ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 30
 
 
மல்லிகாவோ சந்தனபாண்டியனை பார்த்து “தேங்க்ஸ்” என்று சிரித்தாள்.
 
கோவிலுக்குச் சென்றிருந்த தேன்மொழி பஞ்சாயத்தில் ‘மல்லிகாவை பார்க்க போனியா’ என்று தனபாக்கியம் சந்தனபாண்டியனை கேட்கும் போதே வந்துவிட்டாள். இப்போது மல்லிகா சந்தனபாண்டியனை பார்த்து சிரிப்பதையும் பார்த்துவிட்டாள்.
 
‘டேய் மாமு என்னடா நடக்குது? மல்லிகா டீச்சர் மேல கோபமா இருக்கேன் என்று சொல்லியவன் இப்போ அவங்களை பார்த்து சிரிக்க காரணம் என்ன?’ என்று தீவிரமாக யோசித்தவள் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தாள்
 
தனபாக்கியமோ “அப்பாடா இந்த ஊருக்கு ஒரு சாபம் ஒழிஞ்சது” என்று நிம்மதியாக மூச்சுவிட்டு நிமிர்ந்தார். மூன்று பேரன்களும் கைகோர்த்தபடி வீட்டுக்குள் வந்தனர். 
 
அன்றிரவு அனைவரும் இந்த ஊர் நரகாசுரன் அழிந்துவிட்டான் என்று சந்தோசப்பட்டு சிரித்துக்கொண்டு இனிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 
பொன்மணி தேவியுடன் தனபாக்கியம் வீட்டுக்குள் வந்தார். பல மாதங்கள் கழித்து வரும் மாமனையும் அக்காவையும் சிரித்த முகத்துடனே வரவேற்றனர் பாண்டியர்கள்.
 
“என்னை மன்னிச்சிடுங்க” என்று தனபாக்கியம் காலில் விழுந்தார் பொன்மணி. “அட எழுந்திருங்க என்ன இது” என்று தனபாக்கியம் சங்கடப்பட்டார். 
 
பொன்மணியின் பேச்சு சத்தம் கேட்டு தேன்மொழி அறையிலிருந்து ஓடிவந்து “அப்பா” என்று கட்டிக்கொண்டாள்.
 
“இந்த அப்பா அவசரப்பட்டு உன் புருசனை சந்தேகப்பட்டு தப்பா பேசிட்டேன் என்னை மன்னிச்சிடுமா” என்றார் ஆற்றாமையுடன்.
 
“என்கிட்ட எதுக்குப்பா மன்னிப்பு கேட்டுக்கிட்டு” என்றவள் சந்தனபாண்டியனை முறைத்தாள். 
 
இவ எதுக்கு என்னை முறைக்குறா என்று யோசித்தான் இருடா மவனே உனக்கு இருக்கு என்று மனதில் புகைந்துக் கொண்டு இருந்தவள் “அப்பா சாப்பிடுங்க” என்றதும் “இப்போதான் சாப்பிட்டுட்டு வந்தேன்டா எனக்கு மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்கணும் கேட்டாச்சு நான் கிளம்புறேன்” என்றவரை
 
“அட என்ன மாமா சும்மா கிளம்புறேன்!! கிளம்புறேனு!! சொல்றீங்க!! இப்பவும் உங்க அறை சுத்தம் பண்ணித்தான் வச்சிட்டு இருக்கோம்!! தூங்கிட்டு காலையில நல்ல வெடக்கோழியா அடிச்சு குழம்பு வைக்குறோம் சாப்பிட்டு போகலாம்” என்று பாண்டியர்களும் சிரித்தனர். பொன்னியும் ரமேஷும் தனபாக்கியம் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
 
வெகுமாதங்கள் கழித்து குடும்பமே சந்தோசமாக சிரித்து மகிழ்ந்து இருந்தனர்.
 
அன்றிரவு அறைக்குள் சென்றதும் சந்தனபாண்டியன் தேன்மொழியை அணைத்துக்கொண்டு “இன்னிக்குதான் டி ரொம்ப நாள் கழிச்சு ஹேப்பியா இருந்திருக்கோம்” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
 
சந்தனபாண்டியனை விலக்கிவிட்டு “எதுக்கு மல்லிகா டீச்சரை பார்க்க போனீங்க?” என்று கையை கட்டிக்கொண்டு முறைத்துப்பார்த்தாள்.
 
“அ. அது வந்து ஹான் அவளை ஏன் என்கிட்ட சொல்லாம ஊரை விட்டு போனேனு கேட்கத்தான் டி போனேன்!! ஆனா அவ என்னை பார்த்ததும் ஓனு ஒரே அழுகை தெரியுமா! அவ குழந்தை வேறு எங்களை ஒரு தாத்தா வந்து மிரட்டிட்டு போறாரு எங்களுக்கு பயமா இருக்கு அங்கிள்னு!! என் காலை கட்டிக்கிடுச்சுடி!! நான் உடனே அந்த குழந்தையை தூக்கிட்டேன்! தென்னரசு மல்லிகா மேல ஆசைப்பட்டிருக்கான்!! என் உயிருக்கு ஆபத்துனு கூட்டிட்டு போய் அவளை ரேப் பண்ணி தாலியும் கட்டியிருக்கான் படுபாவி!! அவ தென்னரசுக்கு பயந்து மறைஞ்சு வாழ்ந்திருக்கா. என்னை பழிவாங்க மல்லிகாவை தேடிப்பிடிச்சு கூட்டி வந்திருக்கான் தென்னரசு. ஆனா இந்த நாகப்பன் மல்லிகாவை தப்பான கண்ணோடத்துல பார்க்க ஆரம்பிச்சிருக்கான். தென்னரசுவிற்கு இந்த விசயம் தெரிஞ்சு நாகப்பன் மேல கோபம் வந்து அவர்கிட்ட சண்டையும் பிடிச்சிருக்கான்!! ஆனா நாகப்பன்தான் கில்லாடியாச்சே! பெத்த மகன்னு பார்க்காம சங்கிலியால கட்டி வைச்சிட்டாரு!!. நான் மல்லிகாவை பார்க்க போன போது மல்லிகா அழும்போது அவ கையை பிடிச்சேன்!! அப்போ போட்டோ எடுத்துட்டு வந்து என்னை பத்தி அப்பத்தாகிட்ட மல்லிகாவும் நானும் தப்பு பண்ணுறோம்னு கதை கட்டிவிட்டாரு!! அது நடக்காம போச்சு!! கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுனு சொல்லுவாங்க. எங்கப்பாவை விஷம் கொடுத்து கொன்னவன் இப்போ அவர் மகன் கையால விஷம் குடித்து இப்போ இல்லாம போயிட்டாருடி!! என்னைப்போய் சந்தேகப்பட்டு பார்த்தியேடி” என்று கோபப்பட்டு முகத்தை தூக்கி வைத்தான்.
 
“அச்சோ மாமா நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் என் மாமா சொக்கத்தங்கம் எனக்கு தெரியாதா!!  பாவம் மல்லிகா டீச்சர் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்க!! இனிமேலாவது அவங்க சந்தோசமாக வாழணும்!!” என்று சந்தனபாண்டியனை அணைத்துக்கொண்டவள் “அச்சோ மாமா இப்போ எல்லாம் உங்களை கட்டிப்பிடிக்கவே முடியலை பாப்பா இடிக்குறா” என்று வயிற்றைக்காட்டினாள். 
 
அவள் முதுகுபக்கம் கட்டிக்கொண்டு அவள் முதுகில் முத்தம் வைத்தான் “டேய் மாமு டயர்டா இருக்கு” என்றவளை கட்டிலில் படுக்க வைத்து “இதுக்கெல்லாம் வட்டியும் முதலும் குழந்தை பிறந்த பிறகு வாங்கிக்குறேன்” என்று தேன்மொழியை அiண்த்துக்கொண்டு உறங்கிவிட்டான் சந்தனபாண்டியன்.
 
ஆர்த்தியோ குடும்பமே சந்தோசமாய் இருந்த போதும் வெளியே வரவில்லை. தங்கபாண்டியனுக்கும் தன் மனைவி பக்கம் இல்லாது இருந்தது வருத்தமே. கூட்டம் அவளுக்கு ஏத்துக்காம போச்சுனா என்று யோசித்தவன் ஆர்த்தியை கூட்டிக்கொண்டு வரவில்லை.
 
அறைக்குள் வந்தவன் அறைக்கதவை லாக்போட்டு விட்டு வந்து ஆர்த்தியின் பக்கம் படுத்தவன் என்றும் இல்லாது ஆர்த்தியை அணைத்தப்படி படுத்துவிட்டான்.  ஆர்த்திக்கோ கண்ணீர் கரை புரண்டு வந்தது. இத்தனை நாளாய் அவளாக அணைத்துப்படுத்தாலும் கொஞ்ச நேரத்தில் கையை எடுத்துவிட்டு “பாப்பாவுக்கு டிஸ்டர்ப் ஆகும்” என்று தள்ளிப்படுத்துக்கொள்வான்.
 
இன்று அவனாக அணைத்திருந்தவன் அப்படியே உறங்கியும் போனான். அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி வந்தான். அவளுடன் உட்கார்ந்து சிரித்து மட்டும் பேச மறந்து.விட்டான். தேவியும் தனபாக்கியமும் தேன்மொழியை விட ஆர்த்தியை கவனமாய் பார்த்துக்கொண்டனர்.
 
நாட்கள் பறந்துச் சென்றது. இதோ வளைகாப்பு நாளும் வந்தது. இருவருக்கும் ஒன்பதாவது மாதம்  ஆர்த்தி ரொம்ப கவனமாய் இருக்கணும் என்று சொல்லியிருக்க சொந்தங்களை கூட கூப்பிடவில்லை தனபாக்கியம் குழந்தை காதுகுத்து விமர்சையா பண்ணிடலாம் என்று வளைகாப்பை வீட்டில் இருப்பவர்களை வைத்து நடத்தி விடலாமென்று முடிவு செய்தவர் மகேஷ்வரன் சங்கரியை மட்டும் வரவழைத்தனர்.
 
முதலில் ஆர்த்திக்கு வளைகாப்பு செய்தனர். முதலில் தனபாக்கியம் வளையல் போட்டு விட்டு ஒரு ஜோடி தங்கவளையலும் போட்டுவிட்டார். அடுத்து சங்கரியும் வளையடுக்கி மகளின் நெற்றியில் முத்தம் வைத்து “நீ நல்லாயிருக்கணும்டி” என்றவரை பார்த்து கண்ணைச்சிமிட்டினாள் ஆர்த்தி.
 
ஆர்த்தியை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் அறைக்குள் அனுப்பி வைத்தனர். ஆர்த்தியோ தங்கபாண்டியன் தனக்கு ஒரு வளையல் கூட போட்டு விடலையே என்று மனம் வருத்தம் கொண்டு கண்ணீரும் வந்து விட்டது கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே தங்கபாண்டியன் நின்றிருந்தான். 
 
எதுவும் அவளிடம் பேசாமல் வந்து நின்றவன் ஆர்த்தியின் வயிற்றில் முத்தம் கொடுத்து “பாப்பா அப்பாகிட்ட சீக்கிரம் வந்துடுங்க” என்று மீண்டும் ஒரு முத்தம் கொடுத்து விட்டு நிமிர்ந்தவன் ஆர்த்தியின் கண்களை பார்த்துக்கொண்டே அவளது கையை பிடித்து அவளது கையில் வைர வளையலை போட்டு விட்டு எப்போதும் போல பேசாமல் சென்றுவிட்டான். 
 
அடுத்து தேன்மொழிக்கும் வளைகாப்பு நடந்தது. அருள்பாண்டியன் தங்கபாண்டியன் இருவரும் தங்கவளையல்களை பூட்டி விட்டனர். சந்தனபாண்டியன் வைர வளையல்களை போட்டுவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தான். 
 
“அச்சோ மாமா எல்லாரும் இருக்காங்க” என சிணுங்கியவளை “இருக்கட்டும்டி” என்றான் கண்ணைச்சிமிட்டி.
 
“கோல்ட் தேங்க்ஸ் தேங்க்ஸ் நீ எப்பவும் மாறமாட்டே!!  நான் தான் உன் பேச்சை எப்போதும் கேட்கவேமாட்டேன்!” என்றவளுக்கு ஆனந்தகண்ணீர் வந்தது.
 
தினமும் தனபாக்கியம் வீட்டில் பண்டிகை தான் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சந்தோச சாரல் எப்போதும் வீசிக்கொண்டிருந்தது.
 
வளைகாப்பு முடிந்து ஒரு வாரத்தில் தேன்மொழிக்கு இடுப்பு வலி வந்துவிட்டது “அம்மா! அம்மா! வலிக்குது!! அம்மாச்சி இடுப்பு வலிக்குது!!” என்று ஊரையே கூட்டிவிட்டாள் தேன்மொழி. எங்கே ஆர்த்தி பயந்து விடுவாளோ என்று அவளது அறைக்கதவை மூடி வைத்து விட்டனர்.
 
தங்கபாண்டியனோ தேன்மொழி வலியில் துடிப்பதை பார்த்து பதறிவிட்டான். எங்கே ஆர்த்திக்கும் இதுபோல வலி வந்து அவளுக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு படபடப்பு வந்தது.
 
“மாமு எனக்கு இடுப்பு வலிக்குது” என்று சந்தனபாண்டியனை கட்டிக்கொண்டாள்.
 
அருள்பாண்டியனோ “தங்கம் நீ ஆர்த்தி பக்கம் இரு!! நான் தேன்மொழியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்” என்றிருந்தான்.
 
சந்தனபாண்டியன் தேன்மொழி அழுவதை பார்த்தவனுக்கு கைகால் நடுங்கியது. என்னடா அசால்ட்டா நாலு பேரை தூக்கிப்போட்டு அடிக்கிறானுங்க… பொண்டாட்டி பிரசவத்துல அழுதா மட்டும் பலவீனம் ஆகிடுறாங்க இதுதான் உலகநியதியும் கூட எவன் பொண்டாட்டி பிரசவத்தை நேரில் பார்க்கிறானோ அவன் மனைவியை நேசிக்க மறுக்க மாட்டான்.
 
ஹாஸ்பிட்டலையே ரெண்டாகி விட்டாள் தேன்மொழி… அவளது மகள் பிறப்பதற்குள்.
 
அடுத்து கொஞ்ச நேரத்தில் ஆர்த்திக்கு வலி வந்துவிட்டது. பனிக்குடம் உடைந்துவிட காலில் நீர் கசிந்தது. ஆர்த்திக்கு ஜுஸ் போட்டு கொண்டு வந்த தங்கபாண்டியனை பார்த்து “கோல்ட் என்னமோ தண்ணியா வருது” என்றாள் அழுகையுடன்.
 
சத்தம் கேட்டு வந்த வளர்மதியோ “தம்பி பனிக்குடம் உடைஞ்சிருச்சு… இப்பவே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுங்க” என்று அவசரப்படுத்தினாள் வளர்மதி. 
 
ஆர்த்தியை பின்னால் படுக்கவைத்துவிட்டு டிரைவரை வண்டியை எடுக்கச்சொல்லிவிட்டான் தங்கபாண்டியன்.
 
“கோல்ட் எனக்கு பயமாயிருக்கு” என்று தங்கபாண்டியன் கையை பிடித்துக்கொண்டாள். “அம்மு பயப்படாதடி ஒண்ணும் ஆகாது” என்று முகம் முழுவதும் முத்தம் கொடுத்து அவளது வலியை குறைக்க பார்த்தான்.
 
“நோ!! நோ!! என்னால வலி தாங்க முடியலை கோல்ட்!! எனக்கு ஏதாவது ஆகிடறதுக்குள்ள என்கிட்ட பழையபடி பேசேன் கோல்ட் நான் செத்.” என்றவளை அடுத்த வார்த்தை வராமல் அவளது இதழ்களை தன் இதழ் கொண்டு முத்தம் கொடுத்து அவளை பேச விடாமல் செய்தான் தங்கபாண்டியன்.
 
“உன் கூட நான் ஏன் பேசாம இருக்கேன்!! என்னோட உயிர்டி நீ! இப்போ எதுவும் பேச வேண்டாம் அம்மு குழந்தை பிறக்கட்டும் உன்கிட்ட மணிக்கணக்கா நானும் என் பையனும் பேசிக்கிட்டே இருப்போம்” என்றவனை வலியை பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்தவள் “ஏன் பாப்பா வரக்கூடாதா பாப்பா வந்தா தான் அப்பத்தாவோட காசுமாலை நமக்கு வரும்” என்றவளை அந்த நேரத்திலும் அவள் காசுமாலைக்கு வாதாடுகிறாளே என்று அவன் முகம் சுருங்கியது.
 
அவளுக்கு வலி அதிகமாக “கோல்ட்” என்று ஆர்த்தி கத்திக்கொண்டே இருந்தாள். ஹாஸ்பிட்டலுக்குள் சென்றதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆர்த்தி ஆசைப்படியே பெண்குழந்தை தான் பிறந்தது.
 
பிரசவ வார்டுக்குள் இருந்து கையில் ரோஜா குவியலாக பெண் குழந்தை பிறந்திருக்கு என்ற நர்ஸ் முன்னே நின்றிருந்த தனபாக்கியத்திடம் கொடுக்க ஆசையாக வாங்கியவர் “நம்ம வீட்டுக்கு இரண்டு லட்சுமிகள் வந்துட்டாங்க” என்று ஆனந்தப்பட்டார் தனபாக்கியம்.
 
நந்தனோ “ஐ எனக்கு இரண்டு தங்கச்சி” என்று குதித்தான். 
 
“ஆமாண்டா நீ மூத்த அண்ணா உனக்குதான் பொறுப்பு அதிகம்” என்றார் தேவி.
 
“ம்ம் நிறைய செய்வேன் என் தங்கச்சிகளுக்கு” என்று பெருமையாய் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் நந்தன். “அப்பாவை போலயே மகன்” என்று தனபாக்கியம் நந்தனின் கன்னத்தை கிள்ளினார்.
 
அடுத்த மூன்று நாட்களில் ஆர்த்தி தேன்மொழி இருவரையும் கூட்டிக்கொண்டுச் சென்றனர். தனபாக்கியமோ “என் பேத்திகள் என் வீட்டில்தான் இருக்கணும் யாரையும் அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். வேணும்னா பெத்தவங்க இங்க வந்து இருங்க” என்று சொல்லி விட்டார் கறாராக.
 
சங்கரியோ ஒரு வாரம் வந்து தங்கிவிட்டுச் சென்றார். தேவி தனபாக்கியம் வீட்டிலேயே இருந்து விட்டார். மகேஷ்வரனும் சங்கரியும் வாரம் ஒருமுறை வந்து மகளை பார்த்துவிட்டுச் சென்றனர்.
 
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வைபவமும் சிம்பிளாகத்தான் நடத்தினார் தனபாக்கியம் காது குத்துக்கு ஊரையே கூட்டி செய்யலாம் என்று சொல்லி விட்டார்.
 
தங்கபாண்டியன் மகளுக்கு “ஆதிரா” என்றும் சந்தனபாண்டியன் மகளுக்கு “தியா” என்றும் பெயர் வைத்தனர். 
 
வளர்மதிக்கு தேவி வந்துவிட சமையல்கட்டில் வேலை குறைந்திருந்தது. குழந்தைக்கு பால் கொடுக்கறவ நேரமே போய் படு என்று அனுப்பி வைத்து விடுவார் தேவி.
 
படுக்கையறைக்கு வந்து வந்து பார்க்க நந்தன் மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தான். அருள்பாண்டியனோ தொட்டிலில் குட்டி மகனை ஆட்டிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் முன்தான் பூபாலனுக்கு பால் கொடுத்து அருள்பாண்டியனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். 
 
அருள்பாண்டியன் தொட்டிலை ஆட்டுவதை பார்த்து சிரித்தவள் காரியத்துல கண்ணாயிருப்பாரு என்று குளியலறைக்குள் சென்றவள் குளித்து நைட்டியை போட்டுக்கொண்டு வர அவளை கைகளில் ஏந்திய அருள்பாண்டியன் கட்டிலுக்கு கீழே இருந்த பாயில் படுக்க வைத்து “எதுக்கு இந்த நைட்டி இப்போ தேவையா” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
 
அவளும் “உங்களுக்கு தேவையில்லைனா கழட்டிடுங்க” என்று கண்ணைப் பொத்திக்கொண்டாள். “அம்மணி” என்று அவளை கட்டிக்கொண்ட அருள்பாண்டியன் மனைவி சொல்லே மந்திரம் என்று வளர்மதி சொன்னதை செய்து அவளை அள்ளி எடுத்துக்கொண்டான். கணவன் மனைவிக்குள் சிறு பூசல்கள் கூட வராமல் பார்த்துக்கொண்டாள் வளர்மதி. இனி எப்போதும் அவர்கள் சந்தோசமாக இருக்கட்டும்.
 
இங்கே தேன்மொழியோ குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தவள் “ஆஆவென” கத்த குளித்து வந்தவனோ “என்னடி குட்டிப்பொண்ணு கத்துற” என்று அவள் பக்கம் வந்தவனிடம் “மாமு உங்க பொண்ணு உங்களை மாதிரியே!” என்று அவள் சிணுங்க அவள் கூறியதை புரிந்துக் கொண்டு “என் பொண்ணு என்ன மாதிரிதான் இருப்பாடி குட்டிப்பொண்ணு எனக்கு பசிக்குது சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு வா” என்றவனை முறைத்துப்பார்த்து “ம்க்கும் நான் மாட்டேன்” என்று எப்பவும் போல பாட்டு பாடியவள் குழந்தையை தொட்டிலில் போட்டு வந்தவளை கைகளில் ஏந்தியவன் கட்டிலில் போட்டு கழுத்தில் மூக்கை நுழைத்து “ம்ம் வாசனையா இருக்கடி” என்று அவன் கைகள் செய்த ஜாலத்தில் பெண்ணவள் மெழுகாக உருகினாள். 
 
அவன் இதழ்களோ மென்மையில் குடிக்கொண்டிருக்க அவனது பின்னந்தலைக்குள் கையை வைத்து அழுத்தி “மாமு” என்று அவள் சிணுங்கல்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனது. அவனது இதழ்கள் அவளது குட்டி நாபியில் வண்ண வண்ணக்கோலங்கள் போட மூன்று மாதங்கள் விரதம் காத்தவன் இன்று விரதத்தை முடித்துக்கொண்டு “குட்டிபொண்ணு ஒன்ஸ்மோர் போலாமாடி.”
 
“ம்ஹும் பாப்பா எழுந்துப்பா” என்று அவள் சிணுங்க “பாப்பா எழும்பும் வரை ஒன்ஸ்மோர் குட்டிப் பொண்ணு” என்று அவளை மாய மொழி பேசி மயங்கி அவளுக்குள் புதையல் எடுத்தான்.
 
கூடல் முடிந்து “ஏன் மாமா எனக்கே குழந்தை பிறந்திருச்சு இன்னமும் என்னை குட்டிப்பொண்ணுனு கூப்பிடற?” என்று சிணுங்க “நீ கிழவியே ஆனாலும் எனக்கு குட்டிப்பொண்ணுதான் ஹனி” என்று அவளிடம் தன் தேடலை தொடங்கினான் சந்தனபாண்டியன். 
 
இவர்கள் இன்று போல எப்போதும் ஆனந்தமாய் வாழ்க்கை வாழட்டும்.
 
ஆர்த்தியோ குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் ஆட்டிக்கொண்டிருந்தவள் தங்கபாண்டியன் சாப்பிட்டு வந்தவன் “அதுக்குள்ள பாப்பாவை தூங்க வைச்சிட்டியா?” என்று ஏக்கமாக தொட்டிலை எட்டிப்பார்த்தான். ஆதிரா வாயில் விரலை வைத்துக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தது. குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
 
“பின்னே பண்ணையிலிருந்தது வந்ததும் மகளையே தூக்கி வச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தா!! நான் என்ன பண்ணட்டும்” என்று இதழை சுளித்தாள். 
 
“ஏன்? என் பொண்ணு தான் எனக்கு முக்கியம்! அப்புறம் நீ!” என்று சொல்லியவன் மனைவியை ஓரக்கண்ணால் இரசித்தான் அவளது கோபத்தை.
 
“ம்ம் குழந்தையை எந்நேரமும் கொஞ்சிக்கோங்க!! நான் யாரு என்னை கொஞ்ச உங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்த மிஷின்தான் நான்!” என்று கோபமாய் மூக்கு விடைக்க பேசிவிட்டு கட்டிலில் ஏறியவள் முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
 
‘என் அம்முவோட கோபத்தை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று மீசையை முறுக்கிவிட்டு குழந்தையின் தொட்டிலில் கொசுவலையை கட்டிவிட்டு ஒரு முறை ஆட்டியும் விட்டு மெதுவாய் கட்டிலில் ஏறியவன் ஆர்த்தியின் இடுப்பில் கையை போட்டான்.
 
“ம்ப்ச் கையை எடுங்க” என்று தட்டிவிட்டாள். “நான் அப்படித்தான்டி போடுவேன்” என்று அவன் கைகள் அவளது சோளியின் பட்டன்களுக்கு விடுப்பு கொடுத்துக்கொண்டிருந்தது. 
 
“ம்ம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என்று திரும்பி படுத்தவள் “என்னமோ நான் மாசமா இருக்கும்போது பேசவே மாட்டேன்னு விரதம் இருந்தீங்க. இப்ப மட்டும் என்னவாம் இதெல்லாம்” என்று அவன் செய்துக் கொண்டிருந்த வேலையை காட்ட அவனோ அவள் பேச்சை கேட்காமல் அவனது இதழ்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருந்தான். 
 
“சும்மா கொஞ்ச நேரம் கத்தாம இரு அம்மு” என்று அவள் இதழை கவ்வியிருந்தவன் அவளை முழுதாய் கொள்ளையடித்து அவளை தன் மார்பில் போட்டுக்கொண்டு “என்னடி சொன்ன நீ கன்சீவா இருக்க டைம் நான் ஏன் பேசாம விரதம் இருந்தேனா. ஏன் நாம ரெண்டு பேரும் குழந்தை இல்லாம எத்தனை கஷ்டப்பட்டோம் அது உனக்கு தெரியாம போச்சா… நான் எங்கேயும் போகக்கூடாதுனு சொல்லியிருக்கேன். நீ உங்கப்பாவை பார்க்க போயிருக்க அப்போ என்மேல உனக்கு அவ்ளோதான் நம்பிக்கையா!! நான் உங்கப்பாவை பார்க்காம விட்டிருவேனாடி அம்மு!! நான் போன் எடுக்கலைனா அருள் அண்ணாவுக்கு நீ போன் பண்ணியிருக்கலாம்!! ஆனா நீ அவங்களுக்கு ஏன் தொந்தரவுனு நினைச்சிருப்படி!! உன்னை பத்தி எனக்கு தெரியாம போகுமா! அருள் அண்ணா உன்னை தங்கச்சியாத்தான் பார்ப்பாரு!! அவரை நீ அந்நியமா நினைச்சிட்டே பாரு!! அவர் நமக்காக எத்தனை கோவில்ல வேண்டுதல் வச்சிருந்தாரு தெரியுமா? நேத்துதான் அம்மன் கோவிலில் பூசட்டி எடுத்திருக்காரு. சின்னவன் அழகு குத்தியிருக்கான் எல்லாம் நமக்காக தெரியுமா!! ஆனா நீயோ பிரசவ வலியில கூட பெண் குழந்தை பிறக்கணும் அப்ப தான் அப்பத்தாவோட ஆரம் வரும்னு சொல்லுற!! ஏன்டி அம்மு இப்படி இருக்க” என்றான் வருத்தமாக.
 
“கோல்ட் எனக்கு அருளு மாமாவை பத்தி தெரியாம போனது வருத்தமா இருக்கு. இப்பதான் நம்ம குடும்பத்து ஆட்களை புரிஞ்சுக்குறேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க கோல்ட்! ஆமா அப்பத்தாவோட ஆரத்திற்கு உரிமையா ஆசைப்பட்டேன். அப்பத்தா யாருக்கும் கொடுப்பாங்களோ கொடுக்கட்டும்” என்றாள் தங்கபாண்டியன் மார்பில் சாய்ந்த படி.
 
“இப்படியே நம்ம குடும்பத்து ஆள்கிட்ட உரிமையாக பாசமா நடந்துக்கோடி அம்மு!” என்று அவள் இதழில் தஞ்சம் புகுந்தான் தங்கபாண்டியன். இருவரும் சந்தோசமாக வாழட்டும் நாமும் விடைபெறுவோம்.
 
 
சுபம்
 
எபிலாக்
 
 
தனபாக்கியம் குலதெய்வக்கோவிலில் தங்கபாண்டியன் மகள் ஆதிராவுக்கும், சந்தனபாண்டியன் மகள் தியாவிற்கும், இன்று மொட்டை போட்டு காது குத்தும் விழா விமர்சையாக நடந்துக் கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு தாய் மாமனாக தங்கபாண்டியனின் நண்பன் குமார் வந்துவிட்டான் அவனது மடியில் வைத்து காது குத்த இரு குழந்தைகளும் அந்த ஊரையே ரெண்டாக்கி விட்டனர்.
 
தங்கபாண்டியன் மகளை தூக்கி வைத்து சமாதானப்படுத்த சந்தனபாண்டியனும் மகளை தூக்கி வைத்து சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான். இருவரது மனைவிகளும் “உங்க கொள்ளு பேத்திக்கு பால் கொடுக்கணும் பசிக்குது அம்மாச்சி எங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க” என்று கேட்ட அடுத்த நிமிடம் பாலை கொடுத்தார் தனபாக்கியம்.
 
பாலைக்குடித்ததும் ரெண்டு பேரும் ஓரமாய் கோவிலில் உள்ள தூணில் சாய்ந்து உட்கார “அடியேய் பேத்திகளா குழந்தைகள் அழறாங்க போய் தூக்கிட்டு வந்து பால் கொடுங்க” என்று ஆர்டர் போட்டு முடிக்க தங்கபாண்டியனும் சந்தனபாண்டியனும் குழந்தைகளை கொடுக்க இருவரும் குழந்தைகளுக்கு பசியாத்தினர்.
 
ஊரில் அனைத்து மக்களும் வீட்டில் சாப்பாடு செய்யவில்லை கோவில் மண்டபத்தில்தான் குடியே இருந்தனர். ரமேஷ், பொன்னி அஞ்சனாவுடன் வந்திருந்தனர். அஞ்சனா “தாத்தா!! தாத்தா!!” என்று பொன்மணியின் பின்னேயேச் சென்றிருந்தாள். அவரும் அவளை தூக்கிக்கொண்டே சுற்றினார்.
 
தென்னரசும் மல்லிகாவும் விருந்திற்கு புறப்பட்டு பைக்கில் வந்துக் கொண்டிருந்தனர். மல்லிகா முதலில் இரண்டு மாதம் தென்னரசுவுடன் பேசவில்லை. மாடு போல வயலில் உழைத்து வருபவனுக்காக சமைத்து வைக்க ஆரம்பித்தாள். நாளடைவில் தென்னரசுவின் அன்பில் மல்லிகாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
 
அவனுடன் சகஜமாக பேசி ஒரே கட்டிலில் உறங்கும் வரை வந்திருந்தனர். ஆனால் நேற்று மல்லிகா குளித்து விட்டு வந்தவளை பார்த்துவிட்டு “சாரி” என்று திரும்பிச் சென்றுவிட்டான் அன்று அமுதனை தூங்க வைத்து விட்டு தென்னரசுவுக்காக காத்திருந்தாள்.
 
அவனோ வீட்டுக்கு வந்து சாப்பிட்டு மெதுவாய் பெட்ரூம் அறைக் கதவை திறந்து வந்து சத்தம் போடாமல் படுத்துவிட்டான். மல்லிகாவே தென்னரசுவின் மீது கையை வைக்க திரும்பியவன் “நான் உன்னைத்தொடறதுக்கு தகுதியானவனா மல்லி” என்று அவன் கண்ணில் கண்ணீர் வழிய கேட்டவன் “என்னை மன்னிச்சு என்கூட சேருவியா” என்றதும் “மறந்துட்டேன்” என்று தென்னரசுவை அணைத்துக் கொண்டாள். அவளுடன் அவளது விருப்பத்தோடு கூடினான். 
 
நாகப்பன் மல்லிகாவை மகன் திருமணம் செய்துவிட்டான் அமுதன் தென்னரசுவின் குழந்தைதான் என்று கண்டுபிடித்திருந்தார். அமுதன் தென்னரசுவை போலவே இருந்தான். தென்னரசு சிறு வயதில் எப்படி இருந்தானோ அப்படியே அமுதன் அச்சு அசலாக இருந்தான். அதுவுமில்லாமல் மல்லிகாவை ஒருமுறை தொடபோகும் முன் “அப்பா” என்று கத்தியிருந்தான் தென்னரசு. அப்போதே சந்தேகம் வந்தது. தென்னரசு போனில் மல்லிகாவுடன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுவிட்டார். மல்லிகாவை வைத்துதான் சந்தனபாண்டியனை பழிவாங்க வேண்டுமென்றுதான் தென்னரசுவை அடைத்து வைத்து மல்லிகாவை பஞ்சாயத்தில் இழுத்து விட்டார். ஆனால் நடந்தது எல்லாம் நாகப்பனுக்கு பாதகமாய் நடந்தது.
 
“வாங்க!! வாங்க!” என்று தனபாக்கியம் விருந்திற்கு வந்தவர்களை வரவேற்றார். சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்பியிருந்தனர். குழந்தைகள் பாலை குடித்துவிட்டு சமத்தாய் வேப்பமரத்து தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தனர். அருள்பாண்டியன் விருந்திற்கு வந்த சாமான்கள் கணக்கு வழங்குகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
 
தங்கபாண்டியன் ஆர்த்தியை கூட்டிக்கொண்டு தென்னந்தோப்பிற்குள் சென்றவன் “இங்க ஒரு வீடு கட்டி நாலு நாள் இங்க வந்து தங்கிட்டு போகணும்டி” என்றான் ஆர்த்தியின் மடியில் படுத்துக்கொண்டே
 
“ம்ம் வந்துட்டா போச்சு கோல்ட்” என்றவளின் கன்னத்தை சாய்த்து அவள் இதழில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
 
சந்தனபாண்டியனோ கிணத்துமேட்டில் கயித்துக்கட்டிலில் தேன்மொழியை மடியில் படுக்க வைத்து “இங்கயே ஒரு வீடு கட்டிடணும்டி ஒரு நாலுநாள் ஜாலியா கறிசோறு ஆக்கி சாப்பிட்டு மஜா பண்ணிட்டு” என்றவனை இடைமறித்து “மஜாவா” என்று தேன்மொழி வாயை மீன்குஞ்சு போல திறக்க  “இதோ இப்படித்தான் மஜா பண்ணனும்” என்று தேன்மொழியின் இதழில் தேன் எடுக்க ஆரம்பித்தான்.
 
தேன்மொழி ஆசைப்பட்ட படி கலெக்டர் ஆகிவிட்டாள். அதுவும் மதுரைக்கே போஸ்ட் வாங்கி கொடுத்திருந்தான் சந்தனபாண்டியன்.
 
ஆதிராவும் தியாவும் எழுந்து பசியில் அழுக ஆரம்பித்திருந்தது. குழந்தைகளின் அழுகை இரண்டு தம்பதிகளின் காதில் விழ அடித்து பிடித்து ஆர்த்தியும் தேன்மொழியும் ஓடிவந்து குழந்தைகளின் பசியை ஆற்றினர்.
 
அன்று இரவு அனைவரையும் உட்கார வைத்து திருஷ்டி சுத்திப்போட்டார் தனபாக்கியம். அடுத்தநாள் காலையில் தனபாக்கியம் “அருளு, தங்கம், சின்னவனே” என்று மூவரையும் கூப்பிட “அப்பத்தா” என்று மூவரும் வந்து நின்றனர் தனபாக்கியம் முன்னே. 
 
“வளரு, ஆர்த்தி, தேனு மூணு பேரும் வாங்க” என்றதும் “என்னாச்சு எல்லாரையும் அப்பத்தா கூப்பிடுறாங்க” என்று மூன்று பாண்டியர்களும் குழப்பமாக பார்த்துக்கொண்டனர்.
 
வளர்மதி, ஆர்த்தி, தேன்மொழி மூவரும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வந்து நின்றவர்கள் அவரவர் கணவன்மார்களை பார்க்க அவர்கள் மூவரும் இதழ் பிதுக்கினர்.
 
பொன்மணியும் தேவியும் வந்து நின்றனர். மகேஷ்வரனும் சங்கரியும் பேத்தியின் காதுகுத்துக்கு வந்தவர்கள் நாளைக்குதான் சென்னைக்கு புறப்படுவதாய் இருந்தனர். மகேஷ்வரன் சங்கரியும் தனபாக்கியம் முன்னே வந்து நின்றனர்.
 
தனபாக்கியம் நகை பெட்டிகளை எடுக்க அருள்பாண்டியனுக்கு புரிந்துவிட்டது. மெல்லிய சிரிப்பு அவனுக்கு வந்தது. 
 
வளர்மதி நேற்றிரவு “என்னங்க நமக்கு ஒரு பாப்பா வேணும்” என்றவளை “ஏன்டி” என்று அவளது காதுமடலை விரலால் தேய்த்துக்கொண்டே கேட்டவனை “இல்ல அப்பத்தாவோட ஆரம் நம்ம குழந்தைக்கும் வேணும்ல உரிமையாய் கேட்குறேன்” என்றவளை பார்த்து சிரிப்புதான் வந்தது அருள்பாண்டியனுக்கு.
 
“அப்பத்தா ஆரம் எந்த கொள்ளு பேத்திக்கு கொடுக்கணும்னு தோணுதோ அவங்களுக்குத்தான் கொடுப்பாங்க அம்மணி! நமக்கு இன்னும் பெண் குழந்தையே பிறக்கலை அதுக்குள்ள உனக்கு இப்படியொரு ஆசையா” என்று சிரித்தவனின் காதில் நாள் தள்ளிப்போயிருக்கு என்றாள் வெட்கம் கொண்டு.
 
“இந்த முறை நமக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்” என்றவளிடம் “அப்பத்தா ஆரம் கொடுக்கலைனாலும் நான் என் பொண்ணுக்கு வைரத்தால ஆரம் செய்து போடுவேன்டி நீ கவலைப்படாத! அதுவுமில்லாம அப்பத்தா எல்லா பேத்திகளுக்கும் குறை வைக்காம நியாயமா என்ன செய்யணுமோ அதை செய்வாங்க அம்மணி” என்று அவளை அணைத்துக்கொண்டான்.
 
நகைப்பெட்டியிலிருந்து மூன்று வைர ஆரத்தை வெளியே எடுத்தவர் “இது என்னை கல்யாணம் பண்ணியவுடன் என்ற வீட்டுக்காரர் ஆசையா செய்து போட்டது இந்த ஆரம் அருள்பாண்டியன் பிள்ளைக்கு” என்றதும் அனைவரும் வளர்மதியை பார்த்தனர். 
 
“என்னடி வளரு நீ மாசமா இருக்கனு சொன்னாதான் எனக்கு தெரியுமா என்ன நீ எப்போ தண்ணி ஊத்திக்குறேனு எனக்கு தெரியாம போகுமா!! என்ன இந்த முறை உனக்கு பொண்ணுதான் பிறக்கும்” என்று சொல்லியவர் பிறக்காத பேத்திக்கு கூட வைர நகையை எடுத்து வைத்தார். 
 
அருள்பாண்டியன் வளர்மதியை பார்த்து “போதுமா” என்று உதடசைத்தான். அவளோ “சந்தோசம்” என்று உதடசைத்து தலையை ஆட்டினாள்.
 
“தங்கம் உன்ற பொண்ணை தூக்கிட்டு வா” என்றவர் வைர ஆரத்தை எடுத்து ஆதிராவின் கழுத்தில் போட்டு விட்டு “இது என் முதல் கல்யாண நாளுக்கு என் வீட்டுக்காரர் வாங்கிக்கொடுத்தது” என்றார் கண்ணைவிரித்து.
 
“சின்னவனே, தேனுகுட்டி குழந்தையை தூக்கிட்டு வாங்க” என்றதும் “அம்மாச்சி கொள்ளு பேத்திக்கு மட்டும்தான் ஆரம் போடுவியா எனக்கு இல்லையா?” என்று சிறுபிள்ளை போல் கண்ணைசிமிட்டி கேட்டவளை “உனக்கு இல்லாமலா குட்டிமா” என்றவர் “நீ சின்ன குழந்தையா இருக்கும்போது உனக்கு வைர தோடு செய்து போட்டிருக்கேன் அடுத்து நீ பையனை பெத்துக்கொடு வைர ஆரம் புதுசா செய்து தரேன்!! இப்ப உன் பொண்ணு தியாவுக்கு இந்த ஆரம் போட்டு விடறேன்” என்று தியாவின் கழுத்தில் போட்டுவிட்டு “இது என்ற வீட்டுக்காரர் என்கிட்ட காதலை சொன்ன போது வாங்கிக்கொடுத்தது” என்று சிரித்துக்கொண்டே போட்டுவிட்டார். 
 
“மூன்று பேத்திகளுக்கும் சந்தோசமா” என்று சத்தமாய் கேட்டிருந்தார் தனபாக்கியம்.
 
“ரொம்ப சந்தோசம் அம்மாச்சி” என்றும் “அப்பத்தா” என்று வளர்மதி , ஆர்த்தி, தேன்மொழி மூவரும் கோரஸ் பாடினர்.
 
நந்தனோ “கொள்ளு பேத்திக்கு மட்டும்தான் வைர ஆரமா அப்பத்தா? எங்களுக்கு” என்றதும் “உங்களுக்கு இல்லாமலா” என்றவர் கணவரின் புலிநகம் செயினை எடுத்து “இது நான் உங்க தாத்தாவுக்கு முதல் கல்யாண நாளுக்கு பரிசாக கொடுத்தது” என்று செயினை போட்டிருந்தார். பூபாலனுக்கும் தாத்தாவின் செயின் என்று போட்டுவிட்டு தங்கபாண்டியன் சந்தனபாண்டியன் அடுத்து பிறக்க இருக்கும் குழந்தைகளுக்குமே செயினை அவர்களிடம் கொடுத்திருந்தார். தேவியிடம் “இந்த வைர ஆரத்தை பொன்னியோட குழந்தைக்கும் கொடுத்து விடு அவ பொக்குனு போய்டுவா” என்றார் தனபாக்கியம்.
 
மூன்று பேரன்களும் ஓடிவந்து தனபாக்கியத்தை அணைத்துக்கொண்டு “அப்பத்தா நீ மட்டும் இல்லைனா இப்படியொரு குடும்பம் எங்களுக்கு அமைஞ்சிருக்குமானு தெரியலை” என்று மூவரும் சேர்ந்து தனபாக்கியத்தை கட்டிக்கொண்டனர். மூன்று மருமகள்களும் தனபாக்கியம் அருகே வந்து உட்கார்ந்தனர்.
 
மகேஷ்வரனும் சங்கரியும் மகளை இப்படியொரு குடும்பத்தில் ஒப்படைத்திருக்கிறோம் என்று சந்தோசத்தில் சென்னைக்கு கிளம்பினார்கள்.
 
பொன்மணியும் தேவியும் தனபாக்கியம் வீட்டிலேயே தங்கிவிட்டனர். 
 
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
 
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
 
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
 
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
 
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
 
இது ஆனந்த பூந்தோட்டம்
 
இது அன்பின் ஆலயம்
 
என்று அங்கே பாட்டு ஒலிக்க அங்கே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாது போனது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. 
 
நன்றி 
 
அடுத்த கதையில் விரைவில் சந்திப்போம் 
 
வாழ்க வளமுடன்.
 

61 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

  1. Wowwwwww awesome story fabulous content sisssss lovlyyyyyyyyyy ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

  2. Wow super super alagana story very interesting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top