21 புயலோடு பூவுக்கென்ன மோகம
தனது முகத்தில் போட்டு இருந்த டபுள் லேயர் மாஸ்கை கழட்டி விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள் கல்யாணி @நிகிதா…
“டேய் கருவாயா.. உனக்கு என்ன சொன்னா இவ்வளவு கோபம் வருமா… சும்மா சொல்லகூடாது. இல்லாத ஒருத்திய இருக்கறதா நினைச்சுகிட்டுபேசறதும்.. கோபபடறதும்… நினைக்க.. நினைக்க.. சிரிப்பு தாங்கல.. வாடா கருத்த மச்சான்.. இன்னும் உன் பிபிய ஏத்தி.. தெறிக்க விடறேன்..”என சொல்லி சிரிக்க…
சிரித்ததில் அடிவயிற்றில் லேசாக சுருக்கென ஒரு வலி.. உடனே பயந்து பதறிவிட்டாள். பேபிக்கு ஏதாவது ஆகிடுமா.. யார்கிட்ட கேட்க.. நான் பார்த்துகிறேன் என கூட்டி வந்த மாமியார் இப்போது எல்லாம் கண்டு கொள்வதில்லை. தன் வீட்டினரிடமும் பேசுவதில்லை. யாரிடமும் கேட்க பிடிக்காமல் மறுகினாள்.
ஒரு மடங்கு தண்ணீர் குடித்துவிட்டு கலங்கிய மனதோடு அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்தில் வலி போய் விட..
“அச்சோ.. பேபி.. நான் சிரிச்சது உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்ததா.. நான் என்னடா செய்ய.. என்னை சிரிக்க வைக்கறதும் உங்கப்பா தான்.. அழுக வைக்கறதும் உங்கப்பா தான்.. உங்க டேடிய நம்மள தேடி வரவைக்கனும் குட்டி.. எனக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லடா குட்டி.. நீ மம்மிக்கு சப்போர்ட்டா இருப்பியா.. உங்கப்பா சும்மா கதறிகிட்டு வரனும்.. வர வைப்பேன் அம்மா.. ஆனா என்ன.. உன்ன முதல்ல கைல வாங்கறது உங்க டேடியா தான் இருக்கனும். அதுக்குள்ள வர வைக்கனும்.. ம்ம்ம் பார்ப்போம்..” என்றாள் கவலை தோய்ந்த குரலில்..
வீரா கல்யாணி மேல் ஏகப்பட்ட கோபத்தில் இருந்தான். ஏற்கனவே என் மேல் கோபத்தில் இருப்பவளிடம் அதையும் இதையும் பேசி.. இன்னும் டென்ஷன் பண்ணி வச்சிருக்கா.. அடிக்கடி கோபப்பட்டால் பேபிக்கு ஏதாவது ஆகிடுமா என புதிதாக ஒரு பயம் தோன்ற.. உடனே கூகுளில் தேடினான். அது சொன்ன செய்திகளை பார்த்து தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
தான் கண்ணில் காணாத.. ஏன் மனைவியின் வயிற்றை தடவி கூட உணர முடியாத தன் சிசுவிடம் கண்களை மூடி மானசீகமாக பேசினான்.
“பேபி…. சாரிடா குட்டி.. நீங்க உங்கம்மா வயித்துல இருக்கறிங்கனு தெரிஞ்சிருந்தா.. நான் உங்கம்மாவ விட்டுட்டு வந்திருக்கவே மாட்டேன். அவ என் மேல இவ்வளவு உயிரா இருப்பானு தெரியாம போச்சு.. பாவம்டா அவ.. அவள பார்த்துக்க யாருமில்லை. நானும் பக்கத்தில் இல்லை. எனக்காக நீங்க அம்மாவ தொந்தரவு பண்ணாம சமத்தா இருங்க.. நீங்களும் சேப்பா இருங்க..நான் சீக்கிரம் உங்க இரண்டு பேரையும் பார்க்க வந்திடுவேன்..” பேச பேச கண்களில் நீர் கோடுகள்..
கண்ணீரை துடைத்தவன் தான் அருகில் இல்லை என்றாலும் அவளை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என நினைத்தான். அவனுக்கு தெரியும் அவன் தான் அவள் சந்தோஷம் என்று.. இருந்தாலும் தான் அவளிடம் சென்று சேரும் காலம் வரை அவளுக்கு நிம்மதியையாவது தர வேண்டும் என நினைத்தான்.
அதற்காக சிலவற்றை செய்தான். முதல் வேலையாக தன் அம்மாச்சிக்கு அழைத்தான்.
வீராவின் நம்பரை பார்த்ததும் எடுத்தவுடன் வீராவை பேசவிடாமல் படபட பட்டாசாக வெடித்தார்.
“ஏன் வீரா இப்படி பண்ண.. உனக்கு என் பிரச்சினைனாலும் என்கிட்ட சொல்லுனு சொன்னேன்ல.. இல்ல இப்படி போறேனு என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.. இப்படி யார்கிட்டயும் சொல்லாம போயி.. எவ்வளவு சிக்கல் பண்ணி வச்சிருக்க தெரியுமா.. என் பேரன் புத்திசாலினு நான் பெருமையா இருந்தேன். ஆனா நீ முட்டாளுனு நிருபிச்சிட்ட..”
“அம்மாச்சி தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க.. தாத்தா எப்படி இருக்கார்..”
“நீ பண்ணி வச்ச வேலை.. அவர் நிகிதாவ நினைச்சு கவலப்பட்டு பிபி அதிகமாகி.. மயக்கம் போட்டு விழுந்து.. இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு..”
“ஐயோ.. அம்மாச்சி .. தாத்தா இப்ப எப்படி இருக்காரு.”
மீண்டும் மங்களம் பாட்டி ஏதோ சொல்ல போக.. சொக்கலிங்கம் “மங்களா.. கொடு நான் பேசறேன்” என வாங்கி சோர்வான குரலில்..
“ஏன்யா இப்படி பண்ண… எதுக்காக உனக்கு நிகிதாவ கல்யாணம் பண்ணி வச்சோம்.. எங்க நம்பிக்கையவே உடைச்சிட்டயே.. நாங்க தப்பு பண்ணிட்டோம்யா.. உனக்கு இஷ்டமில்லைனு தெரிஞ்சே உங்க வாழ்க்கையை வீண் பண்ணிட்டோமோனு வருத்தமா இருக்கு..”
“தாத்தா… அப்படி எதுவும் இல்ல.. நீங்க தப்பு பண்ணல.. நாந்தான் தப்பு பண்ணிட்டேன். எதையும் புரிஞ்சுக்கல.. மன்னிச்சுருங்க..”
“மன்னிக்கறதுக்கு நாங்க யாருய்யா…. உங்க மாமன் என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டிங்க.. உங்க பேச்சு கேட்டதற்கு இன்னைக்கு என் பொண்ணு தான் கஷ்டப்படறா என பேசறான்.. உங்க பேரன டைவர்ஸ் கொடுக்க சொல்லுங்கனு சண்ட போடறான்.நாங்க மனசு ஒடிஞ்சு போயிட்டோம்..”
“இல்ல தாத்தா.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல… அவருகிட்ட தெளிவா சொல்லிடுங்க.. நிகிதா என்னைக்குமே என் பொண்டாட்டி தான். அவள எப்படி சந்தோஷமா வச்சுக்கனும்னு எனக்கு தெரியும். நான் சீக்கிரம் வந்துடுவேன். அவளோட வாழ்ந்து காட்டுவேன் அதையும் அவர்கிட்ட சொல்லிடுங்க..”
“ய்யா.. வீரா.. நீ சொல்றது நிசமா.. நம்பலாமா.. “
“நம்புங்க தாத்தா.. நான் வரவரைக்கும் நிகிதாவ நல்லா கவனிச்சுக்குங்க.. அவ ரொம்ப இளைச்சு போயிட்டா..”கரகரத்த குரலை செருமி கொண்டே பேசினான்.
“நாங்களா பார்த்து மாட்டோம்ங்கிறோம். அவ தான் எங்ககிட்ட பேசறது கூட இல்ல.. எங்கள விட்டு விலகியே இருக்கா.. இங்க கூட்டிட்டு வந்து இரண்டு நாள் வச்சு சீராட்டிஅனுப்பலாம்னா அங்க இருந்து அசைய மாட்டேங்கிறா..” என்றார் ஆற்றாமையோடு..
“அம்மாச்சிகிட்ட கொடுங்க..”
தாத்தாவின் கையில் இருந்து போன் பாட்டி கைக்கு மாறியது.
“அம்மாச்சி.. எனக்காக கொஞ்சம் அடிக்கடி காஞ்சிபுரம் போய் பார்த்துக்க முடியுமா.. அவ சரியா சாப்பிடறதில்லை போல..”
“ஏன் உங்கம்மா பார்க்கறதில்லையா.. மருமகள கூட பார்க்காமா உங்கம்மா புடுங்கி கத்த கட்டுறாளா..”
வீராவால் அவனுடைய அம்மாவை யாரிடமும்.. அது தன் அம்மாவை பெற்ற அம்மாவிடம் கூட விட்டு கொடுக்க முடியவில்லை.. மனைவியையும் விட முடியாதே..
“இல்ல.. அம்மா செய்யறாங்க தான்.. ஆனால் நிகிதா யாரிடமும் ஒட்ட மாட்டேங்கறா..” என அவன் இழுத்த இழுவையிலேயே.. மங்களப் பாட்டிக்கு புரிந்துவிட்டது. அவரும் மகளின் பேச்சை பார்த்தவர் தானே..
“சரி.. சரி.. நீ எப்ப வருவ…”
எல்லோரும் ஒரே கேள்வியை கேட்கிறாங்களே.. பதில் சொல்லியே நொந்து போயிடுவேன் என நினைத்தான்.
“சீக்கிரமே வந்திடுவேன் அம்மாச்சி.. அவள பார்த்துக்குங்க..” என வைத்துவிட்டான்.
எல்லோரிடமும் பேசி பேசியே சரி கட்டி அவன் போன் பில் எகிறியது.
கண்ணாடி முன் நின்று கொண்டு.. “டேய்.. உனக்கு இது தேவையா..பேசாமல் அங்கயே இருந்திருக்கலாம். யோசிக்காம முடிவு பண்ணி வந்துட்ட… இப்படி ஆளாளுக்கு டிசைன் டிசைனா டார்ச்சர் பண்றாங்களே.. இதுல இடை சொருகலா.. இந்த கல்யாணி வேற…” தன்னையே தன்னையை திட்டி கொண்டு இருக்க..
அவன் போன் இசைத்தது. இப்போது எல்லாம் போன் அலறினால் இவனுக்கு அலர்ஜியாகி விடுகிறது.
“யாருனு தெரியலயே.. பொண்டாட்டியோட கூட இப்படி உறவாடல… இந்த போனோட தான் அதிகம் உறவாடறேன்..”என புலம்பியவாறே.. போனை போய் எடுத்தான்.
அதில் ஒளிர்ந்த பேரை பார்த்ததும்.. “சாத்தானை நினை உடனே வரும்னு சும்மாவ சொன்னாங்க.. வந்துருச்சு பாரு..” என திட்டி கொண்டே அதை உயிர்பித்து காதுக்குகொடுத்தான்.
“கருத்த மச்சான்.. என்னடா பண்ற..”
“ம்ம்.. பொழுது போகல.. அதான் பேய்கு பேன் பார்த்துட்டு இருக்கேன்..”
“ஹா..ஹா…ஹா.. இந்திய பேயா.. கனடா பேயா..”
“என்னடி கொழுப்பா.. வந்தேனு வைய்..”
“வந்து என்ன பண்ணுவ.. என் கொழுப்ப அடக்கிருவியா…வா பார்க்கலாம்..”
“ச்சீசீ. நீ எல்லாம் ஒரு பொண்ணாடி..”
“ஆமாமாம்.. உன் பொண்டாட்டி இப்ப பேசறால்ல.. அதான் இப்ப என்னை பொண்ணா தெரியாது. உனக்கு பேச ஆளில்லாதப்ப நான் தேவைபட்டேன். இப்ப தான் உன் பொண்டாட்டி கூட போன்லயே கூடி குழாவறல்ல.. இப்ப நான் உனக்கு தேவையில்ல.. அதான் தூக்கி எறிஞ்சு பேசற.. மறுபடியும் நிகிதாகிட்ட பேசி சமாதானம் செஞ்சி விடுனு வருவல்ல.. அப்ப பேசிக்கிறேன் உன்னை..” என எகிற..
“போடி.. என்ன மிரட்டறியா… இனி உன் தயவு எனக்கு தேவையில்ல.. என் அமுல் பேபிய எப்படி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும்.. “என அசால்ட்டாக கல்யாணியை தூக்கி எறிந்தான்.
உறவுகளை விட்டு நாட்டை விட்டு.. தெரியாத நாட்டில் பழகாத முகங்களின் நடுவில் தனிமை விரட்ட வந்த உறவை தேவையிருக்கும் வரை பயன்படுத்தி கொண்டவன் தேவை பூர்த்தியானதும் தூக்கி எறிந்துவிட்டான்.
கல்யாணியாக பேசி கொண்டு இருந்த நிகிதாவிற்கு கசந்த முறுவல் பூத்தது. தன் கூட்டுக்குள் இருந்தவ வரை மனித முகங்களின் பன்முகங்கள் தெரியவில்லை. நண்பன் என நினைத்தவன் நயவஞ்சகனாக மாறி போனான்.காதல் கணவன் காதல் இல்லை என உதறி போனான். உறவுகளின் உண்மை நிலையும் இப்படியே..
நிகிதா இப்போ தான் வாழ்க்கையின் நிதர்சனத்தை வலிக்க.. வலிக்க கற்று கொள்கிறாள். தனக்கான அங்கீகாரத்தை தேடி போராட துவங்கியுள்ளாள்.எதை எல்லாம் கணவன் மைனஸ் என நினைத்தானோ.. இதோ அதை எல்லாம் ப்ளஸ்ஸாக ஆக்கும் முயற்சியில் இறங்கி விட்டாள் நிகிதா.
தனது மாமனாரின் தொழிலை மேம்படுத்தும் தேடலில் இன்னும் சிலவற்றை அறிந்து கொண்டாள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது தந்தையின் பேக்டரியை போல.. நிறைய இருப்பதையும்.. பட்டு தொழிலை தாண்டி காஞ்சிபுரம் தொழில் நகரமாக உருவாகி கொண்டு இருப்பதையும் அதுக்கு நிகராக விவசாயமும் இருப்பதை பார்த்தவளுக்கு சில ஐடியாக்கள்.. அதனை எப்படி நிறைவேற்ற என சிந்தனைகள்..
வார இறுதியில் நிகிதா வீட்டினர் நிகிதாவை பார்க்க வந்தனர். விசாலா வாங்க என வெடுக்கென கேட்டு விட்டு சமயலறைக்குள் நுழைந்து கொண்டார். நிகிதாவோ அது கூட இல்லை வாங்க என தலையசைப்போடு நிறுத்தி கொண்டாள்.
ஆராத்யாவை மட்டும் “வா ஆரு..” என கைபிடித்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றாள். அப்போது தான் வெளியே சென்று விட்டு வந்த அய்யாவு இவர்களை பார்த்து “வாங்க.. வாங்க.. ” என வரவேற்றவர்.. மனைவியை தேடி சென்றார்.
விசாலாவோ முகத்தை தூக்கி வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
“இங்க என்ன விசாலா பண்ணிட்டு இருக்க.. வந்தவங்களுக்கு காபி பலகாரம் கொடுக்கலையா..”
“ஆஹாங்.. என் மவன மாப்ளைங்கற மரியாதை இல்லாம பேசினவங்கள உபசரிக்க சொல்லறிங்களா.. என்னால முடியாது..”
“எப்ப விசாலா இப்படி மாறுன..என் பொறந்த வீட்டு சொந்தம் எனக்கு வேணும்னு சொல்லி தான இந்த கல்யாணத்த நடத்தி வச்ச.. எப்போ சம்மந்தினு நினைச்சியோ அப்ப இருந்து சிக்கல் அதிகமாக தான் ஆகிருக்கு.. உம் மகன் வாழ்க்கையை மனசுல வச்சு எதுனாலும் பண்ணு.. இப்ப வந்தவங்களா நல்லபடியா கவனிச்சு அனுப்பு..”என்று சொல்லி விட்டு அவர்களை பார்க்க சென்று விட்டார்.
அவர் சொல்வது சரி தான என் மகனும் பொண்டாட்டி கூட வாழனும் நினைக்கிறா.. எதுக்கு இன்னும் பிரச்சினை பண்ணிகிட்டு..என நினைத்து காபி பலகாரங்கள் கொடுத்து உபசரித்தார். இருந்தாலும் சண்டை போடவும் இல்லை சுமூகமாக பேசவும் இல்லை.
ஆரு நிகிதாவிடம் “அக்கா உன் வயித்தை தொட்டு பார்க்கவா..” என ஆசையாக கேட்க..
“பாருடா ஆரு..” என சேலையை விளக்கி காட்ட..
ஆரு அவள் வயிற்றை மென்மையாக தடவி பார்த்து..
“ஏக்கா.. பேபி இப்ப எப்படி இருக்கும்.. கைகால் எல்லாம் குட்டி குட்டியா இருக்குமா.. மூவ் ஆகுமா.. ” என ஆசையாக ஆயிரம் கேள்விளை கேட்க..
நிகிதா மென்மையான சிரிப்போடு ஆருவின் ஆரவாரத்தை ரசித்து கொண்டு இருந்தாள்.
ஆருவோடு பேசிக்கொண்டு இருந்த நிகிதாவை பார்க்க ரோஹிணி வந்தார்.
“நிக்கி பேபி நல்லா இருக்கியா.. ஹெல்த் நல்லா இருக்கா.. மார்னிங் சிக்னஸ் இருக்கா..” நிகிதாவின் கைகளை பிடித்து கொண்டு கேட்க.. அவள் அமைதியாகவே இருந்தாள்.
“ஏன் பேபி.. மம்மிகிட்ட பேசமாட்டேங்கற.. என் மேல என்ன கோபம்.. எதா இருந்தாலும் திட்ட கூட செய்.. ஆனால் பேசாம மட்டும் இருக்காத..” என்று அவளை கட்டி கொண்டு அழுக..
தன் அம்மாவின் அழுகையை கண்டவள் மனமிரங்கி..
“அழுகாதிங்க மாம்.. நான் நல்லா இருக்கேன்..”
“எங்க நல்லா இருக்க.. பார்க்கவே கஷ்டமா இருக்கு.. வாமிட் வருதா… ரொம்ப கஷ்டமாஇருக்கா…”
“அது கொஞ்சம் இருக்க தான் செய்யுது..”
“நம்ம வீட்டுக்கு வந்து ஒன் வீக் இருக்கறியா… அம்மா ஹெல்தியானபுட் எல்லாம் கொடுக்கறேன்… பார்த்துக்கறேன்..” ஆசையோடு கேட்க..
அப்போது அங்கு வந்த மங்களம் பாட்டியும்..
“ஆமாம் வந்து கொஞ்ச நாள் இரு..மசக்கை எல்லாம் முடிஞ்சு உடம்பு ஓரளவு கெளுத்தி கொடுத்ததும் வரலாம்..”என கேட்க…
“இல்ல வரல.. நான் இங்கயே இருக்கேன்..”
“ஒன்னு போட்டேனு வை..என்ன இங்கயே இருக்க.. ஆள் எப்படி இருக்க பாரு.. இந்த விசாலா என்ன உன்னை கவனிச்சுகிறானு தெரியல…”
ஒன்னும் சொல்லாமல் நிகிதா அமைதியா இருக்க.. நேராக விசாலாவிடம் வந்த பாட்டி
“அவள நீ கவனிக்கறயா இல்லையா.. “என கோபமாக கேட்க..
“நான் என்ன கவனிக்கறது.. எல்லா வேலையும் நான் தான் செய்யறேன். அவ எந்த வேலையும் செய்யறதில்ல.. இவரு தொழில புதுமை பண்றேனு வெளிய போயிடறா.. பத்தாதுக்கு இந்த மனுஷன் புது வண்டி வேற வாங்கி கொடுத்திருக்காரு.. இங்க அவ சொகுசா தான் இருக்கா..”
விசாலாவின் பேச்சு அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்த…
அய்யாவு “விசாலா..” என அதட்ட..
“ச்சே.. ஏன் விசாலா.. ஊரு உலகத்துல கல்யாணம் பண்ணி வச்சு அஞ்சாறு வருசம் ஆகியும் மருமக உண்டாகலைனு வருத்தப்படறவங்க நிறைய பேரு.. உனக்கு சீக்கிரமா பேரன பெத்து கொடுக்க போறா.. அந்த சந்தோஷமே இல்லையா..”என்றார் பாட்டி.
“நீ எப்ப விசாலா இப்படி மாறி போன.. எங்க மக எதார்த்தமானவ… அவளுக்கு அன்பா மட்டுமே இருக்க தெரியும் என நாங்க நினைச்சிட்டு இருக்கோம்.. ஆனா இது உன்கிட்ட எதிர்பார்க்கல..” கவலையாக சொன்னார் சொக்கலிங்கம்.
பெரியவர்கள் இருவரும் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே வெங்கட்டிடம் வீரா பேசியதை சொல்லி பொண்ணு வாழ்க்கை முக்கியம் அத சரிபண்ண தான் பார்கனும். கோப படாம யோசித்து முடிவு செய் என்றிட..
வெங்கட்டும் நிறைய யோசித்தார். மகளுக்கு மருமகன் மீதான பிடித்தம் அவரை யோசிக்க வைத்தது.
அதனால் வெங்கட்டும் அக்காவிடம் தாழ்ந்து போய்.. “க்கா நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு..” கைகளை பிடித்து கொள்ள..
விசாலாவும் தம்பியின் கையை பிடித்து கொண்டு அழுதுவிட்டார்.
எல்லோரும் சந்தோஷமாக இவர்களை பார்த்து கொண்டு இருக்க.. தங்கள் அறையில் இருந்து வெளியே வந்த நிகிதா
எல்லோரையும் பார்த்து..
“சொத்துல என் ஷேர எனக்கு பிரிச்சு கொடுத்திருங்க..” என்று அலுங்காமல் சொல்ல..
இவள் என்ன பேசுகிறாள் என எல்லோரும் அதிரந்து நின்றனர்.
Super 😍😍😍😍😍 waiting for next epi….
Thanks and next ud ithu
👌👌👌👌👌👌👌👌
🥰🥰🥰🥰😍😍😍😍