நிலவு 4
தங்கபாண்டியோ “என்ன வேலை இருக்கு சொல்லு தம்பி நான் முடிச்சிட்டு வரேன்” என்று சந்தன பாண்டியனிடம் கேட்டதும் “இல்லண்ணா அந்த வேலையை நாளைக்கு பார்த்துக்கலாம் நீ போய் ரெஸ்ட் எடு!” என்றவனோ அங்கே தேன்மொழி நின்ற இடத்தை பார்த்தான். அவள் அங்கே இருந்தால் தானே “உங்க வேலையா அப்பத்தா” என தனபாக்கியத்தை முறைத்தான் சந்தனபாண்டியன்.
“சின்ன பொண்ணுடா அவ, இன்னிக்கு மட்டும் விடு நாளையிலிருந்து அவளுக்கு வேலை செய்ய ட்ரெயினிங் கொடுத்துடறேன்! ஒரு நாள் தூங்கிக்கட்டும்” என பேரனை சமாளித்து பேசியவர் அங்கே நின்றால் சந்தனபாண்டியன் பேச்சு வளர்த்துக்கொண்டேயிருப்பானென “எனக்கு ஒரே தலை பாரமா இருக்குபா! நான் கொஞ்சம் தலைசாய்க்குறேன்” என்றதும் “தலை வலிக்குதா அப்பத்தா வா ஹாஸ்பிட்டல் போலாம்” என்று கையை பிடித்தனர் தங்கபாண்யடினும் சந்தனபாண்டியனும்.
“அட பேராண்டிகளா ஒரு சாதாரண தலைவலிக்கு என்னை சீக்காளி ஆக்கி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேனு சொல்றீங்களாடா” என்று இரு பேரன்களையும் மிரட்டிவிட்டு அவரது அறைக்குச் சென்றார்.
சந்தனபாண்டியனோ “அப்பத்தா சரியான கேடியா இருக்கு அண்ணா! தேன்மொழியை வேலை செய்ய விடாம தப்பிக்க விட்டிருச்சு பாரேன்! நான் மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு வரேன்” என்று தோட்டத்துக்கு போக வாசலுக்கு போனான்.
“டேய் இருடா நானும் வரேன்! தோட்டத்து பக்கம் போய் ரொம்ப நாள் ஆச்சு” என்று சந்தனபாண்டியன் பின்னால் போனான் தங்கபாண்டியன்.
“சின்ன மதினி கோபமா போனது போல இருந்துச்சு! அவங்களை போய் சமாதானப் படுத்துங்க! நாளைக்கு தோட்டத்துக்கு போகலாம் அண்ணா” என்று சிரித்தபடி கிளம்பிவிட்டான் சந்தனபாண்டியன்.
‘எல்லாரும் பார்க்கறது போல கோவத்தோட போய் இருக்கா பாரேன்! இருடி வரேன்’ என்று ஆர்த்தியை கறுவிக்கொண்டுச் சென்றான் தங்கபாண்டியன்.
போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவள் தங்கபாண்டியன் வருவது தெரிந்ததும் கண்மூடி முதுகு காட்டி திரும்பி படுத்துக்கொண்டாள். இப்ப நாம சண்டை போட கூடாது சமாதானப்படுத்தணுமே என்று கட்டிலுக்கு அருகே சென்றான்.
ஆர்த்தி தூங்குவது போல பாவலா செய்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் கணித்து வைத்திருக்கிறான் தங்கபாண்டியன். அவள் நடிக்கிறாள் என்று தெரியாமல் போகுமா என்ன?
கதவை லாக் போட்டுவிட்டு மெதுவாக கட்டிலில் ஏறியவன் ஆர்த்தியின் இடுப்பில் கைப்போட்டான். “ப்ச்” என்று சலித்தபடி கணவனின் கையை தட்டிவிட்டாள் ஆர்த்தி.
“ஏய் கோபமாடி பொண்டாட்டி” என்று ஆர்த்தியை தன் புறம் திருப்பி விட்டான். அவளோ கண்களை மூடியபடி “ஆமா நான் கோபமா இருக்கேன்” என்றாள் கண்ணைத்திறக்காமல்.
“அப்படியா கோபத்தை போக்கிடலாமா!” என்று அவள் கண் இமைகளில் மெல்ல முத்தம் கொடுத்து “ஐலவ்யு பொண்டாட்டி” என்று அவள் காதோரம் இரகசியமாக சொல்ல கண்களை மெல்லத்திறந்தாள். லவ் பண்ணும் காலங்களில் முதல் முறை ஆர்த்தியிடம் “ஐலவ்யு” என புரபோஸ் செய்ததோடு சரி. அதற்கு பிறகு ஐலவ்யு குறைவுதான். ஆர்த்தி “ஐலவ்யு சொல்லு கோல்ட்” என்று ஆசையாக கேட்டுக்கொண்டேயிருப்பாள்.
“சும்மா சும்மா பார்க்கும்போதெல்லாம் லவ்யு சொல்லக்கூடாது டி லவ்வுக்கு ஆயுசு குறைஞ்சுடும்” என்று அவளிடம் புது ஃபார்முலா கண்டுபிடித்து பொய் சொல்லுவான்.
“அவளும் அப்படியா கோல்ட்” என அவன் பொய்யாக சொல்வதை நம்பிவிடுவாள். அவனோ நமட்டுச்சிரிப்புடன் லவ் யு சொல்றதுக்கு பதிலா “கிஸ் பண்ணிக்கலாம்” என்று அவனது ராஜ தந்திரத்தை காட்டி ஆர்த்தியிடம் பல முத்தங்களை கொடுத்தும் அவளிடம் முத்தம் பல வாங்கிக்கொள்வான்.
இப்போது தங்கபாண்டியன் ஆர்த்தியின் காதோரம் “ஐலவ்யு” சொன்னதும் பாகாக கரைந்து போய் அவளது கோபங்கள் மறைந்து காதலாக இதழ்களை விரித்தாள். இன்னும் அவளுடன் நெருங்கி “கிஸ் பண்ணுறேன்டி” என்றவன் அவள் பேச வாய் திறக்க அவளை பேச விடாமல் அவளது இதழை கவ்விக்கொண்டான். அவள் பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம் அவனது வாய்க்குள் மூழ்கிப்போனது. அவனது இதழ் முத்தத்தில் கிறங்கிப்போயிருந்தாள் ஆர்த்தி.
எப்போதெல்லாம் ஆர்த்தி சண்டையிடுகிறாளோ அப்போதெல்லாம் முத்தம் கொடுத்தே ஆர்த்தியை கணக்கு செய்துவிடுவான் தங்கபாண்டியன். மெல்ல அவள் இதழிலிருந்து பிரிந்தவன் “என்னடி கோபம் போச்சா இன்னும் இருக்கா. இன்னும் இருக்குனா சொல்லு இன்னொரு முறை கிஸ் பண்ணுறேன்” என்று நாவால் உதடை ஈரம் செய்து கண்ணைச் சிமிட்டினான்.
“கோல்ட் நீ சரியான ஏமாத்துக்காரன்டா நீ தொட்டதும் நான் ஃபீரிஸ் ஆகிடுறேன் போடா! என்னை முத்தம் கொடுத்து என்னை மயங்கி வச்சிட்ட மாயாக்காரா” என்று அவனது நெஞ்சில் குத்தியவள் அவனது மார்பிலேயே தலைசாய்த்து படுத்துக்கொண்டாள்.
“இப்படி பண்ணினா எனக்கு மூடு மாறுதுடி எழும்பி போய் சமையல் வேலையை செய் மதினி ஒருத்தவங்களா வேலை செய்துட்டு இருக்காங்க பாரு!” என்று அவளது உச்சியில் முத்தம் கொடுத்தான்.
ஆர்த்தியோ தலையை மட்டும் நிமிர்த்தி “அதானே பார்த்தேன் என்னை இப்படி கொஞ்சும்போதே நான் சுதாரிச்சிருக்கணும். இப்போ உங்க மதினி வேலை செய்யறாங்கனு அவங்களுக்கு நான் உதவி செய்யணுமா? என்னால முடியாதுப்பா எனக்கு டயர்டா இருக்கு” என்று அவனது நெஞ்சில் இருந்து விலகி படுத்துக்கொண்டாள்.
“ஏய் இப்ப நீ எழும்பி போகலைனா நாம சென்னைக்கு திரும்ப போகமாட்டோம். வேலை வேண்டாம்னு எழுதி கொடுத்திட்டு இங்க இருக்க சர்க்கரை ஆலையை பார்த்துக்கிட்டு இங்கயே நிரந்தரமாக தங்கிடுவோம் எப்படி வசதி. வேலை செய்ய போறியா! இல்லை படுத்திருக்க போறியா?” என்று அதிரடியாக பேசினான்.
“என்னது நாம் இங்க தங்கப்போறோமா!” என்று அதிர்ந்து எழும்பி உட்கார்ந்தவள் “விளையாடாதீங்க கோல்ட் என்னால இந்த கிராமத்துல இருக்க முடியாது. ஏதோ கோவில் பண்டிகைனு உனக்காக நான் வந்திருக்கேன்! இப்ப என்ன நான் வளரு அக்காவுக்கு சமைக்க ஹெல்ப் பண்ணனும் அவ்வளவுதானே நான் செய்யுறேன்பா” என்று கட்டிலிலிருந்து இறங்கிவிட்டாள்.
தங்கபாண்டியனோ ‘அப்படி வாடி வழிக்கு உன்னையெல்லாம் தேள் போல கொட்டி கிட்டேயிருக்கணும்! அப்போ தான் நீ அடங்கி இருப்ப’ என்று எண்ணியவன் அரங்கநாதன் போல தலைக்கு கையை முட்டுக்கொடுத்து ஒய்யாரமாக காலை ஆட்டிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தவன் “இன்னும் இங்கயே நின்னா எப்படி போய் வேலையை பாரு” என்று துரத்தி விட்டாத குறையாக அதட்டினான்.
“ம்ம் சேலையை அஜஸ்ட் செய்துட்டு போறேன்!” என்று சேலையை சரிசெய்துக் கொண்டு சமையல்கட்டுக்கு சென்றாள்.
சென்னையில் தங்கபாண்டியன் ஆர்த்தி ஹெட்டாக இருந்தான். ஆர்த்தி தன் காதலை அவனிடம் சொல்ல முதலில் அவளது காதலை நிராகரித்து விட்டான். ஆர்த்தி நல்ல சிவந்த நிறம். ஆழகான பெண்ணும் கூட ஆனால் உதவும் மனப்பான்மை அவளுக்கு கிடையாது. தங்கபாண்டியனோ ஆபிஸில் கூட்டி துடைக்கும் பெண்களுக்கு கூட தீபாவளி, பொங்கல் என்று வந்தால் கம்பெனி போனஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு தனியாக ஒரு தொகையை பரிசாக கொடுப்பான். இன்னும் ஒரு படி மேல போய் அவர்களது குழந்தைகளுக்கு கூட படிப்பு செலவை ஏற்று செய்வான். தங்கபாண்டியன் நல்ல பசை உள்ளவன் என்று தெரிந்து அவனை உருகி உருகி காதலித்தாள் ஆர்த்தி. தங்கபாண்டியன் ஒரு கட்டத்தில் அவளது காதலை ஏற்றுக்கொண்டு ஆறுமாதம் தான் காதல் செய்தான்.
தங்கபாண்டியன் ஊருக்குச் சென்றிருத்த சமயம் தனபாக்கியத்திடம் தான் காதலிப்பதாக சொல்ல! முதலில் பேரனின் காதலை எதிர்த்தாலும் அவன் ஏமாற்றம் அடையக்கூடாதென “உன் காதலுக்கு நான் பச்சைக்கொடி காட்டுறேன். ஆனா கல்யாணம் நம்ம ஊர்லதான் நடக்கணும்” என்று உறுதியாக கூறிவிட்டார்.
ஆர்த்தியின் அப்பா மகேஷ்வரன் இரும்பு கம்பிகள் வியாபாரம் செய்பவர். கோடிக்கணக்கில் டர்ன்ஓவர் செய்யும் குடும்பம். பரம்பரை பணக்காரர்கள். மகேஷ்வரனிடம் “அப்பா நான் என்னோட வேலை செய்யறவனை லவ் பண்ணுறேன்” என ஆர்த்தி கூறியதும் ஆர்த்தியின் அம்மா சங்கரியோ “ஏய் நம்ம வசதிக்கு தகுந்த குடும்பமா? பையன் எப்படி குணம் நீ பாட்டுக்கு லவ் பண்ணுறேன் கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்லுற” என்று மகளை வசைபாட ஆரம்பித்தார்.
“ம்மா தங்கபாண்டியன் குடும்பம் நம்மளை விட பணக்காரவங்க போதுமா! இன்னும் ஏதாவது டீடெய்ல்ஸ் வேணும்னா மதுரையில சுந்தரபாண்டியன் குடும்பம்னு விசாரிச்சு பாருங்க அவங்க ஸ்டேடஸ் தெரியும்” என்று அசால்ட்டாக பேசி சென்றாள்.
மகேஷ்வரன் மதுரையில் தன் தொழில் நண்பர்களிடம் அந்த நிமிடமே சுந்தரபாண்யடின் குடும்பத்தை பற்றி விசாரிக்க “எதுக்கு கேட்குறீங்க மகேஷ்?” என்று சந்தேகமாக கேட்க “என் பொண்ணு அந்த குடும்பத்து பையனை விரும்புறா” என்று தயங்கி கூறினார் மகேஷ்வரன்.
“கண்ணை மூடிக்கிட்டு பொண்ணை கொடுக்கலாம். சுந்தரபாண்டியன் குடும்பத்துக்கு. சுந்தரபாண்டியன் இப்போ உயிரோட இல்ல. அவரோட அம்மா தனபாக்கியம் மட்டும் இருக்காங்க! அவங்க பெயரை சொன்னாலே மதுரையே அதிரும் அந்த குடும்பத்துல பொண்ணு கொடுக்கறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் மகேஷ் தாராளமாக கொடுக்கலாம்” என்று சிலாகித்து சொல்லி போனை வைத்தார் அந்த நபர்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
YTCjFGKvwO