28 ஆடி அசைந்து வரும் தென்றல்
மூன்று நாட்கள் கழித்து ரிப்போர்ட் வந்தது.. அதில் ஷாஷிகா தனது மகள் என இருக்க..தான் நினைத்தது போல ஷாஷிகா தன் மகள் தான்.. ஆனந்தத்தில கண்கள் கலங்கி விட்டது. ரிப்போர்ட் எடுத்து கொண்டு தேவர்ஷி வீடு வந்தான்.
முன் அறிவிப்பின்றி வந்து நின்ற அனிவர்த்தை ஷாஷிகாவை பார்க்க வந்திருப்பதாக நினைத்து..
“ஷாஷிகா ஸ்கூலுக்கு போயிருக்கா..” என்றார்.
“இல்லை.. உங்களை தான் பார்க்க வந்தேன்.” என உள்ளே வந்து உட்கார்ந்தவனை கேளவியாக பார்த்தார்..
அனிவர்த் திருகுமரனிடம் “ஷாஷிகா பெர்த் சர்டிபிகேட் பார்க்க முடியுமா..” என கேட்டான்.
திருகுமரன் “ அது எதுக்கு உங்களுக்கு..” என்க
அவரை நேருக்கு நேர் பார்த்து..” மாமா.. எடுத்திட்டு வாங்க..” என மாமாவில் ஓர் அழுத்தம் கொடுக்க..
அவருக்கும் ஏதோ புரிவது போல இருக்க… மாமா என்ற சொல் திருகுமரனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.
வேகமாக சென்று எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தார். ஒரு பரபரப்புடன் கைகள் நடுங்க…அதை வாங்கி பார்த்தான்.
அப்பா பெயர் வர்தா என்றிருந்தது. பார்த்தவுடன் அப்படி ஒரு ஆனந்தம்.. என்னவோ ஷாஷிகா இப்போ தான் பிறந்தது போல அப்படி ஒரு பரவசம்..
“மாமா.. மாமா.. வர்தா..” அவனுக்கு கோர்வையாக பேச்சு வராமல் தொண்டை அடைத்தது.
“வர்தா.. நான்” என தன் நெஞ்சில் கை வைத்து சொல்ல..
திருகுமரனுக்கும் ஒன்றும் பேச முடியவில்லை. தன் மகளை நினைத்து தானும் மனைவியும் கவலையில் தூங்காமல் விழுத்திருந்த இரவுகள் எத்தனை எத்தனை.. மகள் வாழ்க்கை சீராகிடாதா என எத்தனை வேண்டுதல்கள்..
இன்று அதற்கு எல்லாம் விடிவெள்ளியாக அனிவர்த் தெரிந்தான்..
“என்ன சொல்லறிங்க நீங்க..” என உண்மை தானா என்ற பரிதவிப்புடன் கேட்டார்.
“ஆமாம்.. நான் சொல்றது உண்மை தான் நம்புங்க..” என்றவன் டிஎன்.ஏ.டெஸ்ட் ரிப்போர்ட்டையும் காண்பித்தான்.
“ஆனால்.. நீங்க சண்டை போட்டு.. வேணாம்னு விட்டுட்டு வெளிநாடு போயிட்டதா.. தேவா சொன்னாளே..”
இதற்கு என்ன பதில் சொல்வான். அதுவும் ஒரு தந்தையிடம் உன் மகளை உறவுக்கு மட்டுமே அழைத்தேன் என எப்படி சொல்வான். தன் மேலும் தவறு இருக்கு தானே.. இப்ப உணர்ந்த காதலை அவளோடு வாழந்த கார்கால பொழுதில் உணரந்திருந்தால்.. எப்படி எல்லாம் இருந்திருக்கலாம்.. இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்..ஆனால் சொல்லி தானே ஆகவேண்டும். மனைவி மகள் என குடும்பமாக ஆக வேண்டுமே.. மனைவி என்றதும் தான் தாலி ஞாபகம் வந்தது. தாலி எப்படி அதை அவளிடம் தான் கேட்க வேண்டும்.. எப்படி எல்லாம் மறைத்து ஏமாற்றியிருக்கிறாள்..
பிள்ளை உண்டானதை சொல்லியிருந்தால் அப்பவே கல்யாணம் செய்திருக்கலாம் இப்போ பெரியவர்களிடம் எதை எப்படி சொல்லி விளக்கம் கொடுத்து சமாளிக்க வேண்டிய நிலையில் இப்படி கொண்டு வந்து நிறுத்திவிட்டாளே.. என தேவர்ஷி மேல் கோபம் கொண்டான்.
‘இருடி உன்னை நல்லா வச்சு செய்யறேன்.. என்னையவே பைத்தியகாரனாக்கிட்டல்ல… கொசு மாதிரி இருந்துகிட்டு என்ன என்ன வேலை செஞ்சு வச்சிருக்கா.. இரு நீயா என்னை தேடி வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்லடி..’
திருகுமரன் “மாப்பிள்ளை.. என்னாச்சு..”
“இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்துச்சு.. லவ் பண்ணினோம்.. கொஞ்சம் மிஸ்
அண்டர்ஸ்டேன்டிங் வந்து ஈகோல பிரிஞ்சிட்டோம்.. “ என இரத்தின சுருக்கமாக முடித்துக் கொள்ள..
பெண்ணை பெற்றவராக அவருக்கு இன்னும் விளக்கம் தேவைப்பட..
“நான் கேட்கறேனு தப்பா எடுத்துக்காதிங்க.. உங்க வீக் எண்ட் பார்ட்டி எல்லாம் நானும் கேள்வி பட்டு இருக்கேன்…அது தான் தேவாவுக்கும்… உங்களுக்கும்…. பிரச்சினையா..” என தயங்கி கேட்க..
மற்ற பெண்களை போல தான் என் பெண்ணிடமும் பழகினாயா.. என நியாயப்படி சட்டையை பிடித்து கேட்கவேண்டும்.. ஆனால் பெண்ணையும் பேத்தியையும் மனதில் கொண்டு பொறுமையை கையில் எடுத்துக் கொண்டார்.
அவரின் எண்ணத்தை புரிந்தவனாக வேகமாக மறுத்தான்…
“ச்சேச்ச.. அப்படி எல்லாம் இல்லை.. மற்ற பெண்ளை போல நான் வர்ஷியை நினைத்து பழகவில்லை.. அவளை மிகவும் பிடித்துப் போய் தான் பழகினேன்.. அவளின் சிறுபிள்ளைதனம்.. சேட்டைகள் இது எல்லாம். ஆரம்பத்தில் மிகப் பிடித்திருந்தது.. ஆனால் நாளடைவில் அதுவே இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருக்கலாம் என தோன்றியது.. அவள் தன் குடும்பத்திறகு கொடுத்த இம்பார்ட்ன்ஸ் எனக்கு கொடுக்கவில்லை.. இன்னொன்று எனக்கும் அவளுக்கும் ஸடேட்டஸ் ஒத்துவராது என நினைத்தேன் எங்களுக்குள் அதுவே சண்டை ஆகி பிரிஞ்சிட்டோம்”
“தேவா எங்க குடும்பத்தை பற்றிய விவரம் எதுவும் உங்களிடம் சொன்னதில்லையா…” என கேட்டார்.
“இல்லை… ஒன்றும் சொன்னது இல்லை.. ஏன் மாமா..”
“இல்லை.. சுந்தரமூர்த்தி அன் சன்ஸ் நிறுவனம் கேள்விபட்டிருக்கிங்களா..”
“ம்ம்.. தெரியும்.. ரொம்ப பெரிய ஸ்தாபனம்..”
“அந்த சுந்தரமூர்த்தியோட பேத்தி தான் தேவா..” என்றார் அமைதியாக…
அனிவர்த்தால் நம்பவே முடியவில்லை.. அந்தஸ்த்தில் தங்களை விட பல படிகள் உயர்ந்தவர்கள்.. மூன்று தலைமுறையாக பேர் சொல்லும் குடும்பம்.. அந்த குடும்பத்து பெண் தன்னிடம் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.. இதையும் தன்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… அந்த கடைசி நாள் நான் அந்தஸ்த்தை பற்றி பேசிய போது கூட ஒன்றும் சொல்லாமல் அமுக்கமாக இருந்துவிட்டாளே… எத்தனை என்னிடம் இருந்து மறைத்திருக்கிறாள்… இன்னும் தாலி அதற்கான விடை தெரிவில்லை.. இருடி அதையும் கண்டுபிடித்து விட்டு உன்னை பேசிக்கிறேன்..என தேவர்ஷியின் மீதான அனிவர்த்தின் கோபத்தின் அளவு எகிறி கொண்டிருந்தது.
அத்தனையும் இவள் செய்துவிட்டு.. என்னை ஏமாத்தி விட்டு.. நான் இவளை விட்டுட்டு போய்விட்டதாக சொல்லி என்னை வில்லனாக்கி வச்சிருக்கா.. நீயே என்கிட்ட வர மாதிரி பண்ணல நான் அனிவர்த் இல்ல..என முடிவு செய்து உடனே செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.
திருகுமரனிடம் “மாமா.. ஏதோ இரண்டு பேருமே தப்பும் தவறுமா புரிஞ்சுகிட்டு.. பிரிஞ்சிட்டோம்.. வர்ஷி கர்ப்பமா இருக்கானு தெரிஞ்சிருந்தா.. நான் எப்படியாவது வர்ஷியை சமாதானம் பண்ணி பிரிஞ்சி போக விட்டு இருக்கமாட்டேன். உங்க குடும்பத்தை பற்றி சொல்லியிருந்தா.. நானே உங்ககிட்ட வந்து பேசி சேர்ந்து வாழ முயற்சி செய்திருப்பேன்.. எல்லாமே எங்கிட்ட இருந்து மறைச்சிட்டா.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சதில இருந்து என் பொண்ணோட ஆறு வருடங்களை நான் வாழ முடியவில்லையே என எவ்வளவு தவிப்பா இருக்கு தெரியுமா உங்களுக்கு.. “என கேட்கும் போதே கண்கள் கலங்கி விட..
திருகுமரனுக்கு நொடியில் மருமகன் உசந்து தான் போனான். தன் மகள் தான் தவறாக புரிந்து கொண்டு தப்பு செய்துவிட்டதாக நினைத்தார். மருமகனை சமாதனம் செய்யும் விதமாக..
“அவளுக்கு அப்போ அவ்வளவு விவரம் பத்தவில்லை மாப்பிள்ள.. அதான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பண்ணிட்டா.. விடுங்க நீங்க வருத்தப்படாதிங்க..” என்றவர்.. மேற்கொண்டு என்ன செய்லாம் என கேட்க..
தன் பெற்றவர்களை அனுப்புவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு சென்றவன் ஷோபாவில் உட்கார்ந்திருந்த கங்காவின் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டான்.
கங்கா என்னடா இது இவன் தீடீரென பாசப்பயிரை வளர்க்கறான்… என உஷாராகி அவன் கையை தட்டிவிட்டார்.
“கங்கா ப்யூட்டி.. பெத்த பையன் பாசமா தோளில் கை போட்டா இப்படியா தட்டிவிடறது.. இது நியாயமா இது தர்மமா..” என வீரவசனம் பேச…
“என்னால உனக்கு ஆக வேண்டியது என்னவோ.. அத முதல்ல சொல்லு..” என்றார் விறைப்பாக..
“எதுக்கு இப்படி இரண்டு சோல்டரையும் தூக்கிட்டு இருக்கறிங்க.. இறங்குங்க..” என இரண்டு தோள்களையும் இதமாக அழுத்திவிட்டவன்…
“இந்த அட்ரஸல உங்க மருமக இருக்கா.. ஒரு நல்ல நாள் பார்தது கூட்டிட்டு வந்திடுங்க..” என விசிட்டிங் கார்டை நீட்டினான்.
கங்கா சிதம்பரம் இருவரும் அதிர்ந்து போயினர். இவன் பணத்திற்காக சுற்றும் எதாவது ஒன்றை பிடித்துவிட்டானா.. மருமகள் வரமாட்டாளா கவலை பட்டவர்கள்.. இப்ப இந்த வீட்டிற்கு ஒரு மருமகள் வர போகிறாள் என சந்தோஷமும் பட முடியாமல் பயந்தனர்.
விசிட்டிங்கார்டை வாங்கி பார்த்த சிதம்பரம்.. “ இந்த வீட்டு பொண்ணா… நாம் போய் கேட்டா தருவாங்களா..” என சந்தேகத்துடன் கேட்டார்.
“எல்லாம் நடக்கும்.. நீங்க போய் பேசி கூட்டிட்டு வந்திடுங்க.. நான் இன்னைக்கு நைட் ஜெர்மன் போறேன். அங்க கம்பெனில எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வர ஒரு மாசம் ஆகும். நான் வரும் போது உங்க மருமக வீட்ல இருக்கனும்..” என்க…
“ஏதே.. கூட்டிட்டு வரதா.. டேய் அப்படி எல்லாம் கூட்டிட்டு வர முடியாது.. முறைப்படி கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வரனும்..”
“நீங்க நேர்ல போய் பாருங்க… உங்களுக்கே எல்லாம் புரியும்…” என சொல்லி விட்டு சென்றுவிட்டான்.
“என்னங்க… இவன் இப்படி குழப்பி விட்டுட்டு போறான்…”
“தெரியலையே… கங்கா போய் பார்ப்போம் விடு.”
“போனா தானே தெரியும்… என்ன வில்லங்கம் பண்ணி வச்சிருக்கானு… எப்படியோ நம்மள சிக்க வச்சுட்டு தர்ம அடி வாங்கி கொடுக்க ப்ளான் பண்ணிட்டான். அது மட்டும் நல்லா தெரியுது…” என வழக்கம் போல மகனால் புலம்பினார்.
தன் அன்னையிடம் சொல்லிவிட்டோம்… எப்படியும் தேவர்ஷியை கூட்டிக் கொண்டு வந்திடுவார் என்ற நம்பிக்கையில் அன்றிரேவ ஜெர்மன் பறந்துவிட்டான்.
அனிவர்த் நினைத்து எல்லாம் நடத்திடுமா..? கங்காவால் நடத்திட முடியுமா..? தேவர்ஷி நடக்கவிடுவாளா..?
super sis please daily ud podugga sis
Suguna
👌👌👌👌👌👌👌👌👌👌