14 -ஆடி அசைந்து வரும் தென்றல்
“ரெட்சில்லி.. ஓரங்குட்டான்… மூஞ்சிய பாரு உர்ருனு… கொஞ்சம் சிரிச்சா தான் என்ன..” என முணுமுணுத்தவள்.. வேலையை பாரக்கலாம் என சிஸ்டத்தை பார்க்க ஒன்றும் புரியலை…
“அடியேய்.. தேவா தலையும் புரியல.. வாலும் புரியல.. இப்ப என்ன பண்ண… முடிச்சிட்டு தான் போகனும் சொன்னாரே… ப்ச்ச.. விடு பார்த்துக்கலாம்… எவ்வளவோ பார்த்துட்டோம்… இவர சமாளிக்க முடியாதா…”
மீண்டும் கேம் விளையாட்டில் மூழ்கி போனாள். அனிவர்த் பார்த்து விட்டு பரவாயில்லை நாம ஸ்டிரிக்டா சொல்லவும் செய்யறா.. இனி இவகிட்ட இப்படி தான் நடந்துக்கனும் என தன்னையே மெச்சிக் கொண்டான். அவளை பற்றி சரியாக தெரியாமல்…
அலுவலகம் முடிய ஒருமணி நேரம் இருக்க… அனிவர்த்திற்கு ஒரு பிசினஸ் சர்க்கிள் பார்ட்டிக்கு செல்ல வேண்டியதாக இருந்ததால்.. தேவர்ஷி எந்த அளவுக்கு முடித்திருக்கிறாள் என பார்த்து விட்டு செல்லலாம் என அவள் கேபினுக்கு சென்றான். அவன் வந்தது கூட தெரியாமல் விளையாடி கொண்டு இருக்க… பார்த்தவனுக்கு கோபம்…
“வர்ஷி… என்ன பண்ணிட்டு இருக்க…”
திடீரென பின்னால் கேட்ட அவன் சத்ததில் பயந்து போய் அடித்து பிடித்து எழுந்தவள் தடுமாறி அவன் மேலேயே விழுகப் போக.. அவளை பிடித்து நிறுத்தியவன்…
“எப்ப பாரு.. எதிலும் விளையாட்டு… ஒரு இடத்தில் ஆடாம கொள்ளாம உன்னால நிக்க முடியாதா.. அவ்வளவு தூரம் சொல்லிட்டு போனேன்.. மறுபடியும் கேம் விளையாடிட்டு இருக்க… அறிவிருக்கா உனக்கு.. நம்ம ஒர்க்ல சின்சியரா இருக்கனும்… ஒரு டெடிகேசன் இருக்கா… உன் விளையாட்டுக்கு சேலரி தரமுடியுமா.. வாங்கற சேலரிக்கு ஒர்க் பண்ணனும்ங்கற எண்ணம் இல்லையா.. என்ன நினைச்சுகிட்டு இருக்க… ஒர்க் பண்ற எண்ணம் இருந்தா வா.. இல்லயா வரவே வராத… என்ன பண்ணுவியோ தெரியாது… இன்னைக்கு நான் கொடுத்த ஒர்க்க முடிச்சுகொடுத்துட்டு தான் போகனும்.. மைண்ட் இட்.. “ என மூச்சு விடாமல் கத்த..
உண்மையிலேயே சற்று பயந்து தான் போனாள் தேவர்ஷி. அவள் முகத்தை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் ஏறியது.
“எப்ப பாரு முகத்தை பாவம் போல வச்சுகிட்டு.. ஆளை ஏய்க்கறது… ஒழுங்கா வேலையை முடிச்சு கொடுத்திட்டு தான் போகனும் புரிஞ்சுதா…” என கத்தி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.
கண்ளில் நீர் கோர்க்க… ‘எப்படி எல்லாம் பேசிட்டு போறான்.. ரெட்சில்லி.. பெரிய இவனாட்டம் என்னை திட்டிட்டு போறான்.. இன்னைக்கு வேலையை முடிச்சு கொடுத்துட்டு இவனை வச்சுக்கிறேன்’ என ரோசத்தோடு செய்தாள்.
அனிவர்த் வீட்டிற்கு சென்று ப்ரஷ்ஷாகி பார்ட்டிக்கு சென்றவன் கொஞ்ச நேரத்திலேயே தேவர்ஷியை மறந்து போனான். இரவு ஏழு மணி போல ஆபிஸ் செக்யூரிட்டி அனிவர்த்துக்கு போன் பண்ணி இன்னும் தேவர்ஷி கிளம்பலை என சொல்லவும்.. அவளுக்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க.. அவள் எடுக்காமல் போக… உடனே ஆபிஸ்கு கிளம்பி போனான்.
இவன் போன போதும் அவள் வேலை செய்து கொண்டு இருந்தாள். பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.
“டைம் என்னாகுது.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க…”
அவனுக்கு பதில் சொல்லாமல்.. அவனை கண்டு கொள்ளாமல்… அவள் வேலையில் கண்ணாக இருக்க..
இவளை என பல்லை கடித்தவன்.. “ஏய்… நான் சொல்றது காதுல விழுகல..” என அவள் கையை பிடித்து எழுப்ப.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“கிளம்பு முதல்ல..” என அவளது தோளை பிடித்து தள்ள.. அவன் கையை உதறிக் கொண்டு நகராமல் கைகளை கட்டிக் கொண்டு விரைப்பாக நின்றாள்.
“சொன்னா கேட்கமாட்ட..” என திட்டியவன்.. சிஸ்டத்தை சட்டவுன் பண்ண போகவும்…
“அச்சோ நான் இன்னும் சேவ் கொடுக்கல..” என பதற…
அவனே உட்கார்ந்து சேவ் கொடுக்கப் போக.. அவன் சொன்னது மட்டும் இல்லாமல்.. இதுவரை செய்யாமல் இருந்தவற்றையும் முடித்திருந்தாள்.அவன் மெச்சுதலாக பார்க்க… உதட்டை சுழித்து வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவன் சேவ் கொடுக்க.. “இன்னும் எரர் செக் பண்ணல..” எங்கோ பார்த்துக கொண்டு சொன்னாள்.
“எல்லாம் நாளைக்கு பண்ணிக்கலாம் கிளம்பு..” என்றான்.
அவள் தனது பேகை எடுத்துக் கொண்டு கிளம்பவும்.. எதுவும் பேசாமல் சிறு குழந்தையாக கோபித்து கொண்டு செல்ல.. அனிவர்த்துக்கோ அவளை அப்படி அனுப்ப மனம் கேட்கவில்லை.
“வர்ஷி..” மென்மையாக அழைக்க… அவள் நிற்காமல் செல்ல…
“வர்ஷிம்மா..”
“டேய்.. குட்டிம்மா..”
என பின்னால் உல்லாசமாக சிரித்து கொண்டே சென்றான். அவளோ நிற்காமல் நடக்க.. இரண்டு அடி வேகமாக சென்று அவள் கையை பிடித்து தன்புறம் திருப்பியவன்…
“பேசுடா.. கண்டுக்காம போற..” என சிரிப்புடன் கேட்க..
“போ.. ஒன்னும் வேணாம்.. என்ன திட்டிட்டல்ல.. உன் கூட பேசமாட்டேன்..” என முறுக்கிக் கொண்டு சென்றாள்.
பேசிக் கொண்டே வெளியே வந்துவிட்டார்கள். செக்யூரிட்டி இவர்களை வித்தியாசமாக் பார்க்க… அதை எல்லாம் பாரக்கும் நிலையில் இருவரும் இல்லை.
இவர்கள் வெளியே வந்த போது லேசாக மழை தூறிக் கொண்டு இருக்க… பார்க்கிங் ஏரியாவிற்கு வருவதற்குள் நன்றாக பெருமழையாக மாறியிருக்க…
தேவர்ஷி மழையில் நனைந்து கொண்டே.. வண்டியை எடுக்க…
அவளருகே வேகமாக சென்று..”வர்ஷி.. இந்த மழைல உன்னால போகமுடியாது.. வா நான் டிராப் பண்றேன்..”
எதுவும் பேசாமல் வண்டியை ஸடார்ட் பண்ண… வண்டி முன் வந்து நின்று…
“சொன்னா கேளுடா.. நைட் டைம் மழை வேற.. சேப் கிடையாது..” என அவன் சொல்லி கொண்டிருக்க…
அவனை தாண்டி வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.
அனிவர்த் “திமிரு…அவ்வளவும் திமிரு.. சின்ன பொண்ணா இருக்காளேனு பார்த்தா.. ரொம்ப தான் துள்ளறா..” என வழி எங்கும் அவளை திட்டியவாறே வீடு வந்து சேர்ந்தான்.
அவர்களுக்குள் முதல் ஊடல்…
நேரம் செல்ல.. செல்ல.. அனிவர்த்தால் இருப்பு கொள்ள முடியவில்லை.
‘வீட்டிற்கு போயிருப்பளா.. வழில ஏதும் ப்ராப்ளம் ஆகியிருந்தா… இந்த காலத்துல டீவில நியூஸ் எவ்வளவோ பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வருதே… அவ பின்னாடியே அவ வீடு வரைக்கும் போயிருக்கனுமோ..’ என பயந்து போய் அவளுக்கு அழைக்க.. அவள் இவன் அழைப்பை ஏற்கவில்லை என வரவும்.. பயம் அதிகமாக… மணியை பார்த்தான் இந்நேரம் அவள் வீடு போயிருக்கனுமே.. மீண்டும் அழைக்க.. அவள் எடுக்கவில்லை.
அவள் வீட்டிற்காவது போய் பார்க்கலாமா என நினைத்தான். ஆனால் இராத்திரி நேரத்தில் வயசு பொண்ணை தேடி சென்றால் அவள் குடும்பத்தினர் எவரோ.. எப்படியோ.. வீண்பிரச்சினை வேண்டாம் என விட்டு விட… அவன் மனமோ அப்படி எல்லாம் விட முடியாது என அலையாக ஆர்பரிக்க..
வாட்சப்பில் ஒரு மெசேஜ்..
‘வர்ஷி.. வீட்டுக்கு போயிட்டியா…’
அவள் ஆன்லைனில் இல்லை எனவும் பதட்டம் கூடியது..
‘வர்ஷிம்மா.. ஆர் யூ ஓகே..’
‘குட்டிம்மா.. ஏதாவது சொல்லுடா..’
என வரிசையாக மெசேஜ் பறக்க… பதில் என்னவோ அவனுக்கு சாதகமாக இல்லை.. வருத்தமாக போனையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் ப்ளூ டிக் டக் டக்கென் வரிசையாக வர… விடலைபையனை போல..
“யாஹூ” என துள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.
‘குட்டிம்மா.. வீட்டிக்கு போயிட்டயா..’
கோப ஸ்மைலி..
சிரித்துக் கொண்டே.. ‘கால் பண்ணவா..’
அரிவாள் பறந்து வந்தது.
அவளின் குறும்பு அவனையும் தொற்றிக் கொள்ள..
இவன் இதயம் அனுப்ப…
அவளோ நாக்க மடித்து விரலை நீட்டி மிரட்டும் விஜயகாந்த படம் அனுப்ப…
இப்படியே கொஞ்ச நேரம் இருவரும் விளையாட..
குட்நைட் பிக் போட்டுபோய் தூங்கு என அனிவர்த் விளையாட்டை முடித்து வைத்தான்.
ரொம்ப உற்சாகமாக அவன் மனம் இருக்க.. தூக்கம் வராமல் அவளை நினைத்துக் கொண்டே உறங்காமல் விழித்திருந்தான். நாளைக்கு வரட்டும் அவளை என்ன பண்றேன் பாரு.. அப்படியே பிச்சு திங்க்னும் என தலையணையை பிச்சு கொண்டு இருந்தான்.
அனிவர்த் மனம் கட்டுக்கடங்காத காளையாக துள்ள… தேவர்ஷிய பார்க்க என்னவோ காதல் சொல்லப் போகும் டீன்ஏஜ் பையன் போல பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான். ஒரு பத்து தடவையாவது கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்துக் கொண்டான்.லேசா விசில் அடித்தவாறே படிகளில் இறங்கி வந்தவனை கண்டு கங்கா ஆவென வாயை பிளந்து பார்த்தார்.
‘ம்ம் சரி தான் பையன் எங்கயோ வசமா சிக்கிட்டான் போல.’
“மாம்.. சீக்கீரம் டிபன் வைங்க…” டேபிளில் தாளம் போட்டவாறு உல்லாசமாக…
கங்கா தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்ற..
“என்ன மாம்… எப்ப பாரு இட்லி சட்னி சாம்பாரு தானா..” களிப்புடன் சலித்துக் கொள்ள…
“தோசை சுடவா..”
“மாம்.. இட்லி தோசை எல்லாம் விட்டுட்டு புதுசா ஏதாவது டிரை பண்ணுங்க..”
“நான் புதுசா டிரை பண்றது இருக்கட்டும்… நீ எங்கயாவது லாக் ஆகிட்டயா.. ம்ம்ம்.. என்ன..”
“ச்சேச்ச. அப்படி எல்லாம் இல்லை.. “என அவசர அவசரமாக மறுத்தான்.
“இல்லயே டவுட்டா இருக்கே..”
அனிவர்த்தின் முகத்தை இந்தபுறம் அந்தபுறம் திருப்பி பார்த்தவர்..
“முள்ள கட்டி விட்ட மாதிரி இருக்கற மூஞ்சில பாலும் தேனும் வடியுதே… எந்த புள்ளகிட்டயாவது ப்ரபோஸ் பண்ணிட்டயா…”
“உங்களுக்கு வேற பேச்சே இல்லையா.. எப்ப பாரு லவ் கல்யாணம்.. விடுங்க ஆளை..”
என விட்டால் போதும் என பாதி உணவில் கிளம்பிவிட்டான்.
“ஏம்மா.. இப்படி பண்ற…பாரு அவன் சாப்பிடாம போயிட்டான் பாரு…” என சிதம்பரம் வருத்தப்பட..
“இந்த வீட்டுக்கு மருமகள் வரனும்னு நான்லாம் வாரத்தில் மூனுநாள் விரதம் இருக்கேன்.. அதை நினைச்சு ஒரு நாளாவது வருத்தப்பட்டு இருக்கறிங்களா…உங்களுக்கு உங்க மகன் ஒருவேளை சாப்பிடாம் போனது வருத்தமா இருக்கா… அவன் உங்க இரத்தம்.. நான் வேற இரத்தம் அப்படி தான..”
‘ஆமாம் கேட்டாலும் திட்டுவ.. கொஞ்சமாவது மகனுக்கு கல்யாணம் ஆகலையேனு கவலை இல்லையானு..’ சிதம்பரத்தின் மைண்ட் வாய்ஸ்..
“அவ்வளவு பாசமிருந்தா உங்க மகனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைங்க பார்க்கலாம்”
“அம்மா.. கங்காம்மா..நீயாச்சு.. உம்மகனாச்சு என்னை ஆளை விடு.. உங்க ஆட்டத்துக்கு நான் வரல..” என கை எடுத்து கும்பிட…
“அது… உங்களுக்கு என்ன முடியுமோ.. அத மட்டும் பாருங்க புரிஞ்சுதா.. போங்க வழக்கமாக பண்ற… நியூஸ் சேனல பாருங்க போங்க..”
சிதம்பரமும் விட்டால் போதும் என அமைதியாக போய் டீவியோடு ஐக்கியமாகிவிட்டார்.
“பயபுள்ள சிக்கமாட்டேங்கறானே… ஆனாலும் இன்னைக்கு என்னவோ ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுது.. ஒரு கோடு போட்டா போதும் அத பிடிச்சுகிட்டே ரோடே போட்டறனும்..” என தனக்கு தானே பேசிக் கொள்ள..
பார்த்திருந்த சிதம்பரம் ‘மகனுக்கு கல்யாணம் ஆகாத கவலைல பைத்தியம்கீது பிடிச்சுகிச்சா… ‘ என உற்றுப் பார்க்க..
“என்ன பார்க்கறிங்க..” கங்கா அதட்டல் போட…
“ஒன்னுமில்லம்மா..” என்றார் பவ்யமாக… நினைத்தை சொல்லமுடியுமா…
அனிவர்த் பரபரப்பாக ஆபிஸ் வந்தவன் தனது அறைக்கு வந்தவன் தேவர்ஷிய பார்க்க வசதியாக அவளின் அறையின் கேமராவை மட்டும் தன் மானிட்டரில் தெரியுமாறு வைத்துக் கொண்டு… நொடிக்கொரு முறை பாரத்திருந்தான்.
‘என்ன இன்னும் இவளை காணோம்..’ என தனது கைகடிகாரத்தை பார்க்க.. அது அலுவலகம் ஆரம்பிக்க இன்னும் நேரம் உள்ளது என சொல்லாமல் சொல்ல…. நெற்றியில் தட்டி சிரித்துக் கொண்டான்.
‘என்னடா.. அனிவர்த்… இப்படி ஆகிட்ட… குட்டி பிசாசு நல்லா நம்மள ஆட்டி வைக்கறா…’
நேரம் சென்று கொண்டிருக்க.. அனிவர்த்திற்கோ இருப்பு கொள்ளவில்லை. எல்லோரும் வந்து தங்கள் வேலையில் மூழ்கி ஆபிஸே பரபரப்பாக இருக்க… அனிவர்த எதிர்பார்த்தவளோ வரவில்லை. அவளை காணாமல் மனதின் உற்சாகம் எல்லாம் வடிந்து கொஞ்சம் டல்லடிக்க…
‘ஏன் இன்னும் இவளை காணோம்..’ என கொஞ்சம் கவலை எட்டி பார்த்தது.
‘இன்னைக்கு லீவா..’
‘போன் பண்ணி இன்பார்ம் பண்ணலாம்ல..’
‘ஒரு வேளை மெயில் பண்ணியிருக்காளோ..’ என மெயில் செக் பண்ண…
நினைத்து போல உடம்பு சரியில்லை என இரண்டு நாள் லீவு கேட்டு மெயில் அனுப்பி இருந்தாள். அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதே அனிவர்த்தை எதையும் யோசிக்க விடவில்லை. உடனே தேவர்ஷிக்கு அழைத்துவிட்டான்.தன்னிடம் வேலை பாரப்பவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் இப்படி தான் அழைத்திருக்கமோ.. என யோசிக்க எல்லாம் இல்லை.
Nice epi sis