ATM Tamil Romantic Novels

30 -ஆடி அசைந்து வரும் தென்றல்

30 – ஆடி அசைந்து வரும் தென்றல்




உடனே திருகுமரனுக்கு அழைத்தான் அனிவர்த். அவர் கடமை தவறாத மாமனாராக சிதம்பரம் கங்கா வந்தது.. கங்கா மயங்கியது.. அப்புறம் கங்காவும் தேவர்ஷியும் தனி அறையில் பேசியது. அதன் பிறகு அனிவர்த் வந்த பிறகு அழைத்து கொள்வதாக சொன்னது எல்லாம் ஒப்புவித்துவிட்டார்.

 

அனிவர்த்டோ எண்ணம் ‘தான் போய் அழைத்தால் தேவர்ஷி வரமாட்டாள். மருமகள் வேண்டும் என ஆசையில் இருக்கும் தாயை வைத்து தன் வீட்டிற்கு வரவழைத்துவிட்டாள் எப்படியாவது அவளோடு வாழ்ந்து விடலாம். அதான் தன் பார்வைக்கே மயங்குவாளே.. ஈசியாக  சரி கட்டி விடலாம்’ என நினைத்திருக்க.. 

 

‘மாமியாரும் மருமகளும்  புது திட்டம் தீட்டி என்னையே மடக்குகிறார்களா.. வரேன் வந்து பாரத்துக்கிறேன்.. என் பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியாது. இந்த கங்கா தான் வில்லி வேலை பார்த்திருக்கு.. கங்காம்மா வந்து பேசிக்கிறேன்… அதற்கு முன்பு தேவர்ஷியை கொஞ்சமாவது மலை இறக்கனும்’

 

எப்படி என யோசித்தவனுக்கு மகள் தான் கண் முன்னால் வந்தாள். இந்த ஒரு வாரமாக திருகுமரனின் போனில் மகளிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான். அங்கிள் இல்லை அப்பா என மாற்றவே மகளிடம் நிறைய போராடினான். புத்திசாலி குழந்தை… மற்ற குழந்தைகளின் தந்தையோடான உறவை பார்த்து ஏங்கி போயிருந்தது. நிறைய கேட்டது..அத்தனையும் சமாளித்தே பிள்ளை பாசத்தை வென்றான்.

 

தேவர்ஷியின் முகம் பார்க்காமல் அவள் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவன் திட்டம் வகுத்து மகளை கொண்டே செய்தான். மகளிடம்..

 

“ஷாஷி செல்லம் அப்பாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியாடா..” என்றான் பாவம் போல முகத்தை வைத்து..

 

“சொல்லுங்கப்பா.. நான் செய்யறேன்..” என்றது தந்தை தன்னிடம் உதவி கேட்கிறார் என்ற மகிழ்ச்சியில்..

 

“என் கூட அம்மா டூ விட்டுட்டா.. பேசமாட்டங்கறா.. அப்பா பாவம் தான.. நீ தினமும் நைட்ல அம்மா போன்ல இருந்து வீடியோ கால் பண்ணறயா.. அம்மா மடில உட்கார்ந்து தான் பேசனும்.. அப்ப தான் அம்மாவ சமாதானம் பண்ண முடியும்” என சொல்ல.. 

 

அன்றிலிருந்து அப்பாவின் பேச்சை தட்டாமல் சரியாக செய்து வருகிறது. ஜெர்மன்ல இருந்து கிளம்பி வருதற்கு முந்தைய நாள் வழக்கம் போல..மகளுடன் வீடியோ காலி்ல்..

 

“செல்லகுட்டி..  அப்பா ஊரில் இருந்து வரும் போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்..”

 

“ப்பா.. டாய்ஸ்.. சாக்லேட்.. டிரஸ்.. சைக்கிள் அப்புறம்..” என தாடையை தட்டி யோசித்தது..

 

“ம்ம் அப்பா.. எஃப் ப்ளாக் வீராட் ஒரு ரோபோ டாய் வச்சிருக்கான். அது அவங்க அப்பா டெல்லி போனப்ப வாங்கி வந்ததுனு சொல்லி எனக்கு தரமாட்டான் ப்பா.. எனக்கு அது மாதிரி வாங்கிட்டு வாங்க..அவன்கிட்ட எங்கப்பா வாங்கி தந்ததுனு காட்டனும்” என்றது..

 

மகளின் ஏக்கம் புரிந்து இருவருக்கும் கண்களில் கண்ணீர். 

 

‘அழுகறியா.. எல்லாம் உன்னால தான்..’ என கண்களை மகள் அறியாமல் துடைத்து கொண்டு அவனை முறைத்தாள்.

 

‘ஆத்தா.. உக்கிரமா பார்க்கறாளே.. அனிவர்த் ரூட்ட மாத்து..’

 

“ஷாஷி குட்டி.. லவ் யூ டா.. பட்டுகுட்டி லவ் யூ டா.. செல்லகுட்டி லவ் யூ டா..” என மகளைப் பார்த்து கொஞ்சி கொண்டிருந்தான்.

 

அதுவும் “லவ் யூ ப்பா.” என சொல்லி கொண்டிருந்தது.

 

கடைசியாக “குட்டிம்மா.. லவ் யூ டா..” என்றான்

 

ஷாஷிகா “ ம்மா.. அப்பா உனக்கு தான் சொல்றாங்க.. நீயும் சொல்லும்மா..” என ஒரே போடாக போட்டது.

 

“ஷாஷி.. பேசாம இரு..” என்றாள். அவளுக்கும் தெரியும் தனக்கு தான் என… வெட்கத்தில் முகம் சிவந்து விட.. அதை அவனிடம் காட்டமால் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“ம்மா..  அப்பா குட்டிம்மா சொன்னா.. உன்னை தான் மா.. நீயும் சொல்லுமா..” என்றது.

 

மகள் கண்டுபிடிக்கும் அளவிற்கா பேசி இருக்கேன்..என தலையை கோதிக் கொண்டு அசடு வழிந்தான்.

 

“ஷாஷி பேசாம இருக்கல.. அடி போட்டுருவேன்..” என கையை ஓங்கி கொண்டு செல்ல…

 

“ஏய்.. பிள்ளையை அடிக்காதடி..” என சத்தமிட்டான்.

 

“எல்லாம் உங்களால் தான்.. அவளையும் கெடுத்து வைச்சிருக்கிங்க.. இனி அவ முன்னால இப்படி எல்லாம் பேசாதிங்க..”

 

“நீ என்கிட்ட தனியா பேசமாட்டேங்கற.. நான் என்ன பண்ண..” என அவளையே குறை கூறினான்.

 

அவனை முறைத்து கொண்டு.. முணுமுணு என சத்தமில்லாமல் அவனை திட்டி விட்டு போனை அணைத்துவிட்டாள்.

 

“ரொம்ப கோபமாக இருக்கா போல.. இவளை எல்லாம் சமாதானம் பண்ண முடியாது.. ஆக்‌ஷன்ல இறங்கிட வேண்டியது தான். இருடி வரேன்”என சொல்லி கொண்டான்.

 

மகள் கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு பிடித்ததை எல்லாம் மகளுக்காவும் மனைவிக்காவும் வாங்கி கொண்டான். இது தான் முதல் முறை இப்படி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கி செல்வது.. இது கூட பிடித்திருந்தது..

 

அனிவர்த் இந்தியா வந்துகொண்டிருக்கிறான்.. கங்கா.. தேவர்ஷி இருவரையும் எப்படி சரி பண்ணுவானோ…

 

அனிவர்த் அந்தி சாயும் நேரம் வந்திறங்கினான். திருகுமரன் தம்பதியர் ஷாஷிகாவோடு விமானநிலையம் வந்திருந்தனர். சிதம்பரம் மட்டுமே வந்திருந்தார். தேவர்ஷியும்  வரவில்லை. கங்காவும் வரவில்லை. திருகுமரன் மகளை அழைத்தார் தான். தேவர்ஷிக்கு நான் ஏன் போகவேண்டும்.. அவனே வரட்டும் என்ற வீம்பு. இப்பயாவது வருவானா பார்க்கலாம்… அது மட்டுமில்லாமல் கங்காவும் அழைத்து நானும் போகமாட்டேன் நீயும் போககூடாது என கட்டளையாக சொல்லிவிட.. இப்போதைக்கு தனக்கு இருக்கும் ஒரே ஆதரவையும் வாகாக பற்றிக் கொண்டாள். மாமியார் மருமகளும் கூட்டணி அமைத்து இருவரும் விமானநிலையம் போகவில்லை.

 

அனிவர்த் இதை எதிர்பார்த்தான் தான். இவனை பார்த்ததும் ஷாஷிகா ஓடி வந்து “அப்பா..” என காலை கட்டிக் கொண்டது. மகளை சந்தோஷமாக அள்ளி தூக்கி தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் கன்னத்தில் முத்தம் வைத்து கிளுக்கி கொண்டு சிரித்தது. மகளின் சிரிப்பை  கண்டு மனம் பூரித்து போனான். மகளாக உணர்ந்த பிறகு கொடுக்கும் முதல் முத்தம்… ஒரு அப்பாவாக முழுதாக உணர்ந்த தருணம்.. அதை சில நிமிடங்கள் ஆழ்ந்து அனுபவித்தான்.

 

மகளின் காதில் “அம்மா எங்க..” என்றான் கிசுகிசுப்பாக..

 

அந்த சின்ன சிட்டும் அப்பாவின் காதருகே போய் ரகசியமாக..”அம்மா வரல.. தாத்தா கூப்பிட்டாங்க.. வரலைனு சொல்லிட்டாங்க…” என்றது. பார்க்கவே அழகோவியமாக இருந்தது. அப்பா மகள் பாசம் கண்டு மற்றவர்கள் நெகிழ்ந்து போயினர். சிதம்பரம் தன் போனில்இதை எல்லாம்  நிழல்படமாக பதிவு செய்து கொண்டார் கங்காவிடம் காண்பிப்பதற்காக..

 

அனிவர்த் தனது காரை எடுத்துக் கொண்டு அசோக்கை வர சொல்லியிருந்தான். இதை எல்லாம் பார்த்த அசோக் ‘என்னது அப்பாவா.. இவருக்கு இன்னும் கல்யாணமே  ஆகலைனு சொன்னாங்க… அப்புறம் எப்படி பொண்ணு..’ என நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்துவிட்டான்.

 

எல்லோரிடமும் ஓரிரு வார்த்தை பேசினவன்.. அசோக்கிடம் வந்து கார் சாவி கேட்க.. அவனோ பேந்த பேந்த முழித்தான். அவன் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சாவியை எடுத்துக் கொண்டு அனிவர்த கிளம்ப..

 

ஷாஷிகா அனிவர்ததிடம் “அப்பா.. அந்த அங்கிள் ஏன் அப்படி முழிக்கிறாரு..” என்றது.

 

“அவன் அப்படி தான்.. அப்பப்ப லூசு மாதிரி பிகேவ் பண்ணுவான்.. அவன் கிடக்கறான்… நீ வாடா செல்லகுட்டி..” என மகளை அழைத்துக் கொண்டு கார் இருக்குமிடம் சென்றான்.

 

“என்னது நான்  லூசாகிடறனா.. என்னை பைத்தியமாக்கறதே நீங்க தான்டா.. நல்ல குடும்பத்துல வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்.. இவங்க கொடுக்கற சம்பளம் வெளிய கிடைக்காதேனு பார்க்கறேன்.. இல்லனா நீங்களாச்சு.. உங்க வேலையாச்சுனு தூக்கி எறிஞ்சிட்டு  ராஜ நடை போட்டு போயிட்டே இருப்பேன்..” என புலம்பி முடித்து பார்க்க.. ஒருவரும் இல்லை. அவனை அம்போனு விட்டுட்டு போயிட்டர்கள்.

 

அனிவர்த் மகளோடு திருகுமரன் வீட்டிற்கு தான் சென்றான். திருகுமரன் தம்பதியர் வருவதற்குள் அனிவர்த் சென்றுவிட்டான் அவனுக்கு தேவர்ஷியிடம் பேச வேண்டும். காலிங்பெல் அடித்தான். தேவர்ஷி வந்து கதவை திறந்தவள் அனிவர்த்தை கண்டு கொள்ளாமல் தனது அறைக்குள் சென்று கதவடைக்க போக..

 

அவள் கதவை தாழிடும் முன் மகளை இறக்கி விட்டு.. வாயு வேகத்தில் உள்ளே நுழைந்து கதவை அவனே தாழிட்டான்.

 

அவனை பார்க்காமல் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்று கொண்டாள். அவளின் பின்புறம் பார்த்தவனுக்கு ஏக்க பெருமூச்சு.. ‘இந்த ஆறு வருடத்தில் கொஞ்சம் அபரிதமான வளர்ச்சி தான்..’

 

அவன் அழுத்தமான நடையோடு அவளை நெருங்க.. அவனின் காலடியோசை சத்தத்தில் அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்து கோபத்தில் வேகமாக திரும்பினாள்.

 

அவனும் நெருங்கியிருக்க.. திரும்பிய வேகத்தில் அவளின் மெத்தனங்கள் அவனின் மார்பில் மோத.. அவனுள் மொத்தமும் கனமாகி போனது. ஆறு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.. தீண்டாமல் தீண்டி அவனுள் உணர்வை கடத்த..  அவள் வேண்டும் என்ற உணர்வுகளின் உந்துதலில் இறுக அணைத்தான்.

 

அவளோ அவனுள் அடங்காமல் திமற.. அவனோ அவளை அடக்கி ஆண்டுவிடும் வேட்கையில்..

 

“ம்ப்ச்.. என்னடி உன் பிரச்சினை..” என்றான் சலிப்பாக..

 

“இதோ.. இது தான் பிரச்சினை..” என அவளை வளைத்திருக்கும் அவன் கைகளை காண்பித்தாள்.

 

“எப்ப பாரு உங்கள பத்தி மட்டும் தான் நினைப்பிங்களா.. என்ன பத்தி யோசிக்கவே மாட்டிங்களா… இன்னும் நம்ம உறவு நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கனுமா.. எனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மாட்டிங்களா.. இப்பவும் வானு கூப்பிட்டா வந்து படுக்கனுமா.. படுக்கைக்கு மட்டும் தான் என் உறவா.. “ என பேச..

 

பட்டென் கைகளை விலக்கிக் கொண்டான். அவன் கைகளை விலக்கிய வேகமும் அவளின் மனதிற்கு ஒப்பவில்லை. இருந்த போதும் அவனிடம் தெளிவாக பேசி முடிவு எடுத்த பின் தான் தீண்டலும் சீண்டலும்.. ஊடலும் கூடலும்… ஒரு தடவை பட்டது போதும்.. அவனிடம் தனக்கான உறவின் உரிமையை நிலைப் படுத்தாமல் எதுவும்.. எதுவும் இல்லை என்பதில் தீர்க்கமாக இருந்தாள்.

 

அனிவர்த பேசாமல்  கைகளை கட்டிக் கொண்டு அவள் பேசட்டும் என அமைதியாக பார்த்தான். ஆனால் உள்ளுக்குள் கோபம் குமிழிட்டு கொண்டிருந்தது. அவள் பேசிய பேச்சிற்கு அவளை அடித்து விட துடித்த கைகளை இறுக கட்டிக் கொண்டான்.

 

‘பேச்சை பாரு.. பேசுடி இன்னும் எவ்வளவு தூரம் பேசறினு பார்க்கறேன்’ என அவளையே பார்த்திருந்தான்.

 

அவன் பேசாமல் தன்னையே பார்த்திருக்கவும் தேவர்ஷிக்கு  ஆத்திரம் அதிகமாகியது.

 

“நான் பேசிகிட்டு இருக்கேன்.. இப்பவும் எனக்கென்னனு அமைதியா இருப்பிங்களா.. இப்ப கூட கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்க தோனலைல…” 

 

‘அப்படி வாடி வழிக்கு..’ என நினைத்தவன் “நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல.. அப்புறம் எதுக்கு நான் கேட்கனும்..”

 

இவன் என்ன சொல்லுகிறான் என விழித்தாள். ‘கல்யாணம் எப்ப எங்க ஆச்சு.. நான் தானே இவருக்கு தெரியாம்  தாலி செயின் போட வைச்சேன். இவர் என்ன இப்படி சொல்றாரு..’

 

அவள் விழிப்பதை பார்த்து கோபம் குறைந்து சிரிப்பு வர அதை கன்ன கதுப்புக்குள் அடக்கி வைத்தான்.

 

“எப்ப கல்யாணம் ஆச்சு.. ஊரை கூட்டி மண்டபம் பாரத்து.. பெத்தவங்க.. பெரியவங்க.. ஆசிர்வாதத்தோடு.. அய்யர் மந்திரம் சொல்லி தாலி எடுத்து கொடுக்க.. நீங்க கட்டினிங்களா..” என்றாள் கோபமாக…

 

“நீ சொன்ன இது எல்லாம் நடக்கலை தான்.. இன்ஃபேக்ட்.. எனக்கு தெரிஞ்சு நான் உனக்கு தாலியே கட்டல தான்.. ஆனா நீ தான் நான் தாலி கட்டினதா சொல்லி எல்லோரையும் ஏமாத்தியிருக்க… என்னையும் ஏமாத்திட்டு இருக்க..” என குற்றம் சாட்டினான்.

 

அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.. எல்லாம் இவர் பண்ணிட்டு என்னை குத்தம் சொல்வதா.. அவனை எதை கொண்டு அடிக்கலாம் என சுற்றியும் தேடினாள். அவள் கண்களுக்கு ஷாஷிகா விளையாடும் பிளாஸ்டிக் பேட் கண்ணில் பட.. அதை எடுத்து வந்து அவன் முதுகில் நாலு சாத்து சாத்தினாள். சிரித்துக் கொண்டு அடிகளை வாங்கினான். அவன் சிரிக்க.. சிரிக்க.. அவளுக்கு ஆத்திரம் அதிகமானது. ஒரு கட்டத்தில் பேட்டை தூக்கி எறிந்து விட்டு மடிந்து அமர்ந்து முகத்தை மூடி கொண்டு அழுதாள்.

 

அவனை பார்க்காத போது எல்லாம் அவன் உனக்கு வேண்டாம் என உருப் போட்டு.. உருப் போட்டே காதல் மனதை கட்டுக்குள் வைத்திருக்க…அவனை பார்த்த நொடி உருவேற்றி வைத்தது எல்லாம் உருத் தெரியாமல் போக… கட்டுக்குள் அடங்கா காதல் உடைப்பெடுத்து  மனதை பலஹீனப்படுத்த.. ஆற்ற  முடியாத அழுகை…

 

கீழே அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை கண்டு அவனுள்ளும் வேதனை.. அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கைகளை விலக்க.. அவனின் கையை தட்டிவிட்டாள்.

 

“குட்டிம்மா.. இங்க பாருடா.. ம்ப்ச்.. பாரு சொல்றேன்ல..”

 

மெல்ல இடது கையால் தாடையை உயர்த்தி வலது கையால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான். சுவற்றில் சாய்நது அமர்ந்தவன் அவளை இழுத்து மாரோடு அணைத்துக்   கொண்டான். அப்பவும் அவள் அவனின் அணைப்பில் இருந்து திமிறிக் கொண்டு விலகப் பார்க்க…

 

 “ப்ச்ச்.. வர்ஷி.. வர்ஷிம்மா.. சாரிடி.. எல்லாத்துக்கும் சாரிடி…” என அடி மனதில் இருந்து உணர்ந்து சொன்னான்.

 

அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள். அவளின் கதறல் அவனின் மனதை பிசைய.. அவளிடம் இன்னும் அணைப்பை இறுக்கினான். இது வரை அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் கண்ணீராய் ஊற்றெடு்க்க.. ஒரே அழுகை தான். அழுது அழுதே அழுத்தங்களை கரைத்தாள்.

 

அனிவர்த்க்கே அவளை எப்படி சமாதானம் செய்வதே என தெரியவில்லை.. என்ன இப்படி அழுகிறா..என நினைத்து வருத்தப்பட்டான்.

 

தேவர்ஷிக்கு அனிவர்த் மேல் கோபம் ஆத்திரம் எல்லாம் இருக்கு தான். ஆனால் அதை எல்லாம் விட அவள் மனதில் அவன் மேலான காதல் தான் அதிகமாக இருக்க.. அவளால் அவன் மீது கோப படவோ.. அவனை வெறுத்து ஒதுக்கவோ  முடியவில்லை… அவனை பார்த்தும் கோபத்தை மீறி இயலாமையில் அழுகை தான் வந்தது..

 

அப்படி தானே பெண்களே.. புருஷன் என்ன தவறு செய்தாலும்.. அவன் மீதான சிறுதுளி  அன்பு மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒட்டி கிடந்தாலும்.. அத்துளி அன்பு எத்தவறையும் மன்னிக்கும் மாட்சிமை பெற்றுவிடும்.

 

6 thoughts on “30 -ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top