ATM Tamil Romantic Novels

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-1

மோகனப் புன்னகையில் வீழ்ந்தேனே

 புன்னகை-1

அது சுற்றிலும் மலைப்பாங்கான… பனியடர்ந்த.. பச்சைப்பசேலென்ற…, பனிமுகிலின் எழிலும் சொட்டும் குறிஞ்சிப் பிரதேசம்!!

எதிரே இருக்கும் எதிராளி யாரென்பதைக் கூட கண்டுகொள்ள முடியாதளவுக்கு சுற்றிலும் சூழ்ந்திருந்த உறைபனி.. கண்ணின் வெண்விழிப்படலைத்தையும் மறைத்திருக்க… அப்படியொரு குளிர்!!

அப்படியான இடம்தனிலே… ஒற்றையில் அதுவும் தனிமையில்.. வெற்று வெண்ணிறப் பாதங்கள் கொண்ட பெண்ணொருத்தி நின்றிருந்தாள் பர்வதத்தின் உச்சியின் மீதினிலே!!

சருமத்தினூடாக ஊடுருவி.. என்புமச்சையின் அந்திமம் வரைத் தாக்கும் அதீதக் குளிரில்.. யௌவனப் பெண்ணவளின் பற்களும் தான் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது!!

அங்கே ஜில்லென்று சீறிட்டுப் பாயும் தென்றல்க்காற்று.. பூங்காரிகையவளையும்.. தழுவிச் செல்ல… இரு கரங்களாலும்.. தன் மேனியை தழுவிக் கொண்டே நின்றவள் அவள்.

தேவமதுரம் போல பார்ப்பவருக்கு இனிமை தரும் விதத்திலிருப்பவள். தேவ மதுராக்ஷி!!

  திக்குத் தெரியாத கானகத்தில்.. அந்தத் தனிமை ஒரு பெரும் பயத்தைப் பரிசளிக்க…. கூட்டை விட்டு வெளிவந்த குஞ்சுப்பறவையைப் போல… மனதோடு யாரையோ தேடிவிழிகள் அலைபாய… அலைகின்றாள் அவள்.

 பாதங்களிலோ… புல்லின் பனிக்குளிர்ச்சி ஊடுருவி.. மூளை வரைத் தாக்கும் போலிருக்க, “மதுராக்ஷி”யின் உடல், உள்ளம், பொருள் யாவுமே… ஏதோ ஒன்றை.. அவளை அரணாகத் தாங்கிப் பிடிக்குமொன்றை பெரிதும் எதிர்பார்த்துத் தவித்தது!!

அவள் கால்களும் அங்கே நில்லாது மெல்லோட்டமொன்றை ஓடத் தொடங்க… தோள்வரை தாண்டி வெட்டப்பட்டிருந்த கூந்தலும் தான்.. அவளது மார் மேல் பட்டு பட்டு எகிறிக் குதிக்கத் தொடங்கியது அவள் ஓட்டத்துக்கு ஏற்ப!!

இந்தக் கண்களின் தேடல் யாருக்கானது? தெரியவில்லை.

இந்தப் பாதங்களின் ஓட்டமும் யாருக்கானது? தெரியவில்லை.

இதயத்தின் இலயம் தப்பிய துடிப்பும் தான் யாருக்கானதாம்? அதுவும் தெரியவில்லை.

ஆயினும் எதுவோ ஒன்றை பற்றிக்கொள்ள.. ஆதுரமாய் மனம் ஆதாரம் தேடியலைய.. அந்த மலையுச்சி முகட்டுத் திடலில் ஓடிக் கொண்டிருந்தவள்.. சுற்றுமுற்றும் விழிகளை அலைபாய விட்டுக் கொண்டே… உலாவினாள். விழிகளில் ஒருவித அச்சத்துடன்!!

அந்த பிரதேசத்தை விழிகளால் அளந்து கொண்டே.. அடி மேலே அடி வைத்து… அவள் பின்னோக்கி பின்னோக்கி நடக்க… ஏதோ தேக்குமரத்தண்டில் மோதினாற் போல ஓர் உணர்வு மதுராக்ஷியை சூழ்ந்து பிடித்துக் கொள்ளத் தொடங்கியது.

வெட்டவெளித்திடலில் ஏது தேக்குமரம் நின்றிருக்கவும் கூடும்??

இதழ்களை மறைத்து வீழ்ந்து.. கூந்தல் ஒட்டிப் போகும் வண்ணம் மெல்லிய சிலுசிலுவென்ற காற்று வீசினாலும்.. இதழ் மறைத்த கூந்தலை எடுத்துப் போடும் உணர்வேயற்று.. அந்தத் தேக்குமரத்தை நோக்கி திரும்பினாள் அவள்.

அவள் எண்ணினாற் போல அங்கே திடும்மென்று முளைத்திருந்தது தேக்குமரம் அல்ல!! மாறாக, யாரோ ஒரு திடகாத்திரமான.. வலிய ஆஜானுபாகுவான ஆண்மகன் தான் அது என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தும் போனது மதுராக்ஷிக்கு!!

இளநீலநிறத்தில் டீஷேர்ட்டும், டெனிமும் அணிந்து.. உடலளவில் இராக்ஷசனாய் ஒருத்தன் நின்றிருந்தாலும்.. இந்த ஆபத்தான இடத்தில் நின்றும் அவளை காக்கப் போகும் ஆபத்பாந்தவனாகவே தோன்றிற்று.. அவனைப் பார்க்கும் போது மதுராக்ஷிக்கு!!

அவள் நீளநயனங்கள் மெல்ல நிமிர்ந்து… அந்த ஆடவனின் விழிகளை ஏறிட முயல… அதீதமான பனியில் எதையும் சரிவர காண முடியாமல் போனாலும்.. அவனது இலேசாக கருமை படர்ந்த அதரங்களே விருந்தானது.. மங்கையின் கண்களுக்கு!

சட்டென்று அண்ணார்ந்து பார்த்தவளுக்கு.. தன்னெதிரே நிற்பது யார்? அவன் இராட்சஷனா இரட்சகனா? என்று.. அனுமானிக்க முடியாமற் தான் போனது.

தன்னெதிரே இருக்கும் முகத்தின் அடையாளம் கண்களுக்குள் விரியாமல் அவஸ்தையை மூட்டவே, இம்முறை வாய் திறந்து,

தட்டுத்தடுமாறி “யா.. யாரது…?”என்று கேட்டுவிட அவள் எத்தனித்த போது தான்… அவள் கிஞ்சிற்றும் எதிர்பாராத பலவும் நிகழ்ந்தேறலானது.

அவனுடைய வலிய கரங்களுள் ஒன்று மேலெழுந்து.. இதழ் மூடி வீழ்ந்திருக்கும் கூந்தல்க்கற்றைகளை மெல்ல… எடுத்து விட எத்தனிக்க,

மயிரடர்ந்த முரட்டுக் கைகள்… அவளது திறந்திருந்த ஈர அதரங்களின் பிளவில் பட்டு உரசி… அவளுள் மூட்டியது அனல்மூச்சு!!

அதில்.. அவள் தனங்கள் ஏறியிறங்க.. தத்தளித்து.. அவன் வதனம் பார்க்கத் தவித்து நிற்க.. இம்முறைக் கேட்டது அவனின் கரகரத்த மன்மதக் குரல்!!

ஒட்டுமொத்த கூந்தல்க்கற்றையும் அவள் வதனம் நின்றும் அப்புறப்படுத்தியவன்… மாசுமருவற்ற.. குமரியின் அழகு வதனம் பார்த்தான் இமையாமல்!!

குரல் வேறு ஹஸ்கி குரலில்…. ஆளை அசரடிக்கும் வண்ணம் வெளிவர… அவனிதழ்க்காற்று… இவள் மூக்குநுனியில் பட்டு மோத, “இங்கே தான் இருக்கீயா… உன்னை எங்கெல்லாம் தேடுறது?”என்று மோகனமாய் கேட்டான் அவன்!!

எது? இந்த அரக்க உடல் படைத்த முகமறியா முகமூடிக் கொள்ளைக்காரன்… அவளைத் தேடினானாமா??

நயனங்கள் பட்டென்று விரிய, அதேகணம் அதிர்ச்சியில் மதுராக்ஷியின் இதழ்களும் தந்தியடிக்கத் தான் தொடங்கியது.

“யா… யாரு நீ.. நீ.. நா.. நான் இப்.. போ எங்கேயிருக்கேன்?” என்றவளாக… பனிமூட்டம் சூழ்ந்த அவனது வதனத்தைக் கண்டுவிட நாடிய போது தான்… அதிரடியாக.. அசாத்தியமாக… அதே சமயம்.. அநாயசமாக.. தன்இரு கைகளாலும்…

அவளது மாதுளம்பழம் போன்ற சிவந்த கன்னங்களிரண்டையும் பற்றி… அருகே இழுத்தான் தேவமதுரப் பெண்ணவளை!!

அவன் பற்றுதலில்… பாவையவளின் அதரங்கள் மீன்குஞ்சின் இதழ்கள் போல.. பேரழகாய் குவிய.. தன் கவனத்தையெல்லாம் அதன் மீது குவித்தான் அந்த தாப அரக்கன்!!

ஹைய்யைய்யோ என்னேவிதமான சோதனை இது!!

திக்குத் தெரியாத காட்டில்… கன்னிப்பெண்ணொருத்தியின் மீது.. முன்பின் அறியாத அரக்கனும் எல்லை மீறுவதோ??

இதயம் தண்டவாள இரயிலைப் போலத் தடதடக்கத் தொடங்க.. அவன் தன் இதழ்கள் நெருங்கி வருவது அறிந்து.. அவனது டீஷேர்ட்டை இரு கைகளாலும் பற்றி… அவனைத் தன்னில் நின்றும் தள்ளிவிடத் தான் யத்தனித்தாள் மதுராக்ஷி!!

அவனோ… ஏந்திழையின் தவிப்புக்களையும், தவிர்ப்புக்களையும் அநாயசமாக எதிர்கொண்டு… இதழ்களின் மல்லிகைப்பூ வாசனையில் கிறங்கி… அவள் இதழ்களை முழுமையாக தன்னதற்குள் கௌவிக் கொண்டான்!!

இதழ் ஈரம் பட்டதும்… அவளது குதிக்கால்கள் எல்லாம் எம்பி.. முழு உடலும் முறுக்கெடுத்தாற் போல வெட்டி அடங்கியது முழுத்தேகமும்!!

 விழிகள் அகலமாய் விரிய….கைகளோ அவன் சட்டையினை.. இன்னும் இன்னும் இறுக்கிப் பிடித்த கணம்.. அவள் இதழ்களுக்குள் கடத்தப்பட்டது அவனது தித்திக்கும் எச்சில்!!

அதை ஏற்றும் ஏற்க முடியாமல் திணறி நின்ற வேளை… அவனது மூடாத விழிகளோ… அவளையே தான் இமைக்காது பார்த்திருக்க.. மாது அவளின் அத்தனைவிதமான.. இன்ப அவஸ்தைகளையும் கண்டு… இதமாய் புன்னகைத்தான் அவன்.

அவன்!!?? அது தான் யாரென்றே தெரியாதே??

பெண்ணவளின் இதழ்க்கடைந்து… அவள் தெவிட்டத் தெவிட்ட தேன் பருகிக் கொண்டிருந்த வேளையில்…. அவனது அடாவடியைத் தாங்க மாட்டாது…

மேல்மூச்சு… கீழ்மூச்சு வாங்கியவளாக நின்றிருந்த போது..எதிரே நின்றவனின் அதரங்கள் அவள் மூச்சுக்கு சிரமப்படுவது உணர்ந்து.. அவளதரங்களை மெல்ல விடுவிக்கலானது.

அப்போதேனும் அவள் முகம் பார்த்து விடும் எண்ணத்தோடு… எதிரே விழிகள் துலாவித் துலாவிப் பார்த்த வேளை… அங்கே அவன்??

எங்கே??? முகமூடி மாயாவியாய்.. காற்றோடு காற்றாக.. மாயமாகி விட்டிருந்தான் அவன்.

சொல்லாமல் கொள்ளாமல் வந்து முத்தமிட்டுச் சென்றவனை.. அவள் விழிகள் சுற்றுமுற்றும் சுழன்று சுழன்று அந்த வெட்டவெளிப் பிரதேசத்தில் தேட… எங்குமே அவனில்லை;அங்கே அவளொருத்தியைத் தவிர மனித சஞ்சாரத்திற்கான எந்தவிதமான தடமும் இல்லை!!

நெஞ்சினில் ஒருவிதமான திகிலும், அவனில்லையென்றானதும் ஏமாற்றமும் கௌவிப் பிடிக்க… அவன் தீண்டிய இதழ்களை… கடித்துக் கொண்டு… கண்ணீர் மல்க நின்றிருந்த கணம் தான் அது!!

அங்கணம்… வானத்தில் நின்றும், “அக்கா… அக்கா… எழுந்திரு..” என்று அவளை யாரோ உடலை அதட்டி… உலுக்கி எழுப்பும் குரல் கேட்க.. திடுக்கிட்டு.. கனவில் நின்றும் சடுதியாக விழித்து வெளியே… நனவுலகத்துக்கு வரலானாள் மதுராக்ஷி.

மலைப்பாங்கான பிரதேசம்!!

புல்வெளித் திடல்!!

உச்சிமுகட்டு நுனி!!

 குளிர் பனி!! என எல்லாவற்றையும்… சுழன்று விரிந்த கண்கள் தேட… அங்கே அவையெதுவும் இல்லாமலாகி… அவள்.. தனக்கு நன்கு பரிச்சயப்பட்ட மஞ்சத்தில் அமர்ந்திருப்பதும் புரிந்தது.

பட்டென தன் அறை மஞ்சத்தில்… முழங்கால்களைக் கட்டிக் கொண்டு களைந்த கூந்தலை கோதிக் கொண்டே அமர்ந்திருந்தவளுக்கு…

 இன்னும் கனவின் தாக்கம் மீதமிருப்பது போல… இதழ்கள் திறந்து, “ஆ.. ஆ”என்று மூச்சு வாங்கிக் கொண்டேயிருக்கலானது.

அருகே அவளை இதுகாறும் எழுப்பிக் கொண்டிருந்த தங்கை திவ்யா தான், “என்ன… விடிஞ்சும் கனவா??… உனக்கே இதெல்லாம் ஓவரா இல்லை.”என்று இடுப்பில் கைவைத்து ஏகத்துக்கும் முறைத்து வைக்கலானாள்.

கதையின் நாயகி மதுராக்ஷியை விடவும்.. மூன்று வருடங்கள் இளையவளான திவ்யாக்ஷி… மென்பொறியியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்க.. காலேஜ் செல்வதற்கு ஏதுவாக…

டீஷேர்ட் மற்றும் ஜீன்ஸில்.. கையில் மேக்கப் கிட்டுடன் நின்று முகத்துக்கு டச்சப் செய்து கொண்டே தான் தமக்கையினை எழுப்ப முனைந்திருந்தாள் அவள்.

திடுக்கிட்டு எழுந்ததால், முகமெல்லாம் பேயறைந்தாற் போன்றிருந்த மதுராவுக்கோ.. இன்னும் ஸ்வப்னத்தின் பாதிப்பு இருக்க,

முணுமுணுக்கும் குரலில், சிகை கோதிக் கொண்டே, “அவன் முகம் பார்க்கலாம்னு பார்த்தா கெடுத்திட்டீயேடீ..”என்றவளாக,

தங்கையிடம்,ஆசுவாசமாக, “ஆமா மணி எத்தனை..?”என்று தான் கேட்டாள் மதுராக்ஷி!!

“எட்டு..”-இதழ்களுக்கு சாயம் பூசிக் கொண்டே தங்கை சொன்னது மட்டும் தான் தாமதம்… மதுராவின் பூந்தேகத்திலிருக்கும் கோடானு கோடி செல்களிலுமுள்ள உரோமங்களும் தான்.. மின் பாய்ந்தாற் போல.. குத்திட்டு நிற்கலானது உச்சபட்ச களேபரத்தில்!!

படுக்கையில் நின்றும் விர்ரென்று எழுந்தவளோ, “எட்டாஆஆஆ…???”என்று கத்திக் கொண்டே, தன்னைப் பாதியளவு போர்த்தியிருந்த போர்வையை… தன்னில் நின்றும் பிரித்து எறிந்தவளாக,

படபடக்கும் குரலில், “எட்டரைக்கு எல்லாம் இன்டர்வீவ் நிக்கணுமே..இப்பவே லேட்டாச்சே”என்று அரக்கப் பறக்க எழுந்து குளியலறை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் மதுராக்ஷி.

தன்னை விட்டும் செல்லும் தமக்கையின் புறமுதுகினை நோட்டம் விட்டவாறே, ரொம்பவும் கூலாக தங்கை திவ்யாவோ,

மேக்கப் கண்ணாடியை கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டே… மஞ்சத்தின் பக்கவாட்டாக அமர்ந்திருந்தவள்…

கவனம் பூராகவும்… அவள் பூசும் அரிதாரத்தின் மீதே பதிந்திருந்தாலும் கூட… வார்த்தைகள் யாவும் தமக்கைக்காகவே வெளிவந்தது.

ஏளனம் தொனிக்கும் குரலில், “இது எத்தனையாவது இன்டர்வீவ் அம்மணி அட்டென்ட் பண்றீங்களாக்கும்…? ஒண்ணில் கூட தேறலையே?? இப்டி போற போற இடமெல்லாம் செலெக்ட்டாகாம பல்பு வாங்குறதுக்கு பதிலா…. பேசாம அப்பா பார்க்கிற மாப்பிள்ளைய ஒத்துக்கோ.. கல்யாணம் பண்ணிக்கோ.. அது தான் உனக்கும் நல்லது”என்று இலவச ஆலோசனை வேறு கொடுத்தாள் திவ்யா.

அட்டாச்டு பாத்ரூம் வரை அவசரமாகச் சென்று கொண்டிருந்த மதுராவோ… தங்கையின் வார்த்தைகள் யாவும் கேட்டதும்… தன்னடையை நிறுத்தி விட்டு…

இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.. திரும்பி தங்கையைத் தான் ஏற இறங்கப் பார்க்கலானாள்!!

 தங்கையை ஒற்றைப்புருவமுயர்த்திப் பார்த்து, பைஜாமாவினை இழுத்துப் பிடித்தவாறே, “எதுக்கு?? என் ரூட் கிளியரானா தான்… உன் ரூட் கிளியராகும் பார்க்குறீயா..??இல்ல… யாரையாச்சும் லவ் பண்றீயா என்ன??”என்று கேட்க.. அழாத குறையாக பதில் வெளிவந்தது தங்கையிடமிருந்து.

“ஐயோ… நீ வேற… காலேஜ் கூட லேடீஸ் காலேஜ்ஜா அப்பா சேர்த்து விட்டா… என்னடி பண்ண முடியும்..? நீயாச்சும் கோ-எட்ல படிச்சே… நானு.. பாவமில்லையா?? அதான் சொல்றேன்.. ஒழுங்கு மரியாதையா.. அப்பா பார்க்கிற மாப்பிள்ளைய ஒத்துக்கடீ.. ப்ளீஸ்.. ”என்றவாறே ஓரெட்டில் தமக்கையிடம் ஓடி வந்து…

மதுராக்ஷியின் நாடி பிடித்துக் கெஞ்சவும் செய்தாள் இளையவள்!!

தங்கையை விழிகளிடுங்க நோக்கியவளோ… தன் நாடியில் பதிந்த தங்கையின் கையைத் தள்ளி விட்டவளாக, “அப்படி அவசரம்னா நீயே கட்டிக்க?? நான் வேணா அப்பாக்கிட்ட பேசிப்பார்க்கிறேன்… உங்க மூத்த பொண்ண விட… சின்னப்பொண்ணுக்கு தான்ப்பா.. “இல்தகா சைஆ”… அதிகமா இருக்குன்னு சொல்றேன்…என்ன டீல் ஓகேயா?? அப்பாக்கிட்ட சொல்லட்டா?? ” என்று அவள் கேட்ட விதத்தில்…

நிஜமாகவே தந்தையிடம்… தன்னை.. தமக்கை போட்டுக் கொடுத்து விடுவாளோ என்றச்சம் எட்டிப் பார்க்கலானது இளையவளுக்குள்!!

பதறிப் போன தங்கை திவ்யாவோ… இரு கரம் கூப்பி தலைக்கு மேலே ஒரு கும்பிடு போட்டவளாக, “அம்மா தாயே ஆளை விடு… இப்டியே போனா ஔவையார் ஆகிருவீயோன்னு நல்லெண்ணத்தில் சொன்னா.. அப்பாக்கிட்ட என்னையா போட்டுக்குடுக்க பார்க்கிற?? நான் காலேஜ்க்கு கெளம்புறேன்ப்பா” என்று அங்கிருந்து எஸ்ஸாக.. நாடினாள்.

‘தந்தையிடம் சொல்கிறேன்’ என்றதும் பயந்து அலறியடித்து ஓடும் தங்கையைப் பார்த்து.. கிளுக்கி நகைத்த மதுராக்ஷியோ,

தங்கையின் காது கேட்கும் வண்ணம் சப்தமாக, “ஹேய் என்னை விட்டு போயிராதேடீ… நானும் வர்றேன்… போற வழியில என்னையும் டிராப் பண்ணிட்டுப் போஓஓ”என்று கத்திக் கொண்டே… குளியலறை நுழைந்தவள்… அடுத்த பத்துப், பதினைந்து நிமிடங்களிலெல்லாம் குட்டிக் குளியலொன்றையும் போட்டு விட்டுத் தான் வெளியே வரலானாள்.

நேர்முகப் பரீட்சைக்கு ஏற்றாற் போல.. கை நீண்ட ஆயினும் பட்டன்கள் ஏதும் போடாத வெள்ளைச் சட்டையும், அதே நிறத்தில் ஸ்கேர்ட்டும் அணிந்து… கையில் கைப்பையுடன்..ஆங்கில சேனலில்… செய்தி வாசிக்கும் பெண்ணைப் போல.. தளர்கூந்தலுடன்..

ஆடை பாதியாக.. ஆள்பாதியாக.. அரைகுறையாகத் தயாராகி வீட்டு ஹாலுக்கு வந்தாள் மதுராக்ஷி!!

தடதடவென அவள் வெளியே வந்த போது… அவளது தாயோ.. தன்னிரு மழலைச் செல்வங்களும்… வெறும் வயிற்றோடு வெளியே செல்லக்கூடாது என்று தோசை வார்த்திருப்பது புரிந்தது அவளுக்கு.

வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்து… அமரக்கூட செய்யாமல்.. பாலை மட்டும் நின்றவாக்கிலேயே மளமளவென அருந்தி விட்டு,

இதழ்களை உள்ளங்கையில் துடைத்துக் கொண்டவளோ, “பை மா.. நான் கிளம்புறேன்..”என்ற போது.. தாய்க்கும் மகள் சாப்பிடாமல் கிளம்புவதில் சிறுதுயர் மேலோங்கத் தான் செய்தது.

தன்னை விட்டுச் செல்ல எத்தனிக்கும் மகளின் கைப்பற்றித் தடுத்த தாயோ, “ஹேய் நில்றீ… உனக்காக தான் தோச சுட்டு வைச்சிருக்கேன்.. ஒரு ரெண்டு வாயாவது சாப்பிட்டுப் போ”என்று பணிக்க,

தன் மணிக்கட்டுத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு…. ஏனோ தோசை நின்று சாப்பிடுமளவுக்கு நேரமுமில்லை. பொறுமையுமில்லை.

“நோ வே… இப்பவே மணி எட்டிருபது ஆச்சு…இலேட்டாச்சும்மா..வந்து சாப்பிட்டுக்கறேன்.. பை மா”என்று திரும்ப வந்து தாயின் கன்னங்களுக்கு முத்தமிட்டு விட்டு நகர முனைய.. அப்போது தான் தாயோ அவளது… அவசரம் புரியாமல்.. முக்கியமான செய்தியைச் சொல்கிறேன் பேர்வழியென்று அதைச் சொல்லவாரம்பித்தார்.

“யேய்.. மதூ.. அப்பா உன்கூட ஏதோ பேசணும்னு சொன்னாருடீம்மா.. இப்போ அவர் ஜாகிங் விட்டு வர்ற டைம் தான்.. என்னான்னு கேட்டுட்டுப் போடீ…”என்று உரைக்க… அதையெல்லாம் என்காது கேட்காது என்பது போலவே கடக்கலானாள் அவள்.

தாயைப் பாராது.. புறமுதுகிட்ட வண்ணமே..கையை மறுப்பாக அசைத்து, “ம்மா.. முடியாதும்மா முடியாது.. அவரு என்ன சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ.. நீயே பார்த்துக்கோ..எனக்கு டைமாச்சு… ”என்றபடி வாசற்படி பக்கம் நெருங்கப் போன போது.. குறுக்கே… அவளுடன் மோதினாற் போல… எதிரே வந்து நின்றது??

என்னமோ அவளது தந்தை ராமகிருஷ்ணனே தான்.

சென்னையில் பிரபல மருத்துவமனையில்… பல் மருத்துவராக இருக்கும் ராமகிருஷ்ணர்… வழமை போல இன்றும்.. ஜாகிங் உடையில்.. வியர்க்க விறுவிறுக்க.. மெல்லோட்டம் ஓடி விட்டு… களைத்து வந்திருப்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது மதுராக்ஷிக்கு!!

சோடாப்புட்டி கண்ணாடியின் வழியாக… அவரது பார்வை.. எங்கேயோ வெளியே செல்லத் தயாராகவிருக்கும் மகளை ஆராய, மீசையோரம் நரைத்த முடிகளின் மெல்லிய வளைவு.. மகளின் மீதான கனிவையும், கண்டிப்பையும் ஒருங்கே காட்டிக் கொண்டிருக்கலானது.

சட்டென அப்பா எதிர்ப்பட.. சடன் பிரேக் போட் நின்றவள்.. மரியாதை நிமித்தம் தலைகுனிந்து நிற்க…, மகள் ஏதோ வெளியே கிளம்பத் தயாராக இருப்பதைக் கண்ட தந்தையோ,

பயம் கொடுக்கும் கரகரத்த குரலில், “எங்கே மறுபடியும் இன்டர்வீவ்க்கா..?”என்று போகும் போதே கேட்க.. அது வேறு மதுராக்ஷியின் மனத்தினை.. ஒரு சின்ன அபசகுனம் போல உறுத்தியது.

சிலகாலமாக அவள் வேலைத் தேடுவதும்,தன் பெரிய பெண்மகள்… வேலை தேடுவது… இஷ்டமில்லாமல்.. இவரோ… வரும் நல்ல வரனைப் பார்த்து.. அவளைக் குடும்ப இஸ்திரியாக்க நினைப்பதும்.. நடந்து கொண்டிருப்பது தான் அல்லவா?

ஆகையால் தந்தைக்கும், மகளுக்குமிடையிலான சுமூகமான உறவுநிலைக் குன்றி… பனிப்போர் வீசிக் கொண்டிருக்க… தந்தை இப்போதெல்லாம் பேச்சைக் குறைத்துக் கொண்டதுவும் கூட உள்ளூற அவளுக்கு வருத்தமே!!

மெல்லிய ரோபோ குரலில், “இன்டர்வீவ்க்கு தான்ப்பா..”என்று சொன்னதும்… அவளை ஏற இறங்கப் பார்த்தவரோ, கறார்க்குரலில், “ம்ம்.. இந்த முறையாவது தேறுமா..?”என்று தான் கேட்டார் அவர்.

தலை குனித்துக் கொண்டே தந்தையைப் பாராது, “வந்துடுவேன்ப்பா..”என்று சொல்ல… உண்மையிலேயே இம்முறை வந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை அவளுள் மிளிரத்தான் செய்தது.

கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழி ராமகிருஷ்ணருக்கு மகள் மீதிருக்கும் கொஞ்சநஞ்ச அன்பும் வெளிப்பட, ஒரு பெருமூச்சை எடுத்து விட்டுக் கொண்டே, “சரி… சாப்பிட்டீயா…?” என்று கறாராகவே கரிசனையாகக் கேட்டார் அவர்.

எப்போதும் துறுதுறுவென வாயாடுபவளுக்கு.. இன்று நாவேயெழாமல் போக,… “இப்போ தான்பா… பால்..”என்றதும்… அடுத்து அவர் சொன்ன விஷயத்தில் அவள் பிடித்தமின்மை வெளிப்பட்டாலும் கூட.. ஒரு துளி கூட தன் பிடித்தமின்மையை தந்தைக்கு காட்ட முடியாத கையாலாகத்தனத்தோடு வாளாவிருந்தாள் பெண்.

உறுமும் குரலில், “சரி.. சரி… இன்னைக்கு சாயங்காலம்.. உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க…பையனும் நல்ல பையன் தான்… ஒரு பிக்கல்பிடுக்கல் சொல்லவும் முடியாது..இப்படியொரு சம்பந்தம் இனி தேடவும் முடியாது…அப்டியொரு இடம்… ரெடியாயிரு…என்ன?? ”என்றதும்.. விழிகள் பட்டென்று விரிய.. உயர்த்திய குரலில்,

“அப்பா…??”என்று கேட்டவளின் கேள்வியில், ‘எங்கிட்ட சொல்லமலேயாப்பா…?’ என்ற அவள் வாய்விட்டு கேட்காத கேள்வி தொக்கி நின்றிருப்பதை ராமகிருஷ்ணரும் தான் அறிவார்.

“ம்ம்..?”என்று உறுமும் வேங்கைப் பார்வையுடன் மகளைப் பார்த்து கேட்டு வைத்த தினுசில்.. அதற்கு மேலும் வாய்திறந்து தன் எதிர்ப்பினை வெளிக்காட்ட பிரியப்படாமல்,

“சரிப்பா..உங்க இஷ்டம்… இப்போ கெளம்புறேன்ப்பா”என்று கப்சிப்பானவளாக… அங்கிருந்து தப்பி… வெளியே வந்தவளுக்கு தந்தை மீது வந்தது காண்டு மலையளவு!!

வீட்டு வாசலுக்கு வந்து.. இடுப்பில் கைவைத்து நின்று… கூந்தலை அலட்சியமாக கோதி விட்டுக் கொண்டவளாக,

சன்னமாக அங்கலாய்க்கும் குரலில், “ஐயோ இவர் வேற… கல்யாணம்.. கல்யாணம்னுக்கிட்டு..நான் சுதந்திரமா வேலைக்கு போனா தான் என்னவாம் இவருக்கு?சரியான மேல்சாவ்னிஸ்ட்.. ஹிட்லர்”. என்று தந்தையை கரித்துக் கொட்டியவள்…. வீட்டின் முற்றத்துக்கு வந்து சேர்ந்த போது…

அங்கே தெளிந்த புன்னகையுடன்.. தங்கை திவ்யாவோ… அவளுடைய ஸ்கூட்டியில் காலேஜ் செல்லத்தயாரானவளாக இவள் வருகைக்காகக் காத்திருப்பது புரிந்தது அவளுக்கு.

நொடியும் தாமதியாமல்.. ஓடிச்சென்று.. தங்கையின் பின்னே… வண்டியில் தாவிக் கொண்டவள், “ஹப்பா.. நல்லவேள இருக்கீயாடீ… நான் வேற… நீ விட்டுட்டுப் போயிட்டீயோன்னு பயந்துட்டேன்”என்றபடியே வண்டியில் செல்லவாரம்பித்தாள்.

காலேஜூக்கு செல்லும் பாதையும், இவள் நேர்முகப்பரீட்சைக்கு செல்லவேண்டிய பாதையும் இருவேறுபுறமாக பிரிந்திருக்க..முச்சந்தியின் நடைபாதையில் வைத்து இறங்கிக் கொண்ட மதுராவோ,

தங்கைக்கு டாட்டா காட்டிய வண்ணம்.. “சரிடீ பை..ஈவினிங் வீட்டில் மீட் பண்ணலாம்”என்றபடியே… தெரு கடந்து செல்லவாரம்பித்த போது… அங்கே அதே நேரம்..!!!

 புன்னகை-2

அங்கே…

 அவள் விரைந்து வந்து கொண்டிருக்கும் அதே நடைபாதையோரத்திலே… சென்னையின் கத்தரிவெயில் கொளுத்த… அதன் காலநிலைக்கு அணுவும் சம்பந்தமற்ற ஆடைகளுடன் நின்றிருந்தான் ஓர் வலிய ஆடவன்!!

கறுநிற கோர்ட்சூட் அணிந்து..ஹேர்க்ரீம் பூசப்பெற்ற தலைமயிர்.. ஸ்தம்பித்து கும்மென்று ஒரே சீராக நிற்க.. கண்களில் கூலர்ஸூடன்… கால்களில் ஷூவுடன்….

பார்த்ததும் உயர்தட்டு வர்க்க ஆண்மகன் என்று சொல்லும் வகையில்… ரோயல் லுக்கில், நெடுநெடுவென பனைமரம் போல வளர்ந்திருந்த ஆடவனோ, யாருடனோ செல்லில்.. சீரியஸாக பேசிக் கொண்டிருந்தான்.

மன்னிக்கவும். சின்ன மாற்றம்!! தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தான்.

பற்கள் நறுக்கப்பட.. கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தெரிய, “ஆர் யூ லிசினிங் மீஈஈஈ??? இன்னைக்கு இம்போர்டடன் கமிட்மென்ட்ஸ் இருக்கூஊ!! … ஐ நீட் அ கார் ரைட் நவ்வ்வ்…!! நான் கேட்கிறது புரிய்யுதாஆஆ?? இல்லையாஆ..?” என்று காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருக்க..

அந்தோ பரிதாபம்.. அந்த செல்வந்தன் வந்த வண்டி.. அவனுக்கு சொற்று தொலைவில் பஞ்சராகி நின்றிருக்க… புது வண்டி வேண்டி.. மறுமுனையில் யாருக்கோ.. அநேகமாக அவனது பணியாளனாக இருக்க வேண்டும்.

பொறுமையென்பது அணுவுமில்லாமல்.. அலாவுதீன் ஜீனியிடம் இடப்பட்ட கட்டளை போல, “அவசரமாக கார் வேண்டும்”என்று கத்திக் கொண்டிருந்தான் அவன்!!

மறுமுனையிலிருந்தவன் என்ன சொன்னானோ..??? அச்சமயம்.. அவனது கண்ணுக்கு எதிர்ப்புறமாக.. டேக்ஸிவண்டி எதிர்ப்பட… அடக்கப்பட்ட சீற்றக்குரலில், “ஓகே நான் பார்த்துக்கறேன்…”என்றபடியே,

செல்லை அணைத்தும் அணைக்காமலும், “டேக்ஸி..”என்று கையுயர்த்தி அழைத்துக் கொண்டே… அவனருகே சற்று தொலைவில் நிறுத்தப்பட்ட டேக்ஸியை நோக்கி விரையவாரம்பித்த தருணம் தான் அது!!

ஓஹோ… அவனுக்கு உடைமையான கார் கிடைக்கவில்லையென்றானதும்… கண்ணில் அகப்பட்ட டேக்ஸியைப் பிடித்து.. சென்று விடும் எண்ணமோ அவனுக்கும்!!

அதே தான்!!

வண்டி பஞ்சரான கடுப்பையெல்லாம்.. இழுத்துப் பிடித்த பொறுமையுடன்… மூக்கு விடைக்க பெருமூச்சு விட்டு… புறந்தள்ளி விட்டு… அவன் தான் கைகாட்டி நிறுத்திய டேக்ஸியில் ஏறப்போக,

அதே சமயம்…அதே நடைபாதையோரத்தில்.. இந்த திடகாத்திரமான ஆடவன் பின்னாடி… வேகவேகமாக நடந்நு வந்து கொண்டிருக்கும் நம் கதையின் நாயகி மதுராக்ஷிக்கும்…

அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் ஒற்றை டேக்ஸி வண்டியைப் பார்த்ததும் தான் விழிகளில் பல்பு எரியத் தொடங்கிற்று.

அந்த வண்டியை விட்டால் நேர்முகப் பரீட்சைக்கு செல்ல வேறு வண்டி வந்து செல்லும் சுவடே தெரியாமல் போகவே…

ஆபத்துக்குப் பாவமில்லை; வேறு வழியுமில்லை என்பது ஆணித்தரமாக புரிந்தது.

 யாரோ ஒரு நெடிய ஆடவன்.. அந்த வண்டியில் ஏறப்போனதை அவதானித்தவளுக்கு… அதையும் தாண்டி முன்னாடி ஓடிச் சென்று… வண்டியில் ஏறிக்கொள்ளத் தான் பரபரத்தது மனம்!!

ஆகையால் அந்த கோர்ட் சூட் காரனை ஓவர்டேக் செய்கிறேன் பேர்வழியென்று.. அந்த மராமர உடல்க்காரனைத் தள்ளிக் கொண்டு.. அங்கிருந்த வண்டியில் அவள் ஏறத் துணிய…தேக்குமரத்தை பூங்கொடி இடித்து நகர்ந்தால் சேதாராமாவது யாருக்காம்??

தேக்குக்கா? இல்லையே?? பூங்கொடிக்குத் தானே??

அது போன்ற நிலை தான் அவளுக்கும்!!

அவன் கைகளை.. தள்ளிவிட்டு முன்னேறப் போனவளுக்கு.. அதை இடித்து நகர்ந்ததும்.. இவளின் முன்னெட்டுக்கள் தான் சமநிலை தடுமாறி.. கைகளை அந்தரத்தில் எக்குத்தப்பாக ஆட்டிக் கொண்டு…

சற்றும் எதிர்பாராத வேளையில்… முகம் குப்புற நடைபாதையிலேயே… விழப்போனாள் மதுராக்ஷி!!

கொஞ்சம் விட்டாலும்… அவள் அழகு வதனம்… காங்கிரீட் நடைபாதையில் மோதி உராய்ந்து.. உதிரம் துளிர்த்திருக்கும் என்ற நிலை உருவாகியிருக்கும்.

அதற்கு முன்னரே… ஒரு வலிய முரட்டுக்கரம்… அவளது சிற்றிடையூடு கையிட்டு.. அலேக்காகப் பிடித்து… அழுத்தமாக அழுத்தி… அவளைத் தன்னை நோக்கியிழுத்துக் கொள்ளவும் செய்தது கெட்டியாக!! .

இந்த இழுத்துக் கொள்ளல்!! இதில் தான் ஆரம்பித்தது வினையே!!

நான்கு பேர் பயணிக்கும் தெருவில்… அதுவும் சூரியவெளிச்சத்தில்… தன்னை நோக்கியிழுத்த மாதுவை.. அவள் விழுந்து விடக்கூடாது என்பதற்கான நல்லெண்ணத்துடன்.. இழுத்துப் பிடித்துக் கொண்ட கரத்திற்கு சொந்தக்காரன்??

அந்த கோர்ட்சூட்காரன்!!

எதிர்பாராத இழுத்தலில்.. அவளது வெள்ளை சட்டைக்குள் உருண்டு திரண்டு விம்மிக் கொண்டிருந்த அவளது மார்புப் பந்துகள் இரண்டும் வந்து… பச்சக்கென்று ஒட்டிக் கொண்டது அவன் திண்ணிய நெஞ்சத்தின் மீது.

எப்போதும் பெண்களிடம் இரண்டெட்டு தள்ளி நின்று கண்ணியம் காக்கும் ஆடவன் அவன்!!!

இன்று… முதன்முறையாக… ஓர் காரிகையின் பெண்மைக்கலசங்களின் மென்மையை… சுகித்து நிற்கும் அந்தப் புதியவனுக்கும்… உள்ளூற தடுமாற்றமாகப் போக.. அவளுக்கே அவளுக்கென்று சொந்தமான பிரத்தியேக வாசனை.. அவன் நுரையீரல் வரை தீண்டி… ஈர்த்தது!!

அந்த ஈர்ப்பில்… வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லா.. ஓருணர்வும் உருள.. அவனது பார்வையின் தீவிரமும் தான் கூடியது அவள் முகம் கண்டுவிடும் நோக்கத்தில்!!

 அவளது தளர் கூந்தலெல்லாம் அவளது முகத்தை மதியிடை மேகம் போல மறைத்து வீழ்ந்திருக்க… அதுவும் கூட.. அவளுக்கு ஒரு வித மோகனத்தைப் பரிசளிப்பதாய்!!

அவளது இதழ்களின் பிளவு வழியாக வந்த மெல்லிய காற்று வேறு… அவனது கழுத்துக்குழியில் பட்டு… உள்ளுக்குள் ஏக உணர்ச்சிக் குழைவுகளை ஏற்படுத்த…

அவனுக்கும் தான் காப்பாற்றிய பெண்ணின் மதிவதனம் காண பேராவல் முளைக்கலானது.

அவன் கைகள்.. வதனம் மறைத்த கற்றைகளை அப்புறப்படுத்த அனிச்சைச் செயலாய் எழ… அதற்கு சிறிதும் இடங்கொடுக்காமல்..

தன் வதனத்தை அப்புறமும், இப்புறமும் சிலுப்பிக் கொண்டே…. அவனுக்கு… கூந்தல்கள் ஏதும் மறைக்காத பூரணை முகம் காட்டினாள் மதுராக்ஷி!!

தன் பார்வையோடு… அவளது விழிகளை கலக்க விட்டு… நிமிர்ந்தவளின் முகத்தினை.. அந்நொடி… கண்டான் அவன்!!

பூந்தென்றலாய்.. மனம் வருடும்.. குயில்க்குரல் கேட்ட சந்தோஷம் உள்ளமெங்கனும்..!!

கருமேகம் கண்டு சிலிர்த்து தோகை விரிக்கும் ஆண்மயிலின் பரவசம் ஹிருதயமெங்கனும்!!

இணை கண்டு பிடரி சிலிர்க்கும் அரிமாவின் உற்சாகம்… அப்புது ஆடவனுக்குள்…. வந்து போக அவன் விழிகளும் தான் விரிந்தது ஒரு ஆகர்ஷிப்பை அவளிடம் கண்டு!!

அதிலும்… அவளின் மெல்லிடையை… அவனது அழுத்தமான உள்ளங்கைகள்.. அவள் விழுந்து விடக்கூடுமென்ற அச்சத்தில் இறுக்கிப் பிடித்திருக்க…

அந்த இறுக்கமான நெருக்கத்தில்.. அவளை அணுஅணுவாகக் கணக்கெடுக்கலானது அவனது கண்கள்!

அவளின் தொண்டைக்குழி நரம்பின் சிறு நூல்பட்டு… அவள் எச்சில் கூட்டி விழுங்கியதில் அசைந்ததாகட்டும், அதன் வழியே… புழுக்கத்தில் ஒரு வியர்வைத் துளி சரேலென்று இறங்கி மார்புப் பள்ளத் தாக்கை இறங்கி ஓடியதாகட்டும்.. அனைத்தும்.. அவன் கண்களில் நின்றும் சிறிதும் தப்பவேயில்லை.

ஆயினும்… எத்தனையோ பெண்களை கடந்து வந்திருந்தவனுக்கு.. இந்தப் பெண்ணைத் தொட்டது மாத்திரம்.. உணர்ச்சி ரசங்களில்… தேகம்… தத்தளித்து நின்றவனுக்கு… பொதுவிடம் என்று கூட பாராமல்.. அவள் பழரச இதழ்களை கடித்துப் பருகித் தின்றிட ஒரு பொல்லாத எண்ணமும் முகிழ்ப்பதுமேன்??

ஒரு சிறுபெண்ணை கண்டு உள்ளம் பேதலித்து நிற்குமளவுக்கு இத்தனை பலவீனமானவனா அவன்?? அவனுள்ளம்.. அவனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டும் விடையில்லை!!

அவளது இதழ்களைக் காணும் போது ஏற்படும் மோகவலையில் நின்றும்… சறுக்கும் இதயத்தை… கடினப்பட்டு… விலங்கிட்டு… வெளியே வரவும் அவன் பட்டபாடு!! ஹப்பப்பா!!

தலை சிலுப்பி நடப்புலகுக்கு வந்தவன்.. அவள் விழுந்து விடாமல் தூக்கி நிறுத்த… அவளிருந்ததோ வேறு மாதிரியான எண்ணவோட்டத்தில்!!

ஆனால், அவனைப் போல.. அவளுக்குள் உணர்ச்சி மின்னல்கள் எல்லாம் வெட்டியதா என்று கேட்டால்.. அது தானில்லை.

மாறாக மதி முழுவதும்.. நேர்முகப் பரீட்சைக்கு நேரத்திற்குச் சென்று சேர வேண்டுமென்ற ஒற்றையெண்ணம் மாத்திரமேயிருக்க…

தான் விழப்போகையில் விழாமல் காப்பாற்றியவனைப் பார்த்து நன்றி நவிலவும் தோன்றவில்லை;மன்னிப்பு யாசிக்கவும் மனம் கூடி வரவில்லை.

அவளுக்கு.. அவன் பிடித்த டேக்ஸியில் அவசரமாக அவனை விடவும் முந்தியடித்துக் கொண்டு ஏறிவிட வேண்டுமென்றே ஒரே குறிக்கோளாயிருக்கவே..

அவன் நெஞ்சு மத்தியில் கைவைத்துத் தள்ளி… அவனை விட்டும் பிரிந்து கொண்டு… சாலையோர டேக்ஸியின் புறமாகத் திரும்பினாள் அவள்!!

அந்த நெடிய ஆடவனோ.. எப்போதும் எவ்விடத்தும், யாரிடத்தும் ஜென்டில்மேனாகவே நடந்து பழக்கப்பட்டவனாயிற்றே?

இன்றும் அந்த நல்ல புருஷலக்ஷணங்கள் அவனுள் இயல்பாக வெளிப்பட.. தன் பிடியில் நின்றும் வெளிவந்த பூங்காரிகையின் புறமுதுகின் உச்சாதி பாதம் வரை இலேசர் கண்களால் அளவெடுத்தவாறே,

அவளுக்கு அடிகிடி… ஊமைகாயங்கள் ஏதும் பட்டதோ என்று கரிசனையுடன் நோட்டம் விட்டவாறே, “ஆர் யூ ஆல்ரைட்..?”என்று தான் கேட்கவும் செய்தான் அவன்.

ஆனால் நம்மாளு தான்.. அவசரத்தில்.. துடுதுடுவென இருப்பவளாயிற்றே?? அவன் ஏறும் முன்னம்.. அங்கே தரித்து நின்றிருந்த ஒரே ஒரு டேக்ஸியில்… மின்னல் வேகத்தில் ஏறிக் கொண்டு…

“பட்”டென்று டேக்ஸியின் கதவினை அடித்து சாத்தவும் செய்தாள் மதுரா!!!

அப்போது தான்… அவள் தன்னையிடித்துத் தள்ளிவிட்டு.. தான் பிடித்த வாகனத்தில் முதன்மையாளாக ஏறியிருப்பது உறைத்தது அவ்வாடவனுக்கு.

ஆகையால்.. ஏற்கனவே இறுகிய கன்னத்துத் தாடைகள்.. இன்னும் இறுக..முஷ்டி மடக்கியவாறே… அவளை டேக்ஸியில் விட்டும் வெளியேற்றும் முயற்சியுடன்… ஓரெட்டில் டேக்ஸியை அடைந்திருந்தான் அவன்!!

கதவினை அவள் உள்ப்புறமாக லாக் செய்தது அறியாமல்… அதன் கைப்பிடியைத் திறந்து திறக்க முயன்று கொண்டே… அவள் தன்னை ஏமாற்றிய ஆத்திரத்தில், “ய்யூ ச்சீட்…. இது நான் பிடிச்ச டேக்ஸி… ஐவ் டேர் ய்யூஊ.. .. டு கெட் இன்?? கெட்டவுட்!!”என்று கத்த… அவன் தமிழோடு இணைந்து பேசிய ஆங்கிலமும் கூட… அவனுக்கு ஏகக் கவர்ச்சியைக் கொடுப்பதாகவே இருந்தது.

இருப்பினும் இது எதையுமே இரசிக்கும் நிலையிலில்லாதவளோ… டேக்ஸி ஜன்னல் வழியாகத் தலையிட்டு… நெடுமரம் போல வளர்ந்திருந்தவனை நோக்கி,

“யோவ்.. யாருய்யா ச்சீட்டர்??.. லேடீஸ் ஃபர்ஸ்ட் னு தெரியாது??.. இப்டி வந்து.. இந்த இடி.. இடிக்குறீயே..?? ஏதோ நானா இருக்கப் போனதால் ஓகே.. இதே வயசானவங்க இருந்திருந்தா யோசிச்சுப் பார்த்தீயாய்யா?? உன் மூஞ்சிலயெல்லாம் முழிச்சா போற காரியம் விளங்குமா??”என்று தன் வால்த்தனத்தையெல்லாம் அந்த நெடியவனிடம்.. அந்தக் குறுகிய காலத்தில் காட்டவும் தான் முற்பட்டாள் அவள்.

அவளோ, ‘அவன் வந்து தன்னை இடித்தான்’ என்று சொல்லவும்.. தாங்கமாட்டாத அபாண்டமான பொய்யில்.. விழிகள் விரிய நின்றவனுக்கு.. இவள் அழகியா? இராக்ஷசியா என்று குழம்பித் தான் போனாள்.

இருந்தாலும் அவளின் குற்றச்சாட்டை ஒவ்வாத தூயவனோ, “எது நான் இடிச்சேனா?வாட் த.. ***”என்று சிகை கோதி.. ஆத்திரத்தில் கத்திக் கேட்க… அவளா தன் தவற்றைத் தானே ஒப்பி..ஏற்றுக் கொள்ளவும் கூடும்??

‘பொய் சொல்கிறோம்’ என்ற படபடப்பு ஒரு சிறிதுமில்லாமல்… அகன்ற நயனங்களுடன், “பின்னே நானா இடிச்சேன்…?? அவரசமா போறதுனால… சும்மா விட்றேன்… இல்லை.. உயிர்நஷ்ட ஈடு கேட்டு… கோர்ட்டு கேஸூன்னு இழுத்திருப்பேன்.. சரி சரி.. மன்னிச்சு விட்டுட்டேன்.. விடு விடு”என்று அத்தனை தப்புக்கும் அவனை சூத்திரதாரியாக்கி.. தானாகவே மன்னிப்பும் கொடுக்க..

அந்தப் புதியவனும் தான் எத்தனை நேரம் இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து நிற்கவும் முடியும்??

அவனோ… தன்னை நடுவீதியில் தான் யார்? .. தன் நிலையென்ன? உயரமென்ன? என்ற விவரங்கள் ஏதுமறியாமல் தன்னை அவமானப்படுத்தி விட்டுச் செல்லும்…

அப்பெண்ணையே.. மடக்கப்பட்ட முஷ்டியும்.. நெரிக்கப்பட்ட பற்களுமாக செஞ்சீற்றக் கண்களுடன்.. அமைதியாய்.. வேட்டையாடும் வேங்கைப் பார்வை பார்த்திருக்க.. சர்வ நிச்சயமாக.. இது எதுவுமே அவள் அவதானிக்காமல் நேர்ப்பார்வை பார்த்து நின்றாள் அவள் !!

இருவர் சண்டையிலும் மூக்கு நுழைக்காது.. தொழில் தர்மம் கருதி இதுகாறும் வாளாவிருந்த டேக்ஸி டிரைவரை நோக்கிய மதுராக்ஷியோ, “… ஏம்ப்பா.. நீ வேற.. மசமசன்னு நின்னுக்கிட்டு… எனக்கு டைமாச்சு… சீக்கிரம் வண்டிய எடுப்பா…”என்று பணிக்க… வாகனமும்.. நெரிசல் நிறைந்த சாலையில்.. வாகனமோடு வாகனமாகக் கலந்து மறைந்தது!!

இந்திய வெள்ளை நிறத்தைச் சேர்ந்த ஆடவனோ.. அன்று “ஸ்டீம் பாத்” என்னும் ஆவிக்குவியல் எடுத்தது போல ஆத்திரம்.. சூடு கடத்தும் இரத்தநாளங்களிலெல்லாம் வெடித்து நிற்க… ஜிவ்வென்று.. சிவந்து நின்றான்!! எல்லாம் பெண்ணாலே!!

அதிலும்.. அவள், “யோவ்.. ய்யா”என்று பேசிய பேச்சுக்களெல்லாம் அவன் காதுக்கள் ஓயாது ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்க..

அருகிருந்த நடைபாதை கடவைக் கற்களின் மீது அவனது ஒட்டுமொத்த ஆத்திரமும் பாய, அதனை உதைப்பந்து உதைப்பவன் போல ..

“டேமிட்!!!” என்று சிங்க கர்ஜனையுடன் ஓங்கி உதைத்து தலைகோதியும் விட்டான் அவன்!

பின் தன் கோர்ட்பையில் நின்றும்.. செல்லை எடுத்து.. யாருக்கு அழைப்பெடுத்தானோ, அழுத்தமான அதிகாரத் தோரணையில், “சுரேஷ்.. இன்னும் 5 மினிட்ஸ்ல… இப்போ வ்வண்டி வ்வந்தாகணும்.. இம்மீடியட்ளீஈஈ..!!”என்றான் அந்தப் பெண் தன்மீது தந்து விட்டுப் போன கோபங்களின் எல்கை தாங்காது.

அதற்கு மறுமுனையில் சுரேஷ் என்னும் பணியாளனிடமிருந்து என்ன சொல்லப்பட்டதுவோ??

வீதியில் செல்லும் அனைவரும் ஒரு கணம் என்னமோ ஏதோ என இதயம் தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பாரக்கும்… கர்ஜனைக்குரலில்,

இதழ்களைக் கடித்துக் கொண்டு “அப்படியில்லைன்னாஆஆ.. பை மீ அ நிவ் கார் யூ பூல், ****..”என்று ஆங்கிலத்தில் சிலபல கெட்டவார்த்தைகளைப் போட்டு அர்ச்சித்து செல்லை வைத்தான் அவன்!!

ஏனிந்த சீற்றம்!!

அவனது மனதை.. நொடியிலும் குறைவான மின்னல் நேரத்தில் கொள்ளை கொண்ட பெண் புன்னகைக்காத கோபமா?

அன்றேல், உவந்து பிடித்து காப்பாற்றிய ஆபத்பாந்தவனான இவனுக்கு நன்றி சொல்லாத சீற்றமா??

இல்லை அவளின் எல்லைகடந்த துடுக்குத்தனமான பேச்சுக்களா??

எது எவ்வாறிருப்பினும்.. அவனிடம் தரக்குறைவாக பேசிய உதடுகளை மட்டும்.. கௌவி சிறைச்செய்து இம்சித்து.. தேனருந்திட.. பழியுணர்ச்சி கொண்டது உள்ளே அவனுள்ளம்!!

புன்னகை-3

சரியாக எட்டு முப்பத்திரண்டுக்கு… சற்றே நேரம் கடந்து விட்டிருந்த போதிலும்.. அவள் பயணப்பட்டு வந்த டேக்ஸி தரித்து நின்றது.. ஏதோ நியூயார்க் நகரத்திலிருக்கும் கட்டிடம் போல காணப்படும்.. அதிநவீன ஏழுமாடிக் கட்டடத்தின் முன்பு தான்!

ஒளி ஊடுபுகாத கண்ணாடிச்சுவர்கள் கொண்டு.. அதன் உச்சியில்… “டாஸிலிங் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸ்”என்னும் ஆங்கில பேரெழுத்துக்கள் தாங்கிய பதாகையுடன் நின்றிருந்தது அந்த விஸ்தாரமான கட்டிடம்.

டேக்ஸியில் நின்றும் இறங்கியவளுக்கு.. அதன் பச்சைப் புல்வெளி அலங்கார வளர்ப்புத் தாவரமாகட்டும்… சலவைக் கற்களால் வழி சமைக்கப்பட்டிருக்கும் போர்ட்டிக்கோவாகட்டும்..

கூடவே நீர்க்குடம் தாங்கிய பெண்ணின் குடத்தில் நின்றும் நீர் வழிவது போல அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீரூற்றாகட்டும் அத்தனையுமே.. ‘டாஸிலிங்’ நிறுவனத்தாரின் செல்வ வளமையினைப் பறைசாற்றிக் கொண்டிருக்க…

எல்லாவற்றையும் தன் விழி கொண்டு பார்த்தவளுக்கு.. இது பெரும் சுவர்க்கலோகமாகவேத் தோன்றியது.

இப்பேர்ப்பட்ட இடத்தில்…. அங்கிருந்து வெளியே ஹை ஹீல்ஸூடன் வந்த பெண்களும் சரி… உள்ளே பானிடெயில்ஸூடன் நடந்த பெண்களும் சரி… அவர்களின் உடை நேர்த்தியைக் கட்டியங்கூறிக் கொண்டிருக்க.. குனிந்து தன்னிலையைத் தானே பார்த்துக் கொண்டாள் மதுராக்ஷி.

அங்கு தெரிந்த கண்ணாடி விம்பத்தில் தன் உடையினைப் பார்த்துக் கொண்டவளுக்கு… சரியாக மடித்து விடப்படாத சட்டையும், தளர் கூந்தலும்… அந்த இடத்துக்குப் பொருத்தமற்றவளாகக் காட்ட… அவளுள் தோன்றியது தாழ்வு மனப்பான்மை!!

சுற்றுமுற்றும் பார்த்தவளின் கண்களுக்குள் விழுந்தது அவளது இடதுபுறமாக நின்றிருக்கும்… மாமர நிழலிலே தரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த… யார்க்கண்ணுக்கும் உறுத்தாத கறுப்பு நவீன பென்ஸ் வண்டியொன்று!!

அதன் கண்ணாடிகள் கூட கன்னங்கரேலென்று ஒளி ஊடுபுகாத.. உள்ளேயிருப்பது காண முடியாத கண்ணாடியாக இருந்ததுவும் அவளுக்கு வசதியாகப் போயிற்று.

அதையே தன் கேடயமாக உபயோகிக்க நாடியவளோ… உள்ளே அந்தக் காரின் கறுப்புக் கண்ணாடிகளின் பின் இருக்கும் நபரைப் பற்றி அறியாமலேயே.. தன் வாலுத்தனத்தையெல்லாம் காட்டத் தான் சித்தமானாள்.

காரின் உள்ளே இருக்கும் நபரா?? அது ஆம் சாக்ஷாத் அந்த நெடுமரமே தான்!!

தனக்கிருக்கும் பணத்தினை உபயோகித்து… புத்தம் புதுக்காரில்… உரிய நேரத்துக்கு… அலுவலகம் வந்து சேர்ந்திருக்கும் அவன்!!!

அப்பாவி மதுராக்ஷியோ உள்ளே யாருமில்லாதிருப்பதாக எண்ணிக் கொண்டு… தன் சட்டையின் கைப்பட்டன்களைப் போட்டுக் கொண்டே…

தன் மார்பின் இரட்டைத் திமிலை நிமிர்த்தி… தளர்த்தப்பட்ட இரண்டு பட்டன்களை போடவாரம்பிக்கலானாள்.

உள்ளே.. இது எதுவுமே அறியாது…எதேர்ச்சையாக காரை விட்டும் இறங்க முற்பட்டு… கதவுப் பிடியில் கைவைத்தவாறே….அவள்புறமாகத் திரும்பியவன்.. யாரென்று முகம் காணக்கிடைக்காத ஓர் பெண்ணின் செய்கையில் உறைந்து தான் போனான்.

என்னடா..?? இன்று “கிருஷ்ணயோகம்” என்று ராசி பலனோ? திரும்பும் இடமெல்லாம் கோபியர்கள் சூழ நிற்க நேர்கின்றதே?? என்று ஜர்க்காகித் தான் போனான் அவன்!!

அம் மென்மைக் கோளங்களின்… விம்மிப் புடைத்தலின் தரிசனம் அருகாமையில் கிட்ட.. இவன் ஹிருதயம் தாறுமாறாக ஏறியடங்க… அவளோ… பட்டென்று கண்ணாடியின் புறமாக தன் முழு உருவத்தையும் குறுக்கி குனிய,

அவளை அங்கே கண்ட மாத்திரத்தில், “இவளா?”என்ற ஆச்சரியமே மிகைத்தது அவனுள்.

சத்தியமாக.. இந்த அராத்துப் பெண்ணை… அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன்!!

மதுராக்ஷியோ… தன் கைப்பையில் நின்றும்.. அழுத்தமான சிவப்பு உதட்டுச்சாயம் எடுத்தவள்… கண்ணாடி மீது இதழ் குவித்து.. அதனையே திரையாக்கி..

தன் மோகன இதழ்களைச் சுற்றிலும்.. சாயம் தீட்ட… வண்டிக்குள்ளிருந்தவனுக்கோ… ஏனோ அவள் இதழ் குவித்து.. அவனையே முத்தமிட வந்தாற் போல மாயை!!

உள்ளுக்குள்… அவனுக்கோ… குடைக்கம்பி போல அவயவங்கள் குத்திட்டு நிற்கும் அபாயநிலை எட்டத் தொடங்க… இதழ் வனப்பில் அவள் மீதிருந்த முன்னைய கோபம் மறைந்து… ஒரு விதமான இரசனை பாவம் தான் எட்டிப் பார்த்தது அவனுக்குள்!!

கண்களுக்கு அவள் கருமை அஞ்சனம் தீட்டியதில்… இவன் நெஞ்சத்திலும்.. ஒருவிதமான சலனம் தீட்டப்பட்டது என்பது உண்மையிலும் உண்மை!!

தளர்கூந்தலை எல்லாம் ஒற்றை ஹேர்பேன்ட்டில் அடக்கி.. தன் முன்னங்கங்கள் திமிறி அடங்க… அவள் போனிடெயில் போட்ட போது… உள்ளுக்குள்ளிருந்தவனின் ஹிருதயமும் விம்மித் தான் அடங்கியது.

இறுதியில் தன் முக அரிதாரங்கள் எல்லாம் அவளுக்கு ஏகத்திருப்தியை கண்டிப்பாக பரிசளித்திருக்க வேண்டும்!!

இடுப்பில் கைவைத்து நின்று.. ஒரு மாடல்ப் பெண்ணைப் போல.. ஒருபுறமாக ஒருக்களித்து நின்று… தன்னை உள்ளே ஒருவன் பார்த்து நிற்பது எதையுமேறியாது.. அவள் சிந்திய புன்னகை!!

ஹப்பப்பா… பிரம்மன் படைத்த மொத்த மோகனமும்.. இதழ் மலர்வில்.. மூரல்களின் பளிச்சிடலில்… அத்தோடு கன்னத்தில்விழுந்த குழியில் சிக்கிச் சிறைப்பட்டது போல அந்தப் புன்னகையில்… ஏதோவொரு மாயமிருப்பதை அவன் அறிந்தான்!!

ஒரு கணம்… உள்ளே அவனிருப்பதை அறிந்து தான் சுந்தரப்பெண்ணும் கள்ளமாய் புன்னகைத்தாளோ என்ற சந்தேகமும் எட்டிப்பார்த்தது அவனுள்!!

ஆனால் அவளோ.. தனக்குத் தானே பேசிக் கொள்ளும் குரலில், கண்ணாடியில் விழுந்த தன் விம்பத்தை உச்சி முகர்ந்தவளாக, “இது பர்பெக்ட்”என்று சொல்ல.. அவள் தொட்டு வருடி முகர்ந்தது தன்னைத் தானா என்ற மோகமயக்கமும் எட்டிப்பார்த்தது அவனுள்!!

அவள் புன்னகைத்துக் கொண்டே.. குதிரைவால் கொண்டையும், பின்னழகு மூட்டையுமாட ஆட.. அவள் உளள்ளுக்குள் படியேறிச் செல்ல…

அப்போது தான் காரை விட்டு வெளிவந்தவனுக்கு… வெளியே வந்ததும் தான் அதீத உஷ்ணப்புழுக்கம் அகன்று… மூச்சு சீராகும் போலிருந்தது!!

உள்ளுக்குள் சொல்ல முடியாத உணர்வுகள் அகத்தையும், முகத்தையும் நெருக்கிப் பிடித்தது.

அவளோ.. லிப்ட்டிற்குள் நுழைந்த கணம்… அவன் பின்னோடே வந்தவனை நோக்கி.. அங்குள்ள அனைவருமே பவ்யமாக எழுந்து மரியாதை வணக்கம் வைத்ததையோ,

“க்குட்மார்னிங் சார்”என்று காலைவணக்கம் சொன்னதையோ.. லிப்ட்டுக்குள் செல்லுக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தவள் ஒரு சிறிதும் தலையுயர்த்திப் பார்க்கவேயில்லை.

அப்படி பார்த்திருப்பின்.. அவன் உயரம்.. நிலை அந்தஸ்து என எல்லாமும் புரிந்திருக்கும் அவளுக்கும்!!

ஆனால்.. அவளுக்கோ அந்நேரம்.. அவளது உயிர்த்தோழி, “நிரோஷனா”என்னும் நிரோவிடமிருந்து அழைப்பு வர.. தனக்கான நேர்முகத் தளம் வரும்வரை… பேசிக் கொண்டே வரலானாள் அவள்!!

அருகே… தான் சண்டை போட்ட ஆண்மகன் தன்னோடு தன். சமதளம் வரை ஒன்றாய் பயணிப்பது அறியாமலேயே!

இவளின் சின்னச் சின்ன செய்கைகளைக் கூட கவனிப்பதில்.. அவனுக்குள் ஒரு சுவாரஸ்யம் கூடிப் போக… இமையாமல் மோகனப் புன்னகையாளையே… அவன் பார்த்துக் கொண்டே வர..

அந்தோ பரிதாபம்!! அதையும் கூட அறியாமல் போனாள் பேதைக் கோதை!!

கோர்ட் பையினுள்.. கைகளிட்ட வண்ணம்.. லிப்ட்டினுள் ஆணழகாக.. பேரழகாக… இவளையே எடை போட்ட வண்ணம்… அவன் நின்றிருக்க..இங்கே மதுராவோ, தன் மறுமுனைப் பெண்ணிடம்,

“ஆமாடீ… இன்னைக்கு சாயங்காலம் தான் வர்றாங்க… ஒரு வரன்…அப்பா சொன்னாரு… நீ தான் ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…”என்ற போது…

அதையே உன்னிப்பாக கவனித்தவனுக்கு… “இந்த வாலுக்காரிக்கு நிச்சயமா??”என்னும் போது… அவனது ஜிலேபித் தட்டை யாரோ பறித்தாற் போல ஒரு ஏமாற்றம் சூழ்ந்தது அவன் முகத்தில்!!

ஏனிந்த ஏமாற்றம்.. அதுவும் முதன்முதலாக பார்க்கும் பெண்ணின் மீது??

அது சரி!! இந்த அராத்து.. எதற்காக உதவி நாட வேண்டும்?? அதுவும் தோழியிடமிருந்து?? மாப்பிள்ளை வீட்டார் வரும்போது… மணப்பெண் அலங்காரத்துக்காகவா?? என்ற கேள்வி கூடவே வந்து போனது அவனுக்குள்.

ஆனால் எதற்காக அந்த உதவி என்று.. மதுராக்ஷியே வாய் விட்டுச் சொன்னதைக் கேட்க நேரிட்ட போது…நீரருந்தாமலேயே.. உணவேதும் உட்கொள்ளாமலேயே சட்டென புரையேறி தொண்டையில் அடித்தது நெடியவனுக்கு!!

அது கூட புலப்படாமல், மிழற்றும் குரலில், “ப்ளீஸ் நிரோ…இந்தவாட்டியும்.. அந்த மாப்பிள்ளைய அடிச்சுத்துரத்த உன் ஹெல்ப் தேவை” என்றதும்.. அகல விரிந்தன ஆண்தகையானின் விழிகள்!!

என்ன?? எது?? மாப்பிள்ளையைத் துரத்த உதவியா?? நல்ல நட்பு!!!

மறுமுனையிலிருந்த பெண்ணும்.. ஆமோதிப்பாக தலையாட்டியிருப்பாள் போலும்.. இவளோ கன்னங்கள் இரண்டும் உப்பும் வண்ணம்.. இரசிக்க இரசிக்கப் புன்னகைத்தவள்,

 “என் நிரோன்னா நிரோ தான்…”என்ற போதே.. அவள் இறங்கிக் கொள்ளும் தளமும் சரியாக வந்தது!!

லிப்ட் கதவும்.. இரண்டாகத் திறந்து.. தளமும், மாந்தர்களும் காட்சி தரவே… செல்லுக்கு.. சுயாதீனமான கையினால் கேடயம் சமைத்து.. இரகசியமான குரலில், “சரி சரி… ஸ்பாட் வந்திருச்சு.. நான் அப்றம் கூப்பிடுறேன்…”என்று அவள் அழைப்பைத் துண்டிக்க,

அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தவனோ…. தன்னை விட்டும் முதன்மையாக வெளியேறியவளின் பின்னழகு குலுங்கலை.. கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டே,

“இன்ட்ரெஸ்ட்டிங்க்!!”என்று மோகமாய் சொல்லவும் செய்தான்.

அவளைப் பற்றி எண்ணும் போதே… அவன்.. இதழ்க் கடையோரம் உறையும் ஓர் சிரிப்பு தானாய் தோன்றிட.. வலிய பாதங்கள் பதித்து நடந்தான் தன் அறையை நோக்கி.

அவளின் பின் அவன் இறங்கிக் கொண்டதையோ… அவள் அங்கே சென்று அமர்ந்ததும்… அனைவரும் இருக்க…அவளைக் கடந்து…

ஷூக்கால்கள் தரையில் பதிய… தடக் தடக்கென்னும் கம்பீர ஒலியுடன் அவன் சென்றதையுமோ.. அவள் அப்போதும் அறியத்தானில்லை. அந்தோ துரதிர்ஷ்டமே!!

அங்கே போடப்பட்டிருந்த தொடரிருக்கை நாற்காலியில் அமர்ந்திருந்தவளுக்கு…

நேர்முகப் பரீட்சைக்கு வந்திருக்கும் பெண்கள் அனைவருமே… அவளை விடவும் அழகிலும், திறமையிலும் பலமடங்கு உயர்வானவர்களாகத் தோன்ற.. தனக்குத் தானே.. தோள் குலுக்கி, “ம்ம்… கஷ்டம்.. கஷ்டம்.. அல்ட்ரா மாடர்ன் ஃபிகருங்க மாதிரி இருக்க அவளுங்க எங்க.. லோக்கல் கண்ணம்மா மாதிரியிருக்க நான் எங்க.. கஷ்டம்.. கஷ்டம்.. தேறுறது கஷ்டம்”என்று சொல்லிக் கொண்டாள்!!

மறுகணம் ஒவ்வொருவராய் உள்ளே அழைக்கப்பட்டு.. அவளுக்கான உரிய நேரம் வந்ததும்.. அவள் பேர் ஒலிவாங்கியில் அழைக்கப்பட… அவளும் ஒன்றுக்கு இரண்டு தரம் ஆடை நேர்த்தியை சரி செய்த வண்ணமே, பரீட்சார்த்திகளுக்கான அறையில் நுழைந்தாள் அவள்!!

கதவு திறக்கும் போதே… நறுமணம் மிக்க ஏசி குளிர்.. அவளது நாசி நிரடி..புத்துணர்வாய் மேனி தழுவ… மென்மையான குரலில்,

“எக்ஸ்கீயூஸ் மீ சார்”என்ற வண்ணமே உள் நுழைந்து நடந்த போது.. அங்கே உரிமையாளருக்கான இருக்கை ஏனோ வெறுமையாகவே இருந்தது.

விழிகள் கூர்மை கொள்ள… எங்கும் வெண்மை… எதிலும் வெண்மையென அட்டகாசமாக இருந்த அறையை… ஆராய்ந்து கொண்டே…

தன்னெதிரே இருந்த கண்ணாடி மேசையை நோட்டம் விட்ட போது.. அதிலே… எண்ணற்ற பட்டப்படிப்புக்களுடன்.., “சி. இ. ஓ.. “அஜய்தேவ் சக்கரவர்த்தி”என்று எழுதப்பட்டிருக்க.. அவன் தான் உரிமையாளன் என்று ஊகித்துக் கொண்டாள் மதுராக்ஷி!!

உரிமையாளனும் தான் எங்கே போனான்??

ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க கிழமாக இருக்கக் கூடிய உரிமையாளனுக்கும் தான் ஏதேனும் உடல் உபாதைகள் நேரிட்டிருக்குமோ??

ஒருவேளை நெஞ்சுவலியோ?? ஹைய்யோ… மேசைக்கு கீழே ஏதானும் விழுந்து விட்டாரோ?? என்று பற்பல எண்ணங்கள் தோன்ற…

மென்குரலில், “சார்?” என்றழைத்த வண்ணம்… அவள் இப்புறமும், அப்புறமும்.. அந்த அஜய்தேவ்விற்காக தேடுதல் வேட்டை நடத்த..

அப்போது தான்…அந்த நவீன சொகுசு அறையின் கண்ணாடித்தடுப்பின் பின் நின்றும்….ஷூக்கால் தடங்கள்..

“தடக் தடக்”என்று கேட்க… கட்டளையிடும் இராஜகம்பீரக் குரலொன்று.. காற்றிலே… “சிட்!!”என்று பறந்து வந்தது!!

அவளும் சப்தம் வந்த திசை நோக்கி.. மெல்ல பார்வையை உயர்த்திய போது… கையில் வெள்ளைநிற காபி கப்பினை…ஏந்தியவாறே…. அவள் இதழ்களைப் பார்த்து சிப்பிய வண்ணமே…வெளியில் வந்தான் அவன்!!

அவன்???

வரும் அஜய்தேவ் சக்கரவர்த்தி.. ஐம்பது வயது தாண்டியிருக்கக்கூடுமென்று எதிர்பார்த்திருக்க… வந்ததுவோ… இருபத்தைந்து.. இருபத்தெட்டுக்குள் வயது மதிக்கத்தக்க ஆடவன்!!

அதுவும் அவன்!!

ஆஹா இவனா?? இனி செத்தோம் என்று அவள் உள்ளுக்குள் நடுங்க.. அவளை நாடி அழுத்தமான எட்டுக்கள் எடுத்து வைத்து வந்தவனின் பார்வை… அவளின் சௌந்தர்யத்தை சொற்பம் விடாமல் அள்ளிப் பருகி… விழிகளில் மின்னல் நேரத்தில் ஒரு மோகக் குழைவைக் காட்டவும் தவறவேயில்லை!!

அவளோ உடல் வெலவெலத்துப் போய்.. அமரவும் மறந்து நிற்க.. அவளை நடுநடுங்கச் செய்யும் அழுத்தமான குரலில்,

“சிட்னா.. உட்காருன்னு அர்த்தம்.. சிம்பிள் இங்கிலீஷ் கூட தெரியாதா மது.. மது..ராக்ஷி?”என்றான் அவள் பெயரையே ஒரு போதை உச்சரிப்போடு.

அவளுக்கோ அவனது சின்ன கேள்வியில் அசடுவழிய.. ஒருவாறு சமாளித்து அமர்ந்ததும், இவனோ… அவளை விட்டும் விழிகளை அங்குமிங்கும் திருப்பாமல்… சுழல் நாற்காலியின் கைவைக்கும் விளிம்பில்… பிருட்டங்கள் பதித்து… அமர்ந்து கொண்டே..

அவள் இதழ்களைப் பருகுவது போல.. ஓயாமல் பார்த்துக் கொண்டே… இன்னொரு கப் சிப்பலானான்.

அதே மாறாத கடிய குரலில், “நீ எந்த போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருக்க தெரியுமா?”என்று கேட்டான் அவன்.

“பி. ஏ.”- இமைகள் மருட்சியில் படபடக்க… உள்ளே எழாத குரலில் சொன்னாள் அவள்.

காதினருகே கையினை கேடயமாக வைத்து.. காது கேளாதவன் போல, பாவ்லா காட்டியவனாக, “என்ன?? கேட்கல.. சத்தமா?? டேக்ஸியில் அடிச்சுப் பிடிச்சு ஏறும்போது மட்டும் தான் மிஸ். மதுராக்ஷிக்கு சப்தம் வருமா??”என்று எடக்குமடக்காகவே கேட்டான் அவன்.

வீதியில் புலி போல உறுமியவள்.. இப்போது வீட்டுப்பூனையாய், “மியாவ்” போட்ட கதையாக.. அந்தக்குளிரிலும் குப்பென்று வியர்க்கவே, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே, “அப்டியெல்லாமில்லை சார்.. இன்டர்வீவ் வர்ற அவசரம்.. அதான்..”என்றதோடு… பேசாமல் தலைகுனித்துக் கொண்டாள் அவள்.

அவளது அதிகமுமற்ற, குறைவுமற்ற… அளவான உதட்டுச்சாயம், விழியிமையின் கறுமையைக் கூட்டும் மஸ்காரா…கன்னச்சிவப்பின் ரூஜ்ஜென எல்லாமும் கனகச்சிதமாக இருப்பதைப் பார்த்து…

ஒரு விநாடி தனக்குள்ளாகவே நயந்து இரசித்தவன்…

அடக்கப்பட்ட சீற்றம் குரலில் பொங்கி வழிய, “இருபத்தைந்து கோடிக்கு கார் வாங்கிப் போட்டா… இப்படி தான்.. மேக்கப் மிரரா யூஸ் பண்ணுவீயா?”என்று கேட்ட கேள்வியில் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டே.. நிமிர்ந்து மலங்க மலங்க விரித்து அவன் வதனம் ஏறிட்டாள் மதுராக்ஷி.

வாட்?? என்ன?? அது எப்படி இவனறிந்தான்..??

எனில், இவன் உள்ளேயா இருந்தான்??

 அடச்சீ…. ஒரு ஆடவன் இருப்பதறியாமல்.. ஷேம் ஷேம்… பப்பி ஷேம்!!! என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக… பாவை போல… அசடுவழியும் முகபாவத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

கைகளைப் பிசைந்து கொண்டு நின்றவளுக்கு, இனி வேலையில்லை என்று தெரிந்து விட… விடைபெறும் முகமாக, “அப்போ நான்…கெளம்புறே.”என்று இழுத்தவளாக.. அங்கிருந்தும் எழுந்து செல்ல எத்தனிக்க…

சற்றும் எதிர்பாராத விதமாக, அவளறியாமல்.. அவளது இதழ்களின் பிளவினையே வெறித்துப் பார்த்த வண்ணம்… மிக மிக உறுதியான குரலில், “யூ ஆர் அப்பாயின்ட்டட்.!!” என்றான் அவன். திடும்மென!!

அந்தக் குரலில், அது தாங்கி வந்த செய்தியில்… இதயம் சறுக்கித் துடிக்க… பட்டென்று நிமிர்ந்து… அவனைப் பார்த்தவள்…

நம்ப முடியாமல்… ஏதும் ஸ்வப்னங்கள் காண்கிறாளோ என்றஞ்சி, “சார்?”என்று மருண்ட பார்வையுடன் கேட்கலானாள்.

அவனோ, உறையும் சில்மிஷச் சிரிப்பை மறைத்தவனாக, கறார்க்குரலில், “என்ன?? சப்தம் தான் வராதுன்னா…காதும் கேட்காதா?? கம்பெனி சார்பா செவிட்டு மிஷினும் கொடுக்கணுமோ?? யூ… ஆர்… அப்பாய்ன்ட்டட்!!”என்று தனித்தனியாக அழுத்திச் சொல்ல…

இன்னும் நம்பமாட்டாமல்… பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு.. அஜய்தேவ்வையே பார்த்துக் கொண்டே கல்லாய் சமைந்து போனாள் மதுராக்ஷி!!

தகுதிக்கு மீறி அத்தனை பேரிருக்க.. இவளுக்கு மட்டும் வேலையா??

சூட்சுமமா? சூழ்ச்சியா?? அவமதிக்கப்பட்டமைக்கு காலம்பூராகவும் வேலையென்ற பேரில் பழிவாங்கும் எண்ணமா??

 

2 thoughts on “மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top