எங்கேயும் காதல்!
[7]
“இது தான்தான் பீலியா?”-கோர்த்திருந்த விரல்களை அவனிலிருந்தும் பிரிக்காமல் கேட்டாள் அக்னிமித்ரா.
அதிமன்யுவின் வீடிருக்கும் மேடான இடத்திலிருந்து, கொஞ்சம் பள்ளமாகச் செல்லும் சாலை வழி இறங்கி வந்தால்.. சாலையின் இருமருங்கிலும் பூதாகரமாக வளர்ந்திருந்தது காட்டு மரங்கள்.
இடது பக்க காட்டு மரங்களின் ஒற்றையடி மண்பாதை வழியே சென்றால்.. அவன் சித்தரித்த பீலி!!
தன் தலைவியின் நீண்ட கண்ணிமைகள் படபடப்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான் அவன், “ம்.. ஆமா..”என்று.
அவன் தொடர்ந்து சொன்னான், “முன்ன எல்லாரும் குடிக்க, குளிக்கன்னு இங்கே தான் வருவாங்க.. இப்போ ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியா தண்ணி, கரண்ட்னு வந்ததும்… இந்த ஏரியா ஆள்நடமாட்டமே இல்லாத ஏரியாவாகிருச்சு..”என்று.
அவன் சொன்னதைக் கேட்டு மெல்ல நகைத்தாள் அவள்.
அந்தச் சிரிப்பினூடேயே, “அதுக்கப்புறம் இந்த இடத்தை என் ரவுடிசார் ஆக்குபை பண்ணிட்டீங்களாக்கும்? ர்ரவுடி பேபி!!”என்று அவள் இறுதியில் பிரத்தியேகமாகக் கொஞ்சி அழைத்து “ரவுடி பேபி”சொல்ல, அவன் வயிற்றுக்குள் அழகான பட்டாம்பூச்சி படபடப்பு!
அவளது “ரவுடி பேபி” என்னும் ஒவ்வோர் அழைப்புக்கும் நிஜமாகவே பேபி போல குதூகலிக்கிறது இவன் உள்ளம்!!
அவள் தன் விழிகளை மெல்ல மூடிக் கொண்டாள். கைகள் நின்றன அந்தரத்தில். அவள் அந்தச் சூழலை.. மனதின் ஆழத்தில் இருந்து உணரவாரம்பித்தாள்.
காதுகளில் ரம்மியமாக நுழைந்தது நீர் கிட்டத்தட்ட எட்டடி உயரக் கல்லில் இருந்து ஊற்றெடுத்து, ‘சலசலவென’ பாய்ந்து செல்லும் சத்தம்!!
அந்தப் பீலியின் இருமருங்கிலும் முளைத்திருந்த சின்னச் சின்னக் காட்டுச்செடிகளின் சுகந்தம் அவள் நாசிக்குள் சென்று நிரட, அதற்கு இணையாகக் காற்றிலே போட்டி போட்டுக் கொண்டு வந்தது ஈரமான மண் வாசம்.
அவள் நாசித்துவாரங்கள் இரண்டும் சற்றே விரிந்து காற்றை உள்ளிழுப்பதை.. ஓர் ஓவியத்தை இரசிப்பது போல பார்த்திருந்தான் அதிமன்யு.
உடலில் .. குளிர் தென்றல் காற்று பட்டு மோத.. அந்த இடம் எவ்வளவு மனோரம்மியமானது என்பதை உணர்ந்து அனுபவித்தாள் அவள்.
கூடவே மலர்களில் தேன் மொய்க்கும் தேனீயோ இல்லை குளவியோ ஏதோ ஓர் பூச்சிக் கூட்டம் காற்றில் தன் சிறகுகள் அடித்து இரைந்து கொண்டே அலையும் சத்தம் கேட்க,
மெல்லக் கண் திறந்தவள் கேட்டாள், “அது தேனீக் கூட்டமா? .. இல்லை.. குளவிக் கூட்டமா பேபி?”என்று.
அவன் பார்வையோ அவளை விட்டும் அகன்று அங்குமிங்கும் அலைந்து, அவள் சொன்ன பூச்சிக்களைத் தேட, இதழ்களோ, “எது.. ? எங்கே? எனக்கொண்ணும் அப்படித் தெரியலையே?” என்றது.
தலைவன் மொழிகள் கேட்டதும் திரும்பவும் கண்கள் மூடி, அந்தப் பூச்சிக்களின் இரைதல் சத்தத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டே கண் திறந்தவள், “உன் லெஃப்ட் பக்கத்துல பேபி… ஒரு த்ரீ ஃபீட் ஹைட்ல இருந்து.. பூச்சி சத்தம் கேட்குது”என்று சொல்ல,
அவள் சொன்னது போலவே திரும்பிப் பார்த்தவன் இனிதாக அதிர்ந்தான்.
கண் தெரியாதவளாக இருப்பினும் அவள் தந்திருப்பது என்னேவொரு துல்லியமான தரவு??
ஆம் மூன்றடி உயரத்தில் வளர்ந்திருந்த புற்களின் இடையில் கூட்டமாக ரீங்காரித்துக் கொண்டிருந்தது தும்பிக்கள்!!
அவைகளைப் பார்த்துக் கொண்டே வாய் திறந்தவன், “ஆமா..அங்கே தும்பியிருக்கு…”என்றவன்,காதலுடன் அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
யாருமில்லாத ஒதுக்குப்புறம் நிறைந்த அந்தத் தனிமை.. அவளது தலைவனுக்கு எல்லையில்லா தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும், அந்த மினி நீர்வீழ்ச்சியில் வைத்து அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டான் அதிமன்யு.
அவனது நரம்போடிய வன்மையான கைகள், மென்மையாகக் கோர்த்துக் கொண்டது அவள் வயிற்றில்!!
அவனது தாடி அடர்ந்த தாடை பதிந்தது அவளுடைய தோளில்!! ஓர் அழகான பஞ்சுக்குவியலை அணைத்துக் கொண்டிருப்பதுவும் புதுசுகம் என்றெண்ணிக் கொண்டானோ தலைவனும்?
அவள் கன்னம் மறைத்த குழல் ஒதுக்கி, அந்தப் பட்டுக்கன்னத்தில் எச்சில் படாமல் இதழொற்றி எடுத்து தாய்மை முத்தம் பரிசளித்தான் அதிமன்யு.
இருந்த குளிரான சூழலில், தன் காதலனின் அணைப்பு கதகதப்பைத் தர, கீழுதடு கடித்து, கிறங்கிய கண்களுடன் வானம் பார்த்து, பெருமூச்சு விட்டாள் பெண்.
அவள் காதுக்குள் மூக்கு நுழைத்து,அவன் ஹஸ்கி குரலில் கேட்டான்.. “இந்த இடம் உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா..?”என்று.
அவளது மூடிய விழிகள் கொண்ட வதனத்தில் மெல்ல முகிழ்த்தது ஓர் குமிழ்ச்சிரிப்பு!!
அது காதல் கொண்ட பெண்மனம் மட்டும் மட்டும் உதிர்க்கும் மந்தகாசச் சிரிப்பு.
மெல்ல திரும்பி.. அவன் முரட்டுக்கன்னத்தோடு தன் மென்னிதழ்கள் உரசியவள், “ம்..இந்த இடத்தை விட உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு பேபி..?”என்று.
அவனைப் பிடிக்கும் என்றதில் அதிமன்யுவின் விழிகள் காதல் சாயம் பூசிக் கொண்டது. கூடவே அவள் இதழ்கள் உரசியதில் ஓர் கிறக்கச் சாயமும் கூட.
அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தவன், அவளை அழைத்துக் கொண்டு பீலியின் அருகாமை நோக்கி நகர்ந்தான்.
தண்ணீருக்கு அருகாமையில், கரையில் இருந்த பெரும்பாறாங்கல்லில்.. அவளை அமர வைத்தவன், அருகே தானும் முழந்தாளிட்டு அமர்ந்தான்.
நெற்றியில் சின்ன முத்தம் கொடுத்து, காதலுடன் , “இங்கேயே இரு.. என்னை மட்டும் பார்த்துட்டே இரு.. நான் சீக்கிரம் குளிச்சிட்டு வந்துர்றேன்.. அப்புறம் ரெண்டு பேரும் ஒண்ணா போய் சாப்பிட”என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது, தன் முத்து மூரல்கள் வெளியுலகத்திற்கு தரிசனம் தர கிளுக்கி நகைத்தாள் அவள்.
அவள் சிரிப்பில், சட்டென பேச்சை பாதியில் நிறுத்தியவன், புருவங்கள் இடுங்க, கேட்டான்,“இப்போ ஏன் சிரிக்குற?”என்று.
அவளோ கைகளால் துலாவி ஒருவாறு அவன் கன்னம் பற்றி இழுத்தாட்டி, “இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆசை ஆகாது ரவுடி பேபி.. உன்னை மட்டுமே பார்த்துட்டிருக்க சொல்ற? என்னால் எப்படி பார்க்க முடியும்..?”என்று கேட்டது கூட அவ்வளவு கியூட்டாகவே இருந்தது.
அவன் விட்ட வார்த்தைக்கு உடனடியாக வருந்தியவன் நாவு கடித்து, “ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸாரி”என்ற வண்ணமே எழுந்து, அவளைப் பார்த்துக் கொண்டே பீலியை நோக்கி ரிவர்ஸில் நடந்தான்.
டீஷேர்ட்டை தலைவழியாகக் கழற்றி அவள் மீது அவன் வேண்டுமென்றே வீச, தன் முகத்தில் பட்டென்று ஏதோ வந்து மோத முதலில் களேபரம் அடையத்தான் செய்தாள் அவள்.
வீசப்பட்ட பொருளைக் கைகளால் பிடித்துப் பார்த்து அது ஒரு ‘டீஷேர்ட்’ என்று உணர்ந்தவள், அதிலிருந்து தன் தலைவன் வாசம் வீசக்கண்டவள், தன் மூக்கோடு உரசி.. அவன் மணம் முகர்ந்து கிறங்கிப் போனாள்.
குளுகுளு தண்ணீரில்.. அவள் அருகாமையில் தகித்த அவனது கட்டுமஸ்தான உடலோ, உச்சந்தலையில் வழிந்தோடிய பீலி நீர்ப்பட்டு.. கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசம் எய்யத் தொடங்கியது.
தண்ணீரில் இருந்த படியே.. கல்லில் அமர்ந்திருந்த தன் தேவதைப் பெண்ணைப் பார்த்தவனுக்கு, மீண்டும் உள்ளுக்குள் சூடான இரத்தம் பாய்வது போல இருக்க, அவளைப் பாராமல், கல்லை இரு கைகளாலும் பிடித்த வண்ணம், அவளுக்குப் புறமுதுகிட்டு நின்று கொண்டான் அவன்.
அவளிடமிருந்து கேட்டது அவளுடைய மதிமயக்கும் ஒரு விதமான மாயக்குரல்!!
தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், அவன் குளிக்கும் திசை பார்த்தவள் சொன்னாள், “உன் கிட்ட பிடிச்சதே இது தான்!!”என்று.
அப்போதும் அவளை நோக்கித் திரும்பி, தன் உள்ளத்தை அலைபாய விடாமல், “எது?”என்று புரியாமல் கேட்டான் இவன்.
“என் கிட்ட இருக்குற குறையைப் பார்க்காமல்.. என்னையும் சக மனுஷியா பார்க்குற! ..இது தான் உன்கிட்ட பிடிச்சதே.. எனக்கு கண்தெரியாதுன்ற ஃபீலே..உன்கிட்ட இல்லைல?” என்று காதல் உணர்ச்சிகள் அதிகமான குரலில் கூறியவள், தன் இருப்பிடத்தை விட்டும் எழுந்து தண்ணீரை நோக்கி வந்தாள்.
கொட்டும் அருவிச் சத்தத்தில்.. இவள் நடந்து வரும் சத்தமும், கூடவே அவள் தொனிக்கும், அவனுக்குமான இடைவெளி குறைந்து வருவதும் பற்றி சிந்தனையே இன்றி கண்கள் மூடி நின்றிருந்தான் அவன்.
தொடர்ந்து சொன்னாள் அவள்.
“முதல் வாட்டி.. அந்த கேன் தர்றப்போ கூட நடுரோட்டில்.. ஏதோ தலைவலி, காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை தந்து, ‘இது சாப்பிடு சரியாப்போயிடும்’ன்ற மாதிரி கேஷூவலா தானே தந்த? என் குறை தெரியாம.. என்னைக் காதலிக்கிறேல்ல? .. அது தான் ரொம்ப பிடிச்சிருக்கு..”என்ற போது அவள் குரல், அவனுக்கு மிக மிக அருகாமையில் கேட்டது.
கூடவே அவனது திண்மையான வயிற்றில் இரு மெல்லிய கரங்கள் ஊர்ந்து அவனை எதிர்பாராத வண்ணம் கட்டிக் கொள்ள, அவளோ அவன் காதோரம், கிசுகிசுப்பாக,
“நான் யார்க்கிட்டேயும் இவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்கிற ஆள் இல்லை தெரியுமாஹ்?”என்றாள்.
அவளுக்கு புறமுதுகிட்டு நின்றவன் இதழ்கள் மெல்ல மலர்ந்தது. அவளுடைய பெண்மைக் கலசங்கள்.. அவனுடைய பரந்த முதுகோடு ஒட்டி நின்ற தினுசில் ஜிவ்வென்று மின்சாரமும் பாய்ந்தது.
கண்கள் காதல் தந்த உஷ்ணத்தில் சிவக்க, அவளைப் பார்த்து திரும்பியவன், பெண்ணவளின் கன்னம் ஏந்தி, தண்ணீருக்கும் கேட்காத ஹஸ்கி குரலில், “தெரிஞ்சுது.. அப்போ அன்னைக்கு என்னைத் திட்டும் போது ஒரு வார்த்தை சொன்ன, ‘என் சொந்தக்காலில் தான் இதுவரைக்கும் நின்னுட்டிருக்கேன்’னு சொன்ன.. அப்போவே உன்னோட வைராக்கியம் புரிஞ்சுது… பேர் அக்னி இல்லை.. ஆளும் அக்னி தான்னு தெரிஞ்சுது” என்றவன் கண்களில் காதல் மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் தொடங்கியது.
அவள் கைகளில் ஒன்று மேலெழுந்து, அவனது கடினமான இடையில் உரிமையுடன் பதிந்தது.
அவன் கண்கள் எங்கிருக்கிறது என்று பார்க்க முடியாவிட்டாலும், அவளால் உணர முடிந்தது.
அவன் மூச்சுக்காற்று, அவள் நெற்றியில் மோத அண்ணாந்து அவன் முகம் பார்த்தவள், “ஆனா உன்கிட்ட மட்டும் அந்த வைராக்கியம் எங்கே போச்சுன்னே தெரியலை??.. பாரு..நீ ரவுடி!.. கெட்டவன்!!.. நாலு பேரை ஈவிரக்கம் பாராமல் போட்டு அடிக்கிறவன்..
ஆனால் உன்னைப் பிடிச்சிருக்கு.. உன் கூட இருந்தால் நான் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா ஃபீல் பண்றேன்.. எதுனால உன் மேல காதல் வந்துச்சுன்னு கேளேன் ரவுடி பேபி..?”என்று இறுதியில் ஓர் கேள்வியும் கேட்டாள்.
அந்தத் தருணங்கள்.. அவனது வாழ்வில் அவன் களித்த உன்னத் தருணங்களாகவே தோன்றியது அவனுக்கு.
சந்தோஷத்தில் புன்னகைத்துக் கொண்டே கேட்டான், “சரி.. எதனால் என் மேல காதல் வந்திச்சு..?”என்று.
அவள் ஏதேதோ சொல்லக் கூடும் என்று எதிர்பார்த்திருந்தவன் ஏமாந்தான். அவள் வேறேதேதோ சொல்ல..அவன் உடல் கொஞ்சம் விறைக்கவும் செய்தது.
குறுநகை புரிந்து சிம்பிளாகச் சொன்னாள், “எனக்கே தெரியலை.. ஹாஸ்பிடல்ல கண்ணு முழிச்சப்போ.. எனக்கு ஆறுதலா இருந்தது உன் வாசம் மட்டும் தான்.. என் அம்மாக்கிட்டேயிருந்து நான் அனுபவிச்ச அதே வியர்வை வாசம்.. நான் உன்கிட்ட என் அம்மாவை உணர்றேன்..தாய்மையை உணர்றேன்.. அதனாலேயோ என்னவோ எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு பேபி..!”என்று.
அவள், அவனிடம் தாய்மையை உணர்கிறாளாம்? பாதுகாப்பை உணர்கிறாளாம்?
அருவி ஊற்றெடுக்கும் கல் மீது ஏறி..ஊரே அதிர, ‘ஐம் தி ஹேப்பியஸ்ட் மேன் இன் தி வேர்ல்ட்’என்று கத்த வேண்டும் போல இருந்தது. இருப்பினும் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சிரிப்பை அடக்கி, அவளது இதழ்களைப் பார்த்தான் அவன். அந்த இதழ்கள்.. தண்ணீரில் நனைந்த வண்ணம் இருக்கும் ஈர இதழ்கள் அவன் முகம் நோக்கி இலேசாக துடிதுடிப்பதைக் கண்டான் அவன்.
அவை அவனிடம் இரசிகயமாக எதையோ யாசிப்பது போல இருந்தது அந்தத் துடிப்கு.
இதழ்கள் யாசிப்பது எதையாம்? கேள்விக்கு பதில் புரிந்தது இன்னும் கொஞ்சம் அகல வளைந்தது அவள் இதழ்கள்!!
அவள் யாசிப்பதை கொடுக்காமல் நாடி பிடித்தவன், செல்லமாக, “இன்னைக்கு என்னாச்சு ஆர். ஜே மேடம்? ரொம்ப பினாத்துறீங்க.. பேசாம போய் உட்காரு..”என்று சொல்ல, பிடிவாதத்துடன் மறுப்பாக ஆடியது அவள் தலை!!
“ம்ஹூஹூம் உன் கூடவே இருந்துடணும்னு தோணுது.. என் கூட இருப்பியா..? என்னைக்கும் என் கூடவே இருப்பியா?”என்று அவள் பட்டெனக் கேட்க, அந்த கணம் அவன் கண்களோ.. கொஞ்சம் அத்துமீறியது.
உச்சந்தலை கடந்து இதழ்கள் நனைத்து வடியும் தண்ணீர்.. அவள் கழுத்து வளைவில் ஓடி, முன்னெழில்களின் பிளவில் சங்கமமாவது புரிய, அதையும் தாண்டிப் பார்க்க ஆசை கொண்டது மனம்!!
“சொல்லு ரவுடி பேபி..”என்று சிணுங்கிய அவள் குரலில் கவனம் கலைந்து சட்டென அவள் முகத்தை ஆசை ததும்பும் விழிகளுடன் பார்த்தான் அவன்.
முதலில் அவளை இங்கிருந்து அனுப்பினால் தான் அவனால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியும் என்பது போல இருக்க, சற்றும் யோசியாமல், “என்னைக்கும் இருப்பேன்.. இப்போ போய் உட்கா”என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அவ்வசனத்தை முடிக்கக் கூட இல்லை.
திறந்த அவனது அதரங்களைக் கவ்விக் கொண்டது அவளின் ரோஜா அதரங்கள்!!
அந்த ஆஜானுபாகுவான ஆண்மகனுக்குள்.. சர்ரென்று மின்சாரம் பாய்வித்தது அவளுடைய ஈரம் தோய்ந்த அதரங்கள்!!
இரு சோடி அதரங்கள் தந்த சுகத்தில்.. அவனுடைய வலிய கைகளுள் ஒன்று மேலெழுந்து அவள் இடையோடு சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுக்க,
அவனது அதிரடியில் கொஞ்சம் மூச்சு முட்டியது அவளுக்கு.
இருவர் நனைந்த உடலும் உரசியதால் தீப்பற்றிக் கொள்ள, அங்கே முகிழ்த்தது மன்மதனுக்கும், ரதிக்குமான அழகான காதல் யுத்தம்.
அவன் கண்களில் பூத்திருந்த செம்மை சொல்லியது அந்நொடி.. தன் காதலிக்காக அவன் உடல் ஏந்தி நிற்கும் தாபம் எத்தகையது என்பதை!!
அந்த மந்தகாசமான சூழலும் அவன் தப்பு செய்வதற்கு கை கொடுக்க, அவன் கைகளுள் ஒன்று கீழிறங்கி.. அவள் பின்னழகின் அகல, நீளங்களை கர்மசிரத்தையுடன் ஆராயலானது.
ஆனால் அவனது இதழ்களோ.. கள்ளூறும் அந்த அதரங்களை விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது.
தன்னை நேசிக்கும் ஆண்மகன்!! பூவைத் தென்றல் வருடுவது போல உரையாடுபவன்.. இன்னும் ஏன் சத்தமின்றி நகைப்பவன்.. இத்தனை வன்மையாளனா? என்ற எண்ணம் பிறந்தது அவளுள்.
ஆனால் அதுவும் பிடித்திருந்தது. கொஞ்சம் மூச்சுக்கு இடைவெளி வாங்கி.. அவள் தவித்தாலும்.. அந்த அழகனின் மேலுள்ள பித்து.. என்ன என்னமோ செய்யச் சொல்லித் தூண்டியது அவளையும்!!
எல்லைத் தாண்டியே போகச் சொன்னது அவன் காதல் தந்த மனோவலிமை!!
அவனைப் பார்த்தவள் சொன்னது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
“டேக் மீ.. டேக் மீ நவ்.. டேக் மீ ஏஸ் யூ வோன்ட்!!”என்று கிசுகிசுக்கும் குரலில் சொல்ல.. இன்னும் கொஞ்சம் போதை தலைக்கேறலானது அதிமன்யுவுக்கு.
அடித்தொடைகளூடு ஓர் கை, இடையூடு ஓர் கை என கையிட்டு.. அவளைக் குழந்தை போல கையில் ஏந்திக் கொண்டவன், அவளை அழைத்துக் கொண்டு கரை நோக்கி நடந்தான்.
அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டின் வேகம் சொல்லியது, கரை உடைத்து வந்து நிற்கும், அவள் மேல் அவன் கொண்ட அளவில்லா காதலை!!
தும்பிக்கள் சுற்றி நிறைந்த மூன்றடி உயர புல்வெளி!! சுற்றி வர காட்டுச்செடிகளும், காட்டுமரங்களும் அவர்களின் காதலொழுக்கத்திற்கு துணை புரிய.. அந்தப் புற்தரையானது சொர்க்கமாக.
தும்பிப் பூச்சிகளும்.. ‘அடி தோழி.. கண்ணில்லாப் பெண்ணை மயக்கி.. இவ்வாண்மகன் செய்யும் செயலது காண்’என்று தங்களுக்குள் கிசுகிசுத்து அலறினவோ?
அவர்களைச் சுற்றி ரீங்காரமிடத் தொடங்கியது அவையும்.
மராமரத் தண்டு மீது கொடிகள் படர்வது இயல்பு. ஆனால் காதலில்? கொடிகள் மீது தான் தண்டுகள் படரும்!!
அவள் மீது, தன் பாரத்தை அழுத்தாமல் படர்ந்தவன், தண்ணீரை விட்டும் வெளிவந்ததும் நடுநடுங்கும் அவள் உடல் குளிர்காய தன் இதழ்களால் எங்கெங்கோ முத்தம் கொடுக்கலானான்.
எங்கும் இருட்டு விம்பம்!!! அதனில் ஒளிக்கீற்றுக்களாக சின்னச் சின்ன வட்டங்கள்!! இத்தனை தான் அவள் கண் பார்வைக்குள் விரிகின்றது. இருப்பினும், அவள் உடல்??
பெண்ணவளின் உடல்.. ஆயிரத்தெட்டு உணர்ச்சிப் பெருக்கினை அனுபவித்துக் கொண்டிருந்தது.
இத்தனை காலம் வீணுக்காக இருந்த பிரம்மன் படைத்த அழகின் அவசியத்தை.. அவன் தீண்டல் விளைந்த பயனால் அறிந்தாள் அவள்!!
கொஞ்சம் வலி.. மெல்லிய சுக முணகல்!! தகிக்கும் காதல் தீ!! உயிர் வரை முட்டும் ஆசை!! இவன் உடல் தந்த சுகம்!! அவளுடல் இவனுக்குத் தந்த இளைப்பாறல்!!
எல்லாமும் ஆயிரம் காதல் கவிதை சொன்னது அவனுக்கு!!
தன் ஆசை ஒன்றைக் கருதாமல்.. அவள் காதலுக்கு மதிப்புக் கொடுத்து அவன் ‘மென்மையிஸம்’ காட்ட, அவனது பிடரிமயிர் பிய்த்தெறிந்து, ‘வன்மையிஸம்’காட்டுமாறு காதோரம் முணகினாள் பெண்!!
அங்கே நிகழ்ந்தது அழகிய காதல் காவியம்!! “ப்பே.. ப்பீஈஈஹ்!!”என்ற அவளுடைய காதல் மொழி.. அவனை உன்மத்தம் அடையச் செய்ய.. அவளை இறுக அணைத்துக் கொண்டே பூலோகம் வந்தான் அக்னி மித்ரையின் தலைவன்!!
‘மனிதன் காமத்துக்குப் பிறந்தவன்;காமத்திற்குத் தற்காலிகத் தீர்வே உண்டு!!”என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன வரிகள் எத்தனை உண்மையானவை?
தற்காலிகத் தீர்வெய்திய இரு காதல் ஜீவராசிகளும்.. இருவர் அணைத்துக் கொண்டே சிறிது நேரம் இளைப்பாறினர். தலைவனின் மார்பில் கன்னம் பதித்திருந்தவள், சந்தோஷ மிகுதியில் குட்டி குட்டி முத்தங்கள் பதிக்கலானாள்.
அந்த நிமிட கூடலின் பின்னர்.. வெட்கம் அதிமிதமாகி.. அவள் வாயே திறக்கவேயில்லை. அவனோ.. அவள் முகத்தைத் தவிர.. வேறு காட்சிப் பொருளைக் காணவேயில்லை!!
கூடலில் முடிந்த குளியல் முடிந்து..தலைவனும்,தலைவியும் வீடு நோக்கிச் செல்ல புறப்பட்ட கணம், அவளைத் தன் கைவளைவுக்குள் இருத்திய படியே நடந்தான் அவன்.
அக்னிமித்ரா முகத்தில் இத்தனை காலம் இருந்த புருவமுடிச்சும், எந்நேரமும் சிந்திக்கும் யோசனைபாவமும் மறைந்து, அவள் முகம் தெள்ளத் தெளிவாக இருப்பதை கண்கூடாகப் பார்த்தான் அவன்.
நெற்றியில் முத்தமிட்டவன் அவளை நோக்கி, “இப்போ நாம குளிச்சோம்ல?? .. பீலி?? .. அந்த இடத்திற்கு ஏன் யாருமே வர்றதில்லைன்னு உண்மை தெரியுமா?”என்று கேட்க, இடுங்கிய புருவங்களுடன் தலைவன் முகம் பார்த்தாள் அக்னிமித்ரா.
“ஏன்?”
“அங்கே ஓர் நிலமே(ஜமீன்தாருக்கு சிங்கள வார்த்தை) தன்னோட பரம்பர சொத்து அடங்கிய புதையலை.. வெள்ளைக்காரன் கையில் கிடைக்கக் கூடாதுன்றதுக்காக ஓர் பாறாங்கல்லுக்கு அடியில் ஒளிச்சு வைச்சிருக்குறதாகவும் .. அதை ஒரு பூதம் அடைகாத்திட்டு இருக்குன்னும் சொல்வாங்க.. என்னைக்கு அவர் பரம்பரை வாரிசு காலடி.. அந்த மண்ணில் படுதோ.. அப்போ அந்த புதையல் வெளியாகுமாம்..ஆனால் வாரிசைத் தவிர.. வேறு யாராவது அதை எடுக்க முயற்சி பண்ணால்… பூதம் நரபலி எடுக்குமாம்.. நிறைய மர்மமான முறையில் இறந்த டெட் பாடீஸ் கூட அங்கே இருந்திருக்கு… அதனால் யாரும் அந்தப்பக்கம் தலைவைச்சு கூட படுக்க மாட்டாங்க.. யார் கண்டா.. நீ உட்கார்ந்திருந்த பாறாங்கல் கூட.. அந்தப் புதையல் இருக்குற கல்லா இருக்கலாம்?.”என்று அவன் தோள் குலுக்கியவனாக.. அந்தப்பக்கத்தில் ஆள்நடமாட்டமே இல்லாது போன காரணத்துக்கான வதந்தியை சொல்ல, முள்ளந்தண்டு சில்லிட்டது அவளுக்கு.
சாமி, பூதத்தில் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கும் அக்னிமித்ராவின் கை விரல்கள் தன் தலைவனை இறுகப் பிடித்துக் கொள்ள, அவளது அச்சத்தைக் கண்டு முதன்முறையாக வாய் விட்டு நகைத்தான் அவன்.
“பயமா?..ஹஹஹா அக்னி.. ம்மித்ராவுக்கு பயமா? ஹஹஹா ..”என்று கேட்டபடி அவன் நகைக்க, கொஞ்சம் கோபம் மீதூற அவள் கேட்டாள்,
“அதை ஏன் முன்னாடி சொல்லலை நீஈஈ..?”என்று.
அவள் நடுக்கம் உணர்ந்து தன் அணைப்பை இன்னும் இறுக்கியவன், கண் இல்லாப் பெண் அவளும் இரசிக்கும் விதத்தில் ஹஸ்கி குரலில், சொன்னான், “ நீ தானே கொஞ்சமே கொஞ்சம் பேட் போயா இருடா சொன்ன.. அதான்..!!”என்று.
தலைவனின் அணைப்பு இதம் தர, அவன் தோளோடு சாய்ந்த வண்ணம் வீட்டை நோக்கி நடை பயின்றாள் அவள்.
கண்டி என்பது மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நில எழில் சொட்டும் இடம்! தமிழ் இலக்கியம் வகுத்த குறிஞ்சித் திணையின் காதல் ஒழுக்கமாவது யாதாம்? புணர்தல்!!
ஒற்றை வரியில் சொல்வதானால், அதன் பின் வந்த நாட்கள் குறிஞ்சித் திணை ஒழுக்கம் நிகழ்ந்தேறிய இனிப்பு சொட்டும் அழகான நாட்கள்!!
******
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு,
கண்டியில் இருக்கும் பேராதெனிய தாவரவியல் பூங்கா!! அந்த குளிர்மயமான பிரதேசத்தில் தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்களாக எதிரும், புதிருமாக நின்றிருந்தனர் தலைவனும், தலைவியும்.
அவனுக்கு ஓயாமல் அழைப்பெடுத்த வண்ணமே இருந்தார் அவனுடைய முதலாளி மினிஸ்டர். சதாசிவம்.
அவரது அழைப்பை மீண்டும் துண்டித்து விட்டு செல்லை பாக்கெட்டில் போட்டவன், அவளை நோக்கி இலேசாக அலுத்துக் கொள்ளும் குரலில், “முக்கியமான வேலையை விட்டுட்டு வந்துட்டிருக்கேன்.. பாரு மினிஸ்டர் வேற கோல் மேல கோல் எடுத்துட்டு இருக்கார்.. அப்படி என்ன தான் முக்கியமான விஷயம்னு சொல்லேன்மா?”என்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான் அதிமன்யு.
அமைச்சர் சதாசிவத்தின் மெய்க்காப்பாளனாக ஓர் பொதுக்கூட்டத்துக்கு செல்ல இருந்தவனை தடுத்து, பேராதெனிய தாவரவியல் பூங்கா பக்கம் அழைத்து வரச் செய்திருந்தது அவளின் செல் அழைப்பு!
இத்தனை நேரம் அமைதியாக இருந்தவள், இதற்கு மேலும் தலைவனின் பொறுமையை குழைக்க விரும்பாமல், தன் இதழ்கள் சந்தோஷத்தில் வளைய சொன்னாள்,
“ஐ ஏம் ப்ரெக்னன்ட்!!”என்று.
அந்த மராமரத்தின் தண்டில் முழங்கை ஊன்றி நின்றிருந்தவன், தலைவியவள் சொன்ன மொழிகள் கேட்டு, ஒரு கணம் சிலையாய் நின்றவனுள் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
அவன் காதில் சரியாகத் தான் விழுந்ததா? அவள் சொன்னது உண்மை தானா? என்றே கேள்விகள் பிறந்தது.
“என்ன சொல்ற? விளையாடுறியா?”-எதிர்ப்பார்ப்பும் ஆசையும் போட்டி போட்டாலும், தன் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான் அவன்.
அவளது இதழ்கள் மகிழ்ச்சி மிகுதியில் இன்னும் கொஞ்சம் அகல விரிந்தன. அதீத காதலின் விளைவால் நிகழ்ந்த கூடலின் விளைவால் ஜனித்த குழந்தையல்லவா அது?
கைகள் அனிச்சையாக வயிற்றை அணைத்துக் கொள்ள, “நான் விளையாடலை.. சீரியஸா சொல்றேன்..ஐ ஏம் ப்ரெக்னன்ட்.. என் வயித்தில உன் குழந்தை வளர்ந்திட்டிருக்கு பேபி!!”என்று சொன்னதும்.. அந்த இனிய செய்தியில் தலைகால் புரியாத சந்தோஷம் வந்து போனது அவனுள்.
அமைச்சர் என்ன? அவரது பொதுக்கூட்டமென்ன? எல்லாமே மறந்து போனது அவனுக்கு. அவள் சொன்ன செய்தியில்.
இடுப்பில் இரு கை வைத்து.. தலை கோதி, பெருமூச்செறிந்தவனாக நின்றவன்.. கண்களில் மௌனமாக துளிர் விட்டுக் கொண்டிருந்தது ஆனந்தக் கண்ணீர்.
பொதுப்பூங்கா என்றும் பாராமல் ஓடிச் சென்று அவளைக் கட்டியணைக்க முயன்றவனின் கால்களின் ஓட்டம் அப்படியே தடைப்பட்டு நின்றது. அவளை அணைக்கத் துடித்த கைகளை கடினப்பட்டு கீழிறக்கிக் கொண்டான் அவன்!!
அந்நொடி “நான் தந்தை’என்று அவள் வாயாலேயே கேட்ட ஆண்மகன், கொஞ்சம் தன் தலைவியுடன் விளையாடிப் பார்க்க ஆசை கொண்டான் போலும்!!
இதழ்கள் மகிழ்ச்சியில் நகைக்க, குரலில் மட்டும் ஏகபோக கடினம் காட்டியவன், “ஹேய் விளையாட்றீயா நீ?.. அதுக்கு சான்ஸே இல்லை..”என்று அலுத்துக் கொள்ளும் குரலில் கூற, அவள் மலர்ந்த இதழ்கள் சட்டென மூடிக் கொண்டது.
இல்லை.. இவன் இன்னும் தன்னை நம்புகிறானில்லை. எடுத்து சொல்லும் விதத்தில் சொன்னால் அவன் ஏற்கக் கூடும் என்று தோன்ற, மீண்டும் மலர்ந்தது அப்பாவிப் பெண்ணின் முகம்.
தட்டுத்தடுமாறி அவன் வாசம் முகர்ந்து வந்து, அவன் கைகளை தன்னிரு கைகளாலும் பற்றிக் கொண்டவள், “பேபி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… உடம்பு அசதியா இருக்குண்ணு நான் இன்னைக்கு டாக்டர்கிட்ட போனப்போ தான்.. உண்மை என்னான்னே புரிஞ்சுது…நான் உன் குழந்தையை சுமந்திட்டிருக்கே.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..”என்று சொன்னவளை மிருதுவான கண்களுடன் பார்த்திருந்தவனுக்கு, அவளை அள்ளி முத்தாட வேண்டும் போல இருந்தது.
பின்னே அவன் குழந்தை அவள் வயிற்றில்!! எத்தனை சந்தோஷம் தரும் செய்தி அது!! ஆண்மகன் ஒருவன் பூரித்து நிற்கும் இன்பத் தருணம், ‘தான் தந்தை’ என்று தலைவி வாயால் அறியக் கிடைப்பது!!
அந்த உன்னதத் தருணத்தில், அவளுடன் சற்றே விளையாடிப் பார்க்க ஆசை கொண்ட அவனும், அவளின் முகத்தை கேலிப்புன்னகை உதிர்த்துக் கொண்டே பார்த்திருந்தான்.
அவனது அமைதி… அவளுள் ஏதோவொரு மாற்றத்தை உணர்த்த, “ஏன் அமைதியா இருக்க? .. உனக்கு இதில் சந்தோ.. ஷமா இல்லையா..?”என்று கேட்டாள் அக்னிமித்ரா.
இது தான் சமயம் என்று அவளிடமிருந்து தன் கையை உருவியெடுத்தவன், வேண்டுமென்றே புன்னகைத்த முகத்துடனேயே எகிறினான்.
“எப்படி சந்தோஷமா இருக்கும்?? .. கல்யாணம், குழந்தைன்னு நான்.. நினச்சி.. பார்க்கவேயில்லை..”என்று அவன் கோபப்பட, மெல்லிய உள்ளம் கொண்ட பெண் அதிர்ந்து போனாள்.
“என்ன?”-தன் குரல் தனக்கே கேட்கா வண்ணம் மெல்லிய குரலில் கேட்டாள் அவள். அவளது கருமணிகள் அங்குமிங்கும் உருண்டோடியது பதற்றத்தில்.
அவனோ இன்னும் தன் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வராமல், போலியாக பற்களைக் கடித்துக் கொண்டு “இந்தத் தலைவலி இப்படி என்னை பிடிச்சிக்கும்னு நான் என்ன கனவாஆஆ க்கண்டேன்..”என்று அவன் கத்த, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
தலைவனின் சொற்கள் கேட்டு, தன் தனங்கள் ஏறி இறங்கத் தகித்தவள், “என்ன சொன்ன த.. த்த.. தலைவலியா? .. நான் உனக்கு தலைவலியா?… அப்படின்னா.. நீயென்ன காதலிக்கலையா..?”என்று உடைந்து போன குரலில் கேட்டாள் அக்னிமித்ரா.
அவள் நிலைமை பாவமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் தன் விளையாட்டை நீட்டிக்க ஆசை கொண்டவன், சிரித்துக் கொண்டே,
“ஆமா.. நான் உன்னைக் காதலிக்கலை!!..”என்று இரைந்து கத்தியவன் வேறெங்கோ பார்த்தபடி நின்றான்.
அவள் காதில் நாராசமாகப் பாய்ந்தது அவனுதிர்த்த சொற்கள்!! உயிருக்குயிராகக் காதலித்தவன் இயம்பிய வார்த்தைகளா அது? அவற்றின் கனம் தாங்க முடியாமல் அவளுடைய குருட்டுக் கண்கள் உகுத்தன கண்ணீர்!!
அப்படியானால் அவள் நிலை? அவள் சுமந்து நிற்கும் குழந்தையின் நிலை? எல்லாமே நிர்க்கதி தானா? இதழ்கள் அஷ்டகோணலாக வளைய, பூங்காவில் வைத்து அவளுக்கு விம்மி விம்மி வந்தது அழுகை.
இவற்றையெல்லாம் இத்தனை நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாம் நபரான விக்னேஷிற்கு நண்பன் விளையாடுவது எல்லை கடந்து போனதாக தோன்றியிருக்க வேண்டும்!!
விக்னேஷா? ஆம். விக்னேஷே தான்!! அவனும் அங்கேயே தான் இருந்தான். நண்பன் தன் சந்தோஷத்தை மறைத்து நடத்தும் போலி நாடகத்தை கை கட்டி வேடிக்கை பார்த்த வண்ணம் அங்கேயே தான் இருந்தான்.
அப்பாவிப் பெண் மித்ரா அழுததும் உள்ளுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது விக்னேஷிற்கு.
சட்டென நண்பனை நோக்கி ஈரெட்டு வைத்துப் பாய்ந்து வந்தவன், “டேய் விளையாடாதே..மச்சி..”என்று கடிந்து கொண்டவன், மித்ரா அழுவது தாளமாட்டாமல், அவளருகே வந்து, தரை பார்த்து குனித்திருந்த அக்னிமித்ராவின் முகம் நோக்கி,
“தங்கச்சி .. அந்த கிறுக்கன் ச்சும்மா விளையாடுறான்மா.. சிரிச்சிட்டே கோபப்படுற மாதிரி நடிக்கிறாராம்..”என்று சொன்ன நொடி, இன்னும் கொஞ்சம் ஆத்திரம் அதிகமாக முகத்தை மறைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள் மித்ரா.
அதில் பதறிப் போன விக்னேஷ், மலைமாடு போல நின்றிருக்கும் நண்பன் நோக்கி, “டேய் மித்ரா அழுவுதுடா..உன் க்கேனத்தனமான விளையாட்டை நிறுத்து.. அந்தப்புள்ள எவ்வளோ ஆசையா ப்ரெக்னன்ட்ன்ற மேட்டரை சொல்ல வந்துச்சு..”என்று திட்ட, திரும்பிப் பார்த்த அவளது ரவுடி பேபி, அக்னிமித்ராவின் அழுகை கண்டு அதிர்ந்தான்.
தன் விளையாட்டு, மண்ணாங்கட்டி எல்லாம் அடியோடு மூட்டைக்கட்டி தூர எறிந்தவன், ஓடி வந்து அவள் தோளில் கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்து,
“ஹேய் ச்சும்மா சொன்னேன் ஃபயர் பேபி… தைரியமான பொண்ணுன்னு நினச்சேன்.. இப்படி அழுவுற..?”என்று அவள் கைச்சந்தைத் தடவிய படி, அவளை ஆசுவாசப்படுத்த முயல, அவன் பிடியை ஏற்காமல் தள்ளி விட்டுக் கொண்டே கத்தினாள் அவள்.
அழுகையின் விளைவால் மூக்குநுனி செர்ரிப்பழம் போல சிவந்திருக்க, மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “என் காதல் உனக்கு வ்விளையாட்டாஆஆ தெரியுதாஆஆ..?”என்று கேட்டவள்,
அவனுக்கு அடிமேல் அடி கொடுத்துக் கொண்டே, “ப்போஓஓ.. உன் அணைப்பும் வேணாம்.. உஉஉ.. உன் ஆறுதலும் வேணாம்.. நீ.. விளையாட இந்த சென்ஸ்டிவ் மேட்டர் தான் கி.. கிடைச்சுதா?”என்று ஆற்றாமையில் கத்தவும் செய்தாள்.
அவள் அடி அத்தனையையும் கலகலத்துச் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான் அதிமன்யு.
இருப்பினும் அவள் விலக முனைய முனைய இன்னும் இன்னும் இறுக்கமாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.
உச்சந்தலையில் சந்தோஷம் தாளாமல் முத்தங்கள் பதித்துக் கொண்டே, “இதோ இப்போ கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்… உன் வயிற்றில் வளர்ற என் குழந்தைக்காக, அதை சுமந்திட்டிருக்குற உனக்காக.. நான் என்ன செய்யவும் தயார் தான்..”என்று சொன்னவன் காதலோடு அவள் இதழ்களை நெருங்க, அவன் தன்னை முத்தமிட நாடுகிறான் என உஷ்ணமூச்சின் நெருக்கம் வைத்து அனுமானித்தவள்,
, பாதி குறைந்தும், குறையாத கோபத்துடன் தலைவன் கன்னம் அறைந்தாள்.
அவளது கோபம் ஞாயமானது என்று தோன்ற.. ஒரு கணம் கண்கள் மூடித் திறந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் மீண்டும் அவளை நோக்கி நெருங்க.. மீண்டும் சப்பென்று அறைந்தாள் அவள்!!
“ஹேய் ஃபயர் பேபி.. ஸாரி.. நிஜமாவே சந்.. தோஷமா இருக்கு.. நா.. நான்.. இந்த அதிமன்யு.. அப்பா.. வாக போறான்.. லெட் மீ செலிப்ரேட்”என்று உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீருடன் சொல்ல,
அவன் உதிர்த்த ‘ஃபயர் பேபி’என்னும் வித்தியாசமான அழைப்பு கட்டிப்போட்டது அவளை. கோபம் அடக்கி.. அவனுக்கு வழிவிட்டு நிற்க.. அந்தக் காதலர்களின் ஜோடி இதழ்கள் சேர இருந்த தருவாயில் கேட்டது அவன் குரல்!! அது விக்கியின் குரல்
“பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே.. என்னை மன்னியுங்கள் மன்னியுங்கள்.. ஃப்ரண்ட் கூட வந்த பாவத்துக்காக கண்டதையும் காண வைத்து.. கன்னிப் பையனின் மனதைக் கெடுக்க நினைக்கும் சாத்தானின் தீங்கிலிருந்து காப்பாற்றுங்கள் தேவனே!!”என்று கண்கள் மூடிக் கொண்டு, வானம் பார்த்து அவன் கையேந்த, அவன் இட்ட கூச்சலில் அதிமன்யு உச்சிக் கொட்டிக் கொண்டு எரிச்சலடைய,
இதுவரை இருந்த அவதியான சூழல் மறந்து அழகாக கிளுக்கி நகைத்தாள் அக்னிமித்ரா.
எங்கேயும் காதல்!
[8]
கண்டி முத்துமாரி அம்மன் கோயில் சந்நிதானம்.
அந்த முற்பகல் வேளையில், தன் முறுக்கு மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே, யூனிபார்மில் நின்றிருந்தார் ஆர். ஜே கலாவின் ‘வன் மேன் ஆர்மி’ இன்ஸ்பெக்டர். சிவக்குமார்.
அவரது ஆறடி உயர தோற்றமும், யூனிபார்மில் இம்மி பிசகாத நேர்த்தியும் அவர் மேலுள்ள நன்மதிப்பை இன்னும் கூட்டுவதாகவே இருந்தது.
இருந்தாலும், இடுங்கிய புருவங்களுடனும், ஆளை எடைபோடும் கூர்மையான பார்வையுடன் சற்றே அலைப்புறுதலுடன் தான் நின்றிருந்தார் அவர்.
கூடவே பிறந்த கைக்குழந்தையுடன் அவர் மனைவி ஆர். ஜே கலா நின்றிருக்க, மனைவியின் மார் அருகில் துயிலும் குழந்தை.. தன் சத்தத்தில் எங்கே விழித்துக் கொள்ளக் கூடும் என்றஞ்சினாரோ மனிதர்? அதனாலோ, என்னவோ கொஞ்சம் மெதுவாகவே மனைவியை சாடினார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.
மனைவி காதில் கொஞ்சம் கடிந்து கொள்ளும் குரலில்,
“இந்த காலத்து பசங்க காதல்.. நேத்து சந்திச்சு.. காலையில காதல் சொல்லி.. மத்தியானம் தாலி கட்டி, அதுக்கு மறுநாளே டிவோர்ஸ்ன்னு வந்து நிற்கிற மாதிரி ஆயிருச்சு .. இதுக்கு பேரு லவ்வா? .. இல்லை எக்ஸ்பிரஸ் ரயிலா?ன்னு தெரியலை.. இந்த கல்யாணத்தை என் தலைமையில் நடத்தணுமா?”என்று மனைவியிடமே கேட்டார் அவர்.
கலாவின் பார்வை அவர்களுக்கு சற்று தள்ளி இதுவரை அமைதியான முகத்துடன் இருந்த மித்ராவை ஏதோ பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அதிமன்யுவையும், விக்னேஷையும் பார்த்தது.
மித்ரா முகத்தில் தெரிந்த கல்யாணக்கலையில்.. அவள் கண்ணே பட்டு விடும் போன்ற ஓர் எண்ணமும் எழுந்தது.
பார்வையில்லா பெண் சிரித்த சிரிப்பில்.. மனமெல்லாம் நிறைந்து போன கலாவும், கணவனை நோக்கி,
“ஏங்க.. நாமளும் என்ன ரொம்ப வருஷம் பேசிப்பழகி.. புரிஞ்சிக்கிட்டப்பறமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?.. இல்லைல? வீட்டால பேசினாங்க.. எனக்கு, உங்களை பார்த்ததும் பிடிச்சுப் போச்சு.. உங்களுக்கும் என்னைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு.. சரியா இரண்டு கிழமையில் கல்யாணம் நடந்தது.. பேசி பழகிக்க டைமே கிடைக்கலை.. இருந்தாலும் இதுநாள் வரை சந்தோஷமா வாழலை? அப்போ நமக்குள்ள வந்ததும் லவ்வா? .. இல்லை நீங்க சொன்ன மாதிரி எக்ஸ்பிரஸ் ரயிலா?”என்று அவரின் வார்த்தையை வைத்தே, கணவனை மடக்க,
சற்றே தடுமாறித் தான் போனார் காவல் அதிகாரியும்.
“அ.. அது.. அது.. எனக்கு நீ தான்னு.. உள்ளே.. உள்.. ளே.. உன்னை பார்த்ததும் தோணுச்சு..”என்று படபடப்பாக சொன்ன கணவனைப் பார்த்து, மென்னகை புரிந்தாள் இப்போது தான் தாய்மை பேறு அடைந்திருக்கும் கலா.
இருவருமே பின் முப்பதுகளில் மணந்து, தாம்பத்திய வாழ்க்கையில் கரம் கோர்த்த தம்பதியாதலாலோ? என்னவோ? இருவரிடமும் பக்குவம் என்பது ஜாஸ்தியாகவே இருந்தது.
“அதே மாதிரி தானே மித்ராவுக்கும் தோணியிருக்கும்? ..மித்ரா நம்மளை மாதிரி இல்லை.. பார்வை இல்லாத பொண்ணு.. லைஃப் டிஸிஷனை பொடுபோக்காவா எடுத்திருப்பா?ன்னு நினைக்குறீங்க?.. அவள் வாழ்க்கை.. அவள் இஷ்டம்.. நல்லா யோசிச்சு தான் அந்த முடிவெடுத்திருப்பா..”-மனைவி இதமாக எடுத்தியம்ப வேண்டிய விதத்தில் எடுத்தியம்பினால்.. எக்கணவனுக்குத் தான் அதை மறுத்துப் பேச மனம் வரும்?
இன்ஸ்பெக்டரும் அந்த இளசுகளின் திருமணத்தை, மித்ராவின் அழைப்பின் பேரில் முன்னின்று நடத்த.. ஒருவாறு தலையசைத்து வைத்தார்.
ஆனால் கலா.. தோழி மித்ரா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை.. தன் காவல் அதிகாரியான கணவனிடம் உரைத்தால்..கொஞ்சம் பழைமைவாதியான கணவனுக்கு.. அந்த விஷயம், அதிமன்யு மேல் ஓர் தப்பபிப்ராயத்தை வளரச் செய்யும் என்றெண்ணி அதை மறைக்கவே செய்தாள்.
நெற்றியில் சின்னக் கீற்றாக தீட்டப்பட்ட திருநீறு, முகத்துக்கு இன்னும் அழகு சேர்க்க, நெற்றியில் விழுந்த கேசம் காற்றில் அலைந்தாட, முழங்கை வரை ஏற்றியிருந்த முழுநீளக்கை பட்டு சட்டை மற்றும் வேட்டியுடன்,
நரம்போடிய மாநிறக்கையால் தன் மனையாளின் முன்னங்கை பிடித்து, கம்பீர நடை நடந்து வந்து கொண்டிருந்த அதிமன்யுவை, மரியாதை கமழப் பார்த்தாள் கலா.
அவன் முகத்தில் இருந்த எதுவோ ஒன்று, “இவன்.. மித்ராவுக்கு எஞ்ஞான்றும் பிழை செய்யான்!!”என்றே சொல்லியது.
கணவனின் காதில் பிறர் அறியா வண்ணம் கிசுகிசுப்பாக, “அவங்க வர்றாங்க.. கொஞ்சம் சிரிச்ச முகத்துடனேயே இருக்க ட்ரை பண்ணுங்க.. ப்ளீஸ்..”என்று மனைவி கெஞ்ச, அந்த முறுக்கு மீசை போலிஸூம் வலுக்கட்டாயமாக இதழ்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளலானார்.
அக்னிமித்ரா… எப்போதும் சுட்டெரிக்கும் பெண்.. இன்று தன் இதயங்கவர்ந்த ஆண்மகன் அண்மையில், உலகம் மறந்து.. உலகமே அவன் தான் எனக் கொண்டு.. சந்தோஷ பூரிப்பில் மிளிர்ந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய ஊதா நிற கல்யாணப்பட்டு, அவளை கை, கால் முளைத்த ஐந்தரையடி ஊதாப்பூவாகக் காட்ட, அவளுக்காக அவனில் எழும் காதல் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.
இருப்பினும் அவன் கண்களில் இருந்த இரசிப்புத்தன்மை மட்டும் இறுதி வரை மாறவேயில்லை.
அதிமன்யு, அக்னிமித்ராவையே பார்த்திருப்பது கண்ட.. எதையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் சிவக்குமாருக்கு.. சற்று உறுத்தலாகவே இருந்தது.
கண்டு பழகிய இத்தனை குறுகிய காலத்துக்குள் காதல் என்பதை ஏற்க முடியாமல் நின்றவருக்கு மித்ரா வாழ்க்கை பற்றிய கவலையும் இருக்கத்தான் செய்தது.
இருந்தாலும் சிரித்துக் கொண்டே கை குலுக்கியவர், தன் மனதில் உதித்த கேள்விகளை அதிமன்யுவிடம் கேட்கவே செய்தார்.
“கங்ரேட்ஸ் மிஸ்டர். அதிமன்யு.. ஆமா..நீங்க என்ன வேலை பார்க்குறீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?”என்று கேட்க, அதியின் பங்காளி விக்னேஷூக்கோ உள்ளே திடும்மென்றானது.
அமைச்சர் சதாசிவம், ஆளைத் தட்ட சொன்ன நேரமெல்லாம் முகமூடி அணிந்தே சென்றிருந்த போதிலும், போலிஸில் இவர்கள் பற்றிய எந்த ரெக்கார்டும் இல்லாத போதிலும் இன்னும் ஏன் மித்ரா வேண்டுகோளுக்கிணங்க அந்தத் தொழிலையே விட்ட போதிலும் கூட.. சின்னத் தடுமாற்றமொன்று வந்து போகவே செய்தது விக்னேஷூக்கு.
ஆனால் அதிமன்யு சற்றும் சளைக்காமல், தடுமாறாமல் சொன்னான், “மினிஸ்டர்.சதாசிவத்தோட பாடிகார்ட்..”என்று.
ஆம்,தற்போது அவன் ரவுடித் தொழிலை விட்டு மந்திரிக்கு மெய்க்காப்பாளனாக இருப்பது என்னவோ உண்மை தான்!!
அவன் சொன்னதைக் கேட்டு நம்பாமையால் தோன்றிய முகபாவத்துடன் தாடையை சொறிந்து கொண்டே, “ஆனால் அவர் பக்கத்துல யூனிபார்ம்ல உங்களை நான் பார்த்ததில்லையே..?”என்று கேட்க, இம்முறை தன் அச்சத்தை தூர எறிந்து கடுப்பானான் விக்னேஷ்.
சட்டென இடையில் புகுந்த விக்னேஷோ, “அது வந்து நாங்க மப்டி பாடிகார்ட்ஸ் சார்.. ஒருவேளை யூனிபார்ம் கொடுத்தாங்கன்னா.. கண்டிப்பா சாருக்கு தகவல் சொல்றோம்?”என்று சொல்ல, விக்னேஷின் பதிலைக் கேட்டு அவனை உச்சாதி பாதம் வரை நோட்டம் விடலானார் அவர்.
அந்த கணம்.. மேற்கொண்டு பேச்சு வளர்த்தாமல்.. தயாராக வைத்திருந்த தாலியை ஐயரும் எடுத்து வந்து விட, அத்தோடு அந்தப் பேச்சு தடைப்பட்டு..களம் கல்யாணப் பூரிப்புடன் மிளிரலாயிற்று.
மிகவும் எளிமையான திருமணம்!! யார்க்கும் பெரிய அளவில் சொல்லாமல் மிக மிக சாதாரணமாக நடந்தேறப் போகும் திருமணம்!! ஆனால் அவ்விருவரின் மனமும் அன்பாலும், காதலாலும் நிறைந்திருந்தது.
விக்னேஷ் தந்த மாலையை தன்னவள் கழுத்தில் இட்டான் அதிமன்யு.
கழுத்தில் விழுந்த கல்யாணமாலையின் மலர்களின் வாசத்தில்.. பூவாக மலர்ந்தது மித்ராவின் முகம்!! அது அவள் தலைவன் இட்டது!!
பழகியது சொற்பமேயானாலும், ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் மறவாது அவன் தந்த இனிய நினைவுகள்!
தட்டுத் தடுமாறி தன் கைகளை அந்தரத்தில் கொண்டு சென்ற ஆண்டாள் தன் மதுசூதனனுக்கு மாலை சூடினாள்.
இருமனங்கள் ஏற்கனவே ஒருமித்த பிறகு.. இந்தத் தாலி ஊருக்காக.. அவள் வயிற்றில் வளரும் குழந்தையை இந்த சமூகம் அங்கீகரிப்பதற்காக என்றெண்ணிக் கொண்டவன், இன்ஸ்பெக்டர் எடுத்துத் தந்த தாலியை எடுத்து, கட்டிய நேரம், அவன் புறங்கைகள் இரண்டும் இலேசாக அவள் கன்னம் உரசியது.
பின்னங்கழுத்தில் மோதிய அவன் விட்ட மூச்சுக்காற்று வேறு , அவளை ஏதோ செய்தது.
யாருமில்லாமல் இருந்தவளிடம், யாதுமானவனாக வந்தவன் தந்த தாலியை மனமார ஏற்றாள் அக்னிமித்ரா.
அவளது நன்மை மட்டுமே யோசிக்கும், அவள் சேமித்த வெள்ளந்தி உறவுகள், அட்சதை தூவி வாழ்த்த, அவளது குருட்டுக் கண்களில் இருந்து வழிந்தது ஒரு சொட்டு நீர்!
மனதுக்குள் தன் ஒரே சொந்தமான தாத்தாவை நினைத்துக் கொண்டாள் அக்னிமித்ரா.
“தாத்தா.. நீங்க ஆசைப்பட்டபடி என்னைக் குழந்தை போல பார்த்துக்க ஒருத்தன் எனக்கு கிடைச்சுட்டான் தாத்தா..”என்றபடி அவள் கண்களை மூடிக் கொள்ள, வழிந்த கண்ணீர் பட்டென வந்து வீழ்ந்தது அவன் புறங்கையில்!!
மனைவி அழுவதைத் தாங்க மாட்டாத அதிமன்யு, அவளைத் தன் தோளோடு சேர்த்தணைத்து, ரொம்பவும் உறுதியான குரலில், “மித்ரா… இன்னைக்கு நம்ம கல்யாணம்.. அழக்கூடாது..!! அதிமன்யு பொண்டாட்டி இனி எதுக்காகவும் அழக்கூடாது!!”என்று கூற,
மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “இது ஹேப்பி டிய.. ர்ஸ்.. நிறுத்த முயற்சி.. பண்.. றேன்!! .. ஆனா.. முடிய.. லை”என்று சொல்லிய வண்ணமே தலைவனின் தோள் சாய்ந்தாள் அவள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவர் நெஞ்சிலும் ஏதோ ஒன்று வலி கலந்த ஆனந்தத்துடன் உருண்டோடவே செய்தது.
சந்தேகக் கண் கொண்டு பார்த்த சிவக்குமாருக்கும், அவர்களிடையே இருந்த ஆழமான புரிதல் இதயம் தொட, கை நீட்டியவர், “ஹேப்பி மேரீட் லைஃப் மிஸ்டர் என்ட் மிஸஸ். அதிமன்யு”என்று கை குலுக்க, அதை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டான் அதிமன்யு.
கையிலிருந்த காக்கித் தொப்பியை எடுத்து மாட்டியவர், “எனிவே.. இப்போ என் வைஃப் கொஞ்சம் ரிலீஃப்பா இருப்பா.. அவள் ரொம்ப கவலைப்பட்டது மித்ரா வாழ்க்கையை நினைச்சு தான்..”என்று அவருக்கேயுரிய கணீர்க்குரலில் கூற, கணவனின் கைச்சந்தை, தன் முழங்கையால் இலேசாக இடித்தாள் கலா.
சிவக்குமார் என்னவென்று புரியாமல் பார்க்க, கலாவோ கிசுகிசுப்பாக, “ப்ம்ச்சு.. சும்மா இருங்க அதைப் போய் சொல்லிக்கிட்டு..”என்று சொல்ல, அதை சின்ன முறுவலுடன் பார்த்திருந்தான் அதிமன்யு.
அவன் கண்கள், கைகளை இறுக மூடிக் கொண்டு உறங்கும் பால்மணம் மாறா குழந்தையை தாய்மையுடன் நோக்கியது. ‘இதே போல அவனுக்கும்.. இன்னும் ஈரைந்து மாதங்களில் ஓர் குழந்தை!!’.
சந்தோஷமாக நின்றவனிடம், அவன் மட்டும் கேட்கும் குரலில் தவிப்புடன் சொன்னாள், “இதே போல நமக்கும்.. இன்னும் கொஞ்சம் மாசத்தில் ஒரு குழந்தை இருக்கும்ல?”என்று.
அவளுக்கும், தனக்கும் ஒரே எண்ணவலைகள் எழுந்ததில் சிறு அதிர்ச்சியும், மிகையான காதலும் தோன்ற, அமைதியாக சொன்னான், ‘ம்’ என்று.
அந்த நேரம், அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவனின் சிந்தையைக் கலைத்தது அதிமன்யுவின் நண்பனின் குரல்!!
“மச்சி.. மச்சி.. அப்படியே ஒரு ஃபோட்டோ..!!”-கேமராவைத் தன் கணணுக்கருகில் வைத்துக் கொண்டு கத்தினான் விக்கி.
சத்தத்தில் எதேர்ச்சையாக நிமிர்ந்த காதல் ஜோடி அழகாகப் பதிவானது கேமராவில்!
*****
அன்றிரவு அதிமன்யு வீட்டில்,
கல்யாணமானதன் பின்பு கொண்டாடும் முதலிரவன்று எல்லா ஆண்மகனுக்குள்ளும் துளிர்க்கும், ஆசையும் காதலும் உணர்ச்சிகளும் இவனுக்குள்ளும் துளிர்க்க, புது சட்டை வேஷ்டி மாற்றி வந்தவனின் அழகைக் கண்டு, ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்றான் நண்பன் விக்கி.
“சூப்பர்..!!”- கையால் சூப்பர் அடையாளம் காட்டி, விழிகள் விரிய சிலாகித்தான் விக்கி.
அதனால் அவன் முத்து மூரல்களின் நகைப்பு இன்னும் அதிகமாக, தலையை ஸ்டைலாக கோதிக் கொண்டே விக்கியைப் பார்த்தான் அதிமன்யு.
விக்கி வாயெல்லாம் பல்லாக சிரிப்பதைக் கண்டவன், “என்ன மச்சி?.. என்னை விட நீ ஹேப்பியா இருக்கப் போல இருக்கு..?”என்று கேட்டான்.
அதிமன்யுவின் வலிய தோள்புஜங்களை இரு கைகளாலும் ஸ்தீரமாகப் பற்றியவன், “என் நண்பன் அதிமன்யு கல்யாணம்..சந்தோஷம் இருக்காதா பின்ன?.. இன்னைக்கு நய்ட் உனக்கு கனவு வருதோ இல்லையோ.. எனக்கு கலர் கலரா கனவு வரும் மச்சி..” என்றவனாக..எதையோ கற்பனையில் நினைத்துக் கொண்டு, உடல் முறுக்கி சிலிர்த்து நிற்க,அவன் செய்கையே அவனது கலர் கலர் கனவுகள் எதைப்பற்றியது என்பதை சொல்லாமல் சொல்லியது, அதிமன்யுவுக்கு.
விக்கியின் தோளைத் தட்டி நனவுலகம் அழைத்து வந்த அதிமன்யு, நிர்மலமான முகத்துடன், “என்ன கனவு?”என்று கேட்க, சட்டென தன் தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்துக் காட்டியவன்,
“டேய் ஒண்ணுக்கு இரண்டு.. தூக்க மாத்திரை போட்டிருக்கேன் கண்டிப்பா கலர் கனவு வரும்டா..இல்லைன்னா ப்ளேக் என்ட் வைட் கனவாவது வரும்”என்றான்.
அவன் சொல்வதை நம்ப முடியவில்லையே என்பது போல ஓர் பார்வை பார்த்தவன், ஹாலை விட்டும் அறையை நோக்கி நடக்க அவன் புறமுதுகைப் பார்த்து, ஏதோ யோசனையுடன்,
“நீ என்ன கனவு நினைச்சே?”என்று கேட்டான்.
அதிமன்யு எந்த பதிலுமிறுக்காமல் மேற்கொண்டு முன்னேற, அவனை நோக்கி விரைந்தவன், அதிமன்யுவின் முன்னங்கைப் பற்றி இழுத்து, தன்னை நோக்கி திருப்பி,
“மச்சி இந்தா இது நம்ம சுதாகர் கொடுத்தான்.. பாரின் ஸ்ப்ரே..அடிச்சிட்டுப் போ..அப்புறம் மித்ரா.. ‘ரவுடி பேபி ரவுடி பேபி’ன்னு உன் ஜெபம் தான் பாடுவா ”என்றவனாக கையிலிருந்த பாடி ஸ்ப்ரேயை தாருமாறாக அவனுக்கு அடித்து விட, முதலில் அந்த வாசம் மூக்கில் குப்பென்று அடிக்க, சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் அதிமன்யு.
மூக்கில் நுழைந்த அந்த பாடி ஸ்ப்ரே வாசம் தலைக்கடிக்க, மூக்கை சுட்டுவிரலால் துடைத்துக் கொண்டே, உள்ளே வந்தவனின் பார்வை எதேர்ச்சையாக பதிந்தது பேரிகை முன் நின்றிருந்தவள் மேல்!!
வெள்ளை நிறப்பட்டில் சிவப்பு நிற பார்டர் சென்றிருக்க, தலையில் மல்லிகை சூடி, கைகளில் வளையலும், கழுத்தில் அட்டிகையுமாக தயாராகி நின்றிருந்தவளைக் கண்டதும் சிலையாய் சமைந்தான் அதிமன்யு.
கண் பார்வை இல்லா கண்ணிமைகள் படபடவென அடித்துக் கொள்ள, கையில் பூட்டியிருந்த வளையல்களை.. சலசலக்கும் ஒலி கேட்க, கடினப்பட்டு கழற்றிக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா.
அரவமே எழுப்பாமல் பூனை போல அடி மேல் அடி வைத்து வந்தவன், அவள் சிற்றிடையூடு கையிட்டு தன் சிசுவையும் சேர்த்து அவளையும் அணைத்துக் கொள்ள, வயிற்றில் ஊர்ந்த அவன் கையின் ஸ்பரிசத்தில் ஒரு கணம் நின்று வந்தது அவள் மூச்சு.
ஆனால் இந்தப் பொல்லாத வன்மையாளனோ,அவள் பிடரியில் மல்லிகையின் வாசம் பிடித்துக் கிறங்கி நின்றவன், அவள் பின்னங்கழுத்தோடு இதழ் உரசியவனாக, ஹஸ்கி குரலில்,
“இப்போவேஹ் ஹேன் வளையல் கழட்டுறஹ்?”என்று கேட்டான்.
கணவனின் மீசை சூழ் அதரங்கள் தந்த குறுகுறுப்பில்.. உள்ளே ஓர் இனிமையான மயக்கம் பரவ, “எப்ப.. டியும் கழட்டி வைச்சுத் தானே ஆகணும்? .. ர்ரவுடி பேபி?..”என்றவளின் மலர்ந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தொடங்கியது.
அவளது நாசிக்குள்.. அவன் மீது அடிக்கப்பட்ட பாடி ஸ்ப்ரே நறுமணம்.. அவள் திரும்ப மூச்சை வெளிவிட்ட கணம் குப்பென்று நுரையீரல் வரை தீண்ட, அவள் உடம்பில் ஓர் துணுக்கம் எய்திப் பரவியது.
மனைவி உடலில் தோன்றும் மாற்றங்களை அறியாதவனின் பிடி இறுக, இன்னும் கொஞ்சம் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன், ஆசையுடன் அவள் கன்னத்தில், இழைந்தவாறு, “நாஹ்.. முழுசாஹ் ரசிக்கவே இல்லையேஹ்?..”என்றவண்ணம் அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான் அதிமன்யு.
திரும்பியவளின் பார்வை இல்லா கருமணிகள் அங்குமிங்கும் அலைபாய, அவன் இதழ்களோ அவளை நோக்கி மையலுடன் முன்னேற, சட்டென்று அவனைத் தன்னிலிருந்தும்தள்ளி விட்டாள் அக்னிமித்ரா.
அவனோ தன் மனைவிக்கு என்னானது? என்பது போல புரியாமல் பார்க்க, இவளோ இன்னும் இன்னும் பேரிகையோடு முதுகு சாய்த்து ஒன்றலானாள்.
அவளின் தடுமாற்றம், துணுக்கம் ஆகியவற்றின் காரணம் அறியாதவன், அவளை நோக்கி முன்னேறி ஒரு அடி எடுத்து வைக்க, அவன் காலடி சத்தம் கேட்டு.. தடுமாறிப் போனவள்,
பேரிகையில் வைக்கப்பட்டிருந்த சீப்பு, பவுடர் மற்றும் இதர பல அழகு சாதனங்களை எல்லாம் கீழே தட்டி விடவும் செய்தாள்.
அக்னிமித்ராவின் நாசி.. வளியில் அவள் எஞ்ஞான்றும் வெறுக்கும் ஓர் மணத்தை முகர்ந்து கொண்டிருந்தது. அதன் விளைவால், அவள் இதயம் தாருமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது.
அந்த மணம்.. அவள் முகர்ந்த மணம்.. அது அந்த ராட்சசன் தேவ்விடமிருந்து அவள் முகர்ந்த மணம்!! அவள் மூளையின் நரம்பு, நாளங்கள் என்றும் மறவாத மணம்!!
உள்ளுக்குள் ஓர் அலைப்புறுதலைக் கொடுக்க… பேரிகையைத் தொட்டுத் தொட்டு, பின்னாடி சென்றவள்,
தன் முன்னே இருந்த அதிமன்யுவை நோக்கி, “நீ.. நீ ய்யாஆஆரு?சொல்லூஊஊ.. ந்நீ யாரு?? எ.. என் அதிமன்யு எங்கே?..”என்று கேட்க, அவள் உதிர்த்த சொற்களில் ஸ்தம்பித்து நின்றான் அதிமன்யு.
ஓர் ஆண்மகனுக்குள் முகிழ்க்கும் முதலிரவுக் கனவுகள் அப்படியே உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்து விட, மனைவியை பதகளிப்புடன் பார்த்தவன், “மித்ரா?..”என்றான் மென்மையான குரலில்.
அவன் குரல் கேட்டதும் இன்னும் சுவரோடு ஒன்றினாள் அக்னிமித்ரா. அவளுடைய குருட்டுக் கண்கள் காட்டும் இருட்டு விம்பத்தில், தானாகத் தோன்றலானான் ராட்சசன் தேவ்.
அவள் எதிரே, அன்று ‘சேப்டர் வன்’ உணவகத்தில் வைத்து கோட் சூட்டுடன், தெனாவட்டாக நின்றிருந்த அதே தேவ்!!
அப்பெண்ணின் குருட்டுக் கண்களில் இருந்தும் அன்றைய நினைவுகளின் தாக்கத்தின் விளைவால் சத்தமேயின்றி வழிந்தது கண்ணீர்!!
“தேத்.. தே.. தேவ்..??”என்று உடைந்து போன குரலில் சொன்னாள் அவள்.
அவள் செய்கைக்கான அர்த்தமும் , அவள் சொன்ன பெயருக்கான அர்த்தமும் புரியாமல் நின்றிருந்த அதிமன்யுவோ, மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்தவனாக,
“தேவ்வா? .. மித்ரா..??மித்ரா இது அதிமன்யு.. உன்னோட ரவுடி பேபி..!! ”மனமுருகும் குரலில் சொன்னான் அவன்.
அதிமன்யு உரைப்பதை அக்னிமித்ராவின் உள்ளமும், நாசியும் ஏற்பதாக இல்லை.
ஆனால் அவன் குரல்.. அது மட்டும் அதிமன்யுவுடையதாக ஒலிப்பது ஏன்? என்று யோசிக்க முடியாதளவுக்கு அந்த நினைவுகளின் தாக்கம் பாடாய்ப்படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.
“இ.. இல்லை.. நீ என் அதிமன்யு இல்லை? நீ.. நீ அந்.. த ராட்சசன் த்தேவ்!! என் அதிமன்.. யூவை நீ என்ன ப்பண்ணஅஅ??” என்று அடித் தொண்டையிலிருந்து சீறிக் கேட்டவளின் கருமணிகள் இருட்டுக்குள் துலாவித் துலாவி தன் கணவனையே தேடியது.
அந்த மாய விம்பத்துக்குள் அவளது மன்னவன் இல்லை. மாறாக ஆக்ரோஷம் ததும்பும் விழிகளுடன் தேவே நின்றிருந்தான்.
ஆனால் அவன் குரல்.. தேவின் குரல்.. அதிமன்யுவுடையதாக இருப்பதை.. அவளது மூளை ஜீரணிக்க முடியாமல் தவிக்க, தேவ்வின் விம்பம் சுழல்வது போல ஓர் தோற்றமயக்கமும் தோன்றலானது.
மனைவி ஏதோ தனக்குள்ளேயே சிக்கித் தவிப்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட, அவள் மனதில் பதியும்படி அழுத்தமான குரலில்,
“மித்ராஆஆ.. இது ந்நான் உன் அதிம்மன்யு… உன் அதிமன்யுவுக்கு ஒண்ணும் ஆகலை.. நான் தான் உன் முன்னாடி நிற்கிறேன்.. இங்கே உன்னையும், என்னையும் தவிர யாருமில்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
மீண்டும் இடையிட்டு சீறினாள் மித்ரா.
“ப்பொய்ய்ய்!! ந்நீ.. ப்.. ப்ப்பொய் சொல்ற? என் அதிமன்யு எங்கே? என் அதிமன்யுவை வ்விட்டுரு தேவ்!!”என்று முகம் ரௌத்திரத்தில் சிவக்கக் கத்தினாள் அவள்.
அவனுக்கோ மனைவி படும் பாடு கண்டு, வேதனை ஒருபுறம் ஊற்றெடுக்க, அவளைத் தொட, அவளை நோக்கி அமைதியாக முன்னேறினான் அவன்.
அவன் தன்னை எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், சுவரோடு ஒன்றிப் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே சென்றவளின் காலின் சின்னவிரல் மோதிக் கொண்டது அறையில் இருந்த டிராயரில்.
வலிதாங்காமல் டிராயரை அவள் ஊன்றிப் பிடிக்க, பிடிமானம் இல்லாத பழைய டிராயரும் அவளையும் சரித்துக் கொண்டு விழுந்தது கீழே.
டிராயர் மீதிருந்த லேம்ப்பும் பழங்களின் தட்டும், கூடவே தண்ணீர் கிளாஸூம் கீழே விழுந்து சிதறி உடைய, அன்று சேப்டர் வன் உணவக ரெஸ்ட்ரூம் அறையில் எப்படி விழுந்து கிடந்தாளோ மாது.. அது போல அவள் நிற்கும் நிலை உருவானது.
அவளது கைகள் தரையில் ஊன்றியிருக்க, உடல் வேதனையை அனுபவித்தாலும், அதை இம்மியளவும் முகத்தில் வெளிக்காட்டாமல், தன்னை நோக்கி வரும் தேவை அண்ணாந்து பார்த்தாள் மித்ரா.
மனைவி விழுந்ததும் தடுமாறி அதிமன்யு, “மித்ரா பார்த்து..”என்றவளாக அவள் தோள் தொட எத்தனிக்க, அதைத் தட்டி விட்டுக் கொண்டே திக்கித் திணறி ஏதோ உளறினாள் பெண்.
“எ.. என்னைத் த்த்தொ.. தொடா.. தே… என்னைத் தொடாதே…அதீஈஈ அதீஈஈ!!! ”என்று முன்னாடி நின்றிருந்த கணவனை அவள் அழைக்க, அவனுள் இன்னும் குழப்பம் அதிகமானது.
அத்தனை வலியிலும்…தரையில் ஊன்றிய கைகளை எங்கே மீண்டும் மிதித்து விடுவானோ? என்ற பயமும், தன்னை மீண்டும் மானபங்கப் படுத்தி விடுவானோ என்ற அச்சமும் பிறக்க,
கைகளால் இரு மார்பையும் மறைத்துக் கொண்டே, “இப்போ நீ வெளியே ப்போறியா இல்லையா? .. அதீஈஈ.. அதீஈஈ..”என்று முன்னாடி இருந்த அதிமன்யுவை மீண்டும் அழைத்தாள் அவள்.
அதிமன்யுவுக்கு நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்றும் புரியவில்லை. அவள் உளறும் தேவ் யார் என்றும் தெரியவில்லை.
சட்டென தரையில் அமர்ந்தவன், செய்வதறியாது அவள் தலையை தடாலடியாக தன் மார்போடு இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
அங்கே தான் அந்த உத்தமன் பெரும் தவறு செய்தான். ஏற்கனவே தான் அடித்த பாடி ஸ்ப்ரேயில் அவன் தான் அந்த தேவ் என்று நம்பிக் கிடந்தவளுக்கு, தற்போது அவனது ஸ்பரிசமும் கூட அது தேவாகவே தோன்றலானது.
“மித்ரா.. ஒண்ணுமில்லை.. ஒண்ணும் இல்லை.. நான் இருக்கேன்.. இருக்கேன்”என்று அவன் இடையறாது சொல்லிக் கொண்டே போக, அந்த பர்ஃபியூம் நறுமணம்.. அவளை கிட்டத்தட்ட ஓர் பைத்தியம் போலாக்கியது.
கோட் சூட் அணிந்த தேவ்வின் விம்பம் அவளைக் கட்டியணைப்பதை, வெறுத்தாள் மித்ரா. உடல் முழுவதும் வெந்து தணிந்தது அவன் ஸ்பரிசத்தில்!!
அவன் பிடியிலிருந்து திணறித் திமிறி வெளி வந்தவள், அவன் மார்பில் இரு கை வைத்து தள்ளி, “இல்லைய்ய்ய்! .. நீ என் அதிமன்யு இல்லை!!”என்று மீண்டும் கத்தியவளின் கைகள், தரையில் ஊன்ற..
அங்கே எதேர்ச்சையாக அகப்பட்டது பழங்களை வெட்டுவதற்காக டிரேயோடு வைக்கப்பட்டிருந்த கத்தி.
கத்தியின் பிடி கைக்கு வந்ததும்.. அக்னிமித்ராவினுள் ஓர் தைரியம் ஊடுருவிப் பரவியது. விழிகளில் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த கண்ணீர் நின்றது. முகத்தில் கொலைவெறியுடன் கூடிய வன்மை குடிகொண்டது.
தட்டுத் தடுமாறி எழுந்தவள், எந்தப்பக்கம் தேவ் நின்றிருக்கிறான் என்று தெரியவில்லை தான்!! இருப்பினும் காற்றில் நடுங்கிய கரங்களில் கத்தி ஏந்தியவளாக,
“த்தேவ்.. என் க்கிட்ட வ்வராதே.. ஓரடி எடுத்து வைச்சாலும்..ஆபத்து உனக்குத் த்தான்.. என் அதிமன்யு எங்கே.. சொல்லஊஊஊ? என் அதிமன்யு எங்கேஏஏஏ??”என்று விழிவெண்படலம் சிவக்க, கண்ணீர் வழிந்தோடக் கேட்டாள் அவள்.
அதிமன்யுவின் குரல் கொண்டு உரையாடி.. அவளைச் சீண்டிப் பார்க்க முயல்வது தேவாகவே தோன்றியது அவளுக்கு. அதனால் நிதர்சனத்துக்கும், மாயைக்கும் இடையிலான வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாமல் அன்றைய நினைவின் தாக்கத்தில் துடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“மித்ரா..உளர்றதை நிறுத்து..இங்கே நீ சொல்ற மாதிரி யாரும் இல்லை.. உன் முன்னாடி நிற்கிறது உன்னோட அதிமன்யு தான்”என்று உறுதியான குரலில் சொல்லிக் கொண்டே முன்னேற,
அவள் கரங்கள் கத்தியை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது.
“இல்லை நீ த்தேவ்! .. உன் கிட்ட தேவ்வோட வாசம் வருது!! என் அதிமன்யு எங்கே?? .. சொல்லூஊஊ.. என் அதிமன்யு எங்கே..??”என்று மித்ரா அதட்டிக் கேட்க, சட்டென கையுயர்த்தி தன் சட்டையை முகர்ந்து பார்த்தான் அதிமன்யு.
விக்கி அடித்து விட்ட பாடி ஸ்ப்ரே தான் அக்னிமித்ராவை நடப்புக்குள் கொண்டு வராமல் அலைக்கழிக்கிறது என்று புரிய, அவசரமாக தன் சட்டையைக் கழற்ற பட்டனில் கை வைத்தான் அதிமன்யு.
அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியது.
தன்னை மானபங்கப்படுத்தி, விழிகளைப் பறித்த தேவ்.. அவள் கண் முன்..!! விடுவாளா? புத்தி மழுங்கடிக்கப்பட்ட அந்நொடியிலும் கூட அவளுடைய கொலைவெறி அடங்கவேயில்லை.
அதிமன்யு சுதாரித்து நிமிரும் முன்னர், அவன் வயிற்றில் கத்தியை ஆழமாகப் பாய்ச்சியிருந்தாள் மாகாளி அவதாரம் எடுத்திருந்த அக்னிமித்ரா!!
தனங்கள் ஏறி இறங்க.. மூசு மூசு என்று மூச்சு வாங்க நின்றவளின் கையை.. இறுகப் பற்றிக் கொண்டே, விழிகள் சிவக்க தன் மனைவியைப் பார்த்தவனின் இதழ்கள் ஏதோ சொல்ல திறந்தது.
அவன் கை குத்தப்பட்ட இடத்தை வலியில் முணகிக் கொண்டே பொத்திக் கொண்டது.
இரத்தம் பீறிட்டதில் தலை சுற்ற, அப்படியே மடிந்து ட்ரஸ்ஸிங் டேபிளில் முதுகு சாய்த்து அமர்ந்தவனின் கண்கள் அவளையே தான் ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
தான் குத்தியது.. அவள் உயிருக்குயிராக நேசித்த அதிமன்யு தான் என்பதை அறியாத மித்ரா.. அவ்வறை எங்கிலும் மதலையை தேடும் தாயைப் போல,
“பேபி.. நீ எங்கே இரு.. க்க? அதி.. ஏதாவது பேசு அதி.. எனக்குப் பயமா இருக்கு.. ஏதாவது…பே..சு அதி..”என்று கண்ணீர் மல்கக் கூற,
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணிமைகளில் மௌனமாக வழிந்தது கண்ணீர்.
வாய் திறக்க முடியாதளவுக்கு வலியில் உடல் குறுக கொஞ்சம் கொஞ்சமாக அவன் கருமணிகள் மேல் சொருகத் துணிந்த கணப்பொழுதுகள் அவை!
அவள் கண்கள் வன்மையிலும், வெம்மையிலும் துடித்து துடித்து அடித்துக் கொண்டிருந்தது.
அறையில் மயான அமைதி நிலவ, உயிரும் மூச்சும் அடங்க.. அதே இடத்தில் இரண்டாக மடிந்து அமர்ந்தவள், “விக்கீஈஈ.. விக்கீஈஈ!! ”என்று தன் குரலில் பலம் கொண்ட மட்டும் கத்த,
அப்போது தான் கண்ணயரப் போன விக்னேஷ்.. தடாலென பதறியடித்துக் கொண்டு அறைப்பக்கம் ஓடி வந்தான்.
கதவைத் திறந்து உள்ளே ஈரெட்டு எடுத்து வைத்தவனின் நடை அப்படியே தடைப்பட்டு நின்றது.
நண்பன் இரத்த வெள்ளத்தில் மிதப்பது கண்டு உலகமே இருள, பக்கத்தில் மித்ரா.. அலங்கோலமாக கண்கள் சிவக்க அழுது அழுது அதைத்துப் போன விழிகளுடன், கூடவே கைகளில் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் நிற்பது கண்டு நடந்திருப்பது என்னவென்று யாரும் சொல்லாமலேயே அனுமானிக்க முடிந்தது அவனால்.
சட்டென ஓடி வந்து நண்பன் பக்கத்தில் முழந்தாளிட்டு அமர்ந்து, அவன் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டவன், மித்ராவை நோக்கி, “மித்ரா.. என்னமா பண்ணி வைச்சிருக்க?”என்று கேட்டான்.
நெஞ்சம் முழுதும் தலைவன் எங்கே என்ற பயம் ஊற்றெடுக்க, “என் அதி எங்கே அண்ணா?..”என்று அவள் உடைப்பெடுத்த அழுகையுடன் கேட்க,
“உன் முன்னாடி இரத்தவெள்ளத்தில் இருக்கிறது உன் அதிமன்யு தாம்மா”என்று சொல்ல.. அவள் கையில் இருந்த கத்தி தானாக நழுவி விழுந்தது தரையில்.
தான் செய்த தப்பு உணர்ந்த அந்நொடி… திறந்த இதழ்களை அதிர்ச்சி தாளாமல் மறைத்துக் கொண்டன கைகள்!!
அப்படியானால் அவள் தன் கரங்களால் குத்திக் கிழித்தது அவளது கணவனையா?? குருட்டுப் பெண் செய்த தவறில் இதயம் பரிதவிக்க, கல்லாய் சமைந்து நின்றாள் அக்னிமித்ரா.
கிழிந்த வயிற்றை இரு கைகளால் பொத்திப் பிடித்துக் கொண்டு மூச்செடுக்க சிரமப்பட்ட அந்நொடியும் அவன் சொன்னான், “டேய் முதல்ல.. அவள் காலுக்கு கீழே இருக்.. கிறஹ் க்ளாசை க்ளீன் பண்ணுடாஹ்.. என் மித்ரா கா.. க்கா.. லை க்கிழிச்.. சிரப் போகுது”என்று தான்.
நண்பன் அவள் மேல் வைத்திருந்த அன்பைக் கண்ட விக்கியின் கண்கள் அதை விட சோகத்தை சிந்த, நண்பனை கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தியவன், “டேய் வாடா ஹாஸ்பிடல் போகலாம்” என்றவனாக வாசலை நோக்கி நடந்தான் விக்கி.
அவள் குத்தியது அதிமன்யுவையா? இந்தக் கையால் அவள் குத்தியது அவளது ஆருயிர் கொண்டானையா??
இந்த உலகத்தில் அவளுக்கென்றிருக்கும் துண்ணிய கேளிரையா??
இதுவரை மூளை காட்சிப்படுத்திய மாயவிம்பம் முற்றிலும் காணாமல் போக.. தன் மடத்தனத்தை தானே தரையில் தொப்பென அமர்ந்தான் அதிமன்யு.
****
அவன் கண் விழித்த போது.. அசைய முடியாமல்.. குத்து வலியொன்று எழுந்தது அவன் வயிற்றோரம்!!அவனது நாசியோ தன்னைச் சூழ மருந்து நெடியை உணர,
அவன் கைகளுக்குள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது ட்ரிப்ஸ்!!
கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவடைந்த போது அவன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்தது புரிந்தது அதிமன்யுவுக்கு.
எத்தனை நாள் இப்படி படுத்திருந்தான் என்று தெரியாது.. இருப்பினும் வயிற்றில் எழுந்த வலி மட்டும் அலாதியானதாகவே இருந்தது.
மெல்ல சுற்றி வரக் கண்களை சுழற்றியவனின் பார்வையில் பதிந்தாள் அவனுடைய தேவதைப் பெண்.
ஓயாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை, கையால் அடிக்கடி துடைத்துக் கொண்டே.. நிர்மலமான முகத்துடன் விழிகள் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் அவள்.
அவளது தலைக்கேசம்..தாருமாறாகக் கலைந்திருக்க, நெற்றியில் அவன் இட்ட திலகம் வியர்வையில் பாதி அழிந்தும் அழியாமல் இருக்க.. முகம் முழுவதும் அதைத்துப் போன மனைவியை மிருதுவாகப் பார்த்தான் அவன்!!
அவளது அழுவது தாளமாட்டாமல் நீண்ட அவனது கைகள், அவளுடைய கண்ணீரை மென்மையாகத் துடைத்து விட, கணவனின் ஸ்பரிசத்தில் சிந்தை தெளிந்தாள் மித்ரா.
தற்போது சுமூகமான நிலைமையில் இருந்த அவள் மூளை, அந்த ஸ்பரிசம் அதிமன்யு உடையது தான் என்று சரியான தகவலையே அவளுக்குக் கொடுக்க,
தொண்டை அடைத்த அழுகையை அடக்கிக் கொண்டு,கன்னம் துடைத்த அவனது உள்ளங்கையில் .. முத்தம் வைத்தாள் அக்னிமித்ரா.
அவன் கண் விழித்து விட்டான் என்றானதும் ஜிலீரிட்டது அவள் உள்ளம்.
அவள் கைகள்..அந்தரத்தில் துலாவி.. அவன் மார்பு தேட, அவள் தன் தீண்டல் யாசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட கணவனும், அத்தனை வலியிலும் அவளை நெஞ்சோடு சாத்திக் கொண்டாள்.
அவள் வெறுக்கும் வாசமும்,அலைக்கழிக்கும் நினைவுகளும் அவளை விட்டும் நீங்க, கணவனின் தீண்டல் கணவனின் தீண்டலாகவே அவளுக்குப் புலப்பட்டது.
அவன் நெஞ்சாங்கூட்டில் அடைக்கலமானவள் தற்போது அடிபட்ட குழந்தை போல குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அழுகையின் உச்சத்தில் பேச முடியாமல் இடையிடையே விம்மல் கூட வந்து போனது அவளுக்கு.
“சா.. ரி பேபிஹ்.. இப்படியெல்லாம் நான் பண்ணுவேன்னு நினைக்கவே.. யில்லை..ஏதோ நினைவுகள்.. அந்த பர்ஃபியூம் ஸ்மெல்.. எல்.. எல்லாம் என்னை பைத்தியம் மாதிரி ஆக்கிருச்சுஹ்.. நான் வேணும்னு பண்ணலை.. நான் பைத்தியம்.. நான் ஒரு பைத்தியம்.. பேபி..”என்று தன் ஆற்றாமை தாங்காமல் தன் கன்னங்களுக்கு அவளே அடித்துக் கொள்ள, அவள் செய்கையை சகியாது அவள் கையை இழுத்துப் பிடித்தவனாக,
“நிறுத்து மித்ரா..”என்று அதட்டினான் அதிமன்யு.
அவள் கூச்சல் ஓய்ந்து, கேவிக் கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, அவள் அழுகை ஓயுமட்டும், குறுக்கே ஓர் வார்த்தை பேசாது,அவள் கூந்தல் தடவி ஆசுவாசப்படுத்தலானான் அதிமன்யு.
மனைவி அழ அழ.. குழந்தையை சுமந்து கொண்டு அழுபவளை எண்ணி.. வருத்தமாகவும், ஆயாசமாகவும் இருந்தது அவனுக்கு.
சில பல மணித்துளிகள் கடந்து அவன் அணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் அழுகை நிற்க, இவன் கேட்டான்,
“யார் அந்த தேவ்..?”என்று.
அவன் உதிர்த்த அந்த ‘தேவ்’ என்ற நாமம் கேட்டு, மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செறிந்து அடங்க, அவன் மாரை விட்டும் தலை தூக்கியவளின் கண்கள் வெம்மையாலும், கொலைவெறியாலும் சிவந்திருந்தது.
அந்த உஷ்ணம் தாங்காமல் இடது கண்ணில் இருந்து மட்டும் ஒற்றைத் துளி கண்ணீர் வழிய, “த்தேவ்.. பட்டாம்பூச்சி போல திரிஞ்ச என்னை சிறகொடிச்சவன்… இந்த உலகத்துக்கு நல்லவன் வேஷம் போட்டாலும், உலகம் அறியாமல்.. கறுப்பு முகம் வைச்சிருக்கறவன்.. என்னோட கண்ணைப் பறிச்சு குருடியா ஆக்கினவன்…”என்று அவள் சொல்லும் போது அகல விரிந்தன அவன் நயனங்கள்.
பட்டென்று பாய்ந்து கேட்டான், “என்ன? ..அப்படின்னா உன்னோட விஷூவல் இம்பேர்ட் நிலைமை பிறப்பிலிருந்து இருந்தது இல்லையா?உன்னால நல்லா பார்க்க முடியுமானதாகவா இருந்தது?”என்று.
அழுது அழுது அதைத்துப் போன அவள் முகம் மேலும், கீழும் ஆடியது.
உணர்ச்சிகள் சுத்தமாக துடைக்கப்பட்ட குரலில், “ம்.. ஆமா..தேவ் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனி ஓனர் தேவ்.. “தேவ் வர்மன்!!” அவன் தான் இது எல்லாத்துக்கும் காரணம்”என்று சொன்ன நொடி,
அவன் கை முஷ்டி சட்டென இறுகி, கை நரம்பு புடைத்து வெளிவந்தது கோபத்தில்!
இந்த உலகில் அவன் வெறுக்கும் நரகாசுரனின் பேரை பல வருடங்கள் கழித்துக் கேட்டதால் விளைந்த ஆத்திரத்தில், நறுநறுவென பற்கள் கடித்தான் அதிமன்யு.
அவனில் ஏற்படும் மாற்றங்கள் அறியாமல் தொடர்ந்து சொன்னாள் அவள்.
“அவன் மட்டும் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தா.. எனக்கு இந்த அவல வாழ்க்கை வந்திருக்காது.. என் தாத்தா ப்ஃபரோபஸர் ராஜாராம்.. என்னை விட்டும் போயிருக்கவும் மாட்டாரு..”என்று சொல்ல,
அவள் சொன்ன பேரில் ஜர்க்காகி நின்றான் அதிமன்யு.
“என்ன?? ஃபரோபஸர் ராஜாராம் இறந்துட்டாரா? ராஜாராம் பேத்தியா நீ?”-அன்றைய நாளின் இரண்டாவது அதிர்ச்சியாக அதைக் கேட்டான் அதிமன்யு.
அவள் தலை மீண்டும் ஒரு முறை ‘ஆமாம்’என்பது போல மேலும், கீழும் ஆடியது.அவளிருந்த மனநிலையில் ‘ராஜாராமை எப்படி அதிமன்யு அறிந்தான்?’ என்று கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு.
கொஞ்சம் பிரபலமான ராஜாராமை.. அதிமன்யு அறிந்து வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமாகவும் தோன்றவில்லை அவளுக்கு.
தாத்தாவின் இரத்தம் தோய்ந்த இறுதி முகம் அவள் மனக்கண்ணில் வந்து போக, சோகம் தாளமாட்டாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,
இயன்றவரை சாதாரணமான குரலில், “என் தாத்தா துடிக்கத் துடிக்க என் கண் முன்னாடி சாக அவன் தான் காரணம்..என் பார்வை பறிச்சான்.. என் தாத்தா உயிரை என் கிட்ட இருந்து பிரிச்சான்.. நான் வைச்சிருந்த ஆதாரத்தையும் பறிச்சான்.. இப்போ நான் தனிமரமா.. நிற்க முழு காரணம் அவன் தான்”.. என்றவள் ஏதேதொ சொல்லவாரம்பிக்க, அவன் முகத்தில் கடுமையும், வலிமையும் ஒருங்கே பரவியது.
அவள் பார்வையைக் கொடூரமான முறையில் பறித்திருக்கும் அந்த நரகாசுரன் தேவ்வை.. அவன் கையாலேயே வெட்டி பொலி போட வேண்டும் போல வெறியே மிகுந்தது அவனுக்கு.
அனைத்தையும் கடினப்பட்டு அழுகை அடக்கி சொல்லி முடித்தவள், “திரும்பவும் இந்தக் குருடாய் போன கண்களில் இருந்து பார்வை வர வைக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நானும் கொழும்பை விட்டு இங்கே வந்துட்டேன்..
ரொம்ப வருஷம் கழிச்சு.. அவன் யூஸ் பண்ற.. அதே பர்ஃபியூம் ஸ்மெல்.. இதுவரை என்னோட பழகினவங்க யார் கிட்டேயும் நான் ஸ்மெல் பண்ணாத வாசம்.. அது உன்கிட்ட இருந்து வந்ததும்.. அதுக்கப்புறம் என்னையும் மீறி ஏதோ நடந்திருச்சு..
உன் குரல் கேட்குது.. பட் ஐ தோட் இட் வாஸ் ஹிம்… ஐ நியர்லி லொஸ்ட் மை கன்ட்ரோல்.. . நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு தெரியலை.. என்னால அவனைக் கொல்லணும்ன்ற வெறியைக் கன்ட்ரோல் பண்ணவே முடியலை..”என்று சொல்ல மனைவியின் நிலைமையை அவனால் தெள்ளத் தெளிவாக உணர முடியுமானதாகவே இருந்தது.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் மனைவியை காதலுடன் தழுவிக் கொண்டான். அவள் அடைந்த வலி வேதனை எல்லாவற்றையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
மனைவி சொன்ன அந்த தேவின் பேரைக் கேட்டதும், உள்ளுக்குள் ஓர் கொலைவெறி ஊற்றெடுக்க,
‘தேவ்.. என் கையால் நரபலி எடுக்கணும்னு நினச்சிட்டிருக்கிற தேவ்.. இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடி இருக்கானோ தெரியலை…?’என்று அவன் தன்னையும் மீறி முணுமுணுக்க,
அவன் மார்பிலிருந்தும் தலை தூக்கியவன் கேட்டாள், “ம்?.. என்ன சொன்ன?”என்று.
அவள் கண்ணீரை இரு கையாலும் துடைத்து கன்னம் தாங்கியவன், அதை விடுத்து வேறே ஏதோ சொன்னான்.
“மித்ரா உன் வலி எனக்குப் புரியுது.. இருந்தாலும் இப்போ நீ என் குழந்தையை சுமந்திட்டிருக்குற..? உன் அமைதி தான் எனக்கு இப்போ முக்கியம்.. எப்பவும் எந்த நிலைமையிலும் உன் கூட நான் இருப்பேன்”என்றவனாக.. நெற்றியில் முத்தம் வைக்க,
கணவன் சொன்ன சொல்லில்.. காதல் மிகுதியாகி.. மீண்டும் தலைவன் மார்பில் தலை சாய்த்தாள் தலைவி!!
Very interesting sis super going,,👍😍😥
👌👌👌👌👌👌👌
Very interesting sis