பாவை 4
“யூ டேமிட் கதவை நாக் பண்ணிட்டு வரத்தெரியாதா?” என்று ஜானவியை திட்டியது கிருஷ்ணா இல்லை. கிருஷ்ணாவின் ஃபியான்சி சோபியா.
ஜானவியோ “சாரி மேடம் நான் ஏதோ அவசரத்துல வந்துட்டேன்” என்று அவள் மன்னிப்பு கேட்க
“நீதான் இந்தியாவுல இருந்து வந்தவளா! அதான் நாகரீகம் தெரியாத இருக்க” என்று முகம் சுளித்து பேச
கிருஷ்ணாவோ “ஷட்அப் சோபி அவங்க ரிப்போர்ட் கொடுக்க வந்திருப்பாங்க என்னோட ஸ்டாப் எந்த நேரத்துலயும் என்னோட ரூம்க்கு வருவாங்கனு உனக்கு தெரியும்ல” என்றான் கடுகடுவென வார்த்தைகளில்.
“ஆஃப்ட்ரால் வேலைக்காரி முன்னால என்னை அவமானப்படுத்துறது எனக்கு பிடிக்கலை கிருஷ்! நான் முதன் முறையா சேலை கட்டி வந்து உங்களோட எவ்ளோ ஆசையா செல்ஃபி எடுத்திட்டிருந்தேன் எல்லாத்தையும் கெடுத்திட்டா மெண்டல்” என்று ஒரு எடுத்தெறிந்து பேசி ஜானவியை எரித்துவிடும் அளவிற்கு முறைத்தாள்.
“மேடம் நான் ஒண்ணும் கீப்பர் வேலைக்கு வரலை! மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மேடம். நான் ஹையர் போஸ்ட்டிங் ஜாப்க்குத்தான் வந்திருக்கேன் என்னை கீழ்த்தரமா பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன்!” என்று எகிறிவிட்டாள் ஜானவி.
“ஸ்டாப் இட் ஜானவி ரிப்போர்ட் வச்சிட்டு ஒரு ஹாப்னவர் கழிச்சு என்னை பார்த்துட்டு கிளம்புங்க” என்றான் கோப குரலில்.
யார் முன்னாலும் தனக்கு கீழ் வேலை செய்யும் நபர்களை திட்டவும் அனுமதிக்கமாட்டான் வம்சி கிருஷ்ணா.
சோபியாவோ ஜானவி சென்றதும் “நம்ம கம்பெனியில வேலை செய்யறவளை வேலைக்காரினுதானே சொல்லணும் ரொம்ப பேசுறா இவளை வேலையை விட்டு தூங்குங்க கிருஷ்… எனக்கு இவளை பிடிக்கலை ஆளும் அவளும்” என்று முகத்தை சுளித்தாள்.
“சோபியா என்னோட ஆபிஸ் விசயத்தில நீ தலையிடக்கூடாதுனு பல முறை சொல்லியிருக்கேன்” என்று பல்லைக்கடித்தான்.
“ஏன் தலையிடக்கூடாது நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு உரிமை இருக்கு கிருஷ்” என்றாள்.
“ஃபர்ஸ்ட் இங்கிருந்து கிளம்புடி என்னோட டைம் வேஸ்ட் பண்ணிட்டு எனக்கு என் ஆபிஸ்தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட் தான் சோபியா” என்று காய்ந்து விழுந்ததும்
சோபியாவோ “நீங்க என்னை திட்டியதை அங்கிள் கிட்ட சொல்லுவேன்” என்று பிளாக் மெயில் பண்ணினாள்.
“நீ யார்கிட்ட வேணாலும் கம்ப்ளைட் பண்ணு! போடி” என்று அவளது கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான்.
“டேய் என்னையா கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளின! உன்னை என்ன பண்ணுறேன் பாரு” என்று அவள் நின்றது என்னவோ வம்சி கிருஷ்ணாவின் அப்பா ரவீந்திரனிடம்தான்.
“என்னாச்சுடா சோபி குட்டி! ஏன்? அழற உன்னை யாரு திட்டினது” என்று மடியில் வைத்து கொஞ்சாத குறையாக விசாரித்தார் சோபியாவை.
ரவீந்திரனின் தங்கை சங்கவியின் மகள்தான் சோபியா தங்கையும் அவளது கணவன் ரஞ்சனும் ஒரு விபத்தில் இறந்திருக்க சோபியாவை தன்னுடன் அழைத்து வந்து விட்டார் ரவீந்திரன். அவளை செல்லமாக வளர்த்து வந்தார். சங்கவி இறக்கும் தருணத்தில் “அண்ணா உன் மகன் கிருஷ்ணாவுக்கு என் மகளை கல்யாணம் செய்து வைச்சுருங்க என்னோட கடைசி ஆசை என் பொண்ணை ஆதரவு இல்லாம நடு ஆத்துல தவிக்க விட்டுராதீங்க” என்று சத்தியம் வாங்கிச் சென்றுவிட்டார்.
சிறுவயதிலிருந்து வம்சி கிருஷ்ணாத்தான் தன் கணவன் என்று கனவுடன் வாழ்ந்து வந்தாள் சோபியா.
கிருஷ்ணாவிற்கு சோபியாவை அத்தை மகளாக பிடிக்கும் ஆனால் அவளை மனைவியாக அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
ரவீந்திரனோ “கிருஷ்ணா சோபியா கல்யாணம் செய்தால்தான் என்னோட சொத்து முழுக்க உனக்கு கொடுப்பேன்” என்று கிருஷ்ணாவின் தலையில் பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்டார்.
“நோ டாடி என்னால சோபியாவை வொய்ஃபா கற்பனை கூட பண்ணமுடியலை… எனக்கு அம்மாவை போல பொண்ணுதான் வேணும். எனக்கு பிடிச்ச பொண்ணு கனடாவுல இல்லை எனக்கு இந்தியாவுல இருக்க பொண்ணுதான் வேணும். நீங்க என்ன சொத்து கொடுக்கறது.
இப்ப இருக்க கம்பெனி தாத்தா சம்பாரிச்சது… உங்க நிர்வாகத்துல இருக்கும்போது இருந்த பிராஃபிட்டை விட என் கண்ட்ரோலுக்கு வந்த பிறகு டபுள் மடங்கு பிராஃப்பிட் கொண்டு வந்திருக்கேன்! நீங்க சம்பாரிச்ச சொத்தை நீங்களே வச்சிக்கோங்க தாத்தாவோடதெல்லாம் எனக்குத்தான் சொந்தம் வரும்” என்று தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை காட்டி இருந்தான் இரவீந்திரனுக்கு.
கிருஷ்ணா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து துளி கூட மாறமாட்டான் என்று இரவீந்திரனுக்கு நன்றாகவே தெரியும்! தங்கைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று அச்சத்தில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தனர் ரவீந்தரனை.
கிருஷ்ணாவின் தாய் அம்பிகாவோ “கண்ணா உன் பிடிவாதத்தை விட்டுட்டு சோபியா நம்ம வீட்டுப் பொண்ணு அவளை கல்யாணம் பண்ணிக்கோப்பா… எனக்கு தாலிபிச்சை போடு” என்று மகனிடம் மன்றாடினார் கண்ணீர் மல்க.
“ம்மா சென்டி மெண்டா பேசாதீங்க டாடிக்கு எதுவும் ஆகாது ஹார்ட்ல அடைப்புதான் இப்போ எவ்ளோ டிரீட்மென்ட் வந்தாச்சு சர்ஜரி பண்ணினா ஒன் மன்த் ரெஸ்ட் எடுத்தா ஓ.கே ஆகிடுவாரு ப்ளாக் மெயில் பண்ணி சோபியாவை என் தலையில கட்டப்பார்க்காதீங்க” என்று அவன் முடிவிலிருந்து இம்மி கூட மாறவில்லை.
இரவீந்திரனோ “கிருஷ்ணா நீ சோபியாவை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னாத்தான் நான் சர்ஜரிக்கு ஓ.கே சொல்லுவேன்” என்று அவரும் பிடிவாதமாக இருக்க அம்பிகாவும் கண்ணீருடன் மகனிடம் கெஞ்சி நிற்க வேறுவழியில்லாமல் “சரி” என்று ஒருமனதாக சொல்லியிருந்தான்.
இரவீந்திரனோ சர்ஜரி முடித்து வந்து ஒன் மன்த் ஆனதும் கல்யாண ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணாவோ “டாடி எனக்கு ஏஜ் 27 தான் ஆகுது… இரண்டு வருசம் டைம் கொடுங்க… எனக்கு ஒரு புது பிராஜக்ட் கிடைச்சிருக்கு கல்யாணம் பண்ணினா பிஸ்னஸ்ல கவனம் செலுத்த முடியாது” என்று கூறிவிட்டான்.
மகனை விட்டு பிடிக்கலாமென்று “ஓ.கே பா இரண்டு வருசம் உனக்கு டைம் கொடுக்குறேன் அதுக்குமேல நீ டைம் கேட்கக்கூடாது கேட்டாலும் கொடுக்கமாட்டேன் நீ சோபியா கழுத்துல தாலி கட்டியே தீரணும் ஆனா அதுக்கு முன்னால உங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மெண்ட் நடக்கணும்” என்றார் உஷாராக.
அவனுக்கு பிடிக்கவில்லையென்றாலும் “என்கேஜ்மெண்ட் தானே நடத்திக்கோங்க” என்றான் கிருஷ்ணா. ஆறுமாதம் முன்னேதான் கிருஷ்ணாவிற்கும் சோபியாவிற்கும் என்கேஜ்மெண்ட் நடந்து முடிந்திருந்தது.
சோபியா பருவவயதிலிருந்து கிருஷ்ணாவை விரும்ப ஆரம்பித்திருந்தாள். அவன் என்ன வெறுத்து பேசினாலும் “மாமா நீ எனக்குதான்” என்று பிடிவாதமாக இருந்தாள் சோபியா.
இரவீந்திரன் கிருஷ்ணாவுக்கு போன் போட்டு “என் மருமகளை திட்டினியாமே என்னடா மனசுல நினைச்சிட்டிருக்க… இந்த வாரத்துலயே கல்யாணத்தை வச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று அதட்டியிருக்க
கிருஷ்ணாவோ “வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க உங்க தங்கை பொண்ணுக்கு நீங்களே என் ஆபிஸ் விசயத்தில தலையிட்டா எனக்கு பிடிக்காதுனு தெரியும். இவ என்னமோ என் ஆபிஸுக்கு எம்.டி போல என் ஸ்டாஃபை வேலைக்காரினு பேசுறா… படிச்சிருக்கால அறிவு இல்லையா டாடி அவ இனிமே என் ஆபிஸ் பக்கம் கால் வைக்க கூடாது காலை வச்சா இந்தியாவுக்கு போய் ஏதாவது ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி அழைச்சிட்டு வந்திடுவேன் பார்த்துக்கோங்க” என்று இரவீந்திரனையே கதி கலங்க வைத்துவிட்டான் கிருஷ்ணா.
தன்னை மீறி எங்கயும் போக முடியாது என்ற நம்பிக்கையில் பகுமானமாக இருந்தார் இரவீந்திரன்.
ரவீந்திரனிடம் போன் பேசி முடித்தவன் “ச்சே கல்யாணம் கச்சேரினு சென்டிமென்டல் பேத்தல் லைஃப்… நான் கல்யாணமே பண்ணிக்க கூடாதுனு இருக்கேன் என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கோனு டார்ச்சர் பண்ணுறாங்க” கடுப்பில் டேபிளில் குத்திக்கொண்டான். டேபிள் மரத்தால் செய்திருக்க உடையாமல் இருந்தது. கண்ணாடியால் சுக்கு நூறாக உடைந்திருக்கும் அத்தனை கோபம் அவனுக்கு கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே.
“கல்யாணம் பண்ணினாதானே வாழ்க்கை பூர்த்தியாகும் கண்ணா” என்று கிருஷ்ணாவுக்கு பாடம் எடுக்க
அம்பிகாவிடம் மட்டும் கோபம் கொள்ளமாட்டான் “ஓ.கே மா” என்று தலையை ஆட்டிச் சென்றுவிடுவான்.
“ஒரு வருசம் இல்ல பலவருசம் ஆனாலும் கல்யாணம் பண்ணமாட்டேன் அதுக்காக பேச்சிரர் லைஃப் வாழவும் மாட்டேன் என்னோட இளமையை வீணடிக்கவும்மாட்டேன் காசு கொடுத்தா எத்தனையோ பொண்ணுங்க வருவாங்க” என்று திமிர்தனமாக இருந்தான் வம்சி கிருஷ்ணா.
மணி 7 ஆகி இருக்க ஜானவியோ தயங்கிக்கொண்டே கிருஷ்ணாவின் அறைக்கு முன்னே வந்தவள் “மே ஏ கம் இன் சார்?” என்று கதவை நாக் செய்தாள்.
“எஸ் கம்மின்” என்றவனின் குரல் மிளகாய் காந்தல் தன்மையாக வந்தது.
ஜானவியோ உள்ளேச் சென்றதும் “சார் என்னை வெயிட் பண்ண சொன்னீங்க மணி ஏழு ஆச்சு நான் கிளம்பணும்” என்றாள் சிறு குரலில் அவள் தணிந்து பேசக்கூடிய பெண் கிடையாது தான் தவறு செய்துவிட்டோம் என்றதில் தணிந்து பேசினாள்.
“உனக்கு எம்டி ரூமக்குள்ள போறோம் கதவை நாக் பண்ணிட்டு வரணும்னு கொஞ்சம் கூட பேஸிக் மேனர்ஸ் கிடையாதா ஜானவி!” என்றான் காட்டுக்கத்தலில்.
“நான் தான் சாரி கேட்டேனே சார் தெரியாம வந்துட்டேனு!” என்று கையை பிசைந்து நின்றாள்.
“என்ன தெரியாம போகும் உனக்கு! உன் ஹஸ்பண்ட்டும் நீயும் தனி அறையில இருக்கும்போது நான் கதவு திறந்திட்டு வந்தா உனக்கு எப்படியிருக்கும் ஹான் சொல்லு” என்றான் உச்சஸ்தானி குரலில்.
“அ.அது” வார்த்தை வராமல் தந்தி அடித்தது அவளுக்கு.
“இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் எப்பவும் என்னோட அறைக்கு வரும்போது போன் பண்ணிட்டு வா” என்றான் அதிகாரமாக.
“ஓ.கே சார் இனி கவனமா நடந்துக்குறேன்” என்றவளுக்கு கோபம் இருந்தாலும் வெளிக்காட்டவில்லை.
“அப்போ சோபியா மேடம் உங்க வொய்ஃபா சார்?” என்றாள்.
“உனக்கு அது தேவையில்லாத விசயம் ஜானவி! நீ அதை தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப்போற? ஏன் வந்த முதல் நாள் என்னை பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?” என்றான் எகத்தாளக்குரலில்.
“வாட் நா.நான் எதுக்கு உங்களை காதலிக்கணும் அதுவும் உங்களை பார்த்து ஒரு நாள் தான் ஆகுது எப்படி” என்று கண்ணை உருட்டினாள்.
“ம்ம் உன் பார்வை அப்படித்தான் இருக்கு. காலையில என்னை திரும்பி பார்த்தில்ல அப்போ என்னை முழுங்குற மாதிரி பார்த்து சைட் அடிச்சதானே இல்லைனு சொல்லாத” என்றான் டேபிள் மேல் ஏறி உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு கேட்டான்.
“ஓ உங்க மனசுல பெரிய மன்மதன்னு நினைப்போ! உங்க மேல ஒரு மண்ணும் வரலை சார்! நான் கிளம்புறேன்” என்று கதவை திறந்து வெளியே வந்தவளுக்கு கால்கள் ஏனோ தடுமாறியது.
உண்மையிலும் அவனது ஆண்மையை கண்டு ஒரு நிமிடம் தடுமாறித்தான் போயிருந்தாள். காலையில் அவன் சொல்வது போல லவ் பார்வை பார்க்கவில்லை. அழகாகவும் ஆண்மையாகவும் இருக்க அவனை பார்க்கத்தோன்றியது திரும்பிபார்த்தாள் அவ்வளவே.
வெளியே வந்தவள் கேப்பில் அவளது வீட்டிற்குச் சென்றவள் அப்படியே மெத்தையில் பொத்தென்று விழுந்தவள் ‘ஒரு வேளை அவனை லவ் பண்ணுறேனோ ஒரு நாளில் காதல் வருமா அவன் கண் காந்தக் கண்ணா இருக்கே! என்னை கட்டி இழுக்கிறான் கடோத்கஜன்!’ என்று அவள் மனதில் காற்றில் ஆசைகள் இறக்கை கட்டிப்பறந்தது.
வாணியோ “அடியேய் கனடா போய் அங்கிருக்கிறவனை காதல் பண்ணி கல்யாணம் எல்லாம் பண்ணிட்டு வந்த என்னோட உயிரோட பார்க்க முடியாது” என்று மகளை எச்சிரிக்கை செய்துதான் அனுப்பியிருந்தார்.
தாய் பேசியது நினைவில் வர “போடா டைனோசர் நான் உன்னை லவ் எல்லாம் பண்ண மாட்டேன்” என்ற படியே சமையல்கட்டுக்கு வந்தவள் வயிறு பசிக்க ப்ரட் ஆம்லேட் செய்து சாப்பிட்டு படுத்துவிட்டாள்.
அடுத்தநாள் காலையில் ஆபிஸுக்கு வந்தவள் தனது சீட்டுக்கு வர திவ்யா வேலை செய்துக் கொண்டிருந்தாள். திவ்யா மாலை 4 மணிக்கே கிளம்புவதால் காலையில் 8 மணிக்கு வேலைக்கு வந்து வேலைகளை கவனித்துக்கொள்வாள். அவளின் நிலையை கிருஷ்ணாவிடம் கூறியிருக்க வேலை நேரத்தை அவளுக்கு மாற்றி கொடுத்திருந்தான். திவ்யாவை தன் தங்கையாகவே பாவித்திருந்தான்.
திவ்யாவை பற்றி புரளி பேசுவது அப்பப்பபோ கிருஷ்ணாவின் காதுக்கு வரும்தான் “வேலை செய்யும் இடத்தில் இதெல்லாம் சகஜம் நீங்க எதையும் கண்டுக்காம வேலை செய்யுங்க பிரச்சனை பெரிசா நடந்தா நான் அவங்களை கண்டிக்குறேன்” என்றிருந்தான் திவ்யாவிடம்.
திவ்யாவோ “இதுக்கு மேல பேச்செல்லாம் நான் கேட்டுட்டேன் சார்! நோ இஸ்ஸு” என்றிருந்தாள்.
அன்று மதியம் “ஹர்சாவுக்கு காய்ச்சல் அதிகம் இருக்கு வாமிட் பண்ணிட்டு இருக்கான் சீக்கிரம் வா” என்று அவள் அம்மா வனஜாவிடமிருந்து போன் வந்திருக்க “இதோ வரேன்மா குட்டிய பார்த்துக்கோங்க” என்று போனை வைத்தவள்,
“ஜானு என்னோட வேலையை கொஞ்சம் முடிச்சு கொடுக்க முடியுமா! ஹர்சாவுக்கு உடம்பு சரியில்லை நான் கிளம்பணும்” என்று அவள் படபடத்தாள்.
“ஏ நீ கிளம்புப்பா நான் பார்த்துக்குறேன்” என்று திவ்யாவை அனுப்பி வைத்தாள்.
ராகவனிடம் தான் பர்மிஷன் வாங்கவேண்டும் போனில் ராகவனை அழைக்க அவனோ வெளிவேலையாகச் சென்றிருந்தவன் அப்போதுதான் ஆபிஸிற்குள் நுழைந்துக்கொண்டிருந்தான்.
“சார் என் பையனுக்கு ஃபீவர் பர்மிஷன் வேணும்” என்று கையை பிசைந்துகொண்டு பதட்டத்துடன் நின்றிருந்தாள்.
“இப்ப எப்படி போவீங்க கம்பெனி கேப் இந்த நேரம் இல்லையே உங்களுக்கு அப்ஜக்சன் இல்லைனா என் கார்ல வரமுடியுமா?” என்றதும்
முதலில் தயங்கினாலும் குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போயிடுமே தன்னையும் தேடுவானே என்று அச்சப்பட்டவள் “ஓ.கே சார் வரேன்” என்றாள் தயங்கியபடி.
முதன் முதல் ராகவனின் காரில் ஏறினாள் திவ்யா. தன் அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் பக்கத்துவிட்டு அண்ணாவுடன் ஆபிஸ் வந்திருக்கிறாள் ஒருநாளும் ஆபிஸில் வேலை செய்பவரின் காரிலோ பைக்கிலோ சென்றதில்லை.
அக்கவுண்ட் செக்சனில் இருக்கும் புவனா ராகவன் காரில் திவ்யா ஏறுவதை பார்த்துவிட்டு “ஓ இவ ராகவன் சாரையும் விட்டு வைக்கலை… மதிய நேரத்தில் ராகவன் சார் கூட தனியா எங்கயோ போறா பாரு” என்று தன் செக்சனுக்கு போய் ஸ்டெல்லாவிடம் “திவ்யா ராகவன் சார் கூட காரில் போறா” என்று பற்ற வைத்துவிட்டாள்.
மதியம் சாப்பிடும் நேரம் திவ்யா ராகவனை பத்தி பேச்சு நடந்துக் கொண்டிருந்தது.
“சிடு மூஞ்சு சித்தப்பனையே கைக்குள்ள போட்டுக்கிட்டா பாரு” என்று குசுகுசுவென்று பேச்சுகள் அந்த ஹாலை அலங்கரித்தது.
சாப்பிட வந்த ஜானவியோ இவர்களை முறைத்துவிட்டு இவளுக எல்லாம் ஒரு ஆளா என்று துச்சமாக பார்த்து சாப்பிட்டுச் சென்றாள்.
மாலையானதும் ரிப்போர்ட் கொடுக்க கிருஷ்ணாவுக்கு போன் செய்ய அவனோ சீட்டில் இல்லாமல் இருக்க போன் எடுக்கலையே இப்ப என்ன பண்றது என்று யோசித்தவள் ரிப்போர்ட் பென்டிரைவ்வை டேபிள்ல வச்சிட்டு கிளம்பிடலாம் என்றவளோ தன் வேலையை பென்டிரைவ்வில் காபி செய்து அவனது அறைக்கதவை எதற்கும் தட்டிவிட்டே உள்ளே போகலாம் என்று கதவில் கையை வைக்க கிருஷ்ணாவும் கதவை திறக்க ஜானவி அவளது லாங் மிடி தடுக்கி பேலன்ஸ் இல்லாமல் கீழே விழப்போக “ஏய் பார்த்து கண்ணை என்ன பிடரியிலா வைச்சிருக்க” அவள் இடுப்போடு அணைத்துப்பிடித்தான்.
அவளது வெற்று இடுப்பில் அவனது முரட்டு கை அழுந்தப்பற்றியதும் அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல பதறிக்கொண்டு வந்தது. இருவரது கண்களும் களவாடிக்கொண்டது.
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌