ATM Tamil Romantic Novels

22 – ஆடி அசைந்து வரும் தென்றல்

22 – ஆடி அசைந்து வரும் தென்றல் 



அப்படியே இருவரும் உறங்கிவிட…. மதியத்திற்கு மேல் தேவர்ஷி தான் முதலில் கண் விழுத்தாள். சோர்வு பசி… உடல் சக்திக்கு உடனடியாக எதாவது வயி்றுக்கு போட வேண்டும். அனிவர்த்தை எழுப்பினாள்.

 

“வர்தா… வர்தா…” 

 

தூக்கத்திலேயே புரண்டு அவள் இடையில் கை போட்டு அவளை அணைத்து…

 

“என்ன பேபி.. அடுத்த இன்னிங்க்ஸ் போலாமா..” 

 

“எனக்கு சாப்பிடனும்..”

 

நன்றாக கண்விழித்து மணியை பார்த்தான். மணி மூன்று…

 

டைனிங்கு கால் பண்ணி உணவை ஆர்டர் கொடுத்தான். இருவரும் ப்ரஷாகி வரவும் உணவும் வந்துவிட… ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு கொண்டு  சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் அவன் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக..

 

இவளோ..” வர்தா.. வீட்டிற்கு போகனும்..”

 

“போகலாம் பேபி.. நைட் போகலாம்..”

 

“இல்லல்ல.. லேட்டா போனா வீட்டுல திட்டுவாங்க.. இப்பவே போகனும்”

 

“போகலாம் குட்டிம்மா..ஒரு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்றுவேன்..” என தாடையை பிடித்து கொஞ்ச.. அவன் கையை தட்டி விட்டு…

 

“ஐயோ.. அவ்வளவு லேட்டாவா… அது எல்லாம் வேண்டாம் இப்பவே போகனும்..”

 

“சரி.. ஒருஆறு மணி போல போகலாம்..” என்றான் சமாதான படுத்தும் விதமாக..

 

அவள் எங்கு ஒத்து வந்தாள். அவனும் வித விதமாக தன் வித்தையை காண்பித்து அவளை தன்னோடு இன்னும் சற்று நேரம் இருத்திக் கொள்ள பாரக்க…

 

அவளோ ஆத்தா வையும் சந்தைக்கு போகனும் காசு கொடு மாடுலேஷன்லயே… வீட்டுக்கு  போகனும் என அதையே கீறல்  விழுந்த ரெக்கார்ட் போல திரும்ப… திரும்ப படிக்க…

 

அனவர்த்தால் அவளை சமாளிக்க முடியாமல்…

 

“கிளம்புடி… இனி எங்கயாவது உன்னை கூப்பிட்டனா பாரு.. எப்ப பாரு வீட்டுல திட்டுவாங்க இதையே சொல்லிகிட்டு.. சரியான பட்டிகாட்டு குடும்பம் போல.. போ.. கிளம்பு..வீட்டுக்கு போய் தின்னுட்டு தூங்க போற..அதுக்கு இத்தனை ரகளை..” என கத்த..

 

ஒன்றும் பேசாமல் கிளம்பி தயாராக நின்றாள். திட்டியும் கிளம்பி நின்றவளை பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர… ஒன்றும் பேசாமல்  அவனும் தயாராகி வந்தவன் அவளை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.

 

காரில் அமைதி..இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனோ கோபத்தில்.. இவளோ அவனின் கோபத்தை கண்டு பயத்தில்… அவனின் கோபத்தின் அளவை காரின் வேகத்தில் காட்டினான். தேவர்ஷியை வழக்கமாக இறக்கி விடும் இடத்தில் இறக்கி விட்டவன்.. எதுவும் பேசாமல் காரை வேகமாக கிளப்பி கொண்டு  சென்றுவிட்டான்.

 

தேவர்ஷிக்கோ அழுகை வருவது போல இருக்க.. அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு வீடு வந்தாள். தாயின் கேள்விகளுக்கு எதோ சொல்லிவிட்டு மதியம் சாப்பிட்டதுக்கே பசியில்லை என சொல்லி  தனது அறையில் வந்து கதவை அடைத்து தாழிட்டவள்…

 

அவனுக்கு அழைக்க..அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். வாட்சப்பில் மெசேஜ் அனுப்ப.. எதற்கும் அவனிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்தில்  அவன் போனை அணைத்து வைத்திருப்பதாக வரவும் சோர்ந்து போய் அழுகையில் கரைய ஆரம்பித்துவிட்டாள்..

 

அழுகைகள் சலுகைகளாய் இனி நீளுமே!!!  அம்மணி… நல்லது நல்லதை தரும்.. அல்லது என்ன தரும்???

 

அழுதழுது அப்படியே உறங்கிவிட்டாள். காலையில் இமைகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் சிவந்து இமைகள் தடித்து முகம் வீங்கி பார்க்கவே பரிதாபமக இருந்தாள். எழுந்து குளித்து ஆபிஸ் செல்ல தயாராகி வந்தவளை பாரத்து வீட்டினர் பதறி போயினர்.

 

கௌசல்யா பதறி போய்”தேவாம்மா.. என்னடா காய்ச்சல் அடிக்குதா..” என கழுத்தை தொட்டுப் பார்ததார். லேசாக கணகணப்பும் இருக்கவே.. 

 

“உடம்பு சூடு லேசா இருக்கு.. லீவ் போட்டுட்டு டேப்லெட் சாப்பிட்டு தூங்குடா..”

 

‘என்னது லீவ் போடறதா.. வர்தாவை பார்ககனுமே.. அவனை சமாதனப்படுத்தனுமே..’ 

 

“இல்லம்மா.. இன்னைக்கு முக்கியமான ஒர்க் இருக்கு.. போயே ஆகனும்..”

 

“தேவா பாப்பா.. அம்மா சொல்லறத கேளு.. உடம்பு முடியாம எப்படி வேலை செய்வ…” மகள் மறுக்கவும் தானும் வற்புறுத்தினார் திருகுமரன்.

 

“இல்லப்பா.. டேப்லெட் போட்டுகிறேன். ஆபிஸ் போய்தான் ஆகனும்..” 

 

பெற்றவர்கள் என்ன சொல்லியும் கேளாமல் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பேரசிட்டமலையும் விழுங்கி விட்டு அடமாக கிளம்பிவிட்டாள்.

 

அனிவர்த் அவளுக்கு முன்பு வந்திருக்க… அவனை கண்டதும் ஓடி போய்…

 

“வர்தா சாரி… “

 

அவன் இவளை கண்டு கொள்ளாமல்..  காது கேளாதவன் போல தன் வேலையை செய்து கொண்டிருக்க… இவளுக்கு கண்களில் நீர் தேங்கிவிட்டது. அவளும் சிறிது நேரம் நின்று பார்த்தாள். ஒருத்தி நிற்கிறாளே என்று அவன் சிறிதும் இளகவில்லை.

 

திரும்பி அவனை பார்த்து கொண்டே தனது கேபினுக்கு வந்தவள் வேலை செய்ய முனைய.. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி அவனையே தவிப்போடு பார்தது கொண்டிருந்தாள்.

 

அவள் பார்க்காத போது அவளை பார்ததிருந்தவன் அவளின் தவிப்பை அறிந்து தான் இருந்தான். கண்கள் முகம் எல்லாம் வீங்கி பார்க்க பாவமாக இருந்த போதும்..

 

‘உன்னை எல்லாம் இப்படி தாரட்டுல விட்டா தான்டி வழிக்கு வருவ..’ என கறுவிக் கொண்டான்.

 

மதிய உணவை இருவரும் எப்போதும் சேர்நதே உண்பர். இன்று அவளை அழைக்காமல் தன் பெர்ஷனல் அறைக்கு சென்றுவிட்டான். அவன் கூப்பிடாமல் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சாப்பிடாமல் டேபிளில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

 

சாப்பிட்டு வந்தவன் அவள் கையில் தலையை தாங்கி படுத்திருப்தை பார்த்தவனுக்கு மனம் இளகியது. அடுத்த நொடி ‘வேண்டாம் இப்ப இவகிட்ட பேசினா.. இவள் நேத்து மாதிரி என் பேச்சை கேட்கமாட்டா.. இவளை கொஞ்சம் பயமுறுத்தி வைக்கனும்..” என நினைத்து அவளை சட்டை செய்யாமல் தனது வேலையில் மூழ்கி போனான்.

 

அவன் சாப்பிட்டு வந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கவும் அழுகை வந்தது. அழுது கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள். சிறிது நேரம் கழித்து பார்த்தவன் அவள் தூங்குவதை கண்டு பல்லை கடித்தான்.

 

‘என்ன ஒரு கொழுப்பு .. கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம தூங்கறத பாரு.. இருடி இன்னும் உன்ன சுத்தல்ல விடறேன்..’

 

அவள் தூங்குவதை எரிச்சலை கிளப்ப.. வேண்டும் என்றே பேப்பர் வெயிட்டை வேகமாக கீழே போட்டான். 

அந்த சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து கண்ணை கசக்கி என்ன எங்க சத்தம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

அனிவர்த் அவளை முறைத்து கொண்டிருந்தான். அவனை பார்க்கவும் பயம் எடுத்து கொண்டது தேவர்ஷிக்கு..

அவன் தன்னிடம் பேசாமல் தன்னால் நிம்மதி கொள்ள முடியாது என உணர்நதவள்.. கொஞ்சம தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனருகே சென்றாள்.

 

“வர்தா.. ப்ளீஸ் வர்தா.. பேசுங்களேன்..” கெஞ்சுதலாக..

 

அங்கு ஒருத்தி இல்லாததை போலவே அவனிருக்க.. படாரென அவனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.அவனின் முழங்கால்களில் தன் கைகளை ஊன்றி.. அண்ணாந்து அவனை பார்த்தாள். அவள் கண்கள் அவளின் காதலின் வலியை தாங்கி நின்றது.

 

அவள் என்ன செய்கிறாள் என அமைதியாக அவளை பார்த்துக கொண்டிருந்தானே தவிர.. மனம் இளகவில்லை.. இன்னும் சொல்ல போனால் அவள் தன் முன் மண்டியிட்டு அமர்ந்தது அவன் மனதில் சின்ன சந்தோஷம் தான்.

 

“சாரி.. தப்பு தான் மன்னிச்சிடுங்க.. இனி நீங்க என்ன சொனானாலும் கேட்கறேன்.. ப்ளீஸ் பேசுங்களேன்.. நீங்க பேசாம இருந்தா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ் பேசுங்க..” என காலில் முகம் புதைத்து அழுக.. 

 

அவள் அழுகை அவன் கோபத்தை கொஞ்சம் தணிய வைக்க..

 

“சரி.. சரி..எழுந்திரு..” 

 

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சமாதானம் ஆகிவிட்டனா.. என சந்தேகமாக பார்க்க.. 

 

“இனி எப்பவும் நான் என்ன சொல்லறனோ அதை தான் கேட்கனும்.. செய்யனும் புரிஞ்சுதா..”

 

“கண்டிப்பா.. நீங்க சொல்றபடியே செய்யறேன்..” என்றாள் தணிவாக…

 

அவளின் கண்களை துடைத்து விட்டு கைகளை பிடித்து எழுப்பி தன் மடியில் அமர்த்தி…

 

“நான் தான் நைட் கொண்டு போய் விட்டுடறேன் சொன்னேன்ல குட்டிம்மா.. நீ எதுக்கு அப்படி அடமா போகனும்னு நின்ன.. அதான் எனக்கு கோபம்.. எனக்கு இருக்கற அஃபெக்‌ஷன்  உனக்கு இல்ல… அதான் எப்ப பாரு என்னை விட்டு போறதுலயே குறியா இருக்க..” என அவளை குறை சொல்லி கொண்டிருந்தான்.

 

இவன் மொத்தமாக ஒரு நாள் அவளை உதறி எறிந்து விட்டு போகப் போவது தெரியாமல்..  வயசு பெண் நேரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும் எல்லா குடும்பத்திலும் சொல்வது தானே அதற்காக தானே அவள் போக வேண்டும் என்றாள். அது புரியாமல் அவளை குற்றவாளி ஆக்கி கேட்டு கொண்டிருக்கிறான். அது சரி அக்கா தங்கை இருந்து அவர்களோடு வளரந்திருந்தால் அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருக்கும். ஒற்றை பிள்ளையாக இருந்தவனுக்கு தேவர்ஷியின் கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை.

 

‘நான் உன்மேல உயிரா இருக்கேன். அதை சொன்னால் உனக்கு புரியுமா.. அதான் எனக்கு தெரியல..’ என நினைத்தவள் அதை அவனிடம் சொல்லவில்லை ஏதாவது சொல்லி மறுபடியும் மலையேறிவிட்டாள் என்ற பயத்தில் அவன் சொல்வதற்கு தலையை மட்டும் அசைத்தாள்.

 

“இல்லை.. அப்படி எல்லாம் இல்ல..”என்றாள்.

 

“சரி விடு… லஞ்ச் சாப்பிடவே இல்ல தான.. போ சாப்பிடு” என்றவன் அவளை பின்புறமாகவே அணைத்து இதழ் முத்தமிட்டே அனுப்பி வைத்தான்.

 

தேவர்ஷிக்கும் கவலையில் இவ்வளவு நேரம் தெரியாத பசி.. இப்போ வாட்டி எடுக்க… தன் லன்ச் பாக்ஸை திறக்க.. காலையில் கொண்டு வந்த உணவு கெட்டு போயிருந்தது. முகத்தை சுழித்து மூடி வைத்தாள். அவளையே பாரத்து கொண்டிருந்தவன் உடனே போன் பண்ணி கேன்டீனில் சூடாக என்ன இருக்கு கேட்டு கொண்டு வர சொன்னான்.

 

அட்டென்டர் வந்து அனிவர்த டேபிளில் வைத்து விட்டு போக.. அவனே உணவை எடுத்து சென்று தேவர்ஷியிடம் கொடுத்தான்.

 

“இந்தா.. இதை சாப்பிடு..”

 

அவனின் கரிசனத்தில் அவளால் சந்தோஷப்பட கூட முடியவில்லை. வீட்டிற்கு தெரியவும் கூடாது. இவனும் மனம் சுணங்ககூடாது என்ன செய்வது என்ற கவலை தான் பெண்ணை அரித்துக் கொண்டிருந்தது.

 

அவள் சாப்பிடும் வரை அங்கேயே நின்றான். அவளுக்கு தான் டென்ஷன் ஆனது. அள்ளி திணித்து ஒருவழியாக சாப்பிட்டு முடித்தாள்.

 

அந்த வாரம் முழுவதும் அனிவர்த் தன் கோபத்தை விடுத்து எப்பவும் போல அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டான்.  வாரஇறுதி நெருங்கவும் தேவர்ஷிக்குள் பயம் பிடித்துக் கொண்டது. எங்கே…எத்தனை நாள் என…

 

அந்த வாரம் மட்டுமில்லாமல் அதற்கு அடுத்த இரண்டு வாரங்களும் அனிவர்த் அவளை எங்கும் கூப்பிடவில்லை. அந்த வாரம் உடனே வேண்டாம் அவளை சுத்தல்ல விட்டு பின்னாடியே வர வைக்கனும் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டான். அடுத்தவாரம் நேர்த்திகடன் என கங்கா அனிவர்தை கட்டயமாக குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டார். அதற்கு அடுத்த வாரம் பிசினஸ் கம்யூனிட்டி பார்ட்டி.. மூன்று வாரங்கள் இப்படியே ஓடிவிட..

 

இந்த மூன்று வாரங்களும் தேவர்ஷிக்கு எப்ப? எங்கே கூப்பிடுவானோ? என படபடப்புடனே திக் திக் என நகர்ந்தது. அதுவே ஒரு மன அழுத்தத்தை கொடுத்தது. 

 

அனிவர்தோ அவளை சுத்தல்ல விட நினைத்தவனுக்கு ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அவளில்லாமல் அவளை பார்க்காமல்.. தீண்டாமல் ஒன்றும் முடியவில்லை… பல மலர் தாவும் வண்டு தான். 

 

ஏனோ தேவர்ஷி என்னும் மலரின் தேனில் மதி மயங்கி அங்கேயே தேங்கிவிட்டான். தேவர்ஷி மலரின் தேனை பருகாமல் பைத்தியமாகி போனான். டிராகன் போல மோக அனல் மூச்சு தேகமெங்கும் சுட்டது..

 

அந்நிலையிலும் அவனின் நாட்டம் வேறு பெண்களிடம் செல்லவில்லை… பாவம் அது தான் காதல்! என அவன் உணரவில்லை.

 

மூன்று வாரங்கள் என்பது அவனுக்கு  நேரங்களாக இருந்தது.

 

நான்காவது வாரம் அனிவர்த் ஆரம்பித்துவிட்டான். சனிக்கிழமை ஏதோ அரசு விடுமுறையாக இருக்க.. இரண்டு நாள் ட்ரிப்கு பிளான் பண்ணினான். அதை தேவர்ஷியிடம் சொல்ல..

 

“இரண்டு… நாளா..” என திணறினாள்.

 

“என்ன மென்னு முழுங்கற..”

 

“இல்ல.. இரண்டு நாளா.. காலையில் போய்ட்டு ஈவ்னிங் வந்திடலாமே..” பயத்தில் தயங்கி தயங்கி பேச..

 

“ஏன்..” என்றான் கோபமாக…

 

“இல்லை.. சட்டர்டே வீட்டில் பங்ஷன்..” சட்டென தோன்றியதை சொன்னாள்.

 

அவளை சந்தேகமாக பார்த்து “என்ன பங்ஷன்” என்றான்.

 

ஒருநிமிடம் என்ன சொல்ல என தெரியாமல் முழித்தாள்.

 

“என்ன.. முழிக்கிற…என்ன பொய் சொல்றதுனா..”இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவாறு..

 

“அத்தை வீட்ல பங்ஷன்…” என இல்லாத அத்தையை இழுத்து விட்டு தப்பித்து கொள்ள பார்த்தாள்.

 

“உண்மை தானே.. பொய்யில்லயே…” நம்பாமல்…

 

“சத்தியமா..”என்றாள் அழுத்தமாக..

 

“சரி சன்டே ஓகே தான..” என்றான்.

 

“ம்ம்ம்” என தலையை உருட்டினாள்.

 

“நைட் தான் ட்ராப் பண்ணுவேன்..” மிரட்டலாக…

 

அதற்கும் தலையை உருட்டினாள். வீட்டில் ஏதாவது சொல்லி சமாளித்து கொள்ளலாம் என நினைத்தாள்.



4 thoughts on “22 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top