ATM Tamil Romantic Novels

பச்சை அரக்கனின் நீலப்பாவை

பாவை 5
 
 
ஒரு நிமிடம் இருவரும் மோனநிலையிற்கு மாறிவிட்டனர். அவனோ கண்ணைச் சிமிட்டாமல் பார்க்க இவளோ எச்சிலை விழுங்கிக்கொண்டு “சார் கொஞ்சம் என் இடுப்பிலிருந்து கையை எடுக்குறீங்களா?” என்றாள் கண்ணைச்சிமிட்டிக்கொண்டு படபடப்போடு.
 
“நான் கையை விட்டா நீ கீழே விழுந்துடுவ பரவாயில்லையா?” என்றான் புருவம் உயர்த்தி நக்கலாக.
 
“மெதுவா கையை எடுங்க சார்… நான் பேலன்ஸ் பண்ணிக்குவேன்” என்றாள் கீச்சுக்குரலில்.
 
அவளது இடுப்பை வருடிக்கொண்டுதான் கையை எடுத்தான் மன்மதனான கிருஷ்ணா.
 
“ஒரு பொண்ணு எப்ப கீழ விழுவானு பார்த்து இடுப்பை பிடிச்சு தடவுறீங்க… இதெல்லாம் நல்லாயில்லை சார்! கம்பெனியோட எம்டி இப்படியா ஸ்டாஃப்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுவீங்க” என அவளது இடுப்பை தடவியதில் கோபம் வந்துவிட்டது ஜானவிக்கு.
 
“ஹலோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! யார்கிட்ட பேசுறோம்னு தெரிந்து பேசுங்க மேடம் கீழ விழுந்து இடுப்பு உடையணும்னு விட்டிருக்கணும் தாங்கி பிடிச்சேன் பாரு என்னை சொல்லணும்! நான் கையை மெதுவாதான் எடுத்தேன் உன் இடுப்பு வழ வழனு இருந்துச்சு என்னோட கை விரல் கொஞ்சம் கரடு முடரா இருக்கும் அதான் மெதுவா உருவி எடுத்தேன். நீ என்னை தவறா புரிச்சிக்கிட்டா நான் பொறுப்பு ஆக முடியாது நான் என்னமோ வேணும்னு இடுப்பை தடவுனது போல சித்தரிச்சு பேசுற! உன் வாய் கொஞ்சம் நீளமா இருக்கு சுருக்கி பேசி பழகு.  ஆமா என் ரூம்க்கு வரும்போது போன் பண்ணனும்னு சொல்லியிருக்கேன்ல உனக்கு என்ன அம்னீஷியாவா நான் சொன்னது மறந்து போச்சா?” என்று அவன் தோரணையாக கேட்க
 
அவளோ “சார் எனக்கு அம்னீஷியா எல்லாம் கிடையாது! நான் இன்டர்காம்ல உங்களுக்கு கால் பண்ணினேன் நீங்க போன் பிக் பண்ணல… என்னோட வேலை நேரம் முடிஞ்சிருச்சு ரிப்போர்ட் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்று அவள் அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்தாள்.
 
“ஆமா எனக்கு வேற வேலையே கிடையாது! ஒரு நாளைக்கு 100 பேர்கிட்ட இருந்து எனக்கு போன் வரும்! உன் போன் வரும்னு நான் காத்திருப்பேன் பாரு! ஐ ஆம் பிஸி மேன்! உன்கிட்ட இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது மேடம்… நீ 5 மினிட்ஸ் வெயிட் பண்ணி மறுபடியும் எனக்கு போன் பண்ணியிருக்கணும்! உனக்கு இந்த கம்பெனியில மட்டும் தான் வேலை எனக்கு அப்படி கிடையாது மேடம்! பல கம்பெனிகளை பார்க்கணும்! நீங்கி வெயிட் பண்ணி ரிப்போர்ட் கொடுத்துட்டுதான் போகணும் உங்களுக்குத்தான் எந்த நேரமும் கம்பெனி கேப் அலாட் பண்ணிக் கொடுத்திருக்கேனே இந்த வசதி யார் கொடுப்பாங்க!  கீழ விழப்போனவளை தாங்கிப் பிடிச்சேன் இடுப்பை தடவினேன்னு என் மேல பழியை போடுற” என்று அவளை நிற்க வைத்து சரமாரியாக தாக்கிவிட்டான்.
 
“சார் நீங்க பிஸி மேனா இருந்துட்டு போங்க! என்னோட ஒர்க் டைம் முடிஞ்சா நான் கிளம்பிட்டே இருப்பேன்! யாருக்கும் நான் அடிமை கிடையாது சார்! நீங்க என் இடுப்பை தடவினது தப்புதான் சாரி கேளுங்க” என அவனிடம் சண்டைக்கு நின்றாள் எம்டி என்றும் பாராமல்.
 
“நான் சாரி கேட்கணுமா குட் ஜோக்! ரிப்போர்ட்டை கொடுத்துட்டு கிளம்புங்க! நான் யார்கிட்டயும் சாரி கேட்டு பழக்கம் இல்லை அண்ட் நான் உங்க இடுப்பை தடவவும் இல்லை. மெதுவா கையை எடுத்தேன்” என்று அடித்துப்பேசினான்.
 
சரியான ஈகோயிஸ்ட்டா இருக்கானே! என்று பொங்கியவள் “எனக்கு உங்க கம்பெனியில வேலை செய்ய விருப்பம் இல்லை சார்… நான் இப்பவே என்னோட ஜாப்பை ரிசைன் பண்ணுறேன் உங்களை போல காமுகன் கிட்ட என்னால வேலை செய்ய முடியாது” என்றாள் அவன் கண்களை பார்த்தபடியே தைரியத்துடன்.
 
“யாரை பார்த்து காமுகன்னு சொல்லுற கன்னம் பழுத்துரும் பார்த்துக்கோ! நீங்க நினைச்சவுடன் வேலைக்கு வரதும்… அடுத்த நாளே என்னோட கம்பெனியை விட்டு போகநும்னு சொல்ல  முடியாது மேடம்! என் கம்பெனில ஒரு வருசம் வேலை செய்யணும் அப்படித்தான் நீங்க அக்ரிமெண்டல சைன் பண்ணியிருக்கீங்க! இதுதான் கம்பெனி டேர்ம்ஸ்” என்றான் தோளைக்குலுக்கிக்கொண்டு அவன் பேச்சில் அதிகாரம் தூள் பறந்தது.
 
“ஓ.கே அக்ரிமெண்ட் பிரேக் பண்ணனும்னா 3 மன்த் சாலரி கொடுக்கணும்தானே நான் பணம் கொடுத்துட்டு கம்பெனியை விட்டு கிளம்புறேன் அமௌண்ட் எவ்ளோனு சொல்லுங்க சார்” என்றாள் எரிச்சல் குரலில்.
 
“ஹான் ரொம்ப திமிர்காரியாத்தான் இருக்கா இவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்று தாடையை தேய்த்துக்கொண்டு “என் கம்பெனிக்குள்ள வந்துட்டா அவ்ளோ சீக்கிரம் வெளியே விடமாட்டேன் மிஸ் ஜானவி 50 லட்சம் கொடுத்துட்டு என் கம்பெனியை விட்டு போகலாம்” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி நக்கல் தொனியில்.
 
“வாட் 50 லட்சமா! இது அநியாயம் நான் கோர்ட்டுக்கு போவேன்” என்று அவளும் எகிறினாள்.
 
“என்னோட வேல்யூ தெரியாம பேசாத சின்ன பாப்பா! கோர்ட்க்கு போனா கேஸை நிற்க விடாம பண்ணுவேன்! நீ எந்த கம்பெனிக்கு போனாலும் என்னைய விட மோசமானவனுங்கதான் இருப்பாங்க! மறுபடியும் சொல்றேன் நீ கீழ விழப்போகத்தான் நான் பிடிச்சேன் வேணும்னு உன் இடுப்பை தடவ கோர்ட் கேஸ்னு போனா எனக்கு ஒண்ணும் பிராப்ளம் கிடையாது எதை எப்படி முடிக்கணும்னு எனக்கு தெரியும்!” என்றான் கழுத்தை தேய்த்துக்கொண்டு
 
“எனக்கு ஒருநாள் டைம் கொடுங்க நாளைக்கு வரேன்” என்று ஏசி அறையிலும் அவளுக்கு வியர்த்துக்கொட்டியது முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டாள் பெண்ணவள்.
 
அப்பாடி சரியான பஜாரி போல ஆடுறாளே! நான் யார்கிட்டயும் தலைகுனிஞ்சு போனதா சரித்திரம் கிடையாதுடி… ஆமா உன்னோட இடுப்பை தடவினேன்தான் நான் கையை வச்சதும் சும்மா வாழைதண்டு போல வழ வழனு என் கை போச்சு தடவாம இருக்க முடியுமா எத்தனையோ பொண்ணுங்க இடுப்பை தொட்டாச்சு. உன் இடுப்பு டிஃப்டரண்டா இருந்துச்சு தடவி பார்க்கத்தான் போறேன் முழுசா கிடைக்குமா தெரியல வலையை போடுவோம் மீன் மாட்டுச்சுனா பொரிச்சு சாப்பிடவேண்டியதுதான்” என்று தோளைக்குலுக்கியவனுக்கு போன் வர “மெயில் செக்பண்ணுறேன் சார்” என்றபடியே லேப்டாப்பிற்குத் தாவினான்.
 
திவ்யா காரில் போகும்போது “ஹர்சா குட்டி அம்மா வந்துட்டேயிருக்கேன்டா அழாம சமத்தா இருங்க அம்மா வந்ததும் சிரப் கொடுப்பேன் உங்களுக்கு காய்ச்சல் சரியாகிடும்” என்று 
மகனுக்கு சமாதானம் கூறிக்கொண்டிருந்தாள். திவ்யாவின் முகத்தில் தாய்க்கான பரிதவிப்பை மிரரில் பார்த்துக்கொண்டே வந்தான்.
 
‘எனக்கு ஏழு கழுதை வயசாச்சு நான் சின்னதா தும்மினாவே அம்மா கசாயம் போட்டுக் கொடுப்பாங்க. எல்லா அம்மாவும் பசங்களுக்கு உடம்பு சரியில்லைனா திவ்யா போல இப்படித்தான் பதறுவாங்க போல’ என்று மெலிதாய் உதடு விரித்து சிரித்துக்கொண்டான். 
 
திவ்யாவின் வீட்டு முகவரியை காரில் ஏறும்போதே சொல்லியிருக்க அவளது அப்பார்ட்மெண்ட்டில் நிறுத்தினான்.
 
திவ்யாவோ காரை விட்டு இறங்கியதும் ராகவனை வாங்க என்று அழைக்காமல் கூட மகனை பார்க்க ஓடிவிட்டாள்.
 
ராகவனும் அவள் கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. குழந்தை உடம்பு சரியில்லைனு சொன்னதும் உதவி பண்ண வந்திருக்கோம் அவ்ளோதான் என்று அவனும் சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.
 
திவ்யாவோ வீட்டுக்குள் சென்றதும் “ம்மா” என்று வனஜாவின் மடியிலிருந்த ஹர்சாவோ திவ்யாவிடம் தாவிக்கொண்டான். உடல் நெருப்பாக கொதித்தது. 
 
“காலையில மருந்து கொடுத்து தூங்க வச்சிட்டுதானே போனேன் எப்படிமா இவ்ளோ உடம்பு நெருப்பா கொதிக்குது என்ன சாப்பிட்டான்மா?” என்று அவள் கவலையோடு கேட்க
 
“நீ தூங்க வச்சு போனதும் கொஞ்ச நேரத்துல எழுந்துட்டான் ஒரே வாந்தி விடாம வாந்தி எடுத்ததும் காய்ச்சல் அதிகம் ஆகிடுச்சு போல” என்றார் ஆயாசமாக.
 
“சரி இப்ப டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போகணும் ஹர்சாவுக்கு தேவையானதை எடுத்துட்டு வாங்க பக்கத்துல இருக்க டாக்டர் வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என்றவளோ ஹர்சாவுக்கு விக்கல் வர சுடுதண்ணீரை குடிக்க கொடுத்தாள்.
 
சுடுதண்ணீர் கூட குழந்தைக்கு வயிற்றில் நிற்கவில்லை வாயிலிருந்து வெளியே வாந்தி எடுத்து விட்டான்.
 
ஹர்சா சோர்ந்து போக அவனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் ராகவனின் கார் நிற்பதை கண்டு ‘அச்சோ சாரை மறந்துட்டோமே வீட்டுக்குள்ள கூட கூப்பிடலையே தவறா நினைச்சிருப்பாரோ’ என்று வருத்தப்பட்டுக்கொண்டு காருக்கு அருகே சென்றவளை “காருல ஏறுங்க திவ்யா” என்று கார் கதவை திறந்து விட்டான் ராகவன் பெருந்தன்மையாக.
 
“சாரிங்க சார் என் பையனுக்கு ரொம்ப உடம்பு முடியலைனதும் உங்களை வீட்டுக்குள்ள கூட கூப்பிட முடியலை சாரி” என்றவாறே காருக்குள் ஏறியவளின் பின்னாலேயே வனஜா வந்தார். 
 
“ம்மா கார்ல ஏறுங்க” என்றதும் அவரோ ராகவனை பார்த்துக்கொண்டே ஏறினார். திவ்யா வேலைக்கு கம்பெனியில் ஜாயின் பண்ணும் போது ராகவனை பார்த்திருக்கிறார். 
 
“பரவாயில்ல திவ்யா உங்க சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டேன் இன்னொரு நாள் வீட்டுக்கு வரேன் இப்போ எந்த ஹாஸ்பிட்டல் போகணும்?” என்றான் ஹர்சாவை பார்த்துக்கொண்டு.
 
திவ்யா டாக்டர் வீட்டை சொல்ல டாக்டர் வீட்டுக்கு கூட்டிச்சென்றான் ராகவன்.
 
குழந்தைய செக் பண்ணிக்கொண்டே “ஹர்சாவுக்கு இரண்டு வயது முடியப்போகுதுல” என்றவாறே “ட்ரிப் போடணும் காய்ச்சல் அதிகமா இருக்கு” என்றதும் ஹர்சாவோ “ஊசி வேணா வேணா வேணா” என்று அழுக ஆரம்பித்தான்.
 
திவ்யாவோ “ஹர்சா குட்டி காய்ச்சல் சரியாகணும்ல டாக்டர் அங்கிள் ஊசி வலிக்காம போடுவாங்க சரியா” என்றவளோ அழும் ஹர்சாவை தூக்கிக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்தாள்.
 
ஹர்சா “வேணா வேணா” என்று தொண்டை வற்றும் அளவிற்கு கையை காலை உதறி கத்த டாக்டரோ “குழந்தையோட அழுகையை நிறுத்துமா மூச்சு முட்டும்! அப்புறம் ட்ரிப் ஏத்தலாம்” என்றார்.
 
வெளியே நின்றிருந்த ராகவனோ ஹர்சா அழும் சத்தம் கேட்டு ஹர்சா இருந்த அறைக்குள் சென்றவன் “ஏன் பையன் அழறான்!” ஹர்ஷாவின் பக்கம் வந்து நின்றான்.
 
வனஜாவோ “காய்ச்சல் அதிகம் இருக்கு ட்ரிப் ஏத்தணும்னு சொல்றாங்க தம்பி… ஆனா என் பேரன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறான்” என்று விசனப்பட்டார்.
 
திவ்யா கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த ஹர்சாவின் பக்கம் சென்று “அங்கிள்கிட்ட வரீங்களா?” என்று கையை நீட்டினான் ராகவன். 
 
“வாய் கசக்குது சாக்லேட் வாங்கித்தரீங்களா? இன்ஜெக்ஷன்” என்று கண்ணை உருட்டினான்.
 
“வாங்க வாங்கித்தரேன்” என கண்ணைச் சிமிட்டி சிரித்ததும் திவ்யாவை ஒரு முறை பார்த்தான் ஹர்சா.  அவள் “போ” என்றதும் ராகவனிடம் தாவினான் ஹர்சா.
 
ஹர்சாவை தூக்கிக்கொண்டு அறைக்குள்ளே நடந்தவன் “நீங்க இன்ஜக்சன் போட்டுக்கிட்டாதான் சாக்லேட் சாப்பிட முடியும் டாக்டர் அங்கிள் வலிக்காம இன்ஜக்சன் போடுவாங்க சமத்து பையன்தானே நீங்க காய்ச்சல் சரியானதும் அங்கிள் ஒரு பாக்ஸ் சு
சாக்லேட் வாங்கித்தருவேன்” என்று அவனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்ததும் “எனக்கு ரெண்டு பாக்ஸ் சாக்லேட் வேணும்” என்றவனோ ராகவனின் கையை மட்டும் விடவில்லை.
 
திவ்யாவோ டாக்டரை அழைத்து வர சமாதானம் ஆகிட்டானா என்றபடியே ஹர்சாவின் கையை பிடிக்க “வலிக்காம ஊசி போடுங்க டாக்டர்” என்றான் இதழ் பிதுக்கி.
 
“வலிக்காது தம்பி” என்று ஹர்சாவின் கன்னத்தை தட்டிக்கொடுத்து “நர்ஸ் பையன் கையை பிடிச்சிக்கோங்க” என்றதும் நர்ஸ் ஹர்சாவின் கையை பிடிக்க “நீங்க பிடிக்காதீங்க கை வலிக்கும்” என்று அவன் அழுக ஆரம்பிக்க ராகவனோ “நான் பிடிக்குறேன்” என்றதும்தான் ஹர்சா அழுகையை நிறுத்தினான்.
 
டாக்டர் வென்ஃபிளான் வலியாக அவனுக்கு ஊசியை போட்டு காய்ச்சல் குறைவதற்கு மருந்தை இறக்கினார். 
 
கொஞ்ச நேரத்தில் ஹர்சா மருந்தின் உபயத்தில் கையை ஆட்டிவிடுவானோவென்று திவ்யாவோ ஹர்சாவின் கையை தடவிக் கொண்டேயிருந்தாள். வனஜாவோ நாற்காலியில் உட்கார்ந்தபடி உறங்கியிருந்தார்.
 
ராகவன் கையை ஹர்சா பிடித்தபடியே உறங்கியிருக்க குழந்தையின் கையை எடுத்து விட்டு கிளம்பவும் அவனால் முடியவில்லை. இது வரை எந்த குழந்தையையும் தூக்கி கொஞ்சினது கிடையாது அதற்கு அவனுக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. ராகவனின் தந்தை மிலிட்டரியில் இருந்து  ரிட்டையர்ட் ஆனவர். தாய் சுஜாதா கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் இருவரும் மகனிடம் கண்டிப்புடன் இருந்தாலும் அன்பைக்காட்டத்தவறவில்லை. ராகவனுக்கு ராகும் கேதுவும் அவனது ஜாகத்தில் பாடாய் படுத்தி திருமணஞ்சேரி, திருப்பதி என்று எல்லா கோவில்களுக்கும் சென்று வந்து விட்டான் கல்யாணம் மட்டும் நடந்தபாடில்லை அவனுக்கு 38 வயதாகிறது. அவனும் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று முடிவுக்கே வந்துவிட்டான். ஆபிஸிலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டான் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்வான். 
 
ஹர்சா திவ்யாவை போல குண்டு முகம் கோலிக்குண்டு கண்கள் என்று குழந்தையை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருக்க தோன்றியது ராகவனுக்கு. சுஜாதா இரண்டு முறை போன் செய்து விட்டார் ஏன் வீட்டுக்கு வரவில்லையென்று.
 
குழந்தை தூக்கம் கெடுமென்று போனை சைலண்ட்டில் போட்டுவிட்டான். போன் வைபரேட் ஆக போனை பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் “ம்மா நான் காலையில வரேன் ப்ரண்ட் குழந்தைக்கு உடம்பு சரியில்லை அவங்ககூட இருக்கேன்” என்று மெதுவான குரலில் பேசியவுடன் “யார்டா எனக்கு தெரியாத உன் புது ப்ரண்ட் கிருஷ்ணாவுக்கு கல்யாணம் இன்னும் ஆகலை அவன் மட்டும்தான் உனக்கு பிரண்ட் யாரு புதுசா பிரண்ட்னு சொல்லுற?” என்று சுஜாதா கேட்க
 
“ம்மா காலையில வந்து சொல்றேன்” என்று போனை வைத்துவிட்டான். திவ்யாவிற்கு சங்கடமாக இருந்தது ராகவன் தன்னுடன் இருப்பது. 
 
“சார் நீங்க கிளம்புங்க” என்றாள்.
 
“ஏன் திவ்யா நான் உங்க கூட இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா! இல்ல ஆபிஸ்ல உங்களை யாராவது தப்பா பேசுவாங்கனு பயமா இருக்கா..? அடுத்தவங்க என்ன வேணா பேசுவாங்க நாம நம்ம வேலையை பார்த்துட்டு போயிடணும்…” என்றவனோ “ட்ரிப்ஸ் முடிஞ்சிடுச்சு நர்ஸை கூட்டிட்டு வரேன்” என்று சென்றுவிட்டான்.
 
‘என்ன இவரு ஆபிஸ்ல ரெண்டு வார்த்தை கூட சேர்ந்து பேச மாட்டாரு இப்ப என்னாச்சு இவருக்கு?’ என்று திவ்யா ஆச்சரியமாய் பார்த்தாள் ராகவனை.
 
நர்ஸ் வந்தவர் ட்ரப் மாத்திவிட்டுச் சென்றார். ராகவன் திவ்யாவிற்கும் வனஜாவிற்கும் சாப்பிட வாங்கி வந்தான்.
 
“சார் உங்களுக்கு எங்களால சிரமம்?” என்று அவள் சங்கடப்பட
 
“இருக்கட்டும் ஒரு நண்பனா செய்யுறேன் என்றவனோ “ஆன்ட்டி சாப்பிடுங்க” என்று வனஜாவுக்கு உணவு பார்சலை கொடுத்தான்.
 
வனஜாவோ இது போல மருமகன் என் மகளுக்கு கிடைக்காமல் போய்விட்டானே! என்று மருகிப்போய் உணவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்.
 
திவ்யாவோ “நான் அப்புறம் சாப்பிடறேன் சார் நீங்க சாப்பிடுங்க” என அவள் மறுத்துவிட 
 
“நான் சாப்பிட்டுதான் உங்களுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க” என்று ஹர்சாவின் கையை பிடித்துக்கொண்டான்.
 
திவ்யாவோ என்ன இது இப்படி விழுந்து விழுந்து கவனிக்குறாரே? என்று சங்கடப்பட்டே சாப்பிட எழுந்தாள்.
 
பெயருக்கு சாப்பிட்டு எழுந்தவள் மீண்டும் மகன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள்.
 
இரவில் திவ்யா கூட கண்ணயர்ந்து விட்டாள் ராகவன் ஹர்சாவின் கையை பிடித்துக்கொண்டே தூங்காமல் குழந்தையை பார்த்துக்கொண்டேயிருந்தான்.
 
காலையில் ஹர்சாவிற்கு காய்ச்சல் குறைந்து விட ஹர்சா எழுந்து மெத்தையில் ரவுண்ட் அடித்தான். கையில் இன்னும் வென்ஃபிளான் இருக்க “ஹர்சா கைய எங்கேயும் ஊனி இடிச்சுக்காதே” என்று திவ்யாதான் பதறிக்கொண்டிருந்தாள்.
 
டாக்டர் வந்து விட “ஃபீவர் குறைஞ்சிடுச்சு மருந்து மட்டும் கொடுங்க” என்று சிரப் எழுதிக்கொடுத்து வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டார் டாக்டர்.
 
பில் கட்டும் இடத்திற்குச் சென்று ஹர்சாவின் பெயரை சொல்ல “உங்க ஹஸ்பண்ட் பில் பே பண்ணிட்டாரு மேடம்” என்றதுமே அவளுக்கு சுருக்கென்று வலித்தது.
 
ஹர்சாவை தூக்கிக்கொண்டு வந்த ராகவன் முன்னால் நின்றவள் “சார் மெடிசன் பில் நீங்க கட்டினதா சொன்னாங்க இந்தாங்க பணம்” என்று அவள் பேக்கிலிருந்து எடுத்து ராகவன் கையில் கொடுக்க அவனோ “இது மாசக் கடைசியில பணம் இருக்காதுனு நினைச்சேன் சரி கொடுங்க” என்று வாங்கிக்கொண்டான்.
 
திவ்யாவிற்கோ இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. திவ்யாவின் அப்பார்ட்மெண்டில் இறக்கி விட ஹர்சா “அங்கிள் வாங்க” என்று ராகவன் கையை பிடித்து கூப்பிட “அங்கிள்க்கு ஆபிஸ் டைம் ஆச்சு தங்கம் நீ வா” என்று மகனை தூக்கிக்கொண்டாள் திவ்யா.
 
யாரும் தன்னை தவறாக ராகவனுடன் சேர்த்து வைத்து பேசக்கூடாதென அவள் நினைத்துத்தான் ராகவனை வீட்டுக்குள் கூப்பிடவில்லை. ராகவனும் திவ்யாவின் மனநிலையை புரிந்தவன் “அங்கிள் இன்னொரு நாள்  சாக்லேட் வாங்கிட்டு வரேன் மை பாய்” என்று குழந்தையின் கன்னத்தில் தட்டி விட்டு “நான் வரேன்ங்க ஆன்ட்டி” என்று வனஜாவிடம் பேசியவன் “இன்னிக்கு லீவு எடுத்துக்கோங்க திவ்யா” என்று கூறிவிட்டு காரை எடுத்துச் சென்றான்.

2 thoughts on “பச்சை அரக்கனின் நீலப்பாவை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top