29 – ஆடி அசைந்து வரும் தென்றல்
“அப்பா..” என்றது அழுத்தமாக ஷாஷிகா..
“சொல்லுடா.. ஷாஷி என்ன பண்ணிட்டு இருக்கறிங்க.. சாப்பிட்டிங்களா..”
“ம்ம்.. அப்பா.. டூ தோசை.. நீங்க ப்பா..”
“நான் இன்னும் சாப்பிடலை..”
“ஏன் பா..”
“எனக்கு புட் கொடுக்க யாருமே இல்லை..” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஸ்கீரினின் ஓரத்தில் தெரியும் தேவர்ஷியை பார்த்தவாறு சொன்னான். தேவர்ஷி மடியில் மகளை இருத்தி முகத்தை திருப்பி கொண்டு உட்கார்ந்திருந்தாலும் ஓர விழிப்பார்வை இவனிடம்…
மகளோடு வீடியோ காலில் அனிவர்த்…
”உலக மகா நடிப்புடா சாமி.. மூஞ்சை பாரு.. இந்த பூனையும் பால் குடிக்குமானு.. போர் ட்வென்டி..” தேவர்ஷி உதட்டை சுழித்தாள்..
அவள் உதட்டு சுழிப்பை கண்கள் தெறிக்க பார்ததான் அனிவர்த்.. கொய்யாவை கடித்து தின்றும் அணிலாக அவள் உதட்டை கடித்து தின்ன ஆசை கொண்டான். எத்தனை நாட்களாச்சு… அவள் இதழ் சாறின் ருசி.. அம்மம்மா… ஹா… நினைவே தித்திப்பா இருக்குதே… வேண்டும் என துடிக்குதே… ஆனால் முடியாதே என ஏக்க பெருமூச்சு.. அவள் உதட்டு அசைவிலேயே.. அவள் வாய் வார்த்தைகளை கண்டு கொண்டான். அவளை சீண்டி பார்க்க ஆசை தான்.. ஆனால் மகள் முன்னிலையில் செய்ய முடியாமல்…
‘இருடி இதுக்கு எல்லாம் நேர்ல வந்து பதில் கொடுக்கறேன் நான் போர ட்வென்டியா.. போர் ட்வென்டி என்ன செய்வானு காமிக்கறேன்…‘ மனதுள் சொல்லி வைத்தான்.
“ப்பா நீங்க இண்டியா வாங்க நான் ஊட்டி விடறேன்..” என்றது அந்த சின்ன குட்டி..
“சரிடா..க்யூட்டி.. உன்னை விட்டா எனக்கு யாருமில்ல.. என்கிட்ட யாரும் பேசறதில்ல.. நான் இங்க கேட்க ஆளில்லாம தனியா கிடக்கறேன்.. நீயாவது என் மேல பாசமா இருக்கியே.. அப்பா பாவம் தான மா..”
இது எல்லாம் தேவர்ஷியிடம் பரிதாபத்தை சம்பாதித்து கொள்ள.. ஷாஷிகாவிடம் சொல்வது போல தேவர்ஷியிடம் சொல்லப்பட்டது..
தேவர்ஷியோ அவனின் பேச்சில் எரிச்சல் அடைந்தாள்.. மகளுக்கோ என்ன புரிந்ததோ…
“அப்பா.. டோன்ட்ஒரி.. ஷாஷிகா இருக்கேன்..” தந்தையின் பரிதாப நாடகத்தை நம்பி சாமாதனம் செய்தது..
“ஆமாம் நீ மட்டும் தான் இருக்க..” அவனின் மாய்மாலத்தை அவனின் இளையாட்டி தான் நம்பியது.. அவனின் இணையாட்டியோ எரிச்சல் தாளாமல் மடியில் இருந்த மகளை இறக்கி படுக்கையில் உட்கார வைக்க போக..
“ம்மா..” என்றாள் கண்டன குரலில்..
“ஷாஷி.. எனக்கு வேலை இருக்கு..”
“ம்மா நைட் தான என்ன வேலை.. “ என்றது விவரமாக..
“அப்பா மாதிரியே.. கேட்குது பாரு..” என முணுமுணுத்தவள்.. மகளை சமாளிக்க முடியாமல்…
“இப்ப தூங்க வரியா… என்ன.. காலைல ஸ்கூல் போக எழுந்திரிக்க மாட்ட.”
“ம்மா இன்னும் டைம் இருக்கு…” என முறைத்து நின்றது..
மனைவி மகளுக்கு இடையேயான சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் அனிவர்த்..அது இன்னும் எரிச்சலை கொடுத்தது தேவர்ஷிக்கு..
“இப்ப போனை வச்சிட்டு தூங்க வரல.. அடி விழுகும் பார்த்துக்கோ..”
தேவர்ஷியின் கோபத்தின் அளவீடு அதிகமாகி கொண்டிருப்பதை கண்ட அனிவர்த் இன்னைக்கு இது போதும் என.. மகளிடம்..
“ஓகே.. ஷாஷிமா.. நாளைக்கு பேசலாம்.. பை..”
“ப்பா.. “ எனவும்..
“என் செல்லகுட்டி.. என் பட்டு குட்டி.. என் புஜ்ஜூ குட்டி..” என ஒவ்வொரு கொஞ்சலுக்கும் மகளை தொட்டு முத்தம் வைத்தவன்.. கடைசியாக..
“என் குட்டிம்மா..” என மனைவியை பார்த்தவாறே மகளை முத்தம் வைக்க.. தேவர்ஷி முகத்தில் பொறாமையில் எள்ளும் கொள்ளும் வெடித்தது… அனிவர்த் அடக்கமாட்டாமல் வாய் விட்டு சத்தமாக சிரிக்க…
“பேசினது.. போதும் வந்து படுடி..” என போனை பிடுங்கி அணைக்க.. அணைக்க போகும் முன அவள் முகம் அருகில் தெரியும் அந்த நொடிக்காகவே அவளை சீண்டி வம்பிழுப்பான்..
அனிவர்த் ஜெர்மனில் தன் நணபர்களோடு படித்து முடித்ததும் ஆரம்பித்த கம்பெனியில் இன்னும் பங்குதாராக இருக்க.. ரெனவேஷன் ஒர்க் நடப்பதால் அவன் ஒரு மாதம் ஜெர்மன் போயே ஆக வேண்டிய கட்டாயம்.. இதை சாக்காக வைத்து தேவர்ஷியை தன் வீடு வர வைக்க பிளான் பண்ணி கங்காவிடம் சொல்லி விட்டு ஜெர்மன் சென்றுவிட்டான்.
கங்காவும் என்ன வில்லங்கத்தை பண்ணி வைத்து இருக்கானோ என பயத்துடன் தான் சிதம்பரத்துடன் சென்றார்.
அவர்கள் சென்றது ஒரு மாலை பொழுது.. அழைப்பு மணியை அடிக்கவும் தாத்தாவிற்கு முன்பு ஓடி வந்து எக்கி கொண்டு கதவை திறந்தது பேத்தி..
அழகான பெண் குழந்தை கதவை திறக்கவும் தன்னால் முகத்தில் ஒரு மலர்ச்சி கங்காவிற்கு..
திருகுமரனுக்கு வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும் அவர்களின் மதிப்பான தோற்றம் வரவேற்க செய்தது.
“வாங்க.. உட்காருங்க..”என்றவர்
அவர்கள் அமர்ந்ததும் கேள்வியாக பார்க்க…
“நாங்க அனிவர்த் பேரண்ட்ஸ்..” என்றதும்..
திருகுமரன் சந்தோஷமாக..” வாங்க சம்பந்தி..” என மறுபடியும் வரவேற்க..
‘என்னது சம்மந்தியா.. இன்னும் ஒன்னும் கல்யாண பேச்சு வார்ததையே ஆரம்பிக்கலயே..’ கங்கா லேசாக அதிர்ந்தார்.
“கௌசி இங்க வாம்மா.. சம்மந்திங்க வந்திருக்காங்க பாரு..” என குரல் கொடுக்க..
கௌசல்யாவும் வந்தவர்களை வரவேற்று.. காபி ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிப்புகள் முடிய..பேச்சு வார்த்தை ஆரம்பமானது.. கங்காவிற்கு தொடர் அதிர்ச்சிகளும் ஆரம்பமானது…
“அப்புறம் சம்மந்தி மாப்பிள்ளை சொன்னார். நீங்க வருவிங்கனு.. ரொம்ப சந்தோஷம்..” என திருகுமரன் சிதம்பரத்திடம் சொல்ல..
ஒன்றும் புரியாமல்… என்ன பேச என தெரியாமல் ஒரு சிரிப்பை உதிர்த்து வைத்தனர் இருவரும்..
திருகுமரனை தொடர்நது கௌசல்யாவும..” அன்னைக்கு மாப்பிள்ள வீட்டுக்கு வந்தப்ப நான் கோயிலுக்கு போயிட்டேன்.. என்னால மாப்பிள்ளையை பார்க்க முடியாம போச்சு..” என வருத்தப்பட்டு சொல்ல..
‘அவ்வளவு நல்லவனா.. எம்மகன்.. எனக்கே தெரியலையே.. பயபுள்ள.. ஓவர் பெர்மான்ஸ் பண்ணி இருக்கும் போல.. அதை போய் நம்பி இருக்காங்களே.. ரொம்ப அப்பாவிங்க போல..’ கங்காம்மா மைண்ட் வாய்ஸ்…
கங்கா”உங்க பொண்ண பார்க்கலாமா..”என கங்கா கேட்க..
கௌசல்யா “தேவாம்மா..” என அழைக்க..
தேவர்ஷி மகளை கையில் பிடித்து கொண்டு வந்தாள். அனிவர்த் வந்து சென்ற அன்றே கௌசல்யாவிடம் சொல்லி தேவர்ஷியிடம் பேச சொன்னார் திருகுமரன். இருவரும் அனிவர்த்தை தாங்கி பேசவும் பொறுக்கவில்லை தேவர்ஷிக்கு.. அதை அவர்களிடம் காட்டவும் முடியவில்லை. நடந்த உண்மையை சொன்னால் தாங்கமாட்டார்கள் என்பதால் அவர்களிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அத்தனையும் அனிவர்த் மேல் கோபமாக வளர்த்தாள்.
எந்த புருஷன் பொண்டாட்டிக்குள் சண்டை இல்லை. இதற்காக எல்லாம் கோவித்து கொண்டு பிரிந்து வாழ்வார்களா.. ஆம்பளைகள் முன்னபின்ன இருந்தாலும் பொம்பளைங்க தான் அனுசரிச்சு போகனும்.. அவரே சமாதானமாகி இறங்கி வரும் போது.. நீ பண்ணுவது சரியில்ல.. உன் மகளுக்காக வேணும் சேர்ந்து வாழனும் என பெற்றவர்கள் மாற்றி மாற்றி பேசி பேசியே தேவர்ஷியை கரைத்தார்கள்..அவர்களிடம் ஒன்றும் பேச முடியாமல் அவர்கள் பேச்சிற்கு தலையாட்டி வைத்தாள்…
தேவர்ஷி வந்தவள் ஒன்றும் பேசாமல் கங்காவிற்ககு எதிரே இருந்த ஷோபாவில் மகளை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். இருவரையும் பார்ததவுடன் முக ஜாடையே எல்லாம் சொல்லிவிட.. கங்கா சிதம்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் அதிர்ந்த முகமே அவர்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்பதை காட்டி விட..
பக்குவப்பட்ட திருகுமரனுக்கு புரிந்தது. அனிவர்த் அவரிடம் என்ன சொன்னானோ.. அதையே அவரும் சொல்ல.. கங்காவால் தாங்கமுடியாமல் பிபி அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது. அவர் மயங்கவும் பதறி போயினர். சிதம்பரம் கங்காவின் பேகில் இருந்து ஒரு பிபி மாத்திரையை எடுத்து தண்ணீர்கொடுத்து விழுங்க செய்தார். சற்று நேரத்திற்கு எல்லாம் மயக்கம் தெளிந்து சரியாக.. கௌசி கொடுத்த ஜூஸை வாங்கி குடிக்கவும் சற்று திடமாக உணர்ந்தார். உண்மையை ஜீரணித்து கொள்ள ஒரு மணி நேரம் பிடித்தது இருவருக்கும்.. அது வரை அங்கு கனத்த அமைதி.. ஷாஷிகா போனில் கேம் விளையாடி கொண்டிருந்தது.
“நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியாக பேசலாமா..” திருகுமரனிடம் கங்கா கேட்டார்.
“தேவாம்மா…அவங்கள உன் ரூம்கு கூட்டிட்டு போம்மா..” என திருகுமரன் சொல்ல..
கங்காவை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்த கங்கா..
“என்ன செய்தான் என் மகன்..” என தேவர்ஷியை நேருக்கு நேர் பார்த்து பார்த்து கேட்டார்.
எப்பவும் தங்கள் மகன்கள் மேல் தவறு இருந்தாலும் பெண்ணை தானே குற்றம் சொல்லும் தாய்மார்களை தானே பார்ததிருக்கிறோம்.. ஆனால் கங்கா தன் மகன் மேல் தான் தவறு இருக்கும் என சொல்லவும்.. தேவர்ஷி வியப்பாக பார்த்தாள்.
அவளின் பார்வையை வைத்தே அவளை படித்தவர்.. “எனக்கு தெரியும் என் மகனை பற்றி.. ஆனால் ஒரு குழந்தை இருக்கு என தெரிந்த பிறகு கை விடும் அளவிற்கு மோசமானவன் இல்லை.. நான் அந்தளவிற்கு மோசமாக வளர்க்கவில்லை” சொல்லும் போதே அவர் முகம் கசங்கி போனது…
“எனக்கு எல்லாம் எல்லாமே சொல்லி விடும்மா ப்ளீஸ்..” என்றார் அழுத்தமாக..
தேவர்ஷி தங்களுக்கான அந்தரங்கத்தை தவிர்த்து எல்லாம் சொல்லிவிட்டாள். கேட்டிருந்த கங்காவிற்கு மீண்டும் பிபி ஏறியது.. ஆனால் மயங்கும் அளவிற்கு இல்லை.. அடுத்தடுத்த அதிரச்சி அவரிற்கு பழகிவிட்டது.
“பரதேசி நாயி.. பண்றது எல்லாம் பண்ணிட்டு.. என்கிட்ட ஒன்னும் சொல்லாம இங்க உங்க மருமக இருக்கா.. போய் கூட்டிட்டு வாங்கனு எங்களையும் சேர்த்து ஏமாத்தி இருக்கான்.. வரட்டும் அவனை பேசிக்கிறேன்.. அப்பவும் நினைச்சேன் கல்யாணம் பேசிட்டு வாங்கனு சொல்லாம.. என்னடா கூட்டிட்டு வர சொல்றானே.. என்ன வில்லங்கம் இருக்ககுமோ.. என பயந்தேன். பயந்த மாதிரியே பண்ணி வச்சிருக்கானே..”அங்கலாய்ப்பு அவருக்கு..
அனிவர்த்தை மேலும் சில பல நிமிடங்கள் திட்டி தீர்த்த கங்கா தேவர்ஷி அருகில் வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியை உள்ளே இருந்து எடுத்து வெளியே எடுத்துப் பார்த்தார். பின்பு தேவர்ஷியிடம்..
“என் மருமகளை சொந்த பந்தங்களோடு ஊரறிய முறையா அழைச்சிட்டு தான் போவேன்.. தப்பு எல்லாம் இவன் பண்ணிட்டு.. எங்கயோ போய் உட்கார்ந்து கிட்டு கூட்டிட்டு வாங்கனு சொல்வானா.. அவ்வளவு ஈசியா நீ கிடைச்சிட்டா அவன் தன் தப்பை உணரமாட்டான்.. நாம தான் உணர வைக்கனும்.. அவன் வரட்டும் பேசிக்கறேன்.. அதுவரைக்கும் நீ அவன்கிட்ட பேசாத.. யாருகிட்ட.. இந்த கங்காகிட்டயே அவன் வேலையை காமிக்கறானா.. அவன் வந்து உன்கிட்ட பேசி மன்னிப்பு கேட்கட்டும்.. அப்புறம் பேசிக்கலாம்.. அதுவரைக்கும் அவன் பேசினா கூட நீ பேசாத..” என சொல்லி அவள் அறையை விட்டு வெளியே சென்றவர் பேத்தியுடன் ஆசையாக பேசிக் கொண்டிருந்த சிதம்பரத்திடம் சென்று தானும் ஷாஷிகாவோடு பேச..
ஷாஷிகாவை தொட்டு தடவி வாஞ்சையாக பேசிக் கொண்டிருந்த இருவரின் ஏக்கத்தை பார்த்தவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.. இரவு வரை பேத்தியுடன் இருந்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு சென்றனர்.
போகும் முன்பு திருகுமரனிடம் அனிவர்த் வந்த பிறகு முறைப்படி மருமகளையும் பேத்தியையும் அழைத்து கொள்வதாக சொல்லி சென்றனர்.
ஏற்கவே அனிவர்த் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள் தேவர்ஷி. அப்போ தான் இங்கு வா.. அங்கு வா என்பார். இப்பவும் வா என்றால்.. அதுவும் இவர் வராமல் பெற்றவர்களை அனுப்பி வைத்தால் போகனுமா… முடியாது நடையா நடக்க வச்சு சங்க வைத்து தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை சும்மா விடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தாள்.
கங்கா மற்ற தாய்களை போல மகன் தப்பை மறைத்து மருமகளை ஏசவில்லை. மகனை திட்டி மருமகளை தாங்கி நிற்கவும் அவளின் கோபம் சற்று குறைந்தது. மாமியாரையும் மிகவும் பிடித்துவிட்டது. மாமியாரின் பேச்சே அவளின் கோபத்தை கொஞ்சம் இளக்க வைத்தது. எதுனாலும் மாமியார் பார்த்து கொள்வார் என்ற தைரியமும் நம்பிக்கையும் வந்தது.
கங்கா அனிவர்த்திடம் தானும் பேச போவதில்லை.. சிதம்பரத்தையும் பேசகூடாது என சொல்லிவிட்டார கண்டிப்புடன்.. மகன் செய்ததை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. மனது சமாதானம் ஆக மறுக்கிறது. அவனின் பழக்கங்கள் அறிந்தவர் தான்.. நல்ல குடும்பத்து பெண்ணிடம் பழகி ஒரு குழந்தையை கொடுத்து.. அது கூட தெரியாமல் ஆறு வருடங்கள் வேறு பெண்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். என்ன மனுஷன் இவன் என்ற கோபம்..
ஒருவாரம் பொறுத்துப் பார்த்தவன் எந்த தகவலும் வரவில்லை.. பெற்றவர்களும் பேசவில்லை எனவும்…தாய்க்கு அழைத்தான். அழைப்பு போய் கொண்டே இருந்தது எடுக்கவில்லை எனவும் தந்தைக்கு அழைத்தான். அவரும் எடுக்கவில்லை எனவும் என்னவோ என பயந்து அசோக்கிற்கு அழைத்தான்.
“ஹலோ.. சொல்லுங்க பாஸ்..”
“அசோக் அம்மா.. அப்பா.. இரண்டு பேருமே போனை எடுக்கலை.. நல்லா இருக்காங்கல்ல.. அம்மாவுக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே.. “
“இல்ல பாஸ்.. சிதம்பரம் சார் நேத்து கூட ஆபிஸ் வந்தாரே.. ஒன்னும் சொல்லையே..”
‘அப்போ நல்லா தான் இருக்காங்க.. தேவர்ஷி வீ்ட்டுக்கு போயிருக்காங்க.. அங்க தான் ப்ராப்ளம் போல..’
“கான் கால் அம்மாவுக்கு கனெக்ட் பண்ணு… ஆனா நான் லைன்ல இருக்கேனு சொல்லாத
“ம்ம்.. ஓகே பாஸ்..”
அசோக் உடனே கங்காவிற்கு அழைத்தான்.
எடுத்த எடுப்பிலேயே.. “சொல்லுங்க அடிமை சார்..” என குதர்கமாக பேச..
ஆரம்பமே அனர்த்தமா இருக்கே என ஜெர்க் ஆனான் அசோக்.. ம்ம் சமாளிப்போம்..
“ஹீஹீ.. நல்லா இருக்கறிங்களா ம்மா.. உடம்புக்கு ஒன்னும் இல்லையே..”
“நீ கேட்கறத பார்த்தா.. என் உடம்புக்கு ஏதாவது வரனும்னு வேண்டிக்கற மாதிரி இருக்கே…”
“அய்யோ… அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க ம்மா..” என அலறினான்.
“சரி அதை விடு.. இப்ப எதுக்கு கூப்பிட்ட.. நான் பெத்த மவராசன் என்னனு கேட்க சொன்னானா..”
“அய்யோ.. அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..நானே தான் பேசலாம்னு கூப்பிட்டேன்..”
“அவன் குடுக்கற சம்பளத்துக்கு மேல ஓவரா நடிக்காதடா.. நானா கூப்பிட்டாவே நீ எடுத்து பேசமாட்ட.. இதுல நீ பேச தான் கால் பண்ணினேன் சொன்னா சின்ன புள்ள கூட நம்பாதுடா..”
கேட்டுக் கொண்டிருந்த அனிவர்த்துக்கு சிரிப்பை அடங்க பெரும் பாடாகி போனது…
“அப்படி எல்லாம் இல்லைங்க ம்மா..”
“டேய் டேய்.. ஓவர் சீன் போடாத.. நீ எதுக்கு கால் பண்ணியிருக்கனு எனக்கு தெரியும். உன் கொள்ளை கூட்டத் தலைவன் சொல்லி இருப்பான்.. அதான.. அவன்கிட்ட சொல்லிரு அவன் பண்ணின வேலைக்கு அவன்கிட்ட பேசனும்னு எதிர்பார்க்க வேண்டாம்னு .. அவன் சொன்னதை செய்ய முடியாது.. அவனுக்கு வேணும்னா அவனே வந்து கூட்டிட்டு வரட்டும்.. அப்புறம் இன்னொன்னு எனக்கு கால் பண்ணினா நான் அட்டென்ட் பண்ணமாட்டேன் சொல்லிரு.. நீ என்ன சொல்லறது.. கேட்டுகிட்டு இருக்கற அவனுக்கு புரியும்..” என அழைப்பை துண்டித்து… நான் அனிவர்ததின் அம்மாவாக்கும் என நிருபித்தார்.
அனிவர்த்கு அது வரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது. சத்தமாக சிரித்தான்
‘பாஸ் என்ன செஞ்சாரு.. இந்தம்மா பேசமாட்டேங்குது.. இவரு என்ன செய்ய சொன்னாரு.. செய்யமுடியாதுனு சொல்லிட்டாங்க.. இவரு வந்து யாரை கூட்டிட்டு வரனும்.. இவரு சிரிக்கறாரு… அய்யோ.. தலையும் புரியல.. வாலும் புரியல..’ என தலைமுடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.
“டேய் தகப்பா.. நல்லா லூசு குடும்பத்துல சிக்க வைச்சிட்டு போயிட்டடா..” என வழக்கம் போல புலம்பினான்.
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌