ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

 நிலவு 16
 
 
 
“இதோ ஹாப் அன் ஹவர்ல ஆபீஸ்ல இருப்பேன்” என்று போன் பேசியபடியே ஹாலுக்கு வந்த தங்கபாண்டியனோ “ஆர்த்தி சாப்பிட என்ன செஞ்ச?” என்று கேட்டுக்கொண்டே சமையல்கட்டை எட்டிப்பார்த்தான்.
 
“சேமியா கிச்சடியும் சட்னியும் செய்திருக்கேன் கோல்ட்” என்றபடியே கிச்சடியை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் வைத்து தட்டு வைத்து கிச்சடியை பறிமாறினாள் தங்கபாண்டியனுக்கு. “நீயும் உட்கார்ந்து சாப்பிடு ! ரெண்டு பேரும் ஒண்ணாவே ஆபிஸ் கிளம்பிடலாம்” என்றவன் கிச்சடியை சாப்பிட ஆரம்பித்தான்.
 
“என்னை பார்க்கணும் போல இருக்குனு அம்மா கால் பண்ணியிருந்தாங்க கோல்ட்! நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் வந்துடறேன்” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
 
“உனக்கு லீவு தரமுடியாது. ஏற்கனவே நீ நிறைய லீவு போட்டிருக்க வேணும்னா ஈவ்னிங் போய்க்கோ சீக்கிரம் சாப்பிடு! எனக்கு மீட்டிங் இருக்கு” என அவளது கையை பிடித்து உட்காரவைத்து சாப்பிடச் சொன்னான். 
 
“ஒரு பர்மிஷன் கூட தரமாட்டியா கோல்ட்?” என்றவளின் குரல் கரகரத்து வந்தது.
 
“முடியாது நீ இப்போ சாப்பிட்டு வந்தா கூட்டிட்டு போவேன்! இல்லைனா பஸ் பிடிச்சு ஆபிஸ் வா! இன்னிக்கு நீ வரலைனா வேலைக்கே நீ வரவேண்டாம்” என சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவிவிட்டு தனது லேப்டாப் பேக்கை தோளில் மாற்றிக் கொண்டு கதவு வரை சென்றுவிட்டான். 
 
தம்பி சந்தனபாண்டியன் கல்யாணத்தை பற்றி குசலம் விசாரிக்கத்தான் மகளை உடனே வரச்சொல்லியிருக்கார் சங்கரி என்பது  தங்கபாண்டியனுக்கு நன்றாகவே தெரியும். 
 
சந்தனபாண்டியன் ரிசப்சனுக்கு ஆர்த்தியின் அப்பா மகேஷ்வரனை வரச்சொல்வதற்கு போன் போட்டார் தனபாக்கியம். மகேஷ்வரனோ “நான் யூஎஸ் கிளம்புறேன்மா என்னால வரமுடியாது சங்கரியை அனுப்பிவைக்குறேன்! என்னோட வாழ்த்தை சின்ன மாப்பிள்ளைக்கு போன்ல சொல்லிடறேன்” என்று போனை வைத்துவிட்டார் மகேஷ்வரன்.
 
ஆனால் சங்கரியோ மகேஷ்வரன் யூஎஸ் கிளம்பியதும் ஆர்த்திக்கு போன் போட்டு “உன் வீட்டுக்காரரும் அந்த கிழவியும் நேர்ல வந்து என்னை கூப்பிட்டாத்தான் ரிசப்சனுக்கு வருவேன்” என்று சொல்லிவிட்டார். 
 
ஆர்த்தியோ “அம்மா இங்க ப்ராப்ளம் நிறைய இருக்கு அவரால வரமுடியாது! நீ எனக்காக கிளம்பி வா” என்றாள். 
 
“போடி போக்கத்தவளே என்னோட கெத்தை நான் காட்ட வேண்டாமா! ஊருக்குள்ள தங்கபாண்டியன் மாமியார் மாமனார் வரலைனு கேட்பாங்கல்ல! நாங்க வரலைனா யாருக்கு அவமானம் உன் புருசன் குடும்பத்துக்குத்தான்! ஒழுங்கா உன் புருஷன்கிட்ட  எனக்கு மரியாதை வைச்சு கூப்பிடச் சொல்லு நான் வரேன்”  என்றார் சங்கரி திமிராக.
 
வெளியேச் சென்றிருந்த தங்கபாண்டியன் அறைக்குள் வர. ஆர்த்தி அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுவிட்டு சங்கரியின் மீது கடும்கோபம் கொண்டவன் ஆர்த்தியிடமிருந்து போனை பட்டென்று வாங்கியவன் “நீங்க ரிசப்சனுக்கு வரவேண்டாம் மாமியாரே! உங்களை போல கெட்ட எண்ணம் கொண்டவங்க  ஆசிர்வாதம் என் தம்பிக்கு தேவையேயில்லை! என்ன சொன்னீங்க எங்க ஊர்ல ஏன் உன் மாமியார் வரலைனு என்கிட்ட கேட்டா அவங்களுக்கு கொரோனா வந்துருச்சு! அதான் வரலைனு சாமாளிச்சுக்குவேன் போனை வைக்கட்டுமா மாமியாரே!” என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லி போனை வைத்துவிட்டான் தங்கபாண்டியன்.
 
“கோல்ட் அம்மாகிட்ட இப்படியா பேசுவாங்க! அதுவும் அவங்களுக்கு கொரோனா வந்துருச்சுனு சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும்ல ஏன் எங்கம்மாவை மட்டம் தட்டி பேசுறீங்க” என்று கோபித்துக்கொண்டாள் ஆர்த்தி.
 
“ம்ம் இங்க நடக்குற பிரச்சனை உனக்கு தெரியும்ல! நாம சென்னைக்கு போய் உங்கம்மாவை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமாடி! எங்க அப்பத்தா சென்னைக்கு போலாம்னுதான் சொன்னாங்க! நான் தான் போகவேண்டாம்னு தடுத்துட்டேன்” என்றவனோ “அந்த நாகப்பன் எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னு தெரியாது! இப்படி இக்கட்டான சூழ்நிலையில நாம் எப்படி சென்னைக்கு போய் உங்கம்மாவை அழைக்க முடியும். நல்ல மனசுக்காரியா இருந்தா உங்கம்மா வந்திருப்பாங்க. அவங்க மனசு முழுக்க விஷம் பரவிக்கிடக்குடி! உங்கம்மாவுக்கு போன் போட்டு சொல்லு இப்படியே உங்கம்மா நடந்துக்கிட்டாங்கன்னா தங்கபாண்டியனோட இன்னொரு முகத்தை பார்க்கும்படி ஆளாக நேரிடும்! இங்கிருந்து நாம சென்னை போகும் வரை உங்கம்மாகிட்ட நீ பேசக்கூடாது!” என்று கோவத்தில் கத்திச் சென்றிருந்தான்.
 
ஆர்த்தியும் சங்கரியிடம் போன் பேசவில்லை. அதான் மகள் சென்னை வருவதை தெரிந்துக் கொண்டு ஆர்த்திக்கு போன் போட்டு வரச்சொல்லிவிட்டார் சங்கரி. 
 
சங்கரியின் சால்ஜாப்பு தங்கபாண்டியனிடம் எடுபடாமல் போனது.
 
“ஒரு ஐஞ்சு நிமிசம் வெயிட் பண்ணுங்க சாப்பிட்டு வந்துடறேன்” என வெடுப்பாக பேசி அவசரமாக கிச்சடியை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ‘இவரு மட்டும் அண்ணா தம்பினு பாச மழை பொழியுவாரு நான் மட்டும் அம்மாவை பார்க்க போகக்கூடாதா’ என்று முணுமுணுத்துக்கொண்டே தட்டை சிங்கில் கழுவி வைத்து விட்டு வந்தவள் “போலாம்” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு
 
தங்கபாண்டியனோ தோளை குலுக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன் லிப்டின் முன் நின்றுவிட்டான். ஆர்த்தி வேகமாக வீட்டை பூட்டி விட்டு லிப்டின் பக்கம் வருவதற்குள் லிப்டிற்குள் நுழைந்திருந்தான். ஆர்த்தியும் லிப்டிற்குள் நுழைந்தவள் “நான் வரும்வரை வெயிட் பண்ணக்கூடாதா?” என்று பல்லைக்கடித்தாள்.
 
தங்கபாண்டியனோ அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாக்கெட்டில் வைத்திருந்த போனை எடுத்து “மீட்டிங்கிற்கு ஹால் ரெடியா கோவிந்த்?” என்று அவனது பி.ஏவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
 
“ம்ம் நான் பேசுவதை கேட்க பிடிக்கலையா கோல்ட்! இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட வருவில நான் யாருனு காட்டுறேன் உங்களுக்கு!” என்று மூச்சு வாங்க பேசிக்கொண்டிருந்தவளிடம் “என்ன பேசின சொல்லு! ஏதோ என் காதுல விழல” என்றான் தங்கபாண்டியன் வேண்டுமென்றே 
 
“நான் எதுவும் பேசலையே!” என் இதழ் சுளித்து லிப்ட் கீழ்தளம் வந்ததும் தங்கபாண்டியன் கையிலிருந்த கார்சாவியை பிடுங்கிக்கொண்டு காரை அன்லாக் செய்து காருக்குள் ஏறி உட்கார்ந்துக் கொண்டாள்.
 
‘சில்வண்டு ரொம்ப சத்தம் போடுறாளே! பூஜை போட்டு ரொம்ப நாள் ஆச்சு இன்னிக்கு போட்டிற வேண்டியதுதான்’ என்று தலையை குலுக்கிக்கொண்டு காரில் ஏறினான்.
 
ஆபிஸ் சென்றதும் தங்கபாண்டியன் ஆர்த்திக்கு ஹெட்டாக மட்டுமே நடந்துக் கொள்வான். அவளும் தங்கபாண்டியனின் மனைவி என்று சலுகை எதிர்பார்க்க மாட்டாள். எப்போதடா மாலையாகும் என்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.
 
மாலை ஐந்து மணி ஆனதும் தன் வேலைகளின் ரிப்போர்ட்டை தங்கபாண்டியனுக்கு ஈமெயில் அனுப்பிவிட்டு நான் கிளம்புறேன் என்ற மெசேஜை வாட்சப்பில் அனுப்பிவிட்டு சங்கரியை பார்க்கச் சென்றுவிட்டாள் ஆர்த்தி.
 
சங்கரி மகள் வரவிற்காக அவளுக்கு பிடித்த குலோப்ஜாமூனை செய்து வைத்து காத்திருந்தார். அவராக செய்யவில்லை. அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் செய்து வைத்தது. குலோப்ஜாமூனை சாப்பிட்டு மகள் தங்கபாண்டியன் வீட்டில் நடந்த கல்யாண கலாட்டாவை தெரிந்துக் கொள்ள அத்தனை ஆவல் சங்கரிக்கு. அடுத்த வீட்டு பிரச்சனை என்றாலே அவல் சாப்பிட்டது போல சங்கரி போல இருப்பவர்களுக்கு.
 
ஆர்த்தியோ வீட்டுக்குள் வந்ததும் ஹாலில் உட்கார்ந்திருந்த சங்கரியை ஓடி வந்து அணைத்துக்கொண்டு “மிஸ் யூ மா” என்று தாயின் கன்னத்தில் முத்தம் வைத்து அவர் பக்கம் ஒட்டி உட்கார்ந்தாள்.
 
சங்கரியோ “உனக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் செய்திருக்கேன்டி சாப்பிடு” என்றவர் குலோப்ஜாமூனை பவுலில் போட்டு ஆர்த்தியிடம் நீட்டினார்.
 
“ஐ மை ஃபேவரேட் குலோப்ஜாமூன்” என்று நாவை சுழட்டிக்கொண்டு குலோப்ஜாமூனை வாயில் போட்டவள் “வாவ் சூப்பரா இருக்குமா” என்றவள் இன்னும் ரெண்டு குலோப்ஜாமூனை சாப்பிட்டாள் ஆர்த்தி.
 
“ம்ம் என்னடி உன் கொழுந்தன் ரிசப்சன் எப்படி நடந்துச்சு! என்னைத்தான் உன் புருசன் கூப்பிடலை” என்று சலித்துக்கொண்டார் சங்கரி.
 
“ம்மா கோல்ட் அப்பத்தா அப்பாவுக்கு போன் செய்தாங்கல்ல! அப்பாதான் வெளிநாடு போயிருந்தாரு! வரமுடியலை நீ வந்திருக்கணும்ல! நானே உன்மேல கோவமா இருக்கேன் தெரியுமா! என் வீட்டுக்காரரை பத்தி தெரிஞ்சும் நீ அவரை போய் உன்னை வந்து கூப்பிடச்சொல்லுற! இந்த கல்யாண விசயத்துல நான் என் வீட்டுக்காரர் பக்கம்தான்! உன் பக்கம் நான் சப்போர்ட் பண்ணமாட்டேன் போ!” என்றவள் “அப்பா யூஎஸ்ல இருந்து எப்போ வராருமா அப்பாவையும் பார்த்து 2 வீக்ஸ்க்கு மேல ஆச்சு” என்றாள் வருத்தப்பட்டு.
 
“நாளைக்கு நைட் வந்துடுவேனு சொன்னாருடி இன்னிக்கு நைட் இங்கயே இரு!” என்று மகளை தங்கபாண்டியனிடமிருந்து ஒரு நாளாவது பிரித்து வைக்க திட்டம் போட்டார். 
 
“நோ! நோ! என்னால கோல்டை விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாதுமா! உன்னை பார்க்கணும்னு வந்தேன் பார்த்துட்டேன் கிளம்புறேன்” என்று பேக்கை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள் ஆர்த்தி.
 
“ஒருநாள் இந்த அம்மாகூட இருக்கமாட்டியா! உன் புருசன் தனியா இருந்தா யாரும் புடிச்சிட்டு போயிற மாட்டாங்க! உங்கப்பா இல்லாம எனக்கு தூக்கமே வரலைடி” என்றார் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு! 
 
ஆர்த்திக்கோ சங்கரியுடன் இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது. விடுவானா தங்கபாண்டியன். சங்கரியின் வீட்டின் முன்னே காரை நிறுத்தியவன் ஆர்த்திக்கு போன் போட்டான்.
 
“சொல்லுங்க கோல்ட்! நான் இன்னிக்கு அம்மா வீட்ல” என்று பேச ஆரம்பிக்க “ம்ம் நான் கேட் முன்னே நிற்குறேன் வா” என்று கத்தரித்தாற் போல பேசி போனை வைத்துவிட்டான்.
 
“ம்மா சாரி கோல்ட் வந்துட்டாரு! அப்பா நாளைக்கு வந்துடுவாருல்ல நீ ஒருநாள் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக்கோ” என்றாள் கண்ணைசுருக்கி.
 
“உன் புருசன் வந்துட்டா. நான் எல்லாம் காணாம போயிடறேன்! என்மேல உனக்கு பாசமே கிடையாதுடி ஒரே பொண்ணுனு கறிவேப்பிலை கண்ணுபோல வளர்த்து என்கூட ஒருநாள் வச்சு பார்க்க முடியலையே” என்று நீலிக்கண்ணீர் வடித்தார் சங்கரி.
 
“ம்மா இன்னொருநாள் வந்து தங்குறேன் நீ ஃபீல் பண்ணாத” என்று சங்கரிக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க தங்கபாண்டியனோ கார் ஹாரனை அழுத்திக்கொண்டிருந்தான்.
 
“ம்மா நான் கிளம்புறேன்” என்றவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது. 
 
தங்கபாண்டியன் மீது கொலைவெறியுடன் வந்தாள் ஆர்த்தி. சங்கரியின் பச்சோந்தி குணத்தை அறிந்துதான் ஆர்த்தியை சங்கரியுடன்  ஒருநாள் கூட தங்க அனுமதிப்பதில்லை தங்கபாண்டியன். 
 
ஆர்த்தி வந்ததும் அவள் முகம் பார்க்காமல் கார் கதவை திறந்து விட்டான் தங்கபாண்டியன். காரில் ஏறியதும் “ஏன் டா கொஞ்ச நேரம் என் அம்மாகூட இருக்கக்கூடாதா! அப்படி என்ன அவசரம்! அப்பா யூஎஸ்ல இருந்து வரலைனு அம்மா கவலையா இருக்காங்க! அவங்க கூட இன்னிக்கு நைட் இருக்கலாம்னு இருந்தேன்” என்றதும் உடனே கார் கதவை திறந்து விட்ட தங்கபாண்டியனோ “போ” என்றான் உர்ரென்று முகத்தை வைத்து. 
 
கணவன் கோபமாக இருக்கிறான் என்று தெரிந்து “நான்தான் அம்மாகூட இருக்கலைனு வந்துட்டேன்ல அப்புறம் என்ன இந்த கோபம் உனக்கு. நியாயமா பார்த்தா நான்தான் உங்க மேல கோபப்படணும்?” என்றாள் மூக்கு விடைக்க.
 
மெதுவாய் தலையை திருப்பிய தங்கபாண்டியன் “இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?” என்றான் கையை கட்டிக்கொண்டு.
 
“இன்னிக்கு என்ன தேதி?” என்று காருக்குள் இருந்த குட்டி காலேண்டரை பார்த்துவிட்டு “அச்சோ நான் எப்படி மறந்தேன் சாரி! சாரி! கோல்ட் நீங்க என்கிட்ட லவ் ப்ரோப்போஸ் செய்த டே நான் எப்படி மறந்தேன்! ரியலி சாரி கோல்ட் என்னை மன்னிச்சிடுங்க! ஐ லவ் யு கோல்ட்” என தங்கபாண்டியனின் முகத்தில் “இச் இச்” என்று முத்தமழை பொழிந்தாள் ஆர்த்தி.
 
“போதும்டி இது நடுரோடு வீட்டுக்கு போய் கொடு” என்று அவளை விலக்கி விட்டு அவள் இதழில் மெதுவாய் முத்தமிட்டு “நான் லவ் ப்ரோப்போஸ் பண்ணும்போது இந்த நாளை நான் மறக்கவே மாட்டேனு சொன்னே! இப்போ லவ் டேயை மறந்துட்டு! என்கிட்ட உங்கம்மா கூட இருக்க முடியலைனு சண்டைக்கு நிற்குற! இப்ப போய் உன் அம்மாவை பாரு அவங்க ப்ரண்ட்ஸ் கிட்ட ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க. நீ இல்லைனு அவங்களுக்கு கவலை இல்லை!  ஒருநாள் உன்கிட்ட இருந்து பிரிச்சு வைச்சு என்னை தனியா தவிக்கவிடணும் அதுதான் உங்க அம்மாவுக்கு ஆசை” என்றான் கடுப்பாக நெற்றியை தேய்த்துக்கொண்டு.
 
“அம்மா நல்லவங்கதான் கோல்ட் நீங்கதான் தப்பா புரிஞ்சிகிட்டீங்க” என்றாள் சோகமாய்.
 
“சரிடி உங்கம்மா ரொம்ப நல்லவங்கத்தான் என் மூடை ஸ்பாயில் பண்ணாதே” என்று காரை எடுத்தான்.
 
வீட்டுக்குள் சென்றதும் அதே கோவத்தில் இருந்தவன் டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச்சென்றான். இன்னொரு அறையில் குளித்துவிட்டு வந்த ஆர்த்தியோ ‘மீசைகார மச்சானுக்கு கோபம் மட்டும் எங்கிருந்து தான் வருதோ தெரியலை’ என்று நைட்டியை போட்டுக்கொண்டு ‘ஏதாவது சிம்பிளா சமைப்போம்’ என சமையல்கட்டுக்கு போகச் சென்றவள் அப்படியே நின்றுவிட்டாள்.
 
டைனிங் டேபிள் முழுவதும் சிக்கன் கிரேவி, ஃபிஷ் பிரை, சிக்கன் பிரியாணி, குலோப்ஜாமூன், முந்திரி கேக் என்று அவளுக்கு பிடித்த உணவுகள் இருந்ததை கண்டு விழி விரித்து பார்த்திருந்தாள். 
 
“என்னடி பிடிச்சிருக்கா என்னோட கிப்ட் இன்னொன்னும் இருக்கு” என்று ஆர்த்தியின் பின்னிருந்து அணைத்தவன் அவளை தன் புறம் திருப்பி ஒரு பார்சலை ஆர்த்தியின் கையில் கொடுத்தான் தங்கபாண்டியன்.
 
“கிப்டா என்ன?” என்று கணவன் கையிலிருந்த பார்சலை ஆசையாக கண்கள் மின்ன வாங்கி பிரித்துப்பார்க்க. அவளுக்கு பிடித்த ரெட் அண்ட் பிளாக் கலரில் டிசைனர் சாரி! சேலை முழுவதும் பட்டாம்பூச்சி டிசைன் போட்டிருந்தது. “தேங்க்யூ சோ கோல்ட்” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவளை “சேரி மாத்திட்டு வாடி சாப்பிட்டு கச்சேரி நடத்தலாம்” என கிக்கான குரலில் சொன்னவனிடம் “நீயே வந்து கட்டிவிடுடா” என்றாள் கண்ணடித்து.
 
“நான் உன்கூட வந்தா இதெல்லாம் நீ சாப்பிட முடியாது. இந்த சேலையை நீ கட்டிப்பார்க்க முடியாது பரவாயில்லையா” என்றான் உதடு மடித்து சிரித்தபடி
 
“ஹான் நீ வரவேண்டாம்டா எல்லாம் சாப்பிட்டு முடிச்சு கொண்டாடலாம்” என்று வெட்கப்பட்டுக்கொண்டு சேலையை கட்டி வரச்சென்றாள்.
 
சிலீவ்லெஸ் பிளவுஸ் சேரிக்கு மேட்சாக போட்டு சேலையை ஒற்றை ஃப்ளீட் விட்டு கட்டியவள் கண்ணாடியில் ஒரு முறை பார்த்தவள் ‘அழகா இருக்கடி’ என்று அவளாக கன்னம் கிள்ளி நெற்றியில் குங்குமம் வைத்து தங்க பாண்டியனுக்கு பிடித்த கண்ணாடி வளையல்களை எடுத்து கை நிறைய போட்டுக் கொண்டு வளையல்களை குலுக்கி பார்த்துவிட்டு ‘நாளைக்கு காலையில இந்த வளையல் எல்லாம் உடைஞ்சு போயிடும்’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே டைனிங் டேபிளுக்குச் சென்றாள். 
 
அப்சரஸ் போல வந்த தன் மனைவியை காதலாக கண் இமைக்காமல் பார்த்திருந்தான் தங்கபாண்டியன். “கோல்ட் என்ன இது இப்படி பார்க்குறீங்க” என்று கணவனின் கண்ணை கை கொண்டு மூடினாள் ஆர்த்தி.
 
அவளது கைக்கு முத்தம் கொடுத்து “தேவதை போல இருக்கடி!” என்று கையை விலக்கிவிட்டு “சாப்பிடுடி என்னால கன்ட்ரோல் பண்ணமுடியல” என்று தன் அவஸ்தையை அவளுக்கு சுட்டிக்காட்டினான் தங்கபாண்டியன்.
 
“யூ நாட்டி” என்று செல்ல சிணுங்கலுடன் “நீயே ஊட்டி விடு” என்று செல்லம் கொஞ்சினாள் ஆர்த்தி. இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்ததும் ஆர்த்தியை அள்ளிக்கொண்டான் கைகளில் தங்கபாண்டியன்.
 
அறைக்கதவை காலால் அடித்து மூடிவிட்டு காதல் மனைவியை கட்டிலில் பூ போல கிடத்திவிட்டு தானும் படுக்க போக ஆர்த்தியின் போன் சிணுங்க போனில் அம்மா என்று வர போனை ஆப் செய்தே விட்டான் தங்கபாண்டியன்.
 
“யாருங்க” என்ற ஆர்த்தியை “ராங் கால்டி நீ மாமனை கவனி” என்று அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட துவங்கினான்.
 
“அம்முஊஊ இன்னிக்கு நிறைய ரவுண்ட்டி” என்றான் அவள் காதில் இரகசிய குரலில். 
 
“ம்ம்” என்றாள் அவன் விரல் செய்யும் வித்தையில் சொக்கிப்போய்
 
அவளது நெற்றியிலிருந்து முத்தமிட ஆரம்பித்து இதழில் ஆழபுதைந்து அவளது இதழ் ரேகை தேயும் அளவிற்கு முத்தமிட்டு அவளை கொள்ளை அடிக்க துவங்கினான். கீழ் இதழை கவ்வி சுவைத்து விளையாடியவன் அவளது கழுத்துக்கு கீழே இதழ்கொண்டு ஊர்வலம் வந்தவன் சேலைக்கு விடுதலை கொடுத்து அவள் போட்டிருந்த ஸ்லீவ்லெஸ் ப்ளவுசின் நாட் பிரித்துவிட்டதும் அவளது அங்க லாவண்யன்கள் திமிறிக்கொண்டு அவனுக்கு காட்சியளிக்க கைகொண்டும் இதழ் கொண்டு பூஜை செய்தான் தங்கபாண்டியன்.
 
அவளது கோபுரத்தின் உச்சியை அவனது உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுக்க கணவனின் பின்னந்தலையை அமுக்கிக் கொண்டாள் கோபுரத்தின் மேலயே.
 
“ம்ம்” என்ற மோஹன பித்து பிடித்தவள் போல பிதற்றியவளின்  வெற்றுடையில் விரல்கள் கோலமிட்டு நாபி கமலத்தில் சுற்றி முத்தமிட்டே அவளை சொக்க வைத்தான்.
 
“அம்மு” என்றவன் அவள் காதில் இரகசியம் சொல்ல “சீ போடா நான்மாட்டேன்” என்று சிணுங்க “ப்ளீஸ்டி” என்று அவன் சொன்னதையும் சொல்லாததையம் செய்ய வைத்து அவனை சொக்க வைத்தாள் ஆர்த்தி. 
 
அவள் கையில் போட்டிருந்த வளையல்கள் ஒன்று கூட அவள் கையில் இல்லை! அத்தனையும் உடைத்து விட்டான் தங்கபாண்டியன்.
 
“ஒன்ஸ்மோர் பேபி! ஒன்ஸ்மோர் பேபி!” என்று தன் மனையாளை கொள்ளை கொண்டான்.
 

4 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top