ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 13

13 – ஆடி அசைந்து வரும் தென்றல்



லிப்டிற்கும் அவளுக்குமான இடைவெளி பத்தடி தூரம் இருக்க…லிப்ட் மூடும் முன் அவனோடு இணைந்து கொள்ள துடிக்க… வேகமாக ஓடி சிறிய இடைவெளியில் தன்னை நுழைத்து கொள்ளும் வேகத்தில் சென்றவள்… கால்கள்  வழுக்கி அனிவர்த்  மேலேயே விழுந்தாள்.

 

 அனிவர்த் போனை பார்த்து கொண்டிருந்தவன் தேவர்ஷியை கவனிக்கவில்லை. அவள் எதிர்பாராமல் விழுகவும் அவளோடு சேர்ந்து அனிவர்த்தும் அவளை அணைத்தவாறு விழுந்தான்.அவனே தேவர்ஷியை கண்டு திகைத்தவன்… பின்பு தாங்கள் இருக்கும் நிலை அறிந்து உல்லாசமாக அவளை நெருக்கத்தில் ரசிக்க… ருசிக்க… துடிக்க…

 

அனிவர்த் மேல் தேவர்ஷி  இருக்க… காலையில் அவன் ரசித்த அழகெல்லாம் அவன் அருகே.. அவன் கையணைப்பில் இருக்க… சித்தம் கலங்கிய பித்தனாகி போனான்.

 

தேவர்ஷியோ விழுந்த பயத்தில் அனிவர்த்தின் சட்டையை இறுக பிடித்து… முகத்தை அவன் நெஞ்சினில் அழுந்த புதைத்து இருக்க.. 

 

“வர்ஷி.. குட்டிம்மா.. வர்ஷிம்மா.. என்னைப் பாரேன்..” என குழைந்தான்.

 

மெல்ல தலையை உயர்த்தி..அவனின் முகம் பாரக்க.. அவளின் செவ்வரி ஓடிய இதழ்கள் பயத்தில் நடுங்க.. அதன் நடுக்கத்தை நிறுத்தும் முயற்சியாக… இதழ்களை இழுத்து தன் வாயினுன் அதக்கி சுவைக்க… அவன் முரட்டு கைகளோ அவள் பின்னுடலில் சுகந்திரமாக மேலும் கீழும் தொட்டு தடவி அழுத்த… பஞ்சு தேகம் இன்னும் போதையை கூட்ட.. அவன் பிடி இறுகியது…

 

மையல் கொண்ட பெண்ணுக்கோ.. கந்தர்வனின் செயல்கள் காதலாக கட்டிப் போட…  கட்டுண்டு கிடந்தாள். 

 

மேலும் முன்னேற துடித்த உணர்வுகளை கட்டுப்படுத்த … சடுதியில் தன்னை கட்டுக்குள்  கொண்டு வந்தவன்.. மென்மையாக தேவர்ஷியை தன்னில்  இருந்து பிரித்தவன்… தானும் எழுந்து அமர்ந்தவன்.. அவளின் முகத்தை சங்கடத்துடன்  பார்க்க.. அவளோ இனிப்பை பறிகொடுத்த குழந்தையாக வாடிப் போய் இருக்க… அவள் தோளில் கை போட்டு லேசாக அணைத்து..

 

“நீ இதெல்லாம் தாங்கமாட்ட டா…” என நெற்றியில் முத்தமிட்டு சொல்ல.. 

 

அவளோ லேசாக விசும்ப.. அவளை தட்டிகொடுத்து சமாதானம் செய்ய.. அவர்கள் செல்ல வேண்டிய தளமும் வந்திட…லிப்ட் திறப்பதற்குள் எழுந்து நின்று அவளையும்   எழுப்பி.. விலகி இருந்த துப்பட்டாவை சரி செய்து…

 

“பை குட்டிம்மா..” என சொல்லி கடந்து நடந்துவிட்டான்.

 

அவன் விட்டு சென்ற இடத்திலேயே ஏதும் புரியாமல் மலங்க விழித்து நின்று கொண்டு இருந்தாள்.

 

 ‘ஏன் இப்படி விட்டுட்டு போயிட்டாங்க… ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு உறவு என்பது தப்பு தான்  தெரியாமல் இல்லை… ஆனால் காதல் கொண்டவர்கள் அணைப்பதும் முத்தமிடுவதும் இன்று சாதாரணமாக நடப்பது தானே…’

 

‘எங்கே இவளை இன்னும் காணோம்..’ தனது காரில் இருந்தவாறு தேவர்ஷி வருவதற்காக பார்த்ததிருந்தான்.

 

‘சின்ன பொண்ணு மனசுல தேவையில்லாம ஆசையை வளர்க்கறமோ.. என்னோட தேவைக்கு அவளை யூஸ் பண்றமோ..’ 

 

வாடிய முகத்துடன் மெல்ல நடந்து வந்தாள். சுற்றுப்புறம் கவனிக்காமல் தன்போக்கில் வண்டியை எடுத்து கிளம்பி சென்றாள். அவள் கிளம்பிய பிறகே அனிவர்த்தும் கிளம்பினான்.

 

இன்றும் சோர்வாக வீடு வந்தவள் சோபாவில் உட்காரந்திருந்த கௌசல்யா மடியில் தலை வைத்து படுக்க…. மகளின் சோரந்த முகத்தை கண்டு வருத்தப்பட்டவர்…அவள் முடியை கோதிக் கொடுத்தவாறே..

 

“தேவாகுட்டி இன்னைக்கும் டயர்டா தெரியற… ரொம்ப வேலையா… இப்படி கஷ்டப்பட்டு வேலைக்குப் போகனுமா.. வீட்ல ஜாலியா இருடா.. போதும்…”

 

“ப்ச்ச்.. ஒன்னுமில்லம்மா.. பசிக்குது அதான்..”என்றிட…

 

“அட லூசுப்புள்ள.. வந்தவுடன் பசிக்குதுனு சொல்லறதுக்கு என்ன… இரு வரேன்..” அவளை நகர்த்தி படுக்க வைத்து விட்டு சென்றார்.

 

‘என்னாச்சு.. நல்லா தானே இருந்தாரு.. தீடீர்னு ஏன் அப்படி சொன்னாரு.. தாங்கமாட்டேனா… அப்படினா..எதை தாங்கமாட்டேன்… முத்தமிடுவது தப்பா… எனக்கு பிடிச்சிருந்துச்சே… அதை கூட வேண்டாம் என ஏன் சொல்லவேண்டும். ஒருவேளை இன்று கேன்டீனில் அவர்கள் சொன்னது போல இவருக்கு அல்ட்ரா மார்டனா…. எல்லாம் தெரிந்த டேக்இட் ஈஸி பெண்கள் தான் பிடிக்குமா…  இவருடைய  பேஷன்ஸ்கு நான் செட்டாக மாட்டேனோ… அதை தான் அப்படி சொன்னாரா..’  என மிகவும் யோசித்து தன்னை வருத்திக் கொண்டாள்.

 

“தேவாம்மா.. எழுந்திரு..” கையில் தட்டோடு வந்த கௌசல்யா தேவாவை அமர வைத்து.. தோசையை வெங்காய தொக்கோடு வைத்து தானே ஊட்டி விட.. அமைதியாக சாப்பிட்டாள். எப்போதும் வாய் ஓயாமல் பேசும் மகள் இன்று அமைதியாக இருக்கவும் தாயாக கௌசல்யாவிற்கு கவலை… பட்டாம்பூச்சி மாதிரி இருந்தவளை வேலைக்கு அனுப்பி இருக்ககூடாதோ..

 

சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து படுத்தவளுக்கு அனிவர்த் பற்றிய எண்ணமே… ஏதேதோ யோசித்தவள்… இறுதியில்…

 

‘எனக்கு அவரை பிடிச்சிருக்கு…. அவருக்கும் என்னை பிடிச்ச மாதிரி தான் இருக்கு..  பார்ப்போம் எவ்வளவு தூரம் தான் இந்த பிடித்தம் போகும் என… அதுவரை மனதை போட்டு ஒலட்ட வேண்டாம்’ என முடிவு எடுத்தவுடன் நிம்மதியாக உறக்கம் கொண்டாள்.

 

மனதில் ஒரு முடிவு எடுத்த பிறகு வாழ்க்கை முன்பை விட கொஞ்சம் உற்சாகமாக தான் சென்றது தேவர்ஷிக்கு… தினமும் எப்பவும் போல தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொள்வதிலோ… அனிவர்த்துக்கு குட்மார்னிங் சொல்வது போல அவனுக்கு காட்சி கொடுத்து… தானும் அவனை ரசிப்பதிலயோ எந்த மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.

 

அனிவர்த் பாடு தான் படு திண்டாட்டமாகி போனது. தினமும் இவளை பக்கத்தில் வைத்துக் கொண்டு.. பார்க்காது போல பார்த்திருக்க முடியவில்லை. அதிலும் அவள் சேட்டைகளே பார்த்துவிட்டால் அவனின் உடலும் மனதும் நிலை கொள்வதில்லை. இவளை வேண்டாம் என அனுப்பிவிட்டால் இந்த அவஸ்தை இருக்காது அல்லவா.. என்று கூட நினைத்தான். ஆனால் வேண்டாம் போ என சொல்ல தான் முடியவில்லை.

 

தேவர்ஷி அணிலோடு  கூடிய நட்பை பார்த்து… தினமும் சாக்லேட் வைக்க.. அதுவும் பயம் இல்லாமல் இவள் கையில் இருந்து எடுத்து  கொள்ளும் அளவிற்கு பழகிட.. அதனோடு அவள் விளையாடும் அழகை ரசிக்க என அவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 

 

இப்படியே இவர்களுக்குள் காதல் இழுபறியாக தான் இருந்தது.

 

அனிவர்த் அன்று ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தான். அவன் மிகவும் எதிர்பார்த்த டென்டர் சிறிய தொகை வித்தியாசத்தில் கை விட்டுப் போயிருக்க… கிடைத்திருந்தால் பெரும் பணத்தை இலாபமாக பார்த்திருக்கலாம். அதைவிட அவன் கம்பெனி வளர்ச்சி பாதையில் பல படிகள் முன்னேறியிருக்கும்.

 

அந்த டென்ஷனை கோபமாக ஆபிஸில்  எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருந்தான். தேவர்ஷியின் டிரையினர் சுந்தர் அன்று வசமாக சிக்கி  கொண்டான். அவன் வேலைக்கு நடுவே தேவர்ஷியையும் டிரைன் பண்ண வேண்டும். சுந்தர் சொல்லுவதை எல்லாம் அவள் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருக்க… அவளிடம் போராடியே பாதி நேரம் செல்ல… இவனின் வேலையும் தேங்கிவிட்டது.

 

“சொல்லுங்க சுந்தர்… ஏன் பெண்டிங்ல இருக்கு…”

 

“சார் அது வந்து…” என இழுக்க…

 

“இங்க பாருங்க.. எனக்கு கரெக்டான ரீசன் வேணும்.. சும்மா சாக்குபோக்கு சொல்லாதிங்க..” என கோபப்பட..

 

“சார்.. தேவர்ஷி ஒர்க் கான்ஷியஸ் கிடையாது. அவங்களுக்கு என்னால டிரைன் பண்ண முடியலை. அவங்க ஒர்க்கையும் நான் தான் பார்க்க வேண்டி இருக்கு.. நான் ஒரு டைம் உங்ககிட்ட சொன்னேன் தேவர்ஷிய பத்தி நீங்க தான் சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கலை…” என அனிவர்த்தையே குற்றம் சாட்டும் விதமாக பேச…

 

“இப்ப என்ன சொல்ல வரிங்க… தேவர்ஷியால தான் உங்க் ஒர்க்க முடிக்க முடியாம போச்சா.. “

 

“எஸ் சார்” என்றான் தெனாவட்டாக…

 

“ம்ம்.. அப்படியா.. உங்களுக்கு ஒரு நியூஜாயினிய ட்ரைன் பண்ற கெப்பாசிட்டி இருக்குனு நினைச்சு தானே இந்த போஸ்ட்ல உங்கள வச்சிருக்கேன்… இந்த போஸ்ட்க்கு நீங்க தகுதியில்லைனு நீங்களே சொல்லறிங்களா…”

 

சுந்தரோ பதறி போய்… “நோ சார்.. நோ சார்.. அப்படி எல்லாம் இல்லை..”

 

“என்கிட்ட பேசும் போது யோசிச்சு பேசனும் சுந்தர். இல்லனா இந்த ஆபிஸ்ல இன்னொரு இன்டர்வியூ நடத்த வேண்டியிருக்கும்”

 

“சாரி சார்..” தலையை குனிந்து பவ்யமாக சொல்ல…

 

“நீங்க உங்க ஒர்க் பார்க்காம அடுத்தவங்கள ப்ளேம் பண்ணாதிங்க.. ஓகே..”

 

“சாரி சார்… “

 

“அப்புறம் இனி தேவர்ஷிய நான் டிரைன் பண்ணிக்கிறேன். இனி நீங்க் உங்க ஒர்க்கை எந்த டிஸ்டபர்ன்சும் இல்லாம கன்டினியூ பண்ணுங்க..” என்றான் நக்கலாக.

 

சுந்தரோ பயந்து போய்.. “இல்ல சார்… நானே…”  என பேசியவனை கைநீட்டி தடுத்தவன்…

 

“கோ டூ யுவர் சீட்..” என வெளியே போகுமாறு கை நீட்டி சொல்ல..

 

முகம சிறுத்துப் போய் சுந்தர் வெளியேறிட..

 

அனிவர்த் ‘இவளை வச்சுகிட்டு என்ன பண்றதுனு  தெரியல.. விளையாட்டுத்தனமாவே இருக்கா… கொஞ்சம ஸ்டிரிக்டா தான் ஹேண்டில் பண்ணனும்.. வரட்டும் இருக்கு இவளுக்கு இன்னைக்கு…’ என கோபமாகவே அவளை தனது அறைக்கு அழைத்தான்.

 

‘ம்க்கும்… நீ பண்ணிட்டாலும்..’ என மனசாட்சி காறி துப்ப.. அதை சட்டை செய்யாமல்…

 

அவனது அறைக்கு துள்ளலோடு வந்தாள். நேற்று அவன் முத்தமிட்ட தித்திப்பு மனதில் உழாவ.. இனம் விளங்கா உணர்வு என கொஞ்சம் மனம் தத்தளித்தது. அவனை காண மானாக துள்ளல் நடையோடு தான் வந்தாள்.

 

“குட்மார்னிங் சார்..”

 

அவளை பார்த்ததும் அனிவர்த்தின் கோபம் எல்லாம் இருக்கவா.. போகவா.. என்றது. மலர்ந்த முகத்துடன்… கண்கள் ஒளிர.. கால்கள் தரையில் பாவாமல்.. கைகளை கோர்த்துக் கொண்டு.. தலையை லேசாக சரித்து புன்னகையுடன் நின்றிருந்தவளை கோபமாக பேசகூட வரலை..

 

“உனக்கு கொடுத்த ப்ரோகரம் முடிச்சிட்டயா..” என கோபத்தை இழுத்து பிடித்தவாறு கேட்டான். 

 

“ஹீஹீ..எந்த ப்ரோகரம் “என அசடு வழிய…

 

“எதுனு உனக்கு தெரியாது.. உனக்கு எத்தனை கொடுத்தாங்க..”

 

ஒன்று என ஆட்காட்டி விரலை ஆட்டி காண்பித்தாள்.

 

“அப்புறம் எதுனு கேட்கற… முடிச்சிட்டயா இல்லையா..”

 

“அது வந்து அந்த சுந்தர் மெட்டல் மண்டையன்.. டவுட் கேட்டா கிளீயர் பண்ணவேமாட்டேங்கறான்..”

 

“ஒரு சீனியர இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா..”

 

“அவன் மட்டும் என்ன லூசு.. முட்டாள்னு திட்டுவானா..அதுவும் டிஸ்டிங்கசன்ல வந்த என்னை பார்த்து..”

 

“சரி விடு.. நான் சொல்லி தரேன் வா.. “ என அவள் கேபினுக்கு சென்று  அவளை அருகில் இருத்தி அவள் சிஸ்டத்தில் பார்த்தால் ஒரு வேலையும் செய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அப்ப நான் பாரக்கும் போது என்ன செய்திருப்பாள். என்ன செய்தாள் என அதையும் கண்டுபிடித்தான். அத்தனை கேம்ஸ் டவுன்லோட் பண்ணி விளையாடி இருக்கிறாள்

 

தேவர்ஷியை அனிவர்த் முறைத்துப் பார்க்க…

 

‘ச்சே.. இப்படி சிக்கிக்கிட்டயே.. ஏதாவது சொல்லி சமாளிக்கனுமே… என்ன சொல்லலாம்.. அச்சோ அவசரத்துக்கு ஒன்னும் தோனமாட்டேங்குதே…’

 

“என்ன ரொம்ப யோசிக்கற.. என்ன சொல்லி சமாளிக்கறதுனா…”

 

“ஹீ..ஹீ.. அப்படி… எல்லாம்… இல்ல…”

 

“ரொம்ப வழியாத…”

 

சிலவற்றை சொல்லி.. “இதெல்லாம்  முடிச்சிட்டு தான் நீ வீட்டுக்கு போகனும் புரியுதா..” என கண்டிப்பான குரலில்.. 

 

மற்றவர்களிடம் கோபத்தை காட்டியவனால் அவளிடம் காட்ட முடியாமல்.. அவளை திட்ட மனம் வராமல்.. சற்று கண்டிப்புடன் சொல்லி சென்றான்.

 

1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top