நிலவு 24
காலையில் எழுந்த தேன்மொழி கண்ணை கசக்கிக் கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி 5.30 ஆகியிருந்தது குளியலறை திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்தவள் இடுப்பில் டவலை சுத்திக்கொண்டு வெற்று மேனியோடு நடந்த வந்த சந்தனபாண்டியனை பார்த்தவள் வெட்கம் பூண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“அடடா ரொம்ப பண்ணாதடி நைட் முழுக்க நீ பார்த்ததுதானே..! இப்ப என்ன புதுசா வெட்கப்படுற..! இங்க பாருடி முதுகு புல்லா வரிகுதிரை போல கீறி விட்டிருக்க” என்று முதுகை காண்பித்து லேசாய் சிரித்தான்.
தேன்மொழியோ விரல் சந்தில் முதுகில் அவள் போட்டு விட்டிருந்த நகக் கீறல்களை பார்த்ததும் “அச்சோ நானா இது இப்படி கீறி விட்டிருக்கேன்” என்றவளுக்கு இரவு அவன் பல்பட்ட இடங்கள் நினைவு வர, “ஹான் நீங்க மட்டும் என்னை ஒண்ணுமே செய்யலை எத்தனை இடத்துல கடிச்சு வைச்சிருக்கீங்க தெரியுமா..! இங்க பாருங்க என்னோட லிப்ஸ் வீங்கியே போச்சு” என்று எழுந்து உட்கார்ந்து தன் இதழை தொட்டு காட்ட “அங்க மட்டும் காயம் இருக்கா என்ன..? எத்தனை இடத்துல காயம் இருக்குனு நான் சொல்லட்டுமா..? ஏன்னா நீ தூங்கின பிறகு மருந்து போட்டு விட்டது நான்தான் டி ஹனி பொண்ணு” என்று அவளது நெற்றியில் முட்டினான்.
“அச்சோ நான் இன்னும் குளிக்காம இருக்கேன். என்னை தொடாதீங்க” என்று சிணுங்கியவளை “அப்படியா இன்னொரு முறை குளிச்சிட்டா போச்சு” என்று குறும்பாக பேசி அவளுடன் மீண்டும் கட்டிலில் கட்டி உருண்டு “இன்னொரு முறை காயத்துக்கு மருந்து போட்டு விடறேன்” என்று அவன் காயம் செய்த இடங்களில் இதழால் ஒத்தி எடுத்தான் அவன் பற்தடம் பதித்த இடமெல்லாம் முத்தமிட்டே அவளது வலியை போக்க செய்தான். மார்பில் முகம் தேய்த்து மாதுளை முத்துகளை முத்தமிட்டு மீண்டும் அவளது தேகத்தில் இதழ்களையும் விரல்களையும் நர்த்தனம் புரிய வைத்தான்.
அவள் மட்டும் லேசு பட்டவளா ஒரு முறை மட்டுமே அவன் செய்த லீலைகளை கண்டு பயம் கொண்டாள். அவனுக்கு சரி சமமாக அவன் கேட்டதையும் கேட்காததையும் செய்து அவனை கண்சொக்க வைத்து சொர்க்கலோகத்திற்கு கூட்டிச்சென்றாள்.
முதலில் தேன்மொழி குளித்து முடித்து கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்டி கேட்ச் கிளிப் போட்டவள் அவள் கன்னம் சிவந்திருந்ததை கண்டு “இப்படியே வெளியே போனா அவ்ளோதான் என்னை கிண்டல் செய்தே ஒரு வழி பண்ணிடுவாங்க என் அக்காஸ் ரெண்டு பேரும்” என்று கன்னத்தில் ஃபேஸ் க்ரீம் போட்டும் மறைத்தவள் உதட்டில் உள்ள காயத்திற்கு லிப்பாம் போட்டு மறைத்துக்கொண்டு கழுத்தில் இருந்த பற்தடத்தை கண்டு “ஆஆ குடிகார மாமா இப்படி கடிச்சி வச்சிருக்கான்” என்று சந்தனபாண்டியனை திட்டிக்கொண்டிருக்க குளித்து முடித்து வந்தவன் அவள் திட்டுவது காதில் கேட்டு “என்னடி வாய் ரொம்ப பேசுற வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று கடிந்துக் கொண்டவன் அவள் பக்கம் வந்து நின்று அவளது முகத்தில் ஈர முடியை சிலுப்பி விட்டான்.
“அச்சோ சும்மா இருங்க மாமா… நேத்து நைட் நீங்க பண்ணி வச்ச காயத்தை மறைக்க மேக்கப் போட்டிருக்கேன். நீங்க என் முகத்துல உங்க தலை முடி தண்ணீரை சிலுப்பி விட்டா என் மேக்கப் கலைஞ்சு போயிடும். இப்போ வெளியே போனா வளரு அக்காவும், ஆர்த்தி அக்காவும் என்னை பார்த்து கிண்டல் பண்ணுவாங்க” என்று அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டு சிணுங்கினாள்.
“ஏய் புள்ள இப்படி என்மேல சாயாதே மேற்படி நடக்கும்!! நான் அதுக்கு பொறுப்பு கிடையாது” என்று அவள் கன்னத்தை தொட “அச்சோ சாமி என்னால முடியாதுப்பா” என்றவள் கதவு திறந்து வெளியே ஓடி வந்தாள் ஹாலில் அருள்பாண்டியன், தங்கபாண்டியன், இருவரும் கோழிகளுக்கு தீவனம் எங்கே வாங்குவது என்று பேசிக்கொண்டிருந்தவர்களை பார்த்து மெதுவாய் நடந்துச் செல்ல “ஏய் தேனு குட்டி இங்க வா” என்று அருள்பாண்டியன் கூப்பிட “மாமா காபி குடிச்சிட்டு வரேன்” என்று திரும்பி பார்க்காமல் வேகமாய் சென்றவளை
“என்னாச்சு தேனுகுட்டி கூப்பிட கூப்பிட ஓடுது. இந்த சின்னவன் திட்டிகிட்டி போட்டானா தங்கம்” என்று தம்பியை வசைபாட சரியாக அறையிலிருந்து வெளியே வந்த சந்தனபாண்டியனை பார்த்த தங்கபாண்டியன் தம்பியின் முகத்தில் இருந்த பூரிப்பையும், அவன் முகம் தேஜஸாக இருப்பதை கண்டவன் “நம்ம தம்பி பர்ஸ்ட் நைட் கொண்டாடி வந்திருக்கான் அண்ணா” என்று அருள்பாண்டியன் காதில் மெதுவாக பேசினான்.
“சின்னவன் வெட்கப்படுவான் தங்கம் சும்மாயிரு” என்று தங்கபாண்டியனை செல்லமாய் கடிந்துக் கொண்டான்.
“ம்ம்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டான் தங்கபாண்டியன்.
தலையை கோதியபடியே அங்கு வந்த சந்தனபாண்டியன் அருள்பாண்டியன் பக்கம் வந்து உட்கார்ந்தவன் அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
தேன்மொழியோ ‘அச்சோ லிப்ஸ் வீங்கியிருக்கோ அக்கா பார்த்து கேலி பண்ணக்கூடாது’ என்று தயங்கியபடியே சமையற்கட்டில் நுழைந்தாள். வளர்மதி சாம்பார் வைத்துக்கொண்டிருக்க ஆர்த்தி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தாள்.
“அக்கா நானும் காய் வெட்டித்தரட்டுமா?” என்று ஆர்த்தியின் முன்னே நின்றாள் தேன்மொழி.
தேன்மொழியை நிமிர்ந்து பார்த்த ஆர்த்தியோ “என்ன தேன்மொழி நைட் ரொம்ப நேரம் கண்ணு முழிச்சிருந்தியா? கண்ணு ரெண்டும் சிவந்திருக்கு. கன்னம் கூட ஏதோ சிவப்பா இருக்கு இங்க காட்டு” என யதார்த்தமாக கேட்பது போல கேட்டு சிரித்துவிட்டாள்.
“ஹான் அ.அது வந்து நா.நான் ரொம்ப நேரம் கண்முழிச்சு படிச்சிட்டிருந்தேன். அதான் நேரம் கழிச்சு எழுந்து வந்திருக்கேன் வேற ஒண்ணும் நடக்கலைக்கா” என்று விரல்களில் ஜாலம் காட்டிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.
வளர்மதியோ தேன்மொழி தடுமாறுவதை கண்டு அவளை காப்பாற்ற “ஏய் தேன்மொழி இந்தா சந்தனபாண்டி தம்பிக்கு காபியை கொண்டு போய் கொடு” என்று அவளை ஆர்த்தியிடமிருந்து தப்பிக்க வைக்க பார்த்தாள்.
‘ஹான் அப்பாடா வளரு அக்கா என்னை காப்பாத்திடுச்சு’ என்று எண்ணிக் கொண்டவளோ “கொண்டாங்க காபி” என்று வாங்கிக்கொண்டு திரும்ப “ஏய் தேனு நில்லு..! உன் கழுத்துல காயம் ஏதோ ஆகியிருக்கு. லிப்ஸ் வீங்குனது போல இருக்கு” என்று தேன்மொழியின் கையை பிடித்தாள் ஆர்த்தி.
முகத்தை திருப்பாமல் “நைட் ஸ்வீட் சாப்பிட்டு அப்படியே படுத்துட்டேன்க்கா அதான் எறும்பு கடிச்சிடிச்சு இதோ வந்துடறேன்” என்று அவளது கையை மெல்ல விலக்கிவிட்டுச் சென்றாள்.
“ஆர்த்தி தேனு பாவம் அவளை கேலி பண்ணாதப்பா… சின்னபொண்ணுல வெட்கப்படுறா பாரு” என்று கணவன் அருள்பாண்டியனை போல ஆர்த்தியை கட்டுப்படுத்தினாள் வளர்மதி.
“அக்கா நீங்க வேற என்னையெல்லாம் இப்படி கலாய்க்க யாரும் இல்ல. அதான் அவளை சும்மா ஓட்டினேன். அவ முகம் பொலிவா இருக்குல்ல. சந்தோசமாய் இருந்தா சரி” என்று வெட்டிய காய்கறிகளை சாம்பாரில் போட்டவள் “வளரு அக்கா நீங்க இனிமே அடுப்பு பக்கம் நிற்காதீங்க வயிறு கொஞ்சம் பெரிசாகிட்டே இருக்குல்ல” என்றவள் “அக்கா நா.நான் உங்க வயித்தை தொட்டு பார்க்கவா? ஆசையா இருக்கு” என்றவள் குரல் பிசிறு தட்டி வந்தது. கண்களும் லேசாய் கலங்கிப்போனது.
அடுப்பில் ரசத்தை தாளித்து முடித்த வளர்மதியோ “ஏய் ஆர்த்தி என்னாச்சு உனக்கு அழற? என் வயித்தை தொட்டு தானே பார்க்கணும் அவ்ளோ தானே வா” என்று அவளது கையை பிடித்து தன் வயிற்றில் சற்றே மேடிட்ட இடத்தில் தொட்டுப்பார்க்க வைத்தாள் வளர்மதி.
“அக்கா எனக்கும் நான் எப்போ அம்மா ஆவேனோனு ஆசையா இருக்கு. ஆனா! ஆனா! நான் தப்பு பண்ணிட்டேன் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்க்கா” என்று கண்ணீர் விட்டு உடல் குலுங்க அழுதவளின் கன்னம் பற்றி “ஏய் என்னாச்சுமா ஆர்த்தி என்ன நடந்துச்சுனு சொல்லு” என்று பதறி ஆர்த்தியின் கையைப்பற்றினாள்.
“அ.அது வந்து நான் பேபி உடனே வராம இருக்க டேப்லட் போ.போட்டுட்டேன்க்கா… அதனாலதான் எனக்கு இன்னும் குழந்தை தங்கலையோ என்னவோ” என்றவள் வாயை பொத்திக்கொண்டு விம்மி அழுந்தாள்.
“ஏய் லூசு பொண்ணு அழாத!! நீ எப்ப தப்பு பண்ணிட்டேனு உணர்ந்திட்டியோ அப்பவே கடவுள் உன்னை மன்னிச்சிருப்பாங்க. நீ நம்ம குலதெய்வக் கோவிலுக்கு வேண்டுதல் வைச்சு காசு முடிஞ்சு வையி! சீக்கிரம் கன்சீவ் ஆகிடுவ பாரு. உன் வயிறும் பானை போல பெரிசாகும்” என்று அவள் கன்னம் தட்டி நம்பிக்கை கொடுத்தாள் வளர்மதி.
“உங்க வார்த்தை தெய்வ வாக்கு போல இருக்கு அக்கா… நீங்க சொல்றது பலிக்கணும்” என்று வளர்மதியை கட்டிக்கொண்டாள்.
“எல்லாம் நல்லது நடக்கும்பா!! தங்கம் தம்பி நம்ம ஊரு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடந்தா அவங்க பிரசவ செலவை தானே போய் ஏத்துக்கும் தெரியுமா… அதனால கண்டிப்பா நம்ம குலதெய்வம் உனக்கு குழந்தையை கொடுக்கும். இந்த முறை கண்டிப்பா நீ கந்த சஷ்டி விரதம் இரு சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்னு சொல்லியிருக்காங்க ஆர்த்தி” என்றதும்
“நா.நான் எனக்காக இல்லாட்டியும் என் கோல்டுக்காக விரதம் இருப்பேன்க்கா” என்றவளுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. “நான் இதோ வரேன்க்கா” என்று முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.
ஆர்த்தியிடம் கோழிப்பண்ணைக்கு போவதாக சொல்ல வந்த தங்கபாண்டியன் ஆர்த்தி வளர்மதியிடம் அவள் செய்த தவறை சொல்லி அழுததை கேட்டு விட்டு ஆர்த்தி வெளியே வரும்முன் தள்ளி நின்றுவிட்டான்.
ஆர்த்தியை இப்போது போய் பார்த்தால் அவள் இன்னும் அழுது கரைவாள். அவள் அழுவதை பார்க்க தன் மனதிலும் திடம் இல்லையென்று பெரும்மூச்சுவிட்டவன் ஹாலுக்குச் சென்று அருள்பாண்டியனிடம் “அண்ணா நான் கோழிப்பண்ணைக்கு கிளம்புறேன்” என்றதும் “நீ இன்னும் சாப்பிடலையே தங்கம் சாப்பிட்டு போ” என அங்கே வந்த வளர்மதியிடம் “மதினி நா.நான் 10 மணி வாக்குல வந்து சாப்பிட்டுக்குறேன்” என்றவன் அருள்பாண்டியன் என்ன என்று கேட்பதற்குள் வாசலுக்குச் சென்றுவிட்டான் தங்கபாண்டியன்.
“ஏன்” என்று வளர்மதியை புருவம் உயர்த்தி கேட்டான் அருள்பாண்டியன்.
“ம்ம் சொல்றேன்” என்று வாயசைத்து கண்ணை மூடித்திறந்தாள்.
இங்கே சந்தனபாண்டியனும் தேன்மொழியும் கண்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு தம்பி சந்தோசமாயும் இன்னொருவன் மனம் சங்கடப்பட்டும் இருக்க அருள்பாண்டியனின் மனது நிம்மதியின்றி தவித்தது.
“தேனு இன்னிக்கு உனக்கு கிளாஸ் இருக்கா?” என்ற வளர்மதியின் குரல் கேட்டு வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த தேன்மொழியோ தெளிவுற்று “ஹான் போகணும்க்கா” என்றவள் சந்தனபாண்டியன் குடித்த காபிகப்பை வாங்கிச் சென்றாள்.
“சின்னவனே நீ சாப்பிட்டுட்டு கோழிப்பண்ணைக்கு போய்ட்டு தங்கத்தை சாப்பிட மாத்திவிடு நான் ரைஸ்மில்லுக்கு போய்ட்டு பஞ்சு மில்லுக்கும் போய்ட்டு வந்துடறேன்” என்றவன் “வளரு” என்று கண்ணைக்காட்டிவிட்டு அறைக்குள் சென்றான் அவன் பின்னாலேயே வளர்மதியும் சென்றாள்.
சந்தனபாண்டியனுக்கு ஓரளவு ஆர்த்தியின் நிலைமை புரிந்தாலும் அண்ணனும் மதினியும் பார்த்துக்கொள்வார்கள் என்று எண்ணியவன் மாட்டுத்தொழுவத்திற்குச் சென்றான் அவனது அப்பத்தாவை பார்ப்பதற்கு.
தனபாக்கியம் அவன் நினைத்தது போல மாட்டுதொழுவத்தில் தான் இருந்தார். இன்று மாரிக்கு உடம்பு சரியில்லையென்று அவளை ஓய்வெடுக்கச் சொல்லியவர் தானே தொழுவத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.
“அப்பத்தா நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் செய்யுறீங்க மாரியக்கா எங்க போனாங்க?” என்று தனபாக்கியம் கையிலிருந்த விளக்குமாறை வாங்கிக்கொண்டான்.
“மாரிக்கு உடம்பு சரியில்ல நான் அவளை வீட்டுக்கு அனுப்பி வைச்சேன்டா. சுப்பனும் அவன் ஊர்ல பொங்கலுனு கிளம்பிட்டான் நம்ம வீட்டு வேலையை நாம செய்யாம யாரு செய்வா..? நான் என்ன உடம்புக்கு முடியாமயா கிடக்குறேன் கொடுடா அந்த விளக்குமாறை” என்று தொழுவத்தை சுத்தம் செய்தே முடித்தார் தனபாக்கியம்.
“அப்பத்தா நீங்க சொன்னா கேட்கவே மாட்டீங்க நான் கிளம்புறேன்” என்றவனிடம் “இருடா சின்னவனே உன் கழுத்துல ஏதோ சிவப்பா இருக்கு” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கம் வர “எ.என்ன காயமா எனக்கா போ அப்பத்தா உன் கண்ணுல எதோ கோளாறு” என்று அங்கிருந்து ஓடியே விட்டான்.
“ஹாஹா என் பேரன் சீக்கிரம் கொள்ளு பேரனை கொடுக்கப்போறான்” என்று சிரித்துக்கொண்டவர் கடவுளே என் நடுப்பேரன் பொண்டாட்டியும் சீக்கிரம் நல்ல சேதி சொல்லணுமென கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.
ஆர்த்தி அழுது அழுது தலையணை நனைந்ததுதான் மிச்சம். அவளது நினைவுகள் பின்னோக்கிச் சென்றது தான் குழந்தை வேண்டாமென்று மாத்திரை சாப்பிட்டது தங்கபாண்டியனுக்கு தெரிந்த தருணம் அவளுடன் பேசவே விரும்பவில்லை. அன்று ஹாஸ்பிட்டலிலிருந்து வந்தவன் வீட்டுக்குள் சென்று அவளை தன் அறைக்குள் விடாது கதவை அடித்து சாத்திக்கொண்டான் தங்கபாண்டியன்.
ஆர்த்தியோ “கதவை திறங்க கோல்ட்” என்று அழுது கரைந்தாள் ஆனால் அவன் காதில் விழுந்தும் அவன் மனம் மரக்கட்டையாய் போனது கதவு திறக்காமல் கை முஷ்டியை இறுக்கினான்.
இந்த மாசம் என் பொண்டாட்டி கன்சீவ் ஆகிடுவா என்று எத்தனை எதிர்பார்ப்புகள் தங்கபாண்டியனுக்கு. தன்னுடன் வேலை செய்யும் நபர்கள் ஸ்வீட் எடுத்துக்குங்க சார் நான் அப்பா ஆகிட்டேன் என்று சொல்லும்போது அவன் மனதிற்குள் ஒருவித அழுத்தம் வந்துவிடும். “கங்கிராட்ஸ்” என்று ஸ்வீட்டை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வான் ஆனால் அதன் இனிப்பு சுவை அவனுக்கு தெரியாமல் போகும்.
‘பாவி!! பாவி!! இப்படி குழந்தை வேண்டாம்னு கருத்தடை மாத்திரை போட்டு என் வம்சம் தளைக்க விடாது பண்ணிட்டியே’ என்றவன் முகத்தை பொத்திக்கொண்டு கதறும் சத்தம் அறையின் வெளியே கதவில் சாய்ந்திருந்தவளுக்கு கேட்டுவிட்டது.
“அச்சோ கோல்ட் நான் தப்பு பண்ணிட்டேன் அழாதீங்க இனிமே நான் பில்ஸ் எடுத்துக்கமாட்டேன். இப்ப நீங்க கதவு திறக்கலைனா நான் செத்தே போயிடுவேன்” என்றதும் கதவை திறந்து வெளியே வந்தவன் ஆக்ரோசமாய் “என்னடி என்னை ப்ளாக் மெயில் பண்ணுறீயா வாடி ரெண்டு பேரும் செத்துப்போலாம் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியதுக்கு நான்தான் சாகணும். எங்க அப்பத்தா நமக்கு குழந்தை பிறக்கணும்னு கோவில் கோவில் மாவிளக்கு போடுறாங்க. நீ என்னடானா குழந்தை வேண்டாம்னு மாத்திரை போட்டிருக்க. என்னை ஏமாத்த எப்படிடி உனக்கு மனசு வந்துச்சு. இன்னும் எதை மறைச்சு வைச்சிருக்க. ஒருவேளை குழந்தை உ.உண்டாகி. கு.குழந்தையை ஏ.ஏதாவது” என்று அவன் வாய் குளறி கேட்க.
“ஆஆ கோல்ட்!! என்ன வார்த்தை சொல்லிட்டீங்க நா.நான் குழந்தையை கொல்லும் அளவிற்கு பாவி கிடையாது. ஏதோ!! ஏதோ!! தெரியாம தப்பு பண்ணிட்டேன். எனக்கு தண்டனையை நா.நான் கொடுத்துக்குறேன்” என்று அங்கே டீபாயில் வைத்திருந்த பழம் நறுக்கும் கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்துக்க போக… தன்னவள் தவறு செய்துவிட்டாள் தான் அவள் மீது மலையளவு கோபம் இருக்கத்தான் செய்தது ஆனால் அவள் சாகப்போகிறேன் என்றதும் அவன் உயிர் கூடு ஒரு நிமிடம் நின்று போனது போல் ஆனது.
“அம்மு” என்று ஓடிவந்து அவளது கையிலிருந்த கத்தியை பிடுங்கிப்போட்டு அணைத்துக்கொண்டு “இதுபோல ஒருநாளும் மாத்திரை போடாதடி..! அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன். என்னை மிருகமாக்கி பார்த்துடாத!!” என்று கோவத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அந்த நேரம் ஆர்த்தியை தங்கபாண்யடின் மன்னித்திருந்தாலும் முகம் கொடுத்து ஒரு மாதம் அவளுடன் பேசவேயில்லை. அவளாக வம்படியாக போய் பேசி அவனை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தாள் ஆர்த்தி.
ஆர்த்தி செய்த தவறை தனபாக்கியத்திடம் சொல்லி அழுது புலம்பிய தங்கபாண்டியனை “உன் பொண்டாட்டியை அடிக்க உரிமையுள்ள உனக்கு அவளை அரவணைக்கவும் உரிமையிருக்கணும். தவறை உணர்ந்தவ இனிமே தப்பு பண்ணமாட்டா தங்கம்!! அவளை மன்னிச்சிடு” என்று சொல்லிய பிறகுதான் தங்கபாண்டியன் அவளுடன் சகஜமாய் பழையபடி பேச ஆரம்பித்தான்.
“கோல்ட் நான் பில்ஸ் எடுத்துக்கிட்டேன் அதுதான் கடவுள் இன்னும் தண்டனை கொடுத்துட்டே இருக்காரு. எனக்கு குழந்தையை கொடுக்க தாமதம் பண்ணுறாரு. என்னால முடியல கோல்ட்” என்று கண்ணீர் விட்டு கதறியவள் அப்படியே உறங்கியும் போனாள்.
வளர்மதி அருள்பாண்டியனிடம் ஆர்த்தி சொல்லிய விசயத்தை சொல்ல “அடப்பாவிபுள்ள இப்படி பண்ணிட்டாளே!! அதான் தங்கம் முகமே சரியில்லை!!” என்று வருத்தப்பட்டு பேசினான் அருள்பாண்டியன்.
வளர்மதியோ “இப்ப ஆர்த்தி கர்ப்பபை பலமா இருக்குனு டாக்டர் சொல்லியிருக்காங்க!! அவளுக்கு தெரியாமதான் தப்பு பண்ணியிருப்பா இப்போ அழுதுக்கிட்டே போனா நான் ஆர்த்தியை போய் பார்க்குறேன்ங்க. நந்துக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்குனு சொன்னான் ஒரு எட்டு பார்த்துட்டு போயிடுங்க” என்றவள் ஆர்த்தியின் அறைக்குச் சென்று பார்க்க அவளோ ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். தூங்கட்டும் என்று அவளுக்கும் களைப்பாக இருக்க அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.
சந்தனபாண்டியன் சாப்பிட்டு முடித்து தனபாக்கியத்தை தோட்டத்தில் விட்டு கோழிப்பண்ணைக்குச் சென்றான். அங்கே கோழிகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்தான் தங்கபாண்டியன்.
“அண்ணே நான் இந்த வேலையை பார்த்துக்குறேன் நீங்க சாப்பிட கிளம்புங்க” என்றதும் “நீ சாப்பிட்டியா சின்னவனே?” என்று வேலையை செய்துக் கொண்டே கேட்க “அண்ணே நீ கிளம்பு” என்று கையில் இருந்த தீவனத்தை வாங்கிக்கொள்ள தங்கபாண்டியனுக்கு ஆர்த்தி அழுதுக் கொண்டே சென்றது நினைவு வர “நான் கிளம்புறேன் தம்பி பார்த்து சரியான அளவா தீவனம் வைக்கணும்” என்று சொல்லியவன் அங்கே வேலை செய்யும் பையனிடம் சொல்லிவிட்டுச் சென்றான் தங்கபாண்டியன்.
வீட்டிற்குச் சென்றவன் அறைக்குப்போக அப்போதுதான் எழுந்து ஜன்னலின் ஓரம் நின்றிருந்தாள். “அம்மு” என்று தங்கபாண்டியன் குரல் கேட்டு திரும்பியவள் “கோல்ட்” என்று ஓடிவந்து தங்கபாண்டியனை அணைத்துக்கொண்டு “என்னோட வயிறும் எப்போ பெரிசாகும் வளரு அக்காபோல” என்றவள் குலுங்கி அழுதாள்.
“ஏய் சும்மா சும்மா அழுதுட்டே இருந்தா எப்படி குழந்தை ஒட்டும். மனசை சந்தோசமா வைச்சிக்கோ பாட்டு கேளு. தோட்டத்துக்கு அப்பத்தா கூட போ… ஏன் என்கூட கோழிப்பண்ணைக்கு வா போகலாம். நான் கன்சீவ் ஆகிடுவேனு மனசில நினை எப்போதும் பாசிட்டிவ் வைப் இருக்கணும் அம்மு இப்படி அழுதா என்னால எப்படி நிம்மதியா வேலை செய்யமுடியும்” என்று அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
“நா.நான் அழலை கோல்ட் நீ.நீங்க மனசு சங்கடப்படாதீங்க. காலையில் சாப்பிடாம போயிட்டீங்கனு அக்கா சொன்னாங்க எனக்கும் பசிக்கலைனு நானும் உங்களுக்காக சாப்பிடாம இருக்கேன் வரீங்களா?” என்று பேச்சை அப்படியே மாற்றி விட்டாள்.
“பைத்தியக்காரி மணி 10 ஆகுது இன்னேரம் வரை சாப்பிடாம இருந்தா அல்சர் வரும்” என்று ஆர்த்தியின் தலையில் தட்டினான்.
“என்ன புருசா ரொம்ப மிரட்டுற நான் பயந்துட்டேன் போ” என்று அவனது சட்டை பட்டனை கழட்டி அவனது வெற்று மார்பில் தலைசாய்த்தாள் சிறு குழந்தை போல.
“ஏய் என்னடி என்னோட மூடை வேற மாறி கொண்டு போற” என்று அவளது இடையில் கிச்சு கிச்சு மூட்ட “ம்ம் எல்லாம் நைட்தான் இது கூட்டுக்குடும்பம் நம்ம மதுரையில இருக்கோம். சென்னையில இல்ல… இன்னும் துணி துவைக்கணும். மாப் போடணும் எத்தனையோ வேலை கிடக்குது” என்றவளை சென்னையில் வேலைக்கு ஆள் போடலாமா என்று கேட்டவள் இன்று இத்தனை வேலைகள் செய்கிறேன் என்று சொன்னவளை இழுத்து அணைத்துக்கொண்ட தங்கபாண்டியன்
“நான் வீட்டு வேலைக்கு ஆள் போடுவதை பத்தி அப்பத்தாகிட்ட பேசுறேன்டி. மதினியும் மாசமா இருக்காங்க. இனி அடுத்தமாசம் இல்லைனாலும் அடுத்தமாசம் கண்டிப்பா நீ கன்சீவ் ஆகிடுவ” என்று கண்சிமிட்டியவனை பார்த்து “அச்சோ கோல்ட் அப்பத்தாகிட்ட பேசவேண்டாம் நாமளே நம்ம வீட்டு வேலையை செய்வோம் முடியலைனா சொல்றேன் அப்போ ஆள் போடுவது பத்தி யோசிங்க” என்று அவன் நெற்றியில் முட்டினாள் ஆர்த்தி.
“ம்ம் இப்ப எனக்கு கிஸ் வேணுமே அம்மு” என்றவனை தள்ளிவிட
“ஏய் என்னடி தள்ளி விடுற” என்று அவளை இழுத்து அணைத்து அவள் இதழில் கவிபாடி அவளது கழுத்து வளைவில் வாசம் பிடித்து அவள் மார்புக்குழியில் முகம் புதைத்து அவளை கொஞ்சி தீர்த்தே சாப்பிட அழைத்துச்சென்றான்.
அடுத்து இரண்டு நாளில் கலெக்டருக்கான எக்ஸாம் எழுதி முடித்திருந்தாள் தேன்மொழி. இரண்டு மாதங்கள் ஓடியது.
நெல் குடோனில் மல்லிகாவையும் அவனது குழந்தை அமுதனையும் தங்க வைத்திருந்தான் தென்னரசு. “எதுக்கு என்னையும் குழந்தையும் அடைச்சு வச்சிருக்கீங்க ப்ளீஸ் எங்களை வாழ விடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டவளை பார்த்து ஏளனமாய் சிரித்த நாகப்பன் “நீ இந்த குழந்தை சந்தனபாண்டியனுக்கு பிறந்தது என்று பஞ்சாயத்துல வந்து சொல்லணும் இல்லைனா உன் குழந்தையை கொன்னுடுவேன்” என்று மிரட்டினார்.
சிறு பாலகன் மல்லிகாவை அணைத்தபடியே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.
“ஏன் சார்!! இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க இந்த குழந்தைக்கும் சந்தனபாண்டியனுக்கும் சம்பந்தம் இல்லை” என்றாள் உதடு துடிக்க
“அப்போ நீ என்ன குந்தி தேவியா” என்று நக்கலாக பேசி சிரித்தார் நாகப்பன்.
மல்லிகாவோ குழந்தைக்கு காரணமானவன் தறிகெட்டவன் அவன் பெயரை சொல்லவே விரும்பவில்லை அவள். ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து தன் குழந்தையுடன் நிம்மதியாக வாழ்ந்தவளை கடத்திக்கொண்டு வந்திருந்தான் தென்னரசு. இப்போது நாக்கில் நரம்பில்லாமல் பேசும் நாகப்பனின் தலையில் கல்லை தூக்கிப்போடணும் என்றே தோன்றியது மல்லிகாவுக்கு.
“என்னடி சொல்லு நான் சொல்றதை செய்யுறீயா?” என்று மிரட்டிக்கொண்டு மல்லிகாவை தொட வர. அங்கே வந்த தென்னரசுவோ “அப்பா” என்று கத்தினான்.
“என்னடா சவுண்ட் விடற இவ நான் சொன்னதை கேட்கமாட்டேன்கிறா கொஞ்சம் சொல்லி புரியவை இல்லைனா என் டீலிங் வேற மாதிரி இருக்கும்” என்று மல்லிகாவை ஒரு மார்க்கமாக பார்த்துச் சென்றார் நாகப்பன்.
தென்னரசுவுக்கு ஏதோ தவறாக புரிய தாடையை தேய்த்துக் கொண்டே மல்லிகாவின் பக்கம் வர “பக்கத்துல வராதடா உன்னை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. அன்னிக்கு சந்தனபாண்டியனை பாம்பு கடிச்சிருச்சு ஹாஸ்பிட்டல உயிருக்கு போராட்டிட்டு இருக்கான்னு!! என்னை ஏமாத்தி கூட்டிட்டு போயி!! என் கற்பை சூறையாடினவன்தானே நீ!! இப்போ எதுக்குடா நல்லவன் வேஷம் போடுற” என தென்னரசுவின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
“ஏய் நான் தப்பு பண்ணிட்டேன்தான். இப்போ நீ இங்க இருக்கறது நல்லதல்ல இங்கிருந்து கிளம்பிடு. நான் செய்த முதல் தப்பு உன் விருப்பம் இல்லாது உன்னை அடைஞ்சது. அடுத்து உன் கழுத்துல தாலி கட்டினது” என்றான் எச்சிலை விழுங்கிக்கொண்டு.
“என் அப்பாகிட்டயிருந்து தப்பிச்சிடு அவர் உன்னை ஏதாவது செய்துடுவாரு” என்றான் கொஞ்சம் பதட்டத்துடன்.
மல்லிகாவுக்கு எங்கிருந்து கோவம் வந்ததோ தெரியவில்லை தென்னரசுவின் தலைமுடியை பற்றி இழுத்து “வெட்கமாயில்லை உன் பொண்டாட்டியை உன் அப்பன் பார்க்குற பார்வையே சரியில்லை. உங்கப்பன் என் மேல கையை வைக்க வரான் நீ என்னமோ அப்பானு சத்தம் போடுற!! அப்பவே அவன் கையை உடைச்சிருக்க வேணாம் தூ நீ எல்லாம் ஆம்பிளையா உயிரோடவே இருக்க கூடாது” என்று அவனை தன் கை ஓயும் வரை அடிக்க துவங்கினாள்.
குழந்தையோ அப்பாவும் அம்மாவும் சண்டை போடுவது கண்டு வீறிட்டு அழ குழந்தையை திரும்பி பார்த்தவள் “அச்சோ என் குழந்தை” என்று அமுதனை தூங்கிக்கொண்டு “அழாதடா தங்கம்” என்று குழந்தையின் முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“மல்லிகா ப்ளீஸ் வாடி உன்னையும் குழந்தையையும் பாதுகாப்பான இடத்திலே தங்க வைக்குறேன். என்னை நம்புடி நம்ம குழந்தை மேல சத்தியம்” என்றதும் “ம்ம்” என்று கண்ணை மூடித்திறந்தவள் தென்னரசுவை நம்பி மறுபடியும் வெளியேச் சென்றாள்.
அடுத்த இரண்டு மாதத்தில் அமெரிக்காவிலிருந்து சங்கரியுடன் ராகேஷ் இந்தியா வந்திறங்கினான்.
நிலவு 25
அடுத்த இரண்டு மாதத்தில் அமெரிக்காவிலிருந்து சங்கரியுடன் ராகேஷ் இந்தியா வந்திறங்கினான்.
சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு இன்று திருமண நாள்… சந்தனபாண்டியன் எடுத்துக்கொடுத்த பச்சை வண்ண பட்டைக் கட்டிக்கொண்டு, அருள்பாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சை பட்டுச்சேலைக்கு மேட்சாக பச்சைக்கல் நெக்லஸ்சும், தங்கபாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் வைத்த தங்கவளையலும் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தவளின் தோள் வளைவில் தாடையை வைத்து “கலெக்டர் மேடம் திருமணநாள் வாழ்த்துகள்” என்று தேன்மொழியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேவதையாட்டம் இருக்கடி குட்டிப்பொண்ணு” என்றான் சந்தனபாண்டியன்.
“மாமு இன்னும் நான் உங்களுக்கு குட்டிப்பொண்ணா” என்று செல்லமாய் சிணுங்கியவளை இறுக்கி அணைத்தவன் “நீ எப்பவும் ஏன் நமக்கு குழந்தை வந்தாலும் எனக்கு குட்டிப்பொண்ணுதான்டி” என்று அவள் இதழில் இதழ் உரசினான் சந்தனபாண்டியன்.
“மாமு கோவிலுக்கு போகணும் இப்பவே முத்தம் கொடுத்தா எப்படி” என்று புருவம் உயர்த்தியவளை கண்ட சந்தனபாண்டியன் “அடிக்கள்ளி குளிச்சிட்டு கோவிலுக்கு போகலாமா?” என்று கட்டிலை காட்டினான்.
“மாமு நீ ரொம்ப காஜியா மாறிட்ட” என்று அவன் மார்பில் சாய்ந்தவளை “நான் இன்னிக்கு எப்படியிருக்கேன் சொல்லவேயில்லையேடி” என்று அவளது முகத்தை நிமிர்த்த “ஜல்லிக்கட்டு காளை கணக்கா திமிறி நிற்குற உன் மீசையும். தேசிங்கு ராஜா போல வீரமும். சிக்ஸ் பேக் வைச்சிருக்க படிக்கட்டு போல உன் வயிறும், என் அழகன் மாமு. நான் உனக்காக பிறந்தவள் மாமு” என்று அவன் மீசையை பிடித்து முறுக்கினாள்.
“ஆஆ வலிக்குதுடி” என்றவனை “சந்தனம்” என்று தனபாக்கியத்தின் குரலில் இருவரும் விலகி “அப்பத்தா கூப்பிடுறாங்க” என இருவரும் ஹாலுக்குச் சென்றனர்.
ஹாலில் மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டு நின்ற வளர்மதி தோட்டத்தில் பறித்து வந்த சந்தனமுல்லையை பந்தாக கட்டி தேன்மொழியிடம் கொடுத்து “திருமணநாள் வாழ்த்துகள் தேனு” என்றாள் புன்னகையுடன்.
“தேங்க்ஸ்க்கா” என்றாள் அதே புன்னகை மாறாமல்
“மாமா எனக்கு நெக்லஸ் வாங்கிக்கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்று அருள்பாண்டியனின் தோளில் சாய்ந்து நின்றாள்.
திருமண நாளுக்கு நானே கேக் செய்துடறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாக்லேட் பிளேவர் கேக் செய்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
தங்கபாண்டியன் “நான் உனக்கு உதவி செய்யுறேன்” என்று ஆர்த்தியின் இடுப்பை கிள்ளி விளையாடிக் கொண்டிருந்தான்.
“சும்மா இருங்க!! எல்லாரும் ஹாலில்தான் இருக்காங்க இப்பதான் புது மாப்பிள்ளை போல சேட்டை பண்ணிக்கிட்டு” என்று அவனது கையை தட்டிவிட்டு கேக்கை எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றவள் “ஹேப்பி ஆனிவர்சரி தேனு அண்ட் சின்னவரே” என்றவள் கேக்கை டேபிளின் மீது வைத்தாள்.
தனபாக்கியம் குலதெய்வ கோவிலுக்குச் சென்று சந்தனபாண்டியன் தேன்மொழி பெயரில் அர்ச்சனை செய்து வந்தவர் இருவரது நெற்றியிலும் திருநீறு இட்டுவிட சந்தனபாண்டியன், தேன்மொழி இருவரும் தனபாக்கியம் காலில் விழ “பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என்று பேரனையும் பேத்தியையும் வாழ்த்தியவர் “ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடலாம் வளரு, ஆர்த்திமா சாப்பாடு ரெடியா” என்றவரிடம்
“ம்ம் ரெடி பண்ணிட்டோம் பாட்டி” என்ற ஆர்த்தியை “நீ இன்னிக்கு செக்கப் போகணும்ல இந்த முறை நானும் வரேன்” என்றவரிடம்
“ம்ம வாங்க பாட்டி” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
இப்படி தன் மனைவி தன் குடும்பத்துடன் ஒன்றிப்போவாளென்று தங்கபாண்டியன் கனவிலும் நினைத்திருக்கமாட்டான் பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆர்த்தியை. ஆனால் இன்னும் சில தினங்களில் மனைவியின் போக்கு அப்படியே தலைகீழ் மாறப்போவதை அவன் அறியாமல் இருந்தான்.
“வளையல் பிடிச்சிருக்கா குட்டிமா?” என்று தேன்மொழியை கேட்ட தங்கபாண்டியனை பார்த்து “ரொம்ப!! ரொம்ப!! பிடிச்சிருக்கு!! மாமா” என தங்கபாண்டியனை அணைக்க போக “ம்க்கும் ஏய் கோவிலுக்கு போய்ட்டு வந்து கேக் வெட்டணும் வா” என்று தேன்மொழியின் கையை பிடித்த சந்தனபாண்டியனை பார்த்து சிரித்த தங்கபாண்டியனோ “ஏய் தேனு கையை விடுடா” என்றதும் ஏன் என்பது போல பார்த்தான் சந்தனபாண்டியன்.
“நீ வா சாமி” என்று தேன்மொழியை தோளோடு அணைத்து “எப்பவும் நீ சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும்” என்றான் சந்தனபாண்டியனை பார்த்துக்கொண்டே
“தேங்க்ஸ் மாமா” என்று சிரித்துக் கொண்டே “இப்ப போகலாம் மாமு” என்று சந்தனபாண்டியனின் கையை பிடிக்க அவனோ “எனக்கு மட்டும் விஷ் பண்ணவே இல்லைண்ணா” என்று முகம் தூக்கியவனையும் அணைத்து “திருமணநாள் வாழ்த்துகள்டா” என்று சந்தனபாண்டியனையும் அணைத்து விடுவிக்க இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.
மல்லிகாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக தென்னரசுவுக்கு சொந்தமாக இருந்த பண்ணைவீட்டில் ஸ்டோர் ரூமில் தங்கவைத்திருந்தான். பண்ணை வீட்டுக்கு நாகப்பன் அதிகம் வரமாட்டார் என மல்லிகாவையும் குழந்தையையும் தங்கவைத்திருந்தான் தென்னரசு.
மல்லிகாவின் மகன் அமுதனுக்கு இரண்டு நாளாக காய்ச்சல். தென்னரசுவுக்கு மல்லிகா போன் செய்து சொல்ல அவனும் இரவில் வந்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று வந்தான். இன்று இருமல் அதிகம் இருக்க தென்னரசுவை எதிர்பார்க்காமல் அமுதனை தூக்கிக்கொண்டு மருந்துக்கடைக்குச் சென்றாள்.
ரோட்டை கிராஸ் பண்ணிப்போகையில் சந்தனபாண்டியன் ராயல் என்ஃபீல்டு அவளை தாண்டிச் சென்றது. சந்தனபாண்டியனும் மல்லிகாவை பார்த்துவிட்டான். அதுவரை தேன்மொழியுடன் சிரித்து பேசி வந்த சந்தனபாண்டியன் அமைதியாகி வண்டியின் வேகத்தை கூட்டி வேகத்துடன் சென்றிருந்தான்.
மல்லிகாவோ நீ நல்லா இருக்கணும் சந்து என்று கண்ணீர் விட்டவள் சுடிதாரின் ஷாலை தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காதவாறு தலையில் போட்டுக்கொண்டு பார்மஸியில் இருமலுக்கான மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள் அமுதனுக்கு மருந்தை கொடுத்து உறங்க வைத்தாள்.
சந்தனபாண்டியன் முகம் கடுகடுவென மாறி இருந்தது. ஆனால் தேன்மொழியிடம் காட்டாமல் இருந்தான். சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்தவுடன் வண்டியை எடுத்தான் சந்தனபாண்டியன். தேன்மொழியும் மல்லிகாவை பார்த்துவிட்டாள்.
“மாமு மல்லிகா டீச்சர்” என்று பேச வாயெடுத்தாள்.
“கொஞ்சம் நேரம் சும்மா வரியா தேனு” என்றவனின் குரல் பிசிறு தட்டியது. அவளால் தான் அன்று குடித்துவிட்டு அந்த தென்னரசுவிடம் சண்டை போட நேர்ந்தது என்று கோபம் கொண்டிருந்தான் சந்தனபாண்டியன்.
வீட்டுக்குச் சென்றதும் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டான். சந்தனபாண்டியன் தேன்மொழி இருவரையும் கேக் வெட்டச் சொல்ல இருவரும் சேர்ந்தே கேக் வெட்டினர்.
“ஐ எனக்கு கேக்” என்று குதித்த நந்தன் வாயில் கேக் துண்டை ஊட்டிவிட்டு ஒரு பீஸ் கேக்கை சந்தனபாண்டியனுக்கு ஊட்டிவிட்டாள். சந்தனபாண்டியனும் கேக்கை தேன்மொழிக்கு ஊட்டிவிட்டு குடும்பம் மத்தியில் அவனது கோபத்தை மறைத்து கலகலப்பானான்.
அன்றிரவு சந்தனபாண்டியனை அணைத்தபடியே படுத்திருந்தவள் “ஏன் இன்னிக்கு வெட்டிங் டே சிறப்பு எதுவும் இல்லையா! எதுக்கு இப்படி முகத்தை கடுகடுனு வச்சிருக்கீங்க! நான் என்ன செய்தேன் மாமா” என்றவளை “குட்டிப்பொண்ணு நீ எனக்காக பிறந்த தேவதைடி!! யாரை பார்க்க கூடாதுனு நினைச்சேனோ அவ இன்னிக்கு என் கண்ணு முன்னால கையில குழந்தையோட நிற்குறதை பார்த்து செம காண்டு வந்தது. அவளை நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாத்தான் என் மனசு ஆறும்” என்று ஆத்திரத்தில் பல்லை கடித்து பேசியவனின் கன்னம் பற்றி “மாமு மல்லிகா டீச்சரோட அப்போதைய சூழ்நிலை என்னவோ அவங்களை பத்தி முழுசா தெரியாம பேசக்கூடாது” என்றாள் பொறுமையாக.
“என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போயிருந்திருக்கணும்ல” என்றவனை ‘அப்படி சொல்லிட்டு போயிருந்தா இந்நேரம் என் மாமா எனக்கு கிடைச்சிருக்காது’ என்று மனதில் எண்ணியவள் “நாளைக்கு போய் அவங்களை நேரடியா பார்த்து கேட்டிருங்க மாமு மனசுக்குள்ள வச்சிக்காதீங்க” என கள்ளம் கபடம் இல்லாமல் பேசியவளை எண்ணி பெரும்மூச்சு விட்டவன் “ஹனிபொண்ணு எக்ஸ் லவ்வரை பார்க்க சொல்ற பொண்ணு நீ ஒருத்தியாத்தான் இருக்கணும்டி” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.
“என் மாமு சொக்கத் தங்கம் என்னை மட்டும் நேசிக்கிற மாமா நீ” என்று சந்தனபாண்டியனை இறுக்கிக் அணைத்துக்கொண்டாள்.
சங்கரி சென்னைக்கு வந்ததும் ஆர்த்தி சென்னையில் இல்லை என்பது தெரிய வர உடனே ஆர்த்திக்கு போன் போட்டார் கோபத்தில்.
ஆர்த்தி சங்கரியிடம் மதுரைக்கு வந்ததை இதுவரை சொல்லாமல்தான் இருந்தாள். சங்கரி ஆர்த்திக்கு சர்பிரைஸ் கொடுப்பதாக எண்ணி ஆர்த்தியிடம் சொல்லாமல் சென்னைக்கு வந்துவிட்டார்.
ஆர்த்தி துவைத்த துணிகளை மடித்துக்கொண்டிருந்தாள். சங்கரியின் எண்களை கண்டு போனை எடுத்தவள் “சொல்லுங்கம்மா” என்றவுடன்
“ஆர்த்தி நீ மதுரைக்கு எப்போ போன என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணலையா? அந்த பட்டிக்காட்டுல உனக்கு என்ன வேலை? அந்த கிடா மீசைக்காரன் வேலையை வேண்டாம்னு இனிமே சென்னைக்கு வரமாட்டேன் சொல்லிட்டு போய்ட்டானாமே!!” என்று மூச்சு விடாமல் பேசியவரிடம்
“ம்மா கொஞ்சம் மூச்சு வாங்கி பேசு!! ஆமாம் இனிமே நாங்க உன்னை பார்க்க மட்டும் சென்னைக்கு வருவோம். நாங்க நிரந்தரமாக மதுரைக்கு வந்துட்டோம். இதுதானே எங்க ஊரு” என்று மகள் சொன்னதை கேட்டு ஒரு நிமிசம் பேசாமல் நின்றுவிட்டார் சங்கரி.
‘ஒரு மாசம் வந்து தங்கி அந்த கிழவி என் பொண்ணு மனசை மந்திரம் போட்டு மயக்கி கூட்டிட்டு போயிட்டியா! இதோ வரேன் என் பொண்ணை திரும்பி சென்னைக்கு கூட்டிட்டு வரலைனா என் பேரு சங்கரி கிடையாது’ என்று மனதில் சூளுரைத்துக்கொண்டு “நான் நாளைக்கு உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வரேன்” என்று போனை பட்டென்று அணைத்திருந்தார்.
மகேஷ்வரன் ராகேஷுடன் கம்பெனிக்குச் சென்றிருந்தார். மகேஷ்வரன் கம்பெனியில் ராகேஷ் ஒரு ஷேர் பார்ட்னரும் கூட “எப்படி மாமா நம்ம ஆர்த்தியை ஒரு பட்டிக்காட்டானுக்கு கல்யாணம் செய்து வச்சீங்க?” என்று கடுப்பாய் கேட்டவனிடம்
“ஆர்த்தி ஹஸ்பன்ட் பட்டிக்காட்டான் கிடையாது அவரும் படிச்சுத்தான் இருக்காரு சென்னையில பெரிய ஐடி கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருந்தவர்தான். இப்போ அவங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க அவங்க நம்மளை விட பெரிய பணக்காரவங்க ராகேஷ்” என பெருமையாக பேசினார் மகேஷ்வரன்.
“ஓஓ அப்படியா” என்று நிறுத்திக்கொண்டவன் “நாளைக்கு நீங்களும் எங்ககூட மதுரைக்கு வரீங்கதானே!!” என்றவனிடம் “கம்பெனியில நிறைய பைலில் சைன் போட வேண்டியிருக்கு நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன் நீங்க முன்னாடி கிளம்புங்க” என்றார் மகேஷ்வரன்.
அடுத்த நாள் காலையில் ராகேஷுடன் சங்கரி கையில் ஹேன்ட்பேக்கை மாட்டிக்கொண்டு திமிராக காரிலிருந்து இறங்கினார். தனபாக்கியம் சாமி கும்பிட்டு வெளியே வந்தவர் சங்கரியை பார்த்து “வாங்க சம்பந்தி” என மரியாதை நிமித்தமாக கைகூப்பியவர் “உட்காருங்க” என்று அங்கே இருந்த நீளமான சோபாவை கைகாட்டினார்.
வளர்மதி நிறைமாசமாக இருக்க சமையலறை பக்கம் வரவேண்டாம் என்று ஆர்த்தி ஆர்டர் போட்டுவிட்டாள். வளர்மதிக்கு நேற்று இடுப்பு வலி வந்திருக்க அவளால் முடியாமல் போயிற்று அதிகாலை நேரம் அருள்பாண்டியன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
ஆர்த்திக்கு சமையலில் உதவி செய்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“ம்ம்” என்று ஒய்யாரமாய் சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் சங்கரி. சங்கரியின் நடவடிக்கை தனபாக்கியத்திற்கு பிடிக்காமல் இருந்தாலும் வீட்டிற்கு வந்த சம்பந்திக்கு மரியாதை கொடுக்கணும் என்று பல்லைக்கடித்துக்கொண்டு நின்றிருந்தவர் “ஆர்த்திம்மா சென்னையிலிருந்து உங்கம்மா வந்திருக்காங்க ம்மா” என்று சமையற்கட்டை நோக்கி குரல் கொடுத்தார் தனபாக்கியம்.
சங்கரியோ வீடு சுற்றிப்பார்த்திருந்தவர் ஆர்த்தியை தனபாக்கியம் கூப்பிட்ட விதம் அதிகார தோரணையாக தெரிய “ஏய் கிழவி” என்றவர் அறையில் இருந்து சட்டையை முழங்கை வரை ஏத்தி விட்டுக்கொண்டு வந்த தங்கபாண்டியனை பார்த்ததும் வாயை பசை போட்டது போல மூடிக்கொண்டார் சங்கரி.
“என்ன இவ்ளோ தூரம் மாமியாரே?” என்று மீசையை முறுக்கிக்கொண்டு கேட்டவனை “ம்ம் என் பொண்ணை பார்க்க வந்திருக்கேன்” என்றார் மமதையாக
அதற்குள் தேன்மொழியிடம் “எங்கம்மா வந்திருக்காங்க தேனு சாம்பாரை தாளிச்சிடு” என்று ரசத்திற்கு புளியை கரைத்துக்கொண்டிருந்தவள் கையை கழுவிவிட்டு ஹாலுக்குச் சென்றாள். சமையல்கட்டில் வேலை செய்தவள் வியர்த்து விறுவிறுக்க வந்து நின்ற ஆர்த்தியை பார்த்த சங்கரியோ அச்சோ என் பொண்ணை சமையல்காரியா ஆக்கிட்டீங்களா என்று கேட்க நினைத்த கேள்வியை தங்கபாண்டியன் முன்னால் கேட்க முடியாமல் அவனை முறைத்துவிட்டு “அம்மா” என்று அணைத்துக்கொண்ட மகளின் காதில் “என்னடி நம்ம வீட்டு வேலைகாரியை விட மோசமா இருக்க” என்று அவளை கடிந்துக் கொள்ள. தங்கபாண்டியன் ஆர்த்தியை பார்க்க ஆர்த்தியோ வெகுநாள் கழித்து அம்மாவை பார்த்த சந்தோசத்தில் இருந்தவளை கண்டு அப்பத்தாவை பார்த்தான்.
தனபாக்கியமோ “உன் அம்மா உன்கூட பேசணும்னு நினைப்பாங்க ஆர்த்திமா உன் ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று சொல்லி முடிக்க ராகேஷ் வீட்டுக்குள் நுழைந்தான்.
“ஏய் ராகேஷ் வா! வா!” என்று அவனது கையை எதார்த்தமாக பற்றிக்கொண்டாள் ஆர்த்தி. தங்கபாண்டியனோ தனபாக்கியமோ அவளை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.
தனபாக்கியம் “எனக்கு தோட்டத்தில வேலையிருக்கு சம்பந்தி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நான் வரேன்!! தங்கம் என்னை தோட்டத்துல விட்டிட்டு தோட்டத்துல இளநீர் பறித்துக் கொண்டு வா சம்பந்திக்கு கொடுக்க” என்றவர் வாசலுக்குச் சென்றிருந்தார்.
தங்கபாண்டியன் ராகேஷை முறைத்துவிட்டுச் சென்றான். ராகேஷ் ஆர்த்தியை பார்த்தவிதம் அவனுக்கு தவறாக தோன்றியது.
“போடா” என்று உதடசைத்தான் ராகேஷ்.
“போயிட்டு வரேன் உன் முகரையை உடைக்க” என்று முணகிக்கொண்டு தனபாக்கியத்தை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான் தங்கபாண்டியன்.
“ராகேஷ் நீ வீட்டைச் சுத்தி பார்த்திட்டுரு. நான் அம்மாகூட பேசிட்டு வந்திடறேன்” என்று அவன் கையை விட்டு அவளது அறைக்குச் சங்கரியை அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் “நீ இந்த வீட்டு வேலைகாரியா சமையல்கட்டுல இருந்து வர. எதுக்கு சென்னையிலிருந்து இந்த பட்டிக்காட்டுக்கு வந்த..? உன் பட்டிக்காட்டு புருசன் நான் இல்லாத நேரம் பார்த்து உன்னை கூட்டிட்டு வந்து உன்னை சம்பளம் இல்லாத முழு வேலைகாரியா வச்சிருக்கான். பெத்த வயிறு பத்திக்கிட்டு வருது இப்பவே நீ சென்னைக்கு புறப்படு. அங்க வந்து இரு உன் புருசன் உன்னை தேடி வருவான்” என்று அசால்ட்டாக சொன்னவரை
“நீ என்ன பேசிட்டிருக்க வந்ததும் வராததுமா! என்னை ஒரு வார்த்தை எப்படியிருக்கனு கேட்டியா? இல்லை ஆப்ரேசன் பண்ணினது பற்றி கேட்டியா? அதைவிட்டு சமையல்கட்டுல இருந்து வந்தனு சும்மா பேசிட்டிருக்க… உனக்கு தெரியுமா எனக்கு ஆப்ரேசன் பண்ணி என்னால நடக்க முடியலை. என்னால என்னோட தேவைகளை பண்ணிக்க முடியலை. இந்த வீட்டு அப்பத்தா தான் எனக்கு எல்லாமே செய்துவிட்டாங்க!! அவங்க வீட்டு பொண்ணு போல கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிட்டாங்கம்மா. அதுவுமில்லாம இது என்னோட வீடு என்னோட வீட்டு வேலையை நான் செய்யாம யாரு செய்வாங்க?” என்று கோபத்தில் கொப்பளித்தவளை கண்டு சங்கரி ஒரு நிமிடம் வாயடைத்துப்போய் பார்த்தார்.
‘என் மகளை முழுதாய் மாத்திடுச்சு இந்த கிழவி நாம இங்கயே டேரா போட்டு நம்ம பொண்ணை பழைய ஆர்த்தியா மாத்திடணும். நாம இப்போ நல்லவ போல நடிக்க வேண்டியது தான்’ என்று தன் குறுக்குபுத்தியை தீட்டினார் சங்கரி.
“என்னவோ போடி நான் மட்டும் அமெரிக்கா போகாம இருந்தா அந்த கிழவியை விட உன்னை கண்ணில் வச்சு பார்த்திருப்பேன் இந்த அம்மாவை இப்படி பேசிட்டியே தங்கம்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.
“ம்ம் இனிமே பாட்டியை கிழவினு சொல்லாத” என்றாள் கனிவாய்.
“நான் உன் கூட ஒரு மாசம் தங்கிட்டு போகலாம்னு இருக்கேன்டி” என்று ஆர்த்தியை அணைத்துக்கொண்டு கேட்டார் சங்கரி
“ஒருமாசம் என்ன ஒருவருசம் கூட நீ இங்க இருந்தா உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா உன் திருவாயால் யாரையும் காயப்படுத்தாம இருந்தா நீ இங்க இருக்கலாம் அப்படியில்லைனா இப்பவே ராகேஷ் கூட கிளம்பிடு. ஹான் சாப்பாடு ரெடியாகிடுச்சும்மா சாப்பிடலாம் வா” என்று நிமிர்வாக பேசியவளை கண்டு விக்கித்துப்போய் நின்றார் சங்கரி.
“நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்றவர் குளியலறைக்குள் சென்றதும் பெரும்மூச்சு விட்டு வெளியேச் சென்றாள் ஆர்த்தி.
சமைத்து முடித்துச் சென்றிருந்தாள் தேன்மொழி. சமைத்து வைத்த சாப்பாட்டை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்து தோட்டத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த ராகேஷை தேடிச்சென்றாள் ஆர்த்தி.
ஆர்த்தியும் ராகேஷும் சிறுவயது முதல் நண்பர்களாய் இருந்தனர். வாலிப வயது வர ராகேஷ் ஒருதலையாக ஆர்த்தியை லவ் பண்ணியிருந்தான். அவள் தங்கபாண்டியனை விரும்புவதை ராகேஷிடம் சொல்லவில்லை. ராகேஷ் பிஸ்னஸ் விசயமாக லண்டன் சென்றிருந்த நேரம்தான் தங்கபாண்டியன் ஆர்த்தி கல்யாணம் நடந்திருந்தது.
“என்ன ராகேஷ் எங்க தோட்டம் எப்படியிருக்கு?” என்று சிரித்தபடி கையை கட்டி நின்றாள்.
“வாவ் ப்யூட்டிஃபுல்” என்றவன் “இப்படி வந்து உட்காரு ஆர்த்தி” அங்கிருந்த சிமெண்ட் கல்லில் உட்கார்ந்தான்.
ஆர்த்தி இடைவெளி விட்டே உட்கார்ந்தாள். அந்த இடைவெளியை பார்த்து முகம் கடுகடுத்துப்போய் “ஆர்த்தி இந்த பட்டிக்காட்டானை உனக்கு எப்படி பிடிச்சது. அவனும் அவன் கிடா மீசையும்” என்று வேண்டா வெறுப்பாக பேசியது ஆர்த்திக்கு சுருக்கென்று கோபம் மூக்கிற்கு மேல் வர நண்பனை கடிந்துக் கொள்ள விருப்பம் இல்லாது “எனக்கு அந்த கிடா மீசைதான் ரொம்ப பிடிச்சது ராகேஷ் இதே வார்த்தையை வேற யாராவது சொல்லியிருந்தா பல்லை உடைச்சிருப்பேன். நீ என்னோ நண்பனா போய்ட்டே பரவாயில்லை மன்னிச்சுவிடறேன்” என்று சிரித்த ஆர்த்தியோ
“ஆமா உன் பிஸ்னஸ் எப்படி போகுது ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க? சீக்கிரம் கல்யாணம் ஆகி செட்டில் ஆகுப்பா” என்று அவனது தோள்பட்டையில் கையால் தட்ட அவளது கையை பிடித்தவன் “நான் உன்னைத்தான் விரும்புறேன் ஆர்த்தி… அதான் அந்த மீசையால் இன்னும் உனக்கு ஒரு குழந்தையை கூட கொடுக்க முடியலையே என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” என்றதும்
“வாட்!” என்று அதிர்ந்த ஆர்த்தியோ “ஆர் யூ கிரேசி?” என்று காளியாய் எழுந்து நின்றவள் “நான் கல்யாணம் ஆன பொண்ணு என்கிட்ட என்ன வார்த்தை பேசுற! ப்ரண்ட்னு உன்பக்கம் உட்கார்ந்து பேசினேன்டா! இல்லை உன்னை என் பக்கம் உட்கார வைத்திருக்க கூட மாட்டேன் பொறுக்கி. நாங்க குழந்தை பெத்துக்கறதை பத்தி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு ஹான்!! இந்த வீட்டை விட்டு போயிடு என் புருசன் காதுக்கு இந்த விசயம் தெரிஞ்சுது!! உன்னை கொன்னு மதுரை மண்ணுல புதைச்சுடுவாரு” என்று விரலை நீட்டி எச்சரித்தவள் அப்பவும் கோபம் அடங்காமல் ராகேஷின் கன்னத்தில் ஓங்கி பளாரென ரெண்டு அறைவிட்டுச் சென்றிருந்தாள்.
‘சபாஷ் அம்மு’ என்று நெஞ்சில் தட்டிக்கொண்டான் தங்கபாண்டியன். தனபாக்கியத்தை தோட்டத்தில் விட்டு வீட்டிற்கு வந்த தங்கபாண்டியன் காதில் ஆர்த்தி பேச்சுக்குரல் கேட்டு அங்கே நின்றுவிட்டான். ராகேஷ் அவளை விரும்புறேன் என்று சொன்னதும் அவனது முகரையை பேத்துவிடணும் என்று தோட்டத்திற்கு நடந்தவன் கண்ணில் ஆர்த்தி ராகேஷை அறைந்து விட்டு நடந்து வருவது தெரிந்து செடி மறைவில் நின்றுக் கொண்டான்.
ஆர்த்தி வீட்டுக்குள் சென்றதும் தங்கபாண்டியன் திகில் அடைந்து நின்ற ராகேஷின் முன்னே நின்றவன் அவனது சட்டையை பிடித்து மூக்கில் ஒரு குத்து விட்டு “என் பொண்டாட்டி கையை பிடிச்சதுக்கு இந்த குத்து அவளை கல்யாணம் பண்ணிக்குறேன் சொன்னதுக்கு” என்று மீண்டும் குத்துவிட்டான்.
“ஏய் அடிக்காதடா” என்று ராகேஷ் அவனது கையை பிடிக்க.
“உன்னை அடிக்காம விட்டா தப்பா போகும் டா டுபுக்கு” என்றவன் அவன் கையை மடக்கிப் பிடித்து முறுக்க “ஆஆ அம்மா விட்டிரு தங்கபாண்டியன் நான் இங்கிருந்து போயிடறேன் தப்புதான் நான் ஆர்த்திகிட்ட பேசினது” என்று தங்கபாண்டியன் அடிக்கும் அடியின் வலி தாங்காமல் கதறினான் ராகேஷ்.
“என் பொண்டாட்டியை வரச்சொல்லுறேன் அவகிட்ட காலுல விழுந்து மன்னிப்பு கேளுடா பன்னாடை பயலே” என்று பல்லைக்கடித்தவன் தன்னால் தான் குழந்தையில்லை தங்கபாண்டியனை குறை சொல்லிவிட்டானே இந்த பாவி ராகேஷ் என்று அழுதுக் கொண்டு சமையல்கட்டில் நின்றிருந்தவளை தங்கபாண்டியன் போனில் கூப்பிட கண்ணீரை துடைத்துக்கொண்டு “சொல்லுங்க கோல்ட்” என்றவளை “தோட்டதுக்கு வா” என்று பேசியவன் போனை வைத்துவிட்டான்.
‘அச்சோ ராகேஷ் கூட பேசியதை பார்த்துட்டாரு போல’ என்று வேகமாய் தோட்டத்திற்கு ஓடிப் போய் பார்க்க வாயில் இரத்தம் ஒழுக அவன் போட்டிருந்த சட்டை கிழிந்து தொங்கியது. உனக்கு இந்த அடி கம்மிதான் டா என்று ராகேஷை முறைத்துப்பார்த்து தங்கபாண்டியன் அருகே போய் நின்றவள் “கோல்ட் அது” என்று பேச ஆரம்பிக்க கைநீட்டி “பேசாத” என்று தடுத்தவன்
“என் பொண்டாட்டி காலுல விழுந்து நான் பேசியது தப்புனு மன்னிப்பு கேளுடா நாயே” என்று கர்ஜித்தவனின் குரலில் பயந்து நடுங்கியவன் “எ.என்னை மன்னிச்சிடு ஆர்த்தி” என்று ஆர்த்தியின் காலில் விழுந்தான் ராகேஷ்.
ஆர்த்தியோ “இனிமே என்னை பார்க்க கூட உனக்கு அருகதை இல்லை ராகேஷ் வெளியே போ” என்று ஆர்த்தி கத்த வாயில் இரத்தம் ஒழுகிக்கொண்டு காலை இழுத்து இழுத்து நடந்து காரில் ஏறியவன் அடுத்த நிமிடம் தப்பித்தால் போதும் என்று காரை எடுத்திருந்தான்.
“கோல்ட் என்னை மன்னிச்சிடுங்க… அவன் என்கிட்ட இப்படி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!!” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
அவளின் தலையை வருடி “நீ பேசினதை நான் கேட்டேன் அம்மு!!” என்று நெற்றியில் முத்தம் பதித்தான்.
சங்கரியோ ராகேஷை வீடு முழுவதும் தேடினார் அவன் இருந்தால்தானே! “ஆர்த்தி ராகேஷ் எங்க காணோம்?” என்றதும் அங்கே வந்த தங்கபாண்டியனோ “உங்க கூட ஒட்டகம் போல ஒருத்தன் வந்தானே. அவன்தானே அவன் அப்பவே காரை எடுத்துட்டு கிளம்பிட்டான்” என்று நக்கலாக பேசினான்.
சங்கரியோ ராகேஷிற்கு போன் போட அவனோ
“நா.நான் அர்ஜென்டா இன்னிக்கே அமெரிக்கா போகணும் கி.கிளம்பிட்டேன் அத்தை” என்று தான் செய்த அயோக்கியத்தனத்தை கூற முடியாமல் மறைத்தவன் போனை வைத்துவிட்டான்.
எப்படியோ நம்மள நம்ம பொண்ணுகிட்ட கூட்டி வந்துட்டான் அதுவே போதும் இனி ராகேஷ் தேவையில்லை என்று விட்டு விட்டார்.
வளர்மதிக்கு பையன் பிறந்து விட அருள்பாண்டியனுக்கு சந்தோசம் தான் ஆனால் பொண்ணாக இல்லையென்று சிறு வருத்தம்தான் “இப்போ என்ன அருளு மறுபடியும் பெண் குழந்தை பெத்துப்போம்” என்று கண்ணைச்சிமிட்டியவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து “பெத்துப்போம் அம்மணி” என்றான் அருள்பாண்டியன்.
மூன்று நாட்களில் வீட்டுக்கு குழந்தையுடன் வளர்மதி வந்துவிட்டாள். சங்கரியோ அவர் வந்த வேலையை சரியாய் செய்ய ஆரம்பித்தார்.
வளர்மதி குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிர சங்கரி நின்றிருந்தார்.
“வாங்கம்மா” என்று குழந்தையின் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள் வளர்மதி.
“ஆமா உனக்கு அம்மா வீடு கிடையாதா!! உன் அப்பா அம்மா உயிரோட இல்லாம அனாதையா இருக்கியா அதான் பிள்ளையே உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இங்கயே இருக்கியா?” நாக்கில் நரம்பில்லாமல் பேசி விட்டார் சங்கரி.
வளர்மதிக்கோ அழுகை பீறிட்டு வந்தது. அவள் எப்போதும் பெரியவர்களை ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் இப்போது சங்கரி கேட்ட விதம் அவளுக்கு கோபத்தை வரவழைக்க “எனக்கு அம்மா அப்பா இல்லைங்கம்மா அப்பத்தாதான் எனக்கு எல்லாமே… இனிமே என்கிட்ட இப்படி பேசாதீங்க” என்று குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.
‘நாம இப்ப என்ன கேட்டோம்னு இவ இப்படி கோபப்பட்டு பேசுறா’ என்று குமைந்துக் கொண்டு நிற்க.
அங்கே வந்த ஆர்த்தியோ “என்னம்மா இங்க என்ன பண்ணுற?” என்றதும் “ஹான் நான் குழந்தையை பார்க்க வந்தேன்டி! உன் அம்மா வீடு எங்கனு கேட்டேன். அதுக்கு இந்த வளர்மதி என்னவோ என் அம்மா வீடு இதுதான்னு சொல்லிட்டு போறா. அடியேய் சொத்தெல்லாம் இவ ஒருத்தியே வச்சிக்க போறா… நீ உஷாரா இருடி” என்று பேசியவரை
“நீ வெளியே வாம்மா” என்று கையை பிடித்து இழுத்து வந்தவள் “நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் இந்த வீட்ல யாரையும் எதுவும் மனசு நோகும் படி பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல. அதையும் மீறி நீ வளர்மதி அக்காவை அம்மா வீட்டுக்கு போகலையானு கேட்குற. நான் நீ பேசினதை கேட்டுத்தான் வந்தேன். நீ இங்க இருக்க வேணாம் பெட்டியை கட்டு” என்றாள் கறாராக.
“ஆர்த்தி!! ஆர்த்தி!! நான் இனிமே யாரையும் எதுவும் பேசமாட்டேன்” என்று மன்னிப்பு கேட்டார் சங்கரி.
“இந்த ஒருமுறை மன்னிச்சிட்டேன் இது போல யார்கிட்டயும் பேசினா அடுத்து முறை நானே உன்னை சென்னைக்கு ட்ரைன் ஏத்தி விடுவேன்” என்று எச்சரித்துச் சென்றாள் ஆர்த்தி.
“ஏய் நான் உன் அம்மாடி என்னையே நீ மிரட்டுறியா! நான் இனிமேதான் விளையாடப்போறேன்” என்று மமதையாய் சிரித்துக்கொண்டார் சங்கரி.
அதே நேரம் சென்னைக்குச் சென்ற ராகேஷோ ஆர்த்தி தன்னை அடித்த ஆத்திரத்தில் மகேஷ்வரனின் பங்கு சந்தையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றிருந்தான். மகேஷ்வரன் சொத்தை விற்றால்தான் அவரது நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்ற நிலமைக்கு வந்திருந்தார் மகேஷ்வரன்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌👌👌👌
CtmAEHjM
DzudZEpSaJ
ZNOdBUnf
rUjRzIhfvBZNT
clxAQZzduDJ
bDtqjaEkRoXpQ
PWuiljTm
WqfrjdngFKHhS
gKtlhHxN
AjeHIdam
dtjyCEbGNZvXUkzf
XROrCtzv
stblBDdkoSUrg
ERDTyioXUZgjOm
VYBHzrQSjkJ
fplQWRGqyPYC
OxJUuoGFn
oWQdfBeN
VIStJKdwHWLBN
xwqaDIypcFv
Wow super