ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 17
 
 
ஆர்த்தி வெளியேச் சென்றதும் ‘அட மீசையோட தம்பி சந்தனபாண்டியன் கல்யாணத்தை பற்றி முழுமையா கேட்பதற்குள்ள. அந்த மீசை வந்து என் பொண்ணை கூட்டிட்டு போய்ட்டானே’ என்ற வருத்தம் மேலோங்கி கிடக்க! கல்யாணத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது சங்கரிக்கு. அதான் இரவு என்றும் பாராமல் மகளுக்கு போன் செய்திருந்தார். ஆனால் நம்ம தங்கபாண்டியன் தனது மன்மத விளையாட்டுக்கு இடைஞ்சலாக வந்த கரடி மாமியாரின் போனை அணைத்துவிட்டானே!
 
போன் சுவிட்ச் ஆப் ஆனதும் கடுப்பாகி விட்டார் சங்கரி. “எல்லாம் அந்த மீசைக்காரன் பண்ணின சதி வேலையா இருக்கும். இருடா என் பொண்ணை உன்கிட்டயிருந்து கொஞ்ச நாளாவது பிரிச்சி வைச்சு உன்னை தவிக்க விடுறேன்! என் பொண்ணுக்கு சாமர்த்தியம் பத்தல. இவ பின்னாடிதான் அந்த மீசை முந்தானையை பிடிச்சிக்கிட்டு சுத்தணும்! ஆனா என் பொண்ணை இவன் பின்னாடி சுத்த வைச்சிட்டான் இந்த மீசைக்காரன்” என்று தங்கபாண்டியனை எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்காத குறையாக வசைபாடிக் கொண்டிருந்தார். 
 
காலையில் ஆர்த்திக்கு போன் போட்டார் சங்கரி. “சொல்லுமா இந்த நேரம் நான் சமையலில் பிசியாக இருப்பேனு தெரியாதா உனக்கு. பட்டுனு விசயம் சொல்லிட்டு வை. நாங்க ஆபிஸ் கிளம்பணும்” என்று குக்கரில் வெயிட்டை போட்டு விட்டு வெட்டி வைத்த காயை சாம்பாரில் போட்டாள்.
 
“அம்மாகிட்ட பேச கூட உனக்கு நேரம் இல்லையாடி! நம்ம வீட்ல இருக்கவரை சமையல்கட்டுக்குள்ள உன்னை விட்டதே இல்லை. கல்யாணம் ஆனதும் இப்ப உன் புருசன் உன்னை சமைக்க விட்டுட்டான் பாரு. ஏன் நல்லா கைநிறைய சம்பாதிக்குறான் தானே உன் புருசன். உன்னை உண்மையா லவ் பண்ணியிருந்தா இப்படி சமையல்கட்டுல உன்னை வேக விடுவானா! வேலை செய்ய ஆள் போட்டிருப்பான்! உலகத்துல இவன்தான் பேரழகன் போல லவ் பண்ணி அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட! உன்னை அடிமையா வச்சிருக்கணும்னு நினைக்குறான்டி! கல்யாணம் ஆனவுடன் உன்னை நம்ப வீட்லயே இருக்கச் சொன்னேன் நீதான் இருக்காம என்புருசன் தான் முக்கியம்னு போயிட்டே. இப்ப யாரு காலையில எழுந்து அடுப்படியில கிடந்து அல்லாடுறா, இது உனக்கு தேவைதானாடி! எப்பவும் உன் புருசனை உன் கைக்கு அடக்கமா வச்சிக்கணும்! இப்பவும் கெட்டுப்போகலை உன் புருசன்கிட்ட சொல்லி வேலைக்கு ஆள் போடச் சொல்லு! நீ ஜாலியா இருடி! அப்பத்தான் நான் கூப்பிடும் நேரம் போன் பேசலாம்” என்று பெண்ணின் மூளையை சலவை செய்தார்.
 
“அம்மா நீ இதுபோல என்கிட்ட பேசினது கோல்ட்டுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் பார்த்துக்க. எனக்கு உன்னைவிட கோல்ட்தான் முக்கியம்மா! நான் யாருக்கு சமைச்சு போடுறேன் என் புருசனுக்கு எங்களுக்கு நடுவுல வராதம்மா வேற எதாவது பேசணுமா பேசு. இல்லைனா நான் போனை வைக்குறேன்” என்று ஸ்ட்ரிட் ஆபிஸர் போல பேசினாள் சங்கரியிடம்.
 
“போடி நான் சொல்றது உனக்கு இப்போ புரியாது. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் உன் கோல்ட் கலர் மாறும் அப்போ அம்மா சொன்னது உனக்கு புரியும்” என்று பொரிந்து தள்ளி போனை வைத்தார் சங்கரி.
 
“அம்மாவுக்கு எப்பவும் என் கோல்டை குறை சொல்லலைனா தூக்கமே வராது” என்று முணுமுணுத்தபடியே வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். தூங்கி எழுந்த வந்த தங்கபாண்டியன் மனைவி அவள் சங்கரியிடம்  தனக்காக பேசியதை கேட்டு அவள் மீதுள்ள காதல் கடல் போல பொங்கி வழிந்தது.
 
“அம்மு” என்று பின்னிருந்து கட்டிக்கொண்டு அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து “ஐலவ்யூ அம்மு” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
 
“என்ன சார் காலையில ரொமான்ஸ் மூட்ல இருக்காரு” என்ற அவன் புறம் திரும்ப “இன்னிக்கு செக்கப் போகணும்டி ஈவ்னிங் சீக்கிரம் ஆபிஸிலிருந்து கிளம்பிடலாம்” என்று அவள் கன்னத்தை விரல்களால் கோலம் போட்டபடியே பேசினான்.
 
“கோல்ட் என்னால மெடிசன் சாப்பிடவே முடியல!” என்று சிணுங்கினாள்.
 
“எனக்கும் நீ மாத்திரை சாப்பிடறது வருத்தமாதான் இருக்குடி!  பாப்பா வரணும்ல டாக்டர்கிட்ட இந்த முறை பேசலாம்!” என்று அவளது நெற்றியில் முட்டினான்.
 
இன்றும் தேன்மொழி ஆறு மணியாகியும் உறங்கிக்கொண்டிருந்தாள். சந்தனபாண்டியன் வழக்கம் போல உடற்பயிற்சி முடித்து வர “இன்னிக்கும் இந்த தேனுகுட்டி எழும்பாம தூங்குறா டா நீ அவளை எழுப்பேன்! நான் தோட்டத்துல சித்த நடந்துட்டு வாரேன்” என்று சென்றுவிட்டார் தனபாக்கியம். 
 
‘இன்னிக்கு நான் கொடுக்கிற தண்டனையில இனிமே காலையில் ரொம்ப நேரம் தூங்கவே கூடாது! இருடி வரேன்’ என்று தனபாக்கியம் அறைக்குள் வேகமாகச் சென்றான் சந்தனபாண்டியன். 
 
தேன்மொழியோ பப்பரபேனு அவள் போட்டிருந்த டாப் விலகியதுகூட தெரியாமல் இடுப்பை காட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ள அடக்க ஒடுக்கமா படுத்து தூங்கத்தெரியாதா ! இப்படித்தான் என்னை பாரு என் அழகை பாருனு தூங்குவாங்களா” என்று கடிந்துக் கொண்டவன் அவள் அருகே சென்று “தேனு எழும்புடி மணி ஏழு ஆகப்போகுது” என அவளது தோளில் தட்டினான். 
 
“மாமா தூக்கம் வருது” என்று அவளின் கையை தட்டிவிட்டு புரண்டு படுத்தாள் தேன்மொழி. ‘கழுதை என்ன பண்ணுறேன் பாரு’ என்றவனோ அறைக்கு வெளியே ஒரு முறை எட்டிப்பார்த்து கதவை கொஞ்சமாக மூடி வைத்து உறங்கிக்கொண்டிருக்கும் தேன்மொழியின் இடுப்பை கிள்ளி வைத்தான்.
 
“அம்மாஆஆ” என்று இடுப்பை தேய்ந்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் தேன்மொழி.
 
“ஏன் டி கும்பகர்ணி நேத்து நான் உன்கிட்ட காலையில நேரமே எழும்பணும்னு சொன்னேன்ல! ஆனா இன்னிக்கும் எழும்பாம ஆட்டமா காட்டுற” என்று அவள் பக்கம் உட்கார்ந்து காதை திருகினான் சந்தனபாண்டியன்.
 
“ஆஆ வலிக்குது மாமா காதை விடு” என்று சிணுங்கியவள் “காலையில நேரமே எழும்பச் சொன்னீங்க!” என்றாள் கொட்டாவி விட்டுக்கொண்டே
 
“அடியேய் ஊத்தபல் போய் பல்லை விலக்கி குளிடி! நம்மவீட்டு குட்டி பையன் நந்தன் கூட எழுந்து குளிச்சு ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருக்கான். ஆனா நீயோ இன்னும் கொட்டாவி விட்டுட்டு இருக்க! கொஞ்சமாவது வயசு பொண்ணு போல நடந்துக்கடி! இன்னிக்கு எழும்பலைனு உன் இடுப்பை கிள்ளி வச்சேன்! நாளைக்கும் நீ எழும்பாம இருந்தினா! வேற மாதிரி ஏதாவது பண்ணிடுவேன் பார்த்துக்கோ! அப்புறம் மாமா என்னை அங்க தொட்டுச்சு! இங்க தொட்டுச்சுனு யாருக்கிட்டயாவது கம்ப்ளைண்ட் பண்ணின இழுத்து வச்சு லிப்லாக் கிஸ் அடிச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று அவளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தான் சந்தனபாண்டியன்.
 
தேன்மொழியோ ‘லிப்லாக்கா’ என்று வாயை பொத்திக்கொண்டாள். “இந்த சந்தனபாண்டியன் சொன்னதை செய்வான் வசதி எப்படி” என்று மீசையை முறுக்கிவிட்டான்.
 
“ஹா நா.நான் நேரமே எழும்பி குளிச்சிடறேன் மாமா நீங்க லிப்லாக் பண்ண வேண்டாம்” என்று பயந்து நடுங்கியவளை கண்டு சிரிப்புதான் வந்தது சந்தனபாண்டியனுக்கு.
 
“சரி சரி இப்ப போய் குளி காலேஜ்க்கு நேரமாச்சுல!” என்று சிடுசிடுத்தான். ‘அப்பாடி’ என்று தப்பித்து ஓடினாள் குளியலறைக்குள். அவன் கிள்ளி வைத்த இடம் இன்னும் வலித்தது பெண்ணவளுக்கு. ‘முரட்டு மாமா கிள்ளி என் இடுப்பு சிவந்தே போச்சு! கையா இல்ல இரும்பா’ என்று புலம்பிக்கொண்டு குளித்து வந்தாள்.
 
அன்றும் கல்லூரிக்கு சந்தனபாண்டியனே கூட்டிச்சென்றவன் “சாய்ந்தரம் நானே வந்து கூட்டிட்டுபோறேன் வெயிட் பண்ணு” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
 
தேன்மொழியும் காலேஜ் முடிந்து சந்தனபாண்டியனுக்காக காத்திருந்தாள். அவளின் தோழி சீதாவின் அண்ணன் இன்று கூட்டிட்டு போக வரவில்லை அவளும் தேன்மொழியுடன் நின்றிருந்தாள். “என்னடி தேனு இன்னும் உன் ஹஸ்பண்ட் வரலையா?” என்றதும் “ஆமாடி இன்னும் வரலை” என்றாள் இதழ்பிதுக்கி.
 
“என்னாச்சு மாமா இன்னும் வரலையே?”  என்று நகத்தை கடித்துக்கொண்டு நின்றாள். கல்லூரி வாட்ச்மேன் “இன்னும் உங்க ரெண்டு பேரையும் வீட்ல கூட்டிட்டு போக வரலையா கண்ணு! இப்படி வந்து உட்காருங்க!” என்று அவர்களுக்கு நாற்காலியை எடுத்துப்போட்டார். 
 
‘அப்பாடா வாட்ச்மேன் தாத்தா துணைக்கு இருக்காரு’ என்று தைரியத்தில் இருவரும் உட்கார்ந்தனர். இருட்டிக்கொண்டு வர தேன்மொழியோ சந்தனபாண்டியனுக்கு போன் போட்டாள். “ட்ராபிக்ல மாட்டிகிட்டேன் பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன் வெயிட் பண்ணு” என்று போனை கட்செய்தான். இன்று வார இறுதிநாள் ஆளுங்களுக்கு கூலி கொடுத்துவிட்டு வர தாமதம் ஆனது சந்தனபாண்டியனுக்கு.
 
வாட்மேன் டீ குடிக்கச் சென்றிருக்கும் வேளையில் தேன்மொழியின் சீனியர் நாலு பேர் நகத்தை கடித்துக்கொண்டிருக்கும் தேன்மொழியை கடந்துச் செல்லும்போது “டேய் இந்த பொண்ணு நம்ம ஜுனியர்தானே!” என்று மற்றொருவனிடம் கேட்டான். 
 
“ஆமாண்டா இவளுக்கு போனவாரம்தான் கல்யாணம் ஆகியிருக்கு! அவ பக்கத்துல உட்கார்ந்திருக்க பொண்ணு சீதாவை இவன் டாவு விட்டான் அந்த பொண்ணு எங்க அப்பா அம்மா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணுறேனு இவனுக்கு பல்பு கொடுத்துருச்சு” என்றான் இன்னொருவன். 
 
“அப்போ ரெண்டும் தனியா உட்கார்ந்திருக்கு வாங்க போய் கொஞ்சம் பயம் காட்டுவோம்! தேன்மொழியின் பர்ஸ்ட் நைட் அனுபவம் எப்படினு நாமும் தெரிஞ்சிக்கலாமா!” என்று மார்க்கமாக சிரித்து தேன்மொழியின் அருகே சென்றனர்.
 
சீதாவிடம் லவ் சொன்னவன் “என்னடி சீதா இப்பவும் நான் உன்னை லவ் பண்ணுறேன் வரியா கோவில வைச்சு தாலிகட்டுறேன்” என்று சீதாவின் கையை பிடித்தான். 
 
எப்பவும் தைரியமா இருக்கணும் தேனுகுட்டி என்று சந்தனபாண்டியன் சொன்னது அவள் மூளைக்குள் மணியடித்தது. எங்கிருந்து பலம் வந்ததோ தெரியவில்லை தேன்மொழிக்கு.
 
“நீங்களெல்லாம் தப்பா பேசுறீங்க இங்கிருந்து கிளம்பிடுங்க! சீதாவோட கையை விடுங்க!” என்று அவனது கையை தட்டி விட்டு முறைத்தாள் தேன்மொழி அந்த ஆடவனை.
 
“என்ன தேன்மொழி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாமே! எங்களுக்கெல்லாம் பத்திரிக்கையே வைக்கலையே! பத்திரிக்கை வைச்சிருந்தா நாங்க கல்யாணத்துக்கு வந்து சிறப்பிச்சு உன்னை பர்ஸ்ட் நைட்க்கு அனுப்பிட்டு வந்திருப்போம். அடுத்த நாள் உன்கிட்ட பர்ஸ்ட் நைட்ல என்ன நடந்துச்சுனு கேட்டு தெரிஞ்சிருப்போம். இப்போ ரெண்டு நாள் வீணாப்போச்சு பர்ஸ்ட் நைட்ல என்ன நடந்துச்சு சொல்லு” என்று ஒருவன் அவள் காதோரம் சென்று கேட்டான்.
 
அவர்கள் பேசுவதை கண்டு கொஞ்சம் பயந்த தேன்மொழியோ “நீ.நீங்க பேசறத சரியில்லை அண்ணா! நா.நான் பிரின்சிபால்கிட்ட க.கம்ப்ளைண்ட் பண்ணுவேன்” என்றாள் தடுமாறிய குரலில்.
 
“ரொம்ப பிகு பண்ணாதம்மா! நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல” என்று ஒருவன் தேன்மொழியின் கையை பிடித்துவிட்டான்.
 
“கையை விடுடா பொறுக்கி நாயே” என்று அவள் கையை பிடித்தவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் “நான் சந்தனபாண்டியன் பொண்டாட்டிடா! யாருகிட்ட உங்க போக்கிரிதனத்தை காட்டுறீங்க. உங்க அக்கா தங்கச்சி இருந்தா அவங்ககிட்டயும் இப்படித்தான் கேட்பீங்களாடா!” என்று ஆங்காரமாய் பொங்கி எழுந்தாள் கண்ணகிபோல.
 
“டேய் இவ என் கன்னத்துல அறைஞ்சிட்டா! என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க!” என்றான் இருள் சூழ்ந்துக் கொண்டிருக்க அந்த பசங்களுக்கு வசதியாய் போனது.
 
தேன்மொழி போட்டிருந்த துப்பட்டாவின் மீது ஒருவன் கைவைக்க போக பறந்துச் சென்று தரையில் விழுந்தான் சந்தனபாண்டியன் அடித்த அடியில்.
 
“யாரு மேலடா கைய வைக்குறீங்க நாதாரி நாய்களா! ஒரு பொண்ணு தனியா நிற்க கூடாது வம்பு பண்ணவேண்டியது கையை காலை வெட்டி ஆத்துல தூக்கி போட்டிருவேன் நாய்களா” என்று நால்வரையும் அடி பின்னி எடுத்துவிட்டான். அதற்குள் சத்தம் கேட்டு அங்கே வந்த பிரிசின்பால் “எதுக்கு பசங்களை அடிக்குறீங்க சார். அவங்க என்ன தப்பு பண்ணினாங்க எங்ககிட்ட சொல்லுங்க. நாங்க கண்டிக்கிறோம்” என்றதும் 
 
“ம்ம் இதோ என் வொய்ப் தேன்மொழிக்கிட்டயும் இதோ பயந்து நடுங்கிக்கிட்டு நிற்குதே அந்த பொண்ணுகிட்டயும் வம்பு பண்ணினானுங்க! அதான் நாலு தட்டு தட்டினேன். இவனுக பெத்த ஆத்தா அப்பனை நாளைக்கு வரச்சொல்லுங்க நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்குறேன்” என்றான் சந்தனபாண்டியன் ஆத்திரத்தில்.
 
“நாலு பேரும் தேன்மொழி சீதா கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்றார் பிரின்சிபால் அதட்டலுடன்.
 
“இல்ல இவனுங்களை பெத்தவங்க நாளைக்கு இங்க வரணும்! இவனுங்க படிக்க முடியாதபடி டீசியை கொடுக்கணும்!” என்றான் நால்வரையும் பார்த்தபடி 
 
“சார் சார் நாங்க தப்பு பண்ணிட்டோம் எங்க பேரண்ட்ஸ்கிட்ட சொல்லவேண்டாம். இனிமே எந்த பொண்ணுகிட்டயும் வம்பு பண்ணமாட்டோம்! என் அப்பா அம்மா கட்டிட வேலை செய்யுறாங்க இந்த விசயம் அவங்களுக்கு தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்க ப்ளீஸ் இந்த ஒரு முறை மன்னிச்சு விடுங்க” என்று கெஞ்சினான் அந்த பையன். மற்ற பசங்களும் தேன்மொழியின் காலில் விழுந்து “என்னை மன்னிச்சிடு தேன்மொழி” என்றும் சீதாவின் காலில் விழுந்து “மன்னிச்சிடு சீதா இனிமே நாங்க பொண்ணுங்க இருக்க ஏரியா பக்கம் தலை வச்சி படுக்க மாட்டோம்” என்றனர் கண்ணீருடன்.
 
“மன்னிப்பு கேட்டா உங்களை சும்மா விட்டிருவேனா தோளை உரிச்சி தொங்கவிட்டா தான் எனக்கு ஆத்திரம் தீரும்” என்று அவர்களின் சட்டையை கழட்டப்போக. அந்த நால்வரும் ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள் அவர்களின் பெற்றோர் சரியாக அங்கே வந்துவிட அவர்களும் மகன்கள் செய்தது பெரும் தவறு என்று சந்தனபாண்டியன் முன்னே வந்து நின்று “தம்பி என் பையன் செய்தது மகா பாவம். என் வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கா இந்த நிலமை அவளுக்கு வந்துச்சுனா நானும் இப்படித்தான் கோபப்படுவேன் நீங்க என் பையனை என்ன பண்ண நினைக்குறீங்களோ அதை பண்ணுங்க” என்று பெரும்மூச்சு விட்டு நின்றார் சீதாவிடம் வம்பு செய்தவனின் அப்பா.
 
சீதாவின் அண்ணனும் வந்து விட “அவங்க நாலுபேரையும் போலீஸ்கிட்ட ஒப்படைக்கலாம்” என்றான் சீதாவின் அண்ணன்.
 
தேன்மொழிக்கோ நால்வரையும் பார்க்க பாவமாய் தோன்றியது. சந்தனபாண்டியன் பக்கம் வந்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி “மாமா இவனுங்களுக்கு இனிமே தப்பு பண்ணக்கூட தோணாது போலீஸ் எல்லாம் போன இவனுக படிப்பு பாதியில நின்னு போய்டும் மாமா! இன்னும் நாலு அறை அறைஞ்சு வார்ன் பண்ணி இந்த ஒரு முறை மன்னிச்சு விடலாம்” என்றாள் கனிந்த மனதுகாரி பெண்.
 
“தேன்மொழி சொல்வதும் சரிதான் பசங்க படிப்பு ஸ்பாயில் ஆகக்கூடாதுனு இந்த முறை மன்னிச்சு விடறேன் அதுவும் உங்களை பெத்த அப்பா அம்மாவுக்காக” என்றவனோ “இனிமே பொண்ணுககிட்ட வாலு ஆட்டினீங்க! யார்கிட்டயும் கம்ப்ளைண்ட் பண்ணமாட்டேன். இருக்குற இடம் தெரியாம பண்ணிட்டு போயிடுவேன் ஜாக்கிரதை. பொண்ணுங்களை தங்கையா தோழியா பாருங்க உங்களுக்கு தப்பான எண்ணம் வராது!” என்று தேன்மொழியிடம் வரம்பு மீறி பேசியவன் பக்கம் சென்று “உன் தங்கச்சி கல்யாணம் ஆனதும் சொல்லு பர்ஸ்ட் அனுபவம் எப்படினு கேட்குறேன்” என்றான் பல்லை கடித்துக் கொண்டு மீசையை முறுக்கிவிட்டு
 
“சார் சார் நான் பேசியது தப்புதான் தப்புதான்! இனிமே தேன்மொழி என் தங்கச்சி” என்று அவர்கள் மீண்டும் தேன்மொழியின் காலில் விழுந்தனர். கலவரத்தில் தொடங்கி சமாதானம் ஆகினர்.
 
சீதாவை அவளின் அண்ணன் கூட்டிக்கொண்டுச் சென்றுவிட்டான்.
 
தேன்மொழியோ அமைதியாக காரில் ஏறி உட்கார்ந்தாள். அவளுக்கு படபடப்பு இன்னும் அடங்கவில்லை. கொஞ்சம் தூரம் சென்றதும் காரை மரத்தடியில் நிற்க வைத்த சந்தனபாண்டியன் “என்னடி ரொம்ப பயந்துட்டியா. ஆனாலும் தைரியமா அவனுங்களை எதிர்த்து நின்ன பாரு! அங்க நின்ன தேனு நீ! சூப்பர்டி கலக்கிட்ட போ! உனக்கு நாளையிலிருந்து சிலம்பம் சொல்லித்தரப்போறேன்! படிக்குற நேரம் போக சிலம்பம் கத்துக்கோ. இவனுக போல காலி பசங்க வம்பு செய்தா அவனுங்களை உண்டு இல்லைனு நீ பண்ணனும்டி சரியா” என்று நடுங்கிக்கொண்டிருந்தவளின் கையை பற்ற கொஞ்சம் அவளது நடுக்கம் நின்றதும் “மாமா நான் உன் நெஞ்சுல சாய்ந்துக்கட்டுமா?” என்று தலையை சாய்த்து கேட்டாள் தேன்மொழி.
 
“என்ன டி என்கிட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு வா” என்று கையை விரித்தான் ராஜாளி போல.
 
நெஞ்சில் சாய்ந்தவள் அவனை கட்டிக்கொண்டு “உன்னை கல்யாணம் பண்ணினது நான் செய்த புண்ணியம் மாமா!” அவனது கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்து மீண்டும் நெஞ்சில் சாய்ந்தவள் “அவனுங்க கிண்டல் பண்ணும்போது வந்துட்டியா. பர்ஸ்ட் நைட் பத்தி கேட்டதும் எனக்கு உயிரே போயிடுச்சு மாமா!” என்றவள் இன்னும் ஒடுங்கினாள் அவனது நெஞ்சிற்குள்.
 
சந்தனபாண்டியனும் அவளை இறுக்கிக்கொண்டு அவளது நெற்றியில் ஆடிய ஒற்றை முடியை விரலால் நகர்த்தி விட்டு முத்தம் கொடுத்தவன் “உன்கிட்ட பர்ஸ்ட் நைட் பத்தி பேசும்போது வந்துட்டேன்டி ஆனா நீ எவ்ளோ தூரம் அவங்க கிட்ட சண்டை போடுவ உன் தைரியம் என்னனு பார்த்தேன்டி அவனுங்களை அடிச்சதும் நான் சந்தோசப்பட்டேன். அவனுங்க துப்பட்டாவுல கையை வைக்கப்போனதும் விடுவேனா இந்த சந்தனபாண்டியன் விட்டேன் பார்த்தியா அடி! இனிமே அவனுங்க எந்த பொண்ணுங்களையும் திரும்பி கூட பார்க்க முடியாதுடி! இனிமே உன்கிட்ட எவனும் பேசக்கூட பயப்படுவான்! நீ படிப்பில கவனம் வைச்சு படிச்சா போதும்டி! அப்புறம் இப்படியே கட்டிபிடிச்சு இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு கன்ட்ரோல் பண்ண முடியாது! எக்கு தப்பா நடந்துடும்டி ஹனி பேபி” என்றான் அவளது முகத்தை கையில் தாங்கியபடி
 
“அப்படியா உனக்கு இந்த விசயத்துல கொஞ்சம் சாமர்த்தியம் பத்தாது போல எனக்கு ஒரு முத்தம்கூட சரியாய் கொடுக்கலையே” என்று சொல்லி நாக்கை கடித்துக்கொண்டாள்.
 
“வேண்டாம்டி படிக்குற பிள்ளைனு பார்க்குறேன் நான் முத்தம் கொடுத்தா நீங்க தாங்கமாட்ட” என்று மீசையை முறுக்கி சிரித்தான்.
 
“அப்படியா உன் பெர்ஃபாமென்ஸ் கொஞ்சம் காட்டேன்” என்று கண்ணைச்சிமிட்டினாள்.
 
“வேணாம்டி நீ தான் கஷ்டப்படணும்” என்றதும் “அதையும் பார்க்குறேன் மாமா” என்று அவன் கண்களையே பார்த்திருந்தாள் தேன்மொழி.
 
“ஹனிபேபி முத்தம் கொடுத்திருவேன் அப்புறம் வருத்தப்படக்கூடாது” என்று விரல் நீட்டி எச்சரித்தான் சந்தனபாண்டியன்.
 
“பேசாத மாமா செயலை காட்டு” என்று கண்ணை மூடினாள். 
 
தேன்மொழியின் முகத்தை கையில் தாங்கியவனுக்கு 100 பேரை அடிக்க சொன்னால் அவனின் அடி சிதறாமல் விழும்! ஆனால் இப்போது தாலிகட்டிய பெண் முத்தம் கேட்கிறாள் அவனால் கொடுக்க முடியவில்லை தடுமாற்றம் வர அவளோ “மாமா நீ சரிபட்டு வர” என்று அவள் பேசி முடிக்கவில்லை. லபக்கென்ற அவளது இதழை கவ்விக்கொண்டான் ஆணவன். இருவருக்கும் முதல் முத்தம் அடி ஆழம் வரை சென்றது. அவளது தேகத்தில் குட்டி குட்டி பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்து விட்டது. அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் கலர் கலராக பறக்க ஆரம்பித்தது. 
 
படத்தில் கூட முத்தக்காட்சி வந்தால் கண்ணை மூடிக்கொள்வாள் தேன்மொழி. இப்போது மாமனின்  முத்தமோ அவளை சித்தம் கொள்ள செய்தது. முதலில் திணறினாள் பெண்ணவள் சிறிது விட்டு மீண்டும் கண்கள் சொருக அவள் இதழில் தேன் பருக தொடங்கினான் சந்தனபாண்டியன். அவளது கைகளை தானாக சந்தனபாண்டியன் பின்னந்தலைக்குள் நுழைத்துவிட்டாள். அவனுக்கோ கைகள் எல்லை மீறத் துடித்தது. அவனது ஆண்மை பீறிட்டு எழுந்து நின்றது. அவனது கைகள் இடுப்பை பிசய சொல்லி ஆட்டம் போட்டது.
 
அவளின் மேடு பள்ளங்களை ஏறி விளையாட துடித்தது. இடுப்பில் கைவைத்துவிட்டான். ம்ம் என்று அவளது உடல் விறைக்க கண்ட்ரோல் கண்ட்ரோல் என்று தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு சுற்றி இருக்கும் இடமும் சரியில்லை. அதுவுமில்லாமல் தேன்மொழி படித்து முடிக்கட்டும் அதுவரை காத்திருக்கணும் என்று தன்னை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தவன் அவளையும் நோகடிக்காத வண்ணம் மெதுவாய் தேன்மொழியிடமிருந்து பிரிந்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து “ஐயாவோட முத்த பெர்ஃபாமென்ஸ் எப்படி” என்று புருவம் உயர்த்தி மீசையை முறுக்கினான்.
 
சந்தனபாண்டியன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டு அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு “ரொம்ப சூப்பர் மாமா முத்த மன்னன் நீ!” என்றவள்  “உன்னை ரொம்ப தவிக்க விடறேனா மாமா!” என்றாள் அவனது நெஞ்சில் உள்ள சுருள் முடியுடன் விளையாடிய படியே.
 
“ஏய் கிறுக்கச்சி படிச்சு முடி! அப்புறம் இந்த மாமன் பண்ணுற சேட்டையில என்னைக்கண்டாவே பயந்து ஓடுவ” என்று மத்தாப்பூ  புன்னகை சிந்தினான் சந்தனபாண்டியன்.
 
“ஏன் மாமா நாம பாதுகாப்பா சேரலாம் தானே!” என்றாள் தயங்கியபடியே.
 
“ஏய் யாருடி இதெல்லாம் சொல்லித்தரா உனக்கு! நீ இப்படி பேசமாட்டியே” என்றான் புருவம் நெறித்து.
 
“இல்ல நம்ம பக்கத்துவீட்டு அக்காதான் இப்ப பாதுகாப்பா நிறைய விசயம் வந்துடுச்சு! நீங்க சேரலாம் குழந்தை வராதுனு சொல்லுச்சு! உன்னை நான் காயப்போடக்கூடாதாம் ஆம்பிள்ளைங்களுக்கு ஆசை அதிகம்னு சொன்னாங்க! அதான் நான் உன்னை காயப்போடுறேனு எனக்கு சங்கடமா இருந்துச்சு மாமா” என்றாள் அப்பாவி பெண்ணாக.
 
“அப்படியெல்லாம் சேர்ந்தா கிக் இருக்காதுடி உனக்குள்ள நான் சுதந்திரமா போகணும். அதெல்லாம் அந்த பாதுகாப்பு சாதனத்துல வராதுடி” என்றவனின் பேச்சு அவளுக்கு பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்க பேந்த பேந்த முழித்தாள்.
 
“நீ படிப்பை முடி அப்புறம் நாம சேருவதை பத்தி யோசிக்கலாம் அதுவரை இப்படி முத்தம் கொடுத்துக்கலாம்” என்று அவள் இதழில் ஆழப்புதைந்துவிட்டு அவள் மூச்சுக்கு ஏங்க அவளை விட்டு “ரொம்ப படுத்துற குட்டிப்பொண்ணு” என்று பெரும்மூச்சு விட்டு காரை எடுத்தான்.
 
தேன்மொழி சந்தனபாண்டியனுடன் சேருவதை பற்றி பாதி உண்மையைத்தான் சொன்னாள் கணவனிடம்.
 
பக்கத்து விட்டு பெண்ணோ “உன் புருசனை முந்தானையில முடிஞ்சு வச்சிக்கோ. அந்த டீச்சர் மறுபடியும் வந்துட்டானா சந்தனபாண்டி அவகிட்ட போக சான்ஸ் இருக்கு” என்று தேன்மொழியை குழம்பி விட்டிருந்தாள். அதுதான் இன்று ரெண்டுபேரும் சேரலாமா என்று சந்தனபாண்டியனிடம் கேட்டுவிட்டாள் தேன்மொழி.
 
அடுத்து வந்த நாட்கள் மாதங்களாக ஓடியது. 
 
தங்கபாண்டியன் ஆர்த்தியை மாதம் மாதம் செக்கப்பிற்கு கூட்டிச்சென்றான். அவளுக்குத்தான் நீர்கட்டி பிரச்சனையும் இருக்க! அவளை ஒரு ஆறுமாதம் மாத்திரை சாப்பிடணும் என்றனர்.
 
“கோல்ட் என்னால மாத்திரை சாப்பிட்டு வேலை செய்ய முடியலை” என்று படுத்துவிட்டாள் ஆர்த்தி. இது சங்கரியின் வேலைத்தனம். ஆனால் தங்கபாண்டியனோ வேலைக்கு ஆள் போடாமல் அவனே வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தான். ஆர்த்திக்கு தங்கபாண்டியன் வேலை செய்வதை பார்க்க முடியுமா என்ன? அவளும் தங்கபாண்டியனுடன் சேர்ந்து வேலை செய்து ஆபிஸிற்குச் சென்றனர். மீண்டும் சங்கரியின் திட்டம் தோல்வியில் முடிந்தது.
 

3 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top