ATM Tamil Romantic Novels

20 – ஆடி அசைந்து வரும் தென்றல்

20 – ஆடி அசைந்து வரும் தென்றல்



அவளுக்கு தான் இன்ப இம்சையாக இருந்தது. மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டான். தன் ஆளுமைக்கு அடி பணிய வைத்தான். அவனின் ஒவ்வொரு தீண்டலிலும் பூம்பாவை உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தாள். 

 

அந்த காதல் யோகி காட்டிய இந்திர ஜாலங்களில் சின்ன பெண் பித்தாகி போதையாகி மயங்கி போனாள். அவனோ ஆசை மீதூற.. காம பித்து தலைக்கேற… வீறு கொண்டு எழுந்த உணர்வுகளை அவளிடம் செயலாக்க பயந்தான். தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மென்மையாக கையாண்டான் தன் காதல் கூட்டுக்காரியை…

 

“குட்டிம்மா.. வர்ஷிம்மா…” முணங்கலும்…

 

“வர்தா..” சிணுங்கலும் ஜதி பாட..

 

காதல் பாடங்களின் அனைத்து பக்கங்களையும் அவளுக்கு கற்று கொடுத்து தானும் கரைந்து.. அவளையும் கரைய செய்து.. தன்னிலை மறந்த நிலையில் இரு உயிர்கள் ஓருயிராக… 

 

மலரினும் மெல்லியது காமம் உணர வைத்தான். 

 

காதலும் காமமும் சரிவிகிதத்ததில் பகிரப்பட.. அங்கே ஒரு உள்ளி விழா ( காமன் பண்டிகை) நிறைவாக நடந்தது.

 

களைத்து உறக்கியவளை தன் மேல் எடுத்து கிடத்திக் கொண்டு உறக்கம் கொண்டான் அனிவர்த். மாலை மங்கி  இருள் சூழ்ந்த வேளையில் அனிவர்த் கண் விழித்தான். தன் மேல் கைகால்களை பரப்பிக் கொண்டு …அவனின் கழுத்துக்கடியில் முகத்தை புதைத்து கொண்டு சற்றே வாயை திறந்து தூங்கி கொண்டு இருந்தாள். 

 

சற்றே தலையை தூக்கி குனிந்து பார்த்தவன்…உதடுகள் கீற்றாக பிளந்து முன் பல்வரிசை தெரிய.. அவளிடம் காதல் சேட்டைகள் செய்யும் ஆசை எழ… தன் நுனி நாவை லாவகமாக உள்ளே நுழைத்து பல் வரிசையை மெல்ல தீண்டினான். 

 

அவன் நாக்கின் சில்லிப்பு பட்டதில் விருட்டென்று பயந்து எழுந்து முழித்தாள். தூக்க கலக்கத்தில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை எங்கே.. என்ன…என்று…

 

“ஹேய்.. ரிலாக்ஸ்டா..” என இழுத்து தன்மேல் போட்டு அணைத்தான். அனிவர்த்தின் கழுத்தை கட்டிக் கொண்டு..

 

“எதுக்கு இப்படி பண்ண பயந்துட்டேன்..வர்தா..” என்றவளை இறுக்கி அணைத்து முதுகை நீவிக் கொடுக்க…முதுகை நீவிய கைகள்  மெது மெதுவாக மேலே கீழே என வருட.. 

 

“வர்தா.. “ சிணுங்கியவளை இழுத்து தன் முகத்தோடு  முகம் வைத்து நெற்றியில் முட்டி.. மூக்கோடு மூக்கை உரசி.. இதழ் கவ்வி அடுத்த சுற்றுக்கு அச்சாரமிட்டான்.  காது மடலை மெல்ல கடித்தான். அவள் கூந்தலை இறுக்கி பிடித்தான்.

 

“ஆ..ஆ..” வலியில் முணங்கினாள்.

 

கழுத்தை உதடு மடிப்பால் கவ்வி இழுத்தான்.  பஞ்சு போல் இலகுவானாள்.. கழுத்து கீழே மெல்ல தன் நுனி விரலால் வருடினான். பெண்ணவளுக்கோ தாபம் பற்றி கொண்டது. மெல்லிய கைவிரல்களை முன் பற்களால் கடித்தான். இறகில்லாமல் மிதந்தாள்.. இரண்டு பாதங்களை இருகைகளில் ஏந்தினான். ஒவ்வொரு விரலுக்கும் ஒரு குட்டி முத்தம் வைத்தான். முடிவாக உள்ளங்காலின் மத்தியில் அழுந்த முத்தமிட்டான். உடல் தூக்கிப் போட..   கண்ணாட்டியோ காதல் ஜன்னி கண்டாள். புழுவாய் துடிக்க.. அவளி்ன் துடிப்பை அடக்கும வித்தை தெரிந்த வித்தாரகள்ளனுக்கு மோகன புன்னகை. தன் இல்லாட்டியை தன்னிடம் மயங்க வைத்த வாகை புன்னகை… கந்தனின் வசீகர புன்னகை கண்டு மயங்கி நின்ற வள்ளியாக சொக்கி போனாள்.



இமை சிமிட்டாமல் கண்ணை அகல விரித்து அவனை பார்வையால் தின்று கொண்டிருந்தாள். அவளின் பார்வை வீச்சு தாங்காமல் உணர்ச்சி குவியலாகி போனான். அவளை தழுவி.. தாபம் தாளாமல் அவளை இறுக்கி  அணைத்து அவளில் மூழ்கி முத்தாட… போதவில்லை… அவனின் மோகம் எல்லாம் உடைப்பெடுக்க.. தன்னையே கட்டுக்குள் வைக்க முடியாமல்… தேவர்ஷியிடம் வன்மையை காட்டினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் பாவை தான் துவண்டு போனாள். தன்னால் முடியாமல் சற்று திணறினாலும்.. சற்றும் தன் காதல் கண்ணனை விலக்காமல்.. காதல் கைப்பாவையாகி போனாள்.

 

மோகத்தை அவளிடம் கொட்டி தீர்த்த பின்பு தான் பெண்ணின் நிலை உணர்ந்தான். பற்றுகோல் இல்லாத கொடி போல் துவண்டு கிடந்தாள் இளம்பூவை.. அவள் உடலில் அங்காங்கே லவ் பைட்ஸ்..

 

‘என்னடா பண்ண வச்சிருக்க..’ என தன்னையே நொந்து கொண்டான்.

 

“குட்டிம்மா.. கஷ்டப்படுத்திட்டேனா.. சாரிடாமா..” என கவலையோடு முகம் பார்க்க..

 

சோர்ந்து களைத்திருந்தாலும் அவளின் முகத்தில் சோபையான புன்னகை…. கண்ட அவன் மனம் பேரு உவகை கொண்டது. 

 

அவளிடம்  மீ்ட்சி பெற முடியாமல் தவித்தான். அவளின் நிலை கண்டு மருகினான். அவனின் நெஞ்சில் தலை சாய்ந்திருந்தவளுக்கு அவனின் உடல் மொழி புரிய.. எம்பி  அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள்.

 

“வேண்டாம் குட்டிம்மா.. தாங்கமாட்ட..”

 

“உங்களுக்கு வேணும் தானே… உங்களுக்காக எதையும் தாங்குக்குவேன்..” அவளாகவே இழுத்து அணைத்தாள். மென்மையாக கையாண்டான் தன் காதல் மனையாளை…

அந்த இரவு நீண்டு கொண்டே சென்றது அவர்களின் காதல் பயணத்தினால்..

 

இரண்டு நாட்களும் நினைத்த நேரம் கூடி களித்து.. நினைத்த நேரம் சாப்பாடு தூக்கம் என உல்லாசமாக இருந்தனர். திங்கள அதிகாலையிலேயே விமானத்தில் இருந்தனர். 

 

அனிவர்த் அவளின் கையை தன்உள்ளங்கையில் வைத்து கொண்டு…

 

“குட்டிம்மா…  பிடிச்சிருக்கு தான…”

 

 அவன் எதை கேட்கிறான் என புரிந்தவளுக்கு என்னவோ அவன் முகம் பார்க்க… ஏதோ தடை  விதிக்க… தன் விரல் நகங்களை பார்த்வாறு தலை அசைத்தாள் சம்மதமாக…

 

அனிவர்த்துக்கு இந்த வெட்கம் எல்லாம் புதிது. அவன் பார்த்த பெணகள் எல்லாம் ஆணை வளைக்கும் சாகசம்  கொண்டவர்கள்..  போதையை கண்களில் ஏற்றி மயக்கும் கலையில் தேர்ந்தவர்கள். அனிவர்த்துக்கு இது புதிதாக இருந்தது. 

 

ஆணவன் முகம் பார்க்க நாணி தலை சாய்ந்து நிற்கும் பெண்ணை ஏனோ இன்னும் இன்னும் கொள்ளை கொள்ள ஆசை கொண்டான்.

 

அவள் தோள் சுற்றி கையை போட்டு மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை பதித்தான். குனிந்து அவள் காதில்…

 

“என் கூடவே வந்திடறியா.. ப்ளாட் எடுக்கவா..”

 

 பெண் நிமிரவே இல்லை. மறுப்பாக தலை அசைத்தாள்.

 

என்ன தான் காதலால் இசைந்தாலும்… ஆண் தன் இணைக்கு சமூகத்தை முன் நிறுத்தி கொடுக்கும் அங்கிகாரம் தானே அந்த பெண்ணை கவுரவப்படுத்தும்..

 

அந்த அங்கீகாரம் இல்லாமல் அவனோடு இணைந்தையே அவளுக்கு பயத்தை கொடுத்தது. ஸ்திரமில்லாத உறவு தானே.. எதுவரை செல்லும்… அதன் பிறகு எதிர்காலம் மிரட்டியது.. என்ன ஆன போதும் இவன் ஒருவனே வாழ்ந்தாலும்.. பிரிந்தாலும்.. ஆனால் தன் காதல் அவனை தன்னை விட்டு நீங்கவிடாது என பெரும் நம்பிக்கை கொண்டாள். மனம் மாறி ஊரறிய கல்யாணம் செய்வான் என தீர்மானமாக நினைத்திருந்தாள்.

 

குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் அடங்க மறுப்பவனா.. இவளின் நம்பிக்கையை காப்பாற்ற போகிறான்…அவனை பற்றி அறியாத பேதையை துச்சமாக நினைத்து தூசியாக தட்டிவிட்டு செல்லும் போது என்ன ஆவாளோ…

 

அவளின் மறுப்பு அவனுள் சிறு கோபம் குமிழிட… முகத்தை திருப்பிக் கொண்டான். அவனின் முகத்தை தன் புறம் திருப்பி வாஞ்சையாக வருடி கொடுத்தவள்…

 

“வர்தா.. வீட்டை விட்டு எல்லாம் வரமுடியாது சொன்னா புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்… நாம இப்ப மாதிரி வெளிய மட்டும் போலாம்..” என்றாள். 

 

அவள் கெஞ்சவும்.. கொஞ்சம் சமாதானம் ஆனான். 

 

“சரி வேண்டாம்… ஆனால் நான் சொல்லும் போது என் கூட வரனும்… ஏதாவது சாக்கு போக்கு சொன்ன…. பார்ததுக்கோ..”என மிரட்டினான்.

 

‘இந்த ஒரு தடவைக்கே..வீட்டில் எத்தனை பொய் சொல்லு சாமளிக்க வேண்டியதா போச்சு.. இன்னுமா…’

 

“என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம யோசிச்சுகிட்டு இருக்க..”

 

“ம்கூம் ஒன்னுமில்ல.. “

 

“என்ன வரியா…”

 

“ம்ம்ம்..வரேன்” என சமாளித்தாள்.

 

உரிமையற்ற உறவின் பினவிளைவு.. அதன் வீரியம் புரியாமல் அவன் மேல் பித்தாகி அவன் இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள்.

 

விமானம் விட்டு இறங்கி.. கால் டாக்ஸயில் போய் கொள்கிறேன் என்று சொன்னவளை பிடிவாதமாக தானே கொண்டு விடுவதாக அழைத்து வந்தான். 

 

இவனோடு சென்று இறக்கினால் வீட்டில் உண்டு இல்லை என ஒரு வழியாக்கிவிடுவார்களே… என்ன செய்வது என யோசித்து கொண்டே வந்தாள்.

 

தேவர்ஷியின் வீடு இருக்கும் ஏரியாவிற்கு வந்தவுடன்..

 

“எந்த ஸ்டிரிட்..” என அனிவர்த் கேட்க..

 

அதுக்குள்ள வந்தாச்சா.. சுற்றியும் பார்த்தாள். ஏரியாவின் மெயின் ரோட்டில் நிற்க…

 

“நான் இங்கேயே இறக்கிகறேன்” என்றாள்.

 

“ஏன் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்” 

 

“இல்லல்ல.. அது சின்ன தெரு கார் போகாது..” என வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள். 

 

‘கார் கூட போக முடியாத சின்ன தெருவா.. அப்படிபட்ட தெருவிலா இருக்கிறாள். மிடில் கிளாஸ் பேமிலி கூட இல்லயா..’ என நினைத்தான்.

 

“வர்தா.. நான் இங்கயே இறக்கிக்கவா..”என கேட்க..

 

“ஓஹோ..சரி இன்னைக்கு ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஆபீஸ் வா…” அவளை லேசாக அணைத்து விடுவித்தான். 

 

தேவர்ஷியும் தலை அசைத்து அவனிடம் சொல்லி விட்டு இறக்கி கொண்டாள். அவன் கார் மறையும் வரை பார்த்திருந்தவள் தன் வீடு நோக்கி சென்றாள்.

 

வீட்டில் கௌசல்யா இவளுக்காகவே காத்திருந்தார். 

 

காலிங் பெல் அடித்த உடன் கதவை திறந்த தாயை கண்டு…

 

“அம்மா..” என கட்டிக்கொண்டாள்.

 

“ஏன் தேவாம்மா போனதிலிருந்து ஒரு போன் கூட பண்ணல.. “ கவலையாக கேட்க..

 

“இல்லமா.. அங்க ஒரே மழை கரண்ட் இல்ல.. சிக்னலும் இல்ல..” என பொய் சொன்னாள்.

 

அதை நம்பிய அப்பாவி கௌசல்யா..” நானும் அப்படி தான் இருக்கும்னு நினைச்சேன்.. போ குளிச்சிட்டு வா.. சாப்பிடலாம்.. டயர்டா இருப்ப.. நாளைக்கு ஆபிஸ் போகலாம் . இன்னைக்கு ரெஸ்ட் எடு..” 

 

சரி என சென்றவள் குளித்து விட்டு சாப்பிட்டு தூங்கினாள் மதிய உணவுக்குகூட எழுந்திரிக்கவில்லை… கௌசல்யாவும் மகளின் திருட்டுத்தனம் அறியாமல் பயண களைப்பு என எழுப்பவில்லை.

 

அடுத்தநாள் ஆபிஸ் சென்றாள் அனிவர்த் பார்த்ததும் அவளை இழுத்து அணைத்தான்.

 

“குட்டிம்மா.. நேத்தே நீ இல்லாமல் ஒரே போரிங் தெரியுமா..” என்றான் ஏக்கம் இழையோடும் குரலில்..

 

தேவர்ஷி உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள்.’என்னை விட்டு இருக்க முடியாமல் எப்படி தவிச்சு போறாங்க… நம்ம விட்டு எப்பவும் பிரியமாட்டாங்க.. கொஞ்சநாள் போய் கல்யாணத்திற்கு கேட்போம்’ 

 

சீண்டலும் சிணுங்கலுமாக அந்த வாரம் ஓடிவிட…. வார இறுதியில் ஞாயிற்று கிழமை மகாபலிபுரம் போகலாமா.. என கேட்டான் அனிவர்த்.

 

வீட்டில் என்ன சொல்லுவது என தெரியாமல் வேண்டாம் என மறுக்க அவன் கோபம் கொள்ள… அவனின் கோபத்திற்காக சம்மதித்தாள்.

 

ஏனோ அனிவர்த்தின் மனமும் உடலும் அவளின் அருகாமைக்காக ஏக்கம் கொள்ள… திரும்ப திரும்ப பைத்தியமாக  அவளை தேடினான்.

 

5 thoughts on “20 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top