ATM Tamil Romantic Novels

18 – ஆடி அசைந்து வரும் தென்றல்

18 – ஆடி அசைந்து வரும் தென்றல்

 

நான்கூட வந்து பஸ் வச்சுவிடுவேன் பாப்பா… என் ஆபீஸ்கு பஸ் ஸ்டாண்டும் வேற வேற ஏரியா எனக்கு லேட்டாகிடும்.. அதான் பார்ககறேன்” என திருகுமரன் புலம்பினார்.

 

“அதான் பா சொல்லறேன் நான ஆட்டோவில. போயிடறேன்..”என்றாள்.

 

கௌசல்யா மட்டுமே தனியாக எங்காவது செல்ல என வழக்கமாக  ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் திருகுமரன். அந்த ஆட்டோ டிரைவருக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு…

 

“பார்த்து பத்திரமா  போய் விட்டு மண்டே கண்டிப்பா வந்திடனும் தேவாம்மா.. இல்லனா தாத்தா திட்டுவார்”என எச்சரிக்கை செய்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ஆட்டோ காம்பவுண்டிற்குள் வருவது கூட பிடிக்காது என்பதால்.. கௌசல்யாவின் அறிவுரைகளை எல்லாம் மௌனமாக தலையாட்டி கேட்டுக்  கொண்டு வெளியே தயாராக இருந்த ஆட்டாவில் ஏறி உட்கார்ந்த பிறகே நிம்மதியானது.

 

‘அப்பாடா… எப்படியோ சமாளித்து கிளம்பியாச்சு..’ ஆசுவாசமானாள்..

 

அனிவர்த் ஏர்போர்ட் பார்க்கிங்கில் டென்ஷனாக நின்று கொண்டிருந்தான். 

 

“போர்டிங்கு ஹாஃப்னவர் தான் இருக்கு இன்னும் இவளை காணோமே… இதுக்கு தான் நானே பிக்கப் பண்ணிக்கறேன் சொன்னேன் கேட்டாளா..” என புலம்பி கொண்டே அவளுக்கு அழைக்க… ரிங் போய் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை..

 

தேவர்ஷி தன் பேகில் போனை வைத்திருந்தாள். அதனால் ஆட்டோ சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை. 

 

‘ஒருவேளை வரமாட்டாளோ… அதனால் கால் அட்டன் பண்ணலையா..’ என நினைத்து அனிவர்த் கோபத்தில் இருக்க…

 

தேவர்ஷி வந்துவிட்டாள். ஆட்டோவில் வந்திறங்கியவளை கண்டு கோபம் அதிகமானது. அவளாகவே வரட்டும் என நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை அனிவர்த்.

 

ஆட்டோவை அனுப்பி விட்டு அவனை தேடி வந்தாள் தேவர்ஷி. 

 

“லேட்டாயிடுச்சா.. சாரி.. சாரி.. “ என்றாள் கெஞ்சுதலாக… அவள் கெஞ்சுதல் மனதை இளக்க.. இருந்தாலும் 

 

“அதுக்கு தான் நானே வரேன் சொன்னேன்..” என கேட்கவும் செய்தான்.

 

“சரி வா.. லேட்டாகுது..” என கூட்டி சென்றான். திருவனந்தபுரம் விமானத்தில் அமர்ந்தும் கூட தேவர்ஷிக்கு படபடப்பு அடங்கவில்லை. என்ன தான் அனிவர்த் மேல கொண்ட காதலால் வீட்டில் சமாளித்து வந்துவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு சிறு பயம் இருக்க தான் செய்தது.

 

அவளின் பயந்த முகத்தை பாரத்து விமான பயணத்திற்கு தான் பயந்து கொள்கிறாள் என நினைத்து தோளில் கை போட்டு அணைத்து…

 

“வர்ஷிம்மா.. என் கூட இருக்கும் போது என்ன பயம்… சில்… “

 

அவனின் தோளில் சாய்ந்து கண் மூடிக்  கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்து தன் நெஞ்சில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் தேவர்ஷி அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே உறங்கி விட்டாள். தூக்கத்தில் லேசாக வாயை பிளந்து ஜொள் ஒழுக்கி அவனின் சட்டையை நனைத்திருந்தாள். தன் போனில் மூழ்கி இருந்தவன் தன் சட்டையின் ஈரத்தை  உணர்ந்து குனிந்து பார்த்தவன் மெல்ல சிரித்துக்கொண்டான். தனது கை குட்டையை எடுத்து துடைத்துவிட்டான். அதில் தூக்கம் லேசாக கலைய…

 

“ம்ம்ம்” சிணுங்கலோடு தன் முகத்தை அவனின் மார்பில்  புரட்டி இன்னும் வாகாக சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தாள். அவளின் செயல் எல்லாம் அனிவர்த்தை இருப்பு கொள்ள விடவில்லை. சுற்றுபுறம்  உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.

 

இவர்களின் எதிர் சீட்டில் இருந்த மூத்த பெண்மணி இவர்களையே வெகு நேரமாக பார்த்து ரசித்திருந்தார். எதேட்சையாக அனிவர்த் திரும்பி அவரை பார்க்க..

 

“ஆர் யூ நியுலி மேரிட்” என் கேட்க.. அனிவர்த்தும் யோசிக்காமல்.. ஆமாம் என தலையாட்டினான்.

 

“நைஸ் ஃபேர்… பெஸட் விஷ்ஷஸ்..” என பாராட்டவும்…  சிறந்த ஜோடி என்றதும் மனதுக்குள் மெல்ல மணம்  பரப்பியது. அது எதனால் என யோசிக்கவில்லை யோசித்து இருந்தால் தேவர்ஷியை விட்டு இருக்கமாட்டானோ..என்னவோ…

 

“தேங்க்ஸ்..” என்றான் மனம் நிறைந்த சிரிப்போடு..

 

திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இறங்கி… அவன் பதிவு செய்திருந்த கார் காத்திருக்க… ஏறி அமர்ந்ததும் அனிவர்த் ஜர்கின் அணிந்து கொண்டான். தேவர்ஷியை பார்த்தவன்…

 

“வர்ஷி.. ஜெர்கின் போடு..” என்றான். அவள் முழிக்க…

 

“என்ன..” என்றான்.

 

“வர்தா.. நான் எதுவும் எடுத்திட்டு வரலை..” என்றான்.

 

“என்னது கொண்டு வரலையா.. அக்டோபர் மாசம் மழையும் குளிரும் இருக்கும் சொன்னே்ல..” 

 

என்ன சொல்வாள்.. அவள் கிராமத்திற்கு  தானே போகிறாள் என கௌசல்யாவே எல்லாம் எடுத்து வைக்க.. தேவர்ஷியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை அனிவர்த்திடம் சொன்னால் கோபப்படுவான் என நினைத்து…

 

“மறந்துட்டேன்..”என சொல்லி சமாளித்தாள். அதற்கும் கோபப்பட்டு முறைத்தான். டிரைவரிடம்..

 

“அண்ணா.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஏதாவது மால் போங்கண்ணா..” என்றான்.

 

சற்று நேரத்திலேயே மழை  அடித்துப் பெய்ய…தேவர்ஷிக்கு குளிர ஆரம்பித்துவிட்டது. குளிரில் நடுங்க… அனிவர்த் சட்டென அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தி தனது ஜெர்கினின் ஜிப்பை கழட்டி அவளைஇழுத்து 

ஜெர்கினை அவளுக்கும் சேர்த்தே போட்டுவிட்டான்.

 

தேவர்ஷி கூச்சத்தில்  நெளிந்தவாறே..”வர்தா.. டிரைவர் இருக்கார்..” என்றாள் கிசுகிசுப்பாக..

 

“சோ வாட்..” என்றான்.

 

“இறக்கி விடுங்க.. ப்ளீஸ்..”

 

“இப்ப குளிருதா..இல்லைல பேசாம வா..” என்றான்.

 

அவள் பின்னங்கழுத்தில் மெல்ல ஊதினான். அவள் கழுத்தோர குட்டி குட்டி  முடிகள் எல்லாம் சிலிர்த்து கொண்டு நின்றது. அவள் இடையை அழுத்தி பிடித்து பின்கழுத்தில் மீசை உரச முத்தங்களாக வைக்க… பெண்ணுக்கோ அடி வயிற்றில் இருந்து ஒரு சில்லிப்பான உணர்வு கிளம்பி உடல் எங்கும் பரவ… கணம் தாங்க முடியாமல்… தன் இடையில் இருந்த அவன் கையின் மேல் வைத்து.. அவன் கால்களை தன் கால்களால் பின்னிக் கொண்டாள்.

 

அனிவர்த்தின் உணர்வுகள் சீற்றம் எடுக்க… தன்னை கட்டுப்படுத்த முடியாமல்.. அவளை சட்டென இறக்கி பக்கத்தில் உட்கார வைத்தான். அவளும் இருக்கும் இடத்தை உணர்ந்து அமைதியாக இருந்து கொண்டாள். இப்பவே இப்படி செய்பவன்.. ரிசார்ட் போனதும் என்ன.. என்ன செய்வான் என சுகமான கற்பனையில் ஆழ்ந்து போனாள்.

 

லூலூ மாலில் வண்டி நிற்க…. அவளோடு இறங்கியவன்.. அவளின் கை கோர்த்து அங்குள்ள ஒரு துணிகடைக்குள் சென்றான். அவளுக்கு ஜெர்கின் எடுத்து விட்டு…

 

“வர்ஷி… வேற டிரஸ் ஏதாவது எடுத்துக்கறியா..” என கேட்டான்.

 

‘அச்சோ இன்னும் டிரஸ்ஸா.. இந்த ஜெர்கினுக்கே வீட்டில் என்ன சொல்லி சமாளிக்க போறேனோ தெரியலை. கேள்வியா கேட்டு கொல்வாங்க….’ என நினைத்தவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

 

“இங்கேயே ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ.. பொன்முடில பெரிசா கடைகள் ஏதும் இருக்காது..”

 

“எதுவும் வேண்டாம்” என சொல்லிவிட…

 

“சரி வா சாப்பிடலாம்..” என அங்கிருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றான். இருவருக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உணவகத்தை  விட்டு வெளியில் வந்தனர் . அங்கு எதிரில் ஒரு நகை கடை தென்பட… அவளை அழைத்து கொண்டு அங்கே சென்றான். இங்கே எதற்கு என அவன் முகம் பார்க்க.. 

 

“வா.. ஏதாவது ஜூவல்ஸ் வாங்கிக்கோ…” என்றான்.

 

நகையா…  என அதிர்ந்தவள்… இவன் அழைத்து வரும் பெண்களுக்கு எல்லாம் இப்படி தான் வாங்கி தருவானா.. என்ற எண்ணம் தோன்றியதும் தன்னால் இரண்டடி கால்கள் பின்னால்சென்றது. 

 

இவனோடு பணம் பொருள் என ஆதாயத்திற்கு வரும் பெண்களும் நானும் ஒன்றா.. இவன் மேல் கொண்ட காதாலால் தானே.. திருமண்த்திற்கு முன்பு உறவு கொள்வது தவறு என தெரிந்தும்.. இவன் மேல் காதல் உணர்ந்த நொடியில் இருந்து அவனை காதலனாக அல்லமால்  கணவனாகவே வரித்திருந்தாள். அவன் அவ்வளவு ஆசையோடும். எதிர்ப்பார்ப்போடும்.. கேட்க மறுக்க முடியாமல் தானே சரி என சம்மதித்தாள்.

 

“ஏய்.. வா..” என கை பிடித்து  இழுத்தான்.

 

“வர்தா.. நகை எல்லாம் வேணாம்.. வா போகலாம்..” என இவள் அவனின் கை பிடித்து இழுத்தாள்.

 

அவளின் முகத்தை பாரத்தவனுக்கு ஏதோ சரியில்லை என தோன்ற.. 

 

“என்னாச்சு…”

 

“ஒன்னுமில்லை.. வா போகலாம்..” என்றாள் பிடிவாதமாக…

 

“இப்ப சொல்ல போறியா… இல்லையா…” என்று அவளை விட பிடிவாதமாக..

 

“இல்ல… இந்த மாதிரி தான் எல்லா பெண்களுக்கும்…” என முடிக்க முடியாமல் திணறினாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு சரியாக புரிந்தது. புரிந்தவனுக்கு கோபம் வர…

 

“லூசாடி.. நீயும் மத்தவங்களும் ஒன்னா… மனுசன மூட்அவுட் பண்ணிட்டு..” ஏகத்திற்கும் முறைத்துக கொண்டு நின்றான்.

 

அவனின் ‘நீயும் மத்தவங்களும் ஒன்றா..’ என்ற வார்த்தைகளில் மனம் குளிரந்து போக… அப்பாடி நம்மை அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்ற நிம்மதி வந்தது. அவனை நெருங்கி உரசிக் கொண்டு நின்றாள்.

 

“இப்ப எதுக்குடி எரும மாடு மாதிரி உரசிட்டு இருக்க..” எரிச்சலாக..

 

“ஹீஹீஹீ… வர்தா.. கோபமா இருக்கறியா..”

 

“இல்லை… குளுகுளுனு இருக்கேன்..”

 

“ஹீஹீ.. சும்மா காமெடி பண்ணிகிட்டு..”

 

“யாரு நான் காமெடி பண்றேன்…”

 

ஹீஹீ..ஹீ என அசடு வழிந்தாள்.

 

“ரொம்ப வழியாதே.. இப்ப நகை எடுக்க வர்றியா..என்ன..”

 

“ம்ம்ம்.. போலாமே..” என அவனோடு சென்றாள்.

 

அவன் டைமண்ட் செக்‌ஷனுக்கு  அழைத்துச் சென்றான். 

 

“ரிங் பார்க்கறியா. பென்டன்ட் பார்க்கறியா.. உனக்கு பிடிச்சத செலக்ட் பண்ணு”என்றான்.

 

அவள் அமைதியாக எல்லாம் பாரக்க..

 

“அண்ணா.. அந்த பேங்கல்ஸ் எடுங்க… இங்க பாரு இந்த பேங்கல்ஸ அழகா இருக்கு…”

 

அவள் பார்வை எங்கோ இருக்க.. அனிவரத் அவளின் தோளில் தட்டி..

 

“வர்ஷி… எங்க பார்த்திட்டு இருக்க.. செலக்ட் பண்ணு”

 

“வர்தா.. எனக்கு டைமண்ட் வேணாம்.. அங்க கோல்டு ஜூவஸ் இருக்கு பார்க்கலாமா” என கேட்க.. 

 

அவளை அழைத்துக் கொண்டு தங்க நகை இருந்த பக்கம் சென்றான். அங்கே தேவர்ஷி அருகில் சற்று தள்ளி திருமண நகைகள் எடுத்து கொண்டிருந்தனர் ஒரு குடும்பத்தினர். எல்லாம் பெரிய பெரிய நகைகளாக இருக்க.. ஒரு செயின் மட்டும் சின்னதாக சற்று வித்தியாசமாக இருந்தது. அதை பார்த்தும் தேவர்ஷிக்கு பிடித்துப் போக.. தனக்கு நகை எடுத்து காண்பித்து கொண்டிருந்தவரிடம் அதை காண்பித்து அது என்ன என கேட்டாள்.

 

“அது கேரளா டிரடிஷனல் மங்கள்சூத்ரா..”

 

“அப்படினா.. என்ன அண்ணா..”

 

அதற்குள் அனிவர்த்கு ஒரு கால் வர…

 

“வர்ஷி.. நீ செலக்ட் பண்ணு.. பேசிட்டு வரேன்” என சொல்லி தள்ளி சென்றான்.

 

“இது கேரளா தாலி மேடம்..” என்றார் அவர்.

 

அதையே காண்பிக்க சொன்னாள் அதில் அத்தனை டிசைன்  அத்தனை வகைகள் இருக்க.. அதில் ஒன்றில் இலை வடிவில் ஓம் என்று பொறிக்கப்பட்டு அழகாக இருக்க… அதுவும் செயினில் கோர்த்திருக்க… அதையே எடுத்துக்கொண்டாள்.

 

அனிவர்த் பேசி முடித்து வந்தவன்” செலக்ட் பண்ணிட்டியா..” என கேட்க…

 

புன்னகயோடு அந்த செயினை எடுத்து காட்ட.. கையில் வாங்கி பார்த்தான்.

 

‘கண்டுபிடித்திடுவானோ..’ பயந்து போய் பார்த்தாள்.

 

“சரி வா.. டைம் ஆகிடுச்சு.. மழை வந்திட்டா.. ஹில்ஸ் ஏற கஷ்டமாகிடும்..” 

 

நகையை வாங்கி கொண்டு அவசரமாக வண்டிக்கு வந்தனர். லேசாக மழை ஆரம்பித்திருக்க.. தேவர்ஷி  ஜெர்கினை அணிந்து கொண்டாள். மழை  ஏற.. ஏற… மழையும் காற்றும் வலுக்க…  ஜெர்கினை மீறி குளிர.. அனிவர்த்தை ஒட்டி கொண்டு அமர்ந்தாள். அனிவர்த் அவளின் தோளில் கை போட்டு இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

 

மதியம் போல் ரிசார்ட்கு வந்தனர். மதிய நேரமே மழையினால் இருட்டி மாலை போல இருக்க…

 

இரண்டு உள்ளங்கைகளை தேய்த்து “கிளைமேட் செம்மயா இருக்குல்ல..” என்றவன் தேவர்ஷியை நெருங்கி அணைத்தான். சற்று நேரத்தில் அணைப்பு இறுக்கி கொண்டே போக… கழுத்து வளைவில் முத்தம் கொடுத்தான். அவனின் நோக்கம் புரிந்தவளுக்கு அவளின் அடி வயிற்றில் இருந்து பய உணர்வு கிளம்ப… இப்பவேவா… இப்ப வேண்டாமே என்று தோன்ற…தள்ளி போட நினைத்தாள்.

 

“பசிக்குது..” என்றாள்.

 

ஏதோ ஒன்று மனதில் அவனுக்கு உடன்பட தடுக்க… தள்ளி போட எண்ணி பசியை கையில் எடுத்துக் கொண்டாள்.

 

காலையில் சாப்பிட்டது தானே.. இடையில் எதுவும் எடுத்துக் கொள்ளாத்தால் பசிக்குது போல என நினைத்தவன் 

 

“நான் ஆர்டர் பண்ணறேன்..நீ போய் ப்ரஷாகிட்டு வா..”என்றான்.

 

இருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு வந்திருக்க.. உணவும் வந்திருந்தது. அங்கிருந்த சிறிய கிச்சனில்  இருந்த டைனிங்கில் அமர்ந்து சாப்பிட்டனர் அனிவர்த் உற்சாகமாக  சாப்பிட.. தேவர்ஷிக்கோ உணவு இறங்கவில்லை. தட்டை அளந்து கொண்டிருந்தாள்.

 

“பசிக்குதுன.. சாப்பிடாம இருக்க… “

 

“டேஸ்ட் பிடிக்கலையா.. சாப்பிட முடியாட்டி வச்சிடு” என எழுந்து சென்றுவிட்டான். 

 

இவளுக்கும சாப்பிட முடியாது என தோன்ற…  கை கழுவி வந்தாள். அவன் முன் செல்ல கால்கள் பின்னிக் கொண்டது. 

 

இவளை பார்த்ததும் சட்டென தனது கைகளில் அள்ளிக் கொண்டான். அவனின் செயலில் பயந்து போய் அவனின் சட்டையை இறுக பற்றி கொண்டு அவனை  பார்த்தாள். அவன் கண்கள் காட்டிய மாயங்களில் சிக்கி… மயங்கி தன்னை மறந்தாள்.

 

படுக்கையறைக்கு சென்றவன் அவளை படுக்கையில் கிடத்தி…  

 

“ப்ளீஸ் வர்ஷிம்மா..” என்றான் அவள் கண்களை பார்த்து.. 

 

அவன் கண்களில் தெரிந்த காதல் மயக்கத்தில்… மறுக்க மனம் வரவில்லை.

 

மனமோ வரைவு வேட்கை (மணம் புரிய விருப்பம்) கொள்ள..

 

தன்னோடு தான் போராடினாள்.

 

ஏற்பதா.. எதிர்ப்பதா..

 

மனம் தடுமாற…

 

தன்னை மறந்தாள்..

 

தாலியை மறந்தாள்…

 

தடுமாறினாள்… தடம் மாறினாள்….

6 thoughts on “18 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top