நிலவு 18
மாதங்கள் வேகமாக ஓடியது! தேன்மொழி கல்லூரியின் இறுதியாண்டுக்கு வந்துவிட்டாள். எக்ஸாம்க்கு படிக்கிறேன் என்று அறையில் இரவு 12 மணிவரை லைட்டை போட்டுக்கொண்டு படிப்பதால் தனபாக்கியத்தின் தூக்கத்துக்கு தொந்தரவாக இருந்தது. தனபாக்கியமும் தேன்மொழியின் படிப்பிற்காக விழித்து கிடந்தார்.
“நீங்க தூங்குங்க அம்மாச்சி நான் வெயியே ஹால்ல போய் படிக்குறேன்!” என்றவளை “நீ வெளியே போய் படிக்க வேண்டாம். இங்கனயே படி நான் எல்லாம் அந்த காலத்துல விடிய விடிய கண்ணு முழிச்சு வேலை செய்த ஆளு இப்போ கண்ணு முழிக்கறது பெரிய விஷயம் இல்ல” என்று பேசிக்கொண்டு கட்டிலில் படுத்தவர் அசதியில் அப்படியே உறங்கியிருந்தார்.
தண்ணீர் குடிக்க வந்த சந்தனபாண்டியனோ தனபாக்கியத்தின் அறையில் லைட் எரிந்துக் கொண்டிருக்க “இன்னமும் தூங்காம என்ன பண்ணுறாங்க அப்பத்தா! லைட் எரிஞ்சா தூக்கம் வராதுனு சொல்வாங்களே! இந்த குட்டி பிசாசு என்ன பண்ணுறாளே தெரியலையே” என்று தனக்குள் பேசிக்கொண்டு அறையை லேசாக திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான்.
தனபாக்கியம் அப்போதுதான் உறங்கியிருந்தார். தேன்மொழியோ புத்தகத்திற்குள் மூழ்கியிருந்தாள். ‘இந்த தூக்க பிசாசு இன்னும் தூங்காம படிக்கிறாளா. எக்ஸாம் இருக்குனு சொல்லிட்டிருந்தாளே! அதான் புத்தகத்துக்குள்ள தலையை விட்டு கிடக்குறாளா! இவ லைட் போட்டிருந்தா அப்பத்தா எப்படி தூங்குவாங்க. அப்பத்தாக்கு எப்பவும் லைட் எரிஞ்சாலே தூக்கம் வராது! பேசாம நம்ம ரூமுக்கே தேனுவை கூப்பிட்டுக்கணும். அண்ணன்கிட்ட காலையில தேன்மொழியை என் ரூம்ல தங்க வைக்குற விசயமா பேசுவோம்’ என்று எண்ணியவன் மெதுவாக அறைக்குள் சென்றான் சந்தனபாண்டியன்.
நிழலாடுவது போலிருக்க தேன்மொழி புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்திப்பார்த்தவளோ “மா.மாமா” என்று கண்ணை விரித்து பேச வாயெடுக்க “உஷ்” என்று தனபாக்கியத்தை கண்ணைக்காட்டி இதழ் மேல் விரல் வைத்தான்.
“ம்ம்” என்று தலையாட்டினாள். “என்னடி மணி 12 க்கு மேல ஆச்சு! இன்னும் தூங்காம இருக்க. காலையில நேரமே எழுந்து படிக்கலாம்ல” என்று குசுகுசுவென பேசினான் தனபாக்கியத்தை ஒரு பார்வை பார்த்தபடி.
“மாமா படிக்கறது நிறைய இருக்கு!” என்றாள் கையை விரித்து கொட்டாவி விட்டபடி. அவள் சொன்ன விதம் சிரிப்பை வரவைத்தது சந்தனபாண்டியனுக்கு.
“சரி படிச்சிட்டு இரு நான் வரேன்” என்று எழுந்து வந்தவன் சமையல்கட்டுக்குள் நுழைந்து அடுப்பை பற்ற வைத்து ப்ளாக் டீ போட்டு டம்ளரில் ஊற்றிக்கொண்டு தேன்மொழிக்கு கொண்டுச் சென்றான். தேன்மொழிக்கோ தூக்கம் கண்ணை சுழட்டியது.
“யாராவது டீ போட்டுக்கொடுத்தா நல்லாயிருக்கும்! இந்த நேரம் அம்மாச்சியும் தூங்குறாங்க! வளரு அக்காவையும் எழுப்ப முடியாது நாம போய் காபி போட முடியாது படிச்சு படிச்சு ஒரே டயர்டு” என்று உடலை முறுக்கிக்கொண்டாள்.
அவளின் நாயகன் சந்தனபாண்டியன் கையில் டீ டம்ளருடன் வந்து நின்றான். “ஏய் தேனு டீயை குடிச்சிட்டு படி” என்று டீ டம்ளரை நீட்டினான்.
நான் மனசுல நினைச்சது உங்களுக்கு கேட்டிருச்சு மாமா என்று மனதில் நினைத்து மெலிதாய் சிரித்துக்கொண்டவள் “தேங்க்ஸ் மாமா முகம் கழுவிட்டு வந்து குடிக்கிறேன்” என்று எழுந்தவள் முகம் கழுவி விட்டு டீயை குடித்து முடித்ததும் “மாமா இங்க வா” என சைகை காண்பிக்க “என்ன பாடத்துல ஏதாவது டவுட் கிளியர் பண்ணனுமா?” என்று தேனுவின் பக்கம் உட்கார்ந்தான்.
“டீ போட்டுக்கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்று கண்ணைச்சிமிட்டி சந்தனபாண்டியன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். “அப்பத்தா இருக்காங்கடி இப்படியா முத்தம் கொடுப்ப” என்று அவள் கன்னத்தை கிள்ளினான். ஆஆ வென்று கத்தும் முன்னே அவள் வாயை தன் கை வைத்து பொத்திவிட்டான்.
அவள் அமைதியானதும் கையை எடுத்தவன் “நாம தனியா இருக்கும் போது முத்தம் கொடு வாங்கிக்குறேன்!” என்று ஒற்றைக்கண்ணைச்சிமிட்டி அவளது கன்னத்தை தட்டினான்.
“அட மாமா! நான் அம்மா வீட்ல இருக்கும் போது நைட் கண்விழிச்சு படிச்சேன்னா. அம்மா காபி போட்டுத்தரும்! நான் காபியை குடிச்சிட்டு அம்மாவுக்கு இப்படித்தான் முத்தம் கொடுப்பேன்! இப்ப நீ காபி போட்டுக்கொடுத்ததும் உனக்கும் முத்தம் கொடுத்தேன் அவ்ளோதான்” என்றாள் தோளை குலுக்கி சிறுபிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு.
‘சுத்தம் நான் உன் கூட எப்படித்தான் குடும்பம் நடத்தப்போறேனா தெரியலைடி’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு “சரி நீ படிக்க ஆரம்பி நான் வெளியே ஹால்ல சோபாவுல படுத்திருக்கேன்டி ஏதும் வேணும்னா என்னை எழுப்பிவிடு!” என பெண்ணவளின் தலையை வருடிவிட்டுச் சென்றான் சந்தனபாண்டியன்.
சோபாவில் படுத்தவன் உறக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தான். தேன்மொழியின் முகமே அவன் முன்னே வந்து நின்றது. அவள் தலையை ஆட்டி கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசும் விதம் அவனை அவள் புறம் கட்டியிழுத்துக்கொண்டிருந்தாள். இவள் குழந்தையா குமரியா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு உறக்கம் வந்தது.
சட்டென்று சந்தனபாண்டிக்கு விழிப்பு தட்ட கண்விழித்தவன் எழுந்து வேஷ்டியை சரியாய் கட்டிக்கொண்டு தேன்மொழி படித்துக்கொண்டிருந்த அறைக்குள் சென்று பார்க்க தேன்மொழியோ அவள் உட்கார்ந்திருந்த சோபாவிலே நெஞ்சின் மீது புத்தகத்தை வைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தாள்.
‘எப்படி தூங்குறா பாரு!’ என்றவன் அவள் மேலிருந்த புத்தகத்தை எடுத்து டேபிள் மீது வைத்துவிட்டு அவள் தூக்கம் கலையாதவாறு அவளது இடுப்பில கைபோட்டு தூக்கி தனபாக்கியம் படுத்திருந்த கட்டிலில் படுக்க வைத்துவிட்டு நிமிர அவனது கையை பிடித்திருந்தாள். கண்கள் சுருக்கி தன்னவளை பார்த்தான். அவள் கண்களை பார்க்க உறக்கத்தில் தான் இருந்தாள். தூக்கத்துல பிடிச்சிருப்பாவென அவளது கையை மெதுவாக விலக்கிவிட்டு அறை கதவை மூடி வைத்துவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் வந்து படுத்துவிட்டான்.
வளர்மதி காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் விளக்கேற்றி வந்தவள் சோபாவில் உறங்கும் சந்தனபாண்டியனை கண்டு புருவம் சுருக்கி பார்த்தவள் ‘ஏன் தம்பி இங்க தூங்குது! எழும்பட்டும் கேட்கலாம்’ என்று சமையல்கட்டுக்குள் செல்ல அங்கே அடுப்பில் காபி போட்டிருந்த சுவடு தெரிந்தது.
‘அப்பத்தா காபி போட்டிருந்தா பாத்திரம் கழுவி வச்சிருப்பாங்க! நம்ம தேனு படிக்கறதுக்கு இருக்குனு சொன்னா அவளும் காபி போடறதுக்கு சான்ஸ் இல்லையே!’ என் யோசித்தவளுக்கு பொறி தட்ட “அட நம்ம கொழுந்தன் அவன் பொண்டாட்டிக்கு காபி போட்டு கொடுத்திருக்கான் பரவாயில்லையே அவளுக்காவது வேலை செய்யுற புருசன் கிடைச்சிருக்கான்” என்று முணுமுணுத்துக் கொண்டு அடுப்பில் பாலை ஊற்றிக் காய வைத்தாள்.
“என்ன வேலை செய்யணும் அம்மணி சொல்லு செஞ்சுபுடறேன்” என்று வளர்மதியின் பின்னிருந்து தோளில் சாய்ந்தான் அருள்பாண்டியன். வளர்மதி தனக்குள் பேசும்போதே வந்துவிட்டான். அவள் மனதில் உள்ளதை தெரிந்துக் கொள்ள அப்படியே நின்று கேட்டிருந்தான் அருள்பாண்டியன்.
“ஆத்தி இதென்ன புது பழக்கம்” என்று கணவனின் புறம் திரும்பியவளின் இடுப்பில் கைபோட்டு இறுக்கிக்கொண்டு “என்னமோ நேத்துதான் தாலிகட்டி கூட்டிட்டு வந்தது போல இன்னும் உன் கன்னம் மொழு மொழுனு இருக்கு” என்று அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்த்தான் அருள்பாண்டியன்.
“ம்ம் நீங்களும் இன்னும் புதுமாப்பிள்ளை போல என்னை தூங்கவே விடறது கிடையாது! நந்து தூங்கிட்டானானு எட்டி எட்டி பார்த்துட்டு அவன் தூங்கினதும் என்னை தூக்கி கீழே போட்டு கசமுசா பண்ணவேண்டியது! நேத்து என்னை கடிச்சு வச்சது இன்னும் வலிக்குது முரட்டு மாமா” என்று இதழை சுளித்தாள் வளர்மதி.
“எங்கடி வலிக்குது நான் உன்மேல உள்ள கிறக்கத்தில நிறைய இடத்துல கடிச்சு வச்ச ஞாபகம்” என கிறங்கடிக்கும் குரலில் கேட்டு அவளை அணைத்தபடியே தலையை குனிந்து அவளது இடுப்பு சேலையை நகர்த்தி வயற்றில் தலையை நுழைத்து பார்த்து “இங்க எதுவும் காயம் இல்லையே” என்றவன் பார்வை மேல அவளது கோபுரகலசங்களில் பதிந்தது.
“யோவ் உன் பார்வையே சரியில்லை! சின்னதம்பி ஹால்லதான் தூங்குது எழுந்து வந்திரபோவுது! உன் சேட்டை எல்லாம் அறைக்குள்ளதான் நடக்கும். இந்த ஒருவாரமா உன் போக்கே சரியில்லைய்யா!” என்று பொய்யாக முறைத்து தன்னவனின் தலையை பிடித்து தள்ளி விட்டாள்.
“உன் காயத்துக்கு மருந்து போடாம விடமாட்டேன்” என் வளர்மதியை கொஞ்சிய படி சமையல்கட்டின் கதவை கொஞ்சமாய் ஒருகளித்து மூடி அவளது மாராப்பை விலக்க அவன் பல் பட்டு அவளின் மென் பஞ்சு பொதியில் காயம் ஏற்பட்டு சிவந்து கிடந்தது. அக்காயத்தில் மெல்ல உதடு ஒத்தடம் கொடுத்தான். “யோவ் நான் இப்பத்தான் குளிச்சிட்டு வந்திருக்கேன். என்னை மறுபடியும் குளிக்க வைக்காதய்யா” என்று அவள் முனகல்தான் போட முடிந்தது. அவளை இறுக்கி அணைத்தவனோ “இன்னொரு பாப்பா நமக்கு வேணும்டி! ஒத்த பிள்ளையோடு இருக்கக்கூடாது! நம்ம வீடு முழுக்க குழந்தைகள் விளையாடணும்டி! எனக்கு ஒரு பொண்ணு சீக்கிரம் பெத்துக்கொடுடி” என்றான் தாப மூச்சுடன் அவளது மார்பில் முகம் புதைத்துக் கொண்டு.
“யோவ் நீ பண்ணுற வேலைக்கு கண்டிப்பா இந்தமாசம் குழந்தை தங்கிடும்னு நினைக்குறேன்” என்றாள் வளர்மதி அவன் காதோரம் இரகசியமாய் .
“பாப்பா வரணும்னுதான் உன் பின்னாடியே குட்டி போட்ட பூனை போல சுத்திக்கிட்டு இருக்கேன்! நைட்டும் இப்படி அதிகாலை வேளையில் மட்டும்தான் உன்கிட்ட ரொமான்ஸ் பண்ண முடியும். சந்தனபாண்டியும் தேனு குட்டியும் இன்னும் தனிதனி அறையில இருக்காங்க. நாம மட்டும் அவங்க முன்னாடி ஒண்ணு மண்ணா இருக்க முடியாதுல” என்றான் பால்குடிக்கும் குழந்தை போல முகத்தை வைத்து.
“ம்ம் நானே உங்ககிட்ட பேசணும்னு இருந்தேனுங்க” என்றாள் கணவனின் அணைப்பிற்குள் இருந்தவாறே!
“என்ன அம்மணி சொல்லு” என்று அவளது காதுமடலை தீண்டினான் இதழால்.
“தேனு கடைசி வருசம் படிக்குறா. நம்ம சின்னவருக்கும் தேனுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியும்! ரெண்டு பேரையும் ஒரே அறையில தங்க வைக்கலாம்யா. ரெண்டு பேரும் சகஜமா பழக ஆரம்பிச்சாத்தான் ஒண்ணா சேர வசதியா இருக்கும்ங்க. அதுவுமில்லாம தேனு படிக்குறானு அப்பத்தா அவங்க தூக்கத்தை கெடுத்துக்குறாங்க! அதுதான் மெயின் பாயிண்ட். அப்பத்தாகிட்ட நீங்கதான் பக்குவமா பேசி சந்தனபாண்டி அறையில தேனுவை தங்க சொல்லணும். இனி அவளும் படிச்சு முடிக்கப்போறாள்ல” என்றாள் அந்த வீட்டின் மூத்த மருமகளாக.
“நீ சொல்றதும் நியாயம்தான் அம்மணி! நான் அப்பத்தாகிட்ட பேசுறேன். என்ன நம்ம தங்கபாண்டிக்கு ஒரு குழந்தை வந்துட்டா எனக்கு கவலையே இல்லைடி. அவன் வெளியில சிரிச்சிக்கிட்டு இருக்கான் அவன் உள்ளுக்குள் புழுங்குறது என்னால பார்க்க முடியலை. அப்பத்தாவும் அவனுக்காக நிறைய வேண்டுதல் வைக்குது. கடவுள் கண்ணை திறந்து பார்க்கணும்” என்றான் பெரும்மூச்சு விட்டு.
“சீக்கிரம் ஆர்த்தியும் உண்டாகியிருக்கானு சேதி வரும் பாருங்க”. என்று அவனை அணைப்பிலிருந்து விலக்கி மாராப்பை சரி செய்தாள் வளர்மதி.
“உன் வாக்கு பலிக்கட்டும்டி உனக்கு வைர காசுமாலை செய்து தரேன்” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
தேன்மொழி அலாரம் வைத்திருந்தாள். அலாரம் அடித்ததும் அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்தவள் குளியலறை சென்று முகம் கழுவி டீ குடிக்கலாமென்று மணியை பார்க்க ஐந்து ஆகியிருந்தது.
‘அப்பாடா வளரு அக்கா எழுந்திருக்கும் நாம டீ போட்டு கொடுக்க சொல்லி குடிச்சிட்டு வந்து பிரஷா படிக்கலாம்’ என்று சமையல்கட்டுக்கு போக “ஏய் நில்லு” என்று அவளது முடியை பிடித்து இழுத்தான் சந்தனபாண்டியன். அவனுக்கு தூக்கம் தெளிந்து விட்டது. சமையல்கட்டில் அண்ணனும் அண்ணியும் பேசி சிரிக்கும் சத்தம் கேட்டு நாகரீகம் கருதி வெளியே எழுந்து தோடத்து பக்கம் நடந்தவன் ஜன்னல் வழியே தேன்மொழி சமையல்கட்டுக்கு போவதை பார்த்தவன் வேகமாக வந்தவன் அவளது முடியை பிடித்து இழுத்தான்.
“ஹா மாமா எதுக்கு முடியை பிடிச்சு இழுக்குற வலிக்குது.ஒண்ணு இடுப்பை கிள்ளுற இல்லைனா கன்னத்தை கிள்ளுற! இப்படி முடியை பிடிச்சு இழுக்குற உனக்கு என்கிட்ட வம்பு பண்ணலைனா பொழுதே போகாதா மாமா” என்று இதழை கோணி சந்தனபாண்டியனை முறைத்தவள் “எனக்கு டீ வேணும்” என்று அவனது கையை தட்டிவிட்டு ஓடியவள் கதவை திறக்க அருள்பாண்டியன் வளர்மதியின் இதழில் முத்தம் கொடுத்து விலகியதை பார்த்து “அச்சோ” என்று தலையில் கைவைத்து ஓடிவந்து சோபாவில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.
“இதுக்குத்தான் சமையல்கட்டுக்கு போகவேண்டாம்னு சொன்னேன்டி” என்று தேன்மொழியின் காதை பிடித்து திருகியவன் அவள் கத்துவாள் என்று தெரிந்து முன்னெச்சரிக்கையாக அவளது வாயையும் பொத்திவிட்டான்.
‘ம்ம்’ என்று தேன்மொழி திமிற கையை எடுத்தவன் “அங்க என்ன பார்த்தேனு மறந்துட்டு போய் படிக்க ஆரம்பி! கொஞ்ச நேரத்துல நான் டீயை எடுத்துட்டு வரேன்” என்று அவளது தலையில் கொட்டு வைத்தான்.
“மாமா” என்று நெளிந்தாள்.
“என்னடி எதுக்கு இப்படி இரை தின்ன பாம்பு போல நெளியுற! நீ பண்றது சரியில்லையே” என்று அவளது கையை பிடித்து தனபாக்கியம் அறைக்குள் இழுத்து வந்தவன் “ஒழுங்கா படிக்குற வேலையை பாரு” என்று அவளின் தலையில் மீண்டும் ஒரு குட்டு வைத்தான்.
அவளோ “தலையில கொட்டாத மாமா நான் வளராம போயிருவேனாம் அப்பத்தா சொல்லுச்சு” என மூக்கை சுருக்கினாள் தேன்மொழி. அவன் அவளை பார்த்தவாறே இருக்க. அவனது கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்து “நாமளும் லிப்கிஸ் பண்ணலாமா மாமா தப்பில்லையே!” என்றாள் கண்ணை உருட்டி.
அவள் கொடுத்த முத்தம் இனித்தாலும் அவள் படிப்பு முக்கியம் என்று எண்ணியவன் “பர்ஸ்ட் படிக்கிற வழிய பாரு. அப்புறம் மொத்தமா முத்தம் கொடுத்துக்கலாம்” என்று கடுகடுவென பேசிவிட்டு வெளியே வந்துவிட்டான். ஆனால் முத்தம் கொடுத்த மனையாளுக்கு பதில் முத்தம் கொடுக்காமல் வந்தது அவனுக்கு ஏக்கமாகவும் அவளை கடிந்து பேசி வந்து விட்டோமென்றும் வருத்தப்பட்டு அவன் மனம் தத்தளித்தது.
பரீட்சை முடியட்டும் ஒரு வாரம் தேன்மொழியோடு ஹனிமூன் போய்ட்டு வரலாம் என எண்ணியவன் உடற்பயிற்சி செய்ய அறைக்குள் சென்றுவிட்டான் சந்தனபாண்டியன். அவனுக்கும் கல்யாணமாகி புது பொண்டாட்டியுடன் சந்தோசமாக இருக்கணுமென்ற ஆசை கனவுகள் இருக்குமல்லவா! அவனும் இரத்தமும் சதையும் ஆன மனிதன் தானே!
அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்குமே! ஒரு காலத்தில் மல்லிகாவை விரும்பியவன் தான் அவள் தன்னை வேண்டாமென்று துச்சமாய் தூக்கிப்போட்டு போய்விட்டாள். எங்கே இருக்கிறாள் என்று கூட சந்தனபாண்டியனுக்கு தெரியாது. தேன்மொழியின் கழுத்தில் தாலி கட்டிய அந்த கணம் முதல் தேன்மொழியை மட்டுமே தன் நெஞ்சுக்குள் அவனுக்கு கிடைத்த புதையல் போல பொத்திவைத்திருக்கிறான். தேன்மொழியின் குறும்புத்தனத்தை ரசிக்கிறான்! அவளின் அழகை எப்போது புசிப்போம் என்று கணவனாக காத்திருக்கிறான். தன்னவளை போல ஒரு பெண்குழந்தை வேணும் என்று கனவு காணும் ஆண்மகன் சந்தனபாண்டியன்.
தேன்மொழி படித்து முடித்து குளித்து வந்தவள் சாப்பிட டைனிங் டேபிள் வந்தாள். வளர்மதியோ நந்தனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். “ஹாய் குட்டி ஸ்கூல்க்கு கிளம்பியாச்சா?” என்று நந்தனின் கன்னத்தை தடவினாள்.
“சித்தி நீ இந்த வாரம் முழுக்க என்கூட விளையாட வரலை. நான் உன்மேல கோவமா இருக்கேன்!” என்றான் சாப்பாட்டை கடவாயில் அதக்கியபடி.
“சித்திக்கு எக்ஸாம் கண்ணா! அடுத்தவாரம் எக்ஸாம் முடியட்டும் உன்கூடவே முழுநேரம் விளையாடுவேன்” என்றாள் அவனை போலவே சாப்பாட்டை வாயில் அதக்கியபடி.
“ஐ ஜாலி ஆனா எனக்கு பகல்ல ஸ்கூல் இருக்குமே! எப்படி விளையாடுவது” என்று கண்ணை உருட்டினான் நந்தன்.
“ம்ம் ஸ்கூல் முடிந்து வந்ததும் ஹோம்ஒர்க் செய்துட்டு நைட் வரை விளையாடலாம்” என்றாள் தேன்மொழி தலையை ஆட்டியபடி.
அங்கே வந்த சந்தனபாண்டியனோ ‘எக்ஸாம் முடிச்சதும் நான் ஒரு ப்ளான் போட்டு வச்சிருக்கேன்.! இவ என்னமோ நந்தனுக்கு சரி சமமா பேசிக்கிட்டு இருக்கா! டேய் பாண்டி நீ பாதி நாள் வயித்தை ஈரதுணி போட்டு கட்டிக்க வேண்டியதுதான்’ என்று புலம்பிக்கொண்டு டைனிங் டேபிள் வந்தவன் “எக்ஸாம்க்கு நேரமாச்சு இன்னும் என்ன? சாப்பிடாம நந்தன்கிட்ட அரட்டை அடிச்சிட்டு இருக்க” என்று தேன்மொழியை அதட்டல் போட்டான் சந்தனபாண்டியன்.
அவள் இன்று போட்டிருந்த ஊதாநில அனார்கலி சுடிதாரும் தலையில் வைத்திருந்த சந்தனமுல்லையும் அவனை சித்தத்தை பித்தம் கொள்ளச் செய்தது. பெரும்மூச்சு விட்டு சாப்பிட்டு முடித்தான்.
வளர்மதியோ இருவரையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். நந்தனை ஸ்கூல் வேனில் அனுப்பிவிட்டு தோட்டத்துக்குச் சென்றிருந்த அருள்பாண்டியன் வந்ததும் “அப்பத்தாகிட்ட பேசுங்க” என்றாள் உதடசைத்து.
“ம்ம்” என்று தலையை ஆட்டியவன் தனபாக்கியம் அறையை பார்த்தான். தனபாக்கியமோ பூஜையறையிலிருந்து நெற்றியில் திருநீறுடன் வெளியே வந்தார்.
தேன்மொழியோ “மாமா எக்ஸாம்க்கு நேரமாச்சு போகலாமா?” என்ற பேக்கை மாட்டிக்கொண்டு வந்து நின்றாள் சந்தனபாண்டியன் முன்னே
“கிளம்பலாம் அப்பத்தா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வா” என்று கூறிவிட்டு எழுந்து நின்றான்.
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மாச்சி” என்று காலில் விழுந்தவளை “பர்ஸ்ட் மார்க் எடுக்கணும்டி” என்று ஆசிர்வாதம் செய்து பூஜையறைக்கு கூட்டிச்சென்று திருநீறு பூசிவிட்டார்.
“சரி அம்மாச்சி நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்றவள் வெளியே வந்து சந்தனபாண்டிய்ன் தேன்மொழி விசயத்தை அப்பத்தாவிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த அருள்பாண்டியனிடம் “மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று அருள்பாண்டியன் காலில் விழுந்தாள்.
“நீதான் டாப்பர் ஸ்டுடன்ட் ஆச்சேடா! பர்ஸ்ட் வருவ! வாழ்த்துகள்டா” என்று ஆசிர்வாதம் செய்தான்.
“தேங்க்ஸ் மாமா” என்று முகம் பூரிப்பு கொண்டு “வளரு அக்கா உங்க காலில் விழறேன்” என்று வளர்மதியின் பக்கம் ஓடி வந்தவளை தடுத்து நிறுத்தி “என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு எக்ஸாம் நல்லா எழுதிட்டு வா” என்று அவளை தோளோடு அணைத்து வாழ்த்தினாள் வளர்மதி.
சந்தனபாண்டியனோ தேன்மொழி நடத்தும் கூத்தை பார்த்து ‘இவ எல்லாரையும் பேசியே மடக்கி கைக்குள்ள போட்டு வச்சிக்குவா போல’ என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.
தனபாக்கியமோ “உன் புருசன் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குடி தினமும் உன்னை காலேஜ்க்கு கூட்டிட்டு போறவன் அவன் தானே கால்ல விழு” என்றார் சிறு அதட்டல் போட்டு.
“ம்ம் விழறேன் அம்மாச்சி” என்றவள் சந்தனபாண்டியனை ஒரு பார்வை பார்த்து ‘விழட்டுமா’ என்று உதடு அசைத்தாள். அவள் பார்வையே சரியில்லையே என்று யோசித்தவன் மூச்சை இழுத்து விட்டு “நீ நாளைக்கு என் கால்லுல விழுந்துக்கோ! இப்ப டைம் ஆச்சு வாடி” என்று அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றான் சந்தனபாண்டியன். தேன்மொழி காலில் விழறேன் என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அப்பத்தாவிடம் மாட்டி விடுவாள் என்று எண்ணி தேன்மொழியை கூட்டிக்கொண்டுச் சென்றுவிட்டான்.
காரில் போகும் போது “ஹால் டிக்கெட் எடுத்து வச்சிட்டியா!” காரை ஓட்டியபடியே தேன்மொழியின் பக்கம் திரும்பினான் சந்தனபாண்டியன்.
“ம்ம் எடுத்து வச்சிட்டேன் மாமா!” என்றவள் “ஆமா நீ ஏன் என்னை ஆசிர்வாதம் பண்ணல. கோஸ்டியன் பேப்பர் கஷ்டமா வந்திட போகுது! கார்ல இருந்து இறங்கினதும் என்னை ஆசிர்வாதம் பண்ணிடு” என்றாள் தேன்மொழி அவளது குரலில் ஏதோ ஏக்கம் தோன்றியது. ஒரு முறை அவளை திரும்பி பார்த்து விட்டு காரை ஓட்டினான்.
காலேஜ் வந்து விட “மாமா ஆசிர்வாதம் பண்ணு” என்று சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.
“பக்கத்துல வா” என கண்ணால் சைகை செய்தான். அவன் பார்வையில் மந்திரத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவள் போல சந்தனபாண்டியன் பக்கம் சென்றாள். ஒரு நொடி கண்ணை மூடித்திறந்தவன் தன்னவளின் நெற்றியில் முன் காற்றில் ஆடும் ஒற்றை முடிக்கற்றை விரல் கொண்டு ஒதுக்கி வைத்து அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்து “ஆல்.தி.பெஸ்ட் குட்டிப் பொண்ணு என் காலுல எல்லாம் நீ விழவேண்டாம்டி பர்ஸ்ட் நைட் அன்னிக்கு விழு உன்னை தாங்கிக்குறேன்” என்று கண்ணைச்சிமிட்டினான் குறும்பு பார்வையுடன்.
“பர்ஸ்ட் நைட்” என்றதும் அவளுக்கு எங்கே இருந்து வெட்கம் வந்ததோ தெரியவில்லை. அவளது கன்னம் செம்மை படர்ந்து உதடு கடித்து “போ மாமா எனக்கு வெட்கமா இருக்கு” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தவளோ “ஒ.ஒரு லிப் கிஸ் கொடேன் மாமா எக்ஸாம் எழுத பூஸ்டா இருக்கும்” என்றாள் போக்கிரி பெண் தேன்மொழி.
“அடிக்கழுதை நான் இப்போ முத்தம் கொடுத்தா அதே நினைப்போட இருப்ப எப்படி எக்ஸாம் எழுதுவ?” என்றான் அவளது கன்னம் கிள்ளி
“மாமா எக்ஸாம் வேற செக்ஷன்! முத்தம் கொடுக்கறது வேற செக்ஷன்! நான் புக்கையே கரைச்சு குடிச்சிருக்கேன். நீ தாராளமா முத்தம் கொடுக்கலாம்” என்று தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
“அந்த வேலையே வேண்டாம்டி அடுத்த வாரம் எக்ஸாம் எழுதற வரைக்கும் லிப் முத்தத்திற்கு தடா போட்டிருக்கேன். வேணும்னா இன்னொரு நெத்தி முத்தம் தரேன்” என்று அவளின் நெற்றியில் முத்தம் கொடுக்க போக.
“யோவ் மீசை, பொண்ணு நானே முத்தம் கேட்குறேன்! நெத்தியில முத்தம் கொடுக்க நான் என்ன எல்.கே.ஜி ஸ்டூடன்டா?” என்று முறைப்போடு அவனது சட்டையை பிடித்து சண்டை போட்டாள்.
“ஏய் இந்தாரு வாய்கொழுப்பு புடிச்சவளே. உன்னைப்போய் பயந்த பொண்ணுனு தப்பா நினைச்சிட்டேன்! நீயெல்லாம் ரவுடி ரங்கம்மாடி! நீ கேட்டா நான் முத்தம் கொடுக்கணுமாடி போய் எக்ஸாம் எழுது. ஈவ்னிங் வரேன்” என்று காரை அன்லாக் செய்துவிட “ம்ம் நீ கொடுக்காட்டி போடா மீசை! நான் கொடுக்குறேன்” என்று அவனது மீசையை செல்லமாய் இழுத்துவிட்டு அவனது இதழில் அழுத்தமாய் முத்தம் கொடுத்து விட்டு “நான் வரேன் மீசை” என்று அவனது கன்னத்தை கடித்துவிட்டுச் சென்றாள்.
“இராட்சசி நான் பண்ண வேண்டியதெல்லாம் இந்த போக்கிரி குட்டிப் பொண்ணு பண்ணுறா! நான் முத்தம் கொடுத்தா தாங்குவாளா! எக்ஸாம் முடியட்டும் முழுசா பிரியாணி போடுறேன்” என்று மீசையை முறுக்கிவிட்டு காரை எடுத்தான்.
ஒரு வேலையாக தேன்மொழி படிக்கும் காலேஜ் பக்கம் வந்தவன் தேன்மொழி சந்தனபாண்டியனுடன் சந்தோசத்துடன் பேசி சிரித்து இறங்கி போவதை கண்ட தென்னரசுவோ ‘டேய் சந்தனபாண்டி நீ சந்தோசமா இருக்கறது எனக்கு பிடிக்கலையேடா! எங்க குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டு. நீ ஆனந்தமா பொண்டாட்டி கூட சுத்துறியே டா என் மனசு பொங்குதுடா! உன்னோட இந்த சிரிப்புக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்குறேன்!’ என பொறாமையில் பொங்கினான் தென்னரசு.
தனபாக்கியம் சாப்பிட்டு முடித்ததும் “வளரு நான் தோட்டத்துக்கு கிளம்புறேன்” என்றவர் ரைஸ் மில்லுக்கு கிளம்பி வந்த அருள்பாண்டியனிடம் “ரைஸ் மில்லுக்கா அருளு! அப்படியே என்னை வயல்ல இறக்கி விட்டு கிளம்பிக்கோ” என்று எழுந்து நின்றார் தனபாக்கியம்.
“அப்பத்தா நான் உங்ககிட்ட கொஞ்சம் சந்தனபாண்டியன் தேன்மொழி சம்பந்தமா பேசணும்” என்றான் தயங்கியபடி வளர்மதியை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.
‘அவள் பேசுங்க’ என்று கண்ணால் சைகை காட்டியதும்
“என்ன வளரு பீடிகை எல்லாம் பலமா இருக்கு!” என்றபடி சோபாவில் அமர்ந்தார் தனபாக்கியம்.
“அப்பத்தா நம்ம தேனு குட்டி கடைசி வருசம் படிக்குறா. அடுத்த வாரம் எக்ஸாம் முடியுது. ஏன் இன்னமும் சின்னவனையும் தேனுவையும் பிரிச்சு வைக்கணும். தேனு நைட் கண்ணு முழிச்சு படிக்குறா அது உங்க தூக்கத்துக்கு தடையா இருக்கு! எங்களுக்கு உங்களோட ஹெல்த் முக்கியம் அப்பத்தா. அதான் சந்தனபாண்டியன் அறைக்கு நம்ம தேனுகுட்டியை அனுப்பி வைக்கலாம்னு நான் யோசித்தேன்! நேத்து நைட் நம்ம தேனுவுக்கு சின்னவன்தான் டீ போட்டு கொடுத்திருப்பான் போல வளரு சொன்னா! உங்க மனசுல என்ன தோணுது அப்பத்தா?” என்றான் அவரின் பதிலை எதிர்பார்த்து.
“நேத்து நைட்டு நடந்தது எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்குறீங்களா! சந்தனபாண்டி என்னோட அறைக்குள்ள வந்ததும் தெரியும். தேனு குட்டிக்கு டீ போட்டு கொடுத்ததும் தெரியும்! ஏன்? அவன் பொண்டாட்டிக்கு முத்தம் கூட கொடுத்தான் தான்! இனியும் ரெண்டு பேரையும் பிரிச்சி வைக்ககூடாதுனு நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்! இப்பவே தேனு கலெக்டருக்கு கோச்சிங் கிளாஸ் போறாதான். கலெக்டர் ஆனதும் குழந்தை பெத்துக்கட்டும்னு விட முடியாது. ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சிடுவோம். தேனுகுட்டி கர்ப்பம் ஆனா அவளை நாம பார்த்துப்போம். குழந்தை பிறந்ததும் நாம குழந்தையை கவனிச்சுக்கலாம் அவ ஏதோ ட்ரெயினிங் எல்லாம் போகணுமாமே. போய்ட்டு வரட்டும். உங்களை வளர்த்த எனக்கு என் பேரன் குழந்தைகளை வளர்க்க கஷ்டமா தோணாது அருளு” என்றார் தனபாக்கியம் வீட்டின் மூத்த பெண்மணியாக.
“ரொம்ப சந்தோசம் அப்பத்தா நீங்க இப்படி ஒரு முடிவைத்தான் எடுப்பீங்கனு எனக்கு தெரியும். இளசுகளை எத்தனை நாள் பிரிச்சு வைக்க முடியும். சின்னவனும் குழந்தை குட்டினு ஆனந்தமாக இருக்கணுமே” என்றான் சந்தோச சிரிப்புடன்.
“ம்ம் நாம யாருக்கும் துரோகம் பண்ணலை அருளு. நமக்கு நல்லதைத்தான் கடவுள் நடந்தி வைப்பார்” என்றவர். “ஏன் டி வளரு நந்தன் ஒருத்தனே போதும்னு நினைச்சிட்டியா. ஒரு பேத்தி பொண்ணையும் பெத்து கொடு வளர்த்து விடுறேன். இந்த வீட்ல யாருக்கு பொண்ணு முதல் பொறக்குதோ அவங்களுக்கு என் புருசன் ஆசையா செய்து போட்டு 15 பவுன் காசுமாலையை கொடுக்க முடிவு பண்ணி இருக்கேன். யாரு அந்த அதிர்ஷ்ட தேவதைனு தெரியலை” என்றார் தனபாக்கியம்.
“நம்ம வீட்ல யாருக்கும் முதலில் பொண்ணு பொறந்தாலும் எனக்கு சந்தோசம்தான் அப்பத்தா. நாங்களும் அடுத்த குழந்தைக்கு ப்ளான் பண்ணிட்டுதான் இருக்கோம்” என்றான் எங்கோ பார்த்து. வளர்மதிக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. “எ.எனக்கு துணி துவைக்கணும்” என்றவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
“என்னடா அருளு உன்பொண்டாட்டி நேத்து கல்யாணம் ஆன புதுபொண்ணு போல வெட்கப்பட்டு ஓடுறா. நீ என்னமோ தலையை குனிஞ்சு நிற்குற. ரெண்டு பேரும் பண்றது சரியில்லையே! எப்படியோ சந்தோசமா இருந்தா சரி தோட்டத்துல என்னை இறக்கிவிடு அருளு” என்று பெரும்மூச்சு விட்டு எழுந்தார். இவர்கள் வீட்டில் இன்னும் கொஞ்ச நாளில் புயல் வீச போவது தெரியாமல் இருந்தார் தனபாக்கியம்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌
crJVgiZwGBuFaT
FfrAXTPdJE
BzKyhpUCwk
rygmiLGHaUJ