ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! 

          [9]

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, 

‘தேவ்’ என்றெண்ணி, மனைவி ஏற்படுத்திய காயம் குணமடைந்து தேறி வந்ததன் பின்னர், 

அவன் வீட்டு சமையலறையில், வெற்று மேனியில் கையில்லா பெனியனுடனும், தோளில் ஓர் செந்நிற துண்டுடனும் தோசை ஊற்றிக் கொண்டிருந்தான் அதிமன்யு.

அந்தக் கையில்லா பெனியன் வழியாகத் தெரிந்த முறுக்கேறிய திண்ணிய தசைகள்.. இவன் மெய்க்காப்பாளனாக இருப்பதற்கு அனைத்து தகுதியும் வாய்க்கப் பெற்றவன் என்று சொல்லாமல் சொல்லியது. 

இருந்தாலும் அவனின் உடல்கட்டின் உறுதியைக் கண்ணாரக் காணும் பாக்கியம் தான் கிட்டவில்லை அவனுடைய மனைவி அக்னிமித்ராவுக்கு. 

தற்போது மூன்று மாதக்கருவாக சிசு சுமந்து நின்றிருப்பவளுக்கு, அதிமன்யு ஓர் புது உலகத்துக்கு வழிகாட்டினான் என்று சொல்வதும் கூட மிகையாகாது. 

பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும், குரோதமும், வன்மமும் நிறைந்த நிஜ உலகை விட்டும் தூரமான, முழுக்க முழுக்க காதல் உணர்ச்சிகளால் மட்டும் ஆன உன்னத உலகு அது!! 

அதில் அவள், அவளது தலைவன் அதிமன்யு.. புது உறவாக அவர்கள் குழந்தை மட்டுமே இருக்க, ஒவ்வொரு நொடியையும் காதலுடன் இரசித்து இரசித்து வாழ்ந்தாள் அதிமன்யுவின் மங்கை! 

சமையலறைக்கு அருகாமையிலேயே கிடந்தது அவர்கள் வீட்டு சாப்பாட்டு மேசை!! 

அந்த சாப்பாட்டு மேசையின் நாற்காலியில் தலைக்கு குளித்த கூந்தல் காற்றில் உலர்ந்து ஆட, நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் திவ்யமான அழகுடன், தான் சம்மணம் கொட்டி அமர்ந்திருந்தாள் அக்னிமித்ரா. 

‘தேவ்’விற்காக அவளுள் கொழுந்து விட்டெரியும் வன்மம், கொஞ்சம் அடங்கிப் போயிருந்தாலும் கூட, நீர்த்துப் போயிருக்கவில்லை அவளுள். 

டேபிளில் ப்ளேட்டைத் தட்டித் தட்டி, வயிற்றைத் தேய்த்துக் கொண்டவள், “சீக்கிரம்டா.. உன் பேபிக்கு பசிக்குது..!!!”என்று நான்காம் முறையாகக் கூறியவளின் குரல் பசிமயக்கத்தினால் கொஞ்சம் வலுவிழந்து தான் போயிருந்தது. 

“வர்றேன்.. வர்றேன்..குட்டிம்மா… கொஞ்சம் பொறுத்துக்க.. அப்பா வந்துட்டேன்”என்று பளிச்சிடும் விழிகளுடன் குழந்தையுடன் உரையாடியவன், தோசையை அழகாக சுட்டெடுத்துக் கரண்டியில் தாங்கிக் கொண்டே மனைவியை நாடிப் போய், அவள் தட்டில்.. இட்டான். 

தோசையில் விட்ட நெய் மணம் கமகமவென நாசியை நிறைக்க, மூச்சை ஆழ உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டே, விரல்களால் சூப்பர் அடையாளம் காட்டிய மனைவியை இரசித்துப் பார்த்தான் அவன். 

 டேபிளில் இருந்த சட்னியை அவள் தட்டில் ஒரு கரண்டி வைக்க, தோசையை விண்டு, சட்னியோடு தொட்டு சாப்பிட்டவள் அடுத்த கணம் இதழ்களைக் கடித்துக் கொண்டாள். 

“ஸ்ஸ்… என்னா இனிப்பு…?”என்று அவள் வாய்க்கருகே கைகளை கொண்டு சென்று, விழிகள் மூடிய வண்ணம் சொல்ல, பக்கத்திருக்கையில் அமர்ந்திருந்த அதிமன்யு விழிகளோ மெல்ல விரிந்தது. 

“என்ன? சட்னி இனிப்பா இருக்கா? சான்ஸில்லையே?” என்று அவன் சட்னியை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, நக்கிப் பார்க்க, அவன் விழிகளின் இடுங்கல் இன்னும் அதிகமானது. 

‘மனைவி பொய் சொல்கிறாள்’என்று தெரிந்ததும் முளைவிட்ட சின்ன போலிக் கோபத்தில், அந்த இளம் பெண்ணின் காது பிடித்துத் திருகியவன், “உப்பு, புளி, காரம் எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கு.. இதில் இனிப்புன்னு பொய் சொல்றியா?”என்று கேட்க,வலிக்கவே செய்யாத அவன் திருகலை வலிப்பது போலவே பாவ்லா காட்டினாள் அவள். 

“ஆஆ… வ்விடுடா ர்ரவுடி ப்பேபி.. நிஜமா இனிப்பா இருக்கு…”என்று உடம்பை வளைத்த வண்ணம் கெஞ்ச, மனைவியின் முகத்தைக் கண்டதும் சட்டென இரங்கிப் போனான் ஆஜானுபாகுவான உடல் படைத்த வைராக்கியத்தின் கடவுள்!! 

அவன் கை, அவளது காதை விட்டும் கீழிறங்கியதும், சற்றும் எதிர்பாராத வகையில், அவனது மீசை சூழ்ந்த முரட்டு அதரங்களில் ஏடாகூடமாக ஓர் முறை பச்சக் என்று பதிந்து மீண்டது அவளுடைய பஞ்சன்ன இதழ்கள். 

குருட்டுப் பெண்ணாக இருந்தாலும், கணவனின் மூச்சுக்காற்று திசை வைத்து, இதழ்கள் இருக்குமிடம் அனுமானித்து, கிஸ் அடித்தவளின் அதிரடியில் அவன் ஒரு கணம் அதிர்ந்து நிற்க, 

இவள் கிசுகிசுப்பான குரலில் கேட்டாள், “இப்போ சொல்லு பேபி?இனிக்குதுல்ல?”என்று. 

சட்னி இனிக்கிறது என்று தன்னவள் வைத்த குற்றச்சாட்டில் எழுந்த போலிக்கோபம், புஸ்வானமாகப் போக, அந்த அழகான ஆண்மகனின் இதழ்கள் மெல்ல விரிந்தன. 

அவள் இதழ்கள் இனிக்கவில்லை என்று அவனும் தான் எப்படி சொல்வான்? அவள் இதழ்கள் தந்த இனிப்பை.. தன் இதழ்களைச் சுவைத்து உணர்ந்தவன் குறுநகை உதிர்த்தான். 

அவன் பார்வையோ.. ஏக போக உரிமையுடன்.. அவளது செக்கச்செவேலென சிவந்திருந்த அதரங்களையே கள்ளுண்ட மயக்கத்துடன் பார்த்திருந்தது. 

அவன் சிரிப்பதை உள்ளுணர்வால் அறியப்பெற்ற அதிமன்யுவின் மனைவி, தானும் புன்னகைத்த வண்ணம், “நீ சிரிக்கிறேல்ல? என் ர்ரவுடி பேபி..”என்று கன்னத்தை இழுத்தாடிக் கொஞ்ச, மனைவியின் கொஞ்சலில், பாகாய் உருகிப் போனது அவன் இதயம்!! 

அப்படியே அமர்ந்திருந்தால், தோசை சுடும் பணி பாதிக்கப்படும் என்றெண்ணியவன், அவள் கைக்கு அருகிலேயே தண்ணீர் குவளையை வைத்து விட்டு எழுந்து, மீண்டும் ஸ்டவ்வை நாடிப் போனான். 

சாப்பிட்டுக் கொண்டே கணவனிடம் பற்பல கதைகள் பேசினாள் அவனுடைய கண்ணம்மா. 

முறுமுறு தோசையை விண்டு வாயில் வைத்த வண்ணம், “ஆமா நம்ம விக்கி ப்ரோ எங்கே? காணோம்?..”என்று கேட்க, அவனும் தோசையை ஊற்றிக் கொண்டே, 

“இன்னைக்கு சன்டேல? அதனால வழக்கம் போல..சித்தியை பார்க்க ஊருக்கு போயிருக்கான்.. நாளை, காலையில் தான் வருவான்…”என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டே, அமைதியாக உண்டு முடித்தாள் அவள். 

அவனும் தற்போது தனக்கான தோசையை சுட்டுக் கொண்டிருக்க, அவன் எதிர்பாராத விதமாக அவனுடைய இறுகிய வயிற்றுத் தசையில் மெல்ல ஊர்ந்தது அவளுடைய மென்மையான கரங்கள். 

அவளுடைய நாடி பதிந்தது அவனுடைய கழுத்துப்பட்டையில், மூக்கு முகர்ந்தது அவள் எஞ்ஞான்றும் விரும்பும் மனம் மயக்கும் பிரத்தியேக வியர்வை மணத்தை. அவளது தனங்கள் எக்குத்தப்பாக ஆழப்பதிந்து சுகம் தந்தது அவன் முதுகில். 

மனைவி பின்னிருந்து அணைப்பது வழமை தான். இருப்பினும் அந்த அணைப்பில், அவனுக்கான அவள் காதல் தினம் தோறும் புதிதாகப் பூப்பது போன்று ஓர் எண்ணம் தோன்றும். 

இன்றும் அந்த எண்ணம் முகிழ்க்க, அவளால் மட்டுமே கிளறிவிடப்படக்கூடிய உணர்ச்சிகள் மீண்டும் கிளறி விடப்பட்டது. 

அவள் கைகள்.. தற்போது அவனது முறுக்கேறிப் போய் தெரிந்த கைகளில் மெல்ல ஊர்ந்தது. அவனது உடல் அசதிக்கு, அவள் கைகள் இதம் தருவது போல இருக்க கண்கள் மூடி கிறங்கி நின்றான் அவன். 

கணவன் அவள் தீண்டலில் அயர்ந்து நின்ற வேளை, தட்டுத்தடுமாறி அவனுக்கும், அடுப்புக்கும் இடையில் வந்து நின்று கொண்டவள், 

முகம் மட்டும் திருப்பி.. அண்ணாந்து தன் சூரியனைப் பார்த்தாள். 

அவன் காதல் மல்க, தன் சூரியகாந்திப் பூவின் முகம் பார்த்தான். 

இவளோ, அவன் பார்ப்பதை உணர்ந்து, தன் முத்துமூரல்கள் தெரிய நகைத்தவளாக, ஹஸ்கி குரலில், “நானும் ஒரே ஒரு தோசை ட்ரை பண்ணட்டா பேபி?..”என்று கேட்க, அவனாலும் தான் எங்கணம் மறுக்க முடியும்? 

அவன் கைகளும் கொஞ்சம் அத்துமீறல் செய்யவே செய்தது. 

அவன் விரல்கள்.. அவள் கையைத் தழுவி.. இறுதியில் முன்னங்கை பிடித்துக் கொண்டது. அவன் நாசி முகர்ந்தது அவளது உலர்ந்த கூந்தலில் இருந்து வரும் ஷாம்பூ மணத்தை. 

ஒரு நிமிஷம் கண்கள் மூடித் திறந்தவன், மனைவி காதுக்குள் “தோசை ஊத்துறது பெரிய விஷயமே இல்லை.. இங்கே வா.. சேர்ந்தே ஊத்தலாம். .”என்று சொல்ல, கரண்டியேந்திய அவள் கையை தோசை ஊற்ற வழிப்படுத்தலானான் இனிய தலைவன்! 

அவனைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, தோசைக்கல்லில் தோசை ஊற்றினான் அதிமன்யு.

அழகாக வட்டவடிவமாக சுழன்ற கையும், தோசை மாவு வெந்ததும் வந்த மணத்தை நாசியும் சுவாசிக்க… அவனோடு நிற்கும் அந்த நொடிகளை இரசித்து வாழ்ந்தாள் அக்னிமித்ரா. 

குழந்தை பேறு வாய்க்கப் பெற்றதால்.. இடை சற்றே அகன்று, பின்னழகு கொஞ்சம் பெருத்துப் போய்.. அவன் இதயம் சொக்கும் அழகுடன், அவனுடன் ஒன்றி நிற்கும் மனைவியைக் காணக் காண காதல் முகிழ்த்தது அவனுள்!! 

அவளது பட்டுக் கன்னத்தோடு இதழ்கள் உரசியவனின் உடல் காட்டிய உஷ்ணம், தலைவனின் உணர்வுகளை அப்படியே பறைசாற்ற, கிளுக்கி நகைத்தாள் பெண். 

அந்த நகைப்பு இன்னும் கொஞ்சம் மந்தகாசத்தைத் தருவித்தது அவனுக்கு. அவளது சுருண்ட அளகத்தை, அவளது மார்பில் அள்ளி இட்டவன்,பின்னிருந்து கழுத்துவளைவில் மீசை குத்தும்.. குறுகுறு முத்தங்கள் பரிசளிக்க,கூச்சத்தில் சொக்கிப் போனாள் அவள். 

இருந்தாலும் அவனில் இருந்து விலகாமல்,ஹஸ்கி குரலில், “இப்போஹ் ஹேன் சிரிச்சஹ்?”என்று கேட்டான் அவன். 

அவளை நோக்கித் திரும்பியவள் கைகள், மாலையாகக் கோர்த்துக் கொண்டன அவன் கழுத்தில். சற்றே எம்பியவள், அவன் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தாள். 

தலைவி அவளின் கிசுகிசுப்பு கேட்டு.. தலைவனின் விழிகள் இரண்டும் ஜோதியைப் போல ஒளிவீச, ஸ்டவ்வை அணைத்தவன்,நொடியும் தாமதியாமல் அவளை ஏந்திக் கொண்டான் கைகளில். 

அவளோ நொடிப் பொழுதில் தன் தலை, தலைவனின் இதழ்கள் அருகில் வந்தது கண்டு பதறி, “வ்விடு..ர்ரவுடி பேபி.. வ்விடுன்னு சொல்றேன்ல? இறக்கி வ்விடு.. என்ன பண்ற? ”என்று கெஞ்சவாரம்பிக்க, 

பிறந்த குழந்தை போல அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டவனின் கால்கள்.. வேகமாக நடை பயின்றது மஞ்சம் நோக்கி. 

“என் மூடை ஏத்தி விட்டுட்டு.. என்னையே க்கலாய்க்கிர்றிய்யா? உன்னைய்ய்” என்று கறுவிக் கொண்டே, அவளை மஞ்சத்தில் கிடத்த, தலைவன் என்ன செய்ய விழைகிறான் என்பது தெரிந்ததும் பதறிப் போனாள் அக்னிமித்ரா. 

சட்டென எழ முயன்றவளை அதற்கு விடாமல், அவள் சிசுவின் உயிருக்கு பங்கம் வரா வண்ணம், அவள் மேல் படர்ந்தான் அந்த வலிய ஆண்மகன். 

அவளுடைய மெல்லிய கரங்களை பாம்பு போல சுற்றி அடக்கிப் பிடித்திருந்தது அவன் கைகள். 

அவன் விட்ட உஷ்ணமூச்சுக்காற்று ஒவ்வொன்றும் வெகுவெகு அருகாமையில் அவள் உணர, உள்ளூற சிறகடித்துப் பறந்தது சுகமான பட்டாம்பூச்சிகள்.

அவளுடைய குருட்டுக் கண்கள் படபடவென அடித்துக் கொள்ள, உள்ளே அடங்கிப் போன குரலில் இவள் சொன்னாள், 

“பேபி.. உன் ரவுடித்தனம்லாம் என்கிட்ட காட்டாதே… இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன்.. திரும்ப குளிக்க முடியாது.. விடு பேபி..”என்று திணற, அவளை விட்டும் இம்மியளவும் அசைய மறுத்தான் அவன்.

அவன் கண்கள் ஏகத்துக்கும் ஆசையில் சிவந்திருந்தது. அந்த சிவந்த கண்களின் முதல் இலக்காக.. அவளுடைய செவ்வரியோடிய ஈர இதழ்களே இருக்கவும் செய்தது. 

அதை உரிமையும், காதலும், உணர்ச்சிகளும் போட்டி போட பார்த்தவன், “அதை ந்நீ என் காதுல க்கிசுகிசுக்கிறதுக்கு முன்னாடி ய்யோசிச்சிருக்கணும்.. இன்னைக்கு நீ ச்சட்னியாகப் ப்போறடீ”என்று சொல்லிக் கொண்டே, அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான் ஆண். 

அவனது அதிரடிக் கவ்வல் சிறு வலியையும், உயிரோடு உடலை சூறையாடும் வலியோடிணைந்த சுகத்தையும் கொடுக்க முதலில் திணறித் திமிறியவள், 

பின் அவனது முத்தத்துக்கு ஈடு கொடுக்கலானாள். 

அவளைத் தடுத்த அவன் கைகள், காதல் மயக்கத்தில் வலுவிழக்க, அவனது கழுத்தை சுற்றி வளைத்து பிடரிமயிர் அளைந்தாள் அக்னிமித்ரா. 

அவள் இதழ்களை விட்டும் அவன் தலை தூக்கிய போது… அவன் முகம் காதல் ததும்பி நின்றதால் உணர்ச்சிகளின் பிடியில் செந்நிறம் கொண்டிருந்தது. 

வெண்ணைய்யில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருந்த அவளுடைய பெண்மைக் கலசங்களின் வனப்பு.. அவனை காதல் பித்தனாக ஆக்க, அந்த மலைமுகடுகளில் உச்சித் தேன் அருந்தும், காட்டுப்பசியெடுத்த ஓர் கரடியாய் ஆனான் அதிமன்யு. 

சருமத்தில்.. கணவனின் மீசை குத்தி.. அதில் ஓர் குறுகுறுப்பு மூள, அவனது வன்மையைத் தாங்காது.. “ஸ்ஸ்… ம்ம்ம்”என்று இதழ்கள் கடித்து ஒலியெழுப்பவே செய்தது. 

இருந்தாலும் மெல்லினம், வல்லினத்தை ஏற்கவே செய்தது. மெல்லினத்தின் முன் வல்லினம் புணர்ந்தால்.. அங்கே வல்லினம் மிகுவது இலக்கணப் புணர்ச்சி!! 

ஆனால் மெல்லினத்தோடு வல்லினம் புணர்ந்தால், அங்கே சுகமுணகல் மட்டும் மிகுவது அது காதல் புணர்ச்சி!! 

காதல் கொண்ட இரு உண்மை உள்ளங்கள் மட்டுமே பயிலும் ஆனந்த இலக்கணம் அது!! 

அவளது அதரங்களின் ஈரத்தை ஒரு சொட்டு விடாமல் பருகிக் கொண்டே கண்கள் மூடி இருந்தவன், அந்த முற்பகலில், யாருமில்லா தனிமையில், அவள் தேகத்தில் கொட்டிக் கிடக்கும் அறுசுவைகளையும் சுவைத்துப் பார்க்கவே ஆசை கொண்டான். 

தினமும் நேரகால வரையறையின்றி எழுதப்படும் கவிதை என்றாலும் கூட.. இருவரும் இரசித்து ருசிக்கும் அழகிய காதல் கவிதை.. அங்கணம் மஞ்சத்தில் அரங்கேற ஆயத்தமானது. 

திறந்திருந்த விழியின் திரைக்குள் எங்கும் இருட்டு!! 

ஆயினும் இருட்டுக்குள் இத்தனை உணர்ச்சிப் பிரவாகங்களை ஒருவனால் எப்படிக் காட்ட முடியும்? இதோ அவளது காதல் தலைவனால் முடிகிறதே! 

அவனது ஒவ்வொரு தொடுகைக்கும், அசைவுக்கும்.. எரிந்து எரிந்து தணிந்தவள்.. உஷ்ணம் தாளாமல், “பே. பீஈஈஹ்.. பே.. பீஈஈஹ்”என்று முணங்கிய சுக முணகல் அடங்க ரொம்ப மணிநேரம் ஆனது. 

 

***

அதே ஞாயிற்றுக்கிழமை.. இரவு ஏழரை மணியைத் தாண்டி கடிகாரம் ஓடிக் கொண்டிருந்த பனி சூழ்ந்த இரவு அது!! 

மினிஸ்டர். சதாசிவத்தின் இரவுநேர மெய்க்காப்பாளர்களுக்கெல்லாம் தலைமை மெய்க்காப்பாளனான, அக்னிமித்ராவின் தலைவன், தன் கறுப்பு நிற கோர்ட் சூட்டில்,

பக்கா ‘மேன் இன் ப்ளேக்’என்று கைகாட்டும் லுக்கில் தயாராகிக் கொண்டிருந்தான் தன் கடமையைச் செய்யச் செல்வதற்காக. 

சோபாவில் அமர்ந்து, ஷூ அணிந்து கொண்டிருந்தவனின் அருகில் அமர்ந்தவள், வருத்தம் இழையோடும் குரலில், “பேபி என் கூடவே இருந்துடேன்..”என்றாள். 

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் கண்கள்…அவளை ஆசையுடன் தழுவிக் கொண்டது. 

வெள்ளை வெளேரென்றிருந்த அவளது கழுத்துப் பிரதேசத்துக்கும் முன்னழகுக்கும் இடைப்பட்ட பகுதியில் செக்கச்செவேலென சிவந்த சின்னச் சின்ன பற்தடங்கள் இருப்பதைக் கவனித்தவனுக்கு, 

இன்று பகல் மஞ்சத்தில் மனைவியிடம்.. கொஞ்சம் தாருமாறாகத் தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பது நிதானமான நிலையிலேயே புலப்பட்டது. 

அதனால் ஓர் கவலையும் எட்டிப் பார்க்க, மிருதுவான குரலில், “எனக்கும் உன் கூட இருக்க ஆசையா தான் இருக்கு.. ஆனால் என்ன பண்றது? உன் புருஷன் வேலை அப்படி!!..”என்ற வண்ணம் மீண்டும் குனிந்து ஷூ லேஸ் கட்ட, அவளுக்குள் கணவன் நீங்குவதை நினைக்கவே பிடிக்காமல் போனது. 

கணவன் கைச்சந்தை, தொட்டுத் தொட்டு அடைந்து சுற்றி வளைத்துக் கொண்டவள், “பேசாம இந்த வேலையை விட்டுடேன் பேபி.. நான் வேணும்னா சிவக்குமார் சார் கிட்ட சொல்லி .. வேற நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணட்டா?”என்று கேட்க, அவளை நோக்கி நிமிர்ந்தவன்,பெருமூச்சு விட்டுக் கொண்டே அவளைத் தேற்றலானான். 

அவள் உச்சந்தலை தடவியவன், “ஹேய் பொண்டாட்டி.. யோசிச்சுப் பாரு.. இப்போ நீ காலையில் வேலைக்கு போகும் போது.. வீட்டில் இருந்து எல்லா வேலையையும் பார்த்துக்கிட்டு நான்.. நீ வீட்டுக்கு வர்றப்போ.. லன்ச் ஓட ரெடியா இருப்பேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிட்ரலாம். அப்புறம் ராத்திரி நீ ரெஸ்ட் எடுக்கும் போது.. நான் இராத்திரி வேலைக்கு போய் காலையில் வருவேன்.. ஃபுல் டைம் பக்கத்துல இருந்து பார்த்துக்குற பாக்கியம் கிடைச்சிருக்குல? இதே வேற வேலைன்னா.. உன்னைப் பார்த்துக்குறது கஷ்டம்..அதனால இந்த வேலை தான் எனக்கு ஈஸி… மத்த வேலைக்கு போய் ‘பொண்டாட்டி பிள்ளைங்கள கவனிச்சிக்க டைமில்லாமல்’ சுத்தறதை விட.. இது எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கு கண்ணம்மா..”என்று இந்த வேலையின் நன்மைகளை எடுத்துச் சொன்னவன், 

வாசல்க்கதவை நோக்கிப் போக, அவன் கைச்சந்தைப் பற்றிக் கொண்டே பின்னாடியே சென்றாள் அவனுடைய தேவதைப் பெண். 

தலைவனின் சமாதானங்களை ஏனோ ஏற்க மறுத்தது அவள் மனம். 

வாசல்க்கதவைத் திறந்ததும் முகத்தில் குளுகுளுவென பட்டு மோதியது இரவு நேர பனிக்காற்று. 

அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாவிட்டாலும், விட்டத்தை பார்த்துக் கொண்டே தொங்கிப் போன வதனத்துடன், 

அவனது கோட் பட்டனை கைகளால் உருட்டியபடி, “இருந்தாலும் உன் கூடவே இருக்கணும்னு தோணுது.. அதுவும் உன் முகத்தைப் பார்க்காம தூக்கம் வரமாட்டேங்குதே?.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. உ.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அதி..”என்று சொன்ன மனைவியின் சொற்கள் தாங்கி வந்த காதலில் சொக்கிப் போனான் அதிமன்யு. 

அவளுடைய செந்நிறக் கன்னங்களை கைகளில் ஏந்தியவன், காற்றுக்கும் கேட்காத மென்குரலில், “இப்போ என்னஹ்? .. நீ என்னஹ் மிஸ் பண்றஹ்? .. அவ்வளவுதானேஹ்?..”என்று கேட்க, தானாக ஆடியது அவளின் தலை. 

“ம்.. ஆமா பேபி..ரொம்ப்ப்ப”-‘ரொம்ப’வை அழுத்தியே சொன்னாள் அவள். 

குனிந்து கண்கள் மூடி, நெற்றியில் குளுகுளு முத்தமொன்றைப் பதித்தவன், “ஈஸி.. நீ என்னை மிஸ் பண்ணா தானே நம்ம காதலும் வளரும்? அதே நேரம் நீ என்னை எவ்ளோ மிஸ் பண்றேன்னு எனக்கும் தெரிஞ்சா தானே நான் உன் மேல வைச்சிருக்குற காதலும் ஜாஸ்தியாகும்?”என்று கேட்க, 

சற்றே கலங்கிய கண்களுடன், “நீ என்ன சொல்ல வர்ற பேபி?”என்று கேட்டாள் அந்த ராமனின் சீதை. 

அழகாக அவள் கன்னம் தட்டியவன், “இது என் பொண்டாட்டிக்கு அழகு.. நீ என்ன பண்ற.. என்னை மிஸ் பண்ற இந்த பீரியட்டில் என்னைப் பத்தி மனசுல தோன்றது, நீ மனசை விட்டு என் கிட்ட பேசணும்.. கேட்கணும்னு நினைக்குறதை எழுது..”என்று ஓர் யோசனை சொல்ல, சட்டென்று இடையிட்டாள் மனைவி!! 

“எழுதலாம்.. ஆனால் பிரெய்லி லெட்டர்ஸ் உன்னால ரீட் பண்ண முடியுமா பேபி?”என்று கண் தெரியாதவர்கள் உபயோகிக்கும் குற்றெழுத்துக்கள் கணவன் அறிவானா? என்ற சந்தேகத்துடன் கேட்டாள் அக்னிமித்ரா. 

“முடியும்.. என் அம்மாவுக்காக கத்துக்கிட்டேன்..!!”- சட்டென நினைவுகளில் தாயின் முகம் வந்து போக இறுகிய முகத்துடன் சொன்னான் தலைவன். 

அதைக்கேட்டதும் அந்த மெல்லிடையாளின் அதரங்கள் அதிர்ச்சியில் தந்தியடிக்கவே செய்தது. 

“உ.. உன் அம்மாவுக்காகவா?”

அவன் தலையோ, அதைக் கேட்டு மௌனமாக ஆடியது. “ம்.. அவங்களும் உன்னைப் போலத்தான்.. நான் வயிற்றில் இருக்கும் போது எச்சீஜி லெவல் அதிகமாகி.. ஐ ப்ரஷர் வந்து.. கண்ணு பார்வை போயிருச்சு..”என்று கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குள் நிகழும் ஹோர்மோன் மாற்றங்களின் விளைவால் தோன்றும் கண்பார்வை இழப்பைப் பற்றிக் குறிப்பிட, அவன் சொன்னதைக் கேட்டதும் உள்ளூற ஓர் நடுக்கம் பரவியது அவளுக்கு. 

அவனது கோட் பட்டனை சுழற்றிய அவளது தளிர்விரல்கள் மெல்ல கீழிறங்கியது. 

“பபர்.. பர்மனன்ட்டாவா?”

அவனது விழிகளில் யௌவனமாக குடி கொண்டது நெஞ்சோடு சொல்லாத சோகம். அவளது விரல்களைப் பற்றிக் கொண்டவன் “ம்.. துரதிர்ஷ்டவசமாக பர்மனன்ட்டா தான்..”என்றான். 

அந்த இரவில், பூச்சிகள் இரையும் சத்தம் மட்டுமே கேட்க, ஒரு சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொள்ளாத மௌனமாகக் கழிந்தது. 

அவன் சோகம், தன் சோகம் போலாக, அதில் உழன்றவள் தன் துஷ்யந்த மகாராஜனைத் தேற்றும் வழிவகை அறியாது நின்றாள். அவனைக் கட்டியணைக்க உள்ளம் உந்த, அவனது பரந்த மாரில் தலை புதைத்து.. குட்டிக் குட்டி முத்தங்கள் வைத்தாள் அவள். 

மனைவி தன்னை தேற்றத் தான் கட்டியணைக்கிறாள் என்று தெரிந்ததும், அவனுள் ஓர் ஆசுவாசம் குடிகொண்டது. அவளைத் திரும்ப அணைத்துக் கொண்டவன் கைகள், அவள் முதுகு தழுவியது. 

அவள் தலைவனோ தொடர்ந்து சொன்னான். 

“என் அம்மா நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்ததில்லை.. அப்போ நான் ரொம்ப சின்னப்பையன்றதால.. அவங்க முகம் கூட எனக்கு ஞாபகமில்லை.. நினைவு தெரிய முன்னாடி அவங்க இந்தவுலகத்தை விட்டே போயிட்டாங்க.. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது.. எனக்காக அவங்க சில லெட்டர்ஸ் விட்டுட்டுப் போனது.. அவங்க லெட்டர்களை வாசிக்கணும்ன்றதுக்காக.. நான் பிரெய்லி கத்துக்கிட்டேன்.. அதனால உன் லெட்டர்ஸ் என்னால வாசிக்க முடியும்..”என்று அவன் சொல்ல, 

முதன்முறையாக அவளுள் ஓர் கேள்வி உதித்தது. 

‘அவள் தலைவனின் கடந்தகாலம் எத்தகையதாம்?’என்று. அவன் மேல் கொண்ட எல்லையற்ற காதல்.. அவன் கடந்தகாலத்தைப் பற்றி அறியவிடாமல் செய்ய, அப்போதும் கூட.. தலைவனின் மொழிகளுக்கு அமைதியாக செவிசாய்த்து நின்றாள் அவள். 

மெல்ல தலை உயர்த்தி தன் ஆதவன் முகம் பார்த்த சூரியன் மனைவி உஷை, “ஒருவேளை.. அவங்க உயிரோட இருந்திருந்தா.. உன்னை எப்படி கவனிச்சிக்கணும்ன்ற எக்ஸ்பீரியன்ஸ்.. அவங்க மூலமா கிடைச்சிருக்கும்.. உன்னைப் பார்த்தும் ‘கண்ணு தெரியாதுன்னா ஒரு கேன் யூஸ் பண்ணலாம்ல?’ அன்னைக்கு எடக்குமடக்கா கேட்டிருக்கவும் மாட்டேன்….”என்று அவர்களின் முதல் சந்திப்பில் இவன், அவளைப் பார்த்து கேட்ட கேள்வியை நினைவுறுத்தி சொல்ல, வலியிலும் மெல்ல விரிந்தது அவள் இதழ்கள். 

அவள் மெல்லிய கரம், காதலுடன் அவன் நெஞ்சை நீவி விட.. அதுவும் கூட இதமாகவே இருந்தது அவனுக்கு. 

சட்டென சோகம் இழையோடிய குரல் மறைத்தவன், “அதனாலே நீ என்ன பண்ற.. உன் லெட்டரை எழுதி முடிச்சதும் லெட்டர் பேட்ல வைச்சிரு.. காலையில நான் வந்ததும் உனக்கான ரிப்ளை எழுதி வைச்சிர்றேன்.. அதை நீ ஆர்வக்கோளாறுல அந்த நிமிஷமே படிக்கக் கூடாது.. நீ லெட்டர் எழுதின சேம் டைம்.. என்னோட ரிப்ளை லெட்டர் படி.. அகேன் எழுது.. அகேன் என்கிட்டேயிருந்து ரிப்ளை லெட்டர் வரும்.. ராத்திரி நான் போனதும் படி….”என்று சொல்லிக் கொண்டிருக்க,அவன் சொன்ன பழங்கால யோசனை பிடிக்காமல், முகம் சுழித்துக் கொண்டே இடையிட்டாள் பெண். 

“பேபி.. எதுக்கு அந்த காலம் மாதிரி லெட்டர் போட்டுக்கிட்டு?? இப்போ தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆகிருச்சுல..? நான் வேணும்னா கால் பண்ணட்டா? .. அவுட்கோயிங் ஃபீரி தான்..” என்று சொல்ல, இத்தனை சொல்லியும் தலைவன் மொழி கேளாத மனைவி மேல் சுருக்கென்று கோபம் போனது அவனுக்கு. 

அவளது படபடக்கும் விழிகளை முறைத்துப் பார்த்தவன், “என்னை என்ன அல்பன்னு நினைச்சிக்கிட்டியா? .. நான் பார்க்குறது பாடிகார்ட் வேலை.. ரொம்ப சூதானமா இருக்கணும்..!!உன் கூட கடலை போடுவேனா? வேலை பார்ப்பேனா? ”என்று கொஞ்சம் விறைப்பாகவே சொன்னான். 

“இல்லை..அதுவந்து..”என்று அவள் மீண்டும் இழுக்க, அவளை சிறு குழந்தைகளை அதட்டுவது போல அதட்டி சத்தம் போட்டான் அவன். 

“நீ முதல்ல உன் பிரண்டு கலா கூட பேசுறதை நிறுத்து!!.. வரவர அவளை மாதிரியே ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர்ப்பேச்சு பேசுற நீ??.. பேசாம சொன்னதை செய்..”-அவள் குறுக்கிட்டதில் அப்பாவி கலாவுக்கும் சேர்த்தே திட்டு கிடைத்தது. 

தலையை ஆயாசத்துடன் தொங்கப் போட்டுக் கொண்டவள், “ம்.. சரி..”என்று சொல்ல, தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினான் அதிமன்யு. 

தலைவனின் காலடி எட்டுக்கள் தன்னை விட்டும் தூரமாவதை செவிமடுத்தவள், “பேபி..?”என்று தவிப்புடன் அழைத்தாள் அவள். 

அடுத்த எட்டு எடுத்து வைக்காமல், அப்படியே திரும்ப மகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தவன், “இப்போ என்ன..?”என்று கேட்ட வண்ணமே அவள் அருகில் வர, அவள் இதழ்களில் ஓர் ஏக்கம் எழுந்தது. 

குரலிலும் அந்த ஏக்கம் அலாதியாக எழுந்து பரவ, தன் இலேசாக மேடிட்ட வயிற்றைத் தொட்டுக் காட்டியவள், “உன் பேபியை கிஸ் பண்ணாமல் போற?”என்றாள் சின்னக்குழந்தைகள் போல. 

அவனது முரட்டுமுகம் பூவாக மலர்ந்தது. வேண்டுமென்று அவள் காதுபட, “இந்தக் கிஸ்.. எந்த பேபிக்கு?”என்று மெல்லமாக முணுமுணுத்துக் கொண்டே வந்தவன், 

அவள் பிடரி பற்றி தன்னை நோக்கி மிருதுவாக இழுத்து.. மனைவி நெற்றியில் முத்தம் பதித்தான்.பின்பு இடைவரைக் குனிந்தவன், அவள் வயிற்றில் இருக்கும் தன் வாரிசையும் இறுக்கி அணைத்து முத்தம் வைத்து, “அப்பா வரும் வரை.. அம்மா கூட அமைதியா இருக்கணும்”என்று கிசுகிசுத்தவன், மீண்டும் மனைவியை நோக்கி நிமிர்ந்து, 

அவள் பனிக்காற்றில் நின்றிருப்பது பிடிக்காமல், “உள்ளே போ..”என்றான். 

அவளோ அவன் சென்று மறையும் வரை நின்று, வழியனுப்ப ஆசைகொண்ட அன்பு மனையாளாக, “நீ போ.. அப்புறம் நான் போய்க்கிறேன்..”என்று சொல்ல, மீண்டும் அவள் மீது சினங்கொண்டான் அதிமன்யு. 

“வெளியில இந்த பனி அடிக்குது..உள்ளே போன்னு சொல்றேன்ல? ..”என்று அவன் சீற்றத்திலும் கூட.. அவள் பால் கொண்ட அக்கறையும், கரிசனையும் தான் மிகுதியாக இருந்தது. 

ஏற்கனவே தலைவன் நீங்கும் கவலையில் இருப்பவளா அதைக் கேட்பாள்? ம்ஹூஹூம். அதிமன்யுவின் கட்டளைக்கு அவள் உடன்பட்டாளில்லை. 

அந்தரத்தில் நீண்ட அவள் கைகள், தட்டுத் தடுமாறி அவளது பின்னங்கழுத்தை சுற்றி வளைக்க, “நீ அந்த கர்வ்ல திரும்பினதும்.. கைகாட்டிட்டு உள்ளே போயிடுறேன்..ப்ளீஸ்ஸ்ஸ்…”என்று கெஞ்ச, அவள் கெஞ்சலில் பாகாக உள்ளம் இறங்கி, தலையாட்டி விடுவோமோ என்று தன் மேலேயே சிறு பயம் எழ, மீண்டும் விறைப்புப் பேர்வழி ஆனான் அதிமன்யு. 

“நான் அந்தக் கர்வ்ல எப்போ திரும்புவேன்னு உனக்கெப்படித் தெரியும்..?”என்று அவன் கேட்க, 

இவளோ கணவன் கொஞ்சம் சினந்த முகபாவத்துடன் பேசுவதில், அவள் பார்வைக் கீழிறங்க, முணங்கும் குரலில், “உன் நடையோட ஸ்பீட் எனக்குத் தெரியும் ரவுடி பேபி.. டூ செக்கன்ஸ்ல அங்கே போயிருவ.. டூ செக்கன்ஸ்ல குத்துமதிப்பாக கை காட்டிட்டு நான் உள்ளே போயிடுறேனே..?”என்று சொல்ல, அவன் மனது கேட்காமல் போயிற்று. 

அவளிடம் ரொம்ப கடினமானவனாக நடந்து கொண்டு விட்டோமோ என்று தோன்ற, சற்றே மலையிறங்கிய குரலில், “இப்போ எதுக்கு முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு முணங்குற..?”என்று சொல்ல, வெடுக்கென முகம் நிமிர்த்திப் பார்த்தவள் பட்டென கேட்டாள், 

“நீ மட்டும் என்னவாம்? திட்டுற..?”என்று. 

மனைவியின் சொல் கேட்ட அடுத்த கணம்.. குபீர் என்று சிரிப்பெழ, வாய் விட்டு பெரிதாகவே நகைத்தான் அதிமன்யு. 

அவன் சிரித்ததும் தான் முகத்தில் இருக்கும் இறுக்கம் தளர,அவனது முரட்டுக் கன்னம் தொட்டு, “ஹப்பாடா.. சிரிச்சிட்டியா? .. இருந்துடேன் என் கூட ப்ளீஸ்..”என்று அவள் இதுதான சாக்கென்று கெஞ்ச, அவள் சாமர்த்தியம் கண்டு இதழ்கள் முறுவலிக்கவே செய்தது. 

அவனோ எப்படி மறுப்பது என்று யோசிக்க, தலைவனின் உள்ளம் அறிந்தவள், “சரி போய்ட்டுவா.. நீ சொன்ன மாதிரி லெட்டர்ஸ் எழுதி வைக்குறேன்.. ஆனால் ஒளிவு மறைவே இல்லாமல் பதில் சொல்லணும்”என்று சுட்டுவிரல் காட்டி நிபந்தனை விதிக்க, தானாகவே ஆடியது அவன் தலை.

போகும் முன்னர் அவளை வாஞ்சையோடு தழுவிக் கொண்டவன், “ஜன்னலெல்லாம் சாத்தியிருக்கேன்.. பக்கத்து வீட்டு யமுனாக்காக கிட்ட துணைக்கு வந்து இருக்க சொல்லியிருக்கேன்.. அதனால எந்த பயமும் இல்லை.. நீ பாதுகாப்பாக இருக்கலாம்.. ஏதாவது அர்ஜ்ன்ட்னா… கோல் பண்ணு.. வந்துர்றேன்”என்று அவள் நலனுக்காக செய்த ஏற்பாடுகளை செய்தவன், 

மீண்டுமொருமுறை முத்தம் கொடுத்தவன்..அந்தத் தெருவின் மறைவு வரை சென்று…திரும்பிப் பார்த்தான். பார்வை போனாலும் பிற புலன் உணர்வுகள் விழித்திருக்கும் மங்கையவள்.. அவனை நோக்கி சரியான தருணத்தில் சிரித்துக் கொண்டே கையசைத்தாள்.

இருட்டை மட்டுமே சுமந்திருக்கும் பெண்ணுக்கு மீண்டும் கையசைத்தவன், புன்னகையுடன் தெருவில் நடந்தான். உள்ளே வந்தவள் தலைவன் சொன்னபடி.. உள்ளக்கிடக்கையை கொட்டிக் கடிதம் வரையத் தயாரானாள். 

எங்கேயும் காதல்! 

     [10]

எறும்பூர மட்டுமே இடைவெளி உள்ள தன்னுடைய சிற்றிடையை ஒயிலாக ஆட்டிக் கொண்டு, வெண்ணிற கவுனில், சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட தரையில்.. நடந்து வந்து கொண்டிருந்தாள் பெண் ஸ்வரூபம் எடுத்திருக்கும் நாகமான நடாஷா. 

அவள் முகத்தில் அரும்பியிருந்த புன்னகை, கல்யாணப் பெண்ணுக்குரிய பிரத்தியேக அழகைக் கொடுக்கவில்லையாயினும், அவள் பூண்டிருந்த ஒப்பனைகள் ஒரு வித செயற்கை அழகைக் கொடுக்கவே செய்தது. 

பூச்செண்டு ஏந்தி நடந்து வந்தவளின் மேல் ஆயிரம் கேமராக் கண்கள், பளிச் பளிச்சென்று முத்தமிட்டுக் கொஞ்ச, பலமுறை ஊடகங்களின் கேமராக்களுக்கு போஸ் செய்து பழக்கப்பட்டிருப்பவள், தாராளமாக சிரித்தபடியே நடந்து வரலானாள். 

அந்தச் சிவப்புக் கம்பளம் முடிவடைந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குட்டி மேடையில், கறுநிற கோர்ட் சூட் அணிந்து, கோர்ட் பாக்கெட்டில் முக்கோணமாக மடித்து வைக்கப்பட்ட வெள்ளைக் கர்ச்சீப்புடன்,

பளபளவென ஹேர் க்ரீம் மினுங்க பொருத்தமான சிகையலங்காரத்துடன், நடாஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் “தேவ்”. 

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டு, அக்னிமித்ராவின் விழிகளைப் பறித்த அதே குரூரன் “தேவ்”

அவன் முகத்தில் மலர்ந்திருந்த, முத்து மூரல்கள் தெரியும் குறுநகை.. அந்த அப்பாவிப் பெண்ணுக்கு அநீதி செய்தது இவன் தானா? என்று உண்மை அறிந்த பலரும் ஐயுறத்தக்களவுக்கு இருந்தது. 

இத்தனை வருடங்களில் நடாஷா தன் அழகைப் பராமரிக்க எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் எல்லாம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். 

அவளுடைய முகத்தோல் சருமம் சுருங்கி, கன்னத்தோல் வழிந்து தொங்கிக் கொண்டிருந்தமையானது.. அவளுடைய வயதை விடவும் கொஞ்சம் வயது போனவளாக அவளைக் காட்டிக் கொண்டிருந்தது. 

அதிக அழகும் சலிப்பைக் கொடுக்குமல்லவா? ஆனால் தேவ்வுக்கு சலிப்பைக் கொடுத்ததா என்பதே சந்தேகம் தான்!! 

‘தேவ்-நடாஷா’ காதல் கிட்டத்தட்ட எட்டு, ஒன்பது வருடங்கள் பழைமையான காதல்!! இத்தனை வருடங்களில் பாதுகாப்பான வழிமுறைகள் இன்றி, பலமுறை அவர்கள் தங்களுக்குள் கட்டிலில் காதலைப் பரிமாறிக் கொண்ட போதும் கூட, இன்னும் அவள் வயிற்றில் ஒரு புழு, பூச்சி தரிக்காமல் இருந்தது அவளுடைய கடிய பெண்மையை ஒரு பக்கம் பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

அவள் தந்த சுகத்தில் திளைத்திருந்த தேவ்.. இது பற்றி சந்தேகம் கொண்டு விழிப்படைந்த வேளை, நைஸாகக் கல்யாணப் பேச்செடுத்து, அதை திசைதிருப்பி விட்டிருந்தாள் நடாஷா. 

சிரித்துக் கொண்டே நடாஷாவின் முகத்தை நோக்கும் தேவ்வில், விழிகள் பதித்த அதிமன்யு தன் கை முஷ்டியை இறுக்கி மூடிக் கொண்டான். 

அவனுடைய அகன்ற நாசித்துவாரங்களினுடாக உச்சபட்ச வேகத்துடன் போக்குவரத்து செய்து கொண்டிருந்தது உஷ்ணப் பெருமூச்சு. 

அதன் விளைவாக அவனுடைய அகன்ற தோள்புஜங்கள் உயர்ந்து தாழ, பற்களை நறுநறுவெனக் கடித்துக் கொண்டே.. தேவ்வின் விஷமம் கக்கும் விழிகளைப் பார்த்தான் அதிமன்யு.

 அவன் நாடி, நரம்புகள் எங்கும் சூடான இரத்தம் பாய, அந்த அரக்கன் தேவ்வின் சட்டைக்காலரைக் கொத்தாகப் பற்றி, சுவற்றில் சாய்த்து கழுத்தை பலம் கொண்ட மட்டும் நெரிக்க வேண்டும் என்ற வெறியே வந்தது அதிமன்யுவுக்குள். 

இருந்தும் என்ன? .. அவன் செய்கைக்கு தடையாக இருந்தது தொலைக்காட்சித் திரை!! தொலைக்காட்சிக்குள் ஆறரையடி தேவ், ஆறங்குலமாகத் தெரிய அதைப் பிடித்து நெரிக்க முடியாத ஒரே காரணத்திற்காக, தன்னுள் எழும் பூகம்ப சீற்றத்தை அடக்கி நின்றான் அக்னிமித்ராவின் கணவன்! 

ஆம், இத்தனை நேரமாக ‘தேவ்-நடாஷா’ கல்யாணக் காட்சிகளை தேவ், தொலைக்காட்சி வழியாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் நேரலையாக. 

திரையினுள், அந்த அழகிய சாலை வழி, ஓர் நவீனரக ரோல்ஸ்ரோய் காரொன்று வந்து நிற்க, அதைத் திருமண மண்டபத்துக் காவலாளிகள் பவ்யமாகக் குனிந்து திறந்து விட, அதனுள் இருந்து வந்தார் மத்திய அமைச்சர். 

அதன் பின் தொடர்ந்து வந்த கார்களில் உலக அளவில் பிரபல்யமான பல நடிக, நடிகையர்கள் வருகை தர, அந்தக் கோலாகல திருமணத்தை, ஒளிபரப்பிக் கொண்டிருந்தது முன்னணி நிவ்ஸ் சேனல்!! 

பணம் பாதாளம் வரை பாயுமோ இல்லையோ? பணம் மக்கள் பார்வையில் துரியோதனனையும் அர்ஜூனனாக்கும் என்பது மட்டும் உண்மை!! 

கண்களின் வெண்விழிப்படலம் செந்நிறங்கொள்ள, உள்ளுக்குள் அனல் கனல, சோபாவில் அமர்ந்து டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் செவிகள் உள்வாங்கியது மனைவி ஹால் பக்கமாக நடந்து வரும் அரவத்தை. 

“தேவ்”என்ற பெயர் கேட்டாலே.. தன்னிலை மறந்து இயல்பு மாறும் மனைவியின் இன்னோர் முகத்தைப் பார்த்திருப்பவனாயிற்றே அவன்? 

சிசு சுமந்து நிற்கும் மனைவியின் சுமூகமான மனநிலையைக் கெடுக்க பிடிக்காமல், சட்டென்று டீவியை ஆப் செய்தான் அதிமன்யு. 

அக்னிமித்ராவின் விழிகளோ.. சட்டென டீவியின் சத்தம் அடங்கிப் போனது உணர்ந்து, ஒரு கணம் சுருங்கி விரிந்தது. தன்னருகே இலேசான மேடிட்ட வயிற்றுடன் வந்து நின்ற மனைவியைப் பார்த்தவன், தன் கோபத்தைத் தணித்து மிருதுவான முகம் கொண்டான். 

காலை நேர நிகழ்ச்சி முடித்து, வீடு வந்திருக்கும் மனைவியின் மீது, சாளரம் தாண்டி வந்த, முற்பகல் வேளையின் சூரியக்கதிர்கள் விழ, தங்கத்தாரிகை போல மிளிர்ந்தாள் அந்த திவ்யமான அழகுள்ள பெண்!! 

அதை வெகுநேரம் இரசிக்க முடியாத அவஸ்தை அவனுக்குள். ‘இப்போ ஏன் டீவியை ஆப் பண்ண?’என்று மனைவி கேட்டு விடுவாளோ என்று பயந்தவன்,

சட்டென சோபாவை விட்டும் எழுந்து, அவளை நோக்கி பதற்றமான குரலில், “சீக்கிரம் ரெடியாகிட்டு வா.. மார்க்கெட் போய் வரலாம்”என்றான். 

சொல்வதோடு நின்றானா அவளது ஆருயிர்க்கணவன்? அவளது முதுகைப் பற்றி, அறையின் பக்கம் தள்ளவும் செய்தான். 

கணவனின் எண்ணமும், அவசரமும் புரியாத மங்கையோ, “எதுக்கு திடீர்னு? .. அதான் வீட்டுக்கு தேவையான ஐட்டம்லாம் இருக்கே பேபி..?”என்று புரியாதவளாகக் கேட்டு வைக்க, ஆஜானுபாகுவான ஆண்மகன் சலிப்பில் உச்சுக் கொட்டிக் கொண்டான். 

“ப்ம்ச்சு.. அப்போ வா கோயிலுக்கு போய் வரலாம்..”-சட்டென அவளுடைய மெல்லிய முன்னங்கையைப் பற்றி இழுத்த வண்ணம் அழைத்தான் அவன். 

அவளை வீட்டில் இருக்க வைக்கப் பிடிக்காமல், தேவ்வின் கல்யாண செய்தி மனைவியின் காதுகளுக்கு எட்டப்பிடிக்காமல், அவளை வெளியே எப்படியாவது அழைத்துச் செல்ல நாடினான் அதிமன்யு. 

அவளோ,கணவனின் குரல் வந்த திசையை பலமுறை கண்கள் சிமிட்டிய வண்ணம் பார்த்தவள், குழந்தைகள் போன்ற மிருதுவான குரலில், 

“கோயிலுக்கு.. காலையில தானே போய் வந்தோம்?” என்றாள். 

எந்த ரூட்டில் போனாலும் பிடிகொடுக்காத மனைவியை, தன் இடுப்பில் இரு கை வைத்து, தலைகோதி உடல் சிலுப்பிய வண்ணம் ஓரிரு செக்கன்கள் பார்த்திருந்தான் அவன். 

பின்பு ஏதோ யோசனை தோன்ற பளபளக்கும் விழிகளுடன், “சரி.. அப்போ வா.. ஷாப்பிங் போய் வரலாம்.”என்று சொல்ல, 

“எதுக்கு?..”என்று பட்டெனக் கேட்டாள் அக்னிமித்ரா. 

அவளிடம் தற்போது என்ன பதில் சொல்வது? தேவ்வின் திருமணம் பற்றிய செய்தி உன் காதுகளை எட்டி விடக்கூடாது என்பதற்காகத் தான் இத்தனையும் பெண்ணே என்று அவன் எங்கணம் சொல்வதாம்? 

வெடுக்கென்று ஓர் போலிக் கோபம் மீதூற, தன் மனைவியை நோக்கியவன், “ச்சும்மா ச்சும்மா கேள்வி கேட்குறதை நிப்பாட்டு.. ப்புருஷன் ந்நான் க்கூப்பிடுறேன்ல? .. ப்போ.. ப்போய் ரெடியாகு..ப்பத்து நிமிஷத்துல.. டிரஸ் ப்பண்ணிட்டு வந்து நிற்குற?”என்று சொன்னான் அவன். 

அவளோ தன் மேல் வீணாகக் கோபம் கொள்ளும் தலைவனின் சொல்கேட்டு, கொஞ்சம் கவலை மீதூற நின்றாள்.

 பின்பு கணவன் சொல்லே வேதவாக்காகக் கொண்டு, முணுமுணுத்தவளாக“இதோ வந்துட்றேன்”என்று, தன்னறையை நோக்கி விரைந்தாள் அக்னிமித்ரா. 

அவள் அக்னிமித்ரா தான்.தனக்குள் தீயைப் போல வெம்மை கொண்டிருப்பவள் தான். அவள் தீயாயின், இவன் அந்தத் தீயையும் அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்ட காற்று!! அக்னிமித்ராவின் காதல் காற்று அவன்!! 

அவன் விதித்த கெடுவான, பத்து நிமிடங்களுக்கும் மேலானது நேரம்.ஹாலிலேயே மனைவி வருகைக்காக, ஓர் புலியை போல குறுக்கும், நெடுக்குமாக நடந்தவன், மணிக்கட்டில் நேரம் பார்த்து மீண்டுமொருமுறை உச்சுக் கொட்டிக் கொண்டான். 

 பொறுக்க மாட்டாதவனாக, அவளுடைய அறையில் அதிரடியாக நுழைந்தவன், 

“இன்னும் ரெடியாகலையா நீஈஈ?..”என்று கேட்டுக் கொண்டே அவளில் பார்வை பதித்தவன், அப்படியே ஸ்தம்பித்து நின்றான். 

மார்பில் கச்சிதமாக பொருந்தி நிற்கும் ஜாக்கெட்டுடனும், சரியாக அடிவயிற்றில் இருந்த பாவாடையுடனும், பாவாடையைச் சூழ சேலையுடனும், சேலைக் கொசுவத்தின் முனையை பற்களுக்குள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்ற அக்னிமித்ரா, கணவனின் திடீர் குரலில் சற்றே தடுமாறி, 

பற்களுக்குள் சிக்குண்டிருந்த சேலைக் கொசுவத்திற்கு விடுதலையளித்தாள். 

சடாரென்று நிலத்தில் வீழ்ந்த கொசுவம் வேறு, அவள் தலைவனின் கண்களுக்கு, அவளுடைய முன்னழகுக் கலசங்களின் அழகை எடுப்பாகக் காட்ட, 

ஆள்பாதி ஆடை பாதியாக நின்ற மனைவியைக் கண்டு, விழிகள் விரிய, உணர்ச்சிகள் ததும்ப நின்றான் அவன். 

“உன்னை யாரு சாரி கட்ட சொன்னா..?”என்று கேட்டவனின் குரல், தாராளமாகவே உள்ளே சென்றிருந்தது. அவளின் சொக்க வைக்கும் அழகு, அதிமன்யுவுக்குள் ஆயிரம் உணர்ச்சி பூகம்பங்களை ஏற்படுத்தியிருந்தது. 

அவன் பாதங்கள் மெல்ல அடிமேல் அடி அவளை நாடிச் சென்றன. அவளின் முன்னெழில்களின் வனப்பும், இலேசாக மேடிட்டுத் தெரிந்த வயிறும் அவனைப் பித்தங்கொள்ளச் செய்ய, மீனை விழுங்க முனையும் பூனை போல அவளைப் பார்த்தது அவன் கண்கள். 

தலைவன் தன்னை நோக்கி வருவதை, அவன் மென்மையான காலடிச் சத்தங்கள் கொண்டு அறியப் பெற்றவள், மிருதுவான குரலில், “எனக்கு தான் சாரி கட்டுறது கஷ்டமாச்சே? அதான்.. உன்னை சந்தோஷப்படுத்துறதுக்காக.. ஒருவாட்டியாவது சாரி கட்டலாம்னு பார்த்தேன்..”என்று சொல்ல, ஆஜானுபாகுவான ஆண்மகன் கண்களில் ஓர் நேசம் மலர்ந்தது. 

‘அவனை சந்தோஷப்படுத்துவதற்காக சேலை கட்ட விளைந்த மனைவி பால் பூத்த அன்பில்’ அவளருகே நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தான் அதிமன்யு. 

அவனது உயரத்துக்கு.. அவன் தலை நேராக வந்து நின்றது, அவளது அழகிய கொங்கைகளுக்கு மத்தியில். 

உள்ளே போன குரலில், “அதான் நான் இருக்கேன்ல?சொன்னா கட்டிவிட்டிருக்க மாட்டேன்” என்று சொன்னவனின் மூச்சு பட்டுத் தெறித்தது அவளுடைய கழுத்துக்குக் கீழான வெண்மைப் பிரதேசத்தில். 

அந்த மூச்சு அவளில் கூச்சம் மூட்ட, சட்டென ஓரெட்டு பின்னே நகரப் பார்த்தவளின் முன்னங்கையைப் பற்றிப் பிடித்து, அவளை நகரவிடாமல் செய்தது அவன் முரட்டுக்கைகள். 

அந்த மூச்சின் உஷ்ணத்துக்கே.. உள்ளே வெந்து தணிந்தது அக்னிமித்ரையின் இதயக்காடு. இரு கை முஷ்டிகளும் இறுக்கியபடி அவள், தன் தனங்கள் ஏறி இறங்கப் பெருமூச்சு விட்ட வண்ணம் நின்ற வேளையிலே, அவன் கைகள் தயாரானது சேலை கட்ட. 

தன் எதிரே மூன்று மாத கருவுடன் நிற்கும் மனைவி. ஜாக்கெட்டின் முடிவில் உதித்த சின்னப் பூனை முடிகள், உப்பிய தொப்புள்கடந்து அடிவயிறு நோக்கிப் பயணமாவதைக் கண்டவனின் கண்கள் தாய்மை சிந்தியது. 

தன் வாரிசுக்கு முத்தம் வைக்க நாடிய மன்னவன், தன் முரட்டு அதரங்களை மென்மையாகப் பதித்தான் அவள் வயிற்றின் மத்தியில். 

கணவனின் முத்தம் தந்த மீசை குறுகுறுப்பில் உடல் முழுவதும் மின்சாரம் பாய, கண்கள் மூடிக் கிறங்கி, அவன் கழுத்தோடு கையிட்டு, வயிற்றோடு அணைத்துக் கொள்ளப் போனவள், அப்படியே நின்றாள். 

ஒருவேளை அவள் அவனை அணைப்பின், மஞ்சத்தில் ஓர் காதல் யுத்தம் தொடங்கும் என்பதை அறியப் பெற்றவள், கரங்களை இழுத்துக் கொண்டாள். 

அவன் திண்மையான தோளில் பதிந்த அவள் தளிர்விரல்கள் மெல்ல மெல்லத் தழுவி முன்னேறி.. அவனது தாடையை அடைந்தன. 

அதைத் தன் முகம் நோக்கி உயர்த்தியவள் இனிய மனையாளாக, “ஷாப்பிங் போகலாமா? இல்லை வீட்டிலேயே இருக்கலாமா பேபி? எனக்குன்னா எதுவும் ஓகே தான்..”என்று இதமாக சொல்ல, அவள் குரலில் முறுக்கேறியவனுக்கு அவளைக் கட்டியணைக்க கட்டுக்கடங்கா காதல் பெருகியது. 

வீட்டில் தங்குவது ஆபத்து என்று புரிய தலை சிலுப்பி, உணர்ச்சிகளின் பிடியில் நின்றும் வெளியில் வந்தவன், “நான் சொன்னா சொன்னது தான்”என்று சொன்னவன், அவளுடைய சேலைக்கொசுவத்தை அழகாக எடுத்து விடலானான். 

ஓர் ஐந்து, ஏழு நிமிடங்களில் கச்சிதமும், நேர்த்தியும் மிளிர சேலையில் தேவதையாக நின்ற மனைவியை இரசித்துப் பார்த்தான் அதிமன்யு. சாமிக்கு சூடிய பூமாலை எடுத்து, மனைவியின் கூந்தலில் சூடியவன், பின்னந்தலையில் மூக்கு நுழைத்து வாசம் பிடித்துக் கிறங்கினான். 

அவள் காதுக்குள், ஹஸ்கி குரலில், “என் பொண்டாட்டி அழகீஈஈஹ்!!”என்றவன் அவளைப் பின்னிருந்து கட்டிக் கொள்ள, சட்டென அவனை நோக்கி திரும்பியவள், “என் புருஷன் மட்டும் என்னவாம்? ஹேன்ட்சம் ஹங்க்!!” என்றவள் மதிவதனத்தில் அத்தனை பெருமை. 

அதைக் கேட்டு, தன் அழகிய முத்து மூரல்கள் தெரிய புன்னகைத்தவன் கேட்டான் “நீ தான் என்னைப் பார்த்ததில்லையே? அப்புறம் எப்படி சொல்ற?”என்று. 

அதற்கு அவன் மனைவி சொன்ன பதில் உள்ளத்தைக் கொள்ளையடிப்பதாகவே இருந்தது. 

இருட்டினை மிருதுவாகப் பார்த்த வண்ணம், ஹஸ்கி குரலில், “மனைவியை தேவதை மாதிரி உணர வைக்குற ஒவ்வொரு ஆணும் அழகு தான்.. என் கற்பனையில் நான் வடிச்சு வைச்ச என் அதி தான்.. நான் சந்திச்ச ஆண்மகன்களிலேயே அழகு..ப்பேஏஏரழகு” என்று உயிரளபெடையை உபயோகித்து இழுத்துச் சொன்னாள் அக்னிமித்ரா. 

அவன் புன்னகை இன்னும் அதிகமானது. தொடர்ந்து சொன்னாள் அவள். 

“எனக்கு ஒரே ஆசை தான் பேபி.. கண்ணை மூட முன்னாடி ஒரு வாட்டி.. ஒரே ஒரு வாட்டி… எப்படியாவது உன்னைப் பார்த்துரணும்.. அதுக்கப்புறம் திரும்பவும் பார்வை போனாலும் பரவாயில்லைன்னு தோணும்..”என்று கண்களில் இலேசாக கண்ணீர் ததும்பச் சொல்ல அவன் முகம் இறுகியது. 

அவன் தாய் சொன்ன அதே வார்த்தைகள்!! தாயின் நினைவுகள் என்று வந்தாலே.. அவன் காதோரம் ஒலிக்கும் அதே வார்த்தைகள்!! 

இறுதி வரை அவன் தாய் அவளைப் பார்க்கமுடியாமல் போனது. அதே நிலை தானே அவன் மனைவிக்கும்? 

சட்டென முகம் மாறி கண்கள் கலங்கினாலும்,அதை மனைவியிடம் காட்டிக் கொள்ளாமல், போலி உற்சாகமான குரலில், 

“உன் அழகனோட ஓர் பயணம்!! ஹேப்பியா என்ஜாய் பண்ணு!!..வா போகலாம்..”என்றபடி அவளை அழைத்தான். 

அவன் வலிய கைச்சந்தோடு பாம்பு போல ஊர்ந்த அவள் கைகள்.. அவனது முரட்டு விரல்களைக் கோர்த்துக் கொள்ள, வலியோடு சிரித்தாள் மங்கை. 

****

இருபக்க மலைகள் குடைந்து நடுவில் அமைக்கப்பட்டிருந்த வளைவு நெளிவான வீதிகள் காதலர்கள் நடை பயிலத்தானோ? என்ற எண்ணத்தை உருவாக்கியது இரு காதல் ஜீவிகளுக்கும். 

அவள் கைகளில் வெள்ளைப்பிரம்பு இல்லை;தடுமாற்றமும் இல்லை;திருடர்கள் பயமும் இல்லை. அவளது கண்ணாக, அவனை நினைத்தாள் அக்னிமித்ரா. 

அவளது ஒரு கை மேடிட்ட வயிற்றை அணைத்துப் பிடித்திருக்க, மறுகையோ அவனது இடுப்பைத் தழுவியிருந்தது. அவன் கை அவளது தோள்வளைவை இறுக்கி அணைத்திருந்தது. 

சின்ன நடைபயணமே ஆனாலும், மல்லிகைப் பூவின் மணம் கமழ, நடந்து செல்லும் மனைவியின் அழகில், அவன் முகத்தில் ஓர் கெத்தும் வந்து போகவே செய்தது. 

கண்டியின் காலநிலைக்கு, அவள் சூடிய மல்லிகைச்சரம் வாடுவது என்பது அரிது தான். அவர்கள் காதல் போலவே புத்துயிர்ப்பாக இருந்தது அது. 

ஹஸ்கி குரலில் சின்னச் சின்ன கதை பேசிக் கொண்டே நடந்தனர் அவளும், அவனும். அவர்களின் கதைகள் பெரும்பாலும் அவர்களது குட்டிக்குடும்பத்தில் புது ஆளாக வந்து ஐக்கியமாகப் போகும் குட்டிக்குழந்தை பற்றியே சுற்றிச் சுழன்றது. 

தன் மேல் பதியும் கணவனின் கதகதப்பான சூட்டை அனுபவித்துக் கொண்டே அவள், மெல்லிய குரலில், “இன்னும் கொஞ்சம் மாசத்துல ரவுடி பேபிக்கும், ஒரு பேபி!!..இன்னும் கொஞ்சம் நாள் போனதும், ஸ்கேன்னிங் பண்ணி ரிசல்ட் தெரிஞ்சதும் திங்க்ஸ் ப்ளூவா இல்லை பிங்கான்னு டிசைட் பண்ணிரலாம்..”என்று எதிர்காலக் கனவுகளில் சொல்ல, அவன் அடர்ந்த புருவங்கள் இடுங்கியது. 

“அது என்ன? ப்ளூ ஆர் பிங்க்..?”- முன்பின் பிள்ளை பேற்றைப் பற்றி அறிந்திராதவன் வெள்ளந்தியாகவே கேட்டான். 

அவன் கேள்வி கேட்டு கிளுக்கி நகைத்தவள் சொன்னாள், “ப்ளூ ஃபோர் லிட்டில் ரவுடி பேபி.. பிங்க் போர் லிட்டில் ஃபயர் பேபி..”என்று. அந்த ரவுடியின் தலையோ, ‘ஓஹ்.. இப்படியெல்லாம் இருக்கா?’என்பது போல ஆடியது. 

அந்த கணம் அவள் வெடுக்கென்று கேட்டாள், “ஆமா என் பேபிக்கு என்ன பேபி வேணும்..?”என்று. 

அவளது கேள்வியில் அவளைப் போலவே ஓர் மதலை உருவம் கண்ணுக்குள் வந்து போக, “உன்னைப் போல அழகான பெண்குழந்தை..லிட்டில் ஃபயர் பேபி..”என்றான் தலைவன். 

“அப்போ ஆண்குழந்தை வேணாமா? .. உன்னைப்போல ரவுடியா?.. அடாவடியா..?”- முரணாகக் கேள்விகள் கேட்டாள் அவள். 

அவன் அணைப்பின் இறுக்கம் அதிகமானது, அவளது கன்னத்தின் செழுமையை இரசித்த வண்ணம், “வேணாம்னு இல்லை… எது வந்தாலும் அது என் குழந்தை.. இருந்தாலும் பெண்குழந்தை மேல ஆசை.. உன்னைப் போல தைரியமா வளர்க்கணும்னு ஆசை.. என் அம்மா பேரு வைக்கணும்னு ஆசை..”என்று தாயின் நினைவுகள் வந்து போகச் சொன்னான் அவன். 

அவளோ மீண்டும் முரணாக, வெடுக்கென்று, “அப்போ ஆண்குழந்தை பிறந்தால் உன் அப்பா பேரா..?”என்று கேள்வி கேட்க, 

அவனுடைய அப்பாவின் பேச்சில் முகம் சுருங்கியது அவனுக்கு. அவன் எதுவும் பேசவில்லை. அப்பாவின் நினைவுகளில் இருந்து மனதை திசைதிருப்ப நிறைய காலம் தேவைப்பட்டது அவனுக்கு. 

அதற்குள் அவர்கள் சென்று சேர வேண்டிய இடமும் வந்து விட, தானாகவே மாறியது அவனுடைய இறுகிய முகம்!! 

உயர் மாட விடுதிகள் கொண்ட ஷாப்பிங் மாலிற்கு அவர்கள் செல்லவில்லை தான். மாறாக கண்டியின் சிறு வீதிகளின் இருமருங்கிலும் முளைத்திருக்கும் ஸ்டால்களில் தான் அவர்கள் ஷாப்பிங் இருந்தாலும், அது அவர்களுக்கு சந்தோஷம் தருவதாகவே இருந்தது. 

அந்த ஸ்டால்களில் கொண்டை ஊசி, கிளிப்புகள், வளையல், சின்னச் சின்ன ஸ்டிக்கர் பொட்டுக்கள் கொண்ட ஸ்டால் உரிமையாளரின் அழைப்புச் சத்தம் அவளைப் பெரிதும் கவரவே, அவளது முகம் திரும்பிய திசை வைத்து மனைவியின் மனம் அறிந்தவன் அவளை அங்கே அழைத்துச் சென்றான். 

கண்ணில்லாப் பெண், எப்படி அவற்றையெல்லாம் தேர்வு செய்யக்கூடும் என்று கடைக்காரர் சந்தேகமாக நின்ற வேளை, அவற்றைத் தொட்டுப் பார்த்து அந்தக் க்ளிப்களின் மேல் பதிந்திருக்கும் பூக்களைக் கண்டறிந்து சரியாகச் சொன்னாள் அக்னிமித்ரா. 

அருகே அவளை இரசித்துப் பார்த்தபடி நின்றிருந்த கணவனிடம் அவள் திரும்பத் திரும்பக் கேட்டது எல்லாம் ஒரே கேள்வி தான்.

“இது என்ன கலர் பேபி?”என்று தான். 

அவனும் நிறங்களை விபரிக்க, அந்த நிறத்திற்கு தகுந்த ஆடை அவளிடம் இருந்தால் அதை வாங்கலானாள். 

க்ளிப்கள் வாங்கி, சில ஆடைகள் பர்சேஸ் செய்து, பூங்கன்றுகள் உள்ள பூந்தொட்டிகள் வாங்கி முடித்து, ஏதாவது சாப்பிடலாம் என்று திட்டமிட்டு, உணவகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த வேளை, நேரகாலம் பார்க்காமல் ஒலித்தது அவனுடைய செல்போன். 

கை நிறைய பொருட்கள் இருந்தாலும், லாவகமாக பாக்கெட்டில் இருந்து செல்லை எடுத்து காதில் வைத்தான் அதிமன்யு. 

மறுமுனையில் என்ன செய்தி பரிமாறப்பட்டதோ,அவன் முகம் உச்சபட்ச களேபரத்தை பூசிக் கொண்டது. 

அவன் வாயிலிருந்து பதற்றத்துடன் வெளிவந்தது வார்த்தைகள். “எங்கே? எப்போ? சரி.. இரு வர்றேன்..இல்லை வந்துட்றேன்”என்றவன் செல்லை அணைத்து டெனிம் பாக்கெட்டில் போட, அருகேயே கலவரத்துடன் நின்றிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உள்ளே பயப்பந்துகள் உருளலாயிற்று. 

கருமணிகள் அங்குமிங்கும் அலைபாய,ஒடுங்கிய குரலில், “என்னாச்சு பேபி?”என்று கேட்டாள் அக்னிமித்ரா. 

அவனோ அவள் கேள்வி செவிகளில் நன்கே வந்து விழுந்தாலும், அதற்கு பதிலளிக்காமல் வீதியில் செல்லும் ஆட்டோவை வழிமறிக்கலானான் அதிமன்யு. 

செல்பேசியில் கேட்ட செய்தியை அடுத்து, அவள் வீட்டுக்கு செல்வது தான் உசிதம் எனப்பட்டது தலைவனுக்கு. 

அவனுடைய கரங்களில் இருந்த பர்ச்சேஸ் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் இடமாற்றப்பட்டது ஆட்டோவுக்குள். மனைவியின் கைச்சந்தைப் பற்றி, ஆட்டோவில் ஏற்றிய வண்ணம், பதற்றம் மாறாமல், “நான் வந்து சொல்றேன்.. நீ ஃபர்ஸ்ட் கிளம்பு..”என்று சொன்னவன், ஆட்டோ சாரதியைப் பார்த்தான். 

அதுவொரு பெண்ணாக இருக்கக் கண்டு, மனைவியின் பாதுகாப்பு பற்றிய பயம் நீங்கியவன், சாரதிப் பெண்ணை நோக்கி, “தங்கச்சி.. கரெக்டா வீட்டிலயே விட்டிரு என்ன?”என்று சொல்ல, அக்னிமித்ரா ஆட்டோவைத் தொட்டுத் தொட்டுப்பார்த்து வண்டியில் ஏறிய விதத்திலேயே, அக்னிமித்ராவின் நிலையறிந்த சாரதிப் பெண்ணும், 

“சரிண்ணா..அவங்களை வீட்டு வாசல்லேயே விட்டுர்றேண்ணா” என்றதும் தான் அவன் பயம் தெளிந்தது. 

எங்கும் இருட்டு. வானொலி நாடகம் கேட்பது போல தன்னைச் சுற்றிலும் குரல்கள் மட்டும் வர பயந்து போன அக்னிமித்ரா, ஆட்டோவுக்குள் இருந்த படியே, காற்றில் கையிட்டுத் துலாவி, அச்சத்தில் அவன் டீஷேர்ட் முனையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். 

“அதி என்னை மட்டும் விட்டுட்டு எங்கே போற?..”என்று அவள் கேட்க, தன் டீஷேர்ட்டில் பதிந்த அவள் கையை விலக்கியவன், 

ஆட்டோவின் உயரத்துக்கு குனிந்து அவள் கன்னம் பற்றி கனிவான குரலில், “நீ போ.. நீ வீட்டுக்குப் போ.. நான் வந்துட்றேன்..”என்றபடி அவளை விட்டும் நகர முயல அப்போதும் அவளை விடவில்லை அவள். 

கண்களுக்குள்ளேயே நீர் ததும்பி நிற்க, “அதீஈஈ” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் அவள்.

அவளது குரல் அவனைக் கட்டிப் போட மீண்டும் அவளை நோக்கிக் குனிந்தவன் நெற்றியில் முத்தம் தந்து, “பயப்படாதே.. சீக்கிரம் வந்துருவேன்..”என்றபடி அவளை விட்டும் சென்றான் அவன். 

அவன் தந்த நெற்றி முத்தம் மட்டும் தான் இதற்குப் பின் வந்த நாட்களில் ஓர் ஆறுதலாக இருக்கப் போவது அறியாமல், பயமும், பதற்றமும் ஒருங்கே மீதூறினாலும், ‘தலைவன் வருவான்’ என்ற நம்பிக்கையுடன் சென்றாள் அக்னிமித்ரா. 

ஆனால் சென்றவன் சென்றவன் தான், திரும்பி அவளைக் காண வரவேயில்லை.

வீடு வந்தவள் ஒருவேளை டீவி பார்த்திருந்தால், கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேவ்வின் கோலாகலத் திருமணம் பற்றி அவள் அறிய நேர்ந்திருக்கும். 

ஆனால் தலைவன் பற்றிய பதகளிப்பில் இருந்தவளுக்கு, தலைவனின் மீள்வருகை ஒன்றே மதியாக இருந்தது. 

வீடு வந்த பின் நேரம் கடக்க கடக்க அவளுள் பயப்பந்துகள் உருளவாரம்பித்தது. தலைவனுக்கு அழைப்பெடுத்து எடுத்து சோர்ந்தவளுக்கு அவன் நிலவரம் அறியமாட்டாமல் அன்னந்தண்ணி ஆகாரம் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கலாயிற்று. 

கூடவே நண்பன் விக்கிக்கு அழைப்பெடுத்தும், “ஸ்விச்ட் ஆப்”என்று வர, அவன் நிலையறியாமல் தலையே வெடித்து விடும் போலானது. 

இரவில் தோலைக் குத்திக் கிழிக்கும் கொடூரப் பனி எங்கிலும் பரவியிருக்க, வீட்டு வாசலில், கதவு நிலையில் தலைவைத்த வண்ணம் முழங்காலைக் கட்டிக் கொண்டு, அவன் வருகைக்காகவே காத்திருந்தாள் கரு சுமந்திருக்கும் குருட்டுப்பெண்!!! 

அவள் விழிகளில் நீர் வழியவில்லையாயினும், அவனுக்கு என்னானதோ? ஏதானதோ என்ற பதற்றம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போக, அவளது இதயத் துடிப்போசை அவளுக்கே கேட்கவாரம்பித்தது. 

இராத்திரியில் அவன் வேலைக்குச் சென்றதும் துணைக்கு வந்து படுக்கும், பக்கத்து வீட்டு யமுனாக்கா வேறு, கர்ப்பிணிப் பெண் வாசலிலேயே அமர்ந்திருப்பது பிடிக்காமல், அவளை நாடி வந்து,

“யம்மா உள்ளே வாம்மா.. அதி தம்பி வந்துரும்..தம்பிக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.. இப்போ அவன் வர்க் டைம்ல? காலையில வந்துருவான்..”என்று கரிசனையுடன் அழைக்க, சத்தம் வந்த திசையை நோக்கி கழுத்தைத் திருப்பினாள் அக்னிமித்ரா. 

உள்ளுக்குள் அவனைப் பற்றி ஆயிரம் பய எண்ணங்கள் உதித்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீங்க போய் படுத்துக்கங்க.. நான் அவர் வந்ததும் வந்துர்றேன்..”என்று உறுதியான குரலில் சொல்ல, யமுனாக்காவுக்கும் அவளை சமாதானப்படுத்த முடியாமல் போயிற்று. 

இது அவன் வேலை நேரம் தான். இருந்தாலும் வேலைக்கு செல்வானாயின் வீடு வந்து உடைமாற்றி கறுப்பு கோர்ட் சூட் அணிந்து, கையில் வோக்கி டோக்கி சகிதம் உயர் ஆண்மகனின் தோற்றத்துடன் தானே செல்வான் தலைவன்? 

வீட்டிலேயே அவனுடைய தலைமை மெய்க்காப்பாளனுக்கான சூட் இருக்க, அவன் இன்று வேலைக்கு செல்லவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது அவளுக்கு.

இருட்டு!எங்கிலும் கும்மிருட்டு!! தலைவனின் வியர்வை வாசம் இல்லாத, அவனுடைய கணீர்க்குரல் இல்லாத, பயம் சூழ்ந்த ஓர் இருட்டு!! 

அவன் நலம் தானா? என்றறியாமல் உழன்று கொண்டிருந்தவளின் சிந்தனைக்கு வந்து போனது தலைவன் சொல்லி விட்டுச் சென்ற கடிதம்!! 

தட்டுத் தடுமாறி எழுந்து.. அறையின் சுவர்களைத் தடவிய வண்ணம் லெட்டர் பேட்டினை நாடிப் போனவள், அவள் நேற்றெழுதிய கேள்விக்கான, தலைவனின் பதில் இருப்பதை, பேப்பரில் கைகளால் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொண்டாள். 

அந்தக் கடித்ததை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளுக்கு, அவனையே அணைத்துக் கொள்வது போல ஓர் ஆசுவாசம் பிறந்தது. 

சோபாவில் சென்று சம்மணம் கொட்டி அமர்ந்தவளின் விரல்கள் அந்த பிரெய்ல் எழுத்தில் பரவலானது. 

“பேபி உன் அம்மாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா? இல்லை என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று வேண்டுமென்றே ஹைப்போத்தெடிக்கல் குவஸ்டின் கேட்டிருந்தாள். 

அந்த முரணியல் கேள்விக்கு…உள்ளத்திலிருந்து பதில் சொல்லியிருந்தான் அவளுடைய துண்ணிய கேளிரான கணவன். 

“ஹேய் லூஸூ பொண்டாட்டி.. இது என்ன கேள்வி??…” ஆரம்பத்திலேயே அவன் திட்டியிருப்பது புரிந்தாலும் கூட, அந்தத் திட்டலோடு ஓர் புன்னகையும் அவன் முகத்தில் அரும்புவது போலவே தோன்றியது அவளுக்கு. 

காதல் கமழ அந்தக் குற்றெழுத்துக்களில் ஊசலாடியது அவள் விரல்கள் மட்டுமல்ல. காதல் கொண்ட மனமும் தான். தங்கிலீஷில், குறுந்தகவல் பாணியில் இருந்தது அவன் விட்டுச் சென்ற கடிதம்!! 

அவனது எழுத்துக்கள் வாயிலாக அவன் அவளோடு பேசினான். அவள் புன்னகையுடன் படித்தாள். இல்லையில்லை கேட்கவாரம்பித்தாள். 

“என் அம்மா முகம் எனக்கு ஞாபகம் இருந்ததில்லை..ஏன்னா அவங்க இறக்கும் போது நான் ரொம்ப ரொம்ப சின்னப்பையன்..

 அவங்களைப் பத்தி யோசிக்கும் போது.. ஞாபகத்துக்கு வர்றது..இரண்டே இரண்டு விஷயம் தான்..அவங்க சொன்ன வார்த்தைகள் ப்ளஸ், அவங்களுடைய நீண்ட கூந்தல் தான்… 

அவங்களுடைய அலைஅலையான கூந்தல் மட்டும் என் ஞாபகத்தில் பசுமையா பதிஞ்சு போயிருச்சு. அவங்க பக்கத்தில் அந்தக் கூந்தல் மணத்தை முகர்ந்துக்கிட்டே தூங்கிய நாட்கள் ஏராளம்..

அதுக்கப்பறம் வளர்ந்து பெரியவனானாலும் கூட.. மனசின் ஓரத்தில் அம்மா கூந்தல் வந்து போயிட்டே இருக்கும்.. ஒரு நாள்.. என் அம்மா கூந்தல் மாதிரியே.. இல்லை..அப்படி சொல்றது தப்பு!!.. 

அம்மா கூந்தலையே கொண்டிருக்குற ஓர் பெண்ணைப் பார்த்தேன்.. அதுவும் டிராஃபிக்கில…ஆனால் அந்தப் பொண்ணு முகத்தை என்னால பார்க்க முடியலை.. 

அவ முகத்தைப் பார்த்துடணும்னு ஒரு ஆசை.. ஒருவேளை அம்மா கூந்தல் கொண்டிருக்கிற பொண்ணு.. அம்மா மாதிரியே இருந்து.. நான் மறந்த என் அம்மா முகத்தை, அவங்க ஞாபகத்தை மீட்டித் தந்துட மாட்டாளா? ன்னு ஒரு நப்பாசை.. 

 

அதனால டிராபிக்கையும், டிராபிக் போலீஸையும் பத்தி கணக்கெடுக்காமல், அந்த டூ வே ரோடை அடாவடியா க்ராஸ் பண்ணி..அவளைப் பார்க்க போனேன்.. ஆனால் அந்த பொண்ணு எனக்கு கிடைக்கலை..

அப்புறம் எந்த பொண்ணைப் பார்த்தாலும் அவங்க கூந்தலை நோட் பண்ண ஆரம்பிச்சேன்.. இந்த பொண்ணு.. அந்தப் பொண்ணா இருக்குமான்னு, எந்தப் பொண்ண பார்த்தாலும் தேட ஆரம்பிச்சேன்.. அது என்னோட ஃபர்ஸ்ட் லவ்…!!!” என்று அவன் விவரித்திருப்பவற்றை எல்லாம் கற்பனை செய்து பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, அவன் உபயோகித்திருக்கும் ‘முதல்காதல்’என்னும் பதம் இடித்தது. 

பின்னே.. அவளுக்கு, அவள் கணவன் தான் முதல் காதலாக இருக்க, அவளுடைய கணவனுக்கோ முதல்காதல் லிஸ்ட்டில் இன்னோர் பெண் இருப்பது சின்ன பொஸஸிவ்னஸை ஏற்படுத்தியது அவளுள். 

முகம் சிறிதே அஷ்டகோணலாக மாற தொடர்ந்து வாசித்தாள் பெண். 

“அப்புறம் மறுபடியும், சில வருஷம் கழிச்சு.. அதே பொண்ணை பார்த்தேன்.. அதே கூந்தல் பெண்.. அம்மா மாதிரியே!!..முழுக்க முழுக்க அம்மா மாதிரியே!.. 

ராத்திரில தன்னந்தனியா.. ஒரு வழிப்பறித் திருடன் கிட்டேயிருந்து.. தன்னோட பேக்கை பறிகொடுக்காமல் கடைசி வரை தைரியமா போராடிட்டிருந்த அதே கூந்தல் பெண்!! .. அது நீ!! அது நீ தான்.. அக்னிமித்ரா…”அவனுடைய இறுதி வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றாள் அவள். 

அப்படியானால் அந்தக் கூந்தல் மங்கை.. முதல்காதல்.. என்றெல்லாம் அவன் வர்ணித்திருந்தது அவளையா? 

அதிர்ச்சியில் திறந்து கொண்ட அதரங்களை அனிச்சையாக மறைத்தது அவள் விரல்கள். 

“என் அம்மாவுடைய நிலைமையில் இருந்த அதே அக்னிமித்ரா.. என் அம்மா மாதிரியே ரொம்ம்ப்ப தைரியமான என் அக்னிமித்ரா!! என் அம்மா உன்னை மாதிரி இருப்பாங்கன்னு தோண ஆரம்பிச்சுது… அதனால தான் உன்னை மறுநாள் தேடி வந்தேன்.. உன் கையில கேனைத் திணிச்சு.. உன் கிட்ட பல்பும் வாங்கினேன்.. உன்னோட ஒவ்வொரு செய்கையும் அம்மாவ ஞாபகப்படுத்துச்சு..

 நீ என் அன்பை ஏத்துக்கமாட்டன்னு தெரிஞ்சு.. உனக்கு ஒரு மறைமுக பாடிகார்ட்டா மாறினேன்..உன்னை தெனம் ராத்திரி பாலோ பண்ணேன்.. 

சந்துரு உன் மேல கை வைச்சதும்..அதுக்கு பின்னாடி நடந்ததும் நீ என்னை நெருங்குறதுக்கு சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்துச்சு..

அன்னைக்கு “குழந்தை போல பார்த்துக்க நீ இருக்கியே?”ன்னப்போ முடிவு பண்ணேன்.. காலம் பூரா உன் பக்கத்துலயே இருந்துடணும்னு.. 

என் அம்மா என் முகத்தைப் பார்க்க கொடுத்து வைக்கலை.. அதே மாதிரி என் வாழ்க்கையில் வந்த இரண்டாவது தேவதையான நீயும் என் முகத்தைப் பார்க்கலை..”என்று அவன் எழுதியிருந்த இடத்தில் காகிதம் சற்றே ஊறிப் போயிருந்தது. 

அதை தொட்டுப் பார்த்த போது அவன் அழுதிருக்கிறான் என்றே தோன்றியது. இவள் கண்களும் கலங்க தொடர்ந்து வாசித்தாள், 

“இப்போ சொல்லு.. என் அம்மாவையும், உன்னையும் நான் ஒண்ணா பார்க்கும் போது.. அம்மா பிடிக்குமா?.. உன்னை பிடிக்குமா?ன்னு.. நீயே சொல்லு!!” என்று முரட்டு உடல் கொண்ட ஈர நெஞ்சுக்காரன், அவள் கேள்வியை அவளுக்கே திசை திருப்பி விட்டிருந்தான். 

அதை வாசித்து முடித்ததும், அவள் கண்களில் நின்றும் நில்லாமல் வழிந்தது கண்ணீர். கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், இதழ்கள் வளைய சிறு குழந்தை போல அழுதாள். 

அப்போதே அவனைக் கட்டியணைத்து, அவன் மாரில் விழுந்து, “என்னை நீ.. உன் அம்மா ஸ்தானத்தில் வைச்சுப் பார்க்குறியா பேபி?”என்று கேட்டு கதறி அழ வேண்டும் போல ஓர் வெறியே எழுந்தது அவளுள். 

ஆனால் தலைவன் தான் அருகில் இல்லையே? அவனுடைய அணைக்கப்பட்டிருந்த செல்லுக்கு திரும்பத் திரும்ப அழைப்பெடுத்துக் கொண்டே இருந்தாள் அக்னிமித்ரா. 

அன்றைய இரவு விடியா இரவாக, ரொம்பவும் அவஸ்தையான இரவாகக் கழிந்தது அவளுக்கு. அடுத்த நாள் காலை.. அவள் வேலைக்கு செல்ல முனைந்த நேரம்.. பணியகம் வரை வந்து விட்டுச் செல்லும் கணவனின் அரவணைப்பு வேண்டுமென்று தவித்தது உடல்!! 

அவளை அவளது பணியகத்தில் விட்டு விட்டு அப்படியே சந்தை சென்று, சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எடுத்து வந்து, கனகச்சிதமாக சமைத்து வைத்திருப்பான் அவளது கணவன். 

சில சமயங்களில் இத்தாலியன்உணவு வகை, ஜப்பானிய உணவு வகை, லங்கா உடரட்ட க்கேம (கண்டி மக்கள்) உணவு வகை என்று விதம் விதமாக சமைத்து வைத்திருப்பான் அவன். 

“இது எல்லாம் எப்படி கத்துக்கிட்ட பேபி? ஏதாவது இன்டர்நேஷனல் ஹோட்டல்ல செஃப்பா வேலை பார்த்தியா என்ன?”என்று ஒரே கேள்வியை பலமுறைக் கேள்வி கேட்டிருப்பாள் அவள். 

அவனோ சிரித்துக் கொண்டே, “யூடியுப் பார்த்து கத்துக்கிட்டேன்”என்பான். 

மார்புக்கு குறுக்காக கைகட்டி, புருவம் உயர்த்தி, சந்தேகம் முகம் முழுவதும் விரவி வர, “நம்புற மாதிரியா இருக்கு”என்று மனைவி கேட்டு வைக்க, அதற்கு மேலும் அவளைப் பேச விடாமல் வாயில் உணவுக்கவளத்தைத் திணிப்பான் அதிமன்யு. 

அழகாகக் கழியும் பொழுதுகள் அவை!! இன்றும் அது போல, வேலை முடிந்து வீடு வந்தவளின் நாசி.. அவனது கைப்பக்குவ சமையல் நெடியை பெரிதும் எதிர்பார்த்தது.

 அந்தோ பரிதாபம்!! அவளது நாசி, உணவு மணத்தை முகரவில்லை. மாறாக வீட்டைச் சுற்றி அடித்துக் கொண்டிருந்த தூசு மணத்தை முகர, அவள் மனம் சோர்ந்தது.

இன்று முற்பகல் வேளை மகாவலி கங்கையின் பாலத்தைத் தாண்டி வரும் போது.. பாலத்தில் குழுமியிருந்த மக்கள் போட்ட கசகசவென்ற பேச்சுச் சத்தங்கள் திடும்மென அவள் மூளையை ஆக்கிரமிக்கலானது. 

அவளுடைய இருட்டு விழித்திரையில், அசரீரி போல ஒலித்தது மக்களின் குரல்கள்!! 

‘பாலத்துக்கடியில ஏதோ டெட்பாடி கிடக்கு..”

‘மூஞ்செல்லாம் தண்ணியில ஊறி பார்க்கவே அசிங்கமா இருக்கு.. ஆனா ஒரு ஆம்பள பாடி தான்ப்பா அது..’ 

‘பார்க்க.. ஒரு இருத்தேழு இருபத்தெட்டு வயசிருக்கும்.. வயசிருக்கும்’

‘யார் பெத்த புள்ளையோ? அல்பாயுசுல போயிட்டான்’

‘கொலையா? தற்கொலையான்னு தெரியலையே?’

கணவன் வீட்டில் இருப்பான் என்ற நம்பிக்கையில் வீடு வந்தவளுக்கு, கணவன் வீட்டில் இல்லையென்றானதும் ஆற்றடியில் கிடந்த பிணத்தின் எண்ணங்கள் எழுந்து அவளை அலைக்கழிக்கலானது. 

நெஞ்சு மத்தியில் மூச்சுக்குழல் அடைப்பட்டது போல ஓர் வலியெழுந்து பரவ, நெஞ்சைத் தடவிக் கொண்டு, “ஆஹ்ஆ.. ஆஹ்ஆ!!”என்று மூச்செடுக்க சிரமப்படலானாள். 

தைரியமான பெண்ணான அவளுக்கும் தலை சுற்றுவது போல இருக்க, ‘கடவுளே! .. அது மட்டும் அவள் அதியாக இருக்கக் கூடாது’என்ற மானசீகமாக பிரார்த்தித்தது மனம்.

கண்களில் வழிந்த நீர் தனங்களை கோர்க்க, ஓர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், சற்றும் தாமதியாமல் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் இலக்கத்திற்கு அழைப்பெடுத்தாள் அவள். 

அப்பாவிப் பெண்ணின் இலக்கம் வந்ததும், அவரும் காலம்தாழ்த்தாமல் அழைப்பையேற்றவர், போலிஸ்காரர் அல்லவா? 

அந்த மைன்டிலேயே தான் அவளுடன் பேசலானார். 

கறாரான குரலில், “சொல்லும்மா.. என்ன விஷயம்? ஏதாவது ஹெல்ப் வேணுமா?.. இல்லை யாராவது உன் கிட்ட தகராறு பண்றாங்களா?”என்று கேட்க, அவளோ தன் அழுகையைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள் விஷயத்தை. 

“தகராறு எல்லாம் இல்லைண்ணா.. என்னோட அதி இன்னும் வீட்டுக்கு வரலை..”-என்னும் போதே சரேலென வழிந்தது ஒருபக்கக் கண்ணீர். 

“வீட்டிற்கு வரலையா? .. எத்தனை நாளா?”- பார்வை இழந்து தவிக்கும் பெண்ணிடம், தன் கறார்க்குரலை சற்றே அடக்கி, மென்மை காட்ட முயன்றும் முடியாதவராகக் கேட்டார் அந்த நேர்மையான போலிஸ்காரர். 

அவரது கடினசுபாவத்தை ஏற்கனவே அறிந்தவராயிற்றே அவள்? 

அதனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், “நேத்து காலையில ஷாப்பிங் போயிருந்தப்போ ஒரு கோல் வந்தது.. ‘இதோ வரேன்’னு சொல்லிட்டு போனான்… இப்போ வரைக்கும் வீட்டுக்கு வரலை.. எனக்கு ரொம்ப பயமா இருக்குண்ணா..” என்று இதயம் திக்திக்கென்று தாருமாறாக அடித்துக் கொள்ள சொன்னாள் அவள். 

“இதை ஏன் முன்னாடியே சொல்லலை?..”-மறுமுனையில் இருந்தவர் கொஞ்சம் சினந்து கொள்ளவும் செய்தார். 

அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் முட்டுவது போல இருக்க, தேய்ந்து போன குரலில் “அவன் எப்படியோ வந்துடு.. வான்னு நினைச்சேன்..!!”என்றாள். 

அவளது குரலை வைத்து மனநிலையைப் படித்தவர், “நீ பயப்படாம இரு.. நான் பார்த்துக்கறேன்..” என்றவர், அழைப்பை துண்டித்து விட்டு, மேசையில் கிடந்த காக்கித் தொப்பியைப் போட்டுக் கொண்டே, நாற்காலியை விட்டும் எழுந்தார். 

அன்றிரவு.. 

அதிமன்யு வீட்டு வாசல் முன்னாடி ஓர் போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து காக்கிச்சட்டையின் இம்மி பிசகாத நேர்த்தியுடன் இறங்கினார் நெடுமரம் போல வளர்ந்திருந்த இன்ஸ்பெக்டர். சிவக்குமார். 

அவரைத் தொடர்ந்து இறங்கினான் அதிமன்யு. அவனது வலது கைச்சந்தில் போடப்பட்டப்பட்டிருந்தது ஓர் மாவுக்கட்டு!! 

மற்றும்படி அவன் ரொம்ப நிதானமாக உடலில் எந்த காயங்களும் இன்றி தெளிவாகவே இருந்தான். 

அவன் கை இடித்து விடாமல்.. அரவமே எழுப்பாமல் உள்ளே அழைத்து வந்த சிவக்குமார், அதிமன்யுவை சோபாவில் அமர வைக்க, கிச்சனிலிருந்து தம்ளரில் தண்ணீருடன், ஹாலை நோக்கி வந்தாள் அக்னிமித்ரா. 

 ரொம்பவும் சோர்ந்து, கன்னங்கள் எல்லாம் அழுது அழுது அதைத்துப் போன முகத்துடன், மகிழ்ச்சியே அற்று நடந்து வந்தவளைக் காணக் காண, குற்றவுணர்வில் தகித்தது அவன் மனம். 

அரவமே எழுப்பாமல் அவன் அமர்ந்திருக்க, பக்கத்தில் காவல் அதிகாரி சிவக்குமார் நின்றிருக்க, அப்போது தான் யாரும் எதிர்பார்த்திராத ஓர் அதிசயம் நிகழ்ந்தேறியது. 

சோபாவை நோக்கி விரைந்தவளின் நடை அப்படியே தடைப்பட்டு நின்றது. அவள் நாசி முகர்ந்து கொண்டிருந்தது இத்தனை நாளாக அவள் தேடிய ஓர் நறுமணத்தை. 

அது அவளது தலைவன் மட்டும் கொண்ட மணம்!! அதிமன்யு மட்டுமே கொண்டிருக்கும் நறுமணம்!! 

அதை முகர்ந்த அடுத்த நொடி.. அவள் கையிலிருந்த தம்ளர் வீழ்ந்து ஓடியது அவளது வெண்மையான பாதங்களுக்கு இடையில்!! 

அவன் வாசம், அது பசுமையான காட்டுமரங்களின் வாசம்! 

அவளது விழிகள் பரிசளித்த கும்மிருட்டில்.. கற்பனையாக ஓர் சோலைவனம் விரிய, அதன் வாசம் அவள் நாசியை நிரட, கணவன் ஹாலில் தான் இருக்கிறான் என்று ஊர்ஜிதமாயிற்று அவளுக்கு. 

காற்றில் கைகளை நீட்டியவள் அதரங்கள் தானாக உச்சரித்தது தலைவன் நாமத்தை. 

“அதீஈஈஹ்!! அதீஈஈஹ்!!”என்று அவனை அவள் தேட, மூன்றாம் நபர் சிவக்குமாரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. 

அதிமன்யுவின் வருகையை அறிமுகப்படுத்தாமலேயே, கணவனின் இருப்பை அறியும் இவள்.. என்ன மாதிரிப் பெண்ணிவள்? என்ற கேள்வி எழுந்தது அவருள். 

 “அதீஈஈஈ!!” என்று கண்ணீர் மல்க அழைத்தவளின் குரலைக் கேட்டவன், காற்றில் துலாவிய அவள் கையைப் பற்றிக் கொண்டான். 

அக் கையை கொழுகொம்பைப் பற்றிய முல்லைக்கொடி போல பற்றிக் கொண்டவள், அவன் அருகே தட்டுத்தடுமாறி அமர்ந்தாள். 

அவளது விழிகள் அங்கணம் சிந்தியது ஆனந்தக்கண்ணீர்!! 

அவளது தலைவன் மீள வந்து விட்டான் என்பதால் விளைந்த கண்ணீரே!! 

அவளது கைகளில் ஒன்று மேலெழுந்து.. அவனது தோள்புஜத்தைத் தடவி, கழுத்து வளைவுப் பிரதேசத்தைக் கண்டுபிடித்துக் கொள்ள, கழுத்தை சுற்றி வளைத்து, அதில் முகம் புதைத்தவள் அடுத்த கணம் வெடித்து அழவாரம்பித்தாள். 

அவள் அழுகையை தாங்க மாட்டாமல், “ப்ளீஸ் அழாதே மித்ராஹ்..அழா..தேமா”என்று முதுகு தடவிக் கொண்டே,அவள் அழுகையை நிறுத்தப்படாதபாடு பட்டான் அதிமன்யு. 

அழுது அழுது அழுகையின் உச்சத்தில் தேம்பலும், விம்மலும் தான் வந்தாலும் அவள் அழுகை மட்டும் நின்றபாடேயில்லை. 

“ஏன்ஹ் ஹெ.. என்னை விட்டு போனஹ்..?”- கலங்கிய மற்றும் குருட்டு விழித்திரையுடன், சிறு விம்மலுடன் கேட்டாள் அவள். 

அவனும் கலங்கிய கண்களுடன், “ஸாரி.. திரும்பி வர முடியாமல் போகும்னு நினைக்கவேயில்லைமா..”என்று சொல்ல, அவனது நெஞ்சில் கிடந்த கையைத் தொட்டது அவள் கைகள். 

அது காயம்பட்டிருப்பதை அறியாதவள், “நானும் பாப்பாவும் உன்னை மிஸ் பண்ணோம்.” என்றவாறு, அவன் கையை எடுத்து வயிற்றில் வைக்கப்போக, வலி தாங்க முடியாமல் கத்தினான் அதிமன்யு. 

உயிர் போனது போல பதறிப் போன அக்னிமித்ரா, “என்னாச்சு.. என்னாச்சு பேபி?”என்று கையை தொட்டுப்பார்க்க, அவன் கைச்சந்தில் ஆரம்பமான கட்டு, அவனது முழங்கை வரை வந்து நின்றிருப்பதைக் கண்டவள், பதறினாள். 

“ஐய்யோ என்னாச்சு? பெண்டே..ஜ்.. பெண்டேஜ் போடும்படி என்ன நடந்ததுடா”என்று கேட்க, இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சிவக்குமார் அவர்களின் அந்நியோன்னியம் மனதைப் பிசைந்தது. 

மனைவியைத் தேற்றுமுகமாக, “அது ஒண்ணுமில்லைமா.. நேத்து மினிஸ்டர். சதாசிவத்தோட பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி ஆளுங்க கல்லெறிஞ்சதுல சின்ன தகராறு ஆயிருச்சு..உன் கூட ஷாப்பிங் பண்ணிட்டிருக்கும் போது பசங்க தான் ஹெல்ப்புக்கு கூப்ட்டாங்க.. அதான் போனேன்.. போனதுல கையில இலேசா கல்லடி பட்டிருச்சு..கொஞ்சம் இரத்தம் லாஸானதில் மயங்கவும், பசங்க ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டாங்க.. ”என்று சொல்ல, ஏதோ இடையிடப் போனார் இன்ஸ்பெக்டர். சிவக்குமார். 

நிஜமாகவே அவன் கையில் கல்லடியா பட்டது? கண்ணாடிப் பாட்டில் துகள் அல்லவா குத்திக் கிழித்தது? அதனால் தானே மயக்கம் வரும் அளவுக்கு இரத்தமும் போனது. 

கிழிபட்ட இடத்தில் மூன்று தையல் வேறு.

உண்மை அறிந்த சிவக்குமார், எங்கே இடையிட்டு, உண்மையை சொல்லி, அவளை இன்னும் துன்புறுத்தி விடுவாரோ என்று பயந்தவன், 

கண்களால் “ப்ளீஸ் சொல்லாதீங்க சார்”என்று கெஞ்ச, அவன் காதலுக்கு மதிப்பளித்து அமைதியானார் அவர். 

வீடு வந்தவள் செய்தி பார்த்திருந்தாளேயானால், அமைச்சரின் பொதுக்கூட்டத்தில் நடந்த கலவரம் பற்றி அறிந்திருப்பாள். ஆனால் இவள் உலகம் மறந்து, வழி மேல் விழி வைத்தபடி கணவனை அல்லவா பார்த்திருந்தாள்? 

அப்படியானால் நேற்றிரவு முழுவதும் அவன் மருத்துவமனையில் இருந்தானா? 

அங்கே நிம்மதியாகவா இருந்தான்? மருத்துவர்கள் தையல் இட்டு முடித்ததும் அப்போதே வீட்டுக்கு ஓடி வர பைத்தியக்காரன் போலல்லவா துடித்தான்? 

அவனுக்கு மயக்க ஊசி கொடுத்தல்லவா.. ஆசிவாசப்படுத்தி, துயில வைத்திருந்தனர் டாக்டர்களும். 

“உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்க விஷயத்தை அவனுங்க ஏன் என்கிட்ட சொல்லலை? .. விக்கி கூட மறைச்சுட்டான்ல..?”என்று விக்கி மீதும், அவனது இதர நண்பர்கள் மீதும் கூட பொல்லாத கோபம் எழுந்தது அவனுக்கு. 

அத்தனை வலியிலும் மனைவி முகம் பார்த்து முறுவலித்தவன், “விக்கி ஊர்ல இருந்து இன்னும் வரலைமா.. நான் தான் நீ சொன்னா வருத்தப்படுவேன்னு பசங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்..”என்றதும் அவளுள் மிகுந்தது உரிமைக் கோபம். 

“அப்போ?? உன் உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தாலும்.. எனக்குத் தெரிய வந்திருக்காதில்ல??.. பைத்தியம் மாதிரி.. நீ இப்போ வருவ.. இப்போ வருவன்னு காத்திட்டிருந்திருப்பேன்ல?”என்று கேட்டவளின் நாசி நுனி சிவந்து போயிருந்தது. 

அவளை ஆதரவாக அணைத்து தோள் சாய்த்துக் கொண்டவன், “ஸாரிமா.. நானே இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்திருப்பேன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு இன்ஸ்பெக்டர் சாருக்கு சொல்லிட்ட.. என்னை தேடி அலைஞ்சு, ஒருவழியா விசாரிச்சு.. ஹாஸ்பிடல் வந்து, உன்னைப் பார்க்க கூட்டிட்டு வந்துட்டாரு..”என்று சொல்லத் தான், தன்னையும், கணவனையும் தவிர இன்னோர் நபரும் அங்கே இருப்பதை அறிந்தாள் அவள். 

“அண்ணாவும் இங்கேயா இருக்காரு..?” என்று புருவங்கள் இடுங்கக் கேட்டவள், சட்டென அவனை விட்டும் விலகி அமர, சிவக்குமாரின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. 

அவளை நோக்கி, “ஆமாம்மா..மினிஸ்டர் பொதுக்கூட்டத்தில் நடந்த கலவரத்தைப் பத்தி இன்பர்மேஷன் வந்து நாங்க அங்கே போறதுக்கு முன்னாடி பாதி கலவரம் போயிட்டிருந்தது.. அதுக்கு முன்னாடி தான் அதிக்கு அடிபட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கணும்.. இல்லைன்னா உன் அதிக்கு இப்படியாக விட்டிருக்க மாட்டேன்..உன் கோல் வந்ததும் தான் ஹாஸ்பிடல் போய் விசாரிச்சுப் பார்த்தேன்.. உன் ரவுடி பேபியை உன்கிட்டேயே கொணர்ந்து ஒப்படைச்சுட்டேன்.. அப்போ நான் கிளம்பட்டா..?”என்றவருக்கு, அந்நொடியின் பின்னர் அதிமன்யு மேல் மரியாதை வளர்ந்திருந்தது. 

‘இந்தக்கால காதல்.. எக்ஸ்பிரஸ் ரயில் வேகம்’ என்றவருக்கு, ‘இந்தக்காலத்திலும் புனிதமான காதல் உண்டு’என்ற எண்ணத்தை வளரச்செய்தது அவர்களின் உரையாடலும், அந்நியோன்னியமும். 

அதிமன்யுவின் முதுகுதட்டி, “அப்பறம்…நான் கிளம்பறேன் மிஸ்டர். அதிமன்யு. இனிமேலும் மித்ராவை ஹர்ட் பண்ற எந்த வேலையையும் செய்யாதீங்க.. டேக் ரெஸ்ட்” என்றவராக அங்கிருந்து விரைந்தவரின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது. 

 

 

2 thoughts on “எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top