ATM Tamil Romantic Novels

21 – ஆடி அசைந்து வரும் தென்றல்

21 – ஆடிஅசைந்து வரும்தென்றல்



தேவர்ஷி ஞாயிறு அன்று நண்பர்களோடு வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு அனிவர்த்தோடு மகாபலிபுரம் சென்றாள். இப்படி எப்பாவது செல்வது தான் என்பதால் திருகுமரனும் கௌசல்யாவும் மகளின் திருட்டுதனம் தெரியாமல் அனுப்பி வைத்தனர்.

 

அனிவர்த் அன்று இறக்கிவிட்ட மெயின் ரோட்டிலேயே தேவர்ஷிகாக காத்திருந்தான்.அவள் வரவும் பிக்கப் பண்ணிக்க… மகாபலிபுரம் நோக்கி கார் சென்றது. காரில் அமைதி.. தேவர்ஷிக்கோ பெற்றவர்களிடம் பொய் சொல்லி வந்ததால் ஒரு பதைபதைப்பு..

 

“வர்ஷிம்மா… என்ன ஒன்னும் பேசாம வர…” 

 

“இல்ல.. கொஞ்சம் டென்ஷன்.. “

 

“என்ன டென்ஷன்.. என்னோடு வரதில..”

 

“இல்ல.. உங்களோடு வரதுல ஒன்னும் இல்ல.. வீட்ல பொய் சொல்லிட்டு வந்தது தான்..”

 

“எதுக்கு பொய் சொல்லனும்.. ப்ரெண்ட் கூட போறேனு சொல்லிட்டே வரலாமே..”

 

“அப்படி தான் சொல்லிட்டு வந்தேன்..”

 

“அப்புறம் என்ன பொய்னு சொல்லிட்டு இருக்க…” 

 

“இல்லை ப்ரெண்ட்ஸ் கூட சினிமா போய்ட்டு மால் போய்ட்டு வரேன் என சொன்னேன். உங்க கூட மகாபலிபுரம் போறேனு சொல்லலை.. சொன்னா அவ்வளவு தான் கொன்னே புடுவாங்க..”

 

அவள் பேச்சில் அனிவர்த் ஏகத்திற்கும் கோபம் வந்தது.

 

“அப்படி எதுக்கு பொய் சொல்லனும். என் ப்ரண்ட் கூட டேட்டிங் போறேன்னு சொல்ல வேண்டியது தானே..”

 

“அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. “

 

“ஏன் சொல்ல முடியாது..”என்றான் கோபமாக..

 

“இது என்ன உங்க ஜெர்மன்னு நினைச்சிங்களா.. இங்க எல்லாம் அப்படி சொல்ல முடியாது தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க…” என்றாள்  சின்ன குரலில் அவன் கோபத்தில் பயந்து…

 

“அப்படி ஒன்னும்  பொய் சொல்லிட்டு நீ ஒன்னும் வர வேண்டாம்.. போடி..” என்றான் ஆத்திரத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.

 

என்ன தான் ஜெர்மன்ல படித்தாலும் பிறந்து வளர்ந்த கலாச்சாரத்தை மறந்தா போவான்.. 

 

“நீ கிளம்பு இறங்கு..” அவளை பிடித்து தள்ளினான்.

 

அவன் தள்ளிய வேகத்தில் கதவின் கண்ணாடியில் தலை மோதிட..

 

“ஆ…ஸ்ஸ்..” என நெற்றியை பிடித்துக்கொண்டு வலியில் கத்தினாள்.

 

அவள் கத்தவும் தான் தன் தவறை உணர்ந்தவன்….

 

“ஏய் வர்ஷி…. என்னாச்சு..”அவளை நெருங்கி.. கன்னத்தை பிடித்து நெற்றியை பார்க்க…

 

அவனின் கையை தட்டிவிட்டாள் இப்போது இவள் கோபம் கொண்டு..

 

“டேய் குட்டிம்மா… சாரிடா.. ஏதோ கோபத்தில்… தப்பு தான்டா.. சாரி..” என தாடையை பிடித்து சாமாதனமாக பேசி நெற்றியை பார்க்க.. லேசாக வீங்கியிருந்தது. பெருவிரலால் தடவி விட்டு வாயை குவித்து மெல்ல ஊதினான். 

 

சில்லு என்று அவன் வாய் வழி வந்த காற்றால்  பெண்ணுள் ஒரு சிலிர்ப்பு ஊடுருவி செல்ல… கண்ணை மூடி.. அவன் தாடையை ஏந்தி பிடித்திருக்க.. லேசாக உதடு பிரிந்து மூச்சை இழுத்து பிடித்து உணர்வுகளை அடக்க முயல…

 

பிரிந்திருந்த உதடுகள் அவனை ஏதோ செய்ய… மெல்ல மேல் உதடு கீழ் உதடு இரண்டையும் கவ்வி இழுத்து பிடித்தான். மொத்தமாக இழுத்து சப்பி சுவைத்தான்.

 

பெண்ணோ அவனின் ஜாலத்தில் காதல் மயக்கம் கொண்டு சட்டை காலரை இறுக்கி பிடித்து நெருக்கத்தை அதிகப்படுத்த… இருவரின் இருக்கைக்கு நடுவில் இருந்த இடைவெளியால் அவனுக்கு அவளை நெருங்க வாகாக அமையவில்லை. அவளை இழுத்து அழுத்தமான் ஆழமான முத்தத்தை பதித்தவன்.. 

 

“ஸ்வீட் கேர்ள்..” என கன்னம் தட்டி காரை எடுத்தான். அவனின் எண்ணத்தை ஈடுகட்ட காரும் வேகமெடுத்தது.

 

மகாபலிபுரம் சென்றனர். அது பிரைவேட் பீச்சுடன் கூடிய் ரிசார்ட்ஸ். அப்படி பட்ட ரிசார்ட்டை புக் செய்திருந்தான் அனிவர்த். அதன் பிரம்மாண்டத்தில் சற்று மிரண்டு போனாள் தேவர்ஷி.  அவர்கள் வீட்டிலும் டிரிப் செல்வார்கள் தான்  ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவார்கள் தான். ஆனால் அதை எல்லாம் சாதாரணம் என சொல்லும் அளவுக்கு மூலை முடுக்கு எல்லாம் பணத்தின் செழுமையில் இழைக்கப்பட்டிருந்தது இந்த ரிசார்ட்.

 

தங்களுக்கான ரிசார்ட் வந்ததும் அனிவர்த் சில சாட் அயிட்டங்களும் ஹாட் ட்ரிங்சும் ஆர்டர் செய்தான். ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டிருந்தவள் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து கொண்டிருந்தாள். போனில் ஆர்டர் சொல்லி  விட்டு தேவர்ஷியை தேடி வந்தான்.

 

“வர்ஷி.. உனக்கு நீச்சல் தெரியுமா..” என கேட்க..

 

“ஓ.. தெரியுமே..” என்றாள் உற்சாகமாக..

 

அனிவர்த் அவளை ஆச்சரியமாக பார்ததான். இவள் வீட்டில் வசதி குறைவாக இருக்கும் போது இது எல்லாம் எப்படி கற்று கொடுத்தார்கள் என..

 

“என்ன அப்படி பார்க்கறிங்க.”

 

“இல்ல… உங்க வீட்டில எப்படி ஸ்விம்மிங் கிளாஸ்லாம் அனுப்புச்சாங்க..”

 

“என் தாத்தா பொட்ட புள்ளைக்கு எதுக்கு இது எல்லாம் என திட்டினாரு தான்.. ஆன் எங்கப்பா என் ஆசைக்காக தாத்தாவை பேசி சரி பண்ணி அனுப்பினாங்க..” என சொல்லியவள் அன்று அவள் தாத்தா பேசியதை நினைத்து இன்றும் கோபம் வந்தது.

 

“பொட்டபுள்ளைக்கு எதுக்கு நீச்சல் எல்லாம்.. நீச்சல் டிரஸ் எல்லாம் போட வேண்டி இருக்கும். நம்ம குடும்ப கௌரவத்துக்கு சரி வருமா..” 

 

“பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் போகட்டும்..” என சொல்ல..

 

திருகுமரன் தான் வழக்கம் போல தந்தையை மகளின் ஆசைக்காக பேசி சரி கட்டினார்.

 

எப்படி தான் அப்பா சமாளிக்கறாரோ.. அந்த பெரிசை..” என பல்லை கடித்தாள்.

 

“ஏய்..என்னாச்சு..” அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

 

“ஒன்னுமில்ல..” என்றவள் இதை சொன்னால் கோப்ப்படுவானோ என..

 

 “இந்த பூல் நல்லா இருக்குல்ல.” என பேச்சை மாற்றினாள்.

 

“ஸ்விம் பண்ணலாமா..” என்றான்.

 

“ ப்ச்ச்.. ஸ்விம் சூட் இல்லையே..” என்றாள் சோகத்தில் முகத்தை பாவித்து…

 

“அதனால் என்ன.. இங்கேயே ஷாப்பிங் பண்ணலாம்.. வா வாங்கிக்கலாம்” என அவளை அழைத்து கொண்டு கிளம்பினான். அவன்ஆர்டர் செய்தவற்றை சில மணி நேரம் கழித்து தான் சொல்லும் போது கொண்டு வருமாறு சொல்லவிட்டே கிளம்பினான்.

 

அவனோ பிகினியாக பார்க்க.. அவன் எடுத்தவை எல்லாம்  பார்த்தவளுக்கு  அச்சோ இதை எப்படி போடுவது என ஒரே கூச்சமாகி போனது. வேண்டாம் என மறுக்க…

 

“ஏண்டி.. உனக்கு நல்லா இருக்கும்..” 

 

“ச்சீ.. இதை எப்படி போடறது.. எனக்கு வெட்கமா  இருக்கு..”

 

“அது ப்ரைவேட்.. அங்க யாரும் வரமாட்டாங்க…நானும் நீயும் தான..என்கிட்ட என்ன வெட்கம்” 

 

அவனுக்கு என்ன தெரியும் அவனின் பார்வை தான் பாவையவளை வெட்கத்தில் கொன்று தின்னும்…

 

“இல்லை வேண்டாம்.. நான் இது எல்லாம் போட்டதில்லை… போடமாட்டேன்..” என பிடிவாதமாக மறுத்து ப்ராக் மாடல் ஸ்விம் சூட் எடுத்துக் கொண்டாள். 

 

அனிவர்த் தனக்கு பிடிக்கவில்லை என்பதாக முகம் திருப்பி நின்றான். அவனை இறைஞ்சுதலாக பார்க்க… சரி போ என்பதாக விட்டுவிட்டான்.

 

தங்கள் ரிசார்ட்கு வந்தவுடன் அனிவர்த்  தேவர்ஷியிடம் ஸ்விம் சூட்டை போட்டு விட்டு வரசொன்னவன்.. தானும் தன் சட்டு பேண்ட் உள் பனியனையிம் களைந்து விட்டு  மினி டிரங்கோடு மட்டுமே இருக்க… அதற்குள் அவன் ஆர்டர் செய்ததை வந்திருக்க..  அழகான கிளாசில் பொன் திரவத்தை ஊற்றி மிக்சிங் செய்தவன் ரசித்து ருசித்து ஒரு சிப் செய்தவன் போர்க்கில் பழத்துண்டுகளை குத்தி எடுத்து லாவகமாக சாப்பிட.. 



அந்த உடையை மாற்றியவள் அவன் முன் வர சங்கடப்பட்டவளாக தயங்கி தயங்கி படுக்கை அறையில் இருந்து அனிவர்த் இருந்த முன் அறைக்கு வந்தவள்… பார்த்ததும் சற்று அதிர்ந்து தான் போனாள் தேவர்ஷி.  அவன் குடிப்பான் என்று தெரியும் ஆனால் தன்னோடு இருக்கும் போது குடிப்பான் என நினைக்கவில்லை. பொன்முடி போயிருந்த போது அவன் அந்த மாதிரி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலும்.. அவள் வீட்டில் தாத்தாவின் கண்டிப்பால் அவள் வீட்டு ஆண்களுக்கு அந்த பழக்கமில்லை என்பதாலும் அவளுக்கு இது புதிது என்பதால் பதட்டமாக இருந்தது. குடிப்பவர்களை கண்டால் சற்று பயம் தான் அவளுக்கு..

 

பயத்துடன் அவனை பாரக்க.. அவன் அது எல்லாம் எங்கு கவனித்தான். அவளை பார்த்ததும்..

 

“ஹேய்… செக்ஸியா இருக்கடி..” என ஒரு மாதிரியாக சிரித்து கண்ணடிக்க…

 

அவளோ எச்சில் கூட்டி விழுங்கினாள். 

 

“வா.. பூல் போலாம்..” என கை நீட்டி அழைக்க.. 

 

அவள் தடுமாறி நிற்க… அவனே அவளை நெருங்கி இடையில் கை போட்டு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பிற்கு அந்த பக்கம் இருந்த நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றான். ஒரு கையில் அவள்.. மறு கையில பொன்திரவம்.. நல்லா அனுபவித்து வாழ்றடா அனிவர்த்..

 

கிளாசை நீச்சல் குளத்தின் திட்டில் வைத்து விட்டு … பயம் படபடப்பு என கலவையான உணர்வில் இருந்த தேவர்ஷியை அணைத்து பிடித்து கொண்டு அவளோடு சேர்ந்து  நீரில் குதித்தான். அவளையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுவான் என எதிர்பார்க்கதவள் நீரில் மூழ்கி மேலே வந்தவளை கண்டு அவன் உல்லாசமாக சிரிக்க… அனிவர்த் அப்படி ஒரு உற்சாகமாக சிறுவனை போல துள்ளி கொண்டு நீந்தி அவளருகில் வந்தவன் அவளை இறுக்கி அணைக்க.. அவனிடம் இருந்து திமிறி கொண்டு விடுபட்டு.. நீந்தி எதிர்கரைக்கு செல்ல.. அவளை பிடிக்க இவன் செல்ல.. இவள் மீனை போல நழுவி செல்ல… இந்த விளையாட்டு அனிவர்த்துக்கு பிடித்து போனது. அவன் பிடிக்க முயல.. அவள் கைக்கு சிக்காமல் போக்கு காட்ட.. இந்த விளையாட்டு சற்று நீள..

 

அனிவர்த் கரைக்கு சென்றவன் பொன் திரவத்தை ஒரே மூச்சாக வாயில் சரித்தான். உள்ளே சென்ற திரவம் அவனை உசுப்பேற்ற.. தம் கட்டி தண்ணீரின் அடியில் நீந்தி சென்றான். அவனை காணாமல் தேட..  தீடிரென  நீருக்கடியில் இருந்து அவளின் கால்களை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி பிடிக்க.. அவள் அவனிடம் இருந்து விடுபட முயல… அவளின் கால்களை தன் கால்களால் கிடுக்கி பிடி போட்டு அசைய விடாமல் செய்தான்.

 

அவனிடம்இருந்து தப்பிக்க முடியாமல் போக.. 

 

“விடுங்க என்னை..” சிணுங்கியவாறே அவன் தோளில் அடிக்க..

 

“குட்டிம்மா..” என அவன் குரல் குழைய…

 

அவனின் குரல் பேதத்தில் அவன் முகம் பாரக்க… அவனின் பார்வையோ நீருக்கு மேலே இருந்த அவள் பாதி உடம்பை மேய்ந்து கொண்டிருந்தது. நீரில் நனைந்த உடைகள் அவளின் நெளிவு சுளிவுகளை  எடுப்பாக காட்ட…  அவளின் முகத்தில் இருந்து வடிந்த நீர் கழுத்து வழியாக இறங்கி நெஞ்சிற்கு மத்தியில் இறங்கி உள்ளே செல்ல… பார்த்வனுக்கோ காதல் பித்து தலைக்கேற… சட்டேன வாய் வைத்து நீரை உறிஞ்சி இழுக்க… அவனின் மீசையின் குறுகுறுப்பும்.. இதழ் தீண்டலும்  அவளின் உடலை தகிக்க… அவனை இறுக்கினாள். 

 

அவளை அள்ளி தோளில் போட்டு கொண்டு அறைக்கு வந்தவன் படுக்கையில் கிடத்தி அவள் மேலே விழுந்து இறுக்கி அணைத்து அவளை சீராட்டி தன் காரியத்தை சாதித்து கொண்டான். மீண்டும் மீண்டும்  அவளை சீராட்டியே சீர் களைய செய்தான். ஒரு கட்டத்தில்  அவளால் முடியவில்லை என்ற நிலை வரவும் தான் விலகினான். 



11 thoughts on “21 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

    1. Shaahithya Srinivasan

      வர்ஷி அப்பாவியா இருந்தால் பாவம் தான்….

  1. 1win казино — популярная платформа для онлайн азартных игр. Оно предлагает широкий выбор слотов, настольных игр и ставок на спорт в удобном интерфейсе. Бонусы для новых игроков и регулярные акции делают игру выгодной и увлекательной. 1win бонус 1 для получения бонуса при регистрации на платформе. Стабильная работа сайта и быстрые выплаты делают 1win привлекательным выбором для любителей азарта.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top