4 – ஆடி அசைந்து வரிம் தென்றல்
எப்படியோ வீடுவந்து சேர்ந்துவிட்டாள் தேவர்ஷி.. அவளை பாரத்ததும் உடன்பிறப்புகள் பயந்து போயினர். அழுகை அவமானம் கோபம் ஆங்காரம் என கலவையான உணர்வுகளால் அலைகழிக்கப்பட்டு தளர்ந்த நடையுடன் வந்தவளை கண்டு… “என்னாச்சு.. ஏன் இப்படி இருக்க…” இளையவர்கள் கேட்க…
சரண் மட்டும் அமைதியாக.. ஆனால் ஆழ்ந்து பார்த்திருந்தான். அவன் உள்மனம் சொல்லியது ஏதோ சரியில்லை என்று… “அவளை விடுங்க.. தேவா போய் ரெஸட் எடு.. ஈவ்னிங் பேசிக்கலாம்..” அவர்களிடம் என்ன சொல்வது என தெரியாமல்… அதைவிட தன் செயலை எப்படி சொல்வது என பயந்தவள் விட்டால் போதும் என தங்கள் வீட்டிற்கு சென்று தன் அறையில் சென்று படுத்தவளுக்கு ஒரே அழுகை..
அழுது கொண்டே இருந்தால்.. சோர்ந்து போய் தன்னை மறந்து தூங்கும் வரை..மதிய உணவுக்கு ஸ்வாதி வந்து பார்க்க… தேவர்ஷி நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அழுது ஓய்ந்து போனதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஸ்வாதியும் எழுப்பி பார்த்தாள். எழுந்திருக்கவில்லை எனவும் விட்டுவிட்டாள்.
பெரியவர்கள் இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட… சரணிடம் தெரிவித்திருக்க.. அவனும் சமையலாளிடம் செய்ய சொல்லியிருந்தான்.
பெண்கள் பரிமாற.. ஆண்களும் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். எப்பாவது பண்டிகை விசேச நாட்களில் விஸ்வநாதன் வீட்டில் ஒன்று கூடுவர் தான்.அன்று விருந்து அமர்களப்படும்.
கௌசல்யா வந்தவுடன் மகளை காணாது கேட்க.. சரண். “அவ ப்ரண்டுக்கு பீவர்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா சித்தி.. வரும் போதே ரொம்ப டயர்டா வந்தா.. அப்ப போய்படுத்தவ தான்.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. லஞ்ச்கு ஸ்வாதி போய் எழுப்பியும் எந்திரிக்கல சித்தி..”
“என்ன சொல்ற சரண்.. சாப்பிடாம தூங்கறாளா.. இவளுக்கும் காய்ச்சல் வந்திடுச்சா.. பாரத்திங்களா.. டேப்லெட் எதாவது குடுத்திங்களா..”
“பீவர்லாம் இல்லை சித்தி..”
”ஆமாம் பெரியம்மா.. நான் எழுப்பும் போது அக்கா உடம்புல சூடு இல்ல..” “இருங்க நான் போய் பார்த்திட்டு வரேன்..” என கௌசல்யா கிளம்ப.
“கௌசல்யா.. தூங்கிட்டு தான இருக்கா.. சாப்பிட்டு அவளுக்கும் எடுத்திட்டு போ..” சுந்தரமூர்த்தி சொல்ல்…
மகளை பார்க்க உடனே கிளம்ப பார்க்க.. சுந்தரமூர்த்தி சாப்பிட்டு தேவர்ஷிக்கும் எடுத்திட்டு போக சொல்லிவிட…
கௌசல்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. மாமனார் பேச்சையும் மீற முடியவில்லை. சிட்டுகுருவி போல ஒரு இடம் அமராமல் சுற்றி திரிபவள் பகல் போய் இரவு வந்தது கூட தெரியாமல் தூங்குகிறாள் என்றதும் மனம் பதறியது.
திருகுமரனைப் பார்க்க அவருக்கும் மகளை நினைத்து கவலை தான்.. இருந்த போதும் தந்தை சொன்ன பிறகு அவர் பேச்சை மீறினால் அதற்கும் ஏதாவது பேசுவார். எனவே மனைவியை கண்களால் சமாதானம் செய்தார்.
ஏதோ கொஞ்ம் சாப்பிட்டு விட்டு மகளுக்கும் எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு ஓடினார்.
கௌசல்யா தேவர்ஷியை எழுப்ப.. அவளால் கண்களை பிரிக்க கூட முடியவில்லை. தொடர்ந்து அழுதது நீண்ட நேர தூக்கம் என முகம் வீங்கி சிவந்து போய்… கண்கள் தடித்து… பார்க்க பயமுறுத்தினாள். கௌசல்யா மகளை கண்டதும் கலங்கிவிட்டார்.
“தேவாம்மா.. என்னடா ஆச்சு.. ஏன் இப்படி இருக்க..” ஒன்றும் சொல்லாமல் தாயை கட்டி கொண்டு ஓவென ஒரே அழுகை..
.கொஞ்ச நேரம் தலை கோதி கொடுத்தவர்.. வற்புறுத்தி இரண்டு இட்லிகளை சாப்பிட வைத்தார். திருகுமரன் மகளை பார்க்க வந்தார். அவருக்கும் மகளை பார்த்தும் பதைபதைப்பு.. “தேவாம்மா என்ன ஆச்சு..” என கேட்க…
தந்தையை பார்த்ததும் மீண்டும் அழுக ஆரம்பித்தாள். மகளின் அழுகையில் துடித்து போனவர்… “அழுகாத பாப்பா.. எதுனாலும் காலையில் பேசிக்கலாம்..” மகளின் கண்களை துடைத்து விட்டவர்…
“கௌசி.. இன்னைக்கு பாப்பா கூடவே படுத்துக்கோ..” “எதுவும் நினைச்சு பயப்படாம தூங்குடா.. அப்பா இருக்கேன்.. எதுனாலும் பார்த்துகலாம் விடு..”என்ன என்று தெரியாமலேயே மகளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
கௌசி மகளை அணைத்து கொண்டு படுத்துக் கொள்ள.. தாயின் அணைப்பு சற்று ஆறுதலாக இருந்தது. காலையில் திருகுமரன் தேவர்ஷியிடம் “தேவாம்மா.. இன்னைக்கு லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுடா..”. என்க.
தேவர்ஷியோ தயங்கிவாறே.. “இல்லப்பா நான் ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன்… எனக்கு வேலைக்கு போக பிடிக்கல…” மகளை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்தவர்…
“உன் இஷ்டம் பாப்பா.. நீ வேலைக்கு போய்தான் இங்க நிறையனும்னு ஒன்னும் இல்ல.. உன்னை வருத்திக்காம வீட்லயே ஜாலியா இரு..”
தன் அறைக்கு வந்தவள் அனிவர்த்துக்கு ரெசிகனேஷன் மெயில் அனுப்பினாள். அப்போதும் அழுகை வர பார்க்க… போதும் இந்த கண்ணீருக்கு கூட அவன் தகுதியில்லாதவன் என கண்களை அழுந்த துடைத்து கொண்டாள்.
அனிவர்த் தன் அறைக்கு வந்தவுடன் தேவர்ஷியின் கேபினை தான் பார்ததான்.
. வெற்றிடமாக இருக்கவும் கோபம் துளிர்த்தது.அவள் வந்திடமாட்டாளா.. நான் பேசியது எல்லாம் தப்புதான் வர்தா.. மன்னிச்சிடுங்க..என கேட்டு தன் முன் நிற்கமாட்டாளா.. என ரொம்ப எதிர்பார்த்து வந்தான்.
அவள் அனிவர்த்திடம் சண்டை போட்டு விட்டு அந்த பங்களாவில் இருந்து போன பிறகு.. அனிவர்த்திற்கு எல்லை கடந்த ஆத்திரம் கோபம் ஆங்காரம் எல்லாம்… எவ்வளவு ஆசையோடு அவளிடம் சரசமாட வந்தான். பார்த்ததும் கட்டி கொண்டு முத்தமிட்டு முத்தமிட்டே கிறங்க வைப்பாள்.. என்ற அவனின் எதிர்பார்ப்பு எல்லாம் காற்றுபட்ட நீர்குமிழியாக உடைந்து போனது. அவள் போனதும் அவள் கொளுத்திய வெப்பம் தணியாமல் வாட்ட…அங்கிருக்க பிடிக்காமல் பப்பிற்கு சென்றான். தனதுவிருப்பமான ட்ரிங்கை வாங்கி சிப் சிப்பாக உள்ள இறக்கி தன் கோபத்தை எல்லாம் தணித்து கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
அல்டாப்பு ராணி ஒருத்தி அவன் தேவையை பூர்த்தி செய்து தன் தேவையை நிறைவேற்றி கொள்ள வந்தாள். இருவரும் இடம் பார்த்து ஒதுங்கினர். ஏனோ அந்த உறவு அவனை சாந்தப்படுத்தவில்லை. மாறாக தகிக்க வைத்தது..
அவனின் தகிப்பு தவிப்பு தாபம்எல்லாம் அவள் ஒருத்தியிடம் மட்டுமே அடங்கும் என உணரும் காலம் வெகு தொலைவில் இருக்கும் போது எப்படி உணரமுடியும்.
மனதில் காதல் தளும்ப உரிமையோடு உறவை கொடுத்தவளின் சுகத்திற்கு ஈடாகுமா… உடல் வேட்கையை மட்டும் தீர்த்து கொள்ள வருபவளிடம் கிட்டும் சுகம்..
வண்ணம் பூசிய கிளி எல்லாம் பஞ்சவர்ணகிளி ஆகிவிடுமா என்ன..
இன்னும் அவனை எரிச்சல் படுத்த… அத்தனைக்கும் அவன் மனம் அவளையே குற்றம் சாற்றி நின்றது.அவளின் மெயிலை பாரத்தவனுக்கு தன் தவறை உணராத ஆணவ புத்தி ‘என்ன ஆட்டம் காட்டறாளா.. இந்த சால்ஜாப்புக்கு எல்லாம் நான் பயப்படுவேனா.. பார்க்கறேன் எவ்வளவு தூரம் போகறேனு.. இந்த உலகத்துலேயே நீ ஒருத்தி தான் பொண்ணா.. போடி..’ இப்படி தான் நினைத்தது.
தேவர்ஷியால் அனிவர்த்தின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை. தன்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டானே… இத்தனை நாள் பழகியும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே.. நான் என்ன இவனின் பணத்துக்காகவா இவன் பின்னால் போனேன்..எப்படி பேசிவிட்டான். வேசி என சொல்லாமல் சொல்லிவிட்டானே.. நான் வேசியா.. நான் அப்படி பட்ட பொண்ணா நினைக்க… நினைக்க.. உடல் எல்லாம் காந்தியது. நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல்.. வெறித்த பார்வையுடன் எதையோ மனதில் நினைத்து மறுகி கொண்டு அறைக்குள்ளயே முடங்கி கிடக்கும் மகளை கண்டு பயந்து போய் மந்திரித்து தாயத்து கட்டி கூட்டி வந்தார் கௌசல்யா.
அப்பவும் அவள் தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல மனம் கூசியது.. தன்னை போல உண்மையான அன்போடு பழகவில்லையா.. தன் உடல் இச்சைக்காக தான் பழகினானா…அதான் கல்யாணம் பண்ணிக்கலாம் என கேட்டதும் தட்டி எறிந்துவிட்டானா.. நான் தான் இவனை நம்பி ஏமாந்து போயிட்டேனா.. காதலை காதலாக உணராமல் காமமாக உணர்ச்சியின் பிடியில் நின்றுவிட்டானா.. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் என் காதலை ஒரு நொடி கூட உணரவில்லையா.. என தன்னிலேயே உழன்று தன்னையே வருத்திக் கொண்டாள்.
ரோஜா இதழ்களால் இதயத்தை வருடியவனே.. ரோஜா முட்களால் கீறியும் விட்டுவிட்டான். ஊமையாக இரத்தம் சிந்துகிறது… அவளை பார்த்து என்ன என தெரியாமல் குடும்பமும் தவித்து நின்றது. என்ன கேட்டும் வாயே திறக்கவில்லை. நேரத்திற்கு உண்ணவில்லை.. உறங்கவில்லை… துஷ்யந்தன் புறக்கணித்த சகுந்தலையின் நியூ வெர்சனாகி போனாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் ஒருநாள் நண்பகல் வேளையில் மயங்கி விழுந்தாள். குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் மயங்கி விழுக… சத்தம் கேட்டு வந்த கௌசல்யா மகளின் நிலையைபார்தது பயந்து அழுது திருகுமரனுக்கு அழைத்தார். அவரும் பதறி வந்து மகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
அதற்குள் தேவர்ஷியின் பெரியப்பா சித்தப்பா குடும்பத்திற்கும் தெரிந்துவிட.. அவர்களும் வந்துவிட்டனர். டாக்டர் பரிசோதித்து விட்டு அதிக மன அழுத்தம் தான் மயக்கத்திற்கு காரணம் என சொல்ல.. இந்த வயதில் மன அழுத்தம் கொள்ள என்ன என்று தெரியாமல் கலங்கி போயினர். அதற்குள்இரத்தபரிசோதனை முடிவுகளும் வந்துவிட.. பார்த்த டாக்டரே அதிர்ந்து போனார். குடும்ப டாக்டர் என்பதால் அவர்கள் குடும்ப விவரம் தெரியும் என்பதால்.. என்ன இது..என.. பெரிவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்.
நம்பமுடியாமல் அதிர்ச்சியாக இருந்தது. கௌசல்யா மனம் ஒடிந்து போய் அழுக.. திருகுமரனுக்கோ ஒரு சின்ன விசயத்தை கூட மறைக்காமல் தன்னிடம் சொல்லும் மகள் இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்துவிட்டாளே.. இன்று செய்திகளில் எல்லாம் வருவது போல மகளுக்கு ஏதேனும் கொடுமை நடந்துவிட்டதா.. தன் அப்பாவி பெண்ணை எவனாவது ஆசை வார்த்தை பேசி கெடுத்துவிட்டானா.. என பல சிந்தனைகள் ஓட மிகவும் கலங்கி போனார்.
சுந்தரமூர்த்திக்கு குடும்ப கௌரவத்தை கெடுத்துவிட்டாளே… என தாங்க முடியாத கோபம்.
“குமரா.. உன் பெண்ணை அடக்கி வைனு எவ்வளவு தூரம் சொன்னேன்… என் பேச்சை கேட்டியா… உன் பொண்ணால நான் இத்தனை நாளா காப்பாத்தி வந்த குடும்ப கௌரவமே போச்சு..” என சத்தமிட ..
சரண் “தாத்தா.. இங்க எதுவும் பேச வேண்டாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. “ என சொல்லவும் தன்னை முயன்று அடக்கி கொண்டார். சரணுக்கும் கோபம் தான் எப்பவும் தேவர்ஷியை பிடிக்காது. அவனை பொறுத்தவரை பொறுப்பில்லாதவள்.. இப்பவும் பொறுப்பில்லாமல் குடும்ப பேரை கெடுத்துவிட்டாள் என அவனுக்கும் ஆத்திரம் தான்.
தூங்குவதற்கு மருந்திட்டு இருக்க.. அடுத்த நாள் காலையில் தான் கண்விழித்தாள் தேவர்ஷி. பெற்றவர்களை தவிர மற்றவர்கள் யாரும் இல்லை. தேவர்ஷி கண்விழித்ததும் கௌசல்யா அழுது கொண்டே…
“யாராவது உன்கிட்ட தப்பா.. உனக்கு பிடிக்காம மிரட்டி.. கட்டாயபடுத்தி ஏதாவது செஞ்சிட்டாங்களா..” எங்கே மகளை கற்பழித்துவிட்டார்களோ என பயத்தில் பதட்டத்துடன் கேட்டார்.
மனைவி கேட்கவும் திருமரனுக்கும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது
. “அப்படி எல்லாம் இல்லம்மா..”என்றாள் இன்னும் ஒன்றும் தெரியாமல் அப்பாவியாக….
“அப்போ… யாரையாவது லவ் பண்ணனியா..உன் விருப்பத்த சொல்லியிருந்தா.. நாங்க வேண்டாம்னா சொல்ல போறோம்.. ஏன்இப்படி பண்ணின…” என் கோபம் கொண்டு அடிக்க..
அனிவர்த் கூட பழகியது தெரிஞ்சிடுச்சா… எங்கே எல்லாம் தெரிஞ்சிடுச்சா.. என விழித்தாள்.
“கௌசி.. பொறுமையா விசாரி..” என்றார் திருகுமரன் ஒரு ஒட்டாத தன்மையுடன்..
எப்பவும் அடிக்காத தாய் தன்னை அடிக்கவும் அதிலேயே பயந்து போயிருந்தவள்…
தனக்கு எதாவது என்றால் தாயை விட அதிகம் துடித்துப் போகும் தந்தை கிட்ட கூட வரவில்லை.. அவருடைய முகத்தில் ஒரு அந்நியதன்மை தெரியவும்… துடித்து போனாள்.
“என்னத்த விசாரிக்க சொல்லறிங்க… புள்ளய வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. அந்த கேவலத்த என்னனு கேட்க சொல்லறிங்க…
” என்னது வயித்துல புள்ளயா… என அதிர்ந்தாள். அழுவதா… சந்தோஷப்படுவதா.. என்ன செய்வது என அவளுக்கே தெரியவில்லை.
தேவர்ஷி என்ன செய்யப் போகிறாளோ????
very intersting sis super going
Super sis 💞