ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 5
 
அடுத்த இரண்டு வாரத்தில் தங்கபாண்டியன் ஆர்த்தி கல்யாணம் மதுரையில் தங்கபாண்டியன் குலதெய்வ கோவிலில் நடந்து முடிந்தது. ஆர்த்தி வீட்டுக்கு மறுவீடு விருந்துக்கு போனதும் விருந்து முடிந்து ஹாலில் உட்கார்ந்திருந்தான் தங்கபாண்டியன். 
 
சங்கரியோ தங்கபாண்டியனின் குடும்ப சொத்தின் அளவை தெரிந்துக் கொண்டவர் மகளை தன்னுடன் வைத்துக் கொண்டால் தங்களின் சொத்து மதிப்பு இன்னும் பெருகிடும் என்று பேராசைப்பட்டு மகளிடம் வந்தவர் “ஆர்த்தி நீ எங்களுக்கு ஒரே பொண்ணு நம்ம வீட்லயே தங்கிடேன்! என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுடி” என நீலிக்கண்ணீர் வடித்தார் சங்கரி.
 
“அம்மா அவரு கண்டிப்பா நம்ம வீட்டுல தங்க ஒத்துக்க மாட்டாருமா! நாங்க சென்னையில இருக்கும்வரை தங்கறதுக்கு அவங்க அண்ணா அருள் ட்ரிபிள் பெட்ரூம் கொண்ட பிளாட் வாங்கி கொடுத்திருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க அங்க தான் கிளம்புறோம்! நீ என்னை பார்க்கணும்னு போன் போட்டா நான் உடனே வந்துடுவேன்மா” என்றாள் தாயின் பேராசை மனதை புரிந்துக் கொள்ளாமல்.
 
“ஏய்! என்னடி பேசுற! ஒரு பொண்ணு நினைச்சா எதையும் சாதிக்க முடியும். நீ மாப்பிள்ளை கிட்ட பக்குவமா பேசி நம்ம வீட்லயே அவரை தங்க வைக்க பாரு. மாப்பிள்ளை பேர்ல தானே ப்ளாட் வாங்கியிருக்கு அந்த ப்ளாட்டை வாடகைக்கு விடலாம். காசு வரும் தானே! நமக்கு நிறைய சொத்து இருந்தாலும் நாம காசை தேடி ஓடிக்கிட்டே இருக்கணும்டி புத்தியா பிழைச்சுக்கோ! அப்படியே இன்னிக்கு நைட் ஊருல எவ்வளவு சொத்து மதிப்பு இருக்குனு கேட்டு வைச்சிரு. மாப்பிள்ளையும் நீயும் சென்னையில வேலை பார்க்குறீங்க! உன்னோட மச்சாண்டார் குடும்பம் ஊருக்குள்ளயே இருந்துட்டு அத்தனை சொத்தையும் அனுபவிக்குறாங்க! நீ நைசா பேசி மாப்பிள்ளைக்கு சேர வேண்டிய சொத்தை தனியா எழுதிக்கொடுக்கச் சொல்லி வாங்கிட்டு சென்னைக்கு வந்துடுங்க. இப்படி மாப்பிள்ளை அடுத்தவன் கிட்ட வேலை செய்து கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டியதில்லை. அப்பா பிஸ்னஸ்ஸையெல்லாம் மாப்பிள்ளையே பார்த்துக்கட்டும்” என்று மகளை தன்னுடன் வைத்துக்கொள்ள சுயநலமாக தூபம் போட்டார்.
 
தங்கபாண்டியன் அம்மா சொல்வதை ஒரு காலமும் கேட்கமாட்டான் என்று ஆர்த்திக்கு தெரியும். இருந்தாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல ஒரு தடவை பேசிப்பார்ப்போம் என ஹாலுக்கு வந்தாள் ஆர்த்தி.
 
“கோல்ட் வாங்களேன் அப்படியே தோட்டத்துப்பக்கம் நடந்துட்டு வரலாம்” என்று தங்கபாண்டியனை தோட்டத்துக்கு அழைத்தாள் ஆர்த்தி. 
 
“ஈவ்னிங்  ஐஞ்சு மணிக்கு ப்ளாட்டுக்கு கிளம்பணும். அப்பத்தா நாளைக்கு வெள்ளிக்கிழமை பால் காய்ச்சி சமையல் பண்ண சொல்லியிருக்காங்க! இப்பவே மணி நாலு ஆகிடுச்சு. இங்கேயே நீ பேச வந்ததை பேசி முடி” என்று வாட்ச்சை பார்த்தான். தண்ணீர் குடிக்க போன தங்கபாண்டியன் காதில் சங்கரி பேசியது கேட்டுவிட்டது. அதனால் தான் ஆர்த்தியை பேச வேண்டியதை இங்கயே பேசு என்றான் தங்கபாண்டியன் அழுத்தமாக.
 
ஆர்த்தியோ அவனின் அழுத்தமான பேச்சில் சற்று தயங்கிக்கொண்டிருக்க காபியுடன் வந்த சங்கரியோ “மாப்பிள்ளை காபி எடுத்துக்கோங்க” என்று சர்க்கரை போல இனிக்க இனிக்க பேசினார்.
 
“எனக்கு காபி வேண்டாம் அத்தை மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு” என்று சங்கரி கையால் காபி குடிப்பது கூட அவனுக்கு பிடிக்காமல் போனது.
 
“பேசுடி” என்று மகளுக்கு கண்ஜாடை காட்டிச் சென்றார் சங்கரி.
 
“கிளம்பலாமா ஆர்த்தி உன் ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா?” என்று எழுந்து நின்றான்.
 
“கோல்ட் உங்க கிட்ட பேசணும்” என்றதும் “பேசு” என்று சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
 
“அ.அது எங்க வீடே மூணு பேமலி தங்கறது போல பெருசா இருக்கு. நாம ஏன் ப்ளாட்டுக்கு போகணும்? நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு என்னை விட்டு எங்கம்மாவால இருக்க முடியாதுங்க பாவம்! வேணும்னா ப்ளாட்டை வாடகைக்கு விடலாமே” என்று பட்டென்று கூறிவிட்டாள்.
 
“என்னடி என்னை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கலாம்னு பார்க்குறீயா? உன்னை இப்படி பேச சொல்லி உன்னோட அம்மா ஓதி விட்டாங்களா? நீங்க ரெண்டுபேரும் பேசினதை நான் கேட்டுட்டேன்! நான் மதுரைக்காரன்டி! என்னை என்ன முதுகெலும்பு இல்லாதவன்னு நினைச்சியா? வீட்டோட மாப்பிள்ளையா தங்க வச்சிடலாம்னு ப்ளான் போடுறீங்களா?” என்று கோபம் கொண்டு சற்று குரலை உயர்த்தியே பேசினான்.
 
மகேஷ்வரன் தன் கிளைண்ட்டிடம் ஆபிஸ் ரூமில் பேசிக்கொண்டிருந்தார். “எதுக்கு சத்தம் போடுறீங்க? மெதுவா பேசுங்க அப்பா பிஸ்னஸ் பேசிட்டிருக்காங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் ஆர்த்தி.
 
“அப்ப ஒழுங்கு மரியாதையா பெட்டியை எடுத்துக்கிட்டு கிளம்புற வழிய பாரு. உங்கம்மாவுக்கு உன்னை விட்டு பிரிய மனசில்லைனா நம்ம கூட வந்து தங்க சொல்லு! உங்கம்மாவுக்கு சாப்பாடு போடுற அளவு நான் சாம்பாதிக்குறேன்டி” என்று சமையலறையில் நின்றிருந்த சங்கரியின் காதுக்கு கேட்கும்படியே பேசினான் தங்கபாண்யடின். 
 
கோபக்காரன் என்று தெரிந்து தான் தங்கபாண்டியனை லவ் பண்ணினாள் ஆர்த்தி. அபீஸில் வேலை விசயத்தில் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் வேலை வாங்குவான். யார் தப்பு செய்தாலும் யார் இருக்கிறார்களென பார்க்கமாட்டான் பைலை தூக்கி முகத்திலேயே விட்டெறிந்து விடுவான். ஆர்த்தியே ஒரு நாள் தப்பு செய்து தங்கபாண்டியனிடம் வசமாக மாட்டிக்கொண்டு திட்டு வாங்கியிருக்கிறாள்.
 
ஆர்த்தியோ அப்படியே நின்றிருக்க “ஆர்த்தி நான் கிளம்புறேன் உங்கப்பாவை கொண்டு வந்து விடச்சொல்லு” என்று கார் கீயை எடுத்துக்கொண்டு திரும்ப “கோல்ட் பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்” என்று தன் அறைக்குள் சென்றவள் பேக்கை எடுத்துக் கொண்டு ஓடிவந்தவள் “அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்பா” என்று கண்களால் கெஞ்ச “ம்ம் சீக்கிரம் போய்ட்டு வா” என்று கையில் சாவியை சுழட்டிக்கொண்டிருந்தான் தங்கபாண்டியன்.
 
ஆர்த்தி சமையலறைக்குள் சென்றதும் “நீ சுத்த வேஸ்ட் ஆர்த்தி உன் புருசனை கைக்குள்ள போட்டுக்க தெரியலை என்ன பொண்ணு நீ” என்று முகத்தை தூக்கி வைத்தார் சங்கரி.
 
“ம்மா நான் தங்கபாண்டியனை உயிருக்கு உயிராய் விரும்புறேன். ராமன் இருக்க இடம்தான் சீதை இருப்பா என்னை மன்னிச்சிடும்மா நான் போன் பண்ணுறேன்” என்று சொல்லியவள் வேகமாய் வெளியே வந்தாள்.
 
‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்தான் அப்புறம் தான் உன் உயிர் காதல் சாயம் வெளுக்கும் இந்த அம்மாகிட்ட வந்து சொல்லுவ பாருடி’ என்றார் பணத்தாசை பிடித்த சங்கரி.
 
மகேஷ்வரன் பிஸ்னஸ் மீட்டிங் முடிந்து வெளியே வந்தவரிடம் “நாங்க கிளம்புறோம் மாமா நாளைக்கு பால் காய்ச்சுறோம் நீங்களும் அத்தையும் வந்துடுங்க” என்று தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாமனாரை வீட்டுக்கு அழைத்தான்.
 
மகேஷ்வரன் பிஸ்னஸ் மேன்தான் ஆனால் சங்கரி போல பணப்பேய் கிடையாது. “நாளைக்கு நாங்க வந்துடறோம்! பொண்ணை பார்த்துக்கோங்க” என்றவர் “சங்கரி தாம்பூலம் கொண்டு வா” என்றதும் பவ்யமாய் தாம்பூலத்தை கொண்டு வந்தார் சங்கரி. 
 
தங்கபாண்டியன் சங்கரியின் முகத்தை பார்க்க கூட இல்லை. தாம்பூலத்தில் சில பணக்கட்டுகளும் பட்டுப்புடவையும் பட்டு வேஷ்டி சட்டையும் இருக்க பணத்தை கையில் எடுத்தவன் “இந்த பணம் எனக்கு வேண்டாம் மாமா நான் விரும்பினது உங்க பொண்ணைமட்டும்தான்” என்றதும் இந்த காலத்தில் பணத்தை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா என்று பிரமித்துப்பார்த்தார் சங்கரி.
 
“ட்ரஸ் மட்டும் எடுத்துக்குறோம் மாமா” என்றவனோ “ஆர்த்தி சேலை வேஷ்டியை எடுத்து பேக்குல வச்சிக்கோ” என்று சொல்லி நிமிர்வுடன் நின்றான்.
 
‘அப்பா பணம் கொடுக்கும் போது வேண்டாம்னு சொல்றது அவரை அவமானப்படுத்தறது போல இருக்கும்’ என்று மனதிற்குள்தான் அவளால் நினைக்க முடிந்தது. அந்த இடத்தில் எதுவும் பேசமுடியாமல் சேலையையும் வேஷ்டியையும் மட்டும் எடுத்து பேக்கில் வைத்துக்கொண்டு “நாங்க கிளம்புறோம்பா” என்றவளுக்கு கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.
 
“அழாதடா அப்பாவும் அம்மாவும் காலையில வரோம்” என்று மகளின் தலையை தடவிக்கொடுத்தார். “கிளம்பலாம் ஆர்த்தி?” என்றான் தங்கபாண்டியன்.
 
அடுத்த நாள் மகேஷ்வரனும் சங்கரியும் அதிகாலையில் வந்துவிட்டனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களை மட்டும் கூப்பிட்டிருந்தான் தங்கபாண்டியன். அந்த ப்ளாட்டில் இருப்பவர்கள் அவனது ஆபிஸில் வேலை செய்பவர்கள் காலையில் டிபன் கேட்டரிங்கில் ஆர்டர் செய்திருந்தான். அறுவடை இருக்க தனபாக்கியம் குடும்பத்தில் யாரும் வர முடியவில்லை. பூஜை நடந்ததை வீடியோ எடுத்து அனுப்பியிருந்தான். டிபன் வந்ததும் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
 
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் சந்தனபாண்டியன் வாங்கிப்போட்டு விட்டான். மகேஷ்வரனோ தன் சொந்தத்தில் தேடியிருந்தாலும் இப்படியொரு மருமகன் கிடைத்திருக்கமாட்டான் என்று தங்கபாண்டியனை நினைத்து பெருமைதான் பட்டார். 
 
மகளுக்கு எதுவும் செய்யவில்லையே என்று வருத்தம் மகேஷ்வரனுக்கு இருந்தது. அவரின் முகத்தின் கவலை சாயலை கண்டவனோ “மாமா உங்க பொண்ணுக்கு செய்ய நினைக்கறதை நீங்க செய்யலாம்” என்றான் புன்முறுவலுடன்.
 
“நான் சம்பாதிச்சது முழுக்க என் பொண்ணுக்குத்தான் மாப்பிள்ளை. அவளுக்கு சேர வேண்டிய நேரத்துல செய்துடுவேன்” என்றார் புன்னகையுடன்.
 
அன்று சமையல்கட்டில் பொருட்களை எல்லாம் அடுக்கி கொடுத்துவிட்டுச் சென்றார் சங்கரி.
 
அன்றிரவு சட்னி அரைத்து தோசை சுட்டிருந்தாள். அதற்கே சலித்துக்கொண்டு சமைத்து முடித்தாள் ஆர்த்தி.
 
தங்கபாண்டியன் சாப்பிட்டு முடித்தவுடன் “கோல்ட் நாம சமைக்க ஆள் போட்டுக்கலாமா! எனக்கு காலையில நேரமே எழும்ப முடியாது! எங்க வீட்ல நான் ஏழுமணிக்கு எழும்புவேன் அம்மாவே சமையல் செய்து முடிச்சிருப்பாங்க! நான் குளிச்சி முடிச்சு சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி வந்துடுவேன்! இப்போ நானே சமையல் செய்து வீடு பெருக்கி வீடு கழுவி எல்லாம் வேலையும் செய்ய கஷ்டம் பா” என்று பாலிசாக பேசினாள் ஆர்த்தி.
 
“நான் உன்னை லவ் பண்ணுறதுக்கு பதிலா ஒரு வேலைக்கார பொண்ண லவ் பண்ணியிருக்கலாம்டி! ஏன் நம்ம பக்கத்து ப்ளாட்ல இருக்க சித்ராக்கா எல்லாம் வேலையும் செய்துட்டு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு தானே ஆபிஸ் வராங்க! நம்ம வீட்டு வேலையை நாமதான் செய்யணும்டி! நானும் காலையில சமையல் பண்ணும்போது உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்! வீட்டு வேலைக்கு ஆள் எல்லாம் வேண்டாம். அதுவும் என் பொண்டாட்டி கையால சமைச்சதை நான் சாப்பிடணும்னு எனக்கு ஆசைடி” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன் “சீக்கிரம் ரூம்க்கு வா டி” என்று கண்ணடித்து சென்றுவிட்டான் தங்கபாண்டியன்.
 
‘ம்க்கும் ரூம்க்கு மட்டும் சீக்கிரமா போகணுமாம். இந்த பாத்திரங்களை யார் கழுவி வைப்பாங்க’ என்று டைனிங் டேபிள் மேல் இருந்த இரண்டு தட்டு ஒரு குழம்பு பாத்திரத்தை கழுவி வைக்க புலம்பிக்கொண்டுச் சென்றாள் ஆர்த்தி. 
 
பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு பால் காய்ச்சி எடுத்துக்கொண்டுச் சென்றாள். தங்கபாண்டியனோ தனபாக்கியத்திடம் பேசிக்கொண்டிருந்தான் வீடியோ காலில்.
 
“தங்கம் புது வீடு நல்லா அமைப்பா இருக்குப்பா! ஆபிஸ் லீவு கிடைச்சதும் ஊருக்கு வந்துடுங்க குலதெய்வக் கோவிலுக்கு பொங்கல் வைக்கணும்பா!” என்றதும் “சரி அப்பத்தா அடுத்த வாரம் வீக் எண்டுல வந்துடறோம்! நந்து குட்டி எங்க காணோம் கண்ணுலயே இருக்கான் அப்பத்தா” என்று கேட்டுக்கொண்டிருக்க “சித்தா எப்படியிருக்க எப்போ ஊருக்கு வருவ? வரும் போது எனக்கு பிடிச்ச சாக்லேட் நாலு! பெரிய டெடிபியர் பொம்மை வேணும்” என்று பெரிய லிஸ்ட் போட்டு சொல்லிக்கொண்டிருந்தான்.
 
“நீ கேட்ட எல்லாம் சித்தப்பா வாங்கிட்டு வரேன்டா செல்லக்குட்டி சித்தப்பாக்கு கொடுக்கற மாமுல் முத்தம் கொடு” என்றதும் “உம்மா” என்று போனில் முத்தம் கொடுத்தான் நந்தன்.
 
ஆர்த்தியோ கன்னத்தில் கை வைத்து தங்கபாண்டியன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். “நந்து குட்டி உன் சித்தி உன்கிட்ட பேசுறாளாம்” என்றவன் “நந்தன் பேசு” என்று போனை கொடுத்தான் ஆர்த்தியிடம்.
 
“நான் பேசல” என்று சொல்ல வாயெடுக்க போனை ஆர்த்தியின் முகத்தின் முன்னே நீட்டி விட்டான். “ஹாய் சித்தி எப்படியிருக்கீங்க?” என்று மழலைக்குரலில் கேட்டான் நந்தன்.
 
“நான் நல்லாயிருக்கேன்பா நீ எப்படியிருக்க?” என்று சிரித்த முகத்துடன்தான் கேட்டாள்.
 
“ஓ நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம். நீங்க ஊருக்கு வாங்க என்கிட்ட இருக்க திங்க்ஸ் எல்லாம் காட்டுறேன். நான் நிறைய ட்ராயிங் வரைஞ்சு வச்சிருக்கேன் சித்தி. எனக்கு சந்தன சித்தப்பா நான் ட்ராய்ங் பண்ண சார்ட் போர்டு, கலர் பென்சில் இன்னும் நிறைய பொருள் வாங்கித்தருவாரு” என்று தன் சித்தப்பாக்களை புகழ்ந்து தள்ளினான் நந்தன்.
 
ஆர்த்தியோ அப்பா முடியல சாமி சித்தப்பா புராணம் என்று மனதில் நினைத்தாலும் “அப்படியா சந்தோசம்பா சித்தப்பாகிட்ட போனை கொடுக்குறேன்” என்று போனை கொடுத்து விட்டு கட்டிலில் படுத்துவிட்டாள் ஆர்த்தி.
 
தங்கப்பாண்டியன் போன் பேசி வைத்தவன் “ஆர்த்தி எழும்புடி” என்றதும் “எனக்கு தூக்கம் வருது கோல்ட் நீங்க இன்னும் உங்க அண்ணன்கிட்ட போன் பேசலையே பேசி முடிங்க நான் தூங்குறேன்” என்று சலிப்பாக பேசி கண்ணை மூடினாள்.
 
“இதுக்குதான் நான் இந்த லவ் எல்லாம் வேணாம் எனக்கு செட் ஆகாதுனு சொன்னேன். நீதான் என்னை விடாம துரத்தி துரத்தி லவ் பண்ணின” என்று பேசி அவளை வெறுப்பேத்தினான்.
 
இப்போது எழுந்து உட்கார்ந்தவள் “ஆமாயா நான்தான் உன் கிட்ட லவ் சொன்னேன்! உன் பின்னாடியே நாய் போல சுத்தினேன்! என்ன பண்றது உன்னை எனக்கு பிடிச்சு தொலைச்சிடுச்சே! என் மனசுக்குள்ள வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டியே! என்ன பண்ண! நீ பேசறதை கேட்டுத்தானே ஆகணும்! இப்ப என்ன பண்ணனும் சொல்லுங்க சார்” என்றாள் கண்ணை உருட்டி.
 
“லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். அடுத்து சம்சார வாழ்க்கையை ஆரம்பிப்போமா பொண்டாட்டி” என்று அவளது நெற்றியில் முட்டி “ஐலவ்யுடி இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க. அதுவும் இந்த இடுப்பு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது” என அவளது இடையை பிடித்து தன்னோடு இறுக்கி அவளது கன்னத்தில் முத்தம் பதித்தான். 
 
“நல்லா பேசியே மயக்குடா” என்று பேச்சை ஆரம்பிக்க அடுத்து பேச விடாமல் அவளது இதழில் தேன் அருந்த ஆரம்பித்தான் தங்கபாண்டியன்.
 
ஆணவனின் முத்தத்தில் மூச்சு விட சிரமப்பட அவளின் இதழுக்கு சிறிது விடுதலை கொடுத்து அவளின் ஆப்பிள் கன்னத்தை கொஞ்சமாய் கடித்துக் கொண்டான். “ஆஆ வலிக்குதுடா” என்று அவன் கன்னத்தை தள்ளிவிட “இந்த முத்தத்துக்கே வலிக்குதாடி அப்புறம் என்னை எப்படி தாங்குவ?” என்று அவள் காதில் சில்மிஷம் பேசினான்.
 
“சீசீ போடா நான் மாட்டேன்” என்று அவன் முகத்தை தள்ளிவிட “எனக்கு ஃபுல் மீல்ஸ் வேணும்டி” என்று அவளை கட்டிக்கொண்டு கட்டிலில் சாய்த்தான்.
 
அடுத்து என்ன நடக்கப்போகுது என்ற அச்சம் அவள் கண்களில் தெரிய “சாஃப்டா நடந்துப்பேன்டி பயப்படாத பெயின் வந்தா மட்டும் சொல்லு! நாளைக்கு ட்ரை பண்ணுவோம்! என்றதும் “நான் தாங்குவேன்” என்று கண்ணடித்தாள் ஆர்த்தி.
 
“அப்படியா பேச்சு மாறக்கூடாதுடி ஆரம்பிப்போமா” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அச்சாரம் போட்டான். கண் இமைகளில் அவளின் கதுப்பு கன்னத்தில் முத்தம் கொடுத்து அவளது கழுத்தோரம் மீசையெனும் தூரிகையால் பொன்மேனியை மீட்ட ஆரம்பித்தான்.
 
அவனது கைகளோ அவளது மாராப்பை விலக்கி விட்டிருக்க அவனது தேடலில் அவளுக்கு ஆடை விலக்கியதும் தெரியாமல் போனது. கழுத்து பச்சை நரம்புகள் அவனது நாவு பட்டு புடைத்துக்கொண்டு வந்தது. பெண்ணவளின் காந்த உடலை தன் இரும்பு தேகத்தோடு ஒட்டிக்கொண்டான் இறுக்கமாக. கட்டிலில் கட்டி புரண்டனர் இருவரும்.
 
ஆர்த்தியின் ஆடை விலக்கி அப்சரஸாக தெரிந்த பெண் சிற்பத்தை கண்டு எச்சில் விழுங்கினான் தங்கபாண்டியன். அவனது முரட்டு கைகள் அவளது வலுவலுப்பான தேகத்தில் வலுக்கிக்கொண்டு போனது. அவளது அங்க வளைவுகளில் முகம் பிரட்டி அவளுக்கு சோதனை கொடுத்தான்.
 
“ஏய் கடிக்காதடா” என்று உதடு கடித்தாள் பெண்ணவள்.
 
“ம்ம் இதெல்லாம் என்னோட ப்ராபர்டி எனக்கு எல்லாம் வேணும்டி” என்று அவளுடைய தேகத்தில் இதழ் கொண்டு வண்ணக்கோலம் போட்டான். அவளது நாபியில் முத்தம் கொடுத்து பெண்ணவளை சிலிர்க்க வைத்தான். அவனது வேகம் கண்டு அவளுக்கு பயம் வந்துவிட்டது. “மெதுவா கோல்ட்” என்று அவனது எழுச்சியை கண்டு பெருமூச்சு விட்டாள்.
 
அவன் விடும் உஷ்ண காற்றில் மெழுகாக உருகினாள் மங்கை. மெல்ல மெல்ல அவளுக்கு முத்தம் கொடுத்து கொடுத்து அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். “கோல்ட் பெயினா இருக்கு” என்று சிணுங்கினாள். அப்படியே அவளது இதழைக் கவ்விக்கொண்டு அவளது அச்சம் தெளிந்ததும் அவளை ஆள துவங்கினான். “ஆஆ ஆருஊஉ” என்று அவளுள் மூழ்கி முத்தெடுத்து உச்சம் பெற்று பிதற்றினான் ஆண்மகன். கூடல் முற்றுப்பெற்றதும் அவளை விட்டு இறங்கியவன் “ரொம்ப பெயினா இருக்காடி ஆயிட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்” என்று எழுந்தவன் ட்ராவை திறந்து ஆயிட்மெண்ட் எடுத்து வந்து அவள் பக்கம் உட்கார்ந்தான்.
 
“அச்சோ எனக்கு வலியில்லடா பயமா இருந்துச்சு அதான் கத்திட்டேன் சாரிடா. அடுத்த முறை சத்தம் போட மாட்டேன்” என்று அவனை பிடித்து தன்மேல் போட்டுக்கொண்டாள் பெண்ணவள். அந்த அறையில் ஆண்மகனின் அனல் மூச்சு பெண்மகளின் சிணுங்கல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.
 
அடுத்து வந்த நாட்கள் இருவருக்குமே சொர்க்கம்தான். ஆர்த்திக்கு குழந்தை இப்போது வேண்டாம் என்று தோன்ற தங்கபாண்டியனுக்கு தெரியாமல் கருத்தடை மாத்திரை சாப்பிட ஆரம்பித்தாள். கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தால் தன் அழகு போய்விடும் தன்னை கவனிக்க மாட்டான் என்று தப்புக் கணக்கு போட்டு பெரிய தவறை செய்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
 
கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆபிஸிலோ தங்கபாண்டியன் சீனியர் ஆபிஸர் ஒருவன் “டேய் மாப்பிள்ளை ஏதும் ப்ளான்ல இருக்கீங்களா என்ன? உனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆச்சுல்ல அதான் கேட்டேன்!” என்றதும் “அப்படி இல்ல மச்சான் ஒருவருசம் தானே ஆச்சு குழந்தை வரும் நேரம் வரும்” என்று தோளைக்குலுக்கினான்.
 
“இப்ப எல்லாம் கல்யாணம் ஆகி ஆறு மாசம் குழந்தை இல்லைனாவே ஹாஸ்பிட்டல் போறாங்கடா உங்களுக்கு ப்ராப்ளம் இல்லைனாலும் ஒரு செக்கப் பண்ணுறதுல என்ன ஆகிடப்போகுது! என் சொந்தகாரங்க ஒரு பேமிலி இப்படித்தான் அசால்டா இருந்தாங்க அப்புறம் பார்த்தா ஐவிஎஃப் பண்ணினாத்தான் குழந்தைனு சொல்லிட்டாங்க! எதையும் முன்னால பார்த்துக்கறது சேஃப் பாண்டியன்” என்று அவனை எச்சிரிக்கை பண்ணினான் தங்கபாண்டியனின் சீனியர்.
 
தங்கபாண்யடினுக்கு மீட்டிங் இருக்க அன்றிரவு தாமதமாகத்தான் வீட்டுக்குச் சென்றான் ஆர்த்திக்கு  வயிறு வலி இருக்க அனத்திக்கொண்டு படுத்திருந்தாள்.
 
அறைக்குள் சென்ற தங்கபாண்டியனோ “ஆருமா என்னாச்சு படுத்திருக்க காய்ச்சல் அடிக்குதோ?” என்று நெற்றியை தொட்டு பார்த்தான்.  
 
“கோல்ட் ஸ்டொமெக் பெயினா இருக்கு என்னால முடியலை !” என்று கண்ணீர் விட்டாள். அப்போதே ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்றான் தங்கபாண்யடின். ஆர்த்தி தான் கருத்தடை மாத்திரை சாப்பிடுவது டாக்டரிடம் சொன்னால் தானே தெரியும் என்று மெத்தனமாக இருந்தாள்.
 
ஆர்த்தியை செக் பண்ணிய டாக்டரோ “கல்யாணம் ஆகி எத்தனை வருசம் ஆகுது?” என்றதும் “ஒரு வருசம் ஆச்சு டாக்டர்! என் வொய்ப்க்கு ஏதாவது பிரச்சனையா?” என புருவம் சுருக்கி பதட்டத்துடன் கேட்டான் தங்கபாண்டியன். 
 
“இல்ல உங்க வொய்ப் பேபி வேண்டாம்னு பில்ஸ் எடுத்திருக்காங்க பில்ஸ் எடுத்தா இப்படி ஸ்டொமக் பெயின் வரும் அதான் கேட்டேன்! இப்ப பெயின் குறைய இன்ஜக்சன் போட்டிருக்கேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் பெயின் குறைஞ்சிடும்! ஆனா இனி பில்ஸ் போடக்கூடாது கர்ப்பபை வீக்கா இருக்கு உங்க வொய்ப்க்கு” என்றவர் மாத்திரையை எழுத ஆரம்பித்தார். 
 
ஆர்த்தி நான் பில்ஸ் போடலைனு சொல்லி இருந்தா கூட டாக்டர் எதோ சொல்லுறாங்கனு நினைச்சுருப்பான் தங்கபாண்டியன். ஆனால் ஆர்த்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவள் குழந்தை வேண்டாம் என்று பில்ஸ் சாப்பிட்டது உண்மை என நம்பிவிட்டான்.
 
தங்கபாண்டியன் ஆர்த்தியின் மேல் கடும் கோபத்தில் இருந்தான். இவள் செய்தது மகா பாவம் துரோகம் இங்கே வைத்து இவளை எதுவும் பேசக்கூடாதென எண்ணியவன் ஆர்த்தியை முறைப்பதோடு நிறுத்திக்கொண்டான்.
 
மாத்திரையை வாங்கிக்கொண்டு வந்தவன் ஆர்த்தியின் முகம் கூட பார்க்கவில்லை. காரை வேகமாக ஓட்டி வந்தவன் வீடு வந்ததும் ஆர்த்தி இறங்கி வருவதற்குள் லிப்ட்டில் ஏறிவிட்டான். தவறு செய்துவிட்டோமென்று இப்போதுதான் ஆர்த்திக்கு புரிந்தது. அச்சோ இவரு வேற கோபத்துல இருக்காரே என்று பயந்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள். இப்போது வயிறு வலியும் குறைந்துவிட்டது ஆர்த்திக்கு.
 
ஆர்த்தி வீட்டுக்குள் வந்ததும் “ஏன் டி இப்படியொரு ஈனச் செயலை செய்த? எங்க வம்சத்துல கல்யாணமான அடுத்த மாசம் கன்சீவ் ஆகிடுவாங்க அடுத்த வருடம் குழந்தை பிறந்துடும்டி. நான் கூட நாம ஏதாவது பாவம் செய்துட்டோமோனு எங்க குலதெய்வத்துக்கு வேண்டுதல் வச்சிருக்கேன்டி! இப்படியொரு கேவலமான காரியத்தை செய்துட்டு என்கிட்ட குழைஞ்சிருக்க. மாசம் மாசம் என் பொண்டாட்டி நான் கன்சீவ்வா இருக்கேனு சொல்வானு ஆசையா காத்திருந்தேன்டி அறிவு கெட்டவளே! எனக்கு துரோகம் செய்துட்ட ஆர்த்தி! என் முகத்துல முழிக்காதடி!” என்று அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்திவிட்டான்.
 
“கோல்ட் ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் இனிமே நான் மாத்திரை சாப்பிட மாட்டேன் கதவை திறங்க” என்று கதறினாள் ஆர்த்தி.
 
“சித்தப்பா சாப்பிட அப்பத்தா கூப்பிடுறாங்க” என்று நந்தன் தங்கபாண்டியனின் தோளை தொட்டான்.
 
பழைய நினைவுகளில் இருந்தவன் “இதோ வரேன் கண்ணா” என்று நந்தனை தூக்கிக்கொண்டு டைனிங் ஹால் சென்றான் தங்கபாண்டியன்.  
 

4 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top