மேலும் இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருந்து விட்டு கங்கா வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்த போது சில நேரங்களில் ஷாஷிகா இவர்களோடு வந்து பேசிக் கொண்டிருந்தது. ஒரு தடவை ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்த போது அனிவர்த் வர.. அவன் ஷாஷிகாவை பார்த்ததும்…
“ஹேய்.. பாப்பா..”என்றான் ஆச்சரியமாக…
ஷாஷிகா இடுப்பில் கை வைத்து அனிவர்த்தை பார்த்து முறைத்தது.
உடனே அனிவர்த் இரண்டு காதையும் பிடித்துக் கொண்டு கண்களை சுருக்கி இறைஞ்சுதலான பார்வையுடன் ஷாஷிகா முன் மண்டியிட்டு அமர்ந்து…
“சாரி.. ஷாஷிகா.. சாரி..” என்க..
“இட்ஸ் ஓகே.. “ என்றது பெரிய மனிதன் தோரணையில்…
அவளின் பாவனையில் அனிவர்த் வாய் விட்டு சிரிக்க…பெற்றவர்கள்இருவரும் என்னடா நடக்குது இங்கே… என ஆச்சரியமாக பர்த்தனர்.
“நீ இங்க எப்படி.. உனக்கு உடம்பு சரியில்லையா..” என அனிவர்த் கவலையாக கேட்க…
“ம்கூம்.. ம்கூம்..” என வேகமாக தலையாட்டினாள் இளையாட்டி…
“கிருஷ்ணா தாத்தாவிற்கு சுகர் அதிகமாகி உடம்பு சரியில்லாம போயிடுச்சு.. டூநாட்பைவ் ரும்ல இருக்கிறார்”
“ஓ.. இப்ப நல்லா இருக்காரா..”என கேட்டவன் அதற்கு மேல் அடுத்தவர்கள் விவகாரம் நமக்கு எதற்கு என வேற பேச்சிற்கு தாவிவிட்டான்.
அனிவர்த்தும் ஷாஷிகாவும் சலசலனு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் தங்கள் மகனா இது… அதுவும் அவன் முகத்தில் வந்து போகும் ஆயிரம் முக பாவனங்களை கண்டு இப்படி எல்லாம்இவன் பேசுவானா…என தங்களை மறந்து பார்த்திருந்தனர்.
பேச்சுவாக்கில் தன் அன்னையை பார்த்தவன் மெல்ல சிரித்துவிட்டான். கங்கா கன்னத்தில் கை வைத்து மெய்மறந்து அப்படி பார்த்திருக்க.. பெற்றவர்களிடம் ஷாஷிகாவிற்கும் தனக்கிற்குமான சந்திப்புகளை ரசனையோடு சொன்னான்.
கங்கா இது போல மகன் எப்பவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடனும் என கடவுளை வேண்டினார். கடவுள் பரீசிலனை கூட பண்ணாமல் தள்ளுபடி செய்துவிட்டார்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்து விடவேண்டும் என துரிதமாக வேலை செய்தார் கங்கா. ஒரே மாதத்தில் திருமணம் என மிகப் பிரபலமான மண்டபம் பிடித்து… பத்திரிக்கை அடித்து.. ஊரையே அழைத்து.. சமையலுக்கு ஒவ்வொரு வேளைக்கும் பதினைந்து பதார்த்தங்கள்… வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய் பழத்தோடு சின்ன வெள்ளி குங்குமச்சிமிழ் என ஒரே மகன் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாகவே ஏற்பாடு செய்தார்.
முதல்நாள் மாலை பெண்அழைப்பு நிச்சயதார்த்தம் முடிந்து வரவேற்பு.. அடுத்தநாள் அதிகாலையில் முகூர்த்தம் …
முதல் நாள் காலையிலேயே அனிவர்த்தை மண்டபத்திற்கு வீட்டில் இருந்து நல்ல நேரம் சகுனம் எல்லாம் பார்த்து அனுப்பி…மண்டபத்தில் ஏழு கன்னி பெண்களை வைத்து ஆரத்தி எடுத்து அழைத்தார்.
மதியம் வர வேண்டிய பெண்வீட்டினர்.. மாலை மயங்கி பெண் அழைப்பு நேரம் தாண்டி நிச்சயதார்த்தநேரமும் வந்துவிட.. பெண்வீட்டார் வந்தபாடில்லை. அழைத்தால் போனை யாரும் எடுக்கவில்லை..
நிச்சயதார்த்த நேரமும் நெருங்கி விட.. லக்கன பத்திரிக்கை வாசித்து தாம்பூலம் மாற்றி பெண்ணை அழைத்து நிச்சய புடவையை கையில் கொடுத்து உடுத்தி வந்து சபையில் பெண் மாப்பிள்ளை இருவரையும் வரவேற்பில் நிறுத்த வேண்டும்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. பெண்வீட்டார் வரவில்லை. சிதம்பரம் கங்காவின் உறவினர்கள் முதலில் அமைதியாக இருந்தவர்கள் நேரம் செல்ல.. செல்ல..முணுமுணுப்பாக பேச துவங்கி.. சலசலப்பு பேச்சாக மாறி நேரடியாகவே கேட்கவே செய்ய…
சிதம்பரம் கங்காவிற்கு என்ன செய்வது… சொல்வது என தெரியவில்லை. இவர்களுக்கு ஆதரவாக நிற்க கூட நெருங்கிய சொந்தங்களோ நண்பர்களோ இல்லை. அனிவரத்துக்கும் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. இங்கு படிக்கும் காலத்தில் இருந்த ஒன்றிரண்டு நண்பர்களும் வெளிநாட்டு வாசத்திற்கு பிறகு தொடர்பில் இல்லை.
பெண் அழைப்பு நேரம் நெருங்கிய பிறகும் வரவில்லை என்றதும் சிதம்பரமும் கங்காவும் மாற்றி மாற்றி அழைத்துப் பார்த்து எடுக்கவில்லை என்றதும்.. தரகருக்கு அழைக்க அவருடைய போனும் அணைத்து வைக்கப் பட்டு இருந்தது. என்ன செய்ய என தெரியாமல் முதலில் ஏதோ சொல்லி சமாளித்தவர்கள்.. உறவினர்கள் வளைத்து வளைத்து கேள்வி கேட்க.. என்ன சொல்வது தெரியாமல் திணறினர்.
மணமகன் அறையில் இருந்த அனிவர்த்துக்கு இது எல்லாம் தெரியவில்லை. ஏசி அறை என்பதால் இந்த சலசலப்பு சத்தங்கள் எதுவும் அவனுக்கு எட்டவில்லை.உறவினர்களின் கேள்விகளுக்கே விடை தெரியவில்லை. அதை எல்லாம் விட அனிவர்த்துக்கு தெரிந்தால் என்ன ஆகும் என இருவருக்குள்ளும் பெரிய பயம் ஓடிக் கொண்டு இருந்தது.
அனிவர்த் தனது ரோலக்ஸ் வாட்ச்சில் மணி பார்த்தவன் தனக்கு உதவியாக இருந்த அசோக்கிடம்…
“ அசோக்.. ரிசப்ஷன் டைம் ஆகிடுச்சு.. இன்னும் என்ன பண்றாங்க.. போய் பார்த்து விட்டு வா”
அசோக் சென்று பார்க்கும் போது உறவினர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டு இருந்த சிதம்பரம் கங்காவை தான்…
பார்த்தவன் பதறி போய் அவர்களின் அருகே வேகமாக சென்று…
“கங்காம்மா.. என்ன ஆச்சு..”என அசோக் கேட்க…
“அதை தான் நாங்களும் கேட்கறோம்..”
“பொண்ணு வீட்ல இருந்து ஒருத்தரும் வரல..”
“என்னாச்சு.. ஏன் வரல.. போன் பண்ணி பாருங்க..”
ஆளாளுக்கு சுற்றி நின்று கொண்டு பேச… சிதம்பரம் தயங்கி தயங்கி…
“அவர்கள் போனை எடுக்கவில்லை..” என்றார்.
அசோக் உடனே சென்று அனிவர்த்திடம் விசயத்தை சொல்ல… கேட்ட அனிவரத்கு கோபம் சுரு சுருவென ஏறியது. புயலாக சீறிக் கொண்டு வந்தான்.
“ஏன் பொண்ணு வீடு வரல.. உங்க மகன பத்தி எல்லாம் சொல்லி தான கல்யாணம் முடிவு செஞ்சிங்க…”
“நல்ல பசங்களுக்கே பொண்ணு கிடைக்கமாட்டேங்குது.. இவங்க மகனுக்கு எப்படி… ஏதாவது திருகுதாளம் பண்ணி தான் செய்திருப்பாங்க… உண்மை தெரிஞ்சு போயிருக்கும்.. அதான் வரல போல..”
“வசதி இல்லாத வீட்ல கட்டினா.. இவங்க மகனோட ஒழுக்க கேட்டை எல்லாம் பொறுத்து போகும்னு நினைச்சாங்க போல.. இவங்க பவுசு தெரிஞ்சிருக்கும்..”
இதை எல்லாம் கேட்டு கங்கா மௌனமாக கண்ணீர் வடித்தார்.அனிவர்த்தும் இந்த பேச்சை எல்லாம் கேட்டு கொண்டே தான் வந்தான்.
வந்தவன் தன் தந்தையிடம், “வந்தவன் தன் தந்தையிடம்…
“என்னாச்சுப்பா..”
சிதம்பரத்தை பேசவிடாமல் சுற்றி இருந்தவர்கள் ஆளாளுக்கு பேசினர்.
“பொண்ணு வீட்ல இருந்து இன்னும் யாரும் வரல..”
“என்ன ஆச்சோ தெரியல..”
“என்னாயிருக்கும்.. இவனோட லீலை எல்லாம் தெரிஞ்சிருக்கும்..” என பேச..
“போதும்… நிறுத்துங்க… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினிங்க… நல்லா இருக்காது பார்த்துக்குங்க…”
“உண்மையை சொன்னா பொல்லாப்பு தான்..”
“நமக்கு எதுக்கு வம்பு.”
அனிவர்த் அவர்களை தீப்பார்வை பார்க்க.. நமக்கு என்ன… என்ன தான் செய்கிறார்கள் என பார்ப்போம் என நடப்பதை வேடிக்கை பார்க்கும் சுவராசியத்தோடு தள்ளி சென்று வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.
அசோக் அவர்கள் மூவருக்கும் நாற்காலி கொண்டு வந்து போட… அனிவர்த் தன் பெற்றவர்களிடம்…
“உட்காருங்கப்பா.. என்னன்னு பார்க்கலாம்..”
“அப்பா.. அவங்க நம்பர் கொடுங்க..”
சிதம்பரம் நம்பர் சொல்லவும் அசோக்கை பார்க்க அனிவர்த்தின் பார்வை புரிந்தவனாக அந்த நம்பருக்கு அழைக்க.. அணைத்து வைக்கப்பட்டதாக சொல்லவும்…
“பாஸ் போன் சுவிட்ச் ஆப்..”
“ப்ரோக்கர் நம்பர் சொல்லுங்கப்பா..”
அசோக் அந்த நம்பருக்கு அழைக்க அதுவும் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லவும்… அனிவர்த்துக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
யாருக்கோ அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தான். பின்பு அசோக்கிடம்..
“கிச்சன்ல இருந்து குடிக்க ஏதாவது வாங்கிட்டு வா ..” என்றான்.
கங்காவிற்கோ மகனின் கோபத்தை பார்க்க பயமாக இருந்தது. பயத்தை மீறிய கவலை வந்தது. மகனின் திருமணம் நடக்குமா.. இந்த திருமணம் நடக்காமல் போய்விட்டாள் அடுத்து மகனின் கோபத்தை எப்படி எதிர்கொள்வது.. இந்த திருமணம் நடக்காவிட்டால் மகனை இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்பது இயலாது. வாழ்நாள் முழுவதும் தனித்து நின்று விடுவானோ என பெரும் கவலை ஆட்கொண்டது.
அசோக் ஜுஸை கொண்டு வந்து கொடுக்க.. சிதம்பரம் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டார்.கங்கா வேண்டாம் என்பது போல் தலை அசைத்து மறுக்க.. அனிவர்த் கங்காவிடம்..
“மாம்.. அதை வாங்கி குடிங்க.. உடம்புக்கு ஏதாவது இழுத்து வச்சுக்காதிங்க…” என்றான் சீறலாக..
அவனின் சீற்றத்தில் மேலும் பயந்தவராக வாங்கி அமைதியாக குடித்தார். சற்று நேரத்தில் அனிவர்த் போன் அழைக்க.. அதை காதிற்கு கொடுத்ததவன் அந்தபக்கம் சொன்ன செய்தியில்….
“அவர்களை இங்க தூக்கிட்டு வாங்க.. “ என்று உத்தரவிட்டான். சற்று நேரத்தில் மண்டப வாசலில் ஒரு ஸ்கார்ப்பியோ வந்து நின்றது. ஐந்து பேர் பெண்ணின் குடும்பத்தையும் தரகரையும் இழுத்துக் கொண்டு வராத குறையாக கூட்டிக் கொண்டு வந்தனர்.
அந்த ஐந்து பேரில் ஒருவன்.. “சாரே.. நீங்க சொன்ன மாதிரி ஒன்னும் பண்ணாம இட்டாந்துட்டோம்..” என்றான் அனிவர்த்திடம் பணிவாக சொல்லி பெண்வீட்டாரை அனிவர்த் முன் நிறுத்தினர்.
அனிவர்த் எழுந்து கைகளை பின்புறம் கட்டி கொண்டு தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன்… அவர்களை தீர்க்கமாக பார்த்தான். அப்போது தான் கவனித்தான். பெண்ணின் கழுத்தில் புது மஞ்சள் சரடு தொங்கியதை.. அந்த பெண் பக்கத்தில் இருந்தவனின் கையை இறுகப் பற்றி இருந்தாள்.
அனிவர்த் திரும்பி “ரெங்கு… “என கேள்வியாகப் பார்க்க..
“ஆமாம் சாரே.. இன்னைக்கு காலையில் திருநீர் மலைல கல்யாணம் பண்ணிகிட்டாங்க…”என்றான்.
அதற்குள் பெண்ணின் தந்தை ஓடி வந்து அனிவர்த்திடம் கை எடுத்து கும்பிட்டு…
“மன்னிச்சிடுங்க தம்பி… இது என் அக்கா மகன்.. இரண்டு பேரும் இஷ்டப்பட்டு கிட்டாங்க.. நான் தான் பணக்கார இடத்துல கட்டிகொடுத்தா நமக்கு ஆதாயமுனு உங்கம்மாகிட்ட என் பொண்ண மிரட்டி சம்மதம் சொல்ல வச்சேன்..தப்பு தான் மன்னிச்சுகிடுங்க.. இரண்டு பேரும் இன்னைக்கு காலைல யாருக்கும் தெரியாம கண்ணாலம் பண்ணிகிட்டு வந்துட்டாங்க.. என்ன பண்றதுனு தெரியாம தரகர்கிட்ட சொன்னோம்.. அவர்தான் போன அமுத்தி வைக்க சொல்லிட்டாரு.. தப்பு பண்ணிட்டோம் மன்னிச்சிகிடுங்க தம்பி.. மன்னிச்சுடுங்கம்மா..” என்றார் பயந்து நடுங்கி…
அந்த பெண்ணின் தோற்றமோ கறுப்பாக மிகவும் ஒல்லியாக கழுத்து எலும்புகள் கன்னத்தில் எலும்புகள் துருத்திக கொண்டு இருந்தது. பக்கத்தில் நின்றவனோ அவளைப் போலவே..அவளை விட சற்று உயரமாக இருந்தான் அவ்வளவே..
Intresting sis 💞