31 – ஆடி அசைந்து வரும் தென்றல்
உன் மனதிலும் எனக்கான காதல் உண்டு… அதை நீ உணர்ந்து என்னிடம் வந்து சேரும் வரை என் காதலும் காத்து கிடக்கும்.. என்ற மனநிலையில் தான் எப்போதும் அவள்…
கோபமாக இருப்பாள்.. எப்படியாவது பேசி சரி கட்டி விடலாம் என நினைத்து வந்தவனுக்கு அவளின் அழுகையை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் வலிக்கவே.. கொஞ்சி கெஞ்சி சமாதானம் பண்ண ஆரம்பித்தான். அப்பவும் உதடு பிதுக்கி தேம்பிக் கொண்டு அழுதாள்.
பிதுங்கிய உதடுகளை பார்த்ததும் அவனுள் காதல் ரசவாதம்… இழுத்து வைத்து தன் வாய்க்குள் அதக்கி கடித்து வலிக்க சப்பினான். மெல்ல விசும்பல் குறைந்து சின்ன காதல் ஒசும்பல் அவளிடம்… அவளின் அணைப்பு இறுகி.. மனம் இளக.. இப்பவும் தன்னிடம் கிறங்கி போகும் தன் கந்தர்வ காதலியை கண்டு கர்வம் தான்..
தேவர்ஷியின் உடலும் மனதும் அனிவர்த்தின் காதலில் சற்று இளைப்பாற.. மனம் தெளிவுற…சட்டென அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
“என்னடி..” என்றான் மனத்தாங்கலோடு..
“அத்தையை கேட்கனும்..” என்றாலே பார்க்கலாம்…
“என்னாது.. அத்தையை கேட்கனுமா…” என்றான் அதிர்ந்து..
“ஆமாம்.. ஊருக்கு வந்ததும் நேரா உன்னை தேடி தான் வருவான்.. பேசி மயக்கி அவன் பாட்டுக்கு உன்னை தாளம் போட வைப்பான்… நம்பிடாத.. இத்தனை வருஷம் உன்னை கஷ்டப்பட விட்டான்ல.. கொஞ்ச நாளைக்கு அவனை தாராட்டுல விடுவோம்.. என்னை கேட்காம அவன்கிட்ட பேசக்கூடாது.. கிட்ட கூட சேர்க்ககூடாதுனு சொல்லிருக்காங்க..” என சொல்லி அவனை விட்டு இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தாள்.
அனிவர்த் கடுப்பாகி போனான். என்ன ஒரு கொழுப்பு…மாமியாருக்கும் மருமகளுக்கும்… கங்காம்மா… ஒன்னும் தெரியாத என் பொண்டாட்டிக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி கொடுத்து கெடுத்து வச்சிருக்கறியே…
“உனக்கு ஏத்தம் அதிகமாகி போச்சுடி.. இந்நேரம் வரைக்கும் கட்டி பிடிச்சு அழுகும் போது உங்க அத்தை சொன்னது நினைப்பு வரல.. பொண்டாட்டி அழுகறாளே.. ஏதோ நமக்கு தெரிஞ்ச மாதிரி நம்ம ஸ்டைல்ல சமாதானப்படுத்தலாம்னு பார்ததா.. இப்ப தான் உங்க அத்தை சொன்னது மண்டைல மின்னுச்சாக்கும்..” என திட்டினான்.
முகத்தை துக்கி வைத்து கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டாள். அவள்கிட்ட நெருங்கி அவளை வலுகட்டயமாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“ம்ம் சொல்லு.. எனக்கு தெரியாம நானே கட்டின தாலியை பத்தி..”
தேவர்ஷி கழுத்து வரை மூடியிருந்த பிளவுஸிற்குள் இருந்த செயினை எடுத்துக் காட்டினாள்.
“ஹேய்.. இது பொன்முடில நான் உனக்கு போட்ட செயின் தான..”
ஆமாம் என தலை அசைத்தாள். செயினை கையில் எடுத்துப் பார்த்தவன்..
“இதையா.. தாலிங்கற..” என்றான் சந்தேகமாக..
அவனையே பார்த்தவாறு…”இது மங்கள்சூத்ரா..”
அவளை புரியாமல் பார்த்தான்.
“இது கேரள தாலி..”
ஒரு நிமிடம் அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.ஆச்சரியம்.. ஆசுவாசம்..ஒரு நிம்மதி.. என.. எல்லாம் கலந்த ஒருகலவையான உணர்வு.. மெல்ல மெல்ல இதை எல்லாம் அழுத்திக் கொண்டு வந்தது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கா தக்கையாக..
எப்பவும் அனிவர்த் பொறுப்பானவன். தன் பொறுப்புகளையோ கடமைகளையோ தட்டி கழிப்பவன் அல்ல.. அவனின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் எப்படி இருந்த போதும் மகனாக தன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதில்லை. ஒரு தகப்பனாக தன் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்யவிடாமல் தன் மகளை எத்தனை இடங்களில் தவிக்க விட்டோமோ.. அது எல்லாம் இவளால் தானே.. கர்ப்பம் என சொல்லியிருந்தால் விட்டு இருக்கமாட்டேனே.. எல்லாம் மறைத்து ஆறு வருடங்கள் கண்ணில் படாமல் இருந்து கொண்டு என்னை குற்றம் சொல்லுகிறாள்… என நினைக்க நினைக்க கோபம் மிகுந்தது.
“ஏன்டி.. என்னை ஏமாத்தி தாலிய கட்டிட்டு.. எனக்கு தெரியாம புள்ளையும் பெத்துட்டு.. ஆறு வருசமா அதையும் மறைச்சிட்டு நான் உன்னை ஏமாத்திட்ட மாதிரி பில்டப்பு பண்ணி வச்சிருக்க.. உன்னை வர கோபத்துக்கு..” என அடிக்க கையை ஓங்க.. பயந்து சுவற்றோடு ஒட்டிக் கொண்டாள்.
அவள் பயத்தில் ஓங்கிய கையை சுவற்றில் இறக்கினான்.
“ஏன்டி.. இப்படி பண்ண.. சொல்லு.. என் பிள்ளைய அப்பன் பேரு தெரியாத பிள்ளைனு எத்தன இடத்துல அசிங்கபட விட்ட.. என் பொண்ணு அப்பாங்கற உறவுக்காக ஏங்க வைச்சுட்டில்ல.. என்கிட்ட ஒருதடவை பேசியிருக்கலாம்ல… எதையும் என்கிட்ட சொல்லாம எதுக்குடி மறைச்ச சொல்லு.. என்கிட்ட சொல்லாம நீயா எப்படி முடிவு பண்ணலாம்… எனக்கு கல்யாணம் பிடிக்கலைனு சொன்னேன் தான்.. அதுக்காக குழந்தை இருக்குனு தெரிஞ்சா.. வேண்டாம்னு கை கழுவ நான் என்ன அவ்வளவு தரங்கெட்டவனா… அவ்வளவு தூரம் பழகி என்னை பத்தி நீ தெரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா.. ஏன் இப்படி பண்ண சொல்லு..” மகளை பற்றி பேசும் போது இயலாமையில் தவிப்பாக பேசியவன்.. கடைசியாக அவள் மீது கொண்ட கோபத்தில் உறுமினான்.
அவனின் கோபம் கண்டு அரண்டு போனாள். பயத்தில் அவனிடம் எல்லாம் ஒப்புவித்தாள். அவனோடு சண்டை போட்டு வந்த பிறகு அவனை பற்றி தான் நினைத்தது.. அதன் பிறகு வீட்டில் நடந்த எல்லாவற்றையும் வேகமாக சொல்லி முடித்தாள்.
“இது வரைக்கும் நீ நினைச்சது.. பண்ணியது எல்லாம் போதும்… இனி நான் சொல்லறது மட்டும் தான் கேட்கற.. செய்யற…” என விரல் நீட்டி மிரட்டினான். தன் போல் அவள் தலை சம்மதம் சொன்னது..
அறையை விட்டு வெளியே வந்தவன் திருகுமரனிடம் “அப்பா அம்மாவை கூட்டிட்டு கொஞ்ச நேரத்தில் வரேன்.. உங்க வீட்ல போய் பேசலாம் மாமா..” என சொன்னவன் மகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
மகளோடு வீட்டிற்கு வந்த அனிவர்த்தை கண்டு கங்காஆசையாக மகனையும் மகன் கைகளில் தாங்கி நின்ற பேத்தியையும் கண்கள் கலங்கி முகம் விசிக்க வாத்சல்யமாக பார்த்து நின்றார். வீட்டின் உள்ளே கால் எடுத்து வைக்கப் போனவனை…
“அங்கயே நில்லுடா..” என்றார்.
புரியாமல் தாயை பார்க்க.. வேகமாக வாசலுக்கு வந்தவர்…
“எங்கடா.. என் மருமக.. உன் புள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்திருக்க..” என்றார் கோபமாக…
“உன் பாட்டிக்கு கோபத்தை பாருடா.. உன் அம்மாவ விட்டுட்டு வந்துட்டமாம்..” தாயின் கோபத்தில் சற்று மிரண்டு பயந்து போயிருந்த மகளை சமாதானம் செய்யும் பொருட்டு.. முதுகை நீவி கொடுத்தவாறே பேசினான்.
பேத்தியின் முகத்தை பார்த்து அமைதியான கங்கா.. அனிவர்த்தை முறைப்பதை மட்டும் விடவில்லை.
“கங்காம்மா என் பொண்டாட்டிக்கு நல்லா தூபம் போட்டு ஏத்தி விட்டு எங்களுக்குள்ள பத்த வச்சிட்டு இப்ப எங்கடா என் மருமகனு ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறிங்க..” என்றான் பதிலுக்கு முறைத்தவாறே..
“ஆமாம்டா.. நீ ரொம்ப நல்லவன்.. உன் பொண்டாட்டி கூட குளுகுளுனு குடும்பம் நடத்தின..நாங்க வில்லி வேல பார்த்து பிரிச்சு வச்சுட்டமோ..”
“குடும்பம் நடத்தாமயா புள்ளை இருக்கு..” என முணுமுணுத்தான்.
“இப்ப என்னடா சொன்ன..”
“கங்கா.. அவனை வாசல்லயே நிறுத்தி எல்லாம் பேசனுமா.. உள்ள வந்ததுக்கு அப்புறம் பேசகூடாதா..” என சிதம்பரம் லேசாக அதட்ட…
“வாசல்லயே வச்சு பேசனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலையா.. அவனை குடும்பமா நிக்க வச்சு ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கனும்னு பார்த்தா.. மருமகளோடு இல்லாம பேத்திய மட்டும் கூட்டிட்டு வந்திருக்கான்..” என ஆதங்கப்பட..
“இப்ப என்ன.. பேத்தியோடு எடு.. மருமக வரும் போது இன்னொருக்கா எடுத்துகிட்டா போகுது..” என சிதம்பரம் சொல்லவும்..
வள்ளி கொண்டு வந்து கொடுத்த ஆரத்தியை ஆலம் சுற்றி மகனை பேத்தியோடு அழைத்துக் கொண்டார்.
உள்ளே வந்தவன் ஷோபாவில் மகளை மடியில் வைத்து கொண்டு அமர்ந்தவன் அவனை கோபமாக பார்த்துக் கொண்ட வந்த கங்காவிடம்…
“போங்க… போய் உங்க பேத்திக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க..” என விரட்டினான்.
அவனின் ஏவலுக்கு எல்லாம் செவி சாய்த்தால் அவர் கங்கா இல்லையே..
அனிவர்த் அருகில் அமர்ந்தவர் மெல்ல ஷாஷிகாவிடம் பேச்சு கொடுத்தார்.
“ஷாஷிகா.. செல்லம்.. உனக்கு என்ன வேணும்.. பூஸ்ட்.. ஹார்லிக்ஸ.. என்ன வேணும்.. அம்மா என்ன கொடுப்பாங்க..”
“எனக்கு ஐஸ்கீரிம் தான் வேணும்..”
இப்ப என்ன பண்ணுவிங்க என கங்காவை பார்த்தான் அனிவர்த்.
அதை எல்லாம் அவர் எங்கு கவனித்தார் பேத்தியோடு ஒன்றி போயிருந்தார்.
“தாத்தாவை வாங்கிட்டு வர சொல்றேன். ஆனால் ஐஸ்கீரிம் சாப்பிட்டால் உனக்கு கோல்ட் வராதா.. அம்மாவை கேட்கனும்.. அம்மா வரல..” என மெல்ல போட்டு வாங்கினார்.
அனிவர்த் கங்காவை முறைத்து கொண்டே.. “ம்மா..” என மறுப்பாக ஏதோ சொல்ல வருவதற்குள்..
ஷாஷிகா.. ”ப்பா.. அம்மா கூட சண்டை போட்டாங்க.. அம்மா ஒரே அழுவாச்சி.. அம்மா அதான் வரல..” என உதட்டை பிதுக்கி கைகளை விரித்து பேசிய தோரணையில் லயித்து போயினர்.
“என்னடா.. பண்ணின என் மருமகள..” என பாய்ந்தார்.
“நீங்க என்ன சொல்லி கொடுத்திங்க என் பொண்டாட்டிக்கு..”
“ஆமாம்டா.. சொல்லி தான் கொடுத்தேன்.. நீ பண்ணறது எல்லாம் பண்ணிட்டு என் மருமகள கூட்டிட்டு வானு சொன்னா நான் போய் கூட்டிட்டு வரனுமா..”
இவர்கள் சண்டையில் ஷாஷிகா பயந்து அழுகைக்கு தயாராக.. சிதம்பரம் சட்டென பேத்தியை அள்ளிக் கொண்டு..
“செல்லகுட்டி.. நாம ஐஸ்கீரிம் வாங்க போகலாமா..” என கேட்க..
அப்போது தான் ஷாஷிகாவை கவனித்தனர் இருவரும்.. இருவரையும் கண்டிக்கும் பார்வை பார்த்த சிதம்பரம்..
“நான் பாப்பாவை கூட்டிகிட்டு கடைக்கு போறேன். நாங்க வரதுக்குள்ள பேசி முடிச்சிருங்க..” என சொல்லி விட்டு கிளம்பிவிட..
மீண்டும் இருவரும் மோதிக் கொண்டனர். வாக்குவாதங்கள் முற்று பெறாமல் போக…. கங்கவால் மகனின் செயலை மன்னிக்கவே முடியவில்லை. கடைசியில் அனிவரத் தான் கங்காவிடம் தழைந்து போனான்.
“நான் பண்ணினது எல்லாம் தப்பு தான்.. இப்ப என்ன உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனுமா..” என்றவன் சட்டென ஷோபாவை விட்டு இறங்கி தாயின் காலடியில் அமர்ந்து காலை கட்டிக் கொள்ள..
மகனின் செயலில் கங்காவிற்கு தாளவில்லை. மகனின் சிகையை கோதிவிட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்.
அன்னையின் அழுகையில் அனிவர்த் முகமும் கசங்கியது. சடுதியில் தன்னை மீட்டுக் கொண்டவன் எழுந்து மண்டியிட்டவன் கங்காவின் கண்களை துடைத்து விட்டான்.
“மன்னிச்சிடுங்கமா… நான் தேவையில்லாத பழக்கவழங்களால உங்களை ரொம்ப கஷ்டபடுத்திடேன்ல… எனக்கு அது பெரிய தப்பா தெரியல.. ஆனால் எனக்கு வர்ஷி மேல காதல் வந்த பிறகு தான் நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்திட்டு இருந்திருக்கேன்.. என புரிஞ்சுது.. அவ என்கிட்ட காதல் சொன்ன போது நான் அவளை தூக்கி எறிஞ்சு மடத்தனமா என் வாழ்க்கையை நானே சிக்கல் பண்ணிகிட்டேன்.. இப்போ என் பொண்ணை பார்க்கும் போது வாழ்க்கைல எவ்வளவு சந்தோஷங்களை தொலைச்சிட்டேனு இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு.. எனக்கு என் மனைவியும் மகளும் வேணும்மா…” என கேட்ட அனிவர்த்.. பள்ளி படிக்கும் போது சைக்கிள் வேணும்மா என கேட்ட சிறு பையனாக தெரிந்தான் கங்காவிற்கு…
மகனின் வாயில் இருந்து இந்த வார்த்தை வருவதற்கு தானே இவ்வளவு போராடினார். இருந்த போதிலும் அவருக்கு இன்னும் தெளிவு பெற வேண்டி இருந்தது. அனிவர்த்தை பார்த்து..
“உன்னை நம்பலாமா.. பொண்டாட்டி புள்ளைனு குடும்பமாகிட்டா உன்னோட இந்த பழைய வீணான போன கொள்கைய பிடிச்சிட்டு தொங்ககூடாது.. உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா.. உன் புள்ளைக்கு ஒரு நல்ல தகப்பனா.. இருப்பியா.. எல்லா புள்ளைகளுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோ.. உன் பொண்ணுக்கு நீ ஒரு ரோல்மாடலா இருக்கனும் இருப்பியா.. “ என மகன் முன் கையை நீட்டினார்.
அன்னை நீட்டிய கையில் தன் கையை வைத்து அழுத்தியவன்…
“சத்தியமா இருப்பேன் மா.. வர்ஷி தான் என் வாழ்க்கைனு உணர்ந்த போதே.. என்னோட எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுட்டேன்.. உங்களுக்கே தெரியும் தான.. இனி இதுல இருந்து மாறமாட்டேன்..”
இப்போது தான் கங்காவின் மனதில் எல்லையில்லாத நிம்மதி..
“சரி.. நான் போய் நைட் டின்னருக்கு என்னனு வள்ளிகிட்ட சொல்லிட்டு வரேன்..” வேண்டும் என்றே அவனிடம் வம்பு பண்ணும் நோக்கில் சொல்லி விட்டு செல்ல..
“ம்மா.. நாம வர்ஷி வீட்டுக்கு போகனும்..” என பின்னாலயே வந்தான்.
“வள்ளி நீ என்ன பண்ற நைட்டுக்கு சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் பண்ணிடு.. அப்படியே பாப்பாவுக்கு இட்லியும் காரமில்லாம தக்காளி குழம்பும் வச்சிடு..”
வள்ளியோ தாயும் மகனையும் பார்தது சிரித்து கொண்டிருந்தார்.
“வள்ளிக்கா.. எதுவும் செய்ய வேண்டாம் நீங்க கிளம்புங்க…” என்க அதற்கும் அவர் சிரித்து கொண்டே நின்றார்.
“தம்பி.. அம்மா சும்மா உங்ககிட்ட விளையாடறாங்க..”
“ம்மா.. உங்களை..” என்றான் சலுகையாக..
“போடா.. நீ வரங்காட்டிமே சம்மந்தி போன் பண்ணி சொல்லிட்டார். நைட் அங்க தான் சாப்பிடனும்னு..”
“சீக்கிரம் கிளம்புங்கம்மா.. வர்ஷி தாத்தாவை வேற சரி கட்டனும்.. இன்னும் யாரை எல்லாம் சமாளிக்கனுமோ..” என புலம்ப…
“மகனே உன் திருவிளையாடல் மகிமை அப்படி..” என நக்கலடிக்க..
தாயிடம் “எல்லாம் என் நேரம்..” சடைஞ்சு கொள்ள… அந்த நேரம் சிதம்பரமும் ஷாஷிகாவும் கை நிறைய பொருட்களோடு வந்தனர். ஒரு வழியாக அனிவர்த் தன் பெற்றவர்களையும்.. தான் பெற்றவளையும் அழைத்துக் கொண்டு தேவர்ஷி வீடு வந்து சேர்நதான்.
அனிவர்த் குடும்பம் வரும் முன்பே திருகுமரன் தனது தந்தையும் தனது உடன்பிறந்தவர்களையும் வரவழைத்திருந்தார்.
சற்று சங்கடமான சூழ்நிலை தான்.. அறிமுகம் ஆவதற்க்கே சற்று தயக்கமான நிலை..
அனிவர்த் மகளை தோளில் சுமந்து கொண்டு வந்ததை பார்த்தவர்களுக்கு பார்த்ததும் ஒரு மனதிருப்தி..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤️❤️❤️🥰🥰🥰
Super super😍😍
Thankfully 😍😍😍
Ivan ippavum Ella thappaiyum varshi mela podurraann
Ivanai ellama vachu sechai seyyanum
sqvnyDpUw
vqEbJSIygZUGu