23 – ஆடி அசைந்து வரும் தென்றல்
அவனிடம் வருகிறேன் சொன்ன நாளில் இருந்தே அவளுள் பல சிந்தனைகள்… பல குழப்பங்கள்…
எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும். இவனையும் வீட்டையும் சமாளிக்க முடியாமல் திணறினாள்.பெற்றவர்களுக்கு தெரியாமல் தப்பு செய்கிறோம் என்ற குற்றவுணர்வு அவளை அரித்து கொண்டிருந்தது. கண்டிப்பாக இதற்கு எதாவது செய்யவேண்டும் என நினைத்தாள். என்ன செய்ய.. யோசித்தவளுக்கு கல்யாணம் தான் தீர்வு. அவனிடம் பேச வேண்டும். அவனின் கொள்கைக்கு எதிரானது தான். சாமனியத்தில் ஒப்புக் கொள்ள மாட்டான் தான். ஒருவேளை தன்னை போல அவனுக்கும் தன் மேல அதீத அன்பு இருந்தால்.. அந்த அன்பு அவனை சம்மதிக்க வைக்கலாம் என நம்பினாள். அதனால் அவனிடம் இதை பற்றி பேசலாம் என முடிவு செய்தாள். அதுவும் அவன் கோபம் கொள்ளாதவாறு பொறுமையாக பேச வேண்டும் என நினைத்து பல முறை தனக்குள் ஒத்திகை பார்த்து கொண்டாள். பாவம் பாவை இந்த பேச்சே தங்கள் பிரிவுக்கு வழி வகுக்கும் என அறியவில்லை.
தேவர்ஷி வீட்டில் நெருங்கிய உறவில் திருமணம் தங்கள் கிராமத்தில் என்று இளையவர்களை மட்டும் விட்டுட்டு பெரியவர்கள அனைவரும் கிளம்பினர். முகூர்த்தம் முடித்து விட்டு அங்குள்ள தங்கள் விவசாய நிலங்களின் வேலைகளை மேற்பார்வை பார்த்து விட்டு ஞாயிறு இரவு வருவதாக சொல்லி சென்றனர்.
விஸ்வநாதன் மீனாட்சி தம்பதியருக்கு ஒரே மகன் சரண் மட்டுமே.. முதல் வாரிசு.. அதுவும் ஆண் வாரிசு.. சுந்தரமூர்த்தியின் செல்ல பேரன்.. பட்டத்து இளவரசன் அந்த குடும்பத்திற்கு… அவனுக்கும் தேவர்ஷிக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்…அவனின் பொறுப்பில் தான் இளையவர்களை விட்டுச் சென்றார்கள்.
திருகுமரன் கௌசல்யாவிற்கு தேவர்ஷி அவள் தம்பி பிரவீன்.. கண்ணன் கோமதிக்கு ராகுல் அடுத்து ஸ்வாதி…
சரண் தாத்தாவின் வளர்ப்பு. அவரை போலவே குடும்ப கௌரவம்.. குடும்ப பாரம்பரியம் என அதிகம் பார்ப்பான். அவனின் பேச்சு செயல் எல்லாம் அதை ஒட்டியே இருக்கும். தேவர்ஷி பாஷையில் பட்டத்து இளவரசன் பாகுபலி..
சரணின் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்க.. அவனிடம் என்ன சொல்லி செல்வது என்ற யோசித்தாள்.
சுந்தரமூர்த்தி மூன்று மகன்களுக்கும் ஒரே காம்பவுண்டிற்குள் அடுத்தடுத்து மூன்று பங்களா கட்டி கொடுத்திருந்தார். சரணும் எல்லாரும் ஒரே இடத்தில் இருங்கள் என தங்கள் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு தன் வேலைகளை பார்க்க சென்றான். ஞாயிறு காலையில் இருந்தே சரண் வீட்டிலேயே இருக்க… தேவர்ஷிக்கு தான் என்ன செய்ய என்று தெரியவில்லை.
ஒன்பது மணி அளவில் அனிவரத் போன் செய்துவிட்டான். எல்லோரும் இருக்க இவளால் தான் அவனிடம் பேச முடியவில்லை. ஒரு பத்து நிமிடம் பொறுத்தவன் மீண்டும் அழைக்க.. இவள் எடுக்காமல் போகவும் விடாமல் தொடர்ந்து அழைக்க ஆரம்பித்துவிட்டான்.
போன் அடித்துக் கொண்டே இருக்க.. இவள் எடுக்காமல் இருக்கவும் இவளை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கவும்…
சரண்”யாரு.. என்னனு தான் எடுத்து பேசேன்..”
“இல்ல.. என் ப்ரண்ட் தான்..”
“ப்ரண்ட் தான எடுத்து பேசறதுக்கு என்ன..” அவளை சந்தேகமாக பார்த்தான்.
போன் மறுபடியும் ஒலிக்க… தேவர்ஷி போனை எடுத்து கொண்டு வெளியே சென்றாள். அழைப்பை ஏற்றதும் அனிவர்த் பொரிந்து தள்ளினான்.
“எத்தனை தடவை கால் பண்ணறது… ஏன் அட்டென்ட் பண்ணல..”
“இல்ல போன் சைலண்ட் மோட்ல இருந்திருக்கு நான் பார்க்கல..” சின்ன குரலில்
“கிளம்பிட்டயா?… நான் இந்த மெயின் ரோட்ல இருக்கேன்..”
“இல்ல.. இனி தான் கிளம்பி வரனும்..”
“வாட்… இன்னும் வரலையா..”
“சாரி.. சாரி இதோ கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.
அவளின் பதட்டத்துடன் வருவதை பாரத்து எல்லோரும் அவளை என்ன எனபதாக பார்க்க..
“இல்லை என் ப்ரண்ட்க்கு பீவர் அவ பேரண்ட்ஸ் திருப்பதி போயிட்டாங்களாம்.. அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனுமாம்.. என்னை கூப்பிடறா…”
சரண்”உன் வண்டில போறியா.. எப்படி போற..”
“இல்லை நாம வழக்கமா போற ஆட்டோல போயிக்கிறேன்..”
“இரு பிரவீன கொண்டு வந்து விட சொல்றேன்..”
‘இவன் ஒருத்தன் கேள்வியா கேட்டு கொல்றானே… அங்க ஒருத்தன் மலையேறிட்டான் அவனை எப்படி சரிகட்டப் போறனோ தெரியல..’
“இல்லை அவளுக்கு பீவர் ஹையா இருக்காம்.. ஆட்டோல தான் கூட்டிட்டு போகனும்..” என சொல்லிட்டு எங்கே நின்றால் இன்னும் கேட்பானோ.. என நினைத்து வேகமாக கிளம்பிவிட்டாள்.
எத்தனை பொய்கள்.. எத்தனை சமாளிப்புகள்.. எத்தனை நாளைக்கு என ஆயாசமாக இருந்தது.
வியர்வையில் நனைந்து வேகமாக வந்து காரில் ஏறியவளை முறைத்துப் பாரத்தான். அச்சோ நாம் பேசப் போகும் விசயத்திற்கு இவன் இவ்வளவு கோபமாக இருந்தால் ஆகாதே.. என விசனப்பட்டாள்.
“வர்தா.. சாரி..”
“இப்ப எல்லாம் என் கூட வரதுல உனக்கு அவ்வளவு இன்டரஸ்ட் இல்ல போல..”
“அப்படி எல்லாம் இல்ல.. வீட்டில ஸ்டிரிக்ட்.. அதான்..”
“அது உன் ப்ராப்ளம்..நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தியோ ஏமாத்தியோ கூட்டிட்டு போகலயே.. எல்லாம் கிளீயரா சொல்லிட்டேன்.. நீயும் அதுக்கு ஒத்துகிட்டு தானே வர… ஆனா நீ பண்றது எல்லாம் எனக்கு டென்ஷன் தான் குடுக்குது.. நானே ரிலாக்ஸ் பண்ண தான் வரேன்.. நீ அத ஸ்பாயில் பண்ற மாதிரியே எல்லாம் செய்யற..”
அவனை எப்படி பேசி அவனை சாந்தப்படுத்தி கல்யாணத்தை பற்றி பேசுவது என தெரியாமல் மிகவும் சோரந்து போனாள். முதல் முறையாக எதிர்காலத்தை நினைத்து பயம் வந்தது.
அவனின் குற்றசாட்டில் எதுவும் பேச இயலாமல் அமைதியாகிவிட்டாள்.அதுமட்டுமில்லாமல் கோவத்தில் இருக்கும் சமயத்தில் ஏதாவது பேசி இன்னும் கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என நினைத்து பேசாதிருந்தாள்.
அவனோ ‘ஏதாவது பேசறாளா பாரு.. நாய்குட்டி மாதிரி பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா.. இப்ப எல்லாம் ரொம்ப அலட்சியம் வந்திருச்சு.. குட்டிம்மா.. வர்ஷிம்மானு குழையற்றேன்ல.. அதான் என்னை அவ பின்னாடி சுத்த வைக்க பார்க்கறாளா.. நான் யாரு அனிவர்த்.. என்னையவா.. நெவர்..’ வெளியில் போறோம் என்று ஒரு சந்தோசம்.. கண்ணில் துளி அன்பு இருக்கா? அவன் மனதில் காய்ந்தான்.. ஓடி கட்டிக்கொண்டு கன்னம் ஈசி முத்தாடுவாள் அவன் எதிர்பார்ப்பு..
காரில் மௌனமே ஆட்சி செய்தது… அவரவர் சிந்தனையில் இருவரும்…
பயணம் ஒரு பங்களா முன்பு போய் முடிய. கேட்டை திறந்து விட்டு பங்களாவின் சாவியை கொடுத்த வாட்சமேன் தேவர்ஷியை பார்த்த பார்வையே இழிவாக இருந்தது. தேவர்ஷிக்கு உடல் கூசி போனது கண்கள் கலங்கி.. மனம் காயப்பட்டு போனது…
உள்ளே சென்றதும் தனியறை செல்லும் பொறுமை கூட அனிவர்த்துக்கு இல்லை. நட்டநடு ஹாலிலேயே அவளை இழுத்து அணைத்தான். தேவர்ஷிக்கோ மூன்று வாரங்கள்… அனிவர்த்தக்கோ நீண்ட நெடிய கொடிய இருபத்தியொரு நாட்கள்… தாபம் தீர்க்கா நாட்கள்… அவனின் ஆசை தேடல் எல்லாம் எல்லை கடந்து கரை உடைக்க துடிக்க… மூன்று வார துடிப்பை எல்லாம் மூர்க்கமாக காட்டினான்.
“வர்தா.. இங்கயேவா.. ப்ளீஸ் நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசனும்…”
அவளின் சொற்கள் அவனின் காதுகளை தீண்டவே இல்லை. அவளோ முதலில் பேசி தீர்ததுக் கொண்ட பிறகே மற்றது எல்லாம் என்ற முடிவில்…
“வர்தா..நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்…”
அவனின் தோளில் கை வைத்து தள்ள.. அவளிள் கையை இலகுவாக தட்டிவிட்டான். அவள் விலக்க.. அவன் தடுக்க.. அவளின் தடையை எல்லாம் முறுயடித்து முன்னெடுக்க…
தன் பேச்சிற்கும் மறுப்பிற்கும் மதிப்பில்லையா.. என கோபம் கொண்டவள்.. வெறி கொண்டு வேகமாக அவனை தள்ளிவிட்டாள். அவள் தள்ளியதும் அருகில இருந்த ஷோபாவில் விழுந்தான்.
அவனின் தாபங்கள் அறுபட…கோபம் தலைக்கு ஏற.. விழுந்த வேகத்தை விட எழுந்த வேகம் அதிகம்…
“என்னடி திமிரா…” என கையை ஓங்கி கொண்டு வர… அவனின் கோபம் கொண்டு பயந்தவள்…
அடிக்க வந்த கையை பற்றி கண்களில் ஒற்றியவள்.. “ப்ளீஸ்.. எனக்கு கொஞ்சம் பேசனும்..” மன்றாடும் குரலில்..
“சொல்லு” என ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
“நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா..” பட்டென கேட்டுவிட்டாள்.
“வாட்.. கல்யாணமா..” என்றான் அதிர்நது போய்..
“ஆமாம்.. நான் உங்களை லவ் பண்றேன்.. உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கு.. நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது..”
“பிடிச்சதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. முதல்ல என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு.. சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி.. உங்கப்பா சாதாரண ஒரு கவர்மேண்ட் சர்வண்ட்.. என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா.. உன்னோட இன்னோசன்ட்காக தான் உன்னை பிடிச்சது.. ப்ளான் பண்ணி தான் என்னோட பழகுனியா…”
அவன் பேச்சு அவள் மனதை ஆயிரம் முட்கள் கொண்டு கீறியது போல இருந்தது.
“இல்ல.. நான் எந்த ப்ளானும் பண்ணல.. நான் உங்கள உண்மையாவே லவ் பணறேன்.. என்னை நம்புங்க..” கண்களில் நீர் வடிய.. கிட்டதட்ட கெஞ்சினாள்.
“உண்மையா லவ் பண்றவ தான் என் வீக்னஸ யூஸ் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டிலாயிடலாம்னு நினைப்பாளா..”
பதறி போய் “ஐயோ.. நான் அப்படி எல்லாம் நினைக்கல.. எனக்கு கல்யாணம் பண்ணாமல் உங்களோட இப்படி கண்ட கண்ட இடத்துக்கு எல்லாம் வரதுக்கு ரொம்ப அவமானமா இருக்கு.. “
“ஓஹோ.. என்னோட வரது உனக்கு அவமானமா இருக்கா…” என எகிறினான்.
“இல்லல்ல.. நான் அப்படி சொல்லல்ல.. வீட்டில் பொய் சொல்லிட்டு உங்களோட வரது எனக்கு தப்பு பண்ற மாதிரி குற்றவுணர்ச்சியா இருக்கு..”
“அப்படி குற்றவுணர்வோட.. நீ இனி என்னோட எங்கயும் வரவேண்டாம்.. இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” பட்டென்று உறவை முறித்தான்.
“பட்டுனு இப்படி சொன்னிங்கனா எப்படி… என்னால உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” அவனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்நது கொண்டு அழுதாள்.
“என்ன.. ப்ளாக்மெயில் பண்றியா..”
பதற போய் அவனை நிமிர்ந்து பார்த்து “ அப்படி எல்லாம் இல்லைங்க.. என் மனசுல என்ன இருக்கோ அதை தான் சொன்னேன்..”
“உன் மனசுல என்ன இருக்குனு நான் சொல்லவா.. நல்ல வசதியானவன்… என் வீக்னஸ தெரிஞ்சுகிட்டு அப்பாவி மாதிரி நடிச்சு… எப்படியாவது மயக்கி பின்னாலயே சுத்த விட்டு.. கல்யாணத்துக்கு கேட்டா சரினு தலையாட்டிடுவான்.. அப்படியே லைப்ல செட்டிலாயிடலாம்னு.. ப்ளானோட தான் லவ் அது இதுனு அழுது நடிச்சிட்டு இருக்க..”
தன் காதலை நடிப்பு என்று சொல்லவும் அவளின் உயிர் நாடி வரைக்கும் துடிதுடித்தது. எப்படியாவது அவனுக்கு தன்னை புரிய வைத்திடமாட்டோமா என்ற ஆற்றாமையில் இன்னும் இன்னும் அவனிடம் இறங்கி போனாள்.
“சத்தியமா.. நான் நடிக்கலைங்க.. என்னை நம்புங்க…” காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.
“நடிப்பு இல்லாம் வேற என்ன.. நான் உன்கிட்ட சொல்லி தானே பழகினேன். நீயும் ஓகேனு தான வந்த… இப்ப அவமானமா நினைக்கறவ அப்பவே மேரேஜ் பண்ணாம ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே… ஏன் சொல்ல.. ஒரு கார் கூட போக முடியாத ஒரு சின்ன தெருவுல ஒண்டு குடித்தனத்துல் இருக்கற உனக்கு அழகா நல்ல வசதியா இருக்கற என்னை பார்த்தும் என்னை யூஸ் பண்ணி லைப்ல செட்டிலாயிடும்னு தோணியிருக்கு.. அதான் இன்டரவியூவுக்கு வந்த அன்னைக்கே பார்த்தனே என்னை பார்த்து வழிஞ்சத…”
அவன் பேச பேச தன்னையே கேவலமாக ஒரு வேசி போல இப்படி தன்னை நினைத்துவிட்டானே..என இழிவாக உணர்ந்தாள். ஒரு நிமிடத்தில் தான் இன்னார் குடும்பத்து பொண்ணு என சொல்லிவிடலாம். அவள் குடும்ப பெயரே அவள் ஒன்றும் பணத்துக்காக பழகவில்லை என்று சொல்லிவிடும். அதை சொல்லி தான் இவன்கிட்ட வாழ்க்கையை பிச்சையாக கை ஏந்தி வாங்கனுமா… என்னை எனக்காக ஏற்று கொள்ளாதவன் எனக்கும் வேண்டாம் என தீர்மானமாக முடிவு எடுத்தாள். தனது முகத்தை துப்பட்டாவால் அழுந்த துடைத்தவள்..
எழுந்து அவன் முன் நிமிர்வாக நின்றவள்..”இப்ப என்ன தான் சொல்லறிங்க…”
“என்ன மிரட்டி பார்க்கறியா.. உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாது..”
அவனை ஒரு நிமிடம் தீர்க்கமாக பார்த்தவள் எதுவும் பேசாமல் வெளியேறினாள்… இவ்வளவு நாள் பழகி புரியாதவனுக்கு பேசியா புரிய வைக்கமுடியும் என…
முடிந்துவிட்டது.. எல்லாம் முடிந்துவிட்டது என இருவரும் முற்றுபுள்ளி வைக்க… இல்லை இன்னும் இருக்கிறது என ஷாஷிகா வடிவில் கடவுள் கமா போட்டதை அறியாமல்…. இரு வேறு திசையில் பயணித்தனர்.
super sis plss sis innum oru ud koncham big ud kudugga sis eagly waiting
cRGzStOdsCo
SUper sis 💞
LdWMhQpkSuPqgXb
hKyvXjuogALSE