17 – ஆடிஅசைந்து வரும் தென்றல்
அனிவர்த் டிரிப் போகலாமா என கேட்டதும்…தேவர்ஷி சம்மதம் சொல்லிவிட்டாள். அனிவர்த் மகிழ்ந்து போய் அவளை இழுத்து அணைத்து முகம் எங்கும் குட்டி குட்டி முத்தங்கள் வைத்தான்.
அடுத்தநாள் வேலைக்கு வந்த தேவர்ஷி முகமே வாடியிருக்க…அனிவர்த்தும் கவனித்தான். ஆனால் அவளிடம் கேட்க முடியாமல் அவனுக்கு பிசினஸ் கால் அதன் சம்மந்தமான டீலிங் என வேலை நெட்டித் தள்ள… மதிய உணவிற்கு பிறகு தான் சற்று ஓய்வு கிடைக்க…
“வர்ஷி.. இங்க வா..”
முகத்தை தொங்கப் போட்டு கொண்டே வந்து நின்றாள்.
“என்ன ஆச்சு.. ஏன்இப்படி இருக்க…”
“ம்ம்ம்… வீட்ல ட்ரிப் போக வேண்டாம் சொல்லிட்டாங்க…”
கேட்ட் அனிவர்த்துக்கு ‘லூசு.. இதை எல்லாமா வீட்ல கேட்பாங்க.. இவ தான முடிவு பண்ணனும்..’ என கோபம் கொண்டான்.
“வீட்ல என்னனு கேட்ட…” என்றான் எரிச்சலாக…
தேவர்ஷி இரவு தந்தை வந்ததும் தந்தையிடம்…
“ப்பா.. நான் என் எம்டி கூட இரண்டு நாள் பிசினஸ் ட்ரிப் போகனும்… போயிட்டு வரவா..”
“அது எல்லாம் வேண்டாம் பாப்பா.. ஆபிஸ்ல இருந்தே வேலை செய்யற மாதிரி பார்த்துக்கோ… இப்படி எல்லாம் போகனும்னா.. அந்த வேலையே வேண்டாம்..” என் திருகுமரன் சொல்ல…
“ப்ளீஸ்பா.. நான் வரேனு சொல்லிட்டனே… ப்ளீஸ் பா..” என கொஞ்சலாக கெஞ்சினாள்.
“இல்ல பாப்பா… இது எல்லாம் உங்க தாத்தாவிற்கு பிடிக்காது..”
“இதை கூட அவர்கிட்ட கேட்கனுமா..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“எல்லாமே அவரை கேட்டு செய்வது தானே வழக்கம்.. அதை எப்படி விடமுடியும்… அவர் உன்னை வேலைக்கு அனுப்பும் போதே என்ன சொன்னாரு.. பார்த்தில்ல.. இதை எல்லாம் அவர்கிட்ட கேட்க முடியாது.. எனக்கே இஷ்டமில்ல பாப்பா..” என்றதும் தாயை பார்க்க…
“அப்பா சொல்றது சரி தான் பாப்பா.. அப்ப சொல்லற மாதிரி வெளியூர்லாம் போய் தான் வேலை செய்யனும்னா.. வேலையே வேண்டாம் ஜாலியா வீட்லயே இரு…” கௌசல்யாவும் சொல்லிவிட.. தேவர்ஷியால் எதுவும் பேச முடியவில்லை.
‘நல்ல வேளை இந்த பிரவீன் இல்லை. தப்பிச்சோம்..’ என நிம்மதி பெருமூச்சு விட்டாள். இருந்தாலும் அனிவர்த் கூட போக முடியாதா.. என்ற கவலையும் இருந்தது. அனிவர்த்திடம் வரேனு சொல்லியாச்சு.. இப்ப என்ன பண்றது என தெரியாமல் முழித்தாள். அவனிடம் எப்படி சொல்வது.. அவனுடன் போக முடியாது என நினைத்ததும் மனம் சோர்ந்து போனது.
அதை அனிவர்த்திடம் இப்போது சொல்ல.. அவனுக்கு கோபம்..
“வர்ஷி.. நீ மேஜர்.. படிச்சு முடிச்சு சம்பாதிக்கற… உன் லைப்ல எதைனாலும் நீ தான் முடிவு பண்ணனும். அப்பா சொன்னாங்க.. அம்மா சொன்னாங்கனு சொல்லறது எல்லாம் நாட் ஃபேர்…” என கோபமாக பேச…
தேவர்ஷி கைகளை பிசைந்து கொண்டு பாவமாக நின்றாள்.
“முடிவா என்ன தான் சொல்லற.. வரியா… இல்லையா…” சத்தம் போட..
பயந்து போய்.. “வரேன்.. கண்டிப்பா வரேன்..” சொல்லிவிட்டு.. இன்னும் கோபமாக ஏதாவது பேசிவிடுவானோ என பயந்து தனது இடத்திற்கு சென்றுவிட்டாள்.
அவள் வருகிறேன் சொன்னதிலேயே அவன் கோபம் சற்று தணிந்திருந்த போதும்.. முழுவதும் தீரவில்லை. முகத்தில் மிளகாயை அரைத்து பூசியது போல தான் இருந்தான். அவளிடம் சரியாக பேச கூட இல்லை.
தேவர்ஷி அவன் அப்படி இருப்பதை பார்த்து பார்த்து மேலும் சோர்ந்து போனாள்.அவனை எப்படியாவது சமாதானம் செய்து விட எண்ணி.. இத்தனை நாள் செய்யாத வேலை எல்லாம் இழுத்துப் போட்டு செய்தாள். அதில் சந்தேகம் கேட்க.. முடித்து அவனிடம் ஒப்புதல் வாங்க.. அவனிடம் சென்று அதிகம் பேச்சு கொடுத்தாள்.
அவனோ ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்து கொள்ள… தேவர்ஷிக்கு கடுப்பாக வந்தது.
“ஓரங்குட்டான்.. ரெட்சில்லி.. என்ன செய்தாலும் பேசாம இருந்து கடுப்படிக்கிறான்…நான் தான் வரேன் சொல்லிட்டன்ல.. இன்னும் என்னவாம்.. போடா ..”
அமைதியாக இருந்த அந்த ஏசி அறையில் அவள் திட்டியது தெளிவாக கேட்கவில்லை என்றாலும்.. ஏதோ தன்னை திட்டுகிறாள் என தெரிந்தது அனிவர்த்கு…
“என்ன.. என்னை திட்டிட்டு இருக்கறியா…” என தனது இடத்தில் இருந்தே கொஞ்சம் சத்தமாக கேட்டான்.
“ஆஹாங்.. திட்டிட்டாலும்..” என முணுமுணுத்து விட்டு சத்தமாக இவளும்..”இல்லயே.. அப்படி எல்லாம் இல்லையை..”. என்றாள் பல்லை கடித்து..
“பேசாம வேலையை பாரு…” அதட்டலாக..
அப்படியே மாலை வரை செல்ல… அவள் கிளம்பவேண்டும். அவனிடம் சமரசம் ஆகாமல் செல்ல முடியவில்லை அவளால்.. அவனை பார்ப்பதும் தன் பொருட்களை எடுத்து வைப்பதுமாக இருந்தாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தன்வேலையில் முழ்கி போயிருந்தான். எல்லாம் எடுத்து வைத்தாகிற்று. என்ன செய்ய.. அவனிடம் மெல்ல சென்றாள். அவனருகே எதுவும் பேசாமல் போய் நின்றாள். அப்படியாவது பார்ப்பானா என…
அவள் வந்தது தெரிந்தும் சிறிதும் கண்டு கொள்ளவில்லை அவன். அப்போது அதன் கர்மசிரத்தையாக சிஸ்டத்தில் தன்னை புதைத்தை கொண்டான். முகம் வாடினாள். அவனை நெருங்கி.. அவனின் தோள்பட்டையை இரண்டு விரல்களால் சுரண்டினாள்.
“வர்தா.. வர்தா…”
சிஸ்டத்தில் இருந்து பார்வையை எடுக்காமலேயே…
“ப்ச்ச.. என்ன..” சலித்து கொண்டான்.
முணுக்கென கண்களில் நீர் கரை கட்ட..
“நான் கிளம்பட்டுமா..”
இப்போதும் அவளை பார்க்காமல்…
“டைம் ஆனா கிளம்ப வேண்டியது தான.. என்கிட்ட எதுக்கு கேட்கற..”
கண்களில் தளும்பி நின்ற நீர் கன்னங்களில வழிந்தோட… தளர்ந்த நடையுடன் திரும்பி செல்ல..
அவனுக்கே அவளை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிவிட… பின்னால் இருந்து அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு சுழண்டவாறு அவனின் மடியில் வந்து விழுந்தாள்.
விழுந்தவளை தூக்கி நன்றாக தன் மடியில் இருத்தி கொண்டு இடையோடு அவள் கைகளை கோர்த்து அவள் தோள் வளைவில் தன் முத்தை தாங்கி..
“என்னடாம்மா..”
“நான் வரேன் சொல்லிட்டன்ல…. அப்புறமும் இப்படி இருந்தா..” முகம் சுணங்கினாள்.
“பின்ன என்ன.. நேத்து ஓகே சொல்லிட்டு இன்னைக்கு வந்து வீட்ல வேணாங்கறாங்க அப்படினா எனக்கு கோபம் வராதா… இது எல்லாமா வீட்ல கேட்பாங்க.. நீ படிச்ச பொண்ணு.. உன் வயசுக்கு எவ்வளவு… அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இருக்கனும்… உன் லைப் நீ தான் டிசைட் பண்ணனும்.. என் லைப் எப்படி இருக்கனும் இன்னைக்கு வரைக்கும் என் முடிவு தான்..”
காதோர சுருளை ஒதுக்கி விட்டு.. மென்மையாக பேச… அவள் சற்றே திரும்பி அவன் முகத்தை பார்த்து..
“எங்க வீட்டில் கொஞ்சம் சட்ட திட்டங்கள் அதிகம்..எல்லாம் என் தாத்தாவை கேட்டு தான் செய்யனும் அதான்..”
அனிவர்த் எரிச்சலாக அவளை பார்க்க… வேக வேகமாக…
“வீட்ல சொன்னது தான் சொன்னேன்.. என் முடிவுனு சொன்னேனா… நான் வீட்ல ஏதாவது சொல்லிட்டு வரேன்…. ஆனா இரண்டு நாள் தான் ஓகேவா..”
அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“என்னடி குழந்தை முத்தம் கொடுக்கற… இப்படியா பாய் ப்ரண்டுக்கு முத்தம் வைப்பாங்க.. எப்படினு நான் சொல்லி தரேன்”
அவள் இதழை இழுத்து சுவைக்க… அவளின் இதழ்ரசம் கள்ளுண்ட மயக்கத்தில் இருந்தவன்.. சில நிமிடங்களில் அவளை விட்டு விலக..
காதல் மயக்கத்தில் இருந்தவள் விலகல் பிடிக்காமல் அவனின் கழுத்தை வளைக்க.. அவளின் செயல் அவன் மனதையும் வளைக்க…
“வர்ஷிமா…நேரமாகுது கிளம்பு..” என எழுப்பி நிற்க வைத்தான்.
பருவத்திற்கேற்ற பக்குவமில்லாத பெண் தானே.. காலை தரையில் உதைத்து…
“பை பை “ என சிணுங்கலாக சொல்லி கிளம்பிவிட்டாள்.
‘இவ மனசு எப்ப வேணாலும் மாறிடும்.. இந்த வீக் எண்ட்லயே அரேஞ்ச் பண்ணிடனும்’ என எங்க.. எப்படி .. யோசிக்க ஆரம்பித்தான்.
‘சிம்லா.. போலாமா.. வேண்டாம் இரண்டு நாள் பத்தாது..”
‘ஊட்டி இல்லை கொடைக்கானல் போலாமா… ச்சே வழக்கமா போற இடம்.. வேண்டாம் இவளோடு போறது சம்மதிங் ஸ்பெஷல்..எங்கு எங்கு’ என யோசித்தான்.
இறுதியாக பொன்முடி போகலாம் என முடிவு செய்து.. உடனே ஆன் லைனில் ஒரு ரிசார்ட் புக் செய்தான். அடுத்தநாள் வந்த தேவர்ஷியிடமும் சொல்லவிட்டான்.
“வர்ஷி… இந்த வீக. எண்ட் பொன்முடி போறோம்..”
“இந்த வீக்கேவா…” தயக்கத்துடன் இழுத்தாள்.
உடனே அவளை முறைத்தான் அனிவர்த். அவன் முறைப்பை கண்டு… அவனின் தாடையை பிடித்து கொஞ்சலாக…
“உடனே கோவிச்சிக்காத வர்தா… நானே என்ன சொல்லிட்டு வரதுனு குழம்பி போய் இருக்கேன..”
அதற்கும் அவளை முறைக்க… “சரி… சரி… என் லைப் நான் தான் டிசைட் பண்ணனும் அப்படி தானே…நானே முடிவு பண்றேன் சரியா…” அவனை சமாளித்தாள்.
“இங்க பாரு வர்ஷி… சேட்ர்டே மார்னிங் செவன்கு ப்ளைட்… ஒன்ஹவர் முன்னாடியே கிளம்பனும்..நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..”
‘அச்சோ காரியம் கெட்டுச்சு..’ என நினைத்தவள்… அவசர அவசரமாக மறுத்தாள்.
“இல்லை..இல்லை.. நானே வந்திடறேன்”
அனிவர்த் “ஏன் நான் வந்தா என்ன…”
“இல்லை உங்களுக்கு வீண்அலைச்சல்..ஹிஹி..” சிரித்து சமாளித்தாள்.
“என்ன அலைச்சல் உன்னை பிக்கப் பண்ணிகிட்டா.. எனக்கு டென்ஷன் இல்லை..” என்றவனை ஏதோ சொல்லி சரி கட்டினாள்.
இரண்டு நாள் என்ன சொல்லி எப்படி வீட்டில் சம்மதம் வாங்குவது என மண்டையை உருட்டி… செயல்படாத மூளையை கசக்கி… ஒரு வழி கண்டுபிடித்துவிட்டாள்.அதை செயல்படுத்தனும..சரியாக நடக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டு.. செயல்படுத்தினாள்.
கௌசல்யாவின் சித்தி ஒருவர் கணவரை இழந்து குழந்தைகளின்றி தனியாக கிராமத்தில் இருக்கிறார். எந்த நவீன வசதிகள் இன்றி எளிமையாக வாழும் கிராமத்து மனிதர்கள் வாழும் ஊர். எப்பாவது கௌசல்யா சென்று வருவார். தேவர்ஷி இரண்டு ஒரு தடவை உடன் சென்றவளுக்கு பாட்டியும் பசுமையான ஊரும் பிடித்து போக.. ஒரு இரண்டு தடவை தாத்தாவின் திட்டுக்களை மீறி தனது அப்பாவிடம் பிடிவாதம் பண்ணி தனியாகவே சென்று வந்திருக்கிறாள். இப்போதும் அதையே சொல்லி பிடிவாதமாக.. சம்மதம் வாங்கினாள்.
சனிக்கிழமை காலை கிளம்பும் போது.. இவளை பஸ் ஏற்றி விட்டு வருமாறு திருகுமரன் பிரவீனிடம் சொல்ல.. ‘அச்சோ கெட்டுது போ..’ மனதில் அலறியவள்…
“இல்லப்பா.. நான் ஆட்டோவில் போய் கொள்கிறேன்..”
“ஏன் நான் உன்னை அனுப்பிட்டு காலேஜ் போறேன் வா..” என அழைத்தான் பிரவீன்.
“இல்ல நான் இவன் கூட போகமாட்டேன். இவன் போற வழி எல்லாம் திட்டிகிட்டே கூட்டிட்டு போவான்” இன்ஸ்டண்டா.. கண்ணீரை வரவழைத்து டிராமா பண்ணினாள்.
“ஆமாம் திட்டாம என்ன பண்ணுவாங்க.. அந்த ஊர்ல என்ன இருக்கு.. தாத்தாவிற்கும் பிடிக்கறதில்ல..”
‘ஆமாம்… உங்க தாத்தா ஒரு ஸ்டேட்டஸ் பைத்தியம்.. அவருக்கு ஈக்வலா இருந்தாத தானே பிடிக்கும் பிசினஸ் பார்க்காம படிச்ச படிப்புக்கு வேலைக்கு போற நம்ப அப்பாவையே பிடிக்காது.. க்கும்…’என மனதில் தாத்தாவை திட்டி தீர்த்தாள்.
“ப்பா உங்க முன்னாடியே எப்படி பேசறான் பாருங்க… நான் இவன் கூட எல்லாம் போகமாட்டேன்” என பிடிவாதமாக அசையாமல் நின்றாள்.
“எப்படியோ போ.. எனக்கு டைம் ஆகுது..” என கத்திவிட்டு பிரவீன் சென்றுவிட்டான்
Super and intresting sis 💞
Thank you very much ❤️❤️❤️
super sis
Thanks 💕💕
para que es cialis tadalafil 20 mg
❤️❤️❤️❤️
VTEJnYMSIhD
RETtoxMHCn
vJoFtLpEnNKa