ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்..

                   வா தேவதா

                       [16]

தலைக்கு குளித்து விட்டு வந்து.. கையில்லாத வெறும் பெனியன் மற்றும் வேஷ்டியில், மஞ்சத்தில் அமர்ந்திருந்தவனின் ஈரத்தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள் யௌவனா. 

இந்தியாவிலிருந்து.. திருமணமான ஒரே மாதத்தில், ‘கணவன் தனக்கு துரோகம் இழைத்து விட்டான்’ என்றழுது கொண்டு, ‘ஊடல் உற்றவளாக வந்து நின்ற மங்கையா இது சத்யாதித்தனின் தலை துவட்டுவது?’ என்ற ஆச்சரியம்.. அவள் அண்ணன் பாண்டி பார்த்திருந்தால்.. கட்டாயம் தோன்றியிருக்கும். 

சர்ப்பம் தீண்டிய பின் மனைவியின் மனமாற்றம் கண்டு.. சத்யனுக்கும் உள்ளே ஆச்சரியமாக இருக்கத் தான் செய்தது. 

என்ன தான்.. கணவன் மீது ஊடல் கொண்டாலும், அதே கணவனுக்கு ஒன்று என்றானதும்.. பழையன மறந்து.. தன் பதிபக்தியைக் காட்டும் பெண்ணவளின் அன்பில் இதயம் உருகி நின்றான் சத்யன். 

அதிலும், தனக்கும், மனைவிக்கும் இத்தகைய நெருக்கத்தை உண்டுபண்ணிய.. அந்த “கட்டுவிரியன் பாம்பு”க்கு மானசீகமாக நன்றியும் கூறிக் கொண்டவனுக்குள் இதழ்க்கடையோரம் ஒரு கள்ளச்சிரிப்பு எட்டிப் பார்க்கலானது தலைவனுக்கு. 

குளித்து முடித்து விட்டு வந்தவன், தனது கட்டிடப்பட்ட கையால்.. தலை துவட்ட சிரமப்படுவதைக் கண்டவள், தானாகவே முன்வந்து.. டவலை வாங்கி, அவனை மஞ்சத்தில் அமர வைத்தவாறு.. சீராக தலை துவட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் தாய்மை ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

கணவனின் சின்னச் சின்ன தேவைகளையும் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்யும் ஒவ்வொரு பதிவிரதையின் கண்களிலும் ஒளிரும் தாய்மை.. அழகினும் அழகு!! 

அவனது முகம்.. அவளது ஆலிலை வயிற்றுக்கு வெகுவெகுஅருகாமையில் இருக்க, அவளது பூவிரல்கள்.. அவனது பிடரிமயிரில் அளைந்து.. கேசம் உலர்த்தும் சுகத்தில்.. சொக்கிப்போயிருந்தது சத்யனின் விழிகள். 

அதிலும் அவள் சேலைத் தலைப்பை இழுத்து எடுத்து, மாராப்பு அணிந்திருந்த ஒரு பக்க தனங்களையும், அம் மெல்லிய இடுப்பும் தாராளமாகவே காட்சி தரும் வகையில்.. சேலையை இடுப்பில் சொருகியிருக்க, அவளது அங்கலாவண்யங்கள் வேறு அவனை ஏதோ செய்யும் போல இருந்தது. 

‘கொக்குக்கு ஒன்றே மதியாம்’ அது போல.. அவனது சிந்தனையும் சரி, அந்தப் பொல்லாத சிவந்த நயனங்களும் சரி, அந்த வளைவான இடையின் மீது தான் கிறக்கத்துடன் பதிந்திருந்தது. 

கொஞ்சம் தலை உயர்த்தி அவன் பார்த்தாலும் ,அவளுடலின் இயற்கையின் பிரமிட்கள்..அவனை அசரடிக்கும் போலவே இருந்தது. 

சத்யாதித்தனுக்கோ நுனிவிரல் கூட தீண்டாமல் நனவில் நடமாடும் மனைவியின் அழகு நாளுக்கு நாள் கூடுவதில் ஓர் ஆச்சரியம். 

அந்த ஆச்சரிய அழகையே இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக தாபம் தலைக்கேற, உணர்ச்சிகளின் உச்சத்தில்.. சட்டென்று அவளைப் பின்புறமாகச் சுற்றி வளைத்த கை… அவள், இடையில் பதிந்தது தாராளமாக. 

கணவனின் கைவிரல்கள் இடையில் பிரயோகித்த அழுத்தத்தில், அவள் இதயம் ஒரு முறை தூக்கிவாரிப்போட்டு அடங்கலானது. 

மனதுக்குள்ளோ… ஒரு நடுக்கம் ஓட..அடுத்து அவள் இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்தும்முகமாக.. அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்.. அவளது ஆலிலை வயிற்றில்.. தன் முகத்தை ஒரு குழந்தை போலப் புதைத்துக் கொண்டான். 

அவளுக்கென்றே உரித்தான வியர்வை மணம்.. அவனது நாசியை நிரடி, நுரையீரலை நிறைக்கவாரம்பிக்க.. எழுத்தில் வர்ணிக்க முடியாத உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டான் மன்மதன். 

இடையில் தவழும் கை. அவள் வயிற்றில் புதையும் அவனது முரட்டு முகம்.

அவள் வயிற்றில்.. தன் முகத்தை அப்புறமும், இப்புறமும் புரட்டி, தன் மீசை அதரங்களால் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியவன், மனைவியின் மென்மை உடல் தந்த சுகம் தாள மாட்டாமல், “யௌ.. வ்வனாஆஆஹ்” என்று கிறங்கவும் செய்தான் கள்வன். 

அவளுக்கோ.. பெண்களுக்கு இருக்கும் இயல்பான கூச்சவுணர்வு தலைதூக்க, அவன் மூட்டும் கூச்சத்தை தாங்க மாட்டாமல் அவனிலிருந்தும் விலக முயல, அதற்கு விடவேயாமல், அவளது இடையை இன்னும் கொஞ்சம் இறுக்கி வளைத்து, தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன், தன் மீசை குத்தும் அதரங்களின் குறுகுறுப்பை.. அவளது குழிந்த தொப்புளில் மூட்டினான் அவன். 

அதில் மெல்ல அவள் கூச்ச உணர்வு விலகி.. அவளுள் காதல்த்தீ பற்றியெரிய ஆரம்பிக்க, அவனது பிடரிமயிரை அளைந்த வண்ணம், தன் கீழுதட்டைக் கடித்து நின்று உணர்ச்சிகளின் வசம் ஆட்பட்டிருந்தவள்…கணவனைத்தன் வயிற்றோடு இறுக்கி அணைத்தாள் யௌவனா. 

மனைவியின் பஞ்சன்ன தேகத்தில் இருந்து வரும் உஷ்ணம், தற்போது தான் குளித்து விட்டு வந்ததால்.. இவன் தேகத்தின் ஜில்லிப்பு.. இரண்டும் ஒரே நேரத்தில் சுகிக்கப்பட்டதில்.. அங்கே பஞ்சும், நெருப்பும் பற்ற வைத்தாற் போன்று ஒரு உணர்ச்சிப் பிளம்பு இருவருக்குள்ளும். 

யௌவனாவோ தன்னிலை மறந்து ஒரு சர்ப்பம் போல உஷ்ணத்தில், “உஸ்..ஸ்” என்று மூச்சு வாங்குவதைக் கண்டவன், அவள் தயார் நிலையில் இருப்பதை உணர்ந்தவனாக, அடுத்த நிலைக்குத் தாவ.. இது தான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவும் எடுத்துக் கொண்டான். 

அதனால் பட்டென்று.. அவள் கையைப் பற்றி தன் மடிகளில் ஒரு குழந்தையைப் போல அமர்த்திக் கொண்டவன், தன் விழிகளுக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் அவளது மதிவதனத்தை நொடியும் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் சத்யன். 

கனவில் அவன் திகட்டத் திகட்டக் காதலித்த அதே முகம்!! 

பாலில் விழுந்த கருந்திராட்சை போன்ற அவளது கண்களின் திரட்சி.. அவனை ஏதேதோ இன்பமான ஹோர்மோன்களைச் சுரக்கச் செய்தது. 

அதனால் ஓர் சின்னப் புன்னகையும்.. அவனது முரட்டு அதரங்களில் அழகாகப் படர்ந்தது. 

கண்களைப் பார்ப்பதே இத்தனை இன்பமானதெனின்.. அவள் உடலை மொத்தமாக ஆட்கொண்டால்?? 

அந்த நினைப்பே அவளுள் கிளுகிளுப்பை மூட்ட, 

அவளது கன்னத்தை விரல்களால் வருடியவண்ணம், ஈரம் தோய்ந்த அந்த மென்மையான அதரங்களை திடுதிப்பென்று கவ்விச் சுவைக்கலானான் அவன். 

அந்த தீடிர்க் கவ்வலில் அவளுக்குள் அடித்தது ஒரு மின்சாரப்புயல்.

 அதன் சுழியில் அகப்பட்டவள்.. கண்கள் மூடி ஒரு வேற்றுக்கிரகத்துக்குப் பயணப்பட தயாரானாள். 

அவனது கட்டிடாத.. அவளைச் சுற்றி வளைத்த சுயாதீனமான கை.. அவளது இடையில்.. அழகாக வீணை மீட்ட, அவனது பின்னங்கழுத்தைச் சுற்றி வளைத்திருந்தது அவளது தளிர்க்கரம். 

தன் உதட்டில் வழியும் ஒட்டு மொத்த மதனநீரையும், புயல்வேகத்தில் உறிஞ்சும் கணவனின் இதழ்களின் வன்மை.. ஒரு இனிமை மயக்கத்தைக் கொடுக்கலானது பெண்ணுக்கு. 

அவனுக்கும் இத்தனை நாள் தாபம்.. உச்சிக்கு அடித்ததில்.. மெல்ல அவளது தேனூறும் அதரங்களை விட்டும் கீழே குனிந்தவன் .. அவள் கழுத்துக்கும், பெண்மைக்கும் இடைப்பட்ட இடத்தில் தன் ஆக்கிரமிப்பைத் தொடங்கலானான். 

உணர்ச்சிகளின் உச்சத்தில்.. அந்த அணில்க்குஞ்சு.. அவ்விடத்தை இலேசாகக் கடித்துச் சுவைக்க… அவளுக்கு வலித்தாலும் சொக்கிப் போன விழிகளுடன்.. அப்போதும் விடாமல் அவனது பிடரிமயிரைக் கோதி விட்டுக் கொண்டேயிருந்தாள் யௌவனா.

அவனுக்கோ.. வேண்டும் வேண்டும் மொத்தமும் வேண்டும். 

அவளது துகில்.. ஒரு இடையூறாகப் போக, அதைக் களைந்து விடும் நோக்கில்.. அவளை அப்படியே ஏந்திக் கொண்டே திரும்பிக் கட்டிலில் இட்டவன், அவள் மீது தன் பாரத்தை அழுத்தாமல் அவள் மீது படரலானான். 

தரையில் இட்ட மீன்போல, அவனது உஷ்ண மூச்சுக்காற்றுப்பட்டு.. தத்தளித்தாள் பெண். 

அந்தத் தத்தளிப்பும்.. இலேசாக திறந்திருக்கும் கண்களின் உச்சி போதையும்.. அவனை ஈர்க்க, காதலுடன்.. அவளது அதரங்களை நோக்கிக் குனிந்து இலேசாக முத்தமிட்ட போது தான்.. இடையூறாக.. எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தேறியது. 

வீட்டு வாசற்படியில் யாரோ நின்று ஓலமிட்டபடி அழைக்கும் ஓசை கேட்டு.. சட்டெனக் களைந்தது அவனுடைய தாப எண்ணங்கள். 

அலுப்புடன்.. தலை சிலுப்பிக் கொண்டே தன் உச்சிபோதை தெளிந்த சத்யன், “ப்ம்ச்.. இந்த நேரத்தில் யாரோ தெரியல??.. இரு… நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்றவனாக எழப்போக, 

அவனது வலிமையான தோள்புஜம் பற்றித் தடுத்தவள், இதுவரை அவன் கேட்டிராத ஹஸ்கி குரலில் சொன்னாள், “சத்யாஹ்… சீக்கிரம் வந்துருங்க.. ப்ளீஈஸ்”என்று. 

அவள் கண்கள் சொட்டிக் கொண்டிருந்த காதலில், அவளது அன்பை உணர்ந்தவனுக்குள், யௌவனாவுக்கான ஆயிரம் காதல் பூத்தது உள்ளத்தில். 

அவள் இதழ்களில் சுருக்க முத்தம் ஒன்று பதித்தவன், கண்கள் அவளையே ஒரு பளிச்சிடலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. 

இத்தனை நாள் அவன் அன்பு புரியாமல் ஊடல் கொண்ட மனைவி, கூடலுக்கு ஏங்கி நிற்பதை காணும் போதே ஒரு கிளுகிளுப்பு தோன்ற, 

சில்மிஷப் புன்னகையுடன், “ம்.. சீக்கிரம் வந்துர்றேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான் வாசலை நோக்கி. 

வாசலில் நின்றிருந்ததோ.. வேல்பாண்டியின் வலது கை முருகேசன். வேல்பாண்டிக்கு ஒத்தாசையாக திருமண வீடு வரை சென்றிருந்தவன் எங்கே இங்கே?? 

அதுவும் ஒரு காது வழிப்பக்கம் வழிந்த இரத்தம்… அவனது வெள்ளைச்சட்டையில் பெரும் பெரும் துளிகளாக வரிசையாக படிந்து சென்றிருக்கும் தோரணையுடன்??

முருகேசனின் கபில நிற சருமத்தில்.. எங்கனும் முத்து முத்தாக வியர்த்திருக்க, அவன் உடலில் தெரியும் அதிகபட்ச பதற்றம்.. சத்யாதித்தனை அலைக்கழிக்க வைத்தது. 

சத்யாதித்தன் வாசற்படியிறங்கி வரும் வரை பொறுமை இல்லாத முருகேசு.. தானாகவே படிகள் ஏறிக் கடந்து சத்யாதித்தனை அடைந்தவனாக, சத்யனின் கைகளை.. பதற்றத்துடன் பற்றிக் கொள்ளவும் செய்தான். 

சத்யாதித்தனுக்கோ உள்ளூற நடப்பது எதுவும் சரியில்லை என்று தோன்றினாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், “என்னாச்சு முருகேசு?” என்று கேட்க, தன் இரத்தம் ஒழுகும் காதுகளைப் பொத்திப் பிடித்துக் கொண்டான் சத்யன். 

முருகேசுவோ திக்கித் திணறிய குரலில், “ரா..ரா..ராசா… நம்மவே.. வேல்பாண்டிண்ணாவும், அண்ணியும் வர்ற வழியில் ஆக்ஸிடென்ட்டாகி.. .. சீரியஸா ஹாஸ்பிடல்ல கெடக்காங்க ராசா..” என்று சொல்ல, சத்யாதித்தன் ஒருகணம் எதுவுமே ஓடாமல் மூளை மரத்துப் போனவனாக நின்று விட்டான். 

முருகேசு என்றுமே.. சத்யாதித்தனை, “ராசா” என்று அழைப்பதேயில்லை. எப்போதுமே சத்யன் முருகேசனுக்கு ‘ஐயா’ தான். 

ஆனால் இன்று மட்டும் என்ன புதிதாக ராஜா?அதிலும் இவன் மட்டும் ஹாஸ்பிடலில் வைத்தியம் பார்க்காமல் ஏன் இரத்தம் ஒழுக வந்திருக்கிறானாம்? என்ற சந்தேகங்கள் அவன் சுமூகமான மனநிலையில் இருந்தால் தோன்றியிருக்கும். 

ஆனால் அவனுமே பதற்றத்தின் வசம் ஆட்பட்டிருந்ததால், அவனுக்கும் கேட்கத் தோன்றவில்லை. கேட்கும் மனநிலையிலும் அவன் இல்லை. 

இவனும் பரபரப்புடன், எந்த ஹாஸ்பிடல் என்று கேட்கப் போனவேளை, முருகேசுவாகவே முந்திக் கொண்டவன், “பெரியாஸ்பத்திரி ராசா” என்றான் முருகேசு. 

எப்போதுமே முருகேசு, “சொல்வதை மட்டும் செய்யும் சுப்பன்” வகையறாவில் சேர்ந்த பணியாளன். அவன் இன்று சத்யாதித்தனின் எண்ணவோட்டங்களை படிப்பது மட்டுமல்லாமல், குறிப்புணர்ந்து முன்கூட்டியே பதில் சொல்வதும் ஆச்சரியம் தான். 

பாவம் சத்யன். மச்சானுக்கு ஏதோவொன்றாகிப் போய் விட்டதே என்ற களேபரத்தில் மருத்துவமனை நோக்கி செல்ல வேண்டும். 

உள்ளே அவனுக்காக காத்திருக்கும் மனைவியைப் பதற்றத்திற்குள்ளாக்காமல் எப்படியாவது சமரச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தானே ஒழிய… முருகேசுவின் அதிபுத்திசாலித்தனத்தைப் பற்றியோ, 

அதன் பின்னால் தனக்காக.. ஒரு சாந்தியடையாத ஆத்மா விரித்த வலையைப் பற்றியோ அறியாது போனான் சத்யன்.

முருகேசுவுடன், தன்னிலை முற்றிலும் மறந்து அப்படியே மருத்துவமனை நோக்கி விரையப்போனவனுக்கு, தான் மேல்சட்டை எதுவும் அணியாதிருப்பது புரிய, முருகேசனை நோக்கி, “முருகேசா… நான் போய் சட்டைய போட்டுட்டு சீக்கிரம் வந்துர்றேன்..ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் கெளம்பிப் போயிரலாம்” என்றபடி.. விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவன், தனக்காக காத்திருக்கும் மனைவியின் முகம் கூட பாராமல், 

‘ஹேங்கரில்’ கொழுவி வைத்திருந்த தன் மடிப்பு கலையாத சட்டையை நாடித் தான் போனான் அவன். 

அவனுக்காக விரகதாபத்துடன், உஷ்ணப் பெருமூச்சுடன் சிவந்த கண்களுடன்.. மஞ்சத்தில் காத்து நின்றிருந்த யௌவனாவுக்கோ, உள்ளே வந்த தலைவன் அவளை சட்டை செய்யாதததில் ஏமாந்து தான் போனாள். 

அவனோ இருக்கும் ஒற்றைக்கையை சமாளித்தபடி சட்டையை ஒருவாறு அணிந்து கொண்டவன், தன் மணிப்பர்ஸை எடுத்து வேஷ்டிப் பாக்கெட்டில் இட்டவனாக, மனைவியை நோக்கித் திரும்பினான் பிரியாவிடை பெறுவதற்காக. 

அவன் செய்கையின் காரணம் அறியாமல் நிலைகுலைந்து போயிருந்தவளோ, 

“என்னாச்சு சத்யன்?”என்று கேட்க, எதையும் யோசிக்காமல், ஏதோ ஒரு யோசனையில், “உங்க அண்ணா வந்த வண்டி..”என்று சொன்னதும் தான் தாமதம், சட்டென இடையிட்ட யௌவனா முற்றிலும் பதறிப் போயிருந்தாள் என்பதை அவளது இருண்ட வதனமே காட்டிக் கொடுத்தது. 

 கணவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, கண்களில் நீர் சட்டென்று கோர்க்கத் தொடங்க, 

திக்கித் திணறிய குரலில், “என் அண்ணா வ.. வந்த வ.. வண்டிக்கு??”என்று கேட்டாள் உள்ளம் கிடுகிடுங்க. 

சத்யன், தன் மனையாளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அவளது விழிகளைப் பார்த்த வண்ணம் நிற்க, இவளோ அவன் கைகளை உலுக்கியவளாக, “என்னாச்சு சத்யன்? அண்ணா வந்த வண்டிக்கு என்னாச்சு சத்யன்?? ப்ளீஸ் சொல்லுங்க?” என்று கேட்ட போதே… தன்னை சுதாரித்துக் கொண்டவன், 

அவள் கண்ணீர் துடைத்து, உச்சந்தலை வருடியவனாக, வழிய வரவழைக்கப்பட்ட சாந்தமான புன்னகையுடன், “உஷ்… ஒண்ணும் இல்லை.. அண்ணாவுக்கு .. வர்ற வழியில் வண்டி டயர் பஞ்சராயிடுச்சாம்… பாதிதூரத்தில் காட்டுவழியில் நின்னுட்டிருக்காங்கன்னு தகவல் வந்திருக்கு…” என்றவன் மறந்தும் கூட, அந்தத் தகவலைத் தந்தது முருகேசு என்று சொல்லி விடவேயில்லை. 

பின்னே? பணியாள் முருகேசுவைக் காண, மனைவி முற்றத்துக்கு விரைவாளேயானால், முருகேசுவின் இரத்தம் ஒழுகும் தோரணை கண்டு இன்னும் அவள் அஞ்சக்கூடும் என்று தான் உண்மையை மறைத்தான் சத்யன். 

அவளது கன்னம் ஏந்தியவள், மென்மையான குரலில், “நான் போய் அவங்களை அழைச்சிட்டு வந்துர்றேன்.. . நீ இங்கேயே பத்திரமா இரு.. நா.. சீக்கிரமே வந்துர்றேன்” என்றவன், அவளுக்கு மீண்டும் ஆதுரமாக முத்தமிட்டு விட்டுச் சென்றாலும் கூட, அவள் இதயம் ஏனோ தாறுமாறாக அடிக்கவாரம்பித்தது. 

சகோதரன் அல்லவா? அந்த பாசம்.. அவளை ஆட்டுவிக்கத்தான் செய்தது. 

பல்லைக் கடித்துக் கொண்டு மஞ்சத்திலேயே உணர்ச்சியற்ற ஜடம் போல அமர்ந்து விட்டிருந்தாள் யௌவனா. 

கணவனை வழியனுப்பி வைக்க, வாசல் வரை செல்லும் யோசனை கூட அவளில் இல்லை. 

வீட்டின் ஷெட்டிலிருந்து கரடுமுரடான பாதையில் செல்ல ஏதுவான ஜீப் உறுமும் சத்தம்.. அவள் காதுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொஞ்சம் கொஞ்சமாக.. செவிகளை விட்டும் தூரமாகி.. நின்றும் போனது. 

ஆனால் அவள் மட்டும் சாய்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தாள் அவள். 

‘வெறுமனே இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்’ என்று சொல்வதில்லையா? அது போல அவள் இதயத்தை பல பொல்லாத எண்ணங்கள் ஆக்கிரமிக்கலானது. 

ஏன் அவனுடன் ஒரு கணம் மனம் விட்டு சிரித்துப் பேசவும், மறுகணம் வார்த்தைகளால் அவன் இதயத்தைக் கொன்று புதைக்கவும் தோன்றுகிறது அவனுக்கு. 

சுஷ்மிதா செட்டியுடன் தொடுப்பு வைத்திருப்பவன், யௌவனாவை, ‘போனால் போடி’என்று விட்டிருக்கலாமே?

 பின்னோடே இலங்கை வந்திருப்பதுவும், அவள் பின்னாலேயே தன் ஆண்கர்வம் மறந்து இழைவதும் கூட அவள் பால் கொண்ட அன்பினால் தானே? 

அவளைக் கனவில் கண்டு காதலித்து அவளுக்காக இலங்கை வந்தான்; ஊராரை அநாயசமாக சமாளித்து, வேல்பாண்டியின் மனம் வென்று அவளைக் கரம் பிடித்தான். 

தில்லியின் அரசியல் போக்கைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் கொண்ட பெரும் பணக்கார வர்த்தகன், அந்த இறுமாப்பு சிறிதும் இன்றி… வெள்ளந்தியாக அலைவதும், கண்டியின் உக்கிரமான குளிர்காலநிலையை சுகித்திருப்பதும் கூட அவளுக்காகத் தானே?? 

அப்படியானால் ‘சுஷ்மிதா செட்டியுடன்’ தொடுப்பு என்பது கூட பிழையான விம்பமோ? அவனது தன்னிலை விளக்கத்தை அவள் நிதானமாக கேட்டிருக்கவும் வேண்டுமோ? என்றெல்லாம் எண்ணி கணவனுக்காக கனிந்தது மனம். 

இத்தனையும் அவளுக்காக செய்யும் கணவன் அவளிடம் எதிர்பார்ப்பது ஒரு தூய அன்பு. அந்த அன்பைக் கொடுக்காமல்.. அவனை அலைக்கழிப்பதை எண்ணும் போது வெட்கியது இருதயம். 

இன்று பாம்பு கடித்த ஒற்றைக்கையுடன்.. அவன் மஞ்சத்தில் சிந்திய தாபமுகம் அவள் மனக்கண் முன் வந்து போக, அவனது முரட்டு தாடைகளை ஏந்தி முத்தமிட வேண்டும் போல இருந்தது அவளுக்கு. 

அவன் அண்ணன் அண்ணியுடன் வீடு வந்ததும் தன் மனமாற்றத்தை உணர்த்தி விட வேண்டும் என்ற ஆவலுடன் எத்தனை மணிநேரம் காத்திருந்தாளோ? 

காத்திருப்பு காத்திருப்பாகவே அமைந்து விடும் என்பது போல இருந்தது அவளுக்கு. 

பொழுது சாய்ந்து, இரவும் கழிந்து.. அந்த தம்பதிவனமே காரிருளும், அடர்ந்த பனியும்.. இரண்டறக் கலந்து கலவி கொள்ளும் ஒரு ஏகாந்த இரவின் வசம் ஆட்படலானது. 

நேரம் ஆக ஆக தலைவனுக்கும், தன் தமையனுக்கும் என்னானது என்று அவளுள் பயம் பிடித்துக் கொள்ள,நடுக்கூடத்தில் கைகளைப் பிசைந்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டேயிருந்தாள் அவஸ்தையுடன். 

விழிகளோ.. வாசலை எட்டிப் பார்ப்பதும், பின்னே கூடத்தில் இருக்கும் கடிகாரத்தை எட்டிப் பார்ப்பதுமாகவே இருக்க, சத்யாதித்தன் மட்டும் மனைவியின் தவிப்பைக் கண்டிருப்பானேயானால், அவளுக்காக தன் மொத்த சொத்தையும் எழுதித் தரும் உன்மத்த நிலைக்கு ஆட்பட்டிருப்பான். 

அந்தளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.. யௌவனா அவனுக்காகத் தவிக்கும் தவிப்பைக் காணும் போது. 

நேரமோ யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டேயிருக்க, வெகுநேரமாகியும் அவனைத் தான் காணவில்லை.

 அவனது செல்லின் ஞாபகம் வர, ஓடிச் சென்று அவன் செல்லுக்கு அழைப்பெடுத்த போது.. ‘நாட் ரீச்சபிள்’ என்று வரலானது. 

சரி தமையனுக்கு எடுத்துப் பார்ப்பது நல்லது என்ற எண்ணத்துடன், வேல்பாண்டிக்கு அழைப்பெடுத்த போது, செல் “ஸ்விச்ட் ஆப்” என்று வர, அவளுக்கோ தலைசுற்றிக் கொண்டு வருவது போல இருந்தது. 

காட்டுவழிப்பாதையில் டயர் பஞ்சர் என்றவன், ஜீப்பில் தானே சென்றான்? அப்படியானால் பத்துப் பதினைந்து நிமிடத்துக்கு எல்லாம் வேல்பாண்டியையும், வாசுகி அண்ணியையும் அழைத்துக் கொண்டு சத்யன் வீடு வந்திருக்க வேண்டுமே? 

இன்னும் ஏன் அவன் வரவில்லை?? 

போகும் வழியில்.. ச.. சத்யனுக்கு ஏதாவது ஆகியிருக்கக் கூடுமோ?? காட்டுவழிப்பாதையில் முன்பின் அறிமுகம் இல்லாதவன், ஆபத்தான பகுதிக்கு வழிதவறிச் சென்றிருக்கக் கூடுமோ? 

இலங்கை காடுகளில், குறிப்பாக தம்பதிவனக் காட்டில் மனித உண்ணி விலங்குகளான “சிங்கம், புலி” என்று எதுவும் இல்லையானாலும், அதிவிஷம் கொண்ட பாம்புகளும், பூச்சிகளும் தாராளமாகவே உண்டு. 

அப்படியேதாவது தீண்டியிருக்குமோ தலைவனை?? 

நொடிக்கு நொடி.. அவனைக் காணாமல் பைத்தியம் முற்றிப் போய்.. உடலில் துணுக்கம் தோன்றி.. பயம் அதிகரிக்க, கண்களை ஒரு கணம் மூடியதும் தான் தாமதம். 

தம்பதிவனக்காட்டில், கற்திடலுக்கு கீழே இருக்கும் ஒரு பாரியபள்ளத்தில், ஒரு காய்ந்த மரக்குற்றி.. அவன் முதுகைக் குத்தி.. வயிற்றைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்திருக்க, வாயில் இரத்தம் வழிய,இறந்து கிடக்கும், சத்யனின் ஒரு நிழல்படம் வந்து போக, 

அவளுக்கு அன்றைய நாளின் இரண்டாம் முறையாக தூக்கிவாரிப்போட்டது. 

அதற்கு மேலும் பொறுமை காக்க மனமற்று, ஏதோ ஒரு அசாத்தியமான தைரியத்துடன், நடுநிசியைத் தாண்டியிருக்கும் இரவு வேளையில்.. தன் வீட்டை விட்டு காரிருளில்.. நடந்தாள் யௌவனா.

அவள் வீட்டு வாசற்படியைத் தாண்டி.. மண்ணின் மீது பாதம் வைத்ததும், அங்கே நிலவறையில் இருந்து.. நடப்பது அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மாய நந்தினிக்கோ ஒரே குதூகலம். 

பின்னே.. இந்த நடுநிசி இரவன்று.. அவளை வீட்டைத் தாண்டி வரவழைக்க.. இத்தனைத் திட்டங்களையும் கனகச்சிதமாகப் போட்டது நந்தினி தானே?? 

சத்யனுக்கு ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொடுக்கும் விதிக்குத் தள்ளப்பட்டிருந்த யௌவனாவை முதலில் எப்பாடுபட்டாவது கொன்று விட வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டம் தீட்டியவள் தான் நந்தினி!! 

பல நேரங்களில்.. தன் பழிவெறிக்கும், சாபத்துக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத வெள்ளந்திப் பெண்ணான யௌவனாவைக் கொல்லப் பார்த்தவளும் நந்தினியே!!! 

அந்த அத்தனை சமயங்களிலும் சத்யன், தன் மனைவியைக் காப்பாற்ற இடையிட்டதில், சத்யனைக் காப்பாற்ற அவளது கணவனான தேவதாவும் இடையிட்டதில்… அவளது பழிமுயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதையடுத்து இந்த அகோர முடிவை எடுத்திருந்தாள் நந்தினி. 

சத்யனின் உயிரைக் காவு வாங்க.. இதுவொன்றே சாலச்சிறந்த வழி என்று தோன்ற, அதற்கான முயற்சிகளை செய்தவள், யௌவனாவை வீட்டை விட்டு வரவழைத்ததில் வெற்றியும் கண்டிருந்தாள். 

உண்மையில் வேல்பாண்டி- வாசுகி தம்பதியினருக்கு விபத்து நேர்ந்ததா என்ன? 

இல்லவேயில்லை. 

அவர்கள் இன்னும் திருமண வீட்டில் நலமாகவே இருக்க, முருகேசுவின் உருவில் காதில் இரத்தம் சொட்டச் சொட்ட வந்தது ஒரு தீய சக்தி. 

தேவதாக்களும், சாந்தியடையா ஆத்மாக்களும் எல்லை மீறும் பல விஷயங்களையும் நிகழ்த்த அனுமதிக்கப்பட்ட சந்திராகிரகணத்தில்.. தேவதாவை காதல் வலையில் வீழ்த்தி.. அவனோடு இரண்டறக் கலந்தாளே மாய நந்தினி.. 

அதற்குக் காரணமே இது தான். 

தேவதாவுடன் கூடிய வல்லமையில்.. பல தீய சக்திகளை அடக்கி கட்டளையிடும் உயர் அதிகாரம் அவளுக்குக் கிட்டும். அதில் ஒன்று… நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை அடையும் தீய சக்தி ஒன்று அவளுக்கு அடிபணிவது. 

அந்த தீய சக்தி.. அவளை எஜமானியாக ஏற்று.. அவள் இட்ட கட்டளைக்கு அப்படியே கட்டுப்படும். 

அதைக் கச்சிதமாக உபயோகித்தவள், தன் கட்டளைக்காக காத்திருக்கும் தீய சக்தியை.. முருகேசு உருவில் ஏவி.. சத்யனை யௌவனாவிடம் இருந்து வெகுதூரம் பிரித்து அனுப்பி விட்டிருந்தாள் பொல்லாத நந்தினி. 

முருகேசு உருவில் வந்த தீயசக்தியோ.. சத்யனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க.. தன் எஜமானியான நந்தினியால் பணிக்கப்படவில்லையாதலால், 

அந்தக் காட்டுவழிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப்பிற்கு மேலாக.. அடர்ந்த காட்டுமரங்களின் உயரத்தில்..இறக்கைகள் கொண்ட தன் மாய வெண்புரவியில் பறந்து வந்த வண்ணமே ஜீப்பைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான் தேவதா. 

 முற்றிலும் பனிபோர்த்த பாதையில், பாதிவழியில் ஜீப்.. அடுத்த எட்டு வைக்கமாட்டேன் என்று அடம்பிடித்து நின்று விட,வானிலிருந்தும் மெல்ல கனைத்தபடி தரையிறங்கியது தேவதாவின் வெண்புரவி. 

புரவி கனைத்த சத்தம் மானுடனான சத்யனின் காதுகளை அடையவில்லையாயினும் கூட, அதை செவிமடுத்த அந்த தீய சக்திக்கோ.. இடியேறு கேட்ட சர்ப்பம் போல இருதயம்.. குலைந்து நடுங்க, வண்டியை விட்டும் இறங்கிய முருகேசு… பின்னங்கால் பிடரியில் தெறிக்க, திரும்பிப் பார்க்காமல் ஓலமிட்டுக் கொண்டே ஓடலானான். 

முருகேசு அலறியடித்துக் கொண்டு ஓடும் காரணம் அறிய மாட்டாத சத்யன், வாகனத்தை விட்டும் இறங்கி, “ஏய்.. முருகேசாஆ.. முருகேசாஆஆ” என்று எத்தனைக் கத்தியும் முருகேசுவின் ஓட்டம் நிற்கவேயில்லை. 

அந்தோ பரிதாபம்!! சத்யாதித்தன் தான் நடுவீதியில்.. அதுவும் உடலை உறைய வைக்கும் குளிரில், பஞ்சரான ஜீப்புடன்.. தனிமையில் நின்றிருக்கும் படியானது. 

****

அங்கே யௌவனா.. கானகத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்.. நந்தினியின் முகத்தில் தோன்றிய சிரிப்பின் வீச்சு சிறுகச் சிறுக அதிகமானது. 

அவளது கண்கள் அகல விரிந்திருந்தன;அவள் தனங்களோ.. அவள் விட்ட அகோரமான மூச்சில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தது. அவளது கூந்தலோ.. ஓர் அக்னிச்சுடர் போல எழுந்து அந்தரத்தில் பரவிக் கொண்டிருந்தது. 

தன் இருநூறு வருட கால பழிவெறித் தவம் நிறைவேற, யௌவனாவை பகடைக்காய உபயோகப்படுத்திக் கொள்ள, சர்வ வல்லமை தந்த தன் தாயான வத்ரகாளி மீது அவளுக்கு அன்று அபரிமிதமான பக்தியும், காதலும், அன்பும் ஊற்றெடுத்துப் பொங்கியது. 

அவள் அந்த நிலவறையே அதிரச் சிரித்த ஒரு உக்கிரமான அகோரச் சிரிப்பில், மண்ணில் ஒளிந்து கிடக்கும் காளிக்கோவிலின் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எக்கச்சக்கமான மணிகள் எல்லாம் “டான்.. டான்” என்று தாறுமாறாக அடித்து ஒலியெழுப்பவாரம்பித்தது. 

அந்த ஒலியில்.. மணிகளின் மேலே துயின்று கொண்டிருந்த சர்ப்பங்கள் எல்லாம், தொப் தொப்பென்று தரையில் விழுந்து, இருளான இடுக்கை நாடி வளைந்து நெளிந்து.. அச்சத்துடன் ஓடலாயிற்று. 

அவளோ அதை அலட்சியம் செய்தவளாக, வெடிக்கும் குரலில், “த்தாஆஆய்யேஏஏ.. உன் மகிமையே.. மகிமை…!! நினைத்ததை வசப்படுத்திக் கொடுக்கும்.. என் தாயின் பாதத்தை.. விரைவில்.. இராஜசிங்கனின் இரத்தம் கொண்டு நிறைப்பேன்.. இது சத்தியம்!! இது உன் மேல் ஆணை வத்ரகாளீஈஈ!!” என்று அவள் இரைந்து முடித்த அடுத்த நொடி, 

அவளது வல்லமையில் எங்கிருந்தோ வந்த குங்குமமும், மஞ்சளும் உருத்திரமான காளியின் உடலெங்கும் விசிறி அடித்தது. 

கறுப்பு நிறத்தில்.. கைகளை விரித்துக் கொண்டு, ஒற்றைக்காலால் அசுரனை வதம் செய்யும் மெய்ந்நிலையில் இருந்த வத்ரகாளின் சீற்றமுகம் எங்கணும்.. ஒரு பாதி குங்குமமாகவும், மறுபாதி மஞ்சளுமாக காட்சியளித்ததில்.. தேவியின் முகம் ஒரு வித வர்ணமயமான தெய்வீகபாவத்தைக் கொடுத்தது. 

அதிலும், அவளது நீட்டிய நாவில் முற்றிலும் படிந்த குங்குமம்.. அசுரரை வதைப்பதில் அவளுக்குள்ள இரத்தவெறியை பறைசாற்றுவது போல இருக்க, அந்த தரிசனத்தை கை கூப்பித் தொழுது நிமிர்ந்த நந்தினியின் முகம் மீண்டும் பழிவெறியில் மிளிர்ந்தது. 

வீட்டைக் கடந்து.. காட்டுவழிப்பாதையில் நுழைந்த யௌவனாவை நோக்கியவள், இங்கிருந்த படியே விஷமச் சிரிப்பு சிரித்தபடி, “வ்வாஆ.. ய்யௌவ்வனாஆஆ.. வ்வாஆஆ.. என் உன்னதமான பணியில்.. ந்நீய்யும் இணைந்திட வ்வாஆஆ”என்று ஓயாமல் அழைக்க, 

அவளது உச்சாடனங்களில் அனிச்சை செயல் போல விரைந்து நடந்தன பாதங்கள். 

காட்டின் எல்லைக்குள் அவள் நுழைந்து விட்டதிலிருந்து, அவள் கண்கள் தலைவனையும், தமையனையும் தேடித் தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

இந்தக்காட்டுப்பாதை தானே பிரதான பாதையை ஊடறுத்துச் செல்லும்?? இதைத் தானே.. சொன்னான் சத்யன்? ஆனால் ஒரு வண்டி நின்றதற்கான தடமோ?? இன்னும் ஏன் மனித சஞ்சாரமோ இல்லையே? 

அந்த வனாந்திரம்.. பகற்பொழுதையும் விட இரவுப்பொழுதில் படுபயங்கரமாக இருந்தது. அங்கிருந்த பனிமூட்டம் தூரத்தில் இருக்கும் மலைகளையும், வானத்தையும் கூட மறைக்கடித்துக் கொண்டிருந்தது. 

அந்தக் கடும்குளிரிலும் கூட.. ஒரு கோட்டான் மரத்தின் உச்சியில் நின்று கொண்டு அலறும் சத்தம் கேட்டது அவளுக்கு. 

அந்த ஆந்தையின் வித்தியாசமான அலறலே, “இங்கிருந்து சென்று விடு பெண்ணே’ என்று கொடுத்த அபாய சமிக்ஞை என்பதை அறியாமல் போனாள் யௌவனா. 

அவளுள் தற்போது சூழலைப்பற்றிய புறப்பயம் இருக்கவில்லை. மாறாக தலைவனுக்கும், அவள் உற்றாருக்கும் என்னானது என்ற அகப்பயமே இருந்தது. 

கையை பிசைந்து கொண்டே, காய்ந்த சருகுகள் மிதிபட மிதிபட நடந்தவளின் கண்கள் கண்டு கொண்டது அந்த ஆள் அண்டாத காட்டில் கிடக்கும் அந்தக் கற்திடலை.

அவள் இதுவரை கண்டிராத முழுதும் கல்மலையால் ஆன திடல் அது. அந்தக் கற்திடலின் உச்சத்தில் ஒரு பெரும் பாறாங்கல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் கண்ணுற்றாள் அவள். 

அவளுக்கோ அதைக் கண்டதும் ஓர் ஆச்சரியம். உருண்ட.. வட்ட வடிவான அந்தக் கல்.. திடலில் இருந்து உருண்டு வந்து விழுந்து விடாமல் உச்சியில் எங்கணம் நிற்கின்றதாம்?? 

அதைப் பார்க்கப் பார்க்க.. அவள் காட்டை நோக்கி வந்த தேவை மறந்து போய்.. அந்தக் கல்லில் இருந்து வந்த ஒருவகையான காந்தசக்தி.. அவளது சிந்தையை மழுங்கடித்து அதை நோக்கி அவளை இழுக்கலானது. 

இத்தனையையும் அசாத்தியமாக செய்து முடித்து விட்டு.. யௌவனாவின் வருகைக்காக காத்திருந்த சாந்தியடையா ஆத்மாவுக்கு.. மானுடப் பெண்.. கற்திடலை இன்னும் சற்று நேரத்தில் மிதிக்கப் போவதில் கொள்ளை ஆனந்தம். 

அவளில் எங்கும் சுருசுருவென்று ஒரு சந்தோஷப் பரபரப்பு தோன்ற, அதே உற்சாகம் குன்றாத குரலில், “வ்வாஆஆ.. ய்யௌவ். வனாஆ வ்வாஆஆ.. இராஜசிங்கனோடு இணைந்தால் உனக்கு நொடி நேர இன்பம்.. என்னோடு இணைந்தாஆல்…. உனக்கு ஆயுளுக்கும் இன்பம்.. அதனாஆஆல்.. என்னை நோக்கி வ்வாஆ ய்யௌவ்வனா” என்று அவளை அழைக்க, 

ஏதோ சாவி போட்ட பொம்மை போல உலகம் மறந்து.. அந்தக் கல்லை நோக்கி நடந்தாள் யௌவனா. 

அந்தக்கல்.. மகாசேனர்.. இராஜசிங்கர்களின் பொக்கிஷ அறையை மறைக்க தூக்கி வந்த அதே கல்!! 

அவள்.. அந்தக் கற்திடல் எல்லையில்.. நந்தினியின் சக்திகள் அபரிமிதமான உச்சத்தை எட்டும் எல்லையில் கால் வைக்கப் போன கணம், ஒரு முரட்டுக்கரம் அவளது தோளில் பதிந்து.. அவளது மாய ஈர்ப்பைக் கலைக்க, சட்டென்று திரும்பிப் பார்த்த யௌவனாவின் முகமும் சரி, 

அங்கே நிலவறையில் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நந்தினியின் முகமும் சரி.. ரௌத்திரத்தில் அட் அ டைமில் சிவந்து போனது. 

சாராய நெடி யௌவனாவின் முகத்தைச் சுளிக்கச் செய்யும் அளவுக்கு, மூக்கு முட்ட குடித்து விட்டு.. நேராக நிற்க முடியாமல் தள்ளாடியபடி நின்றிருந்தான் பகீரதன். 

இன்று தொல்லியல் பணி இடம்பெறும் இடத்தில்… அந்த நெடியவனான பிரபாகருக்கும், பகீரதனுக்கும் ஒரு சரக்குப் பார்ட்டி. 

அதனால் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்லாமல், இங்கேயே கூடாரமடித்துத் தங்கி.. வயிறு முட்டக் குடித்ததில் பிரபாகர் கூடாரத்திலேயே மட்டையாகிவிட்டிருக்க, 

பகீரதன் மட்டும் இயற்கைத் தேவையை நிறைவேற்ற ஒதுக்குப்புறம் தேடி வந்த போது தான்.. அவன் கண்களில் மாட்டினாள் யௌவனா. 

அவளைக் கண்டதும், அவளுக்கான பொல்லாத ஆசைகள் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது பகீரதனுக்கு. 

அதிலும் யாருமில்லா தனிமை.. அவனுள் ஒரு தைரியத்தையும் கொடுக்க, போதையில் உளறும் குரலில், “என்ன இண்டப் பக்கம் தமிலு? ”என்று கேட்க, அவனிலிருந்தும் வரும் சாராய நெடி தாள மாட்டாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு ஓரெட்டுப் பின்னடைந்து நின்றாள் யௌவனா. 

அவள் பார்வை தன்னுடன் பயின்ற பகீரதனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தது. அவன் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்து.. அதன் வழியாக அவனது கபிலநிற மேனி வெளியே தெரிந்து கொண்டிருந்தது. 

இயற்கைத் தேவையை முடித்துக் கொண்டவன் சரியாக பேன்ட்டினை மாட்டியிருக்காததால்.. பேன்ட்டினையும் தாண்டி அவனது உள்ளாடை வெளியே தெரிய.. அவன் நின்றிருக்கும் கோலத்தைக் கண்டு அருவெறுத்த பார்வை அவன் மீது வீசினாள் யௌவனா. 

அவள் தன்னை அருவெறுத்துப் பார்ப்பதைக் கூட தாளமாட்டாமல், 

அவள் அருகே மிக மிக நெருங்கி வந்து நின்று.. அவளது கழுத்து வளைவுப்பக்கம்.. அவளே எதிர்பார்த்திராத சமயம் சட்டென்று குனிந்து.. 

அவளது பர்பியூமை கண்கள் மூடி முகர்ந்தவன், கிறக்கம் நிறைந்த விழிகளுடன், “உன் புருஷனால… உன்ன சந்தோஷப்படுத்த முடியழையா என்ன?”என்று ஏடாகூடமாக கேட்க, 

வெடுக்கெனப் பின்வாங்கி.. பகீரதனை ரௌத்திரத்துடன் முறைத்துப் பார்த்தாள் யௌவனா. 

அதனை கிஞ்சிற்றேனும் பொருட்படுத்தாதவன், “அதான் இந்த டைம்ல அவனோட இருக்குறத விட்டுட்டு.. ஆம்பள தேடி வந்திருக்கியோ?” என்றவன், ஒரு நற்பெண்டிரால் கேட்க முடியாத நாராசமான வார்த்தைகள் பலவும் உபயோகிக்கவும் செய்தான். 

இறுதியில், சட்டென்று அவள் கையைப் பற்றியிழுத்தவன், ”அவன் தழ முடியாத சண்டோஷத்த நான் கொடுக்குழேன்.. என் கூட வா..” என்று சொல்ல, 

அவன் தீண்டலைப் பொறுக்க மாட்டாமல், அவனைத் இந்த தள்ளி விட்டு, கையை உதறிவிட்டவள், ஓங்கி அறைந்திருந்தாள் அவனது கன்னத்துக்கு. 

பின் தன் முன்னெழில்கள் ஏறி இறங்க சீற்றப் பெருமூச்சு வாங்கியவளாக, “ச்சீ.. இப்படி கேவலமானவனா இருக்க?? .. என் கூட படிச்ச அப்பாவி பகீரதன் நீதானான்னு தோணுது.. நான் சத்யாதித்த இராஜசிங்கனோட பொண்டாட்டி.. அவருக்கு மட்டும் தான் முந்தி விரிப்பேன்.. உன்னை மாதிரி பொம்பளைப் பொறுக்கிக்கு இல்லை.. ”என்றவள், அவனைப் பாராமல் வேறு திசையில் விடுவிடுவென நடக்க, நந்தினிக்கும் கூட அங்கு பற்றியெரிந்து கொண்டிருந்தது. 

அந்தக் கற்திடல் வளாகம்.. அவளது பொல்லாத தீய சக்திகள் அபரிமதமாப பரிணமிக்கும் வளாகம். 

அங்கே வரவழைக்க இத்தனை திட்டம் போட்ட நந்தினிக்கு.. பகீரதனால் திட்டம் பாழாகி விடுமோ என்று ஒருகணம் அஞ்சவும் செய்தாளாயின்,மறுகணம் மாற்றான் மனைவியிடம் அத்துமீறும் அவன் செய்கையில் ஒரு எரிச்சலும் மிகுந்தது அவளுள். 

பகீரதனோ கொழும்பில் வைத்து, யௌவனா அறைந்த போது, சுற்றிலும் ஆட்கள் நடமாடுவதால் அமைதியாக இருந்தவனுக்கு, இன்றும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. 

யாரும் இல்லாத தனிமையில், யௌவனாவின் திமிருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தோன்ற, அவளை நோக்கி விரைந்தவன், 

அவள் சுதாரித்து நிமிரும் முன்னர்.. ஓரெட்டில் பற்றித்தூக்கி.. அவளை தோளில் போட்டுக் கொண்டவன், அவள் திணறத் திணறக் கத்த, அதைப் பொருட்படுத்தாமல், 

“நான்… நீ நினைக்குறதை விடவும் கேவலமானவன்னு இப்போ காட்டுறேன்டீஈஈ.. .. அப்படி என்கிட்ட இல்லாதது அந்த இந்தியாகாரன்ட்ட.. என்னடி இருக்கு? பத்து வருஷமா பின்னாடி நாயா சுத்தினவனை விட.. பத்து செக்கன் பார்த்த அவனோட பணம் பெருசா போயிடுச்சுல்ல? இன்னைக்கு நான் ய்யாஆருன்னு காட்டுறேன்டீஈஈஈ..” என்று கறுவியவனாக, 

அவளை தூக்கிக் கொண்டு.. அந்தக் கற்திடல் வளாக எல்லையிலேயே கால் வைத்தான் பகீரதன்!! 

பகீரதம்.. மனிதனாகப் பிறக்கக் கூடத் தகுதியற்றவனாகத் தான் அன்று நடந்து கொண்டான். 

அவளை ஒரு மராமரத்தண்டின் அடியில் கிடத்தியவன், தன் ஆண் பலத்தை.. தனக்கு சமமாக நடத்த வேண்டிய பலவீனமான பெண்ணிடம் காட்டுவதை வீரமாகவும், அதுவே பெருமையாகவும் கொண்டான் அவன். 

அவள் மீது மொத்த பாரத்தையும் அழுத்திப் படர்ந்து.. அவள் இதழ்களை சிறைசெய்ய நாடி.. அவன் குனிந்த போது.. தன் நகங்களால் அவன் முகத்தை பலம் கொண்ட மட்டும் கீறிவிட்டாள் யௌவனா. 

அவளது நகக்கீறல் தந்த எரிவில்.. அவனது மிருகத்தனம் தலைக்கு அடிக்க, தன் இராட்சதக் கைகளால்.. யௌவனாவின் கன்னங்களுக்கு, மாறி மாறி ஓங்கி அறைய, அந்த அறையின் வீரியம் தாங்க மாட்டாமல் காப்பாற்றுவாரின்றி மூர்ச்சையானாள் அவள். 

அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பாதளவுக்கு.. அவன் உணர்வுகள் அற்ற ஜடமாகக் கிடந்ததில்.. அவனுக்கு வந்த காரியம் இலகுவாகிப் போக, அவள் பக்கத்திலேயே முழந்தாளிட்டு அமர்ந்தவன் தன் பேன்ட் ஜிப்பினைக் கழற்ற எத்தனித்த போது தான்… அந்த அதிசயமான சம்பவம் நடந்தேறியது. 

அந்த கேவலமான செயலைச் செய்ய தயாரானவனாக, பகீரதன் யௌவனாவை நோக்கி முன்னேறப் போன கணம், ஒரு வலிய உடும்புப் பிடி அவனது தோள் மேல் பதிந்தது. 

அந்த ஒற்றைப் பிடியின் ஸ்பரிசம்.. உடலை எரித்து விடுவது போல ஒரு கோரமான உஷ்ணத்தைப் பரிசளித்து என்புமச்சையில் இருந்து ஊடுருவி என்புகளைக் கூட உருக்கி விடும் போல காந்தியது அந்த மிருகத்துக்கு. 

அந்தக் கை தந்த அழுத்தம் வேறு நொடிக்கு நொடிக்கு அதிகமாகிக் கொண்ட போக, ஒற்றைத் தோளில் ஒரு பெரும் பாறாங்கல்லை சுமப்பது போல வலித்தது அவனுக்கு. 

அதன் பாரம் தாங்க மாட்டாமல்.. கை மண்ணை நோக்கி தாழ்ந்து கொண்டே போக, தன்னை இத்தனை நோவினை செய்வது யார் என்று திரும்பிப் பார்த்த பகீரதன்.. அது யாரென்று சுதாரிக்கும் முன், 

ஒரு அகோரக்கை.. சம்மட்டியால் தாக்கியது போன்ற வலிமையுடன் .. ஓங்கி ஓர் அடி பிடரிக்கு அடிக்க, அந்த ஓரடியில்.. உயிர் பிரிந்து.. வெறும் ஜடம் வீழ்ந்தது நிலத்தில். 

அரை மயக்கத்தில்.. தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்று தெரியாமல், பாதிக்கண்களைத் திறந்த யௌவனா கண்டு கொண்டது இதுவரை இந்த ஊரிலேயே காணாத பேரழகுப் பெண்ணொருத்தியை.

 இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட இரவிக்கை இல்லாத சேலை அணிந்திருந்தாள் அந்த சுரூபினிப்பெண். 

அந்த அழகிய பெண்களின் கண்களும், அரைகுறை மயக்கத்தில் கிடந்த யௌவனாவையே தான் பார்த்திருந்தது. 

தன்னை சர்வவல்லமை படைத்த ஒரு ஆத்மா பார்த்திருப்பது அறியாமல்.. தன் கற்பு பாதுகாக்கப்பட்ட ஆசுவாசத்துடன் முழுமையாக மூர்ச்சையாகிப் போனாள் யௌவனா. 

யௌவனாவை.. அந்தப் பகீரதனிடம் இருந்து காப்பாற்றிய சுரூபினிப் பெண்!! அது மாய நந்தினியே தான். 

இனி தன் ஊசலாட்டங்களை நிகழ்த்த ஒரு உடல்.. அதுவும் சத்யாதித்தனுக்கு மிகவும் நெருங்கிய உறவின் உடல் கிடைத்ததில்.. அவள் முகத்தில் விஷமப்புன்னகை தவழ்ந்தது. 

ஏகாந்த இரவில் வா தேவதா!

[17]

என்றுமில்லாமல் அன்று.. எந்த மல்லிகை மலரோ, செடியோ அருகில் இல்லாமலே.. யௌவனாவின் நாசி.. மல்லிகை சுகந்தத்தை முகர்ந்து கொண்டிருந்தது. 

ரவிக்கை அணியாத சேலை கொண்ட சுரூபினிப்பெண்… தன் கேசம் காற்றில் எழுந்து பரவ, தன் தனங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே… 

இதழ்களில் ஒரு நமுட்டுச் சிரிப்புடன், தன்னையே இன்னும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது யௌவனாவுக்கு. 

யௌவனாவைச் சூழ அந்த கானகத்தின் மராமரத்தின் அடியில்.. அவள் தேகம்.. புல்நுனி மேல் படர்ந்து கிடக்கும் குளிர்மையை உணரவாரம்பிக்க, அரைக்கண் திறந்து முற்றுமுழுதாக பார்த்த போது, அவளை எழ விடாமல் ஒரு பெரும் பாரம் அழுத்திப் படர்வது போல இருந்தது. 

அந்தப் பாரத்திற்கான காரணம் யாது என அவள் தலை குனித்துப் பார்த்த போது, அ.. அது அதே பொல்லாத பகீரதனாக இருக்கக் கண்டாள் அவள். 

பிறன் மனையை நோக்கக் கூடாத ஒரு காமப்பார்வையுடன்.. அவளது இரு கைகளையும் அசைய விடாது மண்ணோடு மண்ணாக அழுத்திப் பிடித்து, நின்று கொண்டு.. அவளது இதழ்களை அவன் நெருங்கி வர ஆரம்பிக்க, 

அவனது முகத்தை முடிந்த மட்டும் தன்னுள்ளங்கையால் தள்ளிவிட்டுக் கொண்டே.. அவனிடமிருந்து போராடியவளுக்கு.. மூச்செடுக்க சிரமமாகிப் போனது. நெற்றியெங்கனும் முத்து முத்தாக வியர்க்கவும் செய்தது. 

தன்னிதழ்களை நோக்கி வரும் அவனுடைய அகோர முகத்தை.. தன் பலம் கொண்ட மட்டும் பிடித்து தள்ளி விட்டுக் கொண்டே.. 

யௌவனா அந்தக் கோர கனவில் இருந்து நனவுக்கு வந்தாள். 

அவள் உடல் எங்கிலும் ஒரு நடுக்கம் பரவிக் கொண்டிருந்தது நில்லாமல். இதழ்கள் ‘ஆ’ வெனத் திறந்திருக்க அதன் வழி, “ஹாஹ்.. ஹாஹ்”என்று கோடி மூச்சுக்கள் விட்டாள் அவள். 

இருப்பினும் பிறந்த குழந்தைகள் போல.. அக்கணப்பொழுதும் கூட கண்கள் திறந்திருக்கவேயில்லை. 

மனமோ தன் தலைவனைத் தேட… கண்கள் மூடியபடியே, கணவன் இருக்கும் திசையை, தாய்மணம் அறியும் குழந்தை போல வாசம் பிடித்தாளோ அவளும்? 

கண்கள் மூடியபடியே எழுந்தவள், பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனை இறுகக் கட்டிக் கொண்டாள். 

அவள் கைகள்.. மாலை போல சத்யாதித்தனின் கழுத்தில் கோர்த்திருக்க, அவள் நாடியோ அவனது வலிய தோளில் அடைக்கலமாகியிருக்க, இதழ்களோ பதைபதைப்புடன் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கவாரம்பித்தது. 

பகீரதன் அவளுக்கு இழைக்க விழைந்த கோரக் கொடுமையின் பாதிப்பிலிருந்து வெளியே வந்திருக்காதவளுக்கு, இன்னும் அந்தக் காட்டிலேயே இருப்பதாக நினைப்பு போலும். 

அவனது பரந்து விரிந்த மார்போடு, தன் பஞ்சன்ன தனங்களை அழுத்தி இரண்டறக் கலந்து கட்டியணைத்தவள், நாவோ திக்கித் திணற, “எனக்கு.. என.. க்கு பயமாயிருக்கு சத்யன்.. பயமாயிருக்கு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே போக, அந்த அழகிய காதலனும் அங்கணம் ஓர் தாயாகிப் போனான். 

அவனுடைய நரம்போடும் வலிமையான கைகள்.. அவளது மெல்லிடையைத் தழுவி.. தன்னோடு சேர்த்தணைத்து இறுக்க, இதழ்களோ.. கனவு கண்டு அச்சத்தில் உளறும் தன் தேவியைத் தேற்ற பல பிரயத்தனங்களை எடுக்கலானது. 

அவனது தாடி குத்தும் முரட்டு கன்னங்களோடு இழையும், மனைவியின் மென்மையான கன்னத்தில் சின்னச் சின்ன முத்தங்கள் பதித்துக் கொண்டே போனவன், 

அவளது பின்னந்தலையைத் தடவி விட்ட வண்ணம் காதோரமாக, “ஒண்ணுமில்லை ஒண்ணுமேயில்லை.. நீ சேஃபா இருக்க.. உனக்கு நான் இருக்கேன்.. ஒண்ணும் ஆக விடமாட்டேன்…” என்று பயந்த மழலையைத் தேற்றும் தாய் போல இருந்தது அவன் செய்கை. 

கணவனின் இறுகிய அணைப்பு, அவனது ஆசுவாச மொழிகள்.. எல்லாம் அவளை மெல்ல மெல்ல நடப்புக்கு கொண்டு வர, அப்போது தான்… அவள் கானகத்தில் இருந்து வீட்டுக்கு வந்திருப்பதையே உணர்ந்தாள் யௌவனா. 

கணவனின் மார்பு மேல் கைவைத்து.. அவனிடமிருந்து விலகிக் கொண்டவள்.. இமையோரம் நீர் துளிர்க்க, “நா.. நா.. எப்.. டி இங்கே?” என்று கேட்க, 

அவளைப் பார்த்து புன்னகை சிந்தியவன், “ நீ… என்னை காணோம்னு நேத்து அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போயிருக்க கரெக்ட்டா?”என்று தன் ஊகத்தை… காதல் பொங்கக் கேட்டான் சத்யன். 

சதாவும் சண்டையிடும் மனைவி..நேற்றிரவு தன்னைத் தேடி சென்றிருப்பதை ஊகித்ததும்.. சத்யன் மனதளவில் வானத்துக்கும், பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தான். 

யௌவனா ஏதும் புரியாமல் மெல்ல தலையாட்ட, அவனோ.. அவள் கண்ணீரைத் தாளமாட்டாமல், இரு கைகளாலும் துடைத்து விட்டுக் கொண்டே, 

“நீ… ஊர்க்கோயில் தெருவில் மயங்கிக் கிடந்த.. நான் தான் உன்னை வீட்டுக்குத் தூக்கி வந்தேன்..”என்று சொல்ல, அரை மயக்க நிலையில்.. அங்கு நடந்தேறியதைப் பார்த்திருந்தாலும் கூட, அப்போதும் கூட அவள் மூளை விழிப்பாகத் தான் இருந்திருக்கிறது போலும். 

காட்டில் ஒரு மராமரத்தின் அடியில் மயங்கிக் கிடந்தவள் எப்படி ஊர்க்கோயில் இருந்து கண்டெடுக்கப்பட முடியும்? 

அதனால் கணவன் கூறியதை ஏற்க முடியாமல் மனம் தடுமாற “இல்ல.. இல்லை சத்யன்.. அப்படி.. நடக்க சான்ஸே இல்ல.. அ..அதுவொரு..”என்று திக்கித் திணறிக் கூற முன்வந்தவளுக்கு திடீரென பகீரதனின் ஞாபகம் வந்தது. 

கணவனின் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், “ப.. ப.. பகீரதன் எங்கே?”என்று கேட்க, சத்யாதித்தனின் புருவங்கள் இரண்டும் இலேசாக இடுங்கலானது. 

மனைவியின் விழிகளை கூர்ந்து நோக்கியவன், “அவன் இறந்துட்டான் யௌவனா..அதுவும் நேத்து ராத்திரி ஃபுல் போதையில் இருந்திருக்கான் போல.. ஹார்ட் அட்டாக்கில் ஆன் த ஸ்பாட்லயே ஆள் காலி” என்று காவல்துறையினர் இறப்புக்கான காரணம் சொன்னதையே.. மனைவியிடமும் அவன் பகிர்ந்து கொள்ள, 

உண்மையை அறிந்திருந்த யௌவனாவுக்குத் தான் அந்த மனிதமிருகத்தின் இறப்புக்கான காரணத்தை ஏற்க முடியவில்லை. 

அவளுக்கோ.. அந்த பதற்றமான நிமிஷங்களை இப்போதும் அனுபவிப்பது போலத் தோன்ற, கண்களில் இருந்தும் விடாமல் வழிந்தது கண்ணீர். 

தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டே, கணவனிடம் “இல்ல.. இல்ல சத்யன்.. அது இயற்கை மரணமேஏஏ.. கெட.. கெடையாது.. நேத்து ராத்திரி… நட… நட.. நடந்ததே வேற..உன்னைத் தேடி காட்டுக்குள்ள போனப்போ…”என்று தொடங்கி அத்தனையையும் தன் ஞாபகத்தில் இருக்குமட்டும் எல்லாவற்றையும் சொன்னவள், 

“அ.. அவனைக் கொன்னது.. ஒரு.. ஒர்.. ஒரு அழகான பொண்ணு சத்யன்..நா.. நான் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன்.. என் கற்பை காப்பாத்தினது அவங்க தா.. தான்”என்றவள்.. அப்போதும் பதற்றம் மாறாது நின்றிருக்க, சத்யாதித்தனுக்கோ சொற்ப நேரத்துக்கு முன் பகீரதனின் அகால மரணத்துக்காக இரங்கியது எல்லாம் ரௌத்திரமாக உருமாறத் தொடங்கியது. 

தன் மனைவியிடம் அத்துமீறி இருக்கும்.. இப்பொழுது உலகத்தில் இல்லாத பகீரதன் மேல் கொலைவெறி பொங்கினாலும்.. அழுந்த மூடிய இதழ்களுடன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் அவன். 

அவளை நிதானத்துக்குக் கொண்டு வர, கட்டிப்பிடி வைத்தியம் செய்ய நாடி, அவளைக் கட்டியணைத்து, அவள் தலையை நெஞ்சாங்கூட்டில் புதைத்தவன், 

“ஓகே.. ஓகே ரிலாக்ஸ்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, தங்கையைப் பார்ப்பதற்காக வேண்டி அறைக்குள் நுழைந்தார் வேல்பாண்டியும், அவரது துணைவியாரும். 

ஏற்கனவே அவனுக்கு நடந்ததுக்கே விடை தெரியவில்லை.

 இதில் அவளுக்கு நடந்தையும் வேல்பாண்டி அறிந்தால் குழம்பக் கூடும் என்று உணர்ந்தவன், மனைவியின் காதோரம் கிசுகிசுப்பாக, 

“.. இது நமக்குள்ள இருக்கட்டும் யௌவனா!!. உன் அண்ணாவுக்கோ.. அண்ணிக்கோ.. தெரிய வேண்டாம்”என்று சொல்லவும் செய்தான். 

நேற்று நந்தினி செய்த மாய மந்திரங்கள் எதுவும் அறியாத வேல்பாண்டியும், வாசுகி அண்ணியும்.. திருமண வீட்டு விருந்துகளில் எல்லாம் கலந்து சிறப்பித்து விட்டு வந்து சேர்ந்திருந்தது என்னவோ இன்று காலையில் தான். 

அதனால் வேல்பாண்டி எதையுமே அறிய வாய்ப்பில்லை தான். சத்யன் வேறு நேற்று முழுதும் யௌவனாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதில், 

முற்பகல் நேரம் ஆன பின்னும் தூங்கும் தங்கையின் உறக்கத்தை.. அசாதாரணமான உறக்கம் என்றும் எண்ணத் தோன்றவில்லை அவருக்கு. 

வேல்பாண்டிக்கோ.. மச்சானினதும், தங்கையினதும் ஐக்கியம் கண்டு மனதுக்குள் பூமாரி பொழிவது போல அத்தனை ஆனந்தம். 

பின்னே.. கணவனோடு ஊடலுற்று.. சண்டை பிடித்துக் கொண்டு வந்தவளாயிற்றே அவள்? அதனால் இந்த ஐக்கியம் வாய் கொள்ளா புன்னகையை வரவழைத்தது அவர் முகத்தில். 

இளம்தம்பதிகள்.. அண்ணனைக் கண்டதும் விலகிக் கொள்ள, புன்னகைத்துக் கொண்டே அவர்களை நாடி வந்தவர், “பூஜை வேளை கரடியா வந்துட்டேனா?”என்று தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டே வந்த அந்த வெள்ளந்தி மனிதரின்.. குழந்தை மணத்தை.. கண்களில் மையலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் வாசுகி அண்ணி. 

அதைக் கேட்டு திடுக்குற்றது என்னமோ யௌவனாவே தான் , “ச்சீச்சீ.. அப்படியெல்லாம் எதுவும் இல்லைண்ணா… வாங்க”என்று வரவேற்க, 

“யம்மாடி.. இப்போ உடம்பு எப்படியிருக்கு?” என்றவர் தன் பெறா மகளின் தலையைப் பிடித்து வருடலானார் வாஞ்சையுடன். 

அண்ணன், தங்கைக்கு தனிமை தர நாடி, கட்டிடப்பட்ட ஒற்றைக் கையுடன் வெளியே வந்த சத்யாதித்தனுக்கோ.. நேற்றைய இரவு.. அது பொல்லாத விசித்திர இரவாகத் தோன்றியது. 

நடுப்பாதையில்.. முருகேசு பேயைப் பார்த்தது போல தலைதெறிக்க ஓடி விட, அங்கிருந்து டவுனுக்கு கால்நடையாக நடந்து வந்து.. டெலிஃபோன் பூத்திற்கு வந்து… வேல்பாண்டிக்கு அழைப்பெடுத்தான் சத்யன். 

அவரோ அழைப்பை ஏற்று, பேசுவது சத்யன் என்பதை அறிந்ததும், “என்ன மாப்ள இந்த நேரத்துல ஃபோனு? திரும்ப தங்கச்சி ஏதும் பிரச்சன பண்றாளா? நாங்க கெளம்பி வந்துடுறோம் மாப்ள.. ”என்று தெள்ளத் தெளிவாக உரையாட இன்னும் குழம்பிப் போனான் சத்யன். 

கிளம்பி வந்து விடுகிறாராமா? அப்படியானால் அவர் இருப்பது வைத்தியசாலையில் இல்லையா? அவருக்கு விபத்தும் நேரவில்லையா? 

அப்படியானால் இரத்தம் ஒழுக ஒழுக வந்த முருகேசு ஏன் அப்படி சொன்னான்? 

சத்யாதித்தன் பற்பல கேள்விகளின் இடையில் சிக்கித் தவித்தான். 

ஆயினும் வேல்பாண்டி நலமாக திருமண வீட்டில் இருப்பது புரிந்து விட இதுவரை இருந்த ‘என்னானதோ? ஏதானதோ?’ என்ற தடுமாற்றம் அறிந்து,

 குரலே எழும்பாமல், “இல்லை ஒண்ணுமில்லை.. நம்பர் மாறி கால் போட்டுட்டேன் போல இருக்கு..”என்று எதை எதையோ அரைகுறையாக ஒப்பித்து.. போனை வைத்து விட்டு, யோசனையுடனேயே.. 

அவன் ஊரை நோக்கி நடந்த போது தான்.. ஊர்கோயில் தெருவில் மனைவி விழுந்து கிடப்பது கண்டு இன்னோர் அதிர்ச்சி. 

இத்தனை கேள்விகளுக்கும் விடை அறிய, நாளை வேல்பாண்டியுடன் முருகேசு வரும்வரை காத்திருப்பது என்று முடிவு செய்த சத்யன்.. 

வேல்பாண்டி இன்று காலை வீடு திரும்பியதும், முருகேசுவைத் தான் தேடி நின்றான். 

வேல்பாண்டியுடன் சென்ற முருகேசு.. திரும்பி வீடு வரும் போது இல்லாதிருப்பது பெரும் ஐயத்தைக் கொடுக்க, சத்யன் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால், “என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க? முருகேசன் எங்கே?”என்று தான். 

அவரோ, அவனில்லாத துக்கத்துடன், “அவன் அக்கா பொண்ணு வயசுக்கு வந்திருச்சாம் மாப்ள.. அதனால நம்மள கல்யாண வீட்டுல விட்ட கையோட.. அவன்.. அவன் ஊருக்குப் போயிட்டான்.. வர இரண்டு வாரம் ஆகுமா.. அவன் இல்லாம கையும் ஓடாது.. காலும் ஓடாது.. எப்படி இருக்க போறேன்னே தெரியலை மாப்ள” என்று புலம்பிக் கொண்டே உள்ளே செல்ல, அதைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போனான் சத்யன். 

அப்படியானால் ஆக்ஸிடென்ட் என்று சொல்லிக் கொண்டு, காதில் இரத்தம் வழிய வழிய வந்தது யார்?? முருகேசனா? இல்லை வேறு யாருமா?? 

 தனக்கும், மனைவிக்கும் நேற்று.. ஒற்றை இராத்திரியில் முன்னுக்குப் பின் முரணான விஷயங்கள் நடந்தேறியிருப்பதன் காரணம் அறியாமல், அதனை இலகுவில் ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தவனுக்கோ, 

அங்கணமும் கூட.. இதுவெல்லாம் இருநூறு வருடங்களாக தன் வம்சத்தை கருவறுக்கத் துடிக்கும் ஒரு அமானுஷ்ய சக்தியின் ஊசலாட்டம் என்று தான் புரியவேயில்லை. 

******

அதே நேரம் அங்கே சென்னையில்.. 

ஊடல் கொண்டு சென்ற, ‘மனைவியை.. சமாதானப்படுத்தி கூட்டி வருகிறேன்’ என்று சென்ற புதல்வன், தாய்க்கு அழைப்பெடுத்து நிலவரம் கூறி, சுகதுக்கம் விசாரித்தது எல்லாம் ஒரே ஒரு முறை தான். 

அதன் பின் நகர்ந்த இத்தனை நாட்களில், சத்யாதித்தன்.. அவருக்கு அழைப்பினை மேற்கொள்ளாதது தாய்க்கு ஒரு அலைக்கழிப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கலானது. 

அதிலும் முன்னோர்கள் எச்சரித்த தம்பதிவனத்தில்.. அவன் வாசம் செய்வது… இன்னும் கூடுதல் அவஸ்தையைக் கொடுக்க, இந்த மூன்று நாட்களாக மகனின் செல்லுக்கு அழைப்பெடுத்து எடுத்து சோர்ந்து போயிருந்தார் வசுந்தராதேவியம்மாள். 

மகன் சர்ப்பக்கடிக்கு உள்ளானதோ, ஒருநாள் முழுக்க ஹாஸ்பிடலில் இருந்ததையோ..இன்னும் ஏன் நேற்றிரவு தீயசக்தியின் வலையில் வீழ்ந்ததையுமோ அறியாத வசுந்தராதேவியம்மாள், அச்சம் தாளாமல் அடுத்த நாழிகையே.. தன் குடும்ப மாந்தீரிகரான நம்பூதிரியைப் பார்க்கக் கிளம்பியிருந்தார். 

முற்பகலிலேயே.. வசுந்தராதேவியம்மாள் தன்னைக் காண வருவார் என்று முன்கூட்டியே அறிந்திருந்தாரோ அவரும்?? 

வசுந்தராதேவியம்மாளைக் கண்டு அவர் வதனம் ஒரு சிறிதும் அதிர்ச்சியைக் காட்டவேயில்லை. 

ஆனால் அதர்வண வேதம் நன்கு கற்றுணர்ந்த முன்குடுமிச் சேர வம்சத்தில் வந்திருந்த நம்பூதிரியோ.. காலையிலேயே தலைக்கு குளித்திருப்பார் போலும். 

தன் முன்குடுமியை இடாமல்.. தலையை விரித்து வைத்ததில்.. புசுபுசுவென மயிரடர்ந்து.. கேசம் பரட்டைத்தலை போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. 

நெற்றியிலே.. பெரும் விபூதிக்கீற்றில்.. ஒற்றை ரூபா நாணய அளவுக்கு, குங்குமப் பொட்டு வைத்திருந்தவர், தன் வெற்றுமேனியை மறைக்க, காவியினாலான ஒரு சால்வையை மேனியில் போர்த்தியிருந்தார். 

வசுந்தராதேவியம்மாளோ.. அவர் அருகே வந்து நின்று.. பவ்யமாக கை கூப்பி நின்று வணக்கம் தெரிவித்தவர், நம்பூதிரி கண்களால் அந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டதும், 

துக்கம் தொண்டையை அடைத்த குரலில், “சாமி.. என் பிள்ளை சத்யன்… மருமகளைக் கூட்டி வரேன்னு போனான் சாமி.. அதுக்கப்புறம் எந்தவிதமான தொடர்பும் இல்லை.. பயமா இருக்கு சாமி..”என்று தன் குறையை ஒப்பித்ததும், நம்பூதிரியின் முகம் அதைக் கேட்டுக் கொண்டேன் என்பது போல ஒருமுறை ஆடியது. 

கருமை பூசப்பெற்ற.. அவரது அகன்ற அஞ்சனங்கள் இரண்டும்.. விட்டத்தில் சிறிது கணம் நிலைக்குத்தி நிற்க அதைக் கண்ட தாயின் முகம் எங்கணும்.. சிறு களேபரம் முளைக்கவாரம்பித்தது. 

நம்பூதிரி.. நெடிய யோசனைக்குப் பிறகு சிந்தை களைந்தவர், நிமித்தம் வைத்துப் பார்க்க நாடினார் போலும். 

வழமையாக நிமித்தம் பார்க்கும் இடத்திற்குச் சென்று சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவர், சைகையால் தன்னெதிரே வசுந்தராதேவியையும் வந்து அமரச் சொன்னார். 

வசுந்தராதேவியம்மாளும் பக்தியுடன் வந்து, நம்பூதிரி எதிரே சம்மணமிட்டு அமர்ந்ததும், தன்னருகே இருந்த சின்ன மரப்பெட்டிக்குள் உள்ளங்கை இட்டவர், அதனுள் இருக்கும் சோவியை தன் ஒரு கைப்பிடிக்குள் அடக்கிக் கொண்டார். 

அவர் அமர்ந்திருக்கும் தரையில்.. ஒரு நட்சத்திர அமைப்பு கொண்ட.. அதர்வண வேதம் கற்றவர்கள் மாத்திரம் அர்த்தம் உணரக்கூடிய ஒரு உரு வரையப்பட்டிருக்க, உள்ளங்கையில் அடக்கிய சோவியை.. நேராக தன் நெஞ்சு மத்தியிற்கு கொண்டு சென்றவர், 

பெருவிரல் மட்டும் நீட்டி வைத்தவராக, மூச்சை உள்ளிழுத்துப் பிடித்துக் கொண்டவரின் கண்கள் மூடிக் கொண்டன. இதழ்களோ.. முணுமுணுவென எதையோ நீண்டநேரமாக உச்சாடனம் செய்யவாரம்பித்தது. 

வசுந்தராதேவியம்மாளோ.. நம்பூதிரியின் மூடிய விழிகளைப் பார்த்த வண்ணமே.. உள்ளூற நடுக்கம் ஓட நின்றிருக்க, திடும்மென தன் கரிய விழிகளைத் திறந்தவர், 

உள்ளங்கையில் இருந்த சோவியை கீழே உருட்டி விட்டார்.

விழுந்த சோவிகளையே.. ஒரு சில கணங்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தவருக்கு, அதர்வண வேதத்தின் பைசாசங்கள் செய்யும் ஊசலாட்டங்கள் எல்லாமே படித்துணர்ந்தவர் ஆதலால், அவர் கண்முன் சத்யனுக்கு நிகழ்ந்தவை அனைத்தும் நிழற்படமாக விரிந்தது. 

ஒரு வலிய ஆண்மகன் ஒன்றின் புஜத்தில் செப்பேடு வைத்துக் கட்டப்பட்ட ரக்ஷை.. ஒருவிதமான மாய ஒளியுடன்.. நம்பூதிரியின் கண்களுக்கு விரியலானது. 

அந்தத் திரண்ட புஜங்களின் மேல்.. அவரது பார்வை மேலோட.. அந்த திடகாத்திரமான உடலுக்குச் சொந்தக்காரனாக இருந்தவன் சாக்ஷாத் சத்யாதித்த இராஜசிங்கனே தான். 

இலங்கை செல்லும் முன்னர்.. அவர் மந்திரித்துக் கொடுத்த ரக்ஷை அது!! 

அந்த ரக்ஷையில் அவர் தூவியிருந்த மந்திர உச்சாடனங்கள்.. சத்யாதித்தனுக்கு என்ன என்ன நடந்தது என்பதை.. அப்படியே நேரலையாக நடப்பது போல.. அவர் மனக்கண் முன் காட்டாலானது. 

அவன்.. யௌவனாவுடன் பீலிக்குச் சென்றது, அங்கே நந்தினியின் வல்லமையில் யௌவனாவைத் தீண்ட வந்த சர்ப்பம்.. சத்யாதித்தனை தீண்டியது.. இது போக நேற்றிரவு ஒரு தீயசக்தி மனித உருவில் வந்து.. சத்யனை நடுக்காட்டுவழி விட்டுச் சென்றது… யௌவனாவை பகீரதன் பெண்டாளத் துடித்தது, அந்த மாய நந்தினி வந்து பகீரதன் உயிரைக் காவு வாங்கியது.. இறுதியில் யௌவனாவையே.. நந்தினி பார்த்திருந்தது என கண்முன் விரிந்த கணம், படக்கென்று கண்கள் திறந்தார் அவர். 

நம்பூதிரி கண்திறந்த தோரணையே வசுந்தராதேவியம்மாள் வயிற்றில் புளியைக் கரைக்கலானது. அதிலும் அவரது சிவந்த ரௌத்திரமுகம் எதுவோ செய்ய, சத்யனின் தாயார் நம்பூதிரி முகத்தையே அவஸ்தையுடன் பார்த்திருந்தார். 

நம்பூதிரியோ தன் கணீர்க்குரலில்,விழிகளை ஆழியளவுக்கு விரித்தவர், அழுத்தமான தீவிரக்குரலில், “எது ந்நடக்கவே கூடாதுன்னு ஞான் பயந்தேனோ அது நடந்திருச்சு!!! ஞ்ஞான் கட்டி வ்விட்ட ரக்ஷை தான் எல்லாத்தில் நின்னும் சத்யனை இதுவரை காத்திட்டிருக்கு..உங்க மகனுக்கு இந்நேரம் சர்ப்பம் தீண்டி மரணம் சம்பவிச்சிருக்கும்..”என்று சொன்னதும் மெய்பதறிப் போன வசுந்தராதேவி, 

“சா.. மீஈ.. என்ன சொல்றீங்க?”என்று கேட்க, அதற்கு பதிலிறுக்காமல் வேறு சொன்னார் அவர். 

“பயப்பட வேண்டா.. சர்ப்ப விஷம் உடம்பு பூரா பரவாம.. என்ட்ட ரக்ஷை தன்னே சத்யனை காப்பாத்தியிருக்கு… நடந்தது நடந்திருச்சு.. பட்சே… இனி நடக்கப்போறது ஆகாம பார்த்துக்குறது தான் உசிதம்… ய்யௌவனாவை சத்யன்.. கூட்டிட்டு வருவ்… வானோ இல்லையோ? சத்யன் சீக்கிரம் இந்தியா வ்வந்தாகணும்.. இல்லேங்கில் ஒரு பெரும் பலி நடக்கும்..!! இனி ஒர்ரு.. நிமிஷம் தாமதிச்சாலும் அவன் உயிருக்குத் தான் ஆபத்து”என்று சுட்டுவிரல் காட்டி எச்சரித்தவருக்கு, கண்களில் யௌவனா அன்று.. 

அவள் வீட்டில் வைத்து.. இவர் மந்திர உச்சாடனம் செய்யும் போது சிரித்த காட்சி மனக்கண் முன் வந்து போனது. 

நந்தினி.. யௌவனா உருவில் சத்யனின் கனவில் புகுந்தது போல.. அவள் உடலிலும் புகக் கூடும் என்று.. அன்றே ஊகித்ததால் தானே.. அவளை.. அன்று வெறித்து வெறித்துப் பார்த்தார் நம்பூதிரி. 

சத்யனின் உயிருக்கு, யௌவனாவால் ஆபத்து விரைவில் என்று புரிய, சத்யனை யௌவனாவிடம் இருந்து கழன்று கொள்ளச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் திண்ணமாக உணர்ந்தார் அவர். 

ஏனெனில் இருநூறு வருடங்களுக்கு மேலாக.. இராஜசிங்க வம்சம் மேல் பழிவெறி சுமந்து நிற்பவளின் உக்கிரத்தை யார் அறியா விட்டாலும் நம்பூதிரி அறிந்தே தான் வைத்திருந்தார். 

அதைக் கேட்டு நின்ற வசுந்தராதேவியம்மாளுக்கோ, உடம்பெல்லாம் இரத்த ஓட்டம் நின்று போவது போல இருக்க, தலையே சுற்றி விடும் போல இருந்தது. 

*******

அதே அன்று இரவு.. நேரம் ஒன்பதரையைத் தாண்டியிருக்கும் . 

இரவு உணவை முடித்துக் கொண்டு.. தோட்டத்தில் காற்றாட நடைபயின்று விட்டு.. அறை தேடி வந்த போது.. மஞ்சத்தில் அவனுக்கு புறமுதுகிட்டபடி அமர்ந்திருந்தாள் யௌவனா. 

அவளது நீண்ட கூந்தலில்.. அவள் சூடியிருந்த கொத்து கொத்தான மல்லிகைச் சரத்தில் இருந்தும் வந்த சுகந்தம், அவ்வறை எங்கும் ஒரு தேவலோக சஞ்சரிப்பை உணர்த்துவது போல இருந்தது. 

செக்கச்செவேலென இரத்த சிவப்பு நிறம் கொண்ட சேலையில்.. தன் இடுப்பின் தரிசனம்.. காளை அவனின் மனம் மயக்கும் வித்தில் தெரிய, அமர்ந்திருந்தாள் அவள். 

ருசி கண்ட பூனையான அவனுக்கும், மனைவியின் அழகு தரிசனம் பித்தங்கொள்ள வைக்க, அவளுக்கான நேசம் மனத்தில் பூத்துக் குலுங்க, 

சிரித்துக் கொண்டே கையயுயர்த்தி நெட்டி முறித்தவன், “என்ன மேடம்.. இன்னைக்கு ரொம்ப சூடா இருக்கீங்க போல?” என்று குறும்புக் கொப்புளிக்கும் குரலுடன் கேட்டுக் கொண்டே மனைவியை நாடிச் சென்றவன், மனைவி தோள் மீது கை வைத்தான். 

அவ்வளவே!! 

சத்யன் கை வைத்ததும் தான் தாமதம்… யௌவனாவின் விழிவெண்படலத்தில் இரத்த நிற செவ்வரிகள் ஓடி முழு விழியும் சிவக்கத் தொடங்க,உடலோ மெல்ல மெல்ல விறைக்கத் தொடங்கியது. 

யௌவனாவின் தோள்புஜங்கள்.. தாறுமாறாக மேலே கீழே என ஏறி இறங்க, அவளது நீண்ட கூந்தல்.. அந்தரத்தில் மெல்ல எழுந்து பரவலானாது. 

தொட்டது மனைவியை அல்ல என்று அறியாத சத்யாதித்தன் .. கண்கள் நிறைய காதலுடன்.. அவளது ஒரு பாதி பக்கவாட்டு முகத்தையே இரசித்துப் பார்த்திருந்தான். 

இத்தனையும் பார்த்திருந்த தேவதாவுக்கோ.. இத்தனை நாள் பதிவிரதையாக இருந்த மனைவி, பழிவெறியை நிறைவேற்றிக் கொள்ளச் செய்யத் துணிந்த கேவலமான செயலில்….. சுருசுருவென்று கோபம்.. எழுத்தில் வரிக்க முடியாதளவுக்கு எழுந்தது. 

அந்த ஈசனின் மறு அம்சமான தேவதாவுக்கு, தன் சீற்றப் பார்வதியைக் காணக் காண, தன் ஜடாமுடி விரித்து, கால்கள் தரையை தொம் தொம்மென்று மிதிக்க, ஒரு ருத்ரதாண்டவம் ஆட வேண்டும் போல வெறியே எழுந்தது. 

 

 

2 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 16 & 17 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top