நிலவு 23
தங்கபாண்டியன் ஆர்த்தி, தனபாக்கியத்துடன் மதுரைக்கு வந்து சேர்ந்தான். தனபாக்கியத்தை கையில் பிடிக்கமுடியவில்லை. “அடியே மாரி, குப்பா, சுப்பா, என் பேரன் நம்ம ஊர்லயே அதுவும் என்கூடவே இருக்க போறான்” என்று தலைகால் புரியாமல் குதித்தார் தனபாக்கியம்.
அருள்பாண்டியனும் சந்தனபாண்டியனும் வாசலுக்கு வந்தவர்கள் தங்கபாண்டியனை கட்டிக்கொண்டனர்.
ஆர்த்தியோ என்னை யாருமே வானு கூட சொல்லாம இருக்காங்க என்று முகம் சோர்ந்து போய் நிற்க “அக்கா வந்திட்டீங்களா” என்று ஆர்த்தியின் கையை பிடித்தாள் தேன்மொழி.
“ஹான் வந்துட்டேன் தேனு” என்றவள் தன்னையும் விசாரிக்க ஆள் இருக்காங்க என்று ஆனந்தப்பட்டு மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்.
“ஹான் உங்களுக்கு உடம்பு சரியாகணும்னு நம்ம அம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்தேன்க்கா” என்றவள் அர்ச்சனை தட்டிலிருந்து விபூதியை ஆர்த்தியின் நெற்றியில் வைத்துவிட்டாள்.
“தேங்க்ஸ் தேனு” என்றவள் அவளின் அன்பில் கரைந்து போனாள். புதுமனுசியாக வந்திருந்தாள் ஆர்த்தி. ‘இனி இது நம்ம குடும்பம் ஒற்றுமையா இருக்கணும். எல்லாரையும் அனுசரித்து போகணும்… வளரு அக்கா கூட சேர்ந்து வேலை செய்யணும்… நந்தன் கூட விளையாடணும்’ என்ற பலவாறு சிந்தனைகளை சுமந்து வந்திருந்தாள் ஆர்த்தி. ஆனால் விதி விடவேண்டுமே.
மாரியோ “ஆத்தி!! ஆத்தி!! ரெண்டு மருமகளும் ஒத்துமையா இப்படி பேசிக் சிரிக்கற அழகே தனி!! என் கண்ணே பட்டிட்டும் அப்பத்தா உங்க பேத்திகளுக்கு இன்னிக்கு ராவு சுத்திப்போட்டிருங்க” என்று குமட்டில் கை வைத்து நின்றிருந்தாள்.
“சும்மா மசமசனு வெட்டியா பேசாம வளருவை ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரச்சொல்லு” என்று மாரியை விரட்டினார் தனபாக்கியம்.
“இதோ வளர்மதியம்மா ஆரத்தியோட வந்துட்டாங்க” என்று வெத்தலைகாறை பல் தெரிய சிரித்தாள் மாரி.
“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுத்துதான் உள்ள போகணும்” என்று ஆர்டர் போட்டார் தனபாக்கியம்.
“அப்பத்தா நாங்க என்ன புது மாப்பிள்ளை பொண்ணா ஆரத்தியெல்லாம் எடுத்துக்கிட்டு!! நாங்க அப்பப்ப ஊருக்கு வந்து போறதுதானே” என்று வெட்கப்பட்டான் தங்கபாண்டியன்.
“ஹான் என்பேரன் இனி என்கூடவே இருப்பான்ல அதான் கண் திருஷ்டி படக்கூடாது. அதுவும் என்ற பேத்தி ஆர்த்தி ஆப்ரேசன் பண்ணி வந்திருக்கா அவளை ஆரத்தி எடுத்துதான் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகணும் நீ ஆரத்தி எடு வளரு” என்று தங்கபாண்டியனை செல்லமாக முறைத்தார் தனபாக்கியம்.
ஆரத்தி எடுத்து முடித்து தங்கபாண்டியனும் ஆர்த்தியும் வீட்டுக்குள் சென்றனர். அருள் பாண்டியன் பஞ்சுமில்லில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பிவிட்டான்.
சந்தனபாண்டியன் லாரியில் ஏற்றி வந்த பொருட்களை வீட்டில் வேலை செய்யும் ஆட்களை கொண்டு இறக்கிக்கொண்டிருந்தான்.
ஆர்த்திக்கு காரில் வந்தது களைப்பாக இருந்தது. களைப்பை முகத்தில் காட்டாது ஹாலில் உட்கார்ந்திருந்தாள். இதுவே முதல் போல் இருந்தால் எனக்கு டயர்ட் ஆஹ் இருக்குனு அறைக்குச் சென்றிருப்பாள் ஆர்த்தி.
வளர்மதி ஆர்த்திக்கு சத்துமாவு கஞ்சி கொண்டு வந்து கொடுக்க “அக்கா நானே சமையல்கட்டுக்கு வரணும்னு இருந்தேன்! நீங்களே வந்துட்டீங்க”
என்றவளோ எழுந்து நின்று சத்துமாவு கஞ்சியை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ் அக்கா” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
இது நம்ம ஆர்த்தியா ஆளே மாறிப்போய்ட்டாளே..! இவ பேச்சு இப்படியா இருக்கும் என்று வியப்பில் பார்த்தவளை “மதினி எனக்கு சத்து மாவு கஞ்சி இல்லையா” என்று வந்து நின்ற தங்கபாண்டியனிடம் “என்ன தம்பி உங்க பொண்டாட்டியை மாத்திட்டீங்க போல” என்று கிசுகிசுப்பாய் கேட்டாள் வளர்மதி.
“ம்க்கும் உங்க தங்கச்சியை நான் மாத்தலை அவளே மாறிட்டா. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை விரட்ட முடியாதுனு சும்மாவா சொன்னாங்க. அதுபோல அவளே திருந்தி வந்திருக்கா பார்ப்போம். இதே நிலையில முகத்துல சந்தோசத்தோட உங்ககிட்ட பேசினா சரிதான் நானும் நிம்மதியா இருப்பேன்” என்றான் மெல்லிய குரலில்தான்.
சோபாவில் உட்கார்ந்து கஞ்சி குடித்துக்கொண்டிருந்த ஆர்த்திக்கு தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அனுமானித்திருந்தாலும் நாம திமிராய் நடந்தது உண்மைதானே பேசிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
தனபாக்கியம் வந்தவுடன் ஓய்வு எடுக்காமல் வயலுக்குச் சென்றுவிட்டார். மதியம் போல வந்தவர் சாப்பிட்டு ஓய்வெடுக்கும் முன்பு ஆர்த்தியின் அறைக்கு போக அறைகதவு மூடியிருந்தது. துவைத்து காய போட்ட துணிகளை எடுத்து வந்த தேன்மொழியோ “அப்பத்தா தங்கம் மாமாவும் அக்காவும் தூங்குறாங்க நீ போய் எழுப்பி விட்டிறாத. நீதான் வந்ததும் வராததுமாக ஓய்வெடுக்காம வயலை கட்டி பிடிச்சிக்க போய்ட்ட” என்று கூறி நாக்கை கடித்தவளை ஓங்கி அடிப்பதை போல கையை ஓங்கிவிட்டு “நீ இந்த வீட்ல இல்லைனா என்னால சிரிக்க முடியாது தங்கப்பொண்ணு” தேன்மொழியை கட்டிக்கொண்டார் தனபாக்கியம்.
அடுத்து வந்த நாட்கள் மளமளவென்று ஓடியது. வளர்மதி மாசமாய் இருப்பது இரண்டு நாளில் ஆர்த்திக்கு தெரிந்து விட்டது. அவளது மனம் தானும் எப்போது மாசமாய் இருப்போம் என்று ஏக்கம் கண்டு துவண்டு போனது உண்மைதான். ஆனால் தன் கவலையை மனதில் போட்டு புதைத்துக்கொண்டு “வாழ்த்துகள் அக்கா! அடுத்து நம்ம வீட்டுக்கு இளவரசி வரப்போறா இல்ல” என்று சந்தோசமாக சிரித்தவள் “அக்கா நான் பேபிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்த பழைய ரிப்போர்ட் கொண்டு வந்திருக்கேன்!! நீங்க அடுத்த முறை செக்கப் போகும் போது என்னையும் கூட்டிட்டு போறீங்களா?” என்றாள் தயங்கியபடி.
“அட என்ன நீ இப்படி தயங்கிப்பேசுற நானே உன்கிட்ட பேபி விசயத்தை பேசணும்னு இருந்தேன் நீயே பேசிட்ட! அடுத்த வாரம் செக்கப்போகும்போது உன்னையும் தங்கம் தம்பியையும் கூட்டிட்டு போறேன். நீயும் சீக்கிரம் கன்சீவ் ஆகிடுவ பாரு” என்று ஆர்த்திக்கு ஆறுதலாய் பேசினாள் வளர்மதி.
அங்கே வந்த தேன்மொழியோ அவர்கள் பேசியதை கேட்டு “ஆமாம் ஆர்த்திக்கா என் பக்கத்து வீட்டு பாட்டி சொல்லியிருக்காங்க வீட்ல ஒருத்தர் கன்சீவ் ஆனா அடுத்து இந்த குழந்தை உருவான ராசி அடுத்த மருமகளும் சீக்கிரம் கன்சீவ் ஆகிடுவாங்கனு சொல்லியிருக்காங்க அடுத்து நீங்களும் கன்சீவ் ஆகிடுவீங்க ஆர்த்தி அக்கா” என்றாள் துள்ளலாக.
ஆர்த்திக்கோ தான் கன்சீவ் என்று காது குளிர கேட்டவளுக்கு இப்போதே கர்ப்பம் ஆனது போல ஆனந்தப்பட்டாள்.
“தேன்மொழி நீ கலெக்டர்க்கு படிக்குறேனு சொன்னதானே..! குழந்தையை பெத்துக்கிட்டு படிச்சா நல்லாயிருக்கும் இல்லைனா என்னை போல குழந்தை லேட்டாக பிறந்தா உனக்கும் கஷ்டம்தானே” என்றாள் நாசுக்காக மென்மையாகத்தான் பேசினாள்.
“அட ஒரே வீட்ல மூணு மருமகளும் வயித்தை தள்ளிக்கிட்டு நின்னா எப்படியிருக்கும்… அச்சோ நினைச்சு பார்த்தாலே சந்தோசம் தான் அக்காஸ்” என்று கள்ளம் கபடமில்லாமல் சிரித்தாள் தேன்மொழி.
தங்கபாண்டியன் கோழிப்பண்ணை ஆரம்பிப்பது பற்றிய வேலையாக சுற்றிக்கொண்டிருந்தான். ஒரு மாதம் ஆனது. தங்கபாண்டியனுக்கு உதவியாக சந்தனபாண்டியன் சுற்றிக்கொண்டிருந்தான். அருள் பாண்டியன் மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான்.
நாகப்பன் ஊஞ்சலில் கண்ணை மூடி ஆடிக்கொண்டிருந்தார். “அப்பா கேள்விப்பட்டீங்களா இந்த தங்கபாண்டியன் நம்ம ஊருக்குள்ள கோழிப்பண்ணை வைக்கப்போறானாம். எல்லா தொழிலையும் அண்ணன் தம்பி மூணு பேருமே எடுத்து செய்தா நாம என்ன வேலை பண்ணி பொழப்பு நடத்துறது நாம தலையில துண்டை போட்டு போறதா” என்று புலம்பிக்கொண்டு அவரின் அருகே போய் நின்றான்.
தென்னரசு பேசிக்கொண்டிருந்ததை கண் மூடியபடியே கேட்டுக்கொண்டிருந்த நாகப்பனோ திடீரென கண்விழித்து “அந்த மூணு பாண்டியன்கள் மூத்திரத்தை குடிச்சா கூட உனக்கு அவனுங்க திறமை சுட்டு போட்டாலும் வராதுடா பன்னாடை பயலே… உன்னை போய் என் பொண்டாட்டி பெத்து போட்டு போனா பாரு…” என்று முகத்தை கடுகடுவென வைத்து எரிந்து விழுந்தார் நாகப்பன்.
“அப்பா என்னை ஏன் இப்ப திட்டுறீங்க..! அவனுங்களை ஒழிக்க திட்டம் போட்டு கொடுங்க..! நான் சிறப்பா செய்து முடிக்கிறேன்” என்றான் இல்லாத காலரை தூக்கிவிட்டு.
“ம்ம் அந்த மல்லிகா டீச்சர் எங்க இருக்கானு தேடி கண்டு பிடிக்கச் சொன்னேனே கிடைச்சாளா..? அவள வைச்சு தான் அந்த சந்தனபாண்டியனை அவமானப்படுத்த முடியும். தேன்மொழியை சந்தனபாண்டியன்கிட்டயிருந்து பிரிக்கவும் முடியும்” என்றதும் மல்லிகா டீச்சர் நினைவில் இருந்தவன் “தேன்மொழி என்றதும் மல்லிகாவை மறந்து தேன்மொழி என்னை ஏமாத்தினா இல்ல ஒருநாள் அவ எனக்கு வேணும்” என்றவன் ஏளனமாக சிரித்தான்.
“அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதுடா மவனே… மல்லிகாவை கொண்டு வந்து நிறுத்து மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்றார் நஞ்சு விஷம் கொண்ட நாகப்பன்.
தேன்மொழி கலெக்டர் கோச்சிங் கிளாஸ் சென்றுக் கொண்டிருந்தாள். இன்று கோச்சிங் கிளாஸ் முடித்து வந்தவள் வீட்டில் யாரும் இல்லாது இருக்க மாரி மட்டும் சமையல்கட்டில் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தாள்.
சமையல்கட்டை எட்டிபார்த்தவளின் வயிறு பசியில் உருண்டது. மாரி பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தாள். “மாரியக்கா வீட்ல எல்லாரும் எங்க போனாங்க ஒருத்தரையும் காணோம்” என்று கேட்டுக்கொண்டே காபியை போட ஆரம்பித்தாள்.
“ஆர்த்தி பொண்ணை செக்கப்பிற்கு கூட்டிட்டு போயிருக்காங்க வளர்மதியம்மா!” என்றவள் “நீ எப்போ பொண்ணு மாசம் ஆகப்போற கண்ணாலம் ஆகி இரண்டு வருசம் முடிஞ்சு போச்சே. படிக்கறது அதுபோல போகட்டும் குழந்தையை தள்ளிபோட்டிராத பொண்ணு அப்புறம் ஆர்த்தி பொண்ணு போல ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டல்னு கால்கடுக்க காத்துக்கிடக்கணும். சீக்கிரம் குழந்தை பெத்துக்க வழியை பாருங்க” என்று தேன்மொழியை மூளை சலவை செய்துவிட்டுச் சென்றாள் மாரி.
அன்றைக்கு தேன்மொழியிடம் நெருக்கம் காட்டிய சந்தனபாண்டியனோ அடுத்து வந்த நாளிலிருந்து அவளின் பக்கம் நெருங்கவில்லை. கலெக்டர் ஆனதும் குழந்தை பெத்துக்கொள்ளலாம் என்று எண்ணியவன் இரவில் தேன்மொழி உறங்கியதும்தான் வருவான். அப்படியே வந்தாலும் அவளை அணைத்தபடி படுத்துக்கொள்வானே தவிர அத்து மீறமாட்டான்.
தேன்மொழியும் படிப்பில் கவனமாக இருக்க அன்று தொடங்கிய தாம்பத்தியத்தை தொடர எண்ணமில்லையேன்றே சொல்லலாம். சிறு சிறு அணைப்பு. நெற்றி முத்தத்தோடு இருவரும் நின்றுக் கொண்டனர். ஆனால் சந்தனபாண்டியன் தான் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறியவன் தேன்மொழியின் படிப்பு சிதறவிடாது கண்ணியத்துடன் நடந்து வந்தான். ஆனால் அந்த கண்ணியம் இன்று சிதறப்போவது அறியாமல் வயல் வெளிக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.
ஹாஸ்பிட்டலில் முதலில் வளர்மதியை செக் பண்ணிய டாக்டர் “பேபி நல்லா இருக்கு!” என்று மாத்திரைகளை மட்டும் எழுதிக்கொடுத்தவரிடம் “என் தங்கச்சி ஆர்த்திக்கு குழந்தை இல்லைனு சொல்லியிருந்தேனே டாக்டர் அவளை கூட்டிட்டு வந்திருக்கேன் வரச்சொல்லட்டுமா வெளியே இருக்காங்க” என்றாள் ஆவலாய்.
“ம்ம் வரச்சொல்லுங்க வளர்மதி” என்றார் முகம் மலர்ந்து. வெளியே வந்த வளர்மதியோ அங்கே தங்கபாண்டியன் தோளில் சாய்ந்திருந்த ஆர்த்தியிடம் “ஆர்த்தி டாக்டர் வரச்சொல்லுறாங்க வாங்க” என்று இருவரையும் கூப்பிட்டாள்.
“நீங்க போங்க மதினி நான் ஆர்த்தியை கூட்டிட்டு வரேன்” என்றதும் வளர்மதி டாக்டர் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“கோல்ட் என் நீர்க்கட்டி பிரச்சனை சரியாகியிருக்கும்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்று கண்கள் கலங்கியவளிடம் “அம்மு நீர்கட்டியை பத்தி இனிமே நினைக்க கூடாது இந்த மன்த் உனக்கு பெயின் வரலைதானே..! அப்புறம் எதுக்கு இந்த அழுகை ம்ம்” என்றவன் அவளது கண்ணீரை சுட்டு விரலால் துடைத்து விட்டு அழாதடி நீ அழுதா எனக்கும் வலிக்குது டி” என்றான் அவளது கண்களை பார்த்து
“நா.நான் அழமாட்டேன் கோல்ட்” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி
இருவரும் டாக்டர் அறைக்குள் சென்றதும் ஆர்த்தியின் பழைய ரிப்போர்ட்டை படித்து பார்த்தவர் “ம்ம் சர்ஜரி முடிஞ்சிருக்கு இப்ப ஒரு ஸ்கேன் பாத்திரலாம் வாங்க” என்று ஆர்த்தியை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றார் டாக்டர்.
15 நிமிடங்களில் ஸ்கேன் முடித்து “நீர்கட்டி எதுவும் இல்லை எல்லாம் நார்மல்” என்றதும்தான் ஆர்த்தியின் முகத்தில் சிரிப்பே வந்தது. டாக்டர் தன் உடல்நிலை எப்படி இருக்கும் என்று சொல்லும் வரை உயிரை கையில் பிடித்து வைத்திருந்தாள். இனியும் குழந்தை பிறப்பது சிக்கல் என்று சொல்லிவிட்டால் தன்னால் தாங்க முடியாது போகுமே என்று பெரும் கவலைப்பட்டவளுக்கு பாலைவனத்தில் சிறுதண்ணீர் ஊற்றை கண்டது போல உயிர் பெற்றாள் பெண்ணவள்.
ஆர்த்தி ஸ்கேன் அறிக்கையை தங்கபாண்யடினிடம் சொல்ல அவனும் நிம்மதியானான். ஆர்த்தி கவலைப்படுவது அவனால் பார்க்க முடியவில்லையே. தாங்க முடியாமல் தானே ஊருக்கு அழைத்து வந்தான். “இன்னும் மூணுமாசத்துல நீங்க கன்சீவ் ஆகிடலாம்” என்றதும் தங்கபாண்டியனின் கையை இறுகப்பற்றிக்கொண்டவளுக்கு கண்ணீர்துளி எட்டிப்பார்த்தது.
“அழாதடி அம்மு” என்று ஆர்த்தியின் கைகளை அழுந்தப்பிடித்துக்கொண்டான் தங்கபாண்டியன். மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மூவரும் வீட்டுக்கு வந்தனர்.
தனபாக்கியமோ வயலில் இருந்து வந்திருந்தவர் “ஹாஸ்பிட்டல் போனவங்க இன்னுமா வரலை” என்றவர் தோட்டத்தில் பூத்திருந்த சந்தன முல்லையை பறித்து வந்திருந்தவர் சோபாவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த தேன்மொழியிடம் கொடுத்து “தேனு குட்டி இந்தா நம்ம தோட்டத்துல இருந்து பறிச்சிட்டு வந்தேன் கட்டி வச்சிக்கோ” என்று அவளிடம் கொடுக்க “பாட்டி எனக்கு படிக்க இருக்கு எனக்கு வேண்டாம்” என்றவளை “ஏய் கல்யாணம் ஆன பொண்ணு பூ கொடுத்தா வேண்டாம்னா சொல்லுவாங்க இரு நானே பூவை கட்டித்தாரேன்” என்றவர் கொஞ்ச நேரத்தில் பூவை கட்டியபடி “என்னடி இன்னும் உன் புருசன் சந்தனபாண்டி வரலையா!” என கேட்டுக்கொண்டே பூவை கட்டி முடித்து பேத்தியின் தலையில் வைத்து விட்டார் தனபாக்கியம்.
“என்ன கேட்டா காலையில நீங்க ரெண்டு பேரும்தானே ஒண்ணா போனீங்க” என்று சும்மா முறைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தாள் தேன்மொழி. அவளுக்கு கோபம் சந்தனபாண்டியன் மீது. அவளும் மாமா மாமா என்று சந்தனபாண்டியன் பின்னே சுற்றியவள் அவனை ஆசையாக கட்டிபித்து முத்தம் கொடுத்தால் அவனோ “போய் படி புள்ள சும்மா பிசின் போல வந்து ஒட்டிக்கிட்டு” என்று அவளை விட்டு விலகி விடுவான் சந்தனபாண்டியன்.
மனைவி வந்து கட்டிபிடித்தால் பிடிக்காமல் போகுமா அவள் கவனம் சிதறக்கூடாதென கவனமாய் இருக்கிறான் சந்தனபாண்டியன். இது தெரியாமல் தன் மாமனை வசைபாடிக்கொண்டிருந்தாள். அன்றிரவு சந்தனபாண்டியன் தன் உயிருடன் கலக்கப்போகிறான் என்று அறியாமல் இருந்தாள் தேன்மொழி.
ஹாஸ்பிட்டல் போய்விட்டு வந்த வளர்மதியோ சோர்வில் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள். ஆர்த்தியை நிறுத்திய தனபாக்கியம் “என்ன கண்ணு சொன்னாங்க கர்ப்பபை பலம் இருக்குனு சொன்னாங்கதானே” என்று அவள் கன்னம் பிடித்துக்கேட்டவரிடம் “நீங்க எனக்கு சத்தானதை சமைச்சு போட்டீங்கதானே அதுக்கு பலனா நான் இன்னும் மூணு மாசத்துல வாந்தி எடுத்து உங்க கையில பேத்தியை பெத்துக்கொடுத்து உங்ககிட்ட இருக்க 15 பவுன் காசுமாலையை வாங்கிக்க போறேன்” என்று சும்மா சிதறி விட்ட சில்லறையை போல சிரித்தாள். ஆர்த்தி கலகலவென்று சிரித்து இன்றுதான் பார்க்கிறார் தனபாக்கியம்.
“ஆத்தி! ஆத்தி! என் கண்ணு பட்டிரும் உன் சிரிப்பை பார்த்து… இத்தனை நாள் இந்த சிரிப்பை எங்க மறைச்சு வைத்திருந்த கண்ணு” என்றவோ அப்போதே அவள் கன்னம் நெட்டி முறித்தார்.
“இன்னிக்கு இராவுக்கு நானே சமைச்சு கொடுக்குறேன்” என்றவர் சொன்னதோடு நிற்காமல் வேலை செய்ய வந்த வளர்மதியை கூட சமையல்கட்டில் விடாமல் தானாக சமைக்க தேன்மொழி “அம்மாச்சி நான் உனக்கு உதவி செய்யவா?” என்றவளை “ம்மா வாடி வாடி உன்னைத்தான் எதிர்பார்த்தான் உன் ரெண்டு அக்காவுல ஒருத்தி மாசமாய் இருக்கா இன்னொருத்தி சீக்கிரம் ஆகிடுவா… அவங்களுக்கு ரெஸ்டு கொடு அப்பத்தான் நீ மாசம் ஆனதும் உனக்கு விழுந்தடிச்சு ரெண்டு அக்காவும் உனக்கு பணிவிடை செய்வாங்க..!” என்று சிரித்தபடியே சமையலை கவனிக்க “இங்க கொடுங்க காய்கறியை” என்று தனபாக்கியம் சமையல் செய்வதற்கு உதவியாக இருந்தாள்.
சமையலை முடித்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க சந்தனபாண்டியன் மட்டும் வரவில்லை. காத்திருந்து பார்த்த வளர்மதியும் படுக்கச் சென்றுவிட்டாள். “என்னடி இன்னும் தம்பி வரலையே போன் போட்டாலும் எடுக்கமாட்டேங்கிறான் இன்னும் என்ன பண்ணுறான் ரைஸ் மில்லுல” என்று மீண்டும் போட்டு பார்த்தான் அருள்பாண்டியன்.
சந்தனபாண்டியன் போனை எடுக்காமல் இருந்தான். பலநாள் கழித்து அவனது நண்பன் சங்கர் துபாயிலிருந்து வந்திருந்தவன் “மச்சி சரக்கு அடிக்கலாம்டா நம்ம ஊர் சரக்கடிச்சாதான் கிக்கா இருக்கும்” என்றவனிடம் “இல்ல மச்சான் நான் இப்ப சரக்கு அடிக்கிறதில்லை” என்று மறுத்தவனை “டேய் எனக்காக இன்னிக்கு ஒருநாள் கம்பெனி கொடுடா” என்று கெஞ்ச நண்பன் கேட்டு மறுக்க முடியாது போக “ம்ம் இன்னிக்கு மட்டும் தான்டா நாளைக்கெல்லாம் கூப்பிடாத” என கூறியவன் முதலில் ஒரு பெக் போட தொடர்ந்து சரக்கை அடித்துக்கொண்டே இருந்தான்.
அந்த நேரம் பார்த்து அங்கே வந்த தென்னரசுவோ சந்தனபாண்டியனுக்கு போதை ஏறியிருந்தது தெரிந்து “டேய் நம்ம மல்லிகா டீச்சர் ஊருக்குள்ள வந்துட்டா அதுவும் அவ கையில ஒரு குழந்தையோட” என்றதும் சந்தனபாண்டியன் கண்களில் சிவப்பேறியது. கைகளில் இருந்த மது குடுவை நொறுங்கியது.
இங்கே இருந்தால் தன் கையும் வாயும் சும்மா இருக்காதென்று அந்த நிலையிலும் “டேய் மச்சான் நான் கிளம்புறேன்டா” என்று எழுந்து ஸ்டடியாகத்தான் நடந்தான்.
ஆனால் தென்னரசுவோ “என்ன சந்தனபாண்டி உன்னை சுத்தி வந்த மல்லிகாவும் நீ தேராதவன் போல உன்னை கழட்டிவிட்டு போய்ட்டா இப்ப பிள்ளையோட வந்து நிற்குறா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க இருந்த தேன்மொழியும் நான் கட்டியிருந்தா இப்ப மசக்கை ஆக்கியிருப்பேன். நீ எதுக்கும் லாயக்கு இல்லாதவனா” என்றதும் எங்கிருந்து கோபம் வந்ததோ தெரியாது “டேய் உன்னை இங்கயே வெட்டிப்போடுறேன்டா” என்று தென்னரசுவின் குரல்வளையை பிடித்துவிட்டான்.
தென்னரசுவோ சந்தனபாண்டியனின் கையை விலக்கிவிட்டவன் லொக்லொக்கென்று இருமியவன் “உண்மையத்தானே சொன்னேன் சந்தனபாண்டி கல்யாணம் ஆகி இரண்டு வருசம் மேல ஆகாது இன்னும் தேன்மொழி அப்படியே கைபடாத ரோசா போல இருக்கா” என்றதும் நாலடி தள்ளிப்போய் விழுந்தான் அய்யோ அம்மாவென்று தென்னரசு.
தென்னரசுவின் முன்னே போய் நின்றவன் “நான் ஆம்பிள்ளை சிங்கம்னு நிரூபிப்பேன்டா..! உன்னைப்போல எச்சிப்பொறுக்கி நாய் நான் கிடையாது” என்று அவனது வயிற்றில் எட்டி மிதிக்கப்போக “டேய் சின்னவனே” என்று தங்கபாண்டியனின் குரல் கேட்டு அப்படியே காலை எடுத்துவிட்டான் சந்தனபாண்டியன்.
“இந்த எச்சிகலைத்தான் தராதரம் இழந்து நடந்துக்கிறான்னா நாம கட்டுக்கோப்பா ஊர் முன்னே வாழ்றவங்கடா..! இவன் பேசுவதை எல்லாம் பொருட்டா எடுத்துக்கிட்டா! என்னவாகுறது வாடா போகலாம்” என்று சந்தனபாண்டியன் கையை பிடிக்க.
“விடுங்கண்ணா இவனை இங்கயே வெட்டி பொலி போடுறேன் என் தேனுகுட்டியை தப்பா பேசுறான்” என்றதும்
தங்கபாண்டியனுக்கும் ஆத்திரம் வந்ததுதான் பொது இடம் என்று சூழ்நிலை கருதி “வாடா தம்பி நேரம் கிடைக்கும்போது அவனை வச்சு செய்யலாம்” என்று தம்பியை வீட்டுக்கு அழைத்து வந்தவன் கணவன் கோபமாக சென்றதை பார்த்து எழுந்த ஆர்த்தி வாசலில் வந்து காத்திருந்தாள்.
காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்து வந்த சந்தனபாண்டியனை பார்த்து “மறுபடியும் ஆரம்பிச்சாச்சா தம்பி” என்று பெரும்மூச்சுவிட்டு கேட்டவளிடம் “சாரி மதினி” என்று அவனது அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டவன் பார்வையில் கெண்டைகால் வரை ஒதுங்கிய நைட்டியடன் படுத்திருந்த தேன்மொழியை பார்த்தவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு கட்டில் வரை சென்றுவிட்டு கண்ணைமூடி நிதானப்படுத்தியவன் குளியலறைக்குள் செல்ல போனவன் திரும்பி தேன்மொழியை பார்க்க அவனது நாசியில் சந்தன முல்லையின் வாசம் ஏறியது. போதை எனும் அரக்கன் முழுதாய் விழுங்கிக்கொண்டிருந்தான் சந்தனபாண்டியனை.
தென்னரசு தன்னை ஆண்மை இல்லாதவன் என்று பேசியது அவனது மனக்கண்ணில் வர தேன்மொழியின் பக்கம் அவனது கால்கள் சென்றது. தேன்மொழியோ தன்பக்கம் நிழலாடுவது போலிருக்க கண்திறந்து பார்த்தவள் “மா.மா எப்போ வந்தீங்க?” என்று கேட்க வாயை திறக்க “ஹனி பொண்ணு நீ வேணும்டி எனக்கு” என்று உளறியவன் கட்டிலில் ஏறியவன் அவள் பக்கம் படுத்து அவள் கண்ணை மூடி திறப்பதற்குள் அவளது இதழை கவ்விக்கொண்டான்.
தேன்மொழிக்கோ மதுவின் நெடி அவளது மூக்கில் ஏறி அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. சந்தனபாண்டியனுக்கோ எதுவும் தெரியவில்லை. அர்ஜுனனுக்கு கிளியின் கண் மட்டும் தெரிகிறது என்று சொன்னானே அது போல் எனக்கு உன் இதழ் கனிரசம் மட்டுமே போதும் என்ற விதத்தில் அவளது இதழை மென்று தின்றுக் கொண்டுருந்தான்.
தேன்மொழிக்கோ இந்த நிலையில் தங்களது தாம்பத்தியம் முழுதாய் முற்று பெறக்கூடாது. என் மாமன் சுயநினைவோடு என்னை எடுத்துக்கொள்ளணும் அதுதானே இருவருக்கும் நல்லது என்று யோசித்தவள் மறுகணமே தன் இதழை அவனிடமிருந்து விலக்கிக்கொள்ள பார்க்க அவனோ நண்டு பிடியாக அவளது இதழை பிடித்திருந்தானே! கருப்பா எனக்கு பலத்தை கொடு என்று தன் பலத்தை எல்லாம் திரட்டி சந்தனபாண்டியனை விலக்கி விட்டு அந்த நொடியே கட்டிலிலிருந்து ஜம்ப் பண்ணியிருந்தாள் தேன்மொழி.
அவனோ சிறு குழந்தையிடமிருந்து ஐஸ்க்ரீம்மை பிடுங்கியது போல இதழ் பிதுக்கி “ஏய் வா புள்ள நீ வேணும் எனக்கு” என்று சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல பேசியவன் தள்ளாடி எழுந்து கட்டிலை விட்டு இறங்கி தேன்மொழியின் பக்கம் வந்தவன் அவளது கையை பிடிக்க “கையை விடுடா குடிகார மாமா! இப்படி மொடாகுடிகாரனா இருக்கியே! எனக்கு தெரியாம போச்சே உன்னை நல்லவன்னு நினைச்சேனே” என்று சும்மா அவனிடமிருந்து குடித்திருப்பதை காரணம் காட்டி தப்பிக்க எண்ணினாள்.
சந்தனபாண்டியனோ “ச.சாரி ஹனி பொண்ணு இன்னிக்கு மட்டும் மாமன் குடிச்சிட்டேன் அதுவும் என் ப்ரண்ட் சங்கர் கெஞ்சிக்கேட்டான். அதனாலதான் கொஞ்சமா ஊத்திக்கிட்டேன்! இனி சத்தியமா குடிக்க மாட்டேன் புள்ள..! அந்த பொறுக்கி என்னை ஆம்பிளை இல்லைனு சொல்லுறான்டி! உன்னை தொடாம வைச்சிருக்கேன்னு உன்னை பத்தி தப்பா பேசுறான் பொலேறுனு கன்னத்துல ஒன்னு கொடுத்து… எட்டி உதைச்சேன் குட்டிகரணம் போட்டு விழுந்தான். நாம அப்பா அம்மா ஆகணும் வாடி புள்ள அவன் எல்லாம் நம்மளை பேசலாமா” என்று இதழ் கோணி பேசியவன் தேன்மொழியை கட்டிபிடித்தான்.
“ம்ஹும் மாமா நீ நிதானத்துல இல்ல..! நாளைக்கு சேரலாம்” என்றவளை “நீ எப்போ பார்த்தாலும் நாளைக்கு நாளைக்குனு தட்டி கழிச்சுட்டு போற! என்னடி என்னை பிடிக்கலையா! வாடி புள்ள” என்று அவளை அணைக்க போக அவளோ அவனை விட்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
“எங்க ஓடினாலும் வருவேன் புள்ள” என்றவனோ குளியலறைக்குள் சென்று கதவை லாக் போட்டு திரும்ப சந்தனபாண்டியனை பிடித்து இழுத்து சவரை திறந்து விட்டு கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
“அப்படி வாடி என் ஜிலேபி” என்று அவனும் தேன்மொழியை இறுக்கி கட்டிக்கொண்டு அவளது முகம் முழுவதும் முத்தமிட்டான். இருவரும் தொப்பையாக நனைந்து விட்டனர். சந்தனபாண்டியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிந்துக் கொண்டிருந்தது. அவனது சட்டையையும் கழட்டிப்போட்டு வெற்று மார்பில் இருவரும் கட்டிக்கொண்டிருந்தனர்.
அவனது கைகள் அவள் போட்டிருந்த டாப்பை கழட்டிவிட்டிருந்தது. இன்னருடன் உதடு கடித்து அவன் செய்யும் சின்ன சில்மிஷங்களை பொறுத்துக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் போதை தெளிய “ஏய் தேனு என்னடி கோலம் இது” என்று பல்லைக்கடித்துக்கொண்டு தேன்மொழியை முறைத்தான். தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியாது கூட தேன்மொழியை மிரட்டினான்.
“மாமு நீ ரொம்ப பேசாத உனக்கு சீன் கம்மிதான் கொஞ்சம் குனிஞ்சு பாரு” என்று கையை கட்டிக்கொண்டு அவனையே கேலியாக பார்த்திருந்தாள்.
சந்தனபாண்டியனோ தன்னை குனிந்து பார்க்க பாக்ஸருடன் நின்றிருந்தான். சட்டென்று திரும்பி நின்றவனுக்கு சங்கருடன் தண்ணி அடித்தது நினைவிற்கு வந்து “ச்சே இப்படி பண்ணிட்டியேடா” என்று நெற்றியை தேய்த்தவன் அங்கே போட்டிருந்த டவலை எடுத்து சுத்திக்கொண்டு திரும்பியவன் “சாரி புள்ள நீ கலெக்டர் ஆனதும்தான் நாம வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு” என்று அவன் பேச்சை ஆரம்பிக்க தேன்மொழியோ அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு “மாமா எனக்கு நீ வேணும்” என்று அவன் பேசியதை இவள் பேசி அவனது மார்பில் முத்தம் கொடுத்து சொல்ல.
“ஏய் தேனு சொன்னா கேளு” என்ற வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது. “மாமு நான் அம்மா ஆகணும் எனக்கு ஆசையா இருக்கு ப்ளீஸ் மாமா” என்றவள் அவன் காலில் ஏறி முகம் முழுவதும் முத்தம் கொடுத்து இந்த முறை அவனது பருத்த இதழை தன் மென் இதழ் கொண்டு மூடினாள். அதற்கு மேல் சந்தனபாண்டியனால் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.
அவன் ஒன்றும் புத்தன் இல்லையே சாதாரண மனிதன்தானே அவனுக்கும் ஆசைகள் இருக்கும் தானே..! எத்தனை நாட்கள் தன் முன்னால் வளைய வளைய சுற்றி வரும் ஆசை மனைவியை தொடாமல் விரதம் காக்க முடியும் முத்தமிட்டபடியே அவளை கைகளில் ஏந்திக்கொண்டான்.
குளியலறைக்கதவை திறந்து வந்தவன் கட்டிலில் பெண்ணவளை பூ போல போட்டு அவள் மீது பாரம் போடாமல் அவளது ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்திருந்தான். அப்சரஸ் போல இருக்கும் பெண்ணவளை சிவந்த கண்களுடன் அவளை துகிலுரிக்கும் பார்வையுடன் அவள் முகம் நோக்கி குனிந்து இதழைக் கொய்து கழுத்து பச்சை நரம்பில் முத்தமிட்டு அவளது கழுத்துக்கும் கீழ் அவனது இதழ் கொண்டு நத்தை போல அவளது மேடுபள்ளங்களில் ஊர்ந்து வந்து வெண்ணைக்கட்டிகளையும் ருசி பார்த்துக்கொண்டிருந்தான்.
பெண்ணவளோ “மாமு” என்று அவனை தன்மேலயே போர்த்திக்கொள்ள அவனுக்கு இன்னும் வசதியாய் போனது. அவன் கைகளும் சும்மா இருக்கவில்லை. இரட்டை மதுகுடங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான் கைகளால். பெண்ணவளிடம் கொட்டிக்கிடக்கும் புதையலை எதை எடுக்க எதை விட என்று தெரியாது மூச்சு விட முடியாது திணறி அவளுள் கொட்டிக்கிடக்கும் புதையலை கொள்ளை கொள்ள தொடங்கினான்.
அவளது குட்டி நாபியில் இதழால் கூச செய்து அவளை பித்தம் கொள்ள செய்தான். பெண்ணவளுக்குள் வெள்ளை மழை பெய்ய பெண்ணவளுக்குள் செல்ல அவளிடம் மது அருந்திக்கொண்டே அவள் முகம் நிமிர்ந்து பார்த்து “பயமா இருக்கா சொல்லு ஹனி” என கண்கள் சொக்கி கேட்டவனை “பயம் இல்ல மாமு” என்று அவனுக்கு ஏதுவாக நடந்துக் கொண்டாள்.
அவன் கேட்டதையும் கேட்காததையும் அவனுக்கு விருந்து கொடுத்தாள் பெண்ணவள். கொஞ்சமாய் பெண்ணவளுக்குள் செல்லப்போக “மாமுஊஊ” என்று பல்லைகடித்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வர. அப்படியே நின்றவன் “குட்டிப் பொண்ணு வேணாம்டி” என்றவனை இறுக்கி கட்டிக்கொண்டு “சேரலாம் மாமா” என்று அவன் இதழில் தஞ்சம் புகுந்தவளை மெல்ல மெல்ல தன் உடைமையாக்கி தன்னவளுக்குள் நுழைந்து புதையல் எடுத்தவன் அவளது நெற்றில் முத்தம் கொடுத்து “பெயின் இருக்காடி ஹனி” என்று தன்னவளை தூக்கி மார்பில் போட்டு கேட்க.
அவளோ பெயின் இருந்தாலும் “இல்ல மாமு” என்றவளை “அப்போ” என்று ஒரு மார்க்கமாய் பார்க்க “கொஞ்சம் நேரம்” என்றவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்று பாத்டப்பில் வெந்நீர் நிரப்பியவன் அவளை மெதுவாய் தன்னுடன் அணைத்துக்கொண்டே படுக்க வைத்து அவளுக்குள் இருக்கும் வலியை போக்கி “இப்படியே “ஒரு கூடல் போடலாமா?” என கண்ணடித்தவனை “ச்சீ போடா மாமு இங்கயேவா” என்று வெட்கம் கொண்டு கேட்டவளை “ஒரு வித்தியாசம்தான்” என்று உதடு கடித்து பெண்ணவளை கட்டிக்கொண்டு தன் வேலையை கச்சிதமாய் ஆரம்பித்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டே அவளை விட்டு விலகினான்.
குளியலறையோடு விடவில்லை மீண்டும் அறைக்குள் வந்தவன் விடியும்வரை பெண்ணவளை விடவேயில்லை. “போதும்டா மாமு” அவளாக சிணுங்கும் வரை அவனது ஆசை அடங்கவில்லை. விடியற்காலையில்தான் தேன்மொழியை விட்டு விலகினான் சந்தனபாண்டியன்.
அடுத்தநாள் இரண்டு நாளில் கலெக்டர் எக்ஸாம் எழுதி முடித்திருந்தாள் தேன்மொழி.
Super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
tLSMjiHzAY
tLvgRCjnXKyI
PwkAWibzIuT
Super sis