22- புயலோடு பூவுக்கென்ன மோகம்
நிகிதா பேசியதும் அனைவரும் இது என்ன புதுப் பிரச்சினை என அதிர்ந்து பார்த்தனர்.
அய்யாவு “சொத்து எல்லாம் வேண்டாம். இப்ப எதுக்கு சொத்தை கேட்கற மருமகளே..
நமக்கு இருக்கறதே போதும்..”
“உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்க இருங்க மாமா”
“நிகிதா.. இருக்கற சொத்து எல்லாம் உனக்கும் ஆராவுக்கும் தான..”என்றார் சொக்கலிங்கம்.
“ஆமாம் எனக்கும் ஆராவுக்கும் தான். அதுல எனக்கான ஷேர எனக்கு கொடுங்க..”
மகளின் பேச்சில் வெங்கட்”உம் புருஷன் சொத்தை பிரிச்சு வாங்க சொன்னானா..”
“அவர பத்தி நீங்க பேசாதிங்க.. சொத்து கேட்டது நான்.. அவருக்கும் இதுக்கும் சம்மந்தமில்ல.. இதுவரைக்கும் அவர பேசினது எல்லாம் போதும். இனி யாராவது அவர பேசினிங்க தெரியுமாக்கும்”
வெங்கட்டை பார்த்து “என்ன சும்மா சும்மா விட்டுட்டு ஓடி போயிட்டாருனு பேசறிங்க.. போகாம என்ன செய்வாரு.. உங்கள மாதிரியே எல்லாரும் வீட்டோட மாப்பிள்ளையா இருப்பாங்களா.. அவருக்கு அவரோட சம்பாத்தியத்துல வாழனும்னு நினைச்சாரு அது தப்பா..”
வெங்கட்டும் விடாமல் வாக்குவாதம் செய்ய..”அவன் சம்பாத்தியத்துல வாழனும்னு நினைக்கறவனுக்கு என் சொத்து எதுக்கு..”
“நான் சொத்து கேட்டது எனக்கு.. அவருக்கு இல்ல.. மாமனாருகிட்ட தான வேலை செய்யமாட்டாரு.. பொண்டாட்டிகிட்ட வேலை செய்யலாமுல்ல..” என்றதும்..
நிகிதா என்ன சொல்ல வருகிறாள் என தெரியாமல் பார்த்தனர்.
பாட்டி புத்திசாலி தானே உடனே புரிந்து கொண்டார்.
“நிகிதா என்ன சொல்ல வருகிறாய். சொத்தில் மட்டும் பங்கு கேட்கிறாயா.. இல்லை தொழிலுமா..”
“எனக்கு அந்த பேக்டரி வேணாம் பாட்டி..”
“நீ சொல்வது ஒன்னும் புரியலை.. நீ என்ன சொல்ல வர.. அத தெளிவா சொல்லு..” என்றார் சொக்கலிங்கம்.
“என் வாழ்க்கை சென்னைல இல்ல. இனி இங்க தான்… ஆனா இப்படியே இருந்திட முடியாது இல்லயா.. அதனால எனக்கு உங்க பேக்டரியோட யூனிட் இங்க ஒன்னு ஆரம்பிச்சு கொடுங்க..”
“பேக்டரியா.. உனக்கு என்னமா தெரியும். நீ அத எப்படி ரன் பண்ணுவ..”என்றார் வெங்கட்.
“உங்ககிட்ட தான் எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்க நிறையபேர் இருக்காங்க..நீங்க இருங்கிங்க..சொல்லி கொடுங்க கத்துக்கறேன்.”
“எங்க வீட்டு ராணிடா நீ உன்ன பொத்தி பொத்தி பொக்கிஷமாட்ட வளர்த்தேன். உனக்கு என்ன தலையெழுத்தா.. உனக்கு சம்பாதிக்க நான் இருக்கேன் அதுவும் இந்த மாதிரி சமயத்துல.. வேண்டாம்டா.. இப்படி நீ இருக்கறத பார்க்கறதுக்கே என்னால முடியல.. இதுல பேக்டரினா.. நேரம் காலம் பார்க்காம உழைப்பை போடனும்டா.. இப்ப நீ இருக்கறத பார்க்க முடியாம நானும் மம்மியும் தூக்கத்த தொலைச்சிட்டு நிக்கறோம்.. வேண்டாம் நிக்கி பேபி” என்றார் கெஞ்சலாக கலங்கிய கண்களுடன்..
வெங்கட்டின் பேச்சில் ரோஹிணியும் சத்தமின்றி அழுக.. மற்றவர்கள் சங்கடமான பார்வையோடு மௌனமாக நிற்க..
தாயின் அழுகையும் தந்தையின் கலக்கமும் நிகிதாவின் மனதையும் நோகடிக்க.. தந்தை அருகே சென்றவள் சட்டென அவர் முன் மண்டியிட்டு தரையில் அமர.. எல்லோரும் அவளின் வேகம் கண்டு பதறி போனர்.
வெங்கட் நிகிதாவின் கைகளை பிடித்து”என்ன பேபி.. எழுந்திருடா..”
“இல்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமால்ல.. நான் சொல்லறது கொஞ்சம் கேளுங்கப்பா..”
“சொல்லுடா..” என்றார் தலையை வாஞ்சையோடு தடவி..
“அவருக்கு வீட்டோடு மாப்பிள்ளையா இருக்க.. ஒரு மாதிரி பீல் பண்றாரு போல… அதனால தான் நம்மகிட்ட சொல்ல சங்கடப்பட்டு வேற வேலை தேடிக்கிட்டாரு.. அதுமட்டுமல்ல என்னை உங்க அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு நல்லா வச்சுக்கனும் நினைக்கிறாரு…அவர் கனடா போக இதுவும் ஒரு காரணம் ப்பா..”
நிகிதா பேச பேச.. மற்றவர்கள் அமைதியாக அவளையே பார்த்து கொண்டு இருந்தனர். கணவனை பற்றி சொல்லும் போது அவள் பேச்சில் அவ்வளவு நெகிழ்ச்சி .
“வந்தும் சும்மா இருக்கமாட்டாரு.. மாமா தொழில டெவலப் பண்ணுவாரு.. இல்ல வேற எதாவது செய்வாரு..அவரு ஹார்ட் ஒர்க் ப்பா.. அவர் வருவதற்குள் அவருக்கு ஒரு தொழில் ரெடியா இருக்கனும்னு நான் ஆசப்படறேன். அதுக்காக அவரு பேருல எதுவும் இருக்க வேண்டாம். அது அவருக்கு பிடிக்காது. எல்லாம் என் பேருலயே இருக்கட்டும். ஒர்க்கிங் பார்ட்னரா வச்சுக்கலாம். இதுக்கே ஒத்துக்க மாட்டாருப்பா.. பேசி தான் சரி கட்டனும்”
கணவனை சரியாக புரிந்து வைத்திருக்கிறாள் என பெருமிதமாக நினைத்தனர்.
“இன்னைக்கு பொண்ணுங்க என்னன்னவோ செய்றாங்க.. எவ்வளவோ சாதிக்கறாங்க.. பாச சங்கிலி கொண்டு கூட எங்கள பூட்டி வைக்க வேணாம்பா. எனக்கு ஒன்னும் தெரியாதுனு நினைச்சிகிட்டு தானே என்கிட்ட சொல்லாம விட்டுட்டு போயிட்டாரு.. அதுல எனக்கு ஒரு வைராக்கியம் ப்பா.. நான் எதாவது செய்யனும் ப்பா.. நீங்க என்னை நம்புங்கப்பா.. நான் நல்லா செய்வேன்..” என்றாள் அவர் கைகளை பிடித்து கொண்டு நிமிர்ந்து எதிர்பார்ப்போடு பார்த்தாள்.
மகளை பேச்சில் வாயடைத்து போனார் வெங்கட் . தன் மகளை பொறுப்பு இல்லாத பெண் என நினைத்து கொண்டு இருக்க.. இன்று அவளின் பேச்சின் சாதுர்யம் கண்டு பிரமித்து தன்னை மறந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தார்.
“ப்பா..”என்றாள் அவர் கையை அழுத்தி..
கண்ணை சிமிட்டி தொண்டையை செருமி கொண்டு “உன்னால முடியுமாடா..”என்றார்.
“ட்ரஸ்ட் மீ.. என்னால முடியும்ப்பா.. எனக்கு தான் நீங்க எல்லோரும் இருக்கிங்களே.. நீங்க எல்லோரும் என் கூடவே இருந்து எனக்கு செய்ய மாட்டிங்களா..”என எல்லோரையும் பார்த்து கேட்க..
அவள் கேட்ட விதத்தில் செய்ய மாட்டோம் என சொல்ல தான் மனசு வருமா..
“என்ன செய்யனும் நினைக்கறியோ செய்.. அதுக்கு நாங்க சப்போர்டட்டா இருப்போம். இப்ப முதல்ல எழுந்திரு..” என பாட்டி சொல்ல..
மெல்ல கையை ஊன்றி எழுந்திருக்க.. விசாலா ஓடி வந்து மருமகளின் கை பிடித்து தூக்கி விட்டார். மருமகள் மகனுக்காக யோசித்து.. மகனை தாங்கி பேசவும் மனம் குளிர்ந்து போனார். விசாலாவின் செயலே அவரின் மனமாற்றத்தை சொல்ல.. அனைவருக்கும் சந்தோஷமே..
இவர்கள் வரும்போது பொன்னியும் அங்கிருக்க… அவள் எல்லோருக்கும் டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க..
விசாலா நிகிதாவிடம் “நிகிதா கண்ணு உனக்கு டீ வேணாம் நான் ஹார்லிக்ஸ் எடுத்துட்டு வரேன் ” குடு குடுவென சின்ன பிள்ளையாக ஓடினார். எல்லோரும் சிரிக்க.. அய்யாவு மனைவியை பெருமையாக பார்த்தார்.
கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு நிகிதா வீட்டினர் கிளம்ப.. கிளம்பும் போது மகளிடம் வெங்கட்..
“நான் இங்க எல்லாம் விசாரிச்சிட்டு சொல்றேன். புதுசா இடம் பார்த்து கன்ஸ்டரக்ஷன் பண்ணி ஆரம்பிக்க.. எவ்வளவு வேகமாக செய்தாலும் ஆறு மாதத்திற்கு மேல ஆகும் டா.. வீரா வருவதற்குள் முடியுமாதுடா”என்றார்.
“இல்லப்பா.. வேற ப்ளான் இருக்கு.. ஏற்கனவே இருக்கற.. ரன் பண்ண முடியாமல் இருக்கற மாதிரியான பேக்டரிய டேக் ஓவர் பண்ணிக்கலாம்ப்பா..”
“அது எவ்வளவு தூரம் சரி வரும் என தெரியல.. பார்க்கலாம் டா..” என சொல்லி விட்டு கிளம்பினார்.
எல்லோரும் சென்றதும் பொன்னி நிகிதாவிடம் வந்து ” நான் வெறும் ப்ளஸ் டூ தான். என்னால ஏதாவது செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்வேன் நிகிதா ” என சொல்ல..
“அண்ணி.. உங்களால எனக்கு நிறைய ஆக வேண்டியது இருக்கு.. சமயம் வரும் போது சொல்றேன்”
“சரி நிகிதா.. நீ போய் ரெஸ்ட் எடு நான் கிளம்பறேன்” என்க… நிகிதா தங்கள் அறைக்கு சென்றிட.. பொன்னியும் கிளம்பிவிட..
விசாலா மகனுக்கு வாட்சப் கால் பண்ணி வீராவிடம் நடந்தவற்றை கூறி நிகிதாவை பெருமையாக பேச.. கேட்டது எதுவும் வீராவுக்கு பிடிக்கவில்லை. தாயிடம் காட்டி கொள்ளாமல் பேசி வைத்தவன் அடுத்த நொடி நிகிதாவை அழைத்தான்.
மிகவும் களைத்து போயிருந்தவள் சோர்வாக படுத்து கண் அயர.. அலைபேசியின் சிணுங்கலில் மெல்ல எழுந்து அமர்ந்து போனை எடுத்து சோர்வாக..”ஹலோ..சொல்லுங்க..” என்றாள்.அவள் குரல் அவ்வளவு சோர்வாக இருக்க.. அவன் எங்கு அதை எல்லாம் கவனித்தான்.
“என்னத்தடி சொல்றது.. நீ தான் சொல்லனும்.. என்ன பணண்ணிட்டு இருக்க.. தேவை இல்லாத வேலை எல்லாம் பண்ணிகிட்டு இருக்க..”
கல்யாணியாக பேசியதை கண்டுபிடித்து விட்டானா.. கண்டு பிடித்தாலும் பயமில்லை பார்த்து கொள்ளலாம் என நினைத்தவள்…
“என்ன சொல்லறிங்க.. புரியற மாதிரி சொல்லுங்க..”
“ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காதடி..”
கல்யாணியை தான் கண்டுபிடித்துவிட்டாரு போல.. மெல்ல “எதா இருந்தாலும் நேரடியா பேசுங்க..”
“எதுக்குடி சொத்து பேக்டரி எல்லாம் கேட்டு இருக்க.. நான் எதை வேணாம்னு விட்டுட்டு வந்தேனோ.. அதையே கேட்டு வச்சிருக்க.. உன்னை வச்சு காப்பாத்த வக்கில்லாதவன்னு நினைச்சியா.. ஒழுங்கா மரியாதையா.. அது எல்லாம் வேண்டாம் என சொல்லிடு.. “
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு வேணாம்னா விடுங்க.. எனக்கு வேணும். எப்ப இருந்தாலும் எனக்கு வரப் போறது தான..”
“நான் சொல்றத கேட்க மாட்டியா..”
“கேட்க முடியாது..”என வைத்துவிட்டாள்.
இவளை என பல்லை கடித்தவன் மறுபடியும் கூப்பிட.. எடுத்தவள் “எனக்கு டயர்டா இருக்கு.. ஏன் இப்படி பண்ணறிங்க..”
உடனே கட் பண்ணி வீடியோ கால் செய்தான். அவளை பார்த்தவுடன் தெரிந்தது அவளின் சோர்வு..
“ஏன்டி இப்படி உடம்பு போட்டு அலட்டிக்கற.. நான் வரவரைக்கும் அமைதியா ரெஸ்ட் எடு நான் வந்து எல்லாம் பார்த்துக்கலாம் பேக்டரி எல்லாம் வேண்டாம்”என்றான் பொறுமையாக..
“மாமா.. என்னால இப்ப பேச முடியல.. எனக்கு கொஞ்சம் தூங்கனும்.. நைட் பண்ணறிங்களா.. பேசலாம்”என்க..
“சரி தூங்குடி.. அமுல் பேபி..” என வைத்துவிட்டான்.நன்றாக தூங்கி எழுந்தவளுக்கு இரவு உணவை எடுத்து கொண்டு அறைக்கே வந்தார் விசாலா.
“நிகிதா கண்ணு.. நீ என்னவோ சொல்ற.. எனக்கு புரியல.. ஆனா சொத்துக்காக தான் கல்யாணம் பண்ணினோம ஊர் பேசாதாடா..”
“அத்தை சொத்துகளுக்கு வாரிசு நானும் ஆராவும் தான். என்னைக்கா இருந்தாலும் எனக்கு வரவேண்டிய சொத்து தான.. ஊர் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்.. அத விடுங்க..”
இவளின் பேச்சை கேட்டு கொண்டு வந்த அய்யாவு “உங்க அத்தையை கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட எதுவும் வேணும்னு நானோ உங்க அத்தையோ போய் நின்னதுல்ல.. அப்படி தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கோம். வீராவ வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப எனக்கு இஷ்டமில்ல.. என் மாமனார் வெங்கட்டுக்கும் வயசாகுது அவனுக்கு ஒரு துணை வேணும்னு சொன்னதால தான் சரினு சொன்னேன். அதுவே உம் புருஷனுக்கு பிடிக்கல.. இது மட்டும் பிடிக்குமா.. உனக்கு ஏதாவது செய்யனும்னா என் பட்டறையை தான் டெவலப் பண்றயே.. இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். எதுனாலும் யோசிச்சு செய்” என்றார்.
சிறிது நேரத்தில் வீரா அழைத்தவன் அதையே பேச…
“இங்க வந்ததுக்கு பிறகு என்ன செய்யறதா இருக்கறிங்க.. “என்று கேட்டாள்.
“அப்பா பட்டறையை டெவலப் பண்ணலாம்”
” அத நீங்க என்ன பண்றது.. நீங்க வரங்காட்டி நானே பண்ணிடுவேன். பண்ணிட்டு இப்படி தான்னு சொல்லி கொடுத்தா மாமவே செஞ்சுக்குவாரு..”
“மறுபடியும் வேலைக்கு போறேன்”
“எங்க சென்னைக்கா.. மாமா அத்தையை இனி தனியா எல்லாம் விட முடியாது. இனிமேல் நாம இங்க காஞ்சிபுரத்துல தான்”
எப்படி பேசினாலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்பவளிடம் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
“அது வந்த பிறகு யோசிக்கலாம்”
“நீங்க ஒன்னும் சொல்லாதிங்க.. இந்த ஊருல உங்கள மாதிரி நிறைய பேரு படிச்சிட்டு வெளிய தான் வேலை தேடி போயிறாங்க.. இல்லையா பெத்தவங்க தறிபட்டறையை பார்க்கறாங்க.. விவசாயம் போல தான் நெசவு தொழிலும் நலிஞ்சுகிட்டே போகுது.. நம்ம ஊரு பக்கமா பேக்டரி ஆரம்பிச்சா.. சுத்தி இருக்கற கிராம மக்களுக்கும் வேலை கொடுக்கலாம். நாமும் நல்லா இருக்கலாம் ஊர் மக்களின் வாழ்வாதரமும் நல்லா இருக்கும்.உங்க பேரண்ட்ஸ் மாதிரி பிள்ளைகள அனுப்பிட்டு வயசானவங்க இங்க தனியா கஷ்டபடமாட்டாங்க ..இது எல்லாம் யோசித்து தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்.”
அவள் பேசியதை கேட்டவன் எதுவும் பேசாமல் அமைதியாகிட..
“மாமனார் வீட்டு சொத்துனு எதுக்கு நினைக்கறிங்க.. அது என் சொத்து. என்னைக்கா இருந்தாலும் அது நமக்கு தான் வரும் வேணாம்னு சொல்லமுடியாது. என்னோடது எல்லாம் உங்களது இல்லையா.. நீங்க சம்பாதிக்கறதுல எனக்கு உரிமை இல்லையா… அது மாதிரி இதுவும்..என் பேருல தான் எல்லாம் இருக்கும். நீங்க ஒர்க்கிங் பார்ட்னர் தான்..” என பேசி பேசியே யோசிக்க வைத்தாள்.
“நீங்க யோசித்து பாருங்க மாமா.. நமக்காக வேண்டாம். நம்ம பிள்ளைகளுக்காகா.. இந்த ஊருக்காக யோசிங்க.. நான் நாளைக்கு பேசறேன். குட் நைட்மாமா.. இச்.. இச்.. இச்.. என சில பல முத்தங்கள் போனில் சிதற விட்டாள்.
நீண்ட நாட்கள் கழித்து தன் கோபம் மறந்து தானாகவே கொடுக்கும் முத்தங்கள்.. போன் வழியாக என்றாலும் அவனுக்கு என்னவோ கூடல் பொழுதுகளில் அவன் காதை தீண்டி தீண்டி முத்தம் இட்டு அவனை கிளர்ந்தெழ செய்வாளா.. அந்த உணர்வை இந்த நொடி அனுபவித்தான்.
“ஏய்.. அமுல் பேபி..” என்றான் சிங்காரமாக..
மறுமுனையில் சத்தம் எதுவும் இல்லை. பரிதாபமாக போனை பார்த்தான். ஏக்க பெருமூச்சு ஒன்று அவனை அறியாமல் வெளிபட்டது.
தூங்காமல் அவள் சொன்னதை யோசித்து கொண்டே இருந்தான். நிகிதா சொல்வதும் சரி என அவனுக்கு பட்டாலும்.. மனதில் ஒரு நெருடல் இருக்க தான் செய்தது.
👌👌👌👌👌👌👌👌👌👌
❤️❤️❤️🙏🙏🙏🙏
Recent evidence has shown that AZT may also help in the treatment of toxoplasmosis.
The sites offer information about the drug and price of revive rx pharmacy concerning ED management kit. Free shipping now!
It regarded the possible beneficial effects of licorice in pets that suffer from Addison’s disease.
It is often given through a special long-lasting intravenous IV catheter called a central line, and may require frequent hospital stays.
Wise people will purchase a pharmacies online at budget prices keep your medical costs affordable. Buy here
Cell Phone Sign – indicates the patient is not really that sick Cell-ulitis – getting sick right before getting arrested.
super sis
Thanks sis
Cut long grass and cover your water drums securely.
Five interesting facts about ivermectin generic name and save more money
Avoid bananas, melons and tomatoes.
Cochrane Database Syst Rev.
Excellent health benefits are attainable when you ivermectin 6mg dosage generic or brand prices and discounts?
Never missed a period.