ATM Tamil Romantic Novels

26 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

26 – புயலோடு பூவுக்கென்ன மோகம்



        பன்னிரண்டு மணியளவில் தான் வீராவும் நிகிதாவும் தூங்கி எழுந்து வந்தனர். வீரா வந்திருப்பதால் எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.ஆரா கூட பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டாள்.

 

வீரா நிகிதாவை மாடிபடியில் இருந்து கைபிடித்து கூட்டி வர.. பாட்டி தாத்தா இருவருக்கும் பார்த்தவுடன் சந்தோஷம். வெங்கட்டிற்கு சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் கெத்தாக உட்கார்ந்து இருந்தார்.

 

இருவரும் சாப்பிட ரோஹிணி பரிமாறினார். சாப்பிடும் போது வீரா நிகிதாவுக்கு நடு நடுவே தன் தட்டில் இருந்து சில கவளங்களை ஊட்ட.. நிகிதா தான்…

 

“மாமா எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க.. “என வெட்கப்பட…

 

“நீ எதுக்கு அவங்கள பார்க்கிற.. நீ சாப்பிடு.. எப்படி மெலிஞ்சு போயிருக்க பாரு.. ஒழுங்கா சாப்பிட மாட்டயா.. என் புள்ளையையும் சேர்த்து பட்டினி போட்டயா..”

 

“தோடா.. புள்ள இருக்கறதே தெரியாமா நாட்டை விட்டு ஓடி போனாரு.. இவரு பேசறாரு புள்ளயப் பத்தி..”

 

“ஏன்டி ஒரு சின்ன கேப் கிடைச்சிற கூடாதே.. நல்லா வச்சு செய்றடி..”

 

“நிகிதானா சும்மாவா.. விட்டுட்டு போனதுக்கு  காலத்துக்கும் பேசுவேன்ல.. வசமா சிக்கினா கைமா பண்ணிட வேண்டியது தானே..”

 

“சரி.. சரி..தொண தொணனு பேசாம சாப்பிடு..” அவளை பேச விட்டால் தனக்கு தான் பாதகம் என.. அவளை அதட்டினான்.

 

“ம்க்கூம்” என நொடித்து கொண்டு சாப்பிட்ட..   எங்கே நிகிதா கோபத்தில் சண்டை போடுவாள் என நினைக்க..  என்ன பேசுகிறார்கள் என தெரியாத போதும் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள்.  வெங்கட்டை தவிர மற்றவர்கள் சந்தோஷப்பட.. வெங்கட்டோ என் பொண்ண ஏதோ செஞ்சு மயக்கி வச்சிருக்கான் என மனதோடு திட்டி கொண்டு இருந்தார்.

 

சாப்பிட்டு விட்டு வந்து ஹாலில் உட்கார்ந்தனர். வீரா மங்களம் பாட்டியின் அருகில் அமர்ந்து “அம்மாச்சி எப்படி இருக்கறிங்க..” என கேட்க…  பாட்டி முகத்தை திருப்பி கொள்ள..

 

“அச்சோ என் பியூட்டிக்கு என் மேல கோபம் போல..”என பாட்டியின் தாடையை பிடித்து கொஞ்சினான்.

 

“போடா படவா..”கையை தட்டி விட.. கண்களில் லேசான கண்ணீர்.

 

 பாட்டியை லேசாக அணைத்து..

 

“சாரி அம்மாச்சி..”

 

“ஏதோ போறாத காலம்.. விடு இனியாவது நல்லா இருங்க..”என்றார் கண்களை புடவை தலைப்பில் தொடைத்தவாறு..

 

வெங்கட்டோ நல்லா டிராமா பண்ணி எல்லாரையும் கவர் பண்ணிடறான் என எரிச்சல் பட்டார்.

 

சொக்கலிங்கம் “அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க வீரா..”என கேட்க..

 

“பார்க்கலாம் தாத்தா இப்ப தானே வந்திருக்கேன்..”

 

வெங்கட்டோ அலட்சியமாக… “அப்பா.. வேல தேடி இனி அங்கயும் இங்கயும் அலைய வேணாம் சொல்லுங்க… என் பொண்ணை வேணா வேல போட்டு கொடுக்க சொல்றேன்.. அவ சொல்றத கேட்டு ஒழுங்கா இருக்க சொல்லுங்க..”

 

வீராவை சொல்லவும் நிகிதாவிற்கு கோபம் சுருசுருவென வந்தது.

 

“ப்பா.. நீங்க அவர எப்படி அப்படி சொல்லலாம்.. என்னோடது எல்லாமே அவரோடது தான். அவருக்கு பிறகு தான் எனக்கு..இனி அவர மட்டமா பேசாதிங்க..”

 

மகளின் பேச்சில் வெங்கட் வாயடைத்து போய் பார்க்க.. தாத்தாவும் பாட்டியும் இவன் இப்படி பேசினா தான் அடங்குவான் என நினைத்தனர்.

 

அப்போது வீராவின் போன் அடிக்க… அழைத்தது விசாலா தான்.

 

“சொல்லுங்க ம்மா..”

 

“நீ தான் சொல்லனும்..ஊர் வந்து சேர்ந்தமே.. பெத்தவளுக்கு ஒரு தகவல் சொல்லுவோம்.. அது எல்லாம் இல்ல.. நானா போன் பண்ணி விசாரிக்க வேண்டியதா இருக்கு”

 

“ம்மா… லேட் நைட் தான் வந்தேன். வந்ததும் நிகிதாவ பார்க்க வந்துட்டேன்.. வரேன் மா..”

 

“அதானே புருஷன் பொண்டாட்டி சுமூகமா இருக்கறிங்கல்ல.. அப்புறம் எப்படி பெத்தவ  நினைப்பிருக்கும்..பொண்டாட்டி பேசலைனா தான் அம்மா ஞாபகம் வரும்..” என நீட்டி முழக்க..

 

என்னடா இது என மண்டை காய்ந்தான் வீரா..எல்லோரும் அவனையே பார்த்து இருக்க.. அது வேற சங்கடமாக இருந்தது.வெங்கட்டோ முறைத்து கொண்டு இருந்தார்.

 

“யாரு உங்கம்மாவா… கொடு நான் பேசறேன்..” என பாட்டி வாங்கி..

 

“என்ன விசாலா..”

 

“ம்ம்ம்.. என்ன சொல்ல.. உங்க பேத்திக்கு எம்மவன கட்டி கொடுத்தா.. எம்மவன நான் மொத்தமா மறந்திருனுமா..”

 

“என்ன விசாலா பேசற.. புரிஞ்சு தான் பேசறியா..”

 

“என்னமா புரியாம பேசறேன்.. கடல் கடந்து வர மகன் வந்தானா இல்லையானு விடிய விடிய தூங்கமா பரிதவிச்சுட்டு இருக்கேன். வந்தேனு ஒரு சேதி சொல்லல.. அத கேட்டா குத்தமா..”

 

“சரி.. புரியுது.. இராத்திரில தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சிருப்பான். வெகு நேரம் பயணமில்லயா.. இப்ப தான தூங்கியே எழுந்தான்..சும்மா தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லாத.. வீராகிட்ட கொடுக்கறேன் பேசு..”

 

வீரா வாங்கி..”வரேன்மா.. கொஞ்ச நேரத்தில் வரேன்” என பேசி சமாதானம் செய்தான்.

 

பின்பு எல்லோரையும் பார்த்தவன்.. “நிகிதாவ  நான் என் கூடவே ஊருக்கு கூட்டிட்டு போறேன்” என்க..

 

வெங்கட் உடனே..”பிரசவம் முடிச்சு தான் அனுப்ப முடியும்..”

 

“இல்ல…  இனி நிகிதாவ விட்டு என்னால இருக்க முடியாது” என்றான் தைரியமாக..

 

ஐய்யோ இப்படி எல்லார் முன்னாடியும் வெட்கமே இல்லாமல் சொல்றாங்களே.. என நிகிதாவிற்கு தான் வெட்கமாகி போனது.

 

“அப்படி எல்லாம் அனுப்ப முடியாது. என் பொண்ணுக்கு அந்த வீட்ல  வசதி பத்தாது. அட்டாச்டூ பாத்ரூம் இல்ல.. ஏசி இல்ல.. நான் என் பொண்ண எப்படி வச்சிருந்தேன்.. இப்ப எப்படி இருக்கா.. என் பொண்ணு நல்லா இருக்கனும்னு தான்..  வீட்டோட மாப்புளயா இருக்கனும்னு  சொல்லி தான கல்யாணம் பண்ணி வச்சேன். அவ இங்க தான் இருப்பா.. அவ வேணும்னா.. நீயும்  இங்க தான் இருக்கனும். நிகிதாவ அனுப்ப முடியாது”என்றார் அதிகாரமாக..

 

“என்னால இங்க இருக்க முடியாது. அதுக்காக எல்லாம் நிகிதாவ விட முடியாது. இனி நான் எங்க இருக்கேனோ அங்க தான் நிகிதாவும் இருப்பா..” என்றான் வீரா கோபமாக..

 

மறுபடியும் முதல்ல இருந்தா.. என வீட்டினர் நொந்து போய் பார்க்க..

 

நிகிதா தான் “ப்பா பேக்டரிய பார்க்க வேண்டாமா.. அதுவும் இல்லாம இவ்வளவு நாள் தான் நான் ஒரு பக்கம் அவரு ஒரு பக்கம் இருந்தோம்.. இனி அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லப்பா.. நான் அவர் கூடவே போறேன். வேணும்னா உங்களுக்காக இரண்டு நாள் இருந்துட்டு போறோம் ப்ளீஸ்பா..”என்றாள் கெஞ்சுதலாக..

 

இப்ப எதுக்கு இவர்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கா.. என அவளை முறைத்தான்.

 

அவனை அமைதியா இருக்க சொல்லி இறைஞ்சுதலாக  கண்ணாலயே சொல்ல.. அவன் முகத்தை திருப்பி கொண்டான்.

 

எப்பவும் மகள் இப்படி எல்லாம் கெஞ்சியதில்லை. அவள் கெஞ்சுவது பார்க்க முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது வெங்கட்கு.. 

 

“சரி பேபி.. நீ சொல்றதுனால அனுப்பறேன் ஆனா டெலிவரிக்கு அப்புறம் அஞ்சு மாசம்  இங்க தான் இருக்கனும் .. அதுக்கு ஓகேனா.. இப்ப அனுப்பறேன்..”

 

இப்போ மாமனாரை முறைத்தான் வீரா..

 

“சரிங்கப்பா..  டெலிவரிக்கு இங்க வந்துடறேன்..” என்கவும்..



“ஓகே பேபி.. டூ டேஸ் இருந்துட்டு போ.. ஆனா உனக்கு அங்க ஏதாவது அன்ஈஸியா இருந்தா இங்க வந்துடனும்.. ஏதாவது வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு.. நான் வாங்கி தரேன்”

 

வீரா ஏதோ கோபமாக பேச போக.. நிகிதா கண்களால் வேண்டாம் என தடுக்க… வீரா எழுந்து மேலே தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

 

சொக்கலிங்கம் “உன் பொண்ணு வாழ்க்கை நாங்க பேசகூடாதுனு தான் நாங்க பேசல.. இருந்தாலும் வீரா எங்க பேரனா இருந்தாலும் இந்த வீட்டு மாபப்பிள்ள.. நீ அவனுக்கு அந்த மரியாதையை கொடுக்கனும் வெங்கட்..”

 

“ஆமாம் இது போல இன்னொரு தடவ பேசினா நல்லா இருக்காது பார்த்துக்கோ.. இந்த வீட்டுக்கும் அவன் தான் ஆண் வாரிசு. நாளபின்ன ஏதாவது நல்லது கெட்டதுனா.. அவன் தான் முன்ன நின்னு செய்யனும் அத முதல்ல தெரிஞ்சுக்கோ..” பாட்டியும் திட்ட..

 

வெங்கட் எதுவும் பேசவில்லை. முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தார்.

 

நிகிதா வீராவுக்கு  ஜுஸ் எடுத்து கொண்டு மேலே செல்ல… அங்கே வீராவோ சோபாவில் அமர்ந்து வெங்கட்டை திட்டி கொண்டு இருந்தான்.

 

” நான் இவரு அக்கா மகன் தான.. நாங்க எப்படி.. எங்க வீடு எப்படி எல்லாம் தெரிஞ்சு தானே பொண்ண கொடுத்தாரு..என்னவோ நான் ஏமாத்தி கட்டிகிட்ட மாதிரி முறைச்சிகிட்டு இருக்காரு..”

 

“ஏன் என் பொண்டாட்டிய எனக்கு நல்லா வச்சுக்க தெரியாதா.. இவரு பெரிய மிட்டா மிராசா… இவரே வீட்டோட மாப்புள்ளயா வந்ததுனால தான் இந்த சொத்து இவருக்கு வந்துச்சு.. என்னவோ எல்லாம் இவரோட சுயசம்பாத்தியம் மாதிரி பேசறாரு..” என சரவெடியாக  வெடித்து கொண்டு இருந்தான்.

 

நிகிதாவை பார்த்தவன் அவளை முறைக்க.. 

 

அவளோ அவனருகே வந்து ஜீஸை நீட்ட.. 

 

“இது பாரு.. அந்தாளு வீட்ல நான் எதுவும் சாப்பிட மாட்டேன். எடுத்துட்டு போ..” என்றான்.

 

“மாமா.. இது யாரு வீடு உங்க அம்மாச்சி வீடு..  யாரு பேசினது  உங்க தாய்மாமா தான.. அவருக்கு ஏதோ கோபம்.. நீங்க கனடா போனது புடிக்கல அதான் விடுங்க..”

 

“அதுக்குனு.. எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா பேசுவாரா..”

 

ம்கூம் இது சரிபடாது என நினைத்து நிகிதா பேச்சை மாற்றினாள். 

 

“மாமா எனக்கு கனடாவுல இருந்து எதுவும் வாங்கிட்டு வரலயா..”

 

“ம்ப்ச் வாங்கினேன் தான் ஆனா உனக்கு நிறைய வாங்க ஆசைப்பட்டேன். ஆனா டைம் இல்ல.. இரு வரேன்” என தன் லார்ஜ் சைஸ் டிராலியை தள்ளி கொண்டு வந்தான்.

 

அவள் முன் அதை திறந்து தன் பொருட்களை ஒதுக்கி விட்டு அவளுக்கு தான் வாங்கி வந்ததை எடுத்து கடை பரப்பினான். 

 

அவள் பயன்படுத்தும் இம்போர்ட் மேக்கப் பொருட்கள் அத்தனையும் அடங்கிய ஒரு கிட்  இருந்தது. கூடவே ஒரு லேப்டாப் இருந்தது.

 

“இது தான் என்னால உனக்கு வாங்க முடிஞ்சுது.. இன்னும் நிறைய வாங்க நினைச்சு இருந்தேன். டைம் இல்ல..”

 

“நான் யூஸ் பண்ணும் ப்ராண்ட் உங்களுக்கு எப்படி தெரியும்”

 

“ஆராகிட்ட கேட்டேன் அவ தான் சொன்னா..”

 

“இந்த லேப்டாப் உங்களுக்கா.. “

 

“இல்ல இது ஆராவுக்கு..” என்றான்.

 

“நான் இப்ப எல்லாம் இந்த மாதிரி மேக்கப் பண்றதில்ல மாமா..” என்றாள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு..

 

“நீ மேக்கப் போடுடி..அப்ப தான் கிக்கா இருக்கும். எனக்கும் எக்கச்சக்க மூடு  வரும்..”

 

“ச்சீ பேச்ச பாரு. நான் என்ன அந்த மாதிரி பொம்பளயா…” என அவனின் முதுகில் அடிக்க..

 

அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு அணைத்து கொண்டு “ச்சே.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி.. மேக்கப் போட்டு நல்லா ப்ரஸ்ஸாவே உன்ன பார்த்துட்டு.. இப்படி அழுது வடிஞ்ச மாதிரி இருக்கறது எனக்கே புடிக்கல.. எப்பவும் போல நீ இருக்கற மாதிரியே இரு எனக்கு அதான் பிடிச்சிருக்கு..”

 

சரி என தலையாட்டிவளிடம்.. “ரெடியாகு நாம வெளிய போகலாம். நாம இரண்டு பேரும் சேர்ந்து எங்கயும்  வெளிய போனதில்லைல.. போலாம் சீக்கிரம் வா..”



நிகிதா கிளம்பி வந்ததும் அவளை கூட்டி கொண்டு முதலில் கோயிலுக்கு தான் சென்றான். கோயிலில் தரிசனம் முடித்து விட்டு ஷாப்பிங் மாலுக்கு கூட்டிகிட்டு போனான். 

 

துணிக்கடைக்கு சென்றவன் புடவை சுடிதார்  சில மெட்ர்னிட்டி கவுன்.. எல்லாம் வாங்கி விட்டு..அவள் இரவில் போடும் டாப்ஸ் மினி ஷார்ட்ஸ்  பார்க்க..

 

நிகிதாவோ “மாமா.. நான் இப்ப எல்லாம் இது போடறதில்ல..”

 

“ஏன் பேபி டைட்டா இருக்கா.. வேணும்னா ப்ரீ சைஸ் வாங்கிக்கலாம்”

 

“அச்சோ மாமா.. நான் அங்க நம்ம வீட்ல இது எல்லாம் போடமாட்டேன்”

 

“நம்ம ரூம்ல மட்டும் போடு..” என்றவன் அவளை கேட்காமல் அவன் என்ன எல்லாம் வாங்க ஆசைப்பட்டானோ.. அது எல்லாம் வாங்கினான்.

 

புட் கோர்ட்கு கூட்டி போய் அவளுக்கு பிடித்த உணவு வாங்கி கொடுத்து சாப்பிட்டு வீடு வரும் போது இரவாகிவிட்டது.

 

விசாலா இரவாகியும் மகன் வராததால் அவனுக்கு அழைத்து விட்டார். 

 

“என்னடா.. எங்க வந்திட்டு இருக்க..”

 

“ம்மா.. நான் இன்னும் கிளம்பலை.. இரண்டு நாள் இருந்துட்டு வரேன்”

 

“ஏன்டா பொண்டாட்டிய பார்தத்தும் அம்மா மறந்திடுமா.. நான் தான் மகன கண்ணுல காணாம கிடந்து தவிக்கறேன்” என அழுக..

 

“ம்மா…  மனஷன சாவடிக்காத.. உன் தம்பி ஒரு பக்கம்.. நீ ஒரு பக்கம் இம்சை பண்றிங்க.. வா வானு சொன்னிங்க.. வந்தா ஆளாளுக்கு பந்தாடறிங்க..  இரண்டு நாள்ல வந்துருவேன் வை..” என கோபத்தில் போனை தூக்கி படுக்கையில் விசிறினான்.

 

“மாமா.. என்னாச்சு.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்..”

 

அவன் சொல்லவும்.. நிகிதா “மாமா அவங்களுக்கு குடும்பம் தான் உலகம். அதுலயும் உங்க மேல பாசம் ஜாஸ்தி..  அவங்க  அப்படி தான் மாமா.. கொஞ்சம் பாசமா நடந்துகிட்டா போதும்.. அவங்க ப்ளாட்டாயிடுவாங்க.. ப்ராப்ளம் சால்வ்டு தட்ஸ் ஆல்..”என்று இரு கைகளையும் தட்டி உதறி அவனை பார்த்து சிரித்தாள்.

 

“அடியேய்…. மாமியார்ங்கற பயமில்ல..”

 

“இப்ப பாருங்க..”என அவள் போனை எடுத்து விசாலாவிற்கு கூப்பிட…



மகன் வரவில்லை என்ற கடுப்பில….

 

“ஹலோ..” என்றார் வெறுப்பாக..



“அத்தை நான் நிகிதா பேசறேன்..”

 

“தெரியுது சொல்லு..”

 

“உங்க மகன பாருங்க அத்தை.. அத்தைய முதல்ல போய் பார்த்துட்டு வாங்கனு சொன்னா.. உன்னையும் கூட்டிகிட்டு தான் போவேன். எங்க அம்மாவ உங்கப்பா சண்டை போட்டாராம்ல.. அதனால இந்த வீட்ல நீயும் இருக்ககூடாது வா போலாம்னு சொல்றாரு..இரண்டு நாள் டைம் அதுக்குள்ள பொட்டி படுக்கை எல்லாம் கட்டற.. அப்படினு சொல்லிட்டாரு அத்தை..”என்றாள் சோக பாவனையில்

 

“அப்படியா.. சொன்னான்..”என்று விசாலா ஆர்வமாக கேட்க…

 

“ஆமாம் அத்தை எங்கப்பாகிட்டயே சொல்லிட்டாரு.. பிரசவம் முடிச்சு தான் அனுப்புவேன்னு அப்பா சொல்ல… எல்லாம் உங்கள விட எங்கம்மா அருமையா பிரசவம் பார்ப்பாங்க.. அப்படினுட்டாரு அத்தை..”

 

“ஆமாம் கண்ணு.. நீ வா நான் பார்த்துகிறேன்.. என் தம்பி என்னமோ ரொம்ப தான் துள்ளிகிட்டு திரியறான்..”

 

“சரிங்கத்தை இரண்டு நாள்ல வந்திடறோம் எங்கம்மாவுக்கு மதிப்பில்லாத  இடத்துல நான் சோறு தண்ணி சாப்பிடமாட்டேன்னு சொல்லி இன்னைக்கு வெளில தான் சாப்பிட்டாரு அத்தை..”

 

“அவன்கிட்ட கொடு கண்ணு.. நான் பேசறேன்..”

 

அதுவரை அவள் நடிப்பை பார்த்து ஆவென வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தான் வீரா.

 

“அத்தை உங்ககிட்ட பேசனுமாம்..” என போனை நீட்ட..

 

வாங்கியவன் “சொல்லுங்கம்மா.. “

 

“ஏசாமி அப்படியா சொன்ன…” 

 

அவள் ஏகப்பட்டதை சொன்னாள். அதில் எதைனு கண்டேன்.. என யோசித்து மொத்தமாக…

 

“ஆமாம் ம்மா..” என்றான்.

 

“உங்க மாமா அப்படி தான் கொஞ்சம் திமிரு புடிச்சவன்..அதுக்காக எல்லாம் வெளில சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காத கண்ணு.. அது யாரு வீடு உங்க அம்மாச்சி வீடு.. உனக்கு அங்க எல்லாம் உரிமையும் இருக்கு.. இரண்டு நாள் இருந்துட்டு நிகிதாவ கூட்டிகிட்டு வந்துடு.. நான் பத்திரமா பார்த்துக்கறேன்.. வைச்சிடவா சாமி..” என்று வைத்துவிட..

 

வீரா நிகிதாவிடம் “என்னடி எங்கிட்ட அப்படி பேசுச்சு எங்கம்மா.. நீ அவுத்து விட்ட பொய்க்கு இப்படி மயங்கிடுச்சு..” என்றான்.

 

“மாமா.. உங்களுக்கு யார எப்படி டீல் பண்றதுனே தெரியல.. எப்படி நான் போட்ட பிட்டு நல்லா வேல செஞ்சுதா..அக்கா தம்பி இரண்டு பேரையும் அப்படியே தட்டிவிட்டு போய்கிட்டே இருக்கனும்..” என்றாள் 

 

“அடிப்பாவி.. நல்லா பொழைச்சுக்கவடி..” என வாயில் கைவைத்து பார்த்து கொண்டு இருந்தான்.

 

அவள் குலுங்கி சிரிக்க.. 

 

“ஏய் எங்காவது வலிக்க போகுதடி..”வேகமாக அருகில் வந்து அணைத்து கொண்டவன்.. செல்லமாக அவள் நெற்றியில் முட்டி.. 

 

“நிஜமா.. சொல்றேன்டி.. நான் செஞ்ச காரியத்துக்கு வேற  ஒருத்தியா இருந்தா..டைவர்ஸ் வாங்கிட்டு போயிருப்பா.. நீயா இருக்கவும் என்னை மன்னிச்சு வாழ்க்கை கொடுத்திருக்க.. லவ்யூ டி பொண்டாட்டி..” என நெற்றியில் முத்தம் வைக்க..

 

நிகிதா தன் விரல் தொட்டு.. கண் கன்னம் உதடு  கழுத்து என காண்பிக்க.. அவள் விரல் தொட்ட இடங்கள் எல்லாம் இவன் இதழ் தொட்டு மீள… அங்கு ஒரு மீளா காதல் யுத்தம் அரங்கேறியது.



6 thoughts on “26 – புயலோடு பூவுக்கென்ன மோகம்”

  1. As with most childhood cancers, the symptoms of brain tumors are vague and confusing, and are often initially attributed to viruses, neurological problems, or even emotional problems.
    Can I take sildenafil time to work can help you buy it safely online.
    The sooner blood flow is restored the greater chance that damage to the heart can be reduced or averted.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top