ATM Tamil Romantic Novels

18 – புயலோடு பூவுக்கென்ன மோம்

18 – புயலோடு பூவுக்கென்ன மோகம்




       காலையில் எழுந்ததும் வீராவுக்கு கல்யாணியின் ஞாபகம் வந்தது. உடனே தலையை குலுக்கி கொண்டு அலுவலகம் கிளம்ப தயாராக சென்று விட்டான்.

 

குளித்து விட்டு வந்தவுடன் போனில் நோட்டிபிகேசன் சவுண்ட்.. . எடுத்து பார்த்தால்.. கல்யாணி லோ நெக் டைட்  டீசர்ட் அணிந்து கவர்ச்சியாக  சிரித்தாள் ‘குட் மார்னிங் மச்சான்’ எனும் வாசகத்தோடு…

 

‘போடி..’என பதிலுக்கு அனுப்பினான்.

 

‘எங்க போக..’

 

‘எங்கயோ போ..’

 

‘நீயும் வரியா..’

 

‘என்னால  நீ ஒரு பொண்ணுங்கறதையே நம்ப முடியல..’

 

‘நம்ப வைக்க என்ன செய்யனும்..

 

‘நான் உன் கூட பேசனும்..’

 

‘இப்ப கால் பண்ணவா..’

 

‘இல்ல ஆபீஸ் போக டைம் ஆயிடுச்சு.. நைட் பேசிக்கலாம்..’ என முடித்து விட்டான்.

 

இரவு வீராவுக்கு கல்யாணி சேட்டிங்கு வருவாளா… கால் பண்ணுவாளா.. என ஒரு சொல்ல முடியாத எதிர்பார்ப்பு. 

 

அன்று இரவு வெகு நேரமாகியும் கல்யாணி வரவில்லை. வீரா நிமிசத்துக்கு ஒரு முறை தன் செல்போனை வெறித்து வெறித்து பார்த்தான். அவனால் ஒரு இடத்தில் இருப்பு கொள்ளவில்லை. அறையில் குறுக்கு நெடுக்குமாக நடந்து கொண்டே…

 

“இல்ல.. பொம்பள இல்ல.. ஆம்பள தான்.. சும்மா ஏதோ பிக் போட்டு என்னை ஏமாத்தறான். ப்ரூப் பண்ணுனு சொன்னதும் எஸ் ஆயிட்டான்.. எத்தனை நாளைக்கு மச்சான்ட்டு வருவல்ல.. அப்ப பார்த்துக்கிறேன்..” என புலம்பி கொண்டு இருந்தான்.

 

“ஆமாம் ஆம்பள தான்..”

 

“ம்ம்..பொம்பள இல்ல..”

 

நடந்து கொண்டே இருக்க.. போன் அடித்தது.

ஓடி போய் எடுத்தான். திரையில் கல்யாண் அழைக்கிறான் என்ற வாசகம் ஆங்கிலத்தில் மின்னியது..

 

“என்ன மச்சான் ஒரே ரிங்கில் எடுத்துட்ட.. என் கால்கு ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்தியாடா மச்சான்..”என்றது ஒரு இனிமையான பெண் குரல்..

 

குரலின்  இனிமையில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான்.

 

“என்ன மச்சான்.. இப்ப நம்புறியா.. நான் கல்யாணி தான்னு..”

 

“ஏய்.. உண்மையாகவே நீ ஒரு பொண்ணு தானா..”

 

“என்ன மச்சான்.. இன்னும் நீ நம்பலையா..”

 

“என்னவா வேணா இருந்துட்டு போ.. என்ன மச்சான்னு கூப்பிடாத..”

 

“ஏன் உன் மில்கி ஞாபகம் வருதா… என் கருத்த மச்சான்”

 

“ஏய்.. நீ அவள பத்தி பேசாத.. என் நிக்கி உன்னை மாதிரி சீட்டிங் கிடையாது..”

 

“ஏன் உன் மில்கி உனக்கு சரக்கு ஊத்தி கொடுத்து தான உன்ன கவுத்தா… அவ ரொம்ப  யோக்கியமோ..”

 

“ஏய்.. என் மில்கி ஒன்னும் ஊத்தி கொடுக்கல.. நானே தான் குடிச்சேன்.. அவ எவ்வளவு லவ் அண்ட் கேரிங் தெரியுமா..”

 

“நீ உம்னு சொல்லு நான் அவள விட உன்ன லவ்வோ லவ்னு லவ்வுவேன்..”

 

“ச்சீ.. அடுத்தவ புருஷன் நான்.. என்கிட்ட அசிங்கமா பேசாத..”

 

“நீ தான் அவள விட்டுட்டு வந்துட்டல்ல.. அப்புறம் என்ன..”

 

“உன் பேச்சே சரியில்லை முதல்ல போனை வை…” என இவன் வைத்துவிட்டான்.

 

எதிர்முனையில் கல்யாணிக்கு சிரிப்பை அடக்க முடியலை

 

“மச்சான் பயந்துட்டான்” என சொல்லி சொல்லி சிரித்தாள்.

 

  நிகிதாவுக்கு இரண்டு மூன்று நாட்களாகவே.. உடல் சோர்வாக இருக்க… அதுவும் காலையில் எழும் போது லேசான தலை சுற்றல் இருக்க.. நாட்கணக்கை பார்த்தவளுக்கு சந்தேகம் வந்தது.

 

 விசாலாவிடம் கூட சொல்லாமல் பட்டறைக்கு போவதாக சொல்லி கொண்டு அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதனை செய்து கொண்டாள். பொன்னியையும் அழைத்து செல்லவில்லை. உறுதியாக தெரியாமல் யாரிடமும் சொல்ல விருப்பம் இல்லை நிகிதாவுக்கு..

 

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர் நிகிதாவை பரிசோதித்து விட்டு…

 

“நீ விசாலாம்மா மருமக தான.. அவங்க வரலையா..”

 

“நான் பட்டறைக்கு வந்தேன். தலை சுத்தலா இருக்குனு தான்.. இப்படியே வந்துட்டேன்..”



“நீ கர்ப்பமா இருக்க.. நாற்பது நாள் ஆகியிருக்கு..  தலை சுத்தல் வாந்தி இருக்கும்..  இருந்தாலும் நல்லா சாப்பிடனும். நாளைக்கு விசாலாம்மா கூட்டிட்டு வா..இன்னும் சில டெஸ்ட் எடுக்கனும்”

 

சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. சந்தோஷபடறதா.. கவலபடறதா.. என நிகிதாவுக்கு தெரியவில்லை. வீரா போல ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டாள். அப்போது வீரா அருகில் இருந்தான். வாழ்க்கை ஆனந்தமயமாக இருந்தது.

 

ஆனால் இப்போது இந்த குழந்தை வரவு தன் வாழ்க்கையில் என்ன மாற்றம் செய்யும் தெரியவில்லை. கணவனிடம சொல்லவேண்டும். வீட்டினரிடம் சொல்லவேண்டும். என்ன பேசுவார்கள் என்ன செய்வார்கள் குழந்தை வந்துவிட்டது என்ற கடமைக்காக தன்னோடு வாழ வருவானா.. அவனே வரலை என்றாலும் பேசி பேசியே அவனோடு சேர்த்து வைக்க பார்ப்பார்கள். அப்படி குழந்தையை காட்டி அவனோடு வாழ வேண்டுமா… என பல குழப்பங்கள்..

 

இது எல்லாம் யோசித்து கொண்டே நடந்து வரவும் மிகவும் சோர்வாக இருந்தது. வீட்டினுள் சென்றவள் ஒரு சொம்பு நீரை அருந்தி விட்டு விசாலாவை தேட.. அவர் பின்பக்கம் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தார். 

 

தங்கள் அறைக்கு வந்தவளுக்கு பலத்த யோசனை. புருசனுக்கு தான் சொல்லவில்லை என்றாலும் குடும்பத்தினர் சொல்லிவிடுவர். மற்றவர்கள் சொல்லி தெரிந்து கொள்வதை விட தானே சொல்லிவிடலாம் என முடிவு செய்தாள்.

 

அதற்காக அவனிடம் பேசவதற்கு எல்லாம்  இஷ்டமில்லை. டெஸ்ட் ரிப்போர்டை போட்டோ எடுத்து அவனுக்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பிய சமயம் அவன் ஆபீஸில் இருந்ததால் சைலண்ட் மோடில் போட்டு இருந்தான். அதனால் பார்க்கவில்லை.

 

அவன் பார்ப்பானா.. பார்த்து விட்டு என்ன செய்வான் என எதிர்பார்ப்போடு கொஞ்ச நேரம் போனையே பார்த்து கொண்டு இருந்தாள். அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்றதும்.. மனதில் ஒரு சொல்லமுடியாத வலி..

 

ச்சே என்ற சலிப்போடு எழுந்து வந்தாள். அப்போது தான் அய்யாவும் மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தார். 

 

இருவரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை சொன்னாள். அய்யாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். ஆனால் விசாலாவிற்கு ஒரு நிமிடம் சந்தோஷம் தான். அதுக்கு பிறகு  நிகிதா கோபத்தில்  வீராவோடு வாழவே இல்லை என சொன்னதை நினைத்து குழம்பி போனார்.

 

அய்யாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. தன் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் வருகை. இதை வைத்தே  மகனை இழுத்து விடலாம் என நினைத்தார்.

 

மாமனார் வீட்டுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருக்க.. உடனே அழைத்தார்.

 

சொக்கலிங்கம் அழைப்பை ஏற்றதும்..

 

“வணக்கம் மாமா..  நான் அய்யாவு பேசறேன்..”

 

“ம்ம்… தெரியுது சொல்லுங்க..”

 

“உங்க பேத்தி.. இல்ல என் மருமக உண்டாகியிருக்கா…”

 

அதை கேட்ட சொக்கலிங்கத்திற்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்.

 

தொண்டையை செருமி கொண்டு..

 

“ரொம்பவே சந்தோஷம் மாப்ள.. இனி பேத்தி வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பலாமா..”

 

“என் மருமக வாழ்க்கைய சரி பண்ற கடமை எப்பவுமே எனக்கு இருக்கு.. “

 

“சரி நாங்க உடனே கிளம்பி வரோம்..” என சொல்லி வைத்துவிட்டார்.

 

ஒருமணி நேரத்தில் சொக்கலிங்கம் குடும்பத்துடன் வந்து இறங்கினார்.

 

வந்தவர்கள் நிகிதாவை பார்த்ததும்  அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. எப்படி இருந்த பொண்ணு..

 

ரோஹிணி மகளை கட்டி கொண்டு அழுக…

மங்களம் பாட்டி “எதுக்கு அழுகறவ.. நல்ல விஷயம் தானே நடந்திருக்கு..” மருமகளை அதட்டினார்.



ராகவ் அக்காவை முறைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

 

யாரும் எதுவும் பேசவில்லை. அய்யாவு தான் பேச்சை ஆரம்பித்தார்.

 

“மருமக உண்டாகியிருக்கா…”

 

“உங்க மகங்கிட்ட சொல்லிட்டிங்களா..” என்றார் ராகவ்

 

சற்றே தயக்கத்துடன் “இல்ல நைட் போன் பண்ணுவான்.. அப்ப தான் சொல்லனும்” என்றார்.

 

“சரி சொன்னதுக்கு அப்புறம்..”என்றார் கேள்வியாக…

 

“அவன் வர ஒரு வருஷம் ஆகும். நடுவுல லீவ் எல்லாம் எடுக்க முடியாது அவன் வரவரைக்கும் மருமகள நாங்க பார்த்துக்கிறோம்”

 

“அவன் வரவேணாம். என் பொண்ண  நான் அனுப்பி வைக்கிறேன். வச்சு வாழ முடியுமானு கேட்டு சொல்லுங்க… இல்லை டைவர்ஸ் கொடுக்க சொல்லுங்க.. என் பொண்ணுக்கு நான் வேற கல்யாணம் பண்ணி வச்சுக்கிறேன்”

 

ராகவ்வின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போயினர். இவ்வளவு நேரம் அவன் பொண்ணு வாழ்க்கைகாக ஒரு தகப்பனாக அவன் பேசுகிறான் பேசட்டும் என பெரியவர்கள் அமைதி காத்தனர்.அவர் டைவர்ஸ் பற்றி பேசவும் எல்லோருக்கும் அதிர்ச்சி. 

 

ஏன் நிகிதாவே இதை பற்றி யோசிக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சி போய் கோபம் வந்தது.

 

“ராகவ்.. ” என்றார்  சொக்கலிங்கம் கண்டன குரலில்..

 

“உங்க பேச்சை கேட்டு இவங்க மகனுக்கு என் பொண்ணை கட்டி வச்சேன். என் பொண்ணை விட்டுட்டு யாருகிட்டயும் சொல்லாம நாட்டை விட்டே ஓடி போய்டான்”

 

நிகிதாவை பார்த்து கண்கள் கலங்க.. 

 

“எப்படி இருந்தவ என் பொண்ணு.. இப்ப இப்படி பார்க்க..மனசு எல்லாம் பதறுது.. என் பொண்ணு நல்லா வாழனும். அதுக்காக இன்னொரு கல்யாணம் கூட நான் பண்ணி வைப்பேன். நீங்க தான கட்டி வச்சிங்க.. நீங்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க..”

 

அய்யாவு கோபத்துடன் “என் மகன் உசிரோட இருக்க வரைக்கும் நிகிதா அவனுக்கு மட்டும் தான் பொண்டாட்டி..”

 

“அப்ப என் பொண்ணு இப்படியே தனியா இருந்து கஷ்டப்படனுமா… அக்கா நீ சொல்லு.. நீயும் ஒரு பெண்ண பெத்தவ தான..”

 

“சும்மா.. என் மவனையே குறை சொல்லாத தம்பி.. உன் பொண்ணு ஒழுங்கா அவனோட குடும்பம் நடத்தியிருந்தா.. அவன் ஏன் விட்டுட்டு போறான். உன் பொண்ணு தான் அவனோட வாழவே இல்லைனு சொன்னா.. வாழாம  குழந்தை மட்டும் எப்படி வந்துச்சு..”

 

விசாலா இப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மங்களம் பாட்டி  விசாலாவை அறைவதற்கே போய்விட்டார்.

 

நிகிதாவுக்கு தன் அத்தையின் பேச்சை கேட்டதும் உடம்பு எல்லாம் பத்திகிட்டு எரிவது போல இருந்தது. இருந்தும் எதுவும் பேசவில்லை. நீ எந்த மாதிரியான நிலைல என்னை வச்சிட்டு போயிருக்க பாரு என வீரா மேல் கட்டுக்கு அடங்காத கோபம் வந்தது.

 

“உனக்கு தெரியுமா.. அவங்க வாழலைனு சும்மா வாய் புளிச்சுதோ.. மாங்கா புளிச்சுதோனு பேசின.. நான் மனுசியா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ..” என மங்களம் பாட்டி சத்தமிட..

 

ராகவ்கு கண்கள் கலங்கி விட.. ரோஹிணியோ வாய் விட்டு அழுகவே ஆரம்பித்துவிட்டார்.

 

“எனக்கு என்னமா தெரியும்.. உங்க பேத்தி தான சொன்னா…” கழுத்தை வெட்டி நொடித்தார்.

 

“ஏதோ கோபத்துல சொன்னா.. அதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு பேசுவியா… அவங்க இரண்டு பேரும் எப்படி வாழ்ந்தாங்கனு எனக்கு தான தெரியும்.. என் பேத்திக்கு தான் புருஷனோட பொழைக்க தெரியாம வீணா போயிடுவாளோனு பயந்தேன். அவ உன் புள்ள கூட அனுசரிச்சு தான் போனா.. ஆனா உன் புள்ள  அத  புரிஞ்சுக்காம போயிட்டான்”

 

“சும்மா.. சும்மா அவனையே குத்தம் சொல்லாதிங்க.. அவன் மனசுல என்ன குறையோ.. இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டான்”என புடவை தலைப்பில் கண்ணை துடைக்க..

 

அய்யாவு”விசாலா போதும். நீ கொஞ்ச நேரம் வாயை மூடி அமைதியா இருந்தா போதும்”

 

முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டார் விசாலா..

 

ராகவ்வோ “என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க..”

 

“வீராகிட்ட பேசிட்டு தான் எதுனாலும் சொல்ல முடியும்..ஆனா டைவர்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்ல..”

 

“அதுவரைக்கும் எங்க பொண்ணு எங்க வீட்ல இருக்கட்டும் நாங்க கூட்டிட்டு போறோம்”

 

அதுவரை எல்லோரும் பேசுவதை அமைதியாக  பார்த்து கொண்டு இருந்த நிகிதா..

 

“எல்லோரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டிங்களா…. இப்ப நான் பேசலாமா.. கல்யாணம் தான் உங்க இஷ்டத்துக்கு நடந்துச்சு.. ஆனா வாழறதா வேணாமானு நான் தான் முடிவு பண்ணனும்”

 

அய்யாவுவையும் விசாலாவையும் பார்த்து”எப்ப என்கிட்ட சொல்லாம அவரா ஒரு முடிவு எடுத்து என்ன விட்டுட்டு போனாரோ.. அப்பவே  அவருக்கும் அந்த உரிமை இல்ல

இனி நான் தான் முடிவு பண்ணுவேன்”

 

விசாலாவின் அருகில் சென்றவள் தன் வயிற்றை தட்டி.. “இந்த குழந்தை உங்க மகனது இல்லைனு அவர் சொல்லிடுவாரா.. எங்கே சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் ” என்றவள் எல்லோரையும் பார்த்து 

 

“நான் அவர் வர வரைக்கும் இங்க தான் இருப்பேன். எங்கயும் வரமாட்டேன் ” என்றவள் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.

 

கண்மண் தெரியாத கோபம் நிகிதாவிற்கு இப்போ மட்டும்  வீரா கையில் சிக்கி இருந்தான்  கிழித்து தோரணமாக தொங்க விட்டு இருப்பாள். சுவற்றில் மாட்டி இருந்த தங்கள் கல்யாண போட்டோவை கழட்டி எதிரில் இருந்த சுவற்றில் விட்டு எறிந்தாள். கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

 

சத்தத்தில் என்னவோ என பயந்து போய் வீட்டினர் கதவை தட்ட.. 

 

“நிகிதா.. கதவ திறடா..”

 

“நிக்கி கண்ணு…”

 

படாரென கதவை திறந்தாள். எல்லோரும் உள்ளே   அவர்களின் கல்யாண போட்டோ உடைந்து கிடந்ததை பார்த்து போட்டோ தானா என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

 “என்ன ஏதாவது பண்ணிகிட்டேனு பயந்துடிங்களா.. அவர மாதிரி கோழை கிடையாது நான்.. என்ன தான் என இரண்டில் ஒன்று பார்க்காம விடமாட்டேன். என்னை தனியா விடுங்க போங்க எல்லோரும்..” என்று கத்தி விட்டு மீண்டும் கதவை சாத்தி கொண்டாள்.

 

அதிர்ச்சி டென்ஷன் கோபம் என எல்லாம் சேர்ந்து மயக்கமாக வர.. படுக்கையில் கண் மூடி படுத்து கொண்டாள். படுத்தவள்  நன்றாக தூங்கிவிட்டாள். 

 

பொன்னி தான் நிகிதா வீட்டினரை சமாதானம் செய்து தான் பார்த்து கொள்வதாக சொல்லி அனுப்பி வைத்தாள். தூங்கும் நிகிதாவை பார்த்து விட்டு அவர்களும் கிளம்பினர்.

 

நன்றாக உறங்கி கொண்டு இருந்த நிகிதா தன் போன் ஓசையில் கண் விழித்தாள். அறையே இருட்டாக இருக்க.. எவ்வளவு நேரம் தூங்கி விட்டோம் என நினைத்தவள் லைட் போட்டுவிட்டு போனை எடுத்து பார்த்தாள். 

 

வீரா தான் அழைத்திருந்தான்.பார்த்தாள் எடுக்கவில்லை. அவனும் அழைத்து கொண்டே இருந்தான். இவளும் பார்த்து கொண்டே இருந்தாள்.

 

வீரா எதற்கு அழைத்தான் மனைவிக்காகவா.. அவனின் மகவுக்காக.. 

 

நிகிதா அழைப்பை ஏற்பாளா.. பேசுவாளா…




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top