நிலவு 22
தேன்மொழி போட்ட சத்தத்தில் அருள்பாண்டியன் அடித்துபிடித்து வெளியே வந்து பார்க்க சந்தனபாண்டியன் நாக்கை கடித்துக்கொண்டு தேன்மொழியின் காதை திருகிக்கொண்டிருந்தான்.
“மாமா காது வலிக்குது ஆஆஆ… விடுங்க” என்று கூச்சலிட்டு சிணுங்கியவளின் இடையில் கை வைக்க போக அருள்பாண்டியன் வந்தததை பார்த்துவிட்ட சந்தனபாண்டியன் அண்ணன்கிட்ட வசைபாட்டு வாங்க முடியாதென டக்கென்று கையை எடுத்துவிட்டான். ஆனால் காதை திருகுவதை மட்டும் நிறுத்தவில்லை.
இருவரையும் பார்த்த அருள்பாண்டியனோ “ரெண்டு பேரும் ரூம்க்குள்ள போய் சண்டை போடுங்க ஹால்ல நின்னு சத்தம் போட்டுக்கிட்டு என்ன பழக்கம் இது ஓடுங்க” என்று இருவரையும் தடியெடுத்து துரத்தாத குறையாக மிரட்டினான்.
“பாருங்க அண்ணா இவ என்னை திருடன்னு சொல்லுறா” என்று தேன்மொழியை முறைத்துக்கொண்டே அருள்பாண்டியனிடம் புகார் வாசித்தான் சந்தனபாண்டியன்.
தேன்மொழி “மாமா” என்று வாயை திறக்கும் முன் “உங்க ரெண்டு பேரையும் உள்ள போக சொன்னதா ஞாபகம்” என்று மார்பில் இரு கையையும் சேர்த்து கட்டிக்கொண்டு கண்டிப்பு விடுத்தான் அருள்பாண்டியன்.
தேன்மொழி சந்தனபாண்டியனுக்கு பழிப்பு காட்டிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
“உனக்கு தனியா சொல்லணுமாடா உள்ள போ” என்று அதட்டியவனை “அண்ணா உங்கிட்ட பேசணும்” என்றதும் “தங்கபாண்டியன் இப்ப கொஞ்ச நேரம் முன்ன போன்ல எல்லாம் பேசிட்டான். இப்ப போய் தேன்மொழியை சமாதானம் பண்ணு..! நாம காலையில பேசிக்கலாம்” என்றவன் தம்பியின் தோளைத் தட்டிச் சென்றான் சிரித்தபடி.
தேன்மொழியோ அறைக்குள் ஓடிச்சென்று மெத்தையில் படுத்துக்கொண்டாள். ‘இங்கிருந்து ரூம்க்குள்ள போனா சும்மா விட்டுருவேனா’ என அவள் நடந்துக் கொண்ட விதத்தில் இன்னும் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தவன் வேகமாக அறைக்குள் சென்று கதவை காலால் அடித்து மூடினான் சந்தனபாண்டியன்.
‘அச்சோ மீசை மாமா ரூம்குள்ள வந்திருச்சு போல..! கண்ணை மூடி தூங்குறது போல நடிடி தேனு…!’ என்று பாசாங்கு செய்து குறட்டை வேறு விட்டாள் பெண்ணவள்.
‘நடிப்புல சாவித்திரியை மிஞ்சிடுவா போலயே இருடி வரேன்..!’ என்று அவன் போட்டிருந்த சட்டையையும் ஜுன்ஸையும் கழட்டி ஹாங்கரில் போட்டுவிட்டு டவலை எடுத்துக்கொண்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டவன் குளித்து விட்டு வந்து வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு பனியன் கூட அணியாது கட்டில் பக்கம் திரும்பினான். தூங்குவது போல நடித்துக்கொண்டிருக்கும் தேன்மொழியை பார்த்து ‘இருடி வரேன் இன்னிக்கு உன்ன என்ன பண்ணுறேன் பாரு’ என்று கட்டிலில் மெல்ல ஏறினான்.
அதுவரை தூங்காமல் இருந்தவளுக்கு அவன் தன் பக்கம் நெருங்க நெருங்க இதயம் தாளம் தப்பியது. முதுகு காட்டி படுத்திருந்தவள் ‘அச்சோ! அச்சோ முருகா!! முருகா!! காப்பாத்து’ என கடவுளை துணைக்கு அழைத்தவள் கையை இறுக்கிக்கொண்டாள்.
அவள் தூங்கவில்லை என்று அவளது உடல் அசைவது அப்பட்டமாக தெரிய அவளது இடுப்பில் கையை போட்டு தன் பக்கம் திரும்பி விட்டான்.
“ம்ம் தூக்கம் வருது மாமா என்னை காலையில திட்டிக்கோ” என்று கண்ணை மூடிக்கொண்டே சும்மா பேசி நடித்தவளை தன் மார்பில் இழுத்துப்போட பட்டென்று கண்ணை திறந்தவள் “சாரி!! சாரி!! மாமா!! என்னை எதுவும் பண்ணிடாத” என்றாள் பச்சைப்பிள்ளை போல அப்பாவியாக கண்ணை உருட்டி.
“என்னை திருடன் சொன்னலடி அதுக்கு பனிஷ்மெண்ட் உனக்கு கொடுக்க வேணாமா!” என்று மீசையை முறுக்கி பேசிக்கொண்டே அவளது இடையை இன்னும் இறுக்கினான். “ஷ்ஷ் மாமா வலிக்குது” என்று கண்ணைச் சுருக்கினாள்.
“மெதுவாதான்டி பிடிச்சேன் இதுக்கே வலிக்குதுங்குற” என்று அவளது முகவடிவை விரல்களால் அளந்தான். பெண்ணவளோ அவனது செயல்களில் கூச்சம் நெட்டித்தள்ள உடம்பை நெளித்து அடுத்து அவன் கைகள் போன இடத்தை கண்டு கண்ணை மூடிக்கொண்டே “மாமா இப்போ நாம பர்ஸ்ட் நைட் கொண்டாடப்போறோமா?” என்றவளுக்கு உதடுகள் நடுங்கியது. உடலும் நடுங்கியிருக்கும் அவனது கைவளைவிற்குள் இருக்க அவளது உடலுக்கு நடுக்கத்தை வரவிடவில்லை சந்தனபாண்டியன்.
சந்தனபாண்டியனிற்கோ அவள் கேட்ட விதம் சிரிப்பை வரவழைக்க “ஆமா” என்றதும் படபடவென பட்டாம்பூச்சியாய் மூடியிருந்த இமைக்குடைகளை விரித்து “எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு நாளைக்கு கொண்டாடலாமா!” என்று கண்ணை உருட்டியவளை கண்டு “ஏன்?” என்று புருவம் தூக்கி பார்த்தான் சந்தனபாண்டியன்.
“ஏனா நாளைக்கு அப்பத்தா வந்துடும்ல அவங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி நம்ம வாழ்க்கையை தொடங்கலாம் மாமா” என்று அவனது மார்பில் சாய்ந்த படியே மூச்சு வாங்க பேசினாள் அவளது விழிகளில் பயம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
“அப்படியா! அப்பத்தா வந்ததும் தான் நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கும்னா அப்பத்தா இன்னும் ஒருமாசம் வரமாட்டாங்கடி அதுவரைக்கும் நான் காய்ஞ்சு போய் கிடக்கணுமா. இந்த இரண்டு வருசம் உன்னை தொடாம வச்சிருந்ததே பெரிய விசயம். முந்தாநாள் என்னமோ பரீட்சை முடியட்டும் அடுத்த நாள் சேரலாம்னு சொன்ன! இப்ப என்னடி அப்பத்தா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு சேரலாம்னு சொல்லுற. பிள்ளையாரை பிடிக்க சனிபகவான் வந்தாராம் சனிபகவானை ஏமாத்த இன்று போய் நாளை என்று சொன்னது போல என்னை ஏமாத்த பார்க்குறியாடி!! என்னை பார்த்தா திருவாத்தான் போல தெரியுதா..!” என்று அவளை சீண்டிப்பார்க்க எண்ணியே அவளை பொய்யாக மிரட்டினான்.
சந்தனபாண்டியன் மிரட்டியதில் தேன்மொழியோ உதடு பிதுக்கி அழவே ஆரம்பித்துவிட்டாள். “ஏய்! ஏய்! இப்ப எதுக்குடி அழுது ஊரை கூட்டுற..!” என்று அவளது கன்னத்தில் மெதுவாய் தட்டினான்.
“பின்னே சும்மா சும்மா என்னை மிரட்டினா அழுகாம என்ன பண்றது..!” என்று இதழ் பிதுக்கியவளின் கீழ் உதட்டை விரல் கொண்டு பிடித்தவன் “என்னை பார்த்தா காட்டு மிராண்டி போல தெரியுதாடி! புருசனை பார்த்து ரெண்டு நாளாச்சே! ஒரு போன் போட்டு என்ன பண்ணுறான்னு கேட்டியாடி..!” என்று தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் தேன்மொழியின் கன்னத்தை நறுக்கென்று கிள்ளி வைத்தான்.
“ஆஆ” என்று கன்னத்தை தேய்த்தபடி “ம்ம் நீங்க மட்டும் என்னவாம் நான் உங்களுக்காக காத்துக்கிடப்பேனு ஒருபோன் போட்டு என்ன புள்ள பண்ணுறனு கேட்டீங்களா..! சும்மா மீசையை முறுக்கி விட்டு மிரட்டினா மட்டும் போதாது மாமு” என்று இதுவரை அழுது சிணுங்கியவள் மூக்கு விடைக்க கோபம் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“அடடே என் பொண்டாட்டிக்கு கோபம் கூட படத்தெரியுதே! இப்ப கூட என் அக்கா பொண்ணு ரொம்ப அழகுதான்” என்று நெற்றியில் முட்டியவன் “நமக்கு பர்ஸ்ட்நைட் இன்னிக்கு கிடையாது நாள் கிழமை பார்த்து நடக்கும்..! ஆனா இப்ப கொஞ்சம் பர்ஸ்ட் நைட்க்கான ஒத்திகையை பார்த்து விடலாமா?” என்றவன் விழிகள் அவளை மென்று தின்று விடும் அளவிற்கு பார்த்து வைத்தது.
“அச்சோ எனக்கு வெட்கமா வருது மாமா” என்று அவன் மேல் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து கண்களை இரு கைகள் கொண்டு பொத்திக்கொண்டாள்.
“என்னது உனக்கு வெட்கம் வருதா..! நான் உன் வெட்கத்தை இரசிக்கணும்டி” என்று போதையாக சொன்னவன் அவளது கண்களை மூடியிருந்த கைகளை மெல்ல எடுத்து விட்டவன் பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டு மெல்ல கழுத்து வளைவில் முகம் புதைத்து “இப்ப கூட உன்னோட பயத்தை போக்கத்தான் இப்படி நடந்துக்குறேன்டி குட்டிப்பொண்ணு..! உனக்கு தொந்தரவா அல்லது நான் தொடும் போது பெயினா இருந்தா..! என் கிட்ட சொல்லிடு நிறுத்திடுறேன்..!” என்று அவளது கழுத்து வளைவில் குட்டி குட்டி முத்தம் கொடுத்தான். அவனது மீசை முத்தம் அவளை அடி ஆழம் வரை சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு முத்தத்திற்கும் அவளது பொன்மேனி குலுங்கியது. பெரிய பெரிய மூச்சுக்களாக இழுத்து விட்டுக்கொண்டாள் பெண்ணவள்.
“ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! குட்டிப் பொண்ணு!” என மெல்ல அவளது முகத்தை தன் முகம் பார்க்க செய்ய… தன்னவனின் அடுத்த கட்ட செயல் என்னவென்று தெரியாமல் அவளின் பட்டு இதழ்கள் துடித்துக்கொண்டிருந்தது. துடித்த இதழ்களை ஆக்கிரமிப்பு செய்ய அவன் பருத்த இதழ்கள் ஏங்கியது. பூ பறிப்பது போல பெண்ணவளை தயார் செய்யவேண்டுமென அவளை மென்மையாய் தொட்டு தழுவி தாம்பத்தியம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தான்.
“ஹனி பொண்ணு” என்றவனின் போதை குரலில் மயங்கினாள் மாது. தேன்மொழியின் நெற்றியில் இதழ் பட்டும் படாமலும் மென் முத்தம் பதித்தான். அடுத்து இமைக்குடைகளுக்கு முத்தம் கொடுத்து ஆப்பிள் கன்னங்களுக்கு முத்தம் கொடுத்து மெதுவாய் கடித்தும் வைத்தான்.
“ஷ்ஷ்” என்று அவள் முணகல் போட அந்த முணகலோ அவனுக்கு அவளின் ஒத்துழைப்பு புரிய தேன்குடம் சுரக்கும் இதழ்களை கவ்விக்கொள்ள ஆசைப்பட்டவன் “லிப் கிஸ் பண்ணுறேன் ஹனி பொண்ணு” என்றவனோ அவளின் தேன்மிட்டாய் இதழ்களை மென்மையாய் கவ்வினான்.
பெண்ணவளுக்கோ ஜிவ்வென்ற ஏதோ பரவச உலகத்திற்குள் சென்றது போல இருந்தது. ஆணவனுக்கோ எங்கே உணர்ச்சி வேகத்தில் தன்னவளிடம் முரட்டு தனமாக நடந்து விடுவோமா என்று அச்சம் வேறு அவனை வாட்டியது.
இருவரும் கட்டிபிடித்துக் கொண்டு முத்தம் கொடுக்க கொடுக்க மோகத்தில் பின்னி பிணைந்துக் கொண்டனர் நாகமும் சாரையும் போல. அவளது இதழை மெல்ல விடுவித்து மெல்ல மெத்தையில் சரித்தான். அவளது பூந்தேகம் நடுங்க “பயமா இருக்கா சொல்லு நிறுத்திடறேன்” என்றவனை பார்த்து “பயம் இல்லை மாமா” என்றாள் பட்டுக்குரலில் தலையை இருபுறமும் அசைத்து.
“பயம் காட்டட்டுமா” என்று மெல்ல இதழ் வளைப்பு சிரிப்புடன் நைட்டியின் பட்டன்களில் கையை வைத்தான். பட்டென்று அவனது கையை தட்டி விட்டு வேண்டாமென்று தலையை அசைத்தாள். அவள் காதோரம் சென்றவன் காது மடல்களை நாவால் தீண்டி “எனக்கு எல்லாமே வேணும்டி கொஞ்சம் பார்த்துக்குறேன்” என்றவனின் கைகள் அவளது இரட்டை தாமரையை மெல்ல தொட்டு தழுவ “மா…மா” என்றவளின் குரல் நடுங்கி வந்தது. தாமரையின் மொட்டுகளை தொட்டு தொட்டு விளையாடினான் ஆடைகளுக்கு மேலே. அவள் கண்கள் சொருக பட்டன்களுக்கு விடுதலை கொடுத்து தாமரையின் மொக்குகளை கவ்விக்கொண்டான்.
“ஸ்ஸ்” என்று கால்களை குறுக்கியவளோ சந்தனபாண்டியனின் ஆதிக்கத்தில் மெய் சிலிர்த்தாள் பெண்ணவள். ஆணவனோ பெண்மையின் மென்மையில் தன்னைத்தொலைத்து அவளுக்குள் தன்னை தேடிக்கொண்டிருந்தான். அவளது நாபியில் விரல்கள் வண்ண வண்ண ரங்கோலி போட… அவனது விரல்களை தட்டிவிட்டாள் பெண்ணவள்.
“ஏய் சும்மா இருடி உனக்கு கூச்சம் போகணும்ல” என்றவனோ அவளுக்கு சோதனை கொடுக்க தொடங்கினான். அவனது தேடல்கள் ஆடைக்கு மேலே மட்டும் போதவில்லை. ஆடையில்லாமல் ஆதிவாசியாய் மாற எண்ணியவன் இப்போதைக்கு இந்த தேடல்கள் போதும் இந்த தொடுகைக்கே பெண்ணவள் துவண்டு போய் விட்டாள். பெண்ணவளின் பொக்கிஷங்களை விடவே மனமில்லை. மங்கையின் பொக்கிஷங்கள் ஏராளமாய் குவிந்து கிடக்கிறது. தினம் கொள்ளை கொள்ளலாம்.
இன்றைக்கு இந்த புதையல் வேட்டை போதுமென்று அவளின் மென்மையிலிருந்து இதழ்களை எடுத்துக்கொண்டவனுக்கு அவள் கண்களில் கண்ணீர் வழிவதை கண்டவனுக்கு தான் ஏதும் அவளை காயப்படுத்திவிட்டோமாவென்று “ஹனி பொண்ணு எங்கயாவது வலிக்குதா!! அழுத்தி விட்டேனா! சொல்லுடி ஆயிண்ட்மெண்ட் போட்டு விடறேன்!!” என்ற பதட்டத்துடன் அவன் கேட்க “பெயின் இல்ல மாமா!” என்றாள் மாமாவின் மனது புண்படகூடாதென
“இல்லடி உன் வாய்தான் வலிக்கலைனு சொல்லுது ஆனா உன் கண்ணுல வலி தெரியுது” என்றான் அவளது கண்ணீரை சுட்டு விரலால் துடைத்து விட்டு
“நான் பெரிய பொண்ணு தானே உன்னை தாங்குற சக்தி எனக்கு கடவுள் கொடுப்பாரு மாமா” என்றவளோ அவனது இதழில் எக்கி முத்தம் பதித்தாள்.
“ம்ம் அப்படியா இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடலாமா” என்றவன் கண்ணடிக்க “அச்சோ மாமா என்னால முடியாதுப்பா” என்று முதுகு காட்டி திரும்பியவளை “நிஜமா நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேனாடி” என்று அவள் முதுகில் முகம் புதைத்தான்.
“இல்ல கஷ்டப்படுத்தலை எனக்கு உன்னோட வேகம் கண்டு கொஞ்சம் பயமா இருக்கு!” கண்கள் படபடக்க பேசியவளை கண் இமைக்காமல் பார்த்தவன் “உன் பயத்தை போக்கிட்டுத்தான் உன்னை முழுசா எடுத்துப்பேன்டி பட்டு” என்று அவளது இதழில் மென்மையாய் முத்தமிடத்துவங்கினான். ஒரு நிமிடம் இதழ் முத்தம் தொடர்ந்தது.
அவளது இதழை விலக விருப்பமில்லாது விலகியவன் “சீக்கிரம் என்னை தாங்க தயார் ஆகுடி” என்று அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக்கொண்டவனிடம் அவன் மார்பு சுருள் முடியை விரலால் அளந்துக் கொண்டே “ஏன் மாமா ஆர்த்தி அக்காவுக்கு இப்ப உடம்பு பரவாலையா! அவங்க எண்ணம் போல உடம்பு சரியில்லாம போயிருச்சு பார்த்தியா! போன முறை நம்ம வீட்டுக்கு வந்தப்ப ஆர்த்தி அக்கா என்னை முறைச்சு முறைச்சு பார்த்தாங்க! வளர்மதி அக்காகிட்ட வேண்டா வெறுப்பா பேசினாங்க ..! ஏன் அம்மாச்சிக்கு கூட ஆர்த்தி அக்கா மரியாதை கொடுத்து பேசலை!! எனக்கு சுத்தமா அவங்களை பிடிக்கவே இல்லை” என்றாள் முகம் சுளித்து.
“ஏய் லூசு புள்ள ஆர்த்தி மதினி நல்லவங்கதான். அவங்க டவுன்ல வளர்ந்த விதம் அப்படியா கூட இருக்கலாம். இன்னும் பத்துநாளுல மதினி நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க..! அவங்களை நீ நல்லா பார்த்துக்கிடணும். அவங்களே உன்னை ஏதாவது பேசினாலும் நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சு போகணும் சரியா..! அப்போதான் நாம கூட்டுக்குடும்பமா இருக்க முடியும்..! அந்த தென்னரசு நம்ம குடும்பத்துல குட்டையை குழப்ப திட்டம் போட்டிருப்பான். அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது. யாராவது மூலமா உன்கிட்ட ஆர்த்தி மதினியை பத்தி தப்பா கூட சொல்ல சொல்லலாம்..! நீதான் எச்சரிக்கையா இருக்கணும்டி!!” என்றான் அவளது தலையை தடவியபடியே… அவள் உறங்கி வெகுநேரம் ஆகிவிட்டது.
தேன்மொழி தன் பேச்சுக்கு பதில் பேச்சு இல்லாமல் இருக்க ‘கும்பகர்ணி தூங்கிட்டாளா’ என்று அவளை தன்னிடமிருந்து மெல்ல எடுத்து தலையணையில் படுக்க வைத்து அவளை அணைத்தபடியே உறங்கினான்.
தென்னரசுவோ மல்லிகாவை வலை போட்டு தேடிக்கொண்டிருந்தான். மல்லிகாவை வைத்து சந்தனபாண்டியன் வாழ்வில் விளையாட எண்ணினான்.
தனபாக்கியம் ஆர்த்தியை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டார். புளி இல்லாமல் பத்திய சாப்பாடு சமைத்து கொடுத்தார். அவளை எழுந்து நடக்க கூட விடவில்லை. அவள் படுத்திருக்கும் அறைக்கே சாப்பாடு அனைத்தும் கொண்டுச் சென்றவர் சாப்பிடச் சொல்ல என்னால முடியல பாட்டி என்று மறுப்பவளுக்கு ஊட்டியும் விடுவார் தனபாக்கியம்.
இடையில் மதுரையிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யும் நபர்கள் அவருக்கு போன் போட்டு “அப்பத்தா நடவு நட ஆரம்பிச்சிட்டோம் நீங்க இல்லாததுதான் குறை” என்றார்கள். அடுத்து சந்தனபாண்டியன் போன் போட்டு “அப்பத்தா நடவு நட்ட ஆளுங்களுக்கு கூலி எவ்ளோ கொடுக்கிறது..! நீங்க தானே இதெல்லாம் பார்த்துக்கிட்டீங்க சொல்லுங்க..!” என்று அடுக்கடுகாய் ஒவ்வொருவரும் தனபாக்கியத்திற்கு போன் போட்டார்கள்.
ஒரு அலுவலகத்தை கட்டியாளும் பெண் போல அத்தனை பேருக்கும் பதில் சொல்லிக்கொண்டே ஆர்த்திக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார்.
“ச்சே பாட்டி ரொம்ப நல்ல மனசுக்காரவங்க. நாம தான் அவங்களை தப்பா நினைச்சிட்டோம். இத்தனை பிஸி வுமனா இருக்காங்க. நாமெல்லாம் ஆபிஸ்ல செய்யுற வேலையை விட பாட்டி வேலை பெரியதா இருக்கும் போலயே” என்று ஆச்சரியம் ஆனாள் ஆர்த்தி.
தனபாக்கியம் இல்லாது காட்டு வேலைகள் பாதி நின்று போனது என்று எண்ணியவள், இத்தனை வேலைகளை நிறுத்திவிட்டு தன்னை கவனிக்க தனபாக்கியம் இருந்தது கண்டு ஆர்த்திக்கு மனது கனத்துப்போனது.
ஆர்த்திக்கு ஆப்ரேசன் முடித்து வீட்டுக்கு வந்ததும் போன் போட்டு “எப்படி இருக்க ஆர்த்தி இந்த நேரம் பார்த்து நான் உன் கூட இல்லாம அமெரிக்கா வந்துட்டேன்..! நான் இந்தியாவுல இருந்திருந்தா இந்நேரம் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன்..! ரொம்ப சிரமமா இருக்கா..! உன் வீட்டுக்காரனால உன்னை பார்த்துக்க முடியுதா..!” என்று அக்கறையில் இருப்பவர் போல ஆர்த்தியிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சங்கரி.
“ம்ம் என்னை பார்த்துக்க கோல்ட் அப்பத்தா மதுரையிலிருந்து வந்துட்டாங்க..! நீ என் பக்கம் இருந்து பார்த்துக்கிறதை விட பல மடங்கு அவங்க என்னை தாங்கு தாங்குனு தாங்குறாங்கம்மா..! என்னை பத்தி ஃபீல் பண்ணாம அப்பாவும் நீங்களும் ட்ரிப்பை என்ஜாய் பண்ணிட்டு வாங்கம்மா..!” என்று ஆர்ப்பரிப்பாக கூறியதும் அமெரிக்காவில் இருந்த சங்கரியின் மனதில் தீ கொழுந்து விட்டெரிந்தது.
‘என் மகளை பாசம் காட்டி என்கிட்டயிருந்து பிரிக்க பார்க்குறாளா அந்த கிழவி..! நான் இந்தியா வந்ததும் என் பொண்ணை என்கிட்ட வரவைச்சிட்டுதான் மறுவேலை பார்க்கப்போறேன்..!’ என்று மனதில் வஞ்சம் வைத்து ”ஓஓ” என்றார் சுரத்தையில்லாமல் சங்கரி.
“அம்மாடி ஆர்த்தி இந்தா கருப்பு கவுனி கஞ்சி கொண்டு வந்திருக்கேன் கஞ்சியை குடிச்சிட்டு போன்ல பேசு கண்ணு” என்று பேச்சில் பாசத்தை காட்டினார் தனபாக்கியம்.
“நான் அம்மாகிட்டதான் பேசுறேன் பாட்டிமா” என புன்னகையுடன் பேசியவள் “ம்மா பாட்டிமாகிட்ட பேசுங்க நீ இல்லாத குறையை பாட்டிமா தீர்த்து வைச்சிட்டாங்க! எனக்கு சத்தான எனர்ஜிக் சத்து மாவு கஞ்சியெல்லாம் வைச்சு கொடுக்குறாங்க தெரியுமா..! எப்படி வைக்கறதுனு கேட்டு தெரிஞ்சிக்கோம்மா உனக்கு யூஸா இருக்கும்” என்று தன் உடம்பில் இருந்த வலியெல்லாம் பறந்து போய் இருக்க சங்கரியுடன் சந்தோசமாய் பேசினாள் ஆர்த்தி.
‘க்கும் இந்த கிழவிகிட்ட நான் பேசணுமா சூனியக்கார கிழவி என் மகளை ஒரு வாரம் விட்டுட்டு வந்தேன். அவளுக்கு ஆப்ரேசன் பண்ணியதை காரணம் காட்டி சென்னைக்கு வந்து என் மகளை அவங்க பக்கம் இழுக்கப் பார்க்குது கிழவி’ என்று மகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் தனபாக்கியத்தை நினைத்து சந்தோசப்படாமல் அவரை கறுவிக்கொண்டிருந்தவர் போனை தனபாக்கியம் வாங்கியதும் “இங்க சிக்னல் சரியா கிடைக்கலை நான் போனை வைக்குறேன்” என்று வைத்துவிட்டார் சங்கரி.
‘அதானே என்கிட்ட பேச உனக்கு தைரியம் இருக்கா என்ன சங்கரி’ என்று மனதில் சிரித்துக்கொண்ட தனபாக்கியமோ “போன்ல உன் அம்மா பேசலையே கண்ணு நைட்க்கு உனக்கு என்ன டிபன் செய்து தரட்டும் சொல்லு ராசாத்தி?” என்று அக்கறையாய் கேட்டவரிடம் “உங்களுக்கு என்ன தோணுதோ அதை சமைச்சு கொடுங்க பாட்டி..! உங்க சமையல் தேவாமிர்தமா இருக்கும்” என்று சிலாகித்து சொன்னாள் ஆர்த்தி.
“இன்னிக்கு அடை தோசையும் தேங்காய் சட்னியும் செய்து தரேன்டிமா” என்றவர் சங்கரி தன்னிடம் பேசாமல் போனை வைத்ததை பற்றியெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் சமையல் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.
தங்கபாண்டியன் முடிக்க வேண்டிய வேலைகளை நேரம் காலம் பார்க்காமல் செய்துக் கொண்டிருந்தான். மதியம் கூட சாப்பிட வீட்டுக்கு வருவதில்லை. தனபாக்கியம் ஆர்த்தியுடன் இருக்க அவன் கவலையில்லாமல் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான்.
ஆப்ரேசன் முடிந்து ஐந்து நாட்களாகியிருந்தது. தங்கபாண்டியன் மதியம் சாப்பிடும் போது ஆர்த்திக்கு போன் போட்டு “சாப்பிட்டியா மாத்திரை போட்டியா அம்மு..! ரெஸ்ட் எடு..! நான் லேட் நைட்தான் வருவேன்” என்று பேசி போனை வைத்துவிடுவான். கணவனுக்காக காத்திருந்து மாத்திரையின் உபயத்தால் உறங்கிவிடுவாள் ஆர்த்தி அடுத்தநாள் காலையில் அவள் கண்விழிக்கும் நேரம் முன்னே ஆபிஸுக்குச் சென்று விடுவான் தங்கபாண்டியன்.
அன்றிரவு ஓரளவு வேலைகளை முடித்துவிட்டு மேனேஜ்மெண்டில் தான் முடித்து வைத்த வேலைகளை மெயில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு நேரமே வந்துவிட்டான். அப்போதுதான் சாப்பிட்டு முடித்து உறங்கச்சென்றிருந்தாள் ஆர்த்தி. அறைக்குள் சோர்வாய் வந்த தங்கபாண்டியனிடம் “வாங்க சார் இன்னிக்காவது நேரமே வீட்டுக்கு வந்தீங்களே… பொண்டாட்டிக்கு ஆப்ரேசன் பண்ணி ஐந்து நாளாச்சு என்கிட்ட இன்னும் பேசக்கூட நேரம் கிடைக்கலை சாருக்கு..!” என்றாள் கிண்டலாக. இன்னும் வேலையை விட்டு ஒரேடியாக மதுரைக்கு போவதை ஆர்த்தியிடம் தங்கபாண்டியன் சொல்லாமல் இருந்தான். அவனுக்கு நேரமும் கிடைக்கவில்லை.
“ரொம்ப டையர்டா இருக்கேன் அம்மு..! குளிச்சிட்டு வந்து உன்கிட்ட பேசுறேன்..!” என்று அவளது நெற்றியில் முத்தம் பதித்து குளியலறைக்குள் சென்றவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இரவு உடைக்கு மாறியவன் ஆர்த்தியின் பக்கம் உட்கார்ந்து “சொல்லுங்க மேடம்” என்றான் ஆர்த்தியை லேசாக அணைத்தபடியே.
“ம்ம் அப்படி என்ன ஆபிஸ்ல ஓவர் ட்யூட்டி வேலையிருக்குனு நேரம் காலம் பார்க்காம வேலை பார்க்குறீங்க” என்று அவனது தோளில் சாய்ந்தாள் ஆர்த்தி.
அந்த நேரம் பேரனின் சோர்வை அறிந்த தனபாக்கியம் ராகி தோசையை தட்டில் போட்டுக் கொண்டு வந்தார். தனபாக்கியத்தை பார்த்ததும் இருவரும் விலகிக்கொண்டனர்.
“தொந்தரவு பண்ணிட்டேனா… தங்கம்” என்று தயங்கி தட்டை நீட்டினார் தங்கபாண்டியனிடம்.
“அச்சோ அப்படியெல்லாம் இல்ல அப்பத்தா” என்றவன் தோசை தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தவன் “நீங்க சாப்பிட்டீங்களா அப்பத்தா?” என்றான் வாய்க்கு ருசியான ராகி தோசை சாப்பிட்டுக்கொண்டே.
“ம்ம் சாப்பிட்டேன் ராசா சுகர் மாத்திரை போடணுமே..!” என்றார் பெரும்மூச்சுவிட்டு.
தங்கபாண்டியன் சாப்பிட்டு முடிக்க தட்டை வாங்கிக்கொண்டு “தங்கம் இன்னும் ரெண்டு நாளுல ஆர்த்தியை செக்கப்பிற்கு கூட்டிட்டு போறோம் அடுத்த மூணு நாளுல நாம மதுரைக்கு கிளம்புறோம்ல” என்றதும் ஆர்த்தி புருவம் சுருக்கி ‘அப்படியா’ எனும் விதத்தில் தங்கபாண்டியனை பார்க்க.
“ம்க்கும்” என தொண்டையை செருமியவன் “எல்லாம் ரெடி பண்ணிட்டேன் அப்பத்தா நாம இருக்க வீடு கூட என் கூட ஆபிஸ்ல வேலை செய்யும் கார்த்திக் ரென்ட்டுக்கு கேட்டிருக்கான் நானும் விடறேன் சொல்லியிருக்கேன்” என்றான் நெற்றியை தேய்த்தபடி.
“ம்ம் நாம சீக்கிரம் மதுரைக்கு கிளம்பணும் ராசா வேலை நிறைய கிடக்கு” என்றபடியே தங்கபாண்டியன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டுச் சென்றார் தனபாக்கியம்.
இந்த வயசிலும் இந்த பாட்டி எப்படி இத்தனை வேலையும் அசராது செய்யுறாங்க என்று பிரமித்து பார்த்தாள் ஆர்த்தி. ஆனால் தங்கபாண்டியனோ ஆர்த்தியை சென்னையை விட்டு மதுரைக்கு எப்படி கூட்டிக்கொண்டு போவது! மதுரைக்கு வர சம்மதிப்பாளா என்று யோசித்தபடியே ஆர்த்தியை பார்த்தான்.
ஆர்த்தியோ “கோல்ட் ஏன் நாம மதுரைக்கு கிளம்ப போவதை என்கிட்ட சொல்லவேயில்லை?” என்று முறைத்தாள் தங்கபாண்டியனை.
“ஏய் ஊருக்கு போனா நான் கோழிப்பண்ணை வைக்கலாம்னு இருக்கேன்… அதுக்கு அண்ணனும் உனக்கு என்ன விருப்பமோ அதை செய்னு சொல்லிட்டாருடி! உன்கிட்ட இன்னிக்கு நைட் பேசலாம்னு இருந்தேன் அதுக்குள்ள அப்பத்தா வந்து உண்மையை சொல்லிட்டாங்க சாரிடி!” என்றான் காதை பிடித்துக் கொண்டு.
“அப்போ எனக்கு மதுரையை பிடிக்கலைதான்… எப்போ சென்னைக்கு வருவோம்னு இருப்பேன்..! ஆனா இப்ப மதுரையை ரொம்ப பிடிச்சுதான் வர சம்மதிக்குறேன்! மதுரைக்கு வருவதை விட பாட்டியை ரொம்ப பிடிச்சு வரேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி.
“நீ இவ்ளோ சீக்கிரம் மதுரைக்கு வருவதற்கு சம்மமதிப்பனு நான் எதிர்பாக்கலைடி! நாம மதுரைக்கு போனதும் நம்ம பேமிலி டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம். நீ எதை பத்தியும் கவலைப்படக்கூடாது. அங்க வந்து வளரு மதினிகிட்ட முகம் சுளிக்க கூடாது..! முக்கியமா தேன்மொழிகிட்ட போட்டி போடக்கூடாது சரியா..! நாம எப்படி நடந்துக்குறமோ அதுபோலத்தான் நம்மகிட்டயும் பழகுவாங்கடி..! இனிமேலாவது உன் ஈகோவை விட்டு தள்ளிட்டு மதுரைக்கு வா போகலாம்” என்றான் தங்கபாண்டியன் உருகும் குரலில்.
“இத்தனை நாள் நான் வில்லியா நடந்திருக்கேன்ல!” என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஒருத்தர் உடம்பு சரியில்லாம படுக்கும்போது தான் யார் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று காட்டிக்கொடுக்கும்.
நேற்று மாலை வளர்மதியும், தேன்மொழியும் ஆர்த்திக்கு போன் போட்டு அவள் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டனர்.
தேன்மொழியோ “அக்கா நீங்க அடுத்த வாரம் வாங்க நான் எங்க ஊரு குள்ளத்தங்கரைக்கு கூட்டிட்டு போறேன்! மாங்கா சீசன் வந்திருச்சு மாங்காய் சாப்பிடலாம்! மாரியம்மன் திருவிழா வருது நாம ஒரே போல புடவை எடுக்கலாம். நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம்கா நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று அவள் பேசிக்கொண்டே போக தேன்மொழியின் கள்ளம் கபடமில்லா பேச்சில் மெய்மறந்து கேட்டாள்.
‘ச்சே இந்த பொண்ணைப்போய் தப்பா நினைச்சிட்டோம்! நாமளும் பெரியவீட்டு மருமகளா நடந்துக்கணும்’ என்றிருந்தாள் ஆர்த்தி.
வளர்மதிக்கு வாமிட் வருவது கொஞ்சம் குறைந்திருக்க வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். காய்கறி நறுக்குவது பாத்திரம் தேய்ப்பது, துவைத்த துணிகளை மடிப்பது என வேலைகளை தேன்மொழி எடுத்துக்கொண்டாள். வளர்மதியிடம் சாம்பாரில் எவ்ளோ காரம் சேர்ப்பது என்று கூட கேட்டு வைத்தாள்.
அமெரிக்காவில் சங்கரியின் அண்ணன் மகன் ராகேஷ் சங்கரியிடம் “அத்தை எனக்கு ஆர்த்தியை கல்யாணம் செய்து வைக்குறேனு நம்ப வைத்து… நான் பிஸ்னஸ் விசயமா லண்டன் போனவுடன் உங்க பொண்ணுக்கு யாரோ கிராமத்துகாரனை கல்யாணம் செய்துட்டீங்களாமே” என்று வருத்தப்பட்டு கேட்டான்.
“அதை ஏன் டா கேட்குற..! என்னோட பொண்ணு ஆர்த்தி அந்த கிராமத்துகாரனை லவ் பண்ணித்தொலைச்சிட்டா..! அவன் இல்லைனா செத்திடுவேன்னு மிரட்டுறா வேற வழி தெரியாம அந்த கிராமத்தானை கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்” என்றார் முகம் சுளித்து.
“நான் ஆர்த்தியை பார்க்கணும். இந்த முறை இந்தியாவுக்கு நானும் வரேன்” என்றான் ராகேஷ் அழுத்தமாக.
“ஓ பேஷா வாடா! இந்தியாவுல ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் சங்கரி சிரிப்புடன்.
ராகேஷோ எனக்கு ஆர்த்திதான் வேணும் அத்தை என்றான் ஏளனச்சிரிப்புடன். (நீ தங்கபாண்யடின் கையால உதை வாங்கப்போறது நிச்சயம் ராசா.)
சங்கரியிடம் மதுரைக்கு போவதை பற்றி ஆர்த்தி சொல்லவில்லை. மதுரை போகிறேன் என்றால் ஏதாவது சாக்கு சொல்லி போகாதேனு தடைபோடுவார் என்று எண்ணியவள் அமெரிக்காவிலிருந்து வந்ததும் சொல்லிக்கொள்ளலாமென்று விட்டுவிட்டாள்.
மதுரையில் தங்கபாண்டியன் வரவிற்காக விருந்தே வைத்துவிட்டான் அருள்பாண்டியன்.
தங்கபாண்டியனை மதுரைக்கு கூட்டிக்கொண்டு போவதில் அத்தனை ஆனந்தம் தனபாக்கியத்திற்கு. ஆனால் இதற்கு மேல்தான் தனபாக்கியம் குடும்பத்திற்கு சிக்கல் வரப்போவதை அறியாமல் சந்தோசமாக பேரனுடன் மதுரைக்கு கிளம்பினார் தனபாக்கியம்.
Super😍😍😍
👌👌👌👌👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
This web site is my inhalation, rattling great layout and perfect content material.
As soon as I detected this web site I went on reddit to share some of the love with them.
I regard something truly interesting about your blog so I saved to fav.