ஏகாந்த இரவில் வா தேவதா
[10]
மரம் வீழப் போன யௌவனாவும் சரி, அவளைக் காப்பாற்ற தன் இன்னுயிரை துச்சமாகத் துறந்து.. தன் உள்ளங்கவர்ந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வீரமாக செயற்பட்ட சத்யாதித்தனும் சரி.. அந்த அகோர நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்க,
அதன் தாக்கத்திலிருந்து மீளவே முடியாமல் நின்றிருந்தது என்னவோ வசுந்தரா தேவியம்மாளே தான்.
பெற்ற மனம் அல்லவா?
மகன்.. தன் இதயம் கவர்ந்த பெண்ணின் உயிர் காக்க.. இடையிட்ட கணம்.. அவன் உயிருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்?? என்ற கேள்வியே திரும்பத் திரும்ப எழுந்து அவர் மனதை வண்டாய்க் குடைந்து கொண்டிருந்தது.
இதே போன்ற ஓர் அசம்பாவிதமான சம்பவத்தில் தான்.. சத்யாதித்தனின் தந்தையையும்’ இழக்க நேரிட்ட சம்பவம் அவர் இதயத்துக்குள் எழுந்து.. அவரை நிதானமாக யோசிக்க விடாமல் செய்து கொண்டேயிருந்தது.
கணவனை இழந்தாயிற்று. ஒரே பற்றுக்கோடாக இருக்கும் மகனையும் இழக்க வேண்டுமா? பதறியது மனம்.
விடாப்பிடியாக.. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல, மகனையும், மருமகளையும்.. அடுத்த நொடியே இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதிலேயே ஒற்றைக் காலில் நின்றார் அவர்.
திருமணம் தான் அதிரடியாக நடந்து விட்டது. பெண் வீட்டு உறவினர்களின்.. விஷேசமாவது தடல்புடலாகச் செய்து அசத்த வேண்டும் என்று எண்ணி வைத்திருந்த.. தமையன் வேல்பாண்டிக்கோ.. வசுந்தராதேவியம்மாளின் அவசரம் கவலையையே கொடுத்தது.
இருந்தாலும்.. கொஞ்சம் பவ்யமாக அவரிடம் பேசிப் பார்க்க நாடிய வேல்பாண்டியோ,
விறைத்த முகத்துடன் நிற்கும் வசுந்தராதேவியம்மாளை நாடி வந்து, “சம்பந்தி.. கல்யாணம் முடிஞ்ச கையோட கெளம்பிப் போகணுமா என்ன? நம்ம சொந்தக்கார பயலுங்க.. எல்லாரும் பாசக்கார பயலுங்க.. ஒரு.. இரண்டு நாள் இருந்துட்டு விருந்து, விஷேசம் எல்லாம் வைச்சு கவனிக்கணும்னு ஆசையா இருக்காங்க.. அதனால ஒரு ரெண்டு நாள் இருந்துட்டுப் கெளம்பிப் போகலாமே..?”என்று மெல்ல இழுக்க, வசுந்தராதேவியம்மாள் தான்.. தன் நிலையில் இருந்து ஒரு சிறிதும் இறங்கி வரவேயில்லை.
தனயனுக்கு ஒன்று என்றானதும்.. இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த அவர் கைகளை.. மார்பை இழுத்துப் போர்த்தியிருந்த சேலையை இறுக்கிப் பிடித்த வண்ணமே, கோபம் கனலும் விழிகளுடன் வேல்பாண்டியைப் பார்த்தார் அவர்.
எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்தவே முடியாத சீற்றத்துடன்,விழிகளை அகல விரித்தவராக,
“ப்பார்த்தீஈஈங்கள்ல? தாலி கட்ட ம்முன்னாடியே என்ன நடந்ததுன்னு .. உங்க ரெண்டு கண்ணாலேயும் ப்பார்த்தீஈஈங்கள்ல? சுப காரியத்தப்போ.. மரம் சரிஞ்சு விழுறது அபசகுனம்.. அதையும் ம்மீறி இங்கே இருக்கச் சொல்றீஈஈங்களா? என் பையனோட உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா.. உங்க தங்கச்சிக்கு இன்னொரு மாப்பிள்ளை கிடைப்பான்.. ஆனா எனக்கு.. என் மகன் திருப்பிக் கிடைப்பானா?? இங்கே ஒர்ரு.. ந்நிமிஷம் கூட என்னால இர்ருக்க ம்முடியாது.. என் மகனும், ம்மருமகளும் என் கூட இப்போவ்வே.. வ்வந்தே ஆகணும்!!” என்று தன் ஆளுமையான குரலில்,
‘என் பேச்சுக்கு மறுபேச்சு என்பதே கிடையாது’ என்பது போல பிடித்த பிடியிலேயே நின்று விட்டார் வசுந்தரா தேவியம்மாள்.
எப்படியாவது சத்யாதித்தனை.. இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும் என்ற தீவிரம் .. அவரின் நாடி, நரம்பெல்லாம் ஊறிப் போய்க்கிடந்தது.
ஆனால் யௌவனாவின் மனம் தான்.. இத்தனையும் கேட்டு உடைந்து போயிற்று.
மரம் உடைந்து விழுந்தது அபசகுனமாகவே இருக்கட்டும். அதை விட இந்தம்மா பேசுவது தான் அபசகுனமாக மற்றும் நாராசமாக இருப்பது போல இருந்தது அவளுக்கு.
பின்னே? .. இப்போது தான்.. அவள் கழுத்தில் மங்கல நாண் ஏறியிருக்கிறது. இந்த தருணத்தில்.. என்ன தான் உள்ளே சங்கடங்கள் இருந்த போதிலும், இளம் தம்பதிகளை வாயார வாழ்த்துவதை விட்டு விட்டு,
‘என் பையனோட உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா.. உங்க தங்கச்சிக்கு இன்னொரு மாப்பிள்ளை கிடைப்பான்.. ஆனா எனக்கு என் மகன் திருப்பிக் கிடைப்பானா??’ என்று கூறியது.. ஏனோ பிடிக்கவேயில்லை அவளுக்கு.
தாய் வசுந்தராதேவியின் கவலை.. எத்தகையது என்பதை இப்போது தான் புதுப்பெண்ணாக நிற்கும் யௌவனா அறிய வாய்ப்பேயிருக்காது.
அவளுக்கென்று ஒரு குழந்தை வரும் போது, அந்த குழந்தைக்கு ஒரு ஆபத்தென்று வரும் போது.. அந்த ஆபத்தைத் தகர்க்க, எந்த எல்லைக்கும் போகக் கூடிய ஒரு மாபெரும் சக்தி தான் ‘தாய்மை’ என்று அறியும் போது.. வசுந்தராதேவியின் பதற்றம் புரியலாம்.
அது அறியாத யௌவனாவோ மனதுக்குள், ‘இந்தம்மாவும் இன்னொரு வீட்டுக்கு மருமகளாகப் போனவர் தானே? .. பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு போகும் போது.. ஏற்படும் வலி, வேதனையை அறியாதவரா என்ன? கடவுள் இவருக்கு பெண்குழந்தையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்போது தெரிந்திருக்கும் இவள் வீட்டினர் படும் அவஸ்தை” என்று ஆயிரம் வசைப்பாட்டுக்கள் உதித்தது தன் அத்தையம்மாளுக்காக.
மனதில் ஓர் வெறுப்பு ‘சுள்’ என்று இதயத்தில் உதிக்க, பேசாமல் தாலியைத் தூக்கியெறிந்து விட்டு, ‘அவனும் வேண்டாம், எவனும் வேண்டாம்’ என்று அண்ணனுடனேயே இருந்து விடலாமா?’ என்றும் கூட தோன்றலானது அவளுக்கு.
சத்யாதித்தனோ… மச்சான் வேல்பாண்டிக்கும், தாய்க்கும் இடையில் ஆஜராகா விட்டாலும் கூட, இதுவரை நேரமும் தன் மனைவியிலேயே முகம் பதித்திருந்தவனுக்கு, அவள் முகம் மகிழ்வுடன் இல்லாததே பெரும் யோசனையைக் கொடுத்தது.
அதிலும், ‘விட்டால் அழுது விடுவேன்’ என்பது போல மனைவி முகம் வைத்துக் கொண்டிருப்பதைக் காணவும் மனம் ஏதோ செய்தது.
அவள் மேல் பைத்தியக்காரத்தனமாகக் காதல் வைத்திருப்பவனுக்கு… அவளது மலரும் முகத்தைக் காண ஏதாவது செய்திட வேண்டும் என்று தோன்ற தாயிடம் பேசிப் பார்க்க நாடி,
பணிவான குரலில், “அம்மா நானும், யௌவனாவும் மட்டும்…ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வந்துடுறோம்மா”என்று சொல்ல, மகனை நோக்கி டக்கென்று திரும்பியவர், கண்களில் சீற்றம் கொப்புளித்துக் கொண்டிருந்தது.
யௌவனாவை உச்சாதி பாதம் வரை.. ஒரு கண நேர கோபப் பார்வை பார்த்தவர், பட்டென்று விழிகளை மகன் புறம் திருப்பி,
“சத்யாஆஆ!! என் சம்மதத்தையும், சத்தியத்தையும் ம்மீஈஈறி கல்யாணம் பண்ணிக்கிட்டே.. அதை உனக்காக ஒத்துக்கிட்டேன்..ஆனா இந்த வாட்டி அம்மா சொல்றதை.. ந்நீஈஈ.. கேட்டுத் தான் ஆகணும்!!.. நீயும் உன் மனைவியும் இப்போவே அம்மா கூட இந்தியா வந்து தான் ஆஆகணும்..!!” என்று கட்டளையிட்டு விட,
தாய்க்கும், தாரத்துக்கும் இடையில்… எங்கணம் சமரசத்தையும், நல்ல புரிதலையும் ஏற்படுத்துவது என்று புரியாமல் குழம்பிப் போனான் அவன்.
ஒருபக்கம் தாயின் சீற்றம், மறுபக்கம் மனைவி அவளின் மனக்கவலை இரண்டுக்குமிடையில் யாரைத் தேற்றுவது என்று புரியாமல் தவித்தான் சத்யன்.
அந்தக் காதல் கணவனுக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக யௌவனாவின் முகம் தொங்கிப் போனதைக் கூட தாங்க மாட்டாதவன்,
தன் கைகளுக்கு வெகு வெகு அருகாமையில் இருக்கும் அவளது தளிர் விரல்களை மெல்ல பற்றிக் கொண்டான்.
கணவனின் தொடுகையில் திடுக்கிட்டு… அவள் தலை உயர்த்திப் பார்க்க, மனைவியை மையலுடன் பார்த்தவன், ஒரு கண்ணிமைத்து, மௌன மொழியால், ‘நானிருக்கேன்’ என்று சொல்லாமல் சொல்ல , அப்போதும் அந்த யௌவனப் பெண்ணின் முகம் ஒளிரவேயில்லை.
ஏதும் பேசாமல் மெல்ல தலைகுனிந்து நின்றவளை நாடி, இதுக்கு பிறகும் சம்பந்தியம்மாளுடன் பேசி பயனில்லை. பிரியாவிடை கொடுத்தனுப்புவதே வழி என்று எண்ணிக் கொண்ட அவளது அண்ணியும், யௌவனாவை நாடி வர…
அண்ணியின் கைச்சந்துகளைப் பிடித்துக் கொண்டு, அவரது தோள்வளைவில் தடாலடியாக சாய்ந்தவளுக்கு, எங்கிருந்து தான் அழுகை வெடித்ததோ??
பட்டென்று கண்களில் இருந்து கண்ணீர்த்துளி உடைப்பெடுக்க, தானாகவே கீழ் நோக்கி வளைந்தது அவளது அழகு இதழ்கள்!!
சத்யனே அதிசயமாகப் பார்க்கும் அளவுக்கு.. கண்கள் சிவக்க சின்னக்குழந்தைகள் போல விம்மி விம்மி அழுது கொண்டேயிருந்தாள் யௌவனா.
அதிலும் யௌவனாவின் அழுகை, சத்யனுக்கு துக்கத்தைக் கொடுத்தது என்றால், அதற்கும் மேலாக, அண்ணியை நோக்கி அவள் ஈனஸ்வரத்தில்,
மூச்சை இழுத்து இழுத்து விட்ட வண்ணம்.. “இந்.. தஹ்.. சம்பந்தம் நான் கேக்கலைஹ்.. .. நீங்.. களே தான் பண்.. ணி வைச்… சீங்க…. இந்த ஊர்லேயே இருக்குற நாள்கூலி யாருக்கா.. வது கட்டிக் கொடுத்திருந்தாலும்.. கூட உங்க பக்கத்துல சந்தோ.. ஷமா இருந்திருப்பேன்.. இப்போ கடல் தாண்டி ப்போறேன்.. இந்தி.. ஹ்யா ப்போறேன்.. உங்களை எல்லாம் எப்போ மறுபடியும் பார்ப்பேன்னே.. தெரியாது”என்று சொன்ன வேளை ஆத்திரம் நெஞ்சை அடைக்க, பீறிட்டது அழுகை.
.அவளது மொழிகளோடு, அவளது அழுகை வேறு கவலையைக் கொடுத்தது சத்யனுக்கு.
எல்லா விஷயத்திலும் அறிவுபூர்வமாக யோசித்து.. விஞ்ஞானத்தை நம்பி செயற்படும் அவனது தாய்.. இந்த விஷயத்தில் மட்டும்.. இருநூறு வருஷங்களுக்கு முன்னர் இறந்து போன ஒரு பெண்ணின் ஆத்மா தன்னை காவு வாங்க தேடுவதாக.. தீவிரமாக நம்புவதை எண்ணுங்கால் எல்லாம்.. சின்ன சீற்றமும் துளிர்த்தது அவனுக்குள்.
இதில் இந்த ராஜசிங்கர்களின் பரம்பரை.. இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட பின்னும் கூட ‘சிதம்பர இரகசியம்’ போல, ‘நந்தினி இரகசியத்தை’ தன் வாரிசுகளுக்கு ஊடுகடத்திக் கொண்டிருப்பதில் ஒரு கோபாவேசமும் முளைத்தது அவளுக்கு.
அவனை விட..நாள் கூலியுடன் வாழ்வது இன்பமாமா? வலித்தது உள்ளே. இருப்பினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. அமைதியாக நின்றிருந்தான் அவன்.
யௌவனா தன் கணவனுக்கு புறமுதுகிட்டு நின்றிருந்ததால், சத்யனின் கண நேர முகமாற்றத்தை யௌவனா கவனிக்க வாய்ப்பிரா விட்டாலும் கூட, சத்யனுக்கு நேரெதிராக நின்றிருந்த வாசுகி அண்ணி… அதைக் கவனித்து விடவே, சாடைமாடையாக யௌவனாவைக் கடிந்து கொள்ளவும் செய்தார்.
தொண்டை வரை வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவர், அவளது நாடியை தன் உள்ளங்கையில் ஏந்தியவராக,
“ஹேய்.. என்ன பேச்சு இது தமிழு? .. இது நாங்களா தேடினாலும் கூட கிடைக்காத வரன்மா.. உன்னை மாப்ளை நல்லா பார்த்துக்கத் தான் போறாரு.. அவர் அன்புல நீ எங்களையெல்லாம் மறக்கத் தான் போற.. அப்புறம் நாங்களே வாம்மா ன்னு கூப்பிட்டாலும்.. நீ தான் அவரை விட்டு என்னால் இருக்க முடியாது அண்ணின்னு அவர் பின்னாடியே சுத்தப் போற” என்று சொல்லிப் புன்னகைக்க, யௌவனாவின் மனதோடு, மானசீகமாக சத்யனின் மனதையும் தேற்ற முனைந்தார் புத்திசாதுரியம் மிக்க அண்ணி.
கல் மலை போல ஊருக்குள் விறைப்பாக நடமாடும் வேல்பாண்டியோ, யௌவனா தழுதழுக்கும் குரலில், “அண்… ணா..” என்றழைத்ததில்.. சர்வமும் கதிகலங்கி நின்று போயிருந்தார்.
தன்னை விட பதினாறு வயது வித்தியாசமுள்ள அண்ணன் வேல்பாண்டி. அவளது பதின்மூன்று வயதில் தாயும், தந்தையும் இறந்து விட.. அவளுக்கு சகலதுமாக ஆகிப் போன வேல்பாண்டி.
தாய், தந்தையை இழந்ததைத் தாங்க மாட்டாத பிஞ்சு யௌவனா.. ராத்திரி எல்லாம் திடுக்கிட்டு விழித்தெழுந்து அழ, அவளை புது மனைவிக்கும், அவருக்கும் இடையில் படுக்க வைத்து.. தன் வாலிப ஆசைகளைத் துச்சமாக தூக்கியெறிந்து விட்டு.. அவளை அணைத்துக் கொண்டே துயின்ற நாட்கள் ஏராளம்!!
அவருக்கு குழந்தைகளையே இறைவன் பரிசளிக்காத போதும் கூட.. தங்கையையே குழந்தையாக எண்ணி..குழந்தை இல்லாத குறையே தெரியாமல்.. அவளுக்கு பிடித்தது எது.. பிடிக்காதது என்று பார்த்து பார்த்து செய்பவர் அவர்.
அவள் வளர்ந்து பெரிய பெண்ணாய் ஆன போதும் கூட, அவள் பின்னாடி எந்தப் பையன் சுற்றினாலும், போட்டு சாத்து சாத்து என்று சாத்தி.. தங்கையின் மனதை இடையூறு இல்லாமல் சந்தோஷமாக வைத்துக் கொள்ள எதையும் செய்யும் நல்ல உள்ளம் அவர்.
கதையின் ஆரம்பத்தில் டெராராக தெரிந்தாலும், பின்னாடி போகப் போக காமெடி பீஸாகி, அப்புறம் வெள்ளந்தியாக தெரியும் வேல்பாண்டியின் கண்கள்.. என்றுமில்லாமல் இன்று ஏகத்துக்கும் கலங்கியிருந்தது.
தங்கை.. அவரைப் பார்த்து வார்த்தைகளே அற்றுப் போனவளாக தேம்பித் தேம்பி அழ, தங்கையின் கண்ணீர் பிடிக்காமல்.. கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டவர்,
அவளது பிறைநுதல் நெற்றியில் தாய்மையுடன் முத்தமிட்டவருக்கு, அவள் பிறந்த போது கையிலேந்தி, நெற்றியில் முத்தமிட்ட ஞாபகம்!!
இதயமெல்லாம் உருகிப் போனது அவருக்கு.
கண்கள் கலங்கினாலும், தன் தழுதழுப்பை காட்டாத குரலில், “இங்கே பாரு தமிழு.. அத்தை… அம்மாவுக்கு சமம்… எப்பவும் எந்த சந்தர்ப்பத்திலேயும் அத்தையை எடுத்தெறிஞ்சு பேசக்கூடாது.. இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு.. கொஞ்சம் நிதானிச்சு.. சூதானமா நடந்துக்கணும்…”என்று ஒரு தாய்.. மகளுக்கு எடுத்துரைப்பது போலவே எடுத்துரைக்க,
அண்ணனின் மன நிம்மதிக்காக, “சரிண்ணா” என்று கண்ணீர் வடியும் வதனத்துடனேயே தலையாட்டினாள் யௌவனா.
அவளது கண்கள்.. அங்கிருந்து செல்லும் முன்னர் ஒருமுறை.. அப்படியே சுழன்று.. அங்கே கூடி நிற்கும் அனைவரையும் பார்த்தது.
அந்த ஊரில் தெரிந்தவர்கள் எல்லாருமே, ‘அங்காளி, பங்காளி”கள் எனச் சொந்தங்களாகவே இருக்க, அனைவரையும் பார்த்து கண்ணீர் மல்க, கை கூப்பியவள், “ப்.. போய் வர்றே.. ன்” என்றவளாக.. அவர்களைப் பார்த்திருந்த போது..உதித்த அழுகையின் விளைவில்.. ஊர்மக்கள் அனைவரும் இரண்டிரண்டாகத் தெரியலாயினர்.
சத்யாதித்தன், அவளைத் தன் கைவளைவுக்குள்.. அணைத்தபடியே அழைத்துச் சென்று தன் வண்டியில் மெல்ல ஏற்ற, இருக்கையில் கண்மூடிச் சாய்ந்தவளுக்கு, கண்ணோரம் வழிந்தது இரு துளி உவர்நீர்.
முன்னாடி இருந்த வண்டியில் தாயும், நம்பூதிரியும் ஏறிக் கொள்ள, இந்த ஊரை விட்டுச் செல்லப் போவதைத் தாங்க மாட்டாதவளுக்கு.. நெஞ்சு புடைத்து விம்ம அடங்க.. வந்தது மீண்டும் அழுகை.
தன் கனவுப்பெண் யௌவனாவின் அழுகையைத் தாங்க மாட்டாதவன், அவளைத் தன் நெஞ்சோடு ஆழப் புதைத்துக் கொண்டான்.
அவனோடு அவளது வாழ்க்கைப் பயணம் ஆரம்பமானது.
எங்கிருந்தோ வந்தான்.ஏதேதோ சொல்லி… ஊரை சமாளித்து அவள் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று.. அவளையே தன் சரிபாதியாக கரம்பிடித்தான்.
அவனிஷ்டப்படியே தற்போது அவன் நாட்டிற்கே அழைத்துச் செல்கின்றான் என்று மட்டும் உள்ளுக்குள் தோன்றிக் கொண்டேயிருந்தது.
ஆயிரம் தான் இருந்தாலும் சத்யாதித்த இராஜசிங்கன்.. சத்திரிய வம்சத்தில் பிறந்த.. ‘வாக்கு தவறாத வள்ளல்’ என்று அவ்வூரார் மக்கள் அனைவருக்கும் நிரூபித்து விட்டே தான் அங்கிருந்து செல்கிறான்.
ஆம், அவன் வாக்களித்தது போலவே ஊர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா பத்துகிராம் தங்கமும், ஊர் நலனுக்கு ஐந்து கோடியும், ஊர்க்கோயில் முன்னேற்றுத்துக்கு ஐந்து கோடியும் தானமாகக் கொடுத்து விட்டே தான் சென்றான்.
இங்கே… அவனது செயலை எண்ணி.. தம்பதிவன கிராம மக்கள்.. இதய நிறைவோடிருக்க, அங்கே இராஜசிங்கனுக்குச் சொந்தமான பாழும் நிலவறையில் இருந்த நந்தினி தான்.. சீற்றம் வெந்து தணியாமல்… தனங்கள் ஏறி இறங்க.. கோபப் பெருமூச்சுக்கள் விட்ட வண்ணமே நின்றிருந்தாள்.
சத்யனின் கார்.. அந்த ஊரின் எல்லையைத் தொட்ட வேளை.. நந்தினியின் கோபத்தின் வீரியம் தாளாமல்..
அந்தக் கற்திடலின் மேலே இருந்த ஒரு பாறாங்கல்லொன்று.. சுக்குநூறாகிப் போகும் வண்ணம் பாரிய ஒலியுடன் வெடித்துச் சிதறியது.
நந்தினியின் விழிகள்.. அவளது எதிரே இருந்த பாரிய காளி சிலையின் விழிகளைப் போலவே, ரௌத்திரத்தினால் அகல விரிந்து கிடந்தது.
யௌவனாவைக் கொல்ல விடாமல் தடுத்து, சத்யாதித்தனுக்கும் பாதுகாப்பளித்து.. அவளை நெருங்க விடாமல் செய்த.. தன் கணவனான தேவதாவின் மீது… இன்னும் இன்னும் கோபம் வலுத்தது அவளுக்கு.
பற்களை நறுநறுவென்று கடித்துக் கொண்டவளுக்கு, கண்களில் இருந்தும் மௌனமாக கண்ணீர் வழிய, அந்தப் பிரேதாத்மா, காளியைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் இறைஞ்சியது.
“காளீஈஈ.. என் இருநூறு வருட தவம்… , காத்திருப்பு எல்லாம் வ்வீணாகி வ்விட்டதேஏஏ? என் பலி பூஜைகள் வ்வீணாகி வ்விட்டதேஏஏ? அவன் கடல் கடந்து செல்வதாயின் என் ப்பழிவெறியை எப்படி தீர்த்துக் கொள்வேன்?? ந்நாஆன் செய்வ்வேஏன்!! .. ஏதாவது செய் பத்ரகாளீஈஈஈ!! ” என்று தன் தாயிடம் முறையிட்டவாறு.. வீறிட்டு அடம்பிடித்தது குழந்தை.
குழந்தை அவசரப்படலாம். அடம்பிடிக்கலாம்.
ஆனால் தாய்க்குத் தான் தெரியும். எந்த நேரத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்று. ஆகையால் எப்போதும் போல அப்போதும் ரௌத்திரம் மாறாமல் நின்றபடியே இருந்தாள் நந்தினியின் தாய்.
****
அங்கே சத்யாதித்தனின் சென்னை வீடு.
ஏதோ ஐந்து நட்சத்திர விடுதியில் நுழைந்தாற் போன்று.. கண்ணைப் பறிக்கும் அழகுடன் இருந்தது சத்யாதித்தின் சென்னை வீடு.
வீட்டுக்குள்ளேயே..ஒரு ஓரத்தில்.. ஒரு கையால் நழுவும் போர்வையை தன் மார்பு மத்தியில் பிடித்த வண்ணமும், மறுகையால் குடத்தை சரித்த வண்ணமும் ஒரு மோகனச் சிலை நின்றிருக்க,
அந்தச் சரித்த குடத்தில் இருந்தும் வழிந்து கொண்டிருந்தது நீர். அந்த செயற்கை நீரூற்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சின்ன குளத்தில்.. முழங்கை அளவு நீளமுள்ள வண்ண வண்ண மீன்கள் நீந்திச் சென்றுக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் பெரிய தண்டு கொண்ட ஓர் இராட்சத போலி மரம்.
அது உயர்ந்து செல்லும் தினுசில்.. மூன்று மாடிகளையும் கடக்க.. நாலாவது மாடியின் உச்சியில்.. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் கூரை வழியாக.. வீடே ஒளிமயமாக இருந்தது.
அவர்களது நடுக்கூடமே.. துண்டு துண்டாக தூண்களினால் பிரிக்கப்பட்டு.. மூன்று சோபா செட்டுக்கள், டீபோய் சகிதம் மூன்று அளவில் இருந்தது.
படிகள் கூட கண்ணாடியில்… ஒரு படிக்கும், மறுபடிக்கும் பிடிமானமேயற்று, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல, பலகையினாலான கைப்பிடி வரிசையுடன், பாம்பு போல மேல்நோக்கி வளைந்து வளைந்து.. அத்தனை கச்சிதமாக இருந்தது.
அறைகளுக்குள் அவள் நுழைந்து… பார்த்திரா விட்டாலும் கூட, கதவுகளின் அலங்கார வேலைப்பாடுகளே.. உயர்தரம் வாய்ந்தவையாக இருப்பதைக் கவனித்தாள் அவள்.
அந்த வீட்டை தூசு, தும்பட்டை அண்டாமல் சுத்தமாக பராமரிக்கவென்றே எக்கச்சக்க வேலைக்காரர்கள் இருக்க, வெளியே தோட்டத்தைப் பராமரிக்க தோட்டக்காரர்கள், டிரைவர்கள், சமையல்காரர்கள் என.. வீட்டு உடையவர்களை விடவும், தொழிலாளர்கள் வர்க்கம் ஜாஸ்தி என்பது பார்த்ததும் புரிந்தது அவளுக்கு.
அவன் செல்வந்தன் என்று தெரியும் தான்… ஆனால் இந்த வீட்டின் அமைப்பே சொல்லியது.. அவன்.. அவள் நினைத்ததுக்கும் மேலான இடத்தில் இருப்பவன் என்று.
இப்பேர்ப்பட்ட செல்வந்தனுக்கு.. அவன் கண் அசைத்தால் ஆயிரம் பெண்கள் கியூவில் நிற்க, அவன் ஏன் அவள் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான்??
அப்படி அவளிடம் என்ன இருக்கிறது என்று காதல் வயப்பட்டான்?
அன்று மாலை ஆனதும், மணப்பெண்ணை அலங்கரிப்பதில் நிபுணத்துவ பெண்ணொருத்தி, அவளை நாடி வந்து.. அவளை ஒரு புது மணப்பெண் போல பட்டுச் சேலையில்.. உச்சி முதல் பாதக் கணுக்கால் வரை ஆபரணங்கள் பூட்டி.. அலங்கரித்து விட, அவள் ஒன்றும்.. ஒன்றும் தெரியாத சின்னப் பெண் அல்லவே.
இத்தனை அலங்காரங்களும் எதற்கு என்று புரிந்தது அவளுக்கு.
அதை அறிந்ததும் சத்தியமாக அவளிடம் நாணப்படபடப்பு இல்லவே இல்லை. மாறாக அவளுள் ஓடியது எல்லாம் அச்சப்படபடப்பு தான்.
பால் கிண்ணத்துடன் அவளை நாடி வந்த அவளது அத்தை வசுந்தரா தேவிக்கோ, யௌவனப் பெண்ணின் வனப்பில், ‘என் பையன் நல்ல பேரழகியைத் தான் பிடித்திருக்கிறான்’ என்றொரு கர்வமும், மருமகளின் அழகில் சின்ன இடாம்பீகமும் மிகுந்தது அவருக்குள்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவே பிரியப்படாதவர், இலங்கையிலிருந்து வந்த பின்பு இறுக்கம் தளர்ந்திருந்தாலும்,
விறைப்புப் பேர்வழி போலவே அவளிடம், பால் கிண்ணத்தை திணித்து விட்டு, “இங்கே பாரு.. எனக்கு என் மகன் சந்தோஷம் முக்கியம்ன்ற.. ஒரே காரணத்துக்காக தான்.. உன்னை என் வீட்டுக்கு மருமகளா ஏத்துக்கிட்டேன்… எனக்கு..இப்பவும் எப்பவும் என் மகன் சந்தோஷம்.. நிம்மதி தான் முக்கியம்.. உன்னால அவனுக்கு சின்ன துன்பம்னு கேள்விப்பட்டாலும் உன் நாட்டுக்கே நீ போய் சேர்ற மாதிரி பண்ணிருவேன்..”என்று எச்சரிக்கை செய்ய, அவளின் மனமோ கசந்து போயிற்று.
அவளுக்கு… அவள் வீட்டு ஞாபகம் வந்தது. தெரியாத இடம்.. ஒரு நாள் மட்டுமே தெரிந்த நபர்கள்.. அதற்கும் மேலாக அத்தையம்மாளின் ஆகாத பேச்சு எல்லாம் அவள் மனதை அலைக்கழிக்க ஆரம்பித்தது.
மருமகளின் மனதினை அறியாதவர், தான் கையோடு கொணர்ந்திருந்த பால் கிண்ணத்தை அவளது இரு கைகளிலும் திணித்து விட்டு, “இந்தா.. இந்த பாலை எடுத்துட்டு ரூமுக்கு போ. என் பையன் மனசு கோணாம நடந்துக்க..” என்று கட்டளையிடும் குரலிலேயே கூறி அனுப்பி வைக்க, அவள் ஏதும் மறுத்துப் பேசவில்லை.
உணர்ச்சி துடைத்த முகத்துடனேயே, அத்தையின் கட்டளைக்கு இணங்க.. அமைதியாக அரவமே எழுப்பாது அவர்களின் மஞ்சத்திற்குள் நுழைந்தாள்.
அந்த அறை எங்கிலும் மல்லிகை மலர்களின் சுகந்தம் நாசியை நிரடிச் செல்ல, மலர்மாலை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த சொகுசு மஞ்சம்.
புத்தம் புது தளவாடங்கள், மஞ்சத்துடன் அறை மிளிர்ந்து கொண்டிருக்க அவனைத் தான் காணவில்லை.
அவனைத் தான் சுற்றுமுற்றும் தேடியது அவளது செங்காந்தள் கண்கள்.
சும்மாவே நேற்றிரவு.. அவனுக்குச் சொந்தமாக முன்னரே யாரும் அறியாமல் அத்தனை சில்மிஷங்கள் செய்தவன், இன்று அவள் முழுமையாக அவனுக்குச் சொந்தமான பின் என்னென்ன செய்வானோ?
உடம்பு ஒரு முறை கூசி அடங்கியது.
அந்த கணம் பட்டென்று குளியலறை கதவு திறக்கப்பட.. அதிலிருந்து எந்தவிதமான மாப்பிள்ளைக்குரிய அலங்காரமோ தோரணையோ இன்றி சாதாரணமான டீஷேர்ட் ஜம்பருடன் வெளியே வந்தான் அவன்.
இப்போது தான் குளித்திருப்பான் போலும். அவன் முகத்தில் தெரிந்த புத்துணர்ச்சி.. அப்பட்டமாக தெரிந்தது. இலங்கையில் இருந்து சென்னை பயணப்பட்டு வந்த பிரயாணக்களைப்பு ஒரு சிறிதும் இன்றி.. ஆரோக்கியமாக இருந்தான் அவன்.
ஆனால் அவளுக்குத் தான் இங்கே வந்து குளியல் போட்டு.. புத்தம் புது பட்டுடுத்தி… நகைகள் புனைந்து தயாரான பின்பும் கூட, ஆயாசமாக இருந்தது.
குளியலறை விட்டு வந்தவன், தன்னெதிரே.. கனவில் வந்த அதே மணப்பெண் அலங்காரத் தோரணையுடன் நிற்கும்.. தன் யௌவனாவைக் கண்டதும் விழியெடுக்க மறந்து போனான் .
அந்தக் கண்களுக்கு.. மை தீட்டியிருப்பதால்.. பாலில் விழுந்த திராட்சை போலிருந்த.. அந்தக் கருமணிகளின் தாக்கத்தில்,
கை தேர்ந்த சிற்பி செதுக்கியது போன்ற ஒரு பிழை சொல்ல முடியாத அந்த நாசி நுனியின் அழகில், பளபளவென்று மாதுளை போலிருந்த அந்த கன்னத்தின் செழுமையில், உதிர்ந்த இரு ரோஜா இதழ்கள் போன்ற அந்த அதரங்களின் சிவப்பில்.. ஒரு கணம் தன் வசம் இழந்தான் சத்யன்.
இது அத்தனையும் அவனுக்கே அவனுக்கு!! ஹப்பா பொல்லாத கர்வமும் எழுந்தது அவனுக்குள்.
அவளுக்கோ அவன் பார்த்து வைத்த பொல்லாத பார்வையில், அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அட் அ டைமில் பறந்தது போல படபடப்பு மிகுந்தது.
மஞ்சத்தில் வந்து அமர்ந்து கொண்டவனுக்கு, அவளது அழகை கண்களால் ஆராதித்த படி நின்றிருந்ததிலேயே நேரம் போக, சட்டென தன் காதல் மயக்கத்தில் இருந்து வெளியே வந்தவன், மென்மையான குரலில், “ஏன் நின்னுட்டிருக்க… உட்காரு..?”என்றான் விழிகள் விரித்து.
அவளும் மெல்ல.. மஞ்சத்தின் விளிம்பில் பட்டும் படாமல்.. அவனை விட்டும் தள்ளி.. உட்கார்ந்தவளின் இமைகளின் படபடப்பை.. பக்கவாட்டுத்தோற்றமேயாயினும் கூட.. தலை சரித்து.. இதழ்கள் மலர்த்தி குழந்தையை இரசிப்பது போல இரசித்தான் அவன்.
அவள் தள்ளி அமரலாம்!! அவளுக்கான காதல் கழுத்து வரை அடைத்து நிற்க.. தள்ளாடி நிற்கும் ஆண்மகன் தள்ளி அமர்வானா என்ன?
அவளை மெல்ல நெருங்கிப் போய்.. அவள் அருகே அமர்ந்தவன், அவள் கையிலிருக்கும் பால்கிண்ணத்தை வாங்கி.. அருகே இருந்த டிராயர் மீது வைத்தவனுக்கு.. அது ஒரு உன்மத்தமான மனநிலை.
இரண்டு மாதங்களாக கனவில் கண்டு.. வாழ்க்கை நடத்திய பின்.. நனவிலும் மனைவியாக அவன் எதிரில்.
காமத்தை மேற்கோள்காட்டி முளைக்கும் காதலை விடவும், காதலோடு முளைக்கும் காமம் ஆழமானது ;அழகானது.
அதே போலத் தான் சத்யனின் காதலும் அழகானது.
முழுமதி நிலவு போன்ற அவள் முகத்தில்.. ஓரமுக தரிசனம் காணக்கிடைப்பதைப் பொறுக்க மாட்டாதவன், தன் கைகள் உயர்த்தி.. அவளது கன்னத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.
அவனது கைகளின் உஷ்ணத்தின் தரமே சொல்லியது.. அவளுக்காக அவன் கொண்டிருக்கும் ஆசையினை.
அவளோ.. அவனது விழிகளை ஏறிட்டும் பார்க்காமல்,இருக்க, அவனும் இறுதிவரை ஏந்திய அவளது கன்னங்களை விடாமலேயே, ‘அவள் தன்னை பார்ப்பாள்.. பார்ப்பாள்’ என்ற நம்பிக்கையுடன்.. அவளது குனித்த இமைகளைப் பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தான்.
ஒருகட்டத்தில் தன் பிடிவாதம் துறந்து, யௌவனா அவனை ஏறிட்டுப் பார்க்க.. அவன் விழிகளில் சொக்கும் மையலில்.. பார்வைகள் பூட்டு போட்டாற் போன்று இரண்டற இணைந்தது.
ஆண்களின் காதல் நேரத்து மிருதுவான குரல் அழகோ அழகு!!
அத்தகைய அழகிய மிருதுவான குரலில், “என்கூட பேசமாட்டியா?? இங்கே நீயும் நானும் மட்டும்.. எந்த டிஸ்டர்பன்ஸூம் இல்லை யௌவனா… இந்த நாளுக்காக… நா.. நான் எத்தனை நாளா காத்திருக்கேன் தெரியுமா??.. ப்ளீஸ்.. ஏதாவது பேசு..” என்று அவன் கெஞ்ச, என்ன பேசவென்று அவளுக்குமே தோன்றவில்லை.
ஆனால்.. அவனது ஹஸ்கி தொனியிற்கு பலம் அதிகம். அவளுடலுக்குள் ஏதோ செய்தது. உள்ளூற ஒரு ஏக்கமும், வலியும் பிறக்க.. அவன் பாய்ந்து இறுக்கி கட்டியணைத்தால்.. அந்த ஏக்கமும், வலியும் தீரும் என்பது போலவும் இருந்தது.
இந்த உணர்வுகள் எதனால்? என்று கன்னிப் பெண் அவளுக்குப் புரியவேயில்லை.
அவளுக்கோ உடலின் அவஸ்தை போதாதென்று தான் பூண்டிருக்கும் நகைகளின் அவஸ்தை வேறு.. அவளை வாட்டி எடுக்கலானது.
அவளது அத்தை தந்த விலையுயர்ந்த ரூபி நெக்லஸின் செப்பமிடப்படாத கூர்முனைக் குத்திக் குத்தி.. சிவந்து போனது அவளது கழுத்து வளைவு.
இது போதாதென்று.. வளையல்களில் பதிக்கப்பெற்ற கற்கள் வேறு குத்தியது.
அவஸ்தையுடன்.. அவள் நிமிடத்துக்கு நிமிடம்.. வளைகை அசைத்து அசைத்து இருப்பதைக் கண்டவனுக்கு, அந்த முன்னங்கைகளின் சிவப்பைக் கண்டதும் விஷயம் விளங்கிப் போனது.
அவளது தளிர்க்கரங்களை தன் மடியில் ஏந்தியவன், அவளுடன் பேசிப் பேசியே.. அவளுக்கே புரியாத வகையில், வலியேயின்றி அவளுக்கு ஆபரணங்களைக் களையலானான்.
அவளது படபடக்கும் விழிகளைப் பார்த்தவன், “கனவுல.. என்னைத் தூங்க விடாமல்.. பேசிட்டே இருப்ப.. தெரியுமா? அந்த மாதிரி பேசு.. உனக்கு என்ன தோணுதோ பேசு..” என்று சொல்லி முடித்த கணம்.. அவள் கைகளில் எந்த வளையல்களும் அற்று வெறுமனாகியிருந்தது.
வளையல்களின் புழுக்கத்தில் இருந்தவளுக்கு, கைகள் இலேசானது போல இருக்க ‘ஹப்பாடா’ என்று இருந்ததே ஒழிய, அவன் ‘கனவு’ பற்றி சொன்னது தான் கவனத்தில் பதியவேயில்லை.
இதழ்களைத் தாண்டி.. மெல்ல கழுத்துக்குக் கீழே கண்களை கொண்டு சென்றவனுக்கு, அவளது கழுத்தில் ஒரு அங்கம்.. கன்றிச் சிவந்து போயிருப்பது புரிய, மனம் பதறியது.
மெல்ல அவளைத் திருப்பி.. அந்த ரூபி நெக்லஸைக் கழற்றி விட்டவன், அவளது காதோரம் இதழ்கள் நுழைத்து.. கிறக்கம் தரும் கிசுகிசுப்புடன், “உனக்கு நகை போட பிடிக்கலைன்னா.. வேண்டாம்.. நீ வீட்ல இருக்குற மாதிரி சிம்பிளா இரு.. போதும் என்ன?” என்று கேட்க, அவளுக்குள் தோன்றும் அந்த அவஸ்தை அதிகமானது.
இத்தனை இதமாக பேசியும் தன் ஆருயிர் மனைவியின் முகம் இன்னும் தொங்கிப் போயிருப்பதைக் கண்டவன்,
சற்றே குனிந்து அவள் முகம் பார்த்தவனாக, “என்னாச்சு?? .. அம்மா ஏதாவது திட்டினாங்களா??..”என்று கேட்டவுடன், அவளையும் மீறி அதிசய விழிகளுடன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள் மாது.
அவளது ஒற்றைப் பார்வை அவனுக்கு வேண்டிய பதிலைத் தந்துவிட,
“ அம்மா..” என்று கத்தியவனாக, சிலிர்த்துக் கொண்ட சேவலைப் போல வெளியே எழுந்து அவன் செல்லவாரம்பிக்க, நன்றாகவே பதறிப் போனவள், மஞ்சத்தில் இருந்து எழுந்து.. அவனது வாயை இறுகப் பொத்திக் கொண்டாள் அவள்.
தன் உஷ்ண இதழ்களில் அவளது உள்ளங்கை அழுந்தப் பதிந்த தினுசிலேயே ஏதேதோ சுக உணர்வுகள் அவன் மனதுக்குள் பரவ, அப்படியே மஞ்சத்தில் தொப்பென்று அமர்ந்து கொண்டான் சத்யன்.
இவள் தான் இன்னமும் அந்தப் பதற்றம் சரிவர நீங்கப்பெறாதவளாக, குசுகுசுக்கும் ஒலியில், “உஷ்.. கத்தாதே கத்தாதே! .. அவங்க ஒண்ணும் சொல்லல.. மகன் மனசு கோணாம நடந்துக்கமா தான் சொன்னாங்க..”என்று சொல்லி.. அவனை சமாதானப்படுத்த முயன்றாள் அவள்.
அவளுக்கோ.. அவன்.. அவள் மீதிருக்கும் அன்பு, பிறர் பார்வையில், ‘பொண்டாட்டி வசியம் செய்து விட்டாள்’ என்று ஆகிவிடக் கூடாதல்லவா என்ற பயம்!!
எல்லாவற்றுக்கும் மேலாக, வந்த முதல் நாளிலேயே, ‘தாய்- மகன்’ சண்டையை மூட்டி விட்டாளே பாவி’ என்று பெயர் வாங்கியிருந்திருக்கவும் கூடும்.
அதனை விடுத்து அப்போதும் அவனது அதரங்களை விடாமல் பார்த்தவள், தாய் முகம் காண ஏங்கும் சின்னப்பிள்ளைகளின் தோரணையில், “எனக்கு வீட்டு ஞாபகமா இருக்கு”என்றதும் தான்.. அவனில் சின்ன முகமலர்ச்சி தோன்றியது.
அவளது உள்ளங்கையை தன் இதழ்களில் ஒற்றி.. சின்னதாக முத்தம் வைக்க, அவள் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த மயிர்க்கால்களும் கூச்செறிந்தது அவளுக்கு.
அவள் வெடுக்கென்று கைகளை எடுத்துக் கொள்ள முயல, அதை விடவேயில்லை அவன்.
கொஞ்சம் முன்னேறி..வளைகையில் இதழ்கள் பதித்தவன், விழிகளில் காதல் சொட்டச் சொட்ட, “ஃபூ இவ்வளவு தானா? நான் வேற அம்மா தான் திட்டிட்டாங்கன்னு பயந்துட்டேன்மா.. இந்தியா- ஸ்ரீலங்கா டைம்சோன் ஒண்ணு தான்.. இங்கே இருபத்து நான்கு மணித்தியாலமும்.. நெட் இருக்கு.. தாராளமா உன் வீட்டுக்கு வீடியோ காலில் பேசலாம்.. அம்மா கோபம் குறையட்டும்.. அங்கே.. உன்னை நானே கூட்டிப் போறேன்..” என்று சொல்லச் சொல்ல, இங்கே வந்து யாரிடமும் கிடைக்காத ஆறுதல் அவனிடம் இருந்து கிடைப்பது போல இருந்தது அவளுக்கு.
அவனது இதழ்கள் இன்னும் முன்னேறி.. அவளது முழங்கை மடிப்பில் முத்தம் வைக்க, ஒரு கணம் கூச்சத்தில் கண்கள் மூடி திறந்தவளுக்கு.. கண்கள் உணர்ச்சியில் செம்மை பூத்திருந்தது.
எதற்கு வளையலை.. அவ்வளவு லாவகமாக கழற்றியிருக்கிறான் கள்வன்!! என்று இப்போது தான் புரிந்தது அவளுக்கு.
அவளது கூச்சத்தைக் கண்டு விட்டவனுக்கு.. விழிகளில் மின்னல் வெட்டானாற் போன்ற ஒரு பளபளப்பு!!
இதே மாதிரி ஓர் வெட்கம்.. இதே வெட்கத்தைத் தானே..கனவிலும் அவன் முத்தம் கொடுத்த போது.. அவள் முகம் காட்டியது.
அன்றிரவு.. யௌவனாவுக்கான சத்யனின் காதல் கூடியதே அன்றி.. இம்மியளவேனும் குறையவேயில்லை.
அந்திமந்தாரை போல விகசித்த அவளது நாணமுகம் கண்டதும்.. உடலில் நரம்புகள் எல்லாம் முறுக்கேற..தன் தோள்புஜங்கள் ஏறி இறங்க உஷ்ணப்பெருமூச்சு விட்டவன், சட்டென அவள் கன்னம் ஏந்தி.. அவளது அதரங்களை லபக்கென்று கவ்விக் கொண்டான்.
நேற்றிரவை விடவும்.. இன்றைய வேகத்திலும், அவனது காதல் மொழிகளும், உடலின் உஷ்ணமும், விட்டால் அவள் இதழை அப்படியே தின்று விடும் அவனது ஆவேசமும் அவளை என்னமோ செய்தது.
அவளே அறியாமல்… அவளது தளிர்க்கர்கள் அவனது முதுகந்தண்டு வடத்தைத் தடவி.. டீஷேர்ட்டை அழுந்தப் பிடித்துக் கொள்ள, சத்யனுக்கு யௌவனாவின் புறம் இருந்து வந்த சமிக்ஞை காதலையே உணர்த்தியது.
அவன் காதல் கை கூடிய நாள் இன்று. அவன் வானத்துக்கும், பூமிக்குமாக மானசீகமாக குதிக்கும் அளவுக்கு அத்தனை பெரும் மகிழ்வோடு இருந்தான்.
அவன் மகிழ்ச்சி அதிகமாக ஆக, அவள் மீது அவன் பூண்ட காதலும் அதிகமானது. காதலும் அதிகமாக ஆக, அவளது செர்ரிப்பழ இதழ்களில் வழிந்த சாறை சொட்டு விடாமல் உறிஞ்சிக் கொண்டிருந்தவனின் வேகமும் அதிகமாகிக் கொண்டே போனது.
யௌவனா தான் மூச்சு விட தத்தளித்துப் போனவளாக நிற்க, அவனது மூச்சின் உஷ்ணப்பெருமூச்சே.. அவனது நுரையீரல் எங்கும் நிறைக்கவாரம்பித்தது.
அவனது ஒரு கரம் மெல்லக் கீழிறங்கி.. அவள் உடலின் ஏற்ற இறக்கங்களை.. கொஞ்சம் வன்மையை பிரயோகித்தே ஆராய, அவளுக்கு வலித்தது.
ஆனால்..இது வேண்டாம்.. வேண்டும் என்ற இரு மனநிலைக்குள் ஆட்பட்டுப் போனது அவள் மனம்.
அவனது கையின் விளையாட்டுத் தாளாமல்.. அவள் அவன் மீது ஒரு கட்டத்தில் புரண்டு விட, அந்த மராமரத் தண்டின் மீது படர்ந்த ஒரு பூங்கொடி போல படர்ந்தவளின் அதிரடி தாங்காமல் சாய்ந்தான் மஞ்சத்தில்.
அவளோ.. அவனது மார்பில் ஒன்றியவளாக… தாபப் பெருமூச்சை எடுத்து விட்ட வண்ணம் கண்கள் மூடிக் கிடந்தாள்.
சத்யனின் முகமோ.. அந்தக் குளிர்மையான சந்திரனின் முகம் போல.. அத்தனை பிரகாசமாக விகசித்துக் கொண்டிருந்தது.
தன் தீண்டலுக்கு துலங்கலைக் காட்டும்.. அவனது அழகு மனைவி!! எப்பேர்ப்பட்ட ஆண்மகனுக்கும் இனிக்கும்!!
அவளுக்கோ.. அவனது மார்பை விட்டும் எழுந்து.. அவனது விழிகள் பார்க்கவே கூச்சமாகிப் போனது. உணர்ச்சிகளின் வெள்ளத்தில் அடிபட்டுப் போனவளுக்கு, இன்னும் தாபத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவளை ஒரு குழந்தை போல நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அடுத்த நொடி தடாலடியாக, அவளைக் கீழே புரட்டி..அவள் மீது ஏறி.. அவள் வதனத்துக்கு நேராக தன் தலை கொண்டு வர, இப்போது அவளுக்கு கணவனின் விழிகளை ஏறிட்டுப் பார்க்கும் கட்டாய நிலை ஏற்பட்டது.
அவளது பஞ்சன்ன தேகம், அவனது முரட்டுடலில் கசங்குவது பேரானந்தமாக இருந்தது சத்யனுக்கு. அதிலும் அவளது இதழ்களில்.. அவன் எச்சிலின் ஈரத்தைக் காணும் போது கிளுகிளுப்பாகவும் இருந்தது.
அவளது கொங்கைகள் ஏறி இறங்க மூச்செடுத்த தினுசில்.. அவனது பரந்த மார்போடு முட்டி மோதுவதும், பின்வாங்குவதுமாக என அந்த வலியானோடு சமர் புரிந்து கொண்டிருந்தன அவை.
ஆசைகள் கரை தாண்டி வந்து நின்ற வேளையிலும் கூட, தன் உணர்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தன்காதலை அவளிடம் எத்தி வைக்கவே ஆசை கொண்டான் அந்தப் பேரழகன்.
அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டவன், சந்தோஷம் தாளாமல் சிரித்துக் கொண்டே, “யௌவனா.. முதன்முறையா நான் உன்னை எங்கே பார்த்தேன்னு தெரியுமா?” என்று கேட்டான்.
கணவனின் இச்சை சிந்தும் முகம்.. இப்போது தூய காதல் சிந்துவதை அவதானித்தாள் யௌவனா. அதிலும் அந்த பேரழகனின் விழிகள்.. இனி இல்லை என்ற பேரழகியைக் கண்டது போல இரசித்துப் பார்த்திருப்பது அவளுக்கு சின்ன பெருமையைக் கொடுத்தது.
கணவனின் கேள்விக்கு பதில் சொல்ல நாடியவள், “வேறெங்கே பார்த்திருப்பீங்க? டயலாக் ஆர்க்கேட்ல?” என்று தன் பணியகத்தினையும், தங்களது முதல் சந்திப்பினையும் நினைவுறுத்தி சொல்ல, அவளது ஊகத்தைப் பொய்ப்பிக்குமுகமாக மறுப்பாகத் தலையாட்டினான் சத்யன்.
அவளது மூக்கு நுனியை.. வலிக்காமல் நிமிண்டி விட்டவன், “ம்ஹூஹூம் இல்லை… கனவுல..”என்று சொல்ல, அவள் விழிகள் அகல விரிந்தன.
நம்பாததைப் போலவே அவளை அவன் பார்த்து வைக்க, அந்த இதழ்களோ அவனை ‘வா.. வா’ என்றழைப்பது போல இருக்க, மீண்டும் ஒரு சுருக்க முத்தமொன்றை இதழ்களில் பதித்து எடுத்தவன்,
“ஆமா நான் சொல்றது உண்மை.. இரண்டு மாசம்.. இரண்டு மாசமா என் கனவுல தொடர்ந்து வந்த ஒரே பெண்.. அது ரொம்ப வித்தியாசமான கனவுகள்” என்றவன் அவளை விட்டும் அகன்று,
தன் பின்னந்தலைக்கு தலையணையாக உள்ளங்கையை வைத்து, மறுகையால் அவளை அள்ளி இழுத்து தன் மார்பு மேல் போட்ட வண்ணம் அண்ணாந்து பார்த்தவனுக்கு, அவன் மனம் நிறைவாக இருந்தது.
கனவில் வந்த மனைவியையே நனவிலும் மனைவியாக ஏற்ற திருப்தி அவன் முகத்தில். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல நாடியவன் ,
“எனக்கு இந்த லாஸ்ட் டூ மன்த்ஸா.. ஒரு அழகான பெண்ணோட.. அதாவது உன்னோட குடும்பம் நடத்தி .. சுருள் சுருளான முடி கொண்ட இரண்டு வயசு குழந்தைக்கு தாயும் ஆகுற அளவுக்கு தொடர் கனவுகள் வந்தது.. இதில் என்ன அதிசயம்னா என் கனவுப் பொண்டாட்டியோட பேர் தெரியாது இந்த அப்பாவிபுருஷனுக்கு.. லாஸ்டா ஒரு கனவு.. என்னை ரொம்ப பாதிச்ச கனவு”என்றவனுக்கு,
இன்றும் அந்த கனவின் தாக்கத்தின் பலனாக.. அவள் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பது போல தோன்ற, அவளை காதலுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான் சத்யன்.
கடைசிக் கனவை நினைக்கும் போதே, குரல் தழுதழுக்க, “ஒரு புத்த விகாரை முன்னாடி.. இறந்து போற மாதிரி நீ… என்னால ஏத்துக்க முடியல.. சாகப் போற தருணத்துல உன் பேர் சொன்ன, “யௌவனத்தமிழ்ச்செல்வி”ன்னு உன் பேர் சொன்ன.. அந்த புத்த விகாரை இலங்கையில் இருக்க தலதா மாளிகை.. அது இருக்குறது கண்டின்னு புரிஞ்சது.. உன்னைத் தேடி இலங்கை வந்தேன்.. ஆனா கண்டி வர முன்னாடி டயலாக் ஆர்க்கேட்ல உன்னை சந்தித்தது தான்அதிசயம்..”என்று ஈர்க்கும் குரலில் அத்தனையும் சொல்ல அப்போது தான் அத்தனையும் புரிந்தது அவளுக்கு.
கணவனின் அன்பில் நெகிழ்ந்து போனவள், “அதனால தான் கண்டதிலிருந்து பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கீங்களா?”என்று கேட்டாள் அவள்.
அந்த கனவிலேயே இதயம் சொக்க, “அந்த கனவு தான் உன்னைத் தேடி வரவைச்சது.. வந்தேன்.. வென்றேன்..” என்று சிரித்தவன் கேட்டான்,
“ஏன் யௌவனா என்னைப் பத்தி கனவுகள் உனக்கு வரவேயில்லையா?” என்று.
“ம்ஹூஹூம் இல்லை..”- அவளிடமிருந்து பட்டென்று வந்தது பதில்.
அதில் கொஞ்சம் அவன் வதனம் வேதனையைப் காட்ட, அவளை சிறிதாக வலுக்கட்டாயப்படுத்தும் தொனியில், “நல்லா யோசிச்சு பாரு.. ஒருநாளாவது புதுமுகம் ஏதாவ்வது.. கனவில் வந்திருக்கா? ..” என்று அவன் பற்பல எதிர்பார்ப்புக்கள் கண்களில் மின்னக் கேட்டான்.
ஆனால் யௌவனாவோ.. கணவனின் மனம் வெல்லவேனும், அவன் கேள்விக்கு யோசித்து விடை சொல்ல, நேரமே எடுக்கவில்லை.
அவன் கேள்வி கேட்டு முடித்த மறு விநாடி, “இல்லை.. எனக்கு தலை வைச்சதும் தூக்கம் வந்துரும்.. காலையில் எழுந்ததும் கண்ட கனவு மறந்து போயிருக்கும் சத்யன்..” என்று சின்னக் குழந்தை தோரணையில் அவள் சொல்ல,
“சுத்தம்!!” என்றான் அவன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக.
மனைவியின் அழகு முகத்தைக் காணக் காண திகட்டவில்லை அவனுக்கு. சலிக்காமல் பார்த்தவாறு, “இந்த ஆடம்பரமான பகட்டான வாழ்க்கை கண்டு பயப்படாதே.. இன்டியாஸ் வன் ஆப் மோஸ்ட் லீடிங் பிஸினஸ் டைக்கூன்.. சத்யாதித்தனின் மனைவி நீ.. அதை ஞாபகம் வைச்சுக்க.. இனி உன் ரேஞ்சே வேற” என்று புத்திமதி கூறியவன், காதல் கொப்பளிக்க,
“சரி ஹனிமூனுக்கு எங்கே போகலாம்?” என்று ஆவலுடன் கேட்டான்.
“எங்கேன்னா?”என்று அவள் புரியாமல் கேட்க, அவன் சொன்ன பட்டியலோ, அவளை வியக்க வைத்தது.
அவனோ படபடவென்று இந்தியாவின் மலைப்பிரதேசங்களை அடுக்கடுக்காக கூறியவனாக, “ஊட்டி, ஷிம்லா, கொடைக்கானல் டார்ஜ்லிங்,காஷ்மீர் இப்டி உள்ளூர்ல போகலாமா? .. இல்லை ஸ்விஸ், பிரேசில், பாரிஸ் ன்னு வெளிநாட்டுக்குப் போகலாமா…?”என்று கேட்க, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவனுக்கு வேண்டுமானால் ஊட்டி, ஷிம்லா, கொடைக்கானல் டார்ஜ்லிங்,காஷ்மீர் எல்லாம் உள்ளூராக இருக்கலாம். ஆனால் அது அவளுக்கு வெளிநாடு தானே?
இருந்தாலும் நிலைமையை இரசிக்க முடியாதளவுக்கு, இதயம் அவளது வீட்டைத் தேட, “எனக்கு எங்க வீட்டுக்கு தான் போகணும்..”என்றாள் சிறுகுழந்தைகள் போல.
மனைவியின் அபிலாஷை புரிந்த கணவனாக அவனும், அவள் கன்னம் பிடித்தாட்டி, “போறேன் கண்டிப்பா கூட்டிப் போறேன்.. அம்மா கொஞ்சம் கன்வின்ஸ் ஆனதும் கூட்டிப் போறேன்.. இப்போ..”என்று அவன் அவளை ஆசைப் பார்த்தவனாக அருகெ இழுக்க.. அவன் எதைக் கேட்கக் கூடும் என்று அச்சம் எழுந்தது அவளுக்கு.
அவன் தொட்டதும் உணர்ச்சிகள் பீறிட்டிருந்தாலும் கூட.. அவனைப் பற்றி சரிவரத் தெரியாமலேயே அனைத்தும் நடக்க வேண்டுமா என்ற எண்ணம் அவளுக்கு.
அவனுக்குமே கனவுகள் அவனுக்கு மட்டும் உரித்தானவை என்றானதும். காதலை புரிய வைக்காமல் கலவிகொள்ள பிரியம் இல்லாது போக,
“தூங்கலாமா?”என்று கேட்டான் அவன்.
“நெஜமாவா?” சந்தோஷத்தில் விழிகள் விரிய அவள் கேட்க,
“ம்..”என்று தலையாட்டியவன், முத்தம் வைக்க, அவனுக்கோ கலவி இல்லாவிடினும் கூட, அவனை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்த அந்த துயரமான கனவில் இருந்து.. இல்லை அந்த கனவு இடம்பெற்ற இடத்தில் இருந்து தன் மனைவியைத் தூக்கி வந்து ஓர் பாதுகாப்பான இடத்தில் சிறைவைத்துக் கொண்ட நிம்மதி அவனுக்குள்.
ஆம், அவனது இதயமே.. அவளுக்கான பாதுகாப்பான சிறையாக தோன்றியது அவளுக்கு.
கணவனின் இதயத்தின் துடிப்பு.. அவளுக்கு தாலாட்டுப் பாடுவது போல இருக்க, இலங்கையில் இருந்து இந்தியா வந்த களைப்பில், அவன் இதயப்பக்கத்தில் தலை வைத்ததும், தூங்கியே போனாள் யௌவனா.
***
இப்படி புரிந்துணர்வுடன் வாழ்க்கையைத் தொடக்கிய இவர்களின் காதலுக்குள்ளும், என்ன மாதிரியான புயல் வீசியதோ..சரியாக திருமணமாகி அடுத்த மாதம்.. வீட்டுக்கு பெட்டியும், கையுமாக வந்து இறங்கினாள் யௌவனா.
முற்றத்தில் காய வைத்த மிளகாயை எடுத்துக் கொண்டு வந்த வாசுகி அண்ணிக்கோ, கழுத்தில் தாலி இல்லாமல்..நெற்றியில் பொட்டு இல்லாமல்.. அழுது அழுது அதைத்துப் போன கன்னங்களும், சிவந்து வீங்கிப் போன கண்மடலுமாக வந்து இறங்கியவளைப் பார்த்தும் ஏதோ அசம்பாவிதம் என்று புரிய, சர்வநாடியும் நிசப்தித்து நின்று போயிற்று.
விரிந்த விழிகள் சாதாரண நிலையை அடைய மறுக்க, கையில் ஏந்திய காய்ந்த மிளகாய் கொண்ட சுளகுடனேயே.. உள்ளறையைப் பார்த்து குரல் கொடுத்தார் வாசுகி அண்ணி.
“என்னங்க.. என்னங்க..”என்று அவர் இரைந்து கத்த, மனைவியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்த வேல்பாண்டியும் தங்கையின் கோலம் கண்டு அதிர்ச்சியாகி நிற்க, யௌவனாவோ எரிச்சல் மண்டிய குரலில்,
“உள்ளே வான்னு கூப்பிட மாட்டியாண்ணா?.. இந்த வீட்டில எனக்கும் உரிமை இருக்கு.. இல்லை நீயே நான் போனதும்.. முழுசா உரிமை கொண்டாடலாம்னு பார்க்குறீயா..?” என்று கேட்ட தினுசில் காயம்பட்டது வேல்பாண்டியின் மனம்.
ஏனெனில் தமிழ் இப்படி பேசுபவளே அல்ல அவள்.
இருக்கும் வீட்டை விட்டு வெளியேறி.. தங்கைக்கு இடம் கொடுக்குமளவு, அவள் பாசம் வைத்திருப்பவருக்கு.. தங்கை திருமணம் முடித்துக் கொடுத்த ஒரு மாதத்திலேயே.. அபசகுனமான தோற்றத்தில் விறைத்த முகத்துடன்.. அதுவும் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இன்றி, தன்னந்தனியாக வந்து இறங்கியிருப்பது சரியாகப் படவில்லை அவருக்கு.
இருந்தாலும் வாசலில் நிற்பவளிடம் உடனேயே எதையும் கேட்டுவைக்க மனமற்று, “என்ன தமிழு? .. இது உன் வீடு ..நான் கூப்பிட்டா தான் வரணுமா என்ன?? உள்ளே வாடா கண்ணு..” என்று வாய் நிறைய கூப்பிட்டாலும்.. இதயம் நொறுங்கிப் போயிருந்தது அவருக்கு.
தன் லக்கேஜை இழுத்துக் கொண்டு போய்.. தன்னறையில் வைத்தவள், லக்கேஜில் இருக்கும் ஆடைகளை எல்லாம் எடுத்து வாட்ரோப்பில் அடுக்க,
நடுக்கூடத்தில் நின்ற வண்ணமே அறையில் நடப்பதை வேடிக்கை பார்த்த அண்ணியும், அண்ணனும், “மாப்பிள்ளை வரலையாமா? நீ மட்டும் வந்திருக்க?” என்று ஒரு சேர விசாரிக்க, துணிகளை அடுக்குவதை பட்டென்று நிறுத்தியவள், அங்கிருந்த வண்ணமே, அண்ணனைப் பார்த்து எரிச்சலில் கத்தனாள் அவள்.
“இனி அவனைப் பத்தி பேசாதீங்க.. நான் இங்கே தான் இருக்க போறேன்.. எனக்கு அவன் வேண்டாம்.. அவன் என் பின்னாடி சுத்தி சுத்தி காதலிச்சேன் சொன்னதெல்லாம் பொய்.. அவன் ஒரு பெரிய சைக்கோ.. நான் காதலிச்ச பொண்ணு நீயில்லைன்னு சொல்றான்.. தெனம் குடிச்சுட்டு வந்து அடிக்கிறான்..பார்ட்டி பார்ட்டின்னு கேர்ள்ஸோட சுத்துறான்.. கேட்டான் அப்படி தான் இருப்பேன்னு சொல்றான்.. இப்படியாப்பட்டவன் கூட நான் எப்படி வாழ முடியும்?…அதான் கிளம்பி வந்துட்டேன்..” என்று அண்ணியையும், அண்ணனையும் பதறச் செய்யுமளவுக்கு பெரும் முறைப்பாட்டுப் பத்திரம் வாசித்து முடித்தவள்,
வாழ்க்கை பறிபோனதே என்ற கவலை ஒரு துளி கூட இன்றி, வாசுகியை நோக்கி, “அண்ணி எனக்குப் பசிக்குது.. தோசை.. அதுவும் முறுகலா..” என்றவள், மீண்டும் துணியை எல்லாம் மடித்து வைக்க ஆயத்தமாக பெரியவர்கள் இருவரின் விழிகளும் இடுங்கியது.
வேல்பாண்டிக்கோ.. தங்கையின் முன்னுக்குப் பின் முரணான நடத்தையில், தங்கை தான் ஏதோ தவறாக நடந்து கொண்டிருக்கக் கூடுமோ என்று தோன்றினாலும்,
அதைக் காட்டிக் கொள்ளாமல், மனைவியிடம், ‘போய் தோசை ஊற்று’ என்று கைகளால் சைகை செய்ய, அங்கிருந்து சமையலறை நோக்கி நகர்ந்தார் வாசுகி.
அவளோ அறையிலிருந்து தொடர்ந்து தொணதொணத்தாள்.
“நான் அப்பவே சொன்னேன்.. இந்தியா வேணாம்னு.. கேட்டீங்களா? சண்டை பிடிச்சாலும்.. பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு வர முடியல.. ஃப்ளைட் பிடிச்சு வந்திறங்கி.. கொழும்பில் இருந்து.. கேப் பிடிச்சு வர வேண்டியதா இருக்கு.. இங்கே என் கஷ்டம் யாருக்கு புரியுது? ” என்று புலம்பிக் கொண்டே, உடைகளை வெளியே எடுத்து வைத்தவள், அண்ணன் தன்னிடம் மேலதிக விளக்கம்
கேட்க நாடி “அம்மாடி..” என்று அழைத்த வண்ணம் உள்ளே அறைக்குள் வருவது புரிய, மேற்கொண்டு எதையும் பேச பிடிக்காதது போல, டவலுடனும், மாற்றுடையுடனும் குளியலறைக்குள் நுழைந்தவள், பட்டென்று குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டாள் யௌவனா.
இந்த ஒரு மாதமாக இந்தியாவிலிருந்து காணொளி அழைப்பு மேற்கொண்ட தருணம் எல்லாம், ‘சந்தோஷமாக இருக்கிறேன்’ என்றல்லவா சொன்னாள் தங்கை?
அது போக.. சத்யாதித்தன் அடித்தான் என்று சொன்னாலும்.. அவள் உடலில் அடிபட்ட காயங்கள் ஏதும் இல்லையே? இத்தனை முறைப்பாட்டை அவள் வாசித்த போது விழிகளில் எந்தவிதமான உணர்ச்சி பூர்வமான வேதனையும் இல்லை.. மாறாக ஏதோ ஒரு கோபம் அவ்வளவே!!
தங்கை பொய் சொல்கிறாளா? உண்மை சொல்கிறாளா? என்று குழம்பிப் போனவருக்கு, சத்யனுக்கு அழைப்பெடுக்கலாமா என்று கூட தோன்றியது.
வேண்டாம். முதலில் தங்கை குளித்து விட்டு வரட்டும். சாவதனமாக நடந்ததைக் கேட்ட பின்பு முடிவுக்கு வரலாம் என்றவருக்கு, தன் தோட்டக்காணிக்கு செல்லவும் மனம் வரவில்லை.
மாடத்தில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டவர், யோசனையுடன்.. அவளது வருகைக்காக ஒரு அரை மணித்தியாலம் போல காத்திருக்கக் கூடும்.
அந்த கணம்.. யாரைப்பற்றி இத்தனை நேரம் எண்ணிக் கொண்டிருந்தாரோ.. அவனின் குரலே தன்னெதிரே கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார் வேல்பாண்டி.
ஆம், அவர் நினைத்தது போல அது அவரது அன்பு மச்சான் சத்யாதித்தனே தான்.
இரண்டு நாள் தாடியுடன், ரொம்பவும் சோர்ந்த முகத்துடன், எல்லாவற்றுக்கும் மேலாக பதைபதைப்புடன், அவரிடம், “மச்சான்.. யௌவனா இங்கே பத்திரமா வந்து சேர்ந்தாளா?”என்று பதற்றத்துடன் கேட்க, சத்யாதித்தனின் தோற்றமே சொல்லியது.. தங்கையின் பின்னால் அவன் பதறியடித்துக் கொண்டு வந்திருக்கும் பாங்கு.
சட்டென ஊஞ்சலில் இருந்து எழுந்தவர், “ஆமா மாப்ள.. இப்போ தான் குளிக்க போனா” என்று சொல்லத் தான், இதயத்தில் கைவைத்து ஆசுவாசப் பெருமூச்சு எறிந்து கொண்டான் சத்யன். .
ஆயிரம் தான் பூசல் என்றாலும் முன்னாடி அவளை அனுப்பி வைத்து விட்டு, பின்னாடியே வந்து சேர்ந்தவனுக்கு அவள் வந்து சேர்ந்து விட்டாள் என்றதும் தான் நிம்மதி.
“ஒண்ணும் இல்லை மச்சான்.. சின்ன சண்டை.. அவளால என்னை விட்டு இருக்க முடியாது மச்சான்… நான் எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிப் போயிருவேன்..” என்று அத்தனை வேதனையிலும் அவன் சிரிக்க, வேல்பாண்டிக்குத் தான் சத்யனின் நிலையை எண்ணி பாவமாகிப் போனது.
இவனையா தங்கை “குடிக்கிறான்;அடிக்கிறான்;பெண்களுடன் ஊர் சுற்றுகிறான்;சைக்கோ?”என்றெல்லாம் சொன்னாள்??
அப்படி செய்பவன், தங்கையைத் தேடி இத்தனை பதற்றமாக வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?
தங்கை தான் ஏதோ திருகுத்தாளம் செய்வது போல இருந்தது வேல்பாண்டிக்கு.
ஆனால் அங்கே… பாழும் நிலவறைக்குள்ளேயே புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல உறைந்து கிடந்த நந்தினிக்கோ, முகத்தில் ஒரே வெற்றிக் களிப்புச் சிரிப்பு.
இந்த ஒரு மாதகாலமாக.. சத்யனைத் திரும்ப வரவைக்க, என்ன என்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்திருப்பாள் அவள்?
அந்த அத்தனை சூட்சுமங்களும் வெற்றி பெற்றதில்.. அந்த நிலவறையே அதிர, “ஹஹஹா ஹஹஹா.. பெண் பித்தில் வ்வீஈஈழ்ந்தாஆஆன் இராஜசிங்கன்..” என்றவளின் கைகளிலே.. இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் மனிதத்தலை அடைக்கலமாகியிருந்தது.
பெரும்பாலும் அந்தக் கற்திடலின் மீது மேயவரும் ஆடு, மாடுகள் கூட தன் தனிமைக்கு தீது என்று கொண்டு பலியெடுக்கும் நந்தினி.. ஆடு மேய்த்தபடி அவ்விடம் வந்த ஆட்டிடையனையா விட்டு வைப்பாள்??
தன் தனிமைக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் பல பேரை அவள் காவு வாங்கி.. அந்த இரத்தத்தை காளிக்கு பலி கொடுத்திருக்கிறாள் இந்தப் பொல்லாத நந்தினி.
இன்றும் தன் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒரு மனித உயிரைக் காவு வாங்கி, அந்த ஆட்டிடையனின் தலையை.. காளியின் பாதங்களில் வைக்க, காளியின் பாதமெங்கும் இரத்தத்தால் ஆராதனை செய்யப்பட்டது.
தன் விழிகளை விரித்து.. கோபாவேசமும், பழிவெறியும், சத்யன் திரும்பி வந்ததால் சந்தோஷமும் மேலிட, தன் அன்னையைப் பார்த்து, வெடிச்சிரிப்பினை உதிர்த்துக் கொண்டே,
“ஹஹஹா… காளீஈஈ.. என் அன்னைய்யேஏஏ.. உன் சக்தீஈஈய்யே.. சக்தீஈ!! .. உன் மகிமைய்யேஏ.. மகிமை…!! நான் கேட்டதை கொடுத்த என் தாய்க்கு.. இந்த மதலையின் சின்ன காணிக்கை!! ” என்று அவள் சொல்ல, அவளது முகம்.. காளியைப் போலவே அகோரமாக மாறியது.
இவள் வந்தால்…. சத்யனும் பின்னாடி வருவான் என்று கணித்து, யௌவனாவை தம்பதிவனம் வரவைக்க, அடுத்தடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டு இந்த ஒரு மாதமாக நகர்த்தியவளுக்கு கிடைத்த வெற்றியை.. அமைதியாகக் கொண்டாடுவாளா நந்தினி??
அதனால் தானே இந்த அதிர வைக்கும் கொண்டாட்டம் எல்லாம்??.
அந்த வெற்றி அவளுக்கு மாபெரும் சந்தோஷத்தைக் கொடுக்க, இடிஇடியென வாய் விட்டு நகைத்தவள்,
மாயத்திரையில் விரிந்த சத்யனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, “இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது… இந்த நந்தினியின் முழு பலத்தை இந்த உலகம் அறியப் போகிறது இராஜசிங்காஆஆஆ… எனக்கு வேண்டியது உன் இரத்தம்.. உன் இரத்தத்தை எடுத்து என் தாய்க்கு காணிக்கையாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை… என் பழிவெறி தீரப் போகும் ந்நாஆஆள்.. வ்வெகு அருகில்!!” என்று பழிவெறி முத்திப் போன சந்தோஷத்தில் நகைத்தவள்,
சத்யாதித்தன் வந்தால்.. அவன் கூடவே காவல் தெய்வமாக வரும் தேவதாவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தாள் நந்தினி.
தேவதா வருவான்.
ஏகாந்த இரவில் வா தேவதா
[11]
குளியலறையில் இருந்து.. சாதாரண டீஷேர்ட் மற்றும் ஸ்கேர்ட்டுக்கு மாறியவளாக, இன்னும் சரிவரத் துடைக்காத ஈரம் சொட்ட சொட்ட நிற்கும் மயிர்க்கற்றைகளுடன், புதியதாக பூத்த மல்லிகைப் பூ எப்படி மணம் கமழுமோ?
அது போன்ற ஒரு சுகந்தத்தை அந்த வீடெங்கும் பிரத்தியேகமாக பரப்பிக் கொண்டே வந்து நின்ற யௌவனாவுக்கு, கணவனை தன் வீட்டு ஹாலில் காணவும், சகலமும் பற்றி எரிந்தது.
அதிலும் அண்ணன் வேறு, அவனுக்கு சோபாவில் இருக்கை அளித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், இன்னும் கொஞ்சம் பற்றி எரிய, தன் கணவனை விறுவிறுவென வேக எட்டுக்கள் எடுத்து வைத்து நாடிப் போனவள்,
திக்கித் திணறிய குரலில், “ந்நீ…. நீ எப்படி வந்த? ம்முதல்ல இங்கேயிருந்து வ்வெளியே ப்போ..”என்று ஏகத்துக்கும் கத்தத் தொடங்க, அதைக் கேட்டு கடுப்பானது என்னமோ வேல்பாண்டி தான்.
சத்யாதித்தனோ.. குளிரூட்டியில் வைத்த ஆப்பிள் எப்படி ஃப்ரஷ்ஷாக இருக்குமோ? அது போன்ற ஒரு புத்துணர்ச்சியுடன் வந்து நிற்கும் மனைவியை விழிகளை எடுக்க முடியாமல் பார்த்த வண்ணம் நின்றிருந்தான்.
எத்தனையோ பேரழகுப் பெண்களை அவன் கடந்து வந்திருந்தும், இந்த யௌவனப் பெண்ணில் தான் சுயம் மறந்து சொக்கி நிற்கின்றான் அவனும்.
அதிலும் திருமணமான இந்த ஒரு மாதத்தில்.. அவள் அன்பில் இரு வாரங்கள் வரையுமே நனையக் கிடைத்தவன், ருசி கண்ட பூனை அல்லவா?
ஆயிரம் ஊடல்களும், உட்பூசல்களும், அடுத்து வந்த இரு வாரமாக இருந்த போதிலும், “அவள் வேண்டும்.. அவள் மட்டும் தான் வேண்டும்”என்று முரண்டுபிடித்தது மனம்.
மெல்ல இருக்கையில் இருந்தும் எழுந்தவன், தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகளை இட்ட வண்ணம், அந்த இக்கட்டான நிலைமையிலும்.. அவளது செவ்வதரங்களையே பார்த்த வண்ணமே நின்றிருந்தான் சத்யாதித்தன்.
நந்தினி சொன்னது போல, ‘மனைவி மேல் பித்தாகித் தான் திரிகிறான் இந்த இராஜசிங்கன்”.
அண்ணன் வேல்பாண்டிக்குத் தான் தங்கை மாப்பிள்ளையை தரக்குறைவாக பேசியது ஒரு துளியளவும் பிடிக்காமல் போக, தங்கையை அதட்டும் குரலில்,
“தமிழு.. மாப்பிள்ளை கிட்ட ஒழுங்கா பேச கத்துக்க..”என்று சற்றே எகிறவும் செய்ய, அதுவெல்லாம் யௌவனாவின் கவனத்தை இம்மியளவேனும் பதியவேயில்லை.
மாறாக அண்ணனிடமும் ‘காச்மூச்’ என்று காட்டுக்கத்தல் கத்த ஆயத்தமானாள் யௌவனா.
“அண்ணா.. எனக்கு இவ்வன் ம்முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை.. இவளை இங்கேயிருந்து போக சொல்லுங்கண்ணா..”என்று அவள் கத்திய தினுசில், சத்யாதித்தனின் புருவங்கள் மெல்ல இடுங்கியது.
அவனும், அவளும் மட்டும் அறியும் இரகசியப் பொழுதுகளில், “எனக்காக கடல் கடந்து.. நாடு கடந்து வந்த இந்த ராஜாமுகம் தான்.. இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிக்கும். உன்னை மட்டும் தான் பிடிக்கும்”என்று இனிய மொழிகள் சொன்ன, அவனது காதல் கிழத்தி தற்போது அவனைப் பற்றியே வேறு சொல்கிறாள்!!
வலித்தது மனம். இருந்தாலும் பேன்ட் பாக்கெட்டில் இட்ட கைகளை எடுக்காமல்.. அவளையே தான் உணர்ச்சி சுத்தமாக துடைக்கப்பட்ட பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன்.
அவன் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தான் எங்கேயும் எப்போதும் ராஜமரியாதை கொடுக்கப்படுகிறதே!!
அன்றும் அப்படித் தான். பஞ்சாயத்தின் போது ஒரு வார்த்தை பேசினானா?
சின்னக் காகிதம் மூலம்.. பஞ்சாயத்தை விசாரிக்க வேண்டிய பஞ்சாயத்துத் தலைவர்களையே.. அவனுக்காக பரிந்து பேசும்படி வைத்தவனல்லவா அவன்.
அதே போலத் தான் இன்றும். அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லையாயினும் கூட, அவனுக்காக இம்முறை பேசியது என்னமோ வேல்பாண்டியே தான்.
சத்யாதித்தனின் தோரணையும், தீட்சண்யமான கண்களும், அவனது ஆளுமை நிறைந்த குரலும், எவரையும் அவன் பால் சாய்க்கக் கூடியதாகவே இருந்தது.
அது சத்திரியர்களுக்கே உரிய கைவந்த கலையன்றோ!!
அந்த நேரம் அடுக்களைக்குள்.. இவளுக்காக, ‘முறுமுறு தோசை’ சுட்டுக் கொண்டிருந்த வாசுகி அண்ணியும், நடுக்கூடத்துக்கு ஓடி வந்து, அங்கே இன்னோர் அதிசயமாக சத்யாதித்தனும் வந்திருப்பது அறிந்து, அதிர்ந்து தான் நின்றார்.
கூடவே அவளுடைய கணவன், தன் தங்கையை நோக்கி, “தமிழு.. உங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்ன பிரச்சினைன்னு புரியல.. மாப்ள அடிச்சு புடிச்சுட்டு ஓடி வந்திர்க்கறத பார்த்தா நீ சொன்ன எதுவுமே நடந்திருக்குற மாதிரியும் எனக்கு தோணல..”என்று சமாதானப்படுத்தும் முகமாக சொல்ல,
சத்யாதித்தனின் புருவங்கள் இரண்டும் இடுங்கியது.
அப்படியானால் இங்கு வந்ததும் அவனது மனைவி.. அவனைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வைத்திருக்கிறாளா என்ன?
‘மச்சான் வேல்பாண்டியிடம், அப்படி அவள் எதை எதையெல்லாம் சொன்னாள்?’ என்று பின்னாடி விஷயத்தைக் கேட்கணும்’ என்று எண்ணிக் கொண்டவன், அப்போதும் வாளாதிருந்தான்.
யௌவனாவோ, தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டே இருக்கும் சத்யாதித்தனின் பார்வை தன் மேல் படிவது புரிந்தாலும்,
அவன் முகத்தைப் பார்க்கக் கூட விருப்பம் இல்லாதவள் போலவே, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிய வண்ணம் விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
ஆனால் சத்யாதித்தனுக்குத் தான் இந்த ராங்கிக் காரியிடம்.. என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.
வேறுயாருமாக இருந்தால், ‘என்னைப் புரிந்து கொள்ளாதவர்கள் என் வாழ்க்கைக்கே வேண்டாம்.. போய்த்தொலை’ என்று விட்டுத் தொலைக்கலாம்.
ஆனால் இங்கே விஷயமே வேறாயிற்றே? யார் தன்னை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தானோ?
யாரிடம் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அடமானம் வைத்திருந்தானோ?
யாரைத் தன் உயிராக எண்ணியிருந்தானோ? அவளே புரிந்து கொள்ளாமல் நடக்கும் போது அவனால் ‘போய்த்தொலை’ என்று விட்டு விட முடியவில்லை.
அவள் இவனது உயிர் ஆயிற்றே? அப்படி விட முடியாமல் தானே இவ்வளவு தூரம்.. அவளுக்காக இறங்கி வந்திருக்கிறான்?
அவனோ..யௌவனா தன் உயிரைக் கேட்டாலும் தருவதற்கு சித்தமாக இருக்க, அவளோ விடாப்பிடியாக, “இவன் கூட என்னால் வ்வாழ ம்முடியாதூஊஊ!! ”என்று முகத்தில் அடித்தாற் போன்றே சொல்லியும் விட்டாள்.
சத்யாதித்தன் அப்போதும் எந்த உணர்ச்சிகளைக் காட்டாது நின்றிருந்தான்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு.. உணர்ச்சிகளை காட்டும் ஆண்களை விட.. எந்த உணர்ச்சிகளையும் காட்டாது அமைதியாக இருக்கும் ஆண்களும், எரிமலைகளும் ஒன்று.
எந்த நேரம் பீறிட்டெழுந்து வெடிக்கும் ;அந்த பிரளயத்தின் வீரியம் எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது.
அது ஆபத்து நிகழ்ந்த பின் தான் கணிக்கக் கூடியதாக இருக்கும்.
அப்படி சத்யாதித்தனின் எரிமலைச்சீற்றமும் ஒரு நேரம் வெடிக்குமேயானால், அதை யௌவனாவால் தாங்கிக் கொள்ள முடியுமா?
வேல்பாண்டிக்கோ, ‘கணவனின் பெயர் சொல்வதே.. அது கணவனுக்கு செய்யும் அவமரியாதை’ என்று கருதும், தமிழர் கலாசாரத்தில் பிறந்த பெண்.. அதிலும் தமையன் முன்னாடியே கணவனை ‘அவன்.. இவன்’என்று அழைப்பது சுத்தமாக பிடிக்காமல் போனது அவருக்கு.
கைமுஷ்டி மடக்கி, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் நின்றிருந்தாலும் கூட, அவர் குரலில் துளிர்விட்ட கோபத்தை அவரால் என்ன முயன்றும் கட்டுப்படுத்தவே இயலாமல் போயிற்று.
பற்களைக் கடித்துக் கொண்டு, சிவந்த விழிகளுடன் யௌவனாவைப் பார்த்தவர், ஒவ்வொரு வார்த்தைக்குமாக அழுத்தம் கொடுத்து, “த்தமிழ்.. என் ம்முன்னாடியே அவ்வரை ‘இவன் அவன்’னு ம்மரியாதை இல்லாமல் பேசுற?.. ம்மரியாதையா ப்பேசு. அவ்வர் உன்னைத் த்தொட்டுத் த்தாலிக் கட்டினப் புருஷன்!!..”என்று சொல்ல, சினத்துடன் அண்ணனை ஏறிட்டவளுக்கு, அண்ணனின் விழிகளில் இருந்த சினம்.. அவளது சினத்தை ஆறப்போடவே செய்தது.
வேல்பாண்டி அநேகமாக கோபப்படுவது அரிது. அதேசமயம் அப்படி அரிதாகக் கோபம் கொள்ளும் போது கூட அவரது கோபத்தின் உக்கிரமும் தீவிரமாக இருக்கும் என்பதை வளரும் பருவத்தில் இருந்தே அறிந்து வைத்தவளுக்கு,
அண்ணனின் குரலில் இருந்த முரட்டுத்தனம் அவளைக் கட்டிப்போடவே செய்தது.
ஒரு பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டு சத்யனைப் பார்த்தவள், “இவன்… ” என்று மீண்டும் அவமரியாதையாகவே பேசத் தொடங்க,
அண்ணன் முறைப்பதைக் காணவும், தன் சொற்களில் வேண்டா வெறுப்பான ஒரு அழுத்தத்தைக் கூட்டியவள், “இவ்.. வர் கூட என்னால வாழ முடியாதுண்ணா .. பிஸினஸ் டைக்கூன்னு தான் ப்பேரு.. ஆனா சரியான.. பொம்ப்ப..”என்று அவனை திட்டவிட நாடியவள்,
அண்ணன் முன் திட்ட முடியாமல் சற்றே நிதானித்தாள் அவள்.
சத்யாதித்தனுக்கு மனைவி தன்னை ‘பொம்பளைப் பொறுக்கி’ என்று சாட வந்தது நன்றாகவே புரிந்தது. அதை நாகரிகம் கருதி அண்ணன், அண்ணி முன்னிலையில் சொல்லாமல் விட்டதுவும் புரிந்தது.
இருந்தாலும் அப்போதும் அமைதியாக நின்றிருந்தான் சத்யன்.
முதன் முறையாக யௌவனா ‘பொம்பளைப் பொறுக்கி’என்று சண்டை போட்ட போது, மூக்குக்கு மேலே துளிர்த்த ஆத்திரம் தற்போது அவனிடம் இல்லை தான்.
இருப்பினும் மனைவி தன்னை நம்பாமல் மீண்டும் மீண்டும் ‘பொம்பளைப் பொறுக்கி’ என்று சென்னை வீட்டில் வைத்து கூச்சலிட்டுக் கொண்டே போக,
சினம் தலைக்கேறி.. மனைவியை கட்டுக்குள் கொண்டு வரும் வழிவகை அறியாது, அவளை அறைய அந்தரத்தில் கை நீட்டியும் விட்டான் ஓர் நாள்.
கண்களை ஏகத்துக்கும் அகல விரித்துக் கொண்டு, தோள்புஜங்கள் சீற்றத்தால் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டு “என்னடீஈஈ சொன்ன?”என்றவனாக அறையப் போனவனின் குறுக்கே தாய் வந்திராவிட்டால்.. அன்று அநேக அசம்பாவிதங்கள் நடந்திருக்கக் கூடும்.
சும்மாவே சத்யனை ‘பொம்பளைப் பொறுக்கி’ என்பவள், விவாகரத்துக்கே அப்ளை செய்துவிட்டே வந்திருந்தாலும் வந்திருப்பாள்.
ஆனால் அதற்கு விடாமல், குறுக்கே வந்த வசுந்தராதேவியம்மாள்.. நீட்டிய அவன் கையைத் தடுத்து.. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையான சத்யனை, “சத்யா என்ன தைரியம் இருந்தால் என் மருமகள் மேல கை வைக்க துணிவ?” என்று சினந்தவராக.. அவன் கன்னத்தில் அறைந்ததுவும் நிகழ்ந்தது எல்லாம் கண் முன்னே நிழலாடியது.
எவ்வளவு இனிப்பும், உவப்பும் நிறைந்ததாகத் தொடங்கிய அவனுடைய மணவாழ்க்கை.. இருவாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்று எந்த கனவும் அவனிடம் சொல்லவில்லை.
ஆறரையடி உயர ஆண்மகனை.. சொற்களாலும், பார்வையினாலும் மனதளவில்.. கிழித்துக் கூறு போட்டுக் கொண்டிருந்தாள் அந்த யௌவனப்பெண்.
இப்போதும் கூட ஆத்திரம் எல்லை மீறினாலும் கூட.. தன்னவள் மேல் அவன் வைத்திருக்கும் காதலுக்காக, தன் வரட்டுக் கௌரவத்தை தூக்கியெறிந்து விட்டு.. அவள் பின்னாலேயே வந்திருப்பவன் எப்பேர்ப்பட்ட ஆண்மகன் என்று யோசிக்க மறந்து போனாள் யௌவனா.
அண்ணனிடம் தொடர்ந்து குற்றப்பத்திரிகை வாசிக்க நாடியவள், “நீங்களே கேட்டுப்பாருங்களேன்.. ஒரு ஆணுக்கு எப்பவுமே ஆண் சிநேகிதர்கள் தானே அதிகமாக இருப்பாங்க.. ஆனால்.. இவருக்கு?? பாய்ஃப்ரண்ட்ஸ் விட கேர்ள்ப்ர்ண்ட்ஸ் தான் ஜாஸ்தி… எங்களோட மேரேஜ் அனௌன்ஸ்மண்ட் பார்ட்டிக்கு கூட வந்தது.. முக்கால்வாசி பேர் அவரோட கேர்ள் ஃப்ரண்ட்ஸாம்… கேட்டா பாய்ஃப்ரண்ட்ஸ் அபிஷியலாம்.. கேர்ள்ப்ர்ண்ட்ஸ் பர்சனலாம்..” என்று அவள் நயனங்களை விரித்து விரித்து பேசியதும் கூட அவனின் மனம் கொய்தது.
கணவன் இரசிப்பதை அறியாதவளோ, தொடர்ந்து, “அவளுங்க கூட இவருக்கு என்ன பர்சனல் வேண்டிக் கிடக்கு?..” என்று அவனைச் சுட்டிக் காட்டி காட்டி இவள் எகிற,
கோபத்தில் செர்ரிப்பழம் போல சிவந்து போன மனைவியின் மூக்குநுனியையே பார்த்திருந்தான் சத்யாதித்தன்.
அவனது அழகுப் பொண்டாட்டிக்கு, அவன் கேலியாக அன்று ‘மேரேஜ் அனௌன்ஸ்மண்ட் பார்ட்டியில்’ வைத்து அவளது பொஸஸிவ் உணர்வை தூண்டி விட வேண்டும் என்பதற்காக உரைத்தது, இத்தனை பெரிய சந்தேகத்தை அவளிடம் கிளப்பி விடும் என்றறிந்திருந்தால்.. அவன் வாயே திறந்திருக்க மாட்டானே?
காலம் கடந்து வருந்தியவனுக்கு, அவளது கோபத்தின் பின்னாலுள்ள உரிமை புரிந்தது.
‘இவன் எனக்கு!! .. இடையில் யார் வந்தாலும் என் மனம் தாங்காது’ என்பது தான் இவள் கோபத்தின் சாராம்சமே!!
மனைவியின் கோபத்தைக் கண்டு பதில் கோபம் கொள்ளாமல் அமைதி காத்தவனுக்கு, அவளது அன்பு புரிகிறது.
இருந்தாலும் அவன் சொல்ல வருவதைக் கூட ஏற்காமல், கண்ணாபின்னாவென்று கத்திக் கொண்டு, ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று பிடிவாதம் பிடிப்பது தான் பிடிக்கவில்லை அவனுக்கு.
“எனக்கு இவ்வர் வ்வேண்டாம்.. அவ்வளவு தான்.”-இறுதி முடிவு போல அவள் சொல்லி விட, இத்தனை நேரம் அமைதி காத்தவன், அப்போது தான் வாய் திறந்தான்.
‘அவன் வேண்டாம்’ என்று அவள் திட்டவட்டமாக கூறியது அவனுள் கோபத்தைக் கிளப்பி விட்டிருந்தது.
தன் அழுத்தமான சீற்றக்குரலில், “ய்யௌவனா என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் ப்பேசுறீயா? என்னை வ்விட்டுட்டு உன்னால இருந்திட ம்முடியுமா?”என்று அவன் கேட்க, அந்தக் குரல் அவளுள் என்ன மாயம் பண்ணியதோ?
ஏதோ ஓர் காந்த சக்தி போன்ற அந்தக்குரலில். ‘அவளால் இருந்திட முடியுமா என்ன? முடியாதல்லவா’ என்று மனம் சொல்ல கண்கள் கலங்க.. இதயத்தில் தவறு செய்கிறோமோ என்றொரு திகலுணர்வு!!
ஆனால் அடுத்த கணம் அவளுடைய மனதில் ஒரு இறுக்கம் வந்து பரவ, ‘என்னால் இருக்க முடியும்’ என்பது போல முகத்தை கல்லாக்கிக் கொண்டு நின்றாள் அவள்.
சத்யன்.. தன் உணர்ச்சிகள் எத்தகையது என்பதை வெளியே காட்டாது, அவளையே தான் தன் புருவங்கள் இடுங்க, அழுந்த மூடிய அதரங்களுடன் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தான்.
யௌவனா மீது மாப்பிள்ளை வைத்திருக்கும் நேசம்.. அவரது ஒற்றை கேள்வியில் புரிய, தங்கையின் சினத்தை முதலில் ஆசுவாசப்படுத்த நாடியவர், “தமிழு… கல்யாணம்ன்றது ஆயிரம் காலத்துப் பயிர்மா.. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க கூடாது.. அப்பறம் பின்னாடி நீ தான் விசனப்பட்டு நிற்க வேண்டி வரும்” என்று அவர் மெல்ல எடுத்துக் கூறத் தொடங்க, இந்த வீம்புக்காரி கேட்டாளா?
‘உன் பேச்சையெல்லாம் என்னால் கேட்க முடியாது. நான் எடுத்த முடிவே இறுதியானது’ என்பது போல, “இவரை இங்கேயிருந்து போக சொல்லுண்ணா..”என்று பிடித்த பிடியிலேயே நிற்க, சத்யனின் இதுவரை நேரம் இருந்த பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறக்கத் தொடங்கியது.
இரண்டு அடி போட்டாவது.. அவளை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது போல வெறியே எழுந்தது அவனுக்குள்.
அவனது கோபத்தின் உக்கிரத்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அவளுக்கு கொடுக்க விடாமல் செய்தது என்னவோ வேல்பாண்டியே தான்.
இந்த பூசலில்… யாருக்காகவும் காத்திருக்காத சூரியன்.. அந்திவானை விட்டும் மறையத் தொடங்கி, இருள் பிறந்து கொண்டிருந்த முன்னந்தி இரவில் முழுமதி நிலவும் வந்து கொண்டிருக்கலானது.
இப்படியே விட்டால் இருவரின் வாக்குவாதங்களும் ஓயப்போவதுமில்லை;கோபம் கண்ணை மறைக்க இருக்கும் தங்கையும் மாப்பிள்ளையுடன் இணங்கப் போவதுமில்லை என்று புரிய வாக்குவாதங்களை சற்றே ஒத்திவைக்க நாடினார் வேல்பாண்டி.
கொஞ்சம் விஷயத்தை ஆறப்போட்டாலாவது, தங்கையின் சினம் ஆறும் என்ற எண்ணம் அவருக்கு.
அதனால் இதுவரை இருந்த சீற்றம் தணிந்த குரலில், “இப்போ தான் பொழுது சாஞ்சிருச்சில்ல? .. எல்லாம் நாளைக்கு காலையில பேசிக்கலாம்… அதுவரை மாப்ள உன்கூட தங்கிக்கட்டும்..”என்று கூறி விட, மின்னல் வேகத்தில் அவளிடமிருந்து பட்டென வந்தது பதில்.
“அண்ணா… என்னால ம்முடியாது..” என்று அவள் பிடித்த பிடியில் நிற்க, சத்யனின் இடுங்கிய புருவங்கள் இன்னும் கொஞ்சம் இடுங்கலானது.
வேலைப்பளு மிகுந்த நாட்களில்.. நேரம் சென்று அவன் வீட்டுக்கு வரும் போதினிலும் கூட, அவனது மார்புத் தலையணையின்றி உறக்கம் வராமல் விழித்துக் கிடப்பவள், “இன்று அவனை அருகில் சேர்க்கவே முடியாது”என்கின்றாள்.
இந்த இரண்டு வாரம் அவர்கள் பயின்ற காதலுக்கும், அன்புக்கும் தான் என்னானது? அவையிரண்டும் ஒரு சேர குருடானதோ?
ஆனால் வேல்பாண்டியோ.. தங்கை எதை எப்படி சொன்னால் வழிக்கு வருவாள் என்பதை நன்றாகவே அறிந்தே வைத்திருந்தார் போலும்.
முகத்தை கடும் ரௌத்திரமாக வைத்துக் கொண்டவர், இறுக்கமான குரலில், “அப்படின்னா நானும், அண்ணியும் வ்வீட்டை வ்விட்டு ப்போறோம்.. நீ தான் இந்த வ்வீட்டுக்குள் நுழைஞ்சதும் உரிமை கேட்டேல்ல? நீயே வ்வைச்சுக்க.. ஆனால் இனி உனக்கும், எங்களுக்கும் எந்த உறவும் இல்லை..” என்று யௌவனா மனதில் பூகம்பத்தை விதைக்கும் வண்ணம் சொன்னவர்,
தன் பத்தினியை நோக்கி, உறுதியான குரலில், “வாசுகி.. வா போலாம்” என்று அழைக்க, கணவனையே கண் கண்ட தெய்வமாக வாழும் பெண்ணவளும், கணவனின் பின்னால் செல்ல எத்தனிக்க,
அவனை அறைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது என்று யௌவனாவாலும் தான் எப்படி வீண்பிடிவாதம் பிடிக்க முடியும்?
“அண்ணா.. அண்ணா” என்று கத்தக் கத்த கேளாமல் வீட்டு வாசல் வரை சென்ற அண்ணனை தடுத்து நிறுத்துவது எப்படி என்றறியாமல் தவித்துப் போனவள்,
அவர் முன்னாடி ஓடி வந்து ஒரு அணை போல நின்று, வேண்டா வெறுப்பு நிறைந்த குரலில், கண்ணீர் மல்க, “இப்போ என்ன? .. அவரை என் ரூம்ல தங்க வைச்சிக்கணும்.. அம்புட்டு தானே? .. இருக்கட்டும்.. ஆனால் திரும்ப ஒருவாட்டி.. வீட்டை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாதீங்க.. ப்ளீஸ்”என்று சொன்னவள், அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
சத்யாதித்தனோ இத்தனை நேரம் நடந்தது அனைத்தையும் வேடிக்கை பார்த்தவனுக்கு, தங்கையை வழிக்கு கொண்டு வர, வேல்பாண்டி செய்தது ஒரு தியாகம் போலவே இருந்தது அவனுக்கு.
‘எப்படி நன்றி சொல்வது?’ என்று அறியாமல் சத்யன் மௌனமாக நிற்க, சத்யாதித்தனின் கரங்களைப் பற்றிக் கொண்ட வேல்பாண்டியும், என்ன தான் தங்கையை அதட்டிப் பேசினாலும் தங்கையை.. சத்யனிடம் விட்டுக் கொடுக்காமல், “மாப்ள அவன் சின்னப்பொண்ணு..” என்று மெல்ல அவர் இழுக்க, அவரை மேற்கொண்டு பேச விடாமல்,
“இல்லை நீங்க எதுவும் சொல்ல வேண்டியதில்லை.. என் மேலிருக்குற காதல் அவளை மாத்தும்.. எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று திடமாக மொழிந்தவனைக் காண, வேல்பாண்டியின் உள்ளம் கனிந்தது.
சிறிது நேரம் வேல்பாண்டியுடன் அளவளாவி விட்டு, தன்னவளின் அறைக்குள் அவன் நுழைந்த போது, மஞ்சத்தில் அமர்ந்த வண்ணம்.. அதே மாறாத கோப முகத்துடன் நின்றிருந்தாள் யௌவனா.
அவன் உள்ளே வரும் அரவம் கேட்டு.. இன்னும் கொஞ்சம் சினம் அதிகமாகி அவள் எழுந்திருக்க,
அதே இடுங்கிய புருவங்கள் மாறாத தோரணையுடன் அருகில் வந்தவனின் இதழ்கள் ஏனோ ஒரு குறும்புநகையை ஒழித்து வைப்பது போல தோன்றியது அவளுக்கு.
அந்த கண்ணுக்கு புலப்படாத மாய சிரிப்பு, ‘உன்னை வென்று விட்டேன் பார்த்தாயா?’ என்று மார்தட்டுவது போலிருக்க, அவளுக்குள் அதுவும் ஒரு ஆத்திரத்தைக் கிளப்பலானது.
அவனோ தன் காதல் மனைவியை நோக்கி ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து மெல்ல மெல்ல அவளை நாடி வர, அவளோ, “என்கிட்ட வராதே சத்யா.. அங்கேயே நில்லு.. டோன்ட் ஈவன் ட்ரை டு க்ராஸ் யோர் லிமிட்ஸ்”என்று கத்தியவளின் குரலைக் கேட்காது அவன் முன்னேறிக் கொண்டே போனான்.
அரிமாக் கூட்டங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கும் ஓர் அரிமாவொன்று.. தன் இரையை எப்படி விடாது தீவிரத்துடன் பார்க்குமோ?
அது போல ஓர் வேட்டைப் பார்வை அவனுடையது. அந்தப் பார்வை தன் விழிகளை விட்டும், வேறெங்கும் இம்மியளவேனும் அசையாததைக் கண்டவள், தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே,
மெல்ல மெல்ல எழுந்து பின்னாடி சென்றாள்.
அதற்குப் பின்னாடி செல்ல இடமற்று.. சுவரோடு உடல் மோதி அவள் நிற்க, அவளது பஞ்சன்ன தேகத்தோடு தன்னுடல் அழுந்த மோதி நிற்கும் அளவுக்கு, காற்று கூட புக மறுக்கும் இடைவெளியளவில் அவளை நாடிப் போனான் அவளது கணவன்.
சத்யனின் உணர்ச்சிகள் காட்டாத மோனமுகம், யௌவனாவை உள்ளுக்குள், ‘அபாய மணியை’ அலற விட்டது போல ஓர் இதயப்படபடப்பைக் கொடுக்க, அவனிலிருந்தும் விலக முற்பட்டவளுக்கு, ஏனோ கத்தி அலற நாவெழாமல் போயிற்று.
அவனோ, அவள் விலகி செல்ல இடமளிக்காமல், கைகளை அணை போல உபயோகித்து அவளை தடுத்து நிறுத்தியவன், அவளது போதையேற்றும் இதழ்களைப் பார்த்தவண்ணம்,
ஹஸ்கி குரலில், “எப்படி எப்படி? நான் தெனம் உன்ன குடிச்சிட்டு வந்து அடிக்கிறேனா? .. சைக்கோவா..? நான் காதலிச்ச பொண்ணு நீயில்லைன்னு சொன்னேனா?”என்று அவள் அவளது அண்ணனிடம் வாசித்த “பொய்” முறைப்பாடுகளை எல்லாம் அவளிடமே ஒன்று விடாமல் கேட்க,
அவன் மேல் இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டிய மனம் அல்லவா? திருதிருவென விழித்தது அவள் கண்கள்.
இதுவரை ஹாலில், ‘தமையன் இருக்கிறான்.. இவனால் என்ன செய்து விட முடியும்’ என்ற தைரியத்தில் ‘காச்மூச்’ என்று கத்தியவளுக்கு, கணவன் அருகாமையில் வந்து நிற்கவும்.. நாக்கு மேல் அண்ணத்தில் போய் ஒட்டிக் கொண்டது.
வாய் திறப்பேனா? என்பது போல அவளுடன் பெரும் அக்கப்போர் புரிந்தது.
கடினப்பட்டு அழுந்த மூடிய அழகு அதரங்கள் திறந்தவள்,இமைகளை விசிறிகள் போல படபடவென அடித்துக் கொண்டு, குரலே எழும்பாத மெல்லிய குரலில், “ஆ.. ஆ.. ஆமா.. நீ சைக்கோ தான்.. குடிச்சிட்டு வந்து அடிக்கிற.. தான்”என்று இறுதியில் தேய்ந்து போனவளாக சொல்ல, அவனை இதழ்களுடன், புருவங்களும், அழகாக, மேலுயர, “ஓ?” என்றான் அவன்..
கோபத்தில், கோபம் கொள்ள வைக்கும் மனைவியர்களுள், கோபத்திலும் மூட் ஏற்றும் மனைவி உண்டானால்.. அது சத்யனுக்கு வாய்க்கப் பெற்ற மனைவியே தான்.
சினத்தில் தனங்கள் ஏறி இறங்க, மூச்செடுத்த படி நிற்க,அந்த முன்கோபக் குயில் மேல் இன்னும் கொஞ்ச பித்தானவன்,இமைக்கும் நொடிக்குள் அவளது மேலதரத்தைப் பாய்ந்து கவ்வியிருந்தான்.
அவள் அவனது அதிரடியில், ‘ஷாக்’ அடித்தது போல நிமிர, திணறத் திமிற.. விடாமல்.. அவளது கரங்களை தன் கரங்களுக்குள் சிறைசெய்திருந்தவன், தன் நாவு என்னும் அஸ்திரம் கொண்டு.. எதிராளியின் களத்தில் காதல் சமர் புரிந்து கொண்டிருந்தான் சத்யன்.
தன் மெல்லினத்தின் அத்தனை தவிர்ப்புக்களையும் அசால்ட்டாக முறியடித்த வலிய உடல் கொண்டான், அவளது தேன் வழியும் அதரங்களை உறிஞ்சியவனாக, இமைகள் மூடி.. இன்னும் இன்னும் ஆழ்ந்த சுகத்துக்குச் சென்றான்.
அதிரடியாக.. கொஞ்சம் வன்மையாக தொடங்கிய முரட்டு முத்தம், சில நொடிகளுக்கு மேலாக.. தன்னையும் அறியாமல் இளகிப் போன அவள் உடலின் சம்மதத்துடன் தொடர, அவன் மனம் குழந்தையைப் போல மலர்ந்தது.
அவள் என்ன தான் சண்டை போட்டாலும், அவள் ஆழ் மனம் தன்னை இன்னும் விரும்புவதை உணர்ந்து கொண்டவன், அந்த நீண்ட நெடிய முத்தத்திலேயே, ஆத்ம திருப்தி கண்டவனாக மெல்ல அவளை விட்டும் நீங்கியவன்,
அவனது எச்சில் ஈரத்தில் பளபளக்கும் அவளது இதழ்களை இன்னும் காதல் மயக்கம் ஊறப் பார்த்தவனாக,
“இப்போ போய்.. உன் அண்ணாக்கிட்ட தெளிவா சொல்லு.. ஆமா அவன் அடிக்கிறான்.. தெனம் ராத்திரி என்னை தேடி வந்து.. இந்த மாதிரி.. கிஸ் அடிக்கிறான்னு சொல்லு.. மொட்டையா சொன்னா?? .. உன் அண்ணன் என்னை தப்பா எடுத்துக்குவாருல்ல?”என்று அவன் புருவமுயர்த்தி கேட்க,
அவளுக்கோ.. அந்தப் பொல்லாத கிறுக்கு மூளையில்.. இத்தனை பிரச்சினைகளும் தொடங்கிய, அன்றைய இராத்திரியின் ஞாபகம் வந்தது; மறுபடியும் இருட்டிய மேகம் போல அவள் மனமும் இருளவும் செய்தது.
அவன் தந்த முத்தம் என்பதில், எங்கிருந்து தான் அப்படியொரு அருவெறுப்பு மிகுந்ததோ அவளுள்ளும்?
அடுத்த கணம், அவனது திண்ணிய மார்பில் இரு கைகள் வைத்து, அவனைத் தன்னிலிருந்தும் ஆக்ரோஷமாகத் தள்ளி விட்டிருந்தவள்,
தன் எச்சில் வழிந்த அதரங்களை.. இரு கைகளாலும் தேய்த்துத் தேய்த்து துடைத்தவளாக, “ச்சீஈ.. டிஸ்கஸ்டிங்” என்று சொன்ன ஒருவார்த்தை.. அந்த ஒற்றை வார்த்தை.. அவனை ஓர் மிருகமாக மாற்றியது.
பொறுமையின் சிகரம்.. அன்று சீற்றத்தின் சிகரம் ஆனான்.
ஆடவனுக்கு எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் தன்னை ஒரு தலைவன் போல ஆராதிக்க வேண்டிய தன் உள்ளங்கவர்ந்த பெண், தன்னை அருவெறுப்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிவதேயில்லை.
அது தன் ஆண்மைக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதியவன், ஆத்திரம் தலைக்கேற
அவனது அருகாமையில் இருந்த டிராயர் மீதிருந்த வாஸினைத் தூக்கி ‘வாலி போல்’ போல.. முஷ்டி மடக்கிய கைகளால் சுவற்றில் விசிறி அடிக்க, அதன் கூர்முனை குத்தி முன்னங்கை தோல் கிழிந்து குபுக்கென எட்டிப் பார்த்தது இரத்தம்.
பூ வாஸூம்“சுரீர்” என்ற நாராசமான ஒலியெழுப்பிக் கொண்டு.. சில்லு சில்லாக உடைந்து போக, அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக, அந்த சில்லுகளின் மேலேயே சொட்டுச் சொட்டாக துளித் துளியாக வீழ்ந்து கொண்டிருந்தது கடுஞ்சிவப்பு நிற இரத்தம்!!
அவனின் இரத்தம்!!
அது முற்றிலும் மூடப்பட்ட அறை என்பதால்.. அந்த ஒலி அறையைத் தாண்டி வெளியே கிளம்பாவிட்டாலும் கூட, அந்த ஒலியும், அவன் கையில் வழியும் இரத்தமும்.. மென்மையாளின் இதயத்தைத் தூக்கிவாரிப் போடவே செய்தது.
பற்களைக் கடித்துக் கொண்டு.. அவளை நெருங்கியவன்.. ஆத்திரம் தாளாமல், ஒரு மிருகம் போல அவள் கழுத்தை ஒற்றைக்கையால் நெரித்த வண்ணம்,
அகன்ற கண்களுடன், “என்னடி சொன்ன.. நான் டிஸ்கஸ்டிங்கா?? என் எச்சில்… உன் உடம்புல எங்கெங்கெல்லாமோ.. எத்தனையோ தரம் பட்டிருக்கு..அப்போ எல்லாம் டிஸ்கஸ்டிங்கா தோணலையா?? அப்போ.. ப்ளீஸ் ‘டேக் மீ டேக் மீ’ன்னு வெட்கம் விட்டு… கெஞ்சத் தெரிஞ்ச உனக்கு.. இப்போ நான் டிஸ்கஸ்ட்டீங்கா தெரியறேனாஆஆ?? இரு… உன்னை என்ன செய்யறேன்னு பாரு ” என்று கறுவியவன்..
ஒரு முரடனாக உருமாறி..அவள் முகமெங்கும் எச்சில்படுத்த நாடினான்.
அவன், தன் மனைவியின் முகம் எங்கும்.. அவள் திமிறத் திமிற.. விடாமல்.. நாவினால் எச்சில்படுத்திக் கொண்டே போக, கணவன் எல்லை மீறுவது தாங்க மாட்டாமல்,அவனது வதனத்தை கையால் பிடித்து தடுத்த வண்ணம், “சத்யன்..சத்யா…வேண்டா.. வேண்டாம்”என்று ஓயாமல் அலறியவளுக்கு , அவனது அதிரடி தாங்க மாட்டாமல் ஒரு கட்டத்தில் மூச்சு முட்டத் தொடங்கியது. கால்களும் தள்ளாடத் தொடங்க.. அவளது கண்களில் இருந்தும் உடைப்பெடுத்தது கண்ணீர்.
இத்தனை நேரம் ஒரு முரடன் போல நடந்து கொண்டவனுக்கு, கணவனின் கண்ணீர் கண்டதும், அவனது அடக்குமுறைகள் எல்லாம் அமிழ்ந்து போனது.
சட்டென சீற்றம் நிதானித்தவனுக்கு, அவளது அழுகை, இதயத்தைக் கொத்தியது.
வெறுத்தவன் போல தலை சிலுப்பிக் கொண்டவன், “இன்னும் பொறுமை காக்குறேன்னா.. நான்.. உன் மேல வைச்ச காதலுக்குத் தான்.. அதனால அமைதியா இருக்கேன்.. இதுவே உன்னை மயக்க மருந்து கொடுத்து.. இந்தியா தூக்கிட்டுப் போக எத்தனை மணிநேரம் ஆகும்? இதுவே வ்வேற யாருமா இருந்திருந்தால் என் டீலிங்கே வ்வேற..”என்று அவன் எகிற,
அவளுக்கோ, அவனது இறுதி வசனத்தில், ‘அந்த வேறு யாருமா கேட்டகரியில்’ போன வருடம், உலக அழகிப் பட்டத்தை தவற விட்ட.. அவனோடு ஒன்றாக, பிகினி உடையில், ஸ்விம்மிங் பூலில் தூக்கி வைத்துக் கொண்ட அந்த சுஷ்மிதாவின் ஞாபகம் வந்து போனது.
கண்களில் நீர் துளிர்க்க, காயம்பட்டுப் போனவளாக, “ஆமா.. இதுவே ‘சுஷ்மிதா செட்டி’யாயிருந்திருந்தா.. கொஞ்சி குலாவ தோணியிருக்கும்ல?..”என்று கேட்க,
அவளின் இடத்தில், வேறு யாரை வைத்தும் எண்ணிப் பார்க்க முடியாதவனுக்கு, தன்னவளைக் கை நீட்டி அறையும் அளவுக்கு கோபம் வந்தது.
இருப்பினும் இங்கு வர முன்னம் தாய், “எந்த சந்தர்ப்பத்திலேயும் மனைவி மேல் கை நீட்டி.. உன் அம்மா வளர்ப்புக்கும், ராஜவம்சத்துக்கும் பங்கம் வர விடமாட்டேன்னு சத்தியம் பண்ணு சத்யா” என்று சத்தியம் வாங்கிக் கொண்டது நினைவு வர, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
அவளது இரு கைச்சந்துகளையும் மூர்க்கத்தனமாக அழுந்தப் பற்றிப் பிடித்தாட்டியவனாக, இரைந்த குரலில், , “யௌவனா.. எத்தனை வாட்டி சொல்றது? .. எனக்கும், அவளுக்கும் நோஓஓ கனெக்ஷன்..” என்றவனுக்கு, அவனுள் இருக்கும் காதலன் மீண்டும் எட்டிப் பார்க்கலானான்.
அவன் முகம் வாடிப் போக, இளகிய குரலில், கன்னம் ஏந்தியவனாக, “ப்ளீஸ் நீயில்லாமல் என்னால் முடியாதுடீ.. வா வீட்டுக்குப் போகலாம்… அப்படி என்ன சந்தேகப்படுறதுன்னா.. இருபத்தி நாலு மணிநேரமும் என் கூடவே இருந்து கண்காணிச்சிக்க.. என் கூடவே இரு.. ஆனால் ப்ளீஸ் என்னை விட்டு மட்டும் போயிடாதேமா..” என்று தன் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்தே அழைத்தான் அவன்.
யௌவனா சின்ன வயதிலிருந்தே ரொம்ப ரோஷக்காரி;வீம்புக்காரி;பிடிவாதக்காரியும் கூட.
அதைப் பற்றி இப்போது தான் அறியும் பாக்கியம் கிடைக்கிறது நம்மாளுக்கு.
அவனைத் தாண்டி விட்டத்தை வெறித்த வண்ணம், “முடியாது.. நான் இங்கே தான் இருப்பேன்.. வாஸை உடைச்சேல்ல??.. அதே மாதிரி என் மனசையும் அன்னைக்கு நீ உடைச்சிட்டே.. நான் உன் கூட வ்வரமுடியாது.. நம்பிக்கை ஒரு தரம் போனது போனது தான்..வாஸை வேணும்னா திரும்ப ஒட்ட வைச்சிக்கலாம்.. ஆனால் நம்பிக்கையை??? திரும்ப ஒட்ட வைக்க முடியாது.. அண்ணாவுக்காக உன்னை இங்கே தங்க அனுமதிக்கிறேன்.. அது தவிர நமக்குள்ள ஒண்ணும் கிடையாது..நீ பொண்ணுங்க சம்மதமில்லாமல் அத்துமீற மாட்டேன்னு தெரியும்.. அந்த நம்பிக்கையையும் உடைச்சிடாதே”என்றவள்,
ஏதும் மேறகொண்டு சொல்லாமல் போய் மஞ்சத்தில் படுத்துக் கொள்ள,
தனக்கு புறமுதுகிட்டுப் படுத்துக் கொண்ட மனைவியையே வெறித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன்.
‘நீ பொண்ணுங்க சம்மதமில்லாமல் அத்துமீற மாட்டேன்னு தெரியும்’- என்னேவொரு உயர்ந்த நல்லெண்ணம் அவனது மனைவிக்கு??
இதயம் ‘சுள்சுள்’ என்று குத்திக் கொண்டே இருப்பது போல இருந்தது அவனுக்கு.
இத்தனை பிரச்சினைக்கும் காரணமான அந்த அரக்கி, ‘சுஷ்மிதா செட்டி’ மட்டும் கையில் கிடைத்தால்.. நாலு அறை கன்னத்தில் மாறிமாறி அறைய வேண்டும் போல வெறியே எழுந்தது அவனுக்கு.
கையில் இரத்தம் சொட்டச் சொட்ட.. நடந்து போய் மனைவி தன் கண்களில் படும் வாக்கில், சோபாவில் அமர்ந்தவன்.. அவளையே இமைக்காமல் பார்த்தபடியே கண்ணுறங்கிப் போனான்.
இதுவரை ஆழ்ந்து துயில்வது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தவள், நடுஇராத்திரி நேரத்தில் விழித்தவள், சோபாவில் துயிலும் தன் கணவனை நாடித் தான் போனாள்.
அவனோ தூக்கத்தில் கூட நிம்மதியற்று.. இடுங்கிய புருவங்களுடனேயே துயின்று கொண்டிருப்பது பெரும் வேதனையை அளித்தது அவளுக்கு.
மெல்ல அவனது புருவங்களை நீவி விட, அவள் தொடுகைக்காகவே காத்திருந்தன போல சமரசம் அடைந்தன அவை.
அவனது அயர்ந்து போன முகம்.. தாடை எங்கிலும் கைகளில் குத்தும் முரட்டு மயிர்கள்.. அரக்கப்பறக்க இந்தியாவிலிருந்து இலங்கை வந்த களைப்பு.. அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
தன்னறையில் இருக்கும் முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தவள், தரையில் அமர்ந்து, சோபாவில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்,
அவனது முறுக்கேறிய வாளிப்பான முன்னங்கையைப் பற்றி இரத்தம் வழிந்த காயத்தைத் துடைத்து மருந்திடத் தொடங்க, அவள் கண்களில் ஓயாமல் வழிந்து கொண்டேயிருந்தது உவர்நீர்.
அவன் துயில் கலையாத வண்ணம் கிசுகிசுக்கும் தொனியில், கட்டிட்ட வண்ணமே, “நீ செஞ்ச தப்புக்கு உன் மேல கோபம் வருது.. என்னால உன்னை மன்னி.. க்கவும் முடியலை..ஆனால் தண்டிக்கவும் முடியலை.. உன்னை ஒவ்வொரு தடவை காயப்படு.. த்தும் போதும் ‘நானும் காயப்படுறேன்.’..ஒரு சமயம்.. இல்லாத பொய்க்காரணங்கள் எல்லாம் மனசுல தோன்றி… உன்னை வெறுக்கத் தோணுது சத்யா.. உன்னை விட்டு தூரமாகணும் போல இருக்கு.. இன்னொரு சமயம் உன்னைக் காதலி.. க்கத் தோணுது.. உன் பக்கத்துலேயே உன்னைக் கட்டிப்புடி.. ச்சிட்டே இருக்கணும் போல இருக்கு…. ஏன் இப்படி நடந்துக்குறேன்னு எனக்கும் புரியலை?? ..பட் ஐ லவ் யூ சத்யா.. ”என்று உணர்ச்சி பூர்வமாக சொன்னவள், அவன் உள்ளங்கைக்கு முத்தம் வைத்து விட்டு.. அவன் மடியிலேயே மெல்ல தலைவைத்து கண்கள் மூடிக் கொண்டாள்.
‘இந்த திடீர் திடீர் உணர்ச்சி மாற்றத்திற்கு காரணம் ஒரு பிரேதாத்மாவின் மாய ஏவல்” என்பதை அறியாதவளாக அவள் இருக்க,
யௌவனா கண்ணீர் விட்டழுததை… அறியாமல் ஆழ்ந்த நித்திரையின் வசம் இருந்தான் சத்யன்.
****
அது ஏகாந்தமான ஓர் இராக்காலம். வானிலே முழுமதி நிலவு.. தன் வெள்ளிக்கிரணத்தால்.. உலகத்தை பால் நிறவொளியில் திணறடித்துக் கொண்டிருக்க, மேகங்கள் பவனி வந்து கொண்டிருந்த அழகிய நடுநிசிக்காலம்.
சர்ப்பங்களும், மண்டூகங்களும் உடல் தினவெடுத்து.. அந்த இருட்டினுள் தன் இணை தேடி அலையும் அழகான இயற்கைப் புணர்வுகள் கொண்ட இராக்காலம்!!
அந்த இரவில் இயற்கையும் கூட ஓர் அதிசயத்துக்காக காத்திருக்க, அந்த முழுமதி நிலவை.. ஒரு நாகம் மெல்ல மெல்ல விழுங்குவது போல ஓர் தோற்றப்பாடு அந்நேரம் வானில் தோன்றவாரம்பித்தது.
ஆம், அது ஒரு பொல்லாத சந்திரகிரகணம். சங்கம் வைத்து தமிழ்வளர்த்த நம் முன்னோர்கள், “ஓர் வெள்ளை முட்டையை.. ஒரு பெரும் நாகம்.. தன் வாய் திறந்து விழுங்குவது போல” என்று பாடல்களில் சித்தரித்திருக்கும் சந்திரக்கிரகணம்!!
அந்த இரவில்.. தம்பதிவனம் முழுவதும் அன்றும் போல இன்றும் ஆழ்ந்த நித்திரையின் வசம் இருக்க, அந்தப் பெரு நாகம், முழுமதியை துளி விடாது விழுங்கி முடித்ததும்.. திடீரென்று சூழ்ந்தது ஓர் கும்மிருட்டு!!
அது மிகவும் ஆபத்தைக் கொண்டு வரப்போகும் இருட்டு!! இப்படியான ஓர் சந்திரகிரகண நாளில்.. சத்யாதித்தனோடு, தேவதாவையும் இலங்கை வரவைக்கத் தானே இத்தனை திட்டங்களையும் போட்டாள் அழகு நந்தினி?
அத்தகைய ஓர் இரவில் தான்.. தான் அடைந்து கிடக்கும் பாழும் நிலவறையை விட்டும்,ஒரு கரும்புகை ஆளடி உயரத்துக்கு எழுந்து பரவுவது போல.. வெளியே வந்தவள், தன் சுய உருவத்துக்கு வந்து நின்றாள் நந்தினி.
அவள் கண்கள்.. அன்று என்றுமே இல்லாதவாறு ஒளிர்விட்டுக் கொண்டிருக்க, வதனமோ.. சந்தோஷத்தில் திளைத்துப் போயிருந்தது.
எதனால்??
அவள் தன் அன்னையான பத்ரகாளிக்கு நேர்ந்து விட்ட பலியாடான இராஜசிங்கனின் வாரிசு.. இந்த தம்பதிவனத்தின் மண்ணை மீண்டும் மிதித்ததனாலா?
இல்லை.. அவன் வந்தால்.. அவனுக்கு காவல் தெய்வம் போல பின்னாடியே வரும் அவள் கணவனான தேவதா.. அங்கு வந்ததாலா?
இல்லை இரண்டுமே தானா? எதுவோ ஒன்று.. அவள் முகத்தில் இருக்கும் தேஜஸைக் கூட்டியது.
பாழும் நிலவறைக்கு மேலேயுள்ள கற்திடலுக்கு அவள் வரும் போதினில் எல்லாம், இருநூறு வருஷகாலத்துக்கு முந்தைய அந்தக் கொடூர சம்பவம் அவள் மனதை நிறைத்து,பெரும் ஓல அழுகையை அவளுள் ஏற்படுத்தும்.
ஆனால் இன்று நிலைமையோ எதிர்மாறு.
அவள் உலக அதிசயங்களுள் ஒன்றாக.. இம்முறை மாத்திரம் கண்ணீர் விட்டு அழவேயில்லை. மாறாக ஒரு வெற்றிக்களிப்புப் புன்னகை.. அவள் இதழ்களில் அகங்காரமாக அமர்ந்திருந்தது.
அவளது பாதங்கள் அந்தக் கற்திடலில் பட்ட தினுசில், அகோரமாக காற்றெல்லாம் ஆடி அசைய மரங்கள் தந்த அசைவில்.. உடல் முழுவதும் ஒரு இதம் பரவ.. காற்றில் கைகளை நீட்டி, அந்த சுத்தக்காற்றை உள்ளிழுத்த வண்ணம் நின்றிருந்தாள் மங்கை சொற்ப விநாடிகளுக்கு.
அந்த காற்றில் எங்கும் அவளது மகாசேனரின் மணம். அவளது தேவதாவின் சுகந்தம் பரவுவதை அவளது நாசி முகர்ந்து விட, அவள் கண்களில் அன்றிரவு தேவதாவுக்கான காதல் கூடிப் போயிருந்தது.
அவனைக் காண வேண்டும்.. அவளது இராட்சத முகத்தை.. தன் மார்புக்குழிக்குள் புதைத்து.. அவனது உச்சிதனை முகரவும் வேண்டும்.
அவனது இதழ்களோடு தன் இதழ்கள் திளைத்து.. கலவி கொள்ளும் அரவங்கள் போல.. உடல்கள் பின்னிப் பிணைந்து காதல் கொள்ளவும் வேண்டும்!!
அவளது உடலில் இருக்கும் கோடான கோடி மயிர்க்கால்கள் எல்லாம்.. அவன் நினைப்பில் சிலிர்த்தெழும்பி நிற்பது போல இருக்க, மீண்டும் தம்பதிவனம் வந்து சேர்ந்த தன் தேவதாவைக் காண விரைந்தாள் நந்தினி.
அந்தக் கல்மலையின் ஜில்லிப்பை.. அவள் அடிப்பாதங்கள் உணரக்கூடியதாக இருக்க,.. வழியெங்கும் வளர்ந்திருந்த காட்டுமல்லிகையின் மதிமயக்கும் வாசம்.. அவள் நாசிக்குள் புகுந்து.. மூளையை அடைந்து.. அவளை ஏதேதோ செய்யும் போலிருந்தது அவளுக்கு.
மெல்ல குனிந்து.. அந்தப் பூக்களின் வாசத்தை.. கண்கள் மூடிக் கிறங்கியவளாக, வாசம் பிடித்தவள்.. அந்த மலர்களையெல்லாம் மெல்ல மெல்ல கொய்து, கைவிரல்களில் மோதிரமும், காதுகளில் காதணிகளுமாக அணிந்து கொண்டவள், அந்த செடிகளை அள்ளி அணைத்து நுகரவும் செய்தாள்.
காற்றெங்கினும் பரவிக் கொண்டிருந்த தேவதாவுக்கு என்று வரும் வித்தியாசமான சுகந்தம்.. அவள் அந்த காட்டுப்பாதை வழி நடக்க நடக்க, அதிகமாகிக் கொண்டே வருவது போல இருந்தது அவளுக்கு.
ஆம், அவளது காதல் தேவதா.. இங்கெங்கேயோ மிக அருகிலேயே தான் இருக்கிறான் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து போனது அவளுக்கு.
தூரத்திலே.. ஓர் சிறிய நீர்வீழ்ச்சியின் தண்ணீர் சலசலக்கும் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. கூடவே ஓர் குதிரை கனைக்கும் சப்தம்!!
அது தேவதாவின் வெண்புரவி. அவளது கண்கள் கண்டு கொண்டன.
அந்தக் கற்திடலுக்குப் பக்கத்தில் எப்போதுமே சிறிய நீர்வீழ்ச்சி இருந்ததே கிடையாது. அப்படியானால் இந்த நீர் சலசலத்து ஓடும் சப்தம் எதனால்??
மெல்ல சப்தம் வந்த திசையை நாடிப் போனவள், அந்த காட்டுச்செடிகளின் இடையே மறைந்து நின்ற வண்ணம், பார்த்த போது.. கானகத்தில் ஒரு புது நீர்வீழ்ச்சி திடீரென்று முளைத்திருக்கும் அதிசயத்தைக் கண்டாள் அவள்.
அது ஒரு மாய நீர்வீழ்ச்சி. தேவதாவின் கண்களுக்கும், பிரேதாத்மாவின் கண்களுக்கும் மட்டும் புலனாகும்.. ஓர் நீர்வீழ்ச்சி.
எந்த மனிதக்கண்களும் அறிந்திராத… அமானுஷ்ய நீர்வீழ்ச்சி அது.
சர்வகாலமும் தண்ணீர் வழிந்தோடும் கற்களுக்கிடையில் நீர் வழிந்து வரும் அந்த இடத்தில்.. வண்ணத்துப்பூச்சிகளைப் போன்ற வர்ணமயமான இறக்கைள் கொண்ட மின்மினிப்பூச்சுகள் ஒளிஜாலம் காட்டிக் கொண்டே பறந்து கொண்டிருந்தது அவ்விடமெங்கும்!!!
அந்த நீர்வீழ்ச்சியின் இரு மருங்கிலும்.. பாசி அடர்ந்த பச்சை நிற கற்கள் இருக்க, அவற்றுக்குப் பக்கத்தில் சிவனுக்கு மிக உகந்த நாகலிங்கப் பூக்கள்.. மாய இரவில்.. மணம் விட்டுப் பூத்திருந்தது.
மேகங்கள் மண்ணிலிறங்கி வந்தது போல.. அந்த இடத்தில் தெய்வீக இதம் தரும் ஒரு பனிமண்டலம் பரவியிருப்பதையும் கண்ட நந்தினி அங்கே விழிகள் உருட்டி, தன் தலைவனைக் காணவே எத்தனித்தாள்.
அந்த புனிதமான இடத்துக்கு இன்னும் புனிதம் சேர்க்கும் முகபாவனையில், தண்ணீருக்குள் அமர்ந்திருந்த நிலையில், உச்சந்தலையில் நீர்வீழ்ச்சியின் நீர் சொட்டச் சொட்ட.. கண்கள் மூடியவண்ணம் நீராடிக் கொண்டிருந்தான் அவன்.
ஈசனை நிகர்த்த ஜடாமுடி நீரிலே நனைந்து..மார்பு வரைத் தொங்கிக் கொண்டிருக்க… அவனது திண்ணிய மார்புகளின் வனப்பு.. அவளது மனதை உன்மத்தம் ஆக்கிக் கொண்டிருந்தது.
அப்படியே தண்ணீரை விட்டும் மெல்ல எழுந்தவன்.. எந்த ஆடையும் அணியாமல் நிர்வஸ்திரமாகவே இருந்தாலும் கூட, அவனது தோற்றம் புருஷலக்ஷணத்துக்கு முன்னுதாரணம் காட்டக் கூடிய அத்தனை தகைமைகள் கொண்டதாக இருந்தது.
அந்தக் காட்டுச் செடிகளுக்கு இடையில் ஒழியும் மருண்ட விழிகள் கொண்ட காட்டு மானொன்று, நீராடும் அடர்ந்த பிடரிமயிர்க் கொண்ட சிங்கத்தைப் பார்த்து இரசிப்பது போல இருந்தது அக்காட்சி.
கணவனது தொடைகளின் இறுக்கமும், பாதங்களும் வேறு மங்கையவள் அடிவயிற்றில் ஈரத்தைச் சுரக்கச் செய்ய, அவள் முகத்தில் சின்ன நாணமும் குடிகொள்ள மெல்ல தாழ்ந்தது அவள் பார்வை.
மனைவி தன்னை நாடி வந்ததை தன் ஆத்ம வலிமையாமல் அறிந்து கொண்டானோ காவல் தெய்வமான தேவதாவும்??
அவன் நாணம் அறிந்து, மெல்ல சாந்தமான ஒருகுறுநகையை உதிர்த்தான் தேவதா.
அதை அவள் பார்க்க முடியாமல் போனாலும் உள்ளம் எல்லாம், “இவன் என் தேவதா” என்ற உரிமை பிறக்க, அவன் கண்களில் வன்மம் முற்றிலுமாக அகன்றிருந்தது.
இது அவளுள் இருக்கும் காதல் நந்தினிக்கான நேரமன்றோ?
.
மனைவி தன்னை பார்ப்பதை அறிந்தும் அறியாதவன் போல, திரும்பி… அவளுக்கு புறுமுதுகு காட்டியவனாக, கற்களை இரு கைகளாலும் பிடித்த படி, தலையில் நீரோட, நீராடிக் கொண்டிருந்த வேளை, தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
இதுவரை பொறுத்தவள், அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல், அரவமேயெழுப்பாது அந்த மாயத் தண்ணீருக்குள் நுழைந்தவள், அவனை நாடித் தான் போனாள்.
கணவன் அறியவில்லை என்ற நினைப்பு நந்தினிக்கு!!
அறிந்தும் அறியாதது போல நடிக்கும் குதூகலம் தேவதாவுக்கு.
அவளது மென்மையான இரு கரங்கள்.. அவனது உரமேறிய வயிற்றைக் கட்டித் தழுவ, அவளது தனங்கள் அவனது இராட்சத முதுகில்.. அழுந்தப் பதிய, ஒரு மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.
அவளோ காதல் பித்து முத்த, அவளது முதுகில் சின்னதாக ஓர் முத்தம் வைத்து முத்தாடி.. அவனை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க நாட, அந்தோ பரிதாபம்!!
அந்த சூழ்ச்சிக்கார நந்தினிக்கு… ஏமாற்றமே மிஞ்சியது. அவன் இன்பத்தையோ, அதிர்ச்சியையோ தன் மனையாளிடம் காட்டிக் கொள்ளாமல்… புறமுதுகிட்டு நின்ற வண்ணமே இருந்தான். திரும்பவேயில்லை!!
அவள் வந்ததை முன்கூட்டியே அறிந்தவனாயிற்றே அவன்.
திரும்பிப் பாராமல் கேட்டான்..“இது எல்லாம் உன் சூழ்ச்சி தானே ‘மாய’நந்தினி..?”என்று தன் மனைவிக்கு அழகான அடைமொழிப்பட்டம் கொடுத்து.
ஒன்றாக வாழ்ந்த போதினிலே, ‘அழகு’ நந்தினி என்பவன், தற்போது, ‘மாய’ நந்தினி என்கின்றான். இருப்பினும் அந்த அடைமொழியும் இந்த சூட்சுமக்கார நந்தினிக்கு பிடித்துத் தானிருந்தது.
கணவன் ‘எந்த சூழ்ச்சி?’என்று குறிப்பிட்டுச் சொல்லவும் இல்லை. அவளும் “எந்த சூழ்ச்சி? ” என்று கேட்கவுமில்லை.
காவல் தெய்வமான தேவதாவுக்கு.. சத்யனின் உயிருக்கு பங்கம் வரும் போது மட்டும்… காக்க சக்தியுண்டே ஒழிய,
நந்தினி தேவதாவின் அரசரையும், அவரது காதற்கிழத்தியையும் பிரிப்பதற்காக, தன் மாய வித்தையால் அத்தனை சூழ்ச்சிகள் செய்தும்.. அவற்றை அடக்கத் தான் அவனிடம் எந்த சக்தியும் இல்லை.
அதற்கான அனுமதியும் அவனிடம் இல்லை.
காவல் தெய்வம் அவன்.. உயிரைக் காப்பானே ஒழிய… பிரச்சினை தீர்ப்பவன் அல்லன் அவன்.
அதனால் மனைவியின் மாய ஆட்டத்தை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும்படியாயிற்று அவனுக்கு. இருந்தாலும் அந்தக் காதல்ஜீவிகள் மனதை.. மனைவி அலைக்கழித்துக் கொண்டிருப்பதில் அவனுக்கு வருத்தம் இருக்கத் தான் செய்தது.
அவளது அணைப்பு இன்னும் கொஞ்சம் அதிகமானது. அவனது முதுகில் ஆழப்புதைந்து.. அவனோடு இரண்டறக் கலக்கலாமா? என்ற எண்ணம் கூட தோன்றியது அவளுக்கு.
தன் முகத்தை.. அவனது இராட்சத முதுகில் அப்புறமும், இப்புறமும் திருப்பித் திரும்பி, புரட்டி புரட்டி.. அவனது பிரத்தியேகமான மணத்தை முகர முனைந்தாள் அவள்.
இருவரது உடல்களையும் நனைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது அந்த மாயநீர்.
அவள் வாய் திறந்த போது.. அதில் இருந்த காதல், தேவதாவை ஒரு ஆழ்ந்த காதல் மயக்கத்தில் தள்ளும்படியாக இருந்த்து அவள் குரல்.
அத்தனை கிறக்கம் நிறைந்த குரலில், “ஆம்.. எல்லாம் உங்களுக்காக சேனரே.. உங்களைக் காணாது இருக்க.. உங்கள் நந்தினியால் எங்கணம் இருக்க முடியும் சொல்லுங்கள்??”என்று அவள் சொன்ன தினுசில், அந்த நீர் போலவே அவளுக்கான காதலும் பீறிட்டோட.. தன் மனைவியை நோக்கி மையலுடன் திரும்பினான் தேவதா.
அங்கே அவன் கண்டதது.. உலகிலேயே அவன் கண்டிராத… எந்த ரவிவர்மனும் காணாத… அவனது ஓவியப்பெண்ணான பேரழகு நந்தினி.
கணவனைத் தொடும் போதெல்லாம்.. அழகு கூடும்.. அவனது அதிசய மனைவி அவள்.
அவளது அந்த கருவிழிகள்…அதன் ஆழ்ந்த அடர்த்தி.. அதில் வழியும் காதல், தாபம் எல்லாமும்… அவனை சித்தம் தடுமாறிப் போகும் வண்ணம் அவளையே இரசித்துப் பார்த்திருக்க வைத்தது.
அவளோ, அவனது கழுத்தில் தன் கைகளை மாலை போல கோர்த்தவளாக, அவன் மார்போடு தன் தனங்கள் மோத நின்று,
சற்றே தன் பாதங்களால் எம்பி, அவனது முரட்டு அதரங்கள்.. தன் மிருதுவான அதரங்களோடு பட்டும் படாமல் மோதி.. அவனை உசுப்பேற்றலானாள்.
அவன் கண்களில்.. சிறுகச் சிறுக போதை ஏறுவதை அறிந்தவள்
தாபம் தீர்த்துக் கொள்ள அழைக்கும் குரலில், “நீங்கள் அருகில் இருந்த போது அருமை புரியவில்லை.. விட்டுச் சென்றதும்.. தகித்தது உள்ளம்.. பிழையென்று அறிந்தே தான்.. அதை செய்தேன்..உங்களை என் வசம் அழைப்பிக்க செய்தேன்.. மன்னித்து விடுங்கள்!! ”என்றவள்.. இறுதியில்.. அவன் இதழ்களில் நீரோடு நீர் வழிய குட்டி முத்தம் வைக்க, அவளது தேவதாவுக்கோ குளிர்ந்த தண்ணீர்.. அவள் இதழ் தன்னில் பட்டதும் சுட்டது.
கணவனின் கண்களில்.. நொடிக்கு நொடி போதையேறுவதைக் கண்டவள், அவனை ஒரு உன்மத்தமான நிலையை அடையச் செய்ய, தன் அடுத்த சூழ்ச்சிக்குத் தாவினாள் நந்தினி.
அவனை விட்டும் அவள் மெல்ல அகன்றதும், அந்தச் சின்னப் பிரிவைக் கூட தாங்க மாட்டாமல், “எங்கே செல்கிறாய் நந்தினி??” என்று அவன் கேட்க,
அவளோ கண்களில் மந்தகாசம் சிந்தச் சிந்த.. அவனது முரட்டு அதரங்களில் ஒற்றை விரல் வைத்து, “உஷ்ஷ்ஷ்!!!”என்றாள்.
பின் அவனை விட்டும், வழியும் நீரை விட்டும் இரண்டடி தள்ளி நின்றவள், தன் மாய அங்கவஸ்திரங்களை நிமிட நேரத்தில் களையலானாள்.
மகாசேனரின் முன் தற்போது.. ஒரு வீனஸ் சிற்பமாக நந்தினி!!
அங்கமொதுக்கி
ஆன்மாவைப் புணர
ஆலிங்கனம் புரிவாயோ;
காளியை அடக்கி
போரதை முடிக்கும்
வியூகமும் அறிவாயோ?
சொல் தேவதா…
ஒரு கணம் அவளது அழகைக் கண்டு திகைத்தவன் கண்களில்..அடுத்த கணம் அவளுக்கான காதல் மலையளவு குடிகொண்டது.
அவன் தேவதாவாக இருக்கலாம். ஆனால் அவள் முன்னாடி அந்த எழில் கோலத்தில் நிற்பவள்.. அவனது மனைவி. அவன் உள்ளம் காதலில் இளகியது.
அது ஓர் அதிசயமான சந்திரக்கிரகணம்!!
பிரேதாத்மாக்களுக்கும் சரி, தேவதாக்களுக்கும் சரி..இரு சாராரும், இரு சாராருக்கிடையில் மாத்திரம்.. எல்லை மீறும் பலவித செயல்களையும் செய்ய.. பூரண சுதந்திரமளிக்கும் சந்திரகிரகணம் அது!!
அவர்களுக்கிடையில் எந்தவிதமான தடுப்போ, திரையுமோ, பனிவளையமோ தோன்றி.. சுட்டெரித்து வாட்டாத.. ஒரு சந்திரகிரகணம் அது!!
இந்த சந்திரக கிரகணம்… ஐநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும்!!
இதோ அந்த வாய்ப்பு!! அவன் மேல் பைத்தியக்காரத்தனமாக காதல் வைத்து, அவனைக் கண்ட பின் விரகதாபத்தில் தவிப்பவள் விடுவாளா??
கணவன் தன் அழகை சில கணங்கள் விழிகளாலே பருகட்டும் என்று எண்ணியவள், அவள் முன் ஒரு மோகனசிலை போலவே நின்றிருந்தாள்.
அவளது முதுகை தாண்டி நீண்ட கூந்தல், அவளது முன்புறமும் பின்புறமும் விழுந்து, மறைக்க வேண்டியவைகளை.. மறைத்திருக்க,அவற்றில் எல்லாம் சின்ன அங்கமாவது தெரியாதா என்ற ஏக்கத்துடன் அதிகநேரம் கண்களை நிலைக்கவிட்டான் தேவதா.
அவளது வெண்சங்குக் கழுத்தும் சரி, சிவந்த தாமரை மலர்கள் போல கூம்பிய, தொய்யாத தனங்களும் சரி, குழந்தை சுமந்து இழந்ததால்.. சற்றே உப்பிய வயிறும் சரி,
இடைகளின் மிக குறுகிய வளைவும் சரி
யானைத்தந்ததம் போல வளவளத்த தொடைகளின் சந்திப்பில்.. இருந்த முக்கோண மேடும் சரி, தண்ணீரில் இருந்த செவ்வரலி மொட்டை போன்ற சிவந்த பாதங்களும் சரி.. அவளை ஒரு தேவலோக மங்கை போல அவனுக்குக் காட்ட, தேவதா தன்னிலை மறந்தான்.
தன் கொண்டானின் காதலின் தரம்.. அவனது முறுக்கேறிய உடல் காட்டிக் கொடுக்க, சந்தோஷத்தில் பாய்ந்து வந்தவள்,
அவன் மார்பில், தன் பஞ்சுத் தனங்களை ஒட்டியவளாக..அவனது முரட்டு இதழ்களைக் கவ்விக் கொள்ள, தேவதாவுக்குள்ளோ சுர்ரென்று மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு.
மனைவியின் அழகு… அந்த சூட்சுமம் நிறைந்த இராத்திரியின் மகிமையை மறக்கடிக்க, அடுத்த நொடி அவள் இதழ்களின் ஆளுகையை தன்னதற்குக் கீழ் கொண்டு வந்தான் தேவதா.
ஹப்பாடா.. தேவதா காட்டிய அசுர வேகம்!! சிலிர்த்து சிலிர்த்து அடங்கினாள் அவள்.. அவனது கொண்டான் தந்த ஒற்றை இதழ் உறிஞ்சுதலில்!!
அவளது கைகள்..சிலிர்த்தடங்கிய போதெல்லாம்.. அவனது பிடரிமயிரைக் கொத்தோடு பிடுங்கி எறிவது போல அழுத்திப் பிடிக்க, அதுவும் கூட பிடித்திருந்தது ஜடாமுடிக்காரனுக்கு.
அவளது இதழ்த் தேன் மட்டும் போதாது.. அவளில் இருக்கும் அறுசுவையும் வேண்டுமென்று தேவதாவின் மனம் தறிகெட்டுப் பாய, அவளை சற்றே சரித்தவனது இதழ்கள்,
வெண்சங்குக் கழுத்து வழியாக.. ஒரு அபாயகரமான பள்ளத்தை நோக்கி இறங்க, அதற்கு மேலும் குனிய.. அவனது இராட்சத உருவத்துக்கு சிரத்தையாகப் போயிற்று.
அதற்கு மேலும் தாங்க மாட்டாமல், ஒரு பெண்ணைக் கடத்தும் அரக்கன் போல, அப்படியே தூக்கி.. அவளைத் தோளில் போட்டுக் கொண்டு..
காதல் மிகுந்து ஓட.. அவளை ஏந்திக் கொண்டு அந்த மாய பூவனம் நாடிப் போனான் அவன்.
அவளுக்கோ.. கணவனின் அவசரத்தில்.. ஒரு பெருமையும், கர்வமும் கண்களில் தோன்ற.. அடுத்த கணம்.. அந்தக் குளிர்ச்சியான புற்தரையில்.. அவனால் கிடத்தப்பட்டவள், அவனது பாரத்தை சுமக்கும்படியானது.
அவளைத் தரையோடு அழுந்தக் கட்டியணைத்து.. முத்தமிட்டுக் கொண்டே.. சிலபல நாழிகைகளாக, ஒரு சர்ப்பம் போல பெரும் தாப மூச்சுக்கள் விட்டவனாக, காதோரம், “நந்தினீஈஈஈஹ்… என் அழகு நந்தினீஈஈஈஹ்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தான்.
அவளது கணவன்..அவள் மேல் வைத்திருக்கும் அன்பின் உச்சத்தில்.. வருஷம் பூராகவும் அணைத்து, “நந்தினீஈஈஹ்”என்று சொல்லிக் கொண்டேயிருப்பான் என்று தோன்ற, அடுத்த கட்டத்துக்கு வழிகாட்டியது என்னமோ நந்தினி தான்.
அந்த இராட்சதக் கரடிக்கு, தன் கூந்தல் ஒதுக்கி மலைமுகட்டில் இருக்கும் உச்சித்தேனைக் காட்டி விட, தேவதாவின் கண்கள் தன்னிலை மறந்து பளபளப்பதை உணர்ந்தாள் நந்தினி.
தன்னிலை மறப்பு!! தன்னிலை மறப்பு!! அது தானே அவளுக்கும் வேண்டும்??
அவளது அன்புக் கரடியும்.. எந்தவித சிரமமும் இன்றி.. அவள் மலைமுகடு ஏறி.. உச்சித்தேன் அருந்த.. உச்சித்தேன் கொடுத்த.. அழகிய ராணித்தேனீ.. அவன் நாவும், எச்சிலும், தன்னில் பட்டதும் சிலிர்த்தது.
இத்தனை வருடங்கள் ஆன பின்னும்.. இந்த இனிய இராட்சசனுக்கு , அவள் மீதிருக்கும் அன்பு ஒரு சிறிதும் குறையவேயில்லையே?
அது தான் அன்பு. அவளது ஒருகை.. அவனது பிடரிமயிருக்குள் கையிட்டு.. அளைய.. அவளது முதுகந்தண்டு வடத்தைத் தழுவிக் கொடுத்தது மறு கை.
அவனது நாவும், எச்சிலும்.. அவளில் எங்கெங்கெல்லாமோ பயணிக்க, எரிமலை உஷ்ணத்துக்கும், பனிமலையின் ஜில்லிப்புக்கும் என மாறி மாறி உணர்ச்சிகளை உணரத் தொடங்கினாள் பெண்.
அவளது கால்கள்… தன் ஆண்மகனின் தொடைகளை கிடுக்கிப்பிடி போட்டு இழுத்துப் பிடிக்க, அவன்.. அசுரத்தனமாக தன்னசைவைத் தொடங்கினான்.
ஒவ்வொரு அசைவுக்கும் வானத்துக்கும், பூமிக்கும் பயணப்பட்டு வந்தாள் நந்தினி.
அந்த ஏகாந்தமான இரவு, பௌர்ணமி இரவு.. அவளுக்கு அந்த சந்திரகிரகணம் கை கொடுத்தது.அவளுக்குள்.. அவன் ஆழப் புதையப் புதைய, வெற்றி இலக்கை எட்டப் போகும் கர்வம் பிறந்தது அவளுக்கு.
அந்த கணம் சந்திரகிரகணம் முடிந்தது என.. நிலவை விழுங்கிய நாகம், மெல்ல மெல்ல சந்திரனை வெளியே கக்கிக் கொண்டிருக்க, தரையில் படுத்த படி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த நந்தினியோ சந்திரகிரகணம் அகல்வதைக் கண்டு கொண்டாள்.
சந்திரன் முழுமையாக வெளிப்பட்டு விடுவதற்குள்.. கூடல் முடியவில்லையாயின், அவளது இத்தனை நாளைய திட்டம் எல்லாம் வீணாகிப் போகுமே??
உடல் பதற.. இன்னும்.. ஓர் சுழி நிறைந்த அசுரத்தனமான படகின் வேகத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கும் தன் தேவதாவை, கரை நோக்கி சீக்கிரம் அழைத்துச் செல்ல நாடினாள் சூட்சுமக்கார நந்தினி. .
இத்தனை நேரம் அமைதியாக நடப்பதை சுகித்தவள், அவன் காதுக்குள், அவனை ரொம்பவும் கிளர்ச்சியூட்டும் வண்ணம் ஆயிரம் காதல் மொழிந்த தினுசில், அசுரத்தனமான படகோட்டியும்… கரை காணப்போகும் வெற்றிக்களிப்புடன்.. இன்னும் இன்னும் அதிகமாகவே துடுப்பு வலிக்கச் செய்தான் அவன்.
அதோ கரை.. வெற்றிக்கரை.. இல்லை.. இது அவனது காதல் கரை!!
அவனத் ஒவ்வொரு அசைவுக்கும்.. அவள், அவனது காதோரம் சிந்திய ஆயிரம் காதல் மொழிகள் ஞாபகம் வர.. அவன் காதல் அதிகமாகி “நந்தினீஈஈஹ் நந்தினீஈஈஹ்” என்ற வண்ணம்.. அவளது மார்புக்குழிக்குள்ளேயே வீழ்ந்து சரணாகதி அடைந்தான் உன்னத தேவதா.
அவள் கைகள்.. கணவனைத் தேற்றவில்லை. மாறாக கண்களோ.. அப்போது தான் அகன்ற நிலவின் இருள் நீங்கி.. நிலவு மீண்டும் பிரகாசமாக ஒளிர்ந்ததைக் காணவும், ஒரு ஆக்ரோஷமான சந்தோஷம் அவளில் முகிழ்க்க, கணவனின் கன்னம் ஏந்தி.. அவனது தெய்வீகம் கமழும் முகம் எங்கும் இடையறாது முத்தம் வைத்துக் கொண்டே போனாள் பெண்.
வானத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தவனுக்கு, பூமி இறங்கி வந்தது போல ஓர் ஆசுவாசம் தோன்ற… அவளது முத்தங்கள் எல்லாம் காதலின் உச்சம் என்று தோன்றியதே ஒழிய, அது சூழ்ச்சியின் உச்சம் என்பதை அறியாது போனான் அவன்.
அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டவன், அன்பு நிறை நெஞ்சத்துடன், “உன் மீது நான் கொண்ட அன்பின் தரத்தை இந்த கூடல் நிரூபிக்க முடியாது நந்தினி.. என் உயிர் நீ.. என் சுவாசம் நீ.. இப்போதாவது உன் எண்ணம் களைந்து என்னோடு வா..நீயும் நானும் கொண்ட ஓர் உலகு.. உனக்கும் எனக்கும் மட்டும்.. எந்த இராஜசிங்கனும் தொல்லை செய்ய முடியாத அமைதி”என்று கூற, அவளோ.. அவனது புருவங்களை இடுங்கச் செய்யுமாக, இவள் பலமாக சிரித்தாள்.
தேவதா திடுக்கிட்டு நிமிர்ந்து மனைவி முகம் பார்க்க, பட்டென அவனில் இருந்து எழுந்து கொண்டவளின் கண்களில், மீண்டும் அதே பழிவெறி!! அதே வன்மம்!! இராஜசிங்கனின் உடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்ளும் எரிமலை வஞ்சம்!!
இதுவரை என்னோடு காதலுடன் சல்லாபித்தது என் மனைவி தானோ..? வேற்றுப் பெண்ணோ? என்று ஐயுற்ற விழிகளுடன் அவன் நிற்க,
அவளோ, காற்றில் அகல கை நீட்டியதும், ஒரு மின்னல்க்கீற்று வானில் தோன்றி.. பலமாக பேரிடி இடித்தது.
அகோரக் கண்களுடன், “வ்வானும், ம்மண்ணும் ம்மறப்பினும்.. என் ப்பழி நான் ம்மறப்பனோ? உங்கள் ஆகிருதியை அழித்த.. இந்த இராஜசிங்கனை என் பத்ரிகாளிக்கு ஆகுதி ஆக்கினால் அல்லவோ. என் ப்பழி தீஈஈரும்” என்று சொன்னதும் மீண்டும் ஓர் அகோர இடி இடித்தது.
கணவனைப் பார்த்தவள், அவனது மூக்கை சுட்டுவிரலால் ஆட்டியவளாக, வாகைச்சிரிப்பு சிந்தியவள்,
எகத்தாளம் நிறைந்த குரலில், “ஹஹஹா.. என் தேவதா… தேவதா!!.. இன்று நம் அதிசய சந்திரகிரகணம் என்பதை.. என்னுள் மூழ்கி முத்தெடுத்த நீர் மறந்தே தான் போனீரோ?? ஹஹஹா.. இந்தக் கூடல் தந்த வலிமை.. அது அவசியமாகிப் போனது உங்கள் ‘அழகு’ நந்தினிக்கு.. இல்லை இல்லை உங்கள் ‘ம்மாய’ நந்தினிக்கு.. உங்களைக் காதல் கடலின் ஆழத்துக்கு இழுத்து வந்து திணறடித்து.. எடுத்துக் கொண்டேன் வேண்டியதை.. ”என்று மீண்டும் நகைத்தவள்,
“இனி இராஜசிங்கனை.. தலைகொய்யும் வழியுத் திறந்தது”என்றுரைக்கவும் செய்தாள் அவள்.
அவள் உதிர்த்த ஒற்றை ‘சந்திரகிரகணம்’ என்னும் சொல்லில், தேவதாவின் முகமோ.. முதன்முதலாக காதல் அற்றுப் போய் முழுமையாக ரௌத்திர வதனமாக மாறிப் போனது.
tadalafil brand name
qoZwpkOIEAGPBV
Interesting epi sis 🥳 😘
Nice story
Interesting .. pls next epi
Super and intresting sis