ATM Tamil Romantic Novels

நிலவு 8
 
 
தனபாக்கியமும் தேன்மொழியும் சாப்பிட வந்தனர். அங்கே சந்தனபாண்டியனுக்கு வளர்மதி சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தாள். தேன்மொழியோ ‘அச்சோ மாமா சாப்பிடுது நாம தள்ளியே உட்காருவோம் முத்தம் கித்தம் கொடுத்துப்புட்டா என்ன பண்ணுறது மானம் போயிடும்’ என பயந்தவள் சந்தனபாண்டியன் பக்கம் உட்காராமல் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சாப்பிட உட்கார்ந்தாள்.
 
எதிரே உட்கார்ந்து சாப்பிட்ட தேன்மொழியை பார்த்த சந்தனபாண்டியனோ ‘அந்த பயம் இருக்கணும்டி’ என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு சாப்பிட்டு கை கழுவினான். தனபாக்கியத்திற்கு இரண்டு ராகிதோசை மட்டும் சுட்டுக்கொண்டு வந்து தட்டில் வைத்தாள் வளர்மதி. 
 
ஹாலில் உட்கார்ந்து அண்ணன் தம்பி மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அருள் பாண்டியனோ “தங்கம் நீ எத்தனை நாள் லீவு போட்டு வந்திருக்க?” என்றான். 
 
“15 நாள் லீவு போட்டிருக்கேன் அண்ணா. இதுக்கு மேல லீவு எடுக்க முடியாதுண்ணா! எனக்குனு நிறைய பொறுப்பு கொடுத்துருக்காங்க! எங்க கம்பெனி சில முக்கியமான பைல்களில் எல்லாம் என்னோட கையெழுத்து இல்லாம ஒரு வேலையும் நடக்காது. லீவு போடுறதுக்கு முன்னாடியே நான் என் வேலையை முடிச்சு குடுத்துட்டு தான் வந்திருக்கேன்” என்றான் தங்கபாண்டியன்.
 
சந்தனபாண்டியனோ “அண்ணே நீ அடுத்தவன் கிட்ட கை கட்டி வேலை பார்க்கறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை” என்றான் வருத்தமாக. 
 
“ஆமா தங்கம் நம்ம சர்க்கரை ஆலை செங்கல் சூளை நமக்கு இருக்க மாட்டுப்பண்ணை தோட்டம் துரவு இதையெல்லாம் பார்க்கறது நாம ஆளைப்போட்டு வேலை செய்யுறோம். பேசாம வேலையை விட்டுட்டு நம்ம ஊருக்கே வந்திடுடா எங்களுக்கும் கஷ்டமா இருக்கு! உன்னை திருவிழா பொங்கல்னாத்தான் நேர்ல பார்க்க முடியுது! அப்பத்தாவும் நீயில்லாம ஏதாவது சாப்பிட மாட்டேன்கிறாங்க. தங்கத்துக்கு மீன் வறுவல் பிடிக்கும். தலைக்கறி அவனுக்கு பிடிக்கும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்கடா! அவங்க நீ வந்தாதான் கறிக்குழம்பே ஊத்தி சாப்பிடறாங்க தெரியுமா! நீ எப்ப வருவனு உனக்காக ஏங்கி தவிக்கிறாங்கடா” என்றான் அருள்பாண்டியன் ஆதங்கமாக.
 
“எனக்கும் உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க முடியலைதான் ஆனா நான் படிச்ச படிப்பு வீண் போயிறக்கூடாதுதான் சென்னையில வேலை செய்யுறேன் அண்ணா! சீக்கிரம் ஊருக்கு வரப்பார்க்குறேன்” என்று பெருமூச்சு விட்டு பேசிக்கொண்டிருக்க தனபாக்கியமும் தேன்மொழியும் சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தனர்.
 
சந்தனபாண்டியனின் விழிகள் தேன்மொழியின் மீது படிந்தது. சுடிதாரில் அழகான குட்டி தேவதை போல இருந்தவளை மேலிருந்து கீழ் வரை அளவெடுத்தான். 
 
தேன்மொழியோ ‘குறுகுறுனு பார்க்குது இந்த மீசை’ என தலையை தாழ்த்திக்கொண்டு ஷாலின் நுனியை திருகிக்கொண்டிருந்தாள்.
 
தனபாக்கியமோ தங்கபாண்டியன் பக்கம் உட்கார்ந்தவர் “என்ன மூணு பேரும் தீவிரமா பேசிட்டிருந்தீங்க! நான் வந்ததும் பேச்சை நிறுத்தியாச்சு! எனக்கு தெரியாம என்னடா பேரன்களா சிதம்பர ரகசியம் பேசுறீங்க” என்று விளையாட்டாக நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் தனபாக்கியம்.
 
“உனக்கு தெரியாம என்ன அப்பத்தா நாங்க பேசிட போறோம்” என்றான் தங்கபாண்டியன் தனபாக்கியம் தோள்மீது கையை போட்டு.
 
“நீ என்னடி நின்னுக்கிட்டு இருக்கவ! மேல போட்டிருக்க ஷாலை பிச்சு எறிஞ்சிராத! இங்கன வந்து என்பக்கம் உட்காரு. உன் மாமன்கள் தானே இருக்காங்க மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காரு” என்று அவளின் கையை பிடித்து தன் பக்கம் உட்கார வைத்தார் தனபாக்கியம்.
 
‘இப்ப எனக்கு தூக்கம் வருதுனு சொன்னா! சும்மா உனக்கு தூக்கம் வருமானு என்ற புருசன் அதட்டி கேட்பாரு! எல்லார் முன்னாடியும் அவமானமாய் போயிடும்! கொஞ்ச அப்படியே அப்பத்தா பக்கம் உட்காருவோம்! கொட்டாவி விட்டோம்னு பாவம் பார்த்து அவங்களே தூங்க போகச் சொல்லிடுவாங்க!’ என்று மனதில் நினைத்தவாறு தனபாக்கியம் பக்கம் உட்கார்ந்தாள் தேன்மொழி.
 
“அருளு இந்த திருவிழா முடிஞ்சதும் சந்தனபாண்டியனுக்கும் தேன்மொழிக்கும் நம்ம சொந்தபந்தங்களை கூப்பிட்டு ஒரு ரிசப்சன் வச்சிடுவோம். அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிச்சிடுங்கப்பா! தங்கம் நீ உன் அண்ணனுக்கு கூடமாட இருந்து ரிசப்சன் வேலையை செய்து கொடுத்துரு. அப்புறம் அக்காவையும் மாமாவையும் கூப்பிடுங்க! பொண்ண பெத்த முறைக்கு! நாம கூப்பிடறதுதான் மரியாதை! அவங்க வரதும் வாராததும் அவங்க விருப்பம். உன் மாமா என்ன பேசினாலும் மறுவார்த்தை பேசக்கூடாது. நம்ம வீட்டு பொண்ணு அங்க இருக்கானு நினைப்பு உங்க மூணுபேர் மனசிலயும் இருக்கட்டும். அதுக்காக தன்மானத்தை இழந்து நிற்க வேணாம். அவன் உங்களை வெளியோ போகச் சொன்னா பேசாம வந்துடுங்க! அவங்களை கூப்பிடுவது நம்ம முறை அதை சரியா செய்துடணும் பேராண்டிகளா. ரிசப்சனுக்கு பட்டுப்புடவை அப்புறம் இந்த நகை நட்டுனு என்ன வேணுமோ நம்ம வளரையும் ஆர்த்தியையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துடுங்க!” என்ற அடுக்கடுக்காக பொறுப்புகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார் தனபாக்கியம்.
 
“அப்பத்தா தேன்மொழிக்கு நகையெல்லாம் நான் வாங்கிடுறேன்” என்றான் முந்திக்கொண்டு சந்தனபாண்யடின்.
 
“சரி நாளைக்கு நீயே தேன்மொழியை கூட்டிட்டு போய் வாங்கிக்கொடுத்து கூட்டியாந்திரு” என்றவர் “என்ன தேனு குட்டி உன் மாமன் கூட போயிட்டு வந்துடறியா?” என்று குனிந்துக் கொண்டிருக்கும் தேன்மொழியை கேட்டார்.
 
“நா.நான் நீங்களும் வாங்களேன் அம்மாச்சி! எனக்கு நகையை பத்தி ஒண்ணும் தெரியாது! நீங்க வந்தா அடிச்சு பேசி நகையை வாங்குவீங்க” என்று சந்தனபாண்டியனுடன் தனியா போக பயம் கொண்டு தனபாக்கியத்தை துணைக்கு அழைத்தாள்.
 
“நாளைக்கு நடவு இருக்குடி! நான் தோட்டத்துல இருக்கணும்! ஆளுங்களுக்கு வேலையை பிரிச்சு கொடுக்கணும்! அதெல்லாம் என்னோட பேராண்டிக்கு நகை எப்படி வாங்கணும்னு தெரியும் நீ புறப்பட்டு போற வழியை பாரு! வா தூங்க போகலாம்!” என்றவரோ “ரொம்ப நேரமாச்சு தூங்கற வழியா பாருங்க” என்று மூன்று பேரன்களிடம் கூறி தனபாக்கியம் எழுந்தார்.
 
“அப்பத்தா நான் உங்க கூட பேசணும்” என்றான் சந்தனபாண்டியன் தயங்கியபடி
 
தேன்மொழியோ சந்தன பாண்டியனை பார்க்க  அவனோ “கிளம்புடி” என்று உதடசைத்தான். 
 
“அப்பத்தா நீங்க பேசிட்டு வாங்க! எனக்கு தூக்கம் வருது” என்றவள் “அருள் மாமா நான் தூங்கப்போறேன்” தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து குடுகுடுவென்று ஓடிவிட்டாள்.
 
“நாங்க ரெண்டு பேரும் இங்கன இருக்கலாமா தம்பி?” என்றான் அருள்பாண்டியன் கிண்டலாக.
 
“அண்ணா நீங்க இருங்க நான் தேன்மொழியை போக வைக்கத்தான் அப்படி பேசினேன்” என்றான் தயக்கமாக.
 
“நான் சும்மா கேலி செய்தேன்டா நீ பேசு” என்றதும். 
 
“நான் தேன்மொழி கழுத்துல தாலி கட்டினது உங்களுக்கு எல்லாம் என் மேல கோபம் இல்லையே! ஏன் கேட்குறேனா நம்ம தேன்மொழி சின்னப் பொண்ணு இப்பதான் காலேஜ் இரண்டாவது வருசம் படிக்குறா! திடீர்னு தாலி கட்டினது எனக்கே ஒரு மாதிரி சங்கடமா இருக்குது. தேவி அக்கா என் கிட்ட வந்து நீதான் என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தணும்னு அவ கழுத்துல தாலி கட்டிருனு சொல்லுச்சு அப்பத்தா! அந்த தென்னரசு பயலுக்கு நம்ம தேனுவை கொடுக்கறதுக்கு என் மனசுக்கு ஒப்பு வரலை. அதான் உங்க யாரையும் ஒரு வார்த்தை கலந்துக்காம தாலி கட்டிப்புட்டேன்! ஆனா நீங்களும் என்னை ஒரு வார்த்தை ஏன்டா தேனு கழுத்துல தாலி கட்டினேன் ஒரு அதட்டல் கூட போடலை! உங்க மனசுல என்ன நினைக்குறீங்கனு தெரிஞ்சுக்க விருப்பப்படுறேன்! நான் தப்பு செய்துட்டேனா அப்பத்தா?” என தனபாக்கியத்தின் தோளில் சாய்ந்தவனுக்கு கண்கள் கலங்கியது.
 
“அட கிறுக்குப் பயலே! நீ செய்தது தப்பு கிடையாது. அந்த நாசக்காரன் நாகப்பன் குடும்பத்துக்கு நம்ம பேத்தி வாழப்போறது எனக்கு மட்டும் இனிக்குமா என்ன! நானே உன்கிட்ட தேனு கழுத்துல தாலி கட்டச்சொல்லியிருப்பேன்! என்ன நீயா முந்தி தாலி கட்டிப்புட்ட நீ செய்தது தப்பே கிடையாது ராசா! இனிமே அந்த நாகப்பன் சும்மா இருக்கமாட்டான் நம்ம குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்ணப் பார்ப்பான் நாம தான் சூதானமா இருக்கணும் பேராண்டிங்களா! அவன் அடிப்பட்ட பாம்பு போல காத்திருப்பான் நம்மளை பழிவாங்க! எச்சரிக்கையா இருக்கணும். வளருவையும் மார்க்கெட்டுக்கு தனியா போக வேண்டாம்னு சொல்லிடு அருளு! நந்தனை ஸ்கூல் வேன்ல அனுப்பாம நீயே அவனை கூட்டிட்டு போயிடு சாயந்தரம் நீயே கூட்டிட்டு வந்துடு அருளு” என்றவர்,
 
தங்கபாண்டியனிடம்  திரும்பி “அடுத்து இந்த ஆர்த்தி பொண்ணு எங்கயும் போகமாட்டா இருந்தாலும் அவளை தங்கம் நீ கூடவே கூட்டிட்டு போய்ட்டு வந்துடு. தேன்மொழிக்கு நீதான் பாதுகாப்பா இருக்கணும் சந்தனபாண்டி” என்று மூவரையும் விழிப்போடு இருக்கச் சொன்னார் தனபாக்கியம்.
 
“சரி அப்பத்தா நாங்க பார்த்துக்குறோம் நீங்க கவலைப்படாதீங்க! எங்க மூணு பேரையம் மீறி என்ன பண்ணிடுவானுங்க அந்த நாகப்பனும் அவன் பையன் தென்னரசுவும்! ஒரு மண்ணும் புடுங்க முடியாது” என்றனர் மூன்று பேரன்களும் தனபாக்கியத்திடம்.
 
“எதிரியை அப்படி சுலபமாக எடை போட்டிறாதீங்கப்பா நாம நாலா பக்கமும் கண்ணு வச்சிருக்கணும் பேராண்டிங்களா” என்றவர் “சரி எல்லாரும் போய் தூங்குங்க” என்று பெருமூச்சு விட்டு எழுந்து அறைக்குச் சென்றார் தனபாக்கியம். 
 
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கென்ன என்று ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.
 
“இவ இப்படி தூங்குறாளே நாளைக்கு என் பேராண்டி இவ கூட எப்படித்தான் குடும்பம் நடத்தப்போறானோ தெரியலை” என புலம்பிக்கொண்டே படுத்து கண்ணை மூடினார்.
 
தங்கபாண்டியன் அறைக்குள் வந்ததும் கதவை லாக் செய்து விட்டு கட்டிலை பார்க்க ஆர்த்தி போனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தாள். சட்டையை கழட்டி வைத்து கட்டிலுக்கு வந்தவன் எதுவும் பேசாமல் படுத்துவிட்டான். தன்னிடம் வந்து சண்டை கட்டுவான் என்று எதிர்பார்த்த ஆர்த்திக்கு ஆச்சரியமாய் இருந்தது.
 
அவளுக்கு மனது கேட்கவில்லை. என்ன சண்டைபோட்டாலும் கோல்ட் என்கிட்ட பேசேன் சாரி நான் பேசினது தவறு தான் என்று அவனிடம் மன்னிப்பு கேட்பாள் இப்பவும் கணவனிடம் பேச வேண்டுமென்று தான் தூங்காமல் காத்திருந்தாள். ஆனால் தங்கபாண்டியனோ இந்த வீட்டில் இருக்கும் வரை சண்டைபோடக்கூடாதென அமைதியாக படுத்துவிட்டான்.
 
“கோல்ட் ஏன் எதுவும் பேசாம படுத்துட்டீங்க! என் மேல இன்னும் கோபம் போகலையா! எப்பவும் நைட் படுத்தவுடன் ஹக் பண்ணி முத்தம் கொடுப்பீங்க தானே இப்ப எங்க முத்தம் கொடுக்கலையே?” என்றவள் அவனை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்க எண்ணி வாயை விட்டாள்.
 
“இப்ப உனக்கு முத்தம்தான் முக்கியமாடி!” என்று சட்டென்று எழுந்தவன் அவளை இதழில் முரட்டுத்தனமாக முத்தமிட ஆரம்பித்தான்.
 
அவளோ அவன் தரும் முத்த தண்டனையை விரும்பியே ஏற்றுக்கொண்டாள். அவள் மூச்சு விட சிரமப்பட்டாலும் அவன் கொடுக்கும் முத்தத்தை தாங்கிக்கொண்டு அவனுக்கு சமமாக முத்தம் கொடுத்தாள். அவனது கையை எடுத்து இடுப்பில் வைத்தாள் அவளாக. அவனுக்கோ அவள் மீது கோபம் அதை நேரடியாக காட்டாமல் அவளது இடுப்பில் அழுத்தத்தை கூட்டினான். எப்போதும் அவனது தேடல் மென்மையாகத்தான் இருக்கும். இன்றோ வன்மையை கூட்டினான்.
 
இந்த தங்கபாண்டியன் ஆர்த்திக்கு புதிதாகத்தெரிந்தான். என் கோல்ட் என்ன பண்ணாலும் நான் ஏத்துக்குவேன் என்று அவனுக்கு ஈடுகொடுத்தாள் பெண்ணவள்.  அவனோ அவளது முகம் முழுவதும் வேகமாக முத்தம் கொடுக்க அவளும் சளைத்தவள் இல்லை என்பதாக அவன் மார்பு முடியை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க அவனோ அவளது நைட்டியின் பொத்தானை பிய்த்து போட்டு அவளது தனங்களில் முகம் புதைத்து ஆவேசமாய் முகம் புரட்டினான். அதிரடி தேடல் அவளை பிதற்றச் செய்தது. “நீ என்ன செய்தாலும் தாங்குவேன் கோல்ட்” என்று மோகத்தில் உளறினாள். 
 
ம்ம் என்று அவள் இரட்டைதிமில்களில் அவன் உதடுகளால் அழுத்தம் கொடுக்க அவளோ உதடு கடித்து அவனது தலையை 
அழுத்திப்பிடித்துக்கொண்டாள். தடுக்கிறாளா வலிக்கிறது என்று அவனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவனுக்கு கோபமும் ஆசையும் சேர்ந்து வர அவளிடம் சற்று இன்று வன்மையை காட்டினான்தான்.
 
அவளது மேனி முழுவதும் இச் இச்சென்று வேகமாய் முத்தமிட ஆரம்பித்தான். காதலையும் கோபத்தையும் ஒரு சேர காட்டினான். இன்றைக்கோ அவளும் அவனிடம் அதிகம் தேடினாள். இருவருமே கட்டில் உடையும் அளவிற்கு காம சண்டை போட்டனர். நீயா நானா என்று போட்டி போட்டனர். யாருமே தோற்கவில்லை காமபண்டிகையில். அவளுடன் அடுத்து அடுத்து என்று கலந்துக் கொண்டே இருந்தான். அவளோ இன்று சோர்வே இல்லைபோல “ம்ம் ம்ம்” என்று முனகல் கொண்டு அவனை தாங்கிக்கொண்டிருந்தாள். அவளது உடல் மொழி சோர்வை சொல்லவில்லையென்றாலும் அவளது கண்களில் இருந்த சோர்வை கண்டு பெரும்மூச்சுவிட்டு அவளிடமிருந்து விலகினான். 
 
“ஏன் டா போதுமா என் மேல கோபம் போச்சா கோல்ட்” என்று அவனது மார்பு மீது சாய்ந்துக் கொண்டாள்.
 
“போடி” என்று அவளை விலக்கிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான். அவனுக்கோ அவளை புரட்டி எடுத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சி மேலோங்க கண்களில் கண்ணீர்  வந்தது. ‘ஏன் டி இப்படி சில்லியா நடந்துக்குற?’ என்று அவன் மனதில் கேட்டுக்கொண்டான்.
 
ஆர்த்தி விடாமல் அவனை கட்டிப்பிடித்தாள். “கையை எடுடி இன்னும் உடம்பு புண்ணாகணுமா?” என்றான் எரிச்சலாக.
 
“நீ என்ன பண்ணினாலும் எனக்கு உன்மேல கோபம் வராது கோல்ட்! நீ என்கிட்ட பேசினாதான் நான் தூங்குவேன்” என்று அவனிடம் தர்ணா செய்தாள்.
 
“ம்ம்” என்று இதழ் குவித்து ஊதியவன் திரும்பி படுத்து “இங்கிருந்து போகும் வரை எங்க வீட்டுல இருக்க யார் மனசும் புண்படாம பேசுறேன் சத்தியம் பண்ணிக்கொடுடி” என்றான் கோபமாக.
 
“நான் உன் மதினிக்கிட்ட பேசினதை வச்சு தானே சொல்ற! பின்னே என் பர்சனலில் தலையிட்டது அவங்க தப்புடா! இது என் தப்பு ஒண்ணுமே இல்லை” என்றாள்.
 
“நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக மனசாட்சி இல்லாமல்.
 
“ஏன் டி இப்படி இருக்க அரக்கி! நாளைக்கு காலையில நீ என் மதினிகிட்ட மன்னிப்பு கேட்கணும் அப்பதான் நான் உன்கூட பழையபடி பேசுவேன்” என்றான் கடுப்பான குரலில்.
 
“எனக்கு மன்னிப்பு கேட்க பிடிக்கலைதான். ஆனா உனக்காக கேட்குறேன்! மறுபடியும் உங்க மதினி என் பர்சனல் விசயத்துல தலையிடக்கூடாது எனக்கு பிடிக்கலை. அப்புறம் நான் இங்கிருந்து எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் பார்த்துக்கோ! ஒண்ணும் இல்லாம வந்தவ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறாங்க” என்றாள் திமிராக.
 
தங்கபாண்டியனுக்கோ கோபம் தலைக்கேறியது. “வாடி இப்பவே ட்ரெயின் ஏத்திவிடறேன்! உன்னை போல பாசம் நேசம் தெரியாத உன்னை போல ஜந்துக்கள் எல்லாம் எங்க வீட்டுல இருக்ககூடாது” என்று அவளது கையை பிடித்து இழுத்தான்.
 
“உன்கிட்ட சண்டைபோடக்கூடாதுனுதான் அமைதியாய் படுத்தேன். என்னை உசுப்பிவிட்டு குளிர்காய்ஞ்சிட்டு வாய் பேசுற நீயெல்லாம் பொண்ணாடி” என்று எரிந்து விழுந்தவன் “எழும்பி குளிடி இப்பவே சென்னைக்கு டிரெயின் ஏத்தி விடறேன்” என்று அவளை தூக்கிக்கொண்டு போய் குளியலறைக்குள் விட்டான்.
 
“கோல்ட் நான் நீங்க இல்லாம கிளம்பமாட்டேன்! நான்தான் மன்னிப்பு கேட்குறேன் சொல்லிட்டேன்ல” என்று அழுக ஆரம்பித்தாள்.
 
“ஸ்ப்பா உன்னோட எனக்கு தலைவலிடி” என்று தலையை அழுந்தக்கோதிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவன் ஷவரை திறந்துக் கொண்டு நின்றுவிட்டான் தன் கோபம் தீரும் வரை. அவளோ அழுதுக் கொண்டே நின்றாள். 
 
“நீ அழுதுட்டே இருடி” என்று குளித்து முடித்தவன் வெளியே வந்து டீசர்ட் பேண்டுடன் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்.
 
ஆர்த்தியோ குளித்து முடித்து வந்தவள் “நான் என்ன தப்பா பேசிட்டேன் இவன் என்னை தனியா சென்னைக்கு போகச் சொல்லுறான்! நீ இல்லாம எங்கயும் போகமாட்டேன்!” தான் பேசியது தவறே இல்லை என்று நியாயம் பேசி அழுதுக் கொண்டே உறங்கிவிட்டாள் ஆர்த்தி.
 
தங்கபாண்டியனோ தூக்கம் வராமல் நடந்துக் கொண்டே இருந்தவன் ஒரு கட்டத்தில் அப்படியே மொட்டை மாடியிலிருந்த கல் பெஞ்சில் படுத்துவிட்டான்.
 
வீட்டிற்குச் சென்ற பொன்மணியோ ‘என்னை ஏமாத்தி என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சிட்டீங்கல்ல டா பாண்டியன்களா உங்களை சும்மா விடமாட்டேன்!’ என்று தன் பெண்களை பிரிந்த ஆற்றாமையுடன் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் புறங்கையை கட்டிக் கொண்டு நடந்துக் கொண்டிருந்தார்.
 
தேவியோ கணவனின் கோபத்தை அறிந்தவர் மெதுவாக பொன்மணியின் முன்னே நின்று “என்னங்க சாப்பாடு சாப்பிட வாங்க” என்றவரோ கணவரின் முகத்தையே பார்த்த படி கையை பிசைந்துக் கொண்டு நின்றார்.
 
“இப்ப சாப்பாடு தான் ரொம்ப முக்கியம்! உன்னோட புருசனை உன் தம்பிங்க ஊருக்கு நடுவே நிக்க வச்சது மூக்கறுத்தது உனக்கு தெரியலை ஹான்! என்ன பேச்சு பேசுறானுங்க உன் தம்பிங்க நான் பார்த்து வளர்த்துவிட்ட பசங்க! என் வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டானுங்க இவனுங்க எப்படி எல்லாம் வாழ்ந்துடறாங்கனு நான் பார்க்குறேன்! என் மனசு வேகுதுடி என் பொண்ணை என்கிட்டயிருந்து பிரிச்ச பாவம் உன் தம்பிகளை சும்மாவிடாது!” என்று சாபம் விட்டு பொரிந்து தள்ளினார் கோபத்தில்.
 
“என்னங்க நம்ம பொண்ணு என் தம்பிய கல்யாணம் பண்ணியிருக்கா!  இப்படி அபசகுனமா பேசாதீங்க நம்ப பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினைங்க ரெண்டு பொண்ணு பெத்தோம்! மூத்தவ இப்ப மாசமா வேற இருக்கானு கேள்விப்பட்டேன். நல்ல குடும்பத்துலதானே வாக்கப்பட்டு போயிருக்கா! அவங்க நம்ம பொண்ணை தலைமேல் தூக்கி வச்சி கொண்டாடுறாங்க! இப்போ சின்னவளும் யார் வீட்டுக்கு போயிருக்கா! நான் வளர்ந்த வீட்டுக்கு தானே போயிருக்கா! அவ நல்லா வாழணும்னு வாழ்த்தாட்டியும் பரவாயில்லைங்க சாபம் மட்டும் விடாதீங்க! பெத்த மனசு வலிக்குது” என்று கண்ணைக் கசக்கினார் தேவி.
 
“இங்க நின்னு நீயும் என் ஆத்திரத்தை கொட்டிக்காதேடி! ஒழுங்கா சாப்பிட்டு தொலை பிரசர் வந்து மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்து என் உசிரை வாங்காதே!” என்று எரிந்து விழுந்ததும் “நீங்க இல்லாம நான் ஒருவாய் கூட சாப்பிட மாட்டேன்” என்றதும் “போட்டு தொலை வரேன்”  என்று டைனிங் டேபிளுக்கு வந்தார் பொன்மணி.
 
பொன்மணி நல்ல குணம் படைத்தவர்தான்! என்ன தான் வளர்த்த பசங்க தன் பேச்சுக்கு மீறி தன் நெஞ்சிலேயே குத்திட்டாங்க என்று ஆதங்கமும் ஈகோவும் தலை தூக்கி அவரை கெட்டவன் ஆக்கியது. இந்த சமயத்தை பயன்படுத்தி நாகப்பன் பொன்மணியின் மூலையை சலவை செய்து தன் மகன் தென்னரசுவுக்கு தேன்மொழியை கல்யாணம் செய்து வைக்க ப்ளான் செய்தார் நாகப்பன். அவர் திட்டத்தை எல்லாம் தவிடு பொடி ஆக்கிவிட்டான் சந்தனபாண்யடின்.
 
நிலவு 9
 
 
தென்னரசுவோ தான் ஆசைப்பட்ட தேன்மொழியின் கழுத்தில் சந்தனபாண்டியன் தாலிகட்டி கூட்டிச்சென்று விட்டானே என்ற ஆத்திரத்தில வீட்டுக்கு வந்ததும் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்துக்கொண்டிருந்தான். 
 
நாகப்பனோ “டேய் ஏன் டா இப்படி எல்லா பொருளையும் போட்டு உடைக்குற! நான் சம்பாரிச்சு வாங்கினது!” என்று மகன் கையில் தூக்கிய கண்ணாடி டீபாயை வாங்கி ஓரமாக வைத்தார்.
 
“ஹான் தேன்மொழியை எனக்கு கட்டிவைக்குறேன் ஆசைவார்த்தை காட்டிட்டு! இப்போ சந்தனபாண்டியன் அவ கழுத்துல தாலி கட்டிட்டான்! நான் ஆசைப் பட்டவ எனக்கு கிடைக்காம போய்ட்டாளேனு வருத்தமா இருக்கேன். நீங்க என்னடானா என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க! ஊருக்குள்ள நீங்கயெல்லாம் பெரியமனுசன்னு சொல்லாதீங்க வெட்கமா இருக்கு! எனக்கு தேன்மொழி வேணும். தாலி தானே கட்டினான் அந்த சந்தனபாண்டியன் அவனை கொன்னு போட்டுட்டு அந்த தேன்மொழியை எனக்கு கட்டி வைங்க” என்று நாகப்பனை சீண்டிவிட்டான் தென்னரசு.
 
நாகப்பனோ “நீ கேட்டு முதன் முறை நான் வாங்கிக்கொடுக்காம இருக்கறது தேன்மொழிதான் தென்னரசு! கவலைப்படாத அந்த தேன்மொழி பொண்ணை உனக்கு பொண்டாட்டியா கூட்டிட்டு வரேன்” என்றார் நாகப்பன். அவர் குலம் நாசம் அடைய அவருக்கு கிரகம் வேலை செய்ய ஆரம்பித்தது.
 
இராவணன் அழிந்தது பெண்ணால் என்று உலகமே அறியும் அது போல பெண் ஆசை பிடித்த மிருகம் தென்னரசு! இப்போது தேன்மொழி மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூ என்று தெரிந்தும் தேன்மொழி மீது ஆசைப்படுகிறான் என்றால் அவன் என்ன ஜென்மமாக இருப்பான்! 
 
காலையில் அருள்பாண்டியனும் தங்கபாண்டியனும் பொன்மணியின் வீட்டுக்குச் செல்ல தயாராகி வயலுக்குச் செல்லும் தனபாக்கியத்திடம் வந்து நின்றனர் இருவரும். சந்தனபாண்டியனோ தேன்மொழிக்கு நகை வாங்கிக்கொடுக்க கிளம்பி வந்தவன் அண்ணன்கள் ரெண்டுபேரும் என்னை விட்டு தனியா கிளம்பி நிற்குறாங்க என்னனு போய் கேட்போம் என தாடையை தேய்த்துக்கொண்டே தனபாக்கியத்தின் அருகே சென்றான் சந்தன பாண்டியன்.
 
“அப்ப நாங்க கிளம்புறோம் அப்பத்தா” என்று இருவரும் ஒரு சேர சொல்ல சந்தன பாண்டியனோ அண்ணன்கள் இருவரும் தேவி அக்கா வீட்டுக்குத்தான் போகிறார்கள் என்று யூகித்தவன் “அண்ணா நானும் உங்ககூட வரேன்” என்று முழங்கையின் சட்டையை மடக்கிக்கொண்டு அருள் பாண்டியன் முன்னே வந்து நின்றான்.
 
காரியம் கெட்டுச்சு போ என்று தலையை உலுக்கிய தனபாக்கியமோ “அடேய் கடைக்குட்டி நீ உன் அக்கா வீட்டுக்கு போக வேணாம் உன்னை பார்த்ததும் உன் மாமன்காரன் வானத்துக்கும் பூமிக்கும் தய்யா தக்கானு குதிப்பான். அருளு உன் மாமன்கிட்ட பொறுமையா பேசுவான்! அவன் பேச்சை காது கொடுத்து கேட்பான் உன் மாமன் பொன்மணி” என்றார் சிலாகித்து.
 
“அப்பத்தா அவர் அடிச்சாலும் நான் வாங்கிப்பேன் நான்தானே அவர் பொண்ணு தேன்மொழி கழுத்துல தாலி கட்டினேன்! அக்கா வீட்டுக்கு நான் போவது தானே முறை!” என்று வாதம் செய்தான் சந்தனபாண்டியன்.
 
“அடேய் விவரம் கெட்டவனே! நீ போய் சண்டையை பெரிசு பண்ணிடுவ. அப்புறம் காலம் முழுக்க உன் அக்கா நம்ம வீட்டுக்கு வர முடியாம பண்ணிடுவான் உன் மாமன் எப்படி வசதி!” என்று கிடுக்குபிடி போட்டார் தனபாக்கியம்.
 
அருள்பாண்டியனோ “தம்பி அப்பத்தா நீ எங்களோட வர வேண்டாம்னு சொன்னா உன் நல்லதுக்குத்தான் சொல்லுவாங்க” என்று சந்தன பாண்டியனின் தோளில் கையை போட்டான்.
 
தங்கபாண்டியனோ “டேய் நேத்து நீதானே தேனுகுட்டிக்கு நகை வாங்கித்தர கூட்டிட்டு போறேனு சொன்ன இப்ப என்ன எங்க கூட வரேன் அடம் பிடிக்குற சின்னபையன் போல பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது போல! உன் மாமனார் கூட பேச்சு வார்த்தை நடத்தி அவரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரோம்! நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு ஜாலியா நகைக்கடைக்கு போய்ட்டு வாடா” என்றான் நமட்டு சிரிப்புடன்.
 
“சரிங்கண்ணா ரெண்டும் பேரும் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் கூட வரேன் அடம்பிடிப்பது தவறு! நான் தேனுவை நகைகடைக்கு கூட்டிட்டு போறேன் ஆனா அவ இன்னும் கிளம்பியே வரலையே” என்று அப்பத்தாவின் அறையை பார்த்தான்.
 
தேன்மொழியோ லாங் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு கேட்ச் கிளிப் போட்டு முடியை இருபக்கமும் கூந்தலை ஃப்ரீயாக விட்டு ஒயிலாக நடந்து வந்தாள். பின்ன அவளை கிளம்பச் சொல்லி தனபாக்கியம் பட்ட பாடு அவருக்குத்தானே தெரியும்.
 
காலையில் ஏழு மணிவரை தூங்கியவளை படாத பாடுப்பட்டு எழுப்பியிருந்தார் தனபாக்கியம். அதுவும் உன் மாமன் சந்தனபாண்டியன் வாரான்! குளிச்சி ரெடியாகு என்றதும்தான் எழுந்தாள் தேன்மொழி! தடி எடுத்தால் குரங்கு ஆடுமே அது போல சந்தனபாண்டியன் பெயரை சொன்னால் சுவிட்ச் போட்டவுடன் மிக்சி போல வேகமாக ஓடினாள் தேன்மொழி.
 
குளித்து வந்தவள் “அம்மாச்சி நான் புடவையெல்லாம் கட்டமாட்டேன் எனக்கு இந்த புடவையை உடம்பு முழுவதும் கட்டிக்கிட்டு இருக்க முடியாது! கசகசனு ஒரு மாதிரி வெக்கையா இருக்கும்! என் இஷ்டப்படித்தான் உடுப்பு உடுத்துவேன்! சம்மதம்னா நான் நகைக்கடைக்கு போவேன் இல்லைனா இப்படியே படுத்து தூங்கிடுவேன் உன் பேரன் வந்து அடிச்சாலும் பரவாயில்லை” என்று திரும்பி நின்றாள்.
 
“எப்படியோ கிளம்பி வாடி” என்று வயலுக்கு போக கிளம்பி வந்தார்.
 
ஆர்த்தியோ நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தவளோ நம்மளையும் நகைக்கடைக்கு கூட்டிட்டு போனா நல்லாத்தான் இருக்கும். ஆனா என் கோல்ட் பர்மிசன் கொடுக்கணுமே என்று பெரும்மூச்சு விட்டு டிவியை பார்க்க ஆரம்பித்தாள். வளர்மதிக்கு நகை மீது ஆசை எப்போதும் இருந்ததில்லை. தனபாக்கியம் அவளுக்கு போட்ட நகையே பீரோவில் தூங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியே அருள் பாண்டியன் நகை வாங்கி வந்தாலும் தேவையில்லாத செலவு எதுக்குங்க என்று சொல்லி விடுவாள். ஆனால் அவன் கொடுக்கும் பரிசை தட்டாமல் வாங்கிக்கொள்வாள். அதனால் தான் அவர்களது தாம்பத்தியம் இன்று வரை இனித்துக்கிடக்கிறது. 
 
மயில்போல தோகை விரித்து வந்தவளை “என் ராசாத்தி என் கண்ணே பட்டிடும்” என்று நெட்டி முறித்தார் தனபாக்கியம்.
 
“அருளு மாமா நான் இந்த லாங்க் ஸ்கர்ட்ல எப்படி இருக்கேன்?” என்று ஸ்கர்ட்டை விரித்து பிடித்து ஒரு சுற்றிக்காட்டினாள்.
 
“நீ வெள்ளை மயில் போல இருக்க தங்கம்” என்று அக்காள் மகளை தோளோடு அணைத்துக்கொண்டான் அருள் பாண்டியன்.
 
“தங்கம் மாமா நீ எதுவும் சொல்லலையே?” என்று புருவம் உயர்த்தினாள்.
 
“உனக்கென்ன புள்ள நீ தான் தாமரை பூவாட்டம் இருக்க” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
 
அவளை ரசிக்க வேண்டியவனோ “இந்த உடுப்பை உடுத்திக்கிட்டு தான் நகைக்கடைக்கு என் கூட வருவியாடி! போய் தாவணி பாவாடை போட்டுக்கிட்டு வா” என்று அதட்டினான்.
 
“டேய் அவ சின்ன புள்ள அவளுக்கு விருப்பபட்டதை போட்டுகிட்டும். இன்னும் கொஞ்ச நாள் ஆனதும் சேலை கட்டி பழகிடுவா! ஆசையா போட்டுக்கிட்டு வந்த துணியை போய் மாத்த சொல்லுற என்ன பழக்கம் சந்தனபாண்டி” என்று குரலை உயர்த்தினான் தங்கபாண்டியன்.
 
“அண்ணே நான் காரணமாத்தான் இந்த லாங்க் ஸ்கர்ட் போட வேணாம்னு சொன்னேன்!” என்றவனோ “இவ என் முன்னாடி ரொம்ப குட்டிப்பொண்ணா தெரியுறா! நான் என்னமோ சின்னபுள்ளையை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு பேசுவாங்க! அதான் தாவணி பாவாடை போட சொன்னேன்” என்றான் நிதானமாக பின்னந்தலையை தடவிக்கொண்டு
 
சந்தனபாண்டியன் தன்னை சின்னப் பொண்ணு என்று சொன்னதும் நான் பெரிய பொண்ணாகி சடங்கு எல்லாம் வைச்சாச்சு இவரு என்ன என்னை சின்னபொண்ணுனு சொல்லறாரு என்று மனதில் எண்ணினாலும் சந்தனபாண்டியனிடம் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. “சரி நான் தாவணி பாவாடையே போட்டுக்கிட்டு வரேன் மாமா” என்று தனபாக்கியம் அறைக்குள் சென்றவள் பச்சைநிற பட்டுப்பாவாடையும் ரோஸ் வண்ண தாவணியும் போட்டுக்கொண்டு வந்தாள். 
 
“எந்த ட்ரஸ் போட்டாலும் என் பேத்தி அழகுதான்” என்று மீண்டும் தேன்மொழிக்கு நெட்டி முறித்தார் தனபாக்கியம்.
 
‘ம்க்கும் நாங்களும் இவ வயசா இருக்கும் போது இன்னும் அழகாத்தான் இருந்தோம் சும்மா கிழவி உசுப்பேத்தி பேசுது’ என்று கண் டிவி பார்த்தாலும் ஆர்த்தி மனம் முழுவதும் தேன்மொழி நகை கடைக்குச் செல்வதையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. 
 
நகை கடைக்கு போய் விட்டு வரும் வழியில் தன் காரை இரண்டு கார்கள் பின் தொடர்வதை கண்ணாடி வழியே பார்த்துவிட்டான் சந்தனபாண்டியன்.
 
 
 

2 thoughts on “”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top