ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 11

1 – ஆடி அசைந்து வரும் தென்றல்



 அந்த ஆயாம்மா  வீட்டில இருந்தே  தனக்கு உணவு கொண்டு வருவது மட்டும் அல்லாமல் ஆபிஸில் தேவர்ஷி போல ஏமாந்தவர்களிடம்  பாவம் போல நடித்து நயமாக பேசி பணமாக வாங்கி கொள்ளும் … இது எல்லாம்  தெரியாமல் இவள் கொடுக்க்… அந்தம்மாவும் இவள் கொண்டு வரும் உயர்தர உணவில்… அதன் சுவையில் மயங்கி  அப்பாவியாக வாங்கி சாப்பிட்டு விடும்.

 

‘இவள் கொண்டு வருவதே சொப்பு மாதிரி ஒரு டப்பா.. அதையும் ஷேர் பண்ணினா.. இவளுக்கு என்ன இருக்கும்…’என கோபம் கொண்டான்.

 

தேவர்ஷி தினமும் கொடுப்பதை பார்த்தவன் அவளை அழைத்து கண்டிக்கவும் செய்தான்.

 

“வர்ஷி.. எதுக்கு தினமும் அட்டென்டருக்கு உன் லஞ்ச் ஷேர் பண்ணற.. நீ கொண்டு வருவதே குட்டி பாக்ஸ் ஒழுங்கா நீ சாப்பிடு..” என்றான் பொறுமையாக…

 

“பாவம் சார்… அந்தம்மா.. அவங்க வீட்டுகாரர் சம்பாதிக்கறதை எல்லாம் குடிச்சிடுவாராம் … எதுவும் தரமாட்டாராம்.. அது மட்டும் இல்ல.. குடிச்சிட்டு வந்து அடிப்பாராம்.. பாவம் தான.. “ தேவர்ஷியோ எதுவும் அறியாத அப்பாவியாக..

 

 கண்களை சுருக்கி… ஐந்து விரல்களை குவித்து.. 

 

“கொஞ்சுண்டு ஃபுட் குடுக்கறதுல.. என்ன வந்திட போகுது…”எதார்த்தமாக பேச..

 

‘இவளை.. என்ன தான் செய்வது..’ என பல்லைக் கடித்தான். வந்த கோபத்தை மட்டுப்படுத்தி… நிதானத்தை இழுத்து பிடித்தவாறு….

 

“இங்க பாரு அது அவங்க குடும்ப பிரச்சனை.. அது எல்லாம் நமக்கு எதுக்கு.. அவங்களுக்கு நம்ம கம்பெனில சேலரி கொடுக்கறோம் தான.. அவ்வளவு தான் நாம செய்யமுடியும்.நீ உன் லஞ்ச் கொடுத்தா சரியா போயிடுமா… ஒழுங்கா நீ சாப்பிடு..” 

 

“இல்ல சார்.. பாவம் அவங்க பசியோட வேல செய்யறதா பார்த்தா பாவமா இருக்கு..”

 

‘லூசு.. லூசு… இவளை இவ வீட்ல எப்படி தான் வச்சு மேய்க்கறாங்களோ…’ என நினைத்தவனுக்கு கோபம் கரையை கடக்க.. அப்பவா இப்பவா என நின்றது.

 

“இங்க பாரு வர்ஷி.. அந்தம்மா நல்லா  தான் இருக்கு… சும்மா உன்னை ஏமாத்திட்டு இருக்கு.. “

 

“பாவம் யாராவது சாப்பாட்டு விசயத்துல பொய்சொல்வாங்களா..  நீங்க சும்மா என்கிட்ட சொல்லறிங்க.. போங்க.. போங்க..” என சிறுபிள்ளையாக கோவித்துக் கொண்டு நின்றாள். 

 

 கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்திட… ஆஹா என மயங்கி போனான். இவளுக்கு சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது.. எப்படியோ போ என விடவும் அனிவர்த்தால் விட முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. அந்த ஏதோ ஒன்று என்ன என்று ஆராய தோன்றவில்லை.

 

கடைசியில் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு..  ஆயாம்மாவிற்கு கேன்டீனில் ஆபிஸ் கணக்கில் மதிய உணவிற்கு சொல்லவும்.. சந்தோஷத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன்…

 

“தேங்க்யூ.. தேங்க்யூ வெரிமச்…” என சொல்லி கைகளை விசிறிக் கொண்டு துள்ளி குதித்து ஓடிப் போனாள்.

 

இவள் புண்ணியத்தில் அந்த ஆயாம்மா.. மதிய உணவை ஆபிஸ் கேன்டீனில் தினம் ஒரு வகையாக வாங்கி சாப்பிட்டது. அதை தேவர்ஷியிடமும் சொல்லவும் செய்தது.

 

“தேவா பாப்பா.. ரொம்ப நன்றி.. ஏதோ நீ எனக்காக  சார்கிட்ட் பேசினதால நான் பிரைடுரைஸ்.. அது என்னவோ சொல்வாங்களே.. ஆங்.. பீசா… தினுசு தினுசா சாப்பிடறேன். நான் இந்த மாதரி எல்லாம் சாப்பிட்டதே இல்ல…” என சொல்லவும்…

 

தேவர்ஷி மனம் உருகி போனாள் அச்சோ பாவம் என… எவ்வளவுக்கு எவ்வளவு துடுக்குத்தனம் நிறைந்தவளோ.. அதே அளவு இரக்க சுபாவமும் கொண்டவள்…

 

“நீங்க கவலப்படாதிங்க.. ஆயாம்மா… உங்களுக்கு என்ன ஹெல்ப்னாலும் நான் செய்யறேன்..” என அப்பாவியாக சொல்ல.. அந்தம்மா நிரந்தரமாக தனக்கு ஒரு ஏமாளி கிடைத்த சந்தோஷத்தில் சென்றது.

 

தேவர்ஷியின் கேபின் ஜன்னல் அருகே ஒரு பெரிய குல்மொகர் மரம் இருந்தது. அதில் அழகாக கொத்து கொத்தாக சிவப்புநிற பூக்கள் பூத்திருக்க.. அதற்காக அழகான வண்ணத்துப்பூச்சிகள் வர.. ரோலிங் சேரை கால்களால் உந்த.. வழுக்கிக் கொண்டு சென்று ஜன்னல் அருகே சென்று கன்னத்தில் கை கொடுத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

கேமரா கண் வழியாக பார்த்து கொண்டு இருந்தவனுக்கு கோபம் தான் வந்தது. வேலையை பார்க்காம என்ன ஒய்யாரமா வேடிக்கை பார்க்கறா பாரு…

 

அவளை தனது அறைக்கு அழைத்தவன்…

 

“வேலையை பார்க்காம என்ன பண்ணிட்டு இருக்க…”என கோபமாக கேட்க…

 

“வேலையை தான் பார்த்துட்டு இருந்தேன்” என்று பொய் சொன்னாள் முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு..

 

அவள் முகத்தை பார்த்தவனுக்கு கோபம் மறைந்து.. சிரிப்பு வர… அதை அடக்கியவாறே..

 

“ரியலி… ஒர்க் பண்ணிட்டு தான் இருந்தியா..” என உல்லாசமாக கேட்க.. 

 

வேலை செய்து களைத்தாற் போல முகத்தை சோர்வாக  வைத்துக் கொண்டு… உதடுகளை அழுந்த மூடி ஆமாம் என தலையை ஆட்டினாள்.

 

அசராமல் அடிச்சுவிடறாளே என அனிவர்த் தான் அசந்து போனான். கேமரா மானிட்டரை அவள்புறம் திருப்பி அவள் கேபினின் கேமராவில் பதிவாகி இருந்தவற்றை காண்பிக்க..

 

‘ஙேங்’என விழித்தாள். ‘ஐய்யோ இப்படி மாட்டிகிட்டயே தேவா.. இப்ப ஏதாவது சொல்லி சமாளிக்கனுமே.. என்ன சொல்லலாம்’என வேகமாக யோசித்தாள்.

 

“என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம்னு திங்க் பண்ணறியா..”

 

ஒரு வேகத்தில் ஆமாம் என மேலும் கீழும் தலையாட்டிவள்.. சட்டென கண்களை மூடி நுனி நாக்கை கடித்து..எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்.

 

தஞ்சாவூர் பொம்மை மாதிரி எப்ப பாரு தலையாட்டிக் கொண்டே.. என நினைத்தவன்..

 

என்ன மாட்டிக்கிட்டாயா..என்பதை போல புருவங்களை ஏற்றி இறக்கி பார்வையால் கேட்க… அவன் புருவ ஏற்ற இறக்கங்களில் கிறங்கி போய் தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

 

அவள் கிறக்கம் அறியாதவனாக.. “அடுத்து என்ன பொய் சொல்லாம்னு யோசிக்கறியா.. இனி இப்படி செய்யாத போய் வேலையை பாரு..” என கண்டிக்கும் முக பாவத்துடன் சொல்ல..

 

“ம்ம்ம்”என  அதற்கும் தலையை ஆட்டி விட்டு….  விட்டா போதும் என ஓடிவிட்டாள்.

 

தேவர்ஷி எப்பவும் துருதுருவென ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டே இருப்பதால்.. வீட்டில் அவளுக்கு ஏகப்பட்ட கெடுபிடி தான். திருகுமரனும் கௌசல்யாவும் மகளின் சேட்டைகளை ரசித்தாலும்… அவளின் தாத்தாவும் பெரியப்பாவும் அவளை திட்டுவதை காண பொறுக்காமல் சிறு கண்டிப்பு இருக்கும்.

 

வீட்டில் செய்யமுடியாத சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து.. இங்கு வந்து அவிழ்த்துவிட்டாள். மொத்தத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றாக தான் திரிந்தாள்.

 

இவள் வேலை செய்யாதது  மட்டுமல்லாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல்…  அவர்களோடு அரட்டை அடிப்பது.. வேலை நேரத்தில் கேன்டீன் கூட்டு சேர்த்திக் கொண்டு செல்வது என ஒரே அட்டகாசம் தான்.

 

அனிவர்த் ஆபிஸில் தேவர்ஷி இருக்கும் எட்டு மணி நேரத்தில்.. அவளை ஸ்கேன் செய்வதிலேயே செல்ல… அவள் கிளம்பி போன பிறகு தன்வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு நேரம் கழித்து செலவதே வாடிக்கையானது.

 

கங்கவோ..”என்ன அனிவர்த்.. எங்க போயிட்டு வர..” மகன் வார இறுதி நாட்களில் செய்யும் பிளேபாய் ரோலை தினமும் ஆரம்பித்துவிட்டானோ.. என்ற சந்தேகத்தில் கேட்க..

 

கங்கா கேட்ட விதத்தில் அனிவர்த்திற்கு சுருக்கென கோபம் வர…

 

“ம்மா… உங்கள மாதிரியே ஒரு இம்சைய தெரியாமல் வேலைக்கு வச்சிட்டேன். தினமும் அவள கவனிக்கறதே பெரிய  வேலயா போச்சு..”என்றான் பல்லை கடித்துக் கொண்டு அடிக்குரலில் சீறினான்.

 

‘என்னது பொண்ணா… இவனையும் ஒருத்தி டார்சர் பண்றாளா.. ஆஹா..’ என மனதில் குதூகலித்தவர்… அனிவர்த்திடம் மெல்ல…

 

“அனிவர்த்.. நீ சொல்லறது ஒரு பொண்ணா…”

 

“ஆமாம்.. பெரிய இம்சை..”என தேவர்ஷி செய்த அனைத்தையும் எதார்த்தமாக கங்காவிடம் சொல்ல..

 

‘அடியேய் கங்கா.. இவ தான் உனக்கு மருமகளா வர எல்லா பொருத்தமும் பொருந்தி இருக்கு. இவனையும் ஆட்டி  வைக்க  இந்த பொண்ணு தான் சரியா இருக்கும். நாமும் மருகளோடு கூட்டணி போட்டு இவனை ஒரு வழியாக்கலாம்…’ என கொண்டாட்டடமாக எண்ணி சந்தோஷப்பட்டார்.

 

“பொண்ணு அழகா இருப்பாளா..” என மெல்ல போட்டு வாங்க பார்க்க..

 

தாயை சந்தேகமாகப் பார்த்தவன்…”நீங்க இப்ப எதுக்கு இதை கேட்கறிங்க…”

 

“ஹீ..ஹீஹி.. சும்மா தான்…” என அசடு  வழிந்தார்.

 

“ரொம்ப வழியாதிங்க.. அவ ரொம்ப சின்ன பொண்ணு இப்ப தான் படிப்பு முடிச்சிருக்கா.. போங்க.. போய் சாப்பாடு எடுத்து வைங்க..”

 

‘கேடி பய கண்டுபிடிச்சிட்டானே… சின்ன பொண்ணா.. அப்ப வேண்டாம்..’ என நினைத்து எழுந்து சென்றுவிட்டார்.

 

 வரும் காலத்தில் தேவர்ஷி தான் மருமகளாக வரப் போகிறாள் என தெரியாமல் இப்படி ஏமாந்திட்டிங்களே கங்காம்மா…

 

அடுத்த நாள் அனிவர்த் டீலர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு  மதியம் போல ஆபிஸிற்கு வந்தான். அவன் வந்த நேரம் ஒருத்தரும் இல்லாமல் ஆபிஸே வெறிச்சோடி  இருந்தது. என்னடா இது இன்னைக்கு அரசு விடுமுறையா.. நாம தான்  தெரியாமல் வந்துவிட்டோமா… என முழித்தான்.

 

பின்புறம் கேன்டீனில் இருந்து சத்தம் வர..  அங்கு சென்று 

 பார்க்க.. அங்கே ஒரே  ஆட்டமும் பாட்டமுமாக ஆர்ப்பாட்ட்மாக இருந்தது. நட்ட நடு டேபிள் மேலே ஏறி நின்று டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்தாள் தேவர்ஷி. அனிவர்த்துக்கு கன்னாபின்னாவென கோபம் வர..

 

‘இவ வந்த பிறகு ஆபிஸ்ல ஒரு டிசிப்ளினே இல்லாம போயிடுச்சு..’

 

“என்ன நடக்குது இங்க… என்ன பண்ணிட்டு இருக்கறிங்க எல்லாரும்…” என கத்த..

 

அவனின் சத்தத்தால் அவனை கண்டு பயந்து எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் பறந்து ஓடினர். தேவர்ஷி அனிவர்த்தை கண்ட அதிர்ச்சியில் திருதிருவென முழித்து கொண்டு நின்றாள்.

 

“ கீழ இறங்கு  முதல்ல..” என திட்ட..

 

ஒரே தாவலில் கீழே குதித்தாள்.அனிவர்த் தான் பயந்து போனான்.

 

“உன்னை..”என ஏதோ திட்டப் போக..கேன்டீனில் வேலை செய்பவர்களின் ஆர்வமான பார்வையில்.. அவளின் கையை பிடித்து இழுத்துக கொண்டு சென்றான்.

 

அவனின் இழுப்பிற்கு ஏற்றவாறு அவன் பின்னால் சென்றவள் திரும்பி..

 

“மணியண்ணா.. உங்களுக்கு வந்து அமௌண்ட் தரேன்” என சொல்லி செல்ல… 

 

அந்த மணியோ.. ‘ஐயோ பாவம் வேலையே போக போகுது.. இருந்தாலும் எனக்கு பணம் தரேனு சொல்லுதே நல்லபுள்ள…’ வருத்தப்பட்டார்.

 

தனது அறைக்குள் வந்த பிறகு அவள் கையை உதற.. தடுமாறி நின்றாள்.

 

“எதுக்கு எல்லோரையும் கூப்புட்டு வச்சு ஆட்டம் போட்டுட்டு 

 இருந்த..”

 

அவன் கேட்டதும் ரொம்ப உற்சாகமாக…

 

“அது என்னோட பேவரட் ஆக்டரோட நாய் குட்டி போட்டுருக்கு.. அழகா நாலு பப்பி தெரியுமா உங்களுக்கு.. அவருடைய இன்ஸ்டா பேஜ்ல போட்டோ போட்டு இருக்காரு.. அது அமெரிக்காவுல இருந்து வாங்கிட்டு வந்த நாய் புசுபுசுனு அழகா இருக்குமா… அது   மாதிரியே அந்த பப்பி எல்லாம் க்யூட்டா இருக்கு.. பிக் பார்க்கறிங்களா..” தனது போனை எடுக்க..

 

அவளின் பேச்சில் ஏற்கனவே இருந்த கோபம் இன்னும் அதிகரிக்க…

 

“வாட்… ஒரு நாய் குட்டி போட்டதுக்கா.. எல்லோரையும் வேலை செய்ய விடாம.. டேபிள் மேல ஏறி நின்னு ஆட்டம் போட்ட.. யூ டாமிட்.. இடியட் அறிவில்ல உனக்கு..”

 

‘இவரு மட்டும் வீக் எண்ட்ல பப் போய் பார்ட்டி பண்ணுவாரு நான் ஆடியது தப்பா.. அதுக்கு என்ன இடியட்னு திட்டுவாரா.. நான் இடியட்னா இவரும் இடியட் தான்..’என மனதுக்குள் அவனை திட்டியவாறு… தனது டிரேட்மார்க் அப்பாவி போஸில் நின்றாள்.

 

“என்ன அமைதியா நிற்கற.. என்ன பண்ண அத முதல்ல சொல்லு..”

 

“அது அந்த பப்பிகள் பிறந்தது செலிபிரேட் பண்ண… எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தேன். அப்புறம் அந்த ஆக்டரோட சாங் போட்டு டான்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணுனோம்.. ஜாலியா சந்தோஷமா இருக்கறது தப்பா.. அதுக்கு அந்த கத்து கத்தறிங்க.. பாருங்க எல்லாரும் எப்படி பயந்து ஓடிட்டாங்க..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

“ஒர்க்ல ஒரு சின்சியர் கிடையாது.. டிசிப்ளின் கிடையாது. யூ ஆர்அன்பிட் பார் திஸ் ஜாப்.. நீ எல்லாம் அந்த காலேஜ்ல எப்படி டாப்பரா வந்த..  எக்ஸாம்ல ஏதாவது கோல்மால் செஞ்சு தான் ஸ்கோர் பண்ணுனியா… நீயும் ஒர்க் பண்ணமாட்ட.. மத்தவங்களையும்  பண்ண விடமாட்ட…  நாளைல இருந்து ஆபிஸ்கு  வராத.. உன்னால எனக்கு பிபி வந்திடும் போல… என் கண்ணு முன்னாடி நிற்காத போ..” என கடுமையாக அனிவர்த் திட்டி விட..

 

முகம் கசங்கி கண்கள் கலங்கி… மூக்கு நுனி சிவந்திட.. அழுகை வரப் பார்க்க.. அதை அடக்க.. அவளையும் மீறி விசும்பலாக வெளி வர…வாயைப் பொத்திக்  கொண்டு தனது கேபினுக்கு சென்று தனது பேகை எடுத்தவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

 

அவள் அவ்வாறு செல்லவும் அனிவர்த் மனது குடைய…கேபினுக்கு சென்றதையும்… பார்க்கிங்கில் வண்டியை எடுத்து சென்றதையும்  பார்த்தவனுக்கு அவனது மனசாட்சி குத்த.. 

 

‘உனக்கு அப்படி என்ன கோபம்.. பாவம் சின்னபொண்ணு… பாரு அழுதுகிட்டே போறா.. இப்படி ட்ரைவிங் பண்ணிட்டு போய் ஏதாவதாகிட்டா..’ என நினைக்க.. நினைக்க. மனம் நிலை கொள்ளவில்லை.. 

 

வேலையில் கவனம் கொள்ள முடியாமல் போக வீட்டிற்கு கிளம்பிவிட்டான். இரவு சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் அவளின் முகமே கண்முன் வந்து இம்சித்தது.

 

‘வராதேனு திட்டிட்டமே.. வருவாளா.. வரமாட்டளா.. ‘என தூக்கம் கொள்ளாமல் சிந்தித்து கொண்டிருந்தான் விடிய விடிய…




1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top