷின் பிரதர் ரித்தீஷ்.. “
ரித்தீஷோ..”நீ இப்ப வரையா இல்லயா..” என மிரட்ட..
“சாரி அங்கிள்.. இவன் இப்படி தான் யார்கூடயும் பேசமாட்டான். சிடுசிடுனுனே இருப்பான்..” என ஷாஷிகா சொல்ல..
ரித்தீஷ் முறைக்க.. “பை அங்கிள்.” என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் குட்டி..
வந்த போது இருந்த மனநிலைக்கு நேர்மாறாக சந்தோஷமாக… உற்சாகமாக திரும்பி சென்றான்.
அனிவர்த் வீட்டிற்கு வராததில் கங்கா மனம் நிம்மதி இல்லாமல் தவித்தது. கங்காவிற்கு மட்டும் என்ன ஆசையா மகனிற்கு இப்படி ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க.. அழகாக இல்லைனாலும் படிப்பாவது இருக்க வேண்டும் என நினைத்தார் தான். ஆனால் திருமணத்திற்கு பிறகும் மகனின் வீக் என்ட் பழக்கம் தொடருமேயானால் படித்த பெண்ணாக இருந்தால் நியாயம் கேட்டு நின்றால் குடும்ப மானம் போகப் போவது உறதி.
அழகு இல்லைனாலும் படிக்காத வெகுளியான கணவனே கண் கண்டதெய்வம் என்ற பத்தாம் பசலி நாகரிகத்தில் ஊறிப் போன பெண் தான் தன் மகனுக்கு சரி. அப்போது தான் குடும்பம் உடையாது என கல்யாண தரகருக்கு பத்து மடங்கு கமிஷன் கொடுத்தது தான் நினைத்தது போல பெண் பார்த்து முடித்தார். கங்காவிற்கு மனதே ஆறவில்லை தான். தன் மகனின் அழகிற்கும் படிப்புக்கும் இணையாக பெண் பார்த்து கண் நிறைவாக மணமுடித்து… மனம் நிறைவாக வாழ்வதை பார்க்க ஆசை தான் ஆனால் என்ன செய்ய அப்படி பட்ட பெண் வீட்டிற்கு இவர் செல்லும் முன்பே மகனின் அருமை பெருமைகள் போய் நின்று விடுகிறதே…
இதை எல்லாம் நினைத்து கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவருக்கு நடு இரவில் மாரடைப்பு வந்து விட சிதம்பரம் பதறி போனார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கங்காவை அள்ளி போட்டு கொண்டு சென்றார்.
அனிவர்த்கு சிதம்பரம் அழைக்க.. அனிவர்த்தோ நல்ல உறக்கத்தில்…
ஷாஷிகாவோடு பேசியதில் மனதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து மனம் இலகுவாகிட.. ரொம்ப நாள் கழித்து நிம்மதியான உறக்கம்..
சிதம்பரம் மகனுக்கு விடாமல் அழைக்க… ஒரு கட்டத்தில் போனை எடுத்தான் அனிவர்த் ஒரு வழியாக… நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு எங்கோ போன் மணி அடிப்பது போல இருக்க..
கண்களை கசக்கி கொண்டு எடுத்துப் பார்த்தான்.
அதில் தந்தையின் எண்ணை பார்த்ததும் பதறி போய் எடுத்துப் பேசினான். அவர் கூறிய செய்தில் அதிர்ந்து போய் அரக்கப் பறக்க காரை ஓட்டி கொண்டு வந்தவன் தன் அம்மாவை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனான்.
தீவிர சிகிச்சை பிரிவில் கைகள் மூக்கில் நெஞ்சில் என நிறைய ஒயர்களோடு.. மயக்கத்தில் இருந்தார் கங்கா.. தன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான் அனிவர்த்..
எந்த உறவுக்கும் கட்டுப்படாதவர்கள் அம்மா என்ற உறவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…
அத்தனை ட்யூப் ஒயர்களுக்கு நடுவே தனது அம்மாவை பார்க்கவும் ஆடி போய்விட்டான் அனிவர்த். எப்பவும் அவன் அம்மாவை தான் அதிகம் தேடுவான். நடுவில் கொஞ்ச காலம் தேவை இல்லாத பழக்கவழக்கங்கள் அவனை தள்ளி நிறுத்தி இருந்தது. தன் கல்யாணம் தான் அவர்களை அதிகம் பாதிக்குது போல அம்மாவிற்காக அவர்கள் கைகாட்டும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த நொடி முடிவு செய்தான்.
கங்கா கண் விழித்திருக்க காத்திருந்தனர். காலையில் ஒரு ஏழு மணி போல கண் விழித்தவரை பல டெஸட்கள் அப்சர்வேசன் என ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார்.அறைக்கு மாற்றப்பட்டதும் தன்அம்மாவின் கையை பிடித்து கொண்டு…
“உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என கையை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டு அழுதான். மகனி்ன் அழுகையை கண்டு கங்காவின் மனம் துடிக்க.. அவர் கண்களிலும் கண்ணீர் திரை.
“அனிவர்த் கல்யாணம் பண்ணினா நீ அந்த பொண்ணுக்கு உண்மையா இருக்கனும். உன்னோட வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் விட்டுடனும்”அதை சொல்லும் போதே அவர் முகத்தில் அவ்வளவு வேதனை..
அவரின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தவனுக்கு அந்த வேதனை எல்லாம் தன்னாலே தான். அவனுக்கு தெரிந்து அவன் அன்னை என்றும் கவலையாகவோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை. எப்பவும் சிரிப்புடன் கலகலப்பான டைப் தான்.எதற்கும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.
கங்கா சிதம்பரத்தை கல்யாணம் செய்யும் போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக தான் இருந்தார். குரூப் தேர்வுகள் எழுதியும் சர்வீஸ் அடிப்பையிலும் தாசிலதார், சப் கலெக்டர் என பதவி உயர்வு பெற்று ரிடையர் ஆகிவிட்டார். இருவருக்கும் கூடப் பிறந்தவரகள் யாரும் கிடையாது. ஒன்றுவிட்ட சொந்தங்கள மட்டுமே.. இருவருக்குமே பூர்வீக சொத்துக்கள் சில இருந்தது. அனிவர்த் பிறந்த சில வருடங்களிலேயே இவர்களின் பெற்றவர்களும் அடுத்தடுத்து இறந்து விட.. கங்காவிற்கு உறவுகளாலோ வருமானத்திலோ எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை.
கங்காவின் ஒரே கவலை.. அனிவர்த் தங்களை போலவே ஒற்றை பிள்ளையாக போய் விட்டது தான். எப்பவும் கங்கா எதற்காகவும் கவலை பட்டதில்லை. அப்படிபட்டவரை அனிவர்த் தன் செயலால் வருத்தி கொண்டு இருந்தான்.
அனிவர்த் தன் தாயின் கைகளின் மேல் தனது கைகளை வைத்து…
“இந்த பதினைந்து நாட்களில் ப்ளாட்டில் தனியாக தான் இருந்தேன். பப் கூட போகல.. யாரையும் வீட்டிக்கு வரவைக்கல.. இனியும் இப்ப எப்படி இருக்கேனோ அப்படி தான்..” என்றான் சின்ன குரலில்… பெற்றோரை பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டான்.
மகனை பார்க்க பார்க்க… பெற்றவர்கள் இருவருக்கும் மனது துடித்தது. சிதம்பரம் மகனின் தோளில் தட்டி கொடுக்க… அவரின் கையை பிடித்து புறங்கையில் முத்தம் கொடுத்தான். அவனின் இந்த பழக்கங்கள் பிடிக்காத போதும் கங்கா தான் அவ்வப்போது பிடிக்கவில்லை என எதிர்ப்பை காட்டுவாரே தவிர செய்யாதே என கண்டித்தது இல்லை.. அதிலும் சிதம்பரம் அந்த எதிர்ப்பை கூட காட்டியது இல்லை.
சிதம்பரத்தை பொறுத்த வரை மகன் புத்திசாலி படிப்பு தொழில் எல்லாம் சுய முயற்சியில் ஏற்படுத்திக் கொண்டான். அவன் தப்பு என உணர்ந்து விட்டால் அதை செய்யமாட்டேன். உணரும் காலத்திற்காக தான் அமைதியாக இருந்தார்.
👌👌👌👌👌👌👌👌👌👌
❤️❤️❤️❤️
zHhoObdADrP
எனக்கு புரியல
BJrSgpLyU
எனக்கு என்னனு சுத்தமா புரியல
Super sis 💞