ஏகாந்த இரவில் வா தேவதா
[23]
மூன்று மாதங்களுக்குப் பிறகு,
ஓர் இரவில், தம்பதிவனம் எங்கிலும் அடித்து ஊற்றிப் பெய்து கொண்டிருந்தது அடாவடியான மழை. அந்த சமயத்தில் தான் .. இரவு, பகல் பாராமல்.. அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் பகுதியில் ஓர் அதிசயமும் நிகழ்ந்தேறியது.
வானின் மழை.. அந்தத் தம்பதிவனக் கிராமத்தின் ‘செம்பாட்டு’ மண்ணோடு இரண்டறக் கலந்து… பள்ளத்தை நோக்கி கரைபுரண்டு ஓடும் அளவுக்கு, அகோரமான மழை அது.
காதல் செய்யும் கன்னிப்பெண், வெட்கம் விட்டு இடைக்கிடை கண் திறந்து.. தன் தலைவனைப் பார்த்தது போல.. பளிச் பளிச்சென்று வெட்டி வெட்டி அடங்கியது மின்னல்.
மின்னலோடு இடியும் சேர்ந்து மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த கொடிய வேளையிலும், நான்கு பேர் கொண்ட அகழ்வுப் பணிக்குழுவொன்று மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
இடிமின்னலோ.. புயல்மழையோ.. எதையும் பொருட்படுத்தாது.. அகழ்வுப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பது மேலிடத்தின் (பிரபாகரின்) உத்தரவு.
அதனால் அந்த மூன்று ஏழை சிற்றாள்களுடன்.. அவர்களுக்கு கட்டளைப் பிறப்பித்து ஏவிக் கொண்டிருந்த சற்றே படித்த முகஜாடை கொண்ட.. பிரபாகரின் அசிஸ்டெண்ட்டான கணேஷூம் அங்கே தான் நின்றிருந்தான்.
பிரபாகரின் அசிஸ்டெண்ட் கணேஷ் மட்டும் மழையில் முழுமையாக நனையா வண்ணம், தலையில் இருந்து முழங்கால் வரை இழுத்துப் போர்த்தியிருக்கும் மழை கோர்ட் அணிந்திருக்க, மற்ற ஏழைக் குடியானவர்களோ பாவம்.
மழையில் தெப்பமாக நனைந்த வண்ணமே தான்.. அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்.
அந்த கணம்.. நிலமட்டத்தில் இருந்து பத்தடி ஆழத்தில் நின்றிருந்த அவர்களின் கால்களுக்கு கீழேயிருந்த.. தண்ணீர் மட்டம் கால்களுக்கு மேலே உயர உயர நின்றிருந்த போது,
அவர்களைச் சூழ இருந்த ‘மினி வெள்ளம்’ படிப்படியாக குறைவதை அவதானித்த வேலையாட்களில் ஒருவன்.. நீர் வழிந்து செல்லும் திசையைப் பார்த்த போது.. ஓர் பேரதிசயத்தைக் கண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக நீரோடு இணைந்து.. மண்ணை இளக்கிய சேற்று மண்.. அப்படியே கரைந்து.. ஒரு சதுர வடிவான பள்ளத்தை உருவாக்குவதைக் கண்டான் அந்த வேலையாள்.
அந்த ஏழைக் குடியானவன், மண்வெட்டியால் மண்ணைத் தோண்டுவதை விடுத்து.. வேறெங்கோ வாய் பார்ப்பதைக் கண்ட கணேஷோ, குடியானவனை கடிந்து கொள்ளும் நோக்கில்,
“ய்யோவ்… அங்கே என்னய்யா பார்வ? … வேலைய பாருய்யா?”என்று கத்தியதைக் கூட காதில் வாங்காத, வேலையாளின் பார்வை சென்ற திசையைப் பார்த்த கணேஷின் கண்கள்,
தானும் அதிசயித்த பார்வையைக் கடன் வாங்கிக் கொண்டது.
கைகள்.. தாமாகவே மேலுயர்ந்து.. மழைக்கோட்டின் தலைப்பாகத்தை அகற்ற இதழ்களோ அவனையும் அறியாமல், “மை காட்!! ”என்று முணுமுணுக்கலானது.
அவசரமாக அந்த சதுரவடிவத் துளையை நாடிப் போனவன், மழை தன்னை நனைப்பதைக் கூட பொருட்படுத்தாது… கையில் இருந்த டார்ச்லைட்டை அடித்துப் பார்த்த போது,
அது சதுர வடிவ துளை அல்ல.. சதுர வடிவ மேல்வாரம் கொண்ட.. ஓர் சுரங்கத்தின் நுழைவாயில் என்பது புரிந்தது அசிஸ்டெண்ட்டுக்கு.
டார்ச்லைட் பட்ட இடங்கள் எல்லாம்.. அந்த இருளிலும் ஒளிரவாரம்பிக்க, அதனைக் கூர்ந்து கவனித்த போது.. கருங்கல்லினால் செய்யப்பட்ட பழைமையான படிகளைக் கழுவிக் கொண்டு.. மழை நீர் உள்ளிறங்கிச் செல்வதை அவதானித்தனர் அங்கிருந்த அனைவருமே.
பிரபாகரின் அசிஸ்டெண்ட்டுக்குமே, அப்படி அந்தப் படிகளின் இறுதியில்.. அடர்ந்த இருளில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் எழவே,
இருளில் எந்த ஆபத்தும் காத்திருக்கலாம் என்பதைக் கூட பொருட்படுத்தாது.. மெல்ல மெல்ல படியிறங்கி.. அந்த சுரங்கத்தினுள் நடந்தான்.
அவனைத் தொடர்ந்து வேலையாட்கள் மூவரும் இறங்கினாலும் கூட.. அவன் கண்களில் மாத்திரம் பிரத்தியேகமாக ஒரு பொல்லாத ஆவல் முளைத்திருந்தது உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண்பதற்காக.
உள்ளே இறங்கிக் கொண்டிருந்த மழை நீர் எல்லாம்.. படிகளை விட்டும் இறங்கிய முடிவில்.. ஒரு புராதன வாய்க்கால் போன்ற அமைப்பில் இறங்கி…
ஒரு வட்ட வடிவ தூவாரம் வழியாக.. எங்கோ செல்வதை.. டார்ச் லைட் மூலமாக அவதானித்தான் அவன்.
அப்படி இறங்கிய தண்ணீர் எல்லாம்.. அந்த ஊரில் இருக்கும், யௌவனா ஒருமுறை சத்யனுடன் சென்று வந்த பீலிக்கு சென்று.. அருவியாக உருமாறி.. ஆற்றுநீருடன் கலக்கிறது என்பது யாரும் அறியா உண்மை!!
அசிஸ்டெண்ட்… மெல்ல இறங்கி வந்த போது… அவன் ஷூ தாங்கிய பாதங்கள்…மூலம் இம்முறை தரையில் நடந்த போது.. வித்தியாசமான ஒலி எழும்புவதை அவதானித்தான்.
மெல்ல கீழே டார்ச்லைட்டை அடித்துப் பார்த்த போது.. அகல விரிந்தன அவன் கண்கள். ஓரெட்டுப் பின்னே நகர்ந்தது அவன் பாதங்கள்.
கருங்கற்படிகளைக் கடந்ததும் இருக்கும் தரை முழுவதும்.. பளிங்காக இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனான் அவன்.
இருந்த இடத்தை விட்டும் நகராமல்.. அந்த இருளில் நெடுந்தூரம் வரை டார்ச் அடித்துப் பார்த்த போது, பளிங்குத் தரையின் முடிவில்..
ஒரு பாரிய தங்கத்தாலான கதவு இருப்பதைக் கண்டான் அவன்.
அங்கிருந்த படியே… கதவின் நாற்புறமும் டார்ச் அடித்துப் பார்த்த போது.. அந்த தங்கக்கதவு முழுவதும்… நாகச் சர்ப்பத்தின் உருவம் பொதிக்கப்பட்ட விளிம்புகளும், அதன் தாழ்ப்பாள், பூட்டு உட்பட அனைத்துமே வளைந்து, நெளிந்து செல்லும் பாம்பின் உருவ மாதிரியிலேயே அமைந்திருப்பதைக் கண்டு கொண்டான் அவன்.
அதனைக் கண்டதும், கதவுக்குப் பின்னே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும்.. ஆர்வம் இரண்டு மடங்காக்கப்பட.. மெல்ல அதனை நாடிச் செல்ல ஓரடி எடுத்து வைத்த போது, அவன் செவிகள் யாரோ.. யாரோ “ஸ்ஸ்ஸ்”என்று மூச்சுவிடும் சப்தம் கேட்டது.
சப்தம் வந்த திசையான தரையை.. டார்ச் அடித்துப் பார்த்த போது, அவன் பேயறைந்தாற் போன்று அங்கேயே நின்று போனான்.
அந்தப் பளிங்குத்தரையில் பல்லாயிரக்கணக்கான நாகச் சர்ப்பங்கள்.. ஒன்றின் மீது ஒன்று கட்டிப்புரண்ட வண்ணம் ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு, கை, கால்கள் எல்லாம் வெளவெளக்கத் தொடங்கியது.
அதிலும் அவன் அடித்த டார்ச் ஒளி.. ஒரு சர்ப்பத்தின் கண்களுக்கே சரியாக விழ, வெறி பிடித்தது போல சட்டென்று எழுந்து படமெடுத்து.. தன் பற்களைக் காட்டி அது சீறவாரம்பிக்க,
அவனோடு வந்த மூன்று வேலையாட்களும், “ஐய்யைய்யோ எங்களை விட்ருங்கய்யா.. நாங்க புள்ளைக்காரனுங்க” என்றவர்களாக.. படிகள் கடந்து புறமுதுகிட்டு ஓடவாரம்பிக்க,
பயந்து போன கணேஷோ, “யோவ்..நில்லுங்கய்யா..நானும் வர்றேன்” என்றவனாக.. அவர்கள் பின்னாலேயே ஓடவாரம்பித்தான் அவனும்.
மேலேறி.. தரைமட்டத்துக்கு வந்த பிரபாகரின் அசிஸ்டெண்ட்டுக்கு, அவனுடைய எஜமானன் பிரபாகரிடம் சொல்வதற்கு.. ஓர் பெரும் தகவலொன்று இருக்கவே, நொடியும் தாமதிக்காமல்…
தன் முதலாளி தங்கியிருக்கும் விடுதியை நாடி தன் ஜீப்பில் அசுரவேகத்தில் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.
நிஜமாகவே அது… பழிவெறி ஊறிப் போயிருக்கும் நந்தினியின் உறைவிடம் அது.
தேவதாவால் சிறைவைக்கப்பட்டிருக்கும் நந்தினி மட்டும் .. அங்கே இருந்திருப்பாளேயானால்.. அந்த நால்வரும் அந்த கருங்கற்படியில் கால் பதித்த கணமே.. அவர்களின் உயிர்.. அவர்களை விட்டும் பிரிந்திருக்கும்.
தேவதாவால் நந்தினி சிறை வைக்கப்பட்டிருந்தது யாருக்கு சாதகமோ இல்லையோ.. இந்த பிரபாகர் என்ட் கோவுக்கு அது சாதகமாகவே போயிற்று.
தம்பதிவனக் கிராமத்தின் டவுனில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதற்கொண்டு தங்கும், அந்த முதல்தர ஹோட்டலில்.. தனக்கென்று விடப்பட்டிருந்த அறையில்…
மேலேயும், கீழேயும் மாத்திரம் இருதுண்டு உடைகள் அணிந்திருந்த ஒரு விலைமாதுவுடன், மஞ்சத்தில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் தாண்டி அறுபத்தொன்பது வரை சென்று.. உலகம் மறந்து சல்லாபித்துக் கொண்டிருந்தான் அந்தப் பொல்லாத பிரபாகர்.
அந்த நேரம் பார்த்து.. அறைக்கதவு தட்டப்பட, அந்த விலைமாதுவை விட்டும் பிரிந்தவன், வேண்டாவெறுப்பாக கதவினைத் திறந்த போது, அங்கே அச்சம் சுமந்த விழிகளுடன், தன் அசிஸ்டெண்ட் நின்றிருப்பதைக் கண்டான் பிரபாகர்.
அவனைக் கண்டதும்.. அர்த்த இராத்திரியில் அவன் வந்திருக்கிறானேயானால் விஷயம் பெரிது என்பது புரிந்து விட, சுருங்கிய விழிகளுடன், “என்ன கணேஷ்?”என்று கேட்க, அவனோ எதுவும் சொல்லாமல்.. தயக்கதுடன்.. மஞ்சத்தில் இருந்த விலைமாதுவையே பார்த்தான்.
விலைமாது இருக்கும் போது சொல்லப் பிரியப்படாத விஷயமாயின், விஷயம் ரொம்பப் பெரிது என்பதை உணர்ந்தவன்,
தன் டிராயரை நாடிப் போய்.. அதிலிருக்கும் அத்தனை பைசா நோட்டையும் எடுத்து.. அந்த பர்ததையிட் முகத்தில் விட்டெறிந்தவன், “இனி நீ தேவையில்லை.. நீ போகலாம்”என்று சொல்ல, அந்தப் பெண்ணும் காசு கிடைத்தால் போதும் என்பது போல.. காசை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப.. அதன் பின்னரே உள்ளே வந்தான் கணேஷ்.
தாழ்ந்த படபடப்பான குரலில்.. இன்று அகழ்வுப் பணியின் போது நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் கூறினான் கணேஷ்.
அதை, முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தவனோ, “நல்லா பார்த்தியா அது தங்கக் கதவு தானா?” என்று கேட்க,
கணேஷோ, “அம்மா சத்தியமா சொல்றேன் சார்… அது தங்கக் கதவு தான்.. நான் ஏன் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன்… ஆனால் அது பூட்டு போட்டிருந்தது சார்.. பூட்டுக்கு சாவி எங்கே இருக்குன்னு தான் தெரியலை” என்று சொல்ல,
அவனுக்குள்ளே ஓர் நமுட்டுச்சிரிப்பு பரவியது.
அந்தத் தங்கக் கதவின் திறவுகோல், “சத்யாதித்தன்’ தான் என்பதால் விளைந்த நமுட்டுச் சிரிப்பு அது.
ஆனால் உள்ளேயோ, ‘தனக்கான புதையல் கிடைக்கக் கூடிய நேரம் நெருங்கி விட்டது’ என்பது தெள்ளத் தெளிவாகப் புரியலானது அவனது.
தன் அசிஸ்டெண்ட்டை நோக்கி, “நீ ஒண்ணு பண்ணு.. காலையில் பாம்பை கொல்ற நல்ல கெமிக்கலா பார்த்து வாங்கி.. நம்ம ஆட்களை விட்டு அந்த சுரங்கத்தில் போட்டு அத்தனை பாம்பையும் கொன்னுரு.. அடுத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்”என்று சொன்னவன், கணேஷின் மறுபதிலைக் கூட எதிர்பாராமல், அந்த பிரம்மாண்ட ஹாலை விட்டும் தன்னறைக்குப் போனவன், தன் கதவைச் சாத்திக் கொண்டவன்..கொண்டவன் தான்.. பின்பு வெளிவரவேயில்லை.
சாத்தப்பட்ட கதவில் முதுகு சாய்த்திருந்தவனின் பார்வைக்கு, நேரெதிரே இருந்த சுவற்றிலிருந்த ஓர் ஓவியம் கண்களில் விழுந்தது.
அந்த ஓவியத்தில்… அந்தக்கால கம்பீரமான போர்க்கவசம் அணிந்து… அதுவும் பிரபாகரின் சாயலிலேயே.. ஒரு பெரும் போர்வீரன்.. இயற்கை வர்ணத்தில் தீட்டப்பட்டு… அந்தச் சட்டத்துக்குள் அடங்கியிருப்பதைக் கண்டான் அவன்.
அந்த சட்டத்தின் நுனிமுனையை உள்ளே அழுத்தியதும்.. அது மீண்டும் அழுத்திய பாகத்தை மட்டும் வெளித்தள்ளலானது.
அந்தப் பாகம்.. ஓர் பெட்டகமாக இருக்க, அதனை வெளியே எடுத்துத் திறந்த போது.. அதற்குள் ரொம்பவும் பழைய கம்பளத் துணி இருந்தது. அதில் புதையலுக்கான நிலவரம் அத்தனையும் இருந்தது.
அந்த பாம்புருவம் பொதிக்கப்பட்ட இலட்சணையின் பின்னே இருக்கும் ஒரு குண்டூசிமணி கூட.. அந்த கம்பளித்துணியில் துல்லியமாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
அந்த ஓவியத்திலிருந்த முகமும், அவன் முகமும் ஒன்று போலவே இருந்தது.
அந்த ஓவியத்தில் இருப்பவன் யாராக இருக்கக் கூடும்? புதையல் பற்றி அறிந்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவன் அவன்!!
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் படைத்தளபதி.
ஆம், இறுதி யுத்தத்தில் வெள்ளையனிடம் தோற்று, புறமுதுகிட்டு ஓடிய அதே தளபதியே தான் அது. மகாசேனரைக் கொல்ல வேண்டும் என்ற மன்னரின் இறுதிக் கட்டளையை ஏற்று வந்து செய்த அதே படைத்தளபதியே தான்.
அவன் பரம்பரையில் இந்தப் புதையல் பற்றிய நிலவரம் வழி வழியாகக் கடத்தப்பட்டு,இறுதியில் இந்தத் தலைமுறையில் புதையலைத் தேடி வந்திருக்கிறான் பிரபாகர்.
படைத்தளபதியின் வம்சாவளியே தான் அவன்.
பின்னே எப்படி.. யாரும் அறியா சிதம்பர இரகசியமான இதை கார்ப்பரேட் கிரிமினலான பிரபாகர் அறிந்தான்??
‘புதையல் நெருங்கி விட்டது’ என்று சிலிர்த்துக் கொண்டவனுக்கு, தன் மூதாதையான படைத்தளபதியின் நெடுநாள் ஆசை நிறைவேறப் போவதாகவே எண்ணிக் கொண்டான் அவன்.
பிரபாகரனுக்கோ ஊரே அறியாத புதையல் இரகசியம் தெரிந்திருக்கும் போது, இந்த இராஜசிங்கர்களுக்கு நந்தினி என்னும் பதிவிரதை கொண்ட சபதமும் தெரியாமலா போகும்?
அதைப்பற்றியும் எழுதி வைத்திருந்த படைத்தளபதியின் குறிப்பில் இருந்து அறிந்தே இருந்தவன், நந்தினி என்னும் ஆத்மா தன்னை நெருங்காத வண்ணம்… ரொம்பவும் சக்திவாய்ந்த ரக்ஷையுடனே தம்பதிவன மண்ணை மிதித்திருந்தான் அவன்.
அதனாலேயே என்னவோ.. சத்யனின் கனவில் புகுந்து.. அவன் மனதை கலைப்பது இலகுவாக இருந்த நந்தினிக்கு.. யௌவனாவிடம் அத்துமீறிய பகீரதனைக் கொல்வது புஸ்வானமாகத் தெரிந்த நந்னிக்கு,
கனவு மூலமோ.. நேரடியாகவோ.. பிரபாகரனிடம் வாலாட்ட முடியாமல் போனதுவும் நிகழ்ந்தேறியது.
எப்படியாவது சத்யாதித்தனை இதற்குள் அழைத்து வந்து, தனக்கு எந்தவிதமான உயிராபத்துக்களும் நேராமல் புதையலை அடைய வேண்டும் என்று தீவிரத் திட்டம் தீட்டலானான் அவன்.
******
அடுத்த நாள் காலை,
மஞ்சத்தில் அமர்ந்து ஐ பேடில், காணொளி அழைப்பெடுத்திருந்த, தன் பிஏ ஜனார்த்தனனுக்கு, அடுத்த ஒரு மாதத்துக்கு செய்ய வேண்டிய வேலைகளை தெளிவாக வழங்கிக் கொண்டிருக்க,
அவற்றையெல்லாம் கண்ணும், கருத்துமான முகபாவத்துடன்.. மறுமுனையில் இருந்த வண்ணம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான் ஜனார்த்தனன்.
சத்யனின் பெரும் மனக்குறையாக இருந்தது ‘மனைவி அவன் அன்பை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது’.
என்று அந்தக் கல்மேடையில் வைத்து ஒருவருக்கொருவர் அன்பை வாரி வழங்கிக் கொண்டார்களோ.. அன்றிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாத அன்றில் பறவையாகிப் போயினர் இருவரும்.
மனைவிக்காக எதையும் விட்டுக்கொடுத்து போகுமளவுக்கு.. அவள் மேல் பித்துப் பிடித்துத் திரிந்து கொண்டிருந்தான் சத்யன்.
யௌவனாவுமே.. அவன் கேட்டால் உயிரையும் ஈய்ந்தளிக்கும் நிலைக்கு மாறிப் போயிருந்தாள்.
இதற்கிடையில் இலங்கை வர்த்தகன் பிரபாகர் கொணர்ந்த வாணிப யோசனையும், சத்யாதித்தனுக்கு மிக நன்றாகப் பிடித்துப் போகவே,
அவனுடன் இணைந்து சுற்றுலாத்தலத்துக்கு இசைவான பல விஷயங்களை செய்வது பற்றி.. தீவிர சிரத்தையுடன் ஆராய்வதில்… நாள் போனதில்.. ஊடல் முடிந்து இந்தியா செல்லாமல்… இங்கேயே தங்கி விட்டிருந்தான் சத்யாதித்த இராஜசிங்கன்.
இந்நிலையில் ஜனார்த்தனனும், அவன் இலங்கையிலேயே தங்கியிருப்பது பிடிக்காதவனாக, “சார்.. எப்போ சார் இன்டியா வருவீங்க? மேடம் வேற.. நீங்க வர்ற வரை பதற்றமாகவே சுத்திட்டிருக்காங்க.. அவங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலை.. டாக்டர் ஓகே சொன்னதும் எப்போ இலங்கை வரலாம்னு இருக்காங்க..”என்று தாயின் சுகநிலவரத்தையும் சொல்ல, மகனின் விழிகள் மெல்ல தாழ்ந்தது.
தாய்க்கு அத்தனை பதற்றமாக ஏதும் இல்லை தான். அவர்கள் நலமாகவே இருக்கிறார்கள். ஆயினும் வைத்தியர் வான்வழி பயணங்களை இப்போது கூடவே கூடாது என்று தடைசெய்திருக்க.. தன் கையாலாகாத நிலைமையுடன் சென்னையிலேயே இருக்கும்படியானது வசுந்தராதேவியம்மாளுக்கு.
தாயன்பு மனதைக் கரைக்க, ஜனார்த்தனனிடம், “இப்போ.. இந்த கன்ஸ்ட்ரக்ஷன் வர்க்கில்.. கொஞ்சம் பிஸியாயிட்டேன் ஜனன்… சீக்கிரம் வந்துருவேன்… அம்மாவை கொஞ்சம் பார்த்துக்க”என்று பேசிக் கொண்டிருந்த வேளை, அவர்கள் அறையின் குளியலறைக் கதவு திறக்கும் ஒலி கேட்டது.
சட்டென சிந்தனைக் கலைந்தவனாக.. தன் பார்வையை ஒலி வந்த திசை நோக்கித் திருப்பிய சத்யாதித்தன்.. மீண்டும் ஒலியெழுப்ப முடியாமல்… அப்படியே கல்லாய் சமைந்து தான் நின்றான்.
அப்படி கல்லாய் சமைந்து நிற்கும் வண்ணம் அவன் என்ன தான் பார்த்தான்? அங்கே அவன் பார்த்தது அவனது அழகு மனைவியை.
அங்கே அவன் மனைவி. மார்பிலிருந்து முழங்காலின் மேற்பகுதி வரை மறைக்கும் ஓர் டவலை.. உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, தந்தம் போல வழுவழுத்த தொடைகளை தரிசனம் தந்தவளாக நின்றிருந்தாள் அவள்.
அவளைக் கண்டதும், கள்ளுண்ட மந்தி போல அவன் விழிகள் மாற அவன் நின்றிருக்க ஜனார்த்தனனோ, “சார்.. சார்.. என்ன ஆச்சு? … வீடியோ ஏதும் போஸ் ஆயிருச்சா?”என்று புரியாமல் கத்தியவனாக நின்றிருக்கும்படியானது.
யௌவனாவோ மாயக் கண்களுடன் நடந்து வந்து, கேமராவுக்கு விழாது.. தன் தலைவனின் கண்களுக்கு மட்டும் தரிசனம் தரும் வகையில்.. மஞ்சத்தில் அமர்ந்து தன் தொடைகளுக்கு பாடிலோஷன் பூசவாரம்பிக்க, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே அந்தத் தொடைகளை இரசித்துப் பார்த்திருந்தான் அவன்.
அங்கே ஜனார்த்தனனோ, “சார்.. சார்..”என்று கத்திக் கொண்டிருக்க.. இவளோ கணவனின்.. வழியும் முகம் கண்டு கிளுக்கிச் சிரிக்க, அந்த சிரிப்பில் சிந்தை தெளிந்தவன்.. ஜனார்த்தனனின் இடை விடாத கத்தலை உணர்ந்தவனாக,
“நா.. நான்.. அப்புறம் கோல் பண்றேன் ஜனன்” என்றவனாக அழைப்பைத் துண்டித்து விட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் தாபம் தாங்கொணாமல் சிவந்திருந்தது.
அவள் கணவனின் விழிகள் செம்மைப் பூக்க.. வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை உணர்ந்ததும், அவளுள் தன்னழகின் மேல் ஓர் கர்வமும் பிறக்கத் தான் செய்தது.
இருப்பினும் அவன் பார்ப்பதை உணர்ந்தும், உணராதவள் போலவே, முழங்கால் முட்டிகளுக்கு பாடிலோஷன் பூசுவதிலேயே குறியாக இருப்பதைப் போலக் காட்டிக் கொள்ள,
இவனும் போலிக் கோபத்துடன், “ஹேய் என்ன திமிர்டி உனக்கு? கால் பேசும் போது. இப்படியெல்லாம் வந்து விளையாடாதேன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்??”என்று கடிந்து கொண்டான் அவன்.
இவளோ மனம் மயக்கும் மாயக்குரலில், “நீங்க கால் பேசுறீங்கன்னு தெரியாதே சத்யன்? .. ரொம்ப நேரம் ஈரத்தலையுடனேயே நின்னிட்டுருக்க முடியாதே? .. அதான் வந்துட்டேன்…. எனக்கொரு ஹெல்ப் பண்றீங்களா.. பின்னாடி பாடிலோஷன் பூசி விட்றீங்களா சத்யன்? ப்ளீஸ்”என்று கேட்க, அவன் அழைத்த ஒவ்வொரு சத்யனும்.. அவனது அடிவயிற்றில் அழகான பட்டாம்பூச்சி அசையும் கிளுகிளுப்பைக் கொடுக்கவே செய்தது சத்யாதித்தனுக்கு.
மனைவியின் அன்புக்கோரிக்கையை மறுக்கமாட்டாது, அந்த பாடிலோஷனை பூசியவன்.. உள்ளங்கையில் லோஷன் ஏந்தி.. அவளது தளிர்மேனியில் கைவைக்கலானான்.
அவளது வளவளப்பான முதுகில் அவன் கைகள் ஓட அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பரவலானது.
கணவனின் கைகள் தோள் தாண்டி, முன்னாடி இறங்குவது கண்டவள், கோபத்துடன் “உங்களை லோஷன் பூசி விடுங்கன்னு தானே சொன்னேன்.. நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டவள், அத்துமீறும் அவன் கையை இழுத்துப் பற்றி, அழுந்தக் கடித்து விட்டு எழ முயற்சிக்க,
வலி தாங்கொணாமல், “என்னையே கடிக்குறீயா? உன்னைய்ய்” என்று கறுவிக் கொண்டே, அவளது டவலினைப் பிடித்திழுக்க,
அதில் சற்றே சமநிலை தடுமாறி… களைந்த டவலுடன் மஞ்சத்தில் விழுந்தவளின் மேல்.. அவளை எழ விடாமல் அணைக்கட்டி நின்றான் அவன்.
குளியல் சோப்பு வாசனை.. அவனது நாசியை நிரடிச் செல்ல, அதுவொரு மந்தகாசமன மனநிலை.
அவனோ கிறக்கக் கண்களுடன் அவளை நாடி வந்து.. அவன் கூந்தலில் தலை புதைத்து வாசம் முகர, இவளோ பதைபதைப்புடன், “வேணாம் சத்யன்” என்று தனக்கே கேட்காத குரலில் சொல்ல, மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,
காதல் கமழ, “ஒருதடவை கூட நீ என்னை செல்லப்பெயர் வைச்சுக் கூப்பட்ட்தேயில்லை.. ஆனால் ஒவ்வொரு வாட்டி “சத்யன்”னு நீ கூப்பிடும் போது.. வேற லெவல் ஃபீலிங் தெரியுமா.. அப்படியே உன்னைக் கட்டிப்பிடிச்சு.. தப்பு பண்ணனும்னு தோணுது…..” என்றபடி அவளது பட்டுக்கன்னத்தில் முத்தம் வைத்தான் அவன்.
அவன் மீசை அதரங்கள் குத்தியதில் செக்கச்செவேலென சிவந்த அதரங்களை இரசித்துக் கொண்டே, மையலுடன், “யௌவனா..”என்றான் அவன்.
“ம்..”-கணவனின் அண்மையில் ஓர் மாய உலகத்துக்குச் சென்றவள்,விழிகள் மூடிக் கிறங்கியவளாக, பேச முடியாமல் உம் கொட்டினான்.
அவள் மூக்கோடு, தன் மூக்கு உரசியவனாக தாபக்குரலில், “என்னைப் பிடிச்சிருக்காஹ்?”என்று கேட்க, பட்டென விழிகள் திறந்தவள், அவன் கழுத்தோடு கையிட்டுச் சுற்றி வளைத்தவளாக,
“யோவ் பிடிக்காமத் தான் இப்படி உன்னை பின்னிக் கெடக்குறேனா? உன்னைத் தான் பிடிக்கும்.. உன்னை மட்டும் தான் பிடிக்கும்..”என்றவளாக,அவனது காதல் விழிகள் பார்க்க, அவள் சொல்வதில் பொய்யில்லை என்பதை உணர்ந்தான் அவன்.
இவளோ ஹஸ்கி குரலில், “சத்யன்.. இப்போ நீங்கஹ் சொல்லுங்க.. உங்களுக்கு என் முகஜாடையில் ஆண்குழந்தை வேணுமா? உங்க முகஜாடையில் பெண்குழந்தை வேணுமா?”என்று ஏதோ ஓர் செய்தியை பூடகமாக உணர்த்துவதைப் போலக் கேட்டாள் யௌவனா.
அந்த தத்தி சத்யனுக்கோ.. மனைவி எத்தனை உவப்பு தரும் விஷயத்தை சொல்ல விழைகிறாள் என்று புரியாமல் போக, வெள்ளந்தி முகபாவத்துடன், “நமக்கு தான் ஆல்ரெடி ஒரு குழந்தை இருக்கே..”என்று அவன் சொல்ல,
சற்றே பதறிப் போனவள், கணவனை நோக்கி, “இது எப்போ?” என்று கேட்டாள் அவள்.
அவனோ சிரித்துக் கொண்டே மிருதுவான கண்களுடன், “கனவுல.. அதுவும் நம்ம குழந்தைக்கு இரண்டு வயசு.. சுருள் சுருளான முடியோட.. ரொம்ப அழகு தெரியுமா?? என் பொண்ணு!! .. கண்ணு அப்படியே உன்னை மாதிரி.. ஆனா என்னை அதட்டுறதுல.. அப்படியே என் அம்மா மாதிரி..” என்று தன் கனவுக்குழந்தையை அவன் தத்ரூபக் குழந்தையாக வர்ணிக்க, மீண்டுமொருமுறை கிளுக்கி நகைத்தாள் மனைவி.
“ஹஹா.. சத்யன்.. அது கனவுல… நான் கேட்குறது நனவுல.. உங்களுக்கு ஆண்குழந்தை வேணுமா? பெண்குழந்தை வேணுமா?”என்று கேட்டாள் அவன் மனையாள்.
எஞ்ஞான்றுமே.. குழந்தை பற்றிய பேச்சை எடுக்காதவள்..இன்று ஆர்வமாக எடுத்திருக்கிறாள் என்றால்.. அது சுபச்செய்தியல்லவா??
அதை அறியாதவனுக்கோ.. மனைவியின் அருகாமை உச்சபட்ச கிறக்கத்தைக் கொடுக்கவே..
அவன் தொடைகள்.. அவள் தொடையைச் சுற்றி வளைத்து இறுக்க, சர்ப்பம் போல மூச்சு விட்டு தனது தாபத்தை அவளுக்கு உணர்த்தியவன், அவளது…. இதழ்களைக் கௌவிக் கொண்டவன்..இதழ்கள் சங்கமித்த ஒலி எழுப்பிய வண்ணம்.. அவற்றைச் சுவைக்க ஆரம்பித்தான் காதலுடன்.
யௌவனாவுக்குமே அந்த முத்தம் முத்தம் ரொம்பப் பிடித்திருந்தது. அவளது பிடரிமயிரில் கையிட்டு அளைந்தவளுக்கு… அவன் கைகள்.. டவல் மறைத்திருந்த அவளது உடலுக்குள் எங்கெங்கெல்லாமோ வலம் வந்து.. அவளை இன்பச்சித்திரவதை செய்வது பிடித்திருந்தது அவளுக்கு.
இந்த கூடலின் முடிவில்.. அந்த இனியச் செய்தியை சொல்லலாம் என்று எண்ணியிருந்தவளின் உணர்வுகளுடன் விளையாடவென்றே இசைத்தது அவனுடைய செல்.
மனைவியிலிருந்து மெல்ல மெல்ல ஆசை களைந்தவன், செல்லை எடுத்துப் பார்த்த போது, அழைப்பு எடுத்திருந்தது பிரபாகர் என்று புரிந்தது.
மனைவியின் இதழ்களில் அவசரமாக தன்னிதழ்களை ஒற்றி எடுத்தவன், அவளைப் பார்த்து, “இரு.. இப்போ வந்துட்றேன்..” என்று சொல்லிக், கொண்டே செல்லை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான் அவன்.
அங்கே மறுமுனையில் இருந்த பிரபாகரோ, என்றுமில்லாமல் இன்று நிரம்பி வழிந்த உற்சாகக் குரலுடன், “ஹலோ சத்யன்.. .நீங்க கொஞ்சம் நம்ம எக்ஸ்கவேஷன் சைட்க்கு வர முடியுமா? ஐ வோன ஷேர் சம்திங் வித் யூ”என்று சொல்ல, அந்த விஷயம் ரொம்பவும் முக்கியமானது போலும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து போனது அவனுக்கு .
அதனால் மறுத்து ஏதும் பதில் சொல்லாமல், “ம்.. சரி” என்றவன், மனைவியிடம் சொல்லிக் கொண்டு விடைபெறுவதற்காக மீண்டும் அறைக்குள் வந்த போது.. அறையில் அவள் இல்லை.
‘எங்கே சென்றாள் இவள்?’ என்று யோசித்துக் கொண்டே, ஒரு ஊகத்துடன்.. அவன் சமையலறை நாடிச் சென்ற போது.. அவனது ஊகம் சரியே என்பது போல சமையலறையில் தான் இருந்தாள் அவள்.
அவளது முகம் போலவே கடுகடுவென்று பொறிந்து கொண்டிருந்தது எண்ணெய்த்தாழி.
அவளோ தனக்கு மட்டும் கேட்கக் கூடிய முணுமுணுத்த குரலில், “இவனுக்கு போய்.. யார்க்கும் சொல்லாத இரகசியத்தை சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சேன் பாரு.. என்னை சொல்லணும்..”என்ற வண்ணமே,
அருகில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த, வாழைப்பூ வடையை எண்ணெய்க்குள் இட்டாள் அவள்.
இந்த இளசுகள் இரண்டும் இடம், பொருள் பாராமல் ரொம்பவும் ஊடல் தீர்ந்து கூடிக் களிப்பதைக் கண்ட அண்ணாவும், அண்ணியும்.. அவர்களது விளைநிலத்தில் இருக்கும் வீட்டிலேயே கொஞ்சகாலமாகத் தங்கியிருப்பதும் கூட சத்யாதித்தனுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே போயிற்று.
வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்துடன்.. அமைதியாக திருடன் போல வந்து.. திடீரென்று பின்னேயிருந்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு.. அவளது ஒட்டமொத்த செல்லையும் பற்றியெரியச் செய்தான் அவன்.
அவளோ கோபத்துடன்.. அவனைத் தன்னிலிருந்தும் அகற்ற முனைய, இவனோ அதற்கு விடாமல் இன்னும் இன்னும் அணைத்த வண்ணம்,
“ஹேய் பொண்டாட்டி.. ஸாரி.. மூடேத்திட்டு தள்ளிப் போறது தப்பு தான்டி… இருந்தாலும் அர்ஜென்ட் வர்க்.. பிரபாகர் கூப்பிட்டிருக்கான்.. போய்.. வந்ததும் உன்னை துவைச்சு எடுத்துட்றேன்.. ரெடியாஹ் இரு”என்று காதோரம் கிசுகிசுத்தவன், அவள் மறுக்க மறுக்க அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடியே சென்றான் அவன்.
ஆனால் யௌவனாவுக்கோ.. தன் பூடக வார்த்தையை கூட உணர்ந்து கொள்ளாத கணவன்… என்ன கணவன்?? என்று எரிச்சல் எரிச்சலாக மிக,. சுட்டு வைத்திருந்த வாழைப்பூ வடையை எல்லாம்.. கொறித்துக் கொறித்துத் தின்னலானாள் ஓர் அணில்க்குஞ்சு போல.
****
ஆனால் அங்கே தேவதாவால்… எதுவுமே செய்யமுடியாத படி சிறை வைக்கப்பட்டிருந்த நந்தினிக்கோ.. யௌவனா சத்யனிடம் சொல்ல வந்த விஷயம் என்னவென்று புரிந்து போக, அவளது முழு உடம்பும் பற்றியெரியவாரம்பித்தது தகித்தது அவளுக்கு.
அவளில்லாத இந்த மூன்று மாதத்தில்.. சத்யாதித்தனின் குலம் தளைக்கப் போவதை அவள் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.
அந்த அடர்ந்த கானகத் தரையில் அமர்ந்திருந்தவள், அந்தப் பொறியின் சங்கிலி பிணைக்கப்பட்டிருந்த மராமரத்தின் தண்டினை ஓங்கி ஓங்கியடித்த வண்ணம், கதறிக் கதறி அழுதாள்.
“விடம்மாட்டேன்.. வ்விடவே மாட்டேஏஏன்.. நான் இருக்கும் போது அதற்கு விடவே மாட்டேன்!!!த்தேவ்வதாஆஆ..என் க்குலம் அழித்தவனின் குலம் தளைப்பதாஆஆ?? வ்விடவே மாட்டேன்.. ”என்று அவள் சங்கிலியை இழுத்து இழுத்து அழுதாள் அவள்
அந்தச் சங்கிலியை இழுத்துக் கொண்டே கடினப்பட்டு எழுந்தவள், வானத்தை அண்ணாந்து பார்த்தவளாக, “க்காளீஈஈ.. எனக்கு விடுதலை தாஆஆ.. உன் குழந்தைக்கு விடுதலை தாஆ.. இந்தச் சிறையிலிருந்தும் வ்விடுதலை த்தாஆஆ”.. என்று கத்திக் கொண்டே மன்றாட.. அவளது மன்றாட்டம் அந்நொடியே பலிக்கத்தான் செய்தது.
தம்பதிவனத்தின் உள்ளூர் மக்களே.. அண்ட அஞ்சும்.. அடர்ந்த ஆள் அண்டா கானகம் தன்னிலே, “ஹைக்கிங்”என்ற பெயரில்.. அந்த மலைகளையும், மலைசார்ந்த பிரதேசத்தையும் ஏறிக் கடக்க முயற்சித்து.. வெகுநாளாக பயணம் செய்து வந்திருந்தான் ஓர் வெள்ளைக்காரன்.
எந்த நாட்டைச் சேர்ந்தவனோ.. சுமார் ஆறரையடி உயரத்துக்கும் அதிகமான உயரத்தில்.. வெள்ளை வெளேரென்ற நிறத்தில் வாளிப்பான கை, கால்கள் கொண்டவனாக காணப்பட்ட.. அவனது பரந்த முதுகிலே ஒரு பாரிய பேக்.
கழுத்திலே, பள்ளி மாணவர்கள் போல.. ஒரு வாட்டிர் பாட்டில் தொங்கிக் கொண்டிருக்க, வலதுகையிலோ.. செல்பீ ஸ்டிக் சகிதம் ஓர் ஐ போன் என.. ஹைக்கிங் செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும் பக்காவாக வந்திறங்கினான் அவன்.
அவளைச் சூழ இருக்கும் நெருப்பு வளையம்.. அமானுஷ்ய சக்திகளின் கண்களுக்குத் தான் புரிந்ததே ஒழிய, இந்த மானுடப்பிறவிக்கு புரியாமல் போனது.
அது போக,நந்தினியின் சக்திகளை எல்லாம் அந்த நெருப்பு வளையம் ஈர்த்தெடுத்திருந்ததால்.. மானுடப்பிறவி கண்ணுக்கு.. இன்னோர் மானுடப்பிறவியாகவே தெரிந்தாள் அவள்.
தம்பதிவனக் காட்டின்.. உயர்ந்த நீர்வீழ்ச்சியான ‘கபானா நீர்வீழ்ச்சியின்” உச்சி மலைக்கு.. பல நாள் போராட்டத்தின் பின் ஏறி வந்த வெள்ளையனோ.. அங்கே இருந்த மராமரத்தில் கட்டுப்போடப்பட்ட நிலையில்.. ஓர் பெண் மயங்கிக் கிடப்பதைக் கண்டு முற்றிலும் பதறிப்போனான் அவன்.
ஓடிச்சென்று மயங்கிய மாதுவை மடியில் கிடத்தி, அவளது மதிமுகத்தை மறைத்த கூந்தலையெல்லாம் ஒதுக்கிப் பார்த்த போது.. அப்படியான ஓர் அழகை வாணாளில் கண்டிராதவன் விக்கித்துத் தான் நின்றான்.
மயக்கத்தில் இருக்கும் அவள் கன்னத்தைத் தட்டித் தட்டி எழ முயற்சித்தவனாக, “ஓஹ் லேடி..ஆர் யூ ஓல்ரைட்? ஹூ டிட் திஸ் டூ யூ?” என்று கேட்கக் கேட்க, வெள்ளையனின் மொழிகள், புரியவில்லையாயினும், அவன் மனதையும் இளக்கும் வண்ணம் ஈனக்குரலில், பொறியில் அகப்பட்ட காலினைக் காட்டி காட்டி அழுதாள் அவள்.
அவள் அழுத அழுகையில் வெள்ளையனுக்கும் இதயம் நொறுங்கிப் போ… அடுத்த நொடி.. சிறிதும் தாமதியாமல்.. அந்தப் பொறியின் இருமுனையை இழுத்துப் பிடித்து.. அவள் கால்களை வெளியேற்றி விட்டவன்,
“ஆர் யூ ஓகே?? டூ யூ வான்ட் சம் வாட்டர்..?”என்று தன் தண்ணீர் பாட்டிலைக் கழற்றியவன், அவளுக்கு தண்ணீர் பருக்குவிக்க நாட, பாட்டிலிலோ நீர் முற்று முழுதாக காலியாகியிருந்தது.
“வெயிட் ஹியர்.. என்ட் டோடோன் ட் மூவ்.. ஐல் பீ பி பேர் வித் சம் வாட்டர்” என்று இயன்றவரை சைகை மொழியையும் உபயோகப்படுத்தி உரையாடி விட்டுச் சென்றவன், கானகத்தில் தான் கண்ட அழகு மங்கைக்காக மீண்டும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த போது.. நந்தினி அங்கே இல்லை.
அவளை விடுவித்ததற்குச் சன்மானமாக.. அவளிருந்த அதே இடத்தில் பளபளக்கும் பெரிய வைரக்கல்லொன்று மாத்திரம் இருந்தது அங்கே.
*****
ஜீப்பில், பிரபாகரின் அகழ்வுப்பணியிடத்தைத் தேடி சென்று கொண்டிருந்தவனின் சிந்தனை முழுவதையும் கடன் வாங்கியிருந்தாள் அவனது அன்பு மனைவி.
இன்னும் அவன் சட்டையில்.. அவள் உபயோகிக்கும் பிரத்தியேக சவர்க்கார வாசனை.. ஒட்டிக் கொண்டேயிருப்பது போல இருக்க, சட்டைக்காலரைத் தூக்கி.. தன் மனைவி வாசனையைத் தன் நாசிக்குள் நிறைத்துக் கொண்டான் அவன்.
அண்மைக்காலமாக.. முன்னழகும், பின்னழகும் இன்னும் கொஞ்சம் புஷ்டியாகி.. அவன் சித்தத்தைப் பித்தங்கொள்ளச் செய்யும் மனைவியின் கொழுக்மொழுக் அழகில்… அவளைக் கண்ட இடத்தில் கட்டியணைத்து.. இடம், பொருள், ஏவல் பாராமல்.. என்ன என்னவெல்லாமோ செய்யச் சொல்லித் தூண்டுகிறது அவன் மனம்.
இதிலும் இன்றைய.. குழந்தைகள் பற்றிய அவளது பேச்செடுப்பை இப்போது நினைக்கும் போது.. மனைவி தனக்கொரு வாரிசையும் தர மனதளவில் தயாராகி விட்டாள் என்று பெருமையாக எண்ணியவனுக்கு,
அவள் உடலளவிலும் எப்போதோ தயார் என்பதை உணர்ந்து கொள்ள.. அந்த மரமண்டு மூளைக்கு சொற்ப கணங்களானது.
மனைவி எதற்காக இன்று குழந்தை பற்றிய பேச்செடுத்தாள்? என்று அவனுக்கு புரிந்து விட.. அந்த மலைக்காட்டு வளைவுப்பகுதியில் திரும்பப் போன அவனுடைய ஜீப்…சடன் பிரேக் போட்டு நின்றது.
அதற்குப் பின் வண்டி ஓரடி கூட நகர மறுக்க.. அவன் கண்களில் எல்லாம் மின்னல் வெட்டியது போல பளிச் பளிச்சென்று மலர்ந்தது. நெஞ்சமெல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அட் அ டைமில் பறந்தது போல கிளுகிளுப்பாக இருக்க,
தன்னுடைய வியாபாரப்பங்குதாரரான பிரபாகரிடம் செல்லும் யோசனையைக் கைவிட்டவனாக, வாய் கொள்ளா புன்னகையுடன் ஓர் “யூடர்ன்” அடித்தவன்… அசுரவேகத்தில் வீடு வந்து சேர…முயற்சிகள் எடுத்தான்.
கொஞ்சம் காலமாக மனைவியிடம் கூடிப்போயிருந்த கொழுக்மொழுக் அழகுக்கும், கூடல் பொழுதில் அவனையும் விஞ்சும் அளவுக்கு, ‘இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்’என்று அவளைத் தூண்டுபவள்.. அவனை விடவும் கூடலின் முடிவில் துவண்டு போவதற்கும் காரணமும் புரிந்தது அவனுக்கு.
முற்றத்திலேயே ஜீப்பினை தாறுமாறாக தரித்து விட்டு.. அவளை அள்ளி அணைத்து முத்தாடும் இதயத்துடன் ஓடி வந்தவன், சமையலறையிலேயே இருந்த தன் யௌவன மங்கையைப் பின்னிருந்தே தூக்கித் தட்டாமாலை சுற்றினான் அன்புக்கணவனாக.
இவளோ திருடனோ என்று ஐயுற்று தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு, கத்தப் போன சமயம், காதோரம் சந்தோஷக் கிசுகிசுப்புடன்,
“அடிக்கள்ளீஈஈ.. .. உன் புருஷனை என்ன மாங்காமடையன்னு நினைச்சீக்கிட்டீயா..?”என்றதும் தான், வந்திருப்பது அவளது இதயத்திருடன் என்று சற்றே ஆசுவாசமானாள் அவள்.
கணவனைத் திட்டவென்று உச்சபட்ச கோபத்துடன் அவள் திரும்பித் திட்டப் போன வேளை.. அவளை அதற்கு விடாமல்.. தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் சாய்த்து, அவள் நெற்றி, மூக்கு, கன்னம், காது, கண் என்று வதனத்தில் ஓரிடம் விடாமல் காதல் மிகுதியாகி முத்தாடியவன்,
அவளை நோக்கிக் கெஞ்சும் குரலில், அவளிரு கன்னம் ஏந்தியவனாக, “எத்தனை நாள் சொல்லு..? கமான் எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு? ப்ளீஸ் சொல்லு?”என்று கிட்டத்தட்ட மன்றாட,
அவனைத் தன்னிலிருந்தும் தள்ளிவிட்டவள் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு பிகு பண்ணும் தோரணையில், “ம்ஹூஹூம் முடியாது.. சொல்ல மாட்டேன்.. நான் ஆசையா என்ன குழந்தை வேணும்னு கேட்கிறேன்.. ஆனால் நீ.. அதை கணக்கெடுக்காமல்..உன் பார்ட்னர் பிரபாகரைத் தேடிப் போனேல்ல?? போ.. போய்.. அந்த பிரபாகர் கிட்டயே கேளு.. எத்தனை நாள்னு..?”என்று சொல்ல, இவனுக்கோ மனைவியின் பேச்சில் அவஸ்தையாக இருந்த போதிலும்.. சிரிப்புத் தான் வந்தது.
மனைவியை மலையிறக்கும் வழிவகையறியாது, “சாரிடீ பொண்டாட்டி.. தப்பு தான்.. ப்ளீஸ்.. சொல்லேன்”என்று அவன் இறைஞ்ச,
இவள் வேண்டுமென்றே போனால் போகிறது என்ற தோரணையில், “அப்போ.. பத்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கேளு.. சொல்றேன்..”என்று சொல்ல, ஆண்கர்வம் துளி கூட இன்றி, அடுத்த கணம் இரு காதுகளையும் கைமாற்றிப் பிடித்துக் கொண்டு குந்திக் குந்தி எழலானான் மனைவியின் சந்தோஷத்துக்காக.
தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே, “ஹேய் பொண்டாட்டி.. நீ ஒரு மேட்டர் சொல்ல வரும் போது அப்படி பாதியில் போனது தப்பு தான்.. எனக்கு அந்த பார்ட்னர் வேணாம்.. என்னோட வன் என்ட் ஒன்லி லைப் பார்ட்னர்… நீ தான் வேணும்.. இனி எப்போவும் அப்படி பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் சொல்லு..”என்று அன்பில் கெஞ்ச அவள் இதயம் அவன் பால் இளகியது.
தன்னையே குறுகுறுவென பார்க்கும் கணவனைக் கண்டதும் கன்னக்கதுப்புக்கள் இரண்டும் சிவந்து அடங்க, அவனை நாடிப் போய்.. ஒட்டி நின்று, அவன் சட்டை பட்டனைத் திருகியவளாக, ஹஸ்கி குரலில் ,
“ இரண்டு மாசம்.. பத்து நாள்.. இப்போ உங்க பொண்ணு இத்தணூண்டு இருப்பா” என்று தன் விரலினால் சிசுவின் அளவைக் காட்ட, அவனுள் நாடி, நரம்பெங்கும் புது இரத்தம் பாய்வது போல இருந்தது.
அவளது இடையில் கையிட்டு தன்னை நோக்கி சேர்த்து அணைத்தவன், ஆனந்தக்கண்ணீர் சின்னதாக துளிர்க்க, சிரிப்புடன், “ஹேய்.. அப்போ கன்பார்ம் தானா? .. நான் அப்பாவாகிட்டேனா? .. இந்த சத்யாதித்தன் அப்பாவாகிட்டானா?..”என்று கேட்க, அவள் கழுத்தில் மாலை போல கைகோர்த்துக் கொண்டு, “ம்” என்றாள் அவள்.
இந்த நற்செய்தி.. அவன் பட்ட பல அவஸ்தைகளின் பின் கேட்டதாலோ என்னவோ… அவனை வானத்துக்கும், பூமிக்குமாக துள்ளிக்குதிக்கச் செய்தது அவனை.
தேவாதவோ.. அந்த இனிய செய்தில் அகமகிழ்வதா? மனைவியின் விடுதலையில்… களேபரம் அடைவதா? என்று புரியாமல் இரு மனநிலைகளுடன் நின்றிருந்தான்.
Super sis
ymaSHGnFjehlT
nuLgZrPGN