ATM Tamil Romantic Novels

30 -புயலோடு பூவுக்கென்ன மோகம்

30 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

வீரா விருது வாங்கிய பார்ட்டி நடந்த அதே ஸ்டார் ஹோட்டல் முன்பை விட பிரம்மாண்டமாய்… அழகான ஆர்கிட் மலர் டெக்கரேஷன்களாலும் ஜொலிக்க… பார்ட்டி ஹாலில் நடுநாயமாக கோல்டனும் சிகப்பும் கலந்த சாட்டின் துணிகளால் … வெள்ளை ரோஜா மலர் கொத்துகளால் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்ட   வட்ட மேஜையில் நிகிதாவின் பதக்கமும் பட்டயமும் காட்சி படுத்தப்பட்டு இருக்க..

 வீரா நிகிதா மற்றும் வெங்கட்டின் நட்பு வட்டங்கள் .. அரசியல் பிரமுகர்கள் தொழில்துறை சார்ந்தவர்கள் என அந்த அரங்கமே நிறைந்திருக்க…   சொக்கலிங்கம் மங்களம் அய்யாவு விசாலா நால்வரும் ஒரே டேபிளில் அமர்ந்திருந்தனர்.

  விசாலாவின் கைகளில் எட்டு மாத குழந்தையாக வீரா நிகிதாவின் மகள் பவ்யா சாண்டல் கலர் கவுனில் நிகிதாவை உரித்தாற் போலவே இருந்தது. வெங்ட் ரோஹிணி தம்பதியர் வந்தவர்களை வரவேற்று உபசரித்து கொண்டு இருக்க… வீராவும் நிகிதாவும்  தங்கள்  தொழில்துறை நண்பர்களோடு பேசிக் கொண்டு இருந்தனர்.

.

 அப்போது வீராவின் மகன் இஷாந்த் நிகிதாவின் புடவை தலைப்பை பிடித்து இழுக்க… அவனின் உயரத்திற்கு குனிந்த நிகிதா “என்னடா கண்ணா..” என்க…

 “மாம்.. சுச்சூ போகனும்” என்றான் தாயிடம்..

நிகிதா இஷாந்த்திடம் பேசும் போதே நிகிதாவை தொந்தரவு செய்கிறானோ என நினைத்து பொன்னி அருகில் வந்து… “இஷாந்த் குட்டி.. அம்மாவ டிஸ்டர்ப் பண்ணகூடாது.. என்ன வேணும் அத்தைகிட்ட வாங்க..” என்று அழைக்க.. 

“ம்கூம் மாம் தான்..” என்று பிடிவாதமாக நிகிதாவை ஒட்டி நின்று கொண்டான். 

“அண்ணி.. அவனுக்கு ரெஸ்ட் ரூம் போகனுமாம்… நானே கூட்டிட்டு போறேன்..” மகனின் பிடிவாதம் அறிந்தவளாக அழைத்து சென்றாள்.

 இஷாந்த் வீராவின் காப்பி பேஸ்ட்… நிறம் குணம் செயல் எல்லாம் வீரா ஒத்தே இருப்பான் மூன்று வயது இஷாந்த்கு வயதுக்கு மீறிய அறிவு. எதையும் சொன்னவுடன் கிரகித்து கொள்வான்.ஆனால் பிடிவாத குணம் ஜாஸ்தி. அவனுக்கு நிகிதா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாமே அவள் தான் செய்ய வேண்டும். அம்மாவின் புடவை தலைப்போ.. துப்பட்டாவின் நுனியோ கையில் இருக்க வேண்டும். அதை பிடித்து திருகி கொண்டே பின்னாடியே திரிவான்.

நிகிதா குளிக்க சென்றால் கூட குளியலறை வாசலியே நிற்பான். இவனின் இந்த குணம் வீராவிற்கு தான் பெரிய பாதிப்பாக இருந்தது. அவன் விழித்திருக்கும் நேரம் வீரா நிகிதாவின் அருகில் கூட நெருங்க முடியாது. “ப்பா.. போ.. “என பிடித்து தள்ளிவிடுவான். 

கடுப்பில் நிகிதாவை முறைத்தவாறே.. எதுவும் பேசாமல் சென்றுவிடுவான். பவ்யா குட்டி யாரையும் தொந்தரவு செய்யாமல் சமர்த்தாக இருந்து கொள்ளும். பெரும்பாலும் வீராவிடமும் விசாலாவிடமும் தான் இருக்கும். அண்ணனின் பிடிவாதம் புரிந்து என்னவோ பசியாறும் நேரம் தவிர தாயை அண்ணனுக்காக விட்டு கொடுத்து விடும். 

பார்ட்டி முடிய இரவு வெகு நேரம் ஆகிவிட.. மாமனிரின் வீட்டில் இரவு தங்கிவிட்டு காலையிலேயே பிடிவாதமாக தன் குடும்பத்தை கூட்டி கொண்டு தாமரையூர் வந்துவிட்டான். தனது காரை அந்த பெரிய பங்களாவின் முன்பு நிறுத்தினான். பழைய வீட்டை இடித்து பக்கத்து காலிடத்தையும் வாங்கி இரண்டு தளமாக கட்டி இருந்தான்.கீழ் தளம் பெரிய வரவேற்பறை  மாடுலர் கிச்சன் அய்யாவு விசாலா அறையோடு சேர்ந்து  நான்கு படுக்கயறைகளும் இருக்க.. மேல் தளம் முழுவதும் தங்கள் உபயோகத்திற்கு மட்டுமே ஆபிஸ்அறை, ஜிம், பிள்ளைகள் விளையாட ஓப்பன் ப்ளேஸ், மூன்று படுக்கையறைகள்  கட்டி இருந்தான். அதிலும் மாஸ்டர் பெட்ரூமில் டிரஸ்ஸிங் ரூம்கு அருகில் சின்னதாக ஒற்றை படுக்கயறை தங்களின் தனிமைக்காக.. தங்களுக்கான பள்ளியறையாக வடிவமைத்திருந்தான். 

சென்னையில் இருந்து வந்ததும் அவரவர் வேலையை பார்க்க இருவரும் கிளம்பி விட்டனர். டெல்லி சென்று வந்ததும் சென்னையில் விழா என தொடர் அலைச்சலால்  டயர்டா இருக்க… இருவருமே அன்று சீக்கிரமே வந்து சாப்பிட்டுவிட்டு உறங்க தங்கள் அறைக்கு  வந்தனர். அந்த கிங் சைஸ் பெட்ல வழக்கம் போல இஷாந்த் நிகிதாவை அணைத்து படுத்து கொள்ள… பவ்யா குட்டி வீராவின் நெஞ்சில் ஏறி படுத்து கொண்டு அவனின் தலை முடியை பிடித்து விளையாடி கொண்டு இருந்தது. 

வீராவோ நிகிதாவை ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தான். மகனை தட்டி கொடுத்து தூங்க வைத்து கொண்டு இருந்த நிகிதா முதலில் வீராவின் ஏக்கப் பார்வையை கவனிக்கவில்லை. சற்று நேரம் சென்ற பிறகே பவ்யா தூங்கி விட்டதா என பார்க்கும் போது தான் வீராவை பார்த்தால்…. என்ன என கண் ஜாடையில் நிகிதா கேட்க… “மாமனையும் தூங்க வைடி..” என்றான் 

சத்தமில்லாமல் உதட்டசைவில்…. “பேசாம தூங்குங்க…” “தூக்கம் வரலடி..” “கண்ணை மூடுங்க.. தூக்கம் வரும்..” எல்லாமே மௌன பாஷையிலேயே நடக்க…

 நிகிதாவின் உதட்டசைவோ.. உடல் அசைவோ… ஏதோ ஒன்று இஷாந்த்கு தொல்லையாக இருக்க.. அன்னையை அணைத்திருந்த இஷாந்த் திரும்பி வீராவை பார்த்து.. “டாட் தூங்குங்க… மாம் ஆ…. டிஸ்டர்ப் பண்ணாதிங்க..” என்றான். 

என்னவென்று புரியாமலேயே தந்தையை மிரட்டினான். “நீ முதல்ல தூங்குடா..” என திட்ட…. தகப்பனை முறைத்து விட்டு திரும்பி தாயை அணைத்து கொண்டான்.

 இஷாந்த் தாயை இறுக்கி அணைத்ததில் சிறிது நேரத்தில் இஷாந்தோடு  நிகிதாவும் உறங்கி விட… பவ்யா குட்டியும் வீராவின் நெஞ்சிலேயே தூங்கிவிட்டது. 

தூக்கம் வராமல்… நிகிதாவை அணைத்தால் மட்டுமே தூக்கம் வரும் போல என வீரா தவித்து கொண்டு இருந்தான்… அணைப்பு போதுமா….  அதற்கு மேலயுமா… நடு இரவு வீரா பவ்யா குட்டியை சுற்றி  தலைகாணி வைத்து விட்டு சத்தமின்றி மெல்ல நடந்து வந்தவன் தளர்ந்திருந்த இஷாந்த்தின் கையையை பிரித்து நிகிதாவை இரு கைகளில் அள்ளி கொண்டான். 

நல்ல உறக்கத்தில் இருந்த நிகிதா வீரா தூக்கவும் அந்தரத்தில் இருப்பது போல இருக்க… பெட்ல இருந்து கீழே விழப் போறோமோ என்று பயந்து கத்த வாயை திறக்க.. அவள் முகத்தை ஆசையாக பார்த்து கொண்டே தூக்கியவன் அவளின் செயலை புரிந்து அவளுக்கு முன் முந்தி கொண்டு.. அய்யோ… காரியத்தை கெடுத்துருவா போல… என  மெல்ல புலம்பி.. இரு கைகளிலும் அவளிருக்க… தன் வாய் கொண்டு அவள் வாயை அடைத்தான்.

கணவன் தான் என அறிந்ததும் அடங்கி அவனை தோளோடு இரு கைகளால் அணைக்க… அதன் பிறகே அவளின் வாயிற்கு விடுதலை கொடுத்தவன்.. குனிந்து அவளின் காதருகே குனிந்து “சத்தம் போடாதடி..” என்றான். 

அவனின் பேச்சும் செயலும் அவளுக்கு  அடக்கமாட்டாத சிரிப்பை வரவழைக்க.. கையை வைத்து வாயை பொத்தி கொண்டு சிரித்தாள். 

சிரித்து கொண்டு இருந்தவளை கணவனுக்கான உரிமை பார்வையாக பார்த்தவன் தங்கள் பள்ளியறைக்கு வந்து அவளை படுக்கையில் கிடத்தி விட்டு… கைகள் இரண்டையும் உதறி.. இடுப்பை முறித்து நெட்டை எடுத்தவன்… “ஹப்பா… என்னா வெயிட்டு… முடியலடி… ” 

“உங்களை…” என தலைகாணியை எடுத்து அடிக்க… தலைகாணியை பிடுங்கி எறிந்து விட்டு ஆவேசமாக அவளை அணைத்தான். 

அவளின் காதில் “கல்யாணமான புதுல.. என்னன்ன சேட்டை எல்லாம் செஞ்சு மனுசன கிளப்பி விடுவ… இப்ப கிட்ட கூட வரமாட்டேங்கற…” குறைபட… 

“மாமா.. உங்க மகன் எங்க என்னை விடறான்…”

 “அவன் தான் எனக்கு வில்லன்டி..”

“மாமா.. சின்ன குழந்தை அவன்..அவன போய் என்ன பேச்சு பேசறிங்க…” என மெதுவாக அவன் தோளில் அடித்தாள்.

 “புள்ளய பெத்துக்க  சொன்னா…. தொல்லய பெத்து வச்சிருக்க… கிட்ட வந்தாலே சிலிர்த்துகிட்டு நிக்கறான்..”

 “மாமா.. பேசிகிட்டே இருந்திங்க.. ஒன்னும் நடக்காது… உங்க புள்ள முழிச்சுக்குவான் பார்த்துங்க..” என நிகிதா எச்சரிக்க… 

“சும்மா.. பயமுறுத்தி மூட் அவுட் பண்ணாத..” என்றவன் செயலில் இறங்கினான். 

அந்த ஒற்றை படுக்கையில் அவளின் மேல் படர்ந்தவன்..  அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டு.. முத்தமிட்டே…. அவளின் காதல் ஹார்மோன்களை தூண்டி விட்டவன்…   அவளின் மெட்டி அணிந்திருந்த  விரலை இதழால் உரசி உரசி வருடி..  மெட்டியை பல்லால் நிரடி கொடுக்க…  அவன் உதட்டோடு மீசையும் சேர்ந்து அவள் உணர்வுகளை ஆட்டி படைக்க…  

சுக வேதனை தாளாமல்.. பாம்பாய் துள்ளி எழுந்தவள் அவனின் தலைமுடியை பிடித்து இழுத்து தன் மேல் போட்டு கொண்டாள். மனைவியின்  இழுப்பிற்கு  அமைதியாய் ஈடு கொடுத்தவன்.. அடுத்தடுத்து அவன் கொண்டது எல்லாம் காதல் பேரலை தான். அங்கு சிறிது நேரம் முத்த சத்தமும் மோக கீதமும் மட்டுமே கேட்டது… காதல் அரங்கில் காம களியாட்டங்கள் முற்று பெற…

அந்த படுக்கையில் அசதியில் ஆயாசமாக படுக்க  கூட இடமின்றி ஒருவர் மேல் ஒருவர் பாதி உடலை சாய்த்து கொண்டு படுத்திருந்தனர். 

“ஏன் மாமா.. பணமா இல்ல.. இப்படி கஞ்சதனமான் சிங்கிள் காட் வாங்கி போட்டு இருக்கறிங்க..” என்றாள் கோபமாக… 

“சிங்கள் காட்ல தான்டி நெருக்கம் அதிகமா இருக்கும்.. நெருக்கம் அதிகமா இருந்தா உரசல் அதிகமா இருக்கும்.. உரசல் அதிகமா இருந்தா தான் பயர் பத்திக்கும்.. செம்ம ஹாட்டா இருக்கும்.. இன்னைக்கு எப்படி செம்ம கிக்ல.. சூப்பர் டுப்பர் ஹாட்ல…” என சொல்லி அவன் மல்லாக்க படுத்து.. 

அவளை தன் மேல் முழுவதுமாக போட்டு அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து..செகண்ட் இன்னிங்ஸ்கு தயாராக… 

“மாம் எங்க இருக்கறிங்க…” என இஷாந்த்தின்  குரலில் வீராவிடம் இருந்து வலுகட்டயமாக பிரிந்தவள் அங்கு இருந்த சின்ன குளியலறையில் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அவசர அவசரமாக இரவு உடையை அணிந்து கொண்டு சென்றாள்.

 அதற்குள் இஷாந்த் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கி கொண்டு  “மாம்.. மாம்..” என கத்தி அழுக.. 

அவனின் கத்தலில் பவ்யா குட்டியும் கண்ணை திறக்காமலேயே சிணுங்கியது.

 வேகமாக வந்து நிகிதா இஷாந்தை சமாளித்து படுக்க வைத்து தானும் அருகே படுத்து அணைக்க… வீராவும் வந்து பவ்யா குட்டியைகுட்டியை தூக்கி நெஞ்சில் போட்டு கொண்டான்.

தந்தையின் நெஞ்சில் படுத்ததும் அமைதியாக உறங்கிவிட்டது பவ்யா குட்டி. ஆனால் இஷாந்தோ “மாம்.. எங்க போனிங்க.. என்னை விட்டு எதுக்கு போனிங்க..” என நிகிதாவின் கழுத்தை கட்டி கொண்டு தொணக்க.. தொணக்க..

 நிகிதா சமாளிக்க முடியாமல் வீராவை பார்க்க.. வீரோவோ  வழக்கம் போல் இருவரையும் பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்.

 வீரா நிகிதா வாழ்க்கை ஓட்டத்தில்  மேலும் ஐந்து வருடங்கள் கடந்ததிருந்தது. ஆராத்யா கல்யாணம் வெங்கட் பாணியில் பிரம்மாண்டமாக நடந்து கொண்டு இருந்தது. வீராவும் நிகிதாவும் முன்னின்று வெங்கட்டின் ஆலோசனைப்படி எல்லாம் செய்து கொண்டு இருந்தனர்.

 ஆராத்யாவிற்கு எதற்கும் வீரா தான் வேண்டும். மாமனை போலவே ஐடி படிக்கிறேன் சொன்னவளை வீரா தான் வேண்டாம் நம் குடும்பத் தொழிலுக்கு இண்டஸ்ட்ரியல்  இஞ்சினியரிங் படி என்றான்.

 படிப்பு முடியும் தருவாயில் தன்னுடன் படிக்கும் மதியழகனை விரும்புவதாக  வீராவிடம் தான் சொன்னாள். 

மதியழகனை பார்த்ததும் வீராவிற்கும் பிடித்துவிட்டது. படிப்பில் முதல் மாணவன். சாந்தமாக இருந்தவனிடம் பேசிய வரை பொறுப்பானவன் என தெரிந்து கொண்டான் வீரா. 

மதியழகனும் தன்னை பற்றி எல்லாமே மறைக்காமல் சொல்லிவிட்டான். அவனின் பெற்றவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி  கல்யாணம் செய்து கொண்டனர். 

சில வருடங்களிலேயே ஒத்து வராமல் சட்டபடி பிரிந்தனர். ஆனால் இருவரும் மகன் இன்னொரு கல்யாணத்திற்கு தடையாக இருப்பான் என நினைத்து  அவன் ஒரு வருட குழந்தையாக இருக்கும் போதே உதறிவிட்டு சென்று விட்டனர். 

இருவரும் வசதி படைத்தவர்கள் என்பதால் தங்கள் பாவங்களை கழுவ..தனித்தனியாக  சில சொத்துக்களையும் பேங்கில் ஒரு பெரிய தொகையையும்  டெபாசிட் செய்து அவனின் வாழ்வாதரத்திற்கு வழி செய்தனர். அவனை வளர்க்கும் பொறுப்பை அவனின் தந்தையின் தந்தை தனது தூரத்து உறவில் கணவனை இழந்து ஆதரவற்று இருந்த பெண்மணியிடம் கொடுத்து வளர்க்க சொல்லி தங்கள் கடமை முடிந்தது என அதோடு அவனை மறந்தும் போயினர். 

அவன் வளரும் போதே அந்த பெண்மணி எல்லாம் சொல்லி புத்திசாலியாக பிழைத்து கொள் என்று சொல்லிவிட.. அவனும் வளரும் போதே  பொறுப்பு உணர்ந்து தன் வாழ்க்கையை சிறப்பாக வாழும் தகுதியை வளர்த்து கொண்டான். படிப்பு அமைதி நல்ல குணம் என எல்லாம் வீராவுக்கு பிடித்துவிட.. வெங்கட்டிடம் பேசினான். 

குடும்பத்தினர் அனைவரையும் வைத்து கொண்டு தான். வெங்கட்டிற்கோ பேமிலி பேக்ரவுண்ட் சரியில்லை என மறுத்தார். சென்னையில் உள்ள பேக்டரி ஆராத்யாவுக்கென வெங்கட் சொல்லி இருக்க.. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து உங்களையும் உங்க பேக்டரியும் சமாளிக்க மதியழகனால் மட்டுமே முடியும் என வீரா வெடுக்கென சொல்லி விட.. மாமனாரும் மருமகனும் முட்டி கொள்ள..

 

சொக்கலிங்கம் மங்களம் இருவருக்கும் வயோதிகத்தின் தள்ளாமை காரணமாக இவர்களிடம் பேசமுடியவில்லை. நிகிதா தான் இருவரையும் சத்தமிட்டு அடக்கினாள். ஒரு வழியாக எல்லாரும் பேசி.. மதியழகனை பார்த்து.. ஆராத்யாவின் விருப்பம்.. என ஒரு வழியாக கல்யாணம் வரை வந்து சேர்ந்தனர்.

 கல்யாணம் முடிந்து எல்லா சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு வீராவும் நிகிதாவும்  நேராக தோப்பு வீட்டுக்கு வந்துவிட்டனர். வெங்கட்டிற்கு வீராவை தான் பிடிக்காது ஆனால் வீராவின் சாயலில் இருக்கும் பேரனை மிகவும் பிடிக்கும். அவனும் தாத்தாவிடம் ஒட்டி கொள்வான.. 

இன்று பேரனை வார இறுதி நாள் பள்ளி விடுமுறை தான் என இரண்டு நாள்  விட்டுட்டு போக சொல்ல.. தேர்ட்  படிக்கும் இஷாந்த் இப்பவும் அம்மாவின் பின்னாலயே சுற்றுபவன் தான். இது தான் சாக்கு என  மகனை பிரித்து மனைவியை கூட்டி கொண்டு வந்துவிட்டான். 

பவ்யா குட்டி எப்பவும் போல விசாலாவிடம் …

நிகிதா இயற்கை விவசாய விளை பொருட்கள் நேரடி விற்பனை ஸ்டோர் தமிழகம் முழுவதும் வைத்திருந்தாள். விளை பொருட்களின் விலை நிர்ணயம் விவசாயிகளிடமே என்ற கொள்கையில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆரம்பித்து  காய்கறி மளிகை முட்டை என இயற்கை வேளாண் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் என்ற கான்செப்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில்  மட்டுமே ஆரம்பித்தாள் முதலில். 

அது இன்று தரம் நியாயமான விலை இவற்றால் தமிழகம் முழுவதும் கிளை பரப்பி நிற்க… பொன்னியை  உதவிக்கு வைத்து கொண்டு அதை நிர்வாகம் செய்தாள்.

தனது சொந்த வருமானத்தில் தங்கள் தோப்பில் அழகாக முற்றம் வைத்து கேரளா பாணியில் வீடு  தனது ஆசைக்கு கட்டினாள். வார இறுதி நாட்களில் பிள்ளைகளோடு  இங்கு வருவர். வீராவுக்கு தானும் நிகிதா மட்டும் வந்து இருக்கவேண்டும் என நீண்ட நாள் ஆசை. அது இப்போது தான் நிறைவேறி உள்ளது. 

வீட்டு முற்றத்தில் கயிற்று கட்டிலில்  தென்னக்கீற்றின் இதமான காற்றில் வீரா நிலாவோடு தன் நிலாப் பெண்ணையும் ரசித்து கொண்டு இருந்தான். 

நிகிதா “என்ன மாமா என் மகன் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போல..” என்றாள் நக்கல் சிரிப்புடன்.. 

“ஆமாம் டி எப்பாரு பிசினாட்டம் உன்கிட்ட ஒட்டிகிட்டு திரிஞ்சா… என் கஷ்டம் எனக்கு தான தெரியும்.. கிடைக்கற கேப்ல தொட்டு… கட்டி பிடிச்சு.. சின்ன கிஸ் எல்லாம் அடிச்சு என சுவராசியமா போக வேண்டிய வாழ்க்கையை  உன் பையனால உப்பு சப்பு இல்லாத பத்திய சாப்பாடு மாதிரி வாழ வேண்டி இருக்கே..”

 “அவன் சின்ன புள்ள மாமா..” 

“அவனுக்கு எட்டு வயசுடி.. பிறந்ததுல இருந்து இப்படி தான் இருக்கான்.. பாப்பா அப்படியாடி இருக்கு… இரு அடுத்த வருசமே போர்டிங் ஸ்கூல்ல  சேர்த்திடறேன்” நிகிதா முகத்தை திருப்பி கொள்ள..

 “உன் மகன  சொன்னா கோபம் வந்திடுமே… சரி சரி நான் சொன்னது தப்பு தான்.. கொஞ்சம் சிரிடி..” என அவளை இறுக்கி அணைத்து அவளில் மூச்சு முட்ட மூழ்கி போனான். இருவரும் திளைக்க… திளைக்க காதல் கொண்டனர்.

 அழலவன் மேல் கொண்ட மோகம்…

ஆயிலையை பித்து கொள்ள செய்ய…

.பெண்ணவளின் காதலில் மிரட்சி கண்டு.. 

ஆணவன்  காதல் கடந்து கடல் கடக்க…

 தன்னவனை அன்பால் ஆட்சி செய்து… 

தன்னை நாடி தன் இடம் சேர வைத்து..

 சிம்மனை சிம்மாசனத்தில் ஏற்றி… 

அரிமாவாக தனக்கென தனி ராஜாங்கம்

 அமைத்து கொண்டாள் மறவ பெண்

 நிறைவுற்றது 

வாழ்க வளமுடன்

1 thought on “30 -புயலோடு பூவுக்கென்ன மோகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top