ATM Tamil Romantic Novels

33 – ஆடி அசைந்து வரும் தென்றல்

33- ஆடி அசைந்து வரும் தென்றல்




“ஷாஷி.. டாய்லெட் போனியா..”

 

“ம்ம்ம் ம்மா.” 

 

“ப்ரஸ் பண்ணிட்டியா..”

 

“அப்பாவும் நானும் பண்ணி்ட்டோம்..”

 

“பால் குடிக்கலாம் வா”

 

“ம்மா.. நீங்க போங்க.. நானும் அப்பாவும் வரோம்..” 

 

தன்னை கவனிக்காமல் தகப்பனுக்கு பவுடர் பூசிக் கொண்டே மகள் பதில்சொல்ல்…

 

இது நாள் வரை எதற்கும் தன்னையே எதிர்பார்க்கும் மகள் இன்று எல்லாத்திற்கும் அப்பாவையே முன்னிருத்த.. என்னவோ மகள் தன் கை விட்டுப் போனது போல ஒரு ஸ்திரமற்ற தன்மை மனதில் தோன்ற…

 

அனிவர்த் மேல் இருந்த ஆதங்கமும் இவளுக்கும் நான் வேண்டாமா..என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள.. கோபமாக உருவெடுக்க..

 

“ஷாஷி வா.. பால் குடிச்சிட்டு வந்து குளிக்கனும்.. ஸ்கூல் போக வேண்டாமா..” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்து..

 

“ம்மா.. இன்னைக்கும் நான் லீவு..”

 

“ஒரு வாரமா ஸ்கூல் போகல.. ஒழுங்கா கிளம்பு..” என்றாள் சற்று கோபமாக…

 

“அதேல்லாம் போக முடியாது… நான் அப்பா கூட தான் இருப்பேன்..” பிடிவாத குரலில் தாயை சட்டை செய்யாது தகப்பனுக்கு மையிட்டு கொண்டிருந்தது..

 

தேவர்ஷியின் இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் மிதமான நிலையில் இருந்து அதீத வேகத்திற்கு தடம் மாற….

 

“நான் சொல்லிகிட்டே இருக்கேன்.. நீ அழிச்சாட்டியமா பண்ற…” என மகளை அடிக்க வர..

 

தேவர்ஷிக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த ஷாஷிகா முதுகில் அடி விழுகும் முன்பே.. மனைவியே பார்த்திருந்த அனிவர்த் சட்டென ஒரு கையால் அவளின் கையை பிடித்து தடுத்தவன்.. மறு கையால் ஓங்கி அவளை அறைந்திருந்தான்.

 

“எதுக்குடி இப்ப பாப்பாவ அடிக்க வந்த… ஒரு நாள் ஸ்கூல் போகலைனா குடியா முழுகிடும்.. என்ன உன் மனசுல ஓடுது.. நானும் பார்த்துட்டே இருக்கேன் முகத்தை தூக்கி வச்சுகிட்டு திரியற… என்னனு சொல்லித் தொலை..” என உறுமினான்.

 

தாய் தந்தை கோபத்தில் பயந்து ஷாஷிகா சத்தமாக அழுக…

 

இத்தனை நாளில் அனிவர்த் அவளை அடித்ததில்லை.. பிரிந்த நாளில் கூட அடிக்க கையை ஓங்கினானே தவிர அடித்ததில்லை. அவன் அடித்ததில் கன்னத்தை பிடித்து மிரண்டு போய் நின்றாள்

 

மகள் அழுகவும் மகளை தூக்க செல்லவும்.. அவளுக்கு முன்பு மகளை வாரி அணைத்துக் கொண்டவன்..

 

“பாப்பாவை தொட்டின பாரு..” விரல் நீட்டி மிரட்டினான்.

 

அவனின் மிரட்டல் இவளை சீண்டி விட…

 

“ஓஹோ.. புதுசா.. புள்ள பாசம் பொத்துகிட்டு வருதா..  நான் தொடகூடாதா.. நான் தொடாம இருந்திருந்தா.. உங்க பொண்ணு இந்நேரம் எதாவது ஆசிரமத்துல் தான் இருந்திருக்கனும்.. நான் தொட்டு தூக்கி பாலூட்டி சீராட்டி வளர்க்கவும் தான இன்னைக்கு உங்க மகனு சொந்தம் கொண்டாடறிங்க.. இல்லைனா இப்படி ஒரு மக இருக்கறதே உங்களுக்கு தெரிஞ்சிருக்காது தான.. சொல்லுங்க..” 

 

ஷாஷிகாவிற்கு தாயின் இந்த கோபமுகம் புதிது.. மேலும் பெருங்குரலெடுத்து அழுக… ஷாஷிகாவை சமாதனம் பண்ண அவளை வாங்க வந்த தேவர்ஷியின் கைகளை தட்டிவிட்டவன் மகளின் கண்களை துடைத்து..

 

“ஒன்னுமில்லடா.. செல்லக்குட்டி.. அம்மா சும்மா பேசறா…” தோளில் தட்டிக் கொடுக்க.. ஷாஷிகாவின் அழுகை சத்தத்தால் கங்கா மேலே வந்துவிட்டார்.

 

கங்கா “அனிவர்த்..அனிவர்த்..” என அறை கதவை தட்ட.. அனிவர்த் சென்று கதவை திறந்தான். மகனின் கையில் இருந்த பேத்தியின் அழுகையை கண்டு..

 

“ஏன்டா பாப்பா அழுகறா..” என கேட்க..

 

அனிவர்த் திரும்பி தேவர்ஷியை முறைத்தான். தேவர்ஷியோ மாமியார் வரவும் என்ன சொல்வாரோ என அச்சப்பட்டு நிற்க…

 

அனிவர்த் பார்வை சென்ற திக்கை கவனித்தவர் அப்போது தான் தேவர்ஷியையும் நன்றாக பார்த்தார். அவளின் கன்னத்தில் கைதடம் இருக்க.. வேகமாக சென்று அவளின் கன்னத்தை வருடியவர்…

 

“என்னடா பண்ணின என் மருமகள..” என அனிவர்த்திடம் சண்டைக்கு போக…

 

“ ப்ச்ச்… ஏம்மா நீங்க ஒரு பக்கம்..” என்றான் சலிப்பாக..

 

“ஏன்டா.. என்னடா..” இருவருக்குள் இன்னும் எதுவும் தீர்க்கப்படவில்லையோ என்ற பரிதவிப்பில் கேட்டார.

 

“ம்மா ஒன்னும் இல்லை.. ஒரு சின்ன சண்டை.. அத பார்த்துட்டு ஷாஷி பயந்துட்டா.. உங்க பேத்திய கூட்டிட்டு போய் ஏதாவது குடிங்க கொடுங்க.. நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்..” என மகளை தாயிடம் ஒப்படைக்க..

 

“எதுனாலும் இன்னைக்கே பேசி முடிச்சுங்குங்க.. நீங்க சந்தோஷமா இருந்தா தான் எங்களுக்கு நிம்மதி..” என சொல்லி பேத்தியை கை பிடித்து அழைத்து சென்றார்.

 

அவர்கள் சென்றதும் கதவடைத்து வந்தவன்…

 

“உன் மனசுல என்ன தான் இருக்கு..  சொல்லு.. எழுந்ததில் இருந்தே முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க.. சொல்லுடி..”

 

வாயை அழுந்த மூடிக் கொண்டு எதுவும் பேசாமல்அழுத்தமாக  நின்றாள். அவளின் பிடிவாதமாக இறுக்கமான முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளின் அருகில் நெருங்கி…

 

“ என்னடா குட்டிம்மா.. சொன்னா தானே தெரியும்..” என்றான் கனிவாக..

 

அப்பவும் அமைதியாக நின்றாள் லேசாக கண்கள் கலங்க..

 

அவளை இழுத்து அணைத்தான். அவன் கைகளுக்குள்அடங்காமல் திமிறி விடுபட்டவள்…

 

“எப்ப பாரு.. உங்களுக்கு உங்க சுகம் தான் முக்கியம்.. என்னைக்காவது என்னை பத்தி யோசிச்சு இருக்கறிங்களா.. அப்பவும் இல்லை.. இப்பவும் இல்லை..” என வெடித்தாள்.

 

“என்னது என் சுகமா.. உன்னை கட்டாயப்படுத்தி நான் யூஸ் பண்ணிகிட்ட மாதிரி சொல்லற…”

 

“ஆமாம் அப்படி தான் பண்ணுனிங்க.. இங்க வா.. அங்க வானு..  என்னை புரிஞ்சுக்காம எவ்வளவு கஷ்டப்படுத்தினிங்க..”

 

“உனக்கு பிடிக்கலைனா.. பிடிக்கலைனு சொல்லிட்டு போயிருக்க வேண்டியது தான.. எதுக்குடி நாய்குட்டி மாதிரி பின்னாடியே வந்த..”

 

தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுபவனிடம் என்ன பேச.. இவன் எப்பவும் என்னை புரிந்து கொள்ளமாட்டான் என பார்த்தாள்.

 

அவளின் பார்வையில் என்னவோ இருக்கு என நினைத்து.. அவளிடம் கொஞ்சம் தணிந்து போனான்.

 

“எதுனாலும் வெளிப்படையா பேசிடு..  என்னை எதாவது கேட்கனும்னாலும் கேட்டுரு..”

 

“நான் என்ன உங்க பின்னாடியே நாய் மாதிரி உங்க பணத்துக்காக வந்தேனா.. என்னயும் உங்ககிட்ட இளையற  மத்த பொண்ணுங்க மாதிரி நினைச்சிங்களா.. ..” என கோபமாக கேட்க..

 

“ச்சீச்சீ.. என்னடி பேசற.. நீயும் மத்தவங்களும் ஒன்னா..”

 

“நான் என்ன ஸ்பெஷல் உங்களுக்கு.. நீங்க கூப்பிட்ட இடத்துக்கு அவங்களும் வந்தாங்க.. நானும் அப்படி தானே வந்தேன்.. உங்களுக்கு சலிப்பு தட்டியதும் என்னை வேணாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டிங்க…”

 

“வேணாம் வர்ஷி.. உன் வசதிக்கு தகுந்த மாதிரி மாத்திப் பேசாத.. நான் ஒன்னும் உன்னை பொய் சொல்லி ஏமாத்தலையே.. புடிச்சிருக்க வரைக்கும் ரிலேஷன்ஷிப்ல இருப்போம்..  வேணாம்னு நினைக்கிற போது கட் பண்ணிக்கலாம்னு சொல்லி நீ ஓகே சொன்னதும் தானே நான் உன்னை டச் பண்ணினேன். அதுவும் நீ கல்யாணம் பத்தி பேசவும் தான் நமக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சோம்..”

 

“ஆமாம் நீங்க எப்பவும் கரெக்ட் தான்.. நான் தான் தப்பு போதுமா… நான் உங்களை லவ் பண்ணினேன் பாருங்க அதான் எல்லாத்தையும் விட பெரிய தப்பு..” என பாப்கார்னாக பொரிந்தாள்.

 

மறுபடியும் பேச்சு சண்டைக்கு இழுத்து செல்வதை உணர்ந்தவன்.. அவளை பிடித்து இழுத்து சோபாவில் அமர வைத்தவன் அவளருகே தானும் அமர்ந்தான். 

 

“சொல்லுடா.. நீ சொன்னா தானே தெரியும். நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்கிட்ட கேட்டு சண்டை வேணாலும் போடு.. ஆனால் பேசாம மட்டும் இருக்காத..”

 

“நீங்க உங்க பொண்ணுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டிங்களா..”

 

“ப்ச்ச.. இவ்வளவு தான் நீ என்னை புரிஞ்சுகிட்டதா.. நான் முதல் முதல்ல என் ஆபீஸ்ல உன்னைபார்த்ததும் ஒரு அட்ராக்‌ஷன்.. நீ பண்ணின சேட்டை.. உன் சிறுபிள்ளைதனமான பேச்சு எல்லாம் எனக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு உண்டாக்குச்சு.. நான் ஜெர்மன்ல இருந்தப்ப அந்த கல்ச்சர் எனக்கு பிடிச்சிருந்தது. வயிற்றுப் பசி போல தானே உடல்பசியும் அதுக்கு எதுக்கு கல்யாணம்… என் ப்ரண்ட்ஸலாம் லிவிங்ல இருக்கும் வரை சந்தோஷமா இருந்திட்டு சுமூகமா பிரிச்சிடுவாங்க.. அதை பார்த்த எனக்கு வாழ்க்கையை எவ்வளவு ஈஸியா வாழ்றாங்க… நம் நாட்ல தான் கல்யாணம் குடும்பம் ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்.. சுலபமா வாழ வேண்டிய வாழ்க்கையை எதுக்கு இப்படி கட்டுப்பாடுகளோட வாழனும்னு தோணிச்சு… அதனால தான் அம்மா எவ்வளவு கட்டாயப்படுத்தியும் கல்யாணம் பண்ணிக்கல.. உன் அளவுக்கு என்னை எந்தபொண்ணும் ஈர்க்கல… உன்னை பார்க்கும் வரைக்கும் என்னோட பெட் ஷேர் பண்ணிக்க பெண் தேவையா இருந்துச்சு..”

 

அவனுக்கு மற்ற பெண்களோடான பழக்கம் தெரியும் தான். இருந்த போதும் ஒரு மனைவியாக அதை அவன் வாய்மொழியாக் கேட்கும் போது மனம் வலிக்க தான் செய்தது. அவளின் முகம் பார்த்து பேசியவனுக்கு அவளின் எண்ணவோட்டம் புரிய.. அவளின் தோளில் கைப் போட்டு அணைத்து தட்டிக் கொடுத்தான்.

 

“ஆனால் நீ என் ஆபீஸ்க்கு வந்த பிறகு உன்னை பார்க்க.. பாரக்க…  என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ண… எந்த நேரமும் உன்னை கண் பார்வைக்குள்ள வச்சுக்கனும் தோனுச்சு… அதனாலதான் என் ரூம்ல உனக்கு ஒரு கேபின் போட்டேன்.. உன் மேல ஒரு விருப்பம் வந்த பிறகு வேற பொண்ணுங்கள நான் தேடிப் போகல.. அப்ப  அது எனக்கு ஏன்னு புரியல… பிடிச்சிருக்கு சேர்ந்து இருப்போம்… விருப்பம் உள்ள வரை வாழ்வோம் 

பிடிக்காத போது சுமூகமா பிரிஞ்சிடலாம்னு தான் நினைச்சேன்..”

 

மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன்.. தன்மனதில் உள்ளதை எல்லாம் கொட்டினான்.

 

“உன் கூட நான் இருந்த போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு மனசு இறக்க கட்டி பறந்துச்சு.. எந்த பொண்ணுங்ககிட்டயும்  கிடைக்காத ஏதோ ஒன்னு எனக்கு நீ கொடுத்த…  அந்த பீலிங் எனக்கு பிடிச்சிருந்துச்சு.. அதனால தான் உன்னை நான் அடிக்கடி வா போகலாம்னு தொல்லை பண்ணினேன்… கடைசியா நீ கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டப்ப… எனக்கு பயங்கர கோபம்.. எல்லாம் சொல்லி தானே நாம இவ கூட பழகினோம்..  நம்ம வீக்னஸை பயன்படுத்தி நம்ம கூட செட்டில் ஆக பார்க்கறாளானு…”

 

தேவர்ஷி அவனை முறைத்துக் கொண்டே “நான் சுந்தரமூர்த்தி பேத்தி.. நான் உங்களை உங்களுக்காக மட்டும் தான் லவ் பண்ணினேன்.. உங்க பணத்துக்காக இல்லை” என்றாள் சுள்ளென்று..

 

“நான் அப்படி நினைக்கறதுக்கும் நீ தான் காரணம்.. என்னைக்காவது என்கிட்ட உன் பேமிலி பத்தி சொல்லியிருக்கறியா… எப்ப பாரு வீட்ல திட்டுவாங்க… பர்மிஷன் கொடுக்கமாட்டாங்கனு கட்டுப்பெட்டி தனமா சொல்லிட்டே இருந்தியா.. அதான் அப்படி நினைச்சேன்…”

 

“நாளைக்கு உங்க பொண்ணுகிட்ட ஒருத்தன் கேட்டா.. நீங்க என்ன பண்ணுவிங்க.. பர்மிஷன் கொடுத்து போய்ட்டு வாம்மானு வழி அனுப்பி வைப்பிங்ங்களா..”

 

“அதெப்படி பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போகட்டும்..” என்றான் வேகமாக..

 

“உங்க பொண்ணு உடனே வேகமா மறுப்பு வருது.. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம்… ஊரான் பொண்ணுக்கு ஒரு நியாயமா…” என கோபப்பட..

 

“வர்ஷி்ம்மா.. கூல் டவுன்… நான் பழைய அனிவர்த் இல்லை… அப்ப நான் அப்படி தான் இருந்தேன்.. ஆனா இப்ப அப்படி இல்லை நீ புரிஞ்சுக்கனும்… ஆனால் நீ சண்டை போட்டுட்டு போனதுக்கப்புறம் அப்படி ஒரு கோபம்…  போடி நீ இல்லைனா எனக்கு வேற பொண்ணுங்க… என்ற வீம்பு…” 

 

“அப்போ உங்களுக்கு நான் போயிட்டேன்ற வருத்தமே இல்லையா…” என இவனுக்கு நான் ஒன்றுமே இல்லையா… என்ற மனகிலேசம் அவளிடம்…

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் மனது புரிய…  அவளின் வருத்தம் தாங்காமல்..

 

“டேய் குட்டிம்மா..” என அவளை தன் முகத்தின் அருகே இழுத்து இன்ஸ்டன்டா ஒரு இதழ் முத்தம் பதித்தான்.

 

7 thoughts on “33 – ஆடி அசைந்து வரும் தென்றல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top