34- ஆடி அசைந்து வரும் தென்றல்
அவனின் இதழ் பரிமாற்றத்தில் நிறைய கோபங்கள்… வருத்தங்கள் இருந்த போதும் கிறங்கி நின்றவளை பார்த்து அவளின் காதல் மனம் புரிய.. இத்தனைக்கு பிறகும் தன்னிடம் சொக்கி கிடக்கும் தன் மனையாளை கண்டு கர்வமாக இருந்தது. அவளை கண்டு மெல்ல சிரிக்க…
அவனின் சிரிப்பில் வெட்கம் மேலிட… “என்ன இளிப்பு ..” என அவனின் தோளில் அடித்தாள். அடித்த கையை பற்றி உள்ளங்கையில் மீசை உரச முத்தம் வைத்தான். கையை உருவிக் கொண்டவள்…
“என்னை டைவர்ட பண்ணாதிங்க… சொல்லுங்க உங்களுக்கு வருத்தமா இல்லையா..”
“என் திமிர்… ஈகோ பிடிவாதமா உன்னை மறக்க நினைத்தேன்.. நினைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் என்னை அறியாமலே மத்த பொண்ணுங்கிட்ட நீ எனக்கு கொடுத்த லவ்வ தேடியிருக்கேன்… ஒரு கட்டத்தில் எதை தேடறோம்னு தெரியாம பைத்தியம் புடிக்கற மாதிரி ஆகிடுச்சு… அப்புறம் இந்த பழக்கம் எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி அந்த ப்ளாட்ட வித்து அப்பாட்ட கொண்டு வந்து பண்த்தை கொடுத்தேன் பாரு அப்ப தான் அவ்வளவு ரிலாக்ஸா ஃபீல் பண்ணினேன்.. இருந்தாலும் என் மனசுல ஏதோ ஒன்ன இழந்துட்டோம்னு தவிப்பு மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு… அப்ப தான் ஷாஷிகாவ பார்த்தேன். பார்த்ததும் என்னையும் அறியாம ஒரு பாசம்.. கைகால் எல்லாம் என்னை மாதிரி நீளமா இருந்தாலும் முகம் கொஞ்சம் உன் சாயல் அதனால கூட இருக்கலாம். ஷாஷி என் பொண்ணுனு தெரியாமேயே அவளை பார்க்க அந்த பார்க்கு வருவேன்.. அன்னைக்கு அவளை தேடி தான் உங்க வீட்டுக்கு வந்தேன். உன்னை பார்த்தும் அவ்வளவு மகிழ்ச்சி.. ஷாஷி உன் பொண்ணுனு தெரிஞ்ச பிறகு அந்த மகிழ்ச்சி அப்படியே வத்திப் போச்சு..”
ஏன் என புரியாமல் அவனை பார்த்தாள். அவளின் கேள்வியாக வளைந்த புருவங்களை நீவி விட்டவன்..
“அது உனக்கு வேற யார் கூடவோ கல்யாணமாகிடுச்சுனு நினைச்சேன்… இருந்தாலும் அன்னைக்கு தான் உன் மேல நான வச்ச லவ்வ தெரிஞ்சுகிட்டேன்.. அன்னைக்கு நைட் அப்படியே கனவில் உன் கூட……. என அந்தரங்கமான காதல் பாஷைகள் பேச…
“ச்சீ… இப்படியா..” என முகத்தை மூடிக் கொண்டாள்..
“என்ன இப்படி சொல்லற… இதுவே கம்மி.. அடுத்தவன் பொண்டாட்டிய அப்படி நினைக்ககூடாதுனு என்னையே கண்ட்ரோல் பண்ணிகிட்டேன் தெரியுமா…” பாவமாக
தேவர்ஷி அவனை சரமாரியாக அடிக்க.. அவளை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான். அவள் இடையோடு கட்டிக் கொண்டு…
“உங்கப்பாவ விசாரிச்சு ஷாஷி என் பொண்ணுனு தெரிஞ்சுகிட்டேன் ஆனால் தாலி தான் கொஞ்சம் உறுத்துச்சு..” என இப்பவும் அவள் கழுத்தில் இருந்த மங்கள்சூத்ராவை தடவிப் பார்ததான்.
“நான் கூப்பிட்டா வரமாட்ட…. அதான் எங்கம்மாவ கிளப்பிவிட்டேன். கடைசில கங்காம்மா மருமகளை கைக்குள்ள போட்டுகிட்டு எனக்கு வழக்கம் போல ஆப்பு அடிச்சுட்டாங்க..” என சிரித்தான்.
“அத்த.. செம ஸ்மார்ட்ல..”
“ஆமாம் அவங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி குடும்பமா வாழனும்னு ஆசை.. அதுக்காக என்ன எல்லாம் பண்ணுனாங்க.. தெரியுமா..” என தன அம்மா செய்ததை எல்லாம் சொல்ல.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் கலகலவென சிரிக்க.. அவளையே பார்த்திருந்தவன் பின்புறமாக அணைத்திருந்த கைகளால் வயிற்றை தடவி கொடுத்து…
அவள் காதோரம் “ரொம்ப கஷ்டப்பட்டியா..” என கேட்க..
சட்டென அவள் சிரிப்பு மறைந்து.. முகம் வாடிப் போக..
“டேய் குட்டிம்மா.. என்னடா…” அவனின் கரிசனையில் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
அவன் புறம் திரும்பி அவன் நெஞ்சில் முகம் முட்டி நின்று சத்தமின்றி அழுகையில் கரைய…
“என்னடா லேபர் பெயின் அதிகமா இருந்ததா.. நானும் உன்னை வருத்திட்டேன்ல.. சொல்லுடா நான் இல்லாம எப்படி எல்லாம் கஷ்டப்பட்ட..”
அவனின் மார்ப்பில் சாய்நதவாறே தன் மனபாரத்தை எல்லாம் இறக்கி வைத்தாள். கேட்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர் கோடுகள்…
“அழுகாதடா… அடுத்த புள்ளைக்கு நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறேன்.. லேபர் வார்டுல கூட உன் கூடவே இருப்பேன்.. இனி உன்னை தனியா விடமாட்டேன் சந்தோஷமோ… துக்கமோ.. சேர்ந்தே அனுபவிப்போம்..” என அணைத்தான்
சிறிது நேரம் இருவரும் ஒருவரின் அணைப்பில் மற்றவர் ஆறுதல் தேட… ஆறுதலாக இருந்தது ஆசையாக உருமாறி… இடையில் இருந்த கைகள் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து அவளின் பெண்மையின் மென்மையை சோதிக்க…
சுகம் தாளாமல் அவனின் முடிகளுக்குள் கை விட்டு இறுக்கினாள். இருவருக்கும மெல்ல உடலும் மனதும் நெகிழ… உடையை நெகிழ்த்தும் வேளையில்..
“ம்மா.. ப்பா..” என ஷாஷிகா கதவை தட்ட…
அவசர அவசரமாக இருவரும் பிரிந்து தங்களை சீர் படுத்திக் கொண்டு கதவை திறந்தனர்.
மகள் வரவும் தேவர்ஷி “சாப்பிட்டயா..”
“பாட்டி இட்லி ஊட்டி விட்டாங்க.. உங்கள சாப்பிட வர சொன்னாங்க..”
“ஷாஷிமா.. செல்லம்.. அம்மாவும் அப்பாவும் வராங்களாம் என சொல்லு போ..” என மகளை அனுப்பி வைத்தவன் அவசரமாக தேவர்ஷியை அணைத்தான்.
“ப்ச்ச்.. விடுங்க.. அத்த வர சொன்னாங்கல்ல..”
“ம்ம்ம்…போலாம்” என சில காதல் கல்மிஷங்களை செய்தே அவளை விடுவித்தான்.
“இப்ப விடறேன் இராத்திரிக்கு வட்டியும் முதலுமா வசுல் பண்ணிக்குவேன்.. ஆறு வருசம் வசூல் பண்ண வேண்டியது எவ்வளவு இருக்கு.. ஒரு புள்ளை பிறப்பை தான் பார்க்க விடாம பண்ணிட்ட.. ஆறு வருஷ கணக்குக்கு இன்னும் மூணு புள்ளை பெத்துக்கனும்.. ரெடியா இரு..”என பக்கா பிசினஸ்மேனா கணக்கு போட்டு சொல்லி கண்ணடித்து உதட்டை குவித்து முத்த சைகை செய்ய.. வெட்கத்தில் முகம் சிவந்து நின்றவளை ரசித்தான்.
இருவரும் புன்னகையுடன் படியிறங்கி வர.. கங்காவின் கண்கள் நிறைந்து போனது.
“ ம்மா.. சாப்பிட்டிங்களா..” என கேட்க…
“ம்ம் நாங்க எல்லாம் சாப்பிட்டோம்.. நீங்க இரண்டு பேரும் உட்காருங்க..” என இருவரையும் உட்கார வைத்து தானே பரிமாறினார்.
தேவர்ஷியோ”நீங்க இருங்க… நான் அவருக்கு பரிமாறறேன்.. நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்..”
“இப்பவே நேரம் தாண்டி போச்சு… நீயும் உட்கார்ந்து சாப்பிடு..” என்றவர் தேவர்ஷிய உட்கார வைத்து பரிமாறியவர் எதிர் இருக்கையில் அமர்ந்து அவர்களையே கண்ணெடுக்காமல் பார்க்க..
அனிவர்த் “ம்மா..” என்றான் கூச்சத்துடன்… தேவர்ஷிக்கும் சங்கடமாக தான் இருந்தது.
“பேசாமல் சாப்பிடுடா.. இது எல்லாம் என்னோட சின்ன சின்ன ஏக்கங்கள்..” என சொல்லி கண் கலங்க..
பேத்தியோடு அங்கே வந்த சிதம்பரம் “ கங்கா.. “ என கண்டிக்க… கண்களை துடைத்து கொண்டார்.
“மூணு பேரும் கோயிலுக்கு போயிட்டு வாங்கடா…”
“நீங்க இரண்டு பேரும் வாங்கம்மா.. நிறைய வேண்டுதல் வச்சிருப்பிங்களே…”
“ஆமாம்டா.. திருப்பதி, பழநி, திருச்செந்தூர் எல்லாம் போகனும்..”
“சரிங்கம்மா.. எல்லாகோயிலுக்கும் உடனே போயிட்டு வந்திடலாம்..”
“ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தது ஆறு மாசமாவது இடைவெளி வேணும்டா..மகனே..”
மற்ற மூவரும் புரியாமல் பார்க்க…
“இல்ல… உனக்கும் உங்கப்பாவுக்கும் மொட்டை போடறேன்னு வேண்டி இருக்கேன்… முடி வளர ஒரு ஆறுமாசமாவது கேப் விட வேண்டாமா..” என அப்பாவி வேசம் கட்ட…
அனிவர்த்தும் சிதம்பரமும் கங்காவை முறைக்க.. தேவர்ஷி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.
ஷாஷிகாவும்”அய் அப்பாவுக்கு மொட்டை..” என கை தட்டி சிரிக்க..
அனிவர்த்தும் சிதம்பரமும் சிரித்து விட…தன் குடும்பத்தை கண் நிறைக்க பார்த்த கங்கா தன் கண்ணே பட்டு விடுமோ என பயந்து திருஷ்டி கழிக்க தேவையான பொருட்கள் எடுக்க சென்றார்…
அனிவர்த் தேவர்ஷி வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் கட்நதிருந்தது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மினிஹாலில் அனிவர்த் தேவர்ஷி இருவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு அறையில் அனிவர்த்தும் தேவர்ஷியும் வார்த்தை போர் நடத்திக் கொண்டிருக்க… ஷாஷிகா தன் உடன் பிறப்புக்களை பார்ப்பதா.. இவர்களை பாரப்பதா.. என முழி பிதுங்கி நின்று கொண்டிருந்தது. இன்று அவர்களின் வாரிசுகளுக்கு முதல் பிறந்தநாள்.
“உங்க பையன் உங்களை மாதிரியே ஒரே பிடிவாதம்.. பாருங்க டிரஸ் போட்டுக்க கூப்பிட்டா.. வரமாட்டேன்னு அங்க போய் நிக்கறான்..”
“அங்க பாரு உன் பொண்ணு மட்டும் என்ன.. உன்னை மாதிரியே ஜன்னல் பிடிச்சுகிட்டு தொங்கறா பாரு..”
“உங்களுக்கு பிடிக்கலையோ…” என முறைத்தாள்.
“யார் சொன்னா.. ஹீஹீஹீ.. அப்படி எல்லாம் இல்லையே..” என சிரித்து சமாளித்தான்.
தேவர்ஷியின் குறும்பில் தானே மொத்தமாக விழுந்தான். அதே போல இளைய மகள் இரு்க்கவும்.. நிதிலா மேல் தனி பாசம்.. அதில் தேவர்ஷிக்கு சற்று பொறாமை..
தேவர்ஷியை சமாளிப்பதற்காக பேச்சை மாற்றும் விதமாக..
“இவன் தான் என்னை மாதிரி அமைதியா இருக்கான்..”
“யாரு உங்களை மாதிரியா.. இவன் என்னை மாதிரி..” என கட்டிலில் உட்கார்ந்து அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த நிகித்தை காண்பித்து சண்டை நீள..
ஷாஷிகாவோ கங்கா வந்துவிட்டால் பரவாயில்லை என வாசலையே பார்த்தது..
அந்த அறையில் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆம் மூன்று குழந்தைகள்…ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் தேவர்ஷிக்கு… ட்ரிப்லெட்ஸ்… இரண்டு ஆண் ஒரு பெண்.. நிகில்,நிகித், நிதிலா… நிதிலா தேவர்ஷி போல ஓவர் சேட்டை.. தேவர்ஷியின் அத்தனை குறும்புகளையும் கொண்டிருந்தது. நிகில் அனிவர்த்தை போல பிடிவாதம்.. அழுத்தம்… இந்த இரண்டுக்கு நேர்மாறாக கடைக்குட்டி நிகித் அமைதி.
இந்த இரண்டு வருடங்களில் அனிவர்ததிடம் நிறைய மாற்றங்கள்.. முழு குடும்பஸ்தனாகி போனான். காலையில் ஷாஷிகாவை ஸ்கூலில் விட்டு சென்றால் மாலையில் ஷாஷிகாவோடு வீடு வந்திடுவான் அதன் பிறகு அவன் பொழுதுகள் மனைவி மகளோடு தான். மகள் உறங்கும் வரையில் மகளின் ஆட்சியில் தான் அவன்..
ஷாஷிகாவிற்கு எதற்கும் அப்பா வேண்டும். தேவர்ஷிக்கு பொறாமையாக இருந்தாலும் மகள் இத்தனை தூரமா தந்தை பாசத்திற்கு ஏங்கியிருக்காள் என்ற வருத்தமே அதிகமாக இருந்தது.
மகள் உறங்கிய பின்பு அவன் சேவை எல்லாம் காதல் தேவைக்காக தேவர்ஷியிடம்.. சொன்னது போலவே ஆறு வருடங்கள் பிரிவை ஈடு கட்ட பெரும் சேவையாற்றினான். தேவர்ஷியை மட்டும் கூட்டிக் கொண்டு ஒரு முறை பொன்முடி போய் வந்தான். அந்த மாதமே தேவர்ஷிக்கு நாள் தள்ளிப் போனது.
அனிவர்த்கு அத்தனை மகிழ்ச்சி. மருத்துவமனையில் கர்ப்பம் தான் உறுதி செய்த அன்று அவன் தந்தை என்ற உணர்வில் தத்தளித்து நின்றான். என்ன தான் ஷாஷிகா தந்தை ஸ்தானத்தை கொடுத்திருந்தாலும்..
கருவாகி உயிராகி உருவாகி கையில் ஏந்தும் காலம் வரை ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து வாழ வைக்க வந்த குழந்தை அல்லவா..
குழந்தை அல்ல குழந்தைகள்… மூன்று குழந்தைகள் என்றனர்.
Super sis 💞
bqWDaVOQyvpij
super sis