32 – ஆடி அசைந்து வரும் தென்றல்
கௌசல்யா வந்தவர்களை வரவேற்று உபசரிப்பு எல்லாம் முடியவும்..
அனிவர்த மடியில் வைத்திருந்த மகளை எடுத்துக் கொண்டு.. ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த தேவர்ஷியிடம் சென்று அவளை கைபிடித்து அழைத்து வந்தவன் குடும்பமாக சுந்தரமூர்த்தி காலில் விழுந்து வணங்கினான்.
“தாத்தா.. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க..” என காலில் விழுக.. சுந்தரமூர்த்தி மொத்தமாக அவனின் வலையில் விழுந்துட்டார்.
எல்லோருக்கும் அவனின் சாமர்த்தியத்தில் மெச்சுதலான புன்னகை..
கங்காவோ ‘அடப்பாவி ஒரே பால்ல மொத்த விக்கட்டையும் அவுட் பண்ணிட்டானே..’ என பார்த்திருந்தார்.
கங்கா தான் பேச்சை ஆரம்பித்தார்.
“ஏதோ வயசு கோளாறுல எல்லாம் தப்பும் தவறுமா பண்ணிட்டாங்க.. அப்பவே நம்மகிட்ட சொல்லியிருந்தா.. சரி பண்ணியிருக்கலாம்.. சரி விடுங்க நடந்ததை பத்தி பேசி சங்கடப்படுத்திக் கொள்ள வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம்..” என கேட்டார்.
பெரியவர்கள் எல்லாம் கலந்து பேசி குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ள கோவிலில் வைத்து கல்யாணம்.. தொழில் முறையில் ஒரு வரவேற்பு என முடிவு செய்ய…
தேவர்ஷியோ “ரிசப்ஷன் மட்டும் போதும்.. அதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுல்ல..” என மறுத்தாள். ஐந்து வயது மகளை வைத்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ள மனம் குறுகி போனது.
வந்ததில் இருந்து சரண் அனிவர்த்தை முறைத்து கொண்டிருந்தவன் தேவர்ஷியின் பேச்சில் இன்னும் கூடுதலாக முறைத்தான்.
‘இவ அண்ணங்காரன் ஏற்கனவே ரொம்ப பாசமா பார்க்குறான்.. இதுல இவ வேற இன்னும் உசுப்பேத்தற மாதிரியே பேசறாளே..’ என நினைத்தவன் கங்காவை பார்த்தான்.
கங்கா ஆபத்துபாந்தவனாக அனிவர்த்தை காப்பாற்றும் விதமாக..
“நாங்க எல்லாம் உங்க கல்யாணத்தை பார்க்கலைல தேவா.. எங்களுக்காக கல்யாணம் வச்சுக்கலாம்.. என்னம்மா சரினு சொல்லு..”
வேறு வழியில்லாமல் கங்காவின் பேச்சை தட்ட முடியாமலும் தன் குடும்பத்திற்காகவும் சம்மதம் சொன்னாள்.
தேவர்ஷியின் குடும்பத்தில் அனிவர்த்தை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவனது தொழில் சாதுரியமும் சாமர்த்தியமான பேச்சும் கண்டு தங்கள் மாப்பிள்ளை என பெருமை வேறு..
இது எல்லாம் சேர்ந்து தேவர்ஷியை தான் திட்டினர். மாப்பிள்ளைய சரியாக புரிந்து கொள்ளாமல் இத்தனை வருடம் வாழ்க்கையை வீண் பண்ணி வச்சிருக்க.. இனியாவது ஒழுங்காக அனுசரித்துப் போ..
நல்லவன் மாதிரி காரியத்தை சாதித்துக் கொண்டதோடு அல்லாமல் தனக்கும் பேச்சு வாங்கி வைத்துவிட்டானே என மீண்டும் கோபம் தலை தூக்கியது தேவர்ஷிக்கு..
அந்த வாரத்திலேயே ஒரு முகூர்த்தநாள் பார்த்து திருமணத்தை கங்கா தங்கள் குலதெய்வ கோவிலில் வைத்தார்.
அம்மன் சன்னதியில் அனிவர்த் தேவர்ஷி கழுத்தில் இரண்டாவது முறையாக.. தான் அறிந்து உள்ளம் நிறைவோடு… குடும்ப உறவுகள் சூழ.. முழு மனதாக அந்த அ்ம்மனை வேண்டி மங்களநாணை பூட்டினான்.
தாலி கட்டியதும் மகளை வாங்கி கொண்டவன் மகளோடே எல்லா சம்பிரதாயங்களும் முடித்து பெரியவர்களிடம் குடும்பமாக ஆசி பெற்றான்.
தேவர்ஷி யாரிடமும் சகஜமாக பேசவில்லை. ஏனோ மனம் சஞ்சலமாக இருந்தது. ஆனால் அவன் தாலி கட்டிய அந்த நொடி மனதில் ஒரு எல்லையில்லாத நிம்மதி தோன்றியது. என்னவோ இத்தனை வருடம் மனதின் ஒரு ஓரத்தில் முணுமுணுவென இருந்த வலி கரைந்து காணாமல் போனது.
அன்று மாலையே வரவேற்பு.. இரு பக்கமும் உறவுகள் தொழில்முறை நண்பர்கள் என அந்த பெரிய மண்டபம் நிறைந்து வழிந்தது.
அனிவர்த் தேவர்ஷி மகளோடு தான் மேடை ஏறினர். மூவரும் ஒரே மாதிரி கருநீல வண்ணத்தில் உடை அணிந்து இருந்தனர். பார்த்தவர்களுக்கு கண்ணையும் கருத்தையும் நிறைத்தது. கூட்டத்தை பார்த்து சற்று மிரண்டு போயிருந்தாள் தேவர்ஷி. என்னன்ன பேச்சுக்கள் வருமோ..
ஆனால் அனிவர்த்கு அந்த கவலை எல்லாம் இல்லை. அவன் தான் அழகாக ஒரு கதை பரப்பி இருந்தானே..
காதலித்தோம்.. பெற்றவர்களுக்கு பயந்து ரகசிய திருமணம் செயது கொண்டோம். இன்று பேத்திக்காக ஏற்றுக் கொண்டார்கள் என ஒரு காதல் கதையை கேட்டவர்கள் அச்சோ பாவம் என நினைக்க வைத்திருந்தான்.
தேவர்ஷியின் வாட்டத்தை கண்டவன்… தோளில் கை போட்டு லேசாக அணைத்தவன்..
“ஹேய் குட்டிம்மா.. நம்ம வாழ்க்கையின் அழகான மொமண்ட்ஸ்.. பின்னால நினைச்சு பார்ரக்க ஸ்வீட் மெமரிஸா இருக்க வேண்டியது இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க.. சந்தோஷமா இருடா…” என்றான் வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவன் பேச்சு..
அவனின் அரவணைப்பில் அனுசரணையில் மெலிதான நீர்படலம் அவளுள்.. அவன் மீது மனத்தாங்கலும் உண்டு. இவனுக்கு சாதகமாக நடத்திக் கொண்டானே..
“ப்ச்ச் பாரு போட்டோ எடுக்கறாங்க.. அழுமூஞ்சியா நிற்பியா..” என தானே டிஷ்யூ கொண்டு மேக்கப் கலையாமல் கண்ணீரை ஒற்றி எடுத்தான். அவனின் கரிசணை எல்லாம் அவளின் கருக்கலை கரைத்திட.. அதன் பிறகு அவளும் மகிழச்சியாகவே வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.
ஷாஷிகா தன் உறவில் இருந்த தன் நண்பர்களை அழைத்து வந்து “இது தான் எங்க அப்பா..” என காண்பிக்க.. மகளின் ஏக்கமும் சந்தோஷமும் மகளுக்காக யார் என்ன பேசினாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்க வைத்தது இருவரையும்…
நிகழ்ச்சி முடிந்து வீடு வர பின்னிரவு ஆகிவிட.. அந்த நேரத்திலும் கங்கா ஆலம் சுற்றியே மகன் குடும்பத்தை அழைத்துக் கொண்டார். அனிவர்த் கையில் இருந்த ஷாஷிகாவை தன்னோடு வைத்துக் கொண்டு மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்கலாம் என நினைத்து பேத்தியை வாங்க போக.. இளையதோ அரை தூக்கத்தில் தகப்பனின் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதது.
தாயின் எண்ணத்தை புரிந்த அனிவர்த் மகளை தட்டிக் கொடுத்தவாறே.. “பரவாயில்லை விடுங்கமா.. நாங்க பார்த்துக்கிறோம்..” என தன் அறைக்கு தேவர்ஷியோடு சென்றுவிட..
கங்கா எப்படியோ நல்லா இருந்தாங்கனா சரி என நினைத்து கொண்டார்.
ஷாஷிகா சிணுங்கிக் கொண்டே இருக்க.. தேவர்ஷி அணைத்துக் கொண்டு உறங்க வைக்க.. மகள் நன்றாக தூங்கும் வரை அவர்களை பார்த்தவாறே ஷோபாவில் அமர்ந்திருந்தவன்.. மகள் உறங்கியதும் மகளை அணைத்து படுத்திருந்த தேவர்ஷியை பின்னோடு அணைத்தான்.
தேவர்ஷியோ இதனை எதிர்பார்த்திருந்தவள் போல அவன் அணைக்கவும் அவனை பிடித்து தள்ளிவிட்டாள். தன் உள்ள கிடக்கை எல்லாம் கோபமாக அவனை எதிர்ப்பதில் காண்பிக்க.. சற்று நேரம் இருவருக்குள்ளும் தள்ளு முள்ளு போராட்டம் தான்.
அனிவர்த்திடம் இவளின் எதிர்ப்புகள் எல்லாம் எடுபடுமா… அவளை மயக்கும் வித்தை அறிந்தவனாயிற்றே.. மயங்க வைத்தான் மயங்கி போனான்…
ஒரு கட்டத்தில் அவளை இழுத்து அணைத்து அவள் கோவ்வை பழ இதழை வலுவாக கடித்து அவளின் வாய் அமிர்தத்தை இழுத்து உறிஞ்சு பருகினான். அவள் மூச்சுக்கு தவிக்கும் வேளையில் அவளின் இதழுக்கு விடுதலை கொடுத்தவன்..
தன் உதடு என்னும் தூரிகை கொண்டு தனது உமிழ்நீரின் குளிர்ச்சியை வர்ணங்களாக அவள் உடல் எங்கும் தீட்டினான். தீட்ட.. தீண்ட.. அவளின் மன வெக்கை தணிந்து.. உடல் வேட்கை அதிகரிக்க… அவளாகவே அவனை இழுத்து அணைத்தாள். மனைவியின் ஒப்புதலில் மனம் குத்தாட்டம் போட.. அவள் முகம் எங்கும் சின்ன முத்தங்கள் இட்டான்… கழுத்து நரம்புகளை நுனி நாக்கில் வருடி கொடுத்தவன்.. அவனின் நாவின் குறும்பில் தொண்டை குழி ஏறி இறங்க..
அவளோடு தன்னை இறுக்கி பிணைத்தவன் குட்டி குட்டி முத்தங்கள் கொடுத்து சாரலாக ஆரம்பித்து.. பின் வேகமெடுத்து மூச்சு வாங்க அவள் கழுத்தை வலிக்க கடித்து… இறுதியில் அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி பனிதூறலாக தன் காதல் மழையில் அவளை நனைத்தான்.
ஆறு வருடங்களாக அவளிடம் பெற்ற காதல் சுகத்தை எங்கெங்கோ தேடி திரிந்து கிடைக்காமல் மழை நீருக்காக ஏங்கும் சாதகபறவை போல தவித்து கிடந்தவன் மீண்டும் அவளிடம் பெற்ற பிறகே அவனின் காதல் மனம் தவிப்பு அடங்கி.. சாந்தி அடைந்தது…
அனிவ்ரத் தேவர்ஷியை அணைத்தவாறே வெகுநாள் கழித்து நிம்மதியாக உறங்கி போனான்.
உறங்குபவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் தேவர்ஷி.. ஆறு வருடங்கள் பாரக்க ஆசைப்பட்ட முகம்.. பார்க்ககூடாது என பிடிவாதமாக மனதை அடக்கி வைக்க காரணமான முகம்… காதலாக கசிந்துருகாத விழிகள்… தனிமையான நேரங்களில்.. சோர்வான பொழுதுளில்.. அணைத்து ஆறுதல் தராத கைகள்.. வலிக்க வலிக்க பிள்ளை பெறும் போது துணையாக நிற்காத கால்கள்… இப்படியான எண்ணங்கள் தான் உச்சி முதல் பாதம் அவனை அவனை பார்க்கும் போது அவளுக்கு தோன்றியது.
ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது. அவனுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் தேவை தன் உடலோடான உறவு மட்டுமே.. மனதோடு உறவாடமாட்டான். அவனுக்கும் என் மீது காதல் என்றான். அந்த காதல் இது தானா.. இத்தனை வருடங்கள் என்ன செய்தாய்..என கேட்டானா.. பிள்ளைக்காக வந்தான். நான் ஏமாற்றியதாக சொன்னான். திருமணம் முடித்தான். இப்போ தன் தேவையை முடித்துக் கொண்டான். நிம்மதியாக தூங்கிவிட்டான். என்று தான் என் பக்க நியாயத்தை யோசித்தான் இன்று யோசிக்க.. என நினைத்தாள் ஒரு கசந்த முறுவலோடு..
ஏன் காதல் இல்லாமலா.. சற்று முன்பு ஆயிரம் குட்டிம்மாவால் அர்ச்சித்தானா.. என மனம் கேள்வி எழுப்ப… அப்போதும் அப்படி தான் இருந்தார் அது காதலா..என வாதிட்டாள்.
அது காதல் தான் அதை அவன் உணராமல் இருந்திருக்கலாம்.. அவன் காதலை நீ உணரவில்லை என்று சொல்லுப் பார்க்கலாம்.. அவர் பழகிய பெண்களிடம் எல்லாம் அப்படி தான் இருந்திருப்பார் என மறுப்புரைத்தாள்.
அவன் பழகிய பெண்களும் நீயும் ஒன்னா.. உண்மையை சொல்லு உன்னை மற்ற பெண்களை போலவா நடத்தினான். என்னை என்ன நேசிக்கிறேனா சொன்னார்.. பிடித்தம் உள்ள வரை சேர்ந்திருப்போம் என்று தானே சொன்னார்.. என மல்லு கட்டினாள்.
அந்த பிடித்தமே உன்னிடம் மட்டும் தானே வந்தது.. நீ என் மனசாட்சி தானா.. என்னுள்ளே இருந்து கொண்டு அவருக்கு வாதிடுகிறாய் என சண்டை பிடித்தாள்..
உன் நல்லதுக்கு தான் சொன்னேன்.. கேட்டால் கேளு கேட்காட்டி போ.. என உள்ளே பதுங்கிவிட்டது..
பலவாறாக அவனுக்கு தன் மேல் ப்ரியம் இருக்கா இல்லையா என யோசித்து யோசித்தே ஒரு கட்டத்தில் உடலும் உள்ளமும் சோர்வுற உறங்கிவிட்டாள்.
தேவர்ஷி காலையில் கண் விழித்ததே அப்பா மகள் பேச்சு சத்தத்தில் தான்.. பார்ததும் பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு…
அனிவர்த் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்க.. ஷாஷிகா அவனின் முன் நின்று அவனுக்கு தலை வாரி தன் ஹேர்கிளிப்பை குத்தி விட்டுக் கொண்டிருந்தது.
“ப்பா.. கிளிப் போட்டாச்சு.. அடுத்து பவுடர் பூசனும்.. பொட்டு வைக்கனும்..”
“ம்ம்ம் சரிடாம்மா..” என மகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அமர்ந்திருந்தான்.
தேவர்ஷி அனிவர்த்தை முறைத்துக் கொண்டே குளியலறைக்கு சென்றாள். மனைவி எழுந்ததும் அவளையே தான் பார்த்திருந்தான். சதா சர்வகாலமும் கடல் அலையென ஆர்பரித்த அவன் மனம் முன் தினம் நடந்த கூடலினால் ஆழ்கடல் போல அமைதியாக சாந்தமடைந்துவிட்டது.
தன்னை போலவே அவளுக்கும் தன்னி(இ)டம் சேர்ந்த நிம்மதி இருக்குமா என ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு.. அதை மனைவியின் முகம் பார்த்து படிக்க முயன்றான். ஆனால் அங்கோ எதிர்மறையான பதிலே கிடைக்கவும்.. என்னவோ தெரியலையே என்ற குழப்பம் மனதில் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.
உடல் மகளின் செயலுக்கு ஒத்துழைக்க.. மனம் மனைவியின் செயலில் சண்டிதனம் செய்தது…
குளியலறையே பார்த்திருந்தான்.. தேவர்ஷி வரவும் அவளை விடாமல் உற்றுப் பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் மகளை கவனிக்க வந்தாள்.
.
Super sis 💞
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌
PAIibXReB