ATM Tamil Romantic Novels

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

9 – புயலோடு பூவுக்கென்ன மோகம் 



    நிகிதா செயலில் வீராவின் மனதில் லாலிபாப் மிட்டாயின் தித்திப்பு அந்த சிறு தித்திப்பு மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு இருக்க…உற்சாகமாக வேலை பார்த்தான்.



மதிய உணவுக்கு வருவான் என எதிர்பார்த்தாள். அவன் வரவில்லை. பாட்டி சொன்ன மாதிரி வேலை    இருக்குமோ.. அழைக்கலாமா..திட்டுவாரோ.. என யோசித்து நேரம் கடத்தினாள்.மாலை நான்கு மணி வரை பார்த்து விட்டு இவள் சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்து கொண்டாள்.



நேரம் கடக்க..கடக்க..வீராவை பார்க்க வேண்டும் என ஆசை அதிகமாகி கொண்டே போக.. ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டுவருவாரா என  வாசலைப் பார்க்க.. அழைக்கலாமா என போனைப் பார்க்க.. என இருக்க… 

 

ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வந்த பாட்டி இவளை பார்த்து ஆச்சரியமாகி..

 

“நிகிதா.. என்ன பண்ணிட்டு இருக்க…”

 

சோகமாக முகத்தை வைத்து கொண்டு

 

“மாமா இன்னும் வரல.. கீரேனீ”

 

பாட்டி பக்கென சிரித்து விட்டார்.

 

பாட்டியின் சிரிப்பில் முகம் சிவக்க… “போங்க  கீரேனீ  சிரிக்காதிங்க..”சிணுங்கினாள்.




“எதுக்கு இப்படி வாசலையே பார்த்துட்டு இருக்கற..”

 

“மாமா இன்னும் சாப்பிட வரலையே..”

 

பாட்டி கடிகாரத்தை பார்த்து விட்டு “அஞ்சு மணியாகுது. அவன் இவ்வளவு நேரமாகவா சாப்பிடாம இருப்பான்.ஏதாவது ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டு இருப்பான்.நீ இன்னும் சாப்பிடலையா..”

 

“சாப்பிட்டுடேன்.ஆனா மாமாவ இன்னும் காணலயே..” என்றாள் ஒரு ஏக்க பெருமூச்சுடன்…

 

ஆஹா.. பேத்தி செம்ம பார்ம்ல இருக்கா.. ஆனா இந்த வீரா பையன் அதை புரிஞ்சுக்காம சுத்திகிட்டு இருக்கானே..என வீராவை மனதோடு திட்டி கொண்டு…

 

“அவன் வர எட்டு மணியாகும்.போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. ஏழு மணி போல கிளம்பி வா”என சொல்ல..

 

இரண்டு முறை வாசலை திரும்பி திரும்பி பார்த்தவாறே தனதறைக்கு சென்றாள். அடுத்த ஒருமணி நேரத்தில் கீழே வந்து உட்கார்ந்து கொண்டாள்.



அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு பூச்சரம் சூடி அமர்ந்திருந்தவளை பார்த்து ஆராத்யா விசித்திரமாக பார்த்தாள்.

 

பாட்டியிடம் தமிழ் பாடம் படிக்க வந்த ஆராத்யா நிகிதாவை கண்டு விழி அகல பாராத்தாள்.

 

“அக்கா..நீயா இது..” என நிகிதாவை சுற்றி வந்து கேலிப் புன்னகையோடு கேட்க…

 

“ச்சீ… போடி..”என்றாள் வெட்கத்துடன்..

 

“ம்ம்.. அக்கா… சூப்பர்.. சூப்பர்..” என அவள் வெட்கத்தை பார்த்து  சொல்லி சிரிக்க… பாட்டி தாத்தா இருவரும் கூட சேர்ந்து சிரிக்க..

 

“கீரேனீ..தாத்தா…நீங்களும் அவ கூட சேர்ந்து என்ன ஓட்டறிங்களா..” என்றாள் போலி கோபத்துடன்..

 

“பின்னே என்னக்கா..ஓவர் நைட்ல.. நீ ஓவர் ஸ்மார்ட்டாயிட்டா.. நாங்க என்ன தான் பண்றது சொல்லு..”என்றாள் பொய்யாக முகத்தை சோகமாக வைத்து கொண்டு..வராத கண்ணீரை துடைத்து கொள்ள…

 

நிகிதா ஆராத்யாவை அடிக்க துரத்த… அக்காவிற்கு போக்கு காட்டி கொண்டு தங்கை ஓட..

 

“நில்லு ஆரு..”

 

தமக்கையின் கைகளுக்கு சிக்காமல் ஓட..பேத்திகளின் விளையாட்டை பார்த்த பெரியவர்கள் கண்கள் கலங்கி விட…

 

வீட்டில் எப்போதும் இது போல கலகலப்பு இருந்ததில்லை. அவரவர் வேலை.. அவரவர்  நேரம் காலம் என இருக்க…

 

தன் நண்பர்களின் வீடுகளை பார்த்து குடும்ப சூழலுக்காக ஏங்கும் ஆராத்யா தந்தை டியூஷன் செல்ல சொன்ன போது.. மறுத்து விட்டு மாலையில் தாத்தா பாட்டி அமர்ந்து பேசி கொண்டு இருக்க.. அவர்கள் அருகே அமர்ந்து படிப்பாள்.

 

எப்பவும் வீடு ஒருவித அமைதியுடன் தான் இருக்கும்.

 

உடனே ஆராத்யா ஓடி வந்து பாட்டியை அருகே அமர்ந்து தாடையை பிடித்து “அச்சோ கீரேனீ  என் ஸ்வீட்டில.. க்யூட்டீல.. “என கொஞ்ச…

 

“போடி போக்கிரி..” என சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொள்ள…

 

“அதென்ன வீரா மாமா கொஞ்சினா மட்டுமே     ஒன்னும் சொல்லமாட்டிங்க.. அதே நான்  கொஞ்சினா திட்டறது..”

 

தாத்தாவின் அருகே அமர்ந்து அவரின்  கைகளை ஆறுதலாக பற்றிய இருந்த நிகிதா வீரா கொஞ்சியது இவளுக்கு எப்படி தெரியும் என பார்க்க..

 

“என்னக்காக அப்படி பார்க்கற…”



ஒன்றுமில்லை என்பதாக தலையாட்ட.. தமக்கை கேட்கவில்லை என்றாலும் ஆராத்யா சொன்னாள். 

 

“மாமா.. மாசம் ஒரு தடவையாவது தாத்தாவையும் கீரேனியும் பார்க்க வருவாங்க… அப்ப கீரேனிய  இப்படி தான் கொஞ்சுவாங்க..”

 

தான் வீட்டில் இருந்திருந்தால் தானே இதெல்லாம் தெரிந்திருக்கும் என  நினைத்து கொண்டாள்.

 

வீராவின் மேல் கொண்ட காதலால் இன்னும் இன்னும் அவனை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டாள்.



இரவு வீரா வரும் வரை நால்வரும் ஏதோ சலசலவென பேசி கொண்டே இருந்தனர்.ஆராத்யாவிற்கு மனசில் அவ்வளவு சந்தோஷம்.

 

இரவு எட்டு மணி ஆகியும் வீரா வராததால் நிகிதா அவனுக்கு அழைத்தாள். அப்போது தான் வேலையை முடித்து கிளம்பி காரில் வந்து கொண்டு இருந்தவன் போனின் மணி சத்தத்தில் அழைப்பது யார் என பார்த்தவன் நிகிதா என திரை ஒளியில் மின்ன…அவளது எண்ணை நிகிதா என பதிவு செய்து கொண்டான் அவள் முதன்முதலாக அழைக்கும் போதே.. அழைத்தது அவள் தான் என தெரிந்ததும் அழைப்பை ஏற்கவில்லை. அதுவே அவளுக்கு கம்ப்யூட்டர் வாய்ஸாக வரவும்..மீண்டும் முயற்சித்தாள். முழுவதும் போய் கட்டாகும் கடைசி நொடியில் எடுக்காவிட்டால் மீண்டும் அழைப்பாளோ என எண்ணி எடுத்தான்.



“ஹலோ.. மாமா.. வீட்டுக்கு இன்னும் வரலயே.. வந்துடுவிங்களா.. லேட்டாகுமா…”அவன் எடுத்ததும் அவனை பேசவிடாமல் ஒரே மூச்சில் இவள் பேச…

 

மாமா  என்ற அழைப்பே இவனுக்கு எரிச்சலை கிளப்ப..மேலும் அவளின் உரிமையான பேச்சு வேற இவனின் எரிச்சலில் எண்ணையை ஊற்ற.. உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது.

 

“வரேன் வைடி”என்று போனை அணைத்து டேஷ்போர்டில் தூக்கி போட்டவன்..ம்கூம் இவ சரியில்லை.. இவ இப்படியே போனால் நமக்கு நல்லதில்லை.. பிரச்சினை இல்லாமல் இவளை விட்டு பிரிஞ்சி போயிடனும். அதுக்கு இவகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டென் பண்ணனும் என நினைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.  காலையில் இருந்தே இருந்த உல்லாசமான மனநிலை போய் ஒரு எரிச்சல் வந்து உட்கார்ந்து கொண்டது.



வீட்டினுள் நுழைந்தவன் பேத்திகளோடு பேசி கொண்டு இருந்த பெரியவர்களின் முகத்தை தான் முதலில் பார்த்தான். அதில் என்றுமில்லாத அளவுக்கு பூரிப்பு. அதே அவனின் எரிச்சலில் சற்று தண்ணீர் தெளிக்க..கொஞ்சம் அடங்கியது.

 

பாட்டியின் அருகில் அமர்ந்தவன் “என்ன அம்மாச்சி.. ஒரே குதுகலாமா இருக்கறிங்க போல..ப்யூட்டி கூடி தெரியுது.”என கிண்டல் செய்ய..

 

“போடா படவா..”என அவனின் தோளில் செல்லமாக அடிக்க..

 

தாத்தாவோ “என் பொண்டாட்டி எப்பவும் ப்யூட்டி தான். எம்  பொண்டாட்டியவே எப்ப பாரு கொஞ்சிகிட்டு.. போ..போ.. அதான் உனக்கு கொஞ்சறதுக்குனு ஒரு ஆளை சேர்த்து வச்சிருக்கோம்ல..அவளை போய் கொஞ்சுவானாமா.. அத விட்டுட்டு எப்ப பாரு எம் பொண்டாட்டி கூடவே ரொமான்ஸ் பண்ணவேண்டியது..”  என கடுப்பில் பேச..

 

பாட்டியின் காதில் “தாத்தாவிற்கு பொறாமை அம்மாச்சி” என கிசுகிசுக்க..

 

பாட்டி சத்தமாக சிரித்து விட… தாத்தாவின் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை காட்டுவதாக அவன் முகம் சிரிப்பில் இருந்து கடுப்புக்கு மாறியது. இருந்து போதும் அதை மறைத்து கொண்டு ஆராத்யாவிடம்

 

“ஆரு… என்ன படிச்சிட்டு இருக்க…ஏதாவது டவுட் இருந்தா கேளு சொல்லி தரேன்”

 

“தமிழ் தான் படிக்கறேன்.. கீரேனீ சொல்லி தராங்க.. வேற சப்ஜெக்ட்ல டவுட் இருந்தா கேட்கறேன்..”

 

சரி என்பதாக தலையாட்டியனான். எல்லோரிடமும் பேசியவன் மறந்தும் நிகிதா பக்கம் பார்வையை திருப்பவில்லை. ஆனால் நிகிதாவோ ஒரு விநாடி கூட அவனிடமிருந்து  பார்வையை அகற்றவில்லை.



வீராவை… அவனின் ஒவ்வொரு செயலையும்.. பேச்சையும்.. காதல் மிகுந்த  பார்வையோடு ரசித்து கொண்டு இருந்தாள். உள்ளே வரும்போது நிமிர்ந்த வேக நடையை.. பாட்டியின் தோளில் கை போட்டு கண்ணை உருட்டி  பேசியது… தாத்தா சொன்ன போது அவன் முகம் மாறியது.. அதை சடுதியில் மாற்றி இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டது. ஆருவிடம் பேசிய போது அவன் குரலில் இருந்த பாசம்…… பேசும் போது அவன் முகம் காட்டிய பாவனை…கைகளின் அசைவு.. கணீர் என இருந்த கம்பீரமான குரல்… என அத்தனையும் காதலோடு ரசித்து மனம் எனும் கேலரியில் இமேஜாக சேவ் செய்து கொண்டாள்.

 

தாத்தா சொன்னாற் போல தன்னை ரொமான்டிக்காக பார்த்தால்.. பேசினால்.. எப்படி இருக்கும் என சிந்திக்க.. சொல்லாமல் கொள்ளாமல் அவர்களின் கூடல் பொழுதுகள் ஞாபகத்தில் வந்து ஒட்டி கொண்டது.  கன்னம் சிவக்க.. அன்று வீராவின் காதல் மொழிகளை அசை போட்டவளுக்கு… அதுக்கு பிறகு அவனுடைய பாராமுகமும் நினைவுக்கு வந்தது.

 

நிகிதாவின் ரசிகமனம் கொஞ்சம் வாடவும் செய்தது. யாருக்காக தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டாளோ.. வீடே தங்காமல் ப்ரண்ட்ஸ் கூட சுற்றி திரிந்தவள் இப்போது எல்லாம் யாருக்காக வீட்டிலேயே சுகமாக அடைந்து கிடக்கிறாளோ..  யாரின் வரவுக்காக காத்திருந்தாளோ.. அவனின் நேர்பார்வை என்ன  கடைகண் பார்வை கூட கிடைக்கவில்லை எனவும் வாட்டம் கொண்டது.

 

நிகிதா தன்னை விழி மூடாமல் பார்த்து கொண்டு இருப்பதை… அவளை பார்க்காமல் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவளின் செயல் எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் பின்னால் எடுக்க போகும் முடிவுக்கு அது உகந்தது அல்ல.. அதை எப்படியாவது அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டு  தங்கள் அறைக்கு சென்றான்.

 

அவன் செல்லவும்.. அவன் பின்னோடு இவளும் சென்றாள். தன் பின்னாலேயே வருவாள் என நினைத்தான். அதை மெய்பிப்பது போலவே தான் அவளும் வந்தாள். வீரா வீட்டில் இருந்தால் அவன் இருக்கும் இடத்தில் நிகிதா இருப்பதை கண்டு கொண்டு இருந்தான்.

 

அவளை எரிப்பது போல பார்த்தவன்.. உடை மாற்றி  ப்ரெஷாகி வர செல்ல.. அவனுக்கு முன்பு சென்று அவனின் டீசர்ட் டிராக் பேண்டை எடுத்து கொடுத்தாள். அதில் அவன் பார்வையின் வெப்பம் கூடியது. அதை வசிய பார்வை ஒன்றை செலுத்தி தணிக்க முயன்றாள்.

 

இதுக்கு எல்லாம் மசியமாட்டேன் என முகத்தை திருப்பி கொண்டு குளியலறைக்கு செல்ல.. அங்கும் அவனை முந்தி கொண்டு உள்ளே செல்லப் பார்க்க..

 

“ஏய் நில்லு.. இப்ப எதுக்கு என்ன இடிச்சு தள்ளிகிட்டு உள்ள போற…” என்றான் கோபமாக..

 

“இல்ல… உள்ள டவல் இருக்கானு பார்க்கத் தான்..”என்றாள் அசடு வழிந்தவாறே…

 

கோபத்தில் அவளின் கைபிடித்து இழுத்து தள்ளி விட்டான். அவன் தள்ளி விட்ட வேகத்திற்கு கீழே விழுந்தவளின் முன்  மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி எச்சரித்தவன்..

 

“இங்க பாரு.. உனக்கும் எனக்கும் என்றைக்கும் பொருந்தாது. நா… பொருந்தாமல் ஒட்டாமல் வாழறதையே வீட்டு பெரியவர்களுக்காக  சகிச்சிகிட்டு இருக்கேன்.  இதுல நீ இப்படி எல்லாம் நடந்து என்னை இரிடேட் பண்ண.. பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டேன்”என காட்டமாக பேசியவன் எழுந்து  குளியலறைக்குள் சென்று கதவை  சாத்தி கொண்டான்.

 

சிறிது நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்தவன்  எப்படி விட்டு சென்றானோ.. அதே நிலையில் இருக்க.. பேதலித்து போய் இருந்தவளை கையை பிடித்து தன்னை நோக்கி வேகமாக இழுக்க..இழுத்த வேகத்தில் அவன் மார்பில் வந்து மோதியவள் என்ன செய்கிறான் மலங்க விழிக்க… ஹப்பா என்ன பார்வை டா.. என சிலிர்த்தவன்.. கண்கள் இரண்டிலும் முத்தம் வைக்க.. விழி மூடி மெல்ல கிறங்கினாள்.

 

“ம்ஹா…”கிறக்கமான அவளின் குரல் உசுப்பேத்த…அவள் இதழை தன் இதழால் வன்மையாக  கடித்து சுவைக்க…  தீரவில்லை தாகம்.. கண்ணாளனுக்கு…

 

 அவளின் உமிழ் நீர் எல்லாம்

 

அவனின் தாகம் தீர்க்கும் உயிர் நீராக…

 

போதவில்லை…. தாகம் தீர வில்லை..

 

தாகம் தீராது… அதிகமாகி போனது…

 

கடிகார மணியின் கூக்கூ ஓசையில் கலைந்தவள் “ச்சே.. இதெல்லாம் கனவா… நிஜமில்லையா… ” வெட்கத்தில் சிவந்த முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்.

 

என்னவோ போடி நிகிதா.. இப்படியே கனவுல தான் வாழனுமோ..என ஏக்க பெருமூச்சு விட்டாள்.

 

மாமா ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்க.. எனக்கும்  முதல்ல பிடிக்கல தான் ஆனா இப்ப ரொம்ப பிடிக்குதே.. வேணாம்னு சொன்ன நானே நெருங்கி வரும்போது இவங்க ஏன் தள்ளி தள்ளி போறாங்க..என்னய பிடிக்கலயோ… எல்லோரும் சொல்லற மாதிரி நான் அழகாக தானே இருக்கேன்… இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி யாரயையாவது லவ் பண்ணி இருப்பாங்களோ… அந்த காதல மனசு வச்சுகிட்டு தான் இப்படி நடந்துகிறாங்களோ.. என்ன காரணமாக இருக்கும் என்னை பிடிக்காம போக… என பலவிதமாக யோசித்து கவலைப்பட்டாள்.



அது எல்லாம் சிறிது நேரம் தான் எதுவாக இருந்தாலும் இனி மாமாவுக்கு என்னை பிடிக்கற மாதிரி நடந்து.. அவர் மனசு மாத்தி.. அவர் கூட சந்தோஷமா வாழ்ந்திரனும் என முடிவு எடுத்தவள்.. சுற்றும் முற்றும் பார்க்க.. அவன் அறையிலேயே இல்லை.

 

ப்ரெஷாகி குளியலறையில் வந்தவன் இவன் தள்ளி விட்டு சென்றவாறே தலையில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ சிந்தனையில் இருந்தவளை பார்த்தவன் முகத்தை திருப்பி கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

 

 தெளிந்த மனதுடன் எழுந்து கீழே சென்றாள். எல்லோரும் சாப்பிட அமர்ந்திருக்க.. வேலையாட்கள் உணவை டேபிளில்  எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

 

வேலையாட்கள் எடுத்து வைத்ததும் நகர சொல்லி கையசைத்தவள்  தானே எல்லோருக்கும் தானே பரிமாறினாள். அன்று ராகவ்வும் வீட்டுக்கு நேரமாக வந்திட.. இவர்களோடு சாப்பிட உட்கார்ந்தவர் மகளின் நடவடிக்கையை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தார்.



தன் மகளா இது..ஜீன்ஸ் டீசர்ட்.. நடை உடை பாவனை எதிலும் ஒரு ஆண்பிள்ளை போல  சுற்றி கொண்டு இருப்பவள்.. இன்று அழகான காட்டன் சுடிதாரில் எப்பவும் விரித்திருக்கும் கூந்தலை சிறு பின்னலிட்டு பூ சூடி.. பொட்டு இல்லாமல் இருக்கும் நெற்றியில் சிறு கருப்பு பொட்டு ஒட்டி.. வகிட்டில் குங்குமம் வைத்து.. பார்க்க கண் நிறைந்திருக்க.. அதற்கு மேல் கையசைவில் வேலைக்காரர்களை  நகர்த்திய விதம் அனைவருக்கும்  அருகே இருந்து தேவையறிந்து பரிமாற.. தன் மகளை இப்படி பார்க்க தானே ஆசை கொண்டார். கண்கள் கலங்கிவிட..

 

தாத்தா கையை அழுத்தி கொடுத்து “சாப்பிடு ராகவா..” என சொல்ல…

 

மகளிடம் கேட்டு கேட்டு வாங்கி வழக்கத்தை விட அதிமாகவே சாப்பிட்டார். மனதும் வயிறும் நிறைந்தது அவருக்கு.

 

ஆராத்யா”டேடி நாம தினமும் நைட் இப்படியே எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாமா.. இது நல்லா இருக்குல்ல..மம்மியும் வந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்”

 

“அதுக்கென்னடா..மம்மிகிட்ட நான் சொல்றேன். எப்பவும் இப்படியே சாப்பிடலாம்” என ராகவன் சொல்ல..

 

“ஹே…சூப்பர்” என துள்ளி குதித்தாள். சாதாரண குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்று ஆராத்யாவிற்கு பெரியதாக பட.. அவளின் மகிழ்ச்சியை  எல்லோரும் ஆதுரமாக பார்த்து கொண்டு இருந்தனர்.

 

வீரா ஆருவின் ஏக்கத்தை சரியாக புரிந்து கொண்டவன் ” ஆரு பேபி.. கண்டிப்பா சாப்பிடலாம் ” என தலையை தடவி கொடுத்தவன்.. “மாமா.. இனி எந்த வேலை இருந்தாலும் கரெக்ட் டைமுக்கு சாப்பிட வந்திடலாம்” என ராகவ்விடம் சொன்னான்.

 

நிகிதாவிற்கோ பற்றி கொண்டு வந்தது. எல்லார்கிட்டயும் நன்றாக பேசு.. ஆனால் என்கிட்ட மட்டும் கடுவன் பூனை மாதிரி விழுந்து பிராண்ட வேண்டியது என அவனை திட்டி கொண்டு இருந்தாள் மனதோடு…

 

 

ஒட்டி உறவாட தவிக்கும்

 

அவள்…

 

வெட்டி பிரிய துடிக்கும்

 

அவன்…

 

சொல்லாமலே இருவரும் 

 

ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்

 

ஆட்டம் நிறைவுக்கு வரும் நாளில்

 

 வெற்றி என்பது யாருக்கு..

 

முடிவு மகிழ்ச்சியா..

 

மனவருத்தமா…

 

வாழ்க்கை இனிமையா..

 

கசப்போடு செல்லுமா…

 

கேள்விக்கு பதில் யார்

 

சொல்வது… 

 

காலத்தின் சட்டதிட்டம்

 

என்னவோ….

 

10 thoughts on “9 – புயலோடு பூவுக்கென்ன மோகம்”

  1. I simply could not go away your site prior to suggesting that I extremely enjoyed the usual information an individual provide on your guests? Is going to be back regularly to inspect new posts.

  2. Thank you for another excellent post. Where else could anyone get that type of information in such an ideal way of writing? I’ve a presentation next week, and I’m on the look for such info.

  3. Hello There. I found your blog using msn. This is an extremely well written article. I will make sure to bookmark it and come back to read more of your useful info. Thanks for the post. I will definitely return.

  4. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top