ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!

             [4]

இருபது நாட்களுக்குப் பிறகு,

தன் கேனைத் தரையில் மெல்லத் தட்டித் தட்டி நடந்தி வந்து கொண்டிருந்தவளின் நாசி, குப்பென்று ‘ரீபோர்ன்’ ஜெல்லின் நறுமணத்தை முகரலானது.

அந்த மணத்திற்கு சொந்தக்காரன் யாரென்று தெரிந்து விட, அக்னிமித்ராவின் இதழ்கள், தன் முத்துமூரல்கள் வெளித்தெரியும் வண்ணம் அழகாக விரிந்தது.

ஆம், அவளெதிரே நின்றிருந்தது ஊருக்கு ‘பீஷ்மர்’ வேஷம் போடும் பொல்லாத சந்துருவே தான்.

அன்று, டீஷேர்ட் மற்றும் டெனிமில் கால்களில் பூட்ஸூடனும், டீஷேர்ட்டிற்கு மேலாக ஒரு ஜாக்கெட்டுடனும் பனியில் உறைந்த ரோஜா மலரின் புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தவளை, கண்களாலேயே கல்மிஷம் செய்யலானான் சந்துரு.

அவனது திருட்டுக் கண்களோ சுற்றுமுற்றும் திரும்பி, சுற்றி வர ‘யாராவது இருக்கிறார்களா?” என்று பதற்றத்துடன் பார்த்தது.

அப்படி யாரும் இல்லையென்றானதும், அவை, மிகுந்த தைரியத்துடன், எதிரே நின்ற அப்பாவிப் பெண்ணின் அங்கத்தில் எல்லையில்லா உரிமை எடுத்துக் கொண்டது.

கண்களால் துகிலுரிக்கும் நவீன துச்சாதனனின் பார்வை அறியாமல், காற்றில் கை அசைத்து, “ஹாய்!”என்றாள் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்.

அவன் கண்களில் அன்று வித்தியாசமாகப் பதிந்தது அவள் நெற்றியோடு போடப்படிருந்த சின்ன பிளாஸ்டர்.

அதை சாக்காக வைத்து அவள் அங்கம் தொட முடிவு செய்தான் அந்தக் கயவன்.

 “ஹேய் என்னாச்சு? நெற்றியில் என்ன காயம்?”என்று கேட்டவனின் கைவிரல்கள், அவள் நெற்றியை வருடியதோடு நில்லாமல் அவள் கன்னத்தையும், கன்னத்துக்கு அருகாமையில் ஈரலிப்பாக இருந்த அவள் சிவந்த இதழ்களையும் சேர்த்தே வருட, உள்ளுக்குள் “சுருக்” என்றது அக்னிமித்ராவுக்கு.

பட்டென சந்துருவின் கையைத் தள்ளி விட்டவள் முகம் சிவந்து.. கண்களின் கருமணியில் ஒரு பதற்றம் ஓடவாரம்பிக்க,

“ஒண்ணு.. ஒண்ணுமில்லை.. பாத்ரூம்ல வழுக்கி வி.. ழுந்துட்டேன்.. எ.. எனக்கு ப்ரோரக்கிராமுக்கு டைமாச்சு..”என்றவள், அவனைத் தாண்டிச் செல்லவாரம்பிக்க, சட்டென அவள் முன்னங்கையைப் பற்றித் தடுத்தான் சந்துரு.

அவன் உடலும், முகமும் சாதாரணம் போல் தான் இருக்கிறது. இருப்பினும் அவனுடைய குரல் தான் அன்று போல இன்றும் உச்சபட்ச பதற்றத்தைக் கடன் வாங்கியது போல பேசவாரம்பித்தது.

“ஓ.. ஸாரி ரியலி ஸாரி.. தெரியாமல்.. அது தெரியாமல்..நா.. நான் வேணும்னு பண்ணலை..தெரியாமல்..ஸாரி மித்ரா”- அவன் பல ஸாரிக்களைக் கேட்க, அவள் முகத்தில் சின்ன சலனம்.

எதையும் முகத்தில் வெளிக்காட்டாமல், “இட்ஸ் ஓகே”என்றவள், தன் வெள்ளைப்பிரம்பைத் தட்டித் தட்டி ஸ்டூடியோவுக்குள் நுழையலானாள்.

சொகுசு நாற்காலியில் அமர்ந்து, காதுகளில் ஹெட்ஃபோனுடன், “பூம் ஆர்ம்”மினைப் பற்றிக் கொண்டு, மைக்ரோஃபோன் அருகே தன் இதழ்களைக் கொண்டு சென்றவளின் குரல் அப்படியே மாறியது.

வழமையாக அவளுள் தொற்றிக் கொள்ளும் உற்சாகம் பிறக்க, “ஹலோ வெல்கம்.. இது உங்கள் ஆர். ஜே மித்ராவின் “நீங்கள் கேட்டவை”… மனசு விட்டுப் பேசினால் பாரம் குறையும்னு சொல்வாங்க இல்லையா? அதனால மனம் விட்டுப் பேசுங்க.. ‘இந்தக் காலத்தில் யாருங்க நம்ம பேசுறதை நின்னு கேட்க இருக்கா?’ன்னு கேட்குறீங்களா? அப்படிக் கேட்குறவங்களுக்காகவே தான் இந்த ப்ரோக்ராம்!!

இன்னைக்கு நாம எதைப் பத்திப் பேசப் போறோம்னு பார்த்தீங்கன்னா.. “ப்ரப்போஸ் பண்ணி பல்பு வாங்கியிருக்கீங்களா? எப்படி?” ஷேர் வித் மீ..டோக் வித் மீ..வித் உங்கள் ஆர். ஜே மித்ரா!!..

நம்ம நிகழ்ச்சியில் இதோ ஃபர்ஸ்ட் கோலர்..”என்று பேசத் தொடங்கினாலும், உள்ளுக்குள் ஓர் இரகசிய தகவல்பரிமாற்றமொன்றே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இடைக்கிடையில் பாடல் ஒலிபரப்பான நேரமெல்லாம், கண்கள் மூடி, நெற்றிக் காயத்தைத் தழுவிக் கொண்டே அமர்ந்திருந்தவளுக்கு,

சந்துருவின் தீண்டலே திரும்பத் திரும்ப அவள் மூளையில் வந்து போய்க் கொண்டேயிருந்தது.

‘சந்துரு வேண்டுமென்றா தொட்டான்?’ மீண்டும் மீண்டும் அதே கேள்வி அவளுள்.

‘நெற்றியோடு கன்னம் வருடி, இதழ் வருடியது.. தெரியாமல் எதேர்ச்சையாக பட்டது போல இல்லை அக்னிமித்ரா’- இடித்துரைத்தது அவள் மனம்.

ஒரு சில நாழிகைகளின் தீவிர யோசனைக்குப் பிறகு, அதே குரங்கு மனம் அவளை உல்டாவாக யோசிக்க வைத்தது.

‘ ச்சேச்சே அப்படியிருக்காது.. ஒரு வருஷமாக அவள் இந்த ஆஃபிஸில் வேலை பார்க்கிறாள். இதுவரை அவன் நடத்தையில் ஒருபிழை சொல்லும்படி நேர்ந்ததே இல்லை.. ஆக, அவளுக்குத் தான் அப்படித் தோன்றியிருக்கும்’ என்று பலவாறு யோசித்து தன் மனதைத் தேற்றிக் கொண்டவள், அந்த சிந்தனையை விடுத்து, தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்.

அதேசமயம் கடந்த இருபது நாட்களில் அவளது வாழ்க்கையில் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது.

அவளுடைய தோழியான கலா, தன் போலீஸ் கணவனின் வற்புறுத்தலுக்கிணங்க, முன்னதாகவே விடுப்புக் கேட்டுக் கொண்டு, பிரசவத்திற்காக கொழும்பு போயிருந்த தருணம் அது!!

கலாவின் நட்பு நிமித்தம்.. சந்துருவுடன் இணைந்து.. அவள் நிகழ்ச்சியை இவள் செய்து வரும் காலமும் கூட!!

அனைவர் முன்னிலையிலும் வெள்ளைப் பிரம்பைக் கையில் திணித்து, இடக்கரடக்கல் பார்க்காமல் பேசிய, அந்தக் கணீர்க்குரலுக்கு சொந்தக்காரனும் எங்கேயோ மாயமாக மறைந்தும் விட்டிருந்தான்.

அதேசமயம்.. இரவில் அவள் வேலை முடிந்து வீடு செல்லும் போது, அவளை ஓர் மென்மையான காலடி ஓசைப் பின்தொடரவும் ஆரம்பித்திருந்தது.

முதலிரு நாட்கள்.. அது மீண்டும் யாரோ ஓர் திருடனோ என்று பயந்தவள், அதன்பின் வந்த நாட்களில்.. அந்த மென்மையான காலடிச்சத்தம் உருவாக்கும் ஒருவகையான தாளத்தைக் கேட்டுக் கொண்டே, கொஞ்சம் தைரியமாக நடக்கப் பழகியிருந்தாள்.

எட்டு வைத்த நடக்கப் பழகிய குழந்தை.. தனக்கு துணையாக தந்தை வருவது தெரிந்தால்.. சிரித்துக் கொண்டே தத்தக்கா பித்தக்கா என்று ஓடுமே!! அது போல.

அந்தக் காலடிச்சத்தம்.. அவளுள் ஓர் தைரியத்தை.. பாதுகாப்பை கொடுத்திருந்தது.

தன் நிகழ்ச்சி முடிய, கலாவின் சார்பாக அடுத்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, அக்னிமித்ரா அதே இடத்தில் அமர்ந்திருக்க, ஸ்டூடியோ கதவு திறக்கப்பட்டது.

அடுத்த நொடி, அந்த இடம் எங்கிலும் குப்பென்று ஹேர் ஜெல்லின் நெடி வீச, ‘இதோ சந்துரு வந்து விட்டான்’ என்பதை அவன் வாய் விட்டு சொல்லாமல் காட்டிக் கொடுத்தது அது.

பார்வைத் திறன் போனால், இதர உணர்திறன்கள் விரிவடைகின்றது என்பது எத்தனை உண்மை?

பார்வை செய்ய வேண்டிய வேலையை அவள் செவிகளும், நாசியும், தோலும் என செவ்வனே ஈடுகொடுத்து செய்து கொண்டிருந்தது.

“ஹாய் மித்து.. ஷோ ஆரம்பிச்சிரலாமா?”என்று ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக் கொண்டே அவன் கேட்க, தன் பெருவிரல் உயர்த்தி, “தம்ப்ஸ் அப்”சைகை காட்டியவள், நிகழ்ச்சிக்கான தீம் மியூசிக் ஒலித்ததும் தன் இனிய குரலால் பேசவாரம்பித்தாள்.

“வெல்கம் பேக்..உங்க ஃபேவரிட் ஆர். ஜே கலா சார்பா நான். நான் உங்கள் ஆர். ஜே மித்ரா.. வித் சந்துரு…”என்று பேசிக் கொண்டிருக்கும் போது,

அந்தக் கயவன் அமர்ந்திருந்தவளின் தொடைகளின் வனப்பையே கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாமல், காமம் கமழ நோக்கலானான்.

அவனுக்கு, மித்ராவை அருகாமையில் பார்க்கும் ஒவ்வொருநொடியும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி கூடிக் கொண்டே போனது.

போலீஸ்காரரின் மனைவி கலா வேறு இல்லாதது, அவனது வெகுநாள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள மதகாக அமைந்து விட, அவளையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் சந்துரு.

ஸ்டூடியோவுக்கு வெளியே கண்ணாடிச்சாளரம் வழியாக, யாராவது ஊழியர்கள் செல்வதைப் பார்த்தால் மட்டும், அவனது பொல்லாத விழிகள், கண்ணியப் பார்வை சிந்த, அவர்கள் விட்டகன்றதும் மீண்டும் துச்சாதனப் பார்வை பார்த்தது அது.

அவளை காமக் கண்களுடன் பார்த்திருந்தவன், யாரும் அறியாமல் மேசைக்கு அடியில் கைகளை பூனை போல் கொண்டு சென்று, அவளது தொடையை மெல்லப் பிடித்து வருடலானான்.

நேயருடன் இன்முகமாகப் பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சு, விக்கெலெடுத்தால் போல ஒரு நிமிடம் அப்படியே தடைப்பட்டு நின்றது.

அவனின் கை தன் தொடையிலிருந்து மெல்ல மெல்ல மேலேறுவதை உணர்ந்தவளுக்கு, சுருசுருவென உச்சாதி பாதம் வரை எழுந்தது அக்னிச்சீற்றம்.

பிறநேரமாயிருந்தால் சந்துருவின் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் இது நிகழ்ச்சி நேரமாயிற்றே?

இலங்கையின் இண்டு இடுக்கில் எல்லாம் இவள் குரல் ஒலித்துக் கொண்டிருக்க, எதுவும் செய்ய முடியாமல் போகவே, ஓர் நெடிய மூச்சொன்றினை எடுத்து விட்டுக் கொண்டே,

 அடுத்த நொடி அவன் கையை வலுக்கட்டாயமாக தன்னில் இருந்து அகற்றியவள், அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளது அந்த முறைப்புப் பார்வையே.. அக்னிமித்ரா அந்த மாதிரி பெண்ணல்ல என்பதைக் காட்டினாலும், வெளிறிய முகத்துடன் மித்ராவைப் பார்த்தபடி நின்றிருந்தான் சந்துரு.

நாசித்துவாரம் விடைத்து விடைத்து அடங்க, அவனைப் பார்த்துக் கொண்டே மைக்கில், பல்லைக் கடித்துக் கொண்டு, “ஏன் ச்சந்துர்ரு… இன்னைக்கு ரொம்ப ம்மௌனமா இர்ருக்கீங்க?.. உங்க குரல் கேட்க பல்லாயிரக்கணக்கான நேயர்கள் க்காத்திருப்பாங்க.. ப்ளீஸ்..”என்று சொல்ல,

இதுவரை ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசியிருந்தவன், பதற்றத்துடன் வாய் திறக்கலானான்.

“ஆ.. ஆஆ… ஆமா…”என்று திக்கியபடியே அவன் வாய் திறந்து பேச, அவள் ஸ்டூடியோவுக்குள் அவனுடன் அமர்ந்திருந்த ஒவ்வொரு விநாடியும் அவஸ்தையுடனேயே கழிந்தது அவளுக்கு.

அவளில் உருவான அலைப்புறுதலை, குரலில் மட்டும் வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை அக்னிமித்ரா.

ப்ரோக்ராம் முடிந்ததும், கதவை படாரெனத் தள்ளித் திறந்து கொண்டு வெளியில் வந்தவள் முகம் இறுகி, சிவந்து போயிருக்க, அவன் நடையோ மின்னல் வேகத்தில் அமைந்திருந்தது.

அவளைப் பின்தொடர்ந்து மெல்லோட்டத்துடன் வந்து கொண்டிருந்த சந்துரு தன் நாடகத்தை சரியான முறையில் அரங்கேற்ற, அவள் பின்னாலேயே,

“மித்து.. மித்து..”என்ற வண்ணம் விரைந்து வந்து, மித்ராவின் முன்னங்கையைப் பற்றி அவளைத் தடுத்து நிறுத்தினான்.

அவன் தீண்டல் கூட தீது என்று கருதியவள், அவனில் இருந்தும் தன் முன்னங்கையை உருவி எடுத்துக் கொண்டவள், அடித்தொண்டையில் இருந்து சீறியவளாகக் கேட்டாள், “எத்தனை நாளாஆஆ இந்த எண்ணம் இர்ருக்கு உன் ம்மனசில்??..”என்று.

அவள் நாசி நுனியின் சிவப்பு சொல்லிற்று.. அவள் உடல் எத்தகைய உஷ்ணத் தகிப்பை அடைந்து கொண்டிருந்தது என.

அந்தக் காம மிருகத்தின் கண்களில் சட்டென ஓர் பயம் வந்து போனது.

பின்னே மித்ராவின் கத்தல்.. இராத்திரி நேரத்தில் அங்கு பணிபுரியும் சிற்சில ஊழியர்களின் காதில் விழுந்து வைத்தால்? அதனால் விளைந்த தடுமாற்றமே அது.

அவனது அதிர்ஷ்டமோ.. மித்ராவின் துரதிர்ஷ்டமோ அந்தக் கொரிடோரில் யாருமே இருக்கவில்லை.

சட்டெனத் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவன், போலி பரிதவிப்பு மீதூறும் குரலில்,

“மித்து உன்னை கண்ட நாளில் இருந்து நான் நானாக இல்லை.. ஏன்னா நீ இங்கேயிருக்க.. ஐ லவ்..”என்று அவள் உள்ளங்கை எடுத்து, நெஞ்சில் வைத்து, சொல்லிக் கொண்டே போக,

அவனிலிருந்து உருவியெடுத்த கையாலேயே பளாரென ஓர் அறை விட்டிருந்தாள் சந்துருவின் கண்களுக்கு.

“ச்சீ!! பொண்ணுங்களை கண்ட இடத்துல தொடுறதோட பேரு தான் காதலா..??”என்று கேட்ட நேரம், உள்ளுக்குள் இருக்கும் வெம்மை தாளாமல், விழியோரம் தேங்கி நின்றது ஒரு சொட்டுக் கண்ணீர்.

“மித்து..”- போயும் போயும் ஒரு குருட்டுப் பெண் கையில் அடிவாங்கி விட்டோமே என்ற அவமானம் தோன்ற, கன்னத்தை தேய்த்துக் கொண்டே கத்தினான் சந்துரு.

அவளுக்கோ அவனது ஹேர்ஜெல் வாசனை வேறு குமட்டுவது போல இருக்க, “நீ இவ்ளவு மோசமானவான இருப்பேன்னு நினைக்கலை..”என்றவள், அருவெறுப்பு காரணமாக காறி உமிழ்ந்து, அவன் முகத்திலேயே துப்பியவள், விடுவிடுவென வெளியே நடந்தாள்.

தன் கன்னத்தில் வந்து விழுந்த அவளுடைய எச்சில்.. இதுவரை காமக் கண்களோடு நின்றிருந்தவனை, ஓர் வெறி கொண்ட மிருகத்தின் கண்கள் கொண்டவனாக மாற்றியது.

மித்ரா தன் முகத்தில் எச்சில் துப்பி அவமானப்படுத்தியதைத் தாங்க மாட்டாதவன், தான் பட்ட அவமானத்தை.. அவளும் பட வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே எச்சிலை அழுந்தத் துடைத்தான்.

‘ச்சீ.. ஆண்கள் எல்லாருமே வெறிபிடித்த நாய்கள்.. அவன் சந்தித்த ஒரு ஆடவன்.. பெண்ணின் உணர்ச்சிகளை மதியாமல் நடந்தான்.

அவள் சந்தித்த இன்னோர் ஆடவன்.. பெண்ணை உயிரும், உணர்வும் உள்ள மனுஷியாகப் பார்க்காமல், போதை தரும் வெறும் தசைப்பிண்டமாகப் பார்க்கின்றான்.

நினைக்க.. நினைக்க… அவள் கண்களின் முன் வந்து போனான்..அவளை மனதளவிலும், உடலளவிலும் ரொம்பவே காயப்படுத்தியிருக்கும் தேவ் வர்மன்!!

அவனால் தானே.. இவளுக்கு இந்த நிலைமை? கண் பார்வை போய்.. அவளுக்கிருந்த ஒரே சொந்தமான தாத்தாவும் அவளை விட்டுப் போய்.. எதிரில் நிற்பவன் அவளை என்னமாதிரி கண்கொண்டு பார்க்கிறான் என்பது கூட அறியாமல் நிற்கிறாள்??

அவளிருந்த பதற்றமான சூழ்நிலையில்.. தன்னை எந்நாளும் பின்தொடர்ந்து வரும் மென் காலடிச்சத்தம்.. இன்று பின்தொடராமல் போனதை அவதானிக்க மறந்து போனாள் அக்னிமித்ரா.

‘தேவ் வர்மன் சாகணும்.. அதுவும் என் கையால தான் சாகணும்..துடிச்சுத் துடிச்சு சாகணும்’ என்று வழிநெடுக முணுமுணுத்துக் கொண்டே, நடந்தாள் அக்னிமித்ரா. நேரம் இரவு நடுசியை நெருங்கிக் கொண்டிருக்க,சும்மாவே ஆள் நடமாட்டம் இல்லாத தெரு அது!!

தெருநாய்களும் கூட உறைபனியைத் தாக்குப்பிடிக்க முடியாமல், கதகதப்பான இடம் தேடி சென்றிருக்கும் மயான அமைதி கொண்ட பயங்கர இரவு அது!!

தன் வெள்ளைப் பிரம்பைத் தட்டித் தட்டி நகர்ந்தவளின் கையைப் படாரெனப் பற்றி இழுத்தது ஓர் ஆண்கரம்!!

அவள் நாசி மீண்டும் ஒருமுறை முகர்ந்தது.. சகிக்க முடியாத ஹேர் ஜெல் மனத்தை!

அவளின் முதுகு.. ஓர் சுவற்றுக்கு நேராக சாத்தப்பட, அவள் வாயை இறுகப் பொத்தியிருந்தது அதே கரம்!!

அவளது உடலை.. கடவுள் கொடுத்த வன்மையான உடலால் நசுக்கிய அந்தக் கொடியவன், அவளது காதோரம் சொன்னான், “ஏன்டீ.. என் ம்முகத்திலேயா எச்சில் த்துப்புற? நாளை காலையில உன் முகத்தைப் பார்த்து எல்லாரும் எச்சில் துப்ப வைக்கிறேனா இல்லையான்னு பாரு?”என்று கறுவிக் கொள்ள, அவளது விழிகள் அகல விரிந்தன.

அவளுக்கோ… தன் முன்னாடி இருப்பது சந்துரு என்று புரிகின்றது. இருப்பினும் வந்தவன் சுவரிலே அவளைச் சாய்த்து அணைகட்டி நிற்க,

அவளது இருண்ட விழித்திரைக்குள் விரிந்தான் தேவ்!!

இரண்டு வருடங்களுக்கு முன்பு.. சேப்டர் வன் உணவகத்தின் வாஷ்ரூமில்.. இதோ போல அவளை சுவரோடு சுவர் சாய்த்து… மானபங்கப்படுத்திய அதே தேவ்!!

குரல் தான் என்னமோ சந்துருவுடையதாக வெளிவந்து கொண்டிருந்தது.. ஆனால் அவளது வாயை இறுக மூடியிருந்தவன் தேவே தான்.

அதே கோர்ட் சூட்டில், தன் தொடைகளுக்கிடையில் அவனது தொடைகளை அழுத்தி, அவள் மார்புகளை அழுந்த நசுக்கிக் கொண்டிருப்பது போல காட்சியில் புலனாயிற்று.

அக்னிமித்ராவின் முள்ளந்தண்டு வடம் ஜில்லிடத் தொடங்கியது.

தேவ்வின் இதழ்கள்.. தன் இதழ்களைக் கவ்வ வருவதை வெறுத்தவள், அவனுடைய தாடையை தன் கரங்களால் பற்றித் தன்னை விட்டும் அப்புறத் தள்ளி விட்டாள்.

அவள் கண்களில் நின்றும் சரேலென வழிந்தோடுகிறது கண்ணீர்!! அத்தனை இக்கட்டான நிலையிலும், கதறி அழுது, “என்னை விட்டுடு”என்று மன்றாடினாளா பெண்??

அது தான் இல்லை!!

தன் கையில் இருந்த வெள்ளைப் பிரம்பையே தன் ஆயுதமாகக் கொண்டவள், தன் முன்னே நிற்கும் தேவின் நடுமண்டைக்கே இடைவிடாமல் அடித்துக் கொண்டே போனாள் அக்னிமித்ரா.

அவளது ஒவ்வொரு தாக்குதலுக்கும் அவள் இதழ்கள் ஒரு வைராக்கியத்துடன் இடையறாது சொன்னது இவைதாம்.

“ப்பொண்ணுங்கன்னா.. உனக்கு கேவலாமப் போச்சா?? ..ப்பொண்ணுங்கன்னா.. உனக்கு கேவலாமப் போச்சா.. ப்பொண்ணுங்கன்னா.. உனக்கு கேவலாமப் போச்சா…” என்ற வண்ணமே மீண்டும் மீண்டும் அடித்தாள் அக்னிமித்ரா.

சந்துருவின் உச்சந்தலையில் ஊற்றெடுத்த இரத்தம், அவள் நெற்றியோடு பீறிட்டு வழிந்தது. கண்கள் வேறு எரியத் தொடங்கவே, அவளது முரட்டுத்தனம் இன்னும் கொஞ்சம் கோபத்தைக் கொடுத்தது சந்துருவுக்கு.

அடுத்த நிமிடம், அவள் ஓங்கிய வெள்ளைப்பிரம்பை அந்தரத்தில் தடுத்தி நிறுத்திய தேவ், “ஆப்டரோல் க்குருடி.. உனக்கே இவ்வளவு இருந்தால்.. ஆம்பளை நான்.. எனக்கு எவ்வளவு இருக்கும்..”என்றவன்,அவளது கேனை தன் இரும்புக் கரங்களால் பறித்து தூர வீசி விட்டு அவளை நோக்கி முன்னேறத் தொடங்கினான்.

அதைத் தொடர்ந்து அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி விழுந்தது இடிஇடியென அடி!!

அந்தக் கொடிய மிருகத்தின் கைவிரல்களின் பட்டு.. விண் விண்ணென்று வீங்கிப் போனது அவளது கன்னங்கள் இரண்டும்!!

அடியின் வீரியம் தாள முடியாமல்.. அவள் தரையிலேயே பட்டென்று இரண்டாக மடிந்து அமர, அவளை நோக்கிக் கேட்டது தேவ் எடுத்து வைக்கும் அழுத்தமான காலடி ஓசை!!

அவளுக்கு அன்றைய நாளில்.. அவளது தளிர்விரல்கள் நசுக்கி.. அவன் தந்த வடு.. மீண்டும் பசுமையாக வந்து போக, சட்டென தரையில் இருந்த கைகளை எடுத்து தன் மார்புக்குழிக்குள் ஒளித்துக் கொண்டாள் பெண்!!

அவளுடைய கண்கள்.. அங்குமிங்கும் அலைபாய.. அவள் எழ எத்தனித்த நேரம், அவளது கழுத்தில் கை வைத்து.. கீழே தள்ளியது தேவ்வின் வலிய கரங்கள்!!

மல்லாக்க விழுந்தவளின் பின்னந்தலை.. பாதையில் மோத, கண்களை வலியில் மூடிக் கொண்டிருந்தவளின் இடுப்புக்கு கீழான பகுதி உடை சரேலெனக் கீழிறங்கி,

உடலில் காற்று நாராசமாகப் படுவதை உணர்ந்தவளின் மேனி தூக்கிவாரிப்போட்டது.

தேவ்.. முன்னாடி அவள் நின்றிருக்கும் நிலை?? யாராலும் உதவ முடியாத பரிதாபமான நிலை??

இத்தனை நேரம் வரை.. துணைக்கு யாரையும் அழைக்காமல்.. தனியாகப் போராடியவளின் உறுதி உருக்குலைந்து போனது.

கைகள்.. தரையில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று துலாவ, “ஹெல்ப்… ப்ளீஈஈ”என்று வானத்தைப் பார்த்த வண்ணம் கத்தியவளின் வாயை, அதற்கு மேலும் விடாமல் இறுகப் பொத்தியது ஓர் கொடூர மிருகம்.

அவள் மேனியில், இவனது பாரத்தை உணர்ந்த அடுத்த நொடி.. மூச்சடைப்பது போல இருக்க, கண்கள் வழியாக கண்ணீர் வழிந்தோட, நின்றிருந்தவளின் காதுகளில் ஒலித்தது.. அவளை கடந்த இருபது நாட்களாப் பின்தொடர்ந்து வந்த காலடிச்சத்தம்!!

மென்மையான காலடிச்சத்தம்!!

உடலில் நாடி நரம்பெங்கும் புது வைராக்கியம் ஊடுருவிப் பாய, காலால் தரைக்கு ஓங்கி ஓங்கி அடித்து ஒலி எழுப்பலானாள்.

அந்தச் சின்னச்சத்தம் யார் செவியையும் சென்றடையவில்லையாயினும், சென்றடைய வேண்டியவனின் செவிகளுக்கு சரியாகவே சென்றடைந்தது.

அடுத்த நொடி, அந்த முட்டுச் சந்தின் சுவர்கள் பட்டுத் தெறிக்கக் கேட்டது ஓர் கணீர்க்குரல்!!

“மித்ராஆஆஆ!!”

அந்தக் குரலில் சந்துருவுக்குள் ஓர் நடுக்கம் பிறக்க, மித்ராவுக்குள்ளோ அந்தக் காலடிச்சத்தத்தின் உரிமையாளன் குரல் ஒலித்ததில் ஓர் ஆசுவாசம் பிறக்கலானது!!

அங்கே நின்றிருந்தது அதிமன்யு!! அவன் கண்கள்… இயலாமை நிறைந்த பெண்ணிடம்.. தன் ஆண்மையை நிரூபிக்க முயலும் மிருகமான சந்துருவின் கண்களை சுட்டுப் பொசுக்குவது போலப் பார்த்தது.

கை முஷ்டி இறுக, கழுத்து நரம்புகள் புடைத்து அகோரமாக வெளித் தெரிய நின்றிருந்தவனின் கைகள், புயல் வேகத்தில் தான் செயற்பட்டது.

சந்துருவின் கழுத்தை உடும்புப் பிடியாகப் பிடித்தது அவன் கரங்கள்!!

சந்துரு தன்னில் பதிந்த அந்நெடியவனின் கையைத் தன்னிலிருந்தும் அகற்ற பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டும் அவனால் இம்மியளவேனும், அதிமன்யுவின் உடும்புப் பிடியை அகற்ற முடியவில்லை.

நேரே சந்துரு இழுத்துச் சென்று சுவரில் சாய்த்தியவன்.. அவனது பிடியின் அழுத்தத்தை நொடிக்கு நொடி ஏற்றிக் கொண்டே போக,

சந்துருவின் முகத்தில் இருக்கும் பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்து, வாய் வழியாக எட்டிப் பார்த்தது இரத்தம்!!

மித்ராவோ.. சிறு குழந்தை போல.. சட்டென்று எழுந்து அமர்ந்து.. சுவரோடு சுவர் ஒட்டியவளாக நடுங்கிக் கொண்டு நிற்க, அதை ஒருகணம் கழிவிரக்கத்தோடு பார்த்த அதிமன்யுவின் கண்கள், சந்துருவைப் பார்த்த போது கொலைவெறி சிந்தியது.

சந்துருவின் வாயை அழுத்திப் பிடித்தவன் அவன் காதோரம், “இனி ம்மித்ராக்கிட்ட ம்மட்டும் இல்லை.. எந்தப் ப்பொண்ணை நெர்.. ருங்கினாலும் உனக்கு என் ஞாபகம் வரும்”என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து,

ஒரு சிறு முழங்கை அளவான கத்தியொன்றை வெளியில் எடுத்தான்.

அதிமன்யு செய்யும் தொழில் அப்படி. எந்நேரமும் ஓர் ஆயுதம் அவனிடம் இருந்து கொண்டே தான் இருக்கும்!

சந்துருவின் இடுப்புக்கு கீழே, அவன் ஒரு ஆண் என்பதைப் பறைசாற்ற இறைவன் கொடுத்த அங்கத்திலேயே “ச்சதக் சதக்” என்று குத்தினான் அதிமன்யு.

வலி தாங்க முடியாமல் அவன் கத்த முனைந்தாலும், சத்தம் வெறும் முனகல் ஒலியாகவே வந்தது அந்தக் கொடிய மிருகத்தின் ஓசை!!

பட்டமரம் போல நிலத்தில் வீழ்ந்து சந்துரு கத்தத் தொடங்க, மெல்ல மித்ராவை நாடிப் போனவன், அருகே அமர்ந்து மித்ராவைத் தொட, அச்சத்தில் அலறிக் கொண்டே பின்வாங்கலானாள் அக்னிமித்ரா.

அவளது அச்சம்.. அவளிருந்த நிலை.. இதழ்களில் உறைந்திருந்த இரத்தம்.. என எல்லாமும் திடகாத்திரமான தேகம் படைத்த ஆண்மகனின் இதயத்தை ஆட்டுவிக்க, கண்களில் இருந்தும் வழிந்தது நீர்.

எத்தனையோ பேரை ஈவு இரக்கம் பாராமல் அடித்து துவம்சம் செய்யும் அதிமன்யுவின் இரும்பு இதயம் கூட, அந்தக் கண்பார்வையற்ற பெண்ணின் நிலை கண்டு கண்ணீர் சிந்தியது.

மெல்ல அவளைத் தன்னோடு அணைத்தவன் காதுக்குள், “பயப்படாதே..ஒண்ணுமில்லை.. ஒண்ணு.. இல்லை… ஓகே”என்று தேற்ற,

இத்தனை வருடங்களில் இருந்த இரும்புப் பூட்டைத் தளர்த்தி, அதிமன்யுவின் இதயப்பக்கத்தில் முகம்புதைத்து கதறிக் கதறி அழுதாள் அக்னிமித்ரா!!

 

 

3 thoughts on “எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top