ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா

[12]

சுமார் இற்றையிலிருந்து இருநூறு வருடங்களுக்கு முன்னர்.. இப்போதிருப்பதையும் விட வெகு அழகாக இருந்தது ‘கண்டி சமஸ்தானம்’. 

நாடுபிடிக்க வந்த வெள்ளையனுக்கு நாட்டின் இதர பிரதேசங்களை விடவும் மத்தியிலுள்ள குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி பிடித்துப் போனதுக்கு காரணமே அதன் நிறைவான அழகே. 

வானெங்கிலும் புகைமண்டலம் எழுந்து கிளம்பினாற் போன்று.. வெண்பஞ்சு மேகங்கள் பவனி வந்து கொண்டிருக்க, அற்றைக்கும் எற்றைக்கும் யௌவனம் குன்றாத நிலவும்.. தன் பால் வண்ண ஒளியை.. பூமியின் மேல் தெளித்துக் கொண்டிருந்தது.. ஆஹா மனோரம்மியம்!! 

நிலவொளியில் காய்ந்து கொண்டிருந்தது.. பனியில் மூழ்கி இன்பம் துய்த்துக் கொண்டிருந்த ஓர் அடர் இருள் கொண்ட கானகம்!! 

பனி போர்த்த கானகம் தனிலே… இனங்காணப்படாத வகையறாவைச் சார்ந்த காட்டுப்பூச்சிகள் பலவும்.. இரையும் ஒலி மெல்லமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 

மூன்றரையடி உயரத்துக்கு எழுந்து வளர்ந்திருக்கும் காட்டுச் செடிகளின் மத்தியிலே.. விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது மின்மினிக் கூட்டமொன்று. 

இருள் சூழ்ந்த கானகத்தில்… துணையாக நிலா மட்டுமே இருக்க, கலக்கத்துடனும், தவிப்புடனும்.. அங்கே வலம் வந்து கொண்டிருந்தன இரு சோடிக் கண்கள். 

அந்த இரு சோடிக்கண்களுள்.. ஒரு சோடி கண்களுக்குச் சொந்தக்காரி நம் நந்தினி. மற்றையவள் நந்தினியின் தோழி ‘கண்ணம்மா’. 

(முதல் அத்தியாயத்தில்.. மகாசேனரின் இறப்புச் செய்தியை திக்கித் திணறியவளாக நந்தினியிடம் கூற முயன்றாளே அதே கண்ணம்மா.) 

இரு பெண்களிலும்.. நந்தினியின் சிலம்பு மாத்திரம்.. அந்த உடல் உறையும் குளிர்க்காற்றிலும் கூட.. இராகம் இசைத்துக் கொண்டிருந்தது தைரியமாக. 

அது ஒரு அபூர்வமான சிலம்பு. அதன் விளிம்பெல்லையில் மணிகள்.. ஒரு குண்டலம் போல பொருத்தப்பட்டிருக்க, அவை உராயும் போது எழும் ஒலி.. ஒருவித இசையாகவே கேட்பார் செவிகளுள் புகும். 

அந்த அபூர்வ சிலம்பு.. அவளுக்கென்றிருந்த ஒரே உறவான தாத்தா விட்டுச் சென்றது. 

அதை மட்டுமா.. அவர் அவளுக்காக விட்டுச் சென்றார்?? இல்லை அவளுக்காக ‘பஞ்சுக்குட்டி’யையும் அல்லவா விட்டுச் சென்றார்!! 

‘பஞ்சுக்குட்டி’ என்பது.. பொசுபொசுவென வெள்ளைப் பஞ்சு மேகத்தால் மேனி போர்த்த உடலும், சிவந்த அழகிய கண்களும், கூரிய காதுகளும் கொண்ட.. அவள் வளர்க்கும் அழகு முயல்!! 

அதனுடன் இருக்கும் போது, ‘யாருமில்லாத அனாதை’ என்னும் துயர் நீங்கி, தாத்தாவே உடனிருப்பதாகத் தோன்றும் அவளுக்கு. 

சில மனிதர்களுக்கு நாயும், பூனையும் எத்தனை முக்கியமாகத் தோன்றுமோ? அதுபோல அவளுக்கு.. அவள் வளர்க்கும் முயல்க்குட்டி. 

அந்தப் பஞ்சுக்குட்டியைக் காணவில்லை என்று தான்.. அடர்ந்த கானகம் தன்னில்… அவள் தன் தோழியுடன் அச்சம் துறந்து வந்திருப்பதே!! 

நந்தினியின் செங்காந்தள் மலரை ஒத்த மென்மையான நயனங்கள், காற்றெங்கிலும் அலைபாய்ந்து கொண்டிருக்க.. அவள் நாசியெங்கும் அந்த வனாந்திரத்தின் ஈரமண் வாசனையும், தாவரங்களின் பச்சை வாசனையும் நிரடிக் கொண்டிருந்தது. 

அவள் அணிந்திருந்த ரவிக்கை இல்லாத சேலை வழியாகத் தெரிந்த உடல் அங்கங்களைக் கண்டு கிளர்ச்சியுற்றானோ வாயு தேவனும்? 

ஈவிரக்கமேயின்றி.. அவள் மேனி தழுவுவதால் கிடைக்கும் அலாதி சுகத்தை மட்டுமே கருத்தில் கொண்டவனாக, கூதல்க்காற்றினால்.. அவளது சருமத்தினை ஊடறுத்து வாட்டிக் கொண்டிருந்தான். 

வேறு நேரமாயிருந்தால்.. வாயு தேவனின் சில்மிஷம்.. இந்த அழகு நந்தினிக்கு உறைத்திருக்கும். 

ஆனால் இன்றோ? அவள் இதயம் அவளது ஆசை ‘பஞ்சுக்குட்டியை’த் தேடி அலைப்புற்றுக் கொண்டிருந்தது. 

குளிரின் வீரியத்தில், துகள் துகள்களாக உரிந்திருந்த அதரங்களோ.. “பஞ்சுக்குட்டீஈஈ.. பஞ்சுக்குட்டீஈ”.. என்று அந்த இருட்டிலும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. 

அவள் கண்கள் அந்தக் கானகத்தின் புதர்ப்பற்றைகள் எங்கும் தேட, தோழி கண்ணம்மாவுக்கோ இலங்கை காடுகளில் பரவலாகக் காணப்படும் ‘காட்டுப் பன்றிகள்’ பின்னாலிருந்து தாக்குமோ என்ற அச்சம்!! 

அதனால் கண்ணம்மா மட்டும்.. அதிகளவாக தேடுதல் வேட்டையில் இறங்கி விடாமல்.. நாலாபுறமும் கண்களைச் சுழற்றிக் கொண்டேயிருந்தாள்.. ஒரு அச்சத்துடனேயே. 

எங்கு தேடியும் கிடைக்காத தன் தாத்தாவின் ஆசைப்பரிசு தொலைந்து போனதில் இதயம் நொந்து போனவள், தோழியை நோக்கி சோகமான குரலில், “கண்ணம்மா… என் பஞ்சுக்குட்டி எங்கே சென்றது?? நிச்சயம் நரிதான் அடித்துத் நின்றிருக்கும்.”என்றவளின் கைகள்.. சேலையின் நுனியை ஆற்றாமை தாளமாட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தது. 

அந்த் திரட்சியான கண்களில் இருந்தும் வழிந்தது… கண்ணீர். 

தோழி அழுவதைப் பொறுக்க மாட்டாத கண்ணம்மாவோ, “ஐயோ இல்லையடி நந்தினி.. இந்தக்காட்டில் ஏது நரிகள்?? உன் பஞ்சுக்குட்டிக்கு ஏதும் ஆகியிருக்காது.. இருட்டில்.. அச்சத்தில் எங்காவது ஒழிந்திருக்கும்.. காலையில் விடிந்ததும் உன்னைத் தேடி வந்து விடும்… நீ வா..”என்று நந்தினியின் முன்னங்கைப் பிடித்து இழுத்தவள்,

 அங்கிருந்து மனித சஞ்சாரமுள்ள.. குடில்கள் நிறைந்த பகுதிக்கே அவளை அழைத்துச் செல்ல.. இல்லையில்லை.. இழுத்துச் செல்ல நாடினாள் கண்ணம்மா. 

நந்தினிக்கோ.. இதயத்தில் இருந்து எழுந்த வலி.. தொண்டையில் தேங்கி.. மூக்குநுனி செக்கச் செவேலென சிவக்க, அழுகை விம்மிக் கொண்டு வரும் போல இருந்தது. 

எப்படியெல்லாம்.. ஒரு குழந்தை போல காத்தாள் அவளது பஞ்சுக்குட்டியை?? 

எங்கே சென்றது?? திரும்ப வருமா? மீண்டும் பொருமியது பெண்ணவளின் நெஞ்சம். 

கண்ணம்மா இழுத்த இழுப்பில்.. அந்த மேட்டுப்பாங்கான கானகம் கடந்து.. பள்ளத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கையிலே.. எதேச்சையாக இடது பக்கம் திரும்பியவளின் கருமணிகளில் அக்னி ஜூவாலையின் விம்பம்!! 

ஆம்.. அந்த அர்த்த இராத்திரியில்.. கானகமே பற்றியெரிந்தாற் போன்று, செம்மஞ்சள் நிறத்தில்.. தீச்சுவாலை பறக்க, நந்தினியின் நடை தானாக தடைப்பட்டு நின்றது. 

அவள் மெல்ல திரும்பிப் பார்த்த வேளை.. அங்கே அவள் கண்ட காட்சி… அவளை திகைப்பூண்டை மிதித்தாற் போன்று ஆக்கி, அவளை ஸ்தம்பித்து நிற்கவும் வைத்தது. 

அங்கே.. அந்த கானகத்தின் இராட்சத மரங்களையும் கூட சிறியதாக்கும் வகையில், ஒரு கருங்கல்லில் குந்தி அமர்ந்திருந்தான்.. அவளுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத.. ஆயினும் ஊரே பயந்து நடுங்கும் மகாசேனர். 

அவனுக்கு எதிரே அந்த வனாந்திரத்தின் காய்ந்த சுள்ளிகளின் குவியல் இடப்பட்டு.. அவற்றுக்கு நெருப்பும் மூட்டப்பட்டிருக்க, அந்த தீச்சுவாலை ஒளியில்.. அந்த அரக்கன்.. ஒரு தங்கமுலாம் பூசிய ஐய்யனார் சிலை போல மிளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள் நந்தினி. 

எல்லாரும் அவனது இராட்சத உடலைக் கண்டு நடுங்க.. ஆள் அண்டாத கானகத்திலே.. மகாசேனரைக் கண்டு இவளும் பயந்தாளா என்ன?? 

இல்லவேயில்லை. அந்த மாபெரும் உடலை சற்றே அருகாமையில் பார்த்ததும் ஒரு சின்ன மலைப்புத் தான் தோன்றியது அவளுக்கு. 

ஆயினும் அவன் அருகாமையில்.. அவன் அமைத்த தீப்பந்தலுக்கு மேலே.. ஒரு மரக்குச்சியில்.. உயரத்தில் கட்டப்பட்டிருக்கும்.. தோலுரிக்கப்பட்ட முயலொன்று தொங்கிக் கொண்டிருப்பதைக் காணவும், அந்த மெல்லியலாளின் உள்ளம் அப்படியே வெடவெடத்துப் போனது. 

இது எல்லாவற்றுக்கும் மேலாக, நெருப்பின் சூட்டில் சுடப்பட்ட முயலை.. இந்த இராட்சத உருவம் கொண்ட மகாசேனர்.. அதன் கால்களை இழுத்துப் பிய்த்துச் சாப்பிட, நந்தினிக்கோ இதயத்தின் துடிப்பும் கூட அற்றுப் போகும் போல இருந்தது. 

‘ஐயோஓஓ…அ..அது..அவளது பஞ்சுக்குட்டி..’ என்று இதயம் வேறு அவளுக்கு எடுத்துரைக்க, ஆசை ஆசையாக வளர்த்த முயலை.. ஒரு அரக்கன் சாப்பிடக் காணவும், இமைகள் ஓரம் நீர்க்கட்டத் தொடங்கியது. 

அவளால் அந்த அகோரக் காட்சியை கண்கள் விரித்து நின்று பார்த்திருக்க முடியாமல் போக, இரு உள்ளங்கைகளாலும்.. தன் மதி போன்ற வதனத்தை மறைத்துக் கொண்டு.. குமுறிக் குமுறி அழலானாள் நந்தினி. 

தோழி மகாசேனரையும், முயலையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, ஆற்றாமை தாளாமல் கண்ணீர் வடிப்பதைக் கண்ட கண்ணம்மாவுக்கும் கூட,

 நந்தினியை எவ்வகையில் தேற்றுவது என்றறியாமல் போக, கண்ணம்மாவோ.. பாவம். கையைப் பிசைந்து கொண்டு நிற்கத் தலைப்பட்டாள். 

ஓர் பேரழகுப் பெண்.. தான் கொஞ்சம் முரட்டுத்தனமாக உணவருந்தும் காட்சியைக் கண்டு அழுவது அறியமாட்டாத.. உள்ளத்தால் குழந்தை உள்ளம் கொண்ட அந்த இனிய இராட்சசனின்.. கூரிய செவிகளில்.. விழுந்தது ஓர் பெண்ணின் விசும்பல் ஒலி. 

முயலின் ஊனை பற்களால் இழுத்துக் கடிக்கப் போன மகாசேனனின்..செய்கை நின்ற தருணமும், இவளும் தன் உள்ளங்கையில் புதைத்த வதனம் எடுத்து அவனை வெறித்துப் பார்த்த தருணமும் ஒன்று. 

நந்தினியின் விழிகளும், மகாசேனனின் விழிகளும் முதன்முறையாக.. ஒரு நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன. 

அவளுக்கோ… அவனைக் காணக் காண உடல்வேறு பற்றியெரிய, தன் உள்ளங்கையில் சேலையின் இருமுனைகளையும் அதக்கிக் கொண்டு நின்றவள்.. மகாசேனரையோ சுட்டெரிப்பது போல பார்த்துக் கொண்டே நின்றாள். 

ஆனால் மகாசேனனுக்கோ.. அந்த கானகத்தில்.. அதுவும்.. ஒரு ஐந்தரையடி ரோஜா மலருக்கு கை, கால் முளைத்தது போல அத்தனை கொள்ளை அழகுடன் இருக்கும் அவளைப் பார்த்ததும்.. அந்த அழகில் சின்ன ஸ்தம்பிப்பு. 

இதுவரை எந்த பெண்ணுமே.. தன்னை நிமிர்ந்து கண்கொண்டு பார்க்க திராணியற்று… தலைகுனிந்து ஓட.. தன் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்.. அந்தப் பெண்ணின் தைரியத்தில் சின்ன திகைப்பு. 

அதன் பின்னர்.. அவளது நாசி நுனி செர்ரிப்பழம் போல சிவக்க.. அவள் நின்ற தோரணையில் ஓர் கழிவிரக்கம்.. அதற்கும் மேலாக.. கண்களில் வழியும் கண்ணீர் கண்டு ஒரு கலக்கம் என கலந்துபட்ட உணர்வில்.. நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தான் மகாசேனன். 

இருவரும் இருவேறுபட்ட உணர்ச்சிகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க, மகாசேனனுக்குத் தான்.. அவளது அழுகையையும், கண்ணீரையும் கண்டு ஒரு நெருடல். 

‘இந்தப் பெண்ணுக்கும் பசிக்கிறதோ? அதனால் தான்.. அவனையே பார்த்த வண்ணம் நின்றிருக்கிறாளோ?’ என்று தோன்ற, கையில் இருந்த முயல் ஊனை அவள் பக்கம் நீட்டி, ‘உனக்கும் வேண்டுமா?’.. என்பது போல அவன் மௌனமொழியிலேயே கேட்க, 

‘தன் பஞ்சுக்குட்டியை கொன்றது மாத்திரமல்லாமல், அதன் ஊனை அவளுக்கும் தர எண்ணுகிறானே பாவீஈஈ’ என்ற சிந்தனையும் பிறக்க, அந்த மெல்லியப் பெண் நந்தினிக்கோ.. தன்னையும் மீறி இன்னும் கொஞ்சம் அதிகமானது அழுகை.

பக்கத்தில் இருந்த கல்லைத் தூக்கி.. அந்த இராட்சதனின் நடுமண்டையிலேயே விட்டெறிய வேண்டும் என்ற வெறி.. நொடிக்கு நொடி அதிகமாக.. அவள் தனங்கள் ஏறி இறங்க ‘மூசுமூசு’ என்று மூச்சுவாங்கிக் கொண்டிருந்தவளின்.. எண்ணவோட்டங்களை அச்சொட்டாகப் படித்த கண்ணம்மாவுக்கு.. துணுக்குறத் தொடங்கியது கைகால்கள் எல்லாம். 

அதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன்னர், உடும்புப் பிடியாக.. நந்தினியின் வளைகையினைப் பிடித்து இழுத்தவள், நந்தினி திமிறத் திமிற.. அந்த கானகம் கடந்து.. மனிதர்கள் வசிக்கும்.. குடில்களை நோக்கி அழைத்து வந்த பின்னும் கூட.. நந்தினியின் கைகளை விடவேயில்லை. 

நந்தினி பஞ்சுக்குட்டியை இழந்து தவித்த நாள் அன்று. அவள் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்த நாளும் அன்று. 

தன் குடில் வந்து சேர்ந்தவள்.. தன் கயிற்றுக் கட்டிலில்.. கருவறைக் குழந்தை போல சுருண்டு படுத்தபடி அவள் அழுத அழுகை?? 

அந்தக் குடிலின் நாற்சுவர் தானும் இலகுவில் மறக்க முடியாத.. ஓயாத அழுகை அது. 

அவளது மென்மையான இதழ்களோ, அன்றிரவு முழுவதும், அழுது அழுது தேம்பிய குரலில், “பா.. ப்பா.. வம் பஞ்சுக்குட்டி.. போயும் ப்போ.யும்.போ…. ஒரு அப்பாவி முயலை சாப்..பிட எப்படி மனசு வந்தது அவனுக்கு?. சரியான அரக்கன்!!. என் பஞ்சுக்குட்டி..” என்று அவள் அழுது தீர்க்க, இரவு கழிந்து காலையான பின்பும் கூட.. தூக்கம் என்பது ஒரு துளியும் கூட வரவில்லை அவளுக்கு. 

அவள் ஆசையாக வளர்த்த பஞ்சுக்குட்டியின் இழப்பினை.. குமரிப் பெண்ணான பிஞ்சு உள்ளம் கொண்ட நந்தினிக்கு தாங்க முடியவில்லை. 

கூடவே.. அந்த மகாசேனனை நினைக்க நினைக்க… உள்ளுக்குள் கடும் கோபமும், வெறுப்பும் எழுந்து பரவியது அவளுக்கு. 

அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும். மறக்க முடியாதளவுக்கு.. ஏதாவது செய்ய வேண்டும் என்றே தோன்ற, அவளால் மகாசேனனுக்கு தகுந்த பாடம் புகட்டாமல் அமைதி காண முடியவில்லை அவளுக்கு. 

இது தான் நந்தினி. தான் ஆசை வைத்த எந்த பொருளினதும்.. இழப்பையோ, பிரிவையோ ஒரு சிறிதும் தாங்கமாட்டாத நந்தினி. 

அந்த இழப்பும், பிரிவும் செயற்கையாக விளைவிக்கப்பட்ட ஒன்றானால்.. அதற்கு தகுந்த பழியை வாங்காமல்.. உள்ளம் நிலைகொள்ளாமல்.. அமைதியின்றி தவிக்கும் குணம் கொண்ட நந்தினி!! 

இத்தனை வெறுப்பு கொண்ட ஒரு அரக்கன் மீது.. உடலும், உயிரும் இரண்டறக் கலக்கும் வண்ணம் காதலாகி.. பின்னாளில் அவனது இழப்புக்காக.. ஒரு அரச வம்சத்தையே..தான் இறந்த பின்னும் கூட சாந்தியடையா ஆத்மாவாக மாறி.. காவு வாங்கப் போவது கூட அறியாமல்.. அந்த இராட்சசனைப் பழிவாங்க திட்டம் தீட்டினாள் மாது. 

*****

அடுத்த நாள் முற்பகல் வேளை. 

சூரியனை எதிரிகளாகக் கொண்டனவோ.. குளிர்வலய காடுகளும்?? 

சூரியனின் ஒளி.. தங்கள் கானக எல்லைக்குள் புகாத வண்ணம் தம் கிளைகள் என்னும் கேடயம் நீட்டி.. சூரிய ஒளியைத் தடுத்துக் கொண்டிருந்தன அவைகள். 

ஆயினும் அவர்களின் எதிராளியோ.. உலகையே தன் பொற்கிரணங்களால் நனைய வைக்கும் சூரியன் அல்லவா? 

கானகத்தின் கிளைக்கேடயங்களைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே புகுந்திருந்தாலும் கூட, ஒருவகை இருள் சூழ்ந்ததாகவே இருந்தது அந்த ஆள் அண்டாக் காடு!! 

அந்த ஆள் அண்டாக் காட்டில்.. யாருக்கும் அதிகம் புழக்கமில்லாவிட்டாலும் கூட, அந்த இராட்சசன் மகாசேனனுக்கு புழக்கம் அதிகமாகவே உண்டு. 

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் புதையல் இருக்கும் இடத்திற்கு செல்லும் ஒரு சுரங்கப்பாதை.. அந்த கானகத்தின் தான் உண்டு. அது மிகவும் இரகிசயமானது. அந்தரங்கமானது. 

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் வலதுகைகளை எல்லாம், வெள்ளையர்கள் பொறி வைத்துப் பிடித்துக் கொண்டிருக்க, இவன் மட்டும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு வலம் வந்து கொண்டிருப்பதுவும் கூட.. இந்தக் கானகம் அவனுக்கு அடைக்கலமாக இருப்பதனால் தான். 

அன்று முற்பகல்.. அரசனின் ஆணையின் பேரில்.. யாரும் அறியா சுரங்கப்பாதை வழியே.. நிலவறை அடைய.. அவன் அரவமே எழுப்பாது நடந்து கொண்டிருந்த சமயம் தான்.. அவன் வாழ்வில் என்றுமே எதிர்பாராதது நடந்தது. 

மேல்சட்டை எதுவும் போடாத வெற்று மேனியுடன்.. அதுவும் இரு மலைகளை அருகருகே வைத்தாற் போன்று என்று கம்பன் இராமனை வர்ணித்தாற் போன்று..

 திண்ணிய தோள் புஜத்துடன், பரந்த மார்புடன்.. முறுக்கேறிய கைத்தசைகளுடன்.. இடுப்புக்கு கீழே… கரண்டைக்கால் வரை சிங்களவர்கள் பாணியில் ஒரு தோட்டியுடன்.. இடையில் ஒருகுறுவாளுறையுடன்.. ஒரு போர்வீரனுக்குத் தேவையான அத்தனை லக்ஷணங்களுடனும் இருந்தான் மகாசேனன். 

சுரங்கப்பாதையின் நுழைவாயில் நோக்கி.. அவன் அநாயசமாக நடந்து சென்ற கணம்.. இலேசாக சிலம்பு மணிகளின் உராய்வு காற்றில் கேட்க.. யாரோ.. நடமாடும் சலசலப்பு சப்தம் கேட்டது அவனுக்கு. 

மகாசேனன் அடுத்த எட்டு எடுத்து வைக்காமல் அப்படியே நின்றான். அவனது கழுகுக் கண்களோ.. சலசலப்பு திசை நோக்கி இடம்பெயர்ந்து உன்னிப்பாக ஆராய, பாம்புக் காதுகளோ.. அடுத்த சப்தத்துக்காக பரபரப்புடன் காத்திருக்கலானது. 

யார் இது?? வெள்ளையர்களின் ஒற்றையர் பிரிவில் யாராவது இருந்திருக்கக் கூடுமோ? 

அவனைப் பின்தொடர்ந்து வந்ததை அறியாமல்.. சுரங்கப்பாதை திசை நோக்கி வந்தது எத்தனை பெரிய மடத்தனம்?? என்று அவன் மனதளவில் நொந்தவனாக நின்ற போதிலும் கூட.. அவனது இராட்சச உடலோ.. எதிர்த்தாக்குதலுக்காக எவ்வகையிலும் விழிப்பாகவே இருந்தது. 

மீண்டும்.. தரையில் கிடந்த காய்ந்த சருகுகளை மிதித்த வண்ணம் யாரோ.. ஓடுவது போல பிரம்மை தோன்ற.. மரங்கள் அசைந்த திசையை நோக்கி ஓடியவனின் கண்கள்.. ஒரு பெரிய மராமரத்துக்குப் பின்னே ஒழிந்திருந்த.. காற்றில் ஆடிக் கொண்டிருந்த துணிக்கற்றையைக் கண்டு கொண்டன. 

அவன் கண்களுக்கு மறைத்து உடலை பதுக்கத்தெரிந்த அந்த அப்பாவி எதிராளிக்கு.. அந்தோ பரிதாபம்.. மகாசேனனின் கூரிய விழிகள் இருந்து.. அந்த அணுவளவு துணிக்கற்றையைத் தானும் மறைக்கத் தெரிந்திருக்கவில்லை. 

வந்தது யாராக இருந்திருந்தாலும் கூட.. அது அவனை மறைந்திருந்து தாக்க நாடும் எதிராளி என்பது புரிந்து விட,தரையில் கால்களை அகல நீட்டி அழுந்தப் பதித்து நின்றவனுக்கு, ‘இவன் ஒருவன் தானா? இல்லை இவனோடு ஒரு கூட்டமே இருக்கின்றதா?’ என்ற கேள்வி நிலைத்தது. 

மரத்துக்குப் பின்னால் ஒழிந்து நிற்பது ஒருவனேயானால்.. அவனால் வெற்றுக்கைகளால் அநாயசமாக பந்தாடிவிட முடியும். ஆனால் வந்திருப்பது ஒரு படையேயானால்?? 

வேகமாக யோசித்தவன், அடுத்த தாக்குதலுக்கு தன்னைத் தானே சமாளித்துக் கொண்டவனாக, சரேலென்று தன் இடைக்கச்சையில் இருந்து குறுவாளை உருவியெடுத்த மகாசேனன்… அவன் பாதங்களுக்கு கீழ் மிதிபடும் காய்ந்த சருகுகளுக்கும் வலிக்காத வண்ணம் மெல்ல நடந்தான். 

அடி மேல் அடி வைத்து.. அந்த மராமரத்தண்டை நாடிப் போனவனின் கைகள்.. காற்றில் ஆடிய துணிக்கற்றையைப் பிடித்து மின்னல் வேகத்தில் இழுக்க.. அடுத்த கணம்.. அவனது வலிய கரங்களுக்குள் அடைக்கலமாகியிருந்தான் எதிராளி. 

இல்லை.. அடைக்கலமாகியிருந்தாள் எதிராளி. ஆம். பெண்பால் வினைப்பதம் தான் சாலப்பொருந்தும். 

அங்கு நின்றிருந்தது என்னமோ ஒரு பெண். 

ஏதோ வேகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மகாசேனனுக்கு, அது பெண்ணென்று அறிந்ததும்.. இதுநாள் வரை ஏற்படாத அவஸ்தை ஏற்பட்டு நிற்க வைத்தது என்னமோ விதி. 

மகாசேனனின் இராட்சசக் கைகளில் ஒன்று.. எதிராளியை பின்னிருந்து சுற்றி வளைத்து, வயிற்றைப் பிடிக்க நாட.. மறுகைகளில் ஒன்று..

 எதிராளியின் கழுத்தில் கத்தியை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. 

அவனது எதிராளியோ.. சராசரி ஆண்களை விடவும் உயரம் குறைவாக இருக்க, அவ்வாண்களின் வயிறு அமையும் இடமெனக் கருதி என்று அவன் எண்ணிப் பிடித்தது.. வேறோர் இடத்தை. 

 உள்ளங்கைகளோ.. நந்தினியின் இடது பக்க தனத்தினை வலு கொண்ட அழுத்திப் பிடிக்கலானது. 

அந்த அழுத்தத்தின் வலியைத் தாங்க முடியாத பெண்மையோ,தன் மெல்லிய குரலில், “ஸ்ஸ்ஸ்ஆஆ”என்று அலறியதும் சரி, 

ஓர் ஆடவனின் வன்மையை அவ்விடங்களில் எதிர்பார்த்திருந்த மகாசேனன்… எதிர்பாராமல்.. ஒரு பஞ்சன்ன அழுத்தத்ததை உணர்ந்ததும் சரி..

எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த பூங்காரிகையின் அடர்ந்த கூந்தலில் இருந்து வந்த மல்லிகை மணமும் சரி.. அது ஓர் பெண் என்பதை உணர்த்த, 

அவன் ஒரு பெண்ணிடத்தில் எல்லை மீறியிருப்பது புரிய, மகாசேனனின் உள்ளங்கையில் ஒருவித நடுக்கம் பரவலானது. 

அது ஓர் ஆணாக இருக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்த்திருந்தவனுக்கு, ஒரு பெண்ணை.. அத்துமீறித் தொடுவது இது தான் முதல் அனுபவம்!! 

அந்த பஞ்சுத் தேகத்தின் பின்னழகுகள்.. தன் உடலோடு அழுந்துபட்டத்தில்.. ஒரு பதற்றம், பரபரப்பு என எல்லாமும் சேர்ந்து.. அவனது பிடியைத் தளர்த்திய வேளை, சற்றும் எதிர்பார்த்திராதவாறு.. 

சற்றே குனிந்து.. அவனது கையினை தன் பற்களால் அழுந்தக் கடித்தாள் அந்தப் பெண். 

அவனோ வலியில் இலேசாகத் துடித்த வண்ணம் நிமிர்ந்து.. அந்த மங்கையைப் பார்க்க, காற்றில் பாவிய கூந்தலை சுழற்றி.. தன் மதிமுகத்தை மகாசேனனுக்கு காட்டினாள் அவள். அவள் நந்தினி!! 

நேற்றிரவு கண்ணீரும் கம்பலையுமாக அவன் கண்ட அதே பேரழகுப் பெண்!! 

எதற்கு அழுது கொண்டே செல்கிறாள்??? என்ற குழப்பத்தையும், அவள் கண்ணீர் கண்டதால்.. ஏனென்றே விபரிக்க முடியாத வருத்தத்தையும் மனதோடு விளைவித்து விட்டுச் சென்ற அதே ரவிக்கை இல்லாத சேலைக்காரி. 

அவளை வெகு வெகு அருகாமையில் பார்த்ததும்.. அந்த இனிய இராட்சசனுக்கு உள்ளூற ஏதோ செய்தது. அவளது கடி மறந்து போய்..அந்த பெண்ணின் மயிரடர்ந்த விழிகளையே.. ஸ்தம்பித்துப் போனவனாகப் பார்த்தபடியே இருந்தான் மகாசேனன். 

அந்த கணம்.. ஓரெட்டுப் பின்னே நகர்ந்தவனுக்கு, பாதங்களில் கல் தடுக்குண்டு.. கால் இடறி.. அவன் பின்னே சாய, “சரசர” என்ற பெருத்த ஒலியுடன், சருகுகள் அடர்ந்த ஒரு குழிக்குள் வீழ்ந்தான் அரக்கன். 

அது ஒரு நான்கரையடி உயர குழி!! அவன் இடுப்பளவு வரையுமே இருந்தாலும் கூட.. அவனுக்கு எந்தவிதமான பாதகத்தையும் கொடுத்திருக்காவிட்டாலும் கூட, 

வேடன் வலைக்குள் அகப்பட்ட சிங்கம் போல.. அந்தக் கானகமே அதிரக் கர்ஜித்தான் இனிய இராட்சசன். 

அவன் வீழும் வரை தான் காத்திருந்தாளோ நந்தினிக்கோ.. அவனது கர்ஜனை ஒருசிறிதும் அச்சத்தை விளைவிக்கவேயில்லை. 

மாறாக அவன் விழுந்ததும் தான் அவளுக்கு என்னேவொரு ஆனந்தம்?? 

பொற்காசுகளைத் தரையில் சிதற விட்டால் ஒரு நாதம் பிறக்குமே?

அது அனைய அவள் கலகலத்துச் சிரிப்பது கேட்க,குழிக்குள் வீழ்ந்த கோபம், பட்டென்று அற்றுப் போனவனாக.. அந்த மங்கையையே.. இரசித்துப் பார்த்திருந்தான் அவன். 

இடுப்பில் கை வைத்த வண்ணம் நிற்கும் நந்தினியின் பாதங்கள் அந்த இராட்சசனின் கண்பார்வைக்கு வெகு அருகாமையில். 

செவ்வரலி மொட்டை போன்ற சிவந்த, ஒரு அப்பழுக்கற்ற.. இயற்கையாக பளபளக்கும்.. நேர்த்தியான விரல்கள் கொண்ட பாதங்கள் இந்தப் பெண்ணுக்கு. 

இதுவரை எந்தப் பெண்ணையும் அத்துமீறிப் பார்த்திராத அவன் கண்கள் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டன. 

மெல்ல மேலேறி.. பளபளவென்று தோள் சீவிய பப்பாளிப் பழம் போல இருந்த அவளது ஆடுதசைக் கால்களைக் காண, என்னவென்னவோ.. செய்தது அவனுக்குள். 

‘இனிக்குமா? என்று தாவிக் கடித்துப் பார்த்தால் தான் என்ன?’ ஒரு குதர்க்கமான யோசனையும் எழுந்தது அவனுக்குள். 

நாடி, நரம்பெங்கும் புது இரத்தம் பாய்ந்து.. உடல் முறுக்கேறுவது போல ஒரு அவஸ்தை!! 

எந்தப் பெண்ணைப் பார்த்திருந்த போதும் தோன்றாத அவஸ்தை அது. 

அந்த ஆடுதசைக்கால்களை அத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, காதுகளில் மதுரகானமாக அவள் குரல் ஒலிக்கவும், அவள் வதனத்தை அண்ணாந்து பார்த்தான் அவன். 

அவளோ வெற்றிக் களிப்புச் சிரிப்பு முகமெங்கனும் தாண்டவமாட, “ஹஹஹஹா… நன்றாக வேண்டும்!! நான் வெட்டிய குழிக்குள் நீரும் விழுந்தீரோ??? .. என் பஞ்சுக்குட்டியை நோவினை செய்தீர் அல்லவா?? நன்றாக வேண்டும் உமக்கு… ஹஹஹா…”என்று மீண்டும் சிரித்தாள் அவள். 

அப்பாவி மகாசேனனுக்கோ ஒன்றும் புரியவில்லை. 

அதிலும் அவள், ‘என் பஞ்சுக்குட்டியை நோவினை செய்தீர் அல்லவா?? நன்றாக வேண்டும்’ என்று சொன்னது காதில் திரும்பத் திரும்ப ஒலிக்க, ஒன்றும் அறியாத மகாசேனனோ அதனை வேறுமாதிரியாக கற்பிதம் செய்து கொள்ளவும் செய்தான்.

சிறிது நேரத்திற்கு முன்.. அவன் கைகளில் நசுங்குண்ட ‘பஞ்சு போன்ற முன்னெழில்களின்’ ஞாபகம் வர.. அதைத் தான், ‘என் பஞ்சுக்குட்டியை நோவினை செய்தீர் அல்லவா?’என்று சொல்வது போலவும் இருந்தது அவனுக்கு. 

“என்ன சொல்கிறாய் பெண்ணே..?”-புருவங்கள் இடுங்க, கேட்டான் அவன். 

இடுப்பில் வைத்த கையை எடுக்காமல், அவனை வெறித்துப் பார்த்தவள், “ஆமாம் செய்வதையும் செய்து விட்டு.. அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்வதைப் பார்.. ஏமாற்றுக்காரன்!! .. இனி எந்த ம்முயலையும் தொடக்கூடாது..”என்று விழிகள் விரித்து, சுட்டுவிரல் காட்டி.. எச்சரிக்கை செய்து விட்டு.. அவள் அகல, 

தன்னிதழ்களில் தவழும் வெளிரங்கமான குறும்புன்னகையுடன், அதிமிதமாக ஆடி, அசையும் அவளது பின்னெழில்களைப் பார்த்த வண்ணமே குழிக்குள் நின்றிருந்தான் அவன். 

தன்னை முதன் முறையாக.. எதிர்த்து நின்ற அந்த அழகுப் பெண்ணின் சூட்சுமம்.. மகாசேனருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 

அந்த அழகுப் பெண்ணின் சூட்சுமக் குழிக்குள்.. அன்று விழுந்தவன் விழுந்தவன் தான்.. இறந்த பின் தேவதா ஆன பின்னரும் கூட எழமுடியாமலேயே நிற்கின்றான் அவன். 

*****

அன்று பொழுது சாயும் இரவினில்.. தன் தோழி கண்ணம்மாவுடன், விறகடுப்பிற்காக.. காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்க.. மீண்டும் அந்த அடர்ந்த கானகத்தை நோக்கி அவள் பயணப்பட்ட போது, 

நந்தினிக்கோ.. அவளையும் மீறி.. அவள் கண்கள்.. குழிக்குள் வீழ்ந்த மகாசேனரின் பக்கமாகவே விரைந்தது. 

குழிக்குள் இருந்து சென்றிருப்பானா? இல்லை இன்னும் இருக்கிறானா?? என்ற குழப்பத்துடனேயோ.. தலையில் தூக்கி வைத்த, சுள்ளிக்கட்டுடன் தன் குறுகிய இடை.. அழகாக அசைந்தாட நடந்தான் அவன். 

 தோழி கண்ணம்மாவோ.. பொழுது சாய்ந்ததும் தமையன் உணவுக்காக வந்திருப்பான் என்ற பதற்றத்தில்.. நந்தினியை திரும்பிப் பாராமலேயே.. அவளை விட்டும் அரை காததூரம் முன்னாடி நடக்க.. நந்தினியோ பின்னாடி நடந்து சென்று கொண்டிருந்த கணம்.. 

அவளது முன்னங்கையில் வன்மையைப் பிரயோகித்து இழுத்தெடுத்தது ஓர் கை. 

இவளோ பதற்றத்துடன் தனக்கு என்னானது? ஏதானது? என்று புரிந்து.. சமாளிப்பதற்குள்.. தன் முன்னே நின்றிருந்த ஒரு இராட்சத உருவம்..

அவளை மராமரத்தண்டில் வலிமையாகச் சாய்த்து நிறுத்தி, அவள் எங்கும் செல்ல முடியாத வண்ணம் தன் கைகளால் அணைகட்டி நிற்பதையும் கண்டவள் அதிர்ந்து போனாள். 

அவன்..அவள் முன்னாடி நின்றிருப்பது.. அவளால் குழிக்குள் வீழ்த்தப்பட்ட தம்பதிவனத்தின் சிங்கம்!! 

‘என்ன செய்வான்?’என்று நடுங்கிய உடலுடன், அவள் நின்றிருப்பாள் என்று நீங்கள் எண்ணியிருந்திருப்பின் அது தவறு. 

‘என்ன செய்து விடக்கூடும்?’ என்ற தெனாவட்டுடன் அவள் நேர்கொண்ட பார்வை பார்த்தவளாக நின்றிருக்க, அவளது தைரியம் கூட ரொம்பவே பிடித்திருந்தது அவனுக்கு. 

புசுபுசுவென பஞ்சன்ன தேகம் கொண்ட.. ஒரு குட்டி முயலை.. காதோடுத் தூக்கியுயர்த்தி, அவள் முன் காட்டியவன், . 

“இது.. தான் உன் பஞ்சுக்குட்டியா?”என்று புருவங்கள் உயர்த்திக் கேட்க,அந்த முயலைக் கண்டதும் அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழியலானது. 

உடலில் சொல்லவொண்ணா மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுக்க, சிரிக்கும் இதழ்களுடன், “அய் பஞ்சுக்குட்டி..” என்று அதனை இரு கைகளாலும் அள்ளி எடுத்தவள், அவன் நினைத்த அந்த ‘ பஞ்சுக்குட்டி’யோடு இணைத்து அணைத்துக் கொண்டவள், அந்த முயலுக்கு மாறி மாறி முத்தம் வைக்கவும் செய்தாள்.

அவள் இதழ்கள் குவிந்து.. முயலை முத்தமிட்ட தினுசைப் பார்த்ததும்.. அந்த முத்தங்கள் தனக்குத் தரப்பட்டால்?? என்ற சிந்தனை எழ, ஏங்கியது அவன் உள்ளம்!! 

கூடவே கண்களில் ஒரு கிறக்கம் எழுந்து பரவ, தன் பிடரிமியரை அளைந்தவனாக வேறெங்கோ பார்த்தபடி, “நீ நேற்று ‘உன் பஞ்சுக்குட்டியை… நான் நோவினை செய்துவிட்டேன்’..என்று சொன்னதும் நான் வேறு நினைத்தேன்.. என் பிடி வலித்து விட்டதோ என்று பதறவும் செய்தேன்” என்று முணுமுணுத்தான் மகாசேனன். 

நந்தினியோ.. பட்டென்று விழிகள் உயர்த்தி..அவன் விழிகளை ஒரு நிமிட ஆக்ரோஷத்தில் பார்த்தாலும்.. அந்த இராட்சசனின் விழிகள் இருந்த ஏதோ ஒன்று.. அவளைக் கட்டிப்போட, அமைதியாக தலைகுனிந்தாள்.. அந்த விழிகளைப் பார்க்க முடியாமல். 

அவளையே ஆகர்ஷிக்கும் விழிகளுடன் பார்த்திருந்தவனுக்கோ.. அவளது தலைகுனுவிற்கான உண்மைக் காரணமான நாணம் புரிந்தது. 

அதனால் கண்களில் குறும்பு தவழ, “நான் சாப்பிட்டது எல்லாம் உன் பஞ்சுக்குட்டியாகவே இருந்திருக்க வேண்டுமா..? அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.. அது போல உன் கண்ணுக்கு காண்பதெல்லாம் பஞ்சுக்குட்டியாகத் தெரிந்திருக்கிறது”என்று சொல்ல, அவள் நேற்று செய்த தப்பு புரிய, அவள் முகத்தில் அப்பட்டமாக அசடு வழிந்தது. 

“என் பஞ்சுக்குட்டி எங்கே இருந்தது?”-கோபமும் இன்றி, சந்தோஷமும் இன்றி.. ஒருவித மெல்லிய குரலில் கேட்டாள் அவள். 

அவளது காணக் காணத் திகட்டாத விழிகளைப் பார்த்துக் கொண்டே, மிருதுவான குரலில், 

“அது.. நம் நாட்டின் ஆதிக்குடிமக்கள் விரித்த வலையில் அகப்பட்டு.. அவர்கள் கடவுளின் பலிபூஜைக்கு அர்ப்பணிக்க சித்தமாகியிருந்தது.. நான் சென்று..அவர்கள் அறியாமல் உன் பஞ்சுக்குட்டியை விடுவிக்க நாடியதும்.. உன் பஞ்சுக்குட்டி என்னை தவிக்க விட்டு விட்டு புதர்ப்பற்றையில் ஓடிப் போய் ஒழிந்து கொண்டது.. நான் மாட்டிக் கொண்டேன்..அவர்கள் கடவுளுக்கு என்னை நரபலி கொடுக்க சித்தமானார்கள்”என்று அவன் சொல்லி முடித்ததும்.. அந்த நயனங்கள் அச்சத்தில் படபடத்ததை இமைக்காமல் இரசித்தான் அவன். 

கூடவே அவன் கண்கள் மெல்ல கீழிறங்கி.. அந்த தேனூறும் இதழில் போதையுண்ட வண்டு போல நிலைக்க, “நான் செய்த புண்ணியம்.. உன் வாயால் கடி வாங்கியது.. பற்தடம் இருப்பதைக் கண்டு.. நான் குற்றமுடையவன் என்று விட்டு விட்டார்கள்.. உன் பஞ்சுக்குட்டியோடு.. உன்னைக் காண வந்தேன்”என்று அவன் சொல்ல, ‘கெட்டதிலும் ஓர் நல்லது நடந்திருப்பது புரிந்திருப்பது அவளுக்கு. 

அவளையும் மீறி அவன் மேல் ஒரு கழிவிரக்கம் தோன்ற.. அவளது பற்தடம் பதிந்த..அவன் கையை வருடிவிட்டவள், கண்களில் ஒரு தாய்மை மீதூற, . “மன்னித்து விடுங்கள்” என்றவளுக்கு… அவன் பார்வையை சந்திக்க முடியாமல் போக, முகமெங்கும் அத்திபூத்தாற் போன்று.. சிவந்து நாணம் எழுந்து பரவ.. தலைகுனித்துக் கொண்டாள் அவள். . 

யாரும் தன் மீது அன்பு காட்டாத போது.. தன்னைக் கண்டு அஞ்சி நடுங்கிய போது.. அவள் கண்களில் வழியும் பாசம் அவனை ஈர்த்தது. 

அவளை தன்னருகாமையில் இழுத்து வைத்துக் கொண்டு.. ஆயுள் முழுவதும் அவள் அழகை இரசித்தவாறு.. அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் வாழ்ந்து மடியலாம் போல இருந்தது அவனுக்கு. 

அவன் பார்வையின் வீரியம்.. அவளை ஒரு மாயவலைக்குள் இழுத்துச் செல்வது அறிந்து.. அவனது திடகாத்திரமான கைகளை விட்டும் குனிந்து.. 

அவன் பிடியிலிருந்தும் தப்பி.. அவள் மான்குட்டி போல ஓட, இவனோ இரைந்த குரலில், “ஹேஏஏய்!!! நில்.. உன் பேர் சொல்?”என்று கேட்க, 

சட்டென்று திரும்பியவள் மதுரகானம் இசைக்கும் குரலில், “நந்தினி”என்றவள், தன் பஞ்சுக்குட்டியை அள்ளி அணைத்த வண்ணம் திரும்பிப் பாராமல் ஓடினாள். 

அவன் இதழ்களோ இதயத்துடன் தோன்றிய காதல் மயக்கத்துடன் கிசுகிசுக்குரலில் உச்சரித்தது.. “அழகு நந்தினி.. என் அழகு நந்தினி”என்று. 

அப்படித்தான் ஆரம்பமான அழகான காதல் அவர்களுடையது. 

***

நேற்றிரவில்..ஐநூறு வருடங்களுக்கு முன் தோன்றிய அந்த சந்திரகிரகணத்தில் பலதும், பத்தும் நடந்ததை அறியாமல் எழுந்த சத்திரியனுக்கோ, தன் மடியில் ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்படுவது உணர, மெல்ல தலையுயர்த்திப் பார்த்தான் சத்யன். 

அங்கே நேற்றிரவு அவனுடன் தாறுமாறாக சண்டை போட்ட மனைவி… அப்படி எதுவுமே நடவாதது போல, கண்ணீருடன்.. காயம்பட்ட அவன் கையை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருப்பது புரிந்தது. 

அவளைக் காணக் காண.. கனவிலேயே திணறத் திணற காதல் செய்தவனுக்கு.. நிஜத்திலும் காதல் செய்ய வேண்டும். உலகின் அத்தனை இன்பங்களையும் அவளுடன் சுகிக்க வேண்டும் என்று தவியாய்த் தவித்தது உள்ளம். 

அதே சமயம்.. அவன் எத்தனை சொல்லியும்.. அவனை சந்தேகப்படும் அவள் வார்த்தைகளில் இதயம் கசந்தும் போனது. 

கையில் இருந்த கட்டைக் கண்டதும் அது தன் மனைவி தான் இட்டிருக்க வேண்டும் என்று புரிந்தாலும்… காதலையும் மீறி.. அவள் மீது ஒரு கோபம் தோன்ற, 

உணர்வுகள் மரத்துப் போன வெறிச்சோடிய விழிகளுடன், “க்கல்நெஞ்சக்கார்ரீஈஈ.. நேத்து இரத்தம் வ்வழிய வழிய பார்த்துட்டிருந்துட்டு… இப்போ மட்டும் என்ன வருடல் வேண்டியிருக்கு??.. இரக்கமில்லாதவடீ ந்நீ!! .”என்று சொன்னவனாக, அவளிடமிருந்து கையை இழுத்து எடுத்துக் கொண்ட தினுசில்.. அவள் மனம் காயம்பட்டுப் போனது. 

அழுகை, ‘எந்நொடியும் வெடிக்கலாம்’ என்ற முகபாவனையுடன், “ப்ளீஸ் சத்யா… அப்படி சொல்லாதீங்க..”என்று அவள் கூற, அவனோ இது தான் வாய்ப்பென்று இன்னும் கொஞ்சம் எகிறத் தொடங்கினான். 

நேற்றிரவு அவன் கெஞ்சினான். இவள் மிஞ்சினாள். இன்று காலையோ நிலைமை தலைகீழ். அவள் கெஞ்சினாள். இவன் மிஞ்சலானான். 

அவளை விட்டும்.. வெடுக்கென்று திரும்பி.. சோபாவில் இருந்து எழுந்தவன் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான். 

இன்று காலை துயில் களைந்து எழுந்ததும், தன் சாதாரண மனோபாவத்துக்கு திரும்பியிருக்கும் அப்பாவிப் பெண் யௌவனாவுக்கு, கணவனின் கோபம் ஆற்றாமையையே கொடுத்தது. 

இது அறியா சத்யனோ.. அவளைப் பாராமல் சூனியத்தை வெறித்துப் பார்த்தபடி, “நான் தான் குடிச்சுட்டு வந்து அடிச்சேன்.. பிடிச்சேன்னு.. சொன்ன…?? இப்போ வந்து எனக்கொண்ணுன்னு ஆனதும் துடிக்குற மாதிரி நடிக்கிறிய்யாஆ?” என்று அவன் கேட்க, நந்தினியின் மாயப்பிடியிலிருந்து மயக்கம் தெளிந்திருந்தவளுக்கு.. அவள் எப்போது அப்படி சொன்னாள் என்று தெரியவில்லை. 

பாவம் யௌவனா. கண்களில் கண்ணீர் ததும்ப, “அச்சச்சோ.. நானா அப்படி சொன்னேன்..?தெரியலையே சத்யா?”என்று சொல்ல, அவள் சொன்னாளா இல்லையா என்று சத்யனுக்கும் கூட சந்தேகம் வலுக்கலானாது. 

தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகள் இட்டு நின்று கொண்டவள், “உங்கண்ணா தான்.. நீ அப்படி சொன்னதாக சொன்னாரு… வா கேட்கலாம்..”என்றவனாக..அவளை இழுத்துக் கொண்டு காலையிலேயே வேல்பாண்டியிடம் நோக்கி சென்றான் சத்யாதித்தன். 

காலையில், மாடத்தின் நடுவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து, ஒரு கையில் காபி கப்பும், மறுகையில் பத்திரிகையுமாக.. வெறும் கைலி மற்றும் கையில்லாத பெனியன் சகிதம் இருந்தவரை இளம்தம்பதியர்கள் காலையிலேயே நாடி வரவும், 

வேல்பாண்டிக்கோ, ‘இன்று காலையில் இதுங்க இரண்டும் என்ன உரண்டைய இழுத்து வைச்சிருக்கோ?’என்று ஒருபக்கம் பரிதவிப்பாக வேறு இருந்தது. 

சோர்ந்த முகத்துடன்.. அண்ணனை நாடி வந்த யௌவனாவோ, “அண்ணா.. நான் ஏதாவது இவரைப் பத்தி.. தப்பா சொன்னேனா?? நான் இவரைப் பத்தி தப்பா சொன்னேன்னு நீங்க சொன்னதா.. இவரு சொல்றாரு.. சொல்லுங்கண்ணா..நான் அப்படி சொன்னேனா?”என்று கேட்க, குடித்துக் கொண்டிருந்த காபி அப்படியே இதழ்கள் தாண்டி குபீறிட.. அடுத்த செக்கன் புரையேறலானது வேல்பாண்டிக்கு. 

தங்கை மாப்பிள்ளையைப் பற்றி சொன்னது அத்தனையும் உண்மையாகவே இருப்பினும்.. தங்கையை எப்படி மாட்டிக் கொடுப்பான் தமையனும்?? 

அதனால் டீபோய் மீது காபி கப்பை வைத்து விட்டு, உச்சந்தலையைத் தட்டி தட்டி எழுந்த வேல்பாண்டியோ, தவறு முழுவதையும் தன் பேரில் போட்டுக் கொள்ள நாடி, 

திக்கித் திணறிய குரலில், “அது.. அது இல்லை… இல்லை.. தங்கச்சி அப்படிலாம் சொல்லலை… நான் தான் உங்களை ஆழம் பார்க்கிறதுக்காக சொன்னேன் மாப்ள.. கடல் கடந்து தங்கச்சி பெட்டி, படுக்கையோட வந்ததும்.. எனக்கும் வேற வழி தெரியல.. என்ன காரணம்னு தெரிஞ்சிக்கத் தான் அப்படி பண்ணேன்.. தப்பெல்லாம் என் பேர்ல தான் மன்னிச்சுக்குங்க மாப்ள”என்று மழுப்பி விட.. வேல்பாண்டி தங்கையை விட்டுக் கொடுக்காமல் நன்றாகவே சமாளிப்பது புரிந்தது அவனுக்கு. 

ஆனால் யௌவனாவுக்குத் தான்.. அண்ணன் சொன்னது அனைத்துமே உண்மை தான் போலும் என்று ஒன்றுவிடாமல்.. அப்படியே நம்பும் படியானது. 

அந்த நேரம் அவர்களை நாடி வந்த வாசுகி அண்ணியோ.. இதுவரை நடந்த உரையாடலில் பங்கு கொள்ளாமல் அப்படியே அதை கத்தரிக்க நாடி, 

கையில் இருந்த புத்தாடையை இரு புதுமண ஜோடிகளின் கையில் திணித்து, “இதாங்க மாப்ள.. புது வேஷ்டி சட்டை.. இதாம்மா பட்டுச்சேலை.. போய் குளிச்சிட்டு ஃப்ரஷ்ஷா கட்டிட்டு வாங்க… ”என்று கேட்க, இரு இளம் தம்பதியர்களும் ஒரே நேரத்தில், 

புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி “எதுக்கு..?”என்று கேட்டனர். 

அதற்கு பதிலிறுக்க நாடியது என்னமோ வேல்பாண்டி தான்.

 “இது என்ன கேள்வி இது?? சாமி கும்பிட வேணாமா?சீக்கிரம் ரெடியாகி வாங்க கோயிலுக்கு போகணும்..”என்று விட்டு அங்கிருந்து வேல்பாண்டி நகர்ந்து செல்ல, சத்யனின் அழைப்பும் நேரகாலம் பாராமல் சிணுங்க.. அழைப்பை ஏற்பதற்காக அவனும் முற்றத்தை நாடிச் சென்றுவிட… மனம் முழுவதும் துயரத்துடன்.. தன் கணவனின் புறமுதுகையே பார்த்தபடியேயிருந்தாள் யௌவனா. 

அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? இப்படி நடந்து கொள்பவள் அவள் இல்லையே?? 

ஒவ்வொரு சமயமும், ‘நீ ரொம்ப ரூடாக நடந்து கொண்டாய்?’என்று கணவன் சொல்லும் போதும்.., ‘நானா அப்படி நடந்து கொண்டேன்’ என்ற ஆச்சரியமும், நடந்தது எல்லாம் கனவில் நிகழ்ந்தது போல தோன்றுவதும் ஏனோ?? குழப்பமாக இருந்தது அவளுக்கு. 

நிலையாக யோசித்து.. ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியவில்லை. 

கோயில் சென்று வந்த பின்னர், இது பற்றி சத்யனுடனேயே அளவளாவ வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள், குளிக்கச் சென்றாள் சோர்ந்த முகபாவத்துடனேயே. 

அந்த கணம் அவனுக்கு அழைப்பு எடுத்திருந்தது என்னமோ அவனது தாய் வசுந்தராதேவி. 

திருமணம் ஆகும் முன்பு.. தன் மனைவியைப் பிடிக்காமல்.. வெறுப்பு வார்த்தைகளை உமிழ்ந்த அவனுடைய தாய், இந்த ஒரு மாதத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போக, சத்யனை விடவும், யௌவனா மேல் ஐக்கியமாகிப் போனது உலக அதிசயந்தான். 

பின்னே? தம்பதிவனத்தை விட்டு சத்யனை இந்தியாவுக்கு நாடு கடத்த.. உயிர் போகாத குறையாக விடாப்பிடியாக நின்றவர், அவனை மீண்டும் இங்கேயே அனுப்ப சம்மதித்திருக்க காரணமும் அவள் மீது அவர் பூண்டிருக்கும் அளவு கடந்த அன்பு தானே?? 

அழைப்பை எடுத்ததும் சத்யனின் சுகநலத்தைப் பற்றிக் கூட விசாரிக்காமல்.. அவர் கேட்டது என்னமோ தன் ஆசை மருமகளைப் பற்றித் தான். 

“இன்னும் எம்மருமக கோபமா இருக்காளாடா?..”என்று மருமகளைப் பற்றியே ஆதுரத்துடன் கேட்க, தன் பின்னழகு ஆட ஆட, அறையை நோக்கி செல்லும் தன் மனைவியின் ஏற்ற இறக்கங்களை முற்றத்தில் இருந்தவாறே இரசித்துக் கொண்டே, 

சிறு புன்னகையுடன், “ஆமா.. ஆனால் நீங்க.. கவலைபடாதீங்க.. சீக்கிரம் உங்க மருமகளை கூட்டி வந்துருவேன்மா” என்றுரைக்கத் தான் தாய் வசுந்தராதேவிக்கும் சற்றே ஆசுவாசம் பிறந்தது. 

அது போக நம்பூதிரி கொடுத்த காப்புப் பட்டயம் அவரது ஞாபகத்துக்கு வரவே, பதற்றத்துடன், “.. அந்த காப்பை மட்டும் கழட்டிடாதே சத்யா..”என்று எச்சரிக்க.. தாயின் பயம் வீணாணது என்றே தோன்றியது தவப்புதல்வனுக்கு. 

ஆம், வசுந்தராதேவி அவனை இலங்கை வர ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். 

அவருக்கோ உடம்பு ஒத்துழைக்க மறுக்க, ஊடல் கொண்டு செல்லும் மருமகளை அழைத்து வர, கட்டாயம் தனயனே தான் சென்றேயாக வேண்டிய நிலைமை. 

அதனால் நம்பூதிரியின் உதவிகொண்டு அவன் கைச்சந்தில் காப்புப்பட்டயம் கட்டி விட்ட திருப்தியுடன் தான்.. மகனை இலங்கை அனுப்பி வைத்திருக்கிறார் அந்தம்மா. 

அதற்கு தலையசைத்தவனாகவே.. “சரிம்மா.. நீங்க உடம்ப பார்த்துக்குங்க” என்று கரிசனையுடன் கூறி விட்டு அழைப்பை துண்டித்த சத்யன்..வேல்பாண்டியின் சொல்லுக்கு இணங்கி.. கோவில் செல்ல ஆயத்தமானான். 

*********

தம்பதிவன மக்களின் ஊர்க்கோயில், யௌவனாவைத் தன் தாரமாக தாரை வார்த்துத் தந்த நன்றியின் அடிப்படையில் கொடுத்திருந்த ஐந்து கோடி ரூபா பணத்தில், ஊர்க்கோயிலில் பலவித தருமப் பணிகளும் இடம்பெற்றுக் கொண்டிருந்ததைக் கவனித்தான் சத்யாதித்த இராஜசிங்கன். 

ஒரு பக்கத்தில்.. கோயில் புனர்நிர்மாணப் பணிக்குழி.. கோயிலின் உச்சிக் கலசத்தில் இருந்து.. அடி வரை இருக்கும்.. சிலைகளைப் புனரமைத்து.. வர்ணம் பூசிக் கொண்டிருக்க, 

இன்னொரு பக்கத்தில்.. கோயில் பக்கத்திலே.. அன்னதானம் சிறப்பாக நடந்து கொண்டிருக்க,மற்ற மண்டபத்திலோ சிறுவர்களுக்கு இந்து தர்மத்தைப் போதிக்கும் “அறநெறிப் பாடசாலையின்” பகுதிநேர வகுப்புக்கள் யாவும் நடந்து கொண்டிருந்தன.

அந்த இளம் தம்பதிகள் ஊடல் கொண்டு இலங்கை வந்தது வேல்பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் மட்டுமே தெரிந்திருக்க..ஊரார் யாருக்கும் தான் அது தெரியாதே?? 

அதனால் பட்டுவேஷ்டி சட்டையில், கைச்சந்தில் அந்த காப்புப்பட்டயம் வேறு இறுகித் தெரிந்து.. அவனதுபுருஷலக்ஷணத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் காட்ட அவனும், 

கோயில் சிற்பம் தான் உயிர் கொண்டு வந்ததோ என்று பார்ப்பவர் ஐயுறும் ரம்மியத்துடன் அவளும்.. கோயிலை நமஸ்கரித்து விட்டு.. பவனி வந்தது அத்தனை மகோன்னதம்!! 

‘சொக்கநாதன் உலா’ பாடிய திருமலை நாதர் மட்டும் உயிரோடு இருந்திருப்பின் இறைவனுக்காக உலா பாடியதை விட்டு விட்டு, சத்யனுக்காகவும், யௌவனாக்காகவும் பிரபந்த உலா பாடியிருக்கவும் கூடும்!! 

அவன் செய்த அருட்கொடையில்.. முழுத் தம்பதிவனமே அவனை சொக்கநாதன் போலவும், அவளை மீனாட்சி போலவும் தெய்வீகக் கடாட்சம் அருளும் தரிசனம் பார்ப்பது போல பார்க்க.. கணவனைக் காணக் காண பெருமையாக இருந்தது அவளுக்கு. 

அதிலும்அவர்களைக் கடந்து சென்ற உள்ளூரைச் சேர்ந்த சகலரும், தலைக்கு மேலே கையெடுத்துக் கும்பிட, சத்யன் அதனை ஒரு மரியாதையாக எடுத்துக் கொண்டு தலையசைத்து விட்டு கிளம்பாமல், 

பதிலுக்கு இவனும் கைகூப்பி வணங்கியது.. அவனது எளிமையை எடுத்துக் காட்ட.. யௌவனா அவனை இரசித்துப் பார்த்திருந்தாள் . 

அவனோ எமகாதகன்!!

மனைவி தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது அறிந்தும், அறியாதவன் போலவே ஒரு மிடுக்குடன் வலம் வந்து கொண்டிருந்தான் சத்யாதித்தன்.

விழியெடுக்காமல் அவனையே பார்த்திருந்தும் ஒருமுறையாவது தன்னைப் பார்த்தானா அவன்?? ஒரு முறை.. ஒரே முறை தன்னைப் பார்த்தால் தான் என்ன?? என்ற ஏக்கம் வந்து அவளை வாட்ட, துக்கத்தில் அவன் தலைகுனித்துக் கொண்ட கணம், பட்டென்று திரும்பி தன் மனைவியைப் பார்த்தான் சத்யன். 

அவனும் எத்தனை நேரம்.. ஊடல் கொண்டிருக்கும் மனைவியையும் பார்த்தும் பாராதது போலவே நடிப்பதாம்?? 

மெல்ல திரும்பி.. காதோரம்.. குப்புறத் திருப்பிப் போட்ட கேள்விக்குறி போன்றிருந்த மயிர்க்கற்றையையும், அதன் பக்கத்தில் காற்றில் ஆடும் ஜிமிக்கி கம்மலையும் இரசித்துப் பார்த்தவனுக்கு, 

அவள் மீண்டும் தாலியை எடுத்து மாட்டியிருப்பதைக் காணவே பரமசுகமாக இருந்தது. 

அங்கே இராஜசிங்கர்களின் பாழும் நிலவறையில் இருந்த நந்தினிக்கோ.. சத்யாதித்தன் தன் மனைவியின் அழகை ஆராதித்தது இன்பம் காணுவது என்னவோ பிடிக்காமல் போனது. 

சத்யாதித்தன்.. எவ்வகையில் இன்பம் காண்பினும்.. அது நந்தினிக்கு சுகிக்குமோ? ரசிக்குமோ?? இல்லை மாறாக தகிக்கத் தான் செய்தது. 

நிலவறையில்.. தன் கூந்தல் காற்றில் அக்னிச்சுடர் போல எழுந்து பரவ, சத்யாதித்தனை வதம் செய்து விடும் வெறியில் இருந்தவளுக்கு, அவனுக்கு ஆபத்து விளைவிக்க வேண்டும் என்று பொல்லாத எண்ணம் கொண்டாள் நந்தினி. 

ஒரு சாந்தியடையா ஆத்மா தனக்கு ஆபத்து விளைவிக்க நாடுவதை அறிந்திராத சத்யனோ, தன் மனைவியின் ஆப்பிள் கன்னத்தைத் திரும்பி… அப்படியே.. . தாவிக் கடிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்ற, 

கீழுதட்டை தாபத்துடன் கடித்துக் கொண்டே.. படியிறங்கிய போது.. தான் அசம்பாவிதம் நடந்தேறியது. 

நந்தினியின் வலிமையால்.. சத்தியனின் கால் சற்றே தடுமாறி.. அந்தப் படிக்கட்டின் விளிம்பில் இடித்து.. 

சட்டென நகக்கண் கழன்று இரத்தம் வர, வலியில், “ஸ்ஸ்ஆ”என்று அவன் பதற, அங்கே அந்த நந்தினியோ.. அந்தச் சின்னப் பதற்றத்திலும் அற்ப சுகம் கண்டான். 

அவனை விடவும் பதறிப் போனாள் சத்யனின் அழகு மனைவி.

சட்டென கணவனின் பாதம் நோக்கி குனிந்தவள், “ஐய்யைய்யோ.. இரத்தம்” என்று கண்ணீர் இமையோரம் துடிக்கத் துடிக்க அடங்கியவளாக, 

அவன் கால்களை வருடிக் கொடுத்தவண்ணம், கால்களுக்கு தன் கைக்குட்டையால் கட்டிடப் போக, அவன் தான் அவள் மேலுள்ள கோபம் தாளாமல்.. தன் பாதங்களை உள் இழுத்துக் கொண்டான். 

அவள் முகம் வாடிப் போனது, அவன் பாதங்களைத் தானும் தொட முடியாதளவுக்கு.. அவ்வளவுக்கு வேண்டாதவளாகிப் போனாளோ அவளும்?? 

நெஞ்சம் விம்மி..அழுகை உடைப்பெடுத்துக் கொண்டு வரும் போல இருந்தது. அவர்களை முன்னாடி செல்ல வைத்து விட்டு, பின்னாடி சற்று தள்ளி வரும் அண்ணனும், அண்ணியும் கண்டால் அசிங்கம் என்று தோன்ற அமைதியாக நின்றாள் யௌவனா. 

மனைவி அழக்கூடத் தயாராக இருந்ததைக் கண்டவனுக்கோ ஒருபக்கம் கவலையாக இருந்தாலும் கூட.. மறுபக்கம்.. மனதுக்குள் யாரும் அறியாமல் கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டான். 

நேற்று முழுவதும் தன்னை கெஞ்ச வைத்தவளை.. இன்று அவன் பாதம் பிடித்துக் கெஞ்ச வைக்கும் அளவுக்கு, அவளிடம் பாராமுகம் காட்டுவது போல நடிப்பதுவும், அதனால் அவள் காட்டும் நெருக்கமும் அலாதி ஆனந்தத்தைக் கொடுத்தது அவனுக்கு. 

மெல்ல கோயில் படிகளைக் கடந்து… கோயில் வாசலின் இருமருங்கிலும் இருந்த ஏழைகளுக்கு, தன் மணிப்பர்ஸ் திறந்து தானம் வழங்கிக் கொண்டே வந்து, அவன் நிமிர்ந்த போது, 

காவி உடையில்.. நீண்ட ஜடாமுடியுடனும், மற்றும் ருத்திராட்ச மாலையுடன் நின்றிருந்தார் ஒரு மனிதர். 

அவர் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த தேஜஸ் கூட அவனுக்கு ஏதோ ஒரு செய்தி சொல்வது போல இருந்தது. 

சத்யாதித்தனோ.. அவரது விழிகளை சளைக்காமல் எதிர்கொண்டவனாக நின்றிருக்க, அவரோ பட்டென வாய் திறந்தவர், 

தன் சாந்தமான விழிகளுடன், தன் தாடியை நீவி விட்டவராக, அர்த்த புஷ்டியுள்ள ஒரு புன்னகையை சத்யன் பால் எறிந்த வண்ணம், 

“மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்

சத்திரிய குலத்தோன்றலான… உனக்கு யானெடுத்துரைப்பேன். 

உள் உருகி காதல் செய்வோனே…!! 

உனக்கு பாவம் விழையப் போவது.. நீ ஆசைவைக்கும் பொருளில் தான்.. ‘சத்யாதித்தாஆ’”என்று சொல்ல, சத்யாதித்தனோ இவர் எப்படி தன் பெயர் அறிந்தார் என்று குழம்பி நின்றான். 

அது சரி.. ஊர்க்கோயிலுக்கு ஐந்து கோடி ரூபா தானம் கொடுத்ததும், தம்பதிவனத்தில் இருக்கும் சிண்டுசிறுசு கூட அவன் பெயர் அறியும் போது.. இவர் அறிந்து வைத்திருக்க மாட்டாரா? என்றே தோன்றியது அவனுக்கு. 

அந்த நேரம் சற்று தாமதமாக கடைசி படியைத் தாண்டி வந்த யௌவனா, தன் கணவனோடு வந்து நின்று கொள்ள, அவளை வெறித்துப் பார்த்தவர், 

அவளைக் காட்டி, “இதோ இவள் கூட உன் பாவமாகப் போகலாம்” என்று சொல்ல, சத்யாதித்தனோ மனதுக்குள், ‘ஆமா.. நான் கனவுல பண்ணது பாவம் தான்.. நிஜத்துல எங்கே பாவம் பண்ண? பக்கத்துல வர விட்டால் தானே?’ என்று எண்ணி.. எள்ளல் நகை புரிய, 

விஷயம் என்னவென்று அறியாத யௌவனாவோஏகாந்த இரவில் வா தேவதா 

[13]

ஐநூறு வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரம் தோன்றும் மாய சந்திரகிரகணம் தனில், சாந்தியடையா ஆத்மாக்களும், தேவதாக்களும் எல்லை மீற அனுமதிக்கப்பட்ட அந்த நடுநிசியில்…. 

தன் கூந்தல்.. காளி மாதாவின் அக்னிச்சுடர் போல அந்தரத்தில் எழுந்து நிற்க, தன் கணவனைப் பார்த்து.. அவனை வென்று விட்ட வெற்றிக் களிப்பில்… அந்த மாய நீர்வீழ்ச்சி கொண்ட கானகமே அதிர… எக்காளமிட்டே நகைத்தாள் நந்தினி. 

மனைவி நகைப்பதைப் பார்த்து.. தேவதாவின் முகத்தில், ரௌத்திரமும், அதிருப்தியும் தோன்றியதெல்லாம் ஓரிரு கணங்களுக்குத் தான். 

சந்திர கிரகணத்தில் இருந்து.. சந்திரன்.. இப்போது முழுமையாக வெளிவந்திருக்க, அவன் எவ்வாறு மிளிர்ந்து கொண்டிருந்தானோ.. அது போல விகசித்துக் கொண்டிருந்தது தேவதாவின் முகம். 

ஈசனை அனைய தேகவலு கொண்டானின் ரௌத்ரமுகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தப்பட்டது. 

‘நடப்பது அனைத்தும் இறைவனின் சித்தம்’ என்ற அரும் தத்துவ ஞானத்தை எவரொருவர் உணர்கிறாரோ? அவருக்குத் தான் நிலைமை கைமீறிப் போகும் போதும், ரௌத்திரத்திலும், சாந்தம் வசப்படும்!! 

தன் மனைவி மேல் ஆசை, பாசம், காதல் என அனைத்து உணர்ச்சிகளையும் வைத்திருந்தவனுக்கு, இந்த ஏமாற்றம் சிறு வலியை மட்டுமே உள்ளூறக் கொடுக்க, மனையாளைப் பார்த்து அவன் கேட்டான், 

“அப்படியானால் நீ என் மீது காட்டிய நேசம் பொய்யா நந்தினி? உன்னுள் நான்… என்னுள் நீ என்று.. இருந்ததுவும் பொய் தானா? உன் தேவதாவை உனக்குப் பிடிக்கவேயில்லையா??”என்று. 

கணவனின் கேள்விகள், அவளது அகோரச் சிரிப்பை பட்டென்று நிறுத்தச் செய்ய, அவள் கண்களில் தேவதாவுக்கான மையல் ஊற்றெடுத்தது. 

தன் குழந்தையை தாய் எப்படிப் பார்ப்பாளோ? அது போல தாய்மை மீதூற, உள்ளம் உருக உருகப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் நந்தினி. 

கலங்கிய கண்களுடன் அவனை நாடி ஓரெட்டு எடுத்து வைத்தவள், அவனது கன்னங்களை தன்னிரு கைகளாலும் தாங்கிக் கொள்ள, 

காதல் பார்வை சிந்தியவளாக, “என் நேசம் பொய்த்துப் போயின்.. இந்த வானமும், பூமியும் பொய்த்துப் போனதென்றே அர்த்தம்!! என் தேவதாவை எனக்குப் பிடிக்காமல் போகுமா?”என்று கேட்க, தேவதாவின் முகம் அடுத்த நொடி உணர்ச்சித் துடைக்கப்பட்டது போல மாறி.. முழு உடலும் விறைக்கலானது. 

அவளை விடுத்து சூனியத்தை வெறித்துப் பார்த்த தேவதா கேட்டான், “அப்படியானால்.. எனக்காக இராஜசிங்கர்களை ப்பழிவாங்கத் த்துடிக்கும் ந்நீ.. என்னை ஏமாற்றி.. என்னோடு க்கலந்து.. என் ரௌத்திரத்திற்கு ஆளாகி.. எதை சாதிக்கப் போகிறாய் நந்தினீஈஈ??”என்று. 

அவனது இராட்சச உடலையும், குழந்தை மனதையும் ஏற்றுக் கொண்ட நந்தினி.. அவன் உள்ளம் முழுவதும் வியாபித்து இருக்கும் போது.. அவனால் கோபம் எங்கணம் கோபம் கொள்ள இயலும்?. 

அவள் மேல் வைத்திருக்கும் காதல் அந்நொடி கண்ணை மறைக்க, கோபம் கூட வருத்தமாகவே உருமாறியது தேவதாவுக்கு. 

நந்தினியோ.. இருநூறு வருடங்களுக்கும் மேலாக பழியுணர்வில் வெந்து தவிப்பவளாயிற்றே?? 

கணவனின் காதல் மொழிகள்.. அவள் எடுத்த ஒரு உயரிய முடிவினின்றும் பின்வாங்கச் செய்யுமோ?? 

இவளது கண்களை.. பழிவெறி என்னும் கொடிய எண்ணம் எழுந்து மறைக்க, காதல் அருகிப் போயிற்றோ அவளுள்?? 

அப்படித்தான் போலும். 

தேவதாவின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தவள், “இந்த உலகத்திலேயே.. என் தேவதாவை மட்டும் தான் மையல் கொள்ளும் என் இதயம்!! .. உங்களைத் தான் பிடிக்கும். உங்களை மட்டும் தான் பிடிக்கும்!! ஆனால்.. என் உயரிய சபதத்துக்கு குறுக்காக நிற்பது என் தேவதா.. நான் ஆசை வைத்த என் தேவதா என்பது தான் துளியும் பிடிக்கவில்லை மகாசேனரே.!! . உங்களைக் காணும் முன்னம்.. எனக்குள் என் சபதத்ததை முடிக்கும் உயரிய எண்ணமே இருந்தது…”என்றவள் விழிகளில், ஒரு வன்மமும், வஞ்சினமும் அழகாக வலுத்தது. 

வெறித்த நயனங்களுடன், “ஆனால் உங்களைக் கண்ட பின்னர்… நீங்கள் வ்வேண்டும்.. இந்த நந்தினிக்கு மூவுலகிலும் மணவாளனாக ந்நீரே வ்வேண்டும்!!!.. என் வேலையை இலகுவாக முடித்து விட்டு.. உங்கள் பாதமே ‘கைலாயம்’ என்று சரணாகதி அடையவே இத்தனையும்… வ்விரைவில் வருவேன்… அர்த்தநாரீஸ்வரர் போல இரண்டறக் கலக்க.. சபதம் நிறைவேறிய கணமே வ்வருவேன்”என்றவள் கண்களில் உணர்ச்சி மேலீட்டினால் சடாரென வழிந்தது ஒரு துளி நீர். 

தேவதா, தன் மனையாளைப் பார்த்து ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. அமைதியாக அவளது வன்மமும், பழியுணர்ச்சியும் தவழும் விழிகளையே பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன். 

 ஆசை, பாசம் காதல் கொண்ட தேவதாவுக்கு எல்லாமும் தெரியும். எதிராளியாகவே இருந்து நந்தினியை திருத்தி விட எண்ணம் அவனுக்குள். 

ஆனால் நந்தினிக்கோ அதே எதிராளியாகவே இருந்து தேவதாவையும் குழப்பி விட்டு, தன் பக்கம் திருப்பி விட எண்ணம் அவளுக்குள். 

*****

அங்கே, ‘இது என்னடா பழைய குருடி, கதவைத் திறடி’என்பது போல மீண்டும் அதே பழைய நிலை என்று அண்ணன் வேல்பாண்டியும், வாசுகி அண்ணியும் குழம்பி நிற்கும் அளவுக்கு, மாறிப் போயிருந்தது இந்த இளம் தம்பதியர்களின் நிலைமை. 

திடீரென்று கணவனின் அருகே வந்த மகான்.. ஏதேதோ சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகள் எல்லாம்.. அவளது ஆழ்மனதுக்குள் இறங்கிக் கிடக்க, .. இதோ திரும்பவும் அவளுடைய உணர்வுகள் அப்படியே மாறிப் போயிருந்தது. 

பாவம், அப்பாவி அண்ணனும், அண்ணியும்… இந்த இளம் தம்பதியர்களுக்கிடையில்.. ஒரு மகான் குறுக்கிட்டு சொன்ன வார்த்தைகளை கூட அறியாமல்.. சாப்பாட்டு மேசையில், பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தனர் சத்யனினதும், யௌவனாவினதும் ரோதனை தாங்க முடியாமல். 

ஒருவேளை அந்த மகான் சொன்னதை எல்லாம்.. வேல்பாண்டியோ, வாசுகியோ.. இல்லை இருவருமோ அறிய நேர்ந்திருப்பின்.. அந்த மகானின் வாக்கையே தேவ வாக்காக எடுத்துக் கொண்டு.. ஏதாவது பூஜை புனஸ்காரங்கள் செய்திருக்கக் கூடும். 

ஆனால் அது பற்றி அவர்கள் அறியாமல் நன்றாகவே தள்ளி.. பின்னே வந்து கொண்டிருந்ததுவும் கூட.. சத்யாதித்தனின் துரதிர்ஷ்டமாகப் போயிற்று. 

சத்யாதித்தனோ.. இருபத்தோரம் நூற்றாண்டின் இளசுகளின் பிரதிநிதி போல.. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல் இருக்க, 

அவனுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த யௌவனாவும் கூட.. வீடு வந்து சேர்ந்த கணம்.. மீண்டும் சொர்ணாக்கா அவதாரம் எடுத்திருந்தாள். 

அது யௌவனா வீட்டின் சாப்பாட்டறை. வாசுகி அண்ணியோ சமையலறையில் இருந்து, அலங்காரமான உணவுப் பாத்திரங்களை எடுத்து வந்து மேசை மீது வைத்து விட்டு..

 இரு ஆடவர்களுக்கும்.. குறிப்பாக தன் ஆம்படையானுக்கு குறிப்புணர்ந்து பரிமாறிக் கொண்டிருக்க, சத்யாதித்தன் தான் சாப்பிடாமல் கொஞ்சம் பிகு செய்து கொண்டிருந்தான். 

அன்றைய உணவு மெனு நெய்தோசையும், சட்னியுமாக இருக்க, கோயில் சென்று விட்டு பசியுடன் திரும்பி வந்து கொண்டிருந்த வேல்பாண்டியோ, செம்ம வெட்டு வெட்டிக் கொண்டிருக்க.. 

சத்யாதித்தனோ தோசையை விண்டு ஒரு கவளம் கூட வாயில் போடாமல்.. அப்படியே இருந்தான். 

அவன் கண்களோ.. பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியையே தான் பார்த்துக் கொண்டேயிருந்தது. 

இன்று காலையில்.. கோயிலில் வைத்து அவளைப் பாராதது போல ஆக்டிங்க் கொடுத்து, ரொம்பவும் அவளைப் பாடாய்ப்படுத்தி விட்டோமே என்று தோன்ற, அவள் மீது சின்ன கழிவிரக்கமும் தோன்றியது அவனுக்கு. 

இருந்தாலும் அப்போதும் அவளிடம்.. இளகிய முகத்துடன் இருக்காமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, மனைவியின் கவனம் தன் மேல் திரும்பும் வரை சாப்பிடாமல் அமைதியாக இருக்க, இவளும் கணவனின் அமைதியை உணர்ந்தவளாக, சட்டென கணவனிடம், விழிகளாலேயே ‘என்ன?’ என்பது போல மௌனமொழியில் கேட்டாள். 

இவனும் இது தான் சந்தர்ப்பமென்று எண்ணி, குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு, “கால் அடிச்சிட்டிருச்சுல்ல? எப்படி சாப்பிடுறது? ஊட்டி விடு..”என்று சொல்ல, அவளுக்குள்ளோ கோபம் பிறக்கலானது. 

தன் தனங்கள் ஏறியிறங்க மூச்சு வாங்க, நயனங்களை அகல விரித்த வண்ணம் நிற்கும் மனைவியின் கோப முகத்தைக் கண்ட சத்யாதித்தனுக்கோ.. பாவம் உண்மைக் காரணம், “அவள் தன் யௌவனா” இல்லை என்பது புரியவில்லையாயினும், 

அவளாகவே இன்று காலை மலையிறங்கி வந்த போது, பாராமுகமாக அவன் நடந்து கொண்டதால் விளைந்த கோபம் என்று எண்ணிக் கொண்டான் சத்யன். 

அதனால் கோபத்தில் சிவந்த முகத்தைக் கூட.. ஒரு ஓவியத்தை வரைந்த கைதேர்ந்த ஓவியன் போல அவன் இமைகள் இளகியவனாக.. இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கவும் செய்தான். 

இவளோ அந்த பார்வையில் இன்னும் கொஞ்சம் காண்டானவளாக, சிடுசிடுக்கும் குரலில், “அதான் கை நல்லா இருக்குல்ல?? அள்ளி சாப்பிடலாம்ல?”என்று கேட்க, அவன் அப்போதும் தன்னிலையில் இருந்து ஒரு சிறிதும் இறங்கி விடாமல், 

தன் வலது கையின் கட்டை விரலை சுட்டிக்காட்டியவனாக, “கைப் பெருவிரலுக்கும், கால் பெருவிரலுக்கும் கனெக்ஷன் இருக்கு.. உனக்குத் தெரியாதா?? .. என்னால முடியல.. ஊட்டிவிடு”என்று அவன் சொல்ல, இவளுக்கோ எரிச்சல் மூண்டது. 

நேற்றிரவு.. அவள் பேசிய வார்த்தைகள் கேட்டு கடுப்பானவன்.. பூவாஸை விட்டெறிந்து கிழித்துக் கொண்டது கூட இடது கை. அவன் கட்டு இருப்பது கூட இடது கையே!! 

சத்யனுக்கும் நல்ல தாராளமாக தன் வலதுகையை உபயோகப்படுத்தி.. தோசையை அள்ளியும் சாப்பிடலாம், விண்டும் சாப்பிடலாம். 

ஆனால் அவன் அதற்கு இசைந்தால் தானே?? 

கனவில் ஒவ்வொரு மணித்துளியையும் அனுபவித்து அனுபவித்து வாழ்ந்தவனுக்கோ, நிஜத்திலும் கூட அப்படி வாழ பேராசை. 

ஆனால் தேவையில்லாத புரிந்துணர்வின்மையால், சந்தேகத்தால்.. அரிய வாழ்க்கையையும், அவனது அலாதி அன்பையும் அலைக்கழித்துக் கொண்டிருப்பது என்னவோ யௌவனாவே தான். 

அவளோ, கணவனின் பிடிவாதம் தாங்க மாட்டாமல் பற்கைளக் கடித்துக் கொண்டு நின்றவள், “நமக்கெதற்குடா வம்பு?’ என்பது போல அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும், அண்ணன் வேல்பாண்டியை நோக்கி, “அண்ணாஆஆ.. இந்த அநியாயத்தை என்னான்னு கேட்க மாட்டீய்யாஆ?? எதுவுமே நடக்காத மாதிரி சாப்பிட்டுட்டு இருக்க?”என்று கத்த, வேல்பாண்டியோ பாவம் திருதிருவென விழிக்கலானார். 

இப்போது சண்டை போட்டு விட்டு.. அடுத்த நொடி மாப்பிள்ளையின் பின்னால் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அலையும் தங்கை முகம் ஞாபகம் வர, இருவருக்குமிடையே புகுந்து.. எதையும் பேசவும் பயமாக இருந்தது அவருக்கு. 

அதிலும், கிறுக்குத்தனமாக சண்டை போட்டுக் கொள்ளும், “இதுங்க இரண்டும் பைத்தியங்களா.. நம்ம பைத்தியமா..”என்று எண்ணியவர்,

 மெல்ல அவர்களில் இருந்து நழுவ நாடியவராக, “நீ அவருக்கு ஊட்டி விடுவியோ? இல்லை அவர் உனக்கு ஊட்டி விடுவாரோ? , என்னை நிம்மதியா சாப்பிட விடுங்க”என்றவர்,

தட்டும் கையுமாக அங்கிருந்து ஓட, அவளுக்கோ அண்ணன் நழுவியதைக் கண்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

அங்கே நின்றிருந்த அண்ணியோ அவளின் தோளைப் பற்றியவராக, கண்களால் அவளை அதட்டியவராக, “அவர் உன்னை தொட்டுத் தாலிகட்டிய புருஷன்.. அவருக்கு உன் மேல் எல்லா உரிமையும் இருக்கு.. ஊட்டி விடு” என்று அடக்கமான குரலில் கட்டளையிட்டவர், கணவனை நாடி விரைய, 

கடைசியில் வேறு வழியின்றி அவனுக்கு ஊட்டும்படியானது அவளுக்கு. 

******

அன்றிரவு, இருவர் மட்டுமே இருந்த தனிமையில்.. அருகருகே படுத்திருந்தனர் மஞ்சத்தில் கணவனும், மனைவியும். 

சத்யாதித்தனோ.. தன் ஆறரையடி உடலை சற்றே ஒருக்களித்துப் படுத்திருந்தவனுக்கு, இரவின் தனிமையில்.. வாலிபனுக்குள் முகிழ்க்கும் அதிமிதமான ஆசைகளில்… மனைவியுடன் காதல் செய்ய துடித்துக் கொண்டிருந்தது ஆண்மனம். 

ஆனால், அவள் சம்மதம் தருவாளா? அவள் சம்மதமின்றி எல்லை மீறுவது தன் ஆண்மைக்கு இழுக்கு என்று கொண்டவனும் கூட, 

தன் மலைமுகடுகள் போன்ற பருத்த, உயர்ந்த தொய்யாத தனங்களை வானை நோக்கி காட்டியவளாக மல்லாக்கப் படுத்திருக்கும் மனைவியையே.. காதல் விழிகள் ஊற்றெடுக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தான் சத்யாதித்தன். 

அதிலும் அவள் தன் நெற்றியின் மேல் கையினை குப்புறத் திருப்பிப் போட்ட “ட” போல மடித்து வைத்திருந்ததில்.. அவள் சேலை விலகி, அந்த முன்னெழிலின் ஒரு பாதி தரிசனமும், வெள்ளை வெளேரென்ற.. வெண்ணெய்யில் குழைத்து குழைத்துச் செய்தாற் போன்றிருக்கும் சிற்றிடையும்.. அவன் கண்களுக்கு அப்பட்டமாகவே விரிய, 

தன் இதழ்களைத் தானே எச்சில்படுத்திக் கொண்டு.. பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பார்த்தது போல.. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தான் சத்யன். 

அவனு கண்களில் விழுந்து தொலைத்த.. அவள் பால் வண்ண அங்கங்களில் எல்லாம் முத்தாட வேண்டும் என்ற வெறி நொடிக்கு நொடிக்கு அதிகமானது அவனுக்குள். 

கல்யாணமான பதினைந்து நாட்கள் மட்டுமே பாலும், பழமும் உண்ணக் கிடைத்த ஆண்மகனுக்கு, அவற்றின் அமிர்த சுவை தெரிந்ததும், “இன்னும்.. இன்னும்” என்று அடம்பிடித்து ஏங்கியது மனம். 

மெல்ல அவளை நாடிப் போய்.. தன் வலிய கால்களை அவள் மேல் தூக்கிப் போட்டு.. கைகளால் அவளைச் சுற்றி வளைத்து.. இந்தக் காதல் எதிரியை அப்படியே.. ஆக்கிரமித்து.. தன்னை விதிர்விதிர்க்கச் செய்யும்.. அவள் அங்கங்களில் ஆளுகை புரிந்தால் தான் என்ன? என்று கூட தோன்றியது அவனுக்கு. 

கணவன்.. தன்னை வெகுநேரமாக பார்த்துக் கொண்டேயிருப்பதை அறிந்தாளோ யௌவனப்பெண்ணும்?? 

சட்டென கணவனை நோக்கி ஒருக்களித்துப் படுத்தவள், விழிகளையும், புருவங்களையும் ஒருசேர உயர்த்தியவளாக, “என்ன உத்து உத்து பார்த்திட்டிருக்க? ..”என்று கேட்கலானாள். 

இவனோ மனைவியின் கேள்வியில் தன் திருட்டு எண்ணங்கள் அகப்பட்டு விடுமோ என்ற குறுகுறுப்பு எண்ணம் சிறிதும் எண்ணமின்றி, 

அப்பாவி போல வேண்டுமென்றே முகத்தை வைத்துக் கொண்டு, “இல்லை இன்னைக்கு அந்த மகான்.. உன்னால பாவம் விழையப் போகுதுன்னு சொன்னாரு? ..அதான் என்ன பாவமா இருக்கும்னு யோசிச்சிட்டிருக்கேன்.. என்ன பாவம்னாலும் பண்ணிக்க.. ஐ ஏம் ஓல் யோர்ஸ்”என்று அவன் இறுதியில் கிசுகிசுத்தவனாக சொன்னான். 

அவன் மகான் சொன்ன “பாவத்தை”, அந்த “பாவமாக” வேண்டுமென்றே உருவகித்து சொல்லவும் செய்தான். 

மகானின் பேச்சை சத்யன் எடுத்ததும், யௌவனாவுக்கோ அவனது குறும்பு பேச்சையும், மன்மத லீலைக்கான அவன் அழைப்பைப் பற்றி யோசிப்பதையும் விடுத்து, திடீரென்று உள்ளுக்குள் ஒரு திகில் பிடித்துக் கொண்டது.

அதிலும் இன்று கோயிலில் வைத்து சந்தித்த மகான் வேறு,அவளைக் காட்டி, “இதோ இவள் கூட உன் பாவமாகப் போகலாம்” என்றது நினைவு வர, அவள் மனதுக்குள் ஏதேதோ துக்ககரமான எண்ணங்கள் எழுந்து அவளை அரிக்கலானது. 

மஞ்சத்தில் இருந்தும் சட்டென்று எழுந்து, அவனுக்கு புறமுதுகிட்டு அமர்ந்து கொண்டவளுக்கு, அழுகை நெஞ்சம் விம்மிப் புடைத்துக் கொண்டு வர, தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள் அப்பாவி யௌவனா. 

மனைவி அழுவதைத் தாங்க மாட்டாதவன், சட்டெனத் தானும் எழுந்து அவள் தோளைத் தொட்டு தன்னை நோக்கித் திருப்பி, “ஹேய்.. பொண்டாட்டி.. என்னாச்சு?? நாஆ.. நான்.. எதுவும் உன்னை வற்புறுத்தல.. ஜஸ்ட் சும்மா உன்னை சீண்டிப் பார்க்க சொன்னேன்.. உனக்கு பிடிக்காதது எதுவுமே நடக்காது” என்று பதறியடித்தவனாக அவன் தன் சீண்டல் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க, அவள் கண்களில் வழிந்த கண்ணீர் சத்யாதித்தனை ஏதோ செய்தது. 

சத்யனின் பரந்து விரிந்த மார்பில் சாயச்சொல்லி மனம் உந்த.. அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவள்,

அழுது அழுது ஞமஞமத்துப் போன குரலில், “உங்க மேலே பாசமா தான் இருக்கேன்.. உங்களை ரொம்ப பிடிக்கும் சத்யன்.. ஆ.. ஆனால்.. திடீர்னு..” என்று இழுத்தவள், அந்த இராத்திரியில் கணவனிடம் தன் உணர்வுகள் அடிக்கடி மாற்றமுறுவதை எடுத்துச் சொல்ல நாடிய போது, 

அங்கே பாழும் நிலவறையில் இருக்கும் நந்தினிக்கோ விஷயம் புரிந்து போனது. 

யௌவனா வாய் திறந்தால், தன் திட்டத்துக்கு ஆபத்து என்று புரிந்து விட, தன் வலிமையால் பாழும் நிலவறையில் இருந்தே கண்ணசைக்க, யௌவனாவின் மனநிலை அப்படியே மாறத் தொடங்கியது. 

யௌவனாவின் முகம் அப்படியே மாறிப் போக, அந்த சுஷ்மிதா செட்டியுடன் அந்த கோணத்தில் இருந்தவனின் தோற்றம் மனக்கண் முன் வந்து போக, நெருப்பில் விழுந்த நூல் போல.. எரிந்தது மாதுவின் மனம். 

அந்தப் பொல்லாத எண்ணங்கள் எழுந்து.. அவளை.. அவன் மேல் ஒரு அழிக்க முடியாத வெறுப்பை உண்டு பண்ணச் செய்ய, அப்பேர்ப்ட்டவனின் மார்பில் தான் சாய்ந்திருப்பது கூட.. அவளை நிலைகொள்ள விடாமல் தடுத்தது. 

அதிலும் அவனிடம் இருந்து தீச்சுட்டாற் போன்று விலகியமர்ந்தவளுக்கு, அவனது துரோகம் கண்களில் அழியா விம்பமாக நிற்க, தான் ஏமாற்றப்பட்ட வலி, ரௌத்ரமாக உருமாற, 

“ச்சீஈஈ.. வ்வெட்கமாயில்லை.. இன்னொரு பொண்ணோட இருந்துட்டு வந்துட்டு என்னையும் தொடுறீய்யேஏ?? .. மனசாட்சி உறுத்தலையா??”என்று கத்திக் கேட்க, , சத்யாதித்தன்.. தன் காதல் துறந்து.. அவளை அடிப்பதற்காக, “யௌவ்வனாஆஆஆ..” என்றவனாக கையை ஓங்கியிருந்தான்.

அவனது கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தெரிய, அவனது முகம் அப்படியே செம்மை பூத்திருக்க, தன் தோள்புஜங்கள் கோபத்தின் விளைவாக, ஆவேசமாக ஏறி இறங்கி மூச்சு வாங்க, நின்றவனுக்கு… 

அடுத்த கணம் இங்கு வரும் முன்னர், தாய்க்கு அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவு வர, கடினப்பட்டு தன் கைகளை கீழே இறக்கிக் கொண்டவன், 

அவளைத் திரும்பியும் பாராமல்.. படாரென்று அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளிமுற்றத்தை நோக்கி நடந்தவன் நடந்தவன் தான் திரும்ப அவளை நாடி வரவேயில்லை. 

நந்தினிக்கோ.. கூடல் புரிய இருந்த ஜோடியை பிரித்து வைத்ததில் அலாதி இன்பம் தோன்ற.. மகிழ்ச்சியில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். 

இருந்தாலும் இந்தச் சிரிப்பு இப்போதைக்கு அதிகம் என்ற் தோன்ற, விழிகளில் சூட்சுமத்துடன் தனக்குத் தானே, “இன்னும் பார்க்க வேண்டிய பலதும் இருக்கிறது நந்தினி… அமைதியாக இரு”என்று சொல்லிக் கொண்டவள், தன் அடுத்த திட்டத்துக்கு தயாரானாள். 

*****

அடுத்த நாள் காலை, அந்த தம்பதிவன கிராமத்தில்.. புத்தம் புதிய மெர்சிடிஸ் கார் வந்து தரிக்க, அதிலிருந்து இறங்கினான் வாட்டசாட்டமான.. ரொம்ப உயரமுள்ள ஒரு வாலிபன். 

அவனைத் தொடர்ந்து இறங்கினான் யௌவனாவை சின்ன வயதிலிருந்து காதலித்த.. தம்பதிவனத்தின் ரோமியோ ‘பகீரதன்’!! இல்லையில்லை ‘பரத்’. 

யௌவனாவை உயிருக்கு உயிராக காதலித்திருந்தும், தன் கதை ‘இலவு காத்த கிளி போல’ ஆக, எவனோ நேற்று வந்தவனுக்கு யௌவனா மனைவியாகப் போனதில், சத்யாதித்தன் மீதும், யௌவனா மீதும் கொலைவெறியில் இருக்கும் கொடூரமான பரத்!!

இருவரும் காரை விட்டு இறங்கியதும், அந்த கோர்ட் சூட் வாலிபனுக்கோ மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நில எழில் சொட்டும் கண்டி பிடித்துப் போக, தன் கண்ணாடியைக் கழற்றியவன், 

அழகை ஆராதிக்கும் விழிகளுடன் பனி போர்த்த பச்சை பசேல் என்ற முகடுகளை இரசித்தவனாக, தந்திரம் நிறைந்த குரலில், “நாம தேடுவது மட்டும் இந்த தம்பதிவனத்தில் இருந்து கிடைச்சிருச்சுன்னா.. இந்த உலகமே நமக்கு தான்”என்று சூட்சுமப் புன்னகையுடன் சொல்ல, 

பகீரதனோ, “பாஸ்.. நம்ம சொல்லப் போற பொய்யை இந்த ஊர் நம்புமா பாஸ்..??” என்று சந்தேகத்துடன் கேட்டான். 

அந்தப் புது வாலிபனோ, நமுட்டுச் சிரிப்புடன் “பரத்.. நாம சொல்ற மாதிரி சொன்னா.. ஊரென்ன? உலகமே நம்பும். புதையல் தோண்டப்போறோம்னா சொல்லப் போறோம்.. இல்லைல?அகழ்வாராய்ச்சிக்காக.. தோண்டப்போறோம்னு சொல்லப்போறோம்… எவனுக்கும் சந்தேகம் வராது.. ” என்று சொன்னவனின் மனதில் நிலவறை சுரங்கத்தில் இருநூறு வருஷங்களுக்கும் மேலாக உறைந்து கிடக்கும் புதையலை அடைய, அதை செவ்வனே நிறைவேற்ற ஓர் சீரிய திட்டமொன்று உதித்திருந்தது. 

சத்யனைப் பழிதீர்க்கவே முழு முயற்சியில் இறங்கி, கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் நந்தினிக்கு, அந்த வேலை போதாதென்று… இன்னொரு வேலையும் வந்தது. 

.. அந்த மகானின் கடைசி வசனங்கள் கேட்டு ஸ்தம்பித்துப் போனாள். 

காவி உடை மனிதர் வேறேதும் சொல்லாமல்… அமைதியாக… அப்படியே.. கோயிலைத் தாண்டியுள்ள கானகம் எல்லைக்குள் நுழைந்து மறைய, யௌவனாவுக்கோ உள்ளூற கிலி பிடிக்கத் தொடங்கியது. 

ஏகாந்த இரவில் வா தேவதா 

4 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 12 & 13 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top