25 – ஆடி அசைந்து வரும் தென்றல்
மொத்த குடும்பமும் திருகுமரன் வீட்டில் கூடியிருந்தனர். இளையவர்களில் சரண் தவிர மற்றவர்கள் கண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரியவர்கள் நிலைகுலைந்து போயிருந்தனர். என்ன செய்வது…என தெரியாமல் ஆளுக்கொரு சிந்தனை. ஏதாவது செய்து.. எப்படியாவது தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு வராது செய்தாக வேண்டிய கட்டாயம்.சுந்தரமூர்த்தியோ கோபத்தின் உச்சத்தில்…. கோபம் இருக்க தானே செய்யும்.. ஆணோ.. பெண்ணோ.. ஒழுக்கம் என்பது அவசியம். அந்த ஒழுக்கம் தவறும் போது அந்த குடும்பத்தின் மேல் சமூகத்தின் பார்வையே மாறி் தானே போகிறது.
தேவர்ஷியை நடுவில் நிறுத்தி அவளை கேள்விகளால் கார்னர் பண்ணினர்.
“லவ் பண்ணினியா.. யாரை..”
“இல்ல.. லவ் பண்ணறேனு சொல்லியிருந்தா.. நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.. “
“எதுக்கு இப்படி பண்ணின..”
“இப்பவாவது சொல்லு.. யார் என்னனு.. “
“எவனாவது உன்கிட்ட முறை தவறி நடந்துகிட்டானா..”
“அப்படி இருந்திருந்தா.. யார் அவன்.. எங்ககிட்ட சொல்லியிருக்கலாமல… கட்டி வச்சு வெளுத்திருப்போம்..”
எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருந்தாள். என்ன சொல்லுவாள்.. அனிவர்த்.. அவன் தெளிவாக தான் இருந்தான். விருப்பம் உள்ள வரை தான் இந்த உறவு.. இதில் காதல் கல்யாணம் என்ற பேச்சிற்கு இடமில்லை இதை சொல்லி தானே… அவன் உறவுக்கு அழைத்தான். கடைசி வரை அவன் முடிவில் அவன் உறுதியாக தானே இருந்தான்.
அவன் மேல் உள்ள காதல் பித்தில் அவனோடு பழகியது நான் தானே.. தன் மேல் அவன் காட்டும் அதீத ஆர்வம்.. நாளடைவில் தன்னை இழக்க விரும்பாமல் கல்யாணம் செய்து கொள்வான் என நினைத்தது எல்லாம் தன் தவறு தானே.. இதில் எங்கிருந்து அவனை சொல்லமுடியும். அதுவும் அவன் சொன்னதும்.. அதையும் ஏற்று கொண்டு தான் பழகியது தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என மிகவும் பயந்தாள்.
குழந்தை என கேட்டதும் அதிர்ந்தவள்.. முதலில் எப்படி எடுத்து கொள்வது என அவளுக்கு தெரியவில்லை. தன் காதலின் கிறுக்குதனத்தின் உச்சம் தான் இந்த குழந்தை அப்படி தான் அவளால் நினைக்க முடிந்தது. அவனை எப்படி இதில் பொறுப்பாக்க முடியும். அவன் கண்டிசன்களுக்கு எல்லாம் கட்டுப்பட்டு தானே அவனுக்கு இணங்கினேன்.. அப்போ பிள்ளைக்கும் நான் தானே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
என்ன ஆனாலும் அது என் குழந்தை.. என் உதிரத்தில் உதித்தது… என் குழந்தை.. என் காதலுக்கு கிடைத்த அன்பு பரிசு.. நான் காதலித்தேன் என் காதலில் விளைந்த முத்து…என் காதலின் சின்னம் என நினைக்க.. நினைக்க… அவளுள் தாய்மை பெருகி உவகை கொண்டது. எனக்கு மட்டுமே குழந்தை.. இந்த குழந்தை போதும் என் வாழ்க்கைக்கு… என குழந்தையை வாழ்வாதரமாக பற்றி கொண்டாள்.
எந்நேரமும் எதோ யோசனையில் இருக்கும் மகளிடம் கௌசல்யா என்ன கேட்டும் பதிலில்லை. இரண்டு நாட்கள் இவர்களாக சொல்வார்கள் என காத்திருந்த குடும்பத்தினர் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே.. காலையிலேயே வந்து.. விசாரணையை ஆரம்பித்துவிட்டனர்.
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்.. எல்லோருக்கும் கோபம் வந்தது. சுந்தரமூர்த்தியோ..
“குமரா.. உன் பொண்ணு உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா…” திருகுமரனைப் பார்க்க…
அவருக்கே தெரியாததை அவர் என்ன என்று சொல்வார். இல்லை எனும் விதமாக தலையை ஆட்டினார்.
ஆடிட்டிங் படித்து கவர்மெண்ட் வேலை தேடிக் கொண்டதோடு தங்கள் குடும்ப தொழிலுக்கும் ஆடிட்டிங் செய்யும் தன் சித்தப்பாவின் மேல் எப்போதும் தனி மதிப்பு உண்டு சரணுக்கு… எல்லோர் முன்பும் அவர் தலை குனிந்து நிற்பதை பாரத்தவனுக்கு தேவர்ஷியின் மேல் கோபம் அதிகமானது. கோபத்தில் தேவர்ஷியை ஓங்கி ஒரு அறைவிட்டான்.
சரண் அடிப்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை.. வீட்டின் முதல் பெண் வாரிசு அதுவும் இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் பிறந்தவள்.. என அவள் மேல் எல்லோருக்கும் பாசம் தான். அவளிள் துடுக்குத்தனமும்… அசட்டு தனமும் தான் அவர்களுக்கு பிடிக்காமல் போனது.
“டேய் சரண் வேண்டாம்..” கண்ணன் வந்து தடுத்தார்.
“அது என்ன பழக்கம் .. பொம்பள புள்ளைங்க மேல கை வைக்கிற பழக்கம்..” என மீனாட்சி மகனை கண்டிக்க…
என்ன தான் மகள் தவறு செய்திருந்தாலும் தாயாக கௌசல்யாவின் மனம் துடித்து தான் போனது. புடவை தலைப்பால் வாயை மூடிக் கொண்டு அழுதார்.
திருகுமரன் என்ன சொல்லுவார்.. அவருக்கு மகள் தேவதை..கள்ள கபடமில்லா குழந்தை…என நினைத்திருக்க… மகள் எவ்வளவு பெரிய தப்பை மறைத்திருக்கிறாள் என அறிந்த நொடி ஒரு தகப்பனாக மரித்து போனார்.
“பின்னே என்ன சித்தப்பா… குமரன் சித்தப்பாவை பாருங்க.. எப்படி வேதனையோடு நிற்கிறாரு.. எல்லாம் இவளால தான.. இத்தனை பேர் கேட்கிறோமே.. ஏதாவது வாய் திறந்து சொல்றாளா பாருங்க..”
“சரண் வேண்டாம்.. அவளை தொடாத இந்த தரங்கெட்ட நாய தொட்டா நமக்கு தான் அசிங்கம்.. உடம்பு அரிப்பெடுத்து போய் எவன்கிட்டயோ வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா.. ச்சை.. இந்த …. நாய இனி நம்ம குடும்பத்துல வச்சுக்க முடியாது. இவளுக்கு இந்த வீட்ல இடமில்லை.. கழுத்தை பிடித்து வெளிய தள்ளு…”என சுந்தரமூர்ததி கர்ஜிக்க..
அவர் வீட்டை விட்டு போக சொல்வார் என எதிர்பார்க்காமல் எல்லோரும் அதிர்ந்து நின்றனர். தேவர்ஷியோ கிளம்ப எத்தனிக்க… திருகுமரன் வேகமாக வந்து மகளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினார். அதற்குள்
“அப்பா.. என்ன இப்படி பேசறிங்க.. போ சொன்னா எங்க போவா அவ..” என கண்ணன் பேச…
“எங்கயோ போகட்டும்.. இவளால நம்ம குடும்ப கௌரவம் போயிடும்.. இந்த தறுதலையால மத்த புள்ளைங்க கெட்டு போயிடும் .. அதனால இவளை துரத்தி விடறது தான் நமக்கு நல்லது..”
அது வரை தவறு தன் மகள் மேல் இருக்க.. தந்தையின் கோபத்திற்கு கட்டுப்பட்டு இருந்தவர்.. தன் மகளை வெளியே அனுப்ப சொல்லவும்… தந்தையை எதிர்த்து நின்றார்.
“அப்பா என் பொண்ண நான் எங்கயும் அனுப்பமாட்டேன். அவ இங்க தான் இருப்பா..”
“அவள இங்க வச்சிருந்தா நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடும்.. எனக்கு ஒரு பேரு… ஒரு மரியாதை இருக்கு.. எனக்கு தான் அவமானம்… இவள எங்கயாவது அனுப்பிடு.. கேட்டா வெளிநாட்ல படிக்கறா.. இல்ல வேல பார்க்கிறா.. சொல்லிக்கலாம்..”
“இல்லப்பா அப்படி பண்ண முடியாது.. என் மக சொல்ற மாதிரிஇருந்தா சொல்லியிருப்பா.. அவளே உள்ளுக்குள்ள என்னத்தையோ போட்டு மறுகிட்டு இருக்கா.. இந்த நிலைல என் பொண்ண என்னால தனியா விடமுடியாது..”
சுந்தரமூர்த்தியோ “குமரா.. அந்த சனியனோட நீயும் போனா என் சொத்துல் ஒரு சல்லி பைசா தரமாட்டேன். இந்த வீடு கூட இன்னும் என் பேர்ல தான் இருக்கு.. அத மறந்திடாத.. உன் பொண்ணு தான் வேணும்னா நீங்களும் இந்த வீட்டை விட்டு போகனும்..” என்றார் ஆவேசமாக..
உடனே சற்றும யோசிக்காமல் மகளுக்காக சட்டென குடும்பம் சொத்து எல்லாவற்றையும் நொடியில் தூக்கி எறிந்தார்.
“தப்பு பண்ணி இருந்தாலும் என் பொண்ண நான் எப்படியோ போனு தெருவுல விடமுடியாது. உங்க பேர் என் பொண்ணால கெட வேண்டாம். நாங்க குடும்பத்தோட வேற ஊருக்கு போயிடறோம்..” என ஒரு தந்தையாக தன மகளை அந்த நிலையிலும் விட்டு கொடுக்கவில்லை.
“அண்ணா.. வேண்டாம்..” என கண்ணனும்..
“என்ன சித்தப்பா..” என சரணும் தடுக்க..
விஸ்வநாதன் தந்தையின் பேச்சை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்து கொண்டார்.
“இல்ல வேண்டாம்.. அப்பானு நான் இருக்கும் போது என் பொண்ணு அநாதை மாதிரி எங்க போவா.. அவளுக்கு கடைசி வரைக்கும் நான் துணை இருப்பேன்.. ஒரு பத்து நாள் டைம் கொடுங்க.. நாங்க கிளம்பிடறோம்”
கண்ணன் எதோ சொல்ல வர.. எல்லோரையும் பார்த்து கை எடுத்து கும்பிட்டவர்.. மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
சொன்னது போலவே திருகுமரன் டிரான்ஸபர் வாங்கி கொண்டு டெல்லி சென்றுவிட்டனர். பிரவீனின் படிப்புக்காக ஹாஸ்டலில் சேர்க்க பாரக்க.. கண்ணன் கோமதி தம்பதியர் “ நாங்க பார்த்துக்கமாட்டோமா.. எங்களை எதுக்கு தள்ளி வைக்கறிங்க..” என கோபப்பட..
தன் மகளை வேண்டாம் என சொன்ன இடத்தில் மகனை விட்டு வைக்க.. தன்மானம் இடம் கொடுக்காததால்.. மகனை பிடிவாதமாக ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்.
பெற்றவர்கள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் தன்னை பார்த்து வருந்துவதை கண்டு தேவர்ஷி பொறுக்க முடியாமல்… தான் முறை தவறி எல்லாம் போகவில்லை. எனக்கு ஒருவரை பிடித்திருந்தது. ரகசிய கல்யாணம் செய்து கொண்டோம். சில நாட்கள் வாழ்ந்தோம். ஒத்துவரவில்லை.. பிரிந்துவிட்டோம்.. என சொல்ல..
திருகுமரன் யார் என சொல்… வேண்டுமானால் நான் பேசி பார்க்கிறேன்.. என கேட்க பிடிவாதமாக மறுத்துவிட்டாள். இனி இதை பற்றி பேசினால் கண்காணாமல் எங்கயாவது போயிடுவேன் என மிரட்ட.. அதன்பின் அதை பற்றி பேசுவதே இல்லை. இருவரும் அமைதியாக மகளை தாங்கி கொண்டனர்.
தேவர்ஷி எதிலும் பிடிப்பு இல்லாமல் இருக்க… அவளை கவனித்துக் கொள்வதே பெரும் பாடாகி போனது. ஷாஷிகா பிறந்து பால்குடி மறக்கும் வரை அமைதியாக இருந்த திருகுமரன் மகளை படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டார்.
தனது பொல்லாத கணவனின் நினைவுகளை மறக்க.. படிப்பில் தன்னை வலுகட்டயமாக துணித்து கொண்டாள். ஏற்கனவே நன்றாக படிக்க கூடியவள் என்பதால் படிப்பு அவள் வசமாகி போக…படித்து அரசு தேர்வும் எழுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்துவிட்டது. அவளுடைய வேலையே அவளுக்கு ஒரு மதிப்பை ஈட்டு தந்திருந்தது.
இந்த ஏழு வருடங்களில் அவள் படிப்பும் பதவியும் அவளுக்கு ஒரு ராஜகம்பீரத்தை கொடுத்து இருந்தது. உறவுகளிடையே தேவர்ஷியின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் என சொல்லி சொல்லி நம்ப வைத்து இருந்தனர்.
சுந்தரமூர்த்தி எந்த பேத்தியை குடும்பத்தின் அவமானசின்னம் என நினைத்தாரோ.. இன்று அந்த பேத்தியின் வேலையும் அவளின் கம்பீரமும் அவரை மாற்றி இருந்தது. வயதின் தள்ளாமையும் அவரின் மாற்றத்திற்கு ஒரு காரணம்.. பேத்தியை சற்றே குடும்பத்திற்குள் அனுமதித்தார் தான். ஆனால் தேவர்ஷி குடும்ப நிகழ்வுகளுக்கோ.. உறவுகளின் விழாவிலோ அதிகம் கலந்துக்கமாட்டாள். எதற்கும் பெற்றோரை அனுப்பிவிடுவாள். அவர்களும் ஷாஷிகாவோடு சென்று வருவர்.
டெல்லியில் இருந்து தேவர்ஷிக்கு கொல்கத்தாவிற்கு மாற்றலாக.. திருகுமரன் விருப்ப ஓய்வு வாங்கி கொண்டார். இன்றும் அவர்கள் தொழிலுக்கு அவர் தான் ஆடிட்டர்.கொல்கத்தாவில் இரண்டு வருடங்கள் இருந்து விட்டு சென்னைக்கு மாற்றலாகி விட.. இப்போ தேவர்ஷி சென்னை வந்து மூன்று மாதங்களாகிவிட்டது.
அவர்கள் வீட்டிற்கே சுந்தரமூர்ததி அழைத்தும் கூட தேவர்ஷி போகாமல் வைராக்கியமாக ஒரு லக்ஸரி ப்ளாட் வாங்கி குடியேறிவிட்டாள். இப்பவும் தேவர்ஷியோடே இருந்து கொண்டனர் அவளின் பெற்றவர்களும் பிரவீனும்…
சென்னை வர அவளுக்கு இஷ்டமில்லை தான். அவளின் காதல் குளத்தின் அடியில் தங்க விட்ட பாசியாக.. அடிமனதில் தேங்கிவிட்டது. எங்கே அனிவர்த்தை மீண்டும் பார்க்க வேண்டி வந்தால்… மேலெழும்பி அவன் பாதத்தில் தன்னை மண்டியிட்டு முத்தமிட வைத்திடுமோ.. தன்மானம் அடிபட்டுவிடுமோ.. என்ற பயம்
பெற்றவர்களால் முன் போல் சென்னைக்கு அலைய முடியவில்லை. ஷாஷிகாவும் பெற்றவர்களுடன் சென்று வந்ததில் அவளும் உறவுகளை தேட…. அதிலும் அந்த புத்திசாலி குழந்தை கேட்கும் கேள்விகளில் அவளின் தந்தையின் தேடலை கண்டு கொண்டவளுக்கு இன்னும் இன்னும் பயம் மகளும் தந்தையும் சந்திக்க கூடாது என…
அதை எல்லாம் விட ஒரு வலி அவள் மனதில் முணுமுணுவென.. அவனின் நினைவு பெட்டகத்தில் எந்த இடத்திலும் என் காலசுவடிகள் இருக்காதே.. எனக்கு பின் எத்தனை எத்தனை தேனீக்கள் தேனடையை நாடி.. என் மனம் தான் தூக்கி சுமந்து கொண்டு பாரம் தாங்காமல் கனத்து போய் கிடக்கிறதோ…
எதை எல்லாம் நினைத்து பயந்தாலோ.. இதோ கண் முன் நடந்து கொண்டிருக்கிறது. இருவருக்கும் எப்படி பழக்கம்.. மகள் என அறிந்து வந்தானோ.. இல்லை தெரியாமல் தேடி வந்தானோ.. மேலும் என்ன நடக்கும்.. அவனுக்கு மகள் தேவை படாமல் போகலாம்… ஆனால் தந்தையை போலவே பிடிவாத குணம் கொண்ட மகள் தந்தை என தெரிந்தால் விடமாட்டாள். தன் காதலையும் மகளையும் நினைத்து விடிய விடிய தூக்கத்தை தொலைத்தாள் தேவர்ஷி..
அனிவர்த்தோ மனதில் ஆழத்தில் பதிந்துவிட்ட அவளோடு நடந்த வில்விழா காலங்களை அடி கரும்பின் தித்திப்போடு அசை போட… நாட்டம் குறைந்திருந்த இளமை தேடல்கள் எல்லாம் வீறு கொண்டு காம கணைகளை செலுத்த தயாராக தன் மனையாளை மாற்றான் மனைவியாக நினைத்து அடக்க இயலாமல் போராடிக் கொண்டிருந்தான்…
தேவர்ஷி தள்ளி வைக்க நினைக்க.. அனிவர்த்தோ அவளால் தட்டி எழுப்ப பட்ட உணர்வுகளோடு போராட.. தாய் தந்தையை இணைக்கும் முல்லை மொட்டோ அமைதியாக உறங்கி கொண்டிருந்தது.
Super sis very intresting waiting for next epi
Thanks sis. Next epi tomorrow will come. Please wait
Super and very interesting sis
Thank u very much.