ATM Tamil Romantic Novels

16 – ஆடி அசைந்து வரும் தென்றல்

16 – ஆடி அசைந்து வரும் தென்றல்



லூசு.. பொறுப்பே கிடையாது.. இவளை வச்சு மேய்க்க முடியல…“ தேவர்ஷியை திட்டியவன்… அதை தன் சேப்டி லாக்கரில் பத்திரப்டுத்தினான்.

 

அடுத்த இரண்டு நாட்களில் தனது அறையிலேயே அவளுக்கு தனி கேபின் போட்டான்.

 

தேவர்ஷியை அழைத்து… கேபினை காட்டி “இந்த கேபின் உனக்கு தான்.. பிடிச்சிருக்கா.. என் கூடவே இருந்து வேலை செய்வ.. “ தன் கூடவே நாள் முழுவதும் இருப்பதில் சந்தோஷப்படுவாள் என எதிர்பார்ப்பபோடு அனிவர்த் கேட்க…

 

“ போங்க.. போங்க.. இந்த கேபின் ஒன்னும் எனக்கு வேணாம்… எனக்கு அந்த கேபின் தான் பிடிச்சிருக்கு.. நான் இங்க வரமாட்டேன்”

 

அனிவர்த்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. சடுக்கென மனம் சுணங்க…

 

“ஏண்டி… என் கூட இருக்கப் பிடிக்கலையா..” சிறு கோபத்துடன் கேட்டான்.

 

அவன் முகத்தை பார்த்தவளுக்கு அவனின் கோபம் புரிய… அவள் பார்த்தும் அவனோ முகத்தை திருப்பிக் கொள்ள… அவனை நெருங்கி உரசி நின்று.. அவனின் மார்பில் பார்வையை பதித்து.. அவனின் சட்டையை இடது கையால் பிடித்து இழுத்து…. வலது கையால் பட்டனை  திருகி கொண்டே..

 

“எனக்கு அந்த கேபின் செட்டாயிடுச்சு.. என் அணில் அங்க நான் இல்லைனா ஏமாந்து போயிடும்… அணில் பாவம் தான…”

 

தேவர்ஷியின் இந்த செயல் அவனுக்கு பிடித்திருந்தது. வந்த சிறு கோபம் கூட கரைந்துவிட… அவன் பார்த்த பெண்கள் எல்லாம் இவளை போல மனதை வளைக்கவில்லை. 

 

‘இவளை வச்சுகிட்டு… அணில் பாவமாம்.. மனுசனோட கஷ்டம் புரியாம..’ 

 

அவன் ஒன்றும் பேசாமல்இருக்க… நிமிர்ந்து அவன் முகத்தை பார்ததாள். அவனும் இவளையே பார்க்க.. அதில் இளக்கம் இல்லாமல் இருக்க… எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.அனிவர்த் சிரித்துவிட்டான். ‘நல்லா ஆள மயக்கறா..’

 

“இந்த கேபின பாரு.. ஜன்னல் ஓரம் தான் போட்டு இருக்கேன். இங்கயும் உன்அணில் வரும்டி..”

 

“நிஜமா வருமா..”

 

“இங்கயும் சாக்லேட் வை.. அங்க உன்னை காணாம தேடிகிட்டு இங்க வந்திடும்…”

 

“டூ டேஸ் பார்ப்பேன்.. இங்க வரலைனா நான் அங்கயே போயிடுவேன்..” சுட்டு விரலை நீட்டி மிரட்டலாக பேசினாள்.

 

அவளின் விரலை பிடித்து மெல்ல கடித்து…”என்ன மிரட்டலா..” என உல்லாசமாக சிரிக்க…

 

“வலிக்குது வர்தா..” சிணுங்கினாள்.

 

அவளின் விரலை பிடித்து ஊப்.. ஊப்..என ஊதி.. விரலில் தன் மீசையை வைத்து உரச… குறுகுறுப்பு  தாங்காமல் அவள் விரலை இழுக்க…  இப்போ விரலை விட்டுட்டு கன்னத்தில் மீசையை உரச… கூச்சம் தாளாமல் அவனை பிடித்து தள்ளினாள். அவளை கையை பிடித்து இழுக்க.. மேலே வந்து மோதியவளை அணைத்து  இதழ் அமுதம் பருகிட.. அவன் கைகளோ சற்று அத்துமீறி.. அவள் உடலை அளக்க… தேவர்ஷி மயங்கி கிறங்கி போய் நின்றாள்.

 

சில நிமிடங்களில் அவளை விடுவித்தவன் கலைந்திருந்த அவள் தலைமுடிகளை கோதி ஒதுக்கி… 

 

“போ.. உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வா..”என்றான் மிருதுவாக…

 

தனது பொருட்களோடு அனிவர்த் அறைக்கு வந்ததும் முதல் வேலையாக ஜன்னலை திறந்து வைத்து ஒரு சாக்லேட் துண்டை வைத்தாள்.

 

அவள் ஜன்னல் திறந்தே வைக்க.. ஏசியை அணைத்து வைக்க வேண்டியதாகி போனது.  சில நிமிடங்களுக்கு ஒரு தடவை அணில் வருகிறதா.. என அவள் பார்க்க.. அனிவர்த அவளையும்  ஜன்னலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை.

 

அதற்குள் ஆபிஸ் முழுவதும் அனிவர்த் தனது  அறையில் தேவர்ஷிக்கு கேபின் போட்டு கூடவே வைத்திருப்பதாக அரசல் புரசலாக பரவி.. பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டிருந்தது.

 

மதியம் வரை அணில் வராமல் போக… அனிவர்த்திடம் தொண தொணக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

“பாருங்க அணில் வரல..”

 

“வரும்.. புது இடம்ல தேடி வரும் வெயிட் பண்ணு..”

 

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“இன்னுமே வரல.. நான் அங்கயே போறேன்..”

 

அனிவர்த்தால் தேவர்ஷியை சமாளிக்க முடியவில்லை. எரிச்சலாக வந்தது,

 

“சும்மா நை நைனு நச்சு பண்ணாம வேலையை பாரு.. அது வரும் போது வரட்டும்” கோபமாக திட்டி விட…

 

“என்னை ஏமாத்தி இங்க கூட்டிட்டு வந்திட்டு இப்ப திட்டறிங்க..” ஓவென அழுக..

 

அனிவர்த் பயந்து போனான். ‘ இவள் அழுவதை யாராவது பார்த்தா.. நான் தான் சின்னபுள்ளையை ஏதாவது பண்ணிட்டேனு நினைக்கமாட்டாங்க..’

 

அவசர அவசரமாக எழுந்து அவளருகே வந்தவன் அவளை கை பிடித்து எழுப்பி.. கண்களை துடைத்து..

 

“அழுகாதடா.. வர்ஷிம்மா… நான் என்ன சொல்லிட்டேனு.. இப்படி அழுகற… அணில் வரும்டா.. உன்னை காணோம்னு தேடி பார்க்கும் நாளைக்குள்ள வந்திடும் குட்டிம்மா.. “ என சமாதானம் செய்தவன் ஏதேட்சையாக ஜன்னல் பக்கம் திரும்பி பார்க்க..அங்கு அணில் சத்தமில்லாமல சாக்லேட்டை கொறித்து கொண்டிருந்தது.

 

“டேய்.. அங்க பாரு..” என அவள் தோளை தட்டி காண்பித்தான்.

 

“ஹேய்..ய்…ய்.. அணில் வந்திடுச்சு…” என கை தட்டி குதூகலிக்க.. அனிவர்த் ஒரு பெருமூச்சை  இழுத்து விட்டவாறு.. ‘நல்ல வேளை  அணில் வந்திடுச்சு.. இல்ல இவ பேசியே என்னை ஒருவழியாக்கி இருப்பா..’ என நினைத்தான்.

 

தினமும் அனிவர்த்துக்கு தேவர்ஷியோடு  கெஞ்சலும் கொஞ்சலுமாகவே சென்றது. முன் தினம் அணில் சாக்லேட்டு தின்றுவிட்டு அனிவர்த் சேர் அருகே சில துகள்களை சிதற விட்டு சென்றிருக்க… அதற்கு வந்த எறும்புகள் சேரிலும் சேரை சுற்றிலும் ஊர.. அடுத்த நாள்  காலையில அது தெரியாமல் அனிவர்த் வந்த அமர.. சிறிது நேரத்தில் அவனை மொத்தமாக பதம் பார்த்துவிட்டது.

 

துள்ளி கொண்டு எழுந்தவன் “ஐயோ.. கடிக்குதே..” என அலறி… சட்டை பேண்ட் என எல்லாத்தையும் அவசர அவசரமாக கழட்டி எறிந்தான். அவனின் அலறலில் தேவர்ஷி அவனருகே ஓடினாள். இன்னர்ஸோடு அவனை பார்க்கவும் வெட்கம் மேலிட..  அவசரமாக கைகள் கொண்டு முகத்தை மூடி கொண்டாள்.

 

வேகமாக தனது பெர்ஷனல் அறைக்குள் புகுந்து கொண்டான் அனிவர்த்.உள் பனியனையும் கழட்டி எறிந்தவன்.. முதுகிலும் சில எறும்புகள் இருக்க… அவனால் தட்டி விட கைகளுக்கு எட்டவில்லை.

 

“வர்ஷி..” என கத்தினான். 

 

அவனின் கத்தலில் பயந்து போய் வந்தவள் அவன் மினி டிரங்கோடு நிற்பதை கண்டு இப்பவும் வெட்கத்தில் திரும்பி நின்று கொண்டாள்.

 

“என்னபண்ற.. முதுகுல எறும்பு இருக்குது பாரு தட்டி விடு..” முதுகில் கைகளை துழாவியவாறு…  அவனின் நிலை உணர்ந்து அவசரமாக  அவனருகே சென்று தட்டிவிட்டாள். வெற்று முதுகில் அவளின் சில்லிட்ட கைகள் படவும் அவன் உணர்வுகள் சிலிர்த்துக் கொண்டது. 

 

அவனின் முதுகில் எறும்புகள் கடித்திருந்த இடத்தில் எல்லாம் சிவந்து தடித்திருக்க… ஓடிப் போய் தனது பேகில்  இருந்து மாய்சரைஸரை எடுத்து வந்து அவன் முதுகில் சிவந்திருந்த இடங்களில் பூச… கண்களில் மையல் கொண்டு காற்றில் மிதந்தான். முன்னால் திரும்பி மார்ப்பை காண்பித்தான். ரோமங்களின்றி மொழு மொழுவென்று இருந்த மார்ப்பில் எறும்பு கடித்த தடயங்கள் இருக்க… அதையும் காண்பிக்க…. அவளோ ரொம்ப கவனமாக கீரிமை தடவ.. இவனோ அவளின் விரல்நுனிகள் துளி துளியாக தன்னுள் கடத்தும் உணர்வுகளில் கண் மூடி லயித்திருந்தான்.

 

எல்லாம் தடவி முடித்தவள் நிமிர்நது அவனை பார்க்க.. அவனோ கண்ணை மூடி பரவசத்தில் இருக்க… புரியாமல்…

 

“வர்தா..” நெஞ்சில் சுரண்ட…

 

அப்படியே அவள் விரல்களை பிடித்த தன் நெஞ்சில் தேய்க்க.. அவளின் உள்ளங்கையில் குறுகுறுக்க.. கைகளை உருவ முயல.. அவன் இழுத்து பிடித்தான். இவள் உருவ… அவன் இழுக்க… ஒரே இழு..பறி… விளையாட்டாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவளோடு மல்லு கட்ட முடியாமல்…

 

“சும்மா தான் நில்லேன்டி..” அவளை இழுத்து அணைத்து… மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரம் அப்படியே இருக்க.. 

 

“வர்தா.. வலிக்குது விடறியா..”

 

கண்களை திறந்து பாரத்தவன்…முகம் சுணங்கி நின்றவளை கண்டு ’மனுசனோட் பீலிங்ஸ் புரியுதா பாரு.. இருடி உன்னை…’ குனிந்து அவள் இதழ்களை வலிக்க கடித்து சுவைக்க… வலியை மீறிய சுகம் மேவிட… தேவர்ஷியும் அனிவர்த்தை இறுக்கி அணைத்தாள். அவளின் ஒத்துழைப்பு அவனுக்கு முன்னேறும் துணிச்சலை கொடுக்க… அவளை அள்ளி கொண்டு அங்கிருந்த சோபாவில் கிடத்தி மேலே படர்ந்தான். மினி டிரங் மட்டுமே இருந்த அவன் வெற்று உடம்பை கண்கள் விரிய பார்க்க.

 

“என்னடி என் அழகுல மயங்கிட்டயா..”

 

“ம்க்குக்கும்..”  உதட்டை சுழித்தாள்.

 

சுழித்த உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்து சுண்டிவிட்டான்.

 

“ஸ்ஸா… “ உதட்டை மடித்து நாவால் நீவ…

 

“ஏய்.. நிறுத்து.. அது என் வேலைடி..”என  தன் நுனி நாக்கால் ஒத்தடம் கொடுக்க… அவனுக்கு வசதியாக லேசாக உதட்டை பிதுக்கி காண்பித்தாள். அவனின் நாக்கின் குளிர்ச்சி… அவளுள் வெம்மையை கடத்த… அவனை இழுத்து தன மேல் போட்டுக் கொண்டாள். 

 

அவளை இறுக்கி அணைத்து முகம் எங்கும் தன் உதடால் மெல்லிறகாக வருட.. அவளோ தகிக்க… மெல்ல முகத்திலிருந்து கழுத்து வரை வருடி கொண்டே வந்தவனுக்கு அதற்கு கீழே இறங்க.. அவளின் குர்தி தடையாக் இருக்க… தயக்கமே இல்லாமல்… அவளின் அனுமதி எல்லாம் கேட்காமல்.. உரிமையாக அதனை கழட்ட முயல….

 

“சார்… சார..” என்ற குரல் தடையாக வர…

 

“ச்சை..” என விலகியவன்… 

 

“நான் சொல்லும்  போது வா..” அவளிடம் கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு.. எப்பவும் வைத்திருக்கும்  ஒரு செட் டிரஸ்ஸை வேகமாக அணிந்து கொண்டு வெளியில் வந்தான்.

 

அங்கு சுந்தர் தான் நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையோ அறையை சுற்றி நோட்டம் இட்டு கொண்டிருந்தது.

 

“என்ன சுந்தர்..”

 

“இல்ல சார்.. இந்த வவுச்சர்ஸ்லாம் செக் பண்ணிட்டிங்கனா.. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்கு அனுப்பிடுவேன்..”

 

“வச்சிட்டு போங்க..” 

 

பைலை வைத்து விட்டு போகாமல் சுற்றி சுற்றி பார்க்க…

 

“என்ன சுந்தர்..” அதட்டலாக அனிவர்த் கேட்க..

 

“தேவர்ஷியை காணோம்.. அதான் பார்த்தேன்…”

 

“ஏன் அவங்க எங்க போறதுனாலும் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கனுமா..”

 

“நோ சார்.. அப்படி எல்லாம் இல்லை..”

 

“உங்க வேலை என்னவோ.. அத மட்டும் பாருங்க..” என மிரட்டி அனுப்பி வைத்தான்.

 

அவன் சென்றதும் உள்ளே வந்தவன்…. “வர்ஷிமா..” என அழைக்க.. அவனை பார்த்ததும் எழுந்து நின்றவளை இழுத்து அணைத்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி பார்வையோடு பார்வையை கலக்க விட்டு..

 

“வர்ஷிமா.. நாம இரண்டு பேரும் ஒரு டூடேஸ் எங்கயாவது ஒரு டிரிப் போகலாமா..”

 

அவன் கண்களின் வசியத்தில் மயங்கி அவள் தலை சம்மதமாக சரி என ஆடியது..

 

2 thoughts on “16 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top