ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 12

12 – ஆடி அசைந்து வரும் தென்றல்



தேவர்ஷி காலையில் எழுந்ததில் இருந்த உற்சாகமாக கிளம்பிக கொண்டிருந்தாள். ஏதோ ஒரு புது உணர்வு அகத்தை ஆக்கிரமித்திருக்க… அந்த உணர்வு புதுபுனல் பிரவாகமாக ஊற்றெடுக்க… துள்ளலோடு தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொணாடாள்.

 

“குட்டிம்மா.. அழகா இருக்கடா…” அனிவர்த் போல பேசி தன் கன்னத்தை கிள்ளி தன்னையே கொஞ்சிக் கொண்டாள். 

 

ஆபிஸ் வந்து வண்டியை நிறுத்தியவள் அனிவர்த் கார் இருக்கிறதா என பார்த்தாள். 

 

“நெட்ட பனமரம் வந்துடுச்சு… அச்சோ தப்பு தப்பு புருஷர அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது. எப்படி கூப்பிடலாம்…”என யோசிக்க.. எதுவும் தோன்றாததால் மெதுவா யோசிப்போம். இப்ப ஒரு அட்னன்ஸ் போடுவேம் என அனிவர்த் அறைக்கு சென்றாள்.

 

தேவர்ஷி சென்ற போது அனிவர்த் சிஸ்டத்தில் மூழ்கி இருந்தான். தேவர்ஷி வந்ததை கவனிக்கவில்லை. கவனிக்காத மாதிரி இருந்தான். அவள்அறையில் சென்று அவள் பேகை வைத்து விட்டு தன் அறைக்கு வரும் வரை பார்த்திருந்தவன்.. அவள் வரும்போது வேலையாக இருப்பது போல காட்டிக் கொண்டான். 

 

எப்போதும் தேவர்ஷி அனுமதி கேட்டு எல்லாம் வரமாட்டாள் இன்றும் அதே போல வர… 

 

தேவர்ஷியின் “குட்மார்னிங் சார்”ல தான் நிமிர்ந்து பார்த்தான். அவளை கேமரா கண் வழியாக பார்த்ததை விட நேர் கொண்டு பார்க்க… பார்த்தவனுக்கு சீறிக் கொண்டு எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் திணறி தான் போனான்.

 

‘ஐயோ நாமளே கன்ட்ரோலா இருக்கனும்னு நினைச்சா கூட விடமாட்டா போலவே..’

 

ஆளை அசரடிக்கும் அலங்காரத்துடன் அப்படி வந்திருந்தாள். என்றும் இல்லாமல் இன்று மல்லிகைபூ இரட்டை சரமாக வைத்திருந்தாள். மல்லிகை மணம் வேற மயங்க செய்தது.

 

அனிவர்த் அவள பார்க்காதடா…என அவன் புத்தி இடித்துரைக்க…அவனையும் மீறிக் கொண்டு அவன் மனம் கண்கள் வழியாக அவளை ஸ்கேன் செய்து கொண்டு தான் இருந்தது தலை முதல் பாதம் வரை..

 

சின்ன நெற்றி அதில் குட்டியாக ஒரு கருப்பு பொட்டு.. மேலே தீற்றலாக சந்தனம்…

 

‘குட்டியா இருக்கு.. அதான் நேத்து முத்தம் வைக்க சிரம்மா இருந்துச்சா…’



நீண்ட விழிகள் காஜல் தீட்டி.. 

 

‘இந்த கண் தான அழுது சிவந்து …காஜல் கலைஞ்சு அது கூட ஓவியமா இருந்துச்சு.. அதிலயும் அந்த ஓரப்பார்வை…’



கூர்நாசி அதில் அழகாக ஒற்றை வைரக்கல் மூக்குத்தி மினுங்க… 

 

‘சார்ப்பா இருக்கற நுனிய புடிச்சு கடிச்சு வைக்கனும்..’

 

மேல் உதடு சின்னதாக… கீழ் உதடு சற்று பெருத்திருக்க.. அதை கவனித்தவன் 

 

‘குழந்தைல ஜொள்ளா உத்தி இருப்பா போல.. அதான் கீழ் உதடு தடிப்பா  இருக்கு….’ என நினைத்தான்.



‘கொக்கு மாதிரி கழுத்து நீண்டு இருக்கு..’

 

‘கழுத்து நரம்பை உதட்டு மடிப்பால இழுக்கனும்..’

 

கழுத்து கீழே பார்வையை மேய விட்டவன்..

 

‘ஆஹா… சின்ன பொண்ணுனு சொல்ல முடியலையே…’

 

அங்கிருந்து பார்வையை நகர்த்த முடியாமல்  திணறி… திண்டாடி… 

 

‘டேய் அனிவர்த்.. தப்புடா… ‘தன்னை திட்டி.. திட்டி…பார்வையை கீழே இறக்கினான். 

 

சிறுத்த இடை…

 

‘அது தான் எனக்கே தெரியுமே.. என் இரண்டு உள்ளங்கை சேர்ந்த அளவு கூட இல்லையே..’

 

அனிவர்த் தேவர்ஷியை லேசர் பார்வையால் ரசித்து கொண்டிருக்க… அவன் பார்வை வீரியம் தாங்காமல்…

 

‘அச்சோ… என்ன இப்படி பார்க்கறாங்க..’என வெட்கம் மிக.. முகம் சிவக்க… நாக்கின் நுனியை கடித்து… துள்ளி திரும்பி நின்று கொண்டாள். 

 

திரும்பி நிற்க.. பின்புறமும் அவனை பித்து கொள்ள செய்ய…

 

‘அம்மாடி… இவ என்னை சாவடிக்காம விடமாட்டா போலவே…’

 

‘வேணாம்டி பொண்ணே… என் முன்னே வந்து என்னை சீண்டாத.. சேதாரம் உனக்கு தான்டி..’

 

தன் தலை முடியை கோதிக் கொண்டவன்.. மெல்ல் தன்னை நிதானப்படுத்தி… இல்லாத கோபத்தை வலுவில் வர வைத்து..

 

“தேவர்ஷி… கோ டூ யுவர் கேபின்.. அநாவசியமா என் கேபினுக்கு வராதிங்க… ஒர்க்ல சின்சியரா இருக்கனும் எனக்கு.. உங்க விளையாட்டுத்தனத்தை விட்டுட்டு கொஞ்சம் வேலையும் பாருங்க… போங்க…”

 

அவன் பார்வையில் கனவில் மிதந்து கொண்டு இருந்தவள்.. அவனின் சுருக்கென்ற பேச்சில்… கனவு கலைந்து..தேவர்ஷியின் மனம் சுணங்கி போக… கண்கள் லேசாக கலங்க…

 

‘போடா.. ரெட்சில்லி… உனக்காக எல்லாம் எப்படி கிளம்பி வந்தேன்.. மூஞ்சிய பாரு ஓரங்குட்டான்… சரியான சாமியார்…’ 

 

என்னது சாமியாரா… அவன் பத்தி உனக்கு தான் தெரியலமா. ப்ளே பாய்மா.. நீ பேசினத கேட்டா.. இந்த உலகம் உன்ன லூசுனு நினைச்சு சிரிக்கும்…

 

அவனை மனதினுள் வசைபாடியபடி காலை தரையில் உதைத்தவாறே… முகத்தை தூக்கி வைத்து கொண்டு செல்ல…

 

‘சிறுபிள்ளை தான்… அனிவர்த்.. உன் சித்து விளையாட்டிற்கு எல்லாம் இவள் தாங்கமாட்டா..’ என மனம் இடிக்க… அவளை விட்டு தள்ளி இருக்கனும் என முடிவு எடுத்தான்.  ஆனால் அதை எவ்வளவு தூரம் காப்பாத்த முடியும் என அவனுக்கே தெரியலை…

 

தனது அறைக்கு வந்தவள் தொப்பென இருக்கையில் அமர்ந்தாள். மனதில் இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்து  சோர்வாக இருக்க… வேலையில் கவனம் செலுத்த தோன்றாமல் அமைதியாக அமரந்திருந்தாள்.

 

‘ச்சே.. ஆசையா கிளம்பி வந்தேன்.. அழகா இருக்கடினு சொல்லாட்டியும் பரவாயில்ல.. விரட்டாம இருக்கலாம்ல..பிடிக்கலையோ…ம்ஹீம். ஆளையே பிச்சு திங்கற மாதிரி தான பார்த்தாரு…அப்புறம் என்ன வந்துச்சு.. தெரியலையே.. அதுக்காக எல்லாம் சோர்ந்திடாத.. பீ ஸ்ட்ராங்..’ என மனதை திடப்படுத்திக் கொண்ட பிறகே.. கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.

 

அவளை அனுப்பிய பிறகு சிறிது நேரம் தான் அவளை பார்க்காமல் இருக்க முடிந்தது.. பார்த்தவனுக்கோ.. அவளின் சோர்வை கண்டு.. 

 

 ‘ச்சே.. இப்படி பேசிட்டமே.. எவ்வளவு உற்சாகமாக வந்தா.. இப்ப எப்படி வாடி போய் உட்கார்ந்திருக்கா..’ வருத்தப்பட்டான்.

 

மெல்ல தேவர்ஷி தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு வேலை செய்ய… ஜன்னல் ஓரத்தில் ஏதோ சத்தம்… அன்று வந்த அதே அணில்… அணிலை கண்டு குஷியாகி.. மெதுவாக சத்தமில்லாமல் அடி எடுத்து வைத்து கிட்ட போகவும்…அது அவரை அவளை காணாத மாதிரி இருந்த அணில் கிட்ட வரவும்.. இவளுக்கு போக்கு காட்டி விட்டு ஓடி ஒளிந்து கொண்டது.

 

‘போச்சு.. இன்னைக்கும் குரங்கு மாதிரி ஜன்னல் ஏறி தொங்க்ப் போறா..’ என அனிவர்த் நினைக்க…

 

வேகமாக ஓடி வந்து தனது பேகில் இருந்த சாக்லேட்பாரை பிரித்து ஒரு துண்டு உடைத்து ஜன்னலில் வைத்து விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

 

அணில் வருகிறதா.. என அடிக்கடி தலையை திருப்பாமல் அடிப்பார்வையாக பார்த்திருக்க.. அணில் வந்து சாக்லேட்டை கொறித்து திங்க..  குழந்தை போல கை தட்டி ஆர்ப்பரித்தாள்.

 

அணில் மிரண்டு போய் ஓடி விட நினைத்தது.ஆனால் சாக்லேட்டை விட்டு செல்ல மனமில்லாமல் தேவர்ஷி அருகில் வந்தால் ஓடிவிடலாம் அலரட்டாக அவள் மேல் ஒரு பார்வையும் சாக்லேட் மேல ஒரு பார்வையுமாக கொறித்தது.

 

‘கேடி அணில்.. இவள  மாதிரியே கேடியா இருக்கு’ சிரித்தான் அனிவர்த்.

 

தேவர்ஷி மதியம் வரை அனிவர்த் அறைக்கு வரவில்லை. செல்ல கோபம் கொண்டு அவனாக அழைக்கும் வரை செல்லகூடாது என இருந்தாள். 

 

அனிவர்த்தோ தள்ளி நின்று  ரசித்தால் மட்டுமே போதும் என இருக்க…. ஒரு பொண்ணை அதுவும் பிடித்த பெண்ணை ரசிக்க மட்டுமே என்பது ரிஷிகளாலே முடியாத போது.. இவனால் முடியுமா…

 

மதிய உணவை கேன்டீனில் சாப்பிட சென்றாள். தனக்கானதை வாங்கி கொண்டு தன் நணபர்களோடு இணைந்து கொண்டாள். 

 

“ஏய்..தேவா… இன்னைக்கு கேன்டீன்  லஞ்சா.. “

 

“வா.. ஷேர் பண்ணி சாப்பிடலாம்..”

 

எல்லோரும் ஷேர் பண்ணி பேசிக் கொண்டு சாப்பிட..

 

இங்கோ அனிவர்த் ‘எங்க இவளை காணோம்..’ என தேடிக் கொண்டு இருந்தான்.

 

பேசிக் கொண்டே சாப்பிட.. பேச்சு அனிவர்த்தை பற்றி வர… தேவர்ஷியின் காதல் மனம் அவர்களின் பேச்சை ரசிக்க துவங்கியது.

 

“ஏய்.. தெரியுமா.. அனிவர்த்சார் ஜெர்மன்ல எம் எஸ் படிச்சிருக்காரு… ரொம்ப டேலண்ட்…  அவருடைய ஏஜ்  தேர்ட்டிகுள்ள இருக்குமா.. இந்த ஏஜ்லயே எவ்வளவு அச்சீவ் பண்ணியிருக்காரு.. கிரேட்ல…”

 

“ஆமாம்பா.. டேலண்ட் மட்டும்  இல்ல ஹார்ட் ஒர்க்கரும் கூட… நாம வரும் போதும் இருக்காரு… நாம போனாலும் இருந்து ஒர்க் பார்க்காரு… எப்ப வராரு.. எப்ப போவாரு தெரியல…”

 

அனிவர்த் பற்றிய செய்திகளை துளி துளியாக.. தன் மனப்பெட்டகத்தில் சேகரித்து.. அதை ஒவ்வொரு அணுவிலும் பதிய வைத்தாள்.

 

டேய்.. அதெல்லாம் விடுங்கடா… ஆள் எவ்வளவு ஹேண்ட்சம்… சார்மிங்… என்ன ஒரு கலரு… என்ன ஸ்டைலு… மேன்லி…” ஒருத்தி வர்ணிக்க…

 

தேவர்ஷிக்கு சட்டென இனிய மனநிலை மாறியது… பிடிக்கவில்லை.. அப்படியே பத்திக்கிட்டு வந்தது. கண்களில் கனல் கக்கும் பார்வையோடு பாரத்திருக்க… 

 

அந்த பெண்ணோ கண்கள் சொருக… “ஒரு லுக்.. சின்ன ஸ்மைல்.. போதும் நான் அப்படியே ப்ளாடாயிடுவேன்..”

 

“ஹேய்… அவர் கேர்ள்ஸ் விசயத்தில் கொஞ்சம் வீக்னு கேள்விப்பட்டிருக்கேன்…  பார்த்துக்கோ..”

 

“அவர் எல்லா பொண்ணுங்ககிட்ட எல்லாம் அப்படி இல்ல… டேட்டிங் அப்படி  வர  பொண்ணுகிட்ட தான்… அவர் ஒன்னும் வுமனைசர் கிடையாது..”என அந்த பொண்ணு வக்காலத்து வாங்க..

 

தேவர்ஷிக்கு கோவத்தை மீறிய வருத்தம் இப்போ… அவளுக்கு அனிவர்த்தை பற்றி கொஞ்சம் தெரியும். அவள் இங்கு செலக்ட் ஆனதும் அவளின் தாத்தா, பெரியப்பா அவளை வேண்டாம என மறுத்தனர். ஆனால் திருகுமரன் தான் மகள் மேல் முழு நம்பிக்கை இருப்பதாக உறுதியாக சொல்ல… அதன் பிறகு மாற்றி மாற்றி அட்வைஸ் பண்ண… தேவர்ஷிக்கு கடுப்பானாது. அதுவும் தகவல்கள் உபயம் சரண் என பிரவீன் மூலம் அறிந்தவளுக்கு இவனுக்கு எதுக்கு இந்த வேலை என கோபம் வந்தது. இவனுக்கு எப்ப பாரு என விசயத்தில் தலையிடுவதே வேலையா போச்சு… என கோபம்.. ஆனால் அவள் அதை சரணிடம காட்டமுடியாதே… வீட்டு இளவரசன்…

 

அனிவர்த்தை பற்றி தெரிந்தும் அவள் மனம் அவனை தான் தேடுது… ரசிக்குது.. கண்ணனின்  காதல் ராதையாக தான் அவளும் கிடந்து தவிக்கிறாள். என்ன செய்ய….

 

தன் கேபினுக்கு வந்த பிறகும் என்னவோ மனம் ஒரு மாதிரி தவிப்பாக… சோர்வாக… காலையில் இருந்து அவனை பார்க்காதது… கேன்டீனில் பேசியது… அதை தொடர்ந்து வீட்டினரின் பேச்சு நினைவுக்கு வரவும… தன்  காதல் கைகூடுமா… என யோசிக்க.. தலைவலி வந்தது தான் மிச்சம்.

 

மாலை அவரை அதே யோசனையில் உழண்டவள்.. ஆபிஸ் நேரம் முடிந்து அனைவரும் கிளம்ப..

 

ஆயாம்மா வந்து “தேவாப்பா… வூட்டுக்கு போகல..” என கேட்கவும்..

 

கிளம்பி லிப்டிற்கு வந்தவள்… லிப்டினுள் அனிவர்த்தை கண்டதும்.. கண்ணணை கண்ட ராதை போல தன்னை மறந்து தான் போனாள். 

 

1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top