ATM Tamil Romantic Novels

27 -புயலோடு பூவுக்கென்ன மோகம்

27- புயலோடு பூவுக்கென்ன மோகம்

 

       சொன்னது போலவே நிகிதாவை கூட்டிக் கொண்டு இரண்டு நாளில் தாமரையூர் சென்று விட்டான் வீரா. அவளை கிளப்பி கொண்டு செல்வதற்குள் அவன் பட்ட பாடு அப்பப்பா… 

 

வெங்கட் அவ்வளவு அட்டகாசம் பண்ணினார்.   சி ஷேப் பில்லோ.. ரிலாக்ஸ் ஷோபா.. மெட்ரினிட்டி கவுன் வீரா வாங்கியது தெரிந்தும் வீம்புக்கே இவரும் வாங்கினார்.   கூடை கூடையாக பழ வகைகள்… பாதாம் பிஸ்தா குங்குமபூ ஹெல்த் ட்ரிங்ஸ் மிக்ஸ் என தனக்கு தோன்றியதை எல்லாம் வாங்கி வீரா முன் கெத்து காண்பித்தார்.

 

இவரை என பல்லை கடித்து கோபத்தை அடக்கினான்.நிகிதாவுக்கோ தனது அப்பா பண்ணுவதையும் வீராவின்  கடுப்பான முகத்தையும் பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவள் தலையை குனிந்து சிரிப்பை அடக்க பெரும்பாடு பட.. வீரா நிகிதாவை ஏகத்துக்கும் முறைத்தான். 

 

இதில் கிளம்பும் போது ஏசி பிட் பண்ண ஆள் அனுப்பவா என கேட்டு வீராவின் பிபியை எகிற வைத்தார். நிஜமாகவே மகள் மேல் உள்ள பாசத்தில் செய்கிறாரா… தன்னை மட்டம் தட்டவே செய்கிறாரா.. என  நினைத்து  எரிச்சல் பட்டான்.

 

ஒரு வழியாக தங்கள் வீட்டிற்கு வந்தவுடன் தான் அப்பாடா என நிம்மதியானான். அந்த நிம்மதியும் விசாலாவின் பேச்சில் காணாமல் போனது. காரில் இருந்து இறக்கி வைத்த பொருட்களை பார்த்ததும்..

 

“ஏன் எங்க மருமகளுக்கு நாங்க  வாங்கி தர மாட்டோமா… ஏன் அதுக்கு கூடவா விதியத்து போயிட்டோம்னு  நினைச்சிகிட்டானா.. இவன்கிட்ட பணம் இருந்தா.. நம்மள இளக்காரமா நினைப்பானா.. இரு அவன.. ” தம்பிக்கு போன் செய்யப போக…

 

“அம்மா… கொஞ்சம் சும்மா இரு..” என போனை வாங்க போக..

 

“நீ இருடா… அவன என்னன்னு கேட்டா தான் அடங்குவான்..” விசாலா துள்ள..

 

அய்யாவு “விசா.. இப்ப எதுக்கு பிரச்சனை பண்ற.. நம்ம பொன்னிக்கு நாம செய்யறதில்லையா.. அது மாதிரி அவங்க பொண்ணுக்கு அவங்க செய்யறாங்க.. பேசாம அமைதியாஇரு..” என அதட்டவும் தான் அடங்கினார்.

 

நிகிதா இதை எல்லாம் கண்டு கொள்ளாமல்  பயண களைப்பில் போய் படுத்து கொண்டாள்.

 

“மருமக சோர்வா போய் படுத்துருக்கு பாரு.. ஏதாவது குடிக்க கொண்டு போய் கொடு..”

 

அப்போது தான் வீராவும் நிகிதா அங்கு இல்லை என பார்த்தவன் தங்கள் அறைக்கு சென்றான்.



அங்கு சோர்ந்து படுத்திருந்தவளின் அருகில் சென்று அவளுடைய தலைப்பகுதியில் அமர்ந்து அவளின் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கலைந்திருந்த முடிகற்றைகளை ஒதுக்கி விட்டு ஆதுரமாக தடவி கொடுத்தவன்…

 

“அமுல் பேபி.. என்னடி பண்ணுது..”

 

“ஒன்னும் இல்ல மாமா… கொஞ்சம் டயர்டா இருக்கு…”

 

“ஏதாவது சாப்பிடறியா…” என கேட்டு கொண்டு இருக்கும் போதே விசாலா ஜீஸ் கொண்டு வர… அவரின் முன்னால் வீராவின் மடியில் படுத்திருப்பது கூச்சத்தைக் கொடுக்க.. அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.

 

“கண்ணூ.. இப்படி எல்லாம் எந்திரிக்க கூடாது. புள்ளைக்கு ஆகாது. இந்தா இந்த ஜீஸ் குடி..”

 

வாங்கி குடித்தவளை படுக்க வைத்து விட்டு தன் தாயோடு பின்னே சென்றான் வீரா தன் தாயை சாமாதானம் செய்யும் பொருட்டு..

 

அடுத்த  நாளில் இருந்து இருவரும் பேக்டரிக்கு செல்ல ஆரம்பித்தனர்.இந்த தடவை இருவரும் தெளிவா பேசிமுடிவு எடுத்தனர். வீரா சம்பாதித்து கொண்டு வந்த பணம் பேக்டரியில் போட்டு பார்ட்னராக இணைந்து கொள்ள வீரா நினைக்க…. பேக்டரியின் மொத்த கேப்பிட்டல்ல இவன் பணம் சிறுதுளி என்பதால் நிகிதா வேண்டாம் என சொல்லி வீராவை வொர்க்கிங் பாட்னராக பேக்டரியில் இணைத்து கொண்டாள். அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என வீரா கேட்ட போது நிகிதா அதை இப்போதைக்கு டெபாசிட் செய்து விட்டு அதை பிறகு என்ன செய்வது என  சொல்வதாக சொல்லிவிட்டாள். 

 

ஆபீஸ் கிளம்பி வந்தவளை பார்த்து வீரா பிரம்மித்து போனான். லெனின் காட்டன் புடவையில் அதற்கு ஏற்றாற் போல த்ரெட் ஜ்வல்ஸ் போட்டு வந்து நின்றாள். அப்படி ஒரு அமரிக்கையான அழகு. அவளின் நடை உடை அனைத்திலும் அப்படி ஒரு ஆளுமை. வெங்கட் மகள் என்பதை நிருப்பித்தாள். வெங்கட்டிடம் இருந்த நிமிர்வு இவளிடமும் இப்போது இருந்தது. என்ன தான் பார்ப்பவர்களுக்கு திமிராக தெரிந்தாலும் ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்கும் திறமை உள்ளவர்களுக்கு நடை உடை பேச்சு எல்லாவற்றிலும் ஆளுமை வந்துவிடும். 



நிகிதா அப்படி தான் இருந்தாள். பேக்டரிக்கு போக வர  நிகிதாவுக்கென ஒரு காரை வாங்கி கொடுத்திருந்தார் வெங்கட் . அதில் தான் இருவரும் சென்றனர். வீரா வொர்க்கிங் பார்டனராக நிகிதாவுக்கு கீழே வேலை செய்தாலும் சந்தோஷமாகவே செய்தான். மாமனாரின் பேக்டரியில் வேலை செய்த போது இருந்த பிடிக்காத தன்மை இப்போது இல்லை. மனைவியிடம் வேலை செய்து  சம்பளம் வாங்குவதை சந்தோஷமாகவே செய்தான்.



வீரா வந்ததுக்கு பிறகு ராகவாச்சாரி உதவியோடு நிகிதாவின் பொறுப்புகளை வீரா ஏற்றுக்கொள்ள நிகிதா கொஞ்சம் ரிலாக்ஸாக  நிர்வாகம் பண்ணினாள்.

 

இருவரும் பேக்டரிக்கு காலையில் போவார்கள். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால் சாப்பிட்டு விட்டு வீரா மட்டுமே செல்வான். நிகிதா ஓய்வு எடுத்து கொள்வாள். மாதங்கள் நெருங்க… அவளை ஓய்வு எடுக்க சொல்லி  வீட்டில் விட்டு அவன் மட்டுமே செல்வான்.



நிகிதா சம்பளத்தில் தான் தங்களுக்கான செலவை பார்த்து கொள்வான். நிகிதா கொடுக்கும் சம்பளம் லட்சங்களில்  இருக்க.. வீட்டு செலவுக்கு தன் அம்மாவிடம் ஒரு தொகையை கொடுத்துவிட்டு மிச்சத்தை சேமித்து வைத்தான். நிகிதாவிற்கு கூட தேவைக்கு தான் செலவு செய்தான்.

 

நிகிதா கூட கிண்டல் செய்வாள்.

 

“என்ன உங்க எம்டி சம்பளம் சரியாக தருவதில்லையா.. குறைவான சம்பளத்திற்கா இத்தனை வேலை வாங்குது அந்தம்மா..”

 

“ஆமாம்டி.. ரொம்ப ஓவர் வேலை.. கொடுக்கற சம்பளத்துக்கு மேல வேல வாங்கறாங்க…”

 

“இருங்க நான் போன் பண்ணி கேட்கறேன்..”

 

“வேணாம்டி.. பணத்திமிரு புடிச்ச பொம்பள.. உன்ன மரியாதை இல்லாம  பேசிடும்..”

 

“அந்தம்மா  பேசினா.. எனக்கு வாய் இல்லையா.. அந்த லேடி நாலு வார்த்தை பேசினா.. நான் இரண்டு வார்த்தை பேசமாட்டனா..”



“அது ரப்பு பிடிச்ச பொம்பள.. அது உன்னை ஏதாவது பேசிட்டா.. என்னால தாங்க முடியாதுடி..” என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..

 

“சரி விடுங்க மாமா.. உங்களுக்காக அந்தம்மாவ சும்மா விடறேன்..”



“மாமனுக்கு உடம்பு எல்லாம் வலிக்குது.. கொஞ்சம் பிடிச்சு விடேன்”

 

“நான் பிடிச்சு விட்டா நல்லா இருக்குமா… அந்த கல்யாணி பிடிச்சு விட்டா தான உங்களுக்கு பிடிக்கும்..”

 

“ஏன்டி நல்லா தான போயிட்டு இருக்கு.. விடு நீ பிடிச்சு விடவேண்டாம்..” என நிற்காமல் ஓடிவிட்டான். இருந்தால் கல்யாணி பற்றி பேசியே  டார்ச்சர் பண்ணுவாளே…



பேக்டரியில் ஆபீஸ் வளாகத்தில் வீராவை தன் அறைக்கு வருமாறு நிகிதா அழைக்க…

 

“மே ஐ கமின் மேம்..” கதவை தட்டி விட்டு உள்ளே போக…

 

“எஸ் சொல்லுங்க வீரா.. உங்க வேலை எல்லாம் எப்படி போகுது.. சேலரி எல்லாம் ஷேட்டிஸ்பையா இருக்கா…”

 

வீரா நிகிதாவின் விளையாட்டை ரசித்து கொண்டே..

 

“ம்ம்ம்.. இருக்குங்க மேடம்..”என்றான் பணிவாக…

 

“இல்ல.. உங்க மிஸஸ் சேலரி பத்தலைனு சொன்னாங்களாம்.. கேள்விபட்டேன்.. அப்படியா சேலரி பத்தலையா…” என கேட்க..

 

 வீரா கைகளை கட்டி கொண்டு மிக பவ்யமாக.. “அப்படி இல்லிங்க மேடம்..”

 

“வேணும்னா.. ஒன்னு செய்ங்க.. அவங்க ரெசியூம் கொடுங்க.. அவங்களுக்கு ஏதாவது ஜாப் போட்டு கொடுக்கறேன்..”

 

“யாருக்கு மேடம்.. நீங்க என் ஒய்ப்கு…”

 

“எஸ்.. அப்கோர்ஸ்..” உல்லாசமாக ரோலிங் சேரை சுழட்டி கொண்டே..

 

“அடிங்.. யாரு.. யாருக்கு வேலை கொடுக்கறது..”

 

நிகிதா கிளுக்கி சிரிக்கவும் அருகில் சென்று அணைத்து கொண்டான்.

 

மாதாந்திர செக்கப்கு வீரா நிகிதாவை ஹாஸ்பிட்டல்  கூட்டிக் கொண்டு போனான். அங்கு ஸ்கேன் செய்ய ஸ்கீரினில் குழந்தை குட்டி கை கால்களை குறுக்கி கொண்டு..  லாவமாக துருதுருனு நீந்தி கொண்டு இருந்தது. மிகவும் துடிப்பாக நான் உங்க பிள்ளையாக்கும்…  உங்களுக்கு சளைத்தவனில்லை என நிருபித்தது.

 

ஆசையாக ஸ்கீரினை தொட்டு தடவி பார்த்து கொண்டு இருந்தான். என் பிள்ளை… என் உதிரம்..  பார்த்தது பார்த்தபடியே  இருந்தான். 



  நிகிதாவின் கையை பிடித்து கொண்டு… “பாரு அமுல் பேபி…. நம்ம பேபி…எவ்வளவு ஆக்டீவா இருக்கு.. என்னை மாதிரி இல்லல்ல… உன்னை மாதிரி சுறுசுறுப்பாக இருக்குடி..” கண்களில் நீர் மிதங்க…

 

“ஆமாம் மாமா..” என்றாள் பூரிப்புடன்  தலை அசைத்து…  நிகிதா  இதை வாய் வார்த்தையாக சொன்ன போது.. இவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என நினைத்திராதவன்… தன் வாழ்க்கையின் உச்சகட்ட   ஆனந்தத்தை இன்று அனுபவித்தான். இதை இழந்து எதை சம்பாதிக்க போனோம் என கவலைப்பட்டான்.



அன்று முழுவதும் வேறு உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான். அவனை பார்த்து பார்த்து சிரித்தாள் நிகிதா. அது எல்லாம் எங்கு  அவன் கவனித்தான். அவன் தன் பிள்ளையுடன் கற்பனை உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தான்.

 

 தன் உயிரோடும் உணர்வோடும் கலந்து தனக்குள் சுமக்கும் குழந்தையை உருவான நாளில் இருந்து பிரசவிக்கும் நாள் வரை அதன் துடிப்பையும் அசைவையும்… எது தின்றால் செரிக்கும் செரிக்காது.. எப்படி படுக்கனும்.. எப்படி இருக்கனும்.. என பத்து மாதம் குழந்தையோடு  சொர்கத்தில் வாழும்  பெண்ணிற்கு…. இதை எல்லாம் ஆணிற்கு பிள்ளையை கையில் ஏந்தும் நாள் வரை  கனவிலும் கற்பனையிலும் மட்டுமே கிடைக்கும்  என்று யார் சொல்வது… அப்படி தான் இருந்தது வீராவின் நிலை.

 

நிகிதாவிற்கு இயற்கை விவசாய பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்தது. தாமரையூர் வந்த பிறகு அவளுக்கு விவசாயத்தில் மேல் ஒரு ஆர்வம்.அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ள.. தெரிந்து கொண்டதில் இயற்கை விவசாயமே சிறந்தது என..  அய்யாவுவிடமும் வீராவிடமும் தன் எண்ணத்தையும் திட்டத்தையும் சொல்ல… இருவருக்கும்  பிடித்துப் போக… சம்மதித்தனர்.

 

அதற்காக வீரா டெபாசிட் செய்திருந்த பணத்தையும்.. அய்யாவின் சேமிப்பையும்.. பேங்க் லோன் எடுத்தும் ஐந்து ஏக்கர் விவசாய பூமி  வாங்கினாள். பொன்னியின் கணவன் கணேசன் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து கொண்டு இருந்தார்.

 

அவரை வைத்து  விவசாயம் செய்தாள். அவரோடு சேர்ந்து இயற்கை விவசாய  பயிற்சி பட்டறைக்கு எல்லாம் போனாள்.வீராவிடம் பேக்டரியை ஒப்படைத்து விட்டு  வயிற்றில் பிள்ளையோடு இவள் அலைவதை கண்டு வீரா தான் பயந்து போனான்.

 

வீராவோடு  வாழும் சந்தோஷமா… விசாலாவின் கவனிப்போ.. முன்பை விட நிகிதா கொஞ்சம் சதை போட்டு புசுபுசுவென இருந்தாள். மாதம் நெருங்க.. நெருங்க… வீரா மனதில் பிரசவத்தை நினைத்து பயம் வந்தது.

 

 அதை நிகிதாவிடம் காட்டி அவளை பயமுறுத்த விரும்பாமல் தன் மனதுக்குள் வைத்து கொண்டான். 

 

ஒரு நாள் நிகிதா  பண்ணைக்கு போயிருக்க..  பேக்டரிக்கு தேவையான முக்கியமான பைல் ஒன்றை  நிகிதா தங்கள் அறையில் வைத்திருக்க.. அதை தேடி கொண்டு இருந்தான்.

 

“எங்க தான் வச்சாளோ.. தெரியல…”

 

“வீட்ல ரெஸ்ட் எடுனு சொல்லிட்டு போனேன். நான் அந்த பக்கம் போனதும்.. இந்த பக்கம் கிளம்பி போயிருக்கா.. இந்தம்மாவும் மருமக எது சொன்னாலும் பண்ணினாலும் தலையாட்டி வைச்சிடுது.. எனக்கு தான் பயமா இருக்கு.. இவளுக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல…” என புலம்பி கொண்டே  தேடியவன் கிடைக்காமல்  போக.. அவளின் போனிற்கு அழைத்தான்.



அதுவும் அங்கேயே சத்தமிட… அங்கிருந்த மேஜை மேல் இருந்தது. அதன் அருகே போக.. டிஸ்பிளேவில்  அவனின் படத்தோடு கருவாயன் காலிங் என இருக்க… அதை கையில் எடுத்து பார்த்தவன்.. இவளுக்கு திமிர பாரேன்.. என நினைத்து சிரிக்க…

 

 அவனின் கைப்பட்டு  வாட்சப் ஓபனாக அதில் கல்யாணியோடு இவன் சேட்டிங் செய்தது.. வாட்சப் கால் என எல்லாம் இருக்க.. சந்தேகம் கொண்டுஅவளின் போனை ஆராய… அதில் நிகிதாவின் இந்திய நம்பரில் ஒரு வாட்சப்…அது இல்லாமல் கல்யாணியின் நம்பரில் பேரலல் ஸ்பேஷ் வாட்சப் ஒன்று இருந்தது.

 

எல்லாமே அவனுக்கு புரிந்து போனது. செகண்ட் லைன் ஆப்பில் கனடா நம்பர் வாங்கி தன்னிடம் கல்யாணியாக பேசியிருக்கிறாள் என்று… 

 

என்னை ஏமாற்றி எப்படி எல்லாம் பேசி டார்ச்சர் பண்ணியிருக்கா.. இவளே கல்யாணியாக பேசினது மட்டுமில்லாமல் கல்யாணி கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கறியானு கேட்டு எத்தனை சண்டை.. எவ்வளவு டென்ஷன் பண்ணியிருக்கா… இன்னைக்கு வரட்டும் இவளை… என கோபத்துடன் அவளுக்காக  காத்திருந்தான்.



2 thoughts on “27 -புயலோடு பூவுக்கென்ன மோகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top