ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா!! 

[7]

அடுத்தநாள் காலை, 

தன்னையொரு பிரேதாத்மா.. இருநூறு வருஷங்களாக நெஞ்சில் சுமந்திருந்த பழிவெறியுடன்.. உயிரைக் காவு கொள்ள வந்ததையும், 

தன் வம்சத்துக்கென்றே உரித்தான காவல் அடிமையின் ஆத்மா அவனைக் காத்ததையும்.. கூட அறியாமல்… இரவில் அவள் பற்றிய கற்பனைகளுடனேயே துயின்று எழுந்திருந்த இராஜகுல சத்யனுக்கு.. காலை நற்காலையாகவே அமைந்திருந்தது. 

எப்போதும் இந்தியாவின் தலைநகரான தில்லியில்.. காலை புலர்ந்ததும்.. இயந்திரத்தனமாக எழுந்து.. வாகனங்களின் புகைக்கும் , தூசுதும்பட்டைகளுக்கும் மத்தியில்தன் அலுவலகம் செல்பவனுக்கு, 

குறிஞ்சி நில எழில் சொட்டும் கண்டி மாநகரத்தின் இயற்கை வனப்பே மனதுக்கு இதமாக இருந்தது. 

கண்ணுக்கு எட்டும் தூரமெல்லாம் பச்சைப்பசேலென்ற மலைகளும், அவற்றின் உச்சி முகட்டை மறைத்துக் கொண்டிருக்கும் பனி சிந்தும் மேகங்களும்… நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் பைன் மரங்களும் என.. அவ்விடமே மனோகரமாகக் காட்சி தரலானது. 

அதிலும் அந்த மேகங்களுக்கிடையில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியனின் வெம்மையில்.. இலைதளிர்கள் மேல் உறைந்து கிடந்த பனியெல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக உருகிக் கொண்டிருக்க, 

மழையே இல்லாமல்.. எங்கனும் ஈரமாகவும், குளிர்மையாகவும் தரிசனம் தந்தது கண்டி மாநகரத்தின் ‘தம்பதிவனம்’ என்னும் கிராமம். 

கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்டிருந்த யௌவனாவின் வீடும், வீட்டு மாந்தர்களின் அந்நியோன்யமான உபசரிப்பும், கனிவான பேச்சும் அவனுக்கு நிரம்பவே பிடித்திருந்தது. 

அதிலும் அவள் அண்ணன் “வேல்பாண்டி”, முறுக்கு மீசையுடன்.. பார்ப்பதற்கு கர்ணகொடூரன் போல காட்சி தந்தாலும் கூட, ஒரே இரவில் சத்யாதித்தனுடன் ஓர் நண்பனைப் போல ஐக்கியமானதை எண்ணும் போது தான்.. இன்னும் இன்னும் ஆச்சரியம் தாளவில்லை. 

பின்னே உருத்து விழிக்கும் பார்வையுடன், அவனை கொலை செய்து விடும் கோபத்துடன் அல்லவா, சத்யனை பஞ்சாயத்தின் முன் நிறுத்தினான் பாண்டி? 

அவள் அண்ணன் வேல்பாண்டியையும் கரெக்ட் பண்ணியாயிற்று. அவள் அண்ணி “வாசுகி”யையும் ஏற்றுக் கொள்ள வைத்தாயிற்று. 

ஆனால், ‘உரியவள், உள்ளத்துக்கு உகந்தவள் அவளை எப்படி கரெக்ட் செய்வது?’ என்ற எண்ணத்துடனேயே, யௌவனாவின் வீட்டு முற்றத்துக்கு வந்தவனின்.. வெற்றுப் பாதங்கள்.. 

தம்பதிவன கிராமத்தில் இயற்கையாக மண்ணோடு மண்ணாக இரண்டறக் கலந்திருக்கும் சலவைக்கற்களின் ஜில்லிப்பை உணரலாயிற்று. 

தில்லியில்.. கால்களில் பாதணிகள் இல்லாமல் வெளியே இறங்காதவனுக்கு, வெற்றுப் பாதங்கள் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது கூட குளிர்ச்சியையே கொடுத்தது. 

அந்த கணம்.. யௌவனாவின் பக்கத்தில் காசைக் காட்டி அனைவரையும் ஒப்புக் கொள்ளச் செய்தது போல, 

தன் பக்கத்தில் இருக்கும் ஒரே உறவான தாயையும் கூட.. எதைக் காட்டி ஒத்துக் கொள்ள வைப்பது என்று தான் யோசனையாக இருந்தது. 

அவனுடைய அழகு மனைவி யௌவனத்தமிழ்ச்செல்வியைக் கண்டதும்.. யௌவனாவின் பேரழகில் மெய் சிலிர்த்து தாய் ஒத்துக் கொள்ளக் கூடும் தான். 

இருப்பினும் தாயின் சத்தியத்தை மீறி இலங்கை வந்திருப்பதை அறிந்தாலே.. கொஞ்சம் உணர்ச்சி வசப்படக்கூடும். 

தாய் உணர்ச்சி வசப்படுதலானது.. அவர்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்னும் போது தான் சற்றே யோசனை மீதூறியது அவனுக்கு. 

இருந்தாலும் இலங்கை வந்து இரண்டு நாட்களான பின்னும், தாய்க்கு இந்த விபரத்தை மறைத்து வைப்பது நல்லதல்ல என்று தோன்ற, 

டயலாக் செல் வலையமைப்பினால்.. அவன் இருக்கும் இடத்துக்கே வந்து சேரும் வகையில்.. அனுப்பி வைக்கப்பட்டிருந்த.. புது இலங்கை இலக்கங்களில் இருந்து, தன் தாய் ‘வசுந்தரா தேவிக்கு’ அழைப்பெடுத்தான் சத்யன். 

தன் டெனிம் பாக்கெட்டினுள் செல் ஏந்தாத ஒற்றைக் கையைத் திணித்துக் கொண்டு, அந்த சுத்தமான தூயகாற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டே.. சுற்றி வர இருந்த குளிர்மையான மரம் மட்டைகளை அவதானித்தவாறு.. தாயின் குரலுக்காக காத்திருப்பதும் கூட ஒருவகை பரமசுகமாகவே இருந்தது அவனுக்கு. 

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு, இவனும், “ஹலோ ம்மா…” என்று தொடங்க ஆயத்தமானது தான் தாமதம், மறுமுனையில் இருந்து.. இருபத்து நான்கு மணிநேரமாக கேட்காத மகனின் குரல் கேட்டதும் சற்றே உருக்குலைந்து பதற்றப்பட்டது ஓர் குரல்!! 

உருக்குலைந்த குரலேயானாலும் கூட.. அந்தக் குரலிலும் ஓர் கம்பீரம் இருந்தது. அரச பரம்பரைக்கே உரிய ஒரு நிமிர்வும் அதில் இருக்கத் தான் செய்தது. 

அழைப்பில் ஒலித்த குரலை வைத்தே அழைத்திருப்பது தன் ஏகப்புதல்வன் என்பதை அறிந்து கொண்ட தாய் ‘வசுந்தராதேவியோ’ ஆற்றாமை தாங்க முடியாத தொனியில், 

“இதுநாள் வரை.. ஒரு கோல் பண்ணனும்னு தோணுச்சா உனக்கு? பிஸியா இருக்கலாம் தான்ப்பா.. ஆனாலும் அம்மாவை மறக்குற அளவுக்கு என்ன பிஸி? அவ்வளவுக்கு அம்மா வேண்டாதவளாகிப் போயிட்டாளா?” என்று கத்தத் தொடங்க, 

அசடுவழிய சிரித்துக் கொண்டே.. நெற்றியை சொறிந்தவாறே தாயை சமாதானப்படுத்த வாய் திறந்தான் சத்யன். 

 “அம்மா.. கூல் கூல்..” என்று சொல்லிக் கொண்டே எதேர்ச்சையாக திரும்பியவனின் கண்களில் சமயாசந்தர்ப்பமே பாராது, அதுவும் எக்குத்தப்பான கோலத்தில் விழுந்து தொலைத்தாள் அவன் உள்ளங்கவர்ந்த யௌவனப் பெண். 

அதிலும் யௌவனாவின் வீடு.. ஒரு மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்திருக்க..இரு புறமும் காட்டுச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஒற்றையடிப் பாதை.. பள்ளத்தை நோக்கி இறங்கி செல்லும்.

 அதன் வழியாகச் சென்றால் கண்டியை வளைத்து ஓடும் ‘மகாவலி கங்கை’க்குச் செல்லும் வண்ணம் அந்தப் பாதை சென்றிருக்க.. அந்தப் பாதையிலிருந்து மெல்ல மெல்ல வீட்டை நோக்கி ஏறி வந்து கொண்டிருந்தாள் யௌவனா. 

காலையிலேயே.. ஆற்றுக்கு சென்று குளித்திருப்பாள் போலும். அவளுடைய அடர்ந்த கூந்தல் தண்ணீருக்கு நனைந்து.. ஆலமர விழுதுகள் போல தனித் தனியாகத் தொங்கித் தெரிய, 

தன் கழுத்துக்கு கீழான.. மார்புக்கு மேலான வெண்மைப் பிரதேசம் பளிச்சிட்டுத் தெரிய.. 

கீழே தன் தாமரை மொட்டுக்கள் போல கூம்பியிருக்கும் கொங்கைகளினதும், அவற்றின் மத்தியில் பிரம்மன் வைத்த இரு தாமரை வித்துக்களினதும் வனப்பை இறுக்கிப் பிடித்து செவ்வனே எடுத்துக் காட்டும்.. ஒரு உடுத்தாடையுடன்.. ஒருபக்க தோளில் ஈர உடைகளுடனும் மூச்சிறைக்க இறைக்க ஏறி வந்து கொண்டிருந்தாள் அவள்.

அந்த மூச்சிறைப்பில்.. அவளது பெண்மை எழில் கோளங்கள் அதிமிதமாக அசைந்த தினுசில்.. அவளில் இருந்தும் விழியெடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டிருந்தான் சத்யன். 

இதுவே வேறு பெண்ணாயின், கண்ணியமாய் பார்வையை அவன் திருப்பியிருக்கக் கூடும். ஆனால் அங்கே நின்றிருப்பது அவன் மனைவி அல்லவா? 

அவனது.. சுருள் சுருளான கூந்தல் கொண்ட இரண்டு வயது பெண்குழந்தைக்கு தாய் அல்லவா அவள்? 

கனவையும், நனவையும் போட்டு அவளருகாமையில் குழப்பிக் கொண்டவன், கண்களில் கிறக்கத்துடன் அவளையே பார்த்திருந்தான் அவன். 

அவள் கண்களில், ‘யாரும் பார்த்து விடக்கூடாது’ என்ற பதைபதைப்பு.. தெரிவது கூட, இள வயதினருக்கே உரிய குறும்புடன் திரியும் அவளுக்கு கியூட்டாகவே இருந்தது.

ஒருவேளை மாற்றுத்துணி எடுத்துச் செல்ல மறந்து விட்டாளோ? வெறும் உடுத்தாடையைக் கட்டிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது அவனுக்கு. 

முப்பொழுதும் அவளது… காதல் கற்பனைகளுடனேயே சொக்கித் திரிபவனின் காதுகள், மறுமுனையில் தாய் வசுந்தராதேவி தாறுமாறாக தன்னை அர்ச்சித்துக் கொண்டிருப்பதையும் கூட செவிமடுக்க மறந்து போனது. 

அதிலும் நெற்றியோடு வீழ்ந்து.. கன்னத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த ஈர மயிர்க்கற்றையொன்றிலிருந்து வழிந்த.. உருண்டு திரண்ட ஒரு நீர் முத்தொன்று.. 

அவளது ரோஜா இதழ்கள் மேல் பனித்துளி போல நிற்க.. அதன் ஈரத்தை தன் அதரத்தால் சுத்தம் செய்ய வேண்டும் என்ற காதல் வெறி பிறந்தது அவனுக்குள். 

ஒருவகையான ஜிலீர் என்ற உணர்வில்.. தன் அதரங்களைத் தானே ஈரப்படுத்திக் கொண்டு.. அவளது இதழ்களையே அவன் பார்த்திருக்க, 

தன் உள்ளுணர்வால் தன்னையே வெறித்துப் பார்க்கும் அந்தத் திருட்டுப்பூனையைப் பார்த்தவள், அவன் பார்வை செல்லும் இடத்தைப் பார்த்ததும் கன்னக்கதுப்புக்களில் திடீரென ஓர் செம்மை தோன்ற திகைத்து நின்றாள். 

அது.. அவன் பார்த்து விட்டானே என்ற கன்னச்சிவப்பா? கோபச் சிவப்பா? 

அதையும் அந்த பெண்ணுள்ளம் மட்டும் தான் அறியும்!! 

முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டு, சட்டென தோளில் கிடக்கும் ஈரத்துணிகளையே நிமிட நேரத்தில் மாராப்பாக மாற்றி, தன் மார்புகளை மறைத்தவள், 

ஆத்திரத்தில்.. தன் யௌவன இதழ்கள் வளைத்து, அவனுக்கு பழிப்புக் காட்டிக் கொண்டே.. அவனை முறைத்துப் பார்த்தவாறு, மென்மையாக இதழ்கள் அசைத்து, ‘பொறுக்கி’ என்று திட்டிக் கொண்டே, வீட்டின் கொல்லை பக்கம் நாடிப் போனாள் அவள். 

அவள் பழிப்புக் காட்டிய தினுசிலும், இதழுக்குக் கூட வலிக்காத மென்மையுடன், ‘பொறுக்கி’ என்று சொன்ன விதத்திலும்.. சட்டென தலை குனித்தவனுக்கு, அழகான மென்னகை வந்து போனது அவன் இதழ்க்கடையோரம். 

பிற ஆடவர்கள் பார்த்து விடக்கூடாது என்று பதைபதைப்புடன் சென்றவளுக்கு, அவன் பார்த்ததும் மட்டும் ஏனாம் அந்த பதைபதைப்பு கிஞ்சித்தும் இல்லாமல் போனது?

தக்கதருணத்தில் யோசிக்க மறந்து போனாள் அவள். 

அவள் முழுமையாக கண் பார்வையில் இருந்தும் நீங்கிய பின் தான், தாயின் அர்ச்சனைகள் யாவும் அவன் காதில் விழவும் செய்தது அவனுக்கு. 

தாயிடம் மென்மையான குரலில், “எப்போடா என் மருமகளை கண்ணுல காட்டுவ காட்டுவன்னு கேட்டுட்டே இருப்பேல்ல? உனக்கு ஒரு அழகான மருமகளை கொண்டு வந்தே தீரணும்னு தான்.. கிளம்பி வந்துட்டேன்..”என்று சொல்ல, மகனின் குரலே ஒருமாதிரி கிறங்குவதை அவதானித்தார் வசுந்தரா தேவி. 

வேறு நேரமாக இருந்திருந்தால், கல்யாணம் என்றாலே பதறியடித்துக் கொண்டு அரைகாத தூரம் ஓடும் மகன்.. இன்று அவனாகவே ‘மருமகள்’ பற்றிய பேச்சை எடுக்கிறானே? என்று உள்ளம் உவந்திருக்கக் கூடும். 

ஆயினும் அவன் உரைத்த ‘கிளம்பி வந்துட்டேன்’ என்ற வாசகத்திலேயே உள்ளம் சிக்குண்டு நிற்க, புருவங்கள் இடுங்கத் தெளிவான குரலில் கேட்டார் தாய், 

“இப்போ நீ எங்கேயிருக்க?”என்று. 

தாய்க்கு சந்தேகம் எழுந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டவன், “நான் கெளம்புறேன்னு சொல்லியிருந்தா.. நீ என்னை வரவே விட்டிருக்க மாட்ட.. அதான் உன்கிட்ட சொல்லிக்காமல் கிளம்பி வந்துட்டே..”என்று மகன் சொல்ல, இம்முறை வசுந்தரா தேவியின் பதற்றம் அதிகமானது. 

சற்றே நாவு வேறு திக்கித் தொலைய, “இப்..இப்போ நீ எங்கேயிருக்க?”என்று அழுத்தமான குரலில் கேட்டார் அவர். 

தாய் களேபரம் அடைவதை உணர்ந்தவன், அவரை ஆசுவாசப்படுத்தும் முகமாக, “டென்ஷனாகாதம்மா.. கொஞ்சமா நரைச்சிருக்குற முடி.. இன்னும் நரைச்சிரப்போகுது.. அப்புறம் என் பொண்ணு.. உன்னை பாட்டின்னு கூப்பிட மாட்டா.. பூட்டின்னு தான் கூப்பிடுவா”என்று சொல்லி தாயை மலையிறக்க முயற்சிகள் எடுத்துப் பார்த்தான் அவன். 

வசுந்தரா தேவிக்கும் கூட.. மகன் தனக்கு ஒரு பேத்தியைக் கொடுப்பது பற்றிய சந்தோஷம் உள்ளளவில் முகிழ்த்தாலும் கூட.. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாமல் செய்ததும் சத்யனின் செயலே. 

“சத்யா.. மழுப்பினது போதும் இப்போ நீ எங்கேயிருக்க?”

 அவர் குரலில் இருந்த உறுதி.. நீ என்ன சொக்குப்பொடி போட்டாலும் தாய் அவன், ‘எங்கே இருக்கிறான்?’ என்பதை அறியாமல் விடப்போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. 

அவனும் தான் விடுவானா என்ன? வேண்டுமென்றே தானிருக்கும் இடத்தை சொல்ல பிரியப்படாதவன், சிரித்துக் கொண்டே, 

“நம்ம சவுத் ஆசியா இருக்குல்ல..?”என்று இழுக்க, அவனது தாயும் தன் பொறுமையை இழுத்துப் பிடித்த வண்ணமே பதில் சொல்லலானார். 

பற்களை அழுந்தக் கடித்துக் கொண்டவராக, “ஆமா.. சவுத் ஆசியா இருக்கு.. நம்ம இந்தியா கூட சவுத் ஆசியாவில் தான் இருக்கு.. அதுக்கென்ன இப்போ? ..”என்று கறார் பேர்வழி போல கேட்டவருக்கு, அதற்கு மேலும் முடியவில்லை. 

இறுதியில் தவிப்பு நிறைந்த குரலில், “அம்மா கேட்குறேன்ல? நீ எங்கே இருக்கேன்னு சொல்லு சத்யா?” என்று கேட்க அப்போதும் கூட பட்டென்று விஷயத்தை சொல்ல நாட்டங்கொள்ளவில்லை வசுந்தராவின் ஏகப்புதல்வன். 

இவனும் தாயின் பொறுமையை சோதிக்க, “இருமா.. நம்ம இந்தியா பக்கத்துல ஒரு குட்டித்தீஈஈவ்..”என்று முழுமையாக சொல்ல வாயெடுத்ததும் தான் தாமதம், பொறுமையே அற்றவராக எகிறத் தொடங்கினார் வசுந்தரா தேவி. 

தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டும் எழுந்து கொண்டவரின் விலாப்புறங்கள் ஏறி இறங்க, பதைபதைப்புடன் மூச்சு வாங்கிக் கொண்டே, 

“சத்யாஆஆஆ.. வ்விளையாடினது போதும்.. அம்மா கேட்குறேன்ல? இப்போ நீ எங்கேயிருக்கேன்னு சொல்லூஊஊ!!”என்று இயம்ப, இதற்கு மேலும் யசோதையை அலைக்கழிப்பது உசிதமல்ல என்று புரிந்து போனது அந்த நவீனக் கண்ணனுக்கு. 

தன் சுற்றிவளைத்து கதை சொல்லும் பாணியை எல்லாம் விட்டவன், அமைதியான குரலில், 

“அம்மா… உன் சத்தியத்தை மீறி போனது தப்பு தான்.. ஆனால் என் காதலை அடையுறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை.. நான் இலங்கையில் தான் இருக்கேன்..” என்று சொன்ன அடுத்த விநாடி இடியேறு கேட்டது போல நெஞ்சமெல்லாம் வெளவெளக்கத் தொடங்கியது வசுந்தராதேவிக்கு. 

அங்கிருக்கும் ஆபத்து தெரியாமல்.. மகன் சத்தியத்தை மீறிச் சென்றிருப்பதில்.. நெற்றியெல்லாம் வியர்த்துக் கொட்ட, நா வேறு குழறவாரம்பித்தது. 

“ச.. சத்… சத்யா உன்னை யாரு இலங்கைக்குப் போகச் சொன்னதூஊ? அம்மா சொல்லி இருக்கேன்ல? நீ இலங்கை மண்ணை மிதிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல? அம்மா சத்தியத்தை மீறிட்டேல்ல?” என்றவருக்கு இரத்த அழுத்தம் எகிறியதோ என்னவோ? 

செல்லை மேற்கொண்டு பிடிக்கக் கூட முடியாத வண்ணம்.. கைகள் எல்லாம் நடுக்குறத் தொடங்கியது. 

அன்னை உச்சபட்ச பதற்றம் கொண்டதில் தன்னையும் மீறி “ப்ம்ச்” என்று அலுத்துக் கொண்டவனாக, தான் பேசுவதை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற கலக்கத்தில், 

முற்றத்தில் இருந்து தன்னறைக்கு விரைந்து போனவன்,அறைக்கு வந்ததும் சற்றே இரைந்த குரலில், “அம்மா.. ப்பார்த்தீய்யாஆ?? ந்நீ தேவையேயில்லாமல் டென்ஷனாகுற?.. அதான் உன்கிட்ட சொல்லாமல் மறைச்சேன்..”என்று சமாதானம் சொன்னான் அவன். 

இளங்கன்று பயம் அறியாது அல்லவா?

 சத்யனுக்கு அங்கே தம்பதிவனத்தில் தன்னைச் சூழ இருக்கும் ஆபத்து இன்னதென்று புரியவில்லையாயினும் கூட, அப்படியே தெரிந்திருந்தாலும் அதை அசிரத்தையாகவே எடுத்துக் கொண்டிருந்திருப்பான் அவன். 

தாய்க்கு தான்.. தன் ஏக வாரிசை எப்படியாவது நந்தினியின் அகோர சபதத்தில் இருந்து காக்க வேண்டும் என்றானதில் ஈரக்குலையெல்லாம் நடுங்கிப் போனது. 

ஆரம்பத்திலிருந்த பதற்றம் அணுவும் குறையாதவராக, “சத்.. சத்யாஆஆ…. ந்நீ… ந்நீஈஈஈ.. எவ்ளோ பெரிய்ய ஆபத்துல மாட்டியிருக்கன்னு உனக்குப் புரியலடாஆஆ.. கண்.. கண்ணாஆ… ..”என்று பேசிக் கொண்டிருக்கும் போதே.. மேற்கொண்டு பேசும் தாயின் செய்தியைக் கேட்க விடாமல் இடைஞ்சல் கொடுத்தது செல்!! 

தாயின் குரல் நின்று போனதே என்ற கேள்வியுடன், “ஹலோ.. ஹலோ” என்று பலமுறை உரக்கக் கத்தியவனாக, காதிலிருந்து செல்லை எடுத்து திரையைப் பார்த்த போது, செல் பேட்டரி சார்ஜ் இல்லாமல் அணைந்திருப்பது புரிந்தது. 

சற்றே அலுத்துக் கொண்டவனாக.. செல்லை சார்ஜரில் போட்டவனாக அவன் நிமிர்ந்த வேளை பார்த்து, 

ஒரு கிண்ணம் நிறைய அல்வாவுடன்… காலை நேரம் குளித்து முடித்து அவள் சென்ற போது இருந்த அதே மாறாத.. 

முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முகபாவனையுடனேயே அவனது அறைக்குள் உள்நுழைந்தாள் யௌவனா. 

சற்றே உலர்ந்த கூந்தலும், அந்தக் கூதலைத் தாக்குப் பிடிக்கும் வண்ணம்.. ஸ்வெட்டர் மற்றும் ஸ்கேர்ட்டில்… பார்ப்பதற்கு.. கொள்ளை அழகுடன்.. அப்பாவித்தனமான கண்களுடன் நின்றிருந்தாள் அவள். 

அவனுக்கோ.. சற்று முன் கண்ட.. நீர்முத்து தேங்கி நின்ற இதழ்முத்துக்கள் ஞாபகம் வர, அவனையும் மீறி அந்தக் கண்கள்.. தேனூறும் அந்த அதரங்களிலேயே பதிந்து நிற்கலானது. 

யௌவனாவைக் கண்டதும் அவன் கண்கள் காதல் கிறக்கத்தை கடன் வாங்கிக் கொள்ள.. தன்னுடைய மனைவி என்ற ஏக உரிமையில், 

ஏகத்துக்கும் அவளைப் பார்த்து புன்னகை சிந்தியவன், “என்ன? உன் சத்யனைப் பார்க்காம.. காலையிலேயே இருக்க முடியலையா என்ன?”என்று குறும்புக் கூத்தாட கண்சிமிட்டிக் கேட்க, 

அந்த அழகனின் கண்சிமிட்டலில் ஒரு கணம் நின்று வந்தது மூச்சு. 

அவன் சொக்கிப் போகும் வண்ணம் கண், புருவம், காது என மூன்றையும் அட் அ டைமில் சுருக்கிய வண்ணம், பொழிலுடன் தலையாட்டி மறுத்தாள் அவள். 

“ம்ஹூஹூம் அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. அண்ணி உனக்கு அல்வா கொடுத்தனுப்பி விட்டாங்க.. இந்தா எடுத்துக்க”என்றவளாக தன் கையில் இருந்த அல்வா கிண்ணத்தை அவன் பால் நீட்டினாள் யௌவனா. 

தாயைப் பற்றிய சிந்தனை மெல்ல மெல்ல அவன் சிந்தனையை விட்டும் அகல,அவன் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமிக்கலானாள் அந்த யௌவனப் பெண். 

 அவள் தந்த அல்வா கிண்ணத்தை முகம்மலர ஏற்றுக் கொள்ளும் சாக்கில்..

 அவளது தளிர்விரல்களை இலேசாக உரசிய வண்ணமே அவன் அதை எடுக்க, அவன் செயலில் பட்டென்று தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள் யௌவனா. 

அவனது குறும்பில்.. அவள் அவனை கீழ்க்கண்களால் பார்த்து.. முறைத்து வைக்க, அந்தத் திரண்ட விழிகளின் அசைவில்.. அவளையே யுகம் யுகமாக.. கல்லாய் சமைந்து நின்றவனாக பார்க்கலாம் போல இருந்தது அவனுக்கு. 

தன் முத்து மூரல்கள் பளிச்சிட்டுத் தெரிய.. சிரித்துக் கொண்டே.. ஒரு கரண்டி அல்வாவை வாய்க்குள் திணித்தவனாக, “நான்ல உனக்கு அல்வா கொடுக்கணும்.. நீ தர்ற?”என்று குறும்புக் கொந்தளிக்கக் கேட்டான் சத்யன். 

அதில் சின்ன போலிக் கோபம் மீதூற இவளோ, சன்னமான குரலில் “நெனப்பு தான் பொழைப்ப கெடுக்குமாம்.. அல்வா தந்துருவாரேமா.. அல்வ்வாஆஆ!! ”என்று முணுமுணுக்க ஆரம்பித்தாள். 

அல்வாவின் இனிப்பை இரசித்து ருசித்து மென்ற போதும் கூட.. அவன் பார்வை.. அவளது செவ்வதரங்களிலேயே தேனை மொய்க்கும் வண்டாக ஒருவித கிறக்கத்துடன் பதிந்திருந்தது. 

கிறக்கம் கொள்ளும் ஆண்களின் விழிகளோரம் பூக்கும் சிவப்பு அழகு!! 

அல்வாவின் இனிப்பு தோற்கும்.. அவளது அதரங்களின் இனிப்பில் என்று எண்ணிக் கொண்டவனுக்கு, அவளது அதரங்களின் சுவைகளை பார்க்க நனவிலும் கொஞ்சம் அத்துமீறினால் தான் என்ன? என்ற எக்குத்தப்பான யோசனையும் சொன்னது மனம். 

அவ்வறையை விட்டும் செல்லாது தயங்கிய முகபாவத்துடன் அவனையே பார்த்திருந்தவள், மிக மிக மிருதுவான குரலில், தலையைப் பார்த்த வண்ணம், “நா… நான் உ.. உன்கூட கொஞ்சம் பேசணும்..”என்றான்.

தன் அன்பு மனைவி தலைகுனிந்து நிற்பதை வெட்கமாகக் கொண்டவனுக்கு, அவள் மேல் காதல் ஊற்றெடுத்து நதியாகப் பாய்ந்தது. 

சற்றே அவளை நோக்கி முன்னாடி சாய்ந்தவன், அவள் மூச்சு தன் கழுத்துவளைவில் பட்டு மோதும் அளவுக்கு நெருங்கிப் போய், ஹஸ்கி குரலில்,“என்ன பேசணும்? பொண்டாட்டி..”என்றாள்.

‘பொண்டாட்டி’ என்ற அவன் விழிப்பில்.. அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அவன் கண்களில் வழிந்து கொண்டிருந்த அவளுக்கான காதல்.. அவளை ஏனோ பேச விடாமல் செய்தது. 

****

 அங்கே அவனது தாயாரின் நிலை தான்.. சத்யனின் துண்டிக்கப்பட்ட செல் அழைப்புக்குப் பிறகு.. ரொம்பவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது. 

பெற்ற தாயுள்ளம் அல்லவா? தன் மகனை எந்த தீய சக்திகளும் அண்டாது.. காத்து விடும் எண்ணம் மலையளவு ஊறிப் போயிருந்தது அவருள். 

ஆரம்பத்தில், மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டதை கூட அறியாதவர், “ஹலோ ஹலோ சத்யாஆஆ.. ஹ.. லோ.. ..”என்று பதற்றத்துடன்.. பலமுறை அழைத்துப் பார்த்தவர், மகன் பதிலளிக்காமல் போனதும்.. இன்னும் கொஞ்சம் அதிகமானது கலவரம். 

பக்கத்தில் நின்றிருந்த.. தன் அந்தரங்க செயலாளர் பெண்ணை அழைத்தவர், தனங்கள் ஏறி இறங்க பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டவராக, கட்டளையிடும் குரலில்,

 “இம்மீடியட்டா சத்யாவோட செக்ரட்டரிய வரச் சொல்லு!! ..”என்று சொல்லி விட்டு..நடுக்கம் தாளாமல் சோபாவில் தொப்பென அமர்ந்தார் வசுந்தராதேவி. 

தன் எஜமானியம்மாவின் இரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற.. இதர பணிப்பெண் ஒருத்தி, குறிப்புணர்ந்து.. ஓடிப் போய் ‘பீபி மாத்திரை’யுடன் வர, அதை அருந்திய பின்னரும் கூட… அவரது உடல் துணுக்கம் ஆசுவாசம் எய்த நிறைய நேரம் தேவைப்பட்டது. 

சத்யாதித்தன் இந்தியாவில் இல்லாத வேளை.. சத்யாதித்தனின் வழிகாட்டுதலின் பேரில்..அத்தனை வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் கவனித்துக் கொண்டிருந்த செயலாளர்.. அன்று சென்னையில் இருக்கும் ‘சத்யனின் உணவகங்களை’ மேற்பார்வை செய்ய வந்திருந்த நாள். 

அடுத்த ஓரிரு நிமிடங்களில் எல்லாம் ‘வசுந்தராதேவி தன்னைப் பார்க்க அழைத்திருக்கும்’ தகவல் சொல்லப்பட, இருக்கும் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு.. 

அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்களில் எல்லாம்… கம்பீரமும், ஆளுமையும் மிக்க வசுந்தராதேவியின் முன்னாடி நின்றிருந்தான் சத்யனின் செயலாளர். 

சத்யாதித்தனின் சென்னை வீடு ரொம்பவும் பரிசுத்தமாக,தெய்வீககரமாக பராமரிக்கப்பட்டு வரும் வீடு!! 

அதிலும் தாய் வசுந்தராதேவியின் வாசஸ்தலம் என்றானதும், சத்யனின் செயலாளரான அந்த ஆடவன், தன் ஷூவினை வாசலிலேயே களைந்து விட்டு, வெறும் ஸாக்ஸூடனேயே உள்ளுக்குள் நுழைந்திருந்தான். 

 செயலாளர் வேறு உச்சபட்ச களேபரத்துடன், பெண் ஆளுமைக்கென்றே பிரசித்தமான வசுந்தராதேவியின் சீற்றப் பார்வையை சந்திக்க முடியாமல்.. 

கைகளை கட்டிக் கொண்டு தலைகுனிந்து நிற்க, சோபாவில் ஒரு பெண்ணியப் பிரதிநிதி போல கம்பீரமாக அமர்ந்திருந்த வசுந்தரா தேவியோ, செயலாளனை ஏற இறங்கப் பார்த்தார். 

அதிலும் எதையுமே ஆரம்பத்திலிருந்து தூண்டித் துருவிக் கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர், உச்சஸ்தாயியில்,

அவன் கண்களையே சுட்டெரிப்பது போல பார்த்தவராக, “சத்யா எப்போ இலங்கைக்கு ப்போனான்..?”என்று தான் வெடுக்கென்று கேட்டார். 

அவரின் குரலின் தீவிரமே.. செயலாளரின் மேலுள்ள கோபத்தின் வீரியத்தை பறைசாற்ற, அவரை ஏறிட்டுப் பார்க்கவும் திராணியிருக்கவில்லை அவனுக்கு. 

இராஜ வம்ச தோரணையில் இருந்த வசுந்தரா தேவியை நிமிர்ந்து பாராமலேயே, பவ்யமான குரலில், “இன்னையோட டூ டேய்ஸ் ஆச்சு மேம்..”என்றான் செயலாளர். 

அவரோ அதைக் கேட்டதும் ஆக்ரோஷமான சீறிப்பாயும் குரலில், “ சத்யா இலங்கைக்கு ப்போறாஆஆன்றதை ஏஏஏன் என்கிட்ட சொல்லலை? அவன் மூச்சு விட்டாலும் எனக்கு இன்பார்ம் பண்ணனும்னு சொல்லியிருக்கேனா இல்லையா??”என்று கேட்டவரிடம் எந்த பதிலும் சொல்ல முடியாமல் நின்றான் ஜனார்த்தனன். 

ஜனார்த்தனனுக்கோ.. தாய் இவ்வாறு சொல்ல மகனோ ‘எதையும் மூச்சு விடக்கூடாது’ என்று சொல்லியிருக்க, இருதலைக்கொள்ளி எறும்புக்கிடையில் அகப்பட்டது போல தவித்து நின்றான். 

தன் குரலே தனக்குக் கேட்காத குரலில், “இல்லை மேம்.. சார் தான்… இதைப்பத்தி உங்க கிட்ட சொல்ல வேணாஆஆம்னுஊஊ” என்று இழுத்த கணம், 

“ம்முட்டாஆஆஆள்!!..”என்று கத்திக் கொண்டே எழுந்தவர், ஆத்திரம் தாளாமல் ஜனார்த்தனனின் கன்னத்துக்கே ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார் வசுந்தரா தேவி. 

அந்த கணம் அகன்ற விழிகளில் பூத்திருந்த செம்மை.. அவரின் கோபம் எத்தகையது என்பதை பறைசாற்றும் முகமாக இருக்க,ஜனார்த்தனனை சுட்டெரிப்பது போல பார்த்து வைத்தார் அவர். 

ஓரிரு நிமிடங்களில் எல்லாம் தன் கோபத்தை மட்டுப்படுத்துக் கொண்டவர், “சீக்கிரம் நம்ம சாட்டர் ஃப்ளைட்டை அரேஞ்ச் பண்ணு.. இன்னைக்கு சூரியன் அஸ்தமிக்குறதுக்குள்ள நான் அங்கே இருக்கணும்.. அப்படியே நம்ம நம்பூதிரியையும் கையோட வரச்சொல்லுங்க.. எந்த செடுல் இருந்தாலும்.. நான் அவரை வரச்சொன்னேன்னு கையோட அழைச்சிட்டு வாங்க… அவரும் நம்ம கூட இலங்கைக்கு வந்தாகணும்”என்று பற்பல கட்டளைகளை இராஜதோரணையுடன் படபடவென்று இட்டவர், 

அதற்கு மேலும் அங்கு நில்லாமல் விடுவிடுவென்று தன்னறைக்குள் விரைந்தார். 

 

***

அங்கே தன்னை ‘பொண்டாட்டி’ என்று விழிக்கும்.. அழகிய செம்பட்டை நிற கேசத்தானின் அருகாமையில்.. முற்றிலும் மாறுபட்ட மனோநிலையில் நின்றிருந்தாள் யௌவனத்தமிழ்ச்செல்வி. 

நேற்றிரவு, வாசுகி அண்ணி தந்த பாலை அவனிடம் கொடுத்து, அந்த மாயக்கண்ணனின் காதல் சில்மிஷத்தில் சற்றே சூடாகிப் போனவள், “ஒழுங்கு மரியாதையா வாலை சுருட்டிட்டு ஓடிப்போயிரு”என்று எச்சரித்தவள் தான்.. ஆனால் இன்றோ அதிகாலை வேளையில் இருந்து அவள் மனமோ முற்றிலும் மாறிப் போயிருந்தது. 

அதற்காக அது நல்ல மனமாற்றமா? என்று கேட்டால்.. அது தான் இல்லை. 

 அவனைப் பற்றி முழுமையாக அறியாததால் வந்த ஒரு வகையான குழப்பகரமான மனமாற்றம் அது!!

 எங்கேயோ இருந்து வந்து, ‘ தன்னை காதல் செய்.. காதல் செய்’ என்று சொல்லும், ‘இந்த ராஜகுமாரன் யார்?’ என்ற எண்ணமே.. அவளை அலைக்கழித்துக் கொண்டேயிருக்க, 

அவள் ‘யார் இவன்?’ என்று கூகுளில் தேடிப் பார்க்க ஆசை கொண்டாள். 

‘சத்யாதித்த ராஜசிங்கன்’ என்னும் இப்பெயரை அடித்து தேடினால், அதே பெயர் கொண்ட பலரின் தகவல்கள் வந்து கொட்டும்.

எதைப் பார்ப்பது? எதை விடுவது என்று தெரியாமல் அவள் குழம்பிப் போவது நிச்சயம். 

அதனால் கூகுளில் ‘இமேஜ் சர்ச்’ தேடிப்பார்க்க ஆசை கொண்டவள், 

அவன் அறியாமலேயே.. ஒளிந்து மறைந்து நின்று.. அவனது புகைப்படத்தை எடுத்திருந்தாள் அவள். 

புகைப்படத்திலும் கூட… விலையுயர்ந்த மாடலைப் போல.. மைக்கேல் ஆஞ்சலோ வடித்த.. ஒரு கிரேக்க விளையாட்டு வீரனின் சிற்பம் போல.. கட்டுமஸ்தான உடலுடன் பதிந்திருந்தவனை விட்டும்.. கண்ணெடுக்க முடியாமல் நின்றது.. அவள் மனம் மட்டுமே அறிந்த ஓர் உண்மை. 

 அவன் புகைப்படம் செல்லில் இருப்பதை அவளது கள்ளமனம் விரும்புகின்றது தானே?? தன்னைத் தானே கேள்வி கேட்டு ‘நோஸ்கட்’ செய்த மனதை, ‘அப்படிலாம் ஒண்ணுமில்லையே.. இது ஜஸ்ட் ஃபோர் இன்பர்மேஷன்’ என்று காரணம் சொல்லி அடக்கவும் செய்தாள் யௌவனா. 

 ‘இமேஜ் சர்ச்’ கொடுத்து.. அவன் புகைப்படத்தைப் பதிவேற்றித் தேடிப் பார்த்தாள். . 

ஆனால் கூகுள் ஆண்டவரோ..அவனது முழுப்பெயர், பிறந்த தினம், அவனது ஒருநிமிடத்துக்கான ‘நெட்வர்த்’ ஆகியவற்றுக்கும் மேலதிகமாக, அவனுடைய பல அந்தரங்க தகவல்களையும் தர ஆடிப்போனாள் அவள். 

அந்தரங்கத் தகவலா?? அது தான்ப்பா ‘கிசுகிசு’. பிரபலம் என்றானால் கூடவே கிசுகிசுவும் முளைப்பதும் சகஜம் தானே? 

இங்கே வர இரு வாரங்களுக்கு முன்னர்.. தில்லியில் தனக்கென்று சொந்தமான, ‘தனி கெஸ்ட்ஹவுஸில்’ ஸ்விம்மிங்பூலில்.. 

அண்மையில் மிஸ். வேர்ல்ட் டைட்டிலை தவற விட்டு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட ஒரு இந்திய மாடல் அழகியுடன்.. நின்றிருந்தான் அவன். 

நீச்சல் தடாகத்தில் அலை அலையாக எழுந்த இளநீல நிறமும், சூரியனின் தங்கக் கதிர்களும் சேர்ந்து பளபளக்கும் இடுப்பளவு தண்ணீரில்.. அவன் முறுக்கேறிய வெற்று மார்புடனும், ஷார்ட்ஸூடனும் அவன் நின்றிருக்க, 

அவன் திண்ணிய கைகளில்.. மார்பையும், தன் அந்தரங்கப் பிரதேசங்களையும் மட்டும் இரு கர்ச்சீப் கொண்டு மறைத்தது போன்ற ‘ இரு பீஸ்’ உடையில் இருந்த.. அம்மங்கையை தூக்கிக் கொண்டு நின்றிருந்தான் சத்யாதித்தன். 

அதைக் கண்ட மாத்திரத்தில் திகுதிகுவென்று பற்றியெரிந்து கொண்டிருந்தது யௌவனாவுக்கு. 

 

தன்னுடைய ஐ பேட்டிலுள்ள அவன் அந்த பிரபலத்தை.. எக்குத்தப்பான கோலத்தில் தூக்கிப் பிடித்திருக்கும் தெள்ளத் தெளிவான புகைப்படத்தினைக் காட்டியவள், 

உள்ளுக்குள் சின்ன அசூயையை மீதூற, “இரண்டு வாரத்துக்கு முன்னாடி.. யாரோ ஒரு செலிப்ரிட்டியை ஸ்விம்மிங் டிரஸ்ஸோட தூக்கிப் பிடிச்சு நின்னுட்டிருந்தேன்னு நிவ்ஸ்ல போட்டிருக்கு?.. நீ என்னடான்னா இரண்டு மாசமா என்னைத் தொடர்ந்து பாலோ பண்ணி.. காதலிச்சேன்னு பஞ்சாயத்துல சொன்ன? உன் உடான்ஸையெல்லாம்.. என்னை நம்பச் சொல்றீயா..?”என்று கேட்டாள் யௌவனா. 

அவனுக்கோ அவள் கேள்வி சரிவர மூளையை அடையவில்லையாயினும், அன்று தான் அந்த எக்குத்தப்பான புகைப்படத்தை முதன் முதலில் பார்த்ததும் அதிர்ந்து தான் போனான் உள்ளுக்குள். 

அநேகமாக அவன் பற்றிய கிசுகிசுக்களை செயலாளர் ஜனார்த்தனன் அவன் கண்களில் காட்டுவதில்லை. 

அப்படிக் காட்டினால்.. அந்த கிசுகிசுவை வெளியிட்ட செய்தி நிறுவனத்துக்கு.. இவனது மறைமுக பாதிப்பினால்.. தில்லியின் உயர்மட்டக்குழுவினரிடம் இருந்து நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

அடுத்த நிமிடமே.. சில்லறை செய்தி நிறுவனமாக இருந்தால் இழுத்து கடையை மூடி விட்டு, ‘துண்டை காணோம் துணியைக் காணோம்’ என்று ஓடுவதும், 

இதே பெயர் போன செய்தி நிறுவனமாயின் மன்னிப்பு பிரசுரமும் வெளியிடுவதும் நடக்கும்!! 

இந்த டென்ஷன் அவனுக்கு வேண்டாம் என்று தான் ஜனார்த்தனனும், கிசுகிசு செய்திகளை அவனிடம் அண்டவிடாமல் செய்வது. 

அப்படி அண்டவிடாமல் செய்த ஓர் செய்தி தான் இது என்று புரிந்து விட.. தன்னவள் தன்னை சந்தேகப்படுகிறாளோ என்ற பதற்றத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அவளையே ஏறிட்டுப் பார்த்த வண்ணமே இருந்தான் அவன். 

,ஆனால் யௌவனாவின் திரட்சியான நயனங்களில் குமிழியிட்டுக் கொண்டிருந்த அப்பாவித்தனம் ஏனோ அவனை ஈர்க்க, அடுத்த நிமிடம் முகத்தில் இருந்த சீரியஸ்னஸ் மறைந்து அவளுடன் விளையாடிப் பார்க்க ஆசை கொண்டான் அவன். 

அல்வா கிண்ணத்தை அருகில் இருக்கும் டிராயர் மீது வைத்தவன், ஓரெட்டில் அவளை நெருங்கிப் போக, அவளோ அவன் செய்கையில் துணுக்குற்று ஈரெட்டுப் பின்னாடி போய், 

கதவோடு கதவாக சாய்ந்து நிற்கலானாள். 

அந்தத் தருணங்கள்.. அவள் இதயம் தாறுமாறாக திக்திக் என்று அடித்துக் கொண்ட தருணங்கள் அவை. 

அங்கிருந்து சென்று விடலாம் என்றெண்ணி அவள் செல்ல எத்தனித்த வேளை, அதற்கு விடாமல் தன் வலிய கையை வேலி போல வைத்து அணைகட்டி நின்றான் அவன். 

அவனது பரந்த விரிந்த மார்பும், இவளது மென்மைக்கலசங்களும் மோதிக் கொள்ள, அணுவளவு இடைவெளி நிற்க, விறைத்துப் போனாள் மாது. 

அவள் மூச்சு கூட வெளிவர மறுத்தவளாக அவனையே இமைக்காமல் பார்த்திருக்க, 

அவனது கண்கள்.. மையலுடன் தையலின் அதரங்களையே பார்க்க, இதழோ ஹஸ்கி குரலில், “நமக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்தை கூட இருக்குமா? என்னை போய் சந்தேகப்படுறீயா?”என்று கேட்டு வைத்த தினுசில் ஆடிப்போனாள் அவள். 

அவளது நயனங்கள் சட்டென்று அகல விரிய, அவனது தலைகால் இல்லாத பேச்சினில், “வாட்?..ரெண்டு வயசுல குழந்தையா? இது எப்போ..?”என்று கேட்டவள், மயக்கம் வராத குறையாகத் தான் நின்றாள். 

கனவின் தாக்கத்திலிருந்து வெளியே வராதவன் உள்ளம் அந்த கணம் சுற்றம் மறக்கத் தான் செய்தது. 

வேல்பாண்டி வீட்டில் இல்லாததுவும், வாசுகி அண்ணி சமையல் கட்டே தஞ்சம் என்று கிடப்பதுவும் யாருக்கு போனஸோ.. இவனுக்கு போனஸாகவே அமைந்து போனது. 

அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனவன், அடக்கவே மாட்டாமல்.. பனித்துளி சிந்தும் அந்த அதரங்களை தன் பெருவிரல் கொண்டு இலேசாகத் தொட்டான். 

முதன் முதலாக தன் இதழ்கள் மீது ஓர் ஆணின் தொடுகை!! இதுவே வேறு யாருமாக இருந்திருந்தால் அவள் ஏற்றிருப்பாளா என்று தெரியாது. 

ஆனால் சத்யன் தொட்டதும்.. கத்தி ஊரைக் கூட்டாமல்.. அடங்கி நிற்பதன் இரகசியமும் அறியாது.. எச்சில் விழுங்கிக் கொண்டே.. அவனையே மலங்க மலங்கப் பார்த்தாள் மங்கை. 

அவன் இதழ்கள்.. அவளதை நோக்கி முன்னேறின கொஞ்சம் கொஞ்சமாக. 

அவன் முத்தம் வைக்கத் தான் வருகிறான் என்றெண்ணியவள்.. அச்சத்தில் கண்கள் மூட, அவனோ இதழ்கள் தாண்டி காதுக்குள் நுழைந்து, கிசுகிசுப்பாக, “நேத்து ராத்திரி கூட நமக்கு ‘அது’ நடந்தது தெரியுமா?”என்று சொல்ல, பதறியடித்தவளாக, 

அந்தக் கனவு மயக்கத்தில் இருந்து வெளியே வந்தாள் யௌவனா. 

‘என்ன நேத்து ராத்திரி கூட ‘அது’ நடந்ததா? அவள்.. அவளது அறையில் தானே துயின்றாள்? ஒ.. ஒருவேளை… அவள் துயின்றிருந்த நேரம்.. அவளே அறியாமல்.. இரகசியமாக வந்தானோ?’ என்ற நினைப்பிலேயே பக்கென்றானது அவளுக்கு. 

அவனோ அவளின் நயனங்களின் விரிவையும், பதற்றத்தையும், அதன் அப்பாவித் தனத்தையும்.. கள்ளத்தனமாக இரசிக்கவும் செய்தான். திருடன். 

இன்னும் கொஞ்சம் அவளிடம் விளையாடிப் பார்க்க நாடி, அதே தாபக்குரலில், “நீ தான்.. ‘சத்யா சத்யா’ன்னு புலம்பி புலம்பி.. மூணு தடவை.. என்னை ஒரு வழி பண்ணிட்ட..”என்று பெருமூச்சு விட, அவளுக்கோ… சட்டென்று சிந்தனையில் ‘அந்த’ ஞாபகம் வந்து போனது. 

அவனது வெற்று முதுகில் நகங்கள் அழுந்தப் பதிய, கழுத்துவளைவில் இதழ்கள் உரச.. கிறங்கிய கண்களுடன்.. ‘சத்யா.. சத்யாஹ்”என்று ஒவ்வொரு அசைவுக்கும் புலம்புவது கற்பனையில் விரிய சிலிர்த்துக் கொண்டது உடல். 

நனைந்த பறவை போல தலையை உதறிக் கொண்டவள்,அந்தச் சிந்தனையில் இருந்து வெளியே வந்து அச்சத்துடன்.. அவனைப் பார்த்தாள். 

அவன் சொன்ன ‘அது’ நடந்ததற்கான சாத்தியப்பாடே அவளுடலில் இல்லாமல் போக, அவன் சொல்வது எப்படி சாத்தியம்? 

அதிலும் இரண்டு மாதத்துக்குள்.. இரண்டு வயது பெண்குழந்தையும் தான் எப்படி சாத்தியம்?? 

ஓர் பித்தனைப் பார்ப்பது போல.. விழிகளை சுருக்கி சத்யாதித்தனைப் பார்த்தவள், 

சின்னக் குழந்தை போன்ற அலறும் குரலில், “மெண்டலாய்யா நீ??.. உன்னை பார்த்தா கொஞ்சூண்டு பிடிக்குது.. ஆனால் நீ பேசுறதைக் கேட்டா.. தான்யா பயம் பிடிக்குது..” என்று சொல்ல, அவளையே ஒரு குழந்தையைப் பார்ப்பது போல இரசித்துப் பார்த்தான் அவன். 

அவனது பார்வை ஏதோவொன்றை உணர்த்த, அவள் பேச்சு மூச்சற்றவளாக அவனது முகம் பார்த்தாள்.

அவளது ஸ்தம்பிப்பைப் பார்த்து புன்சிரிப்பு சிந்தியவன், 

மீண்டும் அவளைச் சீண்டிப் பார்க்க நாட்டம் கொண்டவனாக, “என்ன இப்படி நிற்குற? இதையே நீ சம்மதம் தர்றேன்னு எடுத்துக்கட்டுமா..? ராத்திரி நடந்ததை பகல்லேயும் ஒரு ஒத்திகைப் பார்த்துக்கலாமா?நீ ஒண்ணும் செய்யத் தேவையில்லை.. நீ அமைதியா என் பக்கத்தில் இருந்தா மட்டும் போதும்..மத்தது எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. என்ன சொல்ற? ”என்று கேட்க, அவளுக்குக் குளிர் ஜூரமே வந்து விடும் போல இருந்தது. 

அச்சத்தில் அவனது கையை தட்டி விட்டவள், கூரையைப் பார்த்து கை கூப்பியவளாக, 

“ஐய்யோ ஈஸ்வரா… இந்த மெண்டல்கிட்டேயிருந்து என்னை காப்பாத்தூஊ..”என்று அலறி அடித்துக் கொண்டு, தப்பித்து ஓட, சிரித்துக் கொண்டே தலைசிலுப்பி நின்றான் அவன். 

அவளோடு கழிக்கும் இந்த கணப்பொழுதுகள்.. அவளை சீண்டும் இந்த கொஞ்சம் கேடித்தனமான வார்த்தையாடல்கள், அவளது அப்பாவித்தனம் என எல்லாமும் பிடித்திருந்தது அவனுக்கு. 

அன்று முற்பகல் வேளையில்.. அறையில் இருந்த மேசையில் அமர்ந்து, தன் லேப்டாப்பில்.. ஜனார்த்தனன் அனுப்பிய முக்கியமான மெயில்களை சரிபார்த்துக் கொண்டிருந்த கணம், 

அறைக்குள் நீண்டது வளையல் அணிந்திருக்கும்..வெண்ணெய்யில் குழைத்து குழைத்துச் செய்தாற் போன்றிருக்கும் ஓர் வெண் கரமொன்று. 

அதில் அடைக்கலமாகியிருந்தது பால் குவளை. 

அந்தக் கையின் மொழுமொழுப்பான தன்மையும், அதில் இருக்கும் ஒற்றை தங்க வளையலும், அந்தக் கையின் வனப்பை கூட்டிக் காட்ட, 

கூடவே கேட்டது அவன் எஞ்ஞான்றும் கேட்க ஆசை வைக்கும் குரல். 

அந்த கையில் இருந்த பாலை அந்தரத்தில் நீட்டிய வண்ணம், “இந்தாங்க பாதாம்பால்.. அண்ணி கொடுத்து விட்டாங்க..” என்றது வேறு யாராக இருக்கக் கூடும். 

சாக்ஷாத் நம் யௌவனத்தமிழ்ச்செல்வியே தான். 

மேசையில் கையூன்றி அமர்ந்திருந்தவனுக்கு இதழ்களில் குறும்பு கொப்பளிக்க, திறந்த அதரங்களை கடினப்பட்டு மூடிக் கொண்டு, கறாரான குரலில், “ஏன் உள்ளே வந்து தரமாட்டீயோ..?” என்று கேட்டான் அவன். 

அவளோ.. அச்சம் மேலூறும் குரலில், “நான் வந்தா தான் எக்குத்தப்பா ஏதாவது மெண்டல் மாதிரி பேசி வைக்குற? பார்த்து வைக்குற? பயமா இருக்கு? ”என்று அவள் சொல்ல, குபீர் சிரிப்பு எழுந்தது அவனுள். 

அவளை உள்ளே வரவைப்பது என்ற திண்ணக்கத்துடன், “இது தான் விருந்தோம்பல் இலட்சணமா? வ்வாசுகீஈஈஈ அக்..” என்று கத்தப்போக, அடுத்த விநாடி மின்னல் வேகத்தில் அவனுள் நுழைந்திருந்தவள், அவனே எதிர்பார்த்திராத விதமாக.. மேசையில் பால்கப்பினை வைத்து விட்டு, 

அவன் பின்னங்கழுத்தோடு ஓர் கை, இதழ்களோடு ஓர் கை சென்றிருக்க.. அவன் வாயை இறுகப் பொத்தியிருந்தாள் அவள்.  

அதிலும் அச்சப்படபடப்பில் கண்ணிமைகள் தாறுமாறாக அடித்துக் கொள்ள, இரகசியமாக, “ஐய்யோ.. கத்திக்கித்தி தொலைச்சிடாத.. ப்ளீஸ்..”என்று கெஞ்சவும் செய்தாள் அவள். 

அவளது பட்டுக்கைகள் அவன் இதழ்களில்.. இதைத்தவிர வேறென்ன வேண்டும் அவளுக்காக கடல் கடந்து வந்திருக்கும் சத்யாதித்தனுக்கும்? 

அவளது கையை தன் இதழ்களில் இருந்தும் எடுத்து கன்னத்தில் இதமாக வைத்துக் கொண்டவன், கிறங்கும் கண்களுடன், 

“இப்டி நீ என் பக்கத்திலேயே இருக்குறதுன்னா.. நான் ஏன் கத்தபோறேன்” என்று அவனாகவே சொல்ல, தன் செயலில் அவள் கன்னத்தில் செம்முலாம் பூசியது போல ஏறியது சிவப்பு. 

அவனது குறுகுறு பார்வையையே தாள மாட்டாதவள், வெட்கத்துடன் அவனை விட்டும் விலகிச் செல்ல, வீட்டு முற்றத்திலே.. நாராசமாகக் கேட்டது நான்கைந்து உயர்ரக கார்கள் வந்து நிற்கும் ஒலி!!

அந்தக் காரின் பின்னால் ஊர் சிறுவர்கள் அனைவரும் ஊர்வலம் வந்திருக்க, ‘என்ன நம் வீட்டு முன்னால்.. இத்தனை வாகனங்களா?’ என்று விக்கித்துப் போனவளாக.. வீட்டு ஹாலிலேயே கல்லாய் சமைந்து நின்றாள் மென்னிலா. 

அந்த கணம்.. நான்கு கறுப்புக் கார்களுக்கு நடுவில் வந்த வெள்ளைக்காரில் இருந்து.. ஒரு மேல்வர்க்கப் பெண்மணி இறங்க, கோர்ட்சூட் அணிந்து வந்த ஓர் ஆடவன் கார் கதவைத் திறந்து விட, அதிலிருந்து இறங்கினார் கம்பீரமும், ஆளுமையும் கலந்திருக்கும் ஓர் பெண். 

உண்மை வயது ஐம்பதுக்கு மேற்பட்டிருந்தாலும் கூட, உடலில் ஒரு சிறிதும் ஊளைச்சதை இன்றி.. பார்ப்பதற்கு தெய்வ கடாட்சம் ஒளிரும் விழிகளுடன் நின்றிருந்த அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து, இறங்கினார் ஓர் நம்பூதிரி. 

சந்தனத்தில் முக்குளித்திருந்த வெற்றுமார்பினை காவிச் சால்வையால் போர்த்திய வண்ணம், இடுப்புக்குக் கீழே காவிக்கலரில் ஆன தோட்டியுடனும், கழுத்து நிறைய ருத்திராட்ச மாலைகளுடனும், நெற்றியிலே சந்தனமும், குங்குமமும் கலந்த பொட்டுடனும்… நீண்ட விரிந்த கண்களில் ஒரு தீவிரத்துடனும்.. தலையில் ஒரு முன்குடுமியுடனும் பார்க்கவே பயங்கரத்துடன் நின்றிருந்தார் அந்த மலையாள மாந்திரீகர். 

மாந்திரீகரும், அந்த பெண்மணியும் அலட்சிய பாவனை மிளிர அவள் வீட்டுக்குள் நுழைய, அந்த சுரூபினிப் பெண்ணைக் கண்டு கொண்ட வசுந்தராதேவியும் கூட அவள் அழகில் ஒரு நிமிஷம் நடை தடைப்பட்டுத் தான் நின்றார். 

‘ஓஹோ.. இவளுக்காகத் தான்.. இலங்கை வந்தானோ புதல்வன்?’ என்று எண்ணிய வண்ணம், மேலிருந்து கீழ்வரை ஓர் பார்வை அவர் பார்க்க, 

ஏதும் புரியாத யௌவனாவோ, “யார் நீங்க?”என்று கேட்டு வைத்தாள். 

அப்போது.. அரவம் கேட்டு அண்ணியும், சத்யனும் வெளியே எட்டிப்பார்க்க, அண்ணியும் யௌவனாவைப் போல யார் இவர்கள் என்று புரியாமல் நிற்க, 

தாயைக் கண்டதும் அதிர்ச்சியுடன், “அம்மா” என்றான் சத்யன்.

என்ன இத்தனை படாடோபத்துடன் வந்திறங்கியிருப்பது சத்யனின் தாயாரா? என்று.. யௌவனா விழி விரித்து நிற்க, சத்யனின் தாயாரின் விழிகளோ.. யௌவனாவை விட்டும் இம்மியளவேனும் அகலவேயில்லை. 

முப்பொழுதும் சத்யனை விட்டும் நீங்காமல்.. அவனை காவல் காக்கும் தேவதாவுக்கோ.. நம்பூதிரியைக் கண்டதும்.. இதுவரை இருந்த இறுக்கம் அகன்று இலகுத்தன்மை பிறந்தது. 

தன் மனைவியிடமிருந்து.. தன் அரசரைப் பாதுகாக்க வழிபிறந்தது என்று குளிர்ந்தது உள்ளம். 

ஆனால் வசுந்தராதேவியைத் தொடர்ந்து வந்த நம்பூதிரியின் காலடி அம்மண்ணில் பட்டதை… நிலவறையில் உறைந்து கிடக்கும் நந்தினி உணர்ந்தாளோ?

 வெடுக்கென்ற விழிகள் நிமிர்த்திப் பார்த்தாள்; அவள் முகம் உணர்ச்சிகளைக் காட்டாது விறைத்துப் பின் ஓர் கேவலமான அலட்சிய சுழிப்பு உதட்டில் பரவியது.

 

 

 

தேவதா வருவான். 

 

ஏகாந்த இரவில் வா தேவதா!! 

[8]

சத்யனின், “அம்மா” என்ற குரல் கேட்டு, திரும்பிய தாய் வசுந்தராதேவிக்கோ மகனைக் கண்டதும் இதயமெல்லாம் உருகிப் போயிற்று. 

அவரின் கண்கள்.. உச்சாதி பாதம் வரை சத்யனை வாஞ்சையுடன் ஆராய, கண்களோ.. என்னவென்று எழுத்தில் வர்ணிக்க முடியாதளவுக்கு.. சிவந்து கலங்கிப் போயிருந்தது. 

மகன் அந்த ‘சபிக்கப்பட்ட பூமிக்கு’ வந்திருக்கிறான் என்ற தகவல் அறிந்து.. இலங்கைக்கு ஓடோடி வந்தவருக்கு… சத்யனைக் காணவும் தான்.. போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. 

தாயின் கலங்கிய கோலம் கண்டு சத்யாதித்தனுக்கும் உள்ளூற கலக்கம் தான். 

வசுந்தராதேவியின் இளவயதில்.. கணவர் இறந்த பின்பு, பிறிதொரு மணம் புரிந்து கொள்ளாமல்.. அவர் வாழ்ந்தது கூட அவனுக்காகத் தானே? 

‘அவரின் மனம் வாடச் செய்து, அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி இலங்கை வந்துவிட்டோமே?’ என்று மனம் வேறு ஒரு பக்கம் கிடந்து உறுத்த, நொடியும் தாமதியாமல் வசுந்தராதேவியிடம் விரைந்தான் சத்யாதித்தன். 

சத்யனை மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெகுவெகு அருகாமையில் பார்க்கும் அவர் மனம்.. ஓர் குழந்தையைப் போல இளகவாரம்பித்திருந்தது. 

சத்யாதித்தனின் இரு முரட்டுக் கன்னங்களையும் ஏந்தியிருந்தவருக்கு, கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருக்க, குரலோ தழுதழுக்க, “ச.. சத்யா உனக்கு ஒண்ணும் ஆகலையேப்பா.. நல்லாதானே இருக்க?” என்றவருக்கு, அந்த இடத்தில் நின்றிருக்கும் தருணங்கள் பயங்கரமானதாக இருந்தது. 

தாயின் வருத்தம்.. அவனின் வருத்தமும் அல்லவா?

 தாய்க்கு தன்னால் எத்தனை பெரிய பதற்றம்? களேபரம்? என்று தன்னைத் தானே நொந்து கொண்டான் சத்யாதித்த இராஜசிங்கன். 

அங்கமெல்லாம் தடவி.. தன் மகனுக்கு ஒன்றுமில்லை என்று பரிசோதித்து உறுதி கண்ட அவர், மகனின் முன்னங்கையைப் பிடித்துக் கொண்டு, “நீ இங்கொண்ணும் இருக்க வேண்டாம் இப்போவே என் கூட புறப்படு.. நாம இந்தியா போயிரலாம்” என்று அப்போதே அவனை அழைத்துச் சென்றிடும் வேகம் அவருக்குள். 

பெற்ற தாயுள்ளம்..தன் மகவை.. அத்தனை கொடூரத்திலிருந்தும் பாதுகாக்க ஏங்குகிறது; தவிக்கிறது. 

அதனை நன்கே அறிந்திருந்தான் சத்யாதித்தன். ஆனானப்பட்ட ஆண்மகனும், தாயன்பின் முன் குழந்தையாய் அடங்கிப் போவான். சத்யாதித்தனும் அடங்கிப் போகவே செய்தான். 

ஆனால் அவன் காதல்? தேசம் விட்டு தேசம் வந்து.. கடல் தாண்டி வந்து.. அவள் மீது அவன் கொண்ட காதல்? 

யௌவனாவுக்குமே.. அவனுடைய சின்னச் சீண்டல் பேச்சுக்களில், ஆண்மைக்கே உரிய களையான அந்த முகத்தில், ‘பொண்டாட்டி’ என்ற அவனுடைய அழைப்பில்..

உள்ளூற யாரும் அறியாமல் அவன் மேல் மெல்லிய காதல் இழையோடியிருப்பது என்னவோ உண்மையே தான். அந்தக் காதல் உணர்வு பற்றி அவளுமே சரிவர அறிந்திராத உண்மை. 

இப்போது தாய் வந்து பாரதம் செல்ல அழைக்கவும் , அவன் சென்று விடுவானோ என்ற துணுக்கம் கண்களில் பிறக்க… தூணோடு தூணை விரல்கள் கோர்த்து அணைத்துப் பிடித்தவாறு, அவனது புறுமுதுகையே பார்த்து நின்றாள் மங்கை. 

அவளது உள்ளத்தின் துணுக்கத்தை மனோ அலைகள் மூலம் அறிந்து கொண்டானோ கள்வனும்? 

அவள் எண்ணங்களை அச்சொட்டாகப் படித்தது போல, பட்டென்று அவளை நோக்கி தன் முகம் திருப்பினான் சத்யாதித்த இராஜசிங்கன். 

அவனது திடீர் திரும்பலில்.. கன்னியவளின் கண்களில் சின்ன படபடப்பு தோன்றி மறைய, அவனையே இமைக்காமல் பார்த்து வைத்தாள் யௌவனா. 

அவனும், அவள் மட்டும் உணரும் வண்ணம் கண்களில், ‘நான் போகட்டுமா?’என்று கண்சிமிட்டிக் கேட்க.. அவள் முகத்தில் மின்னலைப் போல தோன்றி மறைந்தது அவஸ்தை உணர்வு. 

அதன் பின் தன் முகத்தை உணர்ச்சியற்ற முகமாக மாற்றிக் கொண்டவள், மெல்ல தலைகுனிந்து நின்றாள். 

நேற்றிரவு அவனைப் பார்த்து “வாலைச் சுருட்டிட்டு ஓடிரு” என்று சொன்னவள் தான்.. இன்று அவனே செல்ல சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றும், ஏனோ விட்டுப் பிரிய மனம் கூடி வரவில்லை அவளுக்கு. 

ஆயினும் இந்த விட்டுப்பிரிய விரும்பாத இந்த எண்ணத்துக்குப் பெயர் தான் காதலா? அது தான் தெரியாது. 

அவளது முகம் கூம்பிப் போன முகம்.. அதில் தோன்றிய அவஸ்தை சின்னக் கணப்பொழுதுகளேயாயினும் கூட.. அதையும் கூட நுணுக்கமாகக் கண்டு விட்டவனுக்கு, ஆயிரம் மின்னல் பிரகாசம் களையான அவன் வதனத்தில். 

அதே சந்தோஷம் மாறாமல் தாயை நோக்கியவன் குரலில் விடாப்பிடியான ஓர் உறுதி தோன்ற, “அம்மா நான் யௌவனாவை விட்டுட்டு எங்கேயும் வரமுடியாது.. வரவும் மாட்டேன்..!!” என்றான் சத்யாதித்தன். 

தன் ஏகப்புதல்வனின் உறுதி கண்டு.. பெற்ற தாயுள்ளத்துக்கோ ஈரக்குலை நடுங்கிப் போயிற்று. மகனுக்கு பூர்வீகம் சொல்லி.. இந்த பூமி ஓர் பதிவிரதையின் சாபம் தாங்கி நிற்பதைச் சொல்லிச் சொல்லி வளர்க்காமல் விட்டது தவறோ? 

காலங்கடந்து வருத்தம் முகிழ்த்தது தாய் வசுந்தராதேவிக்கு. 

ஆனாலும் சத்யனின் கூற்றில்… உள்ளூற.. எத்தனை முயன்றும், கட்டுப்படுத்தவே முடியாத பதற்றம் தோன்ற, தோளுக்கு மேலே வளர்ந்து விட்டிருந்த மகனின் நெஞ்சைத் தொட்ட வண்ணம், 

“சத்.. சத்.. சத்யா.. அம்.. அம்மா சொல்றதை கேப்பேல்ல?.. இந்.. இந்த பாவப்பட்ட பூமி நமக்கு வேண்டாம் சத்யாஆஆ .. இங்கே நமக்கு எத்தனை ஆபத்து இருக்குன்னு தெரியாமப் பேசிட்டிருக்கேடா..” என்று தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருக்க, 

நம்பூதிரியின் பார்வையோ.. நம் நாயகி யௌவனாவை விட்டும் இம்மியளவேனும் அகலவேயில்லை. 

அவளது யௌவனத்தைக் கண்டு சொக்கிப் போய்.. ஓவியத்தை இரசிக்கும் பார்வை பார்த்தார் என்று நீங்கள் எண்ணியிருந்திருப்பின் அது தவறு. 

அவரது பார்வையில் கடுஞ்சிந்தனை புரையேறிப் போயிருக்க..ஓயாது அவள் முகத்தையே தான்.. தீவிர உன்னிப்பாக.. பார்த்திருந்தார். 

‘இராஜசிங்கர்களை காவு வாங்க காத்திருக்கும் ஓர் பிரேதாத்மாவான நந்தினி… இவள் உருவில் சத்யனின் கனவுகளில் புகுந்து.. மனம் மயக்கிய மாயையினை.. தன் ஆத்ம விந்தையால் அறியப் பெற்றாரோ அவரும்?

 அப்படித்தான் போலும். சத்யன் தாயின் சத்தியத்தை மீறி இலங்கை வந்திருப்பதுவும், இப்போது இந்தப் பெண்ணின்றி மீண்டும் பாரதம் திரும்ப முடியாது என்று உறுதியாக இருப்பதுவும்.. கனவில் வந்த இந்தப் பெண்ணின் மீது தீராத அன்பு பூண்டிருப்பதனால் தான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது. 

சத்யாதித்தன்.. தன் கனவு மனைவிக்காக.. இந்த உலகத்தையும் கூட அவள் காலடியில் சமர்ப்பிக்கவும் கூடும். 

இந்த யௌவனச் சுந்தரி இன்றி.. சத்யாதித்தன் தம்பதிவனத்தை விட்டும் ஓரெட்டு வைத்து அகல மாட்டான் என்று புரிய, அவர் கைகள் யோசனையுடன் தன் முரட்டு மீசையினை நீவி விட்டுக் கொண்டது. 

ஆயினும் அங்கே புதல்வனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் வசுந்தராதேவியிடம் வாய் திறந்து.. இது பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்.

 நம்பூதிரி தன்னை.. பற்பல யோசனைகள் ஓட.. பார்த்து வைப்பதைக் கூட.. அறியாமல், தாயையும், மகனையுமே பார்த்தபடி நின்றிருந்தாள் பேதைப்பெண். 

சத்யனுக்கு தாய் சொல்லும் ‘ஆபத்து’, ‘தன் உயிருக்கே கேடாக அமையக் கூடும்’ என்றோ.. அந்த ஆபத்தின் வீரியமோ கூட புரியவேயில்லை. 

வாலிபன் சத்யனுக்கு.. இந்த உலகிலேயே அவன் காதல் ஒன்றே உயர்ந்தது ;வலியது. 

பின்னே.. கனவில் வந்த யௌவனப் பெண் வேறு… அவனை உருகி உருகி காதல் செய்து.. அது கனவல்ல நிஜம் என்பதைப் போல காதல் செய்தால்.. சத்யாதித்தனும் தான் இந்த நிஜமான யௌவனாவை விட்டும் எங்கணம் நீங்க முயற்சிப்பான்? 

இந்த மண் எப்பேர்ப்பட்ட மண்ணாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவனுக்கு காதல் மனைவி யௌவனா வேண்டும்!! 

அவளோடு இரண்டறக் கலந்தால் தான் அவன் ஜென்மசாபல்யம் தீரும்!! பித்துப் பிடித்தாற் போன்று அலைந்தது சத்யாதித்தனின் உள்ளம். 

தம் ஊருக்குள் புதிதாக நுழைந்த.. பளபளவென்று கறுப்பு நிறத்தில் மினுமினுக்கும்.. வெளிநாட்டுக் காரைத் தொடர்ந்து சிறுவர்கள் சென்ற விஷயம்..ஊரில் காட்டுத்தீயாகப் பரவி.. நடப்பதைக் கேள்விப்பட்டு ஊரார்களும், 

வெளியே சின்ன அலுவல் காரணமாகச் சென்றிருந்த வேல்பாண்டியும் வீடு வந்து சேர்ந்திருந்த தருணம் அது. 

வீட்டுக்குள் சிறுகச் சிறுக கூட்டம் கூடுவதையுமோ.. வீட்டு முற்றத்தில் நின்றபடி ஜனத்திரள் வேடிக்கைப் பார்ப்பதையுமோ கணக்கில் கொள்ளாதவனோ, 

அந்த நேரம் பார்த்து இவனும் தாயை நோக்கி உறுதியுடன், “அம்மா” என்றான் சத்யன். 

பெரும்பாலான பணக்கார வர்க்கப் புதல்வர்கள் தாயை, இனிய தாய் மொழியில் ‘அம்மா’ என்றழைக்காமல், ‘மாம்’என்றோ, ‘மம்மி’ என்றோ அழைப்பது பிடிக்காது வசுந்தராதேவிக்கு.

தாய்மொழியில் அழைக்கப்படும் எந்த அழைப்புக்கும்.. இதயத்துடன் உண்டாகும் நெகிழ்ச்சியான தொடர்பு ஆழமானது என்று கருதும் ரகம் அவர். 

அதனால் சத்யனுக்கும் தான் “அம்மா” தான். 

தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து, சூழ இருந்த மக்களை இராஜதோரணையுடன் ஓர் பார்வை பார்த்தவன், அசைத்துப் பார்க்க முடியாத குரலில், “ஐ கேவ் மை வர்ட் டு தீஸ் பீப்பிள்.. நான் யௌவனாவை மணக்குறதா உறுதி கொடுத்துட்டேன்.. எனக்கு இந்த ஜென்மத்துல மனைவின்னா.. அது யௌவனா தான்..” என்றான். 

சத்யாதித்தனின் கம்பீரமும் சரி, தாயை எதிர்த்து.. தான் கொடுத்த வாக்கின் பக்கம் அவன் நிலைத்து நின்றதும் சரி.. வேல்பாண்டிக்கு.. சத்யாதித்தன் மேலுள்ள மதிப்பை இன்னும் கொஞ்சம் கூட்டவே செய்தது. 

மகனின் உறுதியில்.. வசுந்தராதேவிக்கு தான் படபடப்பு மிகுந்தது. 

இரத்தம் வேறு ஏகத்துக்கும் எகிற, “ஐய்யோஓஓ.. உனக்கு ஊருலகத்துல வேற பொண்ணா கெடைக்கல?? … அதுவும் இந்த தம்பதிவனமா கெடச்சது?.. இது ஒரு பாவப்பட்ட பூமிப்பா.. இந்த பூமியும் வேண்டாம்.. இந்த மனுஷங்களும் வேண்டாம்.. சத்யா அம்மா சொல்றதைக் கேளு.. நாம இந்தியாவுக்கே போயிரலாம்..”என்று தன்னால் முடியுமான மட்டும் பணிந்து போய் தான் பேசினார் வசுந்தராதேவி. 

யௌவனாவுக்கோ, வசுந்தராதேவி தன் சொல்லாடல்களில் அடிக்கடி, ‘பாவப்பட்ட பூமி.. பாவப்பட்ட பூமி’ என்று இலங்கையை விழிப்பது ஏனோ பிடிக்கவேயில்லை.

உண்மை விவரம் அவளுமே சரிவரா அறிந்திராத பேதைப் பெண் அல்லவா? வசுந்தராதேவின் விழிப்பு.. அவளுள் தன் வருங்கால அத்தையைப் பற்றி சின்ன கருத்து வேறுபாட்டைக் கொடுக்கத்தான் செய்தது. 

அதனால் முகத்தில் சின்ன முகச்சுளிப்புடனேயே, நின்றிருந்தாள் அவள். 

சத்யாதித்தன் தன் நிலையில் இருந்தும் ஒரு சிறிதும் இறங்கி வரவேயில்லை. அவன் தான் பிடித்த முயலுக்கு மூன்று காலு என்பது போல பிடிவாதத்துடன் தான் நின்றான். 

ஆயினும் தன் உறுதியையும் தெளிவான குரலிலேயே தாய்க்கு எடுத்துரைக்கவும் செய்தான்.

“ஐயோ அம்மா புரிஞ்சுக்குங்க.. ஐ ஹேவ் ஓல் த லிபர்ட்டி டு செலெக்ட் மை லைப் பார்ட்னர்.. எனக்கு யௌவனா தான் மனைவின்னு நான் ஸ்தீரமா முடிவு பண்ணிட்டேன்..”என்று சொல்ல, வசுந்தராதேவியின் இத்தனை நேர கெஞ்சல்கள் எல்லாம் பட்டென்று நின்றது. 

வசுந்தராதேவியின் முகத்தில்.. இத்தனை ஆட்களுக்கு மத்தியில் மகன் தன் பேச்சைக் கேட்காத இயலாமை ஆத்திரமாக மாற.. அது சீற்றமாக உருவெடுக்கவும் செய்தது. 

இதற்கெல்லாம் காரணம்… அந்தப் பெண். தன் மகனின் மனம் மயக்கி.. அவன் சித்தம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் அந்தப் பெண் என்று தோன்ற.. அவரது சீற்றப் பார்வை மகனை விட்டும்.. யௌவனாவில் பதிந்தது. 

அவரது விலாக்கள் ஏறி இறங்க.. சீற்றப்பெரும்மூச்சுக்கள் விட்ட வண்ணமே.. அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தார் வசுந்தராதேவி. 

யௌவனாவே வாய் திறந்து, ‘இங்கிருந்து போய்விடு’ என்று சொல்லச் செய்ய வேண்டும் என்று தோன்ற.. நன்றாகவே தன் சூட்சும புத்தியைக் கையாண்டார் அவர். 

எந்த இடத்தில் தாக்கிப் பேசினால்.. எந்த இடம் வலிக்கும் என்று புரிந்து வைத்திருந்தவரோ.. சத்யனை பட்டென்று திரும்பி நோக்கி, “சத்யா.. சரி.. என் சத்தியத்தை மீறி இலங்கை வந்த? ஆனா.. நம்ம தகுதி, தராதரம் பார்த்து ஆசை வைக்கணும்னு தோணலையாப்பா உனக்கு? உனக்காக பெண் கொடுக்க.. இண்டியாஸ் மோஸ்ட் லீடிங் பிஸினஸ் மேன்லாம் காத்திருக்க.. போயும் போயும்.. உலக வரைபடத்துல குட்டியாக தெரியுற இந்த நாட்டின்.. ஒரு பட்டிக்காட்டுப் பொண்ணா கெடச்சுது? நம்ம எதிரில் தான் இவங்களால நிற்க முடியுமா? டவுரின்னு வரும் போது.. இவங்களால தான்.. தாக்குப் பிடிக்க முடியுமா?”என்று கேட்கக் கேட்க, 

கொஞ்சமே கொஞ்சம் சத்யாதித்தனின் பால் அன்பு முகிழ்த்திருந்தவளுக்கு, வெண்ணெய் தாழியை உடைத்தாற் போன்று.. சட்டென்று உடைந்து போனது அவனுக்கான அன்பு. 

‘இந்தம்மா மகனை.. இவள் மயக்கிக் கைக்குள் போட்டது போல’ பேசும் அவர் பேச்சில்.. ஏகத்துக்கும் கோபம் போனது அவளுக்கு. 

அவளா அவன் வேண்டும் வேண்டும் என்று இரவுபகலாக அவன் பின்னாடியே திரிகிறாள்? அவன் தானே வந்தான்?

 உங்கள் ‘கைக்குழந்தையை’ நீங்களே கூட்டிச் சென்று விடுங்கள். இந்தியாவின் பெரும் வர்த்தகர்கள் மகளுக்கே மணம் முடித்தும் கொடுங்கள்.

 வேண்டும் என்று யார் கிடந்து அழுதது? என்று சொல்லி விட எண்ணி சுருசுருவென கோபம் மூக்குக்கு மேலே போக, சட்டென்று சொல்லி விட வாய் திறந்த கணம் இடையிட்டான் சத்யன். 

அதுவும் பெருங்குரலில். 

மகன் அல்லவா?? தாயின் சூட்சும உரைகளுக்கான அர்த்தம் நன்றாகவே புரிந்தது. ஆயினும் அதில் தன் இனியவளின் மனம் நோகக் கூடும் என்பது தான் தாங்கவே முடியாமல் போனது அவனுக்கு. 

கை முஷ்டிகளை மடக்கிய அழுத்தத்தில், கையெங்கிலும் நரம்புகள் புடைத்து ஓட, வதனம் சற்றே செம்மை கொள்ள, அகன்ற விழிகளுடன் தாயைப் பார்த்து , “ ம்மாஆஆ.. இனாஃப்!!” என்று இரைந்து கத்தினான் சத்யாதித்தன்.

அவனது சினம் தாளாமல்.. அவனது தோள்புஜங்கள் தாறுமாறான வீச்சில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, 

 “அம்மாஆஆ.. நீங்க.. என் காதலை கொச்சைப்படுத்துறீங்க.. அவங்க மனசு.. நோகடிக்குறதா நெனச்சு.. நீங்க என் மனசை தான் நோகடிக்குறீஈங்க்க” என்று கத்திச் சொன்னான் மகன்.

அந்த ஒற்றை வசனத்தில்.. மனதுக்கள் தூறல் போட்டது போல ஏதோ ஒரு இதமான உணர்வு தோன்ற.. பட்டென்று நிமிர்ந்து கனிந்த கண்களுடன், சத்யாதித்தனைப் பார்த்தாள் யௌவனா. 

‘தேசாந்திரம் கடந்து வந்த இந்த ஆணழகன்.. அப்படி என்ன அவளிடம் இருக்கிறது? இத்தனை அன்பு பூணுவதற்கு?”என்ற அன்பு விதையாயை விழுந்து.. விருட்சகமாக வேர் விடத் தொடங்கியதும் அந்த கணப்பொழுது தான். 

ஊரே கூடி நின்று சண்டைக்கு சிலிர்த்து நிற்கும் மகனையையும், தாயையும் வேடிக்கைப் பார்க்க, நிலைமை பெரிதாகும் முன்னர், இடையில் புகுந்தான் யௌவனாவின் அண்ணன் வேல்பாண்டி.

வசுந்தராவை இரு கையெடுத்தும் கும்பிட்டவர், மரியாதையான குரலில், 

“அம்மா வணக்கம்.. நான் யௌவனாவோட அண்ணன் வேல்பாண்டி..” என்று தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, வசுந்தராதேவி முகத்தில் சின்ன இளக்காரம். 

அதை வேல்பாண்டி கணக்கெடுக்காதது போல இருந்தாலும், அந்த இளக்காரப் பார்வை கண்ட யௌவனாவுக்குத் தான் உள்ளே திகுதிகுவென பற்றியெரிந்தது. 

அவளது அண்ணாவும் சம்பந்தி வீடு என்பதால், பவ்யமான குரலிலு, “மாப்பிள்ளையும் நீங்களும் பேசிட்டிருக்கும் போது இடையிடுறது தப்பு தான்… இருந்தாலும் இது என் தங்கச்சி விவகாரம்…அதனால நான் பேசித்தான் ஆகணும்.. நீங்க அந்தஸ்துக்கு குறைவான இடத்துல.. அதுவும் கடல் தாண்டி பொண்ணெடுக்குறோம்னு நெனச்சிக்காதீங்க.. வெளிநாட்டு காரவுக நீங்க… தப்பா எடுத்துக்காதீக…மாப்பிள்ளை தங்கமானவரு.. அதனால இந்த சம்பந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. எனக்கிருக்குறது ஒரே தங்கச்சி.. என் முழு சொத்துமே அவளுக்குத் தான்.. என்னால நீங்க எது கேட்டாலும் மனசார செய்ய முடியும்.. .”என்று சொல்ல, அது நாகரிகமான ‘கெஞ்சல்’ என்றே தோன்றியது யௌவனாவுக்கு. 

அண்ணன் கெஞ்சுவது தாங்கமாட்டாமல், ‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று சொல்லச் சென்ற யௌவனாவின் வதனத்தின் குறிப்பறிந்து… மெல்லிய குரலில், “ஷூ.. அண்ணா பேசிட்டிருக்காங்கல? வாயைத் திறக்கக் கூடாது” என்று அதட்டினாள் வாசுகி அண்ணி. 

அண்ணியின் அதட்டலுக்கு அரைகுறை மனதுடன் இணங்கிப் போனவள், பல்லைக்கடித்துக் கொண்டு, அமைதியாக நிற்கத் தலைப்பட்டது கொடூரமோ? கொடூரம்!! 

அண்ணன் வேல்பாண்டி ‘வெளிநாட்டுக்காரவுக’ என்று வசுந்தராதேவியை விழித்ததில், ஒரு சின்ன ரோஷம் கிளர்ந்தெழ, கூட்டத்தை வெறித்துப் பார்த்தவர், தெறிக்கும் குரலில், 

“யார் வெளிநாட்டுக்காரங்க?? .. எங்களுக்கும் இதே பூர்வீகம் தான்.. இதே ஊரு தான்!!.யாருக்குய்யா வேணும் உங்க சொத்து?? . நாங்க இலங்கையை ஆண்ட கடைசி மன்னன்.. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனோட வம்சாவளி.. இராஜசிங்கன் வம்சாவளியோட கடைசி ஏகவாரிசு என் பையன்!! ..”என்ற போது இதுவரை முகத்தில் இருந்த பெருமையெல்லாம் அகன்று, முகம் வாடிப் போயிருந்தது அவருக்கு. 

பின்னே.. அந்த பதிவிரதையின் சபதம்… இராஜசிங்கனின் இறுதி வாரிசினையும் கூட காவு வாங்குவதனால் அல்லவா அடங்கும்?? 

ஊரார் அனைவருமே… சத்யாதித்தன் நம் இலங்கையை ஆண்ட ராஜசிங்கர்களின் வம்சம் என்பதை அறிந்து.. அவர்களின் வம்சாவளி இன்னும் இந்தியாவில் உயிரோடு இருப்பதை அறிந்து சிலிர்த்துப் போனது.

“அம்மாடீஈஈ.. நம்ம ராஜாவோட வாரிசுங்களாய்யா இவரு?..”

“கோர்ட்டும், சூட்டுமா டிப்டாப்பா இறங்கும் போதே இவரு முகத்துல ராஜகளை தெரியுதேன்னு நெனச்சேன்? நான் நெனச்சது உண்மையாகிருச்சே?”

“ஊர்ப்பஞ்சாயத்துக்கு தங்கம் பத்து கிராம், ஊர்க்கோயிலுக்கு அஞ்சு கோடி.. ஊர் முன்னேற்றுத்துக்கு அஞ்சு கோடின்னு.. வாரி வாரி குடுக்க.. இந்த காலத்துல யாருக்குடீ மனசு வரும்? ராஜபரம்பரைன்றதனாலே தான்.. அந்த புத்தி தம்பிக்கு இருந்திருக்கு” என்று குசுகுசுவென பல்வேறுபட்ட கதைகள் எழுந்து பரவியது அவர்களுக்குள். 

 

சத்யனுமே தன் பூர்வீகத்தையும், தான் சத்திரிய வம்சம் என்பதையும் அறிந்து.. புருவங்கள் சின்னதாக இடுங்க திகைத்துத் தான் நின்றான். 

முன்பொரு கால் தன் பெயரில் பாதியான “இராஜசிங்கனை” கொஞ்சம் மாடர்னாக்கி, “ராஜ்சிங்” என்று மாற்றிக் கொள்ள அவன் நாடிய போது..

 அவனது தாய் இடையே குறுக்கிட்டு, “இராஜசிங்கன்” என்பதை உனக்கும் சரி, உன் குழந்தைகளுக்கும் சரி.. மாற்றவே கூடாது.. அது நம்ம அடையாளம்”என்று சீற்றத்துடன் சொன்ன அன்னை முகம் தற்போது ஞாபகம் வரலானது. 

ஆனால் இத்தனை பேர் சிலிர்த்து நின்றிருந்தாலும் கூட.. யௌவனா மட்டும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாது நின்றாள். 

‘அவன் ஆண்டியாகவோ? அரசனாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.. அவள் வாழ்வில் புருஷனாக வராமல் இருந்தால் நல்லது’ என்றெண்ணியது மனம். 

அதிலும் கண்டி வரலாற்றையும், இறுதி அரசனைப் பற்றியும் தலைதலைமுறையாக தன் முன்னோர்கள் சொல்லி வைத்த கதைகள் கேட்டு, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட ஊர்ப்பெருசுகளில் ஒன்று, 

தெய்வத்தைப் பார்க்கும் பக்திப் பரவசத்தோடு, “ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனோட.. ஆறாம் தலைமுறை ராணி வசுந்தராதேவியா நீங்க?” என்றவர்,

சத்யாதித்தனை உச்சந்தலையிலிருந்து, தோள்புஜம், மார்பு வருடியவராக, கண்கள் அவை பாட்டுக்கு கலங்க, “இது நம்ம ராஜாவோட வாரிசு..”என்றது. 

சத்யனுக்கு தன் பூர்வீகம் இன்னது என்பதையும், தன் சத்திரிய வம்சத்தையும் பற்றி சொல்ல வேண்டிய தாய்.. காலம் கடந்து சொன்னதால். அவனுள் சின்ன திகைப்பு மாத்திரமே. 

அதற்குள்… ஆறேழு தலைமுறைகளாக..வாய்வழியாக அந்த ஊர் சிண்டு சிறுசுகளில் இருந்து பெண்டு பெருசுகள் வரை புழங்கும், ‘ பதிவிரதையான நந்தினியின் சாபக்’ கதை… ராஜசிங்கனின் ஏக வாரிசு அவர்கள் மண்ணை மிதிக்க.. சட்டென்று நினைவுகளை ஆட்கொள்ளலானது. 

ஊராரையும், மகனையும் அமைதியாக நோக்கியவர், ‘நந்தினியின் சாபக் கதையை ’ சாடைமாடையாக சொல்லி முடிக்க, ‘இப்படியும் நடந்திருக்கிறதா?” என்று தோன்றியது சத்யாதித்தனுக்கு.

சத்யாதித்தனுக்கு மட்டுமே அந்த கதை புதிது. அங்கிருந்த மிகுதி அத்தனை பேருக்கும் “நந்தினி சாபக்’ கதை பழையது. 

நந்தினியின் சாபமும், சூளுரையும் தலைமுறை தலைமுறையாக தம்பதிவனத்தில் சிறுகுழந்தைக்கு சோறூட்டும் பருவத்திலிருந்து… சொல்லி வளர்க்கப்படும் கதை. இன்னும் ஏன் யௌவனாவுக்கும் கூட அது தெரியும். 

யௌவனாவுக்கு, தில்லியில் இருந்து வந்திருப்பவன் ‘ராஜ்சிங்’ என்ற பெயர் கொண்டிராமல் ‘இராஜசிங்கன்’ என்று பெயர் கொண்டிருந்தது அப்போதே சந்தேகமே. 

ஊரை கண்ணீர் மல்க நோக்கியவர், “இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி.. என் முன்னோர்… ஒரு பதிவிரதைக்கு செஞ்ச தப்பு.. என் வம்சத்தையே காவு வாங்குற நெலைமையுல வந்து நிற்குது.. 

வெள்ளையனால் சிறைப்பிடிக்கப்பட்ட ராஜா.. வேலூர்க்கோட்டைக்கு நாடு கடத்த முற்பட்டப்போ.. இந்த ஊர் எல்லையில் இரத்தம் கக்கி செத்தாரு.. தலைமறைவான இராணி.. இந்த விஷயத்தையும், நந்தினியோட சாபத்தையும் உண்மை விசுவாசிகள் மூலம் அறிஞ்சு.. தான் குழந்தையோட இந்தியாவில் தஞ்சம் புகுந்தாங்க..

 அப்போ தான் இந்தியாவில் எங்க பரம்பரை வேரூன்ற ஆரம்பிச்சது.. எங்க வம்சத்துல பிறக்குற ஒவ்வொரு ஆணுக்கும், உரிய வயசு வந்ததும் ‘பூர்வீகக் கதையும், சாபக் கதையும்” சொல்லப்படும்.. ஆனா நான் சத்யனுக்கு மட்டும் இதை சொல்லல.. அவனோட மிதமிஞ்சிய ஆர்வத்துல.. இதை தேடிப் பார்க்க இலங்கை வந்துருவானோன்னு ரொம்ப பயந்தேன்.. ஆனால் உண்மையை சொல்லாமலேயே.. நான் பயந்தது நடந்திருச்சு.. இதுக்காகத் தான் பூர்வீகம் தெரியாம வளர்த்தேன்.. இலங்கை மண்ணை மிதிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கிட்டேன்.. ” என்றவருக்கு உடலெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. 

 வேல்பாண்டியின் விழிகளை நிமிர்ந்து பார்த்த வசுந்தராதேவி ராஜகம்பீரம் மிளிர, “இப்போ சொல்லுங்க? யாருக்கு வேணும் உங்க சொத்து? எனக்கு என் பையன் உயிரோட இருந்தா போதும்”என்று சொல்ல, வேல்பாண்டிக்குமே தாய் மனம் படும் அல்லல் புரிந்தது. 

நடப்பது அனைத்தினதும், வீரியம் புரியாத மகனோ.., நந்தினியின் கதை அறிந்ததும் குபீர் சிரிப்பு தோன்ற.. அடக்க பெரும்பாடு பட்டவனாக நின்றான். 

தாயைப் பார்த்து ஆசுவாசமான குரலில், “என்னம்மா நீங்க இந்த காலத்துலேயும் இப்படி பத்தாம்பசலித்தனமா பேசிக்கிட்டு.. இருநூறு வருஷங்களுக்கு மேல ஒரு பேய்.. என்னை பழிவாங்க துடிச்சிட்டிருக்கா? ஐய்யோ அம்மா இதுக்கா வீண் பயம்..நான் யௌவனாவைக் கட்டிக்கிட்டு இங்கேயே சந்தோஷமா வாழ்ந்து காட்டுறேன்..”என்று தன் திட்டத்தைச் சொல்லி, தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தான் மகன். 

‘இந்த கலவரத்துலேயும் இவனுக்கு என்னுடன் வாழணுமா? சரியான லூசு’ என்று திட்டியது யௌவனாவின் மனம். 

மகனின் பிடிவாதத்துடன் இதுவரை மல்லுக்கட்டிப் பார்த்து முடியாத தாய்.. இம்முறை தான் அழைத்து வந்த நம்பூதிரியின் பக்கம் விரைந்தார். 

இவர் சொல்லியாவது அவன் கேட்க மாட்டானா? என்ற நப்பாசையுடன், “சாமி என் பையனுக்கு நீங்களாவது புத்தி சொல்லக்கூடாதா?”என்று சொல்ல, இதுவரை யௌவனாவில் பதிந்த பார்வை இப்போது தான் வசுந்தராதேவியில் பதிந்தது. 

அவரது அகன்ற விழிகள் சும்மாவே பயங்கரம்!! இதில் இன்னும் கொஞ்சம் விழிகளை அகல விரித்தவர், 

இடிக்கும் குரலில், “ஞான் எந்தா பரய்யா? எல்லாம் என்பெருமான் ஈண்டே இஷ்டம் போலே நடக்கு… என்றவர், 

தன் விழிகளால் சட்டென்று யௌவனாவைப் பார்த்தார். 

யௌவனாவோ தற்போது தான் முதன்முறையாக, அந்த நம்பூதிரி தன்னை தீப்பிழம்பு பார்வை பார்த்து வைப்பதைக் கண்டாள்.

தூணோடு தூணாக நின்றவளை சுட்டிக் காட்டியவர், “பக்க்ஷே ஈ பெண்குட்டி மனசு வைச்சால்.. சத்யண்டே ஜீவன காப்பாத்தலாம்.”என்றார் மலையாளத்துடன் இணைந்த தமிழில். 

உணர்ச்சி வசப்பட்ட வசுந்தராதேவியும், வேல்பாண்டியும் ஒருமித்த ஒரே நேரத்தில், படபடத்தவர்களாக, “என்ன சுவாமி சொல்றீங்க?”என்று கேட்க, இருவரையும் திரும்பி… மாறிமாறிப் பார்த்தார் அவர். 

அவரது தீவிரமான குரல் அங்கிருந்த அனைவரும் கிடுகிடுங்கச் செய்தது. 

அதைப்பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாதவருக்கு, சத்யனின் மனம் பூராக யௌவனாவில் உள்ள போது, சத்யன் இம்மியளவேனும் தாய் சொல் கேட்க மாட்டான் என்பது புரிந்து போனது. 

அதனால் யௌவனாவை.. பாரதத்துக்கு அழைத்துச் செல்லும் எண்ணம் பிறக்க, பயங்கரக் குரலிலேயே, 

“ஞான் பராயுந்தது சத்தியம்!!…ஈ பெண்ணிண்டே கூடே சத்யன் நம்மிடே நாட்டிக்கு வந்தா நல்லது…ராவணன் சீதையை எடுத்தோண்டு போய் போல…ஈ சீதையை.. சத்யன் நம்மிடே நாட்டிக்கு தூக்கிக் கொண்டு வரணும்!! …”என்று ஆங்காங்கே.. மலையாளம் கலந்த தமிழில் சொல்ல, அங்கே தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கும் கூட சாடைமாடையாக, ‘யௌவனாவை அவர்கள் அங்கே அழைத்துச் செல்ல நாடுவது புரிந்தது’. 

இறுதியில் “சத்யனுக்கு, யௌவனா தான்” என்று நம்பூதிரியே சொல்லி விட்ட பிறகு, இனியும் பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தமில்லை என்று புரிந்து போக, சற்றே தளர்ந்த குரலில், “அப்படீன்னா என்ன செய்யலாம்னு நீங்களே ஒரு நல்ல முடிவா சொல்லுங்க சாமி”என்றார் வசுந்தராதேவி. 

தன் கன்னத்தாடைகளை யோசனையுடன் தடவிக் கொண்டே, முன்குடுமிச் சேரர்களின் வம்சாவளியில் வந்த, அதர்வண வேதம் கற்றுணர்ந்த நம்பூதிரி சிந்தித்தார். 

சிந்தனை வயப்பட்ட குரலில், “உடனே.. விவாஹம் வைக்கமோ? அல்லேங்கில் ஒரு மண்டலம் கழிச்சு வைக்கமோன்னு நோக்காம்…” என்றவர், சின்னஞ்சிறுசுகளை அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி, ‘கல்யாண பந்தத்தில்’ இணைத்து வைக்கவே நாடினார். 

ஆனால் யௌவனாவுக்குத் தான்.. சிற்சில நிமிடங்களில் வாழ்க்கை நினைத்ததுக்கு மாறான திசையில் செல்வதைப் பொறுக்க மாட்டாது.. அவள் எகிற முனைய, அப்போதும் அவளது கையைப் பிடித்து அடக்கியவாறு நின்றிருந்தார் வாசுகி அண்ணி.

நேரே போய் அந்த வீட்டின் நடுமாடத்தில்.. முள்ளந்தண்டு கூனாமல் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவர், 

வாசுகி அண்ணிக்கு,யௌவனா கட்டுப்பட்டு நிற்பதைக் கண்டவருக்கு, வாசுகி அண்ணி இந்த வீட்டுப் பெண் என்பது புரிய, அவளை நோக்கி, 

“எனிக் ஒரு நாழியிரமும், பாத்திரமும் வேணும்”என்றார். 

வாசுகியோ, அவர் கேட்டது புரியாமல், “நாழியிரம்னா?”என்று கேட்க, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது, அவர் அமர்ந்திருக்க, 

சட்டென இடையிட்ட வசுந்தராதேவி தான், “சாமி தேங்காய் கேட்கிறாரு”என்றார். 

அடுத்த சொற்ப நாழிகைகளில் அவர் கேட்ட தேங்காயும், பாத்திரமும் வர, தான் கையோடு கொண்டு வந்திருந்த.. மஞ்சள்நீரை பாத்திரத்தில் கொட்டி, தேங்காயில் முக்கியெடுத்து.. தேங்காயின் குடுமியில்.. பெரிய பொட்டுக் குங்குமம் வைத்தவர், தன் வாய்க்கு அருகே கொண்டு சென்று ஏதோ மந்திர உச்சாடனங்கள் அவருக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன வண்ணம்.. கண்களை மூடிச் சொல்லவாரம்பித்தார். 

ஊராரும், அண்ணனும், அண்ணியும்.. அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட வண்ணம் நிற்க, யௌவனாவுக்கும், சத்யனுக்கும் மட்டும் எந்த பக்தியும் தோன்றவேயில்லை. 

சத்யனோ தாயின் சந்தோஷத்துக்காக அமைதியாக இருக்க, யௌவனாவோ, 

மாறாக போலிச்சாமியார் வடிவேலு போல பொய் மந்திர உச்சாடனங்கள் நிகழ்த்துகிறாரோ? என்ற எண்ணம் தோன்ற.. கிளுக்கி நகைத்தாள் யௌவனா. 

அந்த நகைப்பில்.. தன் தவம் களைந்தாற் போன்று பட்டென்று கண் திறந்தவர், யௌவனாவை வெறித்துப் பார்க்க, அவளோ கப்சிப்பென்று முகத்தை வைத்துக் கொண்டு தலை குனிந்தாள். 

அவர் தீவிரப் பார்வையின் கேள்வி, “அதர்வண வேத உச்சாடனம் என்பது எவ்வகையில் நகைப்பினில் சாரும்?” என்பது போலவே இருந்ததை உணர்ந்தாள் யௌவனா. 

மந்திர உச்சாடனம் முடிந்தததும் நடுமுற்றத்தில்.. அமர்ந்திருந்த வண்ணமே தேங்காயை கையால் உடைக்க, என்ன அதிசயம்? 

ஒரு பாதி.. பூ விழுந்த தேங்காயும், மறுபாதி அழுகிய கருமை படர்ந்த தேங்காயுமாக வர கூட்டத்திலே ஓர் சலசலப்பு!!

 வசுந்தராதேவியோ உணர்ச்சி வசப்பட்டவராக, “சாமீஈஈ?” என்றுரைக்க, 

‘பயப்பட வேண்டாம்’ என்பது போல சைகை காட்டியவர், “உடனே.. விவாஹம் வைக்காம்” என்று சொல்ல, அங்கிருக்கும் அனைவரின் முகமும் மலர்ந்தது. இருவரைத் தவிர. 

அதில் ஒன்று யௌவனாவின் முகமானால், மற்றொன்று நம்பூதிரியின் முகம். அவருக்கு ஏதோ ஒன்று நல்லதாகப் படாமல் போக.. யௌவனாவுக்கோ.. உலகமே இருண்டது போல இருந்தது. 

என்ன ஒரே நாளில் நிலைமை இப்படி மாறி விட்டது. கல்யாணமாகி கடல் கடந்து யாரென்று சரிவரத் தெரியாதவர்களுடன் செல்வதா? 

சத்யன் வேறு.. ஆணுக்கே உரிய கல்யாணக்கனவுகளுடன்.. அவளை காதல் மயக்கம் மீதூற, சொக்கிப் போன பார்வை பார்த்து வைக்க, இவள் தான் நிலைமையை இரசிக்க முடியாமல் விக்கித்து நின்றாள் . 

அங்கே அந்த பாழும் நிலவறையில் இருந்த நந்தினியின் கூரிய விழிகள்.. பட்டென்று நிமிர்ந்தது. 

நம்பூதிரி.. பெரும்பாலான பேயோட்டிகளைப் போல, ‘பிரசன்னம்’ வைத்துப் பார்ப்பான்;யாகங்கள் நடத்துவான், அது அத்தனையும் தன் கால் தூசிக்கு கூட தீங்கிழைக்க அண்டாது என்று இறுமாப்புடன் திரிந்த நந்தினிக்கு, 

இந்த பொல்லாத சூழ்ச்சிக்கார நம்பூதிரி நந்தினியின் சக்தியை உணர்ந்து.. ப்ரசன்னம் வைப்பது பயனளிக்காது என்று.. யௌவனாவுடன், சத்யாதித்தனையும் அழைத்துக் கொண்டு, ‘இந்தியா’ செல்லவிருக்கும் திட்டத்தை தன் மாய சக்தி கொண்டு பார்த்துக் கொண்டிருந்த நந்தினிக்கு, இதயமெல்லாம் எரிதழல் மூட்டியது போல எரிந்தது.

அவளது இத்தனை நாளைய வன்மம் என்னாவது? அவளது சபதமும் தான் என்னாவது? அவனை இங்கே அழைத்துவர அவள் போட்ட திட்டங்கள் அனைத்தும் வீண் தானோ? 

வெறித்த பார்வையுடன் தன் தனங்கள் ஏறி இறங்க அகோரப் பெருமூச்சு வாங்கியவள், “ஓ!!! ப்போய் வ்விடுவ்வாய்யா சத்யாதித்தாஆஆ!! என்னை ம்மீஈர்றீஈஈ.. ப்போய் வ்விடுவாயாஆ?நான் இர்ருக்க அதற்கு வ்விடுவ்வேனா??.” என்று கறுவிக் கொண்டிருந்த வேளை, 

அவளது கண்முன் மாயமாகத் தோன்றினான் தேவதா. 

அன்றிரவில் அவனைப் பார்த்ததை விடவும், இன்று.. அவளுடைய இனிய இராட்சசனான தேவதா.. இன்னும் இன்னும் அழகாக மாறியிருப்பது போல தோன்றியது அவளுக்கு. 

ஆம், அவன் முகம் பூரணைநிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருக்க, தன் கணவன் முகத்தையே கண்ணிமைக்க மறந்து பார்த்தபடி சொக்கி நின்றிருந்தாள் நந்தினி. 

அவனது கண்களில் சொட்டும் ஒளிவட்டத்தில், இருநூறு வருட வன்மமும் தான் மறந்து போனது. ஆனால் அதை கலைக்கும் வண்ணம்.. தன் அகன்ற இடுப்பில் இரு கைகளை வைத்த வண்ணம்.. வானத்தை அண்ணாந்து பார்த்த வண்ணம்.. மனைவி மீது கேலி நகை வீசியெறிந்தான் அவளது தேவதா. 

அழகான இரட்டை நாதம் போல “ஹஹஹா..”என்று கணவன் நகைத்த நகைப்பில், முகம் கறுத்து வாட, அவமானத்தில் அவள் நிற்க, 

அவளுடைய தேவதாவோ, “இப்போது என்ன செய்யப் போகிறாய் நந்தினி?”என்று கேட்டு விட்டு மீண்டும் இடிஇடியென நகைக்க, 

இரு கைகளாலும் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டவள், “ப்போதூஊஊம்..சிரிப்பதை நிறுத்துங்கள்” என்று நிலவறையே அதிர இரைந்து கத்தினாள் நந்தினி. 

கணவனின் சிரிப்பு.. உச்சபட்ச சீற்றத்தையும், ‘எதையாவது செய்து விட்டு மார்தட்ட வேண்டும்’ என்ற பொல்லாத வெறியையும் கொடுத்தது அவளுக்கு. 

 

 

 

ஏகாந்த இரவில்…வா தேவதா! 

[9]

கேரளம் தாண்டி.. வசுந்தரா தேவியம்மாளுடன், நம்பூதிரியும், ‘தம்பதி வனம்’ வந்து சேர்ந்தும், “உடனே விவாஹம் வைக்காம்”என்று சொன்னாலும் சொன்னார்,  

அந்த “உடனே” இத்தனை சீக்கிரமாக வந்து சேரும் என்று யௌவனா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவேயில்லை. 

அதன் பின் நடந்தது எல்லாம்.. ‘நான் காண்பது கனவா? நனவா?’ என்பதைக் கூட அறிய முடியாதளவுக்கு எல்லாம் துரித கதியிலேயே நடைபெறத் தொடங்கியது. 

குடும்ப ஜோசியர் அழைக்கப்பட்டு திருமணத்துக்கு நன்னாள் பார்க்க, ‘நாளை காலை’யை விட்டால், ‘உடனடியாக வேறெதுவும், ‘நன்னாள் இல்லை’’என்று அவர் வேறு கையை விரிக்க,

 பொறுப்பான அண்ணனான வேல் பாண்டிக்கோ.. தங்கை திருமணத்துக்காக தானே கோதாவில் குதிக்க வேண்டியதாயிற்று. 

இத்தனை நாளாக விஷேசங்கள் வந்தால் மட்டும், மலர்த் தோரணங்களுடன் சுகந்தம் கமழும் வீடு, இன்று அவளது அதிரடி திருமணத்துக்காக விழாக்கோலம் பூண்டது.

 வீட்டு முற்றத்திலே வாழைத்தாரும், தோரணங்களும் கட்டப்பட, கண்டி மாவட்டத்தின் அதிசிறந்த கேட்டரிங் சர்வீஸூற்கு, வழமையான நேரத்தை விடவும் கூடுதலான தொகைக்கு.. பேரம் பேசி தகவல் சொல்லப்பட்டிருந்தது. 

எல்லாம் சத்யாதித்தனின் பணபலம் செய்த உபயம்.

வேல்பாண்டி மச்சானுக்கு.. எந்தவித கல்யாணப்பழு அழுத்தங்களும் கொடுக்காமல்.. தானே முன்னின்று அனைத்தையும்.. ஒரே ஃபோன்காலில் இலகுவாக முடித்து விட்டு, அனைவரையும் அசரடித்தவனாக.. யௌவனா வீட்டில் ஒரு ‘ஹீரோ’ போல வலம் வந்து கொண்டிருந்தான் அவன். 

தன்னுடைய அநேகமான உறவினர்கள்.. தம்பதிவனத்திலேயே இருந்ததால்.. தனித்தனியாக பத்திரிகை அடித்து.. வரவழைக்க தேவையே இல்லாது இருக்க, 

ஊரை விட்டு வெளியே இருக்கும் ஒன்றிரண்டு தாய் வழி உறவுகளுக்கு, அழைப்பெடுத்து விஷயம் சொல்லி கல்யாண அழைப்பு விடுப்பதற்கே.. முழு நேரமும் சரியாக இருந்தது வேல்பாண்டிக்கு. 

ஊரே.. தங்கள் இராஜவாரிசின் திருமணத்தால்.. அதகளப்பட்டுக் கொண்டிருக்க, ‘பாட்டுடைத் தலைவி’ போல கொண்டாடப்பட வேண்டிய யௌவனா தான்.. நாளை விடிகாலை திருமணம் என்ற செய்தி கேட்டு ஏங்கிப் போயிருந்தாள். 

எல்லாம், ‘இத்தனை மின்னல் வேகத்தில் நடக்கும்’ என்று யாராவது.. நேற்று சொல்லியிருந்திருந்தாலும் கூட நம்பியிருந்திருக்க மாட்டாள் அவள். 

கல்யாணம் முடிந்த கையோடு, முன்னே பின்னே பழக்கமில்லாத ‘வசுந்தராதேவி மற்றும் அவன்’ சகிதம்.. இந்தியா செல்ல வேண்டுமா? 

அதிலும், வசுந்தரா தேவி ஊரார் கூடியிருந்த.. வேளை பேசிய பேச்சுக்கள் கேட்டு, முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள் யௌவனா. 

அதை நினைத்தால் தான்.. முகத்தில் திருமணக்களையும், அக மகிழ்வும் அறவே அற்றுப் போய்.. கண்ணோரம் கண்ணீர்த் துளிர்த்தது மாதுவுக்கு. 

தன் மஞ்சத்திலேயே முழங்காலைக் கட்டிக் கொண்டு.. சுவரோடு முதுகு சாய்த்தவாறு, விட்டத்தை வெறித்துப் பார்த்தவளாக அவள் அமர்ந்திருந்த போது, அவளுடைய கதவு தாழ்ப்பாள் திறக்கப்படும் ஒலி கேட்டது. 

தன் வாழ்க்கைப் போக்கின் சிந்தனை களைந்தவளாக மெல்ல அவள் திரும்பிப் பார்த்த போது, 

கையில் பால் குவளையுடன் வந்த அண்ணி அவளை நாடி சிரித்த முகமாக வருவது புரிந்தது. 

என்ன தான் இதழ்கள் மலர்ந்திருந்தாலும், அவள் இங்கிருந்து செல்லப் போவதில்.. உள்ளத்தோடு துய்த்த கவலை.. அது அவர் விழிகளோடு வெளிச்சம் போட்டு காட்டவே செய்தது. 

அவர் வேல்பாண்டியைத் திருமணம் செய்து.. இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த போது, குட்டிப் பெண் யௌவனாவுக்கு வயது பன்னிரண்டு. 

திரண்ட ஆரோக்கியமான கண்களுடன், பாட்டுப்பாவாடை, தாவணியில் இரட்டை ஜடைக் கட்டி, ஒரு பாவை போல இருந்த.. அந்த சின்னப் பெண் யௌவனாவுக்கு…நாளை திருமணம். 

அதை எண்ணும் போது பூரிப்பும், கல்யாணம் முடிந்த பின் அவள் செல்லப் போவது அறிந்து ஒரு கவலையும்.. கண்களில் பகிரங்க இரகசியமாக துலங்கிக் கொண்டு தானிருந்தது. 

தன்னை நோக்கி வந்த அண்ணியின் வளைகையை.. சின்ன அவசரம் மேலோங்க, சட்டெனபை பற்றி அருகே அமர வைத்தவள், கவலை சுமந்த யோசனையுடன், “கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பேசுறாங்களே அந்தம்மா.. அவங்க வீட்ல போய்..நான் வாழணுமா அண்ணி?நீங்களாவது அண்ணா கிட்ட சொல்லக் கூடாதா? எனக்கு இந்த கல்யாணம் வேணாம்… அண்ணி.” என்று ஏக்கத்துடன் குறைப்பட்டாள் பெண். 

வாசுகி அண்ணியின் கைகளில் ஒன்று மேலெழுந்து, அவளின் உச்சந்தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தது. 

இளகிய மென்மையான குரலில், “ஆனால் மாப்பிள்ளை ரொம்ப நல்லவரா இருக்காரேமா?”என்று சொல்ல, அண்ணியின் சொற்களில் உண்மை இருப்பதாகவே தோன்றியது. 

வாசுகி அண்ணியின் தடவலில் தாய்மையை உணர்ந்தவள், அவர் தோள்வளைவில் தலை சாய்த்துக் கொண்டாள். சோர்வு நீங்கி இதமாக இருந்தது மங்கைக்கு. 

தாய், யௌவனாவை தரக்குறைவாக பேசிய நேரம், கைகளில் நரம்போடும் அளவுக்கு, கைமுஷ்டி மடக்கி.. ரௌத்திரத்துடன் நின்று, “அம்மா.. இனாஃப்!” என்று அவன் கத்திய கத்தல், அவள் காதோரம் கேட்டு மறைந்தது. 

எல்லாம் அவளுக்காக!! அதை எண்ணுங்கால் சின்ன மனநிம்மதியும் பிறந்தது அவளுக்குள். 

கூடவே, பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகுடன், ஈர்க்கும் விழிகள் கொண்ட அவனது களையான முகமும் ஞாபகத்தில் வந்து போனது. 

அவனது வலிமையான கன்னத்தாடைகள், சிரிக்கும் போது ஒரே வரிசையில் மலரும் முத்துக்கள் போன்ற மூரல்கள், திரண்ட தோள்புஜங்கள்,

அவள் தலைபுதைத்து அளவுக்கு மார்புகள், குறிப்பாக அவன் உடல் அழுந்தும் போது அவள் உணர்ந்த வலிமை.. சீண்டும் நேரங்களில் அவன் கண்களில் ஜொலிக்கும் குறும்பு.. அதிலும் மேலதிகமாக ‘தன்னை அவளது கணவனாகவே பாவித்து அவன் விடும் பீலா’.. என எல்லாமுமே அவன் பால் சின்ன பிடித்தத்தை ஏற்படுத்தியது அவளுக்குள். 

‘தன்னை அவளது கணவனாகவே பாவித்து அவன் விட்ட பீலாக்கள்’ எல்லாம், கனவில்.. நிஜத்தையும், கனவையும் இரண்டறப் பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் நடந்தது என்று மங்கைக்கு அப்போதே தெரிந்திருக்கவில்லை. 

அந்த பீலாக்கள் போலியாக இருந்தாலும் கூட.. இவன் மனம் பிறழ்வானவன் தானோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, யௌவனப் பெண்ணின் மனதின் ஓரம்.. அது பிடித்திருந்தது;அவளை ஈர்க்கவும் செய்திருந்தது. 

இருந்தாலும், ‘இந்தியா செல்வதை எண்ணுங்கால் தான்’ ஏதோ உறுத்தலாக இருந்தது. அனைவர் முன்னிலையிலும் தகுதி பற்றி பேசிய செல்வந்த சீமாட்டி அம்மா.. அங்கு போனது சீரியல் ‘வில்லி மாமியார்கள்’ போல கொடுமை செய்வரோ? என்ற பயம் வேறு அவளுக்கு. 

,அண்ணியின் தோளில் இருந்து தலை எடுத்தவள், அவரது கைச்சந்தைப் பற்றியவராக, அண்ணியைப் பார்த்து ஈனஸ்வரத்தில், “எ.. எனக்கு பயமா இருக்குண்ணி.. நான் இங்கேயே இருந்துட்றேனே ப்ளீஈஈஸ்?? ” என்று கெஞ்ச, போலிக்கோபம் மீதூற ஒரு அதட்டல் போட்டாள் வாசுகி அண்ணி. 

வாயில் விரல் வைத்து, “ஹேய் சூ… அண்ணா உனக்கு என்னைக்குமே நல்லது தான் பண்ணுவாரு.. இப்போ இந்த பாலை குடிச்சிட்டு.. எதைப்பற்றியும் யோசிக்காம.. பேசாம படு..எல்லாம் நல்லதாகவே நடக்கும்.. இப்போ தூங்கினால் தான் காலையில ரெடியாக முடியும்.. அதனால தூங்கு.. ”என்றவாறு யௌவனாவின் கையில் பால் குவளையைத் திணித்து விட்டு, 

யாருடனும் வெளிப்படுத்த முடியாத அகக் கவலையுடனேயே அவரும் நகர, 

அண்ணிக்கும், அவளுக்கும் இடையில் நடந்த அத்தனை சம்பாஷணைகளையும், கதவோரம் நின்று கேட்டுக் கொண்டிருந்த சத்யாதித்தனின் புருவங்கள் இரண்டும்.. யோசனையில் இடுங்கலானது. 

அதிலும், அறையை விட்டு வெளியேறும், வாசுகி அண்ணியின் விழிகளில் விழுந்து விடாமல்.. ரொம்பவும் அவதானமாக.. சட்டென சுவரோடு ஒதுங்கி நின்றான் அவன். 

அவன் பயந்தது போல, வாசுகியின் கண்களில் அவன் படவில்லை தான். 

இருப்பினும் அவன் கண்களில் பட்டுத் தொலைத்த அவளது சோகம், அவன் கேட்டுத் தொலைத்த தன் உள்ளங்கவர்ந்தாளின் வார்த்தையாடல்கள் என எல்லாமுமே.. அவனுள் உள்ளே நெருடல் விளைவித்துக் கொண்டிருந்தது. 

‘என்ன நடந்தாலும் அவளுக்காக இந்த சத்யாதித்தன்.. உயிர் காக்கும் கேடயம் போல.. அவளைக் காத்து முன்னாடி நிற்பான்’என்று அவளுக்குத் தோன்றவேயில்லையா? 

அவன், அவள் மீது.. இந்த ஏழு வானங்களை விடவும் உயரமான, ஏழு கடலை விடவும் ஆழமான காதல் வைத்திருப்பது அவளுக்கு புரியவேயில்லையா? 

அதிலும் அவள் அண்ணி சமாதானப்படுத்த முயல முயல, “எனக்கு பயமா இருக்குண்ணி.. பயமா இருக்குண்ணி” என்று திரும்பத் திரும்பச் சொன்னது தான்.. அவன் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

தன்னவளின் பூவினுள் மிருதுவான மனம் காயப்பட்டு விட்டதோ என்று எண்ணி.. முகம் வாட.. கலங்கி நின்றான் சத்யாதித்தன். 

அவனது காதலின் ஆழத்தைப் புரிய வைத்திட வேண்டும் என்ற காதல் வெறி சத்யாதித்தனின் காதல் நரம்புகள் எங்கனும் சிலிர்த்துப் பரவியது. 

அவளோடு தனிமையில் உறவாட வேண்டும். இது பற்றி பேசி தெளிவுறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக.. அவனது காதலை அவளிடம் புடம்போட்டுக் காட்ட வேண்டும் என்று ஏங்கித் தவித்தது ஆண்மனம். 

அவளை நாடி விரையத் துடித்த பாதங்களையும், மனத்தையும் கடினப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான் இலங்கையின் சத்திரிய வம்சத்தில் பிறந்த அழகிய ஆடவன். 

ஆயினும் கல்யாணத்துக்கு முந்தைய இராத்திரியில்.. ஊரே கூடியிருக்கும் இடத்தில்.. மணமகள் அறையில், மணமகன் நுழைவது எவ்வகையில் உசிதம்? 

தில்லிக் கலாசாரத்துக்கு ஓகே. இலங்கையின் ஒரு கிராமத்துக்கு? பலரும் பல மாதிரியாக.. கண், மூக்கு, காது வைத்துப் பேசக்கூடும் என்று அமைதிகாத்தான் சத்யன். 

அதிலும்.. தங்கள் கலியுகத்து ராஜாவை..அந்தக் கைலாயப் பெருமானின் தரிசனம் போல.. அவன் செல்லும் இடமெல்லாம் பயபக்தி நிறைந்த விழிகளுடன்.. பலரும் பின்தொடர்வதைக் கண்டவனுக்கு, கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தான் வேண்டும் என்றான போது அவஸ்தையும் எழுந்தது. 

அதனால் அவளிடம் விரையத் துடித்த மனத்தையும், அவளைத் தன் நெஞ்சோடு அள்ளி அணைத்து, ஆறுதல் சொல்ல பரபரக்கும் கைகளையும் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன்,  

அவளைக் கடந்து.. இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.. அமைதியாக தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு விரைந்தவனுக்கு, ஏனோ தூக்கம் பிடிக்கவில்லை. 

நாளை விடிந்ததும்.. அவனது பலநாள் கனவு வாழ்க்கை நிஜமாவது போல.. அவள்.. நனவிலும் கூட திருமதி. யௌவனா சத்யாதித்த ராஜசிங்கன் தான். 

அதை எண்ணும் போது அவனில் ஓடும் காதல் பரவசம் தான் அவளில் இல்லையே? 

கிடைக்கும் சந்தடி சாக்கிலாவது.. தன் அன்பு மனத்தைப் புரிய வைத்து விட வேண்டும் என்று தோன்ற, நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, தன் அறையில் இருந்து வெளியே வந்தவன்.. உறங்காமல்…. அங்கே நிகழும் திருமண ஏற்பாடுகளுக்கு உதவுபவன் போல கொஞ்சம் பாவ்லா காட்டியவாறு.. அவள் எப்போது அறையை விட்டும் வெளியே வருவாள் என்றே கழுகுக் கண்களோடு பார்த்த வண்ணம் நின்றிருந்தான். 

அவனது நெடும்மணி நேர காத்திருப்புக்கு பிரதிபலனாக.. அவளும் தன்னறையின் கதவை தாழ் திறந்து கொண்டு வெளியே வந்தாள். 

நாவல் நிற தாவணியில், கையெல்லாம் மருதாணியாக.. அவளோடு நான்கைந்து குமர்ப்பெண்கள் சிரித்துக் கொண்டே வெளியே வர, “இந்த மருதாணி வைக்கும் படலமும், இந்த குமர்ப்பெண்களின் வருகையும் எப்போது நிகழ்ந்தது?” என்று குழம்பி நின்றான் அவன். 

அவன் அறையின் நெடுநேர யோசனைக்கு ஆட்பட்டிருந்த நேரம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற் ஆறுதலும் சொன்னான் அவன். 

அதிலும் காதல் பித்து அதிகமாகி நிற்பவன், இவனும், ‘தன் காதலைப் புரிய வைத்திட வேண்டும்’ என்ற வெறியில், அவளது அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்று பாராமல் நுழைந்திருந்தால்?

 குமர்ப்பெண்கள் நிறைந்திருக்கும் அறையில் அசிங்கப்பட்டுத் தானே நின்றிருக்கக் கூடும்?? 

ஆயிரம் யோசனைகள் உள்ளூற ஓடினாலும் கூட… உள்ளங்கை நுனியிலிருந்து முழங்கையின் முடிவு வரை.. அவள் கைகளில் மருதாணி வைத்த கைகளுடன் நின்றிருப்பதைக் காணேவே கிறக்கம் பிறந்தது அவளுக்கு. 

அதிலும் அவளைப் போலவே அடங்காது சண்டித்தணம் செய்த நெற்றியோரம் தவழும் ஒற்றை முடியானது.. அவளைக் கொஞ்சம் இம்சைப்படுத்தும் முகமாக.. விழிகள் முன்னாடி வந்து விழுந்து.. அவள் இதழ்களில் படிய, 

அந்த மயிர்க்கற்றை படிந்த இதழ்களில்.. மயக்கத்துடன் பதிந்தது அவன் கண்கள். 

தன்னை இந்த மாயக்கள்வன் இரசிப்பதை அறியாத யௌவனாவோ.. இதழ்கள் அருகில் வந்து தொல்லை செய்யும்.. அந்த ஒற்றை மயிர்க்கற்றையை, கைகளால் அப்புறப்படுத்த முடியாமல் திணறிப் போனாள். 

இறுதியில் அவள் தன் இதழ்களால் அம்மயிர்க்கற்றையை ஊத.. அது பறந்து வந்து.. மீண்டும் அவள் இதழ்களிலேயே படிய.. அவனது கிறக்கம் இன்னும் அதிகமானதே ஒழிய குறையேவேயில்லை. 

அவளோ.. கைகளை முகத்துக்கு நேராக வைத்து.. தற்காப்பு செய்த வண்ணமே.. கொல்லைப்புறத்தை நோக்கி தன் பின்னழகுகள் அசைந்து அசைந்தாட.. செல்வது புரிய.. வாலிபனல்லவா? 

அந்த வயதுக்கேயுரிய ஆசைகள் இறக்கைக் கட்டிப் பறக்க, புயல்வேகத்தில் இருந்த இடத்தை காலி செய்து விட்டு,ஐந்தரையடி ரோஜா மலரை நோக்கி நகர்ந்தது ஒரு வெளிநாட்டு வண்டு. 

இரவு நேர கண்டியின் ஊதல்க்காற்றில்.. காற்றாட நடப்பது யௌவனாவுக்கு எப்போதுமே பிடிக்கும்!! 

அதிலும் இன்று, ‘இறுதி காற்றாட நடமாடுதல்’ என்று மனம் சொல்ல, குனித்த பார்வையுடனும், உணர்ச்சியேயற்ற முகத்துடனும் வீட்டுப் பின்புறத்தில்.. அவள் காலடி எடுத்து வைத்தது தான் தாமதம். 

முறுக்கேறிய.. சூரிய ஒளியில் நன்கே சிவந்த நிறம் அடைந்திருந்த.. நரம்போடிய ஒரு வலிய கரமொன்று.. அவளைப் பின்னிருந்து இடையோடு கட்டியணைத்துத் தன்னோடு இறுக்க, 

நெஞ்சுக்குழி வரை ஏதோ ஒரு திகில் திக்கென்று அடைத்தாற் போன்றிருந்தது அவளுக்கு. 

‘எவனோ திருடன்!!’ என்று உள்ளம் சொல்ல, அடுத்த நொடி வாய் திறந்து உரக்கக் கத்தப் போனாள் யௌவனா. 

ஆனால் கத்தத் தான் முடியவில்லை. 

அங்கேயும் ஒரு வலிய கரம்.. அவளது வாயைப் பிடித்து அடைத்திருக்க, ‘உறுதியாக திருடனே தான்’ என்றும், தனக்கு ஊழிக்காலம் நெருங்கி விட்டது என்றும் எண்ணி மருண்டு போனாள் அவள். 

அந்த கணம் அவளது களேபரத்தை குறைக்கும் வண்ணம்.. காதோரம் ஹஸ்கி குரலில் கேட்டது அவன் குரல். 

அது அவளது வருங்காலக் கணவன் சத்யாதித்த ராஜசிங்கனின் குரல்!! 

நங்கை கூந்தல் வாசத்தை.. தன் நாசியில் நிறைத்துக் கொண்டவன் கிறக்கம் நிறைந்த ஹஸ்கி குரலில், “உஷ்ஷ்..கத்தாதே..நான் தான்!!.. நான் உன் கூட பேசணும்” என்று சொல்ல, அடுத்த சில செக்கன்களில் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது அவளது மறுப்புக்களும், திணறலும், திமிறலும் என எல்லாமே.

அப்போதும் இடையைச் சுற்றி தவழ்ந்த கையை விடாது..அவளைப் பின்னிருந்து அள்ளித் தூக்கியவாறு.. வீட்டின் பின்புறம், 

லைட் கூடப் போட்டிருக்காத… சந்திர வெளிச்சம் மட்டும் பட்டுக் கொண்டிருக்கும் இருண்ட சுவர்ப்பக்கம் நாடிப் போனான் அவன். 

யார் கண்ணுக்கும் உறுத்தாத, ஆள் நடமாட்டம் இல்லாத இடம்!! அவளுடன் மனம் விட்டுப் பேச தகுந்த தருணம்!! என்றெண்ணிக் கொண்டான் அந்நெடியவன். 

அவளை சுவரோடு சாய்த்தி… அவளுக்கு முன்னாடி இரு கரத்தையும் அணை போலாக்கி.. அவள் முன்னழகோடு தன் மார்பு அழுந்துமளவுக்கு நெருங்கிப் போய், அவளது மென்மையின் சுகத்தை.. கள்ளத்தனமாக சுகித்த வண்ணம் நின்றிருந்தான் சத்யன். 

சுவருக்கு கொஞ்சம் தள்ளி.. பக்கத்து அறையில் இருந்த.. கம்பிச்சாளரம் திறந்திருந்த தினுசில்.. அதன் வழியாக வந்த மின்விளக்கொளியின் நிழல் அவள் மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. 

சாளரத்தின் கம்பியின் கருநிழல் சட்டம், விளக்கொளியின் வெள்ளை நிற சட்டம்.. என மாறி மாறி… அவள் மீது விழுந்திருக்க.. அது நேரில் பார்த்தவருக்கே புரியும் அவள் ஓர் ஓவியம். 

நெற்றியின் கம்பிச்சட்ட கரு நிழல் விழுந்திருக்க, 

அவளது திரண்ட மருளும் நயனங்களில்.. விளக்கொளியின் விம்பம் விழுந்திருக்க, 

கழுத்திலே மீண்டும் கருநிழல், பங்கஜ மலர்கள் குவிந்தது போல கூம்பிய உயர்ந்த தனங்களின் மேட்டில் மீண்டும் விளக்கொளி விம்பம்!! 

திரும்ப கீழே.. பால்வண்ண ஒளி விம்பத்தில் மிளிரும் அவளது சிற்றிடை!! 

இப்படி மாறி மாறி.. வரி வரியாக கருநிழலும், விளக்கொளியும் அவள் உடலில் வர்ணஜாலம் செய்தது கூட அவனை சித்தம் தடுமாறச் செய்தது. 

தன் முன்னே.. கம்பிச்சட்டங்கள் கொண்ட ஜன்னலின் விம்பம் நிகழ்த்திய மாயையில்.. பூலோக மேனகை போல இருந்த அவளை கண்ணிமைக்க மறந்து பார்த்திருந்தான் சத்யாதித்தன். 

அவர்களைச் சுற்றி எங்கிலும் மருதாணி மணம் வீசிக் கொண்டிருந்தது. 

நாளை வரை பொறுத்திருக்க.. முடியாமல் ஏனோ தறிகெட்டுப் பாய்ந்தது மனம். 

அதிலும் மார்புக்குழிக்குள்.. வெள்ளைக் கற்கள் பதிக்கப்பெற்ற பெண்டனில்.. அறை வெளிச்சம் பட்டு அது வேறு ஏடாகூடமாக மின்ன, அந்த இடத்தை விட்டும் விழியெடுக்க மாட்டாமல் நின்றான் சத்யாதித்தன். 

அவன் வெள்ளைக் கற்கள் பதிக்கப்பெற்ற மாலை மின்னுமாற்றைப் பார்த்தானா? 

இல்லை.. ‘கலப்பில்லாத செப்பினை போன்ற உயர்ந்த கொங்கை உடைய குறிஞ்சி நில எழில் சொட்டும் மலைப்பெண்ணொருத்தி’ என்று சுந்தர நாயனார் வர்ணித்த பெண்மைக் கலசத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் அவைகளைப் பார்த்தானா? 

அவன் எதை இலக்கேயற்று பார்த்தானோ? 

யௌவனாவுக்கு தான் அவஸ்தை கூடியது. 

அவள் உள்நாக்கு அன்னத்தில் போய் ஒட்டிக் கொள்ள, நீங்காத காதலர்கள் போல பிரியவே மாட்டேன் என்று அடம்பிடித்தது அவைகள். 

அவன் பார்த்து வைத்த பார்வையில்.. அதிகத்துக்கும் பெண்மைக் கலசங்கள் விறைக்க, அதன் விறைப்புத்தன்மையை கூட.. தன் பரந்த மார்புகளோடு உணர்ந்தான் அவன். 

அந்த சுகம், சத்யாதித்தனை கனவில் போல உன்மத்தம் அடையச் செய்து, ஒரு பரவச நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளலானது. 

இன்னும் கொஞ்சம்.. அவளை நெருக்கி நின்றவன்.. அவளது உஷ்ணமான மூச்சுக்காற்று… தன் கழுத்து வளைவில் பட்டுத் தெறிப்பதையும் உணர்ந்தான். 

இவளோ அவனது நெருக்கத்தில் மருண்டவளாக, மருதாணி விரல்கள் என்பதை மறந்து.. அவனது டீஷேர்ட்டில் கை வைக்க, அந்தோ பரிதாபம் கலைந்தது மருதாணி. 

அதன் கலைவில்.. தன்னிலைக்கு வந்தவள், போலிக்கோபம் மீதூற, “ஐய்யோ.. என் மருதாணி!! … ம்மரியாதைய்யா.. த்தள்ளிப்போஓஓ”என்று கத்தியதையெல்லாம் அவன் பொருட்படுத்தவேயில்லை. 

அவன் தற்போது அவளது ஒளி விம்பம் விழும் அந்த கண்மை அஞ்சனம் தீட்டப்பெற்ற நயனங்களையே அன்புடன் பார்த்தான். 

காதலுடன் மென்மையாக அவளது உச்சந்தலையை வருடிக் கொடுக்க, அந்த வருடலில்.. அவளுக்குள் ஏதோ செய்தது. 

அண்ணியிடம், “பயமா இருக்குண்ணி” என்று சொன்ன போதே.. உச்சந்தலை வருட இருந்த வெறியை.. இப்போது தீர்த்துக் கொள்கிறான். காதலன்!! 

அவள் உள்ளம் கனிய அவளைப் பார்க்க, இவனோ ஆறுதல் மொழியும் குரலில், 

“நீ அண்ணி கூட பேசுறதை கேட்டேன்மா..” என்றதும் உள்ளே பக்கென்றானது அவளுக்கு. 

அனைத்தையும் கேட்டு விட்டானோ? கயவன் கயவன்.. சரியான கயவன்!! உள்ளுக்குள் மனமார திட்டினாள் அவனை. 

“அம்மா பேசியதை எதையும் மனசுல வைச்சுக்காதே யௌவனா.. அவங்க என்னை ஒரு குழந்தையா நினைச்சிட்டிருக்காங்க.. அதான் வீணான விஷயத்துக்கெல்லாம் பயப்படுறாங்க.. உண்மையில் அவங்க தான் இன்னும் குழந்தை..” என்றவன் ஒற்றை விரலில் அவளது தாடையை ஏந்தியவனாக, 

“என் அம்மா நீ நினைக்குற மாதிரியெல்லாம் அவ்ளோ மோசமானவங்க இல்லை.. உன்னை சீரியல் வில்லி மாமியார் மாதிரி எல்லாம் கொடுமைப்படுத்த மாட்டாங்க” என்று அவள் மனதுக்குள் நினைத்ததையே சொல்ல, விழிகள் விரிய தன் தலைவனைப் பார்த்து நின்றாள் அவள். 

இவன் எப்படி அறிந்தான்? உள்ளம் அறியும் வித்தைகள் கைவரப் பெற்றவனோ? என்றும் எண்ணினாள் பேதை மாது. 

அவனோ இவள் உள்ளக்கிடக்கை அறியாமல் தொடர்ந்து சொன்னான். 

“.. எனக்கு யாரை பிடிச்சாலும், அம்மாவுக்கும்.. அவங்களைப் பிடிச்சிரும்மா.. உன்னையும் கண்டிப்பா பிடிக்கும்… இந்தியா வந்ததும் உன்னை மகள் போல பார்த்துப்பாங்க…” என்று சொல்ல, அவளுக்கு ஏனோ அதற்கு மேலும் அந்த விழிகளையே பார்த்திருக்க முடியவில்லை. 

ஆனால் தாயை அத்தனை பேர் மத்தியில் எதிர்த்தாலும்.. தனிமையில் அவளிடம் தாயைப் பற்றி உயர்வாக பேசுகிறான் அல்லவா? 

இவன் தான் உண்மையில் வெள்ளந்தியான குழந்தை என்றே தோன்றியது அவளுக்கு. 

அவள் முகம் தொங்கிப் போக, அதைத் தாங்க மாட்டாத காதல்க்கணவன், பெண்மைக்கு பிடிக்கும் மிருதுவான குரலில், “என்னாச்சுமா..?” என்று கேட்டான் அவன். 

அவளோ குனிந்த தலை நிமிராமல், அழுகையை அடக்கும் ஒரு குழந்தை போல, “பயமா இருக்கு…எல்லாம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருச்சேன்னு ரொம்ப பயமா இருக்கு.. எனக்கு இந்தியா வர பிடிக்கல”என்றாள். 

அதில் சற்றே இவனது முகம் வாட, அவன் புருவங்கள் இடுங்கக் கேட்டான், 

“இந்தியா வர பிடிக்கலையா? இல்லை என்னை பிடிக்கலையா..?”என்று. 

அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்ல.. அந்த அழகுப் பெண் யௌவனாவுக்குமே தான் வார்த்தை வரவில்லை.

 இமைகள் இரண்டும் நாணமும், அச்சமும் கலந்த படபடப்பில் படபடக்க, காற்றுக்கும் கேட்காத மெல்லிய குரலில், 

“உங்களை பிடிச்சிருக்கு.. ஆனா இந்தியா வர பிடிக்கலை.. பயமா இருக்கு” என்று அவள் மொழியத் தான்.. இதுவரை சிக்குண்டிருந்த சுவாசம் கூட முழுமையாக வெளிவந்தது அவனுக்கு. 

தன் முத்து மூரல்கள் மின்ன.. ஆண்மைக்கேயுரிய மெல்லிய புன்னகை புரிந்தவன், “என் அம்மாவை கூட அசால்ட்டா கன்வின்ஸ் பண்ணிட்டேன்.. .. ஆனா உன்னை கன்வின்ஸ் பண்றது தான் பெரும்பாடா இருக்கு..” என்றவனுக்கு வெளிப்பட்டது ஓர் நீண்ட பெருமூச்சு. 

அதன் பின் இருவரும் ஏதும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க, இவனுக்குத் தான், நிமிடத்துக்கு நிமிடம், அவள் அருகாமையில் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கேறுவது போல இருந்தது. 

அதிலும் தூரத்தில் இருந்து பார்த்து இரசித்த இதழ்கள் வெகு வெகு அருகாமையில். 

அவற்றின் ஈரளிப்பில், வனப்பிலெ.. அந்த இதழ்களைச் சுற்றியே எண்ணமும், கிறக்கமும் தோன்ற..கொஞ்சம் கொஞ்சமாக ..அவைகளை நாடி மெல்ல மெல்ல முன்னேறினான் சத்யன். 

அவளோ.. அவனது நீண்ட மௌனத்தில் நெஞ்சு படபடக்க, அவனது கண்களையும்,கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் இதழ்களையுமே மாறி மாறி பார்த்தபடி இருக்க, 

அவளே சுதாரித்து நிமிரும் முன்னர்.. அவளது செர்ரிப்பழம் போல சிவந்திருக்கும் செவ்வரியோடிய மெல்லிய கீழுதட்டினை ஆவேசமாகக் கவ்விக் கொண்டான் அவன். 

அவனது ஆவேசத்தில்.. தொட்டதும் கவ்வி.. உமிழ்நீரோடு உயிரையும் உறிஞ்சும் அந்த வேகத்தில், அவளுக்கோ ஜிவ்வென்று மின்சாரம் தாக்கியது போல இருக்க, திகைத்துப் போனாள். 

அவனது கைகளில் ஒன்று.. அவளது சிற்றிடையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்க, வலியோடு, ஒரு சுக உணர்வு.. அவளுள் ஆட்கொண்டது. 

அவனோ.. அந்த இரவு நேரத்தில்.. யாரும் காண முடியாத ஒதுங்கிடத்தில், அவளது இதழில் வழியும் ஒட்டுமொத்த இனிப்பையும் உறிஞ்சி உறிஞ்சி.. தன் காதல் ஆசைகள் எத்தனை வலியது என்பதை விளக்கிக் காட்டி அட்டூழியம் பண்ணிக் கொண்டிருக்க, 

அவனிலிருந்தும் விலக முடியாமல் ஸ்தம்பித்துப் போனாள் யௌவனா. 

இப்போதே இந்த காட்டாற்று வெள்ளம் கரையை அடித்துக் கொண்டு போகும் வேகம் காட்டுபவன், கல்யாணம் ஆனதும் மஞ்சத்தில்?? 

அவனது காதலைத் தாங்க வலிமை கொண்டிராத மிருதுவான பெண்ணுக்கு.. அவனது வேகம் வலித்தது. 

ஆனால் சத்யனோ.. பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்பது போல இதமாக.. கண்மூடிய ஓர் உன்மத்த நிலையை அடைந்து கொண்டிருந்தான். 

அவனது வலிய கைகள் மெல்ல அத்துமீறி இடையைத் தாண்டி கீழே கொசுவத்துக்குள் இறங்க முயற்சிக்க, விழித்துக் கொண்டது பெண்மை. 

அவனை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாதவள், போதையில் தேன் உறிஞ்சும் அவனது கீழுதட்டை.. பற்களால் அழுந்தக் கடித்து வைத்தாள் அவள். 

திருடனுக்கு தேள் கொட்டியது போல.. ஓர் வலி எழுந்து பரவினாலும் கூட.. அந்தோ பரிதாபம் இந்த தையல்த் திருடனுக்கு வாய் திறந்து கத்த முடியாத நிலை!! 

அவளிடமிருந்து பட்டென தன் இதழ்களை விடுவித்துக் கொண்டவன், கனவு மயக்கம் களைந்த போலிக் கோபம் இழையோட, இதழ்களைத் தேய்த்து விட்டவாறே, “ஆய் ராட்சசீஈஈ.. ஏன்டி புருஷனை இந்த பாடுபடுத்துற?” என்று கேட்ட தினுசில்.. அழகாக மலர்ந்தது அவளுடைய நயனங்கள்!! 

“எது புருஷனா? தாலி கட்டினா தான் புருஷன்!! ..”என்று பெரிதாக அலட்டிக் கொண்டவள் போல இவள் சொல்ல, சட்டென தன் பாக்கெட்டில் இருந்து சட்டென தாலியை எடுத்து அவன் முன் நெடுஞ்சாண் கிடையாக நீட்டியவன், 

“அப்போ.. இப்பவே தாலி கட்டிடட்டுமா?” என்று அவள் மனம் மயங்கி நிற்குமளவுக்கு ஒற்றைப் புருவம் மேலுயர்த்திக் கேட்டான். 

அவளோ, ‘பேச்சுக்கு சொன்னால்.. நிஜமாகவே தாலி கட்டிருவான் போலேயே’ என்றெண்ணிய வண்ணம், அவன் கையில் தாலியிருப்பது கண்டு திகைத்துப் போனாள் அவள்.

ஆச்சரியம் தாளாமல் பார்த்தவள், “ யோவ் என்னய்யா? .. சின்ன தம்பி படத்துல வர்ற ‘கல்யாண பைத்தியம்’ மாதிரி.. தாலியை கையில் வைச்சுட்டு சுத்திட்டிருக்க..?”என்று கேட்க, அந்த ஏகாந்தமான இரவில்.. மந்தகாசப்புன்னகை சிந்தினான் தலைவன். 

“இது மதுரை மீனாட்சி அம்மன் பொற்பாதங்களில் வைச்சுப் பூஜை பண்ண தாலின்னு.. அங்கேயிருக்கும்.. சித்தர் ஒருத்தர் கொடுத்தாரு.. ‘கூடிய சீக்கிரம் உனக்கு கைகொடுக்கும்னு சொன்னாரு’.. இலங்கை வரும் போது.. இந்த தாலியோட தான் வந்தேன் கட்டினால் உன்னைத் தான் கட்டுவேன்னு வைராக்கியத்தோடு.. ஆனால் இந்தத் தாலி.. இவ்வளவு சீக்கிரமே கை கொடுக்கும்னு நெனக்கலை..” என்றவன், வேண்டுமென்றே அவளை உசுப்பேற்ற நாடி,

 தாலியை இரு கைகளிலும் ஏந்தி அவள் கழுத்தில் கட்டுவது போல கொண்டு போக, அச்சத்தில் இரண்டெட்டு பின்னே நகர்ந்தாள் அவள். 

“யோவ்.. யோவ்.. எதுக்கும் தள்ளி நின்னே பேசுய்யா.. விட்டா தாலிகட்டி இங்கேயே குடும்பம் நடத்திருவ போல இருக்கே..” என்று அவள் அச்சத்தோடு அரண்டவாறே பேச, அவள் அச்சம் கண்டு இன்னும் சீண்ட வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது அவனுக்குள். 

அவளை இன்னும் நெருங்கிப் போய், காதுக்குள் இதழ்கள் நுழைத்தவன், இரகசியக் குரலில், “நான் உன் கூட குடும்பம் நடத்த தொடங்கி ரொம்ப நாளாச்சு.. நேத்து கூட.. நம்ம குழந்தையை தள்ளி படுக்க வைச்சுட்டு.. செம்மையா செஞ்சோம் தெரியுமா? ..”என்று சொல்ல, செக்கனில் சிலிர்த்துக் கொண்டது அவள் உடல். 

அதிலும் அவனது முன்னுக்குப் பின் முரணான பேச்சு அச்சத்தை வாரி வாரி இறைக்க, கண்டியின் அத்தனை குளிரிலும் வியர்த்தது உடல். 

“சத்..சத்..சத்யா..”மெல்ல தலைவனை அழைத்தாள் அவள். 

“ம்?”

விழிகள் மருள மருள தலைவனின் விழிகளை ஏறிட்டவள், மிருதுவான குரலில், “எனக்கு ஒரு சத்யம் பண்ணிக்குடு.. இந்த மாதிரி லூசு போல பேச மாட்டேன்னு?..”என்று கேட்க, குபீரென்று விளைந்த சிரிப்பை, பெரும் பிரயத்தனங்கள் எடுத்து அடக்கிக் கொண்டவன், அப்போதும் தன் விளையாட்டை விடவேயில்லை. 

அவளது இதழ்களை பெருவிரலால் வருடி, அவளை உணர்ச்சி வசப்பட செய்த வண்ணம், “நான் சொல்றதை நீ நம்பலையா? நான் சொல்றது அத்தனையும் நிஜம்.. நேத்து ராத்திரி பூரா நான் எங்கே தூங்கினேன் தெரியுமா?” என்று கேட்டவன், மெல்ல மீண்டும் அவள் காதுக்குள் நுழைந்தவனாக, ஏதோ கிசுகிசுத்தான். 

அவன் என்ன கிசுகிசுத்திருப்பான்? கன்னி அவள் இதழ்களும் ‘ஆ’வென்று பிளந்து… இத்தனை அதிர்ச்சியைக் காட்ட. 

அவள் விழிகள், ‘இன்னும் அதிர்ச்சியைக் காட்டணும்’ என்று எதிர்பார்த்தவன், 

அவளது விழிகளை நோக்கியவனாக, அவள் இதழ்களில் தன் மூச்சுக்காற்றை மோதச் செய்த வண்ணம், “நம்பலைன்னா செக் பண்ணிக்க.. உன் நடுமார்புக்கு மத்தியில கருவண்டு சைஸ்ல ஒரு மச்சம் இருக்கும்? கரெக்ட்டா?” என்று தலையாட்டிக் கேட்க, அவளுள் கிளர்ந்தெழுந்தது ஒரு பொல்லாத பயம். 

அப்படியானால் அவன் எங்கே துயின்றானாம்? அது வாசகர்கள் ஊகங்களுக்கு விடப்படுகிறது. 

இவன் உளறுகிறவனாக இருப்பின்? எப்படி அந்தரங்க அவயவ விஷயம் கூட சொல்வான்? குழம்பிப் போனாள் யௌவனா. 

“உ.. உனக்கெப்படி தெரியும்..??” இதழ்கள் தந்தியடித்தது அவளுக்கு. 

“உன் புருஷன்மா நானு.. உன்னை ஒரு குழந்தைக்கு தாயாக்கினவன்.. எனக்கு தெரியாதா..?” என்று சிரிப்பை உள்க்கனக்கதுப்பில் மறைத்துக் கொண்டு சொல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது அவளுக்கு. 

அதிலும் அவன் கணவன் என்ற உரிமையில் பார்த்து வைத்த துச்சாதனனின் துகிலுரிக்கும் பார்வையில், “ப்ளீஸ்.. அப்டி பார்க்காதே..” என்று கெஞ்சியவள், அவனது சில்மிஷப் பார்வையின் வீரியம் தாங்க மாட்டாது, அங்கிருந்து ஓடியே விட்டாள் அவள். 

அவனுக்குத் தான், “இந்தியா செல்லப்போகும்” விஷயத்தை மறந்து, ‘இவன் எப்படி அந்த விஷயத்தை அறிந்தான்?” என்று யோசித்து யோசித்தே குழம்பிக் கிடக்கட்டும் என்று எண்ணிக் கொண்டவனுக்கு, 

அவள் பூவுடல் தந்த சுகம்.. அந்த கிறக்கத்தில் இருந்தும் வெளியே வரவே, ரொம்ப நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. 

ஒரு நெடுமூச்சை இழுத்து விட்டுக் கொண்டே, அவன் வீட்டுக்குள் நுழைந்த போது, அவனை நாடி வந்த வேல்பாண்டியோ.. அவனை வித்தியாசமாக ஓர் பார்வை பார்த்தவனாக, 

“என்ன மாப்ள.. சட்டையில எல்லாம் மருதாணிக் கறை?” என்று சொல்ல, அப்போது தான் குனிந்து சட்டையைப் பார்த்தவன் அதிர்ந்தான். 

அவனுக்கு மருதாணிக்கறை எங்கணம் படிந்திருக்கும் என்ற நினைப்பு வந்ததும் கூடவே அந்த கிளுகிளுப்பான முத்தமும் சேர்த்துத் தான் ஞாபகம் வந்தது. 

தன்னையே குறுகுறுவென பார்க்கும் மச்சானை நோக்கியவன்., படபடப்புடன்… “அது ஒண்ணும் இல்லை மச்சான்.. குழந்தைங்க விளையாடிட்டிருந்தாங்க.. அவங்களை தூக்கினதும்.. அவங்க கையில் இருக்கும் மருதாணி பட்டிருக்கும் போல…”என்று விட்டு.. அங்கிருந்து ஓடியே போனான் அவன். 

***

அடுத்த நாள் காலை சத்யாதித்தன் சுபயோக சுபவேளையில், பட்டு வேஷ்டி, பட்டு சட்டை சகிதம், 

மார்புக்கு குறுக்கே தங்க பார்டர் கொண்ட பட்டு சால்வை சென்றிருக்க, தலையில் அதே போல தங்கநிற பார்டர் கொண்ட தலைப்பாகைக் கட்டி, நெற்றியில் சின்ன சந்தனக்கீற்றுடன்.. கன்னியர்கள் மனம் கொய்யும் கம்பீரத்துடன் நின்றிருந்தான். 

இன்னும் திருமணமாகாத ஊர்ப்பெண்டிரும் சரி, திருமணமான பெண்டுகளும் சரி… ஊர்க்கோயில் எல்லையில் நின்றிருந்த சத்யாதித்தனையே.. இமைக்க மறந்து பார்த்திருந்தனர். 

ஸ்ரீ ராம பிரானின் முடிசூட்டு விழாவைக் காண.. பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண்’ என எழுவகை பெண்டிரும் திரண்டனர் என்பார் சோழர்கால ஆசுகவியான கம்பன். 

அது அன்ன ஓர் காட்சித் திரட்சி தான் இங்கேயும். 

இராஜசிங்கர்களின் குலதெய்வ திருமணமுறை சற்றே வித்தியாசமானது. 

அவர்களது குலதெய்வமான தம்பதிவனதைதின் “நிசும்பசூதனி”ஆலயத்துக்குச் சென்று, அவள் பாதங்களில் பூஜிக்கும் தாலியைக் கொண்டு.. மணமகள் கழுத்தில் கட்ட வேண்டும் என்பது தான் அவர்கள் குலத்தில் காலம் காலமாக வழங்கி வரும் முறைமை. 

வெள்ளையர்களின் அடாவடியான போக்கினால், இலங்கையை விட்டும் சென்று இந்தியாவில் வம்சத்தை தழைக்க விட்ட இராஜசிங்கர்களுக்கு, இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னும் கூட.. 

நந்தினியின் மேலுள்ள சாபத்தின் அச்சத்தில்.. தம்பதிவனத்தில் இருக்கும் குலதெய்வமான “நிசும்பசூதனியை” அர்ச்சித்து தாலி கட்ட இயலாமல் போனது என்னவோ துரதிர்ஷ்டம் தான். 

இருப்பினும் அதிசயமாக சோழர்களின் குலதெய்வமும் கூட “நிசும்பசூதனியாகவே” இருந்து விட, 

‘எவ்விடத்தில் இருந்தாலும் இறைவி இறைவியே’ என்று கொண்டு, தஞ்சை நிசும்பசூதனி ஆலயத்தில் தான்.. இதுகாறும் நடந்தது வந்தது இராஜசிங்கர்களின் திருமண முறை சடங்குகள். 

ஆனால் இன்று ஏழுதலைமுறைக்கு பின், இந்த இராஜசிங்கர்களுக்கு தம்பதிவன, ‘நிசும்பசூதனி’யை பூஜிக்க கிடைத்ததில்.. தாய் வசுந்தராதேவிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. 

ஆனாலும் அதிலும் ஓர் சிக்கல். அவளது தமையன் வேல்பாண்டியோ, அவர்களது குலதெய்வமான, ‘பிருகதாம்பாள்’ கோயிலில் வைத்து தாலிகட்டினால் தான் குலம் தழைப்பது ஐதீகம் என்று.. அந்த உரிமையை மட்டும் விட்டுக் கொடுக்காமல் இருந்து விட, 

தாய் வசுந்தராதேவியும் வேறு வழியற்று, நிசும்பசூதனி பொற்பாதங்களில் வைத்து அர்ச்சித்த தாலியை, மணமகன் சத்யாதித்தன்.. ஊர்வலமாக.. நடைபவனியாக எடுத்து வந்து, பிருகதாம்பாள் கோயிலில் வைத்து தாலி கட்டுவது என்று முடிவாயிற்று. 

ஊர்க்கோயில் எல்லையில் இருந்து, காட்டு வழிப்பாதையில் சற்றுத் தள்ளியிருக்கும், ‘நிசும்பசூதனி’ கோயிலுக்கு செல்ல.. அவனுக்கு நம்பூதிரியால் காப்பு கட்டப்பட்டது. 

அந்தக் காப்பு.. அவனுடைய முறுக்கேறிய கைச்சந்தில் இருக்கும் வரை.. எந்த தீய சக்தியும் அவனை அண்டாது என்ற மகிழச்சியில் அத்தனை சாத்திர சம்பிரதாயத்துக்கும் மகனை தனியே அனுப்ப இசைந்தார் தாய் வசுந்தரா தேவியும். 

தாய் வசுந்தராதேவியால்….அவனது இடது கையில்.. இராஜசிங்கர்கள் பயன்படுத்தும் அவர்களது பரம்பரை வாளும், வலது கையில் பூரணகும்ப கலசத்தில் வைக்கப்பட்ட மஞ்சளில் முக்குளித்திருந்த தேங்காயில்.. அவன் நேற்று அவளிடம் காட்டிய தாலியும் வைக்கப்பட்டிருந்தது.

மெல்ல திரும்பி.. தன் அண்ணியுடன்.. மணக்கோலத்தில் நின்றிருந்த தன்னவளைப் பார்த்தான். 

சும்மாவே காளை அவனின் மனம் மயக்கும் படி இருப்பவள், இன்று மணமகளுக்கேயென்ற அலங்கார ஒப்பனைகளில் அவளைக் காணவும், 

வாளையும், கலசத்தையும் எம்மாத்திரம் என தூக்கியெறிந்து விட்டு.. அவளை அழைத்துக் கொண்டு ஆளில்லா இடம் சென்று மறைய வேண்டும் போல ஏதேதோ வாலிப ஆசைகள் தோன்றியது அவனுக்கு. 

அவன் கண்களில் மிளிர்ந்த.. அளவிட முடியாத காதலில்… கூசிக் குறுகி, நாணத்துடன் தலை குனிந்தாள் யௌவனா. 

அவளை விழிகளால் அவன் இம்சித்துக் கொண்டிருந்த போது, அவன் சிந்தனையைக் கலைக்கும் வண்ணம்.. 

ஊர்க்கோயில் வாசலில் இருந்து மங்கள வாத்தியங்களும், சங்கும் முழங்க.. ஒரு ராஜாவுக்குரிய கம்பீரத்துடன், வாளேந்திய ஒரு அரிமாவாக… ஊராரோடு ஊராராக, இவன் முன்னாடிச் செல்ல, ஊரே அவனோடு தொடர்ந்து சென்றது. 

காடு அடர்ந்த காட்டுப்பகுதியில், அனைத்து புறமும் மராமரங்கள் வளர்ந்து நிற்க, கீழே பசுமையான மூலிகைச்செடிகளும், காட்டுச் செடிகளும் வளர்ந்து நிற்கும் ஓர் பிரதேசம் அது!! 

அந்த கானகத்தின், ஓர் எல்லையிற்கு அப்பால், ஊரார் அப்படியே பின்வாங்கி நின்று விட, சத்யாதித்தன் மட்டும் அவர்களது குலதெய்வ ஆலயத்தை நோக்கி பயணப்படும் படியானது. 

அது தான் அவர்களது முறையும் கூட. 

இருநூறு வருஷங்களாக இராஜசிங்கர்களின் காலடிபடாத.. அவர்களின் குலதெய்வக் கோயிலில்.. இன்று இராஜசிங்கனின் வாரிசின் காலடி படுகிறது.

இதில் எல்லாம் அவனுக்கு பிடித்தமே இல்லாவிட்டாலும் கூட, அன்னையின் சத்தியம் மீறி.. அவரது மனதை நோகடித்து விட்டு.. இலங்கை வந்த குற்றவுணர்வில், அவரது முகமலர்ச்சிக்காக செய்ய நாடி.. அமைதியாக கிரியைகளை நிறைவேற்ற நாடினான். 

அவர்களது குலதெய்வக் கடவுளான நிசும்பசூதனி ஆலயம்.. இருந்தது.. முழுதும் கல்லினால் ஆன, ஒரு கல்லு மலை முகட்டில்.

அந்த கானகத்தின் முடிவெல்லையில்.. ஒரு கரும் கற்பாறை மலை போல உச்சி வரை சென்றிருக்க.. அந்த உச்சியில் தான்.. அமர்ந்திருந்தாள் நிசும்பசூதனி!! 

சத்யனின் வலிய பாதங்கள்.. ஒரு கையில் வாளேந்தி, மறுகையில் தாலி ஏந்திய கலசம் ஏந்தி.. அந்த கல்மலையை அநாயசமாக ஏறிய வண்ணம் , தேவி நிசும்பசூதனியை நோக்கி நடந்தது. 

ஊரே கூடி நின்று, கானகத்தின் எல்லையில், ‘அவன் திரும்பி வருவான்’ என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்க, கலசம் எடுத்து தாங்கிய வண்ணம், மெல்ல மெல்ல உச்சி முகட்டை ஏறி ஏறி.. அவர்கள் கண்பார்வையை விட்டும் மறைந்து சென்றான் அவன். 

நந்தினிக்கோ.. அவன் காப்பு கட்டிய வண்ணம், கையில் வாளுடனும், பூரணக் கும்ப கலசத்துடனும்.. நிசும்பசூதனியை நாடி விரைவது புரிய.. அங்கமெல்லாம் பற்றி எரிந்தது அவளுக்கு.

அந்த பாழும் இருட்டு நிலவறையில் இருந்தவளோ, பழிவெறி கமழும் கண்களுடன், அகோரத் தொனியில், “என் குலத்தை த்தழைக்க விடாமல் செய்து விட்டூஊஊ.. .. உன் குலம் தழைக்க நிசும்பசூதனிக்கேஏஏ.. ப்பூஊஊஜ்ஜைய்யாஆஆ.. நான் அதற்கு வ்விடேஏஏன்!!! ஒரு காஆஆலும் வ் வ்விடேஏஏன்!! ”என்று இரைந்தாள் நந்தினி!! 

மாய சக்தி கொண்ட அப் பிரேதாத்மாவோ… கலசம் சுமந்த வண்ணம்.. கல்மலை ஏறும்.. சத்யாதித்தனின் மனதினுள் ஊடுருவிச் சென்று பார்த்தாள். 

 கல்யாணக்கனவு காணும் அவன் முகத்தில் நிலைத்திருக்கும் சந்தோஷமே.. அவளது பற்களை நறுநறுவென்று கடிக்கச் செய்ய, சத்யனின் உள்ளம் ஊடுருவிச் சென்று பார்த்தவளுக்கு, அதில் புலப்பட்டது ஓர் அழகான பெண்ணின் முகம்!! 

அவனது ஆழ்மனதில்.. நேற்றிரவு ஆவேசமாக யௌவனாவின் இதழ்கள் உறிஞ்சி நின்ற தருணமே.. இன்னும் காட்சியையும், அகத்தையும் விட்டு நீங்காமல் இடம்பிடித்திருப்பது புரிய, 

தனது பெருத்த தனங்கள் ஏறி இறங்க.. கூந்தல் எல்லாம் காற்றில் மேலேழுந்து பறக்க, கண்களை அகல விரித்த வண்ணம் ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்கினாள் நந்தினி!! 

நந்தினி.. வன்மத்துடன் அவனை ஏதாவது செய்திட வேண்டும் என்ற பழிவெறியில்.. விரைந்து செயற்பட முற்பட.. அவளது மாயத்திரை சட்டென்று காட்டியது .. சத்யனுக்கு அருகாமையில் இருக்கும் பசுமையான காட்டில் புல்மேய்ந்து கொண்டிருந்த இராட்சத.. இறக்கை கொண்ட அதிசய வெண்ணிறப் புரவியைக் காட்டியது. 

அப்படியானால்?? 

அவளது கணவன் தேவதா அங்கிருக்கிறான்!!! 

அவளது கணவன் அங்கிருக்கிறான்!!! தேவதாவும் அவனுடன் இருப்பது தெரிந்ததுமே.. ஒரு சின்ன பீதி உடலை வாட்ட..ஒரு கணம் தயங்கி நின்றாள் நந்தினி. 

இராஜசிங்கர்களின் உண்மை விசுவாசியான அவளை மீறி… சத்யனிடம் அவளால் நெருங்கத் தான் முடியுமா?? அது சாத்தியமே இல்லை என்ற நிதர்சனம் புரிந்தது அவளுக்கு. 

அவள் சற்றே நிதானித்தாளே ஒழிய, இருநூறு வருடங்களாக அவளுள் கனன்று கொண்டிருக்கும் பழிவெறி மட்டும்.. அப்போதும் நீர்த்துப் போகவேயில்லை!! 

வெறுத்த முகபாவத்துடன் பின்வாங்கி.. அப்படியே நின்றாள் நந்தினி. ஆனால் அவள் பழிவெறி மட்டும் அடங்கி நிற்கவில்லை. 

நிசும்பசூதனி ஆலய ஐயருக்கு.. முன்கூட்டியே இது பற்றித் தகவல் சொல்லப்பட்டிருக்க, பூஜைக்கேற்றவாறு தேவியை கோயில் நகைகள், பட்டுச் சீலை அணிவித்து மங்களகரமாகவே வைத்திருந்தார் அவர். 

தஞ்சையில் இருக்கும் “நிசும்பசூதனி”யின் திருமேனி சுமார் ஏழடி உயரமுள்ளதாக இருக்க, இலங்கை தம்பதிவனத்தில் இருக்கும் தேவியின் ஆலயம் ஒன்பதரை அடி உயரத்தில் இராட்சதத் தனமாக இருந்தது. 

அசுரரை எந்நேரமும் எழுந்து வதைப்பேன் என்று சொல்லும் படியாக, எட்டுக் கரங்களில் சூலம், வில் மணி, கத்தி, கேடயம் கபாலம் ஆகியவை கொண்டு ,

 பீடத்தின் ஒரு காலை மடித்து, மறுகாலை தரையில் கிடக்கும் அசுரனின் தலையை நசுக்கியவாறு அமர்ந்திருந்தாள் அவள். 

தலைக்கேசம்.. ஒரு நெருப்புச் சுடர் போல அந்தரத்தில் எழுந்து நிற்க, அவள் கண்களிலோ அசுரரை வேரோடு அழிக்க வேண்டும் என்ற அடங்காத சீற்றம் தெரிவதையும் கண்டான் சத்யன்.

‘நிசும்பனை’ தன் காலுக்கு கீழே இட்டு வதைக்கும் ரௌத்திரமுகமேயானாலும், தெய்வ கடாட்சத்துடனேயே இருந்தாள் மாதா. 

அவள் பாதத்தில்.. சத்யனின் கரங்களால் கலசத்தாலி வைக்கப்பட, அடுத்த கணம்.. சாந்தியான முகத்துடன் இரு கரம் கூப்பி, இமைகள் மூடி மனமார பிரார்த்தித்தான் அவன். 

அவனுக்காகவா பிரார்த்தித்தான் அந்தக் காதலன்? இல்லை எல்லாம் யௌவனாவுக்காக. ‘கடைசி வரை.. என் அன்பில் சலிப்படையாமல் அவனை வெறுத்து விடாமல்.. அவள் சந்தோஷமா என் கூட வாழணும்’ என்று பிரார்த்திக்க, 

ஐயரின் மந்திர உச்சாடனங்கள் கேட்டது அவன் காதுகளில். 

பூஜையில் குறுக்கிடாமல்.. இறுதிவரை, அமைதியாக கண்கள் மூடி நின்றிருந்தான் அவன். 

பூஜை முடிந்து, அந்த பூரணக் கும்ப கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காயில் இருந்த தாலி திரும்ப… அவன் கைகளில் தரப்பட்டதும், அதை எடுத்துக் கொண்டு கல்மலையை விட்டும் மீண்டும் கீழே இறங்கலானான் சத்யன். 

பிருகாதாம்பாள் ஆலயம் செல்லும் வரையெல்லாம் பொறுமை இல்லாதளவுக்கு.. அவன் காதல் வந்து கரைமுட்டி நின்றது. 

அவளைப் பெண்டாளத் துடித்திடும் மையலுடனேயே.. கல்மலையை விட்டும் இறங்கி வந்தவன், கானகத்தை அடைந்ததும், அதன் மற்றோர் எல்லையில் இருந்த ஊராரினைத் தான் பார்த்தான். 

அவனது தாய், நம்பூதி, அவளது அண்ணன் வேல்பாண்டி, வாசுகி அண்ணி.. மற்றும் அவள் என அனைவர் முகத்திலும், பூஜைக்குச் சென்றவன்.. முழுதாக திரும்பி வந்ததும் ஆத்மார்த்தமான சந்தோஷமும், திருப்தியும் படர்ந்தது அவர்கள் முகத்தில். 

சத்யனின் விழிகளோ.. முதலில் தன் தாய் முகத்தில் நிலைத்து, அடுத்து தன் மனைவியின் முகத்தில் தான் நிலைத்தது. 

யௌவனாவைக் கண்டதும் உள்ளார்ந்த அன்புடன் அவன் புன்னகைத்துக் கொண்டே, மலையை விட்டும் இறங்கி கானகத்தில் அவன் கால்கள் பதிந்ததும் தான் தாமதம் கானகத்தின் மரங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படும் வகையில் சுழன்றடித்தது பேய்க்காற்று. 

மரமெல்லாம்.. தன் அகோரக்கிளைகளை ஆட்டி.. பயங்கர சப்தம் எழுப்பிய வண்ணம் ஆக்ரோஷமாக ஆடத்தொடங்க. திடும்மென எங்கிருந்தோ கருக்கொண்ட மேகங்கள் இணைந்து கானகத்துக்கு குடைபிடிக்க.. அந்த இடமே அந்த முற்பகல் வேளையிலேயே இருளாகக் காட்சியளிக்கத் தொடங்கியது. 

கீழே இருந்த சருகுகள் எல்லாம் மூன்றரையடி உயரத்துக்கு எழும்பி..தூசு எல்லாம் அங்கு நின்றிருந்தவர்களின் கண்களில் புகுந்து.. அவர்களை தற்காலிக குருடர்களாக மாற்றவும் செய்தது. 

சத்யன் இந்த திடீர் நிலைமையைக் கண்டு அச்சப்படாவிட்டாலும்.. என்ன நடக்கிறது என்று.. வானத்தை அண்ணாந்து பார்த்தான். கோரமாக இடித்தது இடி. 

நம்பூதிரிக்கோ… ஏதோ அபசகுனம் போல.. நடப்பது ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற, தன் ஜபமாலையை அழுத்திப் பிடித்த வண்ணம், அகல விரித்த பேய் விழிகளுடன் சத்யனையே பார்த்தவாறு நின்றிருந்தார். 

அந்த நேரம் இந்த திடீர் வானிலை மாற்றத்தைப் பற்றி கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாதவன், ‘மழை பெய்யப் போகிறது’ என்று எண்ணிக் கொண்டு.. அவன் யௌவனாவை நோக்கி நகர்ந்து வந்து..கலசத்தை ஒப்படைக்கப் போன கணம் தான் யாருமே எதிர்பார்த்திராத ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தேறியது. 

எங்கிருந்தோ அடித்த ஓர் அசுரக்காற்றின் வலுவில், சட்டென சரிந்த மராமரமொன்று.. சரசரவென ஒலிக் கிளப்பிய வண்ணம், சத்யனின் கையில் இருந்த கலசத்தை வாங்க கை நீட்டிய, யௌவனா மேல் விழப் போக, அவள் திகைத்துப் போனவளாக.. தன் மேல் விழப் போகும் மரத்தையே அண்ணாந்து பார்த்தாள். 

அவளுக்கு என்ன செய்வதென்றே புரியாதளவுக்கு நின்று போனது மூச்சு. தன்னில் விழப்போகும் மரத்தையே அண்ணாந்து பார்த்தபடியே இருந்தவளுக்கு, தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது அறியாமல், மூளை மரத்துப் போனது. 

கூடவே கால்கள் தள்ளாடி, தலை சுற்றுவது போல இருக்க, மல்லாக்காக விழுந்தவள், மரம் தன் முகத்தின் மேலே விழுவதைப் பார்க்கத் திராணியற்று கண்களை சட்டென மூடிக் கொண்டாள்.

இது தான் அவளது இறுதி நிமிடங்கள் என்று எண்ணிக் கொண்டவளுக்கு, அடுத்த நொடி தன் மேல் ஓர் பாரம் பிரயோகிக்கப்படுவது புரிந்தது. 

கண்டிப்பாக அது மரத்தின் அழுத்தம் அல்ல.. ஒரு அன்பான அழுத்தம்.. இதயப் படபடப்பு கொண்ட அழுத்தம் என்று புரிய இறுக மூடிய விழிகளைத் திறந்தாள் அவள். 

மனைவியின் உயிரைக் காப்பாற்றும் வழிவகை அறியாதவன், அவன் உயிரைக் கொடுத்தேனும்.. அவள் உயிரைக் காக்க நாடி, அவளது கேடயமாக உரு மாறி, ஒரு குழந்தையைப் போல தன் நெஞ்சோடு அவளைக் அணைத்தவாறு நின்றிருந்தான் சத்யாதித்தன். 

வேல்பாண்டியும், வாசுகி அண்ணியும், “ஐய்யோஓஓ.. த்தமிழூஊ!!ம்மாஆஆஆப்ள! ” என்று கத்தத் தொடங்க, தாய் வசுந்தராதேவிக்கோ.. தன் ஏகப்புதல்வன் இடையே புகுந்திட.. கத்தக் கூட திராணயிற்று தலை சுற்றுவது போல இருந்தது. 

உடம்பெல்லாம் உதறல் எடுத்தது போல வலுவற்றதாக மாறிப் போனது. 

 அந்த கணம் தான் ஓர் அதிசயம் நடந்தது. 

சரசரவென சரிந்து அவள் மீது விழநேர்ந்த அந்த மராமரம், சத்யன் இடையில் புகுந்து.. யௌவனா மேல் மரம் விழாமல் அணைத்துக் காக்கவும், 

பாதி சரிந்த நிலையில்.. யாரோ ஒரு புஜபல பராக்கிரமன் தாங்கிப் பிடித்தது போல.. அந்தக் காட்டு மரம் அப்படியே அந்தரத்தில் நின்றது. 

ஆம், ஒரு புஜபல பராக்கிரமன் அதனைத் தாங்கித் தான் பிடித்திருந்தான். நந்தினியின் கணவன் தேவதா தான் அதனைப் பிடித்திருந்தான். 

தன் தோள்புஜங்களில் அந்த பாரிய தண்டினை ஏந்தி… இரு கால்களையும் தரையில் அழுத்திப் பிடித்து ஊன்றி.. அவன் அதைத் தாங்கிப் பிடித்த வண்ணம் நின்றிருந்தான். 

இராஜசிங்கர்களின் உண்மை விசுவாசியான மகாசேனன்.. தன் அரசருக்கு ஒரு ஆபத்து என்றானதும், எப்படி கைகட்டி வேடிக்கை பார்த்தவாறு நிற்பான்?? 

அதிலும் இந்த பேய்க்காற்றும், மராமரத்தின் சரிவுக்கும் காரணம் தன் மனைவி ‘ நந்தினி’ என்பதும் புரிய, சாந்தமே உருவான தேவதாவின் முகமும் சீற்றத்தில் சிவந்து போயிருந்தது. 

நந்தினியும் விடுவாளா?? தன் கணவனின் சக்திக்கு அப்பால், தன் சக்தியை பிரயோகிக்க முயன்று.. நிலவறையில் இருந்த வண்ணமே.. அந்த மராமரத் தண்டின் மேல் இன்னும் இன்னும் அழுத்தம் கொடுத்தாள். 

தேவதாவுக்கு நொடிக்கு நொடிக்கு தான் சுமந்திருக்கும் மரத்தின் பளு அதிகமாகிக் கொண்டே போக, தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தியவன், நம்பூதிரி வாயிலாக தன் அரசருடன் பேச நாடினான். 

மரத்தின் தண்டை தாங்கிப் பிடித்த வண்ணம், அவன் பேசியது அத்தனையும் தள்ளிநின்ற நம்பூதிரி பேசுவது போல அனைவருக்கும் கேட்டது. 

நம்பூதிரியின் குரலோடு, வேறு ஒரு குரலும் சேர்ந்து ஒலிப்பது.. ஒரு இரட்டைக் குரல் அந்தக் காற்றிலே கலந்து ஒலிக்க… அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகவே கேட்டது அந்தக் குரல்.

பளு சுமந்து நிற்பதால்.. சற்றே அடைக்கும் குரலில், அழுத்தமான தொனியில், “அரசரே .. உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் நான் இருக்கும் வரை எந்தத் தீங்கும் நேராது…. சீக்கிரம் தாலியை கட்டுங்கள்”என்று அந்தக் குரல் கத்த, சத்யனோ அங்கிருந்து கத்தும் நம்பூதிரியின் குரல்.. தன் பக்கத்தில் இருந்து கேட்பதன் மாயை அறியாமல் ஸ்தம்பித்து நின்றான். . 

மராமரம் தேவதாவின் தோள்புஜத்தோடு இன்னும் அழுந்த.. கடினப்பட்டு பிடித்து வைத்தவன் “ம்…. சீக்கிரம்..” என்று அவசரப் படுத்தினான் தேவதா. 

நந்தினி, கணவனுக்கும் மேலாக தன் சக்தியை உபயோகித்து.. அந்த மராமரத்தண்டை அழுத்தி அவர்கள் மேல் விழ முயற்சிக்க, சித்தம் தெளிந்த சத்யனின் கண்கள்.. யௌவனாவுக்கு ஒன்று என்றானதும் தான் தவறவிட்ட கலசத்தைத் தேடியது. 

அது கையெட்டும் தூரத்தில் ஒரு மரத்தின் அடிவேரோடு சாய்ந்து போய் நிற்க, அவள் மேல் படுத்தவாறே.. கடினப்பட்டு அதை விரல்களால் எட்டி எடுத்தவன், அடுத்த கணம்.. அவள் கழுத்தில்… தாலிகட்டிய மறுவிநாடி… என்ன ஆச்சரியம்?? 

அந்த சூறாவளி சப்தம் கப்சிப் என்று அடங்கிப் போயிற்று. கருக்கொண்ட இருள் மேகங்கள் படிப்படியாக விலகத் தொடங்கி.. கானகத்தில் மீண்டும் வெளிச்சம் சூழ்ந்தது. 

அது ‘மதுரை’ மீனாட்சியினதும், ‘தம்பதிவன’ நிசும்பசூதனியினதும் பொற்பாதங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட தாலியல்லவா?

 அதைத் தாண்டி நந்தினியால் ‘யௌவனாவை’ நெருங்க முடியாமல் போனது. 

ஆம், அன்று சத்யனின் முகத்தில் நிலவிய உச்சபட்ச சந்தோஷம் எரிச்சலைக் கொடுக்க, அதற்குக் காரணமான ‘யௌவனாவின்’ உயிரைக் குடித்து.. சத்யனை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பொல்லாத திட்டம் வகுத்த நந்தினியின் செயலே இத்தனையும்!! 

யௌவனாவின் விழிகள்.. சத்யனை என்றுமே பார்த்திராத ஒரு பார்வை பார்த்தது. அவளுடன் பிறந்த அண்ணன் கூட, அவள் பெயரைச் சொல்லிய வண்ணம் கதறி நின்றானே ஒழிய, இவனைப் போல தன் உயிரைத் துச்சமாக மதித்துக் காக்க முன்வரவில்லையே?? 

அவளை தன் நெஞ்சணைப்பில் வைத்துக் கொண்டே முன்னேறிய அடுத்த நொடி, தொம்மென்ற் தரையில் வீழ்ந்தது மராமரம்.

அது வீழ்ந்த தினுசில் தரையே நடுநடுங்க .. கலங்கிப் போயிருக்கும் அவள் கண்கள் கண்டதும், சொல்லொணா வேதனையை அடைந்தான் அவன். 

அவளது இரு கன்னங்களையும் அடிபட்ட பதற்ற முகத்துடன் தாங்கியவன், “ உனக்கு ஒண்ணும் ஆகலையேமா?’ என்று தவிப்புடன் கேட்ட ஒற்றை வசனத்தில்.. அவன் பால் சாயத்தொடங்கியது அவள் மனம். 

‘இல்லை’ என்பது போல சின்னக்குழந்தையாய் அவள் மௌனமாகத் தலையாட்டினாலும்.. அவள் இன்னும் அச்சத்தில் கிடப்பது.. அவளது நடுங்கும் உடல் காட்டிக் கொடுக்கவே செய்தது. 

அவள் பயம் போக்க வழிவகை அறியாதவன், ஊரார் நிற்பதைக் கூட மறந்து, அவளை இதயத்துடன் அணைத்தபடி நிற்க, சத்யாதித்தனின் தாய்க்கோ… நடந்தது இன்னும் சிந்தனையை விட்டும் அகலாமல் இருந்ததும். 

ஓடோடி வந்தவர்.. சத்யனின் உடலெல்லாம் தழுவித் தழுவி, “உனக்கொண்ணும் ஆகலையேப்பா?” என்று கதறிக் கதறி அழத் தொடங்க, ஒரு பக்கம் தாயை சமாளிப்பதா? இல்லை தாரத்தை சமாளிப்பதா என திணறிப் போனான் சத்யன். 

****

அன்றிரவு அந்த அடர்ந்த இருள் கொண்ட.. பொக்கிஷங்கள் புதைந்திருக்கும் நிலவறையில்!! 

எப்போதும் சாந்தமான வதனத்துடன், ஈசனின் தெய்வகடாட்சத்துடன், கண்களில் காதல் ரசம் சிந்தச் சிந்த.. மனைவி தன் காதலைக் கண்டாவது மனம் மாற மாட்டாளா? என்ற நப்பாசையுடன்.. அவளைக் காணவரும் தேவதாவின் விழிகள் இன்று சீற்ற விழிகளாக பரிணாமம் அடைந்திருந்தன. 

அவள் கணவனை.. தன் பழிவெறியை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு காதல் ததும்பத் ததும்ப என்றும் போல இன்றும் பார்க்க, அவளது காதல் எல்லாம் தேவதாவின் இதயத்தைச் சென்றடையவேயில்லை. 

அதிலும்.. கணவனின் மனம் மயக்க நாடிய மாயக்காரி.. ஓடி வந்து தன் கணவனின் கழுத்தோடு கட்டிக் கொள்ள முனைய, அதனைப் பொறுக்க மாட்டாது, அவள் கைகளை தன்னிலிருந்தும் தள்ளிவிட்டவனின் இதயம் வெந்து தணிந்து கொண்டிருந்தது. 

மனைவியை சுட்டெரிப்பது போல பார்வை பார்த்தவன், “இராஜசிங்கர்கள் மேலுள்ள உன் பழிவெறியைத் தீர்த்துக் கொள்ள ஓர் அப்பாவிப் பெண்ணின் உயிர் தான் கிடைத்ததா நந்தினீஈஈஈ??..” என்று இரைந்து கத்திய வண்ணம் கேட்டான் தேவதா. 

கணவனின் உதறலில் மெய்யாகவே வலியோடு ஆத்திரமும் பிறக்க, “நேசிக்கும் உயிரைப் ப்பர்… றித்தால்.. அடையும் துயரை அந்த இராஜசிங்கனுக்குக் க்காஆஆட்ட நினைத்தேன்..” என்று வீம்புடன் அவள் சொல்ல, அவன் தன் மனைவியைப் பாராமல் தலை திருப்பிக் கொண்டான். 

“உன் முகம் பார்க்க வெட்குகிறது மனம்.. உன்னையா உயிரினும் மேலாக காதல் செய்தேன்?என்று என்னையே கேள்வி கேட்கிறது என் மனம்”என்று தன் காதல் பொய்யான கலக்கத்தில், வருத்தத்தில் சொன்ன அவனின் முகம் அப்படியே மாறியது. 

அது அதி ரௌத்திரமாக மாற, “இந்த மகாசேனர் இனியும் பொறுக்க மாட்டான்!!! ”என்று இறுதி அச்சுறுத்தல் கொடுத்தவன், நந்தினியின் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பாமல் அங்கிருந்து மறைந்தான். 

கணவனின் உதாசீனத்தில் சின்ன கோபம் மீதூற, கண்கள் கலங்க விட்டத்தையே வெறித்துப் பார்த்தவளுக்கு.. அவள் கண்களில் இருந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து… ஒரு நமுட்டுச் சிரிப்பு வெளிப்பட்டது.

4 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 7,8 & 9 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top